1 00:00:13,557 --> 00:00:15,767 விஷயமறிந்த ஒரு குழந்தையின் அறிவுரையை கேளுங்கள். 2 00:00:15,850 --> 00:00:19,980 நகர மன்றத்திலிருந்து உங்கள் பிறப்புச் சான்றிதழை திருடிக்கொண்டு ஓட முயன்றால், 3 00:00:20,063 --> 00:00:23,525 பாதுகாவலர்கள் நிச்சயமாக உங்களை துரத்துவார்கள். 4 00:00:23,608 --> 00:00:25,402 எனக்கு வேறு வழியில்லை. 5 00:00:25,485 --> 00:00:29,531 எனக்கு நேர்ந்த மாபெரும் தவறு ஒன்றை திருத்துகிறேன், அதை செய்தது வேறு யாருமல்ல... 6 00:00:30,532 --> 00:00:32,409 என் பெற்றோர்கள்தான். 7 00:00:33,994 --> 00:00:36,663 நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 8 00:00:36,746 --> 00:00:38,415 நாம் விரும்புகிறோம் 9 00:00:39,541 --> 00:00:42,377 நான் எப்படியிருக்க விரும்புகிறேனோ அப்படியிருப்பேன் 10 00:00:42,460 --> 00:00:44,379 என் உரிமை 11 00:00:44,462 --> 00:00:47,424 முடியாது, என் தலைமுடியை நான் வெட்டிக்கொள்ளமாட்டேன் 12 00:00:47,507 --> 00:00:49,885 நான் எதை வேண்டுமானாலும் அணிவேன் 13 00:00:49,968 --> 00:00:55,974 நான் நானாக இருப்பதையே விரும்புகிறேன் 14 00:00:56,057 --> 00:00:58,852 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 15 00:00:58,935 --> 00:01:01,271 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 16 00:01:01,354 --> 00:01:02,355 "எம்-இன் பிறப்பிடம்" 17 00:01:04,523 --> 00:01:05,525 லூயிஸ் ஃபிட்ஸ்ஹியூ புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 18 00:01:05,609 --> 00:01:06,610 பெய்ஜின் பக்கங்கள் 19 00:01:06,693 --> 00:01:09,946 பாதுகாவலர்களிடம் நான் எப்படி பிடிபட்டேன் என்பதை புரிந்துகொள்ள, 20 00:01:10,030 --> 00:01:14,075 ஒரு எழுத்தாளருக்கும் உளவாளிக்கும் புனிதமான நாளில் அதை தொடங்குவது சரியானதாக இருக்கும். 21 00:01:15,201 --> 00:01:17,287 புதிய குறிப்பேடுக்கான நாள். 22 00:01:22,042 --> 00:01:25,420 என் வாழ்க்கையில் இதுவரை, 12 குறிப்பேடுகளை எழுதியிருக்கிறேன். 23 00:01:25,503 --> 00:01:28,131 ஒற்றை வரி குறிப்பேடு, இதனால் என் குறிப்புகள் நேர்த்தியாக இருக்கும். 24 00:01:28,215 --> 00:01:30,592 கடைசி ஒன்றை வெகு விரைவாக முடித்தேன். 25 00:01:35,972 --> 00:01:37,224 எனக்கு திருமதி. பிளம்பரைப் பிடிக்கும். 26 00:01:37,307 --> 00:01:40,268 நான் அவரது நாயாக இருந்து, அது போன்ற ஆடையை அணிய வேண்டியிருந்தால், 27 00:01:40,352 --> 00:01:42,395 அவரையும் அப்படியொரு ஆடையை அணிய வற்புறுத்தியிருப்பேன். 28 00:01:44,522 --> 00:01:45,523 முடித்துவிட்டேன். 29 00:01:48,860 --> 00:01:51,780 குறிப்பேட்டில் எழுத தொடங்க ஆர்வமாக இருக்கிறாயா, ஹேரியட்? 30 00:01:51,863 --> 00:01:53,240 நிச்சயமாக. 31 00:01:53,323 --> 00:01:56,076 நான் இதை மூன்று மாதத்தில் முடித்துவிடுவேன். 32 00:01:56,159 --> 00:01:58,620 இல்லை, இரண்டு மாதங்களில். ஒன்றிலும் முடிக்கலாம். 33 00:02:05,126 --> 00:02:09,421 வாழ்த்துக்கள், திரு. ஹோரேஷியோ. அருமையான செவ்வாய்க்கிழமையில் எப்படி இருக்கிறீர்கள்? 34 00:02:09,506 --> 00:02:12,175 -உன் இடத்தில் உட்காரு, ஹேரியட். -சந்தோஷமாக. 35 00:02:12,259 --> 00:02:15,971 ஓல் கோலி புத்தகத்தை அகலமாக திறக்க வேண்டாமென்று அறிவுறுத்தினார். 36 00:02:16,054 --> 00:02:20,100 ஆனால் ஒரு குறிப்பேடு என்பது? உங்கள் உள்ளார்ந்த எண்ணங்கள் மற்றும் உணர்வுகளால் நிறைந்தது. 37 00:02:20,183 --> 00:02:23,019 எனவே நீங்கள் அதை கெடுக்க விரும்பினால், கெடுத்து விடுங்கள். 38 00:02:23,103 --> 00:02:25,355 ஒரு பகுதியைத் தவிர: 39 00:02:26,064 --> 00:02:28,191 உங்கள் பெயரை எழுதும் பகுதி. 40 00:02:28,275 --> 00:02:29,276 இந்த புத்தகம் இவருக்கு சொந்தமானது: 41 00:02:29,359 --> 00:02:31,653 புதிய குறிப்பேட்டின் குறிப்பிடத்தக்க தருணம். 42 00:02:31,736 --> 00:02:35,073 ஒரு தவறு, இதை பாழ்படுத்திவிடும். 43 00:02:36,783 --> 00:02:39,536 2047 ஆம் ஆண்டாக… இருக்கலாம் 44 00:02:40,245 --> 00:02:43,915 உலகின் மிகச்சிறந்த நாவலை எழுதும் முன்னர் ஹேரியட் எம். வெல்ஷ் 45 00:02:43,999 --> 00:02:47,002 எழுதிய கடைசி நாட்குறிப்பேடு இதுதான். 46 00:02:47,085 --> 00:02:48,086 ஆஹா. 47 00:02:48,169 --> 00:02:49,963 -அற்புதம். -நான் படித்திருக்கிறேன். 48 00:02:50,046 --> 00:02:52,048 அவரது பெயர் சரியாக எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்... 49 00:02:52,132 --> 00:02:53,133 ஹேரியட் எம். வெல்ஷ் 50 00:02:53,216 --> 00:02:54,384 ...நிச்சயமாக இது, 51 00:02:54,467 --> 00:02:57,804 அவர் உலகின் தலைசிறந்த எழுத்தாளராகப் போவதைக் குறிக்கிறது. 52 00:03:00,056 --> 00:03:02,934 ஹேரியட்டின் வகுப்புத் தோழி, மேரியன் ஹாவ்தோர்ன், 53 00:03:03,018 --> 00:03:04,561 எழுத்தாளராக ஜொலிக்கவில்லை. 54 00:03:06,021 --> 00:03:10,108 ஒரு எழுத்தாளராக தோல்வியடைந்த பிறகு, அவர் ஜனாதிபதி பதவிலேயே தங்கிவிட்டார். 55 00:03:10,191 --> 00:03:13,612 அவர் உலகில் அமைதியை ஏற்படுத்தினாலோ ரோபோட்களுக்கு உணர்ச்சியை தந்தாலோ யாருக்கென்ன? 56 00:03:13,695 --> 00:03:15,614 அவரது பெயரை எப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள். 57 00:03:16,656 --> 00:03:17,657 கேவலமாக இருக்கிறது. 58 00:03:20,493 --> 00:03:23,788 ஹேரியட் எம். வெல்ஷ் 59 00:03:24,581 --> 00:03:28,501 ஹேய், ஹேரியட். "எம்" எதை குறிக்கிறது என்று யோசிப்பேன்? 60 00:03:28,585 --> 00:03:31,004 ஓ, அது வெறும் "எம்" தான். அது எதையும் குறிக்கவில்லை. 61 00:03:31,087 --> 00:03:33,173 இது கொஞ்சம் வினோதம்தான். 62 00:03:34,841 --> 00:03:37,510 -உனக்கு நடுப் பெயர் இல்லையா? -இல்லை. 63 00:03:37,594 --> 00:03:40,263 இனிஷியல் மட்டும் இருக்கிறது, ஆனால் நடுப் பெயர் இல்லையா? 64 00:03:40,347 --> 00:03:42,766 ஹேரியட் எம், "புள்ளி" வெல்ஷ், அதுதான் நான். 65 00:03:42,849 --> 00:03:46,144 நீ புள்ளி இல்லாமல் எழுதுவாய் என்று நினைத்தேன். 66 00:03:46,228 --> 00:03:47,354 நான் அப்படி எழுதமாட்டேன். 67 00:03:47,437 --> 00:03:48,813 நீ அப்படித்தான் எழுதுவாய். 68 00:03:48,897 --> 00:03:51,191 உன் பெயரை எப்படி எழுதுவாய் என்று கூட ஞாபகம் இல்லையா? 69 00:03:52,025 --> 00:03:56,404 அது எப்போதும் "எம், புள்ளி" தான். பேசியது போதும், விவாதம் முடிந்தது. 70 00:03:56,488 --> 00:03:59,783 துரதிஷ்டவசமாக, கதை அதோடு முடியவில்லை. 71 00:03:59,866 --> 00:04:01,409 இது வெறும் ஆரம்பம்தான். 72 00:04:05,413 --> 00:04:06,998 "எம், புள்ளி." 73 00:04:07,082 --> 00:04:08,250 வெறும் "எம்." 74 00:04:08,333 --> 00:04:09,501 வெறும் "எம்." 75 00:04:09,584 --> 00:04:11,086 "எம், புள்ளி." 76 00:04:11,169 --> 00:04:15,674 நான் யாரென்று எனக்கே தெரியாதபோது, வருங்காலத்தில் பிரபல எழுத்தாளராக நான் எப்படி ஆவேன்? 77 00:04:15,757 --> 00:04:19,302 வெறும் "எம்" மா அல்லது "எம், புள்ளியா"? 78 00:04:28,895 --> 00:04:32,190 எதிர்பாரா முன்னேற்றமாக, நம் தொல்பொருள் ஆய்வாளர், புகழ்பெற்ற எழுத்தாளர் 79 00:04:32,274 --> 00:04:37,153 ஹேரியட் எம். வெல்ஷ், சில நேரங்களில் தனது நடு இனிஷியலை "எம்" என்றும் 80 00:04:37,237 --> 00:04:39,698 சில நேரங்களில் "எம், புள்ளி" என்றும் எழுதுவதை கண்டுபிடித்துள்ளார். 81 00:04:40,615 --> 00:04:42,117 அதற்கு என்ன அர்த்தம்? 82 00:04:42,200 --> 00:04:46,746 அப்படியென்றால், ஹாரியட் எம். வெல்ஷ் என்ற ஒருவர் இருந்ததில்லை, 83 00:04:46,830 --> 00:04:48,540 மாறாக அற்புதமான எழுத்தாளரான 84 00:04:48,623 --> 00:04:52,168 ஜனாதிபதி மேரியன் ஹாவ்தோர்னின் புனைப்பெயர்தான் அது என்று அர்த்தம். 85 00:04:59,050 --> 00:05:00,427 அம்மா, அப்பா. 86 00:05:00,510 --> 00:05:04,598 நான் "ஹேரியட் எம், புள்ளி வெல்ஷா" அல்லது "ஹேரியட் வெறும் எம், வெல்ஷா"? 87 00:05:04,681 --> 00:05:07,058 இப்போதே எனக்குத் தெரிய வேண்டும்! 88 00:05:08,059 --> 00:05:10,061 -ஏன், "எம், புள்ளி," நிச்சயமாக. -வெறும் "எம், புள்ளியில்லை." 89 00:05:13,315 --> 00:05:15,859 அன்பே, அது "எம், புள்ளியாக" இருக்க வேண்டும், ஏனென்றால்... 90 00:05:15,942 --> 00:05:17,360 அது... 91 00:05:17,444 --> 00:05:21,573 இல்லை, அது வெறும் "எம்" தான். புள்ளியில்லை. 92 00:05:22,282 --> 00:05:25,410 உங்கள் இருவருக்கும் எப்படி தெரியாமல் போனது? நீங்கள்தானே பெயர் வைத்தீர்கள்! 93 00:05:25,493 --> 00:05:28,038 இது சிக்கலானது. 94 00:05:28,121 --> 00:05:30,123 நாம் அவளிடம் சொல்ல வேண்டும், கேரொல். 95 00:05:33,168 --> 00:05:35,378 பார், ஹேரியட், நான் உன் பிறப்புச் சான்றிதழை பூர்த்தி செய்யும்போது... 96 00:05:36,379 --> 00:05:37,881 உனக்கு நடுப் பெயர் வைக்க விரும்பவில்லை. 97 00:05:45,722 --> 00:05:47,974 அதன் பிறகு ஒரு சிறு குழப்பம் ஏற்பட்டது. 98 00:05:48,058 --> 00:05:49,059 ஹேரியட் வெ 99 00:05:51,603 --> 00:05:54,064 அடச்சே. இதை எழுதவைக்க வேண்டும். 100 00:06:02,864 --> 00:06:05,158 நான் அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை, 101 00:06:05,242 --> 00:06:10,205 ஆனால் அவர்கள் அந்த சிறிய கிறுக்கலை கணினியில் "எம்" என சேர்த்துவிட்டனர். புள்ளியில்லாமல். 102 00:06:10,997 --> 00:06:13,208 எனவே, நான் ஒரு கிறுக்கலா? 103 00:06:17,837 --> 00:06:20,840 அவரது நடுப் பெயர் நிஜத்தில் "எம்" போன்ற கிறுக்கலா? 104 00:06:20,924 --> 00:06:24,553 அவர் குறிப்பிடத்தக்க சாதனை எதையும் செய்யவில்லை என்பதில் வியப்பேதுமில்லை. 105 00:06:24,636 --> 00:06:29,432 பிரபஞ்சத்தின் வரலாற்றிலேயே சிறந்த எழுத்தாளர் மற்றும் ஜனாதிபதியை போல அல்ல. 106 00:06:29,516 --> 00:06:32,060 மேரியன் ஏஞ்சலினா ஹாவ்தோர்ன். 107 00:06:32,143 --> 00:06:35,855 கிரேக்க மொழியில், "ஏஞ்சலினா" என்றால் "தூதுவர்" மற்றும் "தேவதை" என்று அர்த்தம். 108 00:06:37,148 --> 00:06:40,277 ஹிப்-ஹிப்-ஹூரே! ஹூரே! 109 00:06:40,360 --> 00:06:42,320 ஹிப்-ஹிப்-ஹூரே! ஹூரே! 110 00:06:43,488 --> 00:06:45,073 ஏன் அதை சரிசெய்ய முயற்சிக்கவில்லை? 111 00:06:45,156 --> 00:06:46,575 எங்களுக்கு அது தெரிந்தபோது, 112 00:06:46,658 --> 00:06:49,911 எங்களுக்கு "எம்" பிடித்துவிட்டது, எனவே அப்படியே விட்டுவிட்டோம். 113 00:06:49,995 --> 00:06:52,163 இது நீ நினைப்பது போல மோசம் அல்ல. 114 00:06:53,623 --> 00:06:55,166 சரிதான். மிகவும் மோசமானது. 115 00:06:55,250 --> 00:06:58,712 நடுப் பெயரை கிறுக்கலாகக் கொண்ட எழுத்தாளராக என்னால் இருக்க முடியாது. 116 00:06:59,546 --> 00:07:01,590 ஓல் கோலி, உங்கள் நடுப் பெயர் என்ன? 117 00:07:01,673 --> 00:07:04,259 வில்லா. வில்லா கேத்தர், எழுத்தாளருடைய பெயர். 118 00:07:05,176 --> 00:07:09,180 அதுவொரு அழகான நடுப் பெயர். 119 00:07:15,478 --> 00:07:18,607 அடுத்தநாள் காலை, என் கோபம் தணிந்திருந்தது. 120 00:07:19,190 --> 00:07:24,029 நான் மிகவும் வாடியிருந்தேன். நகைச்சுவைகள் கூட பலனளிக்கவில்லை. 121 00:07:24,112 --> 00:07:25,822 நகைச்சுவைகள் 122 00:07:25,906 --> 00:07:27,073 என்ன, ஹேரியட்... 123 00:07:27,157 --> 00:07:31,202 என்னை "கிறுக்கல்" என்று கூப்பிடுங்கள். அதை பழக்கப்படுத்திக்கொள்கிறேன். 124 00:07:31,786 --> 00:07:35,498 மன்னித்துவிடு, செல்லம். இது உன்னை வருத்தப்பட வைக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. 125 00:07:35,582 --> 00:07:37,334 அதோடு அதை சரிசெய்ய விரும்புகிறோம். 126 00:07:39,336 --> 00:07:40,337 3000 குழந்தை பெயர்கள் 127 00:07:40,420 --> 00:07:42,756 இது குழந்தை பெயர்கள் கொண்ட புத்தகம். நாங்கள் நினைந்தோம்... 128 00:07:42,839 --> 00:07:45,842 நீயே "எம்-மில்" தொடங்கும் பெயரை தேர்ந்தெடுக்கலாம் என நினைத்தோம். 129 00:07:45,926 --> 00:07:49,596 பிறகு இதை பதிவுகளில் மாற்ற நாம் எல்லோரும் நகர மன்றத்துக்குப் போவோம். 130 00:07:49,679 --> 00:07:53,725 ஹேரியட் "எம், புள்ளி"... ஏனென்றால் இப்போது இது ஒரு அர்த்தத்தைத் தருகிறது... வெல்ஷ். 131 00:07:53,808 --> 00:07:56,561 தொடர்ந்து எவ்வளவு சோகமாக இருக்க விரும்பினேனோ, 132 00:07:56,645 --> 00:07:59,522 அவ்வளவு ஆவலை தூண்டும் விதமாக இந்த புத்தகம் இருந்தது. 133 00:08:00,523 --> 00:08:04,653 ஆனால் நான் முடிவெடுக்கும் முன்பு சில நிபுணர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும். 134 00:08:05,278 --> 00:08:06,655 -ஹேரியட்... -கிறுக்கல்... 135 00:08:06,738 --> 00:08:08,114 வெல்ஷ்? 136 00:08:09,824 --> 00:08:13,495 ஹேய். இது தீவிரமானது. இப்போது நான் யாரென்று எனக்கே தெரியவில்லை. 137 00:08:13,578 --> 00:08:17,707 நான் இன்னும் உளவாளிதானா? எனக்கு இன்னும் டொமேட்டோ சாண்ட்விச்கள் பிடிக்குமா? பொறுங்கள். 138 00:08:22,879 --> 00:08:24,923 சரி, இந்த விஷயத்தில் நானாகவே இருக்கிறேன். 139 00:08:25,465 --> 00:08:28,426 பொறு, நான் குழம்பிவிட்டேன். கிறுக்கலாக இருப்பதில் என்ன தவறு? 140 00:08:28,510 --> 00:08:30,845 "ஹேரியட் கிறுக்கல் வெல்ஷ்" அருமையான பெயராக தோன்றுகிறது. 141 00:08:30,929 --> 00:08:34,849 ஜேனி, "கிறுக்கல்" என நடுப் பெயர் கொண்ட எழுத்தாளரை கேள்விப்பட்டிருக்கிறாயா? 142 00:08:34,933 --> 00:08:37,977 லூயிசா "கிறுக்கல்" ஆல்காட்டின் புத்தகத்தைப் படிப்பாயா? 143 00:08:38,061 --> 00:08:40,230 ஆம், இரண்டு முறை. 144 00:08:40,897 --> 00:08:44,150 நானே என் நடுப் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என என் பெற்றோர் விரும்புகிறார்கள். 145 00:08:44,234 --> 00:08:45,777 நான் அதில் அக்கறை கொள்ள வேண்டுமா? 146 00:08:46,611 --> 00:08:48,405 நீயே உன் நடுப் பெயரைத் தேர்ந்தெடுப்பதா? 147 00:08:48,488 --> 00:08:50,115 கண்டிப்பாக நீ அதில் அக்கறை கொள். 148 00:08:50,198 --> 00:08:54,077 நாம் செய்ய வேண்டியதெல்லாம் உனக்கு பொருத்தமான நடுப் பெயரைத் தேடுவதுதான். 149 00:08:58,456 --> 00:09:00,292 "மெலனி" என்பதில் இருந்து தொடங்கினோம். 150 00:09:03,879 --> 00:09:05,297 பிறகு "மே." 151 00:09:08,049 --> 00:09:09,342 "மார்கோ." 152 00:09:14,431 --> 00:09:15,432 "மோர்டகாய்." 153 00:09:15,515 --> 00:09:16,516 ஹ-ஹா! 154 00:09:20,770 --> 00:09:24,065 கடைசியாக, மிகவும் மோசமான "மெர்லின்." 155 00:09:29,112 --> 00:09:30,530 தேனீ! 156 00:09:35,243 --> 00:09:37,662 இன்னொரு முட்டை கிரீம், டார்பி. 157 00:09:38,330 --> 00:09:41,041 இன்றைக்கு போதுமான அளவு நீ சாப்பிட்டுவிட்டாய், சிறுமியே. 158 00:09:41,124 --> 00:09:43,209 டார்பி, நான் வளரும் பிள்ளை. 159 00:09:43,293 --> 00:09:46,880 நான் முட்டை கிரீமை சாப்பிடுவதை தடுக்காதீர்கள், தடுத்தால் கடித்து விடுவேன்! 160 00:09:51,343 --> 00:09:53,011 சரி, நான் சொல்கிறேன். 161 00:09:53,094 --> 00:09:54,971 "கிறுக்கலில்" எந்த தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 162 00:09:56,056 --> 00:09:58,975 ஹேரியட் "எம் கிறுக்கல்" வெல்ஷின் எதிர்காலத்தைப் பார்த்திருக்கிறேன், 163 00:09:59,059 --> 00:10:00,477 அது அவ்வளவு நன்றாக இல்லை. 164 00:10:00,560 --> 00:10:03,271 திமிர்பிடித்த பயானிக் ரோபோட்கள் இருக்கின்றன, அதோடு மேரியன் தான் ஜனாதிபதி. 165 00:10:05,690 --> 00:10:09,027 டார்பி சொல்வது சரிதான். நிறைய முட்டை கிரீம்களை சாப்பிட்டிருக்கிறாய். 166 00:10:09,110 --> 00:10:10,487 முயற்சித்ததற்கு நன்றி. 167 00:10:10,570 --> 00:10:13,782 நான் இயற்கையாகவே நடுப் பெயர் வைக்க பொருத்தமற்றவளாக இருக்கலாம். 168 00:10:14,407 --> 00:10:16,451 சரி, நீ பொருத்தமற்றவளென்றால்? 169 00:10:16,534 --> 00:10:17,619 நீ என்ன சொல்கிறாய்? 170 00:10:17,702 --> 00:10:20,330 பிறப்புச் சான்றிதழில் உன் அப்பா செய்த அந்த கிறுக்கல், 171 00:10:20,413 --> 00:10:22,207 யாராவது அதைப் பார்த்திருக்கிறார்களா? 172 00:10:22,290 --> 00:10:24,459 அது நிஜமாகவே "எம்" தான் என நமக்கு எப்படித் தெரியும்? 173 00:10:25,377 --> 00:10:27,337 தெரியாது. நீ சொல்வது சரிதான். 174 00:10:27,420 --> 00:10:31,007 அது முற்றிலும் வேறு எழுத்தாக இருக்கலாம். அதைப் பார்க்க வேண்டும். 175 00:10:31,633 --> 00:10:36,930 நண்பர்களே, இது என் ஆத்மாவின் ஆழத்தை நோக்கிய ஒரு பயணம். 176 00:10:37,472 --> 00:10:38,765 நான் தனியாகத்தான் போக வேண்டும். 177 00:10:43,687 --> 00:10:46,356 அவளுக்கு "கிறுக்கல்" பிடிக்கவில்லை என்றால், நான் வைத்துக்கொள்கிறேன். 178 00:10:48,233 --> 00:10:51,361 உண்மையை அறிய நகர மன்றத்துக்கு வந்திருக்கிறேன். 179 00:10:51,444 --> 00:10:53,572 நிஜமாக யாரென்று தெரிந்துகொள்ள தயாராக இருந்தேன். தயார்... 180 00:10:56,700 --> 00:11:00,996 மிசிசிப்பி ஆற்றை விட நீளமான வரிசையில் நிற்க வேண்டும். 181 00:11:01,496 --> 00:11:03,498 அட கடவுளே! 182 00:11:09,504 --> 00:11:13,508 இது வேடிக்கையானது அல்ல, குழந்தை. என் நடுப் பெயர் என்னவென்று தெரியவில்லை. 183 00:11:22,225 --> 00:11:25,145 அந்த கிளார்க் ஒரு வளர்ந்த பிங்கி வைட்ஹெட் போல் இருக்கிறார். 184 00:11:25,228 --> 00:11:29,065 ஒருவேளை அது எதிர்கால பிங்கியாக இருக்கலாம், வரிசை முடிந்தவரை மெதுவாக 185 00:11:29,149 --> 00:11:33,403 நகரச் செய்யும் ஒரு தைரியமான பணிக்காக 1964 க்கு அனுப்பப்பட்டிருக்கலாம். 186 00:11:36,114 --> 00:11:37,115 ஒரு சிறிய குறிப்பு. 187 00:11:37,198 --> 00:11:38,658 அடுத்த முறை சந்தேகம் இருந்தால், 188 00:11:38,742 --> 00:11:41,578 அந்த எண்ணை அழைப்பதன் மூலம் நீங்கள் வரிசையைத் தவிர்க்கலாம். 189 00:11:46,082 --> 00:11:47,792 உங்கள் சந்தேகங்களுக்கு அழைக்க வேண்டிய எண்: 555 - 7568 190 00:11:47,876 --> 00:11:50,712 இந்த எண்தான் எனக்கு ஒரு பெரிய யோசனையை கொடுத்தது. 191 00:11:50,795 --> 00:11:55,175 தைரியம், திறமை மற்றும் தந்திரம் தேவைப்படும் ஒரு யோசனை, 192 00:11:55,258 --> 00:11:59,596 ஒரு திறமையான உளவாளி மட்டுமே செய்து முடிக்கக்கூடிய ஒன்று. 193 00:12:12,317 --> 00:12:13,902 ஒரு நிமிடம் பொறுங்கள். 194 00:12:14,861 --> 00:12:17,113 நகர மன்ற பெயர் பதிவகம். சார்லஸ் பேசுகிறேன். 195 00:12:17,197 --> 00:12:21,826 ஹலோ, சார்லஸ். என் பெயர் கேரோல் வெல்ஷ், ஆம், கேரோல் வெல்ஷ், 196 00:12:21,910 --> 00:12:26,331 எனக்கு இன்று அதிகம் வேலை இருப்பதால், நான் என் அருமை மகளை அவளுடைய பிறப்புச் சான்றிதழை 197 00:12:26,414 --> 00:12:28,041 சரிபார்க்க அனுப்புகிறேன். 198 00:12:28,124 --> 00:12:29,709 சரி, மேடம், நான் நினைக்கிறேன்... 199 00:12:29,793 --> 00:12:34,673 ஆனால் முதலில், அவளுடைய முழு கையால் எழுதப்பட்ட பெயரை சொல்கிறீர்களா? 200 00:12:35,757 --> 00:12:36,758 நிச்சயமாக. 201 00:12:37,592 --> 00:12:41,179 ஓ, சரி, கிடைத்துவிட்டது, திருமதி. வெல்ஷ். கையால் எழுதப்பட்ட பெயர் "ஹேரியட்... 202 00:12:41,263 --> 00:12:43,348 ஹேரியட்..." 203 00:12:43,431 --> 00:12:44,724 என்ன? 204 00:12:45,517 --> 00:12:46,518 ஹேரியட் என்ன? 205 00:12:46,601 --> 00:12:50,564 ஹேரியட் "W" வா? அல்லது ஹேரியட் "R"? ஒருவேளை "Q"? 206 00:12:50,647 --> 00:12:53,650 மன்னிக்கவும், ஆனால் இது ஒரு கிறுக்கல், மேடம். 207 00:12:54,359 --> 00:12:57,529 கிறுக்கலா? உறுதியாகவா? 208 00:12:57,612 --> 00:13:00,532 ஆம். யாரோ சரியாக எழுதாத பேனா எழுதுகிறதா என்று சரிபார்த்தது போல. 209 00:13:00,615 --> 00:13:04,828 அப்போதுதான் என் தெளிந்த புத்தி அதிகாரப்பூர்வமாக மங்கத் தொடங்கியது. 210 00:13:04,911 --> 00:13:07,497 மேடம்? தொடர்பில் இருக்கிறீர்களா? 211 00:13:08,957 --> 00:13:10,083 ஹலோ? ஹேய். 212 00:13:10,166 --> 00:13:13,378 மன்னிக்கவும், சார்லஸ். நான் ஒன்றை வேகமாக சரிபார்க்க வேண்டும். இரண்டே வினாடிகள். 213 00:13:13,461 --> 00:13:14,462 ஹேரியட் வெல்ஷ் 214 00:13:14,546 --> 00:13:18,550 எழுத்தர் சொன்னது சரிதான். இது ஒரு கிறுக்கல், வேறொன்றும் இல்லை. 215 00:13:20,886 --> 00:13:24,723 சிறுமியே, இரண்டு வினாடிகள் ஆகிவிட்டன. தயவுசெய்து ஆவணத்தைத் திருப்பிக் கொடு. 216 00:13:26,016 --> 00:13:29,102 என்னால் முடியாது, சார்லஸ். என்னை மன்னித்துவிடுங்கள். 217 00:13:30,604 --> 00:13:32,689 ஹேய்! அவளை நிறுத்துங்கள். பாதுகாவலர்களே! 218 00:13:32,772 --> 00:13:35,025 என் கால்கள் என் கட்டுப்பாட்டில் இல்லை. 219 00:13:35,108 --> 00:13:38,320 எனது முழு உடலும் தானே தவறாக இயங்குவது போல இருந்தது. 220 00:13:38,403 --> 00:13:43,283 எனக்குத் தெரிந்ததெல்லாம் நான் ஒரு கிறுக்கல், அந்த ஆதாரங்களை அழிக்க வேண்டியிருந்தது. 221 00:13:57,380 --> 00:13:58,840 இங்கு வா! 222 00:14:06,014 --> 00:14:08,767 நான் பாதுகாவலர்களிடம் எல்லாவற்றையும் விளக்கினேன், 223 00:14:08,850 --> 00:14:10,769 ஆனால் அவர்கள் என் பெற்றோரை அழைத்தார்கள். 224 00:14:12,354 --> 00:14:15,315 இல்லை, எனக்கு இப்படி பார்த்தால் "E" போல் தெரிகிறது. இல்லை இது "M." 225 00:14:15,398 --> 00:14:16,691 இது "2" என்று நினைக்கிறேன். 226 00:14:16,775 --> 00:14:19,527 நாங்கள் மிகவும் வருந்துகிறோம். மன்னிக்கவும். 227 00:14:20,862 --> 00:14:22,322 ஹேரியட் எம்... 228 00:14:22,405 --> 00:14:25,825 ஹேரியட் வெல்ஷ், நீ என்ன செய்திருக்கிறாய்? 229 00:14:33,333 --> 00:14:35,293 என்னை மன்னியுங்கள். நான்... 230 00:14:35,377 --> 00:14:38,547 நான் ஒரு கிறுக்கலாக இருக்க விரும்பவில்லை. 231 00:14:38,630 --> 00:14:44,678 நான் ஒரு மேகனாக, ஒரு மெலனியாக, ஒரு மெர்லின் ஆகக்கூட முயற்சித்தேன். தவறுதான். 232 00:14:44,761 --> 00:14:50,058 ஆனால் எதுவும் சரியானதாக தெரியவில்லை, நான் யாரென்றே தெரியவில்லை! 233 00:14:51,351 --> 00:14:55,146 நான் ஹேரியட் எம். வெல்ஷிலிருந்து, பிறகு ஹேரியட் "கிறுக்கல்" வெல்ஷாக மாறி, 234 00:14:55,230 --> 00:14:56,731 பிறகு ஹேரியட் "குற்றவாளி" வெல்ஷாக மாறி, 235 00:14:56,815 --> 00:14:59,609 இப்போது ஹேரியட் "அழுது புலம்பும்" வெல்ஷாக மாறிவிட்டேன். 236 00:14:59,693 --> 00:15:01,236 ஓ, ஹேரியட். 237 00:15:01,319 --> 00:15:02,737 நாங்கள் மிகவும் வருந்துகிறோம். 238 00:15:02,821 --> 00:15:04,739 வெல்ஷ் தம்பதியரே? 239 00:15:05,490 --> 00:15:07,826 இதை நான் பார்த்துக்கொள்கிறேன். என்னை அனுமதித்தால். 240 00:15:09,369 --> 00:15:12,122 ஹேரியட் கோழி கிறுக்கல் வெல்ஷ், 241 00:15:12,205 --> 00:15:14,833 உனக்கு வேலை இல்லை என்றால், நீ என்னுடன் வருவதை விரும்புகிறேன். 242 00:15:19,212 --> 00:15:23,174 நாம் எங்கே போகிறோம்? சிறையா? சிறைக்கா? 243 00:15:23,258 --> 00:15:26,219 ஹேரியட், உனக்கு ஒன்றை காண்பிக்க ஒரு இடத்துக்கு அழைத்துச் செல்கிறேன். 244 00:15:26,303 --> 00:15:28,138 அது சிறையாக இருக்கலாம். 245 00:15:28,221 --> 00:15:30,557 எந்தவொரு பெற்றோரும் மிகச்சரியானவர்கள் அல்ல என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும், 246 00:15:30,640 --> 00:15:34,644 அதோடு சில நேரங்களில் நாம் விரும்பாத முடிவுகளை அவர்கள் எடுக்கலாம். 247 00:15:35,312 --> 00:15:39,107 அதை சொல்வது எளிது, கேத்தரின் வில்லா கேலியானோ. 248 00:15:43,653 --> 00:15:45,822 நாம் சிறைக்குச் செல்கிறோம், இல்லையா? 249 00:15:45,906 --> 00:15:48,158 நீ கேட்டுக்கொண்டே இருந்தால் அங்குதான் செல்வோம். 250 00:15:56,249 --> 00:15:59,336 கேத்தரின்! என் செல்ல மகளே! 251 00:15:59,419 --> 00:16:00,420 ஹலோ, அம்மா. 252 00:16:00,503 --> 00:16:02,130 அம்மாவா? 253 00:16:02,214 --> 00:16:05,967 ஓ, என்னைப் பார்க்க யாரும் வருவதில்லை. உள்ளே வாருங்கள். 254 00:16:08,720 --> 00:16:09,804 உட்கார். 255 00:16:11,848 --> 00:16:14,184 சௌகரியமாக உட்கார். 256 00:16:17,938 --> 00:16:20,148 இப்போது சாப்பிடு. கூச்சப்படாதே. 257 00:16:20,232 --> 00:16:24,778 கேத்தரின், நான் இறுதியாக ஹேரியட்டை சந்தித்ததை என்னால் நம்ப முடியவில்லை. 258 00:16:24,861 --> 00:16:28,031 குட்டி ஹேரியட் தனது விலைமதிப்பற்ற சிறிய உடையில். 259 00:16:29,157 --> 00:16:33,161 ஒரு நுண்ணோக்கியால் பார்க்கப்படும் அமீபாவைப் போல் உணர்ந்தேன். 260 00:16:33,245 --> 00:16:35,455 அற்புதமானவள் இல்லையா? 261 00:16:36,331 --> 00:16:40,377 ஏன் உன் அழகான சிறிய கண்ணாடியில் லென்ஸ்கள் இல்லை? 262 00:16:40,460 --> 00:16:42,045 இவை உளவு பார்ப்பதற்காக மட்டுமே. 263 00:16:42,128 --> 00:16:48,593 நிச்சயமாக. அழகு செல்லம்! இந்த கன்னங்களைப் பார். அடடா. 264 00:16:48,677 --> 00:16:50,679 அம்மா, தயவுசெய்து ரொம்ப கொஞ்சுவதை நிறுத்துங்கள். 265 00:16:51,304 --> 00:16:54,724 நீ வீட்டில் வசிக்காததால் நான் இப்போது யாரையும் கொஞ்சுவதில்லை. 266 00:16:56,351 --> 00:17:00,397 ஓல் கோலியை தன் தாயுடன் பார்ப்பது பள்ளிக்கு வெளியே ஆசிரியரைப் பார்ப்பது போல. 267 00:17:00,480 --> 00:17:02,566 இது பார்க்க விந்தையானதாக இருக்கிறது. 268 00:17:03,233 --> 00:17:07,112 கேத்தரின், இந்த உடை மிகவும் மெல்லியதாக இருக்கிறது. நீ குளிரில் உறைந்துபோகலாம். 269 00:17:07,195 --> 00:17:09,322 என் அறையிலிருந்து ஒரு ஸ்வெட்டரை எடுத்து வா. 270 00:17:09,406 --> 00:17:12,659 அம்மா, இது நியூயார்க்கின் இலையுதிர் காலம், யுகோனின் குளிர்காலம் அல்ல. 271 00:17:14,660 --> 00:17:15,661 சரி. 272 00:17:20,750 --> 00:17:24,754 எனவே, ஹேரியட், இன்று நீ ஃபார் ராக்வேக்கு வர காரணம் என்ன? 273 00:17:24,838 --> 00:17:27,173 எனக்குத் தெரிந்தவரை, நான் சட்டத்தை மீறியிருக்கிறேன், 274 00:17:27,257 --> 00:17:29,384 அதோடு ஓல் கோலி எனக்கு ஒன்றைக் காட்ட விரும்பினார், 275 00:17:29,467 --> 00:17:31,803 ஆனால் எழுத்தாளரான "வில்லா" என்ற அருமையான நடுப் பெயரைக் கொண்ட ஒருவரிடமிருந்து 276 00:17:31,887 --> 00:17:34,848 "கிறுக்கல்" என்ற நடுப் பெயரை கொண்ட ஒருவள் ஆலோசனை பெறுவது எப்படி நன்றாக இருக்கும் என 277 00:17:34,931 --> 00:17:36,808 எனக்குத் தெரியவில்லை, அதனால் இது வேலைக்காகாது என தோன்றுகிறது. 278 00:17:37,976 --> 00:17:40,186 என்ன ஆயிற்று, திருமதி. கேலியானோ? 279 00:17:40,937 --> 00:17:44,316 வில்லாவா? 280 00:17:44,399 --> 00:17:49,154 கேத்தரின் கேலியானோ, இந்த நொடியே இங்கு வா 281 00:17:49,237 --> 00:17:50,488 சரி, அம்மா. என்ன? 282 00:17:50,572 --> 00:17:55,452 நீ இன்னுமா அந்த அபத்தமான நடுப் பெயரை வைத்துக்கொண்டிருக்கிறாய்? 283 00:17:57,037 --> 00:17:59,164 என்னை மன்னியுங்கள். எனக்குத் தெரியாது. 284 00:17:59,247 --> 00:18:02,292 உன் நடுப் பெயர் வில்லா அல்ல. மெர்டெல். 285 00:18:02,375 --> 00:18:07,172 அது உன் பெரிய அத்தையின் பெயர். அது குடும்பப் பெயர், நீ நன்றாக தெரிந்து கொள். 286 00:18:07,255 --> 00:18:10,175 அம்மா, என் சிறுவயதிலிருந்தே இதைப் பற்றி சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். 287 00:18:10,258 --> 00:18:13,220 எனக்கு "மெர்டெல்" பிடிக்கவில்லை. அது எனக்குப் பொருந்தாது. 288 00:18:13,303 --> 00:18:19,476 உன் பிறப்புச் சான்றிதழைப் பார்க்கிறாயா? உன் பெயர் கேத்தி மெர்டெல் கேலியானோ. 289 00:18:20,227 --> 00:18:23,605 என்னை மெர்டெல் என்று அழைக்காதீர்கள். அதோடு ஒருபோதும் கேத்தி என்று அழைக்காதீர்கள். 290 00:18:23,688 --> 00:18:27,984 அருமை. கிறுக்கலின் சாபம் என் பெயரை மட்டும் கெடுக்கவில்லை, 291 00:18:28,068 --> 00:18:30,654 அது ஓல் கோலியையும் அவருடைய அம்மாவையும் சண்டைப்போட வைத்துவிட்டது. 292 00:18:30,737 --> 00:18:34,199 வேறு என்னவெல்லாம் அந்த கிறுக்கல் செய்யப்போகிறதோ? 293 00:18:34,282 --> 00:18:37,202 "வில்லா." இதெல்லாம் ஒரு பெயரா? 294 00:18:37,285 --> 00:18:39,454 ஆம், மெர்டெல் என்பதை விட சிறந்தது. 295 00:18:39,537 --> 00:18:43,375 மெர்டெல் என்ற பெயர் மெர்டெலுக்கே படிக்காது. வேறு யாருக்கு பிடிக்கப்போகிறது? 296 00:18:43,458 --> 00:18:49,798 எனக்கு! ஹேரியட் வெல்ஷான நான்... மெர்டெல் என்ற பெயரை விரும்புகிறேன். 297 00:18:49,881 --> 00:18:52,592 இப்போது முதல் நான் இதை எனது நடுப் பெயராக ஏற்றுக்கொள்கிறேன். 298 00:18:52,676 --> 00:18:55,762 நீங்கள் ஒப்புக்கொண்டால், திருமதி. கேலியானோ. 299 00:18:55,845 --> 00:18:59,057 எனக்கு வால் முளைத்தது போல ஓல் கோலி என்னை விநோதமாக பார்த்தார். 300 00:18:59,140 --> 00:19:01,810 அதை நானே உறுதி செய்யும் அளவுக்கு இருந்தது அவருடைய பார்வை. 301 00:19:02,936 --> 00:19:05,313 அது அற்புதமாக இருக்கும். 302 00:19:05,397 --> 00:19:09,818 அற்புதம், ஹேரியட்! மெர்டெலின் பெயர் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும். 303 00:19:09,901 --> 00:19:12,529 எனக்காக அதை செய்யாதே, ஹேரியட். 304 00:19:12,612 --> 00:19:15,532 "ஹேரியட் மெர்டெல் வெல்ஷ்" என்று அழைத்தல் மட்டுமே பதில் சொல்வேன். 305 00:19:15,615 --> 00:19:18,034 என் பிரெஞ்சு உச்சரிப்பை பொறுத்துக்கொள், ஆனால் ஹையா! 306 00:19:18,118 --> 00:19:21,162 -அது பிரெஞ்சு அல்ல... -நீ இப்போது அதிகாரப்பூர்வமாக 307 00:19:21,246 --> 00:19:25,625 கேலியானோ குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர், ஹேரியட் மெர்டெல் வெல்ஷ். 308 00:19:26,668 --> 00:19:31,298 பெயர்: ஹேரியட் மெர்டெல் வெல்ஷ். இறப்புக்கான காரணம்: அன்பான அணைப்பு. 309 00:19:32,007 --> 00:19:35,594 ஹேரியட், என்னுடன் வா. உனக்கு ஒன்றை காண்பிக்க வேண்டும். 310 00:19:41,808 --> 00:19:45,478 இதனால்தான் "உன் புத்தகத்தின் தண்டை கிழித்துவிடாதே" என்று சொன்னேன். 311 00:19:45,562 --> 00:19:48,440 புத்தகங்கள் விலைமதிப்பற்றவை, அவற்றை அன்போடு கையாள வேண்டும். 312 00:19:48,523 --> 00:19:50,483 இவை எல்லாம் உங்களுடையதா? 313 00:19:52,485 --> 00:19:54,529 இதிலிருந்துதான் "வில்லா" என்ற பெயர் வந்தது. 314 00:19:54,613 --> 00:19:57,198 நான் சிறுமியாக இருந்தபோது, ஒரு எழுத்தாளராக விரும்பினேன், 315 00:19:57,282 --> 00:20:00,493 "கிரேட் ப்லெய்ன்" புத்தகத்தின் எழுத்தாளர், வில்லா கேதர் போல. 316 00:20:00,577 --> 00:20:02,495 எனவே என் நடுப் பெயரை வில்லா என்று மாற்றிக்கொண்டேன். 317 00:20:02,579 --> 00:20:03,997 ஓ பயனியர்ஸ்! வில்லா கேதர் 318 00:20:04,080 --> 00:20:07,709 பொறுங்கள், நீங்கள் எழுத்தாளராக விரும்பினீர்களா, ஓல் கோலி? என்ன நடந்தது? 319 00:20:07,792 --> 00:20:11,838 உன்னைப் போல ஆர்வம் எனக்கு இல்லை, அவ்வளவுதான். 320 00:20:11,922 --> 00:20:15,175 ஆனால் நான் புத்தகங்களைச் சேகரிப்பதில் வல்லவள் என்பதைக் கண்டுபிடித்தேன். 321 00:20:15,258 --> 00:20:18,720 இந்த புத்தகங்கள் எல்லாம் ஒரு நாள் என் புத்தகக் கடையில் இருக்கப் போகின்றன. 322 00:20:18,803 --> 00:20:20,764 அதை "வில்லாவின் புத்தகங்கள்" என்று அழைக்கப் போகிறேன். 323 00:20:21,556 --> 00:20:25,393 யாருடைய முதல் நாவல் ஒரு நாள் கடையின் முன்பு இருக்கப் போகிறது என நினைக்கிறாய்? 324 00:20:26,269 --> 00:20:29,648 பெண்களே, செல்வதற்கு முன், எஞ்சியவற்றை எடுத்துச் செல்லுங்கள். 325 00:20:29,731 --> 00:20:32,400 இந்த கணொலிகளை வீணாக்க என்னால் அனுமதிக்க முடியாது. 326 00:20:38,323 --> 00:20:42,285 சென்றுவா, என் குட்டி ஹாரியட் மெர்டெல் வெல்ஷ். 327 00:20:42,369 --> 00:20:45,580 என் கேத்தரினை கவனித்துக் கொள், சரியா? 328 00:20:45,664 --> 00:20:47,582 கண்டிப்பாக. கவலை வேண்டாம்! 329 00:20:56,758 --> 00:20:58,677 மெர்டெல் என்ற பெயரை நீ வெறுக்கிறாய், இல்லையா? 330 00:20:58,760 --> 00:20:59,844 ஆம். 331 00:21:00,929 --> 00:21:02,097 எனக்குத் தெரியும். 332 00:21:02,847 --> 00:21:05,392 முதலில், நீங்கள் இருவரும் சண்டையிடுவதைத் தடுக்க அப்படிச் சொன்னேன். 333 00:21:05,475 --> 00:21:07,936 ஆனால் மெர்டெல் உங்களில் ஒரு பகுதி 334 00:21:08,019 --> 00:21:11,481 எனவே நாம் அதை வைத்துக்கொள்வோம் என்று அதைப் பற்றி யோசித்தேன். 335 00:21:11,565 --> 00:21:15,735 எனவே, இனிமேல் உன் பெயர் "ஹேரியட் மெர்டெல் வெல்ஷ்" என்று சொல்கிறாயா? 336 00:21:15,819 --> 00:21:17,904 இல்லவே இல்லை. என்னை கேலி செய்கிறீர்களா? 337 00:21:17,988 --> 00:21:20,323 நான் ஹேரியட் "எம், புள்ளி" வெல்ஷாகவே இருப்பேன். 338 00:21:20,407 --> 00:21:24,160 ஆனால் இப்போது "எம்" என்றால் என்ன என்பதை நான் அறிவேன். எப்போதும். 339 00:21:24,244 --> 00:21:25,954 நீ ஒரு பிரபல எழுத்தாளராக ஆகும்போது, 340 00:21:26,037 --> 00:21:28,498 உன் நடுப் பெயர் மெர்டெல் என்பதை மக்கள் கண்டுபிடிப்பார்கள். 341 00:21:29,916 --> 00:21:32,085 எனக்கு கவலை இல்லை. என் அனுபவத்திலிருந்து 342 00:21:32,168 --> 00:21:34,796 நல்ல எழுத்துதான் ஒரு எழுத்தாளரை உருவாக்குகிறது, நல்ல பெயர் அல்ல 343 00:21:34,880 --> 00:21:35,922 என்பதை நான் உணர்ந்தேன். 344 00:21:42,637 --> 00:21:44,723 -என்ன ஆனது? -நான் யோசித்துக்கொண்டிருந்தேன், 345 00:21:44,806 --> 00:21:47,601 நீங்கள் ஒரு நாள் ஒரு புத்தகக் கடையைத் திறக்கப் போகிறீர்கள் என்றால், 346 00:21:47,684 --> 00:21:50,478 நீங்கள் எப்போதும் என் பாட்டியாக இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். 347 00:21:51,605 --> 00:21:54,190 ஆம், ஹேரியட். ஒரு நாள் நான் சென்றுவிடுவேன். 348 00:21:54,274 --> 00:21:57,611 ஆனால் கவலைப்படாதே, நாம் எப்போதும் தொடர்பில் இருப்போம். 349 00:21:57,694 --> 00:22:01,531 எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் இருவரும் "எம்" பற்றிய கதையைப் பகிர்கிறோம், இல்லையா? 350 00:22:01,615 --> 00:22:02,741 நாம் இப்போது ஒரு குடும்பம். 351 00:22:03,408 --> 00:22:08,663 இது ஒரு நல்ல கதை. அதோடு, நாம் கணொலிகளை ரயிலேயே விட்டுவிட்டோம். 352 00:22:18,632 --> 00:22:21,384 எனவே எப்படியோ, நான் என் அம்மாவையும் அப்பாவையும் மன்னித்தேன். 353 00:22:21,468 --> 00:22:26,640 ஓல் கோலி சொன்னது போல, நாம் எல்லோரும் தவறுகள் செய்கிறோம், குறிப்பாக பெற்றோர்கள். 354 00:22:26,723 --> 00:22:30,560 தவறுகள்தான் உங்களுக்கு சிறந்த கதைகளைத் தருகின்றன. 355 00:22:33,104 --> 00:22:35,190 நான் என்னுடையதை ஒரு கிறுக்கலில் தொடங்கினேன்... 356 00:22:37,317 --> 00:22:39,778 அது "எம்" கேள்விக்குறியாக மாறியது, 357 00:22:39,861 --> 00:22:45,200 பிறகு "எம்" புள்ளியுடன் கதையை முடித்தேன். 358 00:22:45,283 --> 00:22:46,284 எம். 359 00:22:46,868 --> 00:22:49,371 நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 360 00:22:49,454 --> 00:22:51,122 நாம் விரும்புகிறோம் 361 00:22:52,249 --> 00:22:54,793 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 362 00:22:54,876 --> 00:23:00,382 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 363 00:23:02,551 --> 00:23:08,223 அக்கம் பக்கத்தில் நல்லதைச் செய்ய நான் என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன் 364 00:23:08,306 --> 00:23:10,850 நான் நன்றாக சிரிக்கிறேன் 365 00:23:10,934 --> 00:23:14,062 நான் உண்மையைச் சொல்ல முயற்சி செய்கிறேன் 366 00:23:14,145 --> 00:23:16,648 நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 367 00:23:16,731 --> 00:23:18,567 நாம் விரும்புகிறோம் 368 00:23:19,442 --> 00:23:22,195 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 369 00:23:22,279 --> 00:23:25,031 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 370 00:23:25,115 --> 00:23:27,617 நான் எப்படியிருக்க விரும்புகிறேனோ அப்படியிருப்பேன் 371 00:23:27,701 --> 00:23:29,619 என் உரிமை 372 00:23:30,328 --> 00:23:33,123 நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 373 00:23:33,206 --> 00:23:35,125 நாம் விரும்புகிறோம் 374 00:23:35,208 --> 00:23:37,794 முடியாது, என் தலைமுடியை நான் வெட்டிக்கொள்ளமாட்டேன் 375 00:23:37,878 --> 00:23:40,630 நான் எதை வேண்டுமானாலும் அணிவேன் 376 00:23:40,714 --> 00:23:46,219 நான் நானாக இருப்பதையே விரும்புகிறேன் 377 00:23:46,303 --> 00:23:49,222 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 378 00:23:49,306 --> 00:23:54,019 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 379 00:23:54,102 --> 00:23:56,104 வசனத் தமிழாக்கம் அருண்குமார்