1 00:01:15,367 --> 00:01:18,787 இந்தப் பெரிய வீட்டிற்கு வெளியே ஒரு கூடாரத்தில் இவள் வாழ்கிறாளா? 2 00:01:18,787 --> 00:01:19,955 அவளுக்கு மூளை சரியில்லை போலும். 3 00:01:19,955 --> 00:01:22,291 இந்த வழக்கை நானே தீர்க்கப் போவதால், 4 00:01:22,291 --> 00:01:24,042 ஹான்னாவை நானே நேர்காணல் செய்கிறேன். 5 00:01:24,042 --> 00:01:26,712 - நீங்கள் எனக்கு துணையாக இருக்கலாம். - அது நல்ல யோசனை இல்லை. 6 00:01:26,712 --> 00:01:28,714 தன் சகோதரனை அவள் மிகவும் நேசிக்கிறாள், 7 00:01:28,714 --> 00:01:31,717 அவன் திருமணம் செய்துகொள்வதை விரும்பவில்லை. அதை நோக்கம் என்று சொல்லலாம். 8 00:01:32,759 --> 00:01:34,720 அதாவது, அது நடக்கக்கூடிய விஷயம் தான். 9 00:01:35,512 --> 00:01:37,222 சரி. நீ சொல்வது போலவே செய்யலாம். 10 00:01:37,222 --> 00:01:41,518 ஆனால் நினைவிருக்கட்டும், ஹான்னா நம்மோடு பேச வேண்டும். 11 00:01:41,518 --> 00:01:44,730 என்ன இது. நான் கொலைக்கான ஆயுதத்தைக் கண்டுபிடித்தேன். 12 00:01:45,230 --> 00:01:48,025 மேலும், அவளுடைய டைப்ரைட்டர் பொத்தான் எட்கரின் பாக்கெட்டில் இருந்தது. 13 00:01:48,942 --> 00:01:50,694 இப்போது அவள் பொய் சொல்லும் போது நாம் பிடிக்க வேண்டும். 14 00:01:55,657 --> 00:01:57,659 வணக்கம். என் இல்லத்திற்கு வரவேற்கிறேன். 15 00:01:57,659 --> 00:01:59,119 அழுக்காக இருப்பதை கண்டுகொள்ளாதீர்கள். 16 00:01:59,828 --> 00:02:03,665 சரி, அன்பான முறையில் வரவேற்றது போதும். 17 00:02:03,665 --> 00:02:05,959 இதைப் பற்றி உன்னிடம் பேச வந்தோம். 18 00:02:05,959 --> 00:02:07,294 அடையாளம் காணப்பட்ட செடி - டெவில்ஸ் டிரம்பெட் விஷத்தன்மை வாய்ந்தது 19 00:02:07,294 --> 00:02:08,544 இது டெவில்ஸ் டிரம்பெட். 20 00:02:08,544 --> 00:02:09,545 ஆமாம். 21 00:02:10,130 --> 00:02:12,633 அது எட்கரின் இறப்பிற்கு காரணம் என்றும், அது என் தோட்டத்தில் இருப்பதால், 22 00:02:12,633 --> 00:02:14,593 - நான் அவனைக் கொலை செய்ததாக நினைக்கிறாய். - அதே தான். 23 00:02:14,593 --> 00:02:16,595 சரி, நான் வக்கீலை ஏற்பாடு செய்யலாமா, 24 00:02:16,595 --> 00:02:18,764 அல்லது நேரடியாக எனக்கு தூக்கு தண்டனை வழங்கப் போகிறீர்களா? 25 00:02:18,764 --> 00:02:21,725 ஹான்னா, உன் தரப்பு கதையைக் கேட்க விரும்புகிறோம். 26 00:02:22,351 --> 00:02:25,479 - இங்கே உன்னை யாரும் குற்றம் சாட்டவில்லை. - நான் குற்றம் சாட்டுகிறேன். 27 00:02:25,479 --> 00:02:27,523 எட்கரின் இறந்த பல்லி உன்னிடம் ஏன் இருக்கிறது? 28 00:02:28,065 --> 00:02:29,525 மன்னிக்கவும். உனக்கு அவள் வேண்டுமா? 29 00:02:30,108 --> 00:02:31,151 இல்லை. 30 00:02:31,151 --> 00:02:33,654 அவள் என் மருமகள், அதனால் அவளை பற்றி அப்படி சொல்லாதே. 31 00:02:33,654 --> 00:02:37,157 பாரு, நீ திருமணத்தை நிறுத்த விரும்பினாய் என்று ட்ராவிஸ் சொன்னதால் இங்கே வந்திருக்கிறோம். 32 00:02:38,659 --> 00:02:39,910 ஆமாம். 33 00:02:41,036 --> 00:02:42,329 நிச்சயமாக நிறுத்த விரும்பினேன். 34 00:02:42,329 --> 00:02:45,499 உன் சொந்த அண்ணனின் திருமணத்தையா? எதற்காக நிறுத்த விரும்பினாய்? 35 00:02:48,627 --> 00:02:49,628 நிச்சயமாக நிறுத்த விரும்பினேன். 36 00:02:51,880 --> 00:02:52,881 உட்காருங்கள். 37 00:03:01,265 --> 00:03:02,432 உங்களுக்கு இசை பிடிக்குமா? 38 00:03:03,141 --> 00:03:04,810 எல்லோருக்கும் இசை பிடிக்கும். 39 00:03:07,521 --> 00:03:08,355 தெரியும். 40 00:03:09,022 --> 00:03:10,190 பெல் & செபாஸ்டியன் 41 00:03:10,190 --> 00:03:11,817 டியர் கெட்டஸ்டிராபி வெய்ட்ரெஸ் 42 00:03:21,577 --> 00:03:24,204 வயதுக்கு மீறிய ஒரு இளம் பெண்ணிடம் இருந்து என் கதை துவங்குகிறது. 43 00:03:24,705 --> 00:03:27,207 அலெக்ஸாண்டர் மற்றும் இசபெல் மின்னோஸுடைய 44 00:03:27,207 --> 00:03:29,084 வளர்ப்பு மகள் தான் ஹான்னா கொர்னேலியா மின்னோஸ். 45 00:03:29,084 --> 00:03:30,169 {\an8}ஹான்னா 46 00:03:30,169 --> 00:03:32,504 {\an8}11 வயதில், அவள் பருவம் அடைந்த போது, 47 00:03:32,504 --> 00:03:35,507 மங்கோலிய நாடோடி வீடு மாதிரியான ஒரு கூடாரத்தைத் தனக்காக அமைத்தாள். 48 00:03:39,178 --> 00:03:41,638 அது என் பொழுதுபோக்குகளில் ஒன்று. 49 00:03:42,514 --> 00:03:44,808 {\an8}ஒரு குழந்தையாக ஹான்னாவிற்கு சரியான அன்பு கொடுக்கப்படவில்லை. 50 00:03:44,808 --> 00:03:45,893 {\an8}இறந்த பறவைகளின் தோலை பயன்படுத்தும் கலை 51 00:03:45,893 --> 00:03:48,604 எனவே நேரத்தை கடத்த சில தனித்துவமான விஷயங்களை 52 00:03:48,604 --> 00:03:50,105 {\an8}அவள் செய்ய ஆரம்பித்தாள். 53 00:03:50,105 --> 00:03:52,482 {\an8}கொடூரமான தோட்டக்கலை 54 00:03:52,482 --> 00:03:54,568 மர நங்கூரங்களை வடிப்பது 55 00:03:57,988 --> 00:03:59,573 பல சமயங்களில் எட்கர் அவளுக்கு உதவுவான். 56 00:03:59,573 --> 00:04:00,657 {\an8}வில் அம்பு பயிற்சி 57 00:04:00,657 --> 00:04:03,452 {\an8}கடுமையான அம்மாவும், அருகே இல்லாத அப்பாவும், அவர்களை நெருக்கமாக்கினர். 58 00:04:06,455 --> 00:04:08,540 {\an8}பல சமயம் செபாஸ்டியனும் சேர்ந்து கொள்வான். 59 00:04:08,540 --> 00:04:11,502 {\an8}இங்கிலாந்தில் அவனுக்கு சொந்த குடும்பம் இருந்ததாக நினைக்கப்பட்டாலும், 60 00:04:11,502 --> 00:04:13,629 {\an8}மின்னோஸ் வீட்டில் தான் அவன் அடிக்கடி இருப்பான். 61 00:04:13,629 --> 00:04:15,881 எட்கருக்கு கூட்டம் பிடிக்காவிட்டாலும். 62 00:04:19,801 --> 00:04:21,970 {\an8}மேஜிக் 63 00:04:21,970 --> 00:04:24,056 யூத மார்க்கம் 64 00:04:28,560 --> 00:04:29,394 {\an8}பழமை வாய்ந்த டைப்ரைட்டர்கள் 65 00:04:29,394 --> 00:04:32,814 {\an8}அவர்கள் வளர்ந்த போது, தன் வியாபார விஷயங்கள் பற்றி எட்கர் அதிகம் நினைக்க ஆரம்பித்தான். 66 00:04:33,607 --> 00:04:35,609 அவர்களுக்கு பிடித்த பொழுதுபோக்குகளில் அவனுக்கு ஆர்வம் குறைந்தது. 67 00:04:36,735 --> 00:04:39,613 ஆனால் ஹான்னா தன் சகோதரன் மீது வைத்த அன்பு, உண்மையாகவும், தீர்க்கமாகவும் இருந்தது. 68 00:04:41,323 --> 00:04:42,991 பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 69 00:04:43,492 --> 00:04:46,495 இன்று நான் தத்தெடுக்கப்பட்ட நாள். என் நிஜ பிறந்தநாள் எனக்குத் தெரியாது. 70 00:05:00,759 --> 00:05:03,971 ஹான்னா, இவள் பெயர் கிரேஸ். 71 00:05:04,471 --> 00:05:08,642 உனக்கு நான் கொடுப்பதற்காக இவள் தான் இந்த டைப்ரைட்டரை எனக்கு விற்பனை செய்தாள். 72 00:05:08,642 --> 00:05:11,895 எனவே, இது எங்கள் இருவரின் பரிசு என்று சொல்லலாம். 73 00:05:13,146 --> 00:05:16,233 அதன் அருமை மற்றும் பெருமை தெரிந்த ஒருவருக்கு இது அளிக்கப்படுவது பற்றி 74 00:05:16,233 --> 00:05:17,943 எனக்கு ரொம்ப சந்தோஷம். 75 00:05:19,278 --> 00:05:20,279 இது மிக அற்புதம். 76 00:05:24,867 --> 00:05:27,035 என் ஃபோன் ஒலிக்கிறது. மன்னிக்கவும். 77 00:05:27,536 --> 00:05:29,162 பார்தோலோமியோ, நீ உபயோகமில்லாதவன். 78 00:05:33,166 --> 00:05:35,752 உன் பார்ட்டியின் தீம் “ ஃபிரான்கோஃப்பைல்” என்று எட்கர் சொன்னார். 79 00:05:35,752 --> 00:05:37,171 நீ ஃபிரெஞ்சுகாரியா? 80 00:05:37,171 --> 00:05:38,463 எனக்குத் தெரியவில்லை. 81 00:05:38,463 --> 00:05:41,008 ஆனால் அவர்கள் கலாச்சாரம் எனக்கு ரொம்ப பிடிக்கும். 82 00:05:41,008 --> 00:05:43,218 அவர்கள் கருணையில்லாத அழகான மக்கள். 83 00:05:43,218 --> 00:05:44,887 ஒருநாள் அங்கே வாழ விரும்புகிறேன். 84 00:05:45,846 --> 00:05:49,099 அழகான வடிவங்கள் கொண்ட மிகப் பழமையான ஒரு கட்டிடத்தில். 85 00:05:50,851 --> 00:05:53,979 விசித்திரமான பழைய பொருட்கள் மீது என்னைப் போல உனக்கும் ஆர்வமுண்டு என்று எட்கர் சொல்கிறார். 86 00:05:55,105 --> 00:05:56,273 ஆமாம், எவ்வளவு விசித்திரமோ அவ்வளவு நல்லது. 87 00:05:56,857 --> 00:06:00,235 அது அனுபவித்த விஷயங்களை, நான் ஆர்வமாக கற்பனை செய்வேன். 88 00:06:00,235 --> 00:06:04,198 - அது பயணம் செய்த இடங்கள். - உனக்கு ஒன்று காட்ட விரும்புகிறேன். 89 00:06:04,823 --> 00:06:05,657 சரி. 90 00:06:11,288 --> 00:06:12,998 அது பிலிக்கென்ஸ்டெர்ஃபர் நம்பர் 7? 91 00:06:12,998 --> 00:06:14,583 ஆமாம், அதே தான். 92 00:06:15,834 --> 00:06:17,169 அழகாக இருக்கு. 93 00:06:18,670 --> 00:06:19,671 ஆமாம். 94 00:06:20,172 --> 00:06:22,674 ஹான்னாவும் கிரேஸும் உடனே நட்பாகி விட்டார்கள். 95 00:06:22,674 --> 00:06:25,177 விரைவில், கிரேஸ் மற்றும் எட்கரின் நிச்சயதார்த்தம் நடந்தது. 96 00:06:25,677 --> 00:06:26,678 ஆம்ஸ்டெல் அணை 97 00:06:26,678 --> 00:06:29,431 ஹான்னா அவள் நட்பை விரும்பினாள், இருவரும் நிறைய நேரம் ஒன்றாக கழித்தார்கள். 98 00:06:29,431 --> 00:06:31,683 என்ன, நீ கிரேஸோடு ஆம்ஸ்டெர்டாமில் இருந்தாயா? 99 00:06:31,683 --> 00:06:34,102 அன்று அவள் எட்கரோடு மதிய உணவு சாப்பிடவில்லையா? 100 00:06:34,102 --> 00:06:36,522 அவன் பிஸியாக இருந்ததால், அவனுக்கு பதில் நான் போனேன். 101 00:06:36,522 --> 00:06:38,190 கிரேஸ் அதை என்னிடம் சொல்லவே இல்லையே. 102 00:06:41,109 --> 00:06:43,403 வானம் இருண்ட ஒரு சனிக்கிழமை மதியம், 103 00:06:43,403 --> 00:06:45,822 திருமணத்திற்கு சரியாக 37 நாட்களுக்கு முன்னர், 104 00:06:45,822 --> 00:06:49,076 கிரேஸும் அவள் தோழிகளும் ஸ்வெல்குட் ஏரிக்கரையில் பெண்களின் பேச்சுலர் பார்ட்டிக்காக வந்தார்கள். 105 00:06:49,868 --> 00:06:53,539 அந்த ஏரிக்கரையில், மேப்பில், ரெட்வுட் மற்றும் ஆரஞ்சு மரங்கள் இருக்கும். 106 00:06:53,539 --> 00:06:57,543 ஸ்பா வசதிகள், கலை விஷயங்கள் மற்றும் மைம் செய்யும் ஒரு ஸ்ட்ரிப்பர் இருந்தார்கள். 107 00:06:57,543 --> 00:06:59,086 அது சிறந்த பார்ட்டியாக இருந்தது. 108 00:06:59,086 --> 00:07:00,963 கிரேஸ் ஸோயியோடு சண்டைப் போட்டதைத் தவிர. 109 00:07:00,963 --> 00:07:03,215 உன் பிரச்சினைகளை திருமணம் தீர்க்கும் என்று நினைக்கிறாயா? 110 00:07:03,215 --> 00:07:05,259 அவனால் உனக்கு சிக்கன்... 111 00:07:05,259 --> 00:07:06,385 “...சூப் கூட கொண்டு வர முடியவில்லை!” 112 00:07:06,385 --> 00:07:09,304 சரி, மறுபடியும் சொல்கிறேன், நான் கத்தவில்லை. 113 00:07:09,304 --> 00:07:12,975 நாங்கள் சண்டைப் போடவில்லை. என் தங்கையைப் பற்றி கவலைப்பட்டேன், 114 00:07:13,475 --> 00:07:15,853 அதைத்தான் அக்காக்கள் செய்வார்கள். 115 00:07:15,853 --> 00:07:18,605 நீ சத்தமாக கிசுகிசுத்தாய் என்று வேண்டுமானால் சொல்கிறேன். 116 00:07:18,605 --> 00:07:21,066 உன் பிரச்சினைகளை திருமணம் தீர்க்கும் என்று நினைக்கிறாயா? 117 00:07:21,066 --> 00:07:22,860 அவனால் உனக்கு சூப் கூட கொண்டு வர முடியவில்லை. 118 00:07:22,860 --> 00:07:25,529 அப்படியும் நடக்கவில்லை. 119 00:07:26,238 --> 00:07:28,448 அடுத்து என்ன நடந்தது என்று பேசுவோமா? 120 00:07:28,448 --> 00:07:29,741 சரி பேசலாம். 121 00:07:31,451 --> 00:07:32,953 உனக்கு குடிக்க ஏதாவது வேண்டுமா? 122 00:07:32,953 --> 00:07:34,288 பன்றியின் தொடைக்கறி? 123 00:07:34,830 --> 00:07:36,039 சாக்கலேட் பேஸ்ட்ரி? 124 00:07:37,499 --> 00:07:38,750 கொஞ்சம் விஸ்கி? 125 00:07:40,335 --> 00:07:42,296 இல்லை, வேண்டாம். நான் ரொம்ப வருத்தமாக இருக்கிறேன். 126 00:07:42,880 --> 00:07:45,507 மேலும், விஸ்கியின் சுவை மோசமாக இருக்கும் என்று நினைக்கிறேன். 127 00:07:46,258 --> 00:07:47,134 அது உண்மை தான். 128 00:07:49,178 --> 00:07:53,265 ஆக, உன் அக்கா சொன்னது சரி என்பதால் வருந்துகிறாயா அல்லது தவறு என்பதாலா? 129 00:07:54,057 --> 00:07:55,267 உறுதியாகத் தெரியவில்லை. 130 00:07:57,060 --> 00:07:59,688 சமீபத்தில் எட்கர் எவ்வளவு பிஸியாக இருக்கிறார் என்று உனக்கே நன்றாகத் தெரியும். 131 00:08:01,440 --> 00:08:03,233 அவர் என்னோடு இருக்க விரும்புவது எனக்குத் தெரியும். 132 00:08:03,775 --> 00:08:04,943 சரி, உனக்கு என்ன வேண்டும்? 133 00:08:04,943 --> 00:08:06,570 எனக்கு காதல் தான் வேண்டும். 134 00:08:08,113 --> 00:08:12,534 இதயப்பூர்வ, உணர்வுபூர்வ, சிலிர்க்க வைக்கும் காதல். 135 00:08:13,118 --> 00:08:14,119 தெரியுமா? 136 00:08:15,162 --> 00:08:17,206 உன்னைப் போன்ற அற்புதமான ஒருத்தியை 137 00:08:17,206 --> 00:08:19,124 திருமணம் செய்வது எட்கரின் அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன். 138 00:08:28,383 --> 00:08:30,052 மன்னித்துவிடு, நான் அப்படி செய்திருக்கக் கூடாது. 139 00:08:34,056 --> 00:08:35,640 என்ன கண்றாவி இது. 140 00:08:35,640 --> 00:08:37,518 என் தங்கையை முத்தமிட்டாயா? 141 00:08:37,518 --> 00:08:41,063 உண்மையில், அவள் எனக்கு முத்தமிட்டாள், ஆனால் நான் அதை விரும்பி ஏற்றுக்கொண்டேன். 142 00:08:41,980 --> 00:08:45,817 பெண்கள் பேச்சுலர் பார்ட்டி எப்பவுமே சுவாரஸ்யமாக இருக்கும். அதில் நல்ல விஷயங்கள் நடக்கும். 143 00:08:45,817 --> 00:08:48,737 இது உண்மையில் நடந்திருந்தால், கிரேஸ் ஏன் என்னிடம் சொல்லவில்லை? 144 00:08:48,737 --> 00:08:51,740 நீ அவளை மென்மையாக கத்திக்கொண்டே இருப்பதால் சொல்லாமல் இருந்திருக்கலாம். 145 00:08:51,740 --> 00:08:54,243 அல்லது இது அவளைக் குற்றவாளி என்று வெளிப்படுத்துவதால் இருக்கலாம். 146 00:08:56,286 --> 00:08:59,039 நான் இதை நம்பவில்லை. நான் போய் கிரேஸிடம் பேச வேண்டும். 147 00:08:59,039 --> 00:09:00,207 நான் ஹாய் சொன்னேன் என்று சொல்லு. 148 00:09:00,791 --> 00:09:02,751 ஓ. ஹே, கொஞ்சம் இரு. 149 00:09:02,751 --> 00:09:04,503 நாம் இதைத் தீர்க்க வேண்டும் என்றால், 150 00:09:04,503 --> 00:09:06,672 ஹான்னா சொல்ல வருவதை முழுவதுமாக கேட்க வேண்டும். 151 00:09:06,672 --> 00:09:09,007 எதற்கு? அவள் பொய் சொல்வது தான் தெரிகிறதே. 152 00:09:09,007 --> 00:09:12,010 ஸோயி, டேனர் சொல்வது சரி. அவள் சொல்வதைக் கேட்கலாம். 153 00:09:13,637 --> 00:09:15,097 என்ன தெரியுமா? 154 00:09:15,097 --> 00:09:19,309 நாம் தனித்தனியாக விசாரணை செய்வது நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். 155 00:09:20,686 --> 00:09:21,645 ஸோயி. 156 00:09:22,479 --> 00:09:23,814 நான் அவளோடு போக வேண்டும், இல்லையா? 157 00:09:23,814 --> 00:09:28,986 இல்லை. பாரு, நீ அவளை நேசிப்பது தெரியும், ஆனால் அது சகோதரிகளுக்கான விஷயம். 158 00:09:34,366 --> 00:09:36,243 சரி, நீங்கள் முத்தமிட்டீர்கள். 159 00:09:42,541 --> 00:09:45,502 ஹான்னா உன்னைப்பற்றி சொல்வதை நீ நம்ப மாட்டாய். 160 00:09:45,502 --> 00:09:47,087 மென்மையாக-கத்துவதை நிறுத்துவாயா? 161 00:09:47,671 --> 00:09:48,714 நான் கத்தவில்லை. 162 00:09:55,846 --> 00:09:58,223 அதைப்பற்றி இங்கே பேசாமல் இருப்போமா? 163 00:09:58,223 --> 00:09:59,975 ஐயோ, அப்போ அது உண்மையா? 164 00:09:59,975 --> 00:10:03,937 சில விஷயங்கள் உண்மை தான். ஆனால் அதற்கான நேரம் இது இல்லை... 165 00:10:03,937 --> 00:10:05,564 பெண்களே, ஒன்றும் பிரச்சினை இல்லையே? 166 00:10:06,231 --> 00:10:08,609 ஆமாம். எல்லாம் நலம்தான். 167 00:10:08,609 --> 00:10:10,194 அப்படியா? 168 00:10:12,946 --> 00:10:16,366 வந்து, வருந்தத்தக்க அந்தப் பெரிய விஷயத்தைத் தவிர. 169 00:10:17,534 --> 00:10:19,369 ஃபெங், கொஞ்சம் வருகிறீர்களா? 170 00:10:19,369 --> 00:10:20,621 வியாபாரம் பற்றி பேசணும். 171 00:10:20,621 --> 00:10:25,918 வியாபாரமா? சரி, கண்டிப்பாக. அவர்கள் சொல்வது போல, “பணம் எப்போதும்...” 172 00:10:25,918 --> 00:10:27,586 - இப்போதே வாங்க. - சரி, வருகிறேன். 173 00:10:29,713 --> 00:10:31,924 நாம் வெளியே போய் பேசலாமா? 174 00:10:31,924 --> 00:10:34,218 - சரி, அது நல்லது. - நம் இருவருக்கும் ரொம்ப நல்லது. 175 00:10:34,218 --> 00:10:35,844 அருமை. சகோதரிகளின் நேரம். 176 00:10:38,388 --> 00:10:43,519 பெங் நீங்கள் யார் என்று உங்களிடம் கேட்கலாமா? 177 00:10:43,519 --> 00:10:47,356 வாவ். சிறந்த கேள்வி. நிறைய விஷயங்கள் இருக்கின்றன. 178 00:10:47,356 --> 00:10:50,567 நான் ஒரு வியாபாரி. ஒரு அப்பா. கனவு காண்பவர். 179 00:10:50,567 --> 00:10:51,735 இனரீதியாக. 180 00:10:53,028 --> 00:10:55,531 என் அம்மா கொரிய நாட்டவர், ஆனால் என் அப்பா... 181 00:10:55,531 --> 00:10:56,823 அப்பாடா. உங்களுக்குப் பேசத் தெரியுமா? 182 00:10:56,823 --> 00:10:59,284 - கொரிய மொழியா? பேசுவேன், ஆனால்... - அற்புதம். 183 00:10:59,284 --> 00:11:02,204 பூசனில் எனக்கு ஒரு முக்கிய ஒப்பந்தம் இருக்கிறது, 184 00:11:02,204 --> 00:11:04,331 ஒரு கூட்டாளி வியாபாரியாக, அதை நான் முடிக்க, 185 00:11:04,331 --> 00:11:06,291 நீங்கள் எனக்கு உதவுவீர்கள் என்று நம்புகிறேன். 186 00:11:06,291 --> 00:11:09,920 எனக்கு உதவி செய்வீர்கள் என்று நம்புகிறேன். என்ன சொல்கிறீர்கள்? 187 00:11:10,504 --> 00:11:14,216 நீ சரியான ஆளிடம் வந்திருக்கிறாய். நான் சிறப்பாக பேரம் பேசுவேன். 188 00:11:14,216 --> 00:11:17,553 - உனக்கே புரியும். அது சுலபமான விஷயம். - என்ன? 189 00:11:17,553 --> 00:11:20,722 “சுலபமாக,” ஆனால் “எளிதாக இருக்கும்.” பரவாயில்லை. நான் வந்து... 190 00:11:21,849 --> 00:11:23,642 இதோ பேசுங்கள். ஜாக்கிரதை. 191 00:11:23,642 --> 00:11:25,310 இந்த ஆள் மிகவும் புத்திசாலி. 192 00:11:27,813 --> 00:11:31,358 {\an8}- ஹலோ? - ஹலோ, எப்படி இருக்கிறீர்கள்? 193 00:11:31,358 --> 00:11:33,610 {\an8}என் பெயர் ஃபெங் சூ. 194 00:11:33,610 --> 00:11:36,655 {\an8}நான்... முக்கிய வியாபார கூட்டாளி... 195 00:11:36,655 --> 00:11:41,869 {\an8}எனக்கு சம்மதம் என்று செபாஸ்டியனிடம் சொல்லு. எனக்கு ஐந்து மில்லியன்கள் வேண்டும். 196 00:11:46,748 --> 00:11:48,125 பிடிகொடுத்து பேச மறுக்கிறான். 197 00:11:48,125 --> 00:11:50,002 என்ன? உண்மையாகவா? 198 00:11:50,586 --> 00:11:51,587 அடச்சே. 199 00:11:51,587 --> 00:11:56,300 {\an8}ஹலோ? ஏதாவது சொல்கிறாயா? என்ன சொல்கிறாய்? 200 00:11:56,300 --> 00:11:59,803 நான் 5% குறைத்துக் கொள்கிறேன் என்று சொல்லு, அதுதான் இறுதி. 201 00:11:59,803 --> 00:12:00,888 சரி. 202 00:12:01,471 --> 00:12:06,518 {\an8}பூசனில் வானிலை எப்படி இருக்கிறது? 203 00:12:06,518 --> 00:12:09,938 {\an8}- இப்போது இரவு நேரம் என்று நினைக்கிறேன்! - என்ன? 204 00:12:09,938 --> 00:12:13,066 {\an8}நாம் பேரம் பேசுவது போல இருப்பதற்காக வார்த்தைகளைப் பேசுகிறேன்! 205 00:12:13,775 --> 00:12:17,738 {\an8}எனக்குப் புரியவில்லை. உனக்கு சம்மதமா இல்லையா? 206 00:12:17,738 --> 00:12:20,532 - அவன் என்ன சொல்கிறான்? - கோபப்படுகிறான். 207 00:12:20,532 --> 00:12:22,659 - நான் அவனிடம் இனிமையாக பேசணும். - வாய்ப்பை விட்டுவிடாதீர்கள். 208 00:12:22,659 --> 00:12:28,040 {\an8}சரி, சரி. ஏற்கனவே பேரம் பேசியது போல முடிக்கலாம், சரியா? 209 00:12:28,040 --> 00:12:31,960 {\an8}ஏற்கனவே பேரம் பேசியதா? இது என்ன முட்டாள்தனம்? 210 00:12:32,878 --> 00:12:38,300 {\an8}நல்லது. நன்றி. கண்டிப்பாக, மறுபடியும் தொடர்பு கொள்கிறேன். 211 00:12:38,967 --> 00:12:39,843 பை. 212 00:12:39,843 --> 00:12:41,094 {\an8}என்னவோ. 213 00:12:41,803 --> 00:12:44,640 அவ்வளவுதானா? என்ன சொன்னார்? 214 00:12:44,640 --> 00:12:48,602 ஏற்கனவே முடிவான விலைக்கு அவன் சம்மதித்துவிட்டான். 215 00:12:49,811 --> 00:12:50,812 தள்ளுபடி இல்லையா? 216 00:12:50,812 --> 00:12:51,980 தள்ளுபடி இல்லை! 217 00:12:51,980 --> 00:12:54,775 நீங்கள் இதை சாதித்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன், நண்பா. 218 00:12:54,775 --> 00:12:55,859 நன்றி, ஃபெங். 219 00:12:56,735 --> 00:13:00,364 ஹே. நான் சொன்னது போல, “சுலபமான விஷயம்.” 220 00:13:00,364 --> 00:13:02,241 அதற்கு என்னதான் அர்த்தமோ. 221 00:13:02,241 --> 00:13:05,369 ஆக, நாம் இப்போது சேர்ந்து வேலை செய்வதால், 222 00:13:05,369 --> 00:13:07,996 இனி எப்போதுமே எட்கர் வரப் போவதில்லை என்பதால், 223 00:13:07,996 --> 00:13:10,832 உன்னிடம் ஒரு நல்ல வியாபார வாய்ப்பை பற்றிப் பேச விரும்புகிறேன். 224 00:13:13,085 --> 00:13:14,795 கண்டிப்பாக. இல்லை, ஆமாம், எனக்கும் அதில் விருப்பம் தான். 225 00:13:14,795 --> 00:13:16,088 நல்லது. 226 00:13:16,088 --> 00:13:19,007 நாம் ஒரு நேரம் குறித்து, அதைப்பற்றி பேசலாம். 227 00:13:19,007 --> 00:13:20,092 சரி. 228 00:13:20,092 --> 00:13:22,970 நாக்கில் பட்ட உடனேயே உருகும், 229 00:13:22,970 --> 00:13:26,306 மெலிதாக சீவப்பட்ட ஐஸைக் கற்பனை செய். 230 00:13:26,306 --> 00:13:29,768 ஆனால்... நீ... எங்கே இருக்கிறாய்? 231 00:13:30,978 --> 00:13:33,146 ஆக, அந்த முத்தம். 232 00:13:33,146 --> 00:13:36,441 அதைப்பற்றி கிரேஸ் எங்களிடம் சொல்லாத போது, நீ ஏன் சொல்கிறாய்? 233 00:13:36,441 --> 00:13:38,944 ஒருவேளை அது ஒரு முறை செய்த தவறு என்பதால், 234 00:13:38,944 --> 00:13:41,655 அதை இருவருமே உணர்ந்து அது நடந்ததாக காட்டிக் கொள்ளாமல் 235 00:13:41,655 --> 00:13:42,781 சாதாரணமாக வாழ முடிவு செய்திருக்கலாமே? 236 00:13:42,781 --> 00:13:44,533 இல்லை, அது பல முறை நடந்தது. 237 00:13:45,742 --> 00:13:48,245 என் வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான மாதம் அது. 238 00:13:52,583 --> 00:13:53,584 நாள் 05 239 00:13:53,584 --> 00:13:55,085 நாம் இதைத் தொடரக் கூடாது. 240 00:13:55,669 --> 00:13:56,670 சரி. 241 00:14:04,511 --> 00:14:05,804 நாள் 09 242 00:14:05,804 --> 00:14:07,389 நாம் இதைத் தொடரக் கூடாது. 243 00:14:07,890 --> 00:14:08,807 சரி. 244 00:14:12,686 --> 00:14:14,021 நாள் 12 245 00:14:16,148 --> 00:14:17,566 நாம் இதைத் தொடரக் கூடாது. 246 00:14:18,984 --> 00:14:19,818 சரி. 247 00:14:20,986 --> 00:14:21,987 நாள் 17 248 00:14:21,987 --> 00:14:22,946 டீ-டீ-டீ-டீ-டீ. 249 00:14:23,780 --> 00:14:25,115 நாள் 21 250 00:14:27,201 --> 00:14:30,287 இது எட்கருக்கு செய்யும் துரோகம் என்று ஹான்னா, கிரேஸ் இருவருக்கும் தெரியும். 251 00:14:30,287 --> 00:14:31,205 நாள் 25 252 00:14:31,205 --> 00:14:32,122 நாள் 26 253 00:14:32,122 --> 00:14:35,083 ஆனால் இருவருக்குமான ஈர்ப்பு அதிகரித்தது, எட்கர் எப்போதும் அங்கு இருந்ததில்லை. 254 00:14:36,376 --> 00:14:40,589 இறுதியாக, நாம் பாரிஸுக்குப் பயணம் போக வேண்டும். 255 00:14:43,008 --> 00:14:44,176 ஸ்பெயினுக்கு கூட போகலாம். 256 00:14:45,552 --> 00:14:46,887 ஃப்ளோரிடா பேன்ஹாண்டில்? 257 00:14:49,306 --> 00:14:51,058 இன்னும் ஒரு வாரத்தில் உன் சகோதரனுக்கும் எனக்கும் கல்யாணம். 258 00:14:52,351 --> 00:14:53,977 சரி, அதற்கு அடுத்த வாரம் போகலாம். 259 00:14:56,522 --> 00:14:57,856 ஹான்னா... 260 00:14:59,942 --> 00:15:01,276 நாம் நிறுத்த வேண்டும். 261 00:15:01,944 --> 00:15:03,111 சரி. 262 00:15:03,111 --> 00:15:06,114 இல்லை. உண்மையிலேயே நிறுத்த வேண்டும். 263 00:15:09,159 --> 00:15:11,453 எட்கருக்கு நான் உண்மையாக இல்லை என்று தோன்றுகிறது. 264 00:15:12,120 --> 00:15:13,163 ஆமாம், நாம் இருவருமே தான். 265 00:15:14,581 --> 00:15:15,874 என்னை மன்னித்துவிடு. 266 00:15:20,504 --> 00:15:21,713 ஆனால் நான் உன்னை நேசிக்கிறேன். 267 00:15:26,343 --> 00:15:28,512 எனவே ஹான்னா துக்கப்பட ஆரம்பித்தாள். 268 00:15:30,389 --> 00:15:31,306 யார்? 269 00:15:31,306 --> 00:15:32,391 உன் அம்மா. 270 00:15:33,392 --> 00:15:34,643 என் அம்மா யாரென்று எனக்குத் தெரியாதே. 271 00:15:36,228 --> 00:15:37,229 நீங்களா. 272 00:15:38,272 --> 00:15:39,898 நீ கவசம் கேட்டிருந்தாயா? 273 00:15:39,898 --> 00:15:41,400 இல்லையே. 274 00:15:41,400 --> 00:15:42,526 நான் கேட்டேன் என நினைக்கிறேன். 275 00:15:43,735 --> 00:15:44,736 எனக்குப் பிடிச்சிருக்கு. 276 00:15:47,114 --> 00:15:48,115 நீ வருத்தமாக இருக்கிறாய் போல. 277 00:15:49,741 --> 00:15:50,742 வருத்தமாகத்தான் இருக்கிறேன். 278 00:15:53,912 --> 00:15:55,122 அதை கடந்து விடுவோம். 279 00:15:56,456 --> 00:15:59,293 அது நல்ல அறிவுரை, தான் வருத்தமாக இருந்தாலும், 280 00:15:59,293 --> 00:16:00,794 அதை பின்பற்ற ஹான்னா முடிவு செய்தாள். 281 00:16:02,546 --> 00:16:03,547 அதைக் கடந்து விடுவது. 282 00:16:05,716 --> 00:16:06,717 சரி. 283 00:16:07,509 --> 00:16:09,803 என்னதான் இருந்தாலும், அவள் திருமணம் நடக்கட்டும் என விட்டுவிட்டாள். 284 00:16:12,806 --> 00:16:14,183 ஆனால் ஒத்திகையின் போது, 285 00:16:14,183 --> 00:16:17,060 கிரேஸ் மண மேடையை நோக்கி நடந்து வருவதைப் பார்த்த போது, 286 00:16:17,644 --> 00:16:19,646 தன்னால் அதை மறக்க முடியாது என்று ஹான்னா புரிந்துக் கொண்டாள். 287 00:16:33,410 --> 00:16:34,661 அவளிடம் சொல்ல வேண்டும் என உணர்ந்தாள். 288 00:16:35,370 --> 00:16:36,413 நான் அவளிடம் சொல்லியாக வேண்டும். 289 00:16:36,413 --> 00:16:38,832 என் பூக்கள் பற்றி எல்லோரிடமும் சொல்ல விரும்புகிறேன். 290 00:16:40,292 --> 00:16:41,752 என் விசித்திர தோட்டத்தில் இருப்பவை இவை. 291 00:16:42,586 --> 00:16:45,714 முதலில் இருப்பது வீனஸ் ஃபிளை ட்ராப், அல்லது டையோனேயா மொஸ்கிப்புலா. 292 00:16:45,714 --> 00:16:48,509 அடுத்தது டெவில்ஸ் டிரம்பெட், டாடூரா ஸ்ட்ராமோனியம். 293 00:16:49,176 --> 00:16:51,303 அதன் பிறகு நம்மை நேராக 294 00:16:51,303 --> 00:16:53,305 விண்வெளிக்குக் கொண்டுச் செல்லும் கானாபிஸ் சட்டைவா. 295 00:16:54,181 --> 00:16:56,642 ஆனால் அவளிடம் சொல்ல, ஹான்னா அனைவரின் கவனத்தையும் திசைத்திருப்ப வேண்டும். 296 00:16:56,642 --> 00:16:58,227 நான் சொல்வது அனிக்கிற்குப் புரியும். 297 00:16:58,852 --> 00:17:00,187 அவன் போதை பொருள் சாப்பிடுவான். 298 00:17:02,231 --> 00:17:04,525 இங்கே ஒரு பெரிய குழப்பம் நடந்திருக்கிறது. 299 00:17:04,525 --> 00:17:08,362 எனக்கிருக்கும் ஒரே போதை, வாழ்க்கை, குடும்பம், நண்பர்கள், வாத்துகள் போன்ற பொதுவான விஷயம் தான்... 300 00:17:08,362 --> 00:17:09,905 ஸ்டாகில் என்னை சந்தி - ஹான்னா 301 00:17:09,905 --> 00:17:11,365 - எப்போது? - ...குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்... 302 00:17:11,365 --> 00:17:12,532 இப்போது 303 00:17:12,532 --> 00:17:15,536 ...பெல்ட்டுகள் போன்ற தோல் பொருட்கள், டாப்லரோன், வயலின். 304 00:17:19,122 --> 00:17:20,290 உனக்கு என்ன வேண்டும்? 305 00:17:20,290 --> 00:17:22,251 நீ திருமணத்தை நிறுத்த வேண்டும். 306 00:17:24,044 --> 00:17:25,127 என்னால் அப்படி செய்ய முடியாது. 307 00:17:26,171 --> 00:17:27,297 ஆனால் நான் உன்னை நேசிக்கிறேனே. 308 00:17:27,297 --> 00:17:29,216 உன் சகோதரனை திருமணம் செய்யப் போகிறேன் என்று சொன்னேனே. 309 00:17:30,342 --> 00:17:31,426 ஆனால் நீ அவனைக் காதலிக்கிறாயா? 310 00:17:33,095 --> 00:17:34,137 ஆமாம். கண்டிப்பாக காதலிக்கிறேன். 311 00:17:37,850 --> 00:17:39,101 நான் போக வேண்டும். 312 00:17:39,101 --> 00:17:41,061 இரு. இன்றிரவு என்னுடைய கூடாரத்திற்கு வா. 313 00:17:45,482 --> 00:17:46,483 நான் வருத்தமாக இருக்கிறேன். 314 00:17:48,694 --> 00:17:49,862 ஹே, என்னைப் புகைப்படம் எடு. 315 00:17:52,948 --> 00:17:53,949 என்னிடமா பேசுகிறாய்? 316 00:17:53,949 --> 00:17:55,325 நீ வீடியோகிராஃபர் தானே? 317 00:17:55,909 --> 00:17:58,996 அது மாதிரி தான். நான் கண்களுக்கு புலப்படக் கூடாது. 318 00:17:59,997 --> 00:18:00,998 எனக்குப் புரிகிறது. 319 00:18:13,385 --> 00:18:15,637 கடுப்பேற்றும் படி அவர்கள் அன்பாக இருந்ததை ஹான்னா பார்த்த போது, 320 00:18:15,637 --> 00:18:18,473 கிரேஸ் ஏதோ கேம் விளையாடுவது அவளுக்குப் புரிந்தது. 321 00:18:18,473 --> 00:18:19,766 எனவே தனக்குள் நினைத்தாள்... 322 00:18:19,766 --> 00:18:20,976 சரி, நானும் விளையாடுகிறேன். 323 00:18:23,645 --> 00:18:25,189 நான் இதை எடுத்துக்கொள்ளவா? எடுத்துக்கொள்கிறேன். 324 00:18:27,733 --> 00:18:28,734 யார் நீ? 325 00:18:29,776 --> 00:18:30,777 கிரேஸின் முன்னாள் காதலனா? 326 00:18:31,320 --> 00:18:32,321 சரி. 327 00:18:34,865 --> 00:18:35,741 நான் இத்திருமணத்தை நிறுத்தத் தான் 328 00:18:36,700 --> 00:18:38,368 வந்திருக்கிறேன் என உனக்கே புரிந்திருக்கும். 329 00:18:46,793 --> 00:18:49,129 நீ ரொம்ப வேடிக்கையானவன். 330 00:18:51,173 --> 00:18:52,674 சாகசம் நிறைந்தவன். 331 00:18:55,093 --> 00:18:56,094 எனக்கு முத்தம் கொடு. 332 00:18:56,595 --> 00:18:57,596 என்ன? 333 00:19:03,977 --> 00:19:06,563 அடக் கடவுளே. நான் நனைந்துவிட்டேன். 334 00:19:07,189 --> 00:19:09,024 எனக்குக் காதலி இருக்கிறாள் என்பதை நீ தெரிந்துகொள். 335 00:19:09,024 --> 00:19:12,528 அவள் பெயர் வெரோனிகா. அவள் கடல் இயந்திரங்களை இயக்குபவள். 336 00:19:17,991 --> 00:19:21,245 கிரேஸின் கண்களில் ஹான்னா பொறாமையைப் பார்த்தாள். 337 00:19:21,245 --> 00:19:24,039 அன்றிரவு அவள் கூடாரத்திற்கு கிரேஸ் வருவாள் என உறுதியாக இருந்தாள். 338 00:19:24,623 --> 00:19:26,917 அவள் கிரேஸுக்கு ஒரு கடிதத்தை தட்டச்சு செய்ய நினைத்தாள். 339 00:19:26,917 --> 00:19:29,127 அதன் மூலம் அவள் உணர்வுகளைத் தெளிவாக வெளிப்படுத்த நினைத்தாள். 340 00:19:29,127 --> 00:19:31,880 தங்களை ஒன்று சேர்த்த அதே தட்டச்சு இயந்திரத்தின் மூலம். 341 00:19:31,880 --> 00:19:35,759 அன்புள்ள ரேஸ், 342 00:19:46,895 --> 00:19:47,813 கிரேஸ்? 343 00:19:50,983 --> 00:19:52,192 நீயா. 344 00:19:52,693 --> 00:19:54,653 என்னால் தூங்க முடியவில்லை. இங்கு விளக்கு எரிவதைப் பார்த்தேன். 345 00:19:55,153 --> 00:19:56,613 உனக்குத் துணையாக இருக்கலாம் என வந்தேன். 346 00:19:57,322 --> 00:19:59,449 - நீ கவலையாக இருப்பது போலத் தெரிகிறது. - கவலையாகத் தான் இருக்கிறேன். 347 00:19:59,950 --> 00:20:02,202 - அதைப்பற்றி சொல்ல விரும்புகிறாயா? - இல்லை. 348 00:20:04,204 --> 00:20:05,205 நானும் கவலையாகத் தான் இருக்கிறேன். 349 00:20:05,706 --> 00:20:07,291 நம் இருவருக்குமே நாளை ரொம்ப முக்கியமான நாள். 350 00:20:08,125 --> 00:20:10,627 நீ உன் சகோதரனை இழக்கப் போகிறாய். நான் என் தொழில் கூட்டாளியை இழக்கப் போகிறேன். 351 00:20:11,628 --> 00:20:13,172 நீ கிளம்பலாம் என நினைக்கிறேன். 352 00:20:16,216 --> 00:20:17,301 நான் போக வேண்டும் என ஆசைப்படுகிறாய். 353 00:20:17,301 --> 00:20:18,677 - இப்போதே. - மகிழ்ச்சி. 354 00:20:18,677 --> 00:20:20,012 பை. 355 00:20:23,682 --> 00:20:24,683 தயவுசெய்து... 356 00:20:28,645 --> 00:20:29,646 ஐயோ. 357 00:20:30,814 --> 00:20:31,815 மன்னித்துவிடு. 358 00:20:31,815 --> 00:20:36,320 இரு. செபாஸ்டியன் வெள்ளிக்கிழமை இரவு இங்கு வந்தது உறவு கொள்ளவா? 359 00:20:37,112 --> 00:20:38,322 நீ உறவு வைத்துக்கொள்கிறாயா? 360 00:20:38,322 --> 00:20:41,283 செபாஸ்டியனோடா? ஓ, இல்லை. அவன் என்னை ஈர்க்கவில்லை. 361 00:20:41,283 --> 00:20:45,871 உண்மை தான். அவனது முகம், ஏதோ வித்தியாசமாக இருக்கிறது. அதுவும் அவன் உச்சரிப்பு. 362 00:20:45,871 --> 00:20:47,206 இல்லை, அவன் உச்சரிப்பு அருமையாக இருக்கிறது. 363 00:20:47,206 --> 00:20:48,707 கவர்ச்சியாக இருக்கிறது. 364 00:20:54,796 --> 00:20:57,049 நீ எட்கரோடு சந்தோஷமாக இல்லை எனத் எனக்குத் தெரியும். 365 00:20:57,049 --> 00:20:59,384 எனக்குத் தெரியும். நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை? 366 00:20:59,384 --> 00:21:02,763 எப்படி சொல்வது எனத் தெரியவில்லை. நான் எட்கரை ஏமாற்றிக் கொண்டிருந்தேன். 367 00:21:03,972 --> 00:21:07,768 பிரெட் உன்னை ஏமாற்றிவிட்டான், அது உனக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தது எனத் தெரியும். 368 00:21:07,768 --> 00:21:10,395 சரி, நான்... வந்து, 369 00:21:11,396 --> 00:21:13,315 அவளை உண்மையாக நேசிக்கிறாயா? 370 00:21:13,315 --> 00:21:17,402 இல்லை, அது வெறும் ஈர்ப்புதான். நான் குழம்பிவிட்டேன் என நினைக்கிறேன். 371 00:21:17,402 --> 00:21:18,654 உறுதியாகச் சொல்கிறாயா? 372 00:21:19,238 --> 00:21:20,239 ஆம். 373 00:21:21,114 --> 00:21:22,115 சரி. 374 00:21:22,741 --> 00:21:24,910 அப்படியென்றால் எல்லாம் சரியாகிவிடும். 375 00:21:24,910 --> 00:21:27,287 இனி எந்த இரகசியமும் வேண்டாம். 376 00:21:27,287 --> 00:21:30,082 நீ எதையாவது மறைத்தால், அது உன்னை இன்னும் குற்றவாளியாகக் காட்டும். 377 00:21:33,502 --> 00:21:36,922 ஹே. ஹான்னா அவரைக் கொன்றிருப்பாள் என எனக்குத் தோன்றவில்லை. 378 00:21:36,922 --> 00:21:38,465 ஆம், வேறுயாரோ செய்திருக்கிறார். 379 00:21:38,966 --> 00:21:41,844 மேலும் அவள் அதை வெறும் ஈர்ப்பாக நினைக்கவில்லை. 380 00:21:43,929 --> 00:21:46,932 சரி, அப்படியென்றால் நீ இரவு முழுவதும் இங்குதான் இருந்திருக்கிறாய். 381 00:21:47,724 --> 00:21:48,892 கிரேஸ் வந்தாளா? 382 00:21:48,892 --> 00:21:52,020 இல்லை. நான் மன அழுத்தத்துடனும், குழப்பத்துடனும் இருந்ததால், 383 00:21:52,020 --> 00:21:54,815 அதைப் போக்க தியானம் செய்ய நினைத்தேன். 384 00:22:04,783 --> 00:22:05,909 மன்னிக்கவும்! 385 00:22:05,909 --> 00:22:07,077 முதல் முறையாக பயன்படுத்துகிறாயா? 386 00:22:07,703 --> 00:22:10,581 இல்லை, எனக்கு இது சரியாக வராது. 387 00:22:14,668 --> 00:22:15,669 வெல்ஷ் லாங்போ. 388 00:22:17,379 --> 00:22:19,673 - பதினைந்தாவது நூற்றாண்டினுடையதா? - இதை லூவரிலிருந்து வாங்கினேன். 389 00:22:21,049 --> 00:22:22,050 நான் பயன்படுத்தலாமா? 390 00:22:43,405 --> 00:22:44,615 இதை ஏற்கனவே செய்திருக்கிறீர்கள். 391 00:22:45,532 --> 00:22:47,409 அப்பாச்சி இன குழுவினருடன் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கிறேன். 392 00:22:48,160 --> 00:22:50,787 அப்பாச்சி இனக்குழுவினர் ஒருவரோடு. 393 00:22:51,747 --> 00:22:53,957 ரொம்ப நல்ல பையன். இப்போது அவன் தரவு ஆய்வாளராக இருக்கிறான். 394 00:22:53,957 --> 00:22:55,042 ஆனால் அவன், 395 00:22:55,042 --> 00:22:59,087 “யுலசீஸ், உன் குறி தப்பிவிட்டது ஏனென்றால் நீ மனதார அம்பை எய்யவில்லை” எனச் சொல்வான். 396 00:23:00,172 --> 00:23:01,298 அப்பாச்சி இனக்குழுவினர், 397 00:23:01,298 --> 00:23:04,426 “உங்கள் கண்களால் குறி வைக்காதீர்கள், உங்கள் இதயத்தால் குறி வையுங்கள்” எனச் சொல்வார்கள். 398 00:23:06,094 --> 00:23:08,514 ஆனால் சிப்பேவா, “உங்கள் கண்களால் குறி வையுங்கள்” எனச் சொல்வார்கள். 399 00:23:08,514 --> 00:23:10,182 அவர்கள் போரிலும் வென்றனர், எனவே... 400 00:23:10,682 --> 00:23:13,560 இப்படியொரு விசித்திரமான ஞானத்தைப் போதித்ததற்கு நன்றி. 401 00:23:13,560 --> 00:23:14,645 முயற்சியை கைவிட்டுவிடாதே. 402 00:23:15,521 --> 00:23:16,688 வில்வித்தையிலா அல்லது காதலிலா? 403 00:23:17,189 --> 00:23:18,440 உன் விருப்பம். 404 00:23:25,989 --> 00:23:27,824 இத்திருமணத்தை நிறுத்த விரும்புவதாக நேற்றிரவு சொன்னாய். 405 00:23:27,824 --> 00:23:30,536 - உன் சகோதரன் குற்றவாளி. என்னிடம் ஆதாரமிருக்கு. - நல்லது. 406 00:23:30,536 --> 00:23:32,204 சரி நாம் இருவரும் சேர்ந்து இத்திருமணத்தை நிறுத்தலாம். 407 00:23:32,829 --> 00:23:34,164 இப்படித்தான் நிறுத்தப் போகிறோம். 408 00:23:35,958 --> 00:23:37,543 நான் தான் இந்தத் திருமணத்தை நடத்தப் போகிறேன். 409 00:23:38,752 --> 00:23:42,881 இத்திருமணத்திற்கு யாராவது எதிர்ப்பு தெரிவிக்க விரும்பினால் இப்போதே சொல்லிவிடுங்கள். 410 00:23:42,881 --> 00:23:44,758 அப்போது நீ எழுந்து நின்று... 411 00:23:45,259 --> 00:23:47,386 நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன் எனச் சொல்ல வேண்டும்! 412 00:23:49,805 --> 00:23:54,184 இத்திருமணத்தைப் பொறுப்பேற்று நடத்துவதால், வரும் எதிர்ப்பை கேட்டுத்தான் ஆக வேண்டும் வேறு வழியில்லை. 413 00:23:54,184 --> 00:23:56,061 ஏன் எதிர்க்கிறீர்கள், சார்? 414 00:23:56,061 --> 00:23:58,355 எட்கர் ஒரு குற்றவாளி! என்னிடம் ஆதாரம் இருக்கு! 415 00:24:01,900 --> 00:24:03,527 உன்னால் என்னை உயிருடன் பிடிக்க முடியாது! 416 00:24:05,195 --> 00:24:07,489 குடிமக்களே கைது செய்யுங்கள்! தப்பிக்க விடாதீர்கள்! 417 00:24:14,371 --> 00:24:16,999 இப்போது நீ அவனைத் திருமணம் செய்ய வேண்டாம். நாம் சேர்ந்திருக்கலாம். 418 00:24:18,125 --> 00:24:19,126 நான் உன்னை நேசிக்கிறேன். 419 00:24:25,382 --> 00:24:28,594 “குடிமக்களே கைது செய்யுங்களா?” நான் எப்போதும் அப்படிச் சொல்ல மாட்டேன். 420 00:24:28,594 --> 00:24:30,804 உன் சகோதரன் ஒரு குற்றவாளி என உண்மையிலேயே நினைக்கிறாயா? 421 00:24:30,804 --> 00:24:34,057 இல்லை. அவன்... ஒரு முதலீட்டாளர் அவ்வளவுதான். 422 00:24:34,057 --> 00:24:36,894 அவன் எந்தத் தவறும் செய்யவில்லை என்றால் அவன் ஏன் ஓட வேண்டும்? 423 00:24:36,894 --> 00:24:40,105 அது ஒரு நல்ல திட்டமில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன், 424 00:24:40,105 --> 00:24:42,649 ஆனால் கிரேஸை நான் தான் உண்மையாக நேசிப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன். 425 00:24:44,151 --> 00:24:45,694 எட்கரின் உறுதிமொழியைக் கேட்கும் வரை. 426 00:24:46,195 --> 00:24:50,073 - ஐயோ! - சத்தம் அதிகமாக இருக்கு, அனிக். 427 00:24:50,073 --> 00:24:52,201 மக்களே, இதோ உறுதிமொழி பெட்டி. என்னை மன்னித்துவிடுங்கள். 428 00:24:55,454 --> 00:24:58,665 நான் பிடிவாதக்காரன் என்று தெரியும், ஆனால் கிரேஸ், நான் உன்னைப் பார்க்கும் போது, 429 00:24:59,708 --> 00:25:05,005 என் டோப்பமைன் அளவு 16%-ல் இருந்து 37%-க்குச் செல்கிறது. 430 00:25:05,797 --> 00:25:10,219 நோரெபின்ஃப்ரைன் அளவு 12%-ல் இருந்து 26%-க்குச் செல்கிறது. 431 00:25:10,928 --> 00:25:14,348 ஆக்ஸிடோஸின் முன்பில்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது, 432 00:25:14,973 --> 00:25:17,809 23.2%. 433 00:25:17,809 --> 00:25:20,896 இவை அனைத்தும் எதிர்பாராத நிகழ்வுகள். 434 00:25:20,896 --> 00:25:24,691 இதுதான் அவளது சகோதரன் தன் வாழ்நாளிலேயே வெளிப்படுத்திய உண்மையான உணர்வுகள். 435 00:25:25,192 --> 00:25:26,902 இதை மறுக்க முடியாது என அவளுக்குத் தெரியும். 436 00:25:26,902 --> 00:25:28,987 எட்கர் கிரேஸை ஆழமாக நேசித்தான். 437 00:25:30,531 --> 00:25:32,157 அப்படியென்றால் இருவருமே அவளை நேசிக்கின்றனர். 438 00:25:33,075 --> 00:25:34,701 ஆனால் இருவராலுமே அவளுடன் வாழ முடியாது. 439 00:25:34,701 --> 00:25:36,328 யாராவது ஒருவர் தனியாக இருக்க வேண்டும். 440 00:25:37,204 --> 00:25:38,830 அது அவள் தான் என ஹான்னா முடிவு செய்துவிட்டாள். 441 00:25:39,623 --> 00:25:41,291 அது சுரப்பியில் ஏற்படும் சூறாவளி. 442 00:25:42,543 --> 00:25:45,838 சரி, நண்பர்களே, வாருங்கள் திருமண நாளன்று ஒரு புகைப்படம் எடுக்கலாம். 443 00:25:52,928 --> 00:25:54,346 என் சகோதரன் உன்னை உண்மையாக நேசிக்கிறான். 444 00:25:55,097 --> 00:25:56,098 தெரியும். 445 00:25:57,140 --> 00:25:58,141 நல்லது. 446 00:25:59,601 --> 00:26:00,769 உனக்காக சந்தோஷப்படுகிறேன். 447 00:26:06,942 --> 00:26:09,194 அவர்கள் சேர்ந்திருப்பதை தினமும் பார்ப்பது 448 00:26:09,194 --> 00:26:10,737 கஷ்டமாக இருக்கும் என ஹான்னா நினைத்தாள். 449 00:26:10,737 --> 00:26:13,115 எனவே, கப்பலில் கடல் பயணம் செய்ய முடிவெடுத்தாள். 450 00:26:13,699 --> 00:26:14,700 {\an8}2 ஸ்வெட்டர்கள் 451 00:26:14,700 --> 00:26:15,784 {\an8}2 கால் சட்டைகள் 452 00:26:15,784 --> 00:26:16,869 {\an8}3 தொப்பிகள் 453 00:26:16,869 --> 00:26:18,120 {\an8}1 நங்கூரம் 2 பஞ்சடைத்த எலி பொம்மைகள் 454 00:26:18,120 --> 00:26:20,330 {\an8}ஹான்னா ஒரு வருடம் கடல் பயணம் மேற்கொள்ளப் போகிறாள். 455 00:26:20,330 --> 00:26:21,373 {\an8}தட்டச்சுப்பொறியின் ஜீ பொத்தான் 456 00:26:24,168 --> 00:26:26,545 அவள் இன்னும் ஒரு முக்கியமான விஷயத்தை செய்ய நினைத்தாள். 457 00:26:51,236 --> 00:26:54,406 செபாஸ்டியன் ஒரு முழு பாட்டில் ஷாக்கெல்டன் குடித்ததைப் பார்க்கிறேன். 458 00:26:59,620 --> 00:27:01,079 அவனுக்கு இது ரொம்ப மோசமான நாள். 459 00:27:01,663 --> 00:27:02,497 டோஸ்ட் செய்வோம். 460 00:27:06,585 --> 00:27:07,586 உனக்கும்... 461 00:27:09,129 --> 00:27:09,963 கிரேஸுக்கும். 462 00:27:15,844 --> 00:27:17,054 உனக்காக ஒன்று கொண்டு வந்திருக்கிறேன். 463 00:27:30,067 --> 00:27:31,777 ரொம்ப நல்ல பரிசு, 464 00:27:31,777 --> 00:27:34,821 ஆனால் இது உன் தட்டச்சு இயந்திரத்தைப் பயனற்றதாக்கிவிடுமே? 465 00:27:36,114 --> 00:27:39,451 பல்லாயிரக்கணக்கான வார்த்தைகளை இனி உன்னால் எழுதி உச்சரிக்க முடியாதே. 466 00:27:40,786 --> 00:27:41,912 டங்கரீஸ். 467 00:27:42,788 --> 00:27:44,122 ஃப்ரிகேட். 468 00:27:44,122 --> 00:27:45,290 ஜிகோலோ. 469 00:27:45,290 --> 00:27:48,085 ஒரு விலைமகனைப் பற்றி எழுத விரும்பினால், 470 00:27:48,085 --> 00:27:49,711 தீர்க்க முடியாத பிரச்சினையில் மாட்டிக்கொள்வாய். 471 00:27:49,711 --> 00:27:51,129 நீ என்னிடம் ரொம்ப அன்பாக நடந்துகொள்கிறாய். 472 00:27:51,880 --> 00:27:55,175 நான் உன் சகோதரி இல்லையென்றாலும் உன் சகோதரியைப் போலவே என்னை நடத்துகிறாய். 473 00:27:56,176 --> 00:27:57,553 நான் என் அன்பை திரும்பச் செலுத்துகிறேன். 474 00:27:58,971 --> 00:28:01,765 மேலும், நான் இங்கிருந்து போகிறேன். 475 00:28:02,266 --> 00:28:03,517 இப்போதே. 476 00:28:03,517 --> 00:28:09,106 எனவே... குட்பை, எட்கர். 477 00:28:11,358 --> 00:28:13,819 சரி, “உட்பை, எட்அர்.” 478 00:28:19,950 --> 00:28:22,870 தவறு செய்கிறாய். கவனமாக இரு. யாரோ கொஞ்சம் குடித்திருக்கிறார்கள். 479 00:28:29,168 --> 00:28:30,169 பை. 480 00:28:33,755 --> 00:28:34,590 முற்றும். 481 00:28:34,590 --> 00:28:37,092 என்ன... உண்மையாகவா? இதுதான் முடிவா? 482 00:28:37,676 --> 00:28:42,222 பெரும்பாலானோர், அவர்கள் கதையைச் சொல்லும்போது, அவர்களின் நோக்கத்தை மறுப்பார்கள். 483 00:28:42,222 --> 00:28:44,516 ஆனால் உன் கதையில் உன் நோக்கம் மட்டும்தான் தெரிகிறது. 484 00:28:44,516 --> 00:28:46,768 சரி. நான் என் சகோதரனைக் கொல்லவில்லை. 485 00:28:46,768 --> 00:28:49,813 சரி, ஆனால், உன் தோட்டத்திலுள்ள மலர்களின் விஷம் தான் அவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது 486 00:28:50,314 --> 00:28:51,565 மேலும் நீ கடைசியாக செய்த விஷயம்... 487 00:28:51,565 --> 00:28:53,775 குடித்துவிட்டு சோகமாக இருந்த செபாஸ்டியன் மீது மோதினேன். 488 00:28:53,775 --> 00:28:56,069 ஆனால் செபாஸ்டியன் ஏன் சோகமாக இருந்தான்? 489 00:28:56,069 --> 00:28:59,489 என்னுடன் உறவு கொள்ள வெள்ளிக்கிழமை இங்கு வந்த போது, 490 00:28:59,489 --> 00:29:02,743 அவன், “நீ உன் சகோதரனை இழக்கப் போகிறாய். நான்...” 491 00:29:02,743 --> 00:29:04,786 “...என் தொழில் கூட்டாளியை இழக்கப் போகிறேன்.” எனக்கு ஞாபகமிருக்கு. 492 00:29:05,287 --> 00:29:07,873 ஆனால் கல்யாணத்தினால் தொழில் கூட்டாளியை இழக்க மாட்டோம் இல்லையா. நீ... 493 00:29:09,416 --> 00:29:11,502 அடச்சே! 494 00:29:12,002 --> 00:29:13,212 பொறு! நீ எங்கே போகிறாய்? 495 00:29:13,212 --> 00:29:15,088 ஐயோ! நான் அவனைப் பின்தொடர வேண்டும். 496 00:29:15,088 --> 00:29:18,300 பொறு. உன் சகோதரன் நிம்மதியாக, 497 00:29:19,134 --> 00:29:20,636 ஓய்வெடுக்கிறான், இந்த சமயத்தில் 498 00:29:21,512 --> 00:29:24,014 நீ கிரேஸைத் திரும்பப் பெற முயற்சி செய்யப் போகிறாயா? 499 00:29:25,641 --> 00:29:28,644 தெரியவில்லை. நாங்கள் இருவருமே இப்போது மன வருத்தத்தில் இருக்கிறோம். 500 00:29:29,520 --> 00:29:30,896 உனக்குத் தெரியும் என நினைக்கிறேன். 501 00:29:32,189 --> 00:29:33,398 கொஞ்சம் பொறு, முட்டாளே! 502 00:29:39,279 --> 00:29:42,491 இந்த எஸ்டேட் முழுவதும் உன்னைத் துரத்த வைக்கப் போகிறாயா? 503 00:29:43,033 --> 00:29:44,243 நான் ஒன்றைத் தேடுகிறேன். 504 00:29:45,285 --> 00:29:48,497 எஸ்ஈசி4 சம்பந்தமாகவா? 505 00:29:48,497 --> 00:29:50,207 இல்லை. அதை என்ன செய்வது என இன்னும் தெரியவில்லை. 506 00:29:50,207 --> 00:29:51,750 அது என்னைப் பைத்தியமாக்குகிறது. 507 00:29:53,460 --> 00:29:55,170 ரேச்சல் ஸ்மித்திடமிருந்து எட்கர் மின்னோஸிற்கு 508 00:29:59,424 --> 00:30:00,425 நான் நினைத்தது தான். 509 00:30:02,010 --> 00:30:03,887 இது போலி அடையாளங்கள் இல்லை. 510 00:30:03,887 --> 00:30:06,265 வேலைக்கு ஆட்கள் எடுக்கும் நிறுவனத்திற்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள். 511 00:30:06,265 --> 00:30:08,350 எட்கர் ஒரு புது தொழில் கூட்டாளியைத் தேடியிருக்கிறான். 512 00:30:08,350 --> 00:30:10,310 ஏனென்றால் அவன் செபாஸ்டியனை பணி நீக்கம் செய்துவிட்டான். 513 00:30:10,310 --> 00:30:12,062 அட, நீ ரொம்ப திறமைசாலி. 514 00:30:12,062 --> 00:30:13,730 நன்றி, இது... 515 00:30:13,730 --> 00:30:16,817 பொறு, எட்கர், செபாஸ்டியனை நீக்கியிருந்தால், 516 00:30:16,817 --> 00:30:20,112 அவன் ஏன் இன்னும் நிறுவனத்தில் வேலை செய்வது போல ஃபோனில் பேசுகிறான்? 517 00:30:20,112 --> 00:30:21,405 ஏனென்றால் யாருக்குமே அது தெரியாது. 518 00:30:23,490 --> 00:30:25,409 ஆம், விஷயம் வேகமாக நகர்கிறது. 519 00:30:26,076 --> 00:30:27,911 அதனால்தான் நானும் எட்கரும் இதைச் செய்ய நினைக்கிறோம். 520 00:30:29,705 --> 00:30:31,957 கண்டிப்பாக. நான் போய் அவனைப் பிடிக்கிறேன். 521 00:30:36,962 --> 00:30:39,298 ஹலோ. நான் எட்கர் மின்னோஸ். 522 00:30:41,049 --> 00:30:42,050 ஆமாம். 523 00:30:42,551 --> 00:30:45,929 செபாஸ்டியன் ட்ரேப்வுட்டிற்கு முழு அதிகாரமும் இருக்கிறது. 524 00:31:11,079 --> 00:31:13,081 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்