1 00:00:04,734 --> 00:00:06,736 இன்றைய கேள்வி: 2 00:00:07,445 --> 00:00:10,281 தீயில் இருந்து எப்படி ஐஸ் செய்வது? 3 00:00:16,955 --> 00:00:18,957 எனக்கு தெரியாது, அப்பா, நான் முயற்சி செய்யப் போவதில்லை. 4 00:00:19,499 --> 00:00:20,667 முயற்சி செய்ய மாட்டாயா? 5 00:00:22,085 --> 00:00:24,504 ஒரு நொடி தான். 6 00:01:00,665 --> 00:01:02,250 என்ன ஒரு ஆச்சரியம். 7 00:01:04,126 --> 00:01:05,628 தீயிலிருந்து ஐஸ். 8 00:01:07,171 --> 00:01:10,174 தண்ணீர், தீ, காற்று உள்ளே புகாதபடி அடைத்து வைத்தல். 9 00:01:10,925 --> 00:01:12,343 அவ்வளவு தான், எதுவும் வீண் ஆகாது. 10 00:01:13,177 --> 00:01:14,470 நீ என்ன நினைக்கிறாய்? 11 00:01:16,681 --> 00:01:17,724 அது பிரமாதம். 12 00:01:18,892 --> 00:01:19,976 அது எதற்காக? 13 00:01:20,059 --> 00:01:24,105 சரி, இந்த உலகத்தில் இன்னும் நிறைய மக்கள் மின்சாரம் இல்லாமல் இருக்கின்றனர். 14 00:01:24,939 --> 00:01:28,401 நம்மை விட ஏழை நாடுகளில் வசிப்போர், உணவை பத்திரப்படுத்தி வைக்க முடியும். 15 00:01:28,484 --> 00:01:32,113 நிவாரணம் அளிக்கும் நிறுவனங்கள், மருந்து மற்றும் தடுப்பூசிகளை பத்திரப்படுத்தலாம். 16 00:01:33,698 --> 00:01:34,741 இது மிக சிறியதாக உள்ளது. 17 00:01:36,409 --> 00:01:37,410 ஓ, இல்லை. 18 00:01:40,288 --> 00:01:41,539 என்னால் பெரிதாக ஒன்று செய்ய முடியும். 19 00:01:42,624 --> 00:01:43,625 மிக பெரியதாக. 20 00:01:46,211 --> 00:01:47,253 நீ விரும்பும் அளவிற்கு பெரிதாக. 21 00:01:52,926 --> 00:01:54,385 நாம் பணக்காரர்களாக ஆகப்போகிறோமா? 22 00:01:57,472 --> 00:02:03,436 அதைப் பற்றி எனக்கு தெரியாது, ஆனால் நீ இரு நாட்களுக்கு பொறுமையாக இருக்க வேண்டும், 23 00:02:03,519 --> 00:02:05,897 காப்புரிமை அளிக்கும் அலுவலகம், விண்ணப்பத்தை ஏற்கும் வரை நீ காத்திரு. 24 00:02:07,440 --> 00:02:08,440 பார்ப்போம். 25 00:02:12,320 --> 00:02:13,321 நாம் போகலாம். 26 00:02:55,113 --> 00:03:00,869 தி மஸ்கிட்டோ கோஸ்ட் 27 00:03:47,207 --> 00:03:50,084 பால் தெரோக்ஸ் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 28 00:04:09,604 --> 00:04:11,898 மழை பெய்கிறது, என்னிடம் குடை இல்லை. 29 00:04:15,109 --> 00:04:16,194 சரி... 30 00:04:22,575 --> 00:04:24,244 அதை சிக்கலாக்க விரும்புகிறேன். 31 00:04:24,327 --> 00:04:25,787 "மழை பெய்யும் என்று எனக்கு தெரிந்திருந்தால், 32 00:04:25,870 --> 00:04:27,288 குடை கொண்டு வரலாம் என்று நினைத்திருப்பேன்." 33 00:04:27,372 --> 00:04:28,998 -இல்லை, நண்பா. -சொல்லு. 34 00:04:29,082 --> 00:04:30,333 ...டிரபலெங்குவாஸ். 35 00:04:30,416 --> 00:04:32,377 -தெரியுமா, ஆங்கிலத்தில் டிரபலெங்குவாஸ்? -டிரபலெங்குவாஸ்? இல்லை. 36 00:04:32,460 --> 00:04:34,045 அது ஒரு நாக்கை வளைக்கும் வாக்கியம். 37 00:04:34,128 --> 00:04:36,172 -நான் உனக்கு ஒன்று தருகிறேன். -ஸீ. சரி. 38 00:04:36,256 --> 00:04:39,884 -டிரெஸ் டிரிஸ்டேஸ் டைக்ரெஸ்... -ஓ, இல்லை. இல்லை. டிரெஸ்... 39 00:04:42,887 --> 00:04:44,013 ஆக, முதல் பகுதி என்ன? 40 00:04:44,097 --> 00:04:46,516 டிரெஸ் டிரிஸ்டேஸ்... 41 00:04:46,599 --> 00:04:48,059 -டிரிஸ்டேஸ். "சோகம்." -டிரிஸ்டேஸ். "சோகம்"? 42 00:04:48,142 --> 00:04:49,519 -மூன்று சோகமான புலிகள். -ஆம். 43 00:04:49,602 --> 00:04:51,688 -நான் அதற்குள் ஸ்பானிஷ் பேசுகிறேன். -நீ என்ன சொல்கிறாய் எனத் தெரியவில்லை. 44 00:04:51,771 --> 00:04:53,690 உனக்கு தெரியும். இப்போது தான் சொன்னேன்! 45 00:04:53,773 --> 00:04:56,109 ஒன்று, ஐந்து, ஒன்பது. 46 00:04:58,278 --> 00:04:59,279 இதோ. 47 00:05:09,747 --> 00:05:15,712 ஆக, அது, மணிக்கு 11 டாலர்கள் என எட்டு மணிநேர வேலை, எனவே அது... 48 00:05:16,504 --> 00:05:19,883 அது $88, 49 00:05:19,966 --> 00:05:23,428 ஆனால்... அதில் கடந்த வாரம் முன்பணமாக தந்த 50 டாலரை கழிக்கிறேன். 50 00:05:25,722 --> 00:05:26,764 நிச்சயமாக. 51 00:05:28,766 --> 00:05:30,810 நீ வெள்ளியன்று திரும்பி வர முடிந்தால், 52 00:05:30,894 --> 00:05:34,731 எங்களுக்கு... உடை மாற்றும் அறைகளில் பிளம்பிங்க் பிரச்சினைகள் இருந்தன. 53 00:05:36,024 --> 00:05:37,025 என்ன பிரச்சினை? 54 00:05:37,108 --> 00:05:38,776 தொடர்ச்சியான அடைப்பு. 55 00:05:42,071 --> 00:05:43,448 என் கருவிகளை கொண்டுவருகிறேன். 56 00:06:38,628 --> 00:06:40,046 இது உங்களுக்கான இறுதி அறிவிப்பு. உடனடியான நடவடிக்கை தேவை 57 00:06:40,129 --> 00:06:41,923 உங்கள் இடத்தின் குத்தகை எப்படி இருந்தாலும் பின்வரும் அறிவிப்பை பார்க்கவும். 58 00:06:43,007 --> 00:06:44,842 ஜப்தி நோட்டீஸ் 59 00:07:00,400 --> 00:07:01,651 நீயும். 60 00:07:01,734 --> 00:07:03,194 அது மாதிரி. 61 00:07:04,279 --> 00:07:05,280 எனக்கு தெரியும். 62 00:07:06,614 --> 00:07:08,283 மறுபடியும் நான் உன்னை எப்போது பார்க்கலாம்? 63 00:07:08,366 --> 00:07:11,327 மனிதன் உருவாக்கிய புவிவெப்பமயமாதல் ஒரு பொய். ஒரு வதந்தி. 64 00:07:11,411 --> 00:07:15,039 அது ஒரு அச்சுறுத்தல் இல்லை. அபாயம் எதுவும் இல்லை. 65 00:07:15,123 --> 00:07:17,333 இந்த தற்குறிகள் சொல்வது ஏமாற்று வேலை. 66 00:07:18,835 --> 00:07:20,670 ஆக உனக்கு தெரியும், இல்லையா? 67 00:07:22,547 --> 00:07:23,548 இரு. 68 00:07:26,050 --> 00:07:27,468 ச்ச. போக வேண்டும். பை. 69 00:07:27,552 --> 00:07:30,513 ஒரு பொய்யை பெரிதாக சொன்னால், மக்கள் நம்புவார்கள். 70 00:07:33,850 --> 00:07:35,226 உலகம் முழுக்க உள்ள லட்சக்கணக்கானோர்... 71 00:07:50,909 --> 00:07:56,206 ஆக நான் பூச்சிகள் மற்றும் மனிதர்களுக்கு இடையேயான வேறுபாடுகளை ஆராய்கிறேன். 72 00:07:56,289 --> 00:07:57,707 ஏராளமான வேறுபாடுகள். 73 00:07:57,790 --> 00:08:00,210 ஆம், அது தான் சுவாரஸ்யத்தை தருகிறது, இல்லையா? 74 00:08:01,377 --> 00:08:03,504 குட்டி சிலந்திகள் தாய் சிலந்தியை உண்பதை பார்த்ததுண்டா? 75 00:08:03,588 --> 00:08:04,964 இல்லை. பார்த்ததில்லை. நீ? 76 00:08:05,048 --> 00:08:08,009 ஆம். அவை வித்தியாசமாக இருப்பதால் நாம் அவற்றைக் கண்டு பயப்படுகிறோம். 77 00:08:08,092 --> 00:08:09,761 அவற்றின் முழு உலகமும் வேறு. 78 00:08:09,969 --> 00:08:11,137 அவை தாயையே உண்பவை. 79 00:08:11,221 --> 00:08:14,682 ஒரு சிலந்தியால் பேச முடிந்தால் கூட, நம்மால் அதை புரிந்துக் கொள்ள முடியாது. 80 00:08:15,141 --> 00:08:16,935 ஹே. வேலை எப்படி இருந்தது? 81 00:08:17,018 --> 00:08:19,437 நன்றாக இருந்தது. என்ன படிக்கிறாய்? 82 00:08:20,021 --> 00:08:21,231 எஸ்.ஏ.டி தேர்வுக்கான கையேடு 83 00:08:28,154 --> 00:08:30,073 எங்கே விண்ணப்பது என்று முடிவு செய்துவிட்டாயா? 84 00:08:30,156 --> 00:08:31,908 தெரியாது. ஜாஷும் நானும் அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். 85 00:08:31,991 --> 00:08:34,786 -உண்மையாகவா? -ஆம். ஏன் பேசக் கூடாது? 86 00:08:34,868 --> 00:08:36,161 இப்போது ஜாஷ் எங்கே இருக்கிறான்? 87 00:08:36,996 --> 00:08:38,705 அவன் ஒளிந்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிவதில்லை. 88 00:08:39,207 --> 00:08:40,500 ஏன் அப்படி செய்வதாக நினைக்கிறீர்கள்? 89 00:08:41,166 --> 00:08:44,712 ஆக இன்னும் அது தான் திட்டமா? பள்ளி வரை ஜாஷை பின்தொடர்வது? 90 00:08:45,630 --> 00:08:48,132 அப்பா, நீங்கள் என்ன சொன்னாலும் என் முடிவு மாறாது. 91 00:08:48,883 --> 00:08:49,884 அற்புதம். 92 00:08:52,262 --> 00:08:53,721 ஏன் அப்படி? 93 00:08:53,805 --> 00:08:56,057 ஏனெனில் நீங்களும் அம்மாவும் பதின்ம வயதிலிருந்தே காதலித்தவர்கள். 94 00:08:56,140 --> 00:09:00,895 அது ஒன்றும் வித்தியாசமானது இல்லை. அவர் வசதியானவர், நீங்கள் ஏழை. 95 00:09:00,979 --> 00:09:03,481 -ஆம்... -ஒரு பந்தம் இருந்ததாக சொல்லாதீர்கள். 96 00:09:03,565 --> 00:09:06,359 -ஆனால் எங்களுக்கு அது இருந்தது. -இயேசுவே. மறுபடியுமா? 97 00:09:09,153 --> 00:09:10,405 மார்கோ! 98 00:09:10,947 --> 00:09:12,740 -என்ன? -நமக்குள் என்ன இருந்தது? 99 00:09:12,824 --> 00:09:14,909 எனக்கு தெரியாது. நமக்குள் என்ன இருந்தது? 100 00:09:14,993 --> 00:09:16,870 சொல்லு, நமக்குள் என்ன இருந்தது என்று உனக்கு தெரியும். 101 00:09:17,954 --> 00:09:19,706 நமக்குள் ஒரு பந்தம் இருந்தது என்று நான் சொல்ல வேண்டுமா? 102 00:09:19,789 --> 00:09:20,748 ஆமாம், சொல்லு! 103 00:09:21,833 --> 00:09:23,501 எங்களுக்குள் ஒரு பந்தம் இருந்தது. 104 00:09:23,585 --> 00:09:24,878 நன்றி. 105 00:09:25,336 --> 00:09:26,796 பரவாயில்லை. 106 00:10:03,291 --> 00:10:04,334 காபி? 107 00:10:04,417 --> 00:10:05,752 எதைப் பற்றி நினைக்கிறாய்? 108 00:10:05,835 --> 00:10:07,921 எனக்கு தெரியாது. அங்கே வரலாம் என்று நினைக்கிறேன். 109 00:10:08,004 --> 00:10:10,882 -வெளியே எங்காவது போகலாம். -நீ அதை செய்ய விரும்புகிறாயா? வருகிறாயா? 110 00:10:12,425 --> 00:10:14,469 சார்லி, எழுந்து வேலையைப் பாரு. 111 00:10:14,552 --> 00:10:15,803 உன் அப்பா வீட்டில் இருக்கிறாரா? 112 00:10:15,887 --> 00:10:17,096 வெளியே போகிறார். 113 00:10:17,180 --> 00:10:18,389 எப்போது திரும்பி வருவார்? 114 00:10:19,807 --> 00:10:21,976 அட. அவர் என்ன கடிக்கப் போகிறாரா. 115 00:10:23,061 --> 00:10:25,438 ஆனால் அவர் உண்மையில் கடிப்பவர் தான். அவர் கடிப்பார். 116 00:10:28,233 --> 00:10:30,276 நான் உன்னை வகுப்பில் அல்லது எங்காவது பார்த்திருக்க முடியும், 117 00:10:30,360 --> 00:10:31,903 நீ சராசரி நபர் போல பள்ளிக்கு சென்றிருந்தால். 118 00:10:31,986 --> 00:10:35,365 நான் சராசரி நபராக வாழவில்லை என்பதற்காக நான் இயல்பான ஆள் இல்லை என்று ஆகிவிடாது. 119 00:10:40,870 --> 00:10:41,913 இரு. 120 00:10:50,380 --> 00:10:52,423 -அது எங்கே? -என்ன எங்கே? 121 00:10:59,097 --> 00:11:00,139 டீனா? 122 00:11:05,019 --> 00:11:06,229 டீனா, அவர் போய்விட்டாரா? 123 00:11:08,064 --> 00:11:11,359 இல்லை, அவர் இன்னும் இங்கே இருக்கிறார், ஜாஷ். எப்படி இருக்கிறாய்? 124 00:11:12,110 --> 00:11:14,863 -ஹே, திரு. ஃபா... -கடவுளே. அப்பா, எனக்கு 15 வயது ஆகிறது. 125 00:11:14,946 --> 00:11:17,198 அப்படியா? வயது ஒரு பிரச்சினை இல்லை. 126 00:11:17,282 --> 00:11:19,367 பிறகு என்ன? என்ன சொல்ல வருகிறீர்கள்? 127 00:11:19,450 --> 00:11:22,370 ஃபோன் கிடையாது. அதை தான் சொல்கிறேன். 128 00:11:22,453 --> 00:11:25,248 ஃபோன் எல்லோரும் வைத்திருப்பது தான். 129 00:11:25,331 --> 00:11:28,376 உண்மையான உலகில் உள்ள உண்மையான மக்கள் ஃபோன் வைத்திருப்பார்கள். 130 00:11:28,459 --> 00:11:29,460 ஃபோன் கிடையாது. 131 00:11:30,253 --> 00:11:32,672 இது ஜிம் ஜோன்ஸ் செய்த அராஜகம் போன்றது! 132 00:11:43,600 --> 00:11:44,601 அப்பா! 133 00:12:45,119 --> 00:12:46,871 -இது மிக மோசமாக இருக்கிறது. -ஆம். 134 00:12:47,497 --> 00:12:48,498 கொஞ்சம் மோசம் தான். 135 00:12:48,957 --> 00:12:51,918 இதைக் கொண்டு சமைப்பீர்களா என்ன? 136 00:12:53,670 --> 00:12:54,963 எவ்வளவு நாட்களாக இங்கே வேலை செய்கிறாய்? 137 00:12:55,922 --> 00:12:56,965 ஒரு வாரமாக. 138 00:12:58,299 --> 00:13:00,552 உங்கள் சிக்கனை வறுக்க அந்த எண்ணெயை தான் பயன்படுத்துகிறீர்கள், இல்லையா? 139 00:13:00,635 --> 00:13:01,761 ஆம். 140 00:13:01,844 --> 00:13:04,430 அது சேறாக இருக்கிறது. மோசமாக இருப்பதால் வீசியெறியப்படுகிறது. 141 00:13:06,266 --> 00:13:07,684 ஆனால் அதில் எரிசக்தி உள்ளது. 142 00:13:08,226 --> 00:13:11,563 அதனால் நான் அதை வீட்டிற்கு கொண்டு சென்று, அதில் இறைச்சியை எல்லாம் சேர்த்து, 143 00:13:11,646 --> 00:13:15,775 கொஞ்சம் சூடாக்கி, கொஞ்சம் சோடியம் மெத்தாக்ஸைட் சேர்ப்பேன். 144 00:13:15,859 --> 00:13:17,902 அது பயோடீசலாக மாறிவிடும். 145 00:13:17,986 --> 00:13:19,946 என் டிரக் அதில் தான் ஓடுகிறது. என் மனைவியின் வேன். 146 00:13:20,029 --> 00:13:21,531 சில நேரங்களில் ஏ.சி கூட ஓடும். 147 00:13:21,614 --> 00:13:25,034 பணத்தை மிச்சப்படுத்துதல், நண்பா. மிச்சப்படுத்துதல். 148 00:13:25,952 --> 00:13:30,874 ஆக, நான் உனக்கு பாதியும், உன் முதலாளிக்கு பாதியும் தருகிறேன், திரு. சர்கிஸியன். 149 00:13:31,499 --> 00:13:33,543 இது தப்பில்லையா? 150 00:13:33,626 --> 00:13:36,379 -எண்ணெயா? -அதாவது சட்டப்பூர்வமானதா? 151 00:13:39,007 --> 00:13:40,717 அது பயன்படுத்திய சமையல் எண்ணெய். 152 00:13:42,051 --> 00:13:43,678 ஆம், சட்டப்பூர்வமானது. 153 00:13:50,894 --> 00:13:53,146 ஹே, உன்னால் முடிகிறதா? 154 00:13:53,229 --> 00:13:54,564 ஆம். நான் பார்த்துக் கொள்கிறேன். 155 00:13:56,316 --> 00:13:59,861 -1-4-1 -இருந்து. -சொல்லுங்க, 1-4-1. 156 00:14:09,913 --> 00:14:12,123 ஸ்டாக்டன் போலீஸ் 157 00:14:13,625 --> 00:14:15,210 ஹே, ஆஃபிசர். 158 00:14:15,293 --> 00:14:17,503 -ஏன் இந்த சிறுவன் பள்ளிக்கு செல்லவில்லை? -அவன் வீட்டிலேயே படிப்பவன். 159 00:14:17,587 --> 00:14:21,257 சரி, இன்று செவ்வாய்கிழமை, மணி 10.15. அவன் பள்ளியில் இருக்க வேண்டும். 160 00:14:21,341 --> 00:14:24,636 பள்ளியில் தான் இருக்கிறேன். இது தான் என் வகுப்பு. 161 00:14:25,136 --> 00:14:26,304 சரி, எப்படி? 162 00:14:27,472 --> 00:14:28,723 ஜிம் வகுப்பு. 163 00:14:32,602 --> 00:14:33,895 டிரக்கில் ஏறு, தம்பி. 164 00:14:37,106 --> 00:14:38,233 ஆம், டிரக்கில் ஏறு. 165 00:14:46,282 --> 00:14:49,369 உங்கள் மகனுக்கு வீட்டிலேயே பாடம் சொல்லிதர உங்களுக்கு முறையான தகுதிகள் உண்டா? 166 00:14:50,328 --> 00:14:52,914 -ஆம். -சரி, அதைப்பற்றி சொல்ல முடியுமா? 167 00:14:53,915 --> 00:14:54,749 நிச்சயமாக. 168 00:14:54,832 --> 00:14:56,209 இங்கே கலிஃபோர்னியாவில் எப்படி என்றால், 169 00:14:56,292 --> 00:15:01,881 சட்டப்பூர்வமாக என் பிள்ளைகளுக்கு வீட்டில் பாடம் சொல்லி தருபவர்களுக்கு தேவை... தகுதி. 170 00:15:02,382 --> 00:15:06,177 அதை அளவிடுவது கஷ்டம் தான் என்று எனக்கு புரிகிறது, 171 00:15:06,261 --> 00:15:08,805 ஆனால் அவன் அம்மாவும், நானும் கொஞ்சம் தகுதியானவர்கள் தான் என்று சொல்வேன். 172 00:15:09,347 --> 00:15:14,060 இப்போது, அவனை காதல் கவிதைகள் அல்லது அது போன்று எதையாவது கேட்டால்... 173 00:15:15,311 --> 00:15:16,437 ரோமானிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி போல... 174 00:15:17,814 --> 00:15:21,109 அதைப் பற்றி அவனின் அம்மா கற்றுக் கொடுத்திருப்பார், எனக்கு தெரியாது. 175 00:15:21,192 --> 00:15:22,819 நான் நடைமுறை வாழ்க்கையைப் பார்ப்பவன். 176 00:15:23,695 --> 00:15:25,029 ஜப்தி நோட்டீஸ் 177 00:15:25,113 --> 00:15:28,032 ஆனால் விஷயம் என்னவென்றால் இந்த பையனால் உங்கள் எஞ்சினை சரிசெய்ய முடியும் 178 00:15:28,116 --> 00:15:29,868 அதை செய்யும் போது கொஞ்சம் கீட்ஸின் கவிதையையும் சொல்வான். 179 00:15:31,119 --> 00:15:33,079 யூனியன் அவென்யூவில் ஒரு 10-15. 180 00:15:33,162 --> 00:15:34,455 அருகில் உள்ள யூனிட்டுகள் அங்கே செல்லவும். 181 00:15:34,539 --> 00:15:35,999 நல்ல நாளாக இருக்கட்டும், சார். 182 00:15:38,167 --> 00:15:39,335 புரிந்தது, 5-2-4. 183 00:15:39,419 --> 00:15:40,712 இப்போது உங்களை பார்த்துக் கொள்ளுங்கள். 184 00:16:05,737 --> 00:16:06,738 உனக்கு ஒன்றுமில்லையே? 185 00:16:09,157 --> 00:16:10,158 இல்லை. 186 00:16:12,076 --> 00:16:13,494 அது உன்னை கொஞ்சம் பயமுறுத்திவிட்டதா? 187 00:16:15,288 --> 00:16:16,956 இல்லை, எனக்கு போலீஸ்காரர்களை பார்த்து பயமில்லை. 188 00:16:17,040 --> 00:16:18,124 சரி. 189 00:16:20,376 --> 00:16:22,462 அவர்களை பார்த்து கொஞ்சம் பயப்படுவது நல்லது. 190 00:16:22,545 --> 00:16:26,674 பார், நீ போலீஸ்காரர்களை, ஒரு விசித்திரமான நாயாக நினைக்க வேண்டும். 191 00:16:27,842 --> 00:16:29,093 பெரும்பாலும் அவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள், 192 00:16:29,177 --> 00:16:33,306 ஆனால் எந்த நேரமும் கடிக்கலாம் என்ற எச்சரிக்கையுடன் நீ இருப்பது நல்லது. 193 00:16:35,016 --> 00:16:37,018 -புரிகிறதா? -ஆம். 194 00:16:53,743 --> 00:16:56,829 ஸ்டாக்டன் நூலகம் 195 00:17:15,223 --> 00:17:16,724 ஃபோன் 196 00:18:08,359 --> 00:18:09,527 ஹலோ. 197 00:18:09,819 --> 00:18:11,529 ஹே, அம்மா. 198 00:18:12,530 --> 00:18:15,408 -இனிய பிறந்தநாள். -ஓ, கடவுளே. மார்கோ. 199 00:18:16,075 --> 00:18:17,785 ஓ, கடவுளே. எங்கே இருக்கிறாய்? 200 00:18:20,663 --> 00:18:23,041 -மிகவும் வருந்துகிறேன். நான்... -எனக்கு தெரியும். 201 00:18:25,543 --> 00:18:26,878 ஆக எப்படி இருக்கிறாய்? 202 00:18:27,629 --> 00:18:29,756 அப்பா இன்றிரவு உன்னை கிளைட்'ஸ் உணவகத்திற்கு அழைத்து செல்வார் இல்லையா. 203 00:18:31,341 --> 00:18:32,342 இல்லை. 204 00:18:32,425 --> 00:18:34,469 கிளைட்ஸில் டின்னர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 205 00:18:34,552 --> 00:18:38,139 ஏன்? அவர் எப்போதும் உன்னை உன் பிறந்த நாளன்று கிளைட்ஸ் தானே அழைத்து செல்வார். 206 00:18:38,223 --> 00:18:39,849 இந்த வருடம் இல்லை. 207 00:18:39,933 --> 00:18:42,185 ஏனெனில் அந்த முட்டாள் கிழம் காலை உடைத்துக் கொண்டது. 208 00:18:42,268 --> 00:18:44,145 இயேசுவே. அவருக்கு ஒன்றுமில்லையே? 209 00:18:44,229 --> 00:18:48,358 இல்லை, ஒன்றும் இல்லை. சாக்கடையை சுத்தம் செய்து கொண்டிருந்தார்... அல்லது முயன்றார். 210 00:18:49,817 --> 00:18:50,985 அடக்கடவுளே. 211 00:18:51,069 --> 00:18:54,322 அப்படி ஒன்றும் மோசமாக எதுவும் நடக்கவில்லை. அடுத்த வாரம் கட்டை பிரிப்பார்கள். 212 00:18:54,405 --> 00:18:56,241 நான் மிக ஆவலாக இருக்கிறேன். அவர் மிகவும் எரிச்சலூட்டுகிறார். 213 00:18:56,324 --> 00:18:58,826 போரிஸ் கார்லாஃப் போல வீட்டைச் சுற்றி நொண்டிக் கொண்டிருக்கிறார். 214 00:18:58,910 --> 00:19:02,205 தன்னால் வலியை தாங்க முடியும் என்பதை காட்டுவதற்கான வாய்ப்பை விரும்புபவர். 215 00:19:04,749 --> 00:19:05,750 அப்புறம்... 216 00:19:07,627 --> 00:19:08,878 என் பேரப்பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்? 217 00:19:09,629 --> 00:19:11,005 நன்றாக வளர்ந்திருப்பார்கள். 218 00:19:12,048 --> 00:19:13,174 ஆமாம். 219 00:19:14,717 --> 00:19:16,678 அவர்களை பார்க்கும் போது என்னால் நம்பவே முடியவில்லை. 220 00:19:19,222 --> 00:19:23,142 அவர்களின் முகத்தைப் பார்க்கும் போது... என் அப்பாவை நான் பார்க்கிறேன். 221 00:19:29,941 --> 00:19:31,234 அம்மா, என்னால் முடியவில்லை. 222 00:19:32,819 --> 00:19:35,655 கேளு, நான் போகணும். சரியா? 223 00:19:35,738 --> 00:19:37,282 இனிய பிறந்த நாள். 224 00:19:37,365 --> 00:19:38,491 அப்பாவிடம் என் அன்பை சொல்லவும். 225 00:19:38,575 --> 00:19:40,410 செல்லம், நான் மிகவும் வருந்துகிறேன். என்னால்... 226 00:19:41,536 --> 00:19:42,620 உன்னை நேசிக்கிறேன். 227 00:19:46,082 --> 00:19:47,333 நானும் உன்னை நேசிக்கிறேன். 228 00:19:51,921 --> 00:19:53,298 எங்களால் ஏதாவது செய்ய முடியுமா? 229 00:19:54,048 --> 00:19:56,217 பணம்? வழக்கறிஞர்கள்? 230 00:19:56,968 --> 00:19:58,177 சிக்கன் ரொட்டி? 231 00:20:00,388 --> 00:20:02,223 அது நன்றாக இருக்குமே? 232 00:20:03,224 --> 00:20:04,934 சிக்கன் ரொட்டி. 233 00:20:07,478 --> 00:20:10,940 உனக்கு எப்போது ஒன்று வேண்டுமானாலும், என் வீட்டு கதவை தட்டு. 234 00:20:14,819 --> 00:20:15,820 எனக்கு தெரியும். 235 00:20:17,447 --> 00:20:21,075 அம்மா, நான் போகணும். இனிய பிறந்தநாள். 236 00:21:45,493 --> 00:21:47,287 36 ஃபாக்ஸ் 237 00:21:49,247 --> 00:21:51,040 அமெரிக்க காப்புரிமைகள் மற்றும் வர்த்தக முத்திரைகள் 238 00:21:51,124 --> 00:21:52,125 திரு. ஆலி ஃபாக்ஸ் 239 00:22:28,745 --> 00:22:29,746 சரி. 240 00:22:31,706 --> 00:22:32,707 சரி. 241 00:22:45,720 --> 00:22:47,513 நாசமாய் போக! 242 00:23:04,948 --> 00:23:06,741 ச்ச! ச்ச! ச்ச! 243 00:23:06,824 --> 00:23:08,660 ச்ச! ச்ச! ச்ச! ச்ச! 244 00:23:16,334 --> 00:23:17,335 ச்ச! 245 00:24:24,569 --> 00:24:29,574 அப்பா சாமர்த்தியசாலியாக இருந்தும் நாம் ஏன் ஏழையாக இருக்கிறோம் என யோசிப்பாயா? 246 00:24:36,039 --> 00:24:37,749 இது போல வாழ்வதை நான் வெறுக்கிறேன். 247 00:24:40,335 --> 00:24:41,461 என்னால் முடியாது. 248 00:24:43,046 --> 00:24:44,172 எனக்கு அலுத்துவிட்டது. 249 00:25:33,221 --> 00:25:34,222 நின்ஜா. 250 00:25:36,516 --> 00:25:37,517 எனக்கு புரியவில்லை. 251 00:25:39,686 --> 00:25:43,106 அதை 50 முறை படித்திருப்பேன். எனக்கு புரியவில்லை. 252 00:25:45,400 --> 00:25:46,985 கேளு, நான் யோசித்து பார்த்தேன். 253 00:25:50,321 --> 00:25:53,867 ஒன்பது வருடங்களில், நமக்கு ஆறு அடையாளங்கள். 254 00:25:59,789 --> 00:26:01,541 என் பெற்றோரை நாம் அழைக்கலாம். 255 00:26:04,252 --> 00:26:06,838 நம் இருப்பிடமோ ஃபோன் நம்பரோ எதுவும் தெரியாதபடி பார்த்துக் கொள்கிறேன். 256 00:26:07,422 --> 00:26:11,009 சான் ஃபிரான்சிஸ்கோ அல்லது லப்போக் டெக்ஸாஸில் இருந்து என்னால் அழைக்க முடியும் 257 00:26:11,092 --> 00:26:14,137 அவர்களுக்கு தேவையான அளவிற்கு செல் ஃபோன் டவர்களை ஆராயட்டும். 258 00:26:16,890 --> 00:26:19,976 ஆலி, என் பெற்றோர்களிடம் இணையம் வழியாக பணம் அனுப்ப சொல்லலாம். 259 00:26:20,059 --> 00:26:21,728 -நமக்காக செய்வார்கள். உனக்கு அது தெரியும். -நாம் கேட்க முடியாது. 260 00:26:28,902 --> 00:26:30,320 நீ ஏற்கனவே செய்துவிட்டாயா? 261 00:26:31,738 --> 00:26:33,156 அவர்களை அழைத்தாயா? 262 00:26:36,534 --> 00:26:37,911 நிச்சயமாக இல்லை. 263 00:26:41,122 --> 00:26:44,667 ஆனால் நாம் சிக்கலில் இருக்கிறோம், ஆலி. உண்மையில் சிக்கலில் இருக்கிறோம். 264 00:26:44,751 --> 00:26:47,795 வீட்டை இழக்கப் போகிறோம், நாம் என்ன செய்யப் போகிறோம், எங்கே போவோம் என தெரியவில்லை. 265 00:26:47,879 --> 00:26:49,714 -அடுத்து என்ன செய்யப் போகிறோம்? -மறுபடியும் தொடங்குவோம். 266 00:26:51,716 --> 00:26:54,385 நாம் இங்கிருந்து போய்விட்டு, மறுபடியும் தொடங்குவோம். 267 00:26:55,803 --> 00:26:56,971 புறப்படலாம். 268 00:26:57,055 --> 00:26:58,056 சீக்கிரமாக. 269 00:26:58,806 --> 00:27:00,350 நமக்கு குழந்தைகள் இருக்கிறார்கள். 270 00:27:00,433 --> 00:27:02,685 நமக்கு ஒன்றும் ஆகாது. இதை நாம் செய்திருக்கிறோம். 271 00:27:04,896 --> 00:27:09,484 இதோ, இங்கே பார். இதை நான் செய்துக் கொண்டிருக்கிறேன். 272 00:27:17,825 --> 00:27:19,077 ஒரு படகா? 273 00:27:20,495 --> 00:27:21,496 நிச்சயமாக. 274 00:27:23,373 --> 00:27:24,457 ஏன் சிரிக்கிறாய்? 275 00:27:25,333 --> 00:27:27,919 பார், நான் ஒரு பெரிய படகாக செய்யலாம் என நினைத்தேன். 276 00:27:28,002 --> 00:27:32,340 அதன் மேலே நிறைய இடம் இருக்கும். கீழே, ஒரே இடத்தில் தான் முடங்கியிருக்கணும். ஆனால்... 277 00:27:36,052 --> 00:27:37,554 மீன் பிடிக்கும் கப்பல் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். 278 00:27:40,682 --> 00:27:41,975 ஏன் மீன் பிடிக்கும் கப்பல்? 279 00:27:43,059 --> 00:27:45,436 தலை இடிக்காமலிருக்க நிறைய இடம் இருக்கும், கப்பலின் உடற்பகுதி அகலமாக இருக்கும், 280 00:27:45,520 --> 00:27:47,772 அதனால் அங்குள்ள இடம் கொஞ்சம் விசாலமாக தெரியும். 281 00:27:47,856 --> 00:27:51,067 அப்புறம் வலிமையானவை. மழை அல்லது புயல் வந்தாலும் தாங்கும். 282 00:27:55,405 --> 00:27:57,365 படகில் இருப்பது போல சுதந்திரம் வேறு எங்கும் வராது. 283 00:27:58,700 --> 00:28:00,660 நம்மை கண்டுபிடிக்க முடியாது. இல்லையா? 284 00:28:01,536 --> 00:28:02,829 நிச்சயமாக முடியாது. 285 00:28:09,085 --> 00:28:10,837 உனக்கு உண்மை என்னவென்று தெரியணுமா? 286 00:28:13,089 --> 00:28:15,049 எனக்கு கொஞ்சம் உற்சாகமாக இருக்கிறது. 287 00:28:19,804 --> 00:28:20,805 ஆமாம். 288 00:28:23,975 --> 00:28:25,602 நம் கைவசம் பணம் வைத்திருக்க வேண்டும். 289 00:28:32,025 --> 00:28:33,318 ஆமாம். 290 00:28:33,902 --> 00:28:35,987 எனக்கு இது உதவாது என்று தெரிகிறது. 291 00:28:37,238 --> 00:28:38,239 நிச்சயமாக தேவைப்படும். 292 00:28:39,157 --> 00:28:41,492 இதில் ஒன்றையோ... 293 00:28:42,327 --> 00:28:46,372 இதில் இரண்டையோ, ஆனால் சரக்கை குளிரூட்ட பெரிதாக இருப்பவையையோ கற்பனை செய்ய வேண்டும் 294 00:28:48,166 --> 00:28:50,210 மிச்சமாகும் செலவு மட்டுமே... 295 00:28:51,169 --> 00:28:53,713 பிரத்யேக பயன்பாட்டிற்கு என்னால் உங்களுக்கு இதை 100,000 டாலருக்கு விற்க முடியும். 296 00:28:53,796 --> 00:28:56,841 -அதை 5 வருடங்களில் எடுத்து விடுவீர்கள். -ஆலி, ஆலி, ஆலி, ஆலி. 297 00:28:56,925 --> 00:28:57,884 அடடா. 298 00:29:04,515 --> 00:29:09,604 அல்லது 20,000 டாலருக்கு குத்தகை எடுத்துக் கொள்ளுங்கள். பிரத்யேகமாக தரமுடியாது. 299 00:29:09,687 --> 00:29:11,439 ஆலி, நான் சொல்வதைக் கேள். 300 00:29:12,565 --> 00:29:14,776 உன் பையன் டிரக்கில் இருந்து நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான். 301 00:29:15,485 --> 00:29:18,488 அவன் முன்னால் உன்னை அவமானப்படுத்த உண்மையில் நான் விரும்பவில்லை, ஆனால்... 302 00:29:20,907 --> 00:29:24,410 நான் என்ன செய்வது? எனக்கு இது உதவாது. 303 00:29:26,496 --> 00:29:27,497 சீக்கிரம். 304 00:29:42,220 --> 00:29:43,680 ஹே. 305 00:29:43,763 --> 00:29:46,516 முதலில் நிராகரிக்கப்படவில்லை என்றால், அது மேதாவிதனமானது இல்லை என்று அர்த்தம். 306 00:29:48,851 --> 00:29:50,228 அவன் முட்டாள். 307 00:29:52,689 --> 00:29:53,898 ஆமாம். 308 00:29:55,692 --> 00:29:57,235 அவன் ஒரு முட்டாள். 309 00:30:07,954 --> 00:30:09,664 அந்த காரை முன்பு பார்த்திருக்கிறேன். 310 00:30:17,255 --> 00:30:18,548 இறுக்கமாக பிடித்துக் கொள். 311 00:30:25,054 --> 00:30:27,682 ஐயோ! அது என்ன? 312 00:30:28,433 --> 00:30:29,434 திட்டத்தில் ஒரு மாற்றம். 313 00:30:35,273 --> 00:30:38,359 அப்பா, நாம் எங்கே போகிறோம்? 314 00:30:38,443 --> 00:30:39,444 குப்பைக்கூளத்திற்கு. 315 00:31:18,024 --> 00:31:19,025 வா. 316 00:31:28,660 --> 00:31:30,203 அமெரிக்கர்கள் எதைத் எறிகிறார்கள் என்று தெரியணுமா? 317 00:31:31,120 --> 00:31:32,121 என்ன? 318 00:31:32,914 --> 00:31:33,915 தங்கம். 319 00:31:35,500 --> 00:31:37,418 கணினிகள், சர்கியூட் போர்டுகள், 320 00:31:38,127 --> 00:31:41,047 ஜம்பர் ஊசிகள் மற்றும் சிம் கார்ட் போர்ட்டுகள். 321 00:31:41,130 --> 00:31:42,674 அதில் அனைத்திலும் தங்கம் இருக்கிறது. 322 00:31:42,757 --> 00:31:46,970 தங்கம் போல விலை உயர்வானது என சொல்கிறீர்கள், உண்மையான தங்கம் இல்லை தானே? 323 00:31:48,346 --> 00:31:49,347 இல்லை. 324 00:31:50,306 --> 00:31:51,474 உண்மையான தங்கம் தான். 325 00:31:54,310 --> 00:31:55,770 தங்கம், தங்கம். பார். 326 00:31:56,604 --> 00:31:57,605 உண்மையாகவா? 327 00:31:58,982 --> 00:32:01,693 -நாம் அப்படியே எடுத்துக் கொள்ளலாமா? -ஆம். நாம் அதை பிரித்து எடுக்கலாம். 328 00:32:01,776 --> 00:32:04,279 "மேற்கே போ, இளைஞனே." அப்படித் தான் அக்காலத்தில் சொல்வார்கள். 329 00:32:04,362 --> 00:32:06,447 "அங்குள்ள மலைகளில் தங்கம் இருக்கிறது." 330 00:32:07,532 --> 00:32:09,784 இப்போது தங்கம் கிடைக்க நாம் எங்கே போக வேண்டும்? 331 00:32:09,868 --> 00:32:11,160 அந்த கேடுகெட்ட குப்பைக் கூளத்திற்கு தான். 332 00:32:20,169 --> 00:32:21,379 இங்கே காத்திரு. 333 00:32:21,462 --> 00:32:22,463 எங்கே போறீங்க? 334 00:32:22,547 --> 00:32:23,673 மேலே. 335 00:32:23,756 --> 00:32:25,466 அப்பா, அப்படி செய்யாதீர்கள். 336 00:32:25,550 --> 00:32:28,094 ஒன்றும் ஆகாது. இதோ திரும்பி வந்துவிடுவேன். 337 00:33:10,762 --> 00:33:11,763 அடச்ச! 338 00:33:27,153 --> 00:33:29,906 ஹே. ஹே, கீழே வாங்க. கீழே வாங்க. 339 00:33:30,323 --> 00:33:31,324 -ஏன்? -கீழே வாங்க. 340 00:33:35,119 --> 00:33:36,120 நாம் இங்கே என்ன செய்கிறோம்? 341 00:33:38,581 --> 00:33:39,582 வாங்க. 342 00:33:43,127 --> 00:33:44,128 சரி. 343 00:33:50,093 --> 00:33:52,011 நான் டிரக்கில் கடிதத்தை பார்த்தேன். 344 00:33:52,095 --> 00:33:53,805 அவர்கள் வீட்டை திரும்ப கேட்கிறார்கள் எனத் தெரியும். 345 00:33:55,598 --> 00:33:56,599 என்ன? 346 00:33:58,560 --> 00:33:59,769 அவர்கள் வங்கியை சேர்ந்தவர்கள். 347 00:34:03,356 --> 00:34:04,732 அவர்கள் வங்கியை சேர்ந்தவர்கள் இல்லை. 348 00:34:07,277 --> 00:34:10,780 வா. போகலாம். ஆனால் நடக்கலாம். 349 00:34:39,517 --> 00:34:40,685 அப்பா, அவர்கள் பின்தொடர்கிறார்கள். 350 00:34:41,436 --> 00:34:42,437 நான் பார்க்கிறேன். 351 00:34:46,064 --> 00:34:47,650 பின்னாடி இருக்கும் ஸ்கேன்னரை வெளியில் எடு. 352 00:34:47,734 --> 00:34:48,818 ஸ்கேன்னரா? 353 00:35:02,665 --> 00:35:06,544 36 யேட்ஸ் சாலைக்கு 10-76. ஃபாக்ஸ் இல்லம். 354 00:35:06,628 --> 00:35:08,379 அனைத்து யூனிட்டுகளும் பதிலளிக்கவும், ஓவர். 355 00:35:08,463 --> 00:35:10,840 நாம் வீட்டிற்கு போகப் போகிறோம். நீ மேல் தளத்திற்கு ஓட வேண்டும். 356 00:35:10,924 --> 00:35:13,134 தேவையானதை பையில் எடுத்துக் கொள், சரியா? கேள்விகள் கேட்காதே. 357 00:35:14,135 --> 00:35:15,637 நாம் பயிற்சி செய்தது போலவே. 358 00:35:24,854 --> 00:35:27,482 ஸ்டாக்டன் போலீஸ் 359 00:36:31,629 --> 00:36:33,631 சார்லி! இங்கே வா. 360 00:36:34,340 --> 00:36:35,592 மெதுவாக. 361 00:36:35,675 --> 00:36:37,510 உன் அம்மாவிடம் ஒரு நிமிடம் பேசுகிறேன். சரியா? 362 00:36:37,594 --> 00:36:39,596 உள்ளே போய், நாம் என்ன பேசினோமோ, அதை அப்படியே செய். 363 00:36:42,056 --> 00:36:43,057 போ. 364 00:36:44,559 --> 00:36:45,643 ஆக, ஆமாம்... 365 00:36:47,478 --> 00:36:48,479 அவர்கள் நம்மை கண்டுபிடித்துவிட்டார்கள். 366 00:36:52,066 --> 00:36:55,069 உண்மையில் நடந்துவிட்டது. நாம் போக வேண்டும். 367 00:36:55,153 --> 00:36:56,696 உண்மையில் போக வேண்டும். 368 00:37:08,499 --> 00:37:11,085 இது ஒஹையோ இல்லை. அவர்கள் தான். 369 00:37:11,169 --> 00:37:13,171 எப்படி நம்மை கண்டுபிடித்தார்கள் என்று எனக்கு தெரியாது. 370 00:37:13,254 --> 00:37:15,340 ஒருவேளை அந்த சிக்கன் கடையில் இருந்த போலீஸ். 371 00:37:16,007 --> 00:37:17,592 எனக்கு தெரியாது, ஆனால் அவர்கள் நம்மை கண்டுபிடித்துவிட்டார்கள். 372 00:37:20,345 --> 00:37:21,763 நான் அம்மா, அப்பாவை அழைத்தேன். 373 00:37:27,518 --> 00:37:28,519 அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? 374 00:37:29,187 --> 00:37:31,022 ஆலி, என்னை மன்னித்துவிடு. 375 00:37:31,105 --> 00:37:32,607 நான் மிக ஜாக்கிரதையாக இருந்தேன். நான்... 376 00:37:32,690 --> 00:37:36,444 ஹே, பரவாயில்லை. எப்படியிருந்தாலும் ஒருநாள் நம்மை பிடித்திருப்பார்கள், இல்லையா? 377 00:37:37,612 --> 00:37:38,738 ஆமாம். 378 00:37:38,821 --> 00:37:41,783 இங்கிருந்து 10 நிமிடங்களில் நீ வெளியேற வேண்டும், அதிகபட்சமாக 15 நிமிடங்கள். 379 00:37:41,866 --> 00:37:43,243 போலீஸ்காரர்கள் ஸ்டாக்டனில் இருந்து வரப்போகிறார்கள். 380 00:37:43,326 --> 00:37:46,246 சாலை முடிவில் வலதுப்பக்கமாக நீ போக வேண்டும். மேற்கு நோக்கி போ. 381 00:37:46,329 --> 00:37:47,330 அப்போது நீ? 382 00:37:47,413 --> 00:37:50,375 நீ பிள்ளைகள் பிடிபடாமல் பார்த்துக் கொள். நான் ஏதாவது செய்து திசை திருப்புகிறேன். 383 00:37:51,125 --> 00:37:52,126 எங்கே போகிறோம்? 384 00:37:53,670 --> 00:37:54,921 அமெரிக்கா. 385 00:37:55,797 --> 00:37:58,925 -நீ என்னுடன் விளையாடுகிறாயா. -நான் யாருடனும் விளையாடவில்லை. 386 00:37:59,551 --> 00:38:00,760 -ஏன்? -சார்லி. 387 00:38:01,344 --> 00:38:03,388 டீனா, நாம் இதைப் பற்றி பேசுவிட்டோம். ஒரு நாள் இது நடக்கும் என்று தெரியும். 388 00:38:03,471 --> 00:38:06,224 ஆமாம், ஆனால் ஏன்? ஏன் இப்போது? ஏன் இந்த நிமிடம் நடக்கிறது? 389 00:38:06,307 --> 00:38:08,393 டீனா, தயவுசெய்து. நீ எங்களை நம்ப வேண்டும். 390 00:38:08,476 --> 00:38:09,936 சார்லி, நீ பையில் எடுத்து வைக்கிறாயா? 391 00:38:10,019 --> 00:38:12,522 எதற்கு? தொடர்ந்து நாசமாக்கவா? 392 00:38:12,605 --> 00:38:15,149 என் வாழ்க்கையே பிரயோஜனம் இல்லாதது போல் நடத்தவா? நான் ஒரு செல்லப்பிராணி போல? 393 00:38:15,900 --> 00:38:18,820 -நான் நாய் இல்லை, அம்மா. -ச்ச, ச்ச. 394 00:38:18,903 --> 00:38:20,280 நான் நாய் இல்லை. 395 00:38:22,699 --> 00:38:25,618 நான் எங்கேயும் வரமாட்டேன். இங்கேயே தான் இருப்பேன். 396 00:38:26,619 --> 00:38:28,496 -இது தான் என் வீடு. -உனக்கு 15 வயது. 397 00:38:28,580 --> 00:38:29,789 நீ வரமுடியாது என்று சொல்ல முடியாது. 398 00:38:29,873 --> 00:38:31,583 -அதென்ன சட்டமா? -நாங்கள் உன் பெற்றோர்! 399 00:38:31,666 --> 00:38:34,711 ஏனென்றால் சட்டம் உனக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதாலா? 400 00:38:36,921 --> 00:38:39,215 நான் வருந்துகிறேன். உன்னை நேசிக்கிறேன். 401 00:38:40,049 --> 00:38:43,928 ஒரு பையில் எடுத்து வை. பத்து நிமிடங்களில் தயாராகிவிடு. பத்து நிமிடங்கள்! 402 00:38:44,596 --> 00:38:45,722 அவன் என்ன செய்தான்? 403 00:38:48,433 --> 00:38:51,185 உண்மையில், இம்முறை என்ன குளறுபடி செய்தான்? 404 00:38:53,688 --> 00:38:54,689 பத்து நிமிடங்கள். 405 00:40:35,790 --> 00:40:37,292 சார்லி, அங்கே சரியாக எடுத்து வைக்கிறாயா? 406 00:40:37,792 --> 00:40:39,919 -ஆம், எடுத்து வைக்கிறேன். -உனக்கு ஐந்து நிமிடங்கள் உள்ளது. 407 00:40:40,003 --> 00:40:42,338 கேட்டதா, டீனா? ஐந்து நிமிடங்களில் நாம் வெளியேற வேண்டும். 408 00:40:43,256 --> 00:40:44,549 நான் வேனை தயார் செய்கிறேன். 409 00:41:02,317 --> 00:41:03,318 நான்கு நிமிடங்கள். 410 00:41:03,860 --> 00:41:04,861 நான் தயார். 411 00:41:04,944 --> 00:41:06,404 டீனா? நீ எப்படி? 412 00:41:07,405 --> 00:41:08,406 டீனா? 413 00:41:19,959 --> 00:41:21,586 நான் இல்லாமல் போகவும். நான் வரவில்லை. 414 00:41:24,005 --> 00:41:25,006 ச்ச. 415 00:41:33,556 --> 00:41:34,557 டீனா எங்கே? 416 00:41:36,768 --> 00:41:40,313 -அம்மா, டீனா எங்கே? -ஒரு நொடி. 417 00:41:51,032 --> 00:41:52,033 ஓடு. 418 00:41:53,034 --> 00:41:54,035 சீக்கிரம். போ. 419 00:42:02,126 --> 00:42:04,045 சீட் பெல்டை போட்டுக்கொள், சரியா? 420 00:42:09,467 --> 00:42:10,468 தயாரா? 421 00:44:13,091 --> 00:44:14,092 கடவுளே. 422 00:44:34,070 --> 00:44:35,947 என்ன பிரச்சினை என்று எனக்கு தெரிந்துவிட்டது. 423 00:44:37,198 --> 00:44:40,201 பிரச்சினை வந்து, உனக்கு வண்டியும் ஓட்டத் தெரியல, ஒரு மண்ணும் தெரியல. 424 00:44:53,798 --> 00:44:54,799 அம்மா. 425 00:44:57,010 --> 00:44:58,261 காரில் ஏறு, சார்லி. 426 00:44:59,095 --> 00:45:01,097 மோட்டல் கிளென் கேப்ரி 427 00:45:12,984 --> 00:45:14,235 அவள் ஓடிவிட்டாள். 428 00:45:19,199 --> 00:45:20,200 அடச்ச. 429 00:45:25,246 --> 00:45:28,082 சரி. நீ எங்கேயும் போகாமல் இங்கேயே இரு. 430 00:45:29,250 --> 00:45:30,835 -நான் காலை 2 மணிக்கு வந்துவிடுவேன். -வரவில்லை என்றால்? 431 00:45:30,919 --> 00:45:32,462 சார்லியை அழைத்துச்செல். 432 00:45:32,545 --> 00:45:33,671 ஓடிக்கொண்டே இரு. 433 00:46:10,542 --> 00:46:13,211 அவளின் பயணத் திட்டங்களை மிஸ்டர் ஜூனியருடன் பகிர்ந்திருப்பாளா? 434 00:46:53,334 --> 00:46:54,460 ஹே, பேபி! 435 00:46:54,544 --> 00:46:57,005 உன்னை பார்த்துவிட்டேன். அந்த பிட்டங்களுடன் உன்னை பார்த்துவிட்டேன். 436 00:46:57,088 --> 00:46:59,215 -டேய், ஓடாதே, நில்லு. -இல்லை, வேகமாக ஓடாதே. 437 00:46:59,299 --> 00:47:00,300 வா, செல்லம். 438 00:47:28,578 --> 00:47:29,662 ஓ, இயேசுவே. 439 00:47:32,498 --> 00:47:33,499 ஹலோ? 440 00:47:35,710 --> 00:47:37,795 -ஹலோ, யார் பேசுறது? -பாட்டி? 441 00:47:38,922 --> 00:47:39,923 டீனா? 442 00:47:40,506 --> 00:47:41,633 எனக்கு உங்கள் உதவி தேவை. 443 00:48:38,314 --> 00:48:39,315 டீனா? 444 00:48:40,900 --> 00:48:42,110 நீயா? 445 00:48:43,236 --> 00:48:44,237 நீயா? 446 00:49:14,225 --> 00:49:15,935 பேருந்துகள் - ரயில்கள் 447 00:49:17,812 --> 00:49:19,814 கைவேலை, உடலுறவு மற்றும்... 448 00:49:19,898 --> 00:49:22,066 -இல்லை, நீ சொன்னாய். நீ என்னிடம்... -நான் உன்னிடம்... 449 00:49:22,150 --> 00:49:24,485 நான் போதைப்பொருளை வாங்கிவர சொன்னேன். அவனிடம் உறவு கொள்ள சொல்லவில்லை! 450 00:49:24,569 --> 00:49:26,738 -நான் அவனிடம் படுக்கவில்லை! -சரிதான் போடீ. 451 00:49:32,410 --> 00:49:33,912 ஹே, கிரிஸ், என்ன இழவு? 452 00:50:06,611 --> 00:50:07,612 ஹே. 453 00:50:09,197 --> 00:50:10,198 என்னை மிஸ் செய்கிறாயா? 454 00:50:11,783 --> 00:50:13,243 ஹே, இங்கே வா. 455 00:50:40,478 --> 00:50:41,980 ஏன் எங்களை இப்படி நடத்துகிறீர்கள்? 456 00:50:48,236 --> 00:50:50,780 ஏனெனில் நமக்கு ஒரு பிரச்சினை. 457 00:50:54,325 --> 00:50:58,580 ஆனால் என்ன பிரச்சினை என்று ஒருவரும் சொல்ல மாட்டார்கள். 458 00:51:02,125 --> 00:51:03,877 உனக்கு இது போன்று நினைக்கும் பிரச்சினை வகை தான் தெரியும்... 459 00:51:05,879 --> 00:51:09,257 அதாவது "சரி, பார்த்ததுமே அது மோசமாக தெரிகிறது. 460 00:51:10,592 --> 00:51:14,137 ஒருவேளை நான் உட்கார்ந்து அதைப்பற்றி யோசித்தால், 461 00:51:14,220 --> 00:51:16,180 அதிலிருந்து வெளிவர ஒரு வழியை கண்டுபிடிக்க முடியலாம்"? 462 00:51:20,894 --> 00:51:23,062 நமக்கு அந்த மாதிரியான பிரச்சினை இல்லை. 463 00:51:28,401 --> 00:51:29,402 ஹே. 464 00:51:30,695 --> 00:51:32,447 இது ஒரு சாகசமாக இருக்க போகிறது. 465 00:51:32,530 --> 00:51:33,907 நாம் ஒரு படகு வாங்க போகிறோம். 466 00:51:34,949 --> 00:51:36,951 எனக்கு சாகசம் வேண்டாம். 467 00:51:38,369 --> 00:51:42,290 நிச்சயம் விரும்புவாய். நீ என்ன செய்தாய், எங்கே வந்திருக்கிறாய் என்று பார். 468 00:51:44,375 --> 00:51:46,753 ஆமாம், அது மோசம் தான். 469 00:51:49,631 --> 00:51:50,715 எனக்கு பயமாக இருக்கிறது. 470 00:51:54,636 --> 00:51:55,762 நிச்சயமாக. 471 00:51:58,348 --> 00:52:01,392 பயமாக இல்லை என்றால், அது சாகசமாக இருக்காது. 472 00:52:04,312 --> 00:52:05,313 சரியா? 473 00:52:05,396 --> 00:52:07,148 இரவு 11 மணி, சான் ஃபிரான்சிஸ்கோ புறப்படுகிறது, 474 00:52:07,232 --> 00:52:11,361 எமெரிவில், கலிஃபோர்னியாவில் மாறிக் கொள்ளலாம், கேட்... ஒன்று, ஜீரோ. 475 00:52:12,779 --> 00:52:15,823 வா. நட. நான் சொல்வதைக் கேள். 476 00:52:15,907 --> 00:52:20,662 உன் அம்மா நார்த் பிளைமவுத் சாலையில் கிளென் கேப்ரி மோட்டல் வெளியே காத்திருக்கிறாள். 477 00:52:20,745 --> 00:52:22,830 -நீ அவளை போய் சந்திக்கப் போகிறாய். -என்னால் முடியாது. 478 00:52:22,914 --> 00:52:26,334 முடியும். நீ இல்லாமல் அவள் புறப்படமாட்டாள். 479 00:52:26,417 --> 00:52:28,670 அவள் புறப்படாமல், சார்லியும் புறப்பட மாட்டான். 480 00:52:29,170 --> 00:52:30,338 -அப்பா? -ஹே. என்னைப் பார். 481 00:52:30,421 --> 00:52:33,091 சார்லி கிளம்பவில்லை எனில், அவர்கள் வந்து நம்மை கண்டுபிடிப்பார்கள், 482 00:52:33,174 --> 00:52:35,468 நம்மை பிரித்துவிடுவார்கள், அது தான் பிரச்சினை. 483 00:52:36,010 --> 00:52:39,556 நான் முன்பக்கம் வண்டி நிறுத்தியுள்ளேன். என் டிரக்கை எடுத்துக்கொள், சரியா? போ. 484 00:52:40,306 --> 00:52:41,307 போ. 485 00:52:46,354 --> 00:52:49,607 எடுத்துக் கொள்ளப் படாத பைகள் தனியாக இங்கே வைக்கப்படும். 486 00:52:51,192 --> 00:52:52,360 திரு. ஃபாக்ஸ். 487 00:52:54,445 --> 00:52:55,738 ஹே. 488 00:52:56,614 --> 00:52:57,657 எங்களுடன் வருகிறீர்களா? 489 00:53:05,456 --> 00:53:07,125 என்னை கைது செய்கிறீர்களா? 490 00:53:07,208 --> 00:53:08,334 எங்களுடன் வந்தால் செய்ய மாட்டோம். 491 00:53:09,752 --> 00:53:12,505 நான் கைது செய்யப்படவில்லை எனில், எதற்கு உங்களுடன் வர வேண்டும்? 492 00:53:13,339 --> 00:53:14,716 அதாவது... 493 00:53:14,799 --> 00:53:17,010 என்னை பார்ட்டிக்கு அழைக்கிறீர்களா? 494 00:53:22,348 --> 00:53:24,976 -சரி, ஆலி... -இப்போது "ஆலி" ஆகிவிட்டேனா? 495 00:53:25,059 --> 00:53:26,978 -"திரு. ஃபாக்ஸ்" என்று அழைத்தீர்களே? -உங்கள் விரல்களை 496 00:53:27,061 --> 00:53:29,689 சேர்த்துக் கட்டி உங்கள் தலைக்கு பின்னால் வைக்கிறீர்களா. 497 00:53:29,772 --> 00:53:31,399 -ஏன்? -ஏனெனில் நான் சொல்கிறேன், சார். 498 00:53:31,482 --> 00:53:33,067 -நிச்சயமாக. ஏன்? -சொல்வதை செய்யுங்கள். 499 00:53:37,989 --> 00:53:39,157 ச்ச. 500 00:53:46,331 --> 00:53:49,250 -நாம் எங்கே போகிறோம்? என்ன விஷயம்? -சார், சார்... 501 00:53:49,334 --> 00:53:51,669 எதற்காக என்னை கைது செய்கிறீர்கள் அல்லது காவலில் வைக்கிறீர்கள்? 502 00:53:51,753 --> 00:53:53,671 -அமைதி, சார். -நான் போகலாமா? 503 00:53:53,755 --> 00:53:56,216 போகக் கூடாது. விரல்களை சேர்த்துக் கட்டி தலைக்கு பின்னால் வைக்கவும். 504 00:53:56,299 --> 00:53:57,300 நான் ஏன் அதை செய்ய வேண்டும்? 505 00:53:57,383 --> 00:53:59,302 ஏனெனில் நான் செய்ய சொல்கிறேன், சார். 506 00:54:00,011 --> 00:54:02,388 என்னை சோதிக்க அனுமதியில்லை. எந்த உரிமையும்... 507 00:54:02,472 --> 00:54:03,431 முகத்தை தரையில் வை! 508 00:54:03,514 --> 00:54:04,891 இல்லை, நான் அதை செய்ய மாட்டேன்! 509 00:54:04,974 --> 00:54:05,975 -என்னை விடு! -டேஸர்! 510 00:54:07,644 --> 00:54:08,937 போகலாம். 511 00:54:12,232 --> 00:54:13,316 நாசமாய் போறவன். 512 00:54:31,501 --> 00:54:33,336 என் கணுக்காலை திருப்பி விட்டுவிட்டாள். 513 00:54:42,762 --> 00:54:44,430 மூன்று இரவுகளுக்கு முன்னால்... 514 00:54:47,433 --> 00:54:49,561 அதனால் அழைக்கிறோம். 515 00:55:23,094 --> 00:55:24,095 அப்பா! 516 00:55:45,158 --> 00:55:46,242 உள்ளே வா. 517 00:55:50,663 --> 00:55:51,915 பொறுங்கள். 518 00:57:33,683 --> 00:57:35,685 வசனங்கள் மொழிபெயர்ப்பு நரேஷ் குமார் ராமலிங்கம்.