1 00:00:16,265 --> 00:00:18,519 இரண்டு... இரண்டு. 2 00:00:21,480 --> 00:00:23,065 என்ன செய்து கொண்டிருக்கிறாய்? 3 00:00:24,107 --> 00:00:25,817 கூறு, "தினப்படி ஏரோபிக்ஸ் பயிற்சி முறை" என. 4 00:00:25,901 --> 00:00:27,611 அல்லது, "உன் தலையில் இடி விழ" என்று. 5 00:00:27,694 --> 00:00:30,280 பாப்கார்ன் வெடிக்கிறது. அட, பாருப்பா. 6 00:00:30,364 --> 00:00:32,406 அ-அடுத்தது என்ன? எதுவும் குழந்தை சீல் மிருகத்தை அடிக்கப் போகிறாயா? 7 00:00:32,491 --> 00:00:35,285 நீ சொல்வது புரிகிறது, ஜெர், ஆனால் முயன்று பார்க்கும் முன் தீர்மானிக்காதே. 8 00:00:35,369 --> 00:00:36,411 சூடு. 9 00:00:39,540 --> 00:00:42,584 -ஏற்கனவே இதில் வெண்ணை இருக்கு. -ஆம். அப்படிதான் வருகிறது. 10 00:00:42,668 --> 00:00:47,589 அடடா. அடுத்தது என்னவெல்லாம் யோசிப்பார்கள்? 11 00:00:47,673 --> 00:00:50,384 உண்மையில் அமுலாக்கக்கூடிய மின் திட்டமா? 12 00:00:53,428 --> 00:00:54,513 ஆம். 13 00:00:56,098 --> 00:00:57,307 அதைத் தொடாதே! 14 00:00:58,767 --> 00:01:00,394 உன் கைகளில் பிசுபிசுப்பு. 15 00:01:00,477 --> 00:01:03,814 பிரச்சாரத்திற்கான நிதியுதவி நிலை எப்படி உள்ளது என பார்க்க நினைத்தேன். 16 00:01:03,897 --> 00:01:06,024 அதை, நான்... நானே உனக்குச் சொல்கிறேனே. 17 00:01:06,108 --> 00:01:08,235 உனக்கு அதில் ஒன்றும் புரியாது. எல்லாம் என்னுடைய கோழி கிறுக்கல். 18 00:01:08,318 --> 00:01:09,653 சரி, செல்லம், இதை புரிந்து கொள். 19 00:01:09,736 --> 00:01:13,615 எனக்கு காமெராவிற்கு முன் சிரிப்பது எப்படி என சொல்லித் தருவதற்கு ஒரு 20 00:01:13,699 --> 00:01:16,910 ஒரு மீடியா காண்டாமிருகத்தை ஏற்பாடு செய்ய, இதோ, ஜெர்ரி ஆசைப்படுகிறான். 21 00:01:16,994 --> 00:01:18,787 ஒரு மீடியா ஆலோசகர் தானப்பா, பாரு. 22 00:01:18,871 --> 00:01:22,749 நாம் ஒரு பிரசார விளம்பரம் செய்வதானால், ஒழுங்காகதான் பண்ணணும். 23 00:01:22,833 --> 00:01:26,086 -ஒரு கைதேர்ந்த நிபுணரை இங்கே வரவழைத்து... -இல்லாத ஒருவனாக என்னை மாற்றணும். 24 00:01:26,170 --> 00:01:27,629 கண்டிப்பாக இல்லை. 25 00:01:27,713 --> 00:01:30,549 பாரு, எனக்கு மைக் ஷ்மிடிட் போன்ற ஆட்களைத் தெரியும். 26 00:01:31,258 --> 00:01:34,094 பார்க்க தான் ஆளு வாட்டசாட்டம், புத்தி வெறும் அழுகிய தக்காளி தான். 27 00:01:34,178 --> 00:01:36,346 நான் பணியில் இருக்கும் போது அவர்களிடம் எல்லாம் வேலை செய்துள்ளேன். 28 00:01:36,430 --> 00:01:40,350 நாம் வெற்றி பெற ஒரே வழி, ஓங்கி திருப்பி அடிப்பது மட்டும் தான், சரியா? 29 00:01:40,434 --> 00:01:45,022 சில நிபுணர்களை வேலையில் அமர்த்தி, அழகான விளம்பரத்தை செய்து, தோற்க்கடிக்கணும். 30 00:01:45,105 --> 00:01:47,441 உன்னிடம் பணமோ இருக்கு. அதை ஏன் செலவு செய்யக் கூடாது? 31 00:01:47,524 --> 00:01:49,193 பணம்தானே இல்லை. 32 00:01:49,276 --> 00:01:53,197 ஆனால் நாம் செய்வதோ அடிமட்ட மக்கள் பிரச்சாரம். விளம்பரம் அதைக்காட்ட வேண்டாமா? 33 00:01:54,323 --> 00:01:56,283 நீ என்ன தான் சொல்ல வருகிறாய்? 34 00:01:56,783 --> 00:01:57,784 சான் டீயாகோவில் எடுத்த சில 35 00:01:57,868 --> 00:02:01,288 காணொளிகளின் பாகங்களை எல்லாம் சேர்த்து போடலாம் என்கிறாயா? 36 00:02:01,371 --> 00:02:02,789 அவ்வளவு போதுமா? 37 00:02:02,873 --> 00:02:05,834 இல்லை. நான் சொல்வது, என் கைவசம் உள்ள, அதி நவீன வீடியோ 38 00:02:05,918 --> 00:02:10,797 காமெரா தொழில்நுட்பத்தைக் கொண்டு நாம் ஒரு காணொளியை எடுக்கலாம் என்று. 39 00:02:10,881 --> 00:02:13,634 ஏனென்றால் என் மனைவி 40 00:02:14,927 --> 00:02:18,305 அப்படி ஒரு அசத்தலான வடிவழகி. 41 00:02:19,014 --> 00:02:21,308 அதாவது, அறிவாளி. 42 00:02:22,351 --> 00:02:24,144 பொய் பேசுபவள் மற்றும் திருடி என்றும் சேர்க்க மறவாதே. 43 00:02:24,228 --> 00:02:26,063 நீ பீடாமேக்ஸைப் பற்றி கூறுகிறாய், சரிதானே? 44 00:02:29,816 --> 00:02:32,486 சான்டி ஃபீட் பிரீஸ்கூல் 45 00:02:33,237 --> 00:02:34,738 மாயா! இல்லை, இல்லை, ரோடு மேலே வேண்டாம்! மாயா! 46 00:02:34,821 --> 00:02:36,823 -சரி, அம்மா. ஹை. -ஹை, ஹை, ஹை, மாயா. 47 00:02:36,907 --> 00:02:38,075 ஹலோ. 48 00:02:38,158 --> 00:02:40,452 ரோடின் மேலே ஓடக்கூடாது என உனக்குத் தெரியுமே. 49 00:02:49,127 --> 00:02:51,797 அன்று இரவு நடந்ததைப் பற்றி, நான் உங்களிடம் பேச வேண்டும். 50 00:02:51,880 --> 00:02:54,842 வேண்டாம், பரவாயில்லை. நீ என்னிடம் சொல்ல வேண்டாம். வந்து... 51 00:02:57,219 --> 00:02:59,388 நீ டேனிக்கு துரோகம் செய்கிறாயா? 52 00:02:59,471 --> 00:03:00,973 உண்மையில் எனக்கும் அதற்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. ஆனால் நான்... 53 00:03:01,056 --> 00:03:03,308 நீ துரோகம் செய்வதானால், என்னால் உன்னுடன் இனி நட்பை தொடர முடியாது, 54 00:03:03,392 --> 00:03:05,686 ஏனென்றால், அது போல பொய் பேசுவதெல்லாம் சரியில்லை. 55 00:03:05,769 --> 00:03:09,523 நீ எடுத்துக் கொண்ட உறுதி மொழிகளை நீயே, உன் சுகங்களுக்காக மீறுவது. 56 00:03:09,606 --> 00:03:10,607 அது மற்றவர்களைக் காயப்படுத்தும். 57 00:03:10,691 --> 00:03:12,526 ஒரு வேளை நீ நினைக்கலாம், நான் இப்படிப் பேசுவதினால், பழம் பஞ்சாங்கம் 58 00:03:12,609 --> 00:03:14,111 -அல்லது பழமையானவள், எதுவானாலும்... -இல்லை, நான் செய்யவில்லை. 59 00:03:14,695 --> 00:03:15,696 சரி. 60 00:03:17,573 --> 00:03:18,615 சரி, அப்படியென்றால் நீ அன்று என்ன செய்தாய்? 61 00:03:19,324 --> 00:03:20,492 நீ என்னிடம் சொன்னால் நன்றாக இருக்கும். 62 00:03:20,576 --> 00:03:23,412 யாரும் என்னிடம் எந்த உண்மையையும் கூறுவதே இல்லை எனத் தோன்றுகிறது. 63 00:03:23,495 --> 00:03:25,247 பன்றியைப்போல தின்றுவிட்டு, வாந்தியெடுத்தேன். 64 00:03:25,330 --> 00:03:26,331 நிஜமாகவே அதை சொல்லப் போகிறாயா? 65 00:03:26,415 --> 00:03:28,625 அப்புறம், உன்னைப் பார்க்கும் போதெல்லாம், நிரந்திரமாக, அதையே தான் நினைப்பாள். 66 00:03:28,709 --> 00:03:30,085 நான் ஒரு பெரியப் பணி செய்கிறேன். 67 00:03:30,836 --> 00:03:34,089 அது ஒரு உடற்பயிற்சி பதிவு. 68 00:03:34,173 --> 00:03:35,424 ஏரோபிக்ஸ். 69 00:03:35,507 --> 00:03:36,633 நீங்களே வீட்டில் செய்துகொள்வது போல, உங்களுக்கு 70 00:03:36,717 --> 00:03:40,095 குழந்தைகளைப் பார்க்கும் வேலை இல்லாத போதோ, ஜிம்முக்கு போக வேண்டாம் என்றாலோ. 71 00:03:40,179 --> 00:03:42,264 அப்போது, உன்... உன் கணவரிடம் அதைச் சொல்ல முடியாதா, என்ன? 72 00:03:42,347 --> 00:03:44,850 அது முடியும்வரை மட்டும்தான். அது விரைவில் முடிந்து விடும். 73 00:03:45,434 --> 00:03:48,645 அதை ஒரு முறை அவர் பார்த்தால் போதும், அப்போ எல்லாம் சரியாகிவிடும். நம்புகிறேன். 74 00:03:48,729 --> 00:03:50,063 -ஆண்கள் எப்படி என்பதுதான் தெரியுமே. -முட்டாள்கள். 75 00:03:50,147 --> 00:03:51,106 -உண்மையா. -உண்மையா. 76 00:03:51,190 --> 00:03:54,193 உறுதியாக. அவங்க கண்கள் முன்னாடி ஒன்றை வைத்தால் தான், அவர்களுக்கு அது புரியும். 77 00:03:54,776 --> 00:03:56,653 போகுது, உனக்குப் புரியுதே, இருக்கட்டும். 78 00:03:57,988 --> 00:04:00,157 ஆம். ஆமாம். 79 00:04:00,949 --> 00:04:03,994 சரி, இந்த வாரக் கடைசியில் நான் ஒரு நிற விருந்து வைக்கின்றேன். 80 00:04:04,578 --> 00:04:07,748 அதற்குதான், இந்த பெண் வரப்போகிறார், நம் முகங்களைப் பார்த்து படித்து, 81 00:04:07,831 --> 00:04:09,082 நமக்கு எந்த காலம் உகந்தது எனச் சொல்வார், 82 00:04:09,166 --> 00:04:11,919 மேலும் நமக்கு எந்த நிறங்களில் முகப்பூச்சு பூசினால் சிறப்பாக இருக்கும் எனச் சொல்வார். 83 00:04:12,002 --> 00:04:13,545 எர்ணியும் இதில் கிடையாது. 84 00:04:13,629 --> 00:04:16,507 ஆனால், நீ வருவாயா? நீ வந்தாக... நீ வருகிறாயா? 85 00:04:16,589 --> 00:04:18,425 அதற்கு பதிலாக நான் பற்றி எரியும் வீட்டில் கூட இருப்பேன். 86 00:04:19,593 --> 00:04:21,053 கண்டிப்பாக வருகிறேன். 87 00:04:21,553 --> 00:04:22,971 புகை - கூடைகள் பயணம் - மீதம் 88 00:04:23,055 --> 00:04:25,849 இப்படியே செய்து கொண்டிருக்க முடியாது. எப்போதும் பொய் கூற முடியாது. 89 00:04:26,558 --> 00:04:27,976 சொல்லவும் மாட்டாய். 90 00:04:28,060 --> 00:04:30,938 உனக்கு போதுமான அளவு கிடைக்கும் வரைதான். நீ அதை அடையும் வரைதான். 91 00:04:31,021 --> 00:04:35,609 ஒன்று அவர்களுக்கு, ஒன்று உனக்கு. இதெல்லாம் முடிந்த உடன், உண்மையைச் சொல்வோம். 92 00:04:35,692 --> 00:04:37,569 கண்ணே, நான் உன்னுடன் பேசலாமா? 93 00:04:37,653 --> 00:04:38,904 இதோ வெளியே வருகிறேன். 94 00:04:39,655 --> 00:04:40,656 நான் உள்ளே வருகிறேன். 95 00:04:40,739 --> 00:04:42,407 எழவுபிடித்த கதவை பூட்ட மறந்துவிட்டாய். 96 00:04:45,327 --> 00:04:46,328 உனக்கு ஒன்றுமில்லையே? 97 00:04:46,411 --> 00:04:48,830 என்ன? நான்தான் வெளியே வருகிறேன் என்றேனே. அப்படி என்ன முக்கியமான விஷயம்? 98 00:04:48,914 --> 00:04:51,208 நிஜமாகவே, நான் பாரக்க அப்படிதான் இருக்கிறேனா, என்ன? 99 00:04:51,291 --> 00:04:53,752 அந்த மைக் ஷ்மிடிட்டின் விளம்பரத்தில் வருவதைப்போல? ஏதோ கோமாளியைப் போல. 100 00:04:53,836 --> 00:04:57,089 அதாவது, நான் பாரக்க அப்படிதான் இருக்கிறேன் என்றால், 101 00:04:57,172 --> 00:04:58,215 யார் என்னை தீவிரமான அரசியல்வாதியாக கருதுவார்கள்? 102 00:04:58,298 --> 00:05:01,426 அன்பரே, அது உங்கள் பெயரைக் கெடுக்க செய்த ஒரு பிரச்சாரம். 103 00:05:02,052 --> 00:05:03,053 அதெல்லாம் பொய். 104 00:05:03,637 --> 00:05:05,430 நாம், நம் காணொளியைச் செய்யும் போது, 105 00:05:05,514 --> 00:05:08,433 நீங்கள் உண்மையாகவே உள்ளதைப் போல, ஒரு வீரனாக தெரிவீர்கள். 106 00:05:10,477 --> 00:05:13,146 இல்லை, ஜெர்ரி சொல்கிறான், நமக்குத் தேவை ஒரு நிபுணர் என்று, ஆனால்... 107 00:05:14,690 --> 00:05:16,400 உண்மையில் எனக்குத் தேவை நீதான் எனத் தோன்றுகிறது. 108 00:05:16,984 --> 00:05:19,236 அவனுக்கு உண்மையாக என்ன தேவையோ அதைக் கொடுத்துத் தொலையேன். 109 00:05:19,319 --> 00:05:20,571 வெகு நாட்களாகிவிட்டது. 110 00:05:20,654 --> 00:05:22,781 உனக்கு விடுதலை என்பது வேண்டும் என்றால். 111 00:05:22,865 --> 00:05:24,241 கதவைப் பூட்டுகிறீர்களா? 112 00:05:25,242 --> 00:05:27,202 ஆம். ஆம், இதோ. 113 00:06:08,410 --> 00:06:09,411 இளைப்பாறும் நேரம். 114 00:06:10,787 --> 00:06:12,748 ஆமாம். உன் மொழியில், சிகரெட் நேரம். 115 00:06:13,248 --> 00:06:15,918 -தக்காளி, தக்காளி. -புரியலை. 116 00:06:16,001 --> 00:06:18,712 -இவ்வளவு ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்... -உனக்கு புரிய வேணாடாம். 117 00:06:18,795 --> 00:06:20,797 -எப்போதாவது நிறுத்த முயற்சி செய்தாயா? -நிறுத்தினேனே. 118 00:06:20,881 --> 00:06:22,591 அதற்கப்புறம் மீண்டும் ஆரம்பித்து விட்டேன். 119 00:06:24,259 --> 00:06:26,303 கட்டாயம் நிறுத்த வேண்டும் என்ற எதையாவது, நீ தொடர்ந்து செய்ததே இல்லையா? 120 00:06:29,223 --> 00:06:30,724 உன்னை ஒன்று கேட்கட்டுமா? 121 00:06:31,850 --> 00:06:34,686 உன் கணவனைப் பிடித்துள்ளது போல ஏன் இன்னும் நீ பாசாங்கு செய்கிறாய்? 122 00:06:35,729 --> 00:06:37,022 அவன் பணக்காரனோ, அல்லது உயரமாகக்கூட இல்லையே. 123 00:06:38,774 --> 00:06:40,943 எனக்குத் தெரிந்ததிலேயே சிறந்த அறிவாளி அவர்தான். 124 00:06:41,026 --> 00:06:44,112 ஆமாம். எனக்கு இந்த புத்திசாலிகளை என்றைக்குமே பிடித்ததில்லை. 125 00:06:44,196 --> 00:06:45,948 புத்தி அதிகம், ஆண்மை குறைவு. 126 00:06:46,031 --> 00:06:48,033 அவருக்கு ஆண்மையும் நிறையவே இருக்கு. 127 00:06:48,992 --> 00:06:50,869 அவருக்கு நம்பிக்கை உள்ளவற்றை முக்காலும் விரும்புகிறேன். 128 00:06:51,620 --> 00:06:54,122 அவர் மீது, உண்மையாகவே எனக்கு அன்பு உள்ளது. பாசாங்கு இல்லை. 129 00:06:55,415 --> 00:06:56,834 பயிற்சியை மீண்டும் ஆரம்பிக்கலாமா? 130 00:06:56,917 --> 00:06:58,252 நாம் செய்ய, இன்னும் ஒரு செயல்முறை முழுவதும் மீதம் இருக்கு. 131 00:07:06,260 --> 00:07:09,137 நான் ஒரு கேள்வி கேட்டால் நீ சங்கடப்படுவாய் என நான் புரிந்துக் கொண்டேன். 132 00:07:12,766 --> 00:07:14,685 நான் இந்த காணொளியைச் செய்வது டைலருக்காக. 133 00:07:14,768 --> 00:07:17,771 அவன் உன் கணவரின் பிரச்சார காணொளியை செய்வதில் மிக உற்சாகமாக இருக்கிறான்... 134 00:07:17,855 --> 00:07:19,439 -பிரச்சார விளம்பரம். -ஏதோ ஒன்று. 135 00:07:19,523 --> 00:07:22,901 மேலும் அது ஒரு நல்ல வர்த்தக யோசனையாக மாற வாய்ப்புள்ளது என நான் நினைக்கிறேன். 136 00:07:22,985 --> 00:07:24,736 உன்னுடைய முதல் பெண் தோழியாவதற்காக நான் இதைச் செய்யவில்லை, 137 00:07:24,820 --> 00:07:25,821 ஆகையினாலே நீ பதட்டப்பட வேண்டாம். 138 00:07:25,904 --> 00:07:27,906 வந்து, எனக்கு நிறைய பெண் நண்பர்கள் உள்ளனர், அதனால, விடு. 139 00:07:28,407 --> 00:07:31,034 கண்டுபிடித்து விட்டேன். அட்டகாசமா கண்டுபிடித்து விட்டேன். 140 00:07:31,118 --> 00:07:32,703 நம்ம படப்பிடிப்பிற்கு உன்னதமான இடத்தை. 141 00:07:32,786 --> 00:07:33,829 நல்ல இதமான-இயற்கை வெளிச்சம், 142 00:07:33,912 --> 00:07:36,456 என் படப்பிடிப்பை சிதைக்கும் கண்ணாடிகள் எதுவும் இல்லை. குறைவான வாடகை. 143 00:07:36,540 --> 00:07:39,418 ஒன்றுமில்லை. ஏனென்றால், நீ செலவு செய்யப் போவது அவ்வளவுதான். ஒன்றுமில்லை. 144 00:07:39,501 --> 00:07:41,712 -எவ்வளவு? -500 டாலர்கள். 145 00:07:42,880 --> 00:07:44,173 இரண்டு நாட்களுக்கு. 146 00:07:44,256 --> 00:07:45,966 என் நண்பன் ஒருவன், அவ்வளவு குறைவான கட்டணத்தில் தருகிறான். 147 00:07:48,677 --> 00:07:51,638 இன்னும் ஒரு மாதத்திற்கு மட்டும், வேறு ஒரு கிரெடிட் அட்டையை துவங்கலாமோ. 148 00:07:51,722 --> 00:07:53,849 அதற்கு அப்புறம் குறைந்த பட்சத் தொகையை மட்டும் கட்டி வந்தால், பணம் வரும் வரை... 149 00:07:53,932 --> 00:07:56,518 ஓ, கடவுளே. நீ எவ்வளவு நல்ல தோழி. வந்ததற்கு மிக்க நன்றி. 150 00:07:56,602 --> 00:07:58,604 கண்டிப்பாக. உங்களுக்கு ஒன்றுமில்லையே? 151 00:07:58,687 --> 00:08:01,481 இல்லை. நான் ஒண்ணு பண்ணிவிட்டேன். அது மோசமாகிவிட்டது. 152 00:08:01,982 --> 00:08:03,650 நான் ராட்சஸி என்று நினைக்க மாட்டாயே? 153 00:08:03,734 --> 00:08:05,527 அவள் ராட்சஸி என்று அவள் நினைக்கிறாளா? 154 00:08:06,069 --> 00:08:07,237 விளையாடாதீங்க. 155 00:08:10,616 --> 00:08:11,825 அவர்கள் சொன்னார்கள், இதெல்லாம் இயற்கை தான் 156 00:08:11,909 --> 00:08:13,577 என் முகம் வெகு விரைவில் குணமாகி விடும் என்று. 157 00:08:13,660 --> 00:08:16,580 எனக்குத் தோன்றுகிறது, அதில் இருந்த அமிலத்தன்மைக்கு ஒவ்வாமை ஆகிவிட்டதென. 158 00:08:16,663 --> 00:08:18,665 உங்கள் முகத்தை அமிலத்தில் நனைத்தீர்களா? 159 00:08:18,749 --> 00:08:21,335 மோசம், இன்னொருவருக்கு பணத்தைக் கொடுத்து முகத்தை அமிலத்தில் நனைக்கச் சொன்னேன். 160 00:08:22,044 --> 00:08:24,922 கிளப்பில் சில பெண்கள் பயன்படுத்தும் ஒரு ரஷ்ய பெண்ணிடம். 161 00:08:26,423 --> 00:08:27,925 போகட்டும், எவ்வளவு மோசமாக இருக்கு? 162 00:08:31,470 --> 00:08:33,263 -அவ்வளவு ஒன்றும் மோசமாக இல்லை. -ஓ, கடவுளே. 163 00:08:33,347 --> 00:08:36,892 என் முகம்தான் சற்று ஒழுங்காக இருந்தது, அதையும் கெடுத்துவிட்டேன். 164 00:08:36,975 --> 00:08:39,561 அது உண்மையில்லை. நீங்கள் அழகாக தான் இருக்கிறீர்கள். 165 00:08:39,645 --> 00:08:42,856 உங்களுக்கு எத்தனை அழகான சிகை உள்ளது, மற்றும் நீங்கள் மிகச் சிறந்தவர். 166 00:08:42,940 --> 00:08:44,066 உள்ளும் புறமும். 167 00:08:44,149 --> 00:08:47,152 மேலும் உங்கள் முகம் குணமாகிவிடும். வந்து, அது தான் விஷயமே, இல்லையா? 168 00:08:47,236 --> 00:08:49,488 குணமாகிவிட்டால், முன்பைவிட இன்னும் நன்றாகவே ஆகிவிடும், அல்லவா? 169 00:08:50,572 --> 00:08:51,573 நம்முடைய தசைகளைப் போலதான். 170 00:08:51,657 --> 00:08:53,367 அவற்றை நாம் காயப்படுத்துகிறோம், அவை மீண்டும் நன்றாக வளர்ந்து விடுகின்றன. 171 00:08:53,450 --> 00:08:54,535 இன்னும் வலுவாக. 172 00:08:55,953 --> 00:08:56,954 நன்றி. 173 00:08:59,831 --> 00:09:01,083 நான் எர்ணிக்கு ஒரு புதிய வீடியோ காமெராவை வாங்கித் தந்தேன். 174 00:09:01,166 --> 00:09:04,127 நேராக. நேராக கண்களில் பார். வாய் குளறாதே. 175 00:09:04,211 --> 00:09:06,547 அப்படியா? அவருக்கு சந்தோஷமா? 176 00:09:06,630 --> 00:09:08,841 இல்லை, அப்படி ஒன்றும் இல்லை. மற்றதைப் பற்றி இன்னும் கோபம் தான். 177 00:09:08,924 --> 00:09:12,886 ஒரு வீடியோ காமெராவின் மேல் என்ன அபிமானம் இருக்க முடியும் என எனக்குத் தெரியவில்லை. 178 00:09:13,470 --> 00:09:16,431 இப்போ, இந்த முகத்துடன் இந்த விருந்தை வேற நான் நடத்த வேண்டியிருக்கு. நான்... 179 00:09:16,515 --> 00:09:18,392 அதையெல்லாம் தாண்டி நான் இதைச் செய்யப் போகிறேன் எனில் 180 00:09:18,475 --> 00:09:20,018 நீ அங்கு என்னுடன் இருக்கப் போகிறாய் என்பதால்தான். 181 00:09:20,102 --> 00:09:21,937 மேலும் வாஃபில்ஸ். நான் வாஃபில்ஸ் பண்ணுகிறேன். சாப்பிடுகிறாயா? 182 00:09:22,855 --> 00:09:24,690 நீ இதிலிருந்து தப்பிக்கவே முடியாது. 183 00:09:24,773 --> 00:09:25,774 கண்டிப்பாக. 184 00:09:27,067 --> 00:09:28,610 ஆக, இன்னும் ஒரு முறை. 185 00:09:28,694 --> 00:09:32,781 என் கணவரிடம் பன்னியைப் பற்றியோ அல்லது என் ஏரோபிக்ஸை பற்றி கூற முடியாது. 186 00:09:32,865 --> 00:09:34,908 சரியா? அது என் பிழைப்பு. 187 00:09:34,992 --> 00:09:38,120 நம்ம பிழைப்பு. அவருடையது இல்லை. 188 00:09:38,203 --> 00:09:42,249 எனவே, இங்குள்ளப் போது, நம் பேச்செல்லாம் பிரச்சார விளம்பரம் பற்றிதான், சரியா? 189 00:09:45,669 --> 00:09:46,670 புதினா. 190 00:09:47,754 --> 00:09:48,964 இந்த சால்ஸாவில். 191 00:09:49,756 --> 00:09:51,717 போன வாரம், பத்து சாப்பிடிருக்கிறேன். 192 00:09:51,800 --> 00:09:53,135 இல்லை. பதினாலு. 193 00:09:53,218 --> 00:09:55,512 இந்த சால்ஸாவில் என்னவெல்லாம் போட்டிருக்கிறார்கள் என்று அறிய 194 00:09:55,596 --> 00:09:57,681 நான் வாய் முழுக்க நிரப்பி, பிரித்து பார்த்து சோதித்தேன். 195 00:09:57,764 --> 00:09:59,183 கண்டிப்பாக. அது புதினாதான். 196 00:10:01,560 --> 00:10:02,728 ஹை, டைலர். 197 00:10:04,062 --> 00:10:05,814 நான் சொன்னதை எதுவும் நீ கேட்டாயா? 198 00:10:05,898 --> 00:10:07,191 மூச்சு விடமாட்டேன். 199 00:10:07,691 --> 00:10:10,068 அதனால் தான், இந்த மிகப் பெரிய பூரிட்டோ, என் வாயை அடைக்க. 200 00:10:10,152 --> 00:10:13,572 இந்த முட்டாளை நம்பி உன் திருமணத்தை ஒப்படைக்கிறாய். உன் வாழ்க்கையையே. 201 00:10:13,655 --> 00:10:15,699 டைலரிடம் ஒரு சிறிய குழு, விளக்குகள், ஒலி, 202 00:10:15,782 --> 00:10:18,535 மற்றும் மிக நுணுக்கமான போர்டெபிள் வீடியோ காமெரா, எல்லாம் இருக்கு. 203 00:10:18,619 --> 00:10:19,828 படம்பிடிக்கும் இடங்களை இலவசமாக பெற்றோம். 204 00:10:19,912 --> 00:10:23,415 நீங்க பணத்தைப் பற்றியோ, அல்லது அனுமதிகள் பெறுவதைப் பற்றியோ கவலை படவேண்டாம். 205 00:10:23,916 --> 00:10:27,336 அப்புறம், உனக்கு உறுதியாகத் தெரியுமா... இந்த வீடியோ ஃபார்மேட் டிவிக்கு பொருந்துமா? 206 00:10:28,045 --> 00:10:30,214 -ஆம், ஒளிபரப்புத் தரம். -என்ன சொன்னீர்கள்? 207 00:10:30,797 --> 00:10:32,257 ஒளிபரப்புத் தரம். 208 00:10:32,341 --> 00:10:35,010 ஆறு-மணி நேர படப்பிடிப்பு, நம்ம பட்ஜெட்டுக்குத் தகுந்தார் போல. 209 00:10:35,093 --> 00:10:36,637 -உனக்கு அதைப் பற்றி எப்படித் தெரியும்? -ஆராய்ச்சிதான். 210 00:10:36,720 --> 00:10:38,931 சரி, சரி. அடடா. 211 00:10:39,014 --> 00:10:40,224 -ஆமாம். -நன்றி, ஜெர்ரி. அது... 212 00:10:40,307 --> 00:10:42,059 -அது மிகவும் நன்றாக இருந்தது... -நல்லது. 213 00:10:42,142 --> 00:10:45,020 -...ஆனால் எனக்கு... இப்போது இது போதும். -நன்றாக இருக்கும். கெட்டியா. 214 00:10:45,103 --> 00:10:46,730 -நன்றி. ஆமாம். -ஹே, ஜெர். 215 00:10:46,813 --> 00:10:48,106 அவள் போதும் நிறுத்து என்கிறாள். 216 00:10:48,190 --> 00:10:51,026 சரி. அவளுக்கு... தேவை என நினைத்தேன். 217 00:10:51,109 --> 00:10:53,028 இல்லை, இல்லை, எனக்கு... எனக்குப் பிடித்தது. 218 00:10:53,111 --> 00:10:54,863 மிகவும் நன்றாக இருந்தது. மிக்க நன்றி. 219 00:10:54,947 --> 00:10:57,658 ஆமாம், நீங்கள் பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வேலை செய்கிறீர்கள். 220 00:10:57,741 --> 00:10:58,825 உதவி செய்யலாம் என நினைத்தேன். 221 00:10:58,909 --> 00:11:02,621 இதில் சிறிதேனும், கடற்கரையை காட்ட முடிந்தால், எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். 222 00:11:02,704 --> 00:11:05,207 நான் இன்னொன்றைப் பற்றியும் யோசித்தேன்: அது தான் இசை. 223 00:11:05,290 --> 00:11:09,253 ஆமாம். நிச்சயமாக. வந்து, டிரம்களைப் போல. 224 00:11:09,336 --> 00:11:10,337 ஆம். மிக சரி. 225 00:11:10,420 --> 00:11:13,257 வந்து, ஏதாவது ஒன்று, வந்து மகிவும் கவரும் தன்மையுடன் இருப்பது போல. 226 00:11:13,340 --> 00:11:16,260 -ஏதாவது முன்னேற்றத்தை குறிப்பதாக. -ஆம். கவர்ச்சியாக. ஈர்க்கணும். 227 00:11:16,343 --> 00:11:18,345 ஆமாம். அதாவது, என்ன சொல்லணும் எனில், 228 00:11:18,428 --> 00:11:21,473 "இது பிரசாரத்தைப் பற்றியது அல்ல. இது ஒரு இயக்கம்" என்று. 229 00:11:21,557 --> 00:11:24,518 இல்ல, இல்லை, இல்ல. நாம்... நாம் இப்போதுள்ள எதிர்ப்பு கலாச்சாரத்திலிருந்து விலகணும், 230 00:11:24,601 --> 00:11:25,853 அதன் கைபொம்மையாகக் கூடாது. 231 00:11:25,936 --> 00:11:29,064 அந்த எதிர்ப்பு கலாச்சார வேஷங்களை எல்லாம் மாற்றும் காலம் வந்து விட்டது. 232 00:11:29,147 --> 00:11:32,025 இந்த சான்-டீயாகோ வாசிகளுக்கு எல்லாம் உங்களுடைய நாகரீகமான-திறமை-முகத்தைக் 233 00:11:32,109 --> 00:11:33,777 காட்டணும், உங்களின் பெர்க்கெலி-எதிர்ப்பு-முகத்தை அல்ல. 234 00:11:33,861 --> 00:11:37,072 எனவே, என்ன கூற வருகிறாய்? பணத்திற்காக என்னை மாறச் சொல்கிறாயா? 235 00:11:37,155 --> 00:11:40,784 இல்லை, சாமர்த்தியமாக நடந்துக் கொள்ள சொல்கிறேன். ஒரு சூட் போட்டு. தொப்பியோட. 236 00:11:40,868 --> 00:11:42,744 ஒரு பாதுகாப்பு மேடையில் பேசுவதற்கா? 237 00:11:42,828 --> 00:11:46,039 நான் கடற்கரை-விரிவாக்கப் பணி-எதிர்ப்பு ஆள், என்னை தொப்பி போட சொல்கிறாயா? 238 00:11:46,123 --> 00:11:48,417 நீங்கள் முன்னேற்றப் பாதையில் இருப்பவர். நீங்கள் முதலீடு செய்ய விரும்புவது... 239 00:11:48,500 --> 00:11:51,378 சமூக கட்டமைப்புகள், பள்ளிகள், சுகாதாரம் இவற்றில் எல்லாம். 240 00:11:51,461 --> 00:11:53,463 ஜனங்களுக்கு, தொப்பியிட்ட ஆளை பிடிக்கும். 241 00:11:54,047 --> 00:11:55,090 ஏன் என்று தெரியாது. 242 00:11:55,174 --> 00:11:59,219 பெரும் தலைகள். நடிகரை பார்த்திருக்கிறாயா? உலகிலையே, பெரும் தொப்பிகள் அவர்கள்தான். 243 00:11:59,303 --> 00:12:04,433 சரி, என்னால் இந்த எஃப்பிஐ போலீஸைப் போல நீல சூட் எல்லாம் போட முடியாது. 244 00:12:04,516 --> 00:12:05,767 நீல நிறம் வேண்டாம். 245 00:12:06,518 --> 00:12:07,519 சாம்பல் நிறம். 246 00:12:08,604 --> 00:12:10,522 அதோ, அங்கே நீரில், யார் சாம்பல் நிற உடுப்பை அணிவார்கள், தெரியுமா? 247 00:12:11,106 --> 00:12:12,149 சுறா மீன்கள். 248 00:12:13,400 --> 00:12:15,819 வேட்டையாடுபவர்கள். இரைகள் அல்ல. 249 00:12:16,528 --> 00:12:20,699 வந்து, நாம் பழைய டேனியையே வைத்துக் கொள்ளலாம், அல்லது புதிதாக முயற்சிக்கலாம். 250 00:12:22,701 --> 00:12:23,952 சரி, நீ என்ன நினைக்கிறாய்? 251 00:12:28,332 --> 00:12:30,959 கண்டிப்பாக, சூட்டில் பெண்கள் உன்னை நேசிப்பார்கள், நண்பா. 252 00:12:32,085 --> 00:12:34,421 உன்னை மூழ்கடித்து விட்டு, அதை தற்செயலாக நடந்ததாக காட்ட முடியும். 253 00:12:34,505 --> 00:12:35,964 அப்படியானால் சரி. 254 00:12:37,132 --> 00:12:40,427 அதற்கு அந்த எழவுபிடித்த மாலிற்கு போகணும் என நினைக்கிறேன். 255 00:12:41,762 --> 00:12:44,014 இதெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. 256 00:12:44,097 --> 00:12:47,935 இந்த சூட் எல்லாம் சரி வருமா என தெரியலை. கத்துக்குட்டி பாதிரியைப் போல இருப்பேன். 257 00:12:49,186 --> 00:12:51,271 வாங்க... வெளியே வாங்க. பார்க்கட்டும். 258 00:12:55,025 --> 00:12:56,985 கத்துக்குட்டி பாதிரியார் கூட பரவாயில்லை. 259 00:12:57,861 --> 00:12:58,862 என்ன? 260 00:12:59,947 --> 00:13:04,409 நீங்க சாக்ரமென்டோவையே ஒரு கலக்கு கலக்கப் போவதுப்போல தெரிகிறது எனக்கு. 261 00:13:05,160 --> 00:13:06,537 நிஜமாகவா? 262 00:13:06,620 --> 00:13:08,163 இந்த தோள்பட்டை அட்டைகளோடா? 263 00:13:08,247 --> 00:13:10,290 அந்த தோள்பட்டை அட்டைகள் போட்டதினால் தான். 264 00:13:10,374 --> 00:13:12,918 -எனக்குத் தெரியவில்லை. -அட்டகாசமாக இருக்கிறீர்கள். 265 00:13:13,001 --> 00:13:14,294 அவர் பார்க்க அட்டகாசமாக இல்லை? 266 00:13:14,878 --> 00:13:17,422 சற்றே அங்குமிங்கும் சரிசெய்யணும், பண்ணிவிடலாம். 267 00:13:17,506 --> 00:13:19,258 உங்களுக்கு அவற்றை தயார் செய்து தருகிறேன். 268 00:13:19,758 --> 00:13:21,176 என்ன விசேஷம்? 269 00:13:21,260 --> 00:13:22,761 திருமணமா? பார் மிட்வா சடங்கா? 270 00:13:25,222 --> 00:13:27,015 சட்ட சபைக்குப் போட்டியிடப் போகிறார். 271 00:13:27,099 --> 00:13:30,394 இவர் பெயர் டேனி ரூபின், இவர் தான் வெற்றி பெறப் போகிறார். 272 00:13:30,894 --> 00:13:33,605 காசோலையா அல்லது கடனா? 273 00:13:34,356 --> 00:13:35,357 கடன். 274 00:13:37,484 --> 00:13:43,282 ஆட்டு மந்தைகள் எல்லாம் முதலாளித்துவத்திற்கு ஆடுகிறார்களே. பாரு? 275 00:13:45,242 --> 00:13:47,786 மிக மோசமாக செய்யப்பட்டு, சீக்கிரமே களையப்போகும் பொருட்களில் 276 00:13:47,870 --> 00:13:51,081 தங்கள் குறைந்து வரும் சம்பளத்தை செலவு செய்யும் நடுத்தர வர்க்கத்தினர் 277 00:13:51,164 --> 00:13:53,917 -இதெல்லாம் நிறைவு இல்லை என உணரும்... -கார் நிற்கும் இடம்... இங்கே கீழே உள்ளது. 278 00:13:54,001 --> 00:13:55,335 -...போது எப்படியிருக்கும். என்ன? -இங்கே கீழே. 279 00:13:55,419 --> 00:13:56,670 கார் நிற்கும் இடம். 280 00:13:56,753 --> 00:13:58,463 வந்து, ஏட்ரியத்தைப் பாரு. 281 00:13:58,547 --> 00:14:00,757 கேவலமான ஆலயத்தைப் போல உள்ளது, ஷீலா. 282 00:14:02,217 --> 00:14:05,470 அது தற்செயல் இல்லை, தெரியுமா? சர்வாதிகாரம் உள்ள டாலரை கும்பிடுகிறார்கள். 283 00:14:06,847 --> 00:14:08,140 சரி, இது என்ன எழவு, இது? 284 00:14:08,223 --> 00:14:09,224 பிளேயா டெல் விஸ்டா 285 00:14:09,308 --> 00:14:10,309 ஷ்மிடிட் 286 00:14:10,392 --> 00:14:11,935 நம்பவே முடியவில்லை, எழவு. 287 00:14:12,019 --> 00:14:17,524 ஏமாற்றுதல், ஊழல், நல்ல வட்டம் தான். இதில் ஏன் இவ்வளவு ஆச்சரியம், தெரியவில்லை. 288 00:14:17,608 --> 00:14:19,610 கொஞ்சம்கூட வெட்கம் இல்லாமல் இருப்பதுதான். 289 00:14:19,693 --> 00:14:22,362 "சமூக அறை" என்று அழைக்கப் படுகிறது, நகரத்தாரால் அமைக்கப்பட்டிருக்கிறது. 290 00:14:22,446 --> 00:14:26,658 அப்படி இருந்தும், பிரீம் தன்னுடையதைப் போல, தன் கட்சி ஆளுக்குத் தருகிறான். 291 00:14:26,742 --> 00:14:29,328 சட்டப்படி, உனக்கும் கூட அதில் பங்கு உள்ளது, தெரியுமா 292 00:14:29,411 --> 00:14:31,038 மற்ற எந்த பொது உடைமையையும் போல. 293 00:14:31,622 --> 00:14:34,249 -அது உண்மை மாதிரி தெரியுது. -கண்டிப்பாக உண்மைதான். 294 00:14:34,333 --> 00:14:36,710 கோட்பாடுகளைத் திட்டமிடுவதில் எனக்கு அனுபவமுள்ளது. 295 00:14:36,793 --> 00:14:39,379 ஓக்லாண்டில், பல ஆண்டுகளாக அங்குள்ள சிற்றரசர்களுடன் போராடி உள்ளேன். 296 00:14:39,463 --> 00:14:42,883 எப்படியும், நமக்கு இப்போது அந்த மாலில் அலுவலகம் தேவைதானா? 297 00:14:42,966 --> 00:14:45,427 அதாவது, நீங்கள் அங்கு அரை மணி நேரம் தான் இருந்தீர்கள், அதுவும் சோகத்தில். 298 00:14:46,011 --> 00:14:49,431 ஆமாம். அது தான் அதன் லட்சியமே. நாம் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறேன், தெரியுமா? 299 00:14:49,515 --> 00:14:50,933 நான் நினைக்கிறேன், நாம் அங்கே போய், 300 00:14:51,016 --> 00:14:53,352 அந்த பிரீம் ஆளை, நேருக்கு நேர் சந்திக்க வேண்டும் என்று. 301 00:14:53,435 --> 00:14:54,436 ஒத்தைக்கு ஒத்தை. 302 00:14:54,520 --> 00:14:57,773 ஒரு ஜோடி தோள்பட்டை அட்டைக்கே இவர் திடீரென்று ஜான் வேன் ஆகிவிட்டாரே. 303 00:14:58,482 --> 00:14:59,858 இந்த யோசனை மிகவும் பிடித்துள்ளது. 304 00:15:00,651 --> 00:15:02,194 வந்து, முழு ஒப்புதல்... 305 00:15:03,195 --> 00:15:06,281 நான் இன்று நிறைய பியர் குடித்துவிட்டேன், மேலும் இது என் இரண்டாவது போதை சிகரெட். 306 00:15:06,365 --> 00:15:10,786 ஆனால் நாளை அந்த ஆளைப் போய் சந்தித்து, நாம நினைப்பதை சொல்லுவோம். 307 00:15:10,869 --> 00:15:12,454 அது எதிரியின் இடம். 308 00:15:12,538 --> 00:15:14,248 இந்த பிரச்சாரத்தின் நோக்கம் அதுவல்ல. 309 00:15:15,165 --> 00:15:16,416 நீங்கள் போட்டியிடுவது அதற்காக இல்லை. 310 00:15:16,500 --> 00:15:20,087 நீ அந்த இடத்தில் நிறைய நேரம் இருக்கிறாய், இல்லையா, ஷீல்? 311 00:15:21,588 --> 00:15:23,882 அங்குதான் உன்னுடைய ஜாஸ் டான்சு மற்றும் எல்லாவற்றையும் செய்கிறாயா? 312 00:15:26,385 --> 00:15:28,595 நீ அதற்குதான் போராடுகிறாயா, ஷீல்? 313 00:15:29,555 --> 00:15:31,348 இவன் இப்படியெல்லாம் பேசுவதை அவன் பொறுத்துக் கொள்ளப் போகிறானா? 314 00:15:31,431 --> 00:15:32,432 ஜெர்ரி... 315 00:15:33,308 --> 00:15:37,271 நானும் அதை கொஞ்சம் புகைக்கிறேன், கொடு. இன்றைக்கு மிகவும் களைத்து விட்டேன். 316 00:15:37,354 --> 00:15:39,189 மிகவும் சரியே, களைத்து தான் விட்டான். 317 00:15:42,025 --> 00:15:44,862 பிளேயா டெல் விஸ்டா 318 00:15:44,945 --> 00:15:48,615 என்னுடைய பேராசையை தீர்த்துக் கொள்ள சுற்றுச்சூழலை மென்று தின்றுவிடும் 319 00:15:48,699 --> 00:15:50,576 பிசாசு இல்லை நான். 320 00:15:50,659 --> 00:15:53,871 நான் திறந்தவெளியை, அதுவும் கடற்கரையை மிகவும் நேசிப்பவன். 321 00:15:53,954 --> 00:15:56,832 எனினும் ஆழ்கடலுக்கு நாம் கட்டுப்பட்டு நடப்பதில் எனக்கு உடன்பாடில்லை. 322 00:15:56,915 --> 00:15:59,835 அன்று விவாதத்தில், டேனி உங்கள் வாயை அடைக்கும் முன், இதைத்தான் கூற வந்தீர்களா? 323 00:16:02,754 --> 00:16:05,507 என்னுடைய சாக்கில் உங்கள் கணவருக்கு இரண்டொரு நல்ல வரிகள் கிடைத்தன, அதுதான். 324 00:16:05,591 --> 00:16:07,217 ஆனால் என் வாயை அடைத்ததாக தெரியவில்லை. 325 00:16:07,301 --> 00:16:08,927 ஆனால் கடைசியில் நீங்கள் தான் வெற்றி அடைந்தீர்கள். 326 00:16:09,011 --> 00:16:12,890 எதிர்கட்சியின் பிரச்சாரத்திற்கு நிதி உதவி செய்தீர்கள். நிறைய செலவாகியிருக்கும். 327 00:16:13,640 --> 00:16:17,436 எதிர்காலத்திற்கு நல்ல முதலீடுதான். 328 00:16:17,519 --> 00:16:20,189 யாருடைய எதிர்காலத்திற்கு, உண்மையாக? 329 00:16:21,648 --> 00:16:23,066 நம் சமூகத்தின் எதிர்காலத்திற்கு. 330 00:16:24,109 --> 00:16:25,944 கண்டிப்பாக என் நிறுவனத்தின் எதிர்காலத்திற்கும் தான். 331 00:16:27,196 --> 00:16:30,157 எனக்கு சும்மா உட்கார்ந்திருக்கும் அளவிற்கு அவ்வளவு பண வசதி கிடையாது. 332 00:16:30,240 --> 00:16:34,995 ஒவ்வொரு புதிய திட்டத்திலும் கணிசமான அபாயங்களும், சில நன்மைகளும் உள்ளன. 333 00:16:35,078 --> 00:16:39,124 பிரீம் டீம் ஒரு புதிய அனுபவத்தை தொடங்கும் போதெல்லாம் நான் அவற்றை கணக்கிடுவேன். 334 00:16:39,208 --> 00:16:42,669 அது தான் உண்மை. நீங்கள் என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் நினைக்கலாம். 335 00:16:43,754 --> 00:16:48,008 நான் உங்களைப் பற்றி நினைப்பது இல்லை. சுத்தமாக நினைப்பதில்லை. 336 00:16:51,345 --> 00:16:52,346 சரி. 337 00:16:53,889 --> 00:16:57,100 நீங்கள் தான் இந்த சமூகக் கூடத்தின் அறையில் உங்கள் பங்கு பற்றி விசாரிக்க வந்தீர்கள். 338 00:16:57,184 --> 00:16:58,810 நீங்கள் அதன் மீது என் கவனத்தைத் திருப்பியது சரியான செயலே. 339 00:16:59,478 --> 00:17:01,563 நான் ஷ்மிடிட் பிரச்சாரத்தை மாற்றச் சொல்லப் போவதில்லை, 340 00:17:01,647 --> 00:17:04,398 ஆனால், தற்போது காலியாக உள்ள வேறு ஒரு இடத்தை உங்களுக்காக 341 00:17:04,483 --> 00:17:05,526 ஒதுக்க விரும்புகிறேன். 342 00:17:05,608 --> 00:17:06,609 அது உங்கள் தேவைகளுக்கு பொருந்துமானால். 343 00:17:07,819 --> 00:17:08,819 என்னுடன் வாருங்கள். 344 00:17:10,489 --> 00:17:11,490 இந்த பக்கம். 345 00:17:21,500 --> 00:17:23,585 டேனிக்கு இந்த இடம் கச்சிதமாக பொருந்துமே. 346 00:17:26,128 --> 00:17:28,257 அதையும் விட உனக்கு மிகவும் ஏற்றது. 347 00:17:35,764 --> 00:17:37,015 ஃபெடரல் பாங்கு ஆஃப் டிரஸ்டு 348 00:18:32,029 --> 00:18:34,573 டேனி ரூபின் 349 00:18:50,130 --> 00:18:52,299 உங்களுக்கு எல்லாம் இதைச் செய்ய உற்சாகமாக இருக்கிறதா? 350 00:18:52,382 --> 00:18:54,051 முற்றிலும் உற்சாகமாக உள்ளோம். 351 00:18:56,512 --> 00:18:57,638 ஹலோ? 352 00:18:57,721 --> 00:18:59,306 அங்கிருந்து எதுவும் அபிப்பிராயம் வரும் என எதிர்பார்க்கிறோம். 353 00:18:59,389 --> 00:19:02,142 நீ இதை ஆமோதிக்கிறாயா அல்லது நிராகரிக்கிறாயா என தெரியணும். 354 00:19:03,060 --> 00:19:05,604 நான் என் முழு மனதையும் வைத்து இதைச் செய்துள்ளேன். நான் பெருமிதம் கொள்கிறேன். 355 00:19:05,687 --> 00:19:07,898 உனக்குப் பிடிக்கவில்லை எனில் பிடிக்கவில்லை, அவ்வளவுதான். 356 00:19:07,981 --> 00:19:09,358 டைலர். 357 00:19:11,610 --> 00:19:12,819 நான் நிராகரிக்கவில்லை. 358 00:19:14,363 --> 00:19:16,240 எனக்குத் தெரியும் உனக்குப் பிடிக்கும் என. 359 00:19:16,323 --> 00:19:18,033 எப்படி பிடிக்காமல் போகும்? நாம் தான் அதை கச்சிதமாக செய்துட்டோமே. 360 00:19:18,116 --> 00:19:19,868 -இது அப்படியே அசத்தல். -அசத்தல் தான். 361 00:19:19,952 --> 00:19:22,996 -இது முழுவதும் அசத்தல், கண்ணே. -நீ அசத்துகிறாய், கண்ணே. 362 00:19:24,331 --> 00:19:26,124 நாம இதை கொண்டாடணும். 363 00:19:26,208 --> 00:19:29,211 இன்னும் கொஞ்சம் ஒலி குறிப்புகளை சரி செய்யணும், ஆனால் அப்புறம், 364 00:19:29,294 --> 00:19:32,589 அதன் பிரதிகளை எடுத்து, அதை பல இடங்களிலும் வினியோகிக்கணும். 365 00:19:32,673 --> 00:19:33,882 புதிய பிரதிகளெடுக்கும் கருவிகள் வந்துள்ளன. 366 00:19:33,966 --> 00:19:36,218 கொஞ்சம் விலை அதிகம், ஆனால் ரொம்ப வசதி. 367 00:19:36,301 --> 00:19:37,761 -எவ்வளவு பணம்? -பத்தாயிரம். 368 00:19:37,845 --> 00:19:40,973 அல்லது, என் நண்பர்கள் மூலம் தயாரிப்பை சீர்செய்யும் ஒரு நிறுவனத்திடம் தரலாம். 369 00:19:41,056 --> 00:19:42,683 -அவன் விளம்பரத்தைப் பற்றி கூறுகிறான். -எனக்குத் தெரியும். 370 00:19:44,184 --> 00:19:46,728 ஒரு வேலைக்கு ஐயாயிரம். நான் தோழன் எனபதால் நாலாயிரம். 371 00:19:46,812 --> 00:19:49,147 ஐயாயிரம். அவன் "தோழன்" எனபதால் நாலாயிரம். 372 00:19:49,857 --> 00:19:52,192 அதனால் இன்னும் கொஞ்ச நாட்கள் எப்படியாவது தாக்குப்பிடி. 373 00:19:52,276 --> 00:19:53,694 உன்னால் இதை வைத்து இன்னும் எத்தனை பிரதிகள் செய்ய முடியும்? 374 00:19:54,987 --> 00:19:55,988 இன்னும் சிலவற்றை எடுக்கலாம். 375 00:19:56,071 --> 00:19:59,241 ஆனால், ஒவ்வொரு முறையும் அதன் தரம் குறைந்து விடும். அது தான் பிரச்சனை. 376 00:19:59,825 --> 00:20:01,702 பெண்கள் செய்ததை நான் இழிவு படுத்தலாகாது. 377 00:20:03,287 --> 00:20:04,288 மகிழ்ச்சி. 378 00:20:04,371 --> 00:20:05,372 மகிழ்ச்சி. 379 00:20:07,916 --> 00:20:09,126 அதை திரும்பவும் பார்க்கலாம். 380 00:20:12,254 --> 00:20:13,297 என் கவர்ச்சியூட்டும் வர்ணம் 381 00:20:13,380 --> 00:20:18,051 உகந்த காலத்தை அறிதல் என்பது உங்களில் இருக்கும் சிறந்ததை வெளிகொண்டு வரல் தான். 382 00:20:18,135 --> 00:20:23,515 நீங்கள் மழைக் காலமா, குளிரா, வசந்தமா, அல்லது கோடைக்காலத்தைச் சேர்ந்தவரா என. 383 00:20:23,599 --> 00:20:27,895 நீலம் உங்கள் உற்ற தோழியா அல்லது பிரௌவுன் உங்கள் எதிரியா, என அறியவேண்டும். 384 00:20:28,520 --> 00:20:29,646 இதோ கிரெட்டாவையே எடுத்துக் கொள்வோம். 385 00:20:29,730 --> 00:20:31,607 இது மிகவும் அழகான ஒரு தலைக்குட்டை. 386 00:20:32,816 --> 00:20:35,861 அல்லது கண்டிப்பாக, வாங்கும் முன் அப்படி தோன்றியிருக்கும். 387 00:20:35,944 --> 00:20:39,907 ஆனால் அது எப்படி உங்கள் சருமத்தில் உள்ள கேடுகளை எடுத்து காட்டுகிறது பார்த்தீர்களா? 388 00:20:39,990 --> 00:20:41,241 அடக் கடவுளே. 389 00:20:41,825 --> 00:20:45,996 அது வந்து என் தங்கை எனக்கு பரிசாக தந்தது. நான்... அதை வாங்கவில்லை. 390 00:20:46,997 --> 00:20:48,665 முகப்பூச்சு வகைகளைப் பற்றி பேசுவோம். 391 00:20:49,208 --> 00:20:54,671 கிரெட்டா தன் கண் இமைகளுக்கும், உதடுகளுக்கும் பிரௌவுன் நிறம் பூசியுள்ளார். 392 00:20:54,755 --> 00:20:57,758 ஈஜிப்ஷியன் சன்செட். இதை தான் பள்ளி நாட்கள் முதலே பூசியுள்ளேன். 393 00:20:57,841 --> 00:21:01,094 ஆனால் நீங்கள் பூச வேண்டியதோ நேர் எதிரான நிறம். 394 00:21:01,178 --> 00:21:03,055 சாஃப்டு பிங்க். 395 00:21:03,138 --> 00:21:04,681 உண்மையாகவா? தெரியவில்லையே. 396 00:21:04,765 --> 00:21:05,933 எனக்கு சங்கடமாக உள்ளது. 397 00:21:06,016 --> 00:21:10,437 இந்த, என் கவர்ச்சியூட்டும் வர்ணம் வாங்கினால், உங்கள் தனிப்பட்ட நிறத் 398 00:21:10,521 --> 00:21:13,440 தேர்வை உங்களுக்கு தருவதோடு, அது உங்கள் சந்தேகங்களை அடியோடு விரட்டிவிடும். 399 00:21:14,024 --> 00:21:18,320 யாருக்குத் தெரியும்? ஒரு வேளை நீங்கள் ஒரு புதிய ரக நிறத்தையே கண்டுபிடிக்கலாம். 400 00:21:19,780 --> 00:21:23,325 நாம் அந்த செயல்முறைகளை தொடங்கும் முன், இது வரையில் எதுவும் சந்தேகம் உண்டா? 401 00:21:23,408 --> 00:21:25,244 நீ இப்போ செய்தாகணும். செய்யணும். 402 00:21:25,327 --> 00:21:26,328 எனக்கிருக்கிறது. 403 00:21:28,705 --> 00:21:30,541 நீங்கள் எல்லோரும் உண்மையிலேயே இதை நம்புகிறீர்களா என்ன? 404 00:21:30,624 --> 00:21:33,502 யாரோ ஒருவர் அதிகம் குடித்துவிட்டு இங்கு வந்துள்ளார் போலிருக்கிறது. 405 00:21:34,169 --> 00:21:36,755 நீங்கள் சிறந்தவராக இருப்பது என்பது, கண் இமைகளின் நிறத்தைப் பற்றியது அல்ல. 406 00:21:36,839 --> 00:21:38,715 அது உங்கள் ஆடைகளுக்கு உள்ளே இருப்பதைப் பொருத்தது. 407 00:21:38,799 --> 00:21:40,342 உங்கள் சருமத்திற்கு கீழே உள்ளது. 408 00:21:40,425 --> 00:21:43,720 -ஷீலா, நீ சரியாக தான் இருக்கிறாயா? -உண்மையில், நன்றாக இருக்கிறேன். 409 00:21:43,804 --> 00:21:46,056 முன்பு எப்போதையும் விட இப்போது நன்றாகவே இருக்கிறேன். 410 00:21:47,558 --> 00:21:49,643 வெளிப்புறத் தோற்றத்தைப் பற்றி கவலைப் படுவதை விட்டு, 411 00:21:49,726 --> 00:21:51,770 உங்களுக்குள் உள்ள அகத்துடன் ஒருங்கிணைந்து தொடர்பு கொள்வது தான் 412 00:21:51,854 --> 00:21:54,314 உங்களைப் பற்றி நீங்கள் நன்றாக உணர்வதற்கு உள்ள ஒரே வழி. 413 00:21:54,398 --> 00:21:56,650 மேலும் நான் கூறுவது உங்கள் இருதயத்தைப் பற்றி, உங்கள் தசைகளைப்பற்றி. 414 00:21:56,733 --> 00:21:58,735 நான் பேசுவது வலுவாக ஆவதைப்பற்றி. 415 00:21:58,819 --> 00:22:01,446 கண்டிப்பாக எல்லோரும் எனக்கு பைத்தியம் என நினைக்கிறார்கள், இருக்கலாம். 416 00:22:01,530 --> 00:22:06,368 ஆனால், நான் வெறுமன பேசுவதற்கு பதில், உங்களுக்கு காண்... காண்பித்தால் என்ன? 417 00:22:08,245 --> 00:22:09,788 கிரெட்டா, உங்களுக்கு ஆட்சேபனை எதுவும் உள்ளதா? 418 00:22:35,522 --> 00:22:36,523 -நன்றி. -சரி. 419 00:22:36,607 --> 00:22:37,816 -நன்றி, ஷீலா. -நன்றி, விக்கி. 420 00:22:37,900 --> 00:22:39,067 -நன்றி, மரியா. -நன்றி. 421 00:22:39,151 --> 00:22:40,152 நல்லது, பை. 422 00:22:42,279 --> 00:22:44,573 என்னிடம் உள்ள பிரதிகளில் அது தான் கடைசி, 423 00:22:44,656 --> 00:22:46,533 ஆனால், உங்களுக்கு அனுப்ப தயாரானவுடன் நான் மேயில் அனுப்புகிறேன். 424 00:22:46,617 --> 00:22:47,701 -உங்கள் இருவரின் எண்களும் உள்ளன. -சரி. 425 00:22:47,784 --> 00:22:48,785 எனவே, மிக்க நன்றி பெண்களே. 426 00:22:48,869 --> 00:22:50,204 -மிக்க நன்றி. -நன்றி. 427 00:22:50,287 --> 00:22:52,623 அட. ரொம்ப நன்றாக இருந்தது. 428 00:22:57,127 --> 00:22:59,421 வந்து, இந்த மதிய பொழுது இப்படி போகும் என்று நான் நினைக்கவில்லை. 429 00:22:59,505 --> 00:23:00,631 -நானும் நினைக்கவில்லை. -ஆமாம். 430 00:23:00,714 --> 00:23:02,883 அப்படியே கவனத்தை அபகரித்து விட்டேன் என நினைக்கிறேன். 431 00:23:02,966 --> 00:23:04,635 விக்கி என்னை... என்னை தவறாக எண்ணக்கூடாது. 432 00:23:04,718 --> 00:23:06,637 நான்... எனக்கு... என்ன ஆனது என்று எனக்கே தெரியவில்லை. 433 00:23:06,720 --> 00:23:08,388 காணொளியை பகிர்ந்து கொள்வதில் அப்படியே உற்சாகமாகி விட்டேன், 434 00:23:08,472 --> 00:23:11,099 மற்றவர்களும் உற்சாகமானவுடன், இது நல்ல சந்தர்ப்பம் எனத் தோன்றியது. 435 00:23:11,183 --> 00:23:13,352 எர்ணியின் காமெரா தொலைந்து போனது நீ வந்து விட்டு போன உடனே தான். 436 00:23:14,394 --> 00:23:16,647 நீ எடுத்திருக்கக்கூடும் என எனக்குத் தோன்றவேயில்லை. 437 00:23:16,730 --> 00:23:20,192 ஆனால், இந்த தேனீர் விருந்தை நீ அபகரிப்பாய் என்றும் எனக்குத் தோன்றவில்லை. எனவே... 438 00:23:22,402 --> 00:23:23,612 நீ செய்தாயா? 439 00:23:25,280 --> 00:23:26,657 நீ எர்ணியின் காமெராவை எடுத்துச் சென்றாயா? 440 00:23:28,825 --> 00:23:31,411 உன்னை சரியாக எடை போட்டு உள்ளாள். மெய்யாக நீ யார் என்று புரிந்திருக்கிறாள். 441 00:23:32,788 --> 00:23:35,707 எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நான்... நான், வந்து... 442 00:23:35,791 --> 00:23:39,586 சுயநல, மூடத்தனமான, போலி குண்டம்மா. சரியான பேராசை பிடித்த மாடு. 443 00:23:39,670 --> 00:23:42,840 நான் வந்து... நான் தப்பு செய்துவிட்டேன். 444 00:23:43,423 --> 00:23:46,552 நான் செய்தது தவறு. நான் வந்து... நான் அதை இரவல் வாங்க தான் நினைத்தேன். 445 00:23:46,635 --> 00:23:47,636 மேலும்... 446 00:23:48,512 --> 00:23:51,640 எர்ணியிடம் எண்ண முடியாத அளவிற்கு இயந்திரங்கள் உள்ளன என்று நீங்கள் சொன்னது 447 00:23:51,723 --> 00:23:56,144 அதனால் அவருக்கு தெரிய வராதென்று நான்... நான் உண்மையாகவே நினைத்தேன். 448 00:23:56,228 --> 00:23:57,604 -அது வந்து அவ்வளவு... -சரி, வந்து, அவருக்கு நன்றாகவே தெரிந்தது. 449 00:23:57,688 --> 00:24:00,107 மேலும் மிரியத்தை வேலையை விட்டு விலக்கினார். அவளுக்கு மூன்று குழந்தைகள். 450 00:24:00,941 --> 00:24:04,069 இப்போது நாலாக கூட இருக்கலாம். நிறைய குழந்தைகள் உண்டு எனத் தெரியும். 451 00:24:04,152 --> 00:24:05,404 எனக்கு மிகவும் கஷ்டமாக தான் இருந்தது. 452 00:24:05,487 --> 00:24:08,949 உண்மையிலேயே உணர்ந்தேன். நான்... நான்... உண்மையை சொல்ல வேண்டும் என நினைத்தேன். 453 00:24:09,032 --> 00:24:10,492 -மேலும்... -ஆனால் நீ அப்படிச் செய்யவில்லையே. 454 00:24:13,495 --> 00:24:14,496 சரி, நான்... 455 00:24:15,747 --> 00:24:17,875 அதற்கு... ஒரு... ஒரு காரணம் இருக்கு. 456 00:24:17,958 --> 00:24:19,835 சரி. என்ன? 457 00:24:19,918 --> 00:24:23,130 அவளிடம் அந்த டேப்பைப் பற்றி சொல்லாதே. அதற்கும் உனக்கும் சம்மந்தமே இல்லையே. 458 00:24:23,213 --> 00:24:26,175 அது என்னவென்று சொல்லும் வரை, நீ இந்த இடத்தை விட்டுப் போக முடியாது. 459 00:24:30,012 --> 00:24:33,140 என்ன, உன்னுடைய உடற்பயிற்சி டேப்பை வைத்து என்னை திசை திருப்ப பார்க்கிறாயா? முடியா... 460 00:24:33,223 --> 00:24:36,268 நான் இந்த டேப்பை பண்ணவில்லை. உங்கள் கணவர்தான் செய்தார். 461 00:24:37,769 --> 00:24:40,314 நீங்கள் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கலாம். உண்மையில், எதிர்பாராதது தான், தெரியும். 462 00:24:40,397 --> 00:24:41,481 -எனவே, நான்... -நீ இப்போது போகலாம். 463 00:24:41,565 --> 00:24:42,900 -கிரெட்டா, தயவு செய்து. -போகலாம் என்று சொன்னேன். 464 00:24:43,650 --> 00:24:45,027 போ வெளியே. 465 00:24:51,658 --> 00:24:54,203 அந்த சூட்டைப் பற்றி எனக்கு மிகவும் கவலையாக இருந்தது என ஒத்துக்கணும். 466 00:24:54,286 --> 00:24:56,663 -ஆனால் நீ கண்ணை மட்டும் இமைத்தால்... -ஹே. தாமதத்திற்கு மன்னிக்கவும். 467 00:24:56,747 --> 00:24:59,041 -கிரெட்டாவின் விருந்து நீண்டு விட்டது. -...யூத கென்னடியைப் போல இருக்கிறேன். 468 00:24:59,124 --> 00:25:01,543 -எனக்கே என் கண் படும் போல இருக்கு. -அதைதான் கூறுகிறேன். 469 00:25:01,627 --> 00:25:05,589 -அந்த விளம்பரம் உனக்குப் பிடித்ததா? -இல்ல, எங்களுக்கு பிடிக்கலை, ஷீல். 470 00:25:06,173 --> 00:25:07,424 அதை நேசிக்கிறோம். 471 00:25:07,508 --> 00:25:09,843 வந்து, மிக அற்புதமான வெற்றி இது. 472 00:25:09,927 --> 00:25:11,637 உன்னை சந்தேகப்பட்டதற்கு மன்னித்து விடு. 473 00:25:11,720 --> 00:25:15,432 அதாவது, இவன் தானப்பா, இதோ இங்கே. பேரைக் கேட்டு. கலந்து பேசி. 474 00:25:15,516 --> 00:25:17,184 உங்களுக்கு மகிழ்ச்சி என்றால், எனக்கும் மகிழ்ச்சி. 475 00:25:17,267 --> 00:25:19,436 என்ன தெரியுமா, இது போல ஒரு படத்திற்கு இன்னும் பெரிய விளம்பரத் திட்டம் தேவை 476 00:25:19,520 --> 00:25:20,562 நாம் திட்டமிட்டிருப்பதை விட. 477 00:25:21,146 --> 00:25:23,482 -நீ என்ன நினைக்கிறாய்? -தெரியலை. ஆறு, ஏழு ஆயிரம். 478 00:25:23,565 --> 00:25:24,942 அதாவது, அதுதான் அதிவேக விமானம் போல, 479 00:25:25,025 --> 00:25:26,109 -சாக்ரமென்டோவை அடைந்திடும், நண்பா. -ஆம். 480 00:25:26,902 --> 00:25:29,154 அது நம்முடைய பட்ஜெட்டில் உள்ளதில் அடங்குமா என தெரியலை, ஆனால்... 481 00:25:29,238 --> 00:25:30,531 இல்லை. கண்டிப்பாக அதில் இருக்கு. 482 00:25:30,614 --> 00:25:32,824 இதோ, இங்கே பாரு, உன் கையெழுத்திலேயே இருக்குப் பாரு. 483 00:25:35,244 --> 00:25:37,746 -பொறு, இது தான் எனக்குப் பிடித்தது. -எனக்கு ரொம்பப் பிடித்தது. 484 00:25:37,829 --> 00:25:39,998 -நீ அதை தமாஷ் செய்தாயா... -தெரியும், வேண்டாம்... 485 00:25:40,832 --> 00:25:43,460 முட்டி, குத்து, உதை. முட்டி, குத்து, உதை. 486 00:27:12,674 --> 00:27:14,676 தமிழ் மொழியாக்கம் அகிலா குமார்