1 00:00:13,180 --> 00:00:16,475 மிட் டவுன் நியூயார்க் நகரம் 2 00:00:27,819 --> 00:00:29,655 பார்க் மேடிசன் ஹோட்டல் 3 00:01:09,903 --> 00:01:10,904 இல்லை! 4 00:01:46,940 --> 00:01:51,445 ஃஎப்டி-6 இஜெட்என்-டி எஃப்எல்-15 கேமரா 3 5 00:01:51,528 --> 00:01:54,072 03-16-21 டி4 15.சி3 செவ்வாய்: 02:00:05 6 00:02:04,166 --> 00:02:05,876 அப்லோடிங் 7 00:02:05,959 --> 00:02:07,669 #ஆள்கடத்தல் #சூட்கேஸ் #ராயல்மாஸ்க்குகள் 8 00:02:07,753 --> 00:02:08,919 அப்லோட் முடிவடைந்துவிட்டது 9 00:02:09,002 --> 00:02:10,464 ஹோட்டல் சூட்கேஸ் ஆள்கடத்தல்!! (முழுவதும்) 10 00:02:41,119 --> 00:02:43,789 'ஃபால்ஸ் ஃபிளாக்' எனும் தொடரை அடிப்படையாகக் கொண்டது 11 00:03:13,360 --> 00:03:16,530 புதிய குறுக்குத் தெரு, தென் கிழக்கு லண்டன் 12 00:03:44,433 --> 00:03:48,061 நீ அம்மாவின் அறைக்குள் வர அனுமதியில்லை. நிஜமா, அவர் உன்னை பார்த்தால்... 13 00:03:48,145 --> 00:03:50,522 -உன் மேல பழி சுமத்திடுவேன். -அப்போ அதுல மாற்றமே இல்லை. 14 00:03:51,148 --> 00:03:52,608 நாம போட்டுப் பார்க்கலாமா? 15 00:03:52,691 --> 00:03:56,195 முதலில், எனக்கு ஏழு வயதில்லை. அதோடு, இரண்டாவதாக, என் கையில் பட்டியலே இருக்கு. 16 00:03:56,278 --> 00:03:57,988 -என்ன? -பட்டியல், நேரத்தோடு. 17 00:03:58,071 --> 00:03:59,865 நீ இப்போ குளித்துக்கொண்டிருக்கணும். நாம பின் தங்கியிருக்கிறோம். 18 00:03:59,948 --> 00:04:01,658 நீ தூங்கப்போவதைப் பார்த்தபடி நான் ஒரு மணி நேரத்தை கழித்தேன். 19 00:04:01,742 --> 00:04:03,202 -அது உனக்கு ஜெட் லேக் இருப்பதால். -இல்லை. 20 00:04:03,285 --> 00:04:05,078 அதற்குப் பெயர், இரவெல்லாம், உன் குத்தித் தீர்க்கும் தங்கையால் 21 00:04:05,162 --> 00:04:06,663 கட்டிலில் இருந்து தள்ளப்பட்டேன் என்பதே. 22 00:04:06,747 --> 00:04:09,333 நியூ யார்க்கிலிருந்து எனக்கு எதையும் கொண்டு வரவில்லை, இல்லையா? 23 00:04:09,416 --> 00:04:11,460 -உன் நிச்சயதார்த்த மோதிரம் எங்கே? -தெரியாது. 24 00:04:11,543 --> 00:04:14,546 ஒருவேளை அவர் அதை மீண்டும் அணிந்துள்ளாரோ. வாங்க. நமக்கு அதையெல்லாம் கடந்து செல்லணும். 25 00:04:15,380 --> 00:04:16,714 இங்கே நீ என்ன செய்கிறாய்? 26 00:04:16,798 --> 00:04:20,469 -அம்மா, உன் நிச்சயதார்த்த மோதிரம் எங்கே? -நீ உன் திருமணத்தை கவனி. 27 00:04:20,552 --> 00:04:21,845 இப்போ என்ன மணி தெரியுமா உனக்கு? 28 00:04:21,928 --> 00:04:24,056 -பார்த்தாயா? -கொஞ்சம் பெரியவர்களா நடந்து கொள்ளுங்க. 29 00:04:24,139 --> 00:04:25,641 திரும்பி அதைப்பத்தி வாக்குவாதம் ஆரம்பிப்பதற்கு முன்னாடி 30 00:04:25,724 --> 00:04:27,601 ஒருத்தர் குளிக்கப் போங்க. 31 00:04:34,483 --> 00:04:35,734 ஹே! 32 00:04:36,360 --> 00:04:37,361 என்னப்பா! 33 00:04:38,070 --> 00:04:39,738 மன்னிக்கணும். நன்றி. 34 00:04:41,031 --> 00:04:44,117 நான் என் சூட்கேஸை ஜிப் செய்வேன் 35 00:04:44,201 --> 00:04:47,412 வா. டெய்ஸி, சீக்கிரம் வா. 36 00:04:47,496 --> 00:04:50,415 -நீங்க இதை பார்த்திருக்கீங்களா? -நம்ம இரண்டு பேருக்குமே லேட் ஆகிவிட்டது. வா வா. 37 00:04:50,499 --> 00:04:54,795 அது அரச குடும்பத்தைப் பத்தி. சரி, அரசி. சார்ல்ஸ் இளவரசர், வில்லியம், கேட். 38 00:04:54,878 --> 00:04:57,339 -அருவருப்பாக இருக்கு! -என் கைப்பேசியை திரும்பித் தாங்களேன், தயவுசெய்து? 39 00:04:58,340 --> 00:05:00,676 நியூ யார்க்கிலிருந்து எனக்கு புதிய கைப்பேசி வாங்கி வருவீர்கள் என்று நினைத்தேன். 40 00:05:00,759 --> 00:05:02,511 -உனக்கு ஒரு பரிசு கொண்டு வந்திருக்கேன். -ஒரு ஸ்னோ குளோப் வாங்கி வந்திருப்பாய். 41 00:05:02,594 --> 00:05:03,762 ஆக்ஸ்ஃபோர்ட் நகரம் 42 00:05:03,846 --> 00:05:07,099 அது ரொம்ப நல்லது. ஆனால் இந்த டிஜிடல் யுகத்திலே, ஒரு ஸ்னோ குளோபை வைத்து 43 00:05:07,182 --> 00:05:08,183 ஒண்ணும் செய்ய முடியாது. 44 00:05:08,267 --> 00:05:11,061 பாரு, நீ கிட்டதிட்ட என் உயரம் வந்துட்டன்னு தெரியும், ஆனால் உனக்கு 11 வயதாகிறது. 45 00:05:11,144 --> 00:05:13,021 -சரியாகச் சொன்னீர்கள். -அதே தான் சொல்கிறேன்! 46 00:05:14,773 --> 00:05:17,651 உன் அப்பாவோடு இருந்த வாரக்கடைசி நன்றாக இருந்ததா? என்னை நினைத்துக் கொண்டாயா? 47 00:05:17,734 --> 00:05:19,695 எனக்கு நிறைய வீட்டுப்பாடம் இருந்தது, அதனால்... 48 00:05:21,154 --> 00:05:22,573 ஆம், உங்களை நினைத்துக் கொண்டேன். 49 00:05:24,908 --> 00:05:25,951 என்ன? 50 00:05:26,869 --> 00:05:29,454 -என் வீட்டுப்பாடத்தை மறந்து வைத்துவிட்டேன். -நீ சொல்வது ஜோக்குன்னா, சரிப்பு வரலை. 51 00:05:29,538 --> 00:05:32,207 அது ஜோக்கில்லைன்னா? அப்பவும் சரிப்பு வரலையில்ல? 52 00:05:34,042 --> 00:05:35,043 சரி. 53 00:05:36,753 --> 00:05:40,257 சரி, கவலைப்படாதே. நீ போ. நான் உன் டீச்சருக்கு ஈமெய்லோ ஏதோ அனுப்பறேன். 54 00:05:40,340 --> 00:05:41,800 -சரியா? சமாளிச்சிடு. -சரி. 55 00:05:42,759 --> 00:05:43,927 நன்றி. 56 00:05:44,011 --> 00:05:46,930 செயின்ட் ஹென்றி கத்தோலிக்க பள்ளி பிரதான வாயில் கேமரா #05 57 00:05:49,600 --> 00:05:51,977 -நான் உங்கள் பிரிவை உணர்ந்தேன். -போய் வா. 58 00:06:16,960 --> 00:06:19,004 தெற்கு சந்தை கேமராஐடி: 4ஏ காலை 08:37 18/03/21 59 00:06:31,016 --> 00:06:34,478 சவுதால், கிரேட்டர் லண்டன் 60 00:06:35,354 --> 00:06:36,355 ச்சே. 61 00:06:36,438 --> 00:06:39,358 -யோ. உசேய்ன் போல்ட். -ஆம், நீ போயிருப்பன்னு நினைச்சேன். 62 00:06:39,441 --> 00:06:40,859 ஆமாம். நினைச்சிருப்ப. 63 00:06:41,527 --> 00:06:43,820 -மதிய உணவு. -சீயர்ஸ், சகோதரி. 64 00:06:43,904 --> 00:06:45,113 நன்றாக ஓடினாயா? 65 00:06:45,989 --> 00:06:48,825 அப்பா என்னை பிடித்துக்கொண்டார். நீ இன்று அவருடன் இருப்பாயா என்று கேட்டார். 66 00:06:48,909 --> 00:06:50,619 நான் கார்ப்பெட் வியாபாரி இல்லை. 67 00:06:50,702 --> 00:06:53,080 பல வாரங்களா உன்னை அந்த கம்ப்யூட்டரை சரி செய்யும் படி சொல்லிக் கொண்டிருக்கிறார். 68 00:06:53,163 --> 00:06:54,748 ஆம், ஆனால் நான் ஒரு முக்கிய அழைப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். 69 00:06:54,831 --> 00:06:56,959 காரணமாத்தான் அதுக்கெல்லாம் கைப்பேசிகளுன்னு பெயர், ஆதேஷ். உடன் எடுத்துச்செல்லலாம். 70 00:06:57,042 --> 00:07:00,003 சரி, அந்த கிடங்குல ரொம்ப சத்தம் கேட்கும். நான் ஒரு நல்ல திறமைசாலியாக தெரிய வேண்டாமா. 71 00:07:02,005 --> 00:07:03,590 உன் உதவியைக் கேட்கிறார் என்பது நல்லது தான். 72 00:07:04,216 --> 00:07:07,052 அவங்களோடு வேலை செய்யறதை விடு, கூட இருப்பதே கஷ்டமாகத் தான் இருக்கு. 73 00:07:07,135 --> 00:07:09,263 ஹே, நண்பா. ஒழுங்கா வேலை செய்யலாமா, வருகிறாயா? 74 00:07:12,057 --> 00:07:14,685 -நான் குளிக்கணும். -அது பரவாயில்லை. பசங்க காத்திருப்பாங்க. 75 00:07:14,768 --> 00:07:15,894 காஷ்கோ கார்ப்பெட்ஸ் 76 00:07:25,279 --> 00:07:28,574 தோர்ன்லி சாலை எல்பி-எல்-1109 77 00:07:29,408 --> 00:07:32,703 மிட் டவுன் நியூயார்க் நகரம் 78 00:07:33,203 --> 00:07:35,414 பார்க் மேடிசன் ஹோட்டல் 79 00:07:35,497 --> 00:07:37,124 என்ஒய்பிடி 80 00:07:42,880 --> 00:07:44,756 ஹே, ஸ்காட். நீ வர முடிந்ததில் மகிழ்ச்சி. என்னை தொடர்ந்து வா. 81 00:07:44,840 --> 00:07:45,674 எஃப்பிஐ 82 00:07:45,757 --> 00:07:47,676 உங்களை அவசரப்படுத்தறேன்னு தெரியும், ஆனால் இது ஏற்கனவே நடந்துவிட்ட விஷயம். 83 00:07:54,725 --> 00:07:56,894 -சமீபத்திய விஷயமும் தெரியுமா? -ஆம். 84 00:07:56,977 --> 00:07:58,395 லியோ நியூமேன், இளைஞன், 85 00:07:58,478 --> 00:08:01,315 முகமூடி கும்பலினால் ஆள்கடத்தல் செய்யப்பட்டு சூட்கேஸினுள் அடைக்கப்பட்டுள்ளார். 86 00:08:01,398 --> 00:08:06,236 காணொளியை "கோ லீக்"ல பார்த்திட்டு, என்ஒய்பிடி நான்கு பிரிட்டிஷர்களை சந்தேக்கிறாங்க. 87 00:08:06,320 --> 00:08:09,406 அந்த காணொளி வைரல் ஆகும் முன் நமக்கு அதிக பட்சமா சில மணி நேரங்கள் இருக்கு. 88 00:08:10,282 --> 00:08:12,201 -என்ன அவர்களின் தேவைகள்? -இன்னும் எதுவும் வரலை. 89 00:08:13,744 --> 00:08:16,038 -சைபர் கிரைமா? -அதேதான். 90 00:08:16,538 --> 00:08:19,416 பாரு. யாரு அவனை ஆள்கடத்தல் செய்தானோ, அவன் கைப்பேசியை மட்டும் படிக்கட்டுகளில் 91 00:08:19,499 --> 00:08:20,501 அடித்து நொறுக்கிட்டான், வேறு எதுவுமில்லை. 92 00:08:20,584 --> 00:08:23,420 நான் பிரிட்டிஷர்களிடமிருந்து சந்தேகத்துக்கு உரியவர்களைப் பத்தி தகவலை எதிர்பார்க்கிறேன். 93 00:08:24,004 --> 00:08:25,464 எனவே, நாம் எப்போ அவர்களை வெளியேற்றுகிறோம்? 94 00:08:26,423 --> 00:08:27,508 எனக்கு நிரூபணம் கிடைச்ச பிறகு. 95 00:08:27,591 --> 00:08:29,801 தனிப்பட்ட லிஃப்ட். பென்ட்ஹௌஸ் ஸ்வீட். 96 00:08:29,885 --> 00:08:33,388 நான் அடுத்த விமானத்தைப் பிடிக்கணுமானால், ஜேஎஃப்கேயில் இன்னும் ஒரு மணி நேரத்தில் இருக்கணும். 97 00:08:33,472 --> 00:08:35,349 எனவே, இப்போ நான் என்ன செய்யணும்? 98 00:08:57,663 --> 00:09:00,749 கேமரா #டிஎம்23 - ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் ப்ளென்ஹெய்ம் கல்லூரி 99 00:09:07,923 --> 00:09:12,594 மன்னிக்கணும், தோழர்களே. நான் தான் இதை இன்னும் வேகமாக்கலாமா என கேட்டேன். 100 00:09:12,678 --> 00:09:16,849 விமானங்களில் என்னால் தூங்கவே முடிவதில்லை, ஆகையால் நான் ஜெட் லேகை காரணம் காட்டுகிறேன். 101 00:09:20,853 --> 00:09:23,605 -ஹெதர், நீ லேட்டாக வந்துள்ளாய். -நீங்களும் தான். 102 00:09:24,815 --> 00:09:27,067 உண்மை, ஆனால் நான் மன்னிப்பு கேட்டேன். 103 00:09:27,150 --> 00:09:30,362 உண்மையாக இருப்பது அவசியம் இல்லையானால், நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். 104 00:09:30,445 --> 00:09:32,030 நிறைய பேருக்கு அது ஒரு பொருட்டல்ல. 105 00:09:34,700 --> 00:09:37,035 சரி. நாம் தொடங்கலாம், சரியா? 106 00:09:40,455 --> 00:09:43,417 என்னன்னா, நோராவையும் ரே மாமாவையும் ஒரு மேஜையில் உட்கார்த்தி வைக்க முடியாது. 107 00:09:43,500 --> 00:09:44,585 -ஆமாம். -அது பரவாயில்லை. 108 00:09:44,668 --> 00:09:47,212 என்னிடம் மேஜை அமைப்புத் திட்டம் உள்ளது, மேலும் அந்த இடத்திலும் அவர்களிடம் நகல் இருக்கு. 109 00:09:47,296 --> 00:09:50,549 அம்மா, நீங்க இந்த ரிசெப்ஷனின் மொத்த செலவையும் ஏற்றுக் கொள்ளவது எனக்கு சங்கடமாக இருக்கு. 110 00:09:50,632 --> 00:09:52,551 இது பெக்காமில் உள்ள ஒரு பட்ஜெட் ஹோட்டல் தான். 111 00:09:52,634 --> 00:09:54,845 நீ தங்குவதைப் போல, இது ஒண்ணும் பெரிய இடமில்லை. 112 00:09:55,554 --> 00:09:57,514 நோராவின் மகன் ரேயைப் பார்த்தால், 113 00:09:57,598 --> 00:09:59,391 -அங்கு ஒரு சண்டையே நடக்கும். -நான் அதை கவனிக்கிறேன், அம்மா. 114 00:09:59,474 --> 00:10:01,768 அவன் ஏற்கனவே திக்கு வாய். அதை இன்னும் மோசமாகக்க விரும்பலை. 115 00:10:01,852 --> 00:10:02,853 எதுவும் வேலையிருந்தால் செய். 116 00:10:02,936 --> 00:10:04,813 கார் கம்பெனிக்கு ஃபோன் செய்து நேரத்தை உறுதி செய்துவிடு. 117 00:10:04,897 --> 00:10:06,440 மன அழுத்தத்துடன் இருக்க வேண்டியவள் நான் தானே? 118 00:10:06,523 --> 00:10:07,774 ஆமாம்! 119 00:10:07,858 --> 00:10:09,026 இது என்ன? 120 00:10:09,109 --> 00:10:11,820 ஏதோ ஒரு முட்டாளை சூட்கேஸில அடைச்சு கடத்தறாங்க. நீ பார்க்கவில்லையா? 121 00:10:12,988 --> 00:10:15,157 -அது எனக்கு. -ஒஹோ! 122 00:10:15,741 --> 00:10:17,075 அது உன் ரோஸ் அத்தையாக இருக்கும். 123 00:10:19,036 --> 00:10:21,663 இதற்கும் அரச குடும்பத்திற்கும் என்ன சம்மந்தம்னு கடவுளுக்குத் தான் வெளிச்சம். 124 00:10:21,747 --> 00:10:23,749 குண்டர்கள் வாழ்க்கை 125 00:10:23,832 --> 00:10:26,502 இன்று, நான் சொல்லப்போவது, ஆட்டு மந்தை புத்தி 126 00:10:26,585 --> 00:10:30,756 எப்படி கூட்டத்தின் நடத்தை ஒரு அபிப்பிராயத்தை உருவாக்கி, மக்களை பாதிக்கின்றது என்பதே விஷயம். 127 00:10:32,883 --> 00:10:35,802 சோதனைகளில் நாம் பார்த்திருப்பது, ஒரு குழுவின் அங்கமாக இருந்துள்ள 128 00:10:35,886 --> 00:10:38,764 மிகச்சிறந்த அறிவாளிகள் கூட, அறிவில்லாமல் நடந்து கொண்டிருக்கிறார்கள். 129 00:10:38,847 --> 00:10:42,851 அதோடு 1930களில் நாம் ஜெர்மனியை கூர்ந்து கவனித்தோமானால், அங்கு அப்போது தொடங்கிய... 130 00:10:44,394 --> 00:10:48,982 உனக்கு ஏதோ ரொம்ப வேடிக்கையாக இருக்கா, ஹெதர்? நாசியிஸத்தைப் பற்றி ஏதாவது வேடிக்கையா? 131 00:10:50,150 --> 00:10:51,151 இல்லை. 132 00:10:52,110 --> 00:10:53,111 வேறென்ன? 133 00:10:54,112 --> 00:10:56,490 கெமில்லா அரசியால் சூட்கேஸ்சுல அடைக்கப்படுவது. 134 00:10:57,032 --> 00:10:59,451 அதைப் பார்த்து தான் என் 11-வயதான சிறுமியும் சிரித்துக் கொண்டிருந்தாள். 135 00:11:00,202 --> 00:11:02,162 நான் என்ன சொல்வது? அது தான் மந்தை புத்தி. 136 00:11:02,246 --> 00:11:05,249 -எல்லோரும் அதை இப்போது பின்பற்றப் பார்க்கிறாங்க. -யார் அந்த எல்லோரும், குறிப்பிடு. 137 00:11:07,292 --> 00:11:09,419 நீங்க எல்லோரும் சமூக மனவியலாளர்கள். நான் உங்களைக் கேட்கிறேன். 138 00:11:10,754 --> 00:11:13,340 அந்த காணொளியில் மற்றவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றால், உனக்கு அதில் ஆர்வம் இருந்திருக்குமா? 139 00:11:13,423 --> 00:11:16,009 கலாச்சார ரீதியாக எது ஒரு விஷயத்திற்கு அர்த்தமூட்டுகிறது? 140 00:11:19,596 --> 00:11:21,974 நியூ யார்க்கிலிருந்து வரும் இந்தப் பயணம் இனிமை தருவதாக இருக்கட்டும். 141 00:11:22,057 --> 00:11:24,935 விரைவில் உங்களுக்கு இங்கிலாந்து வானிலையைப் பற்றி அறிவிக்க இருக்கிறோம். 142 00:11:25,018 --> 00:11:27,354 அதுவரையில், தயவுசெய்து உங்கள் இருக்கையில் அமர்ந்து இருக்கவும் 143 00:11:27,437 --> 00:11:28,647 அதனுடன் உங்கள் சீட் பெல்டுகளையும் போட்டுக் கொள்ளவும்... 144 00:11:28,730 --> 00:11:31,316 மன்னிக்கவும். மன்னிக்கவும். 145 00:11:33,485 --> 00:11:36,780 ஏன் பாட்டிலை விட்டுச் செல்லக் கூடாது? அப்படி செய்தால் நான் கத்த வேண்டாமே. 146 00:11:36,864 --> 00:11:38,782 பரவாயில்லை, சார். நான் இங்க இருப்பதே அதற்கு தான். 147 00:11:38,866 --> 00:11:41,785 -போதும் எனும் போது எனக்கே தெரியும். -மன்னியுங்கள். எனக்கு அதிகாரம் இல்லை... 148 00:11:41,869 --> 00:11:43,579 என்ன? நீங்களே யோசிக்க அதிகாரம் இல்லையா? 149 00:11:44,872 --> 00:11:47,207 நீங்கள் குடித்தவுடன் நான் மீண்டும் உங்கள் கோப்பையை நிரப்ப முடியும். 150 00:11:48,250 --> 00:11:49,585 மன்னிக்கவும்! 151 00:11:52,337 --> 00:11:54,965 இந்த விமானத்தில் கொஞ்சம் சேவையைப் பெற என்ன செய்யணும்? 152 00:11:56,842 --> 00:11:58,468 நான் கத்திக்கொண்டே இருக்கட்டுமா, என்ன? 153 00:12:02,723 --> 00:12:06,310 ஹே, நண்பா. ஏன் நீங்க அமைதியாக இருக்கக் கூடாது? 154 00:12:06,393 --> 00:12:09,229 நீ ஏன் அமைதியாக இருக்கக் கூடாது... நண்பா? 155 00:12:21,700 --> 00:12:23,410 -என்னைப் பார். -சரி. சரி. 156 00:12:26,246 --> 00:12:29,541 -நீங்க அமைதியாக இருக்கிறீர்களா? -ஆமாம். எல்லாம் நல்லது. 157 00:12:37,925 --> 00:12:39,593 நன்றி. ஆமாம். 158 00:12:51,438 --> 00:12:54,233 காஷ்கோ கார்ப்பெட்ஸ் 159 00:13:04,910 --> 00:13:06,411 நான் உனக்கு அனுப்பினதைப் பார்த்தாயா? 160 00:13:07,538 --> 00:13:10,207 அது பைத்தியக்காரத்தனம், நண்பா. அதென்ன, நிஜமான ஆள்கடத்தல் காணொளியா, என்ன? 161 00:13:10,290 --> 00:13:12,209 என்ன காணொளி? ஏன் எனக்குக் கிடைக்கலை? 162 00:13:12,292 --> 00:13:14,711 -அந்த கம்ப்யூட்டரை சரி பண்ணினாயா? -அது ஒண்ணும் உடையலையே. 163 00:13:14,795 --> 00:13:16,588 அதுக்கு வயசாச்சு, வேகம் குறைஞ்சிடுச்சி. 164 00:13:16,672 --> 00:13:17,840 ஆம், அப்பா மாதிரி. 165 00:13:19,383 --> 00:13:20,717 எனவே, அப்போ அதை சரி செஞ்சிட்டியா? 166 00:13:21,802 --> 00:13:23,387 கிட்டதிட்ட. என்ன காணொளி? 167 00:13:23,470 --> 00:13:26,765 ஹே. ஹே, நான் உன் அப்பாவை இரவில் லாக் ஆஃப் செய்யச் சொன்னேன். 168 00:13:26,849 --> 00:13:28,809 -ஆமாம், செய்வாரே. -இல்லை. இல்லை. சாத்தியமில்லை. 169 00:13:28,892 --> 00:13:30,811 -நான் செய்றேன். -ஆம், அப்படியானால் யார் பின்ன... 170 00:13:30,894 --> 00:13:33,522 -என்னுடைய டீ எங்க? -...யார் இதை செய்யறாங்க? 171 00:13:34,565 --> 00:13:35,732 என்ன இது... 172 00:13:37,401 --> 00:13:39,069 -நீ சரி செஞ்சிட்டியா? -இல்லை, அதில் பிரச்சனையில்லை. 173 00:13:39,152 --> 00:13:41,822 -எனவே, நீ சரி செய்தாயா? -ஆம், செஞ்சிட்டிருக்கேன். 174 00:13:41,905 --> 00:13:43,490 நீ கம்பெனி ஷர்ட்டைப் போட்டுக்கணும். 175 00:13:43,574 --> 00:13:44,783 இல்ல, எனக்கு தேவையில்லை. 176 00:13:44,867 --> 00:13:46,952 நீ அனுப்பின காணொளி என்ன விளையாட்டா? 177 00:13:50,372 --> 00:13:51,874 எனக்கு ஒரு கப் டீயாவது கிடைக்குமா? 178 00:13:57,087 --> 00:14:01,383 காஷ்கோ கார்ப்பெட்ஸ். ஆமாம். ஒரு மாற்றத்துக்காக அவன் உண்மையாக வேலை செய்திருக்கான். 179 00:14:01,466 --> 00:14:02,551 என்ன சொல்றீங்க? 180 00:14:03,844 --> 00:14:04,845 அது உனக்கு தான். 181 00:14:06,555 --> 00:14:07,973 ஏதோ முக்கியமாகத் தோணுது. 182 00:14:11,518 --> 00:14:13,020 ஹலோ, ஆதேஷ் சோப்ரா பேசுகிறேன். 183 00:14:13,729 --> 00:14:15,355 நம்ம கரண்ட் அக்கௌண்டிலே ஏன் பணமேயில்லை? 184 00:14:16,231 --> 00:14:17,316 இப்போ ஆரம்பிக்காதே, சோன். 185 00:14:17,399 --> 00:14:19,860 நான் ஆன்லைனில சரிபார்த்தேன். ஏதோ தவறுன்னு நினைத்தேன், ஆனால் அப்படியில்லை. 186 00:14:19,943 --> 00:14:22,779 400 பவுண்டுகளுக்கு ஒரு பயணக் கம்பெனிக்கு கட்டணத் தொகை போயிருக்கு. 187 00:14:22,863 --> 00:14:25,616 ஏன் அப்படி பண்ணினாய்? நான் தானே பண விஷயங்களைப் பார்க்கிறேன். 188 00:14:25,699 --> 00:14:26,950 என்ன நடக்குது, ஆதேஷ்? 189 00:14:28,410 --> 00:14:31,121 அது... ஒண்ணுமில்ல. கொஞ்சம் பணம் கொடுக்கவேண்டியிருந்தது. 190 00:14:31,205 --> 00:14:33,874 -சரியா? எல்லாம் சரியாகிவிடும். -நீ எதையோ மறைக்கிறாய். 191 00:14:33,957 --> 00:14:35,375 ஏன் உன் கைப்பேசியை உன் கண் முன்னரே வைத்துக் கொள்கிறாய்? 192 00:14:35,459 --> 00:14:37,544 -நான் சொன்னேனே. -அந்த பணம் எதற்காக? 193 00:14:37,628 --> 00:14:39,880 -என்ன? -நீ அந்த பயணக் கம்பெனிக்கு கொடுத்த பணம். 194 00:14:41,590 --> 00:14:43,926 பாரு, நான் இன்னிக்கு இரவு வீடு திரும்பியதும் அதைப் பத்தி பேசுவோம். 195 00:14:44,009 --> 00:14:47,012 -எனக்கு இப்பவே பேசணும். -உன் தந்தையின் கம்ப்யூட்டரை சரி செய்ய முயல்கிறேன். 196 00:14:49,181 --> 00:14:50,724 அதில் பிரச்சனையில்லை என சொன்னதாக நினைத்தேனே. 197 00:15:07,241 --> 00:15:08,242 ஸ்காட். 198 00:15:10,452 --> 00:15:12,955 கேத்ரின் நியூமன். விசேஷ அதிகாரி ஸ்காட் ஆண்டர்சன். 199 00:15:13,038 --> 00:15:14,039 ஹலோ. 200 00:15:14,122 --> 00:15:16,750 ஸ்காட் தான் நம் வன்முறைக் குற்றங்களின் பிரிவு விசிஎம்ஓ குழுவின் தலைவர். 201 00:15:16,834 --> 00:15:20,212 ஆள்கடத்தல், அபகரித்தல் மற்றும் பணப்பறிப்பு போன்றவற்றில் அவருக்கு பல வருட அனுபவமுள்ளது. 202 00:15:20,295 --> 00:15:22,214 உங்கள் மகனை யாராவது கண்டுபிடித்து தர முடியுமென்றால், அது அவர்தான். 203 00:15:24,341 --> 00:15:25,592 நீங்கள் இருவரும் பேசிக் கொள்ளுங்கள். 204 00:15:28,595 --> 00:15:30,973 இன்னும் ஒரு மணி நேரத்தில் எனக்கு வெள்ளை மாளிகையுடன் ஒரு அழைப்பு இருக்கிறது. 205 00:15:32,307 --> 00:15:33,684 அப்படி இருந்தும், 206 00:15:33,767 --> 00:15:37,062 நான் இன்று பேச இருக்கும் மிக முக்கியமான நபர் நீங்கள் மட்டும் தான். 207 00:15:38,772 --> 00:15:39,982 உங்களுக்குத் தெரிந்திருக்கும் நான் வந்து... 208 00:15:40,065 --> 00:15:42,109 லண்டனுக்குப் போக இருந்தீர்கள் என்றுதானே? தெரியும். 209 00:15:42,192 --> 00:15:44,736 நீங்கள் இந்த நபர்களைக் கண்டுபிடிக்கப் போகிறீர்கள் என்றும், லியோவை எனக்கு மீட்டுத் தரப் போகிறீர்கள் 210 00:15:44,820 --> 00:15:46,321 என்றும் எனக்குத் தெரியும். 211 00:15:48,740 --> 00:15:51,785 எனவே, அவர்கள் உங்களிடம் எதிரிகள் யாராக இருக்கலாம் எனப் பேசியிருக்கக் கூடும். 212 00:15:51,869 --> 00:15:54,997 நான் அதை அடிப்படை சோதனை என்பேன். நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை கேட்பதுண்டு, 213 00:15:55,080 --> 00:15:57,708 "டிவியில் நீங்கள் உங்களைப் பற்றி சற்றும் பேச விரும்பாத நபர் யார்?" என்று. 214 00:15:58,500 --> 00:16:00,460 ஆகவே, உங்கள் பட்டியலில் பிரிட்டிஷ்காரர்கள் இருக்கிறார்களா? 215 00:16:00,544 --> 00:16:02,838 சாமர்த்திய திட்டமிட்ட தகவல்தொடர்பு என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, 216 00:16:02,921 --> 00:16:04,173 ஸ்பெஷல் ஏஜென்ட் ஆண்டர்சன்? 217 00:16:04,715 --> 00:16:06,758 உயர்-நிலை சமூக உறவுகள். 218 00:16:06,842 --> 00:16:12,055 மற்றவர்களுக்கு முரணாக உள்ள ஒரு நிஜத் தோற்றத்தை உருவாக்கி விடுவோம். 219 00:16:13,390 --> 00:16:15,767 நிறைய நண்பர்களை சேகரிப்போம், நிறைய பேரை சந்திப்போம், 220 00:16:15,851 --> 00:16:17,186 அதில் பெரும்பாலான நபர்கள் உங்களை வெறுப்பார்கள். 221 00:16:17,769 --> 00:16:19,605 பின்னர் அவர்கள் உங்கள் எதிரிகள் ஆகிறார்கள். 222 00:16:20,689 --> 00:16:22,608 எனவே இன்னும் பெரிய புத்தகம் தேவைப்படும் என நீங்கள் கூறுகிறீர்கள். 223 00:16:23,358 --> 00:16:24,735 லண்டனில் உள்ளவர்களைக் குறிப்பதற்கே. 224 00:16:26,445 --> 00:16:29,823 லியோவைப் பற்றி சொல்லுங்களேன்? ஆக்ஸ்ஃபோர்டில் படித்தார், சரிதானே? 225 00:16:34,661 --> 00:16:36,997 உங்கள் ஆட்கள் வேறு ஒரு படத்தைப் போட முடிவு செய்தார்கள் என்று தெரியும், 226 00:16:37,080 --> 00:16:38,540 மேலும் நான் இப்போது உங்களை நம்ப வேண்டும். 227 00:16:39,750 --> 00:16:40,751 ஆனால்... 228 00:16:43,921 --> 00:16:45,589 இது தான் எனக்குப் பிடித்தது. 229 00:16:59,561 --> 00:17:00,812 நீ ஏன் லேட்டாக வந்தாய்? 230 00:17:01,355 --> 00:17:03,649 இதில் தனிப்பட்ட காரணம் எதுவுமில்லை. நான் எல்லாத்திலேயுமே லேட்டு தான். 231 00:17:03,732 --> 00:17:06,068 சொல்லப் போனால், உங்களுக்காக நான் அதிக அக்கறை எடுத்துக் கொள்வேன். 232 00:17:06,151 --> 00:17:07,319 நீ எங்கிருந்து வருகிறாய், ஹெதர்? 233 00:17:07,986 --> 00:17:09,738 -மான்செஸ்டர். -குறிப்பாக. 234 00:17:10,906 --> 00:17:12,824 தெற்கு மான்செஸ்டரில் ஒரு எலிப் பொந்து. உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை? 235 00:17:12,906 --> 00:17:14,284 அது தான் என் கேள்வி. 236 00:17:17,996 --> 00:17:22,251 உன்னைப் போல ஒவ்வொருவருக்கும், குறைந்தது 30 பேர் இருக்கிறார்கள். 237 00:17:22,835 --> 00:17:25,796 அவர்கள் உயிருடன் இருப்பதாலேயே இந்த இடத்திற்கு அவர்கள் சொந்தக்காரர்கள் என நினைப்பவர்கள். 238 00:17:25,877 --> 00:17:26,964 தெற்கு மான்செஸ்டரிலிருந்து வருபவர்களுக்கு 239 00:17:27,047 --> 00:17:30,300 இங்கு இருக்கும் தகுதியோ அல்லது தரமோ கிடையாது எனறு ஏற்கனவே தீர்மானித்தவர்கள். 240 00:17:30,384 --> 00:17:32,886 அதோடு, நீங்கள் அவர்களின் நினைப்பு சரியே என நிரூபிப்பதைத் தவிற, வேறு சாதனை செய்யவில்லை. 241 00:17:33,762 --> 00:17:36,557 அவர்கள் நினைப்பது தவறு என நிரூபிப்பது உங்களுக்கு பயத்தைத் தந்தால், 242 00:17:36,640 --> 00:17:39,142 குறைந்தது அதை நேர்மையாக சொல்லிவிட்டு வந்த இடத்திற்கே திரும்பி போய்விடுங்கள் 243 00:17:39,226 --> 00:17:42,938 ஏனென்றால், இதற்காக பாடுபடும் மற்றவர்களுக்கு நீங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தி விடுவீர்கள். 244 00:17:54,074 --> 00:17:56,034 நீங்கள் கோபப்படும் போது உங்கள் உச்சரிப்பு வெளியே தெரிகிறது. 245 00:18:17,639 --> 00:18:19,016 அம்மா எங்கே? 246 00:18:19,099 --> 00:18:20,309 அம்மா? 247 00:18:21,935 --> 00:18:24,563 -நான் இதை அணைக்கப் போகிறேன். -என்ன... இந்த உடையிலா? 248 00:18:24,646 --> 00:18:26,773 -நீ அங்கே போக முடியாது. -நான் எடுத்துக்குறேன். 249 00:18:27,691 --> 00:18:28,692 குடிங்க. 250 00:18:28,775 --> 00:18:31,028 ஊத்து. ஊத்திகிட்டே இரு. அப்படி தான். 251 00:18:49,880 --> 00:18:51,882 சரி. நாம் ஒரு டோஸ்ட் செய்யலாம். 252 00:18:52,466 --> 00:18:55,552 என்னுடைய வளர்ந்த மகளுக்கு, அவளுடைய மிக முக்கியமான நாளில். 253 00:18:57,137 --> 00:19:00,516 அதோடு வராத நண்பர்களுக்கும். அப்பாவிற்கும். 254 00:19:02,184 --> 00:19:03,393 -சீயர்ஸ், எல்லோரும். -சீயர்ஸ். 255 00:19:05,312 --> 00:19:06,563 என்னோட வா. 256 00:19:06,647 --> 00:19:09,358 எனக்கு இது பழகவேயில்லை. குமிழ்கள் மூக்குல போய் விடுகிறது. 257 00:19:10,359 --> 00:19:11,360 இது என்ன? 258 00:19:12,277 --> 00:19:14,279 நான் இத உனக்கு கொடுக்க காத்துக்கிட்டிருந்தேன். 259 00:19:15,989 --> 00:19:18,784 -நீ இன்னிக்கு இதை போட்டுக்கிறாயா? -உங்கள் நிச்சயதார்த்த மோதிரம். 260 00:19:18,867 --> 00:19:21,537 ஹாட்டன் கார்டனில் கொடுத்து அதன் அளவை மாற்றி அமைத்தேன். 261 00:19:21,620 --> 00:19:23,413 அந்த ஆளு அரசிக்கு வேலை செய்திருப்பதாகச் சொன்னான். 262 00:19:24,498 --> 00:19:26,792 ரொம்ப அழகா இருக்கு, அம்மா. ஆனால்... 263 00:19:28,669 --> 00:19:29,711 எவ்வளவு ஆச்சு? 264 00:19:31,171 --> 00:19:34,383 மன்னித்துவிடுங்க. அதாவது, நீங்க இப்போ தான் ரிசெப்ஷனுக்கும் செலவு செய்திருக்கீங்க. 265 00:19:34,466 --> 00:19:36,718 -எங்கிருந்து உங்களுக்கு இவ்வளவு பணம் கிடைத்தது? -அதைப் பத்தி நீ கேட்க வேண்டாம். 266 00:19:36,802 --> 00:19:39,304 ஆனால் அது என் பொறுப்பு தானே, இல்ல? அல்லது சீக்கிரம் அப்படி ஆகிவிடுமே. 267 00:19:39,388 --> 00:19:42,599 -உங்களால் இது முடியாது எனத் தெரியும். -இது உன் திருமண நாள். 268 00:19:42,683 --> 00:19:45,060 உன் அப்பா உயிருடன் இருந்திருந்தால் என்னவெல்லாம் கிடைச்சிருக்குமோ 269 00:19:45,143 --> 00:19:46,395 அதெல்லாம் உனக்குத் தர விரும்புகிறேன். 270 00:19:46,478 --> 00:19:49,022 நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன், அம்மா. நிஜமா, ஆனால்... 271 00:19:49,106 --> 00:19:50,107 தயவுசெய்து. 272 00:19:52,192 --> 00:19:53,193 இதை எடுத்துக்கோ. 273 00:19:55,070 --> 00:19:59,074 கொஞ்சம் புதுசு, கொஞ்சம் பழசு. 274 00:20:00,367 --> 00:20:01,368 பார்த்தாயா? 275 00:20:04,621 --> 00:20:07,791 கேமரா #க்யூஏ08 - ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் ப்ளென்ஹெய்ம் கல்லூரி 276 00:20:07,875 --> 00:20:09,126 சரி. 277 00:20:09,209 --> 00:20:11,879 நாம் தொடங்கலாம். நாம் பார்க்க வேண்டியது நிறைய இருக்கு. 278 00:20:12,796 --> 00:20:14,298 அதோடு நாம் இப்போது பேசும் சப்ஜெக்டைக் கருதி, 279 00:20:14,381 --> 00:20:18,093 இந்த மதிய வேளையில் அதில் முழு கவனம் செலுத்துங்கள் என கூறும் அவசியமில்லை. 280 00:20:19,761 --> 00:20:21,555 ஆகையால் நாம் இன்று செயலின் நோக்கத்தைப் பற்றி பேசுவோம். 281 00:20:26,351 --> 00:20:29,980 நாம் செய்பவற்றை அந்த வகையில் செயல்படுத்த தூண்டுதலாக இருப்பவை என்னென்ன? 282 00:20:30,063 --> 00:20:32,983 நாம் பூர்த்தி செய்துகொள்ள விரும்பும் தேவைகள் யாவை? 283 00:20:33,066 --> 00:20:34,443 நீங்கள் டாரா மெக்அல்லிஸ்டரா? 284 00:20:35,485 --> 00:20:36,778 ஆம். 285 00:20:36,862 --> 00:20:38,113 தேம்ஸ் வாலி போலீஸ். 286 00:20:40,282 --> 00:20:41,742 டெய்ஸி? 287 00:20:41,825 --> 00:20:44,411 இல்லை. நீங்கள் எங்களுடன் வரணும், தயவுசெய்து. 288 00:20:46,205 --> 00:20:48,165 -எதற்காக? -தயவுசெய்து. 289 00:20:48,248 --> 00:20:49,583 என்ன நடக்குது? 290 00:20:49,666 --> 00:20:52,794 அதை நாம் இங்கே விவாதிக்கலாம், அல்லது இன்னும் சற்று தனிமையான இடத்தில் விவாதிக்கலாம். 291 00:20:57,424 --> 00:20:58,550 அது உங்கள் லேப்டாப்பா? 292 00:20:59,885 --> 00:21:00,886 ஆம். 293 00:21:01,845 --> 00:21:03,055 நன்றி. 294 00:21:25,661 --> 00:21:27,412 எங்கிருந்து அவருக்கு பணம் கிடைத்தது, மோன்? 295 00:21:28,163 --> 00:21:29,331 ஒருவேளை எதையும் வித்திருப்பாங்களோ. 296 00:21:29,414 --> 00:21:31,041 -என்ன? -எனக்குத் தெரியலை. 297 00:21:31,124 --> 00:21:33,669 ஆனால் நமக்கு எதையாவது தருவது அவருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. உனக்குத் தெரியுமே. 298 00:21:35,629 --> 00:21:37,506 அவர் இதை எனக்குக் கொடுத்ததிலிருந்து நான் இதை கழட்டவேயில்லை, 299 00:21:37,589 --> 00:21:40,175 -நான் அமெரிக்காவிற்கு கிளம்பிய தினத்திலிருந்து. -அது அவர் அம்மாவினுடையது. 300 00:21:40,259 --> 00:21:43,679 அவர் சாமர்த்தியசாலி, நாட். கவலைப்படுவதை நிறுத்த, அது அவருக்குத் தேவை. 301 00:21:44,805 --> 00:21:46,139 என்ன? 302 00:21:46,640 --> 00:21:48,100 ரோஸ் அத்தையிடமிருந்து அம்மாவிற்கு அழைப்பு. 303 00:21:48,642 --> 00:21:50,894 அவர் இதுவரை கைப்பேசியில் அழைத்ததே இல்லை. 304 00:21:50,978 --> 00:21:52,938 -வந்து... -அவர் தொலைப்பேசியில் அழைக்கவே யோசிப்பவர் 305 00:21:53,021 --> 00:21:54,731 -பகலில்கூட. -சரி, பாரு. 306 00:21:54,815 --> 00:21:56,149 இப்போ என்ன நடக்குப்போகுதுன்னு நான் சொல்கிறேன்: 307 00:21:56,233 --> 00:21:58,569 நான் குளிக்கப்போகிறேன், நீ ஆடையை மாற்றிக் கொள்ளப் போகிறாய். 308 00:22:00,279 --> 00:22:01,280 சரியா? 309 00:22:31,351 --> 00:22:33,061 கடவுச்சொல்லை உள்ளிடவும் 310 00:22:33,145 --> 00:22:34,229 1 புதுய தகவல் திறக்கவும் 311 00:22:34,313 --> 00:22:37,274 இன்று சந்திக்க முடியாது - என் மகளின் திருமணம் 312 00:22:37,357 --> 00:22:40,777 இன்று தான் முடியும். முழுத் தொகை + வட்டி 313 00:22:40,861 --> 00:22:44,281 தயாராகும் போது தகவல் அனுப்பவும் 314 00:22:45,199 --> 00:22:48,035 செல்பை சாலையில் இன்னும் 10 நிமிடங்களில். 315 00:22:48,118 --> 00:22:50,621 இனி தகவல்கள் வேண்டாம். 316 00:22:50,704 --> 00:22:51,830 அனுப்பு 317 00:23:05,010 --> 00:23:08,722 செல்பை ஆர்டி எஸ்டிஹெச் எல்பி-எல்-1109 318 00:23:18,065 --> 00:23:19,399 நீ யாரு? 319 00:23:19,483 --> 00:23:20,609 -ஓட்டு. -என்ன? 320 00:23:20,692 --> 00:23:21,902 ஓட்டு, நண்பா! 321 00:23:23,111 --> 00:23:25,155 நான் அவருடைய மகள். நான் இதை முடிக்க வந்துள்ளேன். 322 00:23:25,239 --> 00:23:27,115 அவர் உங்களுக்கு எவ்வளவு தரணும்? 323 00:23:27,199 --> 00:23:28,492 இரண்டு. 324 00:23:29,368 --> 00:23:30,369 ஆயிரமா? 325 00:23:32,412 --> 00:23:34,081 உங்கள் பணத்தை நான் தருகிறேன். 326 00:23:35,207 --> 00:23:37,251 எங்கே என்னை விடணும் என சொல்கிறேன், சரியா? 327 00:23:37,793 --> 00:23:38,794 கேட்கிறீர்களா? 328 00:23:39,962 --> 00:23:41,797 -என்ன ஆச்சு? -நம்மை யாரோ பின் தொடர்கிறார்கள். 329 00:23:45,551 --> 00:23:47,177 -உறுதியா தான் சொல்கிறீர்களா? -இல்லை, ஆனால் நான் பரோலில் வந்திருக்கேன். 330 00:23:47,261 --> 00:23:49,304 -எனக்கு உறுதியாக தெரிய அவசியமேயில்லை. -அது போலீஸாக இருக்குமோ? 331 00:23:49,388 --> 00:23:52,182 -நாம நிறுத்தி அவர்களை போய் கேட்கலாமா? -இன்னிக்கு நான் கைதாக முடியாது, இன்னிக்கு. 332 00:23:52,266 --> 00:23:53,684 யாரும் கைதாகப் போவதில்லை. 333 00:24:01,400 --> 00:24:02,568 ச்சே! 334 00:24:04,987 --> 00:24:07,114 என்னால் இன்னிக்கு இறக்கவும் முடியாது! 335 00:24:08,282 --> 00:24:11,493 ஹாரி மற்றும் மேகன் அரச குடும்பத்திலிருந்து வெளியேறிய காரணம் தெரிந்தது. 336 00:24:11,577 --> 00:24:13,829 சர்ச்சைக்குரிய அந்த வைரல் காணொளியில் நடப்பவற்றில், குடும்பத்திலுள்ள மற்றவர்களைப் போல் 337 00:24:13,912 --> 00:24:17,165 தங்களுக்கு அதனுடன் தொடர்பில்லை என்று காட்டுவதற்காகவே அப்படிச் செய்தனர். 338 00:24:17,249 --> 00:24:18,542 நியூமன் தூதுவராக நியமிக்கப்படுகிறாரா? 339 00:24:18,625 --> 00:24:21,795 மற்றொரு வாதத்தின் படி, சூட்கேஸில் அடைக்கப்படும் அந்த நபர் தான், உண்மையாக 340 00:24:21,879 --> 00:24:24,214 ஸசெக்ஸின் டியூக்கையும் டச்சஸையும் முதலில் அறிமுகப்படுத்திய நபர் என கூறப்படுகிறது. 341 00:24:24,298 --> 00:24:25,632 ச்சே! 342 00:24:29,303 --> 00:24:32,389 நீ இங்க என்ன செய்ற? நான் தான் அப்புறம் பேசலாம் என்று சொன்னேனே. 343 00:24:33,849 --> 00:24:35,225 நீ எதற்காக அமெரிக்கா போன? 344 00:24:36,143 --> 00:24:39,104 ஆதேஷ், பொய் சொல்லி விஷயத்தை இன்னும் மோசமாக்காதே. உன் போர்டிங் பாஸை பார்த்தேன். 345 00:24:39,188 --> 00:24:41,106 நீ பர்மிங்காமில் இருப்பதாகச் சொன்னாய் உன் குடும்பத்தைப் பார்க்க, 346 00:24:41,190 --> 00:24:42,983 ஆனால் இருந்ததோ நியூ யார்க்கில். எதற்காக? 347 00:24:45,903 --> 00:24:47,029 நானே உன்னிடம் சொல்ல இருந்தேன். 348 00:24:47,112 --> 00:24:49,114 -உனக்கு காதல் விவகாரம் எதுவும் இருக்கா? -காதல் வி... 349 00:24:49,698 --> 00:24:51,241 என்ன? இல்ல. 350 00:24:53,327 --> 00:24:55,954 நான் சைபர்செக்யூரிட்டியைப் பத்தி ஒரு சில பெரிய ஆட்களோட பேசி வருகிறேன், 351 00:24:56,038 --> 00:24:57,748 நான் அவர்களுக்கு பாதுகாப்பு தருவதற்கு. 352 00:24:58,582 --> 00:24:59,875 வந்து, ஒருவர் சரின்னு சொல்லியிருக்கார். 353 00:25:00,542 --> 00:25:02,836 நான் அவர்களிடம், சில சமயங்களில் அமெரிக்காவில் வேலை செய்வேன் என்றேன்... 354 00:25:02,920 --> 00:25:05,506 -ஆனால் நீ அங்கு வேலை செய்யலையே. -ஆம், ஆனால் அவர்கள் என்னை அழைத்தார்கள் 355 00:25:05,589 --> 00:25:07,174 நியூ யார்க்கில் அவர்களைச் சந்திப்பதற்கு. 356 00:25:09,927 --> 00:25:12,304 உன்னிடம் சொன்னால் நீ என்னை தடுப்பாய் என்று நினைத்து, நான் உன்னிடம் சொல்லலை. 357 00:25:12,387 --> 00:25:13,722 நாம பணத்துக்கு எங்க போவோம்னு கேட்பாய். 358 00:25:13,805 --> 00:25:15,516 -நம்மிடம் அவ்வளவு பணம் இல்லை தான். -அது தான் விஷயமே, சோன். 359 00:25:15,599 --> 00:25:18,101 நாம இப்படியே செய்தோமானால், நம்மால ஒருநாளும் சம்பாதிக்கவே முடியாது. 360 00:25:18,185 --> 00:25:20,270 இல்லை, விஷயம் என்னன்னா, வங்கி கணக்கில் இப்போ பணமில்லை. 361 00:25:20,354 --> 00:25:24,483 எனக்கு இப்போ கிடைச்சிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, பணம் பொருட்டேயில்லை. 362 00:25:25,275 --> 00:25:27,986 நாம நம் இலட்சியத்தை இன்னும் உயர்த்தணும். 363 00:25:28,070 --> 00:25:29,905 அதோடு அந்த சந்திப்பு, அதுவும் நன்றாக நடந்தது. 364 00:25:29,988 --> 00:25:32,366 என் பயணச் செலவு எல்லாத்தையும் தருவதாக சொல்லியிருக்காங்க. 365 00:25:33,283 --> 00:25:36,328 அவங்க இன்னும் பேசுவதற்கு அழைப்பாங்க. அதனாலதான் கைப்பேசியை கையிலேயே வைத்திருக்கிறேன். 366 00:25:40,165 --> 00:25:41,333 மன்னிச்சிடு. 367 00:25:41,917 --> 00:25:43,961 சரியா? நான் பொய் சொன்னதுக்கு மன்னிச்சிடு. 368 00:25:45,045 --> 00:25:47,965 ஆனால், நாம இதைவிட நல்லா வாழணும்னு நினைக்கிறதுக்கு மன்னிப்பு கேட்க முடியாது. 369 00:25:48,841 --> 00:25:51,385 உனக்காக, நம் குழந்தைக்காக. 370 00:25:51,468 --> 00:25:53,470 -குழந்தையே இன்னும் வரலை. -ஆம், ஆனால் சீக்கிரம் வரும் 371 00:25:53,554 --> 00:25:54,847 அதைப் பத்திதான் பேசினோமே, இல்லையா? 372 00:25:59,601 --> 00:26:01,436 -இப்போ நீ என்னிடம் பொய் சொன்னால்... -நான் பொய் சொல்லலை. 373 00:26:02,563 --> 00:26:03,897 சரியா? நான் பொய் சொல்லலை. 374 00:26:07,901 --> 00:26:08,944 ரீஜென்டின் கால்வாய் டவ்பாத் 375 00:26:35,971 --> 00:26:38,640 எல்லாம் நலம், அம்மா. நான் அவளுடன் பேசுகிறேன். 376 00:26:38,724 --> 00:26:40,809 ஹை, நாடலி நீ வந்தாச்சா. தகவலைப் பதிவு செய்யுங்கள். 377 00:26:41,393 --> 00:26:42,477 எங்க போய் தொலைஞ்ச? 378 00:26:42,561 --> 00:26:45,189 நாம இன்னும் ஒரு மணி நேரத்துல ஆலயத்துக்குப் போகணும், உன் உடை இன்னும் ஹாங்கரிலேயே இருக்கு. 379 00:26:45,272 --> 00:26:46,273 கூப்பிடு! 380 00:27:00,829 --> 00:27:01,830 ஜோ? 381 00:27:04,291 --> 00:27:07,211 -ஜோ? ஜோ! -பொறு, பொறு. 382 00:27:07,920 --> 00:27:09,087 நாட்? 383 00:27:11,089 --> 00:27:12,049 நீ இங்க என்ன செய்கிறாய்? 384 00:27:12,132 --> 00:27:13,884 ஆலயத்துக்குப் போகும் முன் உன்னைப் பார்ப்பது நல்ல சகுனம் இல்லன்னு நினைச்சேன். 385 00:27:13,967 --> 00:27:15,594 சரியா சொன்னாய், அதனால அங்கேயே இரு. 386 00:27:15,677 --> 00:27:18,639 -எதுவும் பிரச்சனையா? -நான் எதையோ மறந்துட்டேன், அவ்வளவுதான். 387 00:27:18,722 --> 00:27:21,475 -நான் யாரையாவது அனுப்பியிருப்பேனே. -அது... சொந்த விஷயம். 388 00:27:21,558 --> 00:27:23,852 உன் திருமண ஆடையை அணிந்திருக்கிறாயா? அவள் ஆடையை அணிந்திருக்கிறாளா? 389 00:27:23,936 --> 00:27:24,937 இல்லை, இல்லை, அணியவில்லை. 390 00:27:25,020 --> 00:27:28,398 நான் சீக்கிரம் வருகிறேன். இன்னும் நியூ யார்க்கில் இருந்து மோனுக்கு வாங்கி வந்த பொருட்கள் இருக்கு, 391 00:27:28,482 --> 00:27:31,360 அதோடு நாம ரிசெப்ஷன் முடிந்து, ஹனிமூனும் முடித்து தான் இங்க திரும்பி வருவோம். 392 00:27:31,443 --> 00:27:33,987 சரி. பொறு. நாங்க ஆலயத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தோம். 393 00:27:34,071 --> 00:27:37,032 சரி, முன்னாடி காலத்துல, பெண்ணைப் பெத்தவங்க, 394 00:27:37,115 --> 00:27:38,659 மோதிரத்தை மாத்துறதுக்கு முன்னாடி 395 00:27:38,742 --> 00:27:41,870 பெண்ணோட முகத்தைப் பார்த்தால், எங்கே மாப்பிளை மனசு மாறிடுமோன்னு பயந்தாங்க. 396 00:27:41,954 --> 00:27:44,248 அதனால தான் நீ என்னைப் பார்க்கக்கூடாது. அம்மா அதை விசாரிச்சு தெரிஞ்சுகிட்டாங்க. 397 00:27:44,331 --> 00:27:48,585 முகத்தை மூடுவதற்கும் அது தான் காரணம், அப்போ பின்வாங்க முடியாது பாரு, அதுக்காக. 398 00:27:48,669 --> 00:27:51,338 உன்னை திருமணம் செய்து கொள்வதை, எதனாலும் என்னை தடுக்க முடியாது, நாட். 399 00:27:51,421 --> 00:27:52,840 எல்லாம் சரியாகத் தானே இருக்கு? 400 00:27:54,174 --> 00:27:55,926 இதுதான் வக்கீலுடன் வாழ்வதிலுள்ள பிரச்சனை, 401 00:27:56,009 --> 00:27:57,511 எப்போதும் சந்தேகம் தான். 402 00:28:01,640 --> 00:28:03,559 -அது என்னது? -ஒண்ணுமில்ல! 403 00:28:04,226 --> 00:28:06,687 அது... அது மோன்! 404 00:28:06,770 --> 00:28:08,146 இன்னும் 5 நிமிடங்களில் அம்மா ஃபெட் போலீஸை அழைக்கப் போகிறார்!!! 405 00:28:09,273 --> 00:28:11,567 நீ லௌவுஞ்சுக்குள்ளே போ. நான் இப்போ வெளியே வருகிறேன். 406 00:28:12,776 --> 00:28:14,820 -சரி. -அதோடு, ஜோ? 407 00:28:15,529 --> 00:28:16,655 என்ன? 408 00:28:18,031 --> 00:28:20,742 -நான் உன்னை நேசிக்கிறேன். -நானும் உன்னை நேசிக்கிறேன். 409 00:28:27,958 --> 00:28:29,209 சீமான்களே, சீமாட்டிகளே... 410 00:28:29,293 --> 00:28:30,294 அயர்லாந்து - பெல்ஃபாஸ்ட் யுனைடெட் கிங்டம் 411 00:28:30,377 --> 00:28:32,713 ...நியூ யார்க்கிலிருந்து பெல்ஃபாஸ்ட் இன்டர்நேஷ்னல் நிலையத்திற்கு, பயணம் சுகமானதாக இருந்திருக்கும். 412 00:28:32,796 --> 00:28:34,423 நாம் விரைவிலேயே தரையிறங்க இருக்கிறோம், 413 00:28:34,506 --> 00:28:37,593 அதனால் தயவுசெய்து உங்கள் சீட்பெல்ட்டுகளை அணிந்து, டிரேகளை உள்ளே பொருத்திவிடுங்கள், 414 00:28:37,676 --> 00:28:40,554 மற்றும் உங்கள் இருக்கைகள் நேராக இருப்பதை உறுதி செய்யுங்கள். நன்றி. 415 00:29:06,538 --> 00:29:08,498 அடடே, சகோதரி. நீ கிட்டதிட்ட பெண்ணாகத் தெரிகிறாயே. 416 00:29:08,582 --> 00:29:10,250 எங்கே போய் தொலைஞ்ச? 417 00:29:11,210 --> 00:29:12,377 ஒரு சொந்த விஷயம். 418 00:29:12,461 --> 00:29:15,422 அது வீட்டில் இருப்பது எனக்குத் தெரியும், ஆனால் எங்கேயும் கிடைக்கவில்லை. 419 00:29:15,506 --> 00:29:16,507 நிஜமாகத்தான் சொல்கிறாயா? 420 00:29:16,590 --> 00:29:18,842 அதோடு நீ நியூ யார்க் போகும் போது என் சூட்கேஸில் வைத்த துணிமணிகளும். 421 00:29:18,926 --> 00:29:20,719 உனக்கு பைத்தியம் எதுவும் பிடித்துவிட்டதா? 422 00:29:20,802 --> 00:29:22,221 எல்லாம் இப்போ சரியாகிடுச்சு, அம்மா. 423 00:29:22,304 --> 00:29:25,224 -உங்கள் ஃப்ளாட்டிலே ஃபோன் சிக்னல் இல்லையா? -உன் பட்டியலில் என்ன பாக்கியிருக்கு, மோன்? 424 00:29:25,307 --> 00:29:27,476 நாம இங்கு நின்னு விவாதிக்கலாமா, அல்லது நான் போய் உடை மாற்றவா? 425 00:29:27,559 --> 00:29:29,686 -போய் உடையை மாற்று! -போய் உடையை மாற்று! 426 00:29:31,855 --> 00:29:35,817 பெல்ஃபாஸ்ட் சர்வதேச விமான நிலையம் 427 00:29:37,736 --> 00:29:41,031 விமானப் பதிவுகள் 03/18 மாலை 5:30 மணி நியூ யார்க் ஜேஎஃப்கே 428 00:29:46,620 --> 00:29:48,205 சீமான்களே, சீமாட்டிகளே, என்னை மன்னிக்கவும், 429 00:29:48,288 --> 00:29:50,541 ஆனால் உங்கள் வெளியேறும் கேட்டில் ஒரு மாற்றம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, 430 00:29:50,624 --> 00:29:52,876 அப்படியென்றால், கொஞ்சம் தாமதம் ஆகும். 431 00:29:52,960 --> 00:29:54,670 பொறுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன், நாம் சரியான கேட்டை அடையும் வரை 432 00:29:54,753 --> 00:29:57,506 உங்கள் சீட்பெல்ட்டை அணிந்தபடியே, உங்கள் இருக்கையிலேயே அமரவும். 433 00:29:57,589 --> 00:29:58,715 நன்றி. 434 00:30:15,732 --> 00:30:17,109 மன்னிக்கணும். ஹே. 435 00:30:22,531 --> 00:30:23,782 -ஹே. -ஹை. 436 00:30:24,658 --> 00:30:27,661 என்னை மன்னித்துவிடுங்கள், ஆனால், எனக்கு வயிறு சரியில்லை, 437 00:30:27,744 --> 00:30:30,581 அதனால்... நான் கழிப்பறையை உபயோகிக்க முடியுமா? 438 00:30:30,664 --> 00:30:32,583 கழிப்பறைகள் இப்போது பூட்டப்பட்டிருக்குமே. 439 00:30:32,666 --> 00:30:34,376 ஆம், தெரியும், ஆனால்... 440 00:30:37,337 --> 00:30:38,755 தயவுசெய்யுங்கள்? 441 00:30:41,717 --> 00:30:42,718 சரி. 442 00:30:52,436 --> 00:30:53,896 -இதோ. -நன்றி. 443 00:31:47,407 --> 00:31:48,408 பாஸ்போர்ட் 444 00:31:48,492 --> 00:31:49,993 ஆஸ்திரேலியா 445 00:31:50,077 --> 00:31:50,911 கனடா 446 00:32:06,051 --> 00:32:09,096 சரியா? எங்கள் இருக்கைகளிலிருந்து நாங்கள் எல்லாவற்றையும் வெளியே கொண்டு வரணும். 447 00:32:09,179 --> 00:32:11,640 சரியா? மேலும் ஜூலி அத்தை மிகவும் ஆவலாக இருக்காங்க. 448 00:32:11,723 --> 00:32:12,808 டாய்லெட் 449 00:32:12,891 --> 00:32:16,270 -மன்னிக்கவும். -நாங்கள் அந்த பைகளை எடுக்கணும்... 450 00:32:16,353 --> 00:32:20,482 -ஹே. நான் உங்களுக்கு உதவலாமா? -...நான் விமானத்தில் சரியாக தூங்கவில்லை. 451 00:32:21,441 --> 00:32:22,860 -நன்றி. -சரி. 452 00:32:22,943 --> 00:32:25,404 சரி, ரோனன். போகலாம் வா. 453 00:32:28,240 --> 00:32:33,036 மேலும் இறுதியாக, சர்ச்சைக்குரிய அந்த வைரல் காணொளி. 454 00:32:33,120 --> 00:32:36,123 -ஒரு அடையாளம் தெரியாத உருவம்... -ஆதேஷ், கம்ப்யூட்டரை சரிபண்ணிவிட்டாயா? 455 00:32:36,206 --> 00:32:39,084 உண்மையில் அதில் பிரச்சனையில்லை... ஆம், ஆம், சரி பண்ணிவிட்டேன். 456 00:32:39,168 --> 00:32:42,462 பார்த்தாயா? நான் தான் சொன்னேனே. அவன் ஒன்றும் தண்டச் சோறு இல்லை என்று. 457 00:32:42,546 --> 00:32:44,173 ்அவனுக்கு ஒரு கம்பெனி ஷர்டு வேண்டும். 458 00:32:44,256 --> 00:32:45,757 உண்மையில் அவனுக்குத் தேவையில்லை, அம்மா. 459 00:32:45,841 --> 00:32:47,718 -நான் அதை மறுக்கப் போகிறேன். -ஏன்? 460 00:32:47,801 --> 00:32:51,263 முக்கியமான ஒரு அழைப்பை எதிர்பார்க்கிறோம். அதாவது, ஆதேஷ். ஒரு பணிக்காக, எனவே... 461 00:32:51,346 --> 00:32:53,390 நாளைக்கு இதே நேரத்தில் நீங்க பெரிய கோடீஸ்வரர்களாகப் போகிறீர்கள், இல்ல? 462 00:32:54,975 --> 00:32:57,477 -நான் பார்க்கிறேன். -ஒருவேளை அவர்கள் தான் முக்கிய முதலீட்டாளர்களோ, 463 00:32:57,561 --> 00:32:59,605 ஆதேஷால் மறுக்கவே முடியாத ஒரு ஆஃபரோடு வந்திருக்காங்களோ என்னவோ. 464 00:33:03,317 --> 00:33:04,318 ஆதேஷ் சோப்ரா? 465 00:33:06,862 --> 00:33:08,322 மெட்ரோபாலிட்டன் போலீஸ். 466 00:33:09,406 --> 00:33:11,325 நீங்கள் எங்களுடன் வர வேண்டும், தயவுசெய்து. 467 00:33:19,208 --> 00:33:21,084 நீண்ட பயணம். இல்லையா? 468 00:33:21,168 --> 00:33:23,629 அதாவது... குறிப்பாக ரோனனுக்கு, அது ரொம்ப ஜாஸ்தி. 469 00:33:23,712 --> 00:33:25,964 அதாவது, எனக்கு ஒரு நல்ல காப்பி வேண்டும். 470 00:33:26,048 --> 00:33:28,717 அதாவது, நிஜமா, அரைத்து பொடி செய்த காப்பிக் கொட்டையிலிருந்து செய்த காப்பி. 471 00:33:29,301 --> 00:33:33,889 சில மணி நேரங்களுக்கு ஒரு முறை கொடுக்குற இன்ஸ்டன்ட் காப்பியைப் போல இல்லை. 472 00:33:33,972 --> 00:33:35,891 நல்ல ஆழ்ந்த தூக்கம் தேவைப்படுவது போல. 473 00:34:06,421 --> 00:34:07,798 அந்த கால்பட்டையை அணிவது தான் அழகு. 474 00:34:08,674 --> 00:34:11,385 -இரவல் வாங்கியதா? -ஆம், அது முடிந்துவிட்டது. 475 00:34:11,467 --> 00:34:12,636 பெண்கள்? 476 00:34:20,893 --> 00:34:23,063 சரி வாங்க. இதை சாதிப்போம். 477 00:35:08,692 --> 00:35:10,235 நாடலி தாம்சன். 478 00:35:11,028 --> 00:35:13,739 -என்ன நடக்குது? ஜோ! -யார் நீங்கள்? 479 00:35:13,822 --> 00:35:16,783 மோசமான சமயத்திற்கு மன்னிக்கவும், ஆனால் நீங்கள் எங்களுடன் வந்தாக வேண்டும். 480 00:35:16,867 --> 00:35:17,868 இது எதைப் பற்றியது? 481 00:35:17,951 --> 00:35:18,952 என்ன? 482 00:35:19,036 --> 00:35:20,329 இதை இன்னும் கடினமாக்க வேண்டாம், சார். 483 00:35:20,412 --> 00:35:21,496 -என்ன விளையாடறீங்களா? -சரி, நாடலி? 484 00:35:21,580 --> 00:35:23,332 -என்ன நடக்குது இங்கே? -என்னைத் தொடாதீங்க! 485 00:35:23,415 --> 00:35:24,958 -அவள் எங்கேயும் வரப்போவதில்லை! -உடனே நீங்கள் என்னுடன் வரணும். 486 00:35:25,042 --> 00:35:27,211 -ஜோ! -நீங்க அப்படிச் செய்ய முடியாது! 487 00:35:30,005 --> 00:35:31,423 தயவுசெய்து அங்கேயே இருங்கள். 488 00:35:32,049 --> 00:35:37,804 ஒரு பழக்கத்தை விடுவது மிகவும் கடினம். ஊஊ. 489 00:35:37,888 --> 00:35:39,848 போலீஸ் 490 00:35:42,100 --> 00:35:44,561 நான் முன்னேற முயற்சித்தேன் ஆனால் நலமில்லாமல் ஆனேன் 491 00:35:44,645 --> 00:35:47,272 இருள் சூழுந்த காலங்களை மறப்பது கடினம் 492 00:35:47,356 --> 00:35:50,025 அது கொடுமை நான் செய்யாதவற்றை நினைவுகொள்வது 493 00:35:50,108 --> 00:35:52,819 -மறுபடியும் இருள் சூழ்ந்த காலம் வந்துவிட்டது -அது அப்படி தான் 494 00:35:52,903 --> 00:35:56,281 வானத்தின் ஆழத்த்தில் திகைத்துப் போனேன் 495 00:35:56,365 --> 00:35:58,408 ஆச்சரியத்தில் கண்களை மூடினேன் 496 00:35:58,492 --> 00:36:01,370 என்னை எதுவும் அழுத்தவில்லை இருந்தும் எனக்குள் பாரம் இருக்கிறது 497 00:36:01,453 --> 00:36:03,914 -மூழ்கிக் கொண்டிருக்கிறேன் என நினைவூட்டுகிறது -அது அப்படி தான். 498 00:36:03,997 --> 00:36:07,125 நான் எதிர்காலத்தைப் பற்றி யோசித்தேன் 499 00:36:07,209 --> 00:36:09,211 பழக்கமில்லாதவற்றை உணருகிறேன் 500 00:36:09,294 --> 00:36:11,839 நான் சுதந்திரமாக இருந்தேன், இதுற்கு முன் இல்லை 501 00:36:12,464 --> 00:36:14,091 நாடலி! 502 00:36:14,174 --> 00:36:18,887 ஆனால் நான் விழுந்த பின் நான் சொல்ல நினைக்காத வார்த்தைகளை நம்புகிறேன் 503 00:36:18,971 --> 00:36:23,517 நான் கடந்து செல்ல நான் அழுவதைவிட இறப்பது மேல். 504 00:36:24,309 --> 00:36:27,688 -இது கடினமான வாழ்க்கை -இது கடினமான வாழ்க்கை 505 00:36:27,771 --> 00:36:32,025 ஆம், இது கடினமான வாழ்க்கை தான் 506 00:36:40,117 --> 00:36:41,451 நாம் இம்மிகிரேஷனுக்குப் போகப் போகிறோம். 507 00:36:41,535 --> 00:36:43,537 அங்கு தான் பாஸ்போர்ட்டை முத்திரைக் குத்துவார்கள், நினைவிருக்கா? 508 00:36:43,620 --> 00:36:46,039 அதாவது, வெவ்வேறு நாடுகளுக்கு, வெவ்வேறு வகையான முத்திரைகள். 509 00:36:46,123 --> 00:36:47,833 நாங்க அதை சேகரித்து வருகிறோம். 510 00:36:47,916 --> 00:36:50,752 விஷயம் என்னன்னா, நான் உண்மையில், ஒரு எக்சிக்யூடிவ் பயிற்சியாளராக வேலை செய்கிறேன், 511 00:36:50,836 --> 00:36:52,045 -ஒரு வாழ்க்கை கோச். -ம்ம்-ம்ம்ம். 512 00:36:52,129 --> 00:36:55,340 என் திருமணத்தைப் பத்தி நான் உணர்ந்தது... சரி, அதெல்லாம் இப்போ முடிந்துவிட்டது, ஆனால்... 513 00:36:57,467 --> 00:37:00,429 ...தொடர்பில்லை, ஏனெனில், நம் உலகில் நான் கண்டது, அதாவது, 514 00:37:00,512 --> 00:37:02,097 எல்லோரும் எப்போதும் இருக்கிறார்கள். 515 00:37:05,058 --> 00:37:07,311 ஆனால், அப்போது அவருடைய முதல் தகவல் இதுவாகத்தான் இருந்தது, 516 00:37:07,394 --> 00:37:10,772 "சளியுடன் ஒரு குழந்தையை ஒருத்தர் பள்ளிக்கு அனுப்புவார் என்று நான் நினைக்கவில்லை." 517 00:37:10,856 --> 00:37:12,524 அதற்கு நான், என்ன விளையாடுகிறீர்களா என்றேன். நீங்கள் அனுப்பியதேயில்லையா... 518 00:37:12,608 --> 00:37:14,026 முன்னே வர அழைக்கப்படும் வரை தயவுசெய்து காத்திருக்கவும் 519 00:37:14,109 --> 00:37:18,113 பாஸ்போர்ட் நேரம். ரோனன், அம்மாவிடம் வா. இந்த நல்லவருக்கு நன்றி சொல்லு. நன்றி. 520 00:37:18,197 --> 00:37:19,364 ஆம். ஹே. 521 00:37:20,616 --> 00:37:22,075 அடுத்தவர், தயவுசெய்து. 522 00:37:23,410 --> 00:37:25,245 இன்னிக்கு எங்கே போகிறீர்கள்? 523 00:37:32,044 --> 00:37:38,550 ஷான் டில்சன். ஆயுதமேந்திய போலீஸ். கதவை நிதானமாக திறங்க, திரு. டில்சன். 524 00:37:38,634 --> 00:37:40,219 மிக்க நன்றி. 525 00:37:40,302 --> 00:37:41,803 -ஹே, அது உனக்கு தான். -புரிந்தது. 526 00:37:41,887 --> 00:37:43,680 மற்றும் உங்களை. நான் உங்களை அங்கு பார்க்கிறேன். 527 00:37:43,764 --> 00:37:44,765 சரி. 528 00:37:48,519 --> 00:37:51,563 -நீங்கள் வந்தீர்களா? -ஆம், ஆனால் திருமணம் செய்யவில்லை. 529 00:37:51,647 --> 00:37:54,983 கொஞ்சம் அவகாசம் கிடைத்தது நல்லது, நிஜமா. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளவும். 530 00:38:00,364 --> 00:38:02,449 -கண்ணாடியை எடுத்துவிடுங்கள், தயவுசெய்து. -நிச்சயமாக. 531 00:38:15,504 --> 00:38:16,880 டிரெம்ப்ளே ஜேசன் ஆடம் 532 00:38:16,964 --> 00:38:18,382 நேஷனாலிட்டி கோட் - கான செக்ஸ் - எம் 533 00:38:19,049 --> 00:38:20,259 -நன்றி. -நன்றி. 534 00:38:20,342 --> 00:38:21,385 அடுத்தவர். 535 00:38:23,554 --> 00:38:24,555 வருகை பெட்டிகளை எடுக்குமிடம் 536 00:38:24,638 --> 00:38:26,682 ஆயுதமேந்திய போலீஸ். நகருங்க. 537 00:38:27,641 --> 00:38:29,184 போங்க. வழியை விடுங்க. 538 00:38:57,838 --> 00:39:02,176 பிஷப்ஸ் கோட் போலீஸ் நிலையம் லண்டன் நகரம் 539 00:39:28,243 --> 00:39:30,954 பெயர்: நாடலி தாம்சன் தேதி: 18/03/21 540 00:39:31,038 --> 00:39:32,289 மேற்கொள்: 308-908-732டி 541 00:39:50,307 --> 00:39:54,228 மன்னிக்கணும். மன்னிக்கணும். என்னை மன்னியுங்கள். உங்களால் எனக்கு உதவ முடியுமா என்று... 542 00:40:58,083 --> 00:41:00,169 தயவுசெய்து உங்கள் இடது கட்டைவிரலை குறித்த இடத்தில் வைக்கவும் - புதிய ஸ்கான் 543 00:41:24,026 --> 00:41:26,153 என் பெயர் வெனிசா ஒகோயே. 544 00:41:26,236 --> 00:41:29,740 ஆட்கடத்தல் மற்றும் பணம் பறிப்புத் தடுப்புத் துறையின் மூத்த விசாரணை அதிகாரியாக 545 00:41:29,823 --> 00:41:31,533 நேஷனல் கிரைம் ஏஜென்சியில் பணி செய்கிறேன் நான். 546 00:41:32,034 --> 00:41:33,202 இது எதைப் பற்றியது? 547 00:41:33,285 --> 00:41:36,163 போன செவ்வாய்க்கிழமை, அதிகாலை 2:00 மணிக்கு, நியூ யார்க், பார்க் மேடிசன் ஹோட்டலில் இருந்து, 548 00:41:36,246 --> 00:41:40,542 லியோ நியூமனை ஆள்கடத்தல் செய்யும் முயற்சியின் சதி திட்டத்தில் பங்கு கொண்டதன் சந்தேகத்தில் 549 00:41:40,626 --> 00:41:42,628 நீங்கள் கைது செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதை சொல்ல முடியும். 550 00:41:42,711 --> 00:41:46,548 விருப்பப்பட்டால், உங்கள் சட்டப்பூர்வ பிரதிநிதியாக, நேர்காணலின் போது ஒருவரை நியமிக்கலாம். 551 00:41:46,632 --> 00:41:49,885 அப்படி ஒருவர் உங்களுக்கு இருந்தால், அந்த பிரதிநிதியின் விவரங்களை எங்களிடம் தரலாம், 552 00:41:49,968 --> 00:41:52,971 அல்லது ஒரு அரசின் வக்கீலை உங்களுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்கவதற்கு ஏற்பாடு செய்யலாம் 553 00:41:53,055 --> 00:41:55,015 மற்றும் நேர்காணலின் போதும் அவர் இருக்க ஏற்பாடு செய்யலாம். 554 00:41:56,975 --> 00:41:58,310 எப்படிச் செய்ய உங்களுக்கு விருப்பம்? 555 00:42:03,899 --> 00:42:05,734 என்னதான் நடக்குது அங்க? மறைந்துவிடுங்கள் 556 00:42:05,817 --> 00:42:07,027 பணம் இல்லாமல் முடியாது 557 00:42:08,070 --> 00:42:10,364 உடனே மறைந்து விடுங்கள் 558 00:42:11,406 --> 00:42:16,036 நீ எங்கே இருக்கிறாய் நாடலி? 559 00:42:19,540 --> 00:42:23,293 நேஷனல் கிரைம் ஏஜென்சி மத்திய லண்டன் 560 00:42:23,710 --> 00:42:24,711 ஷான் ஃபிட்ஸ்ஜெரால்ட் டில்சன் 561 00:42:40,727 --> 00:42:42,813 லியோ நியூமேன் 562 00:42:47,359 --> 00:42:48,694 ஆரம்பிக்கத் தயாரா? 563 00:42:54,199 --> 00:42:55,409 தயார். 564 00:42:55,492 --> 00:42:56,869 நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். 565 00:44:17,366 --> 00:44:19,368 தமிழாக்கம் அகிலா குமார்