1
00:00:11,541 --> 00:00:15,666
கால-வெளி, திரவம் போன்றதுன்னு
ஒரு கோட்பாடு இருக்கு.
2
00:00:15,666 --> 00:00:19,375
காலம். அதான் நிலத்துக்கு கீழ
பாயுதுங்கறது என் நம்பிக்கை.
3
00:00:20,708 --> 00:00:23,791
சின்ன வயசுல ஏன் ஓடிப் போனேன்னு
உன்கிட்ட சொன்னதில்ல.
4
00:00:23,791 --> 00:00:26,750
அப்பாவோட வேட்டைக்கு போனேன்.
அது ஒரு விபத்து.
5
00:00:26,750 --> 00:00:29,750
- இது எப்ப?
- 1886.
6
00:00:29,750 --> 00:00:33,166
நான் அங்க போகணும், சிசிலியா,
ஜாய் ஃபோன எடுக்க மாட்டேங்கறா.
7
00:00:33,291 --> 00:00:36,541
- அவ எங்க?
- அவ ஃபோன எடுக்கல.
8
00:00:36,666 --> 00:00:38,458
ரோவர்ல எந்த தகவலும் இல்ல.
9
00:00:38,458 --> 00:00:40,000
நில்லுங்க!
10
00:00:41,208 --> 00:00:42,625
ஷோஷோன்.
11
00:00:42,625 --> 00:00:44,125
நான் உங்க பக்கம்!
12
00:00:45,041 --> 00:00:47,250
நான் வீடு திரும்ப போறதில்லல்ல?
13
00:00:47,250 --> 00:00:49,458
இப்ப வீடா இல்லாம இருக்கலாம். ஆனா...
14
00:00:49,458 --> 00:00:51,500
இது இருக்க நல்ல இடம்.
15
00:00:52,625 --> 00:00:55,583
அம்மா, பாருங்க. ஜாய் அம்மா. பாருங்க!
16
00:01:07,625 --> 00:01:09,708
ராயல், நிமிர்ந்து பாரு!
17
00:01:11,416 --> 00:01:13,708
எல்லாரையும் தைரியமா நேரா கண்ண பாரு.
18
00:01:15,166 --> 00:01:17,375
இந்த ஆளுங்க வசதியானவங்களா இருந்தாலும்
19
00:01:17,375 --> 00:01:19,458
கடவுளுக்கு முன்னால நாம எல்லாரும் சமமே.
20
00:01:20,416 --> 00:01:23,625
அப்ப இந்தியர்?
அவங்களுக்கு கடவுள் இல்லேன்னீங்களே.
21
00:01:23,625 --> 00:01:27,500
ராயல் சம்னர், வெள்ளைக்காரன
இந்தியன்னு தப்பா நினைச்சுக்காத.
22
00:01:39,333 --> 00:01:40,541
ஜே.பி.!
23
00:01:41,750 --> 00:01:43,375
என்ன சொன்னேன்?
24
00:01:43,375 --> 00:01:47,791
திரும்பி வருவேன்னு சொன்ன. வந்துட்ட.
25
00:01:47,791 --> 00:01:50,833
அப்ப இறங்கி வந்து எனக்கு
வேண்டியத எடுத்து குடு.
26
00:01:51,958 --> 00:01:54,583
புதுப் பணக்காரன் காட்டற திமிரு.
27
00:02:01,041 --> 00:02:02,250
இது கொட்டகை இல்ல, ராயல்.
28
00:02:13,791 --> 00:02:16,875
- பொருந்துதான்னு பாப்போம்.
- எனக்கு இல்ல.
29
00:02:18,208 --> 00:02:20,125
ராயல், வந்து உட்காரு.
30
00:02:23,125 --> 00:02:25,208
இவன் சின்ன பையன். பெருசா இருக்கும்.
31
00:02:25,208 --> 00:02:26,875
வளர்ந்துடுவான்.
32
00:02:30,875 --> 00:02:33,000
ஹேய், அது அவன் வேலை.
33
00:02:37,208 --> 00:02:39,375
ஆமா. அது என் வேலை.
34
00:03:08,708 --> 00:03:11,666
பையா, எப்படி இருக்கு?
35
00:03:13,625 --> 00:03:15,083
ரொம்ப பெருசா இருக்கு.
36
00:03:18,166 --> 00:03:23,083
எந்திரி, எவ்ளோ மோசமா
வழுக்குதுன்னு பாப்போம்.
37
00:03:28,166 --> 00:03:31,291
- தடியான சாக்ஸ் தர்றேன்.
- அவங்க அம்மா தைப்பா.
38
00:03:37,833 --> 00:03:39,541
உன்கிட்ட வாங்கினதுல சந்தோஷம்.
39
00:03:45,750 --> 00:03:47,166
லீவை.
40
00:03:50,083 --> 00:03:52,458
மன்னிக்கணும், காசு குறைவா இருக்கு.
41
00:03:55,125 --> 00:03:56,833
இருக்க வாய்ப்பே இல்ல.
42
00:03:56,833 --> 00:03:58,208
விலை கூடிப் போச்சு.
43
00:04:01,041 --> 00:04:03,375
{\an8}அறிவிப்பு
விலை உயர்வு
44
00:04:05,291 --> 00:04:08,125
- என்ன சொல்லுதுன்னா...
- என் கிட்ட ஒழுங்கா பேசு.
45
00:04:11,125 --> 00:04:12,666
என் மகன அவமான படுத்தறியா?
46
00:04:12,666 --> 00:04:14,166
இல்ல, அப்படிலாம் இல்ல.
47
00:04:14,166 --> 00:04:16,250
தொழில் மந்தம், அதான் விலை உயர்வு!
48
00:04:24,791 --> 00:04:26,416
இங்கயே இரு.
49
00:04:45,041 --> 00:04:46,875
ஓரமா உட்கார்ந்துக்கோ பா.
50
00:05:11,416 --> 00:05:13,458
இத உன் கிட்ட சொல்ல விரும்பல தான்.
51
00:05:14,291 --> 00:05:16,208
ஆனா, ஆமா.
52
00:05:16,208 --> 00:05:18,708
மைக்கேல் ஜாக்சன் தான்
உலகின் பெரிய பாப் ஸ்டார்.
53
00:05:19,666 --> 00:05:21,333
ஜாப்பலினை விடவா?
54
00:05:22,583 --> 00:05:24,500
- தி பீட்டில்ஸ் .
- பீட்டில்ஸ் அவரோடது.
55
00:05:25,875 --> 00:05:27,666
பாலுக்கு கடுப்பு. போய் மீன் பிடி.
56
00:05:29,500 --> 00:05:31,125
எப்படி?
57
00:05:31,125 --> 00:05:34,916
அந்த பையன் திறமைசாலிதான்,
ஆனா எலிக்கு காதல் பாட்டு பாடினவனாச்சே.
58
00:05:34,916 --> 00:05:36,708
பென். தெரியும்.
59
00:05:39,125 --> 00:05:42,208
இத என்கிட்ட நாலு வருஷமா மறைச்சுட்ட.
60
00:05:42,208 --> 00:05:44,083
உன்னால ஏத்துக்க முடியுமானு தெரியல.
61
00:05:45,750 --> 00:05:47,041
நாயே.
62
00:06:07,375 --> 00:06:10,750
பெரியவங்க கிட்ட பேசேன்?
மோசமாயிட்டே போகுது.
63
00:06:12,708 --> 00:06:15,083
என் கோரிக்கைய
நீ ஏத்துக்கிட்டா அப்பறம் பேசுவேன்.
64
00:06:17,666 --> 00:06:19,375
அதுவரை, நான் திடமா இருக்கணும்.
65
00:06:20,666 --> 00:06:22,625
திடமா, மண்ணாங்கட்டி.
66
00:06:22,625 --> 00:06:24,583
அவங்களுக்கு நீ உயிரோட தேவை.
67
00:06:30,666 --> 00:06:32,416
ஜாய், புற்றுநோய் பரவிடுச்சு.
68
00:06:33,458 --> 00:06:35,875
நர்ஸா வேல பண்ண காலத்துலருந்து
69
00:06:35,875 --> 00:06:37,541
அதோட விளைவுகள் தெரியும்.
70
00:06:39,166 --> 00:06:42,333
பாரு, நீ என் கூடவே
நாலு வருஷம் இருந்திருக்க.
71
00:06:42,333 --> 00:06:44,875
எனக்கு தெரிஞ்சதெல்லாம் உனக்கும் தெரியும்.
72
00:06:44,875 --> 00:06:46,583
க்ரம் வந்துட்டார்!
73
00:06:49,208 --> 00:06:50,791
நீ போறியா?
74
00:06:53,583 --> 00:06:54,958
சரி.
75
00:06:57,375 --> 00:06:59,208
ஆனா நான் உனக்கு மாத்து இல்ல.
76
00:07:00,583 --> 00:07:01,750
என்னால முடியாது.
77
00:07:03,041 --> 00:07:04,666
நீ வீடு திரும்பப் போறதாலயா?
78
00:07:15,250 --> 00:07:18,291
- வணக்கம், ஜாய்.
- நீண்ட பயணமா?
79
00:07:18,291 --> 00:07:20,041
ஆமா, பல விதங்கள்ல.
80
00:07:20,041 --> 00:07:22,083
அதுங்க பொம்மைங்க இல்ல. நன்றி.
81
00:07:22,083 --> 00:07:24,000
நம்ம தோழி நல்லா இருக்காளா?
82
00:07:24,000 --> 00:07:26,583
போராடறா. முடிஞ்சவரை.
83
00:07:28,250 --> 00:07:31,041
- ரொம்ப காலம் தாங்காது.
- கேக்கவே கஷ்டமா இருக்கு.
84
00:07:32,250 --> 00:07:35,500
ஃபாலிங் ஸ்டார், அவ ஆளுங்களுக்கு
நிறையவே பண்ணிட்டா.
85
00:07:35,500 --> 00:07:37,833
இந்த மாற்றங்கள ரொம்ப எளிதாக்கினா.
86
00:07:37,833 --> 00:07:40,125
ஆமா. சுலபமான காரியமில்ல.
87
00:07:41,166 --> 00:07:43,250
அதான் அவள கொல்லுதோன்னு நினைப்பேன்.
88
00:07:44,791 --> 00:07:47,125
நீ முடிவு பண்ணிட்டியா?
89
00:07:47,125 --> 00:07:49,416
எங்க புது தொடர்பா
நீ இருப்பியா, மாட்டியா?
90
00:07:51,708 --> 00:07:55,125
திரு. க்ரம், நாம தொடங்கணும்.
சூரிய ஒளி சரியா இருக்கு.
91
00:09:21,041 --> 00:09:22,625
திரும்பி போயிருவோம்.
92
00:09:22,625 --> 00:09:23,875
வா.
93
00:09:23,875 --> 00:09:25,958
இல்ல! இதுவும் நம்ம நிலம் தான்!
94
00:10:14,750 --> 00:10:16,416
ஒழுங்கா ஓடிப் போயிடு!
95
00:10:17,250 --> 00:10:18,750
அசிங்கம் புடிச்ச பழங்குடி.
96
00:10:33,708 --> 00:10:35,125
சரி.
97
00:10:37,166 --> 00:10:38,833
எழுந்திரு. வா.
98
00:10:43,666 --> 00:10:47,625
தனியார் சொத்து
அத்துமீறி நுழையக் கூடாது
99
00:10:53,166 --> 00:10:56,166
- உன் முடிய சரி செய்யலாமா?
- கூடாது.
100
00:10:59,125 --> 00:11:00,750
கூடாதுன்னு சொன்னேன்.
101
00:11:00,750 --> 00:11:02,583
கூடாதுன்னு சொன்னாளே.
102
00:11:02,583 --> 00:11:04,291
ஒரு நிமிஷம் குடு, சல்லி.
103
00:11:09,000 --> 00:11:11,750
இது மாதிரி தருணங்களோட
முக்கியத்துவம் தெரியுமா?
104
00:11:11,750 --> 00:11:13,208
தயவுசெஞ்சு விளக்கு.
105
00:11:13,208 --> 00:11:16,041
இந்த நாட்டுக்கு இனி வர்றவங்க
இத பாப்பாங்க,
106
00:11:16,041 --> 00:11:18,416
உங்க கதைகள் பிரபலமாகும்,
107
00:11:18,416 --> 00:11:23,875
பழங்குடியினருக்கும் எதிர்கால
வந்தேறிகளுக்கும் நடுவுல பகை மறையும்.
108
00:11:25,583 --> 00:11:28,000
இந்த விரக்தி காலம் தற்காலிகமானது தான்.
109
00:11:29,375 --> 00:11:31,875
நீங்க பாக்கற எதிர்காலம்,
110
00:11:31,875 --> 00:11:35,166
அது நீங்க நினைக்கற மாதிரி
இருக்கவே இருக்காது.
111
00:11:35,166 --> 00:11:37,416
அது அவநம்பிக்கைனு சிலர் சொல்லுவாங்க.
112
00:11:37,416 --> 00:11:39,000
எனக்கு தெரிஞ்சு இல்ல.
113
00:11:39,958 --> 00:11:41,250
காலம் சொல்லும்.
114
00:11:42,250 --> 00:11:44,041
ஆனா அந்த நாள் வர்ற வரைக்கும்...
115
00:11:48,333 --> 00:11:50,625
நம்மால முடிஞ்சளவு உங்க மக்களுக்கும்,
116
00:11:50,625 --> 00:11:52,916
வந்தேறிகளுக்கும் நடுவுல
அமைதி காப்போம்
117
00:11:53,875 --> 00:11:56,000
வந்த வேலைய பாப்போம், திரு சல்லிவன்.
118
00:12:01,708 --> 00:12:04,708
அருமை. எல்லாரும் புன்னகைங்க.
119
00:12:05,333 --> 00:12:07,125
ஷோஷோனியா இருப்பதுல பெருமை!
120
00:12:24,208 --> 00:12:27,958
அவுட்டர் ரேன்ஜ்
121
00:12:59,666 --> 00:13:02,041
உனக்கு கருணை நிறைஞ்ச பார்வை.
122
00:13:09,000 --> 00:13:10,666
நீ திரும்பி போனா,
123
00:13:13,166 --> 00:13:14,958
எப்படி இருக்கும்னு நினைக்கற?
124
00:13:16,625 --> 00:13:18,041
தெரியல.
125
00:13:19,166 --> 00:13:22,666
அதைப் பத்தி ரொம்ப யோசிச்சா, சோகமாகுது.
126
00:13:24,416 --> 00:13:25,833
ஏன்?
127
00:13:27,208 --> 00:13:28,416
காலம்.
128
00:13:29,625 --> 00:13:31,166
காத்திருக்கறது இல்ல.
129
00:13:32,625 --> 00:13:35,458
ரோஸுக்கு இப்ப 11 வயசு.
130
00:13:36,500 --> 00:13:37,958
மார்த்தாவும் மறந்திருப்பா.
131
00:13:39,125 --> 00:13:41,041
நான் சொன்னா நம்புவாங்களா?
132
00:13:42,375 --> 00:13:44,083
என்ன பைத்தியம்னு நினைப்பாங்களா?
133
00:13:45,083 --> 00:13:46,375
அன்பு.
134
00:13:47,083 --> 00:13:48,583
உண்மையான அன்பு.
135
00:13:49,958 --> 00:13:52,000
அது எல்லாத்தையும் துளைக்கும்.
136
00:13:56,166 --> 00:13:58,250
எங்க உறவுல ஒரு பிரச்சனை.
137
00:14:02,458 --> 00:14:04,458
கொஞ்ச காலத்துக்கு முன்னால, ஒரு போதகர்
138
00:14:05,666 --> 00:14:07,208
எங்கள தவறா சித்தரிச்சார்.
139
00:14:08,458 --> 00:14:11,416
ஏன்னா நாங்க உறவுல இருந்த
ரெண்டு பொம்பளைங்க.
140
00:14:12,500 --> 00:14:13,666
ஒரு குடும்பமா.
141
00:14:15,000 --> 00:14:18,083
அந்த நாய் மொத்த சபைக்கு முன்னால நிக்கறவன்.
142
00:14:18,083 --> 00:14:20,208
நான் காப்பேன்னு நம்பறவங்க முன்னால.
143
00:14:22,708 --> 00:14:24,416
பல்ல கடிச்சுக்கிட்டேன்.
144
00:14:28,208 --> 00:14:29,875
ஏன்னா ஷெரிஃப் தேர்தல்ல நின்னேன்.
145
00:14:32,958 --> 00:14:34,458
மார்த்தா என்ன சொன்னா?
146
00:14:36,791 --> 00:14:38,083
எனக்கு நினைவில்ல.
147
00:14:38,875 --> 00:14:41,000
உன்னால இவ்ளோ சுலபமா பொய் சொல்ல முடியும்னா,
148
00:14:42,958 --> 00:14:45,958
நீ கவலப்பட வேண்டியது காலம் பத்தி இல்ல.
149
00:14:48,500 --> 00:14:49,833
தெரியும்.
150
00:14:50,625 --> 00:14:52,000
ஜாய்.
151
00:14:54,166 --> 00:14:56,375
நீ அதே ஆள் இல்ல இப்ப.
152
00:14:58,666 --> 00:15:03,625
நீ வீட்டுக்கு போனதும்,
மார்த்தா அத கவனிப்பா .
153
00:15:06,250 --> 00:15:08,416
ப்பிளார்ஸை கொண்டு போயிட்டாங்க!
154
00:15:09,458 --> 00:15:11,750
ஃப்ளவர்ஸ்ஸ தூக்கிட்டு போயிட்டாங்க!
155
00:15:12,583 --> 00:15:15,166
ஃப்ளவர்ஸ்ஸ தூக்கிட்டு போயிட்டாங்க!
156
00:15:16,125 --> 00:15:19,583
ஃப்ளவர்ஸ்! ஃப்ளவர்ஸ்ஸ
தூக்கிட்டு போயிட்டாங்க!
157
00:15:19,583 --> 00:15:20,500
யாரு?
158
00:15:22,250 --> 00:15:23,708
வெள்ளைக்காரங்க!
159
00:15:23,708 --> 00:15:26,041
மரங்கள் வெட்டப்பட்ட இடத்துல் இருக்கறவங்க!
160
00:15:27,000 --> 00:15:28,625
நீங்க ஏன் அங்க போனீங்க?
161
00:15:28,625 --> 00:15:31,291
எங்களால முடியும்னு நிரூபிக்க!
162
00:15:31,750 --> 00:15:34,583
எல்லாருக்கும் உணவு கொண்டு வர போனோம்.
163
00:15:37,458 --> 00:15:41,625
அந்த ஆளுங்க திடீர்னு வந்தாங்க.
164
00:15:44,458 --> 00:15:46,208
வீரர்கள் வேட்டைக்கு போயிருக்காங்க.
165
00:15:47,291 --> 00:15:51,250
ராத்திரி தான் திரும்பி வருவாங்க.
அதுக்குள்ள ஃப்ளவர்ஸ்ஸ இழந்துடுவோம்.
166
00:15:55,041 --> 00:15:59,125
அவள நான் கண்டுபிடிக்கறப்போ,
அவங்க முடிஞ்சவரை தடுப்பாங்க.
167
00:16:00,708 --> 00:16:02,500
அவங்கள தடுக்க விடாதே.
168
00:16:28,708 --> 00:16:30,125
மௌண்டன் லயன்!
169
00:16:30,125 --> 00:16:32,333
வேகமான குதிரைய கொண்டு வா!
170
00:17:30,333 --> 00:17:32,166
எனக்கு ஒண்ணு தோணுது,
171
00:17:34,166 --> 00:17:35,833
மேற்கே
172
00:17:38,291 --> 00:17:40,833
பாக்கறப்போ,
173
00:17:42,708 --> 00:17:48,541
என் ஆவி அழுகுது,
174
00:17:51,791 --> 00:17:53,208
பிரிவ நெனச்சு.
175
00:17:57,541 --> 00:18:01,333
ரெண்டு பாதைகள் இருக்கு,
176
00:18:02,333 --> 00:18:04,041
ஆனா தொலைநோக்கோட பார்த்தா,
177
00:18:04,041 --> 00:18:08,375
இப்பவும் பாதைய மாத்திக்க
நேரம் இருக்கு.
178
00:19:48,791 --> 00:19:50,500
சரி.
179
00:20:20,250 --> 00:20:21,083
ஹேய்!
180
00:21:10,583 --> 00:21:11,875
ஹேய்!
181
00:21:22,416 --> 00:21:24,458
அட, நீ என்ன சொல்றேன்னே புரியல. ஹேய்!
182
00:21:32,333 --> 00:21:35,958
ஏபெலோட ஃபிடில உடைச்ச,
கத்தில சொருகிடுவான். நான் எதுவும்...
183
00:21:40,083 --> 00:21:41,791
விளையாடுனது போதும், ஷெல்டன்.
184
00:21:48,041 --> 00:21:50,458
அவள என்கிட்ட அனுப்ப
உனக்கு ஒரு வாய்ப்பு தர்றேன்.
185
00:21:52,041 --> 00:21:55,375
ஹேய், பார்க்க ஆம்பள மாதிரி இருக்க.
ஆனா குரல் அப்படி இல்லயே.
186
00:22:00,166 --> 00:22:02,875
எப்படியும் உங்க எல்லாரையும்
போட்டுத் தள்ளுவேன்.
187
00:22:19,208 --> 00:22:20,625
அய்யோ!
188
00:22:30,916 --> 00:22:33,791
அய்யோ, வேணாம். சே.
189
00:22:38,250 --> 00:22:40,125
நாம போகணும். இப்பவே.
190
00:22:53,583 --> 00:22:56,166
அவளைத் தேடி வருவேன், உன்னையும் தான்!
191
00:22:56,875 --> 00:22:58,416
ரத்தக்கசிவு அதிகமா இருக்கே.
192
00:22:58,875 --> 00:23:00,916
நீ கேக்கற கடைசி குரல் என்னுதாயிருக்கும்!
193
00:23:04,166 --> 00:23:05,541
ஒழுங்கா ஓடிப்போயிடு!
194
00:23:22,291 --> 00:23:23,958
புடிச்சுக்கோ, ஃப்ளவர்ஸ்.
195
00:23:23,958 --> 00:23:25,541
நன்றி.
196
00:23:38,083 --> 00:23:39,666
இந்தா.
197
00:23:39,666 --> 00:23:41,083
ஷூ எப்படி இருக்கு?
198
00:23:42,541 --> 00:23:43,625
வலிக்குது.
199
00:23:44,708 --> 00:23:46,041
நீ வளர்ந்தா சரியாயிடும்.
200
00:23:47,291 --> 00:23:49,083
கொஞ்சம் வலி உனக்கு நல்லது தான்.
201
00:23:50,166 --> 00:23:51,708
ஆணா இருக்கறதுல இது ஒரு அங்கம்.
202
00:24:11,333 --> 00:24:13,125
இஸ்ஸி, உள்ள போ.
203
00:24:13,125 --> 00:24:15,958
மதிய வணக்கம், மேடம். திரு. சம்னர்.
204
00:24:15,958 --> 00:24:18,208
நீ போய் செடி நடு, இது உனக்கு தேவையில்ல.
205
00:24:18,208 --> 00:24:19,708
இது தான் பசுவா?
206
00:24:20,708 --> 00:24:23,166
அது தான். டெய்சி.
207
00:24:29,083 --> 00:24:30,875
லீவை, என்ன நடக்குது?
208
00:24:38,916 --> 00:24:42,291
உங்க பையன் ஷூவுக்காக உங்க கணவருக்கு
பணம் தேவப்பட்டுது.
209
00:24:42,291 --> 00:24:45,041
இப்ப வங்கி, கால்நடைய
பிணையமா ஏத்துக்கறதில்ல,
210
00:24:45,041 --> 00:24:47,708
ஆனா என் சகோதரன் பண்ணை தயார் செய்றான்,
211
00:24:47,708 --> 00:24:49,416
கால்நடை கிடைக்கறது கஷ்டம்.
212
00:24:49,416 --> 00:24:51,458
பசுவ வெச்சுதான் குளிர்காலத்த ஓட்டணும்.
213
00:24:51,458 --> 00:24:53,916
பசுவ வித்தாச்சு. நீங்க போகலாம்.
214
00:25:02,875 --> 00:25:05,041
ஆலிஸ். என்ன நீ.
215
00:25:06,083 --> 00:25:08,875
- ஆலிஸ்.
- திரு. சம்னர். உங்க மனைவி.
216
00:25:11,750 --> 00:25:16,375
என்ன காரணமோ, இந்த விற்பனைய
என் கணவர் என்கிட்ட இருந்து மறைச்சுட்டாரு.
217
00:25:16,375 --> 00:25:19,625
- துப்பாக்கிய கீழ போடு.
- பசு இங்க தான் இருக்கும்.
218
00:25:19,625 --> 00:25:21,583
துப்பாக்கிய கீழ போடு.
219
00:25:21,583 --> 00:25:25,833
அந்த கால்நடை பணக்காரங்களோட போட்டி
போட ஆடம்பரமான ஷூ மட்டும் இருந்தா போதாது.
220
00:25:30,166 --> 00:25:33,958
நானும் என் பையனும்
உழைச்சு இதுலருந்து மீளுவோம்.
221
00:25:39,458 --> 00:25:41,333
லீவை சம்னர்!
222
00:25:41,333 --> 00:25:43,583
திரு. கேப், என்ன விஷயம்?
223
00:25:44,125 --> 00:25:47,166
காட்டுமிராண்டிங்க என் இடத்துல திருடுனாங்க.
224
00:25:47,166 --> 00:25:50,500
என் வேலையாளுங்க ரெண்டு பேரை
கொன்னுட்டு காட்டுக்குள்ள ஓடுனாங்க.
225
00:25:51,458 --> 00:25:53,666
நீ தேடறதுல நிபுணனாமே, லீவை.
226
00:25:55,875 --> 00:25:57,291
நீங்க கேள்விப்பட்டது சரி.
227
00:25:57,291 --> 00:25:59,208
எனக்கு உதவினன்னா,
228
00:25:59,875 --> 00:26:03,041
நீ என் நிலத்தில வேல செய்ய
ஏற்பாடு செய்றேன்.
229
00:26:06,833 --> 00:26:09,416
துப்பாக்கி, கொஞ்சம் குண்டுகள்
எடுத்துட்டு வாடா.
230
00:26:10,375 --> 00:26:11,875
ஆமா, ரக்கூன் வேட்டை.
231
00:26:11,875 --> 00:26:14,375
- சரி.
- அவருக்கு கோபம் வர்றதுக்கு முன்னால போ.
232
00:26:14,375 --> 00:26:16,666
திரு. ஃபார்பர், ஷெரிஃப் கிட்ட சொல்லுங்க.
233
00:26:16,666 --> 00:26:18,208
அவங்க பாதைல போறேன்.
234
00:26:18,208 --> 00:26:21,541
வந்து என்ன பாரு.
என் காட்டுக்கு வடக்கே வா!
235
00:26:21,541 --> 00:26:23,125
போலாம்!
236
00:26:27,541 --> 00:26:29,208
பசுவுக்காக திரும்பி வருவேன்.
237
00:26:31,541 --> 00:26:34,041
கேப் வெறி பிடிச்சவன், லீவை.
238
00:26:34,041 --> 00:26:35,875
அவனால யாராவது சாவாங்க.
239
00:26:38,833 --> 00:26:40,750
உனக்கு தெரியுதுல்ல?
240
00:26:43,000 --> 00:26:44,666
எனக்கு தெரியறதெல்லாம்
241
00:26:45,875 --> 00:26:47,500
நம்ம எதிர்காலம் தான்.
242
00:26:50,750 --> 00:26:53,500
ஹேய், நடந்து தேடுறதுதான் சிறந்த வழி.
243
00:26:57,583 --> 00:26:58,916
வா.
244
00:27:00,000 --> 00:27:03,166
ராயல், பத்திரமா இரு!
245
00:27:08,125 --> 00:27:10,000
ப்ளீஸ், அமைதியா இருங்க.
246
00:27:11,541 --> 00:27:13,000
கேளுங்க.
247
00:27:13,000 --> 00:27:14,750
அவங்கள தூக்குல போடணும்!
248
00:27:15,875 --> 00:27:19,541
நினைவுபடுத்தறேன், திரு. க்ரம் தான்
நம்ம இந்திய முகவர்.
249
00:27:20,333 --> 00:27:23,875
அவர் அரைகுறையா போக மாட்டாரு.
அதனால அவரு சொல்றத கேளுங்க.
250
00:27:23,875 --> 00:27:25,916
அவர் தெரிஞ்சு தான் பேசறார்.
251
00:27:25,916 --> 00:27:27,291
நன்றி, ஷெரிஃப்.
252
00:27:28,458 --> 00:27:30,416
கோபமா இருக்கீங்கன்னு புரியுது.
253
00:27:30,416 --> 00:27:32,291
ஆமா!
254
00:27:32,291 --> 00:27:36,500
கேள்விப்பட்டது உண்மைனா,
அது நிச்சயமா அதிர்ச்சியா இருக்கு.
255
00:27:38,250 --> 00:27:41,375
அவர பேச விடுங்க!
256
00:27:43,500 --> 00:27:45,958
அக்கிரமம், சந்தேகமே இல்ல.
257
00:27:45,958 --> 00:27:50,208
ஆனா ஒரு அரசாங்க முகவரா
கட்டுப்பாட்டை வலியுறுத்தறேன்.
258
00:27:50,916 --> 00:27:54,708
வசந்த காலம் வந்தா,
ஷோஷோனியை இடம் மாத்த போறோம்.
259
00:27:54,708 --> 00:28:00,041
இப்பவே காங்கிரஸ் எல்லைய
உங்களுக்கு சாதகமா வரைஞ்சுட்டிருக்காங்க.
260
00:28:00,041 --> 00:28:05,833
தனியார் சொத்துல வெள்ளைக்காரங்க கொல்ல
பட்டதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
261
00:28:06,583 --> 00:28:08,875
- ஆமென்!
- நீங்க அரசு ஊழியர்,
262
00:28:08,875 --> 00:28:11,083
நீங்க சொல்றத நாங்க ஏன் கேக்கணும்?
263
00:28:11,083 --> 00:28:13,625
நல்ல அந்தஸ்துல இருக்கீங்க,
264
00:28:14,875 --> 00:28:17,166
இவ்ளோ ரத்த வெறி கூடாது.
265
00:28:17,166 --> 00:28:19,166
சரி, கொஞ்சம் அமைதியாவோம்.
266
00:28:20,666 --> 00:28:23,833
இந்த பள்ளத்தாக்கோட
நில உரிமையாளர்களுக்காக தான் பேசறேன்,
267
00:28:23,833 --> 00:28:27,833
கட்டுப்பாட்டோட இருக்கறதுதான்
புத்திசாலித்தனம்.
268
00:28:27,833 --> 00:28:31,166
இந்தியர்கள சட்டம் பார்த்துக்கட்டும்.
269
00:28:31,166 --> 00:28:33,500
நாமதான் கடைசில சந்தோஷமா இருப்போம்.
270
00:28:33,500 --> 00:28:36,958
இந்த நிலைமைல சந்தோஷப்பட ஒண்ணுமில்ல.
271
00:28:36,958 --> 00:28:39,208
நீதான் இதுல ஜோக்குங்கறதாலயோ என்னமோ.
272
00:28:40,041 --> 00:28:44,625
- பார்த்து பேசு.
- நீ இருக்கற இடத்த மறக்காத.
273
00:28:44,625 --> 00:28:49,791
என் இடம் இந்த நிலத்துல இருக்கு,
இது நம்ம எல்லாருக்கும் சொந்தம்.
274
00:28:49,791 --> 00:28:52,541
- ஆமா!
- நாங்க இங்க வாழறோம்!
275
00:28:52,541 --> 00:28:54,583
வாங்க முடிஞ்சவங்களுக்கே சொந்தம்.
276
00:28:55,833 --> 00:28:58,583
அது மாதிரி இங்க பெருசா யாரும் இல்லயே.
277
00:29:05,791 --> 00:29:07,208
கடவுள் சத்தியமா,
278
00:29:08,916 --> 00:29:12,125
எவனாவது ஏழை வெள்ளையன் படுத்தினா
மண்டைலயே சுடுவேன்.
279
00:29:14,041 --> 00:29:17,458
என் சண்டை இங்க இல்ல.
அங்க ஷெல்டனோட தான்.
280
00:29:17,458 --> 00:29:18,708
ஆமா!
281
00:29:18,708 --> 00:29:20,875
என்னோட யார் வர்றீங்களோ வாங்க.
282
00:29:49,916 --> 00:29:51,833
ஃப்ளவர்ஸ்!
283
00:29:54,791 --> 00:29:56,541
நாம போகணும்!
284
00:29:59,166 --> 00:30:03,958
உங்க காலுக்கு ஏதாவது செய்யலனா,
போய் சேர மாட்டோம்.
285
00:30:23,708 --> 00:30:25,208
உங்க கால காட்டுங்க.
286
00:30:29,916 --> 00:30:31,458
குதிரைய எடுத்துக்கோ.
287
00:30:39,875 --> 00:30:41,416
எல்லாம் என்னால தான்.
288
00:30:43,250 --> 00:30:44,750
இல்ல.
289
00:31:00,125 --> 00:31:01,666
உன் வயசுல
290
00:31:04,541 --> 00:31:07,416
நானும் தாக்கப்பட்டேன்.
291
00:31:11,666 --> 00:31:14,166
என்ன பிடிச்சிருப்பாங்க,
ஆனா தப்பிட்டேன்.
292
00:31:15,708 --> 00:31:18,000
அந்த நிகழ்வு என் மனச விட்டு அகலவே இல்ல,
293
00:31:18,000 --> 00:31:19,833
என்னால யோசிக்காம இருக்க முடியல.
294
00:31:21,541 --> 00:31:23,500
நான் வளர்ந்தப்பறம்,
295
00:31:26,500 --> 00:31:29,125
எனக்கு வேண்டியவங்க யாரும் அப்படி
உணரக்கூடாதுன்னு உறுதி எடுத்துகிட்டேன்.
296
00:31:33,416 --> 00:31:37,125
என்ன என்னெல்லாம்
செய்யப்போறாங்கன்னு சொன்னாங்க.
297
00:31:39,666 --> 00:31:42,250
அவங்க சுவாசத்துல விஸ்கி நாத்தம்...
298
00:31:42,250 --> 00:31:44,375
இப்ப நீ பாதுகாப்பா இருக்க.
299
00:31:53,083 --> 00:31:55,666
எனக்காக வந்தீங்க.
300
00:31:56,333 --> 00:31:57,750
உங்கள விட்டு நான் போறதா இல்ல.
301
00:31:58,583 --> 00:32:02,000
எனக்கு என்ன தெரியும்னு தெரியாம.
302
00:32:03,458 --> 00:32:07,791
என்னத் தேடி வந்தது பெரிய ஆபத்து.
303
00:32:09,375 --> 00:32:13,916
ஏதாவது ஆச்சுன்னா, உங்களால
உங்க காலத்துக்கு திரும்ப முடியாது.
304
00:32:25,416 --> 00:32:27,958
குதிரைய எடுத்துக்கோ.
305
00:32:38,958 --> 00:32:43,833
அவங்க வராங்கன்னு
ஃபாலிங் ஸ்டார் கிட்ட சொல்லு.
306
00:33:03,250 --> 00:33:04,916
ஷெல்டன்.
307
00:33:09,458 --> 00:33:10,916
ஷெல்டன்.
308
00:33:12,583 --> 00:33:14,333
என் கிட்டயா பேசற?
309
00:33:14,333 --> 00:33:17,291
குதிரைய விட்டு இறங்குங்க.
310
00:33:18,541 --> 00:33:21,458
உன்ன தேட விடாம என் குதிரை
எப்படி தொந்தரவு செய்யுது?
311
00:33:21,458 --> 00:33:24,708
- ரொம்ப சத்தமா இருக்கு.
- உன் ஏழை வாய மூடிட்டு இரு.
312
00:33:28,291 --> 00:33:31,500
கடைசியா எப்ப வேட்டைக்கு போனீங்க, பாஸ்?
313
00:33:31,500 --> 00:33:34,166
அது உனக்கு தேவையில்லாதது.
314
00:33:34,166 --> 00:33:37,250
எனக்கு நிறைய விஷயம் தெரியாதுதான்,
315
00:33:38,208 --> 00:33:42,875
ஆனா இந்திய இடத்துக்குள்ள
அசட்டு தைரியத்தோட அவங்களுக்கு
316
00:33:42,875 --> 00:33:44,333
தெரியற மாதிரி நுழைய கூடாது.
317
00:33:45,416 --> 00:33:48,666
அதான் உங்க திட்டம்னா மேல போயிடுவீங்க.
318
00:33:48,666 --> 00:33:53,041
இல்லனா, குதிரைய விட்டு இறங்குங்க.
319
00:33:56,291 --> 00:33:57,958
என்ன செய்யலாம்னு சொல்ற?
320
00:34:00,291 --> 00:34:03,666
அவங்கள்ல ஒருத்தருக்கு காயம்னா,
மெதுவாதான் போவாங்க.
321
00:34:04,583 --> 00:34:10,041
நாம பிரிஞ்சு, அந்த பொறுக்கி
தப்பிக்காதமாதிரி சுத்தி வளைப்போம்.
322
00:34:11,500 --> 00:34:15,500
அப்படின்னு சொல்லுவேன், சார்.
323
00:34:29,750 --> 00:34:31,416
செத்துடாத.
324
00:34:37,375 --> 00:34:39,083
திரும்பி வந்துடுவேன்டா.
325
00:34:41,625 --> 00:34:44,291
நான் எந்த பக்கமா போகணும்?
326
00:34:45,583 --> 00:34:47,250
ரத்தத்த தொடர்ந்து போங்க.
327
00:34:49,125 --> 00:34:51,083
ரொம்ப நிலையான பாதை.
328
00:34:55,125 --> 00:34:56,583
சரி.
329
00:34:59,500 --> 00:35:02,125
இங்க நின்னுட்டு என்ன பண்ணிட்டிருக்க?
330
00:35:24,375 --> 00:35:25,708
ஃப்ளவர்ஸ்!
331
00:35:25,708 --> 00:35:27,333
நீ வந்துட்ட!
332
00:35:30,875 --> 00:35:33,916
நான் ஓடினதுக்கு மன்னிச்சுடு!
333
00:35:34,875 --> 00:35:35,958
ஜாய் எங்க?
334
00:35:38,125 --> 00:35:42,625
அவங்களுக்கு காயம் ஆயிடுச்சு,
335
00:35:43,791 --> 00:35:45,958
அவங்க அங்கயே இருந்துட்டாங்க.
336
00:35:45,958 --> 00:35:47,000
காயமா?
337
00:35:48,208 --> 00:35:50,208
அவள பின் தொடர்ந்தாங்களா?
338
00:35:51,500 --> 00:35:53,208
அவங்க வந்துட்டிருக்காங்க. வேகமா.
339
00:35:58,250 --> 00:35:59,916
உன் திறமைய நிரூபிக்கணுமா?
340
00:36:01,458 --> 00:36:06,958
நம்ம வீரர்கள கண்டுபுடிச்சு
திரும்ப கூட்டிட்டு வா.
341
00:36:09,333 --> 00:36:10,458
மௌண்டன் லயன்.
342
00:36:12,000 --> 00:36:13,208
பயப்படாத.
343
00:36:14,791 --> 00:36:17,083
உன் நெஞ்சுல தைரியம் இருக்கு.
344
00:39:08,250 --> 00:39:09,958
முட்டாள்.
345
00:39:12,541 --> 00:39:15,500
அந்த பக்கமா. ஒரு நிமிஷம். பொறு!
346
00:39:15,500 --> 00:39:18,958
அந்த முட்டாள் மாதிரி சத்தம் பண்ணாத,
இல்லன்னா கொன்னுடுவேன்.
347
00:39:19,750 --> 00:39:22,000
எது நகர்ந்தாலும் சுட்டுடு.
348
00:39:24,750 --> 00:39:26,041
போ!
349
00:39:58,833 --> 00:40:00,500
சே.
350
00:40:11,458 --> 00:40:13,333
- பத்திரமா கையாளு, ராயல்.
- நகராத.
351
00:40:15,541 --> 00:40:17,166
- என்னால முடியாது.
- வாய மூடு.
352
00:40:22,208 --> 00:40:23,583
உன் உணர்வு எனக்கு புரியுது.
353
00:40:24,875 --> 00:40:26,166
புரியுது.
354
00:40:28,708 --> 00:40:30,875
நீ தனியாவா வந்திருக்க?
355
00:40:32,000 --> 00:40:33,583
உங்கப்பா எங்க?
356
00:40:40,416 --> 00:40:42,125
ராயல்னு ஒருத்தர எனக்கு தெரியும்.
357
00:40:44,333 --> 00:40:46,000
நல்லவரா இருக்க முயல்வாரு.
358
00:40:47,958 --> 00:40:49,625
உங்கப்பா மாதிரி கிடையாது.
359
00:40:50,875 --> 00:40:52,458
அவரு நல்லவரு இல்ல தான ?
360
00:40:53,250 --> 00:40:55,583
எங்க இடத்துல,
அவர போல ஆள சிறைல போடுவாங்க.
361
00:40:57,916 --> 00:41:00,541
பொம்பளைங்க, குழந்தைங்கள
காயப்படுத்துற ஆம்பளைங்கள.
362
00:41:04,083 --> 00:41:06,375
நீ அந்த மாதிரி இருக்க வேணாம், ராயல்.
363
00:41:07,541 --> 00:41:09,166
நீ வித்தியாசமா இருக்கலாம்.
364
00:41:11,083 --> 00:41:15,916
எனக்கு உதவறதுலிருந்து தொடங்கலாமே, ப்ளீஸ்.
365
00:41:15,916 --> 00:41:17,750
அங்கயே இருடா.
366
00:41:22,208 --> 00:41:24,041
சத்தம் போடாத, நாயே.
367
00:41:28,541 --> 00:41:31,875
மார்த்தா, ரோஸ், ஐ லவ் யூ.
நான் முயற்சி பண்ணேன்.
368
00:41:31,875 --> 00:41:34,458
உங்க இந்திய கடவுளுங்க
உன்ன காப்பாத்தா போறதில்ல.
369
00:41:36,625 --> 00:41:39,000
இத உன் மகன் முன்னாடி செய்ய போறியா?
370
00:41:39,000 --> 00:41:40,333
இல்ல.
371
00:41:40,958 --> 00:41:43,208
அந்த கௌரவத்த அவனுக்கு தர்றேன்.
372
00:41:44,916 --> 00:41:48,916
ஆகட்டும், ராயல்.
நான் சொல்லி குடுத்த மாதிரி சுடு.
373
00:41:48,916 --> 00:41:50,541
உன் இஷ்டம்.
374
00:41:50,541 --> 00:41:54,000
தலைலயா, இல்ல நேரா நெஞ்சுலயா?
375
00:41:57,458 --> 00:41:59,708
எப்ப தயாரோ சுடு டா.
376
00:41:59,708 --> 00:42:01,375
சம்னர்.
377
00:42:02,708 --> 00:42:04,166
இத தெரிஞ்சுக்கோ.
378
00:42:05,166 --> 00:42:09,000
நீ சாகற அன்னிக்கு
உன் குடும்பம் கொண்டாடும்.
379
00:42:10,333 --> 00:42:12,666
ஏன்னா உன்கிட்ட இருந்து
அவங்களுக்கு விடுதலை.
380
00:42:13,625 --> 00:42:17,291
எனக்கு அதிர்ஷ்டம் இருந்தா,
என் மனைவி பிரசவத்துல இறப்பா,
381
00:42:17,291 --> 00:42:19,291
எனக்கு அவங்ககிட்ட இருந்து விடுதலை.
382
00:42:19,291 --> 00:42:21,083
செத்துத் தொல!
383
00:42:21,083 --> 00:42:22,625
நீ முதல்ல.
384
00:42:23,958 --> 00:42:26,083
எதுக்கு காத்திருக்கடா? சுடு!
385
00:42:45,833 --> 00:42:47,291
ராயல்!
386
00:42:48,625 --> 00:42:49,791
ராயல்!
387
00:42:53,583 --> 00:42:55,583
ராயல்! இரு!
388
00:43:32,625 --> 00:43:34,291
ரீலோட் செய்யுங்க! வேகமா!
389
00:43:47,416 --> 00:43:49,000
என்ன நடக்குது, ஃபார்பர்?
390
00:44:06,666 --> 00:44:08,041
ராயல்!
391
00:44:08,875 --> 00:44:11,208
ராயல், இரு!
392
00:44:18,833 --> 00:44:20,750
ராயல், இரு!
393
00:45:42,000 --> 00:45:43,916
ராயல்!
394
00:46:10,000 --> 00:46:11,416
ராயல்?
395
00:46:18,833 --> 00:46:20,416
ஜாய்?
396
00:48:30,083 --> 00:48:32,083
வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரசன்னா சிவராமன்
397
00:48:32,083 --> 00:48:34,166
படைப்பு மேற்பார்வையாளர்
கே.ஆர்.கீர்த்திகா