1 00:00:25,318 --> 00:00:27,237 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 2 00:00:27,320 --> 00:00:29,406 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 3 00:00:29,489 --> 00:00:31,491 இசை முழங்கட்டும் 4 00:00:31,575 --> 00:00:33,410 அங்கே ஃப்ராகெல் ராக்கில் 5 00:00:33,493 --> 00:00:35,704 உங்கள் கவலைகளை களைந்திடுங்கள் 6 00:00:35,787 --> 00:00:37,747 நடனங்களை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 7 00:00:37,831 --> 00:00:39,374 ஃப்ராகெல்கள் விளையாடட்டும் 8 00:00:39,457 --> 00:00:40,417 -நாங்கள்தான் கோபோ. -மோகீ. 9 00:00:40,500 --> 00:00:41,334 -வெம்ப்ளே. -பூபர். 10 00:00:41,418 --> 00:00:42,419 ரெட். 11 00:00:45,755 --> 00:00:47,215 ஜூனியர்! 12 00:00:47,299 --> 00:00:48,633 ஹலோ! 13 00:00:50,218 --> 00:00:51,344 என் முள்ளங்கி. 14 00:00:52,470 --> 00:00:54,431 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 15 00:00:54,514 --> 00:00:56,558 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 16 00:00:56,641 --> 00:00:58,643 இசை முழங்கட்டும் 17 00:00:58,727 --> 00:01:01,187 அங்கே ஃப்ராகெல் ராக்கில் அங்கே ஃப்ராகெல் ராக்கில் 18 00:01:02,731 --> 00:01:04,148 அங்கே ஃப்ராகெல் ராக்கில். 19 00:01:12,908 --> 00:01:17,454 இரவில் வெளியில் செல்வது எனக்கு பிடிக்கும், குறிப்பாக, நான் ஆரம்பித்தது நினைவில்லை என்றால். 20 00:01:17,537 --> 00:01:19,497 நான் கனவு காண்கிறேனா, என்ன? 21 00:01:23,501 --> 00:01:25,921 மாலை வணக்கம், பேசும் பெரிய முள்ளங்கியே. 22 00:01:26,004 --> 00:01:27,130 இது என் கனவா, என்ன? 23 00:01:27,214 --> 00:01:29,466 உன் கேள்விக்கு இது பதிலாகுமா? 24 00:01:35,096 --> 00:01:36,598 இல்லை. 25 00:01:36,681 --> 00:01:39,643 இரு. நான் தூங்கப் போகும் போது என் தலைமுடி அவிழ்ந்திருந்தது, 26 00:01:39,726 --> 00:01:40,769 இப்போது கட்டியிருக்கிறது. 27 00:01:40,852 --> 00:01:42,354 ஆமாம், நான் கனவுதான் காண்கிறேன். 28 00:01:42,437 --> 00:01:45,357 ஹே! உனக்கு ஒரு அருமையான விஷயம் சொல்லவா? 29 00:01:45,440 --> 00:01:48,151 -சரி. -ரொம்பவும் அருமையான விஷயம்? 30 00:01:48,235 --> 00:01:49,861 நிச்சயமாக. 31 00:01:49,945 --> 00:01:51,279 சரி, இதை கேள். 32 00:01:51,363 --> 00:01:55,909 பெரிதாக ஏதோ ஒன்று நடக்கப் போகிறது. 33 00:01:57,494 --> 00:01:59,537 பெரிதாக ஏதோ ஒன்று நடக்கப் போகிறது! 34 00:02:00,330 --> 00:02:02,290 மோகீ, பெரிதாக ஒன்று நடந்திருக்கிறது. 35 00:02:02,374 --> 00:02:04,334 -என்னை எழுப்பிவிட்டாயே. -ஓ, இல்லை. 36 00:02:04,417 --> 00:02:05,835 சரி, அது பெரிய விஷயம் தான், 37 00:02:05,919 --> 00:02:09,588 ஏனென்றால் நீ சக்தியோடு இருப்பதற்கு தூக்கம் ரொம்பவும் அவசியம். 38 00:02:09,673 --> 00:02:12,342 ஆனால், நான் வேறு ஒன்றைப்பற்றி பேசுகிறேன். 39 00:02:12,425 --> 00:02:15,136 ரொம்பவும் பெரியதான, ஒரு விஷயம். 40 00:02:15,220 --> 00:02:16,680 என்னால் அதை உணர முடிகிறது. 41 00:02:16,763 --> 00:02:19,599 -சரி, நல்லது. நான் எதை உணர்கிறேன் தெரியுமா? -எதை? 42 00:02:19,683 --> 00:02:20,767 தூக்கத்தை. 43 00:02:24,145 --> 00:02:26,982 ஃப்ராகெலின் ஹாரன்! பெரிதாக ஏதோ ஒன்று நடக்கிறது. 44 00:02:28,066 --> 00:02:29,067 நாம் போகலாம்! 45 00:02:36,866 --> 00:02:38,910 ஹே, நண்பர்களே! இது அருமையாக உள்ளது தானே? 46 00:02:39,619 --> 00:02:41,871 இப்பொழுது நள்ளிரவு, ஆனால் நாம் படுக்கையில் இல்லை. 47 00:02:41,955 --> 00:02:43,873 பெரிதாக ஏதோ நடக்கிறது. 48 00:02:43,957 --> 00:02:45,792 வெம்ப்ளே. எனக்குத் தெரியும். 49 00:02:46,334 --> 00:02:47,878 கொஞ்ச நேரத்திற்கு முன்பே தெரியும். 50 00:02:47,961 --> 00:02:50,463 தெரிந்துகொள், வெம்ப்ளே, “பெரிது” என்றால் “நல்லது” என அர்த்தமில்லை. 51 00:02:50,547 --> 00:02:52,716 இதனால் தான் யாரிடமும், “பெரிய காலை” என சொல்லமாட்டோம். 52 00:02:55,135 --> 00:02:58,263 சரி. எல்லா ப்ராகெல்களும், கவனியுங்கள். 53 00:02:58,346 --> 00:03:01,182 இது தான் உலகின் பழமையான ஃப்ராகெல். அருகே போய் பார்க்கலாம். 54 00:03:01,266 --> 00:03:02,893 -சரி. -வழிவிடுங்கள். மன்னிக்கவும். 55 00:03:02,976 --> 00:03:04,394 -வழிவிடுங்கள். -ஹாய், ராண்டா. 56 00:03:04,477 --> 00:03:06,146 வழிவிடுங்கள். 57 00:03:06,229 --> 00:03:07,314 வழிவிடு. 58 00:03:07,397 --> 00:03:09,357 பெரிதாக ஏதோ ஒன்று நடக்கப் போவதால் தான் 59 00:03:09,441 --> 00:03:12,611 நான் உங்கள் எல்லோரையும் கூப்பிட்டேன். 60 00:03:15,155 --> 00:03:16,448 எனக்கு ஏற்கனவே தெரியும். 61 00:03:16,531 --> 00:03:21,786 என் ப்ராகெல்களே, தலைமுறைக்கு ஒரு முறை அற்புதமான நிகழ்ச்சி நடக்கும். 62 00:03:21,870 --> 00:03:26,374 நான் மட்டும் தான் அதை பார்த்திருக்கிறேன் ஏனென்றால் நான் தான் மிக, மிக, மிக, 63 00:03:26,458 --> 00:03:29,377 -மிக, மிக... -வயதானவன். 64 00:03:30,003 --> 00:03:31,213 அது எனக்கே தெரியும். 65 00:03:32,255 --> 00:03:33,465 என்ன விஷயம்? 66 00:03:35,050 --> 00:03:38,053 இல்லை, நிஜமாக சொல்கிறேன், ஹென்ச்சி. என்ன சொன்னேன்? மறந்துவிட்டேன். 67 00:03:38,136 --> 00:03:41,473 இது "நிலவொளியில் மெர்கெல் இடம்பெயர்தல்." 68 00:03:41,556 --> 00:03:43,308 ஆஹா! அருமை. 69 00:03:43,391 --> 00:03:45,101 அது எனக்கே தெரியும்! 70 00:03:45,185 --> 00:03:47,270 ஃப்ராகெல் பற்றிய உண்மைகளின் தொகுப்பின் படி, 71 00:03:47,354 --> 00:03:50,482 இது பல தலைமுறை ப்ராகெல்களால் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது, 72 00:03:50,565 --> 00:03:56,321 இன்றிரவு மெர்கெல்கள் ஒரு அற்புதமான நிலவொளியில் இடம்பெயர்வு நடனமாடப் போகிறார்கள். 73 00:03:59,032 --> 00:04:01,409 ஆர்வத்தைத் தூண்டுமாறு பேசு, ஹென்ச்சி. 74 00:04:01,493 --> 00:04:04,496 மெர்கெல்களுக்கு 12 வால்கள் இருக்கும் என்று அவர்களிடம் சொல். ஆமாம்! 75 00:04:04,579 --> 00:04:06,206 -ஆனால் அது உண்மை இல்லையே, சார். -ஆமாம். 76 00:04:06,665 --> 00:04:07,666 உண்மை தான் முக்கியம். 77 00:04:11,002 --> 00:04:14,756 உங்களுக்கு அந்த சத்தம் கேட்கிறதா? எனக்கு மட்டும் தான் கேட்கிறதா என்ன? 78 00:04:14,839 --> 00:04:15,924 எனக்குக் கேட்டது. 79 00:04:16,007 --> 00:04:19,052 -சரி, இன்றிரவு தான் நிகழ்ச்சி. -சரி. 80 00:04:19,134 --> 00:04:22,847 இந்த அரிதான நிகழ்ச்சி தலைமுறைக்கு ஒரு முறை... 81 00:04:22,931 --> 00:04:25,934 -சரி. -...நீல நிலவு வரும் இரவில் தான் நடக்கும். 82 00:04:29,771 --> 00:04:32,440 -நிலா எங்கே? -கொஞ்சம் முன்னால் இருந்தது. 83 00:04:32,524 --> 00:04:34,609 சற்று ஏமாற்றமாக இருக்கிறது, இல்லையா? 84 00:04:36,987 --> 00:04:38,405 ஹாய், நீல நிலவே. 85 00:04:39,114 --> 00:04:41,283 நீ ரொம்பவும் அழகாக இருக்கிறாய். 86 00:04:42,075 --> 00:04:45,662 யூ-ஹூ. உள்ளே வா, செல்லக் குட்டி. 87 00:04:45,745 --> 00:04:48,498 தூங்குவதற்கு முன்னால் சாப்பிடும் கஸ்பாச்சோ சூடு ஆறுகிறது. 88 00:04:49,583 --> 00:04:50,667 கஸ்பாச்சோ. 89 00:04:50,750 --> 00:04:53,795 எனக்கு கஸ்பாச்சோ ரொம்பவும் பிடிக்கும். வருகிறேன், அம்மா! 90 00:04:53,879 --> 00:04:56,089 என் கஸ்பாச்சோவை சாப்பிட வருகிறேன், வந்துகொண்டே இருக்கிறேன் 91 00:04:57,173 --> 00:04:58,508 இதோ இருக்கிறது! 92 00:05:00,176 --> 00:05:01,761 முக்கிய அறிவிப்பை சொல், ஹென்ச்சி. 93 00:05:01,845 --> 00:05:03,847 மெர்கெல்கள் குகைக்கு சென்று நிலவொளியில் மெர்கெல் இடம்பெயர்வதை 94 00:05:03,930 --> 00:05:05,557 பார்க்கப் போகிறோம் என்று நினைக்கிறேன். 95 00:05:05,640 --> 00:05:08,643 நிலவொளியில் மெர்கெல் இடம்பெயர்வதைப் பார்ப்பதற்காக, நாம் எல்லோரும் 96 00:05:08,727 --> 00:05:11,438 மெர்கெல்களின் குகைக்கு போகப் போகிறோம். 97 00:05:11,521 --> 00:05:12,772 ஜாலி! 98 00:05:14,774 --> 00:05:17,777 மோகீ! மோகீ! மோகீ! 99 00:05:19,070 --> 00:05:21,865 மன்னிக்கவும். ஏற்கனவே இதை உள்ளுணர்வு மூலம் தெரிந்துக்கொண்டேன். 100 00:05:21,948 --> 00:05:24,451 நிறைய விஷயங்களை தெரிந்துக்கொண்டேன். 101 00:05:25,201 --> 00:05:27,746 -சரி. -சரி, நாம் கிளம்பலாம். 102 00:05:27,829 --> 00:05:30,373 அது மிகத்தொலைவில் இருக்கிறது, அதை தவற விடக்கூடாது. 103 00:05:30,457 --> 00:05:31,458 ஆமாம். 104 00:05:31,541 --> 00:05:35,128 நான், என்னுடைய வாழ்க்கையில் ரொம்ப நேசிக்கும் மெர்கெல் ராணியை... 105 00:05:35,212 --> 00:05:37,547 பார்க்க ஆவலாக இருக்கிறேன். 106 00:05:38,089 --> 00:05:41,968 நான் நிலத்தில் நளினமாக இருப்பது போல, அவள் தண்ணீரில் நளினமாக இருப்பாள். 107 00:05:45,347 --> 00:05:46,348 நான் நலம் தான். 108 00:05:47,515 --> 00:05:49,351 நான் நலம்தான். 109 00:05:49,434 --> 00:05:52,854 கேளுங்கள், மெர்கெல் குகைக்கு செல்லும் வழி கடினமானது. 110 00:05:53,480 --> 00:05:56,650 எல்லோரும், வரைபடம் எடுத்துக்கொள்ளுங்கள். 111 00:05:56,733 --> 00:05:58,109 நல்ல யோசனை. 112 00:05:59,277 --> 00:06:00,904 எனக்கு அது தேவை இல்லை. 113 00:06:00,987 --> 00:06:04,407 நான் எழுந்தது முதலே, என் உள்ளுணர்வு அனைத்தையும் வெளிப்படுத்துகிறது. 114 00:06:05,158 --> 00:06:07,494 -நமக்காக நான் ஒன்று எடுத்து வருகிறேன். -நல்லது. 115 00:06:07,577 --> 00:06:09,371 மிக்க நன்றி. ஆமாம். 116 00:06:09,454 --> 00:06:10,455 மோகீ? 117 00:06:10,538 --> 00:06:12,624 வரைபடங்களில் உண்மையான விவரம் இருக்கும். 118 00:06:13,166 --> 00:06:17,128 கோபோ. வெளியில் இருக்கும் வரைபடத்தை நீ பின்பற்ற போவதென்றால், 119 00:06:17,212 --> 00:06:18,213 நான் அதை ஆதரிக்கிறேன். 120 00:06:18,296 --> 00:06:21,383 என் உள்ளுணர்வு சொல்வதை பின்பற்றக் கூடிய நிலையில் நான் இருக்கிறேன். 121 00:06:22,092 --> 00:06:23,176 சரி. 122 00:06:24,261 --> 00:06:26,596 -நீ வேடிக்கையானவன். -நன்றி. 123 00:06:26,680 --> 00:06:30,183 நிலவொளியில் இடம்பெயர்தல்! மெர்கெல் ராணி! 124 00:06:30,267 --> 00:06:31,601 நிலவொளியில் இடம்பெயர்தல். 125 00:06:31,685 --> 00:06:35,313 சரி, நண்பர்களே. நாம் கிளம்பலாம். நல்ல இருக்கையில் உட்கார்ந்து பார்க்க வேண்டும். 126 00:06:35,397 --> 00:06:37,941 சிறப்பான இருக்கைகள் வேண்டாம், ஏனென்றால் அது சுயநலமாக இருக்கும். 127 00:06:38,024 --> 00:06:39,484 ஆனால் தலைசிறந்த இருக்கைகள் வேண்டும். 128 00:06:39,568 --> 00:06:43,280 மூன்று வரிசைகள் பின்னால், சரியாக நடுவில், சற்று ஒரு புறமாக. 129 00:06:43,363 --> 00:06:46,825 -ஹலோ! நாம் கிளம்பலாம்! -சரி. நாம் கிளம்பலாம். 130 00:06:46,908 --> 00:06:48,243 -பொறுங்கள்! -நேரமாகிறது! 131 00:06:48,326 --> 00:06:50,954 -என் முள்ளங்கி நெக்லஸை குகையிலேயே விட்டுவிட்டேன். -என்ன? 132 00:06:51,037 --> 00:06:53,873 என் கனவில் வந்த முள்ளங்கியால் தான் இந்த அருமையான நாள் தொடங்கியது, அதோடு... 133 00:06:53,957 --> 00:06:56,251 அது எனக்கு கண்டிப்பாக வேண்டும். ரொம்ப தாமதிக்க மாட்டேன். 134 00:06:56,877 --> 00:06:58,003 மோகீ... 135 00:07:03,133 --> 00:07:04,843 நிலவைப் பார்த்து ஊளையிடுகிறாயா, ஸ்புராகெட்? 136 00:07:06,052 --> 00:07:11,141 ஆனால், அந்த புறாக்கள் என் சாண்ட்விச்சை திருடிய போது, நீ ஒன்றும் சொல்லவில்லையே. 137 00:07:11,850 --> 00:07:14,477 நான் செய்வதைப் பார்க்கணுமா? கீழே வா. 138 00:07:15,103 --> 00:07:19,399 வந்து... இதை... பார். 139 00:07:21,151 --> 00:07:24,237 எனக்குத் தெரியும், சரியா? இன்றிரவு, முழு நிலவு நேரத்தில், 140 00:07:24,321 --> 00:07:28,033 குட்டி கடல் ஆமை குஞ்சுகள் மண்ணில் இருந்து வெளியே வந்து 141 00:07:28,116 --> 00:07:30,619 தங்களுடைய அழகான ஃபிளிப்பர்களை அடித்துக்கொண்டு நடக்கப் போகின்றன. 142 00:07:30,702 --> 00:07:33,371 நம் புது ட்ரோன் மூலம் இதை நாம் நேரடியாக 143 00:07:33,455 --> 00:07:36,374 பார்க்கப் போகிறோம்! 144 00:07:37,667 --> 00:07:38,877 சரி. போகலாம். 145 00:07:41,463 --> 00:07:44,341 இதைப் பள்ளியிலிருந்து கடன் வாங்கினேன். இதனால் இரவில் பறக்க முடியும். 146 00:07:55,727 --> 00:07:56,978 ஹே, இதோ இதைப் பார். 147 00:07:57,062 --> 00:07:58,939 12 மணிக்கு இரு அழகான குட்டிகள். 148 00:08:00,607 --> 00:08:02,692 ஹே, அவன் உன்னைப் பார்த்து தான் குரைக்கிறான். 149 00:08:02,776 --> 00:08:05,195 சரி, அது நாம் தான் என்று உனக்குப் புரியவில்லை. 150 00:08:07,155 --> 00:08:08,448 கடற்கரைக்கு போவோம். 151 00:08:10,492 --> 00:08:12,035 இது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. 152 00:08:12,702 --> 00:08:15,205 என்ன தெரியுமா? உன்னை குறை சொன்னது தவறு தான். 153 00:08:15,747 --> 00:08:19,167 எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதை தெரிவிக்க ஊளையிடுவது தான் ஒரே வழி. 154 00:08:22,170 --> 00:08:24,839 -சத்தம் போடாதே! -மன்னிக்கவும், திருமதி. ஷிம்மெல்ஃபின்னி. 155 00:08:26,007 --> 00:08:28,718 நிலவொளியில் இடம்பெயர்தல் தொடங்கப் போகிறது! 156 00:08:28,802 --> 00:08:31,513 உன் காலை மெர்கெல் ஃபின் போல அடித்துக்கொள்! 157 00:08:31,596 --> 00:08:34,140 ஃபிளாப், ஃபிளாப், ஃபிளாப், ஃபிளாப்! 158 00:08:34,724 --> 00:08:37,519 -நிலவொளியில் இடம்பெயர்தல் தொடங்கப் போகிறது. -சீக்கிரம்! மற்றவர்கள் போய்விட்டார்கள். 159 00:08:37,601 --> 00:08:40,397 ரெட், மூச்சு விடு. எல்லாம் நன்மைக்கே. 160 00:08:40,480 --> 00:08:44,109 சரி, நீ உன் உடையை மாற்றச் சென்றதால் தான் நமக்கு தாமதமாகிவிட்டது. 161 00:08:44,192 --> 00:08:46,611 மன்னித்துவிடு. என் கனவில் வந்தது போல உடை அணிய விரும்பினேன். 162 00:08:46,695 --> 00:08:49,656 என் முள்ளங்கி நெக்லஸ் தேவைப்பட்டது. உனக்கு இது பிடித்திருக்கிறதா? 163 00:08:49,739 --> 00:08:50,782 எனக்குப் பிடிக்கவில்லை. 164 00:08:51,241 --> 00:08:52,325 -ஏன் தெரியுமா? -ஏன்? 165 00:08:52,409 --> 00:08:53,410 ரொம்ப பிடிச்சிருக்கு! 166 00:08:56,955 --> 00:08:58,081 ஓ, கடவுளே! 167 00:08:58,164 --> 00:09:01,918 நான் இவ்வளவு நேரம் விழித்திருந்ததே இல்லை, ஆனாலும் எனக்கு சோர்வாக இல்லை. 168 00:09:02,002 --> 00:09:03,962 சரி, வரைபடத்தின் படி இந்தப் பக்கம் போக வேண்டும். 169 00:09:05,088 --> 00:09:06,381 சரி, ஆனால்... 170 00:09:06,464 --> 00:09:08,800 இந்தப் பக்கம் போக வேண்டும் என எனக்கு தோன்றுகிறது. 171 00:09:08,884 --> 00:09:09,718 என்ன? 172 00:09:10,302 --> 00:09:14,222 நீ காட்டும் வழியில் சென்றால், கடைசியில் ஒரு கருப்பு நிற “எதிரொலி கூடம்” இருக்கும். 173 00:09:14,306 --> 00:09:16,933 அதற்கு என்னுடைய பதில், “வேண்டாம், வேண்டாம், வேண்டாம்.” 174 00:09:17,017 --> 00:09:18,602 என்னால் உன்னை உணர முடிகிறது, பூபர். 175 00:09:18,685 --> 00:09:21,688 -என் காலை மிதித்துக் கொண்டிருக்கிறாய். -மன்னித்துவிடு. 176 00:09:22,188 --> 00:09:25,108 இன்று முழுவதும் என்னுடைய உள்ளுணர்வு என்னிடம் பேசுகிறது, 177 00:09:25,191 --> 00:09:28,403 என் உள்ளுணர்வை நான் பின்பற்ற வேண்டும் என்று அது சொல்கிறது. சரியா? 178 00:09:28,486 --> 00:09:29,529 என்னால் முடியாது. 179 00:09:29,613 --> 00:09:34,701 வரைபடம் காட்டும் திசையில் தான் நாம் போகிறோம், மற்றும் அது தான் சரியான திசையும் கூட. 180 00:09:34,784 --> 00:09:36,953 ஒரு மணி நேரம் முன்பு, நான் தெரிந்துகொண்ட, 181 00:09:37,037 --> 00:09:38,955 நிலவொளியில் மெர்கெல் இடம்பெயர்வதை பார்ப்பதை தவறவிட மாட்டேன், 182 00:09:39,039 --> 00:09:41,458 அதைப் பார்க்கவில்லை என்றால் நான் வெறுத்துவிடுவேன்! 183 00:09:44,461 --> 00:09:48,048 சரி. வந்து... என் மாட் மாமா எப்போதும் சொல்வது போல, 184 00:09:48,131 --> 00:09:49,883 சில சமயங்களில் நம் வழியில் நாம் போக வேண்டும். 185 00:09:49,966 --> 00:09:53,011 நீ அவரை உதாரணமாக சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை. 186 00:09:53,094 --> 00:09:55,931 சரி, யார் அங்கு முதலில் செல்வது என்று பார்க்கலாம், 187 00:09:56,014 --> 00:09:57,891 வரைபடம் பார்க்கும் முட்டாள் நண்பர்களே. 188 00:09:59,559 --> 00:10:03,146 மெர்கெல்கள் தயாராகும் போதே, நான் அங்கு சீக்கிரமாக போய் சேருவேன். 189 00:10:03,230 --> 00:10:04,356 ரொம்ப அழகாக உள்ளது. 190 00:10:04,439 --> 00:10:08,401 நள்ளிரவில் நாம் எங்கு போகிறோம், காட்டர்பின்? 191 00:10:08,485 --> 00:10:09,986 எனக்கு தூக்க கலக்கமாக இருக்கிறது. 192 00:10:10,070 --> 00:10:13,073 -ஹாரன் அடித்து என்னை எழுப்பு. -சரி. 193 00:10:14,074 --> 00:10:16,952 சரி, எழுந்துவிட்டேன். நாம் இங்கே என்ன செய்கிறோம்? 194 00:10:17,035 --> 00:10:21,331 சார், இதற்கு முன்பு தண்ணீரே இல்லாத இடத்தில் நான் தண்ணீரைக் கண்டேன். 195 00:10:21,414 --> 00:10:25,043 அப்படியென்றால் அங்கே முள்ளங்கி இருக்கும் என்று தோன்றுகிறது. 196 00:10:25,544 --> 00:10:27,045 பிரேக்கை அழுத்து. 197 00:10:27,671 --> 00:10:30,257 நன்றி. வாகனத்தை நான் ஓட்டியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். 198 00:10:30,340 --> 00:10:32,259 எந்த முள்ளங்கியைச் சொல்கிறாய்? 199 00:10:32,342 --> 00:10:36,221 முள்ளங்கிகளை நாம் அரைத்து நம் கட்டிடங்களுக்கு டூஸர் குச்சிகளாக மாற்றுவோமே அதுவா? 200 00:10:36,304 --> 00:10:37,973 ஆமாம். அந்த முள்ளங்கிகள் தான். 201 00:10:38,056 --> 00:10:39,432 அபத்தம். 202 00:10:39,516 --> 00:10:43,562 இங்கே ஒருபோதும் முள்ளங்கிகள் இருந்ததில்லை, அதுதான் உண்மை. 203 00:10:43,645 --> 00:10:45,313 ஐயோ, எனக்கு உண்மைகள் பிடிக்கும். ஓ! இன்னொன்று இருக்கிறது. 204 00:10:46,273 --> 00:10:49,359 எனக்கு அவற்றை எவ்வளவு பிடிக்கும் தெரியுமா? 205 00:10:49,442 --> 00:10:52,946 சார், புதிய தகவலின் அடிப்படையில் நமக்கு முள்ளங்கிகள் கிடைக்கும் என்பதில் 206 00:10:53,029 --> 00:10:55,282 மிகவும் உறுதியாக இருக்கிறேன். 207 00:10:55,365 --> 00:10:59,494 நான் சொல்வது தவறாக இருந்தால், டூஸர் பாணியில் மன்னிப்பு கேட்கிறேன். 208 00:11:00,412 --> 00:11:02,956 டூஸர் முறையிலா? 209 00:11:03,415 --> 00:11:04,833 நீ சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். 210 00:11:05,875 --> 00:11:08,211 போகும் வழியில் நான் பாடலை முணுமுணுத்தால் பிரச்சினையில்லையே? 211 00:11:08,712 --> 00:11:10,630 அற்புதம். வார்த்தைகள் தெரிந்தால் சேர்ந்து பாடு. 212 00:11:14,968 --> 00:11:17,012 இந்த இடம் உயிர்ப்பாக இருக்கிறதே. 213 00:11:18,430 --> 00:11:20,056 என்னால் இங்கே ஓவியம் தீட்ட முடியும். 214 00:11:21,099 --> 00:11:22,976 என்னால் இங்கே நடனமாட முடியும். 215 00:11:23,685 --> 00:11:25,061 நான் இங்கே குடியேறவா? 216 00:11:25,145 --> 00:11:27,022 இல்லை. நான் கொஞ்சம் ஆர்வமாகிவிட்டேன். 217 00:11:27,731 --> 00:11:30,901 ஆனால் என் நண்பர்கள் என்னை நம்பவில்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. 218 00:11:30,984 --> 00:11:32,110 அவர்கள் சொல்வது தவறு. 219 00:11:32,193 --> 00:11:38,033 அவர்கள் சொல்வது தவறு. அவர்கள் சொல்வது தவறு. அவர்கள் சொல்வது தவறு. 220 00:11:38,116 --> 00:11:41,453 சரி. இதுதான் சரியான வழி. 221 00:11:41,536 --> 00:11:46,458 சரியான வழி. சரியான வழி. சரியான வழி. 222 00:11:47,125 --> 00:11:49,169 எனக்கு இந்த இடம் பிடித்திருக்கிறது! 223 00:11:50,837 --> 00:11:51,963 பிடித்திருக்கிறது! 224 00:11:52,047 --> 00:11:56,218 பிடித்திருக்கிறது. பிடித்திருக்கிறது. பிடித்திருக்கிறது. 225 00:11:59,471 --> 00:12:02,891 எனக்கான பாதையை உருவாக்குகிறேன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்க மாட்டேன் 226 00:12:04,643 --> 00:12:08,438 இறுதியில் நான் சரியான பாதையை தேர்ந்தெடுத்துள்ளதாக தோன்றுகிறது 227 00:12:08,521 --> 00:12:10,982 முதல்முறையாக நான் உறுதியாக உள்ளேன் 228 00:12:11,066 --> 00:12:16,112 முதல்முறையாக, நான் எங்கு செல்ல வேண்டும் என்று எனக்குத் தெரிந்திருக்கிறது 229 00:12:16,196 --> 00:12:18,406 எங்கு செல்ல வேண்டும் என்று 230 00:12:20,825 --> 00:12:23,870 என் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை 231 00:12:26,122 --> 00:12:29,668 நான் சரியானதைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை 232 00:12:29,751 --> 00:12:31,753 முதல்முறையாக, தெளிவாக இருக்கிறேன் 233 00:12:32,337 --> 00:12:34,798 முதல்முறையாக, எனக்குத் தெரிந்திருக்கிறது 234 00:12:34,881 --> 00:12:36,883 நான் எங்கு செல்ல வேண்டும் என்று 235 00:12:37,467 --> 00:12:39,928 நான் எங்கு செல்ல வேண்டும் என்று 236 00:12:46,518 --> 00:12:48,436 நல்ல இருக்கைகளே, இதோ வருகிறோம். 237 00:12:48,520 --> 00:12:50,063 நெருங்கிவிட்டோம் என நினைக்கிறேன். 238 00:12:50,146 --> 00:12:51,940 ஆபத்தான சரிவை நெருங்குகிறோம் என்கிறது. 239 00:12:52,649 --> 00:12:55,652 ஆபத்தான சரிவா? அந்த வார்த்தையே எனக்கு பிடிக்கவில்லை. 240 00:12:57,779 --> 00:12:58,947 அதுதானே? 241 00:12:59,656 --> 00:13:00,782 ஆமாம். 242 00:13:00,865 --> 00:13:03,243 டூஸர்களுக்கு மட்டும் தான் அது ஆபத்தான சரிவு என்று கூறுகிறது. 243 00:13:04,786 --> 00:13:05,787 வருகிறேன். 244 00:13:07,122 --> 00:13:08,123 ஹேய், டூஸர்களே. 245 00:13:08,206 --> 00:13:10,166 அந்த டூஸர் சரிவால் மீண்டும் பிரச்சினை. 246 00:13:10,250 --> 00:13:13,545 -நீ மோசமாக காயமடையாதது, உன் அதிர்ஷ்டம். -மூன்று நிமிடங்களில் வேலைக்குத் திரும்பு. 247 00:13:13,628 --> 00:13:15,630 நான் கட்டவில்லை என்றால், பிறகு நான் யார்? 248 00:13:15,714 --> 00:13:18,091 மேடு பள்ளமான பயணம். இதோ. 249 00:13:22,470 --> 00:13:23,680 என்ன ஆச்சு, வெம்ப்ளே? 250 00:13:23,763 --> 00:13:26,099 மோகீயைப் பற்றி கவலையாக உள்ளது. 251 00:13:26,641 --> 00:13:28,977 உனக்கு மோகீயைப் பற்றித் தெரியும். தனக்கான பாதையில் அவள் செல்கிறாள். 252 00:13:29,060 --> 00:13:32,063 ஹே, அதைப்பற்றி மாட் மாமா எனக்கு ஒரு தபால் அனுப்பியிருக்கிறார். 253 00:13:32,147 --> 00:13:34,149 அதை வாசித்து காண்பித்தால், உனக்கு பரவாயில்லையா? 254 00:13:35,150 --> 00:13:37,319 உன் நட்பு எனக்கு எப்போதுமே துணையாக இருக்கிறது. 255 00:13:38,111 --> 00:13:39,696 -உன் நட்பும் தான். -இல்லை, உன் நட்பு. 256 00:13:39,779 --> 00:13:42,449 -இல்லை, உன்னுடையது. -இல்லை, இல்லை. உன்னுடையது. 257 00:13:42,532 --> 00:13:44,534 -உன்னுடையது. -சரி. 258 00:13:44,618 --> 00:13:45,619 இல்லை, உன்னுடையது! 259 00:13:45,702 --> 00:13:49,289 அனைவரும் நடந்துகொண்டே பேசுங்கள். நடந்துகொண்டே பேசுங்கள். 260 00:13:51,082 --> 00:13:55,670 சரி. "அன்புள்ள மருமகன் கோபோ மற்றும் நண்பர்களே..." உங்களைத்தான் சொல்கிறார். 261 00:13:56,213 --> 00:13:59,841 உறைய வைக்கும் ஒன்றால் அண்மையில் நான் திகைத்துவிட்டேன்: 262 00:13:59,925 --> 00:14:03,220 அறிவற்ற உயிரினங்கள் "சில்லி சிலிப்பி" எனும் முடிவில்லாத வட்டத்தில் 263 00:14:03,303 --> 00:14:06,181 நகர வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். 264 00:14:06,264 --> 00:14:10,143 கால்களில் கத்திகளுடன் பிறந்தது, அவர்களின் குற்றமா? 265 00:14:10,727 --> 00:14:13,021 பாவப்பட்ட உயிரினங்கள் பயத்தில் கூச்சலிட்டன. 266 00:14:14,481 --> 00:14:17,317 அதிர்ஷ்டவசமாக, இந்த பாவப்பட்ட உயிரினங்களைக் காப்பாற்ற நான் அங்கிருந்தேன். 267 00:14:17,859 --> 00:14:19,527 இதைப் பார், என்னுடைய நண்பா. 268 00:14:22,364 --> 00:14:26,159 நிதானமாக இருங்கள், அறிவற்ற உயிரினங்களே! அனைவரும் ஒரே வழியில் செல்ல வேண்டியதில்லை! 269 00:14:27,535 --> 00:14:30,664 நீ என்னைப் பார்த்திருக்க வேண்டும், கோபோ. நான் மெதுவாக, கலைநயத்தோடு நகர்ந்தேன். 270 00:14:32,332 --> 00:14:34,501 அனைவரும் என்னைப் பாராட்டினார்கள்... 271 00:14:35,502 --> 00:14:38,547 அவர்கள் என்னை பரிசுப் பெட்டியில் வைத்தார்கள். 272 00:14:38,630 --> 00:14:42,968 நான் அவர்களை விடுவித்ததாக நினைத்தேன், பிறகு அவர்களின் கொடூரமான சிறைப்பிடிப்பாளன் வந்தான். 273 00:14:43,051 --> 00:14:45,095 ஒரு பெரிய வழுக்கும் அசுரன். 274 00:14:45,887 --> 00:14:48,098 மிருகத்தை நேருக்கு நேராக சந்திக்க நான் தயங்கவில்லை. 275 00:14:48,181 --> 00:14:49,391 நான் வருகிறேன்! அட! ஓ! 276 00:14:51,101 --> 00:14:54,354 அந்த மிருகத்தை தனி ஆளாக நான் அடக்கினேன். 277 00:14:54,437 --> 00:14:56,690 அதனால் இனி கட்டுப்படுத்த முடியாது என்பதை 278 00:14:56,773 --> 00:14:58,692 அறிவற்ற உயிரினங்களுக்கு காட்ட, நான் வெற்றி நடைபோட்டேன். 279 00:14:58,775 --> 00:15:01,236 இப்போது ஒன்றும் பிரச்சினை இல்லை. கவலைப்படாதீர். 280 00:15:02,404 --> 00:15:04,155 அவர்களுக்கு என்னைப் பிடித்தது. 281 00:15:04,239 --> 00:15:08,910 எனது துணிச்சலின் அடையாளமாக, சில்லி ஸ்லிப்பியின் ஒரு பகுதியை உனக்கு அனுப்புகிறேன். 282 00:15:11,079 --> 00:15:13,873 "தனக்கான வழியில் செல்ல பயப்படாதவர்களுக்கு 283 00:15:13,957 --> 00:15:16,334 அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும் என்பதை இது நினைவூட்டட்டும். 284 00:15:16,418 --> 00:15:18,587 அன்புடன், உன் டிராவலிங் மாட் மாமா. 285 00:15:18,670 --> 00:15:23,133 பி.கு. எனக்காக நீ ஏங்குவாய் என்று தெரியும்." ம். "கூடுதல் பி.கு. நானும் எனக்காக ஏங்குகிறேன்." 286 00:15:23,633 --> 00:15:26,011 அடடே. அந்த சில்லி ஸ்லிப்பியைப் பார்க்க ஆவலாக உள்ளேன், வெம்ப்ளே. 287 00:15:26,094 --> 00:15:27,095 நானும் தான். 288 00:15:32,017 --> 00:15:33,393 எங்காவது தொலைந்து போயிருக்கும். 289 00:15:34,102 --> 00:15:38,440 ஆமாம். சரி, நான் சொன்னது போல, மோகீ தனக்கான வழியில் செல்கிறாள், வெம்ப்ளே. 290 00:15:41,526 --> 00:15:43,737 நான் இங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். 291 00:15:43,820 --> 00:15:47,824 ஆனால் நிலவொளியில் மெர்கெல் இடம்பெயர்வதைப் பார்ப்பதை நான் தவறவிடக்கூடாது. 292 00:15:47,908 --> 00:15:52,829 தவற விடு. தவற விடு. 293 00:15:53,538 --> 00:15:56,166 சரி. வந்து, நான் தவறவிட விரும்பவில்லை. 294 00:15:56,249 --> 00:16:01,004 விரும்பவில்லை. விரும்பவில்லை. 295 00:16:01,671 --> 00:16:03,798 சரி, சரி. சரி. 296 00:16:04,925 --> 00:16:07,802 எனக்கு அது பிடிக்கவில்லை. கொஞ்சம் வருத்தமாக உள்ளது. 297 00:16:07,886 --> 00:16:10,639 வருத்தம். வருத்தம். 298 00:16:12,641 --> 00:16:15,477 அந்த வரைபடம் சரியான வழியைத்தான் காட்டியதோ என தோன்றுகிறது. உம். 299 00:16:16,102 --> 00:16:17,312 ஹேய், ஒன்று சொல்லவா? 300 00:16:17,395 --> 00:16:20,023 நான் இங்கிருந்து வெளியே போகப் போகிறேன். 301 00:16:20,106 --> 00:16:22,734 இங்கிருந்து வெளியே போ. இங்கிருந்து வெளியே போ. 302 00:16:22,817 --> 00:16:25,862 -சரி. எந்தப் பக்கம் போக வேண்டும்? -எந்தப் பக்கம்? எந்தப் பக்கம்? 303 00:16:25,946 --> 00:16:30,367 ஆனால் இப்போது நான் திரும்பிப் பார்க்கும் போது பாதை மாறிவிட்டது 304 00:16:30,450 --> 00:16:31,618 அது மாறிவிட்டது 305 00:16:31,701 --> 00:16:34,120 நான் சரியான முடிவைத்தான் எடுத்தேனா? 306 00:16:34,204 --> 00:16:36,748 -மறுபரிசீலனை செய்கிறேன் -ஓ, இல்லை! 307 00:16:36,831 --> 00:16:39,584 -இல்லை, எனக்கு உறுதியாகத் தெரியவில்லை -உறுதியாகத் தெரியவில்லை 308 00:16:39,668 --> 00:16:41,920 -எதைப் பற்றியுமே -எதைப் பற்றியுமே 309 00:16:42,003 --> 00:16:45,757 நான் சரியான முடிவைத்தான் எடுத்தேனா? மறுபரிசீலனை செய்கிறேன் 310 00:16:45,840 --> 00:16:46,841 நீ என்ன செய்வாய்? 311 00:16:46,925 --> 00:16:49,219 எனக்குத் தெரியவில்லை எனக்குத் தெரியவில்லை 312 00:16:49,302 --> 00:16:51,805 நான் எங்கு செல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை 313 00:16:51,888 --> 00:16:52,931 நீ எங்கே செல்வாய்? 314 00:16:53,014 --> 00:16:56,059 -இதற்கு மேல் நான் எங்கு செல்வது -நீ எங்கே செல்வாய்? 315 00:16:56,142 --> 00:16:57,435 -எனக்குத் தெரியவில்லை -தெரியவே இல்லை 316 00:16:57,519 --> 00:16:58,520 -எனக்குத் தெரியவில்லை -தெரியவே இல்லை 317 00:16:58,603 --> 00:16:59,771 -எனக்குத் தெரியவில்லை -தெரியவே இல்லை 318 00:16:59,854 --> 00:17:01,398 -நான் எங்கு செல்வது -நீ எங்கே செல்வாய்? 319 00:17:01,481 --> 00:17:04,025 இதற்கு மேல் நான் எங்கு செல்வது 320 00:17:05,443 --> 00:17:06,486 இல்லை! 321 00:17:06,570 --> 00:17:08,112 இல்லை! 322 00:17:08,196 --> 00:17:09,488 இது சரியில்லை. 323 00:17:09,573 --> 00:17:11,741 இது சரியே இல்லை. 324 00:17:11,824 --> 00:17:15,078 -நான் தொலைந்துவிட்டேனோ? -தொலைந்துவிட்டேன். தொலைந்துவிட்டேன். 325 00:17:15,160 --> 00:17:18,790 -நான் மாட்டிக்கொண்டேன். -மாட்டிக்கொண்டேன். மாட்டிக்கொண்டேன். 326 00:17:19,416 --> 00:17:21,418 உதவி! 327 00:17:22,878 --> 00:17:27,716 உண்மையாகவா? அதை எதிரொலிக்கவில்லையே? ஒருமுறை என்னால் உபயோகிக்க முடியாதா? 328 00:17:27,799 --> 00:17:29,009 சரி. 329 00:17:31,678 --> 00:17:33,597 கிட்டத்தட்ட நெருங்கிவிட்டோம். 330 00:17:33,680 --> 00:17:36,516 ஆம், இப்பவும் நல்ல இருக்கை இருக்கும் என நினைக்கிறாயா? அல்லது... 331 00:17:36,600 --> 00:17:39,352 இருக்கையைப் பற்றி பேசியது போதும்! 332 00:17:39,436 --> 00:17:41,521 உதவி! 333 00:17:42,689 --> 00:17:45,859 வா, வெம்ப்ளே. நாம் போகலாம். 334 00:17:45,942 --> 00:17:48,361 ஆனால் எனக்கு ஏதோ சத்தம் கேட்டது. 335 00:17:48,445 --> 00:17:50,655 சரி. அதெல்லாம் எதுவுமில்லை. ஆழமாக மூச்சுவிடு. 336 00:17:51,156 --> 00:17:52,908 மூச்சை இழுத்து விடு. 337 00:17:52,991 --> 00:17:56,536 வேறு எதையாவது யோசி. இரவு முழுவதும் நீ சொன்னதெல்லாம் சரிதான். 338 00:17:56,620 --> 00:18:00,624 -இரவு முழுவதும் நீ சொன்னதெல்லாம் சரிதான். -ஆமாம்! 339 00:18:01,249 --> 00:18:03,001 ஆமாம். 340 00:18:03,084 --> 00:18:05,212 ஆனால் அது சரியா? 341 00:18:05,295 --> 00:18:08,173 ஏனென்றால் நான் உண்மையான தகவலையும் நிராகரித்தேன், அது என்னை 342 00:18:08,256 --> 00:18:11,676 எதிரொலி கூடத்திற்கு கொண்டுவந்துவிட்டது, இப்போது பிரச்சினையில் உள்ளேன். 343 00:18:12,677 --> 00:18:14,554 நீ சொல்வது சரிதான். 344 00:18:15,180 --> 00:18:19,643 ஒருவேளை உள்ளுணர்வை பின்பற்றவும், உண்மையை பின்பற்றவும் ஏற்ற காலம் இருக்கும் போல. 345 00:18:19,726 --> 00:18:21,144 அது சரிதான். 346 00:18:21,228 --> 00:18:23,521 நான் நினைப்பது நிச்சயம் சரிதான் என நினைத்ததால், 347 00:18:23,605 --> 00:18:26,441 அது தவறு என்று எனக்கு உணர்த்தியவற்றை நான் நிராகரித்துவிட்டேன், 348 00:18:26,524 --> 00:18:27,525 உண்மையான விஷயங்களைக் கூட. 349 00:18:27,609 --> 00:18:29,194 அதே தான்! 350 00:18:29,277 --> 00:18:33,073 இப்போது நான் தொலைந்துவிட்டேன், மாட்டிக்கொண்டேன் இனி என் நண்பர்களைப் பார்க்காமலும் போகலாம். 351 00:18:34,532 --> 00:18:36,701 நீங்கள் எல்லோரும் எனக்கு உதவவில்லை என்றால். 352 00:18:36,785 --> 00:18:39,579 -சரி. -நிச்சயமாக. 353 00:18:39,663 --> 00:18:41,873 உனக்கு இப்போது புரிந்துவிட்டது, இதுதான் எங்களுக்குத் தேவை. 354 00:18:43,333 --> 00:18:47,671 -உதவி! -உதவி! 355 00:18:47,754 --> 00:18:49,214 உதவி! 356 00:18:49,965 --> 00:18:51,591 அது மோகீயின் குரல்! கேள்! 357 00:18:53,468 --> 00:18:55,303 மோகீ? ஐயோ! 358 00:18:55,387 --> 00:18:57,013 இந்த பாறைகளை அகற்றுவோம். 359 00:18:57,097 --> 00:18:58,640 உடனே வந்துவிடுவோம்! 360 00:18:58,723 --> 00:19:00,016 -ஜாக்கிரதை! -உடையுங்கள்! 361 00:19:00,100 --> 00:19:02,060 -உதவி! -போ, போ! 362 00:19:02,143 --> 00:19:04,145 -மோகீ! -மோகீ! 363 00:19:04,229 --> 00:19:06,273 உன்னை கண்டுபிடித்துவிட்டோம், மோகீ. 364 00:19:06,356 --> 00:19:09,776 எனக்காக திரும்ப வந்துள்ளீர்கள். ஆனால் நானோ பிடிவாதமாக இருந்துவிட்டேன். 365 00:19:09,859 --> 00:19:12,988 நீங்கள் என்னிடம் உண்மையை சொல்ல முயற்சித்தீர்கள், ஆனால் நான்தான் எதையும் கேட்கவில்லை. 366 00:19:13,071 --> 00:19:15,156 எதிரொலி கூடங்கள், நாம் செய்வது சரி என உணர வைக்கும், 367 00:19:15,240 --> 00:19:17,951 ஆனால் நாம் செய்வது தவறு என உணரும் போது, அதில் சிக்கிக்கொள்வோம். 368 00:19:18,034 --> 00:19:19,578 -அதற்கு பிறகு... -மோகீ. மோகீ. 369 00:19:19,661 --> 00:19:21,913 நான் இதைப் பற்றி கண்டிப்பாக பேச விரும்புகிறேன், 370 00:19:21,997 --> 00:19:26,960 ஆனால், நாம் விரைவாக போகவில்லை என்றால், நம்மால் மெர்கெல்களைப் பார்க்க முடியாது. 371 00:19:27,043 --> 00:19:28,920 -சரி. -நாங்கள் உனக்கு உதவுகிறோம். 372 00:19:29,004 --> 00:19:30,589 -இதோ. -என் கையைப் பிடித்துக்கொள். 373 00:19:30,672 --> 00:19:35,635 காட்டர்பின், உன் டூஸர் பாணியில் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பாய் என நினைக்கிறேன் 374 00:19:35,719 --> 00:19:39,431 ஏனென்றால் அங்கு நிச்சயமாக... 375 00:19:40,390 --> 00:19:42,517 அங்கே முள்ளங்கிகள் உள்ளன. 376 00:19:42,601 --> 00:19:44,144 ஆம்! எனக்குத் தெரியும்! 377 00:19:44,227 --> 00:19:47,022 அருமை. அவை அழகாக இருக்கின்றன அல்லவா? 378 00:19:47,647 --> 00:19:51,735 டூஸர் குச்சிகளை உருவாக்க முள்ளங்கியை எப்படி நன்றாக பொடியாக அரைக்க வேண்டும் என 379 00:19:51,818 --> 00:19:56,072 எனக்குத் தெரிந்திருக்கும் வரை, அவை வளரும் ஒவ்வொரு இடமும் எனக்குத் தெரியும் என்று நினைத்தேன். 380 00:19:56,156 --> 00:20:01,119 நம் பழைய அனுமானங்களுடன் புதிய உண்மைகளை சேர்க்க வேண்டும் என்பதை கற்றுத் தந்துள்ளாய், காட்டர்பின். 381 00:20:01,202 --> 00:20:04,664 இப்போது, நான்தான் உன்னிடம் டூஸர் பாணியில் மன்னிப்பு கேட்க வேண்டும். 382 00:20:04,748 --> 00:20:07,959 நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை, சரியா? 383 00:20:08,043 --> 00:20:09,669 என்னை மன்னித்துவிடு! 384 00:20:10,629 --> 00:20:12,756 நன்றி, கட்டிடக்கலைஞரே. 385 00:20:12,839 --> 00:20:15,759 ஓ, நண்பா. பரவாயில்லை. 386 00:20:17,135 --> 00:20:18,762 எல்லோரும் கிளம்புகிறார்கள். 387 00:20:21,598 --> 00:20:23,225 நாம் அதை தவறவிட்டுவிட்டோம். 388 00:20:23,308 --> 00:20:26,353 மிகச் சிறந்த விஷயம்! எங்கே சென்றீர்கள்? 389 00:20:26,436 --> 00:20:28,313 உங்களுக்காக முன் வரிசை இருக்கைகளை ஒதுக்கி வைத்திருந்தேன். 390 00:20:28,396 --> 00:20:30,190 இருக்கைகள்! 391 00:20:30,857 --> 00:20:33,151 தயவுசெய்து, என்னை மன்னித்துவிடுங்கள். 392 00:20:33,235 --> 00:20:35,904 பரவாயில்லை, மோகீ. மோசமான விதியை தவிர்க்க முடியாது. 393 00:20:35,987 --> 00:20:39,074 எனவே இவை அனைத்தும் இறுதியில் அர்த்தமற்றவை. 394 00:20:39,157 --> 00:20:41,159 அந்த மெர்கெல் ராணி, 395 00:20:41,243 --> 00:20:43,995 அவள் என்னை மீண்டும் நூறு வயதினன் போல உணரவைக்கிறாள். 396 00:20:44,829 --> 00:20:45,997 அவள் மிகவும் அழகாக இருக்கிறாள். 397 00:20:46,081 --> 00:20:48,875 ஆமாம். நிகழ்ச்சியை ரசித்தீர்களா, இளம் ப்ராகெல்களே? 398 00:20:48,959 --> 00:20:50,502 இல்லை. 399 00:20:50,585 --> 00:20:52,212 அதை தவறவிட்டதாக சொல்லாதீர்கள். 400 00:20:52,295 --> 00:20:55,215 -அதை தவறவிட்டுவிட்டோம். -அப்படி சொல்லக் கூடாது என்றேனே! 401 00:20:57,467 --> 00:20:59,261 வீட்டிற்கு போகலாம். 402 00:20:59,970 --> 00:21:03,807 அது ஒரு அவமானம். இது மிகவும் அரிதாக நடக்கும். 403 00:21:03,890 --> 00:21:05,183 அந்த குமிழிகளைப் பாருங்கள். 404 00:21:06,059 --> 00:21:07,519 அந்த குமிழிகளைப் பாருங்கள்! 405 00:21:07,602 --> 00:21:09,104 -என்ன? -என்ன? 406 00:21:09,187 --> 00:21:11,856 ஏதோ அதிசயமான ஒன்று நடக்கப்போகிறது என எனக்குத் தோன்றுகிறது... 407 00:21:13,108 --> 00:21:16,194 மீண்டும் என் உள்ளுணர்வை வைத்து சொல்லிவிட்டேன். அங்கே ஒன்றுமிருக்காது. 408 00:21:16,278 --> 00:21:18,488 இங்கு ஏதோ நடக்கிறது. 409 00:21:18,572 --> 00:21:19,573 ஆம். 410 00:21:19,656 --> 00:21:22,826 ஃப்ராகெல் பற்றிய உண்மைகளின் தொகுப்பில் இது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. 411 00:21:24,160 --> 00:21:26,538 -இதோ அவள் வருகிறாள். -ஆஹா. 412 00:21:26,621 --> 00:21:28,915 என் ராணியே, நீ திரும்பி வந்துவிட்டாய். 413 00:21:29,624 --> 00:21:33,795 ஆம், வந்துவிட்டேன். இது முக்கிய நிகழ்ச்சிக்கான நேரமாயிற்றே. 414 00:21:33,879 --> 00:21:37,299 அதோடு நான் உன்னை பற்றி பேசவில்லை, நரை முடிக்கொண்ட வசீகரனே. 415 00:21:38,091 --> 00:21:39,426 என்னைப் பிடி, ஹென்ச்சி. 416 00:21:40,886 --> 00:21:44,389 இது என்னவாக இருந்தாலும், இதை இதற்கு முன்னர் எந்த ப்ராகெலும் பார்த்ததில்லை. 417 00:21:44,472 --> 00:21:47,934 இடம்பெயர்வு நடனத்திற்குப் பிறகு எல்லோரும் கிளம்பிவிடுவர். 418 00:21:50,061 --> 00:21:52,314 நாம் இதை ஹெர்கெல் என்று அழைப்போம். 419 00:21:55,442 --> 00:21:59,738 இதோ டெர்கெல் வருகிறது, ஃபெர்கெல் மற்றும் பெர்கெல் கூட, 420 00:21:59,821 --> 00:22:01,323 லேரியும் வருகிறது. 421 00:22:03,491 --> 00:22:04,784 அற்புதம். 422 00:22:04,868 --> 00:22:07,537 எனவே நிலவொளியில் மெர்கெல் இடம்பெயர்தல் என்பது உண்மையில்... 423 00:22:07,621 --> 00:22:10,874 புதிய தலைமுறையின் பிறப்பு. ஆம். 424 00:22:10,957 --> 00:22:13,877 நீல நிலவின் ஒளியில், 425 00:22:13,960 --> 00:22:15,879 நாம் புதிய அன்பையும், 426 00:22:15,962 --> 00:22:19,841 புதிய கதைகளையும், புதிய வலிமையையும் மற்றும் புதிய அழகையும் வரவேற்கிறோம். 427 00:22:21,468 --> 00:22:24,554 நிலவே, நிலவே, மந்திர ஒளியே 428 00:22:24,638 --> 00:22:27,807 இன்றிரவு வந்து எங்கள் வாழ்வைத் தொடு 429 00:22:27,891 --> 00:22:31,102 விரைவாக, ஆழமாகவும், பிரகாசமாகவும் 430 00:22:31,186 --> 00:22:34,856 இன்றிரவின் இரவில் நிம்மதியான உறக்கத்தை உறங்க 431 00:22:40,987 --> 00:22:47,452 இப்போதே எங்களிடம் வா எங்களிடம் வா 432 00:22:47,535 --> 00:22:53,750 இப்போதே எங்களிடம் வா எங்களிடம் வா 433 00:22:53,833 --> 00:22:59,839 இப்போதே எங்கள் மீது ஒளிர் எங்கள் மீது ஒளிர் 434 00:23:00,382 --> 00:23:03,343 இப்போதே எங்கள் மீது ஒளிர் 435 00:23:03,426 --> 00:23:09,349 இப்போதே எங்கள் மீது ஒளிர் 436 00:23:14,896 --> 00:23:16,940 வா, வா, வா 437 00:23:22,487 --> 00:23:23,863 வா 438 00:23:24,781 --> 00:23:28,118 உன்னால் தான் எங்களால் இதைப் பார்க்க முடிந்தது, மோகீ ப்ராகெல். 439 00:23:28,201 --> 00:23:31,997 ஃப்ராகெல் பற்றிய உண்மைகளின் தொகுப்பில் இதை சேர்த்துவிடு, ஹென்ச்சி. 440 00:23:32,080 --> 00:23:33,290 இப்போதே செய்கிறேன். 441 00:23:34,374 --> 00:23:35,792 ஒவ்வொரு முறையும். 442 00:23:35,875 --> 00:23:38,628 உண்மையாக, இந்த தருணத்தில், தவறு என்மீது தான். 443 00:23:43,341 --> 00:23:45,552 சரி, உண்மைகள் முக்கியமானவை என்று புரிகிறது, மோக், 444 00:23:45,635 --> 00:23:47,804 ஆனால் நாங்கள் பலர் தவறவிடும் விஷயங்களை நீ கவனிக்கிறாய். 445 00:23:47,888 --> 00:23:50,015 இதையும் புறக்கணித்துவிடாதே, சரியா? 446 00:23:50,098 --> 00:23:51,892 நன்றி, கோபோ. புறக்கணிக்கமாட்டேன். 447 00:23:54,060 --> 00:23:56,146 ஹே, இப்போது யாருக்கு சிறந்த இருக்கைகள் கிடைத்தன? 448 00:23:57,147 --> 00:24:00,150 நிலவே, ஆம் 449 00:24:01,026 --> 00:24:02,986 உன் ஒளி 450 00:24:03,653 --> 00:24:05,947 வந்து, ஒளிர் 451 00:24:06,990 --> 00:24:09,409 இப்போதே எங்கள் மீது ஒளிர் 452 00:24:11,411 --> 00:24:14,414 இப்போதே எங்கள் மீது ஒளிர் 453 00:24:14,497 --> 00:24:18,668 எங்கள் மீது ஒளிர் 454 00:24:19,836 --> 00:24:23,089 இப்போதே 455 00:24:24,466 --> 00:24:25,842 ஆம்! 456 00:24:27,969 --> 00:24:29,721 நம்பமுடியாத இரவு, அல்லவா, வெம்ப்ளே? 457 00:24:31,598 --> 00:24:32,849 வெம்ப்ளே? 458 00:24:33,934 --> 00:24:34,935 வெம்ப்ளே. 459 00:24:39,606 --> 00:24:42,108 ஏதோ ஒரு பெரிய விஷயம் நடக்கிறது. எழுந்திரு, ஸ்புராக்கெட். 460 00:24:43,443 --> 00:24:45,362 நாய்களுக்கான புதிய தின்பண்டம், ஸ்புராக்கெட். 461 00:24:48,073 --> 00:24:49,699 தின்பண்டம் என்று பொய் சொன்னதற்கு மன்னித்துவிடு. 462 00:24:50,200 --> 00:24:51,326 இது நன்றாக இல்லை. 463 00:24:51,785 --> 00:24:55,121 ஆமை குஞ்சுகள் பொரிக்கின்றன. நீ அதை தவறவிடக் கூடாது என நினைத்தேன். 464 00:24:55,205 --> 00:24:57,290 அந்த ஆமை குஞ்சுகள் போவதைப் பாரேன்! 465 00:24:57,374 --> 00:25:00,252 புதிய தலைமுறையினரின் பிறப்பை நாம் காண்பதை உன்னால் நம்ப முடிகிறதா? 466 00:25:03,338 --> 00:25:05,674 எனக்கு இன்னும் சத்தம் கேட்கிறது. 467 00:26:41,102 --> 00:26:43,104 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்