1 00:00:02,836 --> 00:00:04,546 ஹலோ. யாரது, அங்கே? 2 00:00:12,846 --> 00:00:13,847 ஜான்! 3 00:00:14,431 --> 00:00:15,432 ஜான்! 4 00:00:27,069 --> 00:00:28,278 ஜான், நிறுத்துங்கள்! 5 00:00:46,213 --> 00:00:48,841 -மன்னிக்கணும். என்னை. -ஷ்ஷ். பரவாயில்லை. 6 00:00:48,924 --> 00:00:51,343 -பரவாயில்லை. நிறுத்துங்கள். -என்னை மன்னித்துவிடு. 7 00:00:51,426 --> 00:00:53,011 அப்படிச் சொல்வதை நிறுத்துங்கள். நிறுத்துங்கள். 8 00:00:53,095 --> 00:00:54,304 நலம் தானே. 9 00:00:57,558 --> 00:00:58,892 நான் நலமாக இல்லை. 10 00:01:01,103 --> 00:01:02,855 வந்ததற்கு மிகவும் நன்றி. 11 00:01:06,191 --> 00:01:08,277 -அவங்கதான் கடைசியா, ஹான்? -ஆம். 12 00:01:08,360 --> 00:01:09,403 ஆமாம். 13 00:01:10,070 --> 00:01:12,823 எல்லோரும் இவ்வளவு சீக்கிரம் வீடு திரும்புவது ஆச்சரியமாக உள்ளது. 14 00:01:12,906 --> 00:01:14,741 வந்து, ஆம், எல்லோருக்கும் வேலைகள் காத்திருக்கின்றனவே. 15 00:01:14,825 --> 00:01:15,993 ஞாயிற்றுக்கிழமையிலுமா? 16 00:01:17,160 --> 00:01:18,328 உனக்கு என்னதான் பிரச்சனை, டேனி? 17 00:01:18,412 --> 00:01:20,998 கடைசி நிமிடத்தில் என்னிடம், உனக்காக ஒரு விருந்து ஏற்பாடு செய்யச் சொல்கிறாய். 18 00:01:21,081 --> 00:01:23,584 முடிந்ததைச் செய்தேன். மன்னிக்கணும், பெரிய அளவில் யாரும் வரவில்லை, நண்பா. 19 00:01:23,667 --> 00:01:27,171 பரவாயில்லை. நல்ல விருந்து தான், சரியா? கலவை வேண்டாம். 20 00:01:28,255 --> 00:01:31,675 என் மேல் ரொம்ப எதிர்பார்ப்புகள் உள்ளன, தெரியுமா. 21 00:01:31,758 --> 00:01:32,759 நான்... 22 00:01:32,843 --> 00:01:35,012 ஒரு புத்தகம் வெளியிட்டால் போதும், ஒரு காணொளி போதும், 23 00:01:35,095 --> 00:01:38,849 உடனயே, அவ... அவர்கள், அவ்வளவுதான், அடுத்ததைப் பற்றி கேட்டு விடுவார்கள். 24 00:01:38,932 --> 00:01:41,476 "நீ உடனேயே, வேறு யாரும் வருவதற்கு முன், முந்திக் கொள் மற்றும் என்..." 25 00:01:41,560 --> 00:01:43,061 இழுத்து அடிக்கலாம் போல் தோன்றுகிறதா? 26 00:01:45,397 --> 00:01:46,648 இன்னொரு கிளாஸ் வேண்டுமா? 27 00:01:48,567 --> 00:01:50,777 ஆமாம். என்ன வைத்திருக்கிறாய்? 28 00:01:52,029 --> 00:01:54,323 நாற்பது-வருட-பழைய மெக்காலன். 29 00:01:55,574 --> 00:01:56,575 சரி. 30 00:02:04,583 --> 00:02:06,710 அது ஒரு வேளை என்னை மிகவும் பணக்கார, அதிகார வர்க்கமாக காட்டினால், வேண்டாம். 31 00:02:06,793 --> 00:02:08,878 கூட்டமெல்லாம் போகும் வரை, நல்ல சரக்கை எடுக்காமல் காப்பாற்ற வேண்டிருந்தது. 32 00:02:08,961 --> 00:02:10,923 -அதைதானே இப்போது சொன்னாய்? -ஆம். இதோ ஆரம்பம். 33 00:02:11,006 --> 00:02:13,800 -நான் என்ன? ரீகன் அளவிற்கு மோசமானவனா? -ரீகனைவிட மோசம். 34 00:02:13,884 --> 00:02:15,594 ரீகனைவிட மோசம். அதுதான் சரி. 35 00:02:17,471 --> 00:02:19,723 -இதோ பார்... ஆம், இல்லை. நிஜமாக. -என்ன? 36 00:02:20,682 --> 00:02:21,892 இந்தா, இதை எடுத்துக் கொள். 37 00:02:24,937 --> 00:02:27,314 நீ எப்போதுமே எடுத்துக் கொள்வதைவிட, கொடுப்பதில் தேர்ந்தவன், 38 00:02:27,397 --> 00:02:28,565 தெரியுமா உனக்கு? 39 00:02:31,360 --> 00:02:32,361 தெரியும். 40 00:02:37,574 --> 00:02:39,576 இந்த இடத்தை நன்றாக அமைத்திருக்கிறாய். 41 00:02:41,411 --> 00:02:42,538 ஆம், 42 00:02:42,621 --> 00:02:44,873 நான் இதைச் சொல்ல வேண்டியுள்ளது என்பதால் சொல்கிறேன், 43 00:02:44,957 --> 00:02:48,669 நீ சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு இதையெல்லாம் அனுபவிக்கணும் என்பது என் கருத்து. 44 00:02:49,586 --> 00:02:53,298 என்னால் முடியாது. அது முடியாது... நான் அப்படி படைக்கப்படவில்லை. 45 00:02:53,382 --> 00:02:55,968 மேலும், உன்னைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது, தெரியுமா. 46 00:02:56,051 --> 00:03:00,264 -மறுபடியும் அதை ஆரம்பிக்காதே. -ஏன் கூடாது? அது தான் உண்மை. 47 00:03:00,347 --> 00:03:03,642 நீ இதோ இந்த மவுண்ட் ஹாலிவுட்டில் நல்ல சுகவாசியாக உட்கார்ந்திருக்கிறாய், 48 00:03:03,725 --> 00:03:06,520 இருந்தாலும் இளமையில் நாம் ஒருமித்து கண்டிருந்த கனவுகளுடன் ஒத்துப்போகும் 49 00:03:06,603 --> 00:03:08,230 என்னுடைய குணாதிசயங்களைக் கண்டு ஏனோ பொறாமைப் படுகிறாய். 50 00:03:12,901 --> 00:03:14,069 அவள் உன்னைத் தேர்ந்தெடுத்தாள். 51 00:03:15,654 --> 00:03:18,282 கடைசியில், உன்னைதான் அவள் தேர்ந்தெடுத்தாள், அதனால்... 52 00:03:20,367 --> 00:03:22,411 அன்பே, படுத்துக்கொள்ள வருகிறீர்களா? 53 00:03:22,494 --> 00:03:24,788 கண்ணே, இதோ இப்போது வருகிறேன். 54 00:03:24,872 --> 00:03:26,540 உங்கள் பிரிவை உணர்கிறேன். 55 00:03:28,876 --> 00:03:31,795 -ஒரு மாதிரி மூர்க்கதனமானவள். -ஆமாம். 56 00:03:31,879 --> 00:03:33,338 என்னால் அவளுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. 57 00:03:34,298 --> 00:03:36,592 அவளிடமிருந்து வரும் சத்தங்கள், அவை விலங்கை போலிருக்கும். 58 00:03:36,675 --> 00:03:39,052 ஆமாம், நேற்றிரவு நாங்கள் முன் வரிசையில் இருந்து கேட்டது போலிருந்தது. 59 00:03:39,136 --> 00:03:41,346 -உங்களுக்குக் கேட்டதா? -எல்லாமே. ஆமாம். 60 00:03:41,430 --> 00:03:43,515 நாசமாப்போன திறந்த-வீடு திட்டம். 61 00:03:43,599 --> 00:03:44,600 அன்பே? 62 00:03:44,683 --> 00:03:46,602 கண்ணே, நான் வந்து விடுகிறேன் என்று கூறினேன், சரியா? 63 00:03:46,685 --> 00:03:50,147 நான் இதை குடித்து முடிக்கணும், மற்றும் சுற்றி வந்து, அலாரம் வைக்கணும். 64 00:03:50,230 --> 00:03:51,815 -பாருப்பா. -அலாரமா? 65 00:03:51,899 --> 00:03:53,901 இந்த சொர்க்கத்தில் ஒரு திருட்டு அபாய எச்சரிக்கை வேறு இருக்கிறதா? 66 00:03:53,984 --> 00:03:56,278 ஆமாம், இந்தப் பகுதியில் உள்ள எல்லோரிடமும் உண்டு. அந்த மான்சனுக்கு அப்புறம். 67 00:03:56,361 --> 00:03:57,613 -சரி. -அது, இல்லையென்றால் துப்பாக்கி. 68 00:03:57,696 --> 00:03:58,947 என்னைத் துப்பாக்கியெல்லாம் வைக்க விடமாட்டாள்... 69 00:03:59,031 --> 00:04:00,949 நீங்க அலாரத்தை வைக்க முடியாது. ஏனென்றால் ஷீலா இன்னும் வரவில்லை. 70 00:04:01,033 --> 00:04:03,452 என்ன? அவள் படுக்கையறையில் இல்லையா, தூங்கவில்லையா? 71 00:04:03,535 --> 00:04:06,288 -இல்லை, வெளியே போனாள். உங்கள் காரில். -என்ன? 72 00:04:12,836 --> 00:04:14,213 நீ நலமாக இருக்கிறாயா? 73 00:04:16,089 --> 00:04:17,673 இன்னும் நன்றாகவே உள்ளது போல இருக்கிறாய். 74 00:04:18,634 --> 00:04:20,802 நீ ஒல்லியாக இருக்கிறாய், இன்னும். 75 00:04:20,886 --> 00:04:23,764 நான் நலம்தான். கொஞ்சம் களைப்பு. 76 00:04:23,847 --> 00:04:26,099 இப்போது மாயாவிற்கு நான்கு வயதாகிவிட்டது, ஆகையால் நிறைய ஓடியாடுகிறாள். 77 00:04:26,683 --> 00:04:29,061 அடுத்தது, இன்னொன்றிற்கும் முயன்று வருகிறாயா? 78 00:04:29,937 --> 00:04:32,731 அல்லது அதெல்லாம் உங்கள் வாழ்க்கை முறைக்கு ஒத்து வராதா? 79 00:04:32,814 --> 00:04:34,983 போகட்டும், அன்பே, அதை... 80 00:04:35,817 --> 00:04:39,446 எங்களிடம் காட்ட ஒரு புகைப்படமாவது கொண்டுவந்தாயா, என்ன? 81 00:04:39,530 --> 00:04:43,450 ஆம், என்னுடைய பர்ஸில் இருக்கணும், சற்று பழையதாக இருக்கலாம். 82 00:04:54,378 --> 00:04:58,465 அவள் அழகாக இருக்கிறாள். அழகு. ஆம். 83 00:04:58,549 --> 00:04:59,925 அதோ அந்த கன்னங்கள். 84 00:05:00,592 --> 00:05:01,885 மற்றும் அந்த கண்களும். 85 00:05:01,969 --> 00:05:04,763 தெரியுமா, அவளுக்கு ஒரு தொப்பி செய்திருக்கிறேன். 86 00:05:04,847 --> 00:05:08,934 ஒரு வேளை, இப்போது அது ரொம்ப சின்னதாகக் கூட போயிருக்கும். 87 00:05:09,017 --> 00:05:11,103 ஆம், அதுவும் அவளுக்குப் பெரிய தலை. 88 00:05:11,186 --> 00:05:12,813 இதில் முத்தாக இல்லை? 89 00:05:14,106 --> 00:05:15,107 அழகிதான். 90 00:05:17,067 --> 00:05:19,570 நீ எவ்வளவு கோபமாக இருந்தாய் என்று தெரியும், 91 00:05:19,653 --> 00:05:23,365 ஆனால், நாங்கள் அவளை சந்திக்க சம்மதித்தால், வெறுமன... ஒரு மதியவேளை போதும், 92 00:05:23,448 --> 00:05:25,367 எனக்கு அது மிகவும் பெரிய விஷயம். 93 00:05:25,450 --> 00:05:27,244 அவள் அதற்கு சம்மதிக்க மாட்டாள் என்று உனக்கே தெரியும். 94 00:05:27,327 --> 00:05:30,163 இத்தனை நாட்களாக, அவள் அதை தெளிவாக கூறிவிட்டாளே, நாம் ஏற்க வேண்டும். 95 00:05:30,247 --> 00:05:31,415 அதெல்லாம் சரி, ஆனால் இப்போது இங்கு வந்திருக்கிறாளே. 96 00:05:31,498 --> 00:05:33,375 அதாவது, அவள் இங்கு வருவதற்கு எதுவும் காரணம் இருக்குமே? 97 00:05:33,458 --> 00:05:35,669 நாம் இருவருக்குமே அந்த காரணம் தெரியும். 98 00:05:36,670 --> 00:05:37,671 இல்லையா? 99 00:05:40,340 --> 00:05:42,676 விஷயங்கள்... ஆம், அப்படி ஒன்றும் சுகமாக இருக்கவில்லை... 100 00:05:44,094 --> 00:05:45,554 பொருளாதாரத்தைப் பொருத்தவரை. 101 00:05:46,221 --> 00:05:47,222 அப்போது எப்படி? 102 00:05:50,475 --> 00:05:51,894 எங்களுக்கு உதவி தேவை. 103 00:05:54,521 --> 00:05:55,898 டேனி ஒன்றும் கெட்டவர் இல்லையே. 104 00:05:55,981 --> 00:05:57,983 -நாங்கள் அப்படி எண்ணியதில்லை. -ஒன்று, இரண்டு, மூன்று. 105 00:05:58,066 --> 00:06:01,195 என்ன கொஞ்சம் வெகுளி. ரம்யமானதுதான், ஆனால் நிலையானதில்லை. 106 00:06:01,278 --> 00:06:03,030 -ஒன்று, இரண்டு, மூன்று. -சரி. போதும், அன்பே. 107 00:06:03,113 --> 00:06:04,823 எவ்வளவு உதவி தேவைப்படும்? 108 00:06:04,907 --> 00:06:07,117 -ஒன்று, இரண்டு, மூன்று. -ஆமாம். 109 00:06:07,201 --> 00:06:08,327 எவ்வளவு தொகை வேண்டியிருக்கும்? 110 00:06:09,620 --> 00:06:11,330 இப்போது பின்வாங்காதே. கூடவே கூடாது. 111 00:06:11,413 --> 00:06:12,956 5000 டாலர்கள். 112 00:06:13,540 --> 00:06:14,791 அது மிகப் பெரிய தொகை அல்லவா. 113 00:06:14,875 --> 00:06:16,835 அது உங்கள் சேமிப்பு வங்கியில் சும்மா உட்கார்ந்து இருக்கிறது. 114 00:06:16,919 --> 00:06:19,755 நாம் அதைப் பற்றி பேசலாம், இல்லையா, வாஹ்ன்? உனக்குத் தெரிவிக்கிறோம். 115 00:06:19,838 --> 00:06:22,716 அது இன்றிரவே தர வேண்டும் இல்லையேல் உங்கள் பேத்தியை நீங்கள் பார்க்கமுடியாது. 116 00:06:24,718 --> 00:06:27,179 வேண்டாம்... வேண்டாம்... 117 00:06:34,436 --> 00:06:36,146 இன்னும் அதெல்லாம் பண்ணுகிறார்களா? 118 00:06:36,647 --> 00:06:39,441 இன்னும் அதை தர மறுப்பதால், தனக்கு வேண்டியதை சாதித்துக்கொள்கிறாரா? 119 00:06:43,362 --> 00:06:45,781 அப்படிதான், அம்மா. அப்படிதான். 120 00:06:53,539 --> 00:06:55,123 -நன்றி. -பரவாயில்லை. 121 00:06:55,207 --> 00:06:56,208 இல்லை, அப்படியில்லை. 122 00:07:00,504 --> 00:07:04,341 உனக்கு இரக்க குணம்... என்னைப் பார்த்துக் கொள்கிறாய். 123 00:07:04,424 --> 00:07:05,884 எங்கள் எல்லோரையுமே பார்த்துக் கொள்கிறாய். 124 00:07:08,804 --> 00:07:11,723 என்ன நடந்தது என்று சொல்கிறீர்களா? 125 00:07:11,807 --> 00:07:14,434 எனக்கு நீச்சலடிக்கணும் எனத் தோன்றியது. 126 00:07:16,103 --> 00:07:17,938 கொஞ்சம் சிரமமாகிவிட்டது, அவ்வளவுதான். 127 00:07:19,648 --> 00:07:20,649 சரி. 128 00:07:23,110 --> 00:07:26,363 ஆனால், உங்களால் முடியாதே. அதாவது, நீச்சல் தெரியாதே. 129 00:07:26,446 --> 00:07:27,614 அது உண்மையில்லை. 130 00:07:28,699 --> 00:07:30,534 நான் அடிக்கடி செய்வதில்லை... 131 00:07:31,577 --> 00:07:34,705 ஆனால் என்னால் நீஞ்சவே முடியாது என்பது உண்மையில்லை. 132 00:07:35,706 --> 00:07:37,541 சரி, நான் நினைத்தேன்... 133 00:07:39,751 --> 00:07:40,961 ஆனல் போகட்டும், விடுங்கள். 134 00:07:43,839 --> 00:07:47,676 ஆனால், உங்களுக்கு நன்றாக நீச்சல் தெரியாதே, ஜான். எனக்கு கேட்கவில்லை எனில்... 135 00:07:47,759 --> 00:07:52,556 எங்கள் குடிலின் பக்கத்தில் உள்ள ஏரியில் சிறுவனாக இருந்தபோது செய்திருக்கிறேன். 136 00:07:55,559 --> 00:07:58,312 அது இழுக்கும் அளவிற்கு ஆழமுள்ளது தான். 137 00:08:00,731 --> 00:08:02,608 என் சகோதரர்களும் நானும், நாங்கள் போட்டிப் போடுவோம். 138 00:08:02,691 --> 00:08:06,069 நடு ஏரிக்கு போனவுடன் வரும் அந்த உணர்வு எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. 139 00:08:06,153 --> 00:08:08,155 அந்த கட்டத்திற்குப் அப்புறம் பின் வாங்க முடியாது. 140 00:08:08,238 --> 00:08:12,242 முன்னாடிப் போவதும் கடினம், மீண்டும் திரும்பிப் போவதும் கடினம். 141 00:08:13,785 --> 00:08:15,037 ஆகையால் நான் தொடர்ந்து போவேன். 142 00:08:16,455 --> 00:08:17,581 அப்புறம் நான் வெற்றி பெறுவேன். 143 00:08:21,668 --> 00:08:25,005 அப்போதெல்லாம் இறைவன் என் பக்கம் இருந்தார். 144 00:08:25,631 --> 00:08:27,257 இப்போதும் உங்களுடனே தான் உள்ளார். 145 00:08:27,841 --> 00:08:31,011 நம் இருவருக்கும் இருப்பதை எல்லாம் பாருங்கள், நமக்கு கிடைத்திருக்கும் அருளை. 146 00:08:31,094 --> 00:08:32,971 முக்கால் வாசியும், எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. 147 00:08:34,139 --> 00:08:35,140 உண்மையாகவே. 148 00:08:37,643 --> 00:08:38,936 ஆனால் எப்போதும் அப்படியிருப்பதில்லை. 149 00:08:40,062 --> 00:08:44,358 உங்களுக்குள் ஏதேதோ கவலைகள் வந்துள்ளது, தேர்தல், இந்த விரிவாக்கப் பணிகள், எல்லாம். 150 00:08:44,441 --> 00:08:47,569 ஓரிரவு நன்றாக படுத்து உறங்கினால், காலையில், எல்லாம் சரியாகிவிடும். 151 00:08:49,238 --> 00:08:50,322 நான் மகிழ்ச்சியாக இல்லை. 152 00:09:01,542 --> 00:09:02,543 அடடா. நிஜமாகவா? 153 00:09:02,626 --> 00:09:06,129 நீ அதை எடுக்கப் போவதில்லையா? அது தப்பில்லையா இப்போ? பாருடா. 154 00:09:09,341 --> 00:09:10,425 இதப்பாருடா. 155 00:09:12,719 --> 00:09:14,263 ஹை, எர்ணி, என்ன பார்க்கிறீர்கள்? 156 00:09:14,847 --> 00:09:16,473 அது, சாக்கர். 157 00:09:18,892 --> 00:09:21,937 உங்களுடைய ஐரோப்பிய விளையாட்டுகளில் ஒன்றா? 158 00:09:23,647 --> 00:09:25,566 இருக்கணும். நடு இரவாகிவிட்டது. 159 00:09:27,609 --> 00:09:31,947 இது உங்களுடைய ஐரோப்பிய விளையாட்டுகளில் ஒன்றா எனக் கேட்டேன்? 160 00:09:33,073 --> 00:09:34,741 ஆம். இத்தாலியைச் சேர்ந்தது. 161 00:09:38,537 --> 00:09:40,414 எனக்கு பதில் தேவையாக இருந்தது. 162 00:09:41,123 --> 00:09:43,417 கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை என்றால் மிகவும் வருத்தமாக உள்ளது. 163 00:09:43,500 --> 00:09:46,461 என்னை மன்னித்து விடு. அது ஒரு முக்கியப் பந்தயம். 164 00:09:46,545 --> 00:09:48,463 பரவாயில்லை. நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்பது பற்றி எனக்கு அக்கறையில்லை. 165 00:09:48,547 --> 00:09:51,300 நீங்கள் என்னுடன் தொடர்பில் இருக்கணும், அவ்வளவு தான். 166 00:09:51,383 --> 00:09:52,718 -நான் உங்கள் மனைவி. -அந்த மூலையிலிருந்து. 167 00:09:52,801 --> 00:09:55,345 ஆம், விடு, விடு, விடு. ஆம். ஆம். பிடித்து விடு. 168 00:09:55,429 --> 00:09:58,849 விடு, விடு, விடு, விடு. ச்ச, பாருடா! நீ சரியாக முன்னாடி நிற்கிறாய்... 169 00:09:59,433 --> 00:10:01,268 ஏன்... ஏன் அப்படிச் செய்தாய்? 170 00:10:04,980 --> 00:10:10,152 உங்களுக்கு நினைவிருக்கிறதா, நாம் இந்த வீட்டைப் பார்க்க வந்தது? 171 00:10:10,235 --> 00:10:13,655 மேலும் நாம் இருவரும் மிக மகிழ்ச்சியாக இருந்தோம், இது நமதானவுடன், இல்லை? 172 00:10:13,739 --> 00:10:15,490 வந்து, எனக்கு, சமையலறை. 173 00:10:16,825 --> 00:10:19,036 அவ்வளவு இடம், எல்லாம் தயார் செய்து சமைக்க. 174 00:10:19,536 --> 00:10:22,372 மேலும் உங்களுக்கு, அது இந்த அடித்தள இடமாக இருந்தது. 175 00:10:23,123 --> 00:10:25,459 எதற்காக இவ்வளவு தனிகை? 176 00:10:27,586 --> 00:10:29,046 எதற்காக எர்ணி? 177 00:10:29,129 --> 00:10:32,758 விளையாட்டுகளை பார்க்க. 178 00:10:33,926 --> 00:10:36,762 -அவ்வளவுதானா? -எனக்கு ரிமோட்டை திரும்பத் தருகிறாயா? 179 00:10:41,016 --> 00:10:44,520 என்ன எழவை செய்கிறாய்? என்ன எழவு நீ... 180 00:10:52,903 --> 00:10:56,406 என்ன ஆனது... யார் அதைச் செய்தது? 181 00:10:58,242 --> 00:10:59,243 நான் தான் செய்தேன். 182 00:11:06,208 --> 00:11:07,292 ஹே, தோழா. 183 00:11:07,918 --> 00:11:10,420 நான் பன்னி. மீண்டும். 184 00:11:11,630 --> 00:11:12,881 டைலரிடமிருந்து தகவல் உண்டா? 185 00:11:12,965 --> 00:11:14,383 தொலைபேசி 186 00:11:14,466 --> 00:11:16,468 ஆமாம், ஆமாம். நான் தான் மீண்டும். 187 00:11:17,594 --> 00:11:21,598 ஏனெனில் எனக்கு இன்னும் ஒரு எழவு பிதிலும் கிடைக்கவில்லை, காதலனும் கிடைக்கவில்லை. 188 00:11:23,392 --> 00:11:26,019 ஆமாம், சரி. இப்போ, என்ன தெரியுமா? 189 00:11:26,562 --> 00:11:28,522 நீயும் சரியான லூஸுதான். 190 00:11:28,605 --> 00:11:31,608 தோழா, நீ நிறைய நேரம் ஓய்வெடுத்து இளைப்பாற வேண்டும். 191 00:11:31,692 --> 00:11:33,569 அதே தான் உங்க அம்மாவிற்கும்! 192 00:11:35,571 --> 00:11:37,406 எதுவும் தகவல் கிடைத்தால் எனக்கு அறிவியுங்கள், தயவு செய்து. 193 00:11:54,923 --> 00:11:56,049 அங்கே எதையோ தேடுகிறாயா? 194 00:11:56,133 --> 00:11:57,342 இல்லை. 195 00:11:58,177 --> 00:12:00,429 கண்டிப்பாக உனக்கு உதவி தேவைப் போல தெரிகிறது. 196 00:12:00,512 --> 00:12:02,139 வந்து, என்ன தெரியுமா, மடையா? எனக்குத் தேவையில்லை. 197 00:12:10,689 --> 00:12:12,357 வருகிறேன் என சொன்ன என் காதலன், வரத் தவறிவிட்டான். 198 00:12:14,526 --> 00:12:17,154 வருத்தமாக உள்ளது. அவன் பைத்தியம் போலும். 199 00:12:18,405 --> 00:12:20,324 ஆமாம், வந்து, அது தான் வாழ்க்கை, இல்ல? 200 00:12:21,867 --> 00:12:23,577 அதுவும், நான் இனி யாரையும் அழைக்கவும் முடியாது 201 00:12:23,660 --> 00:12:25,996 ஏனெனில் நான் சில்லறையை இந்த மண்ணில் தொலைத்து விட்டேன். 202 00:12:26,580 --> 00:12:27,581 வந்து, மனசு தளராதே. 203 00:12:28,457 --> 00:12:31,627 உண்மையில் என்னிடம் டிரக்கில், ஒரு உலோக உணர்வி உள்ளது, அதை கொண்டு வரலாம். 204 00:12:31,710 --> 00:12:33,921 அதை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் கண்டுபிடிக்க முடியும் என ஆச்சரியப்படுவாய். 205 00:12:34,505 --> 00:12:38,050 வைர மோதிரங்களும், தங்கப் பல்லும். 206 00:12:38,133 --> 00:12:41,094 ஒரு முறை ஒரு பைக்கூட கிடைத்தது. நான் இன்னும் அதை ஓட்டுகிறேன். 207 00:12:42,262 --> 00:12:45,641 என்ன லாபம்? அது போய்விட்டது. 208 00:12:47,059 --> 00:12:49,645 டைலரைப் போல. எல்லாவற்றையும் போல. 209 00:12:49,728 --> 00:12:51,104 அப்படிதான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 210 00:12:51,188 --> 00:12:55,317 உன்னை மாதிரி ஒரு அழகான பெண்ணிற்கு எல்லா வசதிகளையும் தந்திருக்க வேண்டும். 211 00:12:56,652 --> 00:12:57,778 ராணி மாதிரி வைத்திருக்கணும். 212 00:12:57,861 --> 00:13:00,197 எனக்கு அது தேவையும் இல்லை. 213 00:13:00,739 --> 00:13:02,366 என்னால் என்னை பார்த்துக் கொள்ள முடியும். 214 00:13:02,950 --> 00:13:04,868 எனக்கு 18 வயது ஆனதிலிருந்தே நான் அப்படி தான் இருந்திருக்கிறேன். 215 00:13:04,952 --> 00:13:07,079 அப்புறம் தான் இந்த அழகான நபரை சந்தித்தேன், 216 00:13:07,162 --> 00:13:09,915 அப்புறம் திடீரென்று இவனை நம்பிவிட்டேன். 217 00:13:09,998 --> 00:13:13,043 என்னுடைய தவறு. தப்பு என்னுடையது. 218 00:13:13,126 --> 00:13:15,838 இந்த உலகத்தில் என்னால் யாரையும் நம்ப முடியாது. 219 00:13:15,921 --> 00:13:19,007 -டமால். எனக்கு ஒன்று கிடைத்தது. -எனக்கும் தான். 220 00:13:19,883 --> 00:13:20,884 பார்த்தாயா? 221 00:13:21,468 --> 00:13:22,553 ஆம், பார்க்கிறேன். 222 00:13:24,513 --> 00:13:26,098 இதை பார்க்கிறாயா? 223 00:13:26,181 --> 00:13:27,432 போகாதே, பொறு, பொறு. 224 00:13:30,727 --> 00:13:32,271 ஓ, கடவுளே. 225 00:13:32,980 --> 00:13:35,774 அடடா, உன்னை காதலிக்கிறேன் என்று நினைக்கிறேன். 226 00:13:37,150 --> 00:13:39,695 அவர்கள் அதை விரும்புகிறார்கள், என்ன? அவர்கள்... எல்லோருமே. 227 00:13:40,529 --> 00:13:42,239 யாரும் வற்புறுத்தவில்லை. அவர்களுக்குச் சம்மதம் தான். 228 00:13:43,240 --> 00:13:44,700 நான் அதை வலியுறுத்துகிறேன். 229 00:13:44,783 --> 00:13:46,326 எனவே, அதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா? 230 00:13:46,869 --> 00:13:47,870 ஏன்? 231 00:13:48,954 --> 00:13:52,082 எனக்குத் தெரியவில்லை. எனக்கு பிடித்துள்ளது. 232 00:13:52,165 --> 00:13:54,543 இது விசித்திரமாகவும், சங்கடமாகவும் இருக்கிறது. 233 00:13:54,626 --> 00:13:59,548 ஆனாலும் எனக்கு பிடித்துள்ளது. நிஜமா... எப்போதுமே. 234 00:13:59,631 --> 00:14:01,508 ஆனால் நான் அதை தனியாகத்தான் வைத்திருக்கிறேன். 235 00:14:01,592 --> 00:14:07,389 ஆனால் நீ என்னுடைய தனிகையை உடைத்தாய், உனக்கு அந்த உரிமை இல்லை. 236 00:14:09,349 --> 00:14:11,602 என்னை மன்னித்துவிடுங்கள். 237 00:14:13,228 --> 00:14:14,980 ஓ, கடவுளே. இதில் உங்கள் தவறே இல்லையே. 238 00:14:15,063 --> 00:14:17,524 -என்னை மன்னித்து விடுங்கள். -நாசம், கிரெட்டா, அப்படிச் செய்யாதே. 239 00:14:17,608 --> 00:14:20,194 -உடனே தழைந்து போகாதே. -என்னை மன்னித்து விடுங்கள். 240 00:14:20,277 --> 00:14:23,906 -மீண்டும் அதையே செய்கிறாயே. -ஓ, கடவுளே. சரி! எனக்கு... நான் கோபம். 241 00:14:23,989 --> 00:14:25,657 எனக்கு உங்கள் மீது கடும் கோபம். 242 00:14:26,450 --> 00:14:29,077 நீங்கள் என்னிடமிருந்து விஷயங்களை மறைத்திருக்கிறீர்கள். 243 00:14:29,161 --> 00:14:30,871 என்னை பயத்தில் ஆழ்த்தினீர்கள். 244 00:14:30,954 --> 00:14:32,497 ஏன் அப்படிச் செய்தீர்கள்? 245 00:14:33,081 --> 00:14:34,958 -உன்னை காப்பாற்ற தான். -எதிலிருந்து காப்பாற்ற நினைத்தீர்கள்? 246 00:14:35,542 --> 00:14:36,543 என்னிடமிருந்து. 247 00:14:37,920 --> 00:14:39,505 என் நிஜ உருவிலிருந்து... என்னிடமிருந்து... நான்... 248 00:14:41,131 --> 00:14:44,009 நான் ஒரு அரக்கன், பைத்தியம், இன்னும் ஒரு மூர்க்கன் மற்றும் ஒரு விசித்திர பிறவி. 249 00:14:44,801 --> 00:14:50,307 நாம் எல்லோருமே பைத்தியங்கள் தான். அகத்தில். எல்லோருமே. 250 00:15:14,164 --> 00:15:15,165 நான்... 251 00:15:16,416 --> 00:15:17,417 என்ன? 252 00:15:19,670 --> 00:15:21,171 நீங்கள் என்ன? சொல்லுங்கள், என்னவென்று. 253 00:15:23,549 --> 00:15:27,511 எர்ணி, நீங்கள் என்னிடம் சொல்லணும், இனிமேல், 254 00:15:27,594 --> 00:15:28,679 என்னவானாலும். 255 00:15:32,057 --> 00:15:35,477 எனக்கு மிகவும் கிளர்ச்சியாக இருக்கு. 256 00:15:42,776 --> 00:15:44,069 சரியே, நீங்கள் அப்படிதான் இருக்கிறார்கள். 257 00:15:44,152 --> 00:15:45,487 -ஆமாம். -எனக்கு. 258 00:16:09,469 --> 00:16:10,971 -நான் எங்கே இருக்கிறேன்? -ஹே, ஹை. 259 00:16:11,054 --> 00:16:12,181 நீங்கள் எல்ஏயில் இருக்கிறீர்கள். 260 00:16:12,764 --> 00:16:15,309 நினைவிருக்கிறதா? நாம் நிதியுதவித் தேடலில் ஒரு பயணம் வந்தோம். 261 00:16:15,392 --> 00:16:16,435 ஆம். 262 00:16:17,811 --> 00:16:19,396 இப்போது எனக்கு படு பயங்கரமான ஒரு கனவு வந்தது. 263 00:16:21,064 --> 00:16:24,109 இந்த வீட்டில் ஒரு மலைச் சிங்கம் சுதந்திரமாக திரிவது போலவும், 264 00:16:24,193 --> 00:16:26,695 அதுவும் மிகப் பெரியதாக இருந்தது. 265 00:16:26,778 --> 00:16:28,530 மேலும் என்னால் மாயாவை பார்க்க முடிவில்லை, 266 00:16:28,614 --> 00:16:30,324 உன்னையும் காணவில்லை. 267 00:16:31,700 --> 00:16:33,619 என் வீட்டுப் பெண்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை. 268 00:16:37,414 --> 00:16:38,665 நீ எங்கு சென்றாய்? 269 00:16:38,749 --> 00:16:43,587 மருந்துக் கடை. மாயாவின் வயிற்றுவலி. உங்கள் வலி. ஏதோ ஒரு பொய். அப்படியே சொல். 270 00:16:43,670 --> 00:16:46,089 நான் என் பெற்றோர்கள் வீட்டிற்கு போனேன். 271 00:16:47,132 --> 00:16:48,133 கண்ணே. 272 00:16:49,635 --> 00:16:50,802 ஏன் அங்கு போனாய்? 273 00:16:50,886 --> 00:16:55,724 நான் உங்களை இங்கு வர கட்டாயப் படுத்தியதைப்பற்றி மோசமாக உணர்ந்தேன் 274 00:16:55,807 --> 00:16:59,853 மேலும் உங்களை இதையெல்லாம் செய்ய வைத்து, ஒரு பயனுமில்லாமல் போனதே. 275 00:17:00,354 --> 00:17:02,814 அதற்கெல்லாம் ஈடு செய்ய நினைத்தேன், அதைச் செய்தேன். 276 00:17:03,649 --> 00:17:04,650 அதற்காக இல்லை... 277 00:17:07,736 --> 00:17:08,737 பாருங்கள்? 278 00:17:13,534 --> 00:17:14,910 இதற்கு பதிலாக என்ன கேட்டார்கள்? 279 00:17:15,702 --> 00:17:18,372 கேவலம். எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்வாயோ. 280 00:17:18,454 --> 00:17:20,165 அவர்கள் மாயாவை சந்திக்க விரும்பினார்கள். 281 00:17:20,249 --> 00:17:21,583 விளையாடுகிறாய் போலும். 282 00:17:22,459 --> 00:17:24,461 கூடவே நான் அங்கு இருப்பேன். 283 00:17:24,545 --> 00:17:26,171 அவர்களுடன் அவளை தனியாக விடவே மாட்டேன். 284 00:17:26,255 --> 00:17:28,757 -கண்டிப்பாக பாதுகாப்பாக இருக்கும். -இல்லை. வேண்டாம், கூடவே கூடாது. 285 00:17:28,841 --> 00:17:30,843 தயவுசெய்து, தயவுசெய்து. தயவுசெய்து வேண்டாம். வேண்டாம், தயவுசெய்து. 286 00:17:30,926 --> 00:17:33,762 மன்னித்து விடுங்கள். மன்னிக்கணும். நான் சம்மதித்திருக்கக் கூடாது. 287 00:17:33,846 --> 00:17:37,349 ஆனால் இதிலிருந்து கிடைக்கும் நன்மைகளை யோசித்துப் பாருங்கள். 288 00:17:37,432 --> 00:17:39,726 -நீங்கள் செய்யக் கூடியவற்றை. -எனக்குக் கவலையில்லை. 289 00:17:39,810 --> 00:17:40,811 அதெல்லாம் தேவையில்லை. 290 00:17:40,894 --> 00:17:43,522 அமெரிக்க தீவிரவாத இயக்கத்திற்கு வேண்டுமானும் என் உயிரை பணயம் வைப்பேன். 291 00:17:44,314 --> 00:17:48,986 சரி, என் தாய் மட்டும் இருந்தால், அப்போது சம்மதிப்பீர்களா? 292 00:17:49,570 --> 00:17:51,613 -உன் தாய் மட்டுமா? -வந்து, நடந்தது அவர் தப்பு இல்லையே. 293 00:17:51,697 --> 00:17:53,031 அதாவது, அது அப்பாவின் நண்பர். 294 00:17:53,115 --> 00:17:56,201 நீ அவரிடம் சொன்னாயே, இருந்தும் அவர் எதுவும் செய்யவில்லையே. 295 00:17:57,286 --> 00:17:59,872 அதாவது, வந்து, அவர் என்ன செய்ய முடியும்? 296 00:17:59,955 --> 00:18:01,248 உன்னை நம்பியிருக்கலாமே. 297 00:18:01,331 --> 00:18:02,541 உன் பக்கம் வாதாடியிருக்கலாமே. 298 00:18:03,750 --> 00:18:05,210 ஆனால் அவருக்கு தைரியமில்லை. 299 00:18:05,294 --> 00:18:07,671 அதெல்லாம் நிஜமாகவே எளிதானது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். 300 00:18:08,463 --> 00:18:09,548 ஏன் நினைக்க மாட்டார்? 301 00:18:09,631 --> 00:18:12,509 அதாவது, உனக்கு அப்போது என்ன வயது? பதிநான்காக இருக்குமா? 302 00:18:14,803 --> 00:18:16,680 எனக்கு துல்லியமாக நினைவில்லை. 303 00:18:16,763 --> 00:18:22,186 பதிமூன்று வயது, உருண்டை முகம், மென்மையான வயிறு. உனக்குத் தெரியும். 304 00:18:22,686 --> 00:18:24,730 அந்த திருடர்களுக்கு நாம் கடன் பட்டிருக்கத் தேவையில்லை. 305 00:18:24,813 --> 00:18:27,191 உன் குடும்பம் என்பது இங்கே தான் இருக்கிறது, புரிந்ததா? 306 00:18:28,025 --> 00:18:30,319 மாயாவும் நானும். 307 00:18:30,402 --> 00:18:31,403 சரி. 308 00:18:32,362 --> 00:18:33,363 சரியா? 309 00:19:06,897 --> 00:19:08,106 என்னை பயமுறுத்துகிறாயா? 310 00:19:08,190 --> 00:19:12,027 மன்னித்துவிடு என்று சொல்லி தொடங்குகிறேன், அன்பே. என்னை மன்னித்துவிடு. 311 00:19:12,611 --> 00:19:13,612 நான் மோசமாக நடந்து கொண்டேன். 312 00:19:13,695 --> 00:19:17,032 மேலும் நான் இரவு முழுவதும் இந்த சறுக்கு அட்டையுடன், 313 00:19:17,115 --> 00:19:19,535 உன்னுடன் பேச முயன்று, மற்றும் நான்... 314 00:19:20,619 --> 00:19:21,620 நான் வந்து... 315 00:19:22,579 --> 00:19:23,956 -நீ என்ன கத்தியா வைத்திருக்கிறாய்? -ஆமாம், 316 00:19:24,039 --> 00:19:25,791 ஏன்னென்றால், உன் மீது எனக்கு கடும் கோபம், மடையனே, 317 00:19:25,874 --> 00:19:27,543 மேலும் நான் அதை உபயோகிக்கவும் போகிறேன். 318 00:19:29,711 --> 00:19:31,338 உன்னை யாராவது பாலியல் பலாத்காரம் செய்தார்களா? 319 00:19:33,423 --> 00:19:36,009 யார் உன்னை பலாத்காரம் செய்தார்கள்? செய்தார்களோ, செய்கிறார்களோ, ஏதோ. 320 00:19:36,093 --> 00:19:37,302 நான் அவனை கொன்று விடுகிறேன். 321 00:19:39,304 --> 00:19:42,474 யாரோ பரதேசி. நான் அவனுடன் பேசியிருக்கவே கூடாது. 322 00:19:43,851 --> 00:19:46,478 நீ எங்கு போனாயோ தெரியவில்லை! நான் யோசிக்கவேயில்லை! 323 00:19:48,021 --> 00:19:51,316 நாசம், கண்ணே. உன் தவறில்லை. என் தப்பு. 324 00:19:57,197 --> 00:20:00,826 நீ-நீ என்னுடன் இல்லாத போது நான் எடுக்கும் முடிவுகள் தவறாகின்றன. 325 00:20:03,579 --> 00:20:08,000 நான், அதனால்தான் நீ எனக்குத் தேவை. மேலும், நான்... நீ என்னை ஈர்க்கிறாய். 326 00:20:08,876 --> 00:20:09,918 நல்லது. 327 00:20:10,460 --> 00:20:12,754 ஏனென்றால் எனக்கு உன்னை விட்டால் வேறு யாரும் கிடையாது. 328 00:20:12,838 --> 00:20:14,506 எனக்கு உன்னைத் தவிர வேறு திட்டமும் இல்லை. 329 00:20:20,804 --> 00:20:23,307 அந்த திருடன் பிரையனைப் பற்றி உன்னிடம் எப்போதாவது கூறியிருக்கேனா? 330 00:20:24,766 --> 00:20:25,809 உன் அண்ணனா? 331 00:20:25,893 --> 00:20:28,187 இல்லை, பிரையன். என் அண்ணன், நல்லவன். 332 00:20:28,270 --> 00:20:30,272 அவனுக்கு விபத்து நடந்த பிறகு, அமைதி ஆகிவிட்டான். 333 00:20:31,690 --> 00:20:33,442 நான் சொன்னது, பிரையன், என் மாற்று தந்தை. 334 00:20:34,401 --> 00:20:35,402 இல்லையே. 335 00:20:35,485 --> 00:20:37,738 அவன், சரியான அகராதிபிடித்தவன். 336 00:20:37,821 --> 00:20:39,907 எப்போதும் எங்களை ஏவிவிட்டு, என்னை முட்டாள் என்று அழைப்பான். 337 00:20:39,990 --> 00:20:42,409 என் தாய் எப்போதும் அவன் பக்கம் தான் பேசுவாள். 338 00:20:42,492 --> 00:20:45,162 அவள் ஒரு முறையாவது அப்படிச் செய்யாமல் இருப்பாள் என எதிர்பார்த்தேன், ஆனால் இல்லை. 339 00:20:46,622 --> 00:20:48,457 அராஜகர்கள், படங்களில் மட்டும் தான் தோற்ப்பார்கள். 340 00:20:49,208 --> 00:20:50,459 நிஜவாழ்வில், அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். 341 00:20:54,087 --> 00:20:55,589 எப்படியானாலும், நான் ஒரு முட்டாள். 342 00:20:55,672 --> 00:20:56,882 அதாவது, நான்... 343 00:20:56,965 --> 00:21:00,552 நான் இந்த சறுக்கு அட்டையை வாங்கினேன், ஆனால் சவாரித்தது நினைவே இல்லை. 344 00:21:00,636 --> 00:21:03,055 நாம் சேமிக்கின்றோம் எனத் தெரியும். நான்... நான் வந்து சொதப்பிவிட்டேன். 345 00:21:06,058 --> 00:21:08,435 நாம் அதைப்பற்றி அப்புறம் பேசலாமா? 346 00:21:10,062 --> 00:21:11,563 நீ நாசமாப் போக. 347 00:21:11,647 --> 00:21:13,398 நானும் அதற்கு ஒத்துக்கொள்கிறேன். 348 00:21:14,691 --> 00:21:17,945 -போ, அன்பே. உட்காரு. -அவளுக்கு, வழிக்கு எதுவும் தேவையா? 349 00:21:18,028 --> 00:21:21,532 -எதுவும் சிற்றுண்டி அல்லது ஏதாவது? -பரவாயில்லை. எல்லாவற்றிற்கும் நன்றி. 350 00:21:21,615 --> 00:21:25,911 ஆம். வந்து, நாம் அடுத்த முறை சந்திக்கும்போது, தாயாகியிருப்பேன். 351 00:21:26,411 --> 00:21:29,414 உலகில் நடக்கும் மிக இயல்பான ஒன்றுதான் அது என்று எனக்குத் தெரியும் 352 00:21:29,498 --> 00:21:33,293 நான் பயப்படக்கூடாது என்றோல்லாம், இருந்தாலும், சற்று பயமாக இருக்கிறது. 353 00:21:33,377 --> 00:21:36,505 ஏதாவது சொல்லு. தைரியம் சொல்லு. கொஞ்சம் மனிதாபிமானத்துடன் இரு. 354 00:21:36,588 --> 00:21:40,342 யாரும் தயாராக இருப்பதில்லை. ஆனால், என்னை நம்பு, உனக்கு தேவையானது இருக்கிறது. 355 00:21:40,425 --> 00:21:41,718 பயப்படத் தேவையே இல்லை. 356 00:21:42,594 --> 00:21:44,054 பிரசவிக்கும் பகுதியைப் பற்றி கூறுகிறேன். 357 00:21:44,137 --> 00:21:47,933 தாயாவது, அது உனக்கேத் தெரியும், பயங்கரம், மற்றும் நிரந்திரமானது. 358 00:21:48,016 --> 00:21:50,060 ஆனால், நல் வாழ்த்துக்கள். 359 00:21:50,561 --> 00:21:51,562 எல்லாம் சரியாகிவிடும். 360 00:21:53,814 --> 00:21:56,024 -மிக்க நன்றி. -நன்றி. 361 00:21:57,651 --> 00:21:59,778 -பை. -பார்த்ததில் மகிழ்ச்சி. நல்லது. 362 00:21:59,862 --> 00:22:01,405 நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருவோம். 363 00:22:01,488 --> 00:22:03,574 -ரூபினுக்கு வாக்கு. -போ ரூபின். 364 00:22:03,657 --> 00:22:04,825 -பை. -பை, மாயா. 365 00:22:06,910 --> 00:22:10,205 ஓ, கடவுளே. அவர்கள் போகவே மாட்டார்கள் என நினைத்தேன். 366 00:22:12,541 --> 00:22:13,542 காலை வணக்கம். 367 00:22:14,209 --> 00:22:15,210 காலை வணக்கம். 368 00:22:16,587 --> 00:22:19,965 நேற்று நான் மிக விசித்திரமான ஒரு கனவைக் கண்டேன். நீங்கள் அதில் இருந்தீர்கள். 369 00:22:20,632 --> 00:22:22,885 சரி, நான் என்ன செய்தேன்? 370 00:22:23,635 --> 00:22:24,928 உலகை காப்பாற்றினேன் என்றால், நல்லது. 371 00:22:25,804 --> 00:22:27,097 இல்லை, நீங்கள் நீரில் மூழ்கிக் கொண்டு இருந்தீர்கள். 372 00:22:29,600 --> 00:22:31,351 அடேடே, அது நல்லதில்லையே. 373 00:22:31,435 --> 00:22:35,063 நீங்கள் கத்தினீர்கள், அப்புறம், அம்மா அங்கிருந்தார். 374 00:22:35,981 --> 00:22:38,942 ஒரே குழப்பமாக இருந்தது, ஆனால் நிஜத்தைப் போலவே இருந்தது. 375 00:22:40,819 --> 00:22:42,821 நீங்கள் இருவரும் நேற்று நீஞ்சினீர்களா, என்ன? 376 00:22:44,781 --> 00:22:47,701 படுக்கும் முன் நிறைய தொலைக்காட்சியை பார்த்தால், இப்படிதான் ஆகும். 377 00:22:48,452 --> 00:22:50,829 குறிப்பாக அந்த ஃபான்டசி ஐலாண்டு நிகழ்ச்சியை பார்த்தால். 378 00:22:51,538 --> 00:22:52,539 ஆமாம். 379 00:22:53,415 --> 00:22:54,458 ஆம், ஒரு வேளை அது தானோ என்னவோ. 380 00:22:55,542 --> 00:22:57,669 அம்மா இன்னும் உறங்குகிறாரா? காலை உணவு இருக்கவில்லை. 381 00:23:24,029 --> 00:23:25,906 நீ வரமாட்டாய் என்று உன் தாய் நினைத்தாள். 382 00:23:25,989 --> 00:23:27,241 உறுதியில்லை என்றுதான் சொன்னேன். 383 00:23:27,324 --> 00:23:29,785 கடந்தகாலத்தில் நீ நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்ளவில்லை, 384 00:23:29,868 --> 00:23:31,703 அதனால் அப்படி சந்தேகப்படுவது இயல்புதான். 385 00:23:31,787 --> 00:23:32,955 அப்புறம் அவள் எங்கே? 386 00:23:33,038 --> 00:23:36,250 அவள், தன் தந்தையுடன் வெளியே காரில் இருக்கிறாள். 387 00:23:36,834 --> 00:23:38,669 மேலும் அவள் அங்கே தான் இருக்கப் போகிறாள். 388 00:23:39,461 --> 00:23:41,672 நான் பல திருடர்களை சந்தித்திருக்கிறேன், தெரியுமா. 389 00:23:42,256 --> 00:23:45,175 இங்கிதமில்லாத, குரூரமான, வன்முறையில் ஈடுபடுபவர்களையும். 390 00:23:45,259 --> 00:23:48,220 ஆனால், இருப்பதிலே மிகவும் மட்டமானவர்கள் நீங்கள்தான். 391 00:23:48,303 --> 00:23:50,514 ஒரு அழகான வீட்டில் போலி இங்கிதத்துடன் இருப்பதால், 392 00:23:50,597 --> 00:23:51,765 யாரும் அதை எதிர்பார்க்காததால், 393 00:23:51,849 --> 00:23:54,726 நீங்கள் எவ்வளவு இருளடைந்த மனதை உடையவர்கள் என்பது தெரிவதில்லை! 394 00:23:56,687 --> 00:23:59,565 நான் இளம் யுவதியாக இருந்தபோது, என்னை ஏவினீர்கள், எனக்குத் தெரியலை. 395 00:24:00,566 --> 00:24:02,442 ஆம், நீங்கள் தான் உலகம் என நம்பினேன். 396 00:24:02,526 --> 00:24:06,822 இப்போது எனக்கு புரிந்துவிட்டது, நீங்கள் இருவரும், கோழையான, புறநகர் கிழங்கள், 397 00:24:06,905 --> 00:24:08,407 உண்மையை எதிர்கொள்ளும் தைரியமில்லாதவர்கள் என்று! 398 00:24:08,490 --> 00:24:10,200 என் வீட்டில் நீ இப்படிப் பேசுவதை அனுமதிக்க முடியாது. 399 00:24:10,284 --> 00:24:12,160 உங்கள் வீட்டில் என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? 400 00:24:12,244 --> 00:24:13,704 உங்கள் பழைய தோழர் என்ன செய்தார் என்று? 401 00:24:13,787 --> 00:24:14,830 அவர் என் படுக்கையறைக்கு வந்து 402 00:24:14,913 --> 00:24:17,207 என் பைஜாமாவை கீழிறக்கி, தன் கையில் எச்சிலை உமிழ்ந்து... 403 00:24:17,291 --> 00:24:18,542 நிறுத்து, போதும் நிறுத்து! 404 00:24:18,625 --> 00:24:20,961 -உடனே நிறுத்து! -அப்போது நீயும் என்னை நம்பவில்லை. 405 00:24:21,044 --> 00:24:24,131 மேலும் இப்பவும் கூட என்னை நீ நம்பவில்லை. சரி, இதை பார்த்து நம்பு! 406 00:24:26,550 --> 00:24:27,676 நீ நலமாக இருக்கிறாயா? 407 00:24:28,218 --> 00:24:29,803 ஆமாம். ஆம், நலம்தான். 408 00:24:47,029 --> 00:24:48,989 அப்படி போடு, என் செல்லம். ஆம். 409 00:24:54,286 --> 00:24:55,662 வெளியே இறங்கலாம். 410 00:25:23,524 --> 00:25:24,983 நான் நீச்சலடிக்கப் போகிறேன். 411 00:25:25,067 --> 00:25:27,778 -புது நீச்சலுடையா, அம்மா? -இல்லையே, வெகு காலமாய் இருக்கே. 412 00:25:27,861 --> 00:25:29,947 -உன் பின்புறம் பெரிதாகத் தெரிகிறது. -இரண்டு தலையணைகளைப் போல. 413 00:25:30,030 --> 00:25:32,157 -நீ வேறு நீச்சலுடை அணியணும். -ஆடைகளை மேலே போட்டு மூடணும். 414 00:25:32,241 --> 00:25:33,867 ஹே, ஹே. போதும். அப்படி அன்பில்லாமல் பேசக்கூடாது. 415 00:25:33,951 --> 00:25:35,786 அம்மா நீச்சல் குளத்தில் உல்லாசமாக இருக்கப் போகிறார். 416 00:25:36,453 --> 00:25:37,454 நன்றாக இன்புறு, அன்பே. 417 00:25:38,121 --> 00:25:39,540 நன்றி. 418 00:25:39,623 --> 00:25:41,625 சரி, உங்கள் சீரியலை சாப்பிடுங்கள். 419 00:25:44,211 --> 00:25:46,547 -நன்றி, அம்மா. -நன்றி, அம்மா. 420 00:25:48,215 --> 00:25:50,634 எழுந்திரு, அன்பே. எழும் நேரமாகிவிட்டது. 421 00:25:50,717 --> 00:25:52,135 பாரு எனக்கு இங்கே என்ன கிடைத்ததென்று. 422 00:25:52,886 --> 00:25:55,931 பொழுது சாய்ந்தது, பார்க்கும் வேளை வந்தது 423 00:25:56,932 --> 00:26:01,645 ஹே, அன்பே. இறைவன் வருகிறார், வேலை செய். 424 00:26:02,604 --> 00:26:06,066 காரின் பம்பரில் அந்த ஸ்டிக்கரை ஒரு முறை பார்த்தேன். சிரிப்பு வந்தது. 425 00:26:08,151 --> 00:26:09,945 அன்பே, நிஜமாக நீ எழுந்து கொள்ளணும். 426 00:26:10,028 --> 00:26:13,699 என் நண்பன் வீட்டிற்கு வருகிறான். அவன் தான் என் மேலதிகாரியும் கூட. 427 00:26:13,782 --> 00:26:14,867 அடடா. 428 00:26:17,244 --> 00:26:19,162 அப்போ நானே சுத்தம் செய்துவிடுகிறேன். 429 00:26:20,205 --> 00:26:22,416 நேற்று இரவு நல்ல உல்லாசமாக இருந்தது, இல்ல? 430 00:26:25,836 --> 00:26:27,462 இது என்னது? 431 00:26:27,546 --> 00:26:29,882 நாட்குறிப்பு 432 00:26:35,012 --> 00:26:39,016 எனக்கு இன்னும் எல்ஏ பிடிக்கவில்லை. அது அப்பட்டம். 433 00:26:40,100 --> 00:26:42,519 நல்ல வேளை. வீடு திரும்பினோம். 434 00:26:44,021 --> 00:26:45,856 -வேறு என்ன சொல்வது. -ஆமாம். 435 00:26:45,939 --> 00:26:50,319 இனிமேல் அங்கு மீண்டும் போவேனா, அதுவும் விரைவில், சந்தேகம்தான். 436 00:26:51,069 --> 00:26:53,322 இருந்தாலும், நாம் போனது நல்லதுதான். 437 00:26:53,906 --> 00:26:56,825 இங்கே வீட்டில் உள்ள இன்பத்தை அது எனக்கு நினைவூட்டுகிறது 438 00:26:56,909 --> 00:26:58,368 ...நாம் எதற்காகப் போராடுகிறோம் என்பதும். 439 00:26:58,452 --> 00:26:59,453 மிகவும் சரி. 440 00:27:00,746 --> 00:27:03,123 நல்லது, நல்லது, நல்லது. 441 00:27:06,627 --> 00:27:11,757 இருவரும் கன்யாஸ்திரீயின் உறுப்பைப் போல அனுபவமின்றி இருக்கிறீர்கள். 442 00:27:11,840 --> 00:27:14,343 -ஹே, ஜெர். என்ன நடக்குது, நண்பா? -எனக்குத் தெரியாது, தோழா. 443 00:27:14,927 --> 00:27:16,470 உன் மனைவியை கேட்டுப் பாரேன்? 444 00:27:17,429 --> 00:27:18,597 ஹான், ஷீல்? 445 00:27:19,890 --> 00:27:21,850 என்ன எழவு நடக்குது இங்கே? 446 00:28:55,152 --> 00:28:57,154 தமிழ்மொழியாக்கம் அகிலா குமார்