1 00:00:06,174 --> 00:00:07,634 சரி. நீங்கள் தயாரா? 2 00:00:08,343 --> 00:00:09,344 எச் + ஜே 3 00:00:10,178 --> 00:00:12,806 நான் சொல்வதைத் திரும்பச்சொல். ஜேனி கிப்ஸ் ஆகிய நான்… 4 00:00:12,889 --> 00:00:14,307 ஜேனி கிப்ஸ் ஆகிய நான்… 5 00:00:14,391 --> 00:00:18,103 …ஒருபோதும் நடன பள்ளியில் சேர மாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன். 6 00:00:18,186 --> 00:00:21,481 …ஒருபோதும் நடன பள்ளியில் சேர மாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன். 7 00:00:22,190 --> 00:00:23,567 ஹேரியட் ஆகிய நான்… 8 00:00:23,650 --> 00:00:25,402 எனக்குத் தெரியும். நான்தான் அதை எழுதினேன். 9 00:00:25,485 --> 00:00:30,365 ஹேரியட் எம். வெல்ஷ் ஆகிய நான் ஒருபோதும் நடன பள்ளியில் சேர மாட்டேன் என சத்தியம் செய்கிறேன். 10 00:00:31,908 --> 00:00:33,994 நீங்கள் இப்போது கைக்குலுக்கலாம். 11 00:00:46,882 --> 00:00:47,883 சரி. 12 00:00:49,175 --> 00:00:51,344 இந்த சத்தியத்தை புனிதமானதாக அறிவிக்கிறேன். 13 00:00:51,428 --> 00:00:54,222 யாரும் நடன பள்ளியில் சேரக் கூடாது. 14 00:00:54,306 --> 00:00:57,017 என்றைக்கும், ஒருபோதும்! 15 00:00:58,727 --> 00:00:59,728 உன்னை தொட்டுவிட்டேன்! 16 00:01:00,228 --> 00:01:02,647 பல ஆண்டுகளுக்கு முன்பு, நானும் ஜேனியும் 17 00:01:02,731 --> 00:01:06,151 எங்கள் அம்மாக்கள் விரும்பிய "ஒழுக்கமான சிறுமிகளாக" மாறாமல் இருக்க 18 00:01:06,234 --> 00:01:08,028 அந்த சத்தியத்தை நான் உருவாக்கினேன். 19 00:01:10,572 --> 00:01:15,911 அன்றிலிருந்து, எங்களை சரணடையச் செய்ய எல்லா வழிமுறைகளையும் முயற்சித்தனர். 20 00:01:15,994 --> 00:01:17,412 அறிவுரை. 21 00:01:17,495 --> 00:01:18,580 நீ வளர்ந்து வருகிறாய், 22 00:01:18,663 --> 00:01:23,376 அந்த முதிர்ச்சி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியின் ஒரு அங்கம்தான் நடனமாட கற்றுக்கொள்வது. 23 00:01:25,045 --> 00:01:26,546 குற்ற உணர்ச்சியை தூண்டுவது. 24 00:01:26,630 --> 00:01:28,089 என்னைப் பற்றி கவலைப்படதே. 25 00:01:28,173 --> 00:01:30,508 நடனமாட தெரியாத ஒரு சிறுமியின் 26 00:01:30,592 --> 00:01:33,428 ஒரே அம்மாவாக இருப்பதில் எனக்கு கவலையில்லை. 27 00:01:34,971 --> 00:01:37,432 -லஞ்சம். -யாருக்கு நாய்க்குட்டி வேண்டும்? 28 00:01:37,515 --> 00:01:38,516 பப்பி வேர்ல்ட் இதழ் 29 00:01:39,809 --> 00:01:41,561 இருவர் அணி. 30 00:01:41,645 --> 00:01:43,897 எப்போதுமே இப்படித்தான் நடந்திருக்கிறது. 31 00:01:43,980 --> 00:01:46,900 இளம் பெண்கள் நடன பள்ளிக்கு செல்வார்கள். 32 00:01:46,983 --> 00:01:48,401 ஒருபோதும் முடியாது! 33 00:01:48,485 --> 00:01:51,696 பல ஆண்டுகளாக, அந்த சத்தியம் எங்களை ஒற்றுமையாக வைத்திருந்தது. 34 00:01:51,780 --> 00:01:55,200 இது இறுக்கமான அரிக்கும் உடைகள் மற்றும் வேதனையான குட்டை காலணிகளில் இருந்து 35 00:01:55,283 --> 00:01:59,329 எங்களை காப்பாற்றி வந்தாலும், இந்த ஆண்டு அது எங்கள் நட்பை கிட்டதட்ட முறித்துவிட்டது. 36 00:02:00,455 --> 00:02:03,166 நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 37 00:02:03,250 --> 00:02:04,960 நாம் விரும்புகிறோம் 38 00:02:06,002 --> 00:02:08,504 நான் எப்படியிருக்க விரும்புகிறேனோ அப்படியிருப்பேன் 39 00:02:08,587 --> 00:02:10,507 என் உரிமை 40 00:02:10,590 --> 00:02:13,385 முடியாது, என் தலைமுடியை நான் வெட்டிக்கொள்ளமாட்டேன் 41 00:02:13,468 --> 00:02:15,845 நான் எதை வேண்டுமானாலும் அணிவேன் 42 00:02:15,929 --> 00:02:21,935 நான் நானாக இருப்பதையே விரும்புகிறேன் 43 00:02:22,018 --> 00:02:24,771 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 44 00:02:24,854 --> 00:02:27,524 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 45 00:02:27,607 --> 00:02:28,817 "என்னை நம்பு, நாம் நடனமாட போவதில்லை" 46 00:02:30,860 --> 00:02:31,945 லூயிஸ் ஃபிட்ஸ்ஹியூ புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 47 00:02:32,028 --> 00:02:37,158 இவை அனைத்தும் நான் எனது தொடர்ச்சியான 2022வது டொமேட்டோ 48 00:02:37,242 --> 00:02:39,160 சாண்ட்விச்சை கடிக்கும்போது ஆரம்பித்தது. 49 00:02:40,203 --> 00:02:42,330 ஆஹா! என், செல்லமே. 50 00:02:46,334 --> 00:02:49,004 இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. 51 00:02:50,088 --> 00:02:53,300 ஹேரியட். நாங்கள் அதிகப்படியான அமளி செய்யவில்லை என நம்புகிறேன். 52 00:02:53,383 --> 00:02:56,344 உன் அப்பாவும் நானும் கொஞ்சம் நடன இசையை ரசிக்கிறோம். 53 00:02:56,428 --> 00:02:57,679 சிரிப்பு வருகிறது. 54 00:02:57,762 --> 00:03:00,932 -எங்களுடன் சேர்ந்து ஆடுகிறாயா? -இதை கற்பது மிகவும் எளிது. நீ... 55 00:03:01,016 --> 00:03:04,728 ஊஹும். இது எங்கு போய் முடியுமென்று தெரியும். ஆயிரமாவது முறை சொல்கிறேன், 56 00:03:04,811 --> 00:03:07,856 நடன பள்ளியில் என்றைக்கும் சேரமாட்டேன் என்று சத்தியம் செய்திருக்கிறேன். 57 00:03:07,939 --> 00:03:10,066 இது வெறும் நடனம் மட்டும் அல்ல. 58 00:03:10,150 --> 00:03:13,111 இதில் ஒழுக்கமும் பாவனையும் இருக்கிறது. 59 00:03:13,194 --> 00:03:15,864 உன்னுடைய நடை குறித்து மிகவும் கவலைப்படுகிறேன், ஹேரியட். 60 00:03:16,489 --> 00:03:19,075 வேகமாக, அப்படித்தான் என் நடை இருக்கும். வேகமாக. 61 00:03:19,159 --> 00:03:21,786 -அதோடு நீ எப்படி உடை அணிந்திருக்கிறாய் பார். -அதனால்? 62 00:03:22,412 --> 00:03:25,457 நான் ஒரு தரம் கெட்டவளை வளர்ப்பதாக மக்கள் நினைப்பார்கள். 63 00:03:28,293 --> 00:03:30,795 செல்லம், இது நிஜமாக நன்றாக இருக்கும். 64 00:03:30,879 --> 00:03:33,924 குறைந்தபட்சம், இதில் கோபித்துக்கொள்ள எதுவும் இல்லை. 65 00:03:34,007 --> 00:03:36,343 இந்த வருடம் நீ அதை தவிர்க்க முடியாது. 66 00:03:45,268 --> 00:03:48,271 அவர்கள் எப்போதும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக நினைக்கிறார்கள். 67 00:03:56,529 --> 00:03:57,697 நடன பள்ளியா? 68 00:03:58,907 --> 00:04:01,993 அது ஏன் அவ்வளவு மோசமானது என்பதை மீண்டும் எனக்கு சொல். 69 00:04:02,577 --> 00:04:05,789 இறுக்கமான சிறிய ஆடைகளையும், காலணிகளையும் நான் வெறுக்கிறேன். 70 00:04:05,872 --> 00:04:07,666 அவை எனக்கு கண்ணிய குறைவாக தோன்றுகின்றன. 71 00:04:07,749 --> 00:04:10,168 அதோடு சனிக்கிழமை தான் பிரதான உளவு நேரம், 72 00:04:10,252 --> 00:04:12,796 மேலும் ஒரு உளவாளி ஒருபோதும் நடன பள்ளிக்கு போகமாட்டார். 73 00:04:13,505 --> 00:04:15,006 ஆனால் அவர்கள் போவார்கள். 74 00:04:15,924 --> 00:04:18,468 ஹேரியட், நீ ஏன் உளவாளியாக இருக்கிறாய்? 75 00:04:18,552 --> 00:04:19,844 ஒரு எழுத்தாளர் ஆவதற்காக. 76 00:04:19,928 --> 00:04:24,099 ஒரு எழுத்தாளர் ஆவதற்கு, நீ எல்லாவற்றையும் பார்த்து தெரிந்துகொள்வது அவசியம், 77 00:04:24,182 --> 00:04:25,850 எப்படி நடனமாடுவது என்பது உட்பட. 78 00:04:27,477 --> 00:04:29,020 அதற்கு தரையை சுத்தம் செய்யலாம். 79 00:04:29,896 --> 00:04:31,231 நான் மிகவும் நேர்த்தியாக உணர்கிறேன். 80 00:04:33,817 --> 00:04:38,446 நடன பள்ளி குறித்து உன் அம்மாவிடம் சண்டையிட்டு நிறைய நேரத்தையும் சக்தியையும் இழக்கிறாய். 81 00:04:38,530 --> 00:04:40,949 சண்டையிடாமல் செல்வது எளிது இல்லையா? 82 00:04:41,032 --> 00:04:45,036 யாருக்குத் தெரியும்? நீ அங்கே சரியாக பழகவில்லை என்றால் நீ அங்கே திரும்பிப் போக வேண்டியிருக்காது. 83 00:04:51,209 --> 00:04:54,212 பொறு, எனவே நீ நடன பள்ளிக்கு போக விரும்புகிறாயா? 84 00:04:54,296 --> 00:04:55,797 வெறும் ஒரு பாடம்தான். 85 00:04:56,631 --> 00:04:57,632 நான் சொல்வதைக் கேள். 86 00:04:58,425 --> 00:05:03,179 நாம் வகுப்பிற்குப் போகலாம், அதை சீர்குலைக்க ஒரு சிறந்த திட்டம் உனக்குத் தோன்றும். 87 00:05:03,263 --> 00:05:05,181 நீ தீங்கிழைப்பதில் கைத்தேர்ந்தவள். 88 00:05:05,265 --> 00:05:07,017 நான் ஒரு அறிவியல் விஞ்ஞானி. 89 00:05:07,976 --> 00:05:10,437 நிச்சயமாக. விஷயம் என்னவென்றால் நாம் துரத்தப்படுவோம், 90 00:05:10,520 --> 00:05:13,481 நடந்த அனைத்தும் ஒரு பெரிய பேரழிவாக இருக்கும் 91 00:05:13,565 --> 00:05:16,651 அதோடு நம் அம்மாக்கள் நடன பள்ளி மீதான ஆசையை விட்டுவிடுவார்கள். 92 00:05:17,319 --> 00:05:21,656 எனவே உதாரணமாக நிலையற்ற வினிகர் போன்ற ஒன்றை 93 00:05:21,740 --> 00:05:24,326 நிலையான சமையல் சொடாவோடு சேர்க்க விரும்புகிறாய். 94 00:05:27,621 --> 00:05:28,622 மிகச்சரி. 95 00:05:30,498 --> 00:05:31,541 அதை செய்ய முடியாது. 96 00:05:32,709 --> 00:05:33,960 என்ன? ஏன்? 97 00:05:34,044 --> 00:05:38,298 நாம் எப்போதும், என்றைக்கும் நடன பள்ளியில் சேர மாட்டோம் என சத்தியம் செய்திருக்கிறோம். 98 00:05:39,507 --> 00:05:41,635 வெறும் ஒரு வகுப்பு தான். 99 00:05:41,718 --> 00:05:44,012 சத்தியத்தை மீறினால், அதற்கான விளைவை சந்திப்பாய். 100 00:05:44,095 --> 00:05:46,890 பார், சத்தியங்களை மீற வழி இல்லையென்றால், 101 00:05:46,973 --> 00:05:49,976 சத்தியத்தை ரத்து செய்வது பிறகு எதற்கு இருக்கிறது? 102 00:05:52,562 --> 00:05:55,774 ஒன்று, இரண்டு, மூன்று. 103 00:05:55,857 --> 00:05:58,818 நம் பெற்றோர்கள் கூட்டு சதி செய்கிறார்கள். என் பெற்றோர் இப்போதுதான் இதை முயன்றனர். 104 00:05:58,902 --> 00:06:00,820 ஒன்று, இரண்டு, மூன்று. 105 00:06:00,904 --> 00:06:06,284 ஓ, ஹேரியட், நீ இங்கிருப்பது சந்தோஷம். திரு. கிப்ஸும் நானும் நடன இசையை ரசிக்கிறோம். 106 00:06:06,368 --> 00:06:08,286 நீங்களும் எங்களுடன் ஆடுகிறீர்களா? 107 00:06:08,370 --> 00:06:12,040 வா, ஜேனி. நீ நேர்த்தியான சிலவற்றை கற்றுக்கொண்டு நீண்ட காலம் ஆகிறது. 108 00:06:12,123 --> 00:06:15,210 ஒன்று, இரண்டு, மூன்று. 109 00:06:15,293 --> 00:06:17,921 ஒன்று, இரண்டு, மூன்று. 110 00:06:18,004 --> 00:06:19,673 ஒன்று, இரண்டு, மூன்று. 111 00:06:19,756 --> 00:06:23,134 சரி, போதும். நான் நடன பள்ளிக்குப் போகிறேன். 112 00:06:33,853 --> 00:06:37,691 அரிக்கிறது. ஏன் அரிக்கிறது? இதை எறும்புகளால் செய்திருப்பார்கள் போல. 113 00:06:38,358 --> 00:06:39,985 நான் ஒரு சடைநாயை போல உணர்கிறேன். 114 00:06:41,027 --> 00:06:42,988 இதுதான் என் வாழ்க்கையிலேயே மோசமான நாள். 115 00:06:44,531 --> 00:06:47,951 விரைவில் எல்லாம் சரியாகிவிடும். சத்தியத்தை ரத்து செய்ய நீ தயாரா? 116 00:06:59,921 --> 00:07:06,136 ஹேரியட் எம். வெல்ஷ் ஆகிய நான் நடன பள்ளிக்கு போக மாட்டேன் என்ற சத்தியத்தை முறிக்கிறேன். 117 00:07:06,219 --> 00:07:11,016 ஜேனி கிப்ஸ் ஆகிய நான் நடன பள்ளிக்கு போக மாட்டேன் என்ற சத்தியத்தை முறிக்கிறேன். 118 00:07:11,892 --> 00:07:14,519 நாம் முதல் முறை சத்தியத்தை ரத்து செய்கிறோம். எனக்கு மயக்கம் வருகிறது. 119 00:07:25,739 --> 00:07:29,659 குதிரை லாடங்களைப் போல இருக்கிறன. இந்த காலணிகளில் யார் நடப்பார்கள்? 120 00:07:29,743 --> 00:07:30,952 ஓ, சரி. 121 00:07:32,037 --> 00:07:34,080 நீ என்னை பார்க்கலாம் என்று யார் சொன்னது? 122 00:07:37,626 --> 00:07:39,044 அமைதி, குழந்தைகளே! 123 00:07:41,004 --> 00:07:44,216 நான் திரு. டுபாய், உங்கள் நடன பயிற்சியாளர். 124 00:07:45,926 --> 00:07:46,968 உன் பெயர் என்ன? 125 00:07:47,052 --> 00:07:48,970 ஹேரியட் எம். வெல்ஷ். 126 00:07:52,599 --> 00:07:54,184 உனக்கு கற்றுக்கொடுப்பது சவாலாக இருக்கப்போகிறது. 127 00:08:00,315 --> 00:08:02,442 உன் தோள்களை தளர்வாக வை. 128 00:08:02,525 --> 00:08:04,361 நீ மிகவும் கீழே கையை வைத்திருக்கிறாய். 129 00:08:05,028 --> 00:08:07,030 தோள்பட்டை அளவுக்கு காலை விரி. 130 00:08:08,240 --> 00:08:09,950 அருமை, செல்வி ஹாவ்தோர்ன். 131 00:08:10,033 --> 00:08:15,121 இதுதான் சரியான பாவனை, வார்த்தைகளின்றி பலவற்றை தெரிவிக்கிறது. 132 00:08:15,205 --> 00:08:18,792 ஒருவரின் பாவனையைப் பார்த்தே, என்னால் பல விஷயங்களை சொல்ல முடியும். 133 00:08:18,875 --> 00:08:22,587 அவர்களுடைய நம்பிக்கை, தரம், பரிவு, ஆற்றல்... 134 00:08:22,671 --> 00:08:27,092 ஒருவரைப் பற்றி நல்ல பாவனை சொல்லாத விஷயங்களை விரைவாகப் பட்டியலிட்டுவிடலாம். 135 00:08:27,592 --> 00:08:31,096 செல்வி வெல்ஷ், நேராக நில். உனக்கு நோட்ரே டேமின் கூன்முதுகு இல்லை. 136 00:08:31,763 --> 00:08:35,850 என்னால் முடியவில்லை. பிங்கி குட்டையாக இருக்கிறான். நான் வளைய வேண்டியுள்ளது. 137 00:08:42,148 --> 00:08:44,192 சபாஷ், செல்வி கிப்ஸ். 138 00:08:45,485 --> 00:08:48,363 அவள் என்ன செய்கிறாள்? அவள் ஏன் சிரிக்கிறாள்? 139 00:08:48,446 --> 00:08:51,700 அது அவளுடைய திட்டத்தின் ஒரு பகுதி என்று அப்போதுதான் உணர்ந்தேன். 140 00:08:51,783 --> 00:08:54,411 நிச்சயமாக. பயிற்சியாளருக்கு பிடித்த நபராக மாறி, 141 00:08:54,494 --> 00:08:57,455 அவருடைய நம்பிக்கைய சம்பாதித்து, பிறகு உள்ளே இருந்துகொண்டே அதை அழிப்பது. 142 00:08:57,539 --> 00:08:59,374 இது கண்டிப்பாக விரைவில் நடக்கும். 143 00:09:00,250 --> 00:09:04,296 ஒன்று, இரண்டு, மூன்று. 144 00:09:04,379 --> 00:09:07,340 பிரச்சனை என்னவென்றால், ஜேனியின் திட்டம் செயல்பட நீண்ட நாளாகும். 145 00:09:07,424 --> 00:09:08,425 ஜேனி. 146 00:09:09,801 --> 00:09:10,802 ஹேரியட்! 147 00:09:10,886 --> 00:09:13,179 -என்ன? -நீ என் பாதங்களை மிதிக்கிறாய். 148 00:09:15,348 --> 00:09:16,349 செல்வி வெல்ஷ். 149 00:09:16,433 --> 00:09:18,977 என் முதுகு நேராக இருக்கிறது. 150 00:09:19,728 --> 00:09:23,648 நீ தாளத்தை விட வேகமாக ஆடுகிறாய். திரு. வைட்ஹெட்டை பின்பற்றி ஆடு. 151 00:09:24,441 --> 00:09:25,942 இது கையுறைகளால் ஏற்பட்ட தவறு. 152 00:09:26,026 --> 00:09:29,988 அவை என் கைகளை அரிக்க செய்து அதன் பாதிப்பு என் பாதங்களுக்குப் போகிறது. 153 00:09:30,071 --> 00:09:31,197 நிறுத்து! 154 00:09:33,116 --> 00:09:35,452 உன்னுடைய கையுறைகளை நீ கழற்றக்கூடாது. 155 00:09:35,535 --> 00:09:37,329 ஆனால் அரிப்பதை என்ன செய்வது? 156 00:09:37,412 --> 00:09:39,581 அவை உன் சௌகரியத்துக்காக அல்ல, செல்வி வெல்ஷ். 157 00:09:39,664 --> 00:09:44,252 அவை உன் கூட்டாளியின் வியர்வை, கிருமிகள் நிறைந்த கைகளிலிருந்து உன்னை பாதுகாப்பதற்காக. 158 00:09:54,638 --> 00:09:56,556 ஊதா நிற காலுறைகள், நான் அவளோடு ஆடுகிறேன். 159 00:09:57,182 --> 00:09:59,309 என்னால் இதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள முடியாது. 160 00:10:00,727 --> 00:10:01,728 திட்டம் என்ன? 161 00:10:02,395 --> 00:10:04,231 இதை எப்படி விளக்குவதேன்று தெரியவில்லை. 162 00:10:04,314 --> 00:10:08,401 -அப்படியென்றால் திட்டம் மிகவும் சிக்கலானது. -எனக்கு நடனமாட பிடிக்கிறது. 163 00:10:08,985 --> 00:10:10,695 இல்லை, பிடிக்கவில்லை. 164 00:10:10,779 --> 00:10:12,405 ஆம், பிடிக்கிறது. 165 00:10:12,489 --> 00:10:14,950 -நீ அதை எப்போதும் வெறுத்தாய். -நான் அதை முயற்சிக்கவில்லை என்பதால்தான். 166 00:10:15,033 --> 00:10:17,911 செல்வி வெல்ஷ், உடனடியாக உன் துணையிடம் திரும்பி போ. 167 00:10:20,872 --> 00:10:24,376 -வா, பிங்கி. -ஆனால் நான்தான் வழிநடத்த வேண்டும். 168 00:10:24,459 --> 00:10:26,253 அப்படியென்றால் வழிநடத்து. அந்த பக்கமாக. 169 00:10:31,299 --> 00:10:34,511 ஜேனி. சத்தியம் பற்றி நீ சொன்னதுதான் சரி. அதை ரத்து செய்தது... 170 00:10:34,594 --> 00:10:36,304 சுற்றி வா! 171 00:10:36,388 --> 00:10:40,433 …பெரிய தவறு. மீண்டும் சத்தியம் செய்ய விரும்புகிறேன். வேறு... 172 00:10:42,811 --> 00:10:44,479 பார்த்துப் போ. 173 00:10:44,563 --> 00:10:46,648 ஆனால் உன்னைப் பார்க்க வேண்டாம் என்று நீதான் சொன்னாய். 174 00:10:48,942 --> 00:10:52,195 சத்தியத்தை ரத்து செய்ததை ரத்து செய்வோம். 175 00:10:52,279 --> 00:10:54,531 இல்லை. எனக்கு சத்தியத்தை ரத்து செய்ததில் மகிழ்ச்சிதான். 176 00:10:54,614 --> 00:10:57,200 இல்லையென்றால் நான் ஒருபோதும் நடனமாட முயற்சித்திருக்க மாட்டேன். 177 00:10:57,742 --> 00:10:59,327 ஆனால்... இங்கே வா, நீ. 178 00:11:03,707 --> 00:11:04,708 செல்வி வெல்ஷ்! 179 00:11:04,791 --> 00:11:09,129 இளம் பெண்கள் செய்யவேண்டியதைப் போல பின்தொடராமல், நீ வழிநடத்துகிறாய். 180 00:11:09,921 --> 00:11:12,632 என்ன? சிறுவர்கள் மட்டுமே வழிநடத்த முடியுமா? ஏன்? 181 00:11:12,716 --> 00:11:17,804 சிறுவர்கள் பெரியவர்களாகவும் வலிமையாகவும் இருப்பதால் எப்போதுமே இதுதான் வழக்கம். 182 00:11:17,888 --> 00:11:20,557 ஆனால் அவள் என்னை விட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கிறாள். 183 00:11:20,640 --> 00:11:21,933 நீ பெரிதாகி விடுவாய். 184 00:11:22,017 --> 00:11:23,310 நீங்கள் என் அப்பாவை பார்த்ததில்லை. 185 00:11:23,393 --> 00:11:26,313 இது நியாயமற்றது. சிறுமிகளாலும் வழிநடத்த முடியும். 186 00:11:26,396 --> 00:11:27,439 சரிதானே, ஜேனி? 187 00:11:30,358 --> 00:11:33,820 சரி, எனவே நான் இப்போது ஜேனியை நம்ப முடியாது 188 00:11:33,904 --> 00:11:39,075 ஆனால் நான் செய்யப் போவதை அவள் பார்த்தால், அவள் என்னை ஆதரிப்பாள். 189 00:11:41,161 --> 00:11:45,707 அட, எல்லோரும் கட்டுப்பாடுகளை விடுங்கள். எந்த விதிகளும் இல்லை. 190 00:11:52,339 --> 00:11:55,091 பெண்கள் வழிநடத்தலாம், உங்களுக்கு ஒரு துணை தேவையில்லை, 191 00:11:55,175 --> 00:11:58,803 கொப்பளங்களும் தேவையில்லை! 192 00:12:01,890 --> 00:12:04,017 இந்த முட்டாள்தனத்தை உடனடியாக நிறுத்து. 193 00:12:05,185 --> 00:12:10,315 இது முட்டாள்தனம் அல்ல, திரு. டுபாய். இது புரட்சி! 194 00:12:10,398 --> 00:12:14,527 பாரம்பரியத்தின் சங்கிலிகளை தூக்கி எறியுங்கள். உங்களை வெளிப்படுத்துங்கள். 195 00:12:14,611 --> 00:12:16,988 பெத் எலென், நீ அதை செய்ய நினைக்கிறாய். 196 00:12:19,366 --> 00:12:20,367 பிங்கி? 197 00:12:21,868 --> 00:12:25,914 உன் கையை அங்கே கொண்டு போகக்கூடாது திரு. வைட்ஹெட். உடனடியாக அதை கழுவு. 198 00:12:28,291 --> 00:12:29,292 ஜேனி? 199 00:12:47,894 --> 00:12:50,188 ஸ்போர்ட், எனக்கு உன் உதவி தேவை. 200 00:12:50,272 --> 00:12:52,190 ஹேய், நான் பயிற்சியில் இருக்கிறேன். 201 00:12:52,274 --> 00:12:54,693 ஆனால் சத்தியப்பிரமாண புத்தகம் எனக்குத் தேவை. 202 00:12:56,403 --> 00:12:57,445 ஒரு நொடி. 203 00:12:59,656 --> 00:13:01,992 பயிற்சியாளரே, நான் கழிவறையை பயன்படுத்த வேண்டும். 204 00:13:02,075 --> 00:13:05,370 ஹேய் வா. சத்தியப்பிரமாண புத்தகம் லாக்கரின் அடிப்பகுதியில் உள்ளது. 205 00:13:08,164 --> 00:13:10,292 அது இங்கே இல்லை. நீ இங்கே இருக்கும் என்றாய். 206 00:13:15,338 --> 00:13:18,049 ரகசிய இடம். அருமை. 207 00:13:20,760 --> 00:13:22,304 சரி, ஸ்போர்ட், கேள். 208 00:13:22,387 --> 00:13:25,056 நான் ஒரு சத்தியத்தை ரத்து செய்தேன், அது ஒரு பெரிய தவறு. 209 00:13:25,140 --> 00:13:28,184 -இப்போது நான் கண்டுபிடிக்க வேண்டும்... -ஸ்போர்ட், இங்கே வா. 210 00:13:28,268 --> 00:13:30,103 நான் மீண்டும் பயிற்சிக்கு போக வேண்டும். 211 00:13:33,481 --> 00:13:35,525 ஹேய், உதவக்கூடிய ஏதாவது கிடைத்ததா? 212 00:13:35,609 --> 00:13:36,610 இல்லை. 213 00:13:37,777 --> 00:13:40,280 நீ சத்தியத்தை ரத்து செய்த போது சாட்சியாக இருந்தது யார்? 214 00:13:40,363 --> 00:13:43,158 சத்தியத்தை ரத்து செய்ய சாட்சிகள் தேவையில்லை. அல்லது தேவையா? 215 00:13:43,783 --> 00:13:47,662 ஆம், தேவை. பக்கம் 27, விதி நான்கு, பிரிவு பி. 216 00:13:47,746 --> 00:13:49,247 ஸ்போர்ட், பந்தை தடு! 217 00:13:58,590 --> 00:13:59,591 ஜேனி. 218 00:14:00,759 --> 00:14:02,802 ஸ்போர்ட், நீ இங்கே என்ன செய்கிறாய்? 219 00:14:02,886 --> 00:14:04,346 நாம் பேச வேண்டும். 220 00:14:05,305 --> 00:14:07,974 "மற்ற சத்தியங்களைப் போலவே, சத்தியத்தை ரத்து செய்யவும் ஒரு சாட்சி தேவை. 221 00:14:08,058 --> 00:14:10,560 சாட்சி இல்லாமல், அது செல்லாது. எனவே..." 222 00:14:10,644 --> 00:14:13,021 நாம் சத்தியத்தை ரத்து செய்தது செல்லாது. 223 00:14:13,104 --> 00:14:16,733 ஆம். நடன பள்ளி கிடையாது. ஒருபோதும் கிடையாது. 224 00:14:16,816 --> 00:14:19,986 -ஆனால் நாம் ஏற்கனவே சேர்ந்துவிட்டோம். -வெளியேற வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். 225 00:14:20,070 --> 00:14:23,615 நாம் திரும்பிச் சென்று, ஏதாவது கலாட்டா செய்து நம்மை வெளியேற்ற வைப்போம். 226 00:14:23,698 --> 00:14:26,534 அந்த வகையில் சத்தியத்துக்கு மீண்டும் ஒருபோதும் ஆபத்து நேராது. 227 00:14:26,618 --> 00:14:31,164 அல்லது ஸ்போர்ட்டை சாட்சியாக வைத்துக்கொண்டு மீண்டும் சத்தியத்தை ரத்து செய்யலாம். 228 00:14:31,248 --> 00:14:36,378 இல்லை, அப்படி செய்வது பெண்கள் வழிநடத்த முடியாது என்ற விதியை ஏற்பதாக ஆகிவிடும். 229 00:14:40,382 --> 00:14:42,175 இதுதான் உண்மையில் உன் விருப்பமா? 230 00:14:46,012 --> 00:14:49,099 சரி. சத்தியம் சத்தியம்தான். 231 00:14:53,228 --> 00:14:57,274 செல்வி வெல்ஷ், அணுகுமுறையை மாற்றிக்கொண்டதை பாராட்டுகிறேன். 232 00:14:59,985 --> 00:15:01,111 எனவே, திட்டம் என்ன? 233 00:15:01,611 --> 00:15:03,405 உன்னோடு நடனமாட பிங்கியை கேட்கச் சொல். 234 00:15:07,367 --> 00:15:09,077 பிங்கி, என்னை நடனமாட அழை. 235 00:15:09,995 --> 00:15:13,915 -சரி. பொறு, இதில் ஏதாவது சதி உள்ளதா? -பிங்கி! 236 00:15:13,999 --> 00:15:16,001 நான் உன்னோடு ஆடலாமா? 237 00:15:17,085 --> 00:15:18,336 மகிழ்ச்சி. 238 00:15:20,922 --> 00:15:25,969 நடனத்தின் இன்பத்திற்கு சரணடைந்துவிட்டாள். இது எப்போதும் நடப்பதுதான். 239 00:15:28,805 --> 00:15:29,931 இப்பொழுது என்ன? 240 00:15:39,274 --> 00:15:40,859 அவற்றை மீண்டும் போடு! 241 00:15:47,741 --> 00:15:48,992 கிருமிகள். 242 00:15:51,119 --> 00:15:52,370 கரடுமுரடான தன்மை! 243 00:15:54,497 --> 00:15:56,833 திகில்! 244 00:15:58,960 --> 00:16:00,921 இது ஒரு சதி என்று எனக்குத் தெரியும். 245 00:16:02,047 --> 00:16:04,841 இருவரும். வெளியேறுங்கள். 246 00:16:05,592 --> 00:16:07,969 அவர் முகத்தைப் பார்த்தாயா? 247 00:16:09,221 --> 00:16:10,764 ஹேய், முட்டை கிரீம்கள் வேண்டுமா? 248 00:16:10,847 --> 00:16:13,099 எனது உளவு வேலைக்கு 4 மணி வரை நேரமிருக்கிறது. 249 00:16:13,183 --> 00:16:15,227 நடனம் நிஜமாகவே பயங்கரமானதா? 250 00:16:16,061 --> 00:16:19,314 அல்லது உனக்கு நடனம் வராது, எனக்கு நன்றாக வரும் என்பதால் அது மோசமானதா? 251 00:16:20,607 --> 00:16:22,651 இது மோசமானது என்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன, 252 00:16:22,734 --> 00:16:25,362 ஆனால் முக்கியமான காரணம் சிறுமிகள் சிறுவர்களைப் பின்தொடர வேண்டும் என்பதுதான். 253 00:16:25,445 --> 00:16:26,863 அதை நீ எப்படி ஏற்க முடியும்? 254 00:16:26,947 --> 00:16:28,907 ஏனென்றால் நான் அதற்கு பழகிவிட்டேன். 255 00:16:28,990 --> 00:16:32,452 எப்போதும் நீதான் வழிநடத்துகிறாய், நான் பின்பற்றுகிறேன். எனக்கு சலித்துவிட்டது. 256 00:16:32,535 --> 00:16:33,912 நான் எப்போதும் வழிநடத்துவதில்லை. 257 00:16:33,995 --> 00:16:34,996 ஆம், நீ செய்கிறாய். 258 00:16:37,666 --> 00:16:41,545 தனது நெருங்கிய தோழியை விட்டுவிட்டு கோபமாக வெளியேறிய நீ சொல்கிறாய். 259 00:16:45,757 --> 00:16:48,093 ஜேனியுடனான பிரச்சனையை மறக்க, 260 00:16:48,176 --> 00:16:51,346 நான் திரு. விதர்ஸ் மற்றும் அவரது 26 பூனைகளை உளவு பார்க்கச் சென்றேன். 261 00:16:51,930 --> 00:16:54,683 துரதிர்ஷ்டவசமாக, என் மனதில் வேறு யோசனைகள் ஓடின. 262 00:16:55,517 --> 00:16:58,812 நீங்கள் ஏன் எனது சிறந்த நண்பர்கள் என்று தெரியுமா? 263 00:16:58,895 --> 00:17:00,146 ஏன்? 264 00:17:00,230 --> 00:17:04,651 நீங்கள் எப்போதும் என் பேச்சைக் கேட்பதால், விசுவாசமாக இருப்பதால், 265 00:17:04,734 --> 00:17:08,237 ஒருபோதும் நடன வகுப்பிற்கு செல்லாததால். 266 00:17:08,862 --> 00:17:12,617 நான் விசுவாசமாக இருக்க விரும்பவில்லை. நீதான் எப்போதும் வழிநடத்துகிறாய். 267 00:17:13,785 --> 00:17:14,869 நான் நடனமாட விரும்புகிறேன். 268 00:17:15,996 --> 00:17:18,372 நாங்கள் ஏன் எப்போதும் நீ சொல்லும்படி செய்ய வேண்டும்? 269 00:17:18,456 --> 00:17:19,958 ஆம். 270 00:17:26,590 --> 00:17:29,718 நான் எப்போதும் வழிநடத்துவதில்லை. அப்படியா? 271 00:17:29,801 --> 00:17:33,179 நான் மகிழ்ச்சியாக ஜேனியைப் பின்பற்றுவேன். அவள் என்ன சொன்னாலும் செய்வேன். 272 00:17:33,263 --> 00:17:34,764 ஆனால், மேலே இருந்து குதிக்கச் சொன்னால் மாட்டேன். 273 00:17:34,848 --> 00:17:37,851 நடனம் மலையில் இருந்து குதிப்பது போன்றது, அதில் நான் ஜேனி சொல்வதை கேட்கமாட்டேன். 274 00:17:38,560 --> 00:17:43,481 அதாவது, நடனம் ஒரு குன்றைப் போன்றது, அதில் நான் ஜேனியைப் பின்பற்ற மாட்டேன். 275 00:17:43,565 --> 00:17:45,984 நான் சரியாகத்தான் சொல்கிறேன், ஆனாலும் வித்தியாசமாக தெரிகிறது. 276 00:17:51,323 --> 00:17:52,532 ஹலோ, ஹேரியட். 277 00:17:52,616 --> 00:17:53,992 நான் ஜேனியுடன் பேசலாமா? 278 00:17:54,075 --> 00:17:56,036 அவள் உன்னோடு பேச விரும்புவதாக நான் நினைக்கவில்லை. 279 00:17:56,119 --> 00:17:59,581 நீ நடன வகுப்பில் செய்த செயலுக்குப் பிறகு, நான் அவளை குறை சொல்லமாட்டேன். 280 00:18:01,791 --> 00:18:02,792 சரி. 281 00:18:05,253 --> 00:18:08,882 திருமதி. கிப்ஸால் என்னையும் ஜேனியையும் பிரிக்க முடியாது. 282 00:18:11,468 --> 00:18:13,845 எங்கள் நட்பு இங்கே ஆபத்தில் இருக்கிறது. 283 00:18:19,309 --> 00:18:22,145 நாம் இதை பேசி தீர்க்க வேண்டும். வழிநடத்துவது கடினமானதுதான், 284 00:18:22,229 --> 00:18:25,607 ஆனால் அவளால் அதைச் செய்ய முடியும் என்று என்னால் விளக்க முடியும். 285 00:18:33,198 --> 00:18:36,743 ஆஹா. அவள் மிகவும் நன்றாக ஆடுகிறாள். 286 00:18:36,826 --> 00:18:39,621 நான் முன்பு பார்த்திராத வகையில் மகிழ்ச்சியாக இருக்கிறாள். 287 00:18:41,581 --> 00:18:46,628 நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குப் புரிந்தது, ஆனால் அது எனக்குப் பிடிக்கவில்லை. 288 00:18:47,462 --> 00:18:50,382 ஒன்று, இரண்டு, மூன்று. ஒன்று, இரண்டு... 289 00:18:51,675 --> 00:18:56,096 -செல்வி வெல்ஷ்? உனக்கு சொல்லிவிட்டேன்... -நடந்தது எல்லாவற்றுக்கும் நான்தான் காரணம். 290 00:18:56,179 --> 00:18:59,641 உங்கள் வகுப்பை கெடுக்க ஜேனி விரும்பவில்லை. நான்தான் அதைச் செய்ய வைத்தேன். 291 00:19:01,518 --> 00:19:03,311 நீ என்ன கொடுமையை அணிந்திருக்கிறாய்? 292 00:19:04,271 --> 00:19:06,815 -அவளை மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும். -முடியாது. 293 00:19:06,898 --> 00:19:10,026 தயவுசெய்து. அவளுக்கு நடனம் பிடிக்கும், நன்றாக ஆடவும் செய்வாள். 294 00:19:10,110 --> 00:19:11,111 நான் முடியாது என்றேன். 295 00:19:12,237 --> 00:19:13,947 நான் எதையும் செய்கிறேன். 296 00:19:14,030 --> 00:19:15,282 எதையுமா? 297 00:19:16,866 --> 00:19:21,079 நீங்கள் ஒப்பந்தம் செய்தால், "எதையும்" என்ற வார்த்தையை ஏற்காதீர்கள். 298 00:19:23,331 --> 00:19:26,126 இதில் சுருக்கம் உள்ளது. மீண்டும் ஆரம்பி. 299 00:19:29,296 --> 00:19:34,009 நல்ல செய்தி, அடுத்த நாள் திரு. டுபாய் ஜேனியை அனுமதித்தார். 300 00:19:38,138 --> 00:19:39,139 ஹேய். 301 00:19:39,639 --> 00:19:40,640 ஹேய். 302 00:19:40,724 --> 00:19:45,270 எனவே திரு. டுபாய் மீண்டும் உன்னை அனுமதிக்க வைத்துவிட்டேன், இல்லையா? 303 00:19:47,022 --> 00:19:52,819 நான் சொல்ல விரும்பியது என்னவென்றால், முன்பு, 304 00:19:52,903 --> 00:19:54,446 என்னை மன்னித்துவிடு. 305 00:19:55,989 --> 00:19:57,449 பேச்சை நிறுத்த முடியுமா? 306 00:19:57,532 --> 00:20:00,035 என் கைகளில் கொஞ்சம் கிருமிகள் சேர்கின்றன. 307 00:20:02,203 --> 00:20:06,082 மன்னிப்பு கேட்பது எல்லாவற்றையும் சரி செய்துவிடும் என்று நினைத்தேன். 308 00:20:06,166 --> 00:20:08,501 ஆனால் அது எப்போதும் நடப்பதில்லை. 309 00:20:10,420 --> 00:20:12,839 இறுதியாக நடன அரங்கேற்றத்துக்கான நேரம் வந்தபோது, 310 00:20:12,923 --> 00:20:18,178 நான் பணிவுடன் பார்வையாளர்களிடையே அமர்ந்து திரு. டுபாய் சொன்னது போலவே 311 00:20:18,261 --> 00:20:21,848 ஜேனி நடனமாடுவதை பார்க்கும் இன்பத்திடம் சரணடைந்துவிட்டேன். 312 00:20:21,932 --> 00:20:24,226 கையுறைகளை நான்தான் இஸ்திரி செய்தேன். 313 00:20:25,977 --> 00:20:27,354 என்ன ஆயிற்று? 314 00:20:27,437 --> 00:20:28,980 நீயும் அங்கே இல்லையே என வருந்துகிறேன். 315 00:20:33,360 --> 00:20:34,861 நடன பள்ளி. 316 00:20:34,945 --> 00:20:38,531 அதில் ஒரே நல்ல விஷயம் என்னவென்றால் மேரியன் அதில் சிறந்தவளாக இல்லை. 317 00:20:42,244 --> 00:20:43,453 ஜேனி சிறந்தவளாக இருந்தாள். 318 00:21:09,312 --> 00:21:12,148 செல்வி வெல்ஷ், என்னுடன் ஆடுகிறாயா? 319 00:21:12,649 --> 00:21:13,650 என்ன? 320 00:21:13,733 --> 00:21:15,569 ஜேனி, நீ என்ன செய்கிறாய்? 321 00:21:15,652 --> 00:21:17,445 ஹேரியட்டை நடனமாட அழைக்கிறேன். 322 00:21:18,029 --> 00:21:20,031 என்னால் முடியாது. நான் மோசமாக ஆடுவேன். 323 00:21:20,115 --> 00:21:22,742 ஒரு முறை நான் வழிநடத்துவதைப் பின்பற்று. 324 00:21:23,368 --> 00:21:25,287 மகிழ்ச்சியாக செய்கிறேன். 325 00:21:29,124 --> 00:21:31,793 இல்லை! செல்வி வெல்ஷ், செல்வி கிப்ஸ். இதை நிறுத்துங்கள்! 326 00:21:33,670 --> 00:21:35,755 திருமதி. வெல்ஷ், திருமதி. கிப்ஸ்! 327 00:21:36,423 --> 00:21:37,924 சரி, குறைந்தபட்சம் அவர்கள் நடனமாடுகிறார்களே. 328 00:21:39,259 --> 00:21:40,552 அது உண்மைதான். 329 00:21:43,221 --> 00:21:45,265 ஹேரியட், நீ என் பாதத்தை மிதித்துவிட்டாய். 330 00:21:45,348 --> 00:21:46,975 நான் இதில் மோசம் என்று சொன்னேனே. 331 00:21:48,143 --> 00:21:52,856 ஹேய், இன்னொரு சத்தியம் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். 332 00:21:52,939 --> 00:21:55,233 இனிமேல் சத்தியம் செய்ய வேண்டாம் என்றா? 333 00:21:55,317 --> 00:21:57,193 நீ என்னுடைய மனதை புரிந்துக்கொண்டாய். 334 00:22:08,955 --> 00:22:11,458 செல்வி ஹேன்சன்! என்ன செய்கிறாய்? 335 00:22:14,127 --> 00:22:15,253 திரு. வைட்ஹெட்! 336 00:22:16,213 --> 00:22:21,551 போகட்டும். நடனத்தைத் தொடருங்கள். உங்கள் கையுறைகளை மட்டும் கழற்ற வேண்டாம். 337 00:22:24,346 --> 00:22:26,431 ஓல் கோலி சொன்னது சரிதான். 338 00:22:26,514 --> 00:22:30,060 நீங்கள் எழுத்தாளராகப் போகிறீர்கள் என்றால் அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். 339 00:22:30,143 --> 00:22:33,438 நான் ஒருபோதும் நடனமாட கற்றுக்கொள்ளவில்லை என்றாலும், 340 00:22:33,521 --> 00:22:35,148 அதைவிட சிறப்பான ஒன்றை கற்றுக்கொண்டேன், 341 00:22:35,232 --> 00:22:40,153 எப்போது வழிநடத்துவது, எப்போது பின்தொடருவது என நெருங்கிய நண்பருக்குத் தெரிய வேண்டும். 342 00:23:51,391 --> 00:23:53,393 வசன தமிழாக்கம் அருண்குமார்