1 00:00:07,001 --> 00:00:09,959 ஃபால்அவுட் இதற்கு முன்பு 2 00:00:11,626 --> 00:00:13,168 நீதான் என் உலகம். 3 00:00:15,834 --> 00:00:17,126 அவரை எங்க கொண்டு போறீங்க? 4 00:00:17,126 --> 00:00:18,543 நிஜ உலகத்திற்கு. 5 00:00:18,543 --> 00:00:19,918 நீயும் பிறகு பார்க்கணும். 6 00:00:20,418 --> 00:00:26,376 என்னை மால்டேவரிடம் கூட்டி சென்றால் நீ எதிர்காலத்தை மாற்றலாம். 7 00:00:27,251 --> 00:00:28,418 என் தலை போதும். 8 00:00:29,293 --> 00:00:31,543 உன் அப்பாவை மீட்க இதுதான் ஒரே வழி. 9 00:00:32,959 --> 00:00:35,418 ஆஸ்பிரன்ட் டேன். அவங்க காயம் பற்றி தெரியுமா? 10 00:00:36,834 --> 00:00:37,834 அதை சுடு! 11 00:00:38,376 --> 00:00:41,168 அட முட்டாளே, இது எல்லாம் உன் தவறுதான் தெரியுமா. 12 00:00:41,668 --> 00:00:42,501 உன்னை கொல்வாங்க. 13 00:00:42,501 --> 00:00:44,293 அவங்களுக்கு தெரிய வேணாம். 14 00:00:44,293 --> 00:00:46,876 அது ப்ரதர்ஹூட். தெரிஞ்சுக்குவாங்க. 15 00:00:47,543 --> 00:00:50,084 அவங்களுக்கு தலைதானே வேணும்? இதுதான் தலை. 16 00:00:50,084 --> 00:00:53,543 - என்னோடு நீ வரணும். - அவர்கள் இதை தேடுவதை நிறுத்த மாட்டார்கள். 17 00:00:55,626 --> 00:00:58,334 அமெரிக்கா 10 ஆண்டுகளா வளத்துக்கான போர் சிக்கலில். 18 00:00:58,334 --> 00:01:01,168 வால்ட்-டெக் போரை முடிக்கும் வழிமுறைகளை வாங்கிவிட்டது. 19 00:01:01,168 --> 00:01:03,918 குளிர் இணைவு, அழியாத ஆற்றல். 20 00:01:03,918 --> 00:01:06,043 - என்ன அது... - ஃப்யூஷன் கோர். 21 00:01:06,168 --> 00:01:08,876 இப்போதெல்லாம் நிறைய பார்ப்பதில்லை தானே? 22 00:01:08,876 --> 00:01:12,376 நம் போட்டியை அழிக்கும் இறுதி ஆயுதம் எது தெரியுமா? 23 00:01:12,376 --> 00:01:13,709 அது நேரம் பற்றியது. 24 00:01:13,709 --> 00:01:16,293 வேறு எங்காவது வேலை செய்வதை யோசித்திருக்கிறாயா? 25 00:01:16,293 --> 00:01:18,209 நானில்லாமலே வால்ட்-டெக் இருக்கும். 26 00:01:18,209 --> 00:01:21,376 வெட்டியா குறை சொல்லிட்டிருந்தா யாருக்கும் நன்மை இல்லை. 27 00:01:21,376 --> 00:01:23,084 ஒட்டு கேட்கும் கருவி. 28 00:01:23,084 --> 00:01:25,168 என் மனைவியை ஒட்டு கேட்கணும்ன்றீங்களா? 29 00:01:25,168 --> 00:01:27,209 என் அம்மாவின் பிப்-பாய்க்கு என்ன ஆச்சு? 30 00:01:27,209 --> 00:01:28,543 அவளுடன் புதைத்தோம். 31 00:01:29,001 --> 00:01:30,501 அவளை நானே புதைத்தேன். 32 00:01:30,501 --> 00:01:32,043 நான் 31க்கு திரும்ப வேண்டும். 33 00:01:32,043 --> 00:01:33,751 நானும் உன் தந்தையும். 34 00:01:39,459 --> 00:01:40,459 ஹலோ? 35 00:02:20,751 --> 00:02:21,876 என்னைப் பார். 36 00:02:22,918 --> 00:02:23,918 கண்டிப்பாக. 37 00:02:41,001 --> 00:02:43,709 ஃபில்லி 38 00:02:45,084 --> 00:02:46,751 ஃபில்லியில் இறங்க அனுமதி. 39 00:02:46,751 --> 00:02:49,834 உள்ளூர் மக்கள் போரிட்டனர், அதோட நாங்களும்தான். 40 00:03:56,918 --> 00:03:58,959 உன் வீரப் பெருந்தகையின் சீருடையில், நீ. 41 00:04:01,043 --> 00:04:02,376 உன் வீரப் பெருந்தகை எங்கே? 42 00:04:06,168 --> 00:04:07,668 அவர் இறந்துட்டார். 43 00:04:12,209 --> 00:04:14,793 இது முதல் முறை அல்ல, 44 00:04:14,793 --> 00:04:18,918 உன்னுடன் வந்த சகோதரருக்கு இப்படி துரதிர்ஷ்டமாக நடப்பது. 45 00:04:21,876 --> 00:04:23,418 இல்லையா? 46 00:04:33,751 --> 00:04:36,376 அப்போ பொய் சொல்லியிருக்கிறாய். 47 00:04:37,626 --> 00:04:39,459 கைவினைப் பொருள் அல்ல, பிரபுவே. 48 00:04:40,834 --> 00:04:42,834 இப்போது பொய் சொல்வது போல். 49 00:04:44,918 --> 00:04:46,709 இருங்க. இருங்க. 50 00:04:47,459 --> 00:04:49,168 இருங்க, இருங்க, இருங்க. 51 00:04:50,001 --> 00:04:53,376 சொல்வதை தயவு செய்து கேளுங்க. நிஜமான தலையை கொண்டு வருவேன். 52 00:04:54,959 --> 00:04:57,793 - ஒப்புக்கொள். - என்னை கொல்லாதீங்க, எங்கேனு காட்டறேன். 53 00:05:06,209 --> 00:05:07,293 உங்களுக்கு உதவுவேன். 54 00:05:07,793 --> 00:05:09,209 தயவு செய்து, பிரபுவே. 55 00:05:10,668 --> 00:05:13,001 என் காயம் நானே செய்து கொண்டது. அவன் செய்ததல்ல. 56 00:05:14,793 --> 00:05:15,918 தயவு செய்து. 57 00:05:15,918 --> 00:05:17,543 வேணாம். தலை எங்கேனு தெரியும். 58 00:05:17,543 --> 00:05:19,959 ப்ரதர்ஹூட்க்காக, அவன் சொல்றதை கேளுங்கள். 59 00:05:22,793 --> 00:05:25,251 என்ன ஒரு விசுவாசம். 60 00:05:26,084 --> 00:05:28,709 இதைப்போல இப்போது பார்ப்பதில்லை. 61 00:05:58,543 --> 00:06:02,376 வீரப் பெருந்தகையின் கவசத்திற்கு ஆசைப்பட்ட முதல் வீர நம்பி நீதானு நினைப்பா? 62 00:06:05,584 --> 00:06:07,793 டைட்டஸ் எப்படி இறந்தான்? 63 00:06:07,793 --> 00:06:09,876 ஓடியே இறந்தார். 64 00:06:13,376 --> 00:06:15,793 ப்ரதர்ஹூட் அதன் வழியை இழந்துவிட்டது. 65 00:06:17,626 --> 00:06:20,626 நாம் ஒரு காலத்தில் பொட்டல் வெளியை ஆட்சி செய்தோம். 66 00:06:24,459 --> 00:06:28,543 இருந்தாலும், அதிகாரம் எடுத்துக் கொள்ளப் படுவது, கொடுக்கப் படுவதல்ல. 67 00:06:28,543 --> 00:06:31,043 நீ உன் பாடத்தை கற்றுக்கொண்டாய் எனலாம். 68 00:06:39,793 --> 00:06:41,668 ஆக, நீ சொல்வது உண்மை என்றால், 69 00:06:43,543 --> 00:06:45,293 பண்டத்தை என்னிடம் கொண்டு வந்தால், 70 00:06:46,668 --> 00:06:50,209 பின்னர் நீயும் நானும் சேர்ந்து, 71 00:06:50,209 --> 00:06:52,918 அதிகாரத்தை எடுத்துக் கொள்வோம். 72 00:06:54,626 --> 00:06:55,959 அதனுடன், 73 00:06:57,418 --> 00:07:02,793 நான் தலைவனாக, ஒரு புதிய ப்ரதர்ஹூட்டை ஆரம்பிக்கலாம், 74 00:07:02,793 --> 00:07:06,459 நீ அதன் பாதுகாவலனாக இரு. 75 00:07:15,418 --> 00:07:18,751 உன் வாழ் நாள் முழுவதும் நீ ஒரு வீட்டை தேடினாய். 76 00:07:28,834 --> 00:07:31,043 என்னுடன் சேர்ந்து அதை கட்டு. 77 00:07:55,668 --> 00:07:56,626 திசைகாட்டி 78 00:07:56,626 --> 00:07:58,793 நீங்கள் உங்கள் இலக்கை அடைந்துவிட்டீர்கள் 79 00:08:34,293 --> 00:08:35,084 அது அவள்தான். 80 00:08:46,959 --> 00:08:50,418 கிரிஃபித் விண்வெளி ஆய்வகம் 81 00:09:15,876 --> 00:09:20,293 வால்ட் டெக் 82 00:09:24,959 --> 00:09:26,793 சவாரிக்கு நன்றி. 83 00:09:26,793 --> 00:09:30,334 ஆயிலை மாத்தி குழப்பியதற்கு இது தான் என்னால முடிந்தது. 84 00:09:30,334 --> 00:09:32,793 உன் முயற்சியை பாராட்டறேன். 85 00:09:32,793 --> 00:09:36,334 தெரியுமா, இந்த மாதிரி நல்ல கார் வெச்சுருக்கறவங்க... 86 00:09:36,334 --> 00:09:38,876 அவங்க கையை அழுக்காக்கிக்க மாட்டாங்க. 87 00:09:41,459 --> 00:09:43,501 - சரி. - சரி. 88 00:09:43,501 --> 00:09:45,418 - உன்னை காதலிக்கிறேன். - நானும் உன்னை. 89 00:09:47,251 --> 00:09:49,251 - நாள் இனிதாகட்டும். - நன்றி, கூப். 90 00:09:49,251 --> 00:09:50,418 சரி. 91 00:10:00,293 --> 00:10:02,709 கூப். ஹே. 92 00:10:04,126 --> 00:10:06,459 - பார்த்ததில் மகிழ்ச்சி, நண்பா. - ஆம். 93 00:10:07,459 --> 00:10:08,543 என்ன ஆச்சு? 94 00:10:08,543 --> 00:10:11,709 என் பிப்-பாய். அது விநோதமா செயல்படுது. 95 00:10:12,293 --> 00:10:14,376 டிரான்ஸ்மிட்டர் எப்பவும் அணைவதில்லை. 96 00:10:14,376 --> 00:10:17,084 கணினி ஆட்களிடம் கொண்டு போகலாமே, அவங்க பார்க்கட்டும். 97 00:10:17,084 --> 00:10:19,168 இல்ல, நானே சரி செய்துடுவேன். 98 00:10:19,168 --> 00:10:21,668 அது செய்தி அனுப்பும் இடத்தை கண்டுபிடிக்கணும். 99 00:10:21,668 --> 00:10:24,334 கிளம்பறேன். ஜேனிக்கு கயிறு வீச்சு பயிற்சி தரணும். 100 00:10:24,334 --> 00:10:26,501 அப்படியா? எனக்கு குழந்தைகள் இல்லை, 101 00:10:26,501 --> 00:10:29,126 ஆனால் வளரும் நிர்வாகிகளுக்கு ஒரு திட்டம் இருக்கு, 102 00:10:29,126 --> 00:10:31,043 அது அடிப்படையில் ஒரே விஷயம்தான். 103 00:10:31,043 --> 00:10:32,834 பார்ப் அதை சொல்லியிருப்பாளே? 104 00:10:35,626 --> 00:10:36,876 இல்லை. இல்லை. 105 00:10:36,876 --> 00:10:38,209 பேர் பட்டின் மொட்டுகள். 106 00:10:38,209 --> 00:10:40,751 மனித வாழ்வின் வயதே, முன்னேற்றத்துக்கு 107 00:10:40,751 --> 00:10:42,668 தடைன்றது ஆதாரமான கருத்து. 108 00:10:42,668 --> 00:10:45,501 நூற்றாண்டுகள் என்ன, ஆயிரம் ஆண்டுகளாகும் வேலைகளையும் 109 00:10:45,501 --> 00:10:47,126 செய்ய விடாமல் தடுப்பது. 110 00:10:47,126 --> 00:10:50,043 எனவே, பட்டின் மொட்டுகள் திட்டமானது, பணிகளை 111 00:10:50,043 --> 00:10:52,543 நூற்றாண்டுகளா பாதையில் வைத்திருக்கும். பிரமாதம். 112 00:10:52,543 --> 00:10:53,876 - தாமதமாகிறது. - ஆம். 113 00:10:53,876 --> 00:10:56,001 - போகலாம். - இன்று முக்கியமான நாள். 114 00:10:56,001 --> 00:10:58,293 ஆமாம், வாழ்த்துக்கள். 115 00:11:03,501 --> 00:11:07,376 சரி, அனேகமா, நாம் ஒரு நாள் எல்லோருமா கஃபே கபானா போகலாமா? 116 00:11:07,376 --> 00:11:08,584 நீ, நான், கூப்புடன். 117 00:11:08,584 --> 00:11:10,251 மன்னிக்கணும். 118 00:11:10,251 --> 00:11:12,793 உன் பிப்-பாய் விநோதமா செயல்படுதா? 119 00:11:12,793 --> 00:11:14,543 இல்ல. ஏன்? உன்னோடதில் பிரச்சனையா? 120 00:11:14,543 --> 00:11:17,668 இல்ல. எனக்கு உறுதியா தெரில. உனக்கு... 121 00:11:17,668 --> 00:11:19,168 அடச்சே. 122 00:11:46,251 --> 00:11:52,251 ஃபால்அவுட் 123 00:12:15,209 --> 00:12:16,209 லூசி. 124 00:12:17,043 --> 00:12:18,209 அப்பா. 125 00:12:30,501 --> 00:12:31,668 நல்வரவு. 126 00:12:44,709 --> 00:12:47,793 வா. இப்ப விருந்தாளியை கவனிப்பது என் முறைதானே? 127 00:12:54,334 --> 00:12:56,834 இதை பற்றி யோசிக்க நிறைய நேரம் இருந்தது. 128 00:12:59,918 --> 00:13:02,834 என் மனதில் ஓடிய விஷயங்களை கேட்டால் நம்பமாட்டாய். 129 00:13:06,751 --> 00:13:12,251 ஒரு ராத்திரி, பழைய கையெறி குண்டை கழுத்து துளையில் சொருகினேன். 130 00:13:15,876 --> 00:13:19,001 நான் இந்த காரியத்தில் இறங்கியது, இங்கே வந்து 131 00:13:19,001 --> 00:13:22,084 எல்லோரையும் துவம்சம் செய்யணும் என்ற நினைப்பில். 132 00:13:22,959 --> 00:13:27,209 ஆனால் நான் அப்படி வளர்க்கப்படவில்லை. 133 00:13:30,876 --> 00:13:34,251 எனவே, உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா, 134 00:13:34,251 --> 00:13:36,334 நான் கண்ணியமா நடக்கப் போகிறேன். 135 00:13:41,251 --> 00:13:44,334 கேட்டதை போல உங்க நட்பு தலையை கொண்டு வந்து விட்டேன். 136 00:13:57,084 --> 00:13:58,918 இப்போது, தயவு செய்து. 137 00:14:00,293 --> 00:14:01,959 என் அப்பாவை திருப்பித் தாங்க. 138 00:14:04,209 --> 00:14:05,626 மிக்க நல்லது. 139 00:14:13,209 --> 00:14:14,834 ஆனால் முதலில், 140 00:14:17,668 --> 00:14:21,251 உன் அப்பாவை எனக்கு எப்படி தெரியும்னு சொல்லவா? 141 00:14:21,251 --> 00:14:22,876 உண்மையில் அவர் யார் என. 142 00:14:25,626 --> 00:14:28,209 வேணாம், லூசி, அவ சொல்வதை கேட்காதே. 143 00:14:28,209 --> 00:14:31,209 உன் அப்பா பதுங்கு குகைல பிறந்தார்னு நினைக்கிறியா? 144 00:14:31,876 --> 00:14:33,293 உன்னை மாதிரி. 145 00:14:36,043 --> 00:14:37,668 உன் சகோதரனைப் போல. 146 00:14:38,376 --> 00:14:41,418 அந்த எதிர்காலத்தின் சாவி... எனக்கு இந்த முறை கிடைக்கும். 147 00:14:41,418 --> 00:14:42,793 ஹலோ? 148 00:14:42,793 --> 00:14:44,584 அந்த எதிர்காலத்தின் சாவி... 149 00:14:46,126 --> 00:14:48,001 மானுட எதிர்காலத்தின் சாவி... 150 00:14:49,501 --> 00:14:50,584 இது அபத்தம். 151 00:14:51,626 --> 00:14:53,501 எதிர்கால சாவி... 152 00:14:55,876 --> 00:14:56,709 ஹலோ? 153 00:14:58,376 --> 00:15:00,168 மானுட எதிர்காலத்தின் சாவி... 154 00:15:00,168 --> 00:15:03,459 எனக்கு கிடைக்கும். அதைப் பெறுவேன். கவலை வேணாம். 155 00:15:04,126 --> 00:15:06,668 இந்த சாவி... மானுட எதிர்காலத்துக்கான சாவி... 156 00:15:08,668 --> 00:15:10,334 இது வெறும் அபத்தமானது. 157 00:15:11,168 --> 00:15:13,084 இதோ துவங்குது. பெரும் ஆட்டமான... 158 00:15:14,793 --> 00:15:16,168 மன்னிக்கணும். மன்னிக்கணும். 159 00:15:16,168 --> 00:15:19,043 இதுதான். இந்த முறை எடுப்பேன். 160 00:15:19,043 --> 00:15:21,001 மானுட எதிர்காலத்தின் சாவி... 161 00:15:21,668 --> 00:15:23,751 இல்ல. ஒரு வேளை நான்... 162 00:15:25,376 --> 00:15:26,584 நன்றி, பெட்டி. 163 00:15:28,168 --> 00:15:31,418 இரு, நீ பெட்டியும் இல்லை ஹாங்க்கும் இல்லை. 164 00:15:32,626 --> 00:15:35,959 உன்னிடம் ஹாங்க் மெக்லீன் டிஎன்ஏல 50 சதம் மட்டுமே இருக்கு. 165 00:15:37,334 --> 00:15:40,043 - நான் அவருடைய மகன். - இல்லை. 166 00:15:40,043 --> 00:15:42,084 இல்லை, இல்லை! 167 00:15:42,959 --> 00:15:45,793 - நீ யார், என்ன பதவி? - நெறிமுறை 53ஐ தொடங்கு. 168 00:15:51,918 --> 00:15:54,251 சரிதான், கொஞ்சம் அசையாம இரு. 169 00:15:54,251 --> 00:15:55,334 - நீ யார்? - இரு. 170 00:15:55,334 --> 00:15:57,834 இரு, இரு. உனக்கு பதில் சொல்ல மாட்டேன், 171 00:15:57,834 --> 00:16:00,501 இந்த ஊசி உனக்கு போட அனுமதிக்காத வரை. 172 00:16:01,918 --> 00:16:04,709 சரி, நகராதே. 173 00:16:04,709 --> 00:16:06,501 ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும். 174 00:16:06,501 --> 00:16:08,751 அங்க போக வேண்டாம். அங்கே போகாதே. 175 00:16:08,751 --> 00:16:11,709 அங்கே எதையும் படிக்காதே, அல்லது விளக்கை போடாதே. 176 00:16:11,709 --> 00:16:15,334 நீ தகவல் கிளைச் செய்திகள் அல்லது டெர்மினலை பார்க்க வேண்டாம். 177 00:16:16,126 --> 00:16:18,626 இரு. அங்கேயே... இரு. 178 00:16:18,626 --> 00:16:21,834 நில்! நான் வர்றேன். 179 00:16:21,834 --> 00:16:23,543 என்ன இடம் இது? 180 00:16:25,543 --> 00:16:27,668 பார்ப் எப்ப வருவா, ஏதும் தெரியுமா? 181 00:16:27,668 --> 00:16:29,251 மன்னி, மீட்டிங்கில் இருக்கிறா. 182 00:16:29,251 --> 00:16:31,668 ஏதோ சக பணிகளை ஒருங்கிணைப்பது பற்றி... 183 00:16:31,668 --> 00:16:32,959 எனக்குப் புரியாதது. 184 00:16:32,959 --> 00:16:34,043 எனக்கும்தான். 185 00:16:36,668 --> 00:16:38,501 அதிருக்கட்டும், திரு. ஹாவர்ட், 186 00:16:38,501 --> 00:16:41,751 பார்ப் உடன் ஒரு புதியவர் வேலை செய்யறார், ஹென்றி. 187 00:16:42,543 --> 00:16:44,501 உண்மையில அவர் உங்க பரம ரசிகர். 188 00:16:44,501 --> 00:16:46,168 ஆம், ஹென்றி. 189 00:16:46,834 --> 00:16:49,251 சில சமயத்தில் வீட்டிற்கு போன் செய்வார். 190 00:16:49,251 --> 00:16:52,584 அவரை சில தருணம் சந்திப்பதில் பிரச்சனை இல்லையே? 191 00:16:52,584 --> 00:16:55,293 நிச்சயமா. ரசிகரை சந்திப்பதில் மகிழ்ச்சியே. 192 00:17:09,418 --> 00:17:11,959 எங்கள் எல்லா பணியும், நிறைவேற்றிய அனைத்தும் 193 00:17:11,959 --> 00:17:15,043 அமெரிக்காவை சிறந்ததாக்கும் எண்ணம் கொண்ட சக நிறுவனங்களின் 194 00:17:15,043 --> 00:17:18,793 இடையிலான ஒத்துழைப்பின் விளைவாகும். 195 00:17:21,126 --> 00:17:25,584 {\an8}இங்கு வால்ட்-டெக்கின் சார்பாக, அனைவருக்கும் நல்வரவு. 196 00:17:25,584 --> 00:17:26,668 {\an8}வால்ட்-டெக் 197 00:17:26,668 --> 00:17:28,084 {\an8}ராப்-கோ 198 00:17:28,084 --> 00:17:29,459 {\an8}வெஸ்ட்-டெக் 199 00:17:29,459 --> 00:17:31,876 {\an8}பிக் எம்டி 200 00:17:31,876 --> 00:17:34,668 {\an8}அப்பட்ட உண்மையை பேசுவோம், பட். 201 00:17:34,668 --> 00:17:37,251 {\an8}விற்பனை போதுமானதா இல்லை, உங்களுக்கு பணம் வேணும். 202 00:17:37,251 --> 00:17:38,334 {\an8}ரெப்கான் 203 00:17:38,334 --> 00:17:42,376 {\an8}நீ தான் பேசணும், ஃப்ரெட்டி, உன் கை படும் எதுவும் நஷ்டம்தான். 204 00:17:45,459 --> 00:17:47,001 விற்பனை நல்லா இருக்கு. 205 00:17:47,668 --> 00:17:50,626 சமாதான பேச்சு வதந்திகளால நமக்கு கொஞ்ச பின்னடைவுதான், 206 00:17:50,626 --> 00:17:53,209 ஆனா இங்க உங்களுக்கு வாய்ப்பு வழங்க வந்தோம். 207 00:17:53,209 --> 00:17:55,626 சில பதுங்கு குகைல ஒத்துழைக்க விரும்புகிறோம். 208 00:17:55,626 --> 00:17:57,584 எனக்கு... வால்ட்ஸ் புரியவில்லை. 209 00:17:57,584 --> 00:17:59,168 வெளியே வரும் நேரம் என்றால், 210 00:17:59,876 --> 00:18:02,959 தரைவெளியில் மக்கள் இன்னும் உயிருடன் இருந்தால் என்னாவது? 211 00:18:02,959 --> 00:18:04,543 அவை கற்கால உயிரினங்கள். 212 00:18:04,543 --> 00:18:07,293 யார் பதுங்கு குகைலருந்து வெளியே வந்தாலும் தின்னுடலாமே. 213 00:18:07,293 --> 00:18:09,126 அது ஒரு பிரச்சினை இல்லை. 214 00:18:09,126 --> 00:18:11,834 பல நூற்றாண்டு உயிர்வாழ பதுங்கு குகைல வளங்கள் இருக்கு. 215 00:18:11,834 --> 00:18:14,626 தெரியுமா, இதற்கிடையில், நம் போட்டியாளர்கள், 216 00:18:15,334 --> 00:18:18,459 நம்மை தவிர தரைவெளியில் எல்லோரும் இறந்து போயிடுவாங்க. 217 00:18:20,668 --> 00:18:24,709 ஏன்னா, எல்லாவற்றிற்கும் மேலாக, பேரழிவுக்கான இறுதி ஆயுதம் எது? 218 00:18:29,293 --> 00:18:31,126 - நேரம். - நேரம். 219 00:18:32,959 --> 00:18:35,168 காலம் எல்லாத்தையும் வேட்டை ஆடும். 220 00:18:35,751 --> 00:18:37,959 அதோடு, ஒரு சம்பவம் ஏற்பட்டால், 221 00:18:37,959 --> 00:18:42,543 நம் எதிரிகள் அனைவரையும் அழிக்க நேரம் தான் நம் ஆயுதம். 222 00:18:43,209 --> 00:18:46,168 அப்படித்தான் பெரும் முதலாளித்துவ விளையாட்டை வெல்வோம். 223 00:18:46,168 --> 00:18:47,834 போராடி வெல்வதன் மூலம் அல்ல, ஆனா 224 00:18:48,793 --> 00:18:50,751 அவர்களுக்கு பின்பும் பிழைப்பதன் மூலம். 225 00:18:50,751 --> 00:18:53,751 எல்லா வெளிப்புற அச்சுறுத்தலையும் கடந்துவிட்டாலும் கூட, 226 00:18:53,751 --> 00:18:56,084 பதுங்கு குகையின் பிரச்சனை இது தான். 227 00:18:56,084 --> 00:18:58,793 நீண்ட காலம் மக்களை கூட்டமாக ஒரு இடத்தில் அடைத்தால் 228 00:18:58,793 --> 00:19:01,209 ஒருவருக்கொருவர் கொன்று கொள்வதில் முடியும். 229 00:19:01,209 --> 00:19:03,793 அப்ப, எப்படி உங்க அடிமைகள், தரைவெளி மக்களைவிட 230 00:19:03,793 --> 00:19:06,084 அதிக நாட்கள் வாழ்ந்துவிட முடியும்? 231 00:19:06,084 --> 00:19:09,168 நீங்க இன்னும் அடிப்படை கேள்விக்கே பதில் சொல்லவில்லை. 232 00:19:09,168 --> 00:19:11,876 இந்த மக்கள் 10,000 ஆண்டுகள் உயிர்வாழ முடியும்னா... 233 00:19:11,876 --> 00:19:14,543 இல்லல்ல, நீங்க இன்னும் அளவீடுகளை பார்க்கலயே. 234 00:19:31,001 --> 00:19:34,376 நான் வேறொரு கோணத்தை முக்கியமா முன்வைக்க அனுமதித்தால்! 235 00:19:39,043 --> 00:19:41,251 உடனே, பார்ப், அவங்களுக்கு புரிய வை. 236 00:19:42,918 --> 00:19:44,918 நான் எதிர்காலத்தை நினைக்கும் போது, 237 00:19:46,168 --> 00:19:51,084 நான் என் மகள் ஜேனி பற்றி நினைக்கிறேன். 238 00:19:53,501 --> 00:19:57,126 எப்படி அவளுக்கு ஒரு நல்ல எதிர் காலத்தை வழங்குவேன்? 239 00:19:57,126 --> 00:19:59,918 அதற்குதான் உங்களை இங்கே விவாதிக்க அழைத்தோம். 240 00:20:01,209 --> 00:20:02,293 ஆம். 241 00:20:03,293 --> 00:20:06,584 நாம் எப்படி நம் பதுங்கு குகை சமுதாயத்தை வடிவமைத்தால், 242 00:20:06,584 --> 00:20:10,418 நம் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்? 243 00:20:10,418 --> 00:20:12,793 நாம் உள்ள தடைகளை மீறி சிந்திக்கணும். 244 00:20:13,209 --> 00:20:15,668 இருங்க! நான்தான் இங்கே மேற்பார்வையாளர். 245 00:20:15,668 --> 00:20:18,001 என் உத்தரவுகளை நீ கேட்க வேண்டும். 246 00:20:18,709 --> 00:20:21,876 இது ஏன் வேலை செய்யல? இது மிக அடிப்படையான விஷயம். 247 00:20:21,876 --> 00:20:25,209 - பதுங்கு குகையின் மீத பகுதி எங்கே? - இதுதான் மற்ற பகுதி. 248 00:20:26,126 --> 00:20:28,709 என் அப்பா இங்கிருந்து தான் வந்தாரா? 249 00:20:28,709 --> 00:20:30,418 கண்டுபிடிக்க முடியாது. 250 00:20:32,376 --> 00:20:34,001 கண்டுபிடிக்க போகிறான். 251 00:20:52,418 --> 00:20:55,501 இது தான் பட்டின் மொட்டுகள், என் மொட்டுகள். 252 00:20:55,501 --> 00:20:59,459 நாட்டின் எதிர்கால நிர்வாகத்தை அமெரிக்கா தனியாரிடம் தந்தது, 253 00:20:59,459 --> 00:21:02,001 தோல்வியடைந்த தேசத்தை வாழ வைப்பது கிறுக்குத்தனமே. 254 00:21:02,001 --> 00:21:04,126 மாறா, வால்ட்-டெக்கை உயிர்ப்பித்தோம்... 255 00:21:04,126 --> 00:21:05,834 பெட்டி பியர்சன் நிர்வாக உதவியாளர் 256 00:21:05,834 --> 00:21:07,959 மேற்பார்வையிடப் படும் இளைய நிர்வாகிகள் 257 00:21:07,959 --> 00:21:09,543 ஹாங்க் நிர்வாக உதவியாளர் 258 00:21:09,543 --> 00:21:11,209 ...என் சொந்த பயிற்சியின் மூலம். 259 00:21:11,209 --> 00:21:14,043 மனிதகுல எதிர்காலத்தையே ஒரே வார்த்தையில விவரிக்கலாமே. 260 00:21:15,668 --> 00:21:17,293 அது, மேலாண்மை. 261 00:21:19,001 --> 00:21:23,584 பட் மூன்று ஒன்றோடொன்றிணைந்த பதுங்கு குகைகளுக்கான யோசனை வைத்திருக்கிறார். 262 00:21:23,584 --> 00:21:27,334 ஆனால் எங்களுக்கு நிறைய யோசனைகள் வேண்டும், உங்கள் யோசனைகள். 263 00:21:27,334 --> 00:21:32,209 ஏனெனில், போட்டி மனப்பான்மையே நம் நிறுவனங்களை சிறப்பாக்கியது, 264 00:21:32,209 --> 00:21:37,626 மேலும் அதே போட்டி உத்வேகத்தாலேயே நமக்கு தீர்வு கிடைக்கும் என நான் முன்மொழிகிறேன். 265 00:21:41,543 --> 00:21:45,751 நமக்கு அமெரிக்கா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பதுங்கு குகைகள் உள்ளன. 266 00:21:47,418 --> 00:21:50,668 நீங்க எல்லோருமே வாங்கும் வகையில், நிறைய இடம் இருக்கு. 267 00:21:50,668 --> 00:21:54,709 மனித குலத்துக்கு, கச்சிதமான நிலைகளை வழங்கும் உங்க திட்டங்களை 268 00:21:54,709 --> 00:21:57,418 நிறைவேற்றிக் கொள்ள வசதியாக. 269 00:21:57,418 --> 00:22:00,418 நீங்க செய்ய நினைப்பதை யாருக்கும் தெரியாமல் செய்ய. 270 00:22:03,251 --> 00:22:05,251 சிறந்த யோசனை வெற்றி பெறட்டும். 271 00:22:09,876 --> 00:22:14,293 அப்போ, பதுங்கு குகை 32 மற்றும் 33 என்ன, மக்களை கட்டுப்படுத்த மட்டும்தானா? 272 00:22:14,293 --> 00:22:18,168 என்ன? அப்படி கேட்பது அடிப்படையிலே தார்மீகமற்றது என குற்றம் சாட்டுவதே. 273 00:22:18,168 --> 00:22:22,751 அவை எம் இனப்பெருக்க களம், மனிதவள மேம்பாடு ஆராய்ச்சி, வளர்ச்சியின் இறுதி வெளிப்பாடு. 274 00:22:22,751 --> 00:22:27,709 மேம்பட்ட மேலாளர்களது வர்க்கத்தை உருவாக்க, தனியா தேர்ந்தெடுக்கப் பட்ட என் மொட்டுகள். 275 00:22:27,709 --> 00:22:30,626 சிறு துரும்பும் பல்குத்த உதவும் எனும் நேர்மறையாளர்கள். 276 00:22:30,626 --> 00:22:34,334 நாம் தரைவெளியை துடைத்தெறிந்த பின் பூமியை மரபுரிமையாகப் பெறுபவர்கள். 277 00:22:38,251 --> 00:22:39,876 தரைவெளியை துடைத்தெறிவதா? 278 00:22:40,751 --> 00:22:44,584 நாம் வேண்டுமென்றே, ஒரு பதுங்கு குகைல மக்கள் நெருக்கத்தை கூட்ட முடியும். 279 00:22:44,584 --> 00:22:48,543 ஆக, மக்கள் உயிர்வாழ போட்டி போட்டு அடித்துக் கொள்ளணும். 280 00:22:49,168 --> 00:22:53,209 இல்ல... வீட்டு வாசலில் பால் கொடுக்க ரோபோவை உருவாக்கி வருகிறோம். 281 00:22:53,209 --> 00:22:56,626 அது புத்திசாலி. தானே ஒரு பதுங்கு குகையை நிர்வகிப்பதை பார்க்கணும். 282 00:22:56,626 --> 00:23:00,459 சட்டவிரோதமாக குடியேறியவர்களை பயன்படுத்தி மரபணு திரிந்த சிப்பாய்களை 283 00:23:00,459 --> 00:23:01,918 பதுங்கு குகைல உருவாக்கினா? 284 00:23:01,918 --> 00:23:04,751 நாம் உளவியல் ஊக்க மருந்துகளை காற்றில் கலக்கச் செய்யலாம். 285 00:23:04,751 --> 00:23:06,959 பெற்றோர்கள், குழந்தைகளை பிரிக்கலாம். 286 00:23:06,959 --> 00:23:09,209 மிக புத்திசாலி குழந்தையே பிழைத்து வளரும். 287 00:23:10,126 --> 00:23:11,126 வேடிக்கையான யோசனை. 288 00:23:11,668 --> 00:23:14,751 உலகின் இறுதியால், சம்பாதிக்க நிறைய வழி இருக்கிறது. 289 00:23:15,584 --> 00:23:19,209 ஆனால், நாம் இப்ப பேசுவதோ கணிசமான முதலீட்டை அனுமானத்தின் 290 00:23:19,209 --> 00:23:21,043 அடிப்படையில் செய்வதைப் பற்றி. 291 00:23:21,043 --> 00:23:23,418 முடிவுகளுக்கு உத்தரவாதம் தருவதெப்படி? 292 00:23:24,418 --> 00:23:26,584 நாமே ஒரு குண்டை போடுவதன் மூலம். 293 00:23:32,084 --> 00:23:33,376 திரு. ஹாவர்ட்? 294 00:23:33,376 --> 00:23:35,626 எனக்கு இது பிடிச்சுருக்கு... 295 00:23:35,626 --> 00:23:36,918 திரு. ஹாவர்ட்? 296 00:23:39,376 --> 00:23:41,209 எல்லாம் சரிதானே திரு. ஹாவர்ட்? 297 00:23:41,876 --> 00:23:42,959 அருமை. 298 00:23:42,959 --> 00:23:45,584 நான், நான் நன்றாக இருக்கிறேன், பெட்டி. 299 00:23:46,834 --> 00:23:48,918 உங்களை சந்திக்க உற்சாகமாக இருக்கிறார். 300 00:23:52,584 --> 00:23:55,001 ஒரு அணு நிகழ்வு சோகமாக இருக்கும், 301 00:23:55,834 --> 00:23:57,834 ஆனால் அது ஒரு வாய்ப்பும் கூட. 302 00:23:58,626 --> 00:24:01,751 வரலாற்றில் மிகப்பெரிய வாய்ப்பாகக் கூட அது இருக்கலாம். 303 00:24:01,751 --> 00:24:06,251 ஏனெனில் நாம் மட்டும் இருக்கையில, எதிர்த்து போராட யாரும் இருக்க மாட்டாங்க. 304 00:24:08,584 --> 00:24:10,709 ஒரு உண்மையான ஏகபோக நிறுவனம். 305 00:24:11,501 --> 00:24:14,501 திரு. ஹாவர்ட், நான் உங்க பரம ரசிகன். 306 00:24:14,501 --> 00:24:17,001 ஹென்றி, ஆனா என்னை ஹாங்க்னு கூப்பிடுவாங்க. 307 00:24:25,168 --> 00:24:28,793 உன் அப்பா நீண்ட காலமாக இங்கே இருக்காரு. 308 00:24:34,168 --> 00:24:36,918 உலகின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தங்களிடம் பதில் 309 00:24:36,918 --> 00:24:39,043 இருப்பதாக நினைத்த ஒரு அமைப்பில். 310 00:24:43,084 --> 00:24:46,584 அந்த காட்சி, ஜோயீ டோரோவை முகத்தில் சுடும் காட்சி, இருக்குல? 311 00:24:48,668 --> 00:24:51,751 "அவன் அசிங்கமாக, வலுவாக, ஆனால் கண்ணியமாக இருந்தான்." 312 00:24:52,293 --> 00:24:57,459 போரை காலாவதியாக்க இதுவே நமக்கு வாய்ப்பு. 313 00:24:57,459 --> 00:25:00,959 ஏனெனில், விழையப் பட்ட வழிகாட்டுதல் இல்லாமல் வடிவம் பெற்ற 314 00:25:00,959 --> 00:25:03,876 நமது தற்போதைய சமூக கட்டமைப்பில், நமக்கிடையே 315 00:25:03,876 --> 00:25:05,709 உரசல்கள் உள்ளன, நமக்கிடையே 316 00:25:06,876 --> 00:25:09,751 முரண்பாடுகள் உள்ளன, நமக்கிடையே போர் உள்ளது. 317 00:25:12,126 --> 00:25:14,126 அதோடு, போர்... 318 00:25:20,126 --> 00:25:22,126 போர், ஒருபோதும் மாறாது. 319 00:25:26,126 --> 00:25:27,876 நான் அப்படித்தான்... 320 00:25:27,876 --> 00:25:30,543 நான் யோசித்தேன், உங்களுக்கு பிரச்சனை இல்லனா, 321 00:25:30,543 --> 00:25:34,043 எனக்கே சங்கடம்தான். நீங்கள் ஒரு ஆட்டோகிராப் போட முடியுமா? 322 00:25:37,209 --> 00:25:40,334 உண்மையில் எங்கிருந்து வந்தவர்னு உன்னிடம் சொன்னதே இல்ல. 323 00:25:40,334 --> 00:25:41,959 எங்கிருந்து வந்தார்? 324 00:25:43,418 --> 00:25:45,751 உன் அம்மாவிடம் கூட சொன்னதே இல்லை. 325 00:25:55,959 --> 00:25:58,168 என் அம்மாவைப் பற்றி என்ன தெரியும்? 326 00:25:59,501 --> 00:26:01,084 அவள் உன்னைப் போல் இருப்பாள். 327 00:26:02,084 --> 00:26:06,418 அவள் கருணையோடும், அன்பாகவும், ஆர்வமாகவும் இருந்தாள். 328 00:26:06,418 --> 00:26:09,084 அதனாலதானே உண்மையில் நீ தரைவெளிக்கு வந்தாய்? 329 00:26:09,834 --> 00:26:12,709 உன் தந்தையை மீட்பதும் வந்த நோக்கத்தின் ஒரு பகுதி. 330 00:26:12,709 --> 00:26:14,584 ஆனால் ஏன் அவரை கடத்தினேன் தெரியுமா? 331 00:26:35,918 --> 00:26:37,126 நன்றி. 332 00:26:45,293 --> 00:26:47,084 இரு, டேன், உன்னை அனுப்பறாங்களா? 333 00:26:48,001 --> 00:26:50,084 எனக்கே நான் செய்ததற்கு தண்டனை. 334 00:26:51,251 --> 00:26:52,209 ஹேய். 335 00:26:54,751 --> 00:26:59,043 வனாந்திரத்துக்கு போக பயமா இருந்தது. உன்னை குறை சொல்லுவாங்கனு எனக்கு தெரியாது. 336 00:27:00,376 --> 00:27:01,793 என்னை மன்னி. 337 00:27:05,501 --> 00:27:06,584 மன்னிப்பு கோர வேணாம். 338 00:27:07,334 --> 00:27:09,168 நான் அந்த பணிக்கு போனது என் விதி. 339 00:27:11,459 --> 00:27:12,709 நான் ஒருவரை சந்தித்தேன், 340 00:27:13,501 --> 00:27:15,668 ஆனால் இப்ப அவ ஆபத்தில் இறங்கி இருக்கிறாள். 341 00:27:17,209 --> 00:27:20,209 அதனால்தான், அவளை காப்பாற்ற திரும்பி வந்தாயா. 342 00:27:21,543 --> 00:27:23,543 நான் அவளுடன் செல்கிறேன். 343 00:27:23,543 --> 00:27:25,543 அவள் எங்கிருந்து வந்தாளோ அங்க. 344 00:27:26,584 --> 00:27:27,918 ஒரு பதுங்கு குகை. 345 00:27:27,918 --> 00:27:30,418 அது அமைதியான, பாதுகாப்பான இடம். 346 00:27:30,418 --> 00:27:32,668 யாரும் போருக்கு போகாத இடம். 347 00:27:34,918 --> 00:27:36,251 என்ன? 348 00:27:36,793 --> 00:27:39,126 - புழுக்களே! வெளியேறுங்கள்! - சரி, சர்! 349 00:27:39,126 --> 00:27:40,459 இப்போ போகலாம். 350 00:27:44,418 --> 00:27:46,209 எங்கும் பாதுகாப்பு இல்லை, மாக்ஸ். 351 00:27:47,501 --> 00:27:50,584 வெளியேறுவது என்பதே இல்லை, இருந்தா நல்லா இருக்கும். 352 00:28:33,418 --> 00:28:37,334 ரோஸ் மிகவும் புத்திசாலி. உன்னைப் போல. 353 00:28:39,459 --> 00:28:42,334 லூசி, உன் அம்மா, ஏதோ ஒண்ணு 354 00:28:42,334 --> 00:28:46,209 பதுங்கு குகையின் நீரை மடை திருத்துவதை கண்டு பிடித்தாள். 355 00:28:48,168 --> 00:28:49,876 அந்த ஒரு துப்பை வைத்து, 356 00:28:49,876 --> 00:28:55,626 தரைவெளியில் ஒருவேளை நாகரிக சமூகம் திரும்பி விட்டதோன்னு முடிவு செய்தாள். 357 00:29:02,293 --> 00:29:04,751 அவள் கணவனிடம் இதை சொன்னபொழுது, 358 00:29:04,751 --> 00:29:08,376 அதை அபத்தமான யூகம்னு சொன்னார். அதோட, அதை யாருக்குமே சொல்லிடாதே 359 00:29:09,126 --> 00:29:10,751 என தடுத்துவிட்டார். 360 00:29:10,751 --> 00:29:12,668 லூசி, போகலாம். வா... 361 00:29:12,668 --> 00:29:17,918 அப்போதுதான் அவள் உணர்ந்தாள், மேற்பார்வையாளரான அவள் கணவன், 362 00:29:17,918 --> 00:29:19,418 எதையோ மறைக்கிறார் என்று. 363 00:29:19,834 --> 00:29:21,751 லூசி, வா. இங்கிருந்து போயிடலாம். 364 00:29:21,751 --> 00:29:23,168 அதானல் அவள் ஓடிவிட்டாள். 365 00:29:24,168 --> 00:29:26,001 நீ செய்தது போல், லூசி. 366 00:29:28,584 --> 00:29:30,959 குழந்தைகளையும் கூட்டிக் கொண்டாள். 367 00:29:31,543 --> 00:29:34,293 இந்த அற்புதமான நகரத்தை அவள் கண்டாள். அனைத்துமே 368 00:29:34,293 --> 00:29:36,501 பதுங்கு குகை தந்த நம்பிக்கைகள். 369 00:29:36,501 --> 00:29:37,793 அவள் சொல்வது பொய். 370 00:29:39,584 --> 00:29:42,501 ஆனால் பின்னர் அவளுடைய கணவர் தேடி வந்தார். 371 00:29:42,501 --> 00:29:45,376 அவள் வீட்டிற்கு திரும்ப வேணாம்னு நினைத்த பொழுது, 372 00:29:46,918 --> 00:29:48,543 குழந்தைகளை அழைத்துச் சென்றார்... 373 00:29:51,418 --> 00:29:54,209 அதோடு, இந்த நகரத்தை எரித்து மண்ணாக்கினார். 374 00:30:00,293 --> 00:30:03,334 - அதுதான் ஷேடி சான்ட்ஸ். - பொய் சொல்கிறாள், லூசி. 375 00:30:04,418 --> 00:30:06,918 போட்டியாளரை வால்ட்-டெக் கையாளும் விதம் இது. 376 00:30:07,668 --> 00:30:10,001 200 ஆண்டுகளுக்கு முன் செய்தது போலவே. 377 00:30:34,584 --> 00:30:39,084 லூசி, நீ எனக்கு கொண்டு வந்தது கோல்ட் ஃப்யூஷன். 378 00:30:39,084 --> 00:30:41,459 - அது எல்லையற்ற ஆற்றல். - லூசி. 379 00:30:41,459 --> 00:30:44,084 - நாம் நமது உலகை உருவாக்கலாம். - அவள் கொலைகாரி. 380 00:30:44,084 --> 00:30:46,126 - லூசி, என்னை பாரு. - நல்ல இடமா இருக்கும். 381 00:30:46,126 --> 00:30:49,501 - சுத்த நீர், மருந்து, சக்தி இருக்கு. - நம் வீட்டை ஆக்கிரமித்தாள். 382 00:30:49,501 --> 00:30:50,918 - நமக்கு நல்லது. - லூசி... 383 00:30:50,918 --> 00:30:54,126 - நம் மக்களை கொன்றவ. - வால்ட்-டெக் என் ஆராய்ச்சியை வாங்கியதால், 384 00:30:54,126 --> 00:30:56,209 அதை சொந்தமாகினார்கள். 385 00:30:56,209 --> 00:30:59,084 எனவே, நம்பகமான வால்ட்-டெக் சீடனால் மட்டுமே 386 00:30:59,084 --> 00:31:02,959 - கோல்ட் ஃப்யூஷனை இயக்குவிக்க முடியும். - அவள் பேச்சை கேட்காதே. 387 00:31:05,543 --> 00:31:09,084 எனக்கு வேண்டியதெல்லாம் அவர் ரகசிய குறியீடுகளை கொடுத்தால் போதும். 388 00:31:09,084 --> 00:31:11,376 லூசி, என்னை பாரு! 389 00:31:12,126 --> 00:31:14,918 என்னைப் பார்! லூசி. 390 00:31:27,251 --> 00:31:28,543 என் அம்மாவுக்கு... 391 00:31:32,043 --> 00:31:33,709 அவங்களுக்கு என்ன நடந்தது? 392 00:31:37,251 --> 00:31:38,751 உனக்கு தெரியுமென நினைக்கிறேன். 393 00:31:58,584 --> 00:31:59,584 லூசி... 394 00:32:25,918 --> 00:32:27,334 லூசி... 395 00:32:28,668 --> 00:32:30,293 அவள் பொய் சொல்கிறாள், லூசி. 396 00:32:35,584 --> 00:32:37,418 அவளுக்கு ரகசிய குறியீட்டை கொடுங்க. 397 00:32:53,251 --> 00:32:54,668 அவளுக்கு குறியீட்டை கொடுங்க. 398 00:33:06,168 --> 00:33:07,876 குறீயீட்டை கொடுங்க, அப்பா. 399 00:33:42,001 --> 00:33:43,209 அணுகல் குறியீடு: 101097 400 00:33:43,209 --> 00:33:44,168 ஊழியர் ஐடி: 401 00:33:57,626 --> 00:33:59,334 வால்ட்-டெக் 402 00:33:59,334 --> 00:34:02,334 துவக்குகிறது... 403 00:34:53,709 --> 00:34:54,709 உறை நிலையிலுள்ள பட்டின் மொட்டுகள் மறுசெயலாக்கப்பட்ட நிலை 404 00:34:54,709 --> 00:34:55,959 பெட்டி பியர்சன் - முழுமையானது 405 00:34:55,959 --> 00:34:57,209 ஹாங்க் மெக்லீன் - முழுமையானது 406 00:34:57,209 --> 00:34:58,459 ஸ்டெஃபனி ஹார்ப்பர் - முடிந்தது 407 00:35:04,251 --> 00:35:07,251 உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. நான் வீட்டிற்கு போகிறேன். 408 00:35:07,251 --> 00:35:09,168 நீ போக முடியாது, ஹாங்கின் மகனே. 409 00:35:11,126 --> 00:35:12,209 இல்லை! 410 00:35:15,418 --> 00:35:16,876 இவ்ளோ தெரிஞ்சுகிட்ட பின். 411 00:35:19,668 --> 00:35:22,584 அதுக்காக, என்னை இங்கயே வைத்திருக்க போகிறாயா? 412 00:35:22,584 --> 00:35:24,959 தரைவெளிக்கு செல்ல தயாராக முடியும் வரை. 413 00:35:24,959 --> 00:35:26,751 அதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டாகலாம். 414 00:35:26,751 --> 00:35:30,168 உண்மை. எல்லாம் முடியும் வரை உன் அப்பாவின் அறையில் காத்திரு. 415 00:35:31,001 --> 00:35:32,584 நீ பட்டினில சாகணும்னா தவிர. 416 00:35:32,584 --> 00:35:36,168 எப்போதாவது மிகப் பெரிய பூச்சியை தவிர இங்கு அதிக உணவு இல்லை. 417 00:35:37,043 --> 00:35:39,293 முடிந்தால் கண்டிப்பா என்னையே தூங்க வைப்பேன். 418 00:36:16,209 --> 00:36:18,293 தேவையானதை செய்தேன். 419 00:36:20,376 --> 00:36:22,126 நம் மக்களை காப்பாற்ற. 420 00:36:24,043 --> 00:36:25,709 அங்கே இருக்கும் அந்த பெண், 421 00:36:28,209 --> 00:36:30,293 அவள் என்னைவிட வேறுபட்டவளல்ல. 422 00:36:41,001 --> 00:36:43,209 கோல்ட் ஃப்யூஷன் தயார் 423 00:36:55,001 --> 00:36:56,001 சோதனை 424 00:36:58,668 --> 00:36:59,918 உள்வரும் விமானம். 425 00:37:03,709 --> 00:37:04,876 ப்ரதர்ஹூடா? 426 00:37:05,459 --> 00:37:07,043 எல்லை கதவுகளை அடைங்க. 427 00:37:07,918 --> 00:37:09,626 யாருமே இங்க உள்ளே வரக்கூடாது. 428 00:37:10,376 --> 00:37:11,376 நாம் போகலாம். 429 00:37:11,376 --> 00:37:13,918 - கிளம்பணும், சொன்னது போல. போங்க. - கிளம்பு, போங்க! 430 00:37:17,251 --> 00:37:20,834 லூசி... நான் உன் தாயை நேசித்தேன். 431 00:37:23,251 --> 00:37:26,168 வீட்டை விட்டு வெளியேறிய போது அவள் உன் தாயா இல்லை. 432 00:37:28,251 --> 00:37:31,751 அவள் உங்களை ஆபத்தில் கொண்டு சென்றாள். 433 00:38:07,584 --> 00:38:08,668 நம்மை மோத வருது! 434 00:38:13,293 --> 00:38:14,834 இங்கே எப்படி இருக்கு பாரு. 435 00:38:25,543 --> 00:38:29,293 எல்லோரும் சமமாக பயப்படுபவர்கள், பரிதாபமானவர்கள். 436 00:38:37,126 --> 00:38:40,334 பிழைக்க பயங்கர காரியங்களை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டவர்கள். 437 00:38:41,626 --> 00:38:42,918 லூசி... 438 00:38:44,709 --> 00:38:46,543 நான் ஒரு தேர்வு செய்ய வேண்டியிருந்தது. 439 00:38:49,793 --> 00:38:53,501 அவர்களின் வன்முறை உலகத்திற்கும் நமது அமைதியான உலகத்திற்கும் நடுவே. 440 00:38:54,334 --> 00:38:57,084 புதிய கலிஃபோர்னியா குடியரசு தலைமையகம் 441 00:38:57,084 --> 00:39:02,126 நான் நம்புகிறேன், லூசி, நான் சரியான தேர்வை செய்திருக்கிறேன். 442 00:40:16,168 --> 00:40:20,251 பிளவுற்று, முடிவில்லாமல் சண்டையிடுவதே உலகின் பிரச்சனை என்றால், 443 00:40:20,251 --> 00:40:21,543 அந்த பிரிவு சக்திகளை 444 00:40:21,543 --> 00:40:25,293 ஒழிப்பதைத் தவிர வேறு என்ன தீர்வு இருக்க முடியும்? 445 00:40:26,084 --> 00:40:27,709 உலகை நமக்கானதாக ஆக்க. 446 00:40:28,543 --> 00:40:30,168 நாம் மட்டுமே வடிவமைக்க வேண்டும். 447 00:41:41,084 --> 00:41:44,293 இந்த கவசம் வலிமையான மனிதன் போல உணர வைக்கிறது, இல்லையா? 448 00:41:45,584 --> 00:41:50,418 தெரியும், நானும் இதை முன்பு ஒரு சமயத்தில் அணிந்திருக்கிறேன். 449 00:41:51,209 --> 00:41:53,626 அதில் ஒரே ஒரு சிக்கல் இருந்தது. 450 00:41:54,293 --> 00:41:58,543 உலோக பற்றவைப்பில் ஒரு குறைபாடு இருந்தது. 451 00:41:58,543 --> 00:42:01,251 மார்பு கூட்டுக்கு கொஞ்சம் கீழே. 452 00:42:01,251 --> 00:42:03,751 இந்த புதிய மாடலில் அதை சரிசெய்தார்களா தெரியல. 453 00:42:13,543 --> 00:42:15,168 சரி செய்யல போலயே. 454 00:42:28,084 --> 00:42:30,293 - மாட்டினானா? - ஒண்ணுமே தெரியல. 455 00:42:39,668 --> 00:42:41,001 அந்த பிணந்தின்னி எங்கே? 456 00:42:56,459 --> 00:42:59,918 கதவை திற, லூசி. கதவை திற, வீட்டுக்கு போலாம். 457 00:43:01,959 --> 00:43:03,251 வீட்டிற்குச் செல்லலாம். 458 00:43:09,751 --> 00:43:11,084 வீட்டிற்குச் செல்லலாம். 459 00:43:25,668 --> 00:43:26,626 லூசி. 460 00:43:33,376 --> 00:43:36,001 தயவு செய்து. கதவை திற, லூசி. 461 00:43:56,668 --> 00:43:59,168 லூசி. லூசி! 462 00:44:00,084 --> 00:44:02,334 லூசி? லூசி. 463 00:44:02,334 --> 00:44:05,793 ஹேய், நான் அவ அப்பா. எங்களை வெளியே கொண்டு போங்களேன்? 464 00:44:08,709 --> 00:44:10,709 லூசி, போகலாம். வா. 465 00:44:10,709 --> 00:44:13,584 - வெளியே போக வேண்டும். - இரு. இல்ல, இவரோடு வேணாம்! 466 00:44:13,584 --> 00:44:15,168 ஏன் வேணாம்? என்ன சொல்கிறாய்? 467 00:44:15,168 --> 00:44:16,584 அது இவர் தான், இவர்... 468 00:44:18,126 --> 00:44:19,626 - என்ன? - அது இவர்தான். 469 00:44:19,626 --> 00:44:21,126 - அவர் எவர்தான்? - அவர்... 470 00:44:22,959 --> 00:44:24,376 லூசி, என்ன? 471 00:44:27,376 --> 00:44:28,793 ஷேடி சேண்ட்ஸை அழித்தவர். 472 00:44:56,043 --> 00:44:57,418 அதைச் செய்தது இவர்தான். 473 00:45:02,959 --> 00:45:04,376 என்னை மன்னி. 474 00:45:10,876 --> 00:45:14,168 லூசி, நீ என்னுடன் வருகிறாய். 475 00:45:17,751 --> 00:45:19,084 இல்லை! 476 00:45:21,168 --> 00:45:24,751 ஹேய், மாக்ஸ், மாக்ஸ். எழுந்திரு. 477 00:45:37,209 --> 00:45:39,626 இந்த இடம் மக்களை என்ன செய்கிறது பார்த்தியா? 478 00:45:41,293 --> 00:45:43,293 நான் உன் தந்தை, லூசி. 479 00:45:47,043 --> 00:45:49,084 இவ்வளவு தூரம் எனக்காக வந்தாய். 480 00:45:55,918 --> 00:45:57,751 நீ என்னை காயப்படுத்த மாட்டாய். 481 00:46:12,376 --> 00:46:15,084 இன்னொரு ஆட்டோகிராப் வேண்டுமா, இளம் ஹென்றி? 482 00:46:16,501 --> 00:46:20,334 அவன் அசிங்கமாக, வலுவாக, ஆனால் கண்ணியமாக இருந்தான். 483 00:46:23,168 --> 00:46:26,793 உன் மகள் அவளது கடைசி பெயர் மெக்லீன் என சொன்னபோது... 484 00:46:26,793 --> 00:46:30,709 என்னால் நம்ப முடியவில்லை அது மெக்லீன்தான் என. 485 00:46:30,709 --> 00:46:34,084 ஐயோ. என் மனைவியோட துணிகளை சலவைக்கு எடுத்துப்போகும் பையன். 486 00:46:35,334 --> 00:46:38,501 இப்போது, நான் 200 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தேன். 487 00:46:38,501 --> 00:46:42,501 யாரையாவது இந்த ஒரு கேள்வியை கேட்க. 488 00:46:43,876 --> 00:46:46,293 என் குடும்பம் எங்கே போய்த் தொலைந்தது? 489 00:47:05,918 --> 00:47:07,001 ஆமாம். 490 00:47:12,043 --> 00:47:14,001 ஹேய். மாக்ஸ். 491 00:47:14,001 --> 00:47:15,751 ஹேய், ஹேய். ஹேய், மாக்ஸ். 492 00:47:16,334 --> 00:47:17,584 மாக்ஸ், எழுந்திரு. 493 00:47:17,584 --> 00:47:19,501 வா. எழுந்திரு. 494 00:47:19,501 --> 00:47:21,834 எழுந்திரு! வா. 495 00:47:23,251 --> 00:47:25,543 வா. வா! 496 00:47:26,251 --> 00:47:29,168 வா! தயவு செய்து! 497 00:47:45,126 --> 00:47:46,959 போர் ஒருபோதும் மாறாது. 498 00:47:48,168 --> 00:47:50,334 நீங்க இந்த பொட்டல்வெளியை பாருங்க, 499 00:47:51,209 --> 00:47:53,043 குழப்பங்களாக தெரிகிறது. 500 00:47:57,668 --> 00:48:00,334 ஆனால் யாரோ எப்போதும் பின்னிருந்து இயக்கறாங்க. 501 00:48:02,001 --> 00:48:04,001 அவர்களுடன் தான் நான் பேச வேண்டும். 502 00:48:06,793 --> 00:48:08,376 உன் அப்பா அங்குதான் போகிறார். 503 00:48:08,959 --> 00:48:10,334 ஆனா நீ அவரை போக விட்டாய். 504 00:48:10,334 --> 00:48:15,251 அட, சிக்கிய பன்றியை எங்கே செல்கிறது என்று கேட்பதை விட அதை தொடர்வதே எளிது. 505 00:48:18,793 --> 00:48:20,834 உன் அப்பாவை எப்படி தெரியும் என தெரியணுமா? 506 00:48:21,334 --> 00:48:25,501 உன் சிறிய உலகத்தை பற்றிய அனைத்தும் 200 ஆண்டுகளுக்கு 507 00:48:25,501 --> 00:48:27,709 முன்பு முடிவு செய்யப்பட்டது. 508 00:48:32,001 --> 00:48:34,584 இப்போது நீ அவனுடனே இருக்கலாம், ஆனால் அவனுடைய 509 00:48:34,584 --> 00:48:37,126 உலோக உடை நண்பர்கள் இந்த இடத்தைப் பிடிக்கும்போது, 510 00:48:37,126 --> 00:48:39,126 ஆம், இந்த இடத்தைப் பிடிப்பாங்க, 511 00:48:39,959 --> 00:48:42,876 உன்னையும், பிறகு இங்கிருக்கும் எல்லோரையும் கொல்வாங்க. 512 00:48:53,709 --> 00:48:56,293 அல்லது நீ உன்னை இப்படி ஆக்கியோரை சந்திக்க வரலாம். 513 00:49:45,459 --> 00:49:46,876 வருகிறாயா? 514 00:49:57,751 --> 00:49:59,168 ஹேய். மாக்ஸ். 515 00:50:01,543 --> 00:50:02,793 எழுந்திரு. 516 00:50:07,959 --> 00:50:09,126 மாக்ஸ். 517 00:50:12,168 --> 00:50:13,584 நான் உன்னை கண்டுபிடிப்பேன். 518 00:50:35,959 --> 00:50:37,459 சரி போவோம். 519 00:50:47,876 --> 00:50:52,293 கோல்ட் ஃப்யூஷன் தயார் 520 00:51:15,168 --> 00:51:16,376 லூசி. 521 00:51:23,418 --> 00:51:24,626 லூசி. 522 00:51:40,501 --> 00:51:41,709 லூசி. 523 00:51:56,876 --> 00:51:58,001 ரோஸ். 524 00:52:17,626 --> 00:52:19,168 கோல்ட் ஃப்யூஷன் செயல்படுத்து 525 00:52:52,751 --> 00:52:54,584 செய்துவிட்டோம், ரோஸ். 526 00:53:34,959 --> 00:53:39,376 எல்லையற்ற சக்தியால் உங்க ப்ரதர்ஹூட் என்ன செய்துட முடியும்? 527 00:53:44,084 --> 00:53:47,084 உன்னால் அவர்களை தடுக்க முடியலாம், முடியாமயும் போகலாம். 528 00:53:51,251 --> 00:53:53,251 தடுக்க ஏதோ முயற்சியாவது செய்யணும். 529 00:54:22,626 --> 00:54:24,043 அவர்களுடைய தலைவியா? 530 00:54:25,626 --> 00:54:26,834 ஆமாம். 531 00:54:28,293 --> 00:54:29,501 நீ அவளைக் கொன்றாய். 532 00:54:30,793 --> 00:54:32,459 இல்ல. டேன். 533 00:54:33,168 --> 00:54:36,459 எல்லோரும் மாக்சிமஸை போற்றுவோம்! இனிமேல் இவர்தான் வீரப் பெருந்தகை. 534 00:54:36,876 --> 00:55:02,793 வீரப் பெருந்தகை மாக்சிமஸ் வாழ்க. வீரப் பெருந்தகை மாக்சிமஸ் வாழ்க. 535 00:55:41,334 --> 00:55:44,543 ஹாலிவுட் நூக்கா கோலா ஆதரவில் 536 00:59:08,376 --> 00:59:10,376 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன், கௌஷிக் பா ப 537 00:59:10,376 --> 00:59:12,459 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா