1 00:00:13,805 --> 00:00:17,555 குழப்பமா இருக்கு. தன் மர்மத்தை தீர்க்க மேஸன் நம்மை ஏன் தேர்வு செய்தார்? 2 00:00:17,643 --> 00:00:19,693 யாருக்கு கவலை? இது ஒரு பெரிய கௌரவம். 3 00:00:19,770 --> 00:00:20,650 துப்பறிவாளர் 4 00:00:20,729 --> 00:00:23,109 என்ன? அவரின் வெளியிடப்படாத கையெழுத்துப் பிரதியை கண்டுபிடித்து 5 00:00:23,190 --> 00:00:26,150 ஒரு வெளியீட்டாளரிடம் தந்து, "இதை வெளியிட முடியுமா?" என்று கேட்கணுமா? 6 00:00:26,568 --> 00:00:29,528 ரூபன் சொல்வது சரி. நாம் அடுத்து என்ன செய்யணும் என்றே தெரியவில்லை. 7 00:00:29,613 --> 00:00:30,613 ஏன் என்றும். 8 00:00:30,697 --> 00:00:33,737 இதை சொல்வது எனக்கே ஆச்சரியமாக இருக்கு, ஆனால் எனக்கு இந்த மர்மமெல்லாம் போதும். 9 00:00:34,284 --> 00:00:37,334 நாம் அப்படி விட்டுவிட கூடாது. அந்த பேய்க்கு நம் உதவி தேவை. 10 00:00:37,412 --> 00:00:39,292 இல்லையென்றால் என்ன? நம்மை எப்போதும் தொல்லை செய்யுமா? 11 00:00:39,373 --> 00:00:42,333 சாக்போர்டைக் கடக்கும் ஒவ்வொரு முறையும் என்ன செய்தி என என்னால் பார்க்க முடியாது. 12 00:00:43,001 --> 00:00:46,341 விடு. நாம் இவ்வளவு செய்துவிட்டோம். இப்போது விட்டுக் கொடுக்க கூடாது. 13 00:00:55,514 --> 00:00:57,224 ஏதேனும் ஆடை போட்டி நடைபெறுகிறதா? 14 00:01:00,811 --> 00:01:02,901 மறுபடியும் ஒரு பழங்கால புத்தகக் கதாபாத்திரம் வேண்டாமே. 15 00:01:04,397 --> 00:01:06,857 ஒரு வரைகதை போன்ற ஏதாவதாக இருந்திருக்கலாமே? 16 00:01:08,068 --> 00:01:08,898 மேடம்? 17 00:01:08,986 --> 00:01:10,856 நிலவு பயணி 18 00:01:10,946 --> 00:01:13,066 அறிவியல் 19 00:01:14,074 --> 00:01:15,494 ஹலோ, குழந்தைகளே. 20 00:01:16,034 --> 00:01:19,664 மன்னிச்சிடுங்க. இந்த புத்தகத்தில் மிகவும் ஆழ்ந்து போய்விட்டேன். 21 00:01:19,746 --> 00:01:23,576 அற்புதமான கற்பனை படைப்பு. இந்த எழுத்தாளரின் கற்பனை திறன் வியக்கத்தக்கது. 22 00:01:23,667 --> 00:01:24,747 கற்பனையா? 23 00:01:24,835 --> 00:01:26,455 அவங்க ராக்கெட்டுகள் கண்டுபிடிக்காத காலத்தை சேர்ந்தவங்க போல. 24 00:01:27,045 --> 00:01:29,295 ஆமாம், அது கற்பனை என நான் நினைக்கவில்லை. 25 00:01:30,048 --> 00:01:31,218 உங்க பெயரை சொல்ல முடியுமா? 26 00:01:32,134 --> 00:01:34,974 ஜோன் வாட்சன், டாக்டர். உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. 27 00:01:36,638 --> 00:01:40,308 இவங்க பத்தொன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த டாக்டர். இது மிகவும் அற்புதம். 28 00:01:40,392 --> 00:01:43,272 அப்பொழுதெல்லாம் பெண் டாக்டர்கள் இருந்ததே எனக்கு தெரியாது. 29 00:01:43,353 --> 00:01:46,063 இரு. நீங்கதான் டாக்டர் வாட்சனா? 30 00:01:46,857 --> 00:01:49,357 ஆமாம். அப்படி தான் நிறையப் பேர் அழைப்பார்கள். 31 00:01:49,443 --> 00:01:52,403 நீங்கள் தவறாக நினைக்காவிட்டால், நான் சுவாரஸ்யாமானா பகுதியை படிக்கிறேன். 32 00:01:52,487 --> 00:01:54,907 அவர்கள் நிலாவிற்கு செல்லப் போகிறார்கள். என்ன ஒரு முட்டாள்தனம். 33 00:02:00,204 --> 00:02:02,294 டாக்டர் வாட்சன் ஒரு ஆண் என நினைத்தேன். 34 00:02:03,081 --> 00:02:04,171 அவங்க யார் என்று உனக்கு தெரியுமா? 35 00:02:04,249 --> 00:02:08,539 இவங்க யார் என தெரியாது, ஆனால் டாக்டர் வாட்சனும் ஷெர்லாக் ஹோம்ஸும் நண்பர்கள். 36 00:02:08,628 --> 00:02:11,008 துப்பறிவாளர், ஷெர்லாக் ஹோம்ஸா? 37 00:02:11,089 --> 00:02:14,469 ஆமாம். ஆர்தர் கோனன் டோயல் புத்தகங்களில் வரும் பிரபலமான துப்பறிவாளர் தான். 38 00:02:14,551 --> 00:02:16,261 சிக்கலற்றது, என் செல்ல வாட்சன். 39 00:02:16,720 --> 00:02:19,970 ஆனால் வாட்சன் ஒரு ஆண். அது இவங்களாக இருக்க முடியாது. 40 00:02:20,474 --> 00:02:22,314 இதை கண்டுபிடிக்க ஒரேயொரு வழி தான் உள்ளது. 41 00:02:24,895 --> 00:02:28,515 குறுக்கிடுவதற்கு மன்னிச்சிடுங்க, டாக்டர், உங்களுக்கு ஷெர்லாக் ஹோம்ஸை தெரியுமா? 42 00:02:30,901 --> 00:02:33,611 என் தோழியின் பிரபலம் என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்தும். 43 00:02:33,695 --> 00:02:37,485 இப்போதும், ஷெர்லின் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதக் கதைகள் கண்டம் தாண்டி செல்கிறது. 44 00:02:37,574 --> 00:02:38,584 ஷெர்லா? 45 00:02:39,034 --> 00:02:41,044 அவளுக்கு "ஷெர்லாக்" என்று அழைத்தால் பிடிக்காது. 46 00:02:41,119 --> 00:02:42,159 பெண்ணா? 47 00:02:42,871 --> 00:02:47,041 உங்கள் யாருக்கும், அவள் இறந்தது கூட தெரியாது என்று எனக்கு தோன்றுகிறது. 48 00:02:47,584 --> 00:02:49,214 ஷெர்லாக் ஹோம்ஸ் இறந்துவிட்டாரா? 49 00:02:51,421 --> 00:02:54,421 மூன்று வருடங்கள் ஆகிறது. 50 00:02:54,508 --> 00:02:55,968 அது ஒரு ஆழமான சோகம். 51 00:02:57,678 --> 00:02:59,388 என் தோழியை பிரிந்து தினமும் வாடுகிறேன். 52 00:03:02,057 --> 00:03:03,307 என்ன நடக்கிறது? 53 00:03:05,227 --> 00:03:11,067 நமக்கு எல்லாவற்றையும் கண்டுபிடித்து சொல்ல கூடிய பிரபல துப்பறிவாளர், இறந்துவிட்டாரா? 54 00:03:23,453 --> 00:03:28,173 பேய் எழுத்தாளர் 55 00:03:31,545 --> 00:03:32,795 உங்களுக்கு பிடிக்கும். 56 00:03:36,717 --> 00:03:38,717 நான் இதற்கு முன் டீ போட்டதில்லை. 57 00:03:44,308 --> 00:03:47,938 எலுமிச்சை துண்டுடன் ஏர்ல் க்ரே டீ. அற்புதமாக இருக்கு. 58 00:03:49,730 --> 00:03:51,650 ஆக, நான் சொன்னது போல, 59 00:03:51,732 --> 00:03:55,652 ஷெர்ல் எந்த அளவிற்கு மரியாதைக்குரியவளோ, அதே அளவிற்கு அவளுக்கு எதிரிகளும் அதிகம். 60 00:03:55,736 --> 00:03:57,606 அதில் மோரியார்டி தான் ரொம்ப மோசமானவள். 61 00:03:58,322 --> 00:04:02,742 ஷெர்ல் பல முறை அவளை சிறையில் அடைத்தாள், மோரியார்டி ஷெர்லை அழிக்க சபதம் எடுத்தாள். 62 00:04:03,493 --> 00:04:06,873 அதனால், இப்போது இருவரும் இறந்துவிட்டனர். 63 00:04:07,623 --> 00:04:09,253 ஐயோ. மிகவும் கொடுமையானது. 64 00:04:09,333 --> 00:04:11,463 பிறகு, நீங்க என்ன செய்தீங்க? 65 00:04:11,543 --> 00:04:14,343 என் நெருங்கிய தோழி இறப்பிற்கு இப்போது வரை துக்கம் அனுசரிக்கிறேன். 66 00:04:15,047 --> 00:04:19,127 பயணம் செய்து புது விஷயங்களை பார்த்தால் சிறப்பாக இருக்கும் என முடிவெடுத்தேன். 67 00:04:20,886 --> 00:04:25,346 ஆனால், ஓ, மூன்று வருடங்களில் உலகம் எவ்வளவு மாறிவிட்டது. 68 00:04:25,766 --> 00:04:27,096 புத்தகங்களில்... 69 00:04:28,477 --> 00:04:32,307 வந்து, ஷெர்லாக் மர்மங்களை கண்டுபிடிக்க நீங்கள் உதவியதுண்டா? 70 00:04:32,981 --> 00:04:37,321 சில சமயங்களில் நாங்கள் ஒன்றாக கண்டுபிடிப்போம், ஆனால் அவள் தான் அறிவாளி. 71 00:04:37,945 --> 00:04:40,695 ஏனென்றால் எங்களுக்கு ஒரு மர்மத்தை கண்டுபிடிக்க உதவி வேண்டும். 72 00:04:41,490 --> 00:04:43,280 நான் ஷெர்ல் ஹோம்ஸ் கிடையாது ஆனால் 73 00:04:43,367 --> 00:04:46,197 அவளுடன் பழகி சில விஷயங்களை கற்றிருக்கிறேன். 74 00:04:46,745 --> 00:04:50,705 சரி, நேரம் ஆகிவிட்டது. இரவில் நீங்க தங்குவதற்கு கீழே ஏற்பாடுகள் செய்கிறோம். 75 00:04:50,791 --> 00:04:52,331 பாராட்டுக்குரியது. 76 00:04:54,962 --> 00:04:58,092 என் தந்தை ஒரு காப்பீடு கணக்கு ஆரம்பித்தார் ஆனால் எந்த பதிலும் வரவில்லை. 77 00:04:58,173 --> 00:05:01,513 எங்க கடை கொள்ளையடிக்கப்பட்டதால் இப்போது எல்லாவற்றையும் மாற்றி கொண்டு இருக்கிறோம். 78 00:05:01,593 --> 00:05:04,013 எல்லா வேளைகளும் நிலுவையில் உள்ளது, உங்க நிறுவனம் 79 00:05:04,096 --> 00:05:06,306 காப்பீடு பணத்தை தந்தால்தான் வேலைகளை துவங்க முடியும். 80 00:05:07,140 --> 00:05:10,770 இல்லை. அதை சரி பார்த்து என்னை அழைப்பதில் எனக்கு நாட்டமில்லை. 81 00:05:12,062 --> 00:05:13,902 சரி. நான் காத்திருக்கிறேன். 82 00:05:14,314 --> 00:05:17,034 -யார் மீது கோபம்? -காப்பீடு நிறுவனத்தின் மீது. 83 00:05:17,109 --> 00:05:20,199 மறுபடியும் என்னை காத்திருப்பில் வைத்தனர். நம் பணத்தை இன்னும் தரவில்லை. 84 00:05:20,279 --> 00:05:22,989 அவர்கள் பார்க்கிறோம் என சொல்கிறார்கள், ஆனால் அவர்களுள் ஒருவன், 85 00:05:23,073 --> 00:05:25,373 ஏதோ செய்துவிட்டான், அவர்கள் ஏதும் கண்டுபிடிக்கலை... 86 00:05:25,450 --> 00:05:26,870 இணைப்பை துண்டி. 87 00:05:26,952 --> 00:05:30,212 என்ன? முடியாது. ஒரு மணி நேரமாக பேசி இருக்கிறேன். இப்பதான் மேலாளர் பேசினார். 88 00:05:30,289 --> 00:05:32,499 அவர்கள் பணம் தராத காரணம் எனக்குத் தெரியும். 89 00:05:33,333 --> 00:05:35,173 ஏனென்றால் நான் கட்டணத்தை செலுத்தவில்லை. 90 00:05:40,507 --> 00:05:41,507 என்ன நடந்தது? 91 00:05:42,801 --> 00:05:45,641 சில கட்டணங்களை செலுத்த மறந்துவிட்டேன். உன்னிடம் சொல்ல நினைத்தேன். 92 00:05:47,222 --> 00:05:48,222 அப்பா. 93 00:05:49,349 --> 00:05:51,349 உன் அம்மா தான் இதையெல்லாம் பார்த்துக் கொள்வாள். 94 00:05:53,103 --> 00:05:54,523 என்ன நடக்கிறது? 95 00:05:54,605 --> 00:05:58,105 ஒன்றும் இல்லை, கடையை சரி செய்ய நம்மிடம் பணமில்லை. 96 00:05:59,985 --> 00:06:01,195 என்னை மன்னித்துவிடு, ஏமி. 97 00:06:01,612 --> 00:06:02,702 பரவாயில்லை. 98 00:06:03,322 --> 00:06:04,742 ஏதாவது வழி கண்டுபிடிப்போம். 99 00:06:05,741 --> 00:06:07,781 காப்பீடு நிறுவனத்தை திரும்ப அழைக்கப் போகிறேன். 100 00:06:08,577 --> 00:06:10,407 இவ்வளவு நேரம் கோபமாக பேசிய அவரையா? 101 00:06:10,996 --> 00:06:13,206 ஆமாம். நான் மன்னிப்புடன் தொடங்குவேன். 102 00:06:22,049 --> 00:06:25,339 லோகனால் நம் வருட புத்தக குழுவில் நிறையப் நபர்கள் சேரப் போகிறார்கள். 103 00:06:25,427 --> 00:06:26,427 சிறப்பு. 104 00:06:26,512 --> 00:06:29,312 நம் பள்ளி மாணவர்களின் எண்ணங்கள் உனக்கு நன்றாகத் தெரியும் தானே? 105 00:06:29,389 --> 00:06:30,389 ஆமாம். 106 00:06:30,849 --> 00:06:33,889 மாணவர் சங்க தேர்தலில் நான் வெல்ல எவ்வளவு வாய்ப்பு இருக்கு என நினைக்கிறாய்? 107 00:06:33,977 --> 00:06:35,597 நிஜமாகவே தெரிந்துக் கொள்ளணுமா? 108 00:06:35,687 --> 00:06:36,937 அது சிறப்பாக இல்லை. 109 00:06:37,022 --> 00:06:38,152 அப்படியே போட்டு உடைக்கிறாய். 110 00:06:38,232 --> 00:06:43,112 அவர்களுக்கு நீ அறிவாளியாக தெரிந்தாலும் உன் விளையாட்டு-எதிர்ப்பு பிடிக்கவில்லை. 111 00:06:43,195 --> 00:06:44,395 "விளையாட்டு-எதிர்ப்பு"? 112 00:06:45,197 --> 00:06:48,577 கூடைப்பந்து, பேஸ்பால், கால்பந்து, ஏன் பெண்கள் கைப்பந்து அணியை கூட 113 00:06:48,659 --> 00:06:51,749 நீ உன் எதிரிகள் ஆக்கிக் கொண்டாய். 114 00:06:52,496 --> 00:06:53,906 நீ மிகைப்படுத்தி கூறுகிறாய். 115 00:06:55,707 --> 00:06:56,877 சரி, நான் என்ன செய்வது? 116 00:06:56,959 --> 00:06:58,459 தெரியலை, ஆனால் உனக்கு நேரமில்லை. 117 00:06:58,544 --> 00:06:59,844 தேர்தல் இன்னும் சில நாட்களில். 118 00:06:59,920 --> 00:07:01,670 நீ எதையும் நாசுக்காக சொல்ல மாட்டாய் தானே? 119 00:07:01,755 --> 00:07:05,255 உள்ளதை உள்ளபடி சொல்வேன், நீ தோற்றுப் போவதாக தெரிகிறது. மன்னிச்சிடு. 120 00:07:09,388 --> 00:07:11,968 சரி, டாக்டர். வாட்சன் பற்றி நான் கொஞ்சம் தெரிந்துக் கொண்டேன். 121 00:07:12,057 --> 00:07:13,927 அவங்க ஒரு தழுவல் கதையிலிருந்து வந்திருக்கலாம். 122 00:07:14,017 --> 00:07:17,187 ஆக, யாரோ ஒரு எழுத்தாளர் ஷெர்லாக் ஹோம்ஸின் கதையை மாற்றி வாட்சனை 123 00:07:17,271 --> 00:07:19,231 -பெண்ணாக சித்திரித்தாக நினைக்கிறாயா? -சரியாக தோன்றுகிறது. 124 00:07:19,314 --> 00:07:22,904 ஆமாம், ஜீ.டபள்யூ. நம்மிடம் உண்மையான துப்பறிவாளனை 125 00:07:22,985 --> 00:07:25,025 அனுப்பி வைக்காதது வினோதமாக தான் உள்ளது. 126 00:07:25,112 --> 00:07:26,452 அதற்கு ஒரு காரணம் இருக்கலாம். 127 00:07:31,952 --> 00:07:34,452 அவள்தான் புது மாணவி. என் ஆங்கில வகுப்பில் இருக்கிறாள். 128 00:07:34,538 --> 00:07:36,668 ஏதோ மோசமான விஷயத்தை செய்ததால் பழைய பள்ளியிலிருந்து 129 00:07:36,748 --> 00:07:38,578 அவளை வெளியேற்றிதாக எல்லி கூறினாள். 130 00:07:38,667 --> 00:07:41,037 அதெல்லாம் கட்டுக்கதை. அவள் நல்லவள் என்பதை நான் நம்புகிறேன். 131 00:07:41,128 --> 00:07:42,128 ஹேய். 132 00:07:44,256 --> 00:07:45,336 இல்லாமலும் இருக்கலாம். 133 00:07:50,804 --> 00:07:54,064 எல்லோரும் புத்தகத்தில் 124 ஆம் பக்கத்தைப் பாருங்கள். 134 00:07:58,312 --> 00:07:59,692 இன்னும் புத்தகம் வாங்கலையா, ஸ்லோன்? 135 00:08:02,941 --> 00:08:05,491 டோனா, அவளுடன் பகிர்ந்து கொள்வாயா? 136 00:08:14,453 --> 00:08:15,753 ஹேய். என் பெயர் டோனா. 137 00:08:20,250 --> 00:08:24,380 டோனா, ஸ்லோன் இங்கு புதிதாக வந்திருக்கிறாள் என்பதால், நீ அவளுக்கு உதவியாக இரு. 138 00:08:38,227 --> 00:08:39,597 உன் நண்பர்கள் மேலே உள்ளனர். 139 00:08:39,686 --> 00:08:44,266 தெரியும். திமிங்கிலம் உயிரியல் பற்றி... ஒரு வீட்டுப் பாடம் உள்ளது. 140 00:08:44,942 --> 00:08:46,942 திமிங்கில உயிரியலா? அதுவும் நடுநிலை பள்ளியில்? 141 00:08:50,239 --> 00:08:51,409 ஏன் சிரிக்கிறீர்கள்? 142 00:08:51,490 --> 00:08:53,620 -இதைப் பார். -அது நீங்களா? 143 00:08:53,700 --> 00:08:56,040 ஆமாம். அது நானும் க்ரெகும். 144 00:08:56,119 --> 00:08:58,369 இது மறு இணக்க விளையாட்டின் போது எடுத்தது. 145 00:08:58,455 --> 00:09:00,415 திரு. சாண்டர்ஸிற்கு முடி அழகாக இருந்திருக்கு. 146 00:09:00,499 --> 00:09:02,379 ஆமாம். எனக்கும் அது பிடித்தது. 147 00:09:05,295 --> 00:09:09,715 நான் வென்று விட்டேன். ஹாலோவீனுக்கு ஹாட் டாக் போல வந்தது அவருக்கு ஞாபகமில்லை. 148 00:09:09,800 --> 00:09:11,640 ஆக, இருவரும் இப்போதும் பேசுகிறீர்களா? 149 00:09:12,052 --> 00:09:13,722 அவ்வப்போது குறுஞ்செய்தி அனுப்புவோம். 150 00:09:14,096 --> 00:09:15,716 உங்களுக்கு அவரைப் பிடிப்பதாக தோணுது. 151 00:09:17,266 --> 00:09:19,516 நாம் இதைப் பற்றி பேசிவிட்டோம். அவர் உன் ஆசிரியர். 152 00:09:19,601 --> 00:09:22,061 நான் அவருடன் பழகப் போவதில்லை. அது வினோதமாக இருக்கும். 153 00:09:23,105 --> 00:09:24,935 தெரியலை. ஆனால் அவர் மிகவும் நல்லவர். 154 00:09:25,482 --> 00:09:26,982 உனக்கு எந்த பிரச்சினையும் இல்லையா? 155 00:09:27,067 --> 00:09:29,437 நான் அவருடன் நேரம் செலவிடாத வரை ஒன்றும் பிரச்சினை இல்லை. 156 00:09:33,615 --> 00:09:34,615 ஹேய். 157 00:09:35,742 --> 00:09:38,162 என் அம்மா திரு. சாண்டர்ஸுடன் வெளியே போவாங்க என நினைக்கிறேன். 158 00:09:38,245 --> 00:09:40,115 நிஜமாகவா? அது மிகவும் சிறப்பு. 159 00:09:40,205 --> 00:09:41,415 ஆம், எனக்கு அவரைப் பிடிக்கும். 160 00:09:41,498 --> 00:09:43,498 திரு. சாண்டர்ஸ் பற்றி நாம் பேசாமல் இருக்கலாமா? 161 00:09:43,584 --> 00:09:46,594 அதை விட இந்த மர்மத்தைப் போன்ற முக்கியமான விஷயங்களைப் பற்றி பேசலாம். 162 00:09:46,670 --> 00:09:49,130 சரி. அதில் ஏதாவது கிடைத்ததா? 163 00:09:49,214 --> 00:09:51,514 சரி. ஷெர்ல் மற்றும் ஜோன் உண்மையான ஷெர்லாக் ஹோம்ஸ் 164 00:09:51,592 --> 00:09:54,512 கதையின் தழுவல் கதாபாத்திரங்கள் என நாங்கள் கண்டுபிடித்தோம். 165 00:09:54,595 --> 00:09:55,925 இதோ அந்த கதைகளின் தொகுப்பு. 166 00:09:56,013 --> 00:09:57,893 அதாவது, ஷெர்லாகின் சிறந்த மர்மங்கள்: 167 00:09:57,973 --> 00:10:00,143 ஷெர்ல் மற்றும் வாட்சனின் சாகசங்கள். 168 00:10:00,225 --> 00:10:02,765 "காலி வீட்டின் சாகசங்கள்" என்னும் கதையிலிருந்து வந்திருக்கிறார்கள். 169 00:10:02,853 --> 00:10:04,153 ஷெர்லாகின் சிறந்த மர்மங்கள் ஷெர்ல் மற்றும் வாட்சனின் சாகசங்கள் 170 00:10:07,482 --> 00:10:08,482 வெற்று காகிதம். 171 00:10:11,570 --> 00:10:14,320 -அது எங்கு கிடைத்தது? -பேய் இல்லாத ஒரு புத்தக கடையில். 172 00:10:14,406 --> 00:10:15,816 சரி, இதை கேளுங்க. 173 00:10:15,908 --> 00:10:19,118 முடிவில், ஷெர்லாக் மற்றும் மோரியார்டி நீர்வீழ்ச்சியின் மேலே போகிறார்கள் 174 00:10:19,203 --> 00:10:20,703 எல்லோரும் அவர்கள் இறந்ததாக நினைக்கிறார்கள். 175 00:10:20,787 --> 00:10:23,617 ஆனால், கடைசியில் ஷெர்ல் தான் இறந்துவிட்டதாக பொய்யா காட்டுறாங்க. 176 00:10:23,707 --> 00:10:26,747 இரு, ஷெர்லாக் உயிருடன் இருக்காங்களா? 177 00:10:26,835 --> 00:10:29,915 அவங்க மோரியார்டியின் அடியாள் மொரானை தேடுறாங்க. 178 00:10:30,005 --> 00:10:32,125 இந்த புத்தகத்தில், காய்கறி வியாபாரியாக மறைந்து இருக்காங்க. 179 00:10:32,216 --> 00:10:34,046 வாட்சனுக்கு கூட அவங்க உயிரோடு இருப்பது தெரியாது. 180 00:10:34,134 --> 00:10:37,014 நாம ஷெர்லாகை... மன்னிச்சிடு, ஷெர்லை எப்படி கண்டுபிடிப்பது என புத்தகத்தில் இருக்கா? 181 00:10:37,095 --> 00:10:39,425 வேண்டுமென்றே வாட்சனுக்கு அழுகிய பழங்களை விற்கிறாங்க. 182 00:10:39,515 --> 00:10:42,385 வாட்சன் அதை திருப்பி தரும் போது, ஷெர்ல் உண்மையை ஒத்துக் கொள்கிறாங்க. 183 00:10:42,476 --> 00:10:43,476 சுவாரஸ்யமானது. 184 00:10:43,560 --> 00:10:45,810 ஆக, நாம் காய்கறிகள் சந்தைக்கு போகணுமா? 185 00:10:45,896 --> 00:10:47,056 நாளை பள்ளி முடிந்தவுடன்? 186 00:10:47,147 --> 00:10:49,727 சிறப்பு. அப்புறம், என்னிடம் பிளம்ஸ் தீர்ந்துவிட்டது. 187 00:10:49,816 --> 00:10:51,436 உனக்கும் பிளம்ஸுக்கும் என்ன? 188 00:10:53,153 --> 00:10:54,863 ஜீ.டபள்யூ. நம்மை கைவிட மாட்டார். 189 00:10:58,033 --> 00:11:00,743 ஸ்லோனுடன் பழக திரு. மென்டோஸா என்னை ஏன் நியமித்தார் என புரியலை. 190 00:11:00,827 --> 00:11:04,247 அவளுடன் இன்று மதிய உணவு சாப்பிடணும், ஆனால் அவள் எங்கு என்றே தெரியலை. 191 00:11:04,748 --> 00:11:06,918 கவனமாக இரு. அவள் உன்னை உயிருடன் சாப்பிடப் போகிறாள். 192 00:11:07,000 --> 00:11:09,380 மாணவர்கள் சங்க தேர்தல் பற்றி அவளின் கருத்து என்ன? 193 00:11:09,461 --> 00:11:11,461 -அவள் எனக்கு வாக்களிப்பாளா? -வாய்ப்பில்லை. 194 00:11:12,339 --> 00:11:14,419 சரி, நேற்றிரவு அந்த கதையைப் படித்தேன். 195 00:11:14,508 --> 00:11:17,968 அந்த மர்மம் விறுவிறுப்பானது, அவர்கள் பெண்களாக இருப்பது பிடிச்சிருக்கு. 196 00:11:18,053 --> 00:11:21,893 பெண்ணியவாதியாக சொல்கிறேன், வரலாற்று கதாபாத்திரங்களை பெண்களாக மாற்றுவது சிறப்பு 197 00:11:21,974 --> 00:11:25,394 அது சரி, டோனா, ஆனால் ஷெர்லாக் எங்கே என்பது தான் கேள்வி. 198 00:11:32,442 --> 00:11:34,072 இப்போது என்ன நடந்தது என எனக்குத் தெரியாது. 199 00:11:34,152 --> 00:11:37,242 எனக்குத் தெரியும். பேய் எழுத்தாளர் நமக்கு பழச்சாறால் எழுதியது நினைவிருக்கா? 200 00:11:44,788 --> 00:11:46,788 இருங்க. அதை இப்போது சுத்தம் செய்யாதீங்க. 201 00:11:47,833 --> 00:11:49,043 நாங்க வந்து... 202 00:11:51,837 --> 00:11:53,207 சரி, எனக்கு எதுவும் தோணலை. 203 00:11:55,090 --> 00:11:56,220 நன்றி. 204 00:11:56,717 --> 00:12:00,097 எப்போதும் நடப்பது தான். குழந்தைகளும் சிந்துதலும் ஒட்டிப் பிறந்தது. 205 00:12:03,015 --> 00:12:04,095 நீங்க புதிதாக சேர்ந்துள்ளீர்களா? 206 00:12:04,808 --> 00:12:07,018 ஆமாம், நாங்கள் இதுவரை உங்களை இங்கு பார்த்ததேயில்லை. 207 00:12:08,187 --> 00:12:09,227 ஆனால்... 208 00:12:10,731 --> 00:12:12,481 நீங்கள் யாரென்று எங்களுக்கு தெரியும். 209 00:12:15,485 --> 00:12:18,695 நீங்கள் ஷெர்லாக் ஹோம்ஸ், ஆனால் ஷெர்ல் என அழைக்கப்படுவீர்கள். 210 00:12:18,780 --> 00:12:20,240 உங்கள் மரணத்தையே பொய்யாக காட்டினீர்கள். 211 00:12:20,324 --> 00:12:21,954 உங்களுக்கு எப்படி அது தெரிந்தது? 212 00:12:23,911 --> 00:12:24,911 நாங்கள்... 213 00:12:25,996 --> 00:12:27,206 கூட்டாளிகள். 214 00:12:27,289 --> 00:12:29,709 உங்க தோழி வாட்சன் உங்களைப் பார்த்தால் சந்தோஷப்படுவாங்க. 215 00:12:30,209 --> 00:12:31,789 என் செல்ல வாட்சன். 216 00:12:32,252 --> 00:12:33,922 அவளை மீண்டும் பார்ப்பதில் எனக்கும் மகிழ்ச்சிதான், 217 00:12:34,004 --> 00:12:37,014 இத்தனை நாட்களாக காணாமல் போனதினால் என்மீது கோபமாக இருப்பாள். 218 00:12:37,090 --> 00:12:38,720 அவங்க புரிந்துக்கொள்வாங்க என நினைக்கிறேன். 219 00:12:39,426 --> 00:12:41,046 எனக்குப் புரியவில்லை. 220 00:12:41,803 --> 00:12:42,933 நீ உயிரோடுதான் இருக்கிறாயா? 221 00:12:45,599 --> 00:12:46,679 வாட்சன்! 222 00:12:47,434 --> 00:12:50,694 பொறுமையாக இருங்க. அவளுக்கு ஒன்றுமில்லை. உணர்ச்சிகரமான சுபாவம் கொண்டவள். 223 00:12:51,063 --> 00:12:53,523 இப்போது, என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? ஆமாம். 224 00:12:53,607 --> 00:12:56,737 இப்போது, நான் இங்கு எப்படி வந்தேன் என்றுதான் எனக்கு புரியவில்லை. 225 00:12:56,818 --> 00:12:59,398 ஒரு தருணத்தில், லண்டனில் காய்கறி வியாபாரியாக மறைந்திருந்தேன். 226 00:12:59,488 --> 00:13:01,818 அடுத்த நிமிடமே, உங்களது வினோத உலகிற்குள் இருக்கிறேன். 227 00:13:01,907 --> 00:13:04,027 நாங்கள் சொல்லிவிடுவோம், ஆனால் நீங்கள் நம்பமாட்டீர்கள். 228 00:13:04,117 --> 00:13:05,827 இல்லை, சொல்லாதே. அதில் என்ன வேடிக்கை இருக்கும்? 229 00:13:05,911 --> 00:13:07,581 இந்த புதிரை நானே தீர்க்கிறேன். 230 00:13:09,373 --> 00:13:11,293 அப்போது, இது கனவில்லை தானே. 231 00:13:12,084 --> 00:13:13,464 நீ நிஜமாகவே உயிரோடு இருக்கிறாய். 232 00:13:13,544 --> 00:13:17,094 ஆம், என் செல்ல வாட்சன். நான் காணாமற் போனதற்கு என்னை மன்னித்துவிடு, 233 00:13:17,172 --> 00:13:19,632 ஆனால் எனது எதிரிகளுக்கு நான் உயிருடன் இருப்பது தெரியக் கூடாது. 234 00:13:19,716 --> 00:13:21,796 ஆனால் நீ என்னை நம்பியிருக்கலாமே. 235 00:13:21,885 --> 00:13:23,425 கண்டிப்பாக நான் நம்பியிருப்பேன், 236 00:13:23,512 --> 00:13:26,392 ஆனால், ஒரு சரியான திட்டமில்லாமல் எந்த ஒரு தடயத்தையும் விட எனக்கு தயக்கமாக இருந்தது. 237 00:13:29,852 --> 00:13:33,692 உன்னை மீண்டும் பார்ப்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். 238 00:13:35,524 --> 00:13:37,284 சரி, சரி. இது புதுசா இருக்கு. 239 00:13:37,609 --> 00:13:40,529 வந்து இந்த சிறுமியின் துப்புகள் நிறைந்த புத்தகத்தை வந்து பார். 240 00:13:40,612 --> 00:13:42,492 அவர்கள் மிக சிக்கலான ஒரு வழக்கில் உள்ளனர். 241 00:13:43,365 --> 00:13:45,825 ஆக, ஒரு பேய் எங்களுக்கு தகவல்களை அனுப்பிக் கொண்டிருந்தது. 242 00:13:45,909 --> 00:13:47,409 முதலில், நாங்கள் அது எங்க பாட்டி என்று நினைத்தோம். 243 00:13:47,494 --> 00:13:50,374 ஆனால் இப்போது அது மேஸன் ப்ரிக்ஸ் எனும் ஒரு மர்ம எழுத்தாளர் என்று தெரிந்தது. 244 00:13:50,455 --> 00:13:52,365 அவரிடம் இருக்கும் பிரசுரிக்கப்படாத கையெழுத்துப் பிரதியை 245 00:13:52,457 --> 00:13:54,207 நாங்க கண்டுபிடித்து பிரசுரிக்க வேண்டும் என அவர் விரும்புவதாக நினைக்கிறோம். 246 00:13:54,293 --> 00:13:57,383 ஆனால், எப்படி ஆரம்பிப்பதென்றே தெரியலை, அவர் துப்பு கொடுத்து ரொம்ப நாட்களாகிறது. 247 00:13:57,462 --> 00:14:00,012 சுவராஸ்யமாக உள்ளது. எங்களிடம் அனைத்தையும் காட்டுங்கள். 248 00:14:02,968 --> 00:14:07,758 ஆக, ஒரு விசித்திர மனிதர் உங்க பாட்டியிடம் காசோலையோடு இந்த புத்தகத்தைக் கொடுத்தாரா? 249 00:14:07,848 --> 00:14:09,058 ஆம், பாட்டிக்கும் இதற்கும் 250 00:14:09,141 --> 00:14:11,481 ஏதோ ஒரு தொடர்பு உள்ளது என நாங்கள் நம்புகிறோம். 251 00:14:12,019 --> 00:14:13,729 ஆனால் எப்படி என்று தெரியலை. 252 00:14:13,812 --> 00:14:15,482 அதோடு இந்த கடிதத்தை மறந்துவிடாதீர்கள். 253 00:14:16,148 --> 00:14:17,518 அந்த பேய் எங்களை இந்த கடிதத்திற்கு வழிநடத்தியது. 254 00:14:17,608 --> 00:14:20,438 அது "எஸ்" என்ற பெயர் கொண்ட ஒருவரிடமிருந்து வந்துள்ளது. ஆனால் அது யார் என தெரியலை. 255 00:14:21,486 --> 00:14:24,276 அடுத்தது இந்த மேஸன் ப்ரிக்ஸ் யார் என்றுதான் கண்டுபிடிக்கப் போகிறீர்கள். 256 00:14:24,364 --> 00:14:25,204 உங்களின் எஸ் 257 00:14:25,282 --> 00:14:28,792 நீதிமன்ற வளாகத்திற்கு சென்று இவரைப்பற்றி என்னால் முடிந்தவற்றை கண்டுபிடிக்கிறேன். 258 00:14:28,869 --> 00:14:30,079 நீங்க போகக் கூடாது. 259 00:14:30,996 --> 00:14:32,246 நாங்க தான் போகணும். வாங்க. 260 00:14:32,331 --> 00:14:34,831 உங்களுக்கு மேஸன் ப்ரிக்ஸைப் பற்றி எந்த விவரமும் கிடைக்காது. 261 00:14:34,917 --> 00:14:35,957 ஏன் கிடைக்காது? 262 00:14:36,043 --> 00:14:39,003 சிக்கலற்றது, என் செல்ல கர்டிஸ். ஆனால் அதை நான் சொல்லிவிட்டால், 263 00:14:39,087 --> 00:14:42,007 உங்களில் ஒரு நல்ல துப்பறிவாளரை என்னால் உருவாக்க முடியாது, அல்லவா? 264 00:14:42,090 --> 00:14:45,140 எங்களுக்கு துப்பறிவாளராக இருக்க கற்றுத்தரப் போகிறீர்களா? இது சிறப்பானது. 265 00:14:45,594 --> 00:14:47,514 உங்களின் திறமைகளால் வியக்கிறேன். 266 00:14:47,596 --> 00:14:51,056 அதோடு கொஞ்சம் பயிற்சியெடுத்தால், நீங்கள் கண்டுபிடிக்க இயலாத மர்மங்களே இருக்காது. 267 00:14:51,141 --> 00:14:54,311 இப்போது, நன்றாக பார்த்து உங்களுக்கு என்ன தெரிகிறது என்று சொல்லுங்கள். 268 00:14:55,270 --> 00:14:56,900 அது அந்த ப்ளாஸா. 269 00:14:56,980 --> 00:14:58,400 அப்புறம் இது அந்த உணவகம். 270 00:14:59,942 --> 00:15:00,982 இது என்ன? 271 00:15:03,195 --> 00:15:04,565 பாலம். 272 00:15:04,655 --> 00:15:05,485 அப்புறம்? 273 00:15:09,952 --> 00:15:11,622 அந்த பாலத்தில் ஏதோ வார்த்தைகள் உள்ளன. 274 00:15:16,208 --> 00:15:18,248 "ஸ்டீல்" என்று ஏதோ. 275 00:15:22,381 --> 00:15:24,051 "மேஸன் ஃபேமிலி ஸ்டீல்." 276 00:15:25,092 --> 00:15:27,642 மேஸனா? எனக்குப் புரியவில்லை. 277 00:15:27,719 --> 00:15:28,929 அப்போது இது என்ன? 278 00:15:32,766 --> 00:15:34,056 இது ஒரு சிங்கத்தின் சிலை. 279 00:15:34,768 --> 00:15:36,138 அதில் வார்த்தைகள் எழுதப்பட்டிருக்கு. 280 00:15:39,565 --> 00:15:43,395 "ஜெனரல் ஜேம்ஸ் ப்ரிக்ஸின் நினைவாக" 281 00:15:43,485 --> 00:15:44,735 ஜேம்ஸ் ப்ரிக்ஸ்? 282 00:15:45,195 --> 00:15:48,525 அவர் மேஸன் ப்ரிக்ஸின் சொந்தமா? மிகவும் தற்செயலானது. 283 00:15:49,241 --> 00:15:51,951 நான் என் அன்பு ஷெர்லிடமிருந்து ஏதாவது கற்றிருக்கிறேன் என்றால், 284 00:15:52,035 --> 00:15:55,905 அது வாழ்க்கையில் எப்போதும் தற்செயல்கள் இருப்பதில்லை. அவை துப்புகள் மட்டுமே. 285 00:15:55,998 --> 00:16:00,378 அப்போது, "மேஸன் ஃபேமிலி ஸ்டீல்" என்று இந்த பாலத்தில் இருப்பதும் 286 00:16:00,460 --> 00:16:03,170 அந்த சிலை ஜேம்ஸ் ப்ரிக்ஸின் நினைவாக வைக்கப்பட்டதும் தற்செயல் அல்ல. 287 00:16:04,548 --> 00:16:07,218 இருங்க. எனக்குப் புரிந்துவிட்டது என நினைக்கிறேன். 288 00:16:08,802 --> 00:16:10,852 மேஸன் ப்ரிக்ஸ் என்பது போலி பெயர். 289 00:16:11,471 --> 00:16:14,521 நீ சொல்வது சரி. மேஸன் ப்ரிக்ஸ் என்பது ஒரு புனைப்பெயர். 290 00:16:19,146 --> 00:16:20,976 அவரது முகம் இன்னும் நன்றாக தெரிந்திருக்கலாம். 291 00:16:21,064 --> 00:16:23,154 அவரது முகம் வேண்டுமென்றே மறைக்கபட்டிருக்கிறது. 292 00:16:23,233 --> 00:16:25,113 ஆக, இந்த மேஸன் ப்ரிக்ஸ் நிஜமாகவே இல்லையா? 293 00:16:25,194 --> 00:16:27,204 அவரின் கையெழுத்து பிரதியை எப்படி கண்டுபிடிப்பது? 294 00:16:27,613 --> 00:16:29,493 விரக்தியடையாதே. 295 00:16:29,573 --> 00:16:33,333 இந்த தடைகள் தான் புதிர்களின் மிக சுவாரஸ்யமான பகுதிகள். 296 00:16:36,955 --> 00:16:39,365 ஏ மேன் வித்தவுட் போன்ஸ் 297 00:16:39,458 --> 00:16:41,918 அவரது முகத்தை நன்றாக பார்க்க எனக்கு ஒரு வழி தெரியும். 298 00:16:42,586 --> 00:16:44,626 பள்ளியில் கலைக்கூடத்தில் ஒரு புகைப்பட மென்பொருள் இருக்கு. 299 00:16:45,047 --> 00:16:47,467 சரிதான். அதை சுவொரொட்டிகளுக்கும் பிற வேலைகளுக்கும் பயன்படுத்துவோம். 300 00:16:47,549 --> 00:16:49,969 சில நிழல்களை எடுத்துவிடலாம் என்று நினைக்கிறேன். 301 00:16:52,638 --> 00:16:54,428 அது பயனளிக்கும் என நினைக்கிறேன். 302 00:16:54,515 --> 00:16:57,135 இந்த கண்டுபிடிப்புகள் நம் காலத்தில் இருந்திருந்தால், 303 00:16:57,226 --> 00:17:00,096 -நீ வேலையில்லாமல் இருந்திருப்பாய், ஷெர்ல். -அசாத்தியம், ஜோன். 304 00:17:00,187 --> 00:17:01,977 இது சுவாரஸ்யத்தை நீக்கிவிடுகிறது. 305 00:17:02,064 --> 00:17:05,324 மழையில், குளிரான தெருக்களில் துப்பு துலக்குவதற்காக நடப்பது. 306 00:17:05,817 --> 00:17:06,977 அந்த காலங்கள் அற்புதமானவை. 307 00:17:07,069 --> 00:17:10,279 உனக்கு மழையே பிடிக்காது. அது துப்புகள் அனைத்தையும் அழிப்பதாக புலம்புவாய். 308 00:17:11,823 --> 00:17:14,283 எனக்குத் தெரியலை. இன்னும் அதை சரியாக பார்க்க முடியலை. 309 00:17:14,367 --> 00:17:17,197 இது மேகங்களின் வடிவத்தை கண்டுபிடிக்கும் மேக விளையாட்டு போல உள்ளது. 310 00:17:17,538 --> 00:17:19,078 எனக்கு அந்த விளையாட்டு பிடிக்கும். 311 00:17:22,459 --> 00:17:23,669 இது அர்த்தமற்றது. 312 00:17:24,086 --> 00:17:26,296 -அது பயனளிக்கவில்லை. -விளையாடாதீர்கள், ஷெர்லாக். 313 00:17:29,466 --> 00:17:30,926 ஹே, ஜேக். பொறு. 314 00:17:31,385 --> 00:17:32,795 ஹாய், ஷெவான். என்ன விஷயம்? 315 00:17:33,220 --> 00:17:36,350 நான் நேராகவே கேட்கிறேன். என்னை விளையாட்டிற்கு எதிரானவள் என நினைக்கிறாயா? 316 00:17:37,307 --> 00:17:41,057 அது வினோதமான கேள்வி. ஆனால், ஆமாம். பெரும்பாலானோர் ஆஷருக்கு வாக்களிக்கிறோம். 317 00:17:41,603 --> 00:17:44,573 உன் மனதை மாற்ற ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா? உனது வாக்கையும்? 318 00:17:44,648 --> 00:17:46,688 உண்மையில், நீ வென்றால் கூடைப்பந்து அணியின் நிதியை 319 00:17:46,775 --> 00:17:49,355 இழக்கச் செய்வாய் என்று எல்லோரும் அஞ்சுகின்றனர். 320 00:17:49,444 --> 00:17:52,364 நான் ஏன் அப்படி செய்யணும்? நான் எப்போதும் விளையாட்டுக்கு ஆதரவானவள். 321 00:17:52,447 --> 00:17:55,527 சொல்லப் போனால், நானே கைப்பந்தில் சேர நினைக்கிறேன். 322 00:17:55,617 --> 00:17:58,907 நல்ல முயற்சி. எனக்கும் மற்ற வீரர்களுக்கும் அதை நீ ஏன் பண்றேன்னு தெரியும். 323 00:18:00,956 --> 00:18:01,956 ஷெவான். 324 00:18:03,667 --> 00:18:05,247 நான் இந்த தேர்தலில் வெற்றிப் பெறப் போவதில்லை. 325 00:18:05,335 --> 00:18:07,625 ஒரே நாளில் விளையாட்டு வீராங்கனையாக மாறணும் போல இருக்கு. 326 00:18:07,713 --> 00:18:09,923 உன் சுயத்தை இழந்து, மாறுவதற்கு மிகவும் முயற்சிக்காதே. 327 00:18:11,091 --> 00:18:14,551 சரியாகச் சொன்னாய். நான் இன்னொருவராக இருக்க முடியாது. 328 00:18:15,262 --> 00:18:17,312 ஆனால்,இன்னொருவரோடு இணைந்து போட்டியிடலாம். 329 00:18:17,389 --> 00:18:18,219 அது வேலை செய்யும். 330 00:18:20,017 --> 00:18:21,597 நீ அதை செய்வாயா? என்னுடன் இணைந்து போட்டியிடுவாயா? 331 00:18:21,685 --> 00:18:23,475 மாணவர் மன்றத்திற்காகவா? விளையாடுகிறாயா? 332 00:18:23,562 --> 00:18:24,902 நான் விளையாடுவது போல தெரிகிறதா? 333 00:18:24,980 --> 00:18:26,020 என்னால் சொல்ல முடியாது. 334 00:18:26,106 --> 00:18:27,646 கர்டிஸ், தயவுசெய்து. 335 00:18:27,733 --> 00:18:28,983 எல்லோருக்கும் உன்னை பிடிக்கும். 336 00:18:29,067 --> 00:18:31,897 நாம் இணைந்து போட்யிட்டால், கண்டிப்பாக நாம் வெற்றி பெறுவோம். 337 00:18:31,987 --> 00:18:34,277 மன்னிச்சிடு, ஷெவான், எனக்கு அரசியலில் விருப்பமில்லை. 338 00:18:34,364 --> 00:18:37,704 அது ஒரு பக்கமாக சாய்வது பற்றியது, எனக்கு அது பிடிக்காது. பிறகு பார்ப்போம். 339 00:18:46,919 --> 00:18:49,959 அந்த புதிரை அவிழ்ப்பதில் நான் கொஞ்சம் நெருங்கிவிட்டேன் என நினைக்கிறேன். 340 00:18:50,839 --> 00:18:52,799 சிறப்பு, ஏனென்றால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. 341 00:18:52,883 --> 00:18:56,973 நானும் வாட்சனும் உனக்கும் உன் நண்பர்கள் மூவருக்கும் தான் தெரிவோம் என நினைக்கிறேன். 342 00:18:57,888 --> 00:19:00,718 அந்த மர்மமா. நானே அதை சொல்லிவிடுவேனே. 343 00:19:00,807 --> 00:19:03,517 இல்லை, நான் அதை கேட்க மாட்டேன். நான் தீர்க்காத வழக்கே இல்லை. 344 00:19:03,602 --> 00:19:05,732 எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை. 345 00:19:05,812 --> 00:19:08,152 உனக்கு பல விஷயங்கள் புரியாது, ஜோன். 346 00:19:08,232 --> 00:19:09,862 உனக்கு ஜெர்மனோ, ஃபிரஞ்சோ தெரியாது. 347 00:19:10,901 --> 00:19:15,361 இல்லை. நீ எப்படி உன் மாறுவேடத்தை தரித்தாய் என எனக்குப் புரியவில்லை. 348 00:19:15,447 --> 00:19:17,157 யாராவது உனக்கு உதவியிருக்கணும். 349 00:19:30,462 --> 00:19:31,462 ஹாய், ரூபன். 350 00:19:32,005 --> 00:19:35,215 ஹாய். அம்மா தயாராகிக் கொண்டு இருக்காங்க. உள்ளே வாங்க. 351 00:19:35,300 --> 00:19:36,340 சரி, நன்றி. 352 00:19:39,471 --> 00:19:41,971 நினைவில் கொள்ளுங்க, நீங்க எனக்கும் என் நண்பர்களுக்கு மட்டும் தான் தெரிவீர்கள். 353 00:19:42,057 --> 00:19:43,887 கண்ணுக்கு தெரியாத துப்பறிவாளராக இருப்பது சிறப்பானது. 354 00:19:43,976 --> 00:19:45,346 கண்ணுக்கு தெரியாமல் கண்காணிக்கலாம். 355 00:19:45,435 --> 00:19:48,105 விஷயத்தை மாற்றாதே. நான் இதை நினைத்து ரொம்ப கவலையாக இருக்கிறேன். 356 00:19:49,356 --> 00:19:52,856 -ஷெர்ல், நான் உன்னிடம் தான் பேசுகிறேன். -இப்போது வேண்டாம், ஜோன். ஏதோ நடக்கிறது. 357 00:19:57,573 --> 00:19:59,833 உங்க கவனத்திற்காக, எனது வீட்டுப்பாடங்களை முடித்துவிட்டேன். 358 00:20:01,034 --> 00:20:04,004 இங்கே உனது ஆசிரியராக வரவில்லை, ரூபன். ஆனால் நல்லது. 359 00:20:08,834 --> 00:20:10,634 க்ரெக். போகலாமா? 360 00:20:11,211 --> 00:20:12,211 போகலாம். 361 00:20:12,921 --> 00:20:13,921 பை, ரூபன். 362 00:20:14,423 --> 00:20:15,843 பை, திரு. சாண்டர்ஸ். 363 00:20:15,924 --> 00:20:17,474 பை, அன்பே. பிறகு சந்திக்கலாம். 364 00:20:17,551 --> 00:20:19,761 -பை, அம்மா. உங்களை நேசிக்கிறேன். -நானும் தான். 365 00:20:22,764 --> 00:20:24,184 அவங்க ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. 366 00:20:24,558 --> 00:20:26,978 நான் கவனமாக பார்ப்பேன். நான் அவரை நம்ப மாட்டேன். 367 00:20:27,561 --> 00:20:29,191 என்ன? ஏன் நம்பமாட்டீர்கள்? 368 00:20:29,563 --> 00:20:31,153 அவள் சொல்வதை கேட்காதே, ரூபன். 369 00:20:31,231 --> 00:20:33,481 என்னுடன் பேசுவதை தவிர்க்கவே இது போல செய்கிறாள். 370 00:20:33,567 --> 00:20:35,317 ஒருவரின் மேல் உள்ள அனைத்தும் ஒரு கதை சொல்லும். 371 00:20:35,402 --> 00:20:38,662 அவர்களது ஷூலேஸ்களிலிருந்து அவர்களது நக நுணிகள் வரை. 372 00:20:38,739 --> 00:20:41,779 உனது ஆசிரியருக்கு, அவரது விரல்களில் சிறிய தீக்காயங்கள் இருந்தன 373 00:20:41,867 --> 00:20:45,247 அதோடு அவர் உட்காரும்போது முதுகு வலியோடு இருப்பது போல உட்கார்ந்தார். 374 00:20:46,079 --> 00:20:47,409 இது எதனையுமே நான் கவனிக்கலை. 375 00:20:47,497 --> 00:20:49,287 வந்து, நீ இது போன்ற விஷயங்களை கவனிக்கணும். 376 00:20:49,374 --> 00:20:51,294 ஒரு சின்ன விவரம் ஒரு முழு கதையையே சொல்லும். 377 00:20:52,002 --> 00:20:54,342 ஆக அவருக்கு முதுகு வலி இருக்கு. அதனால் என்ன? 378 00:20:54,421 --> 00:20:57,341 அவரிடம் ஏதோ ரகசியம் இருக்கிறது என்று சொல்கிறேன். 379 00:20:57,758 --> 00:20:59,968 அதோடு அவர் மட்டுமே அப்படியில்லை. 380 00:21:16,026 --> 00:21:18,856 ஹேய், ஸ்லோன். எல்லா பாடப்புத்தகத்தையும் வாங்கிவிட்டாயா? 381 00:21:19,821 --> 00:21:20,991 ஆம். 382 00:21:22,324 --> 00:21:25,794 ஆக, இன்று கேன்டீனில் இலவசமாக தயிர் தருவார்கள். 383 00:21:25,869 --> 00:21:27,119 எனக்கு பால் சம்பந்தப்பட்டவை பிடிக்காது. 384 00:21:28,580 --> 00:21:29,580 நிச்சயம் பிடிக்காது. 385 00:21:34,336 --> 00:21:35,706 அப்போ, சரி. பை. 386 00:21:38,340 --> 00:21:40,680 எனக்கு புரியலை. நான் அவளிடம் நன்றாக பழக முயல்கிறேன். 387 00:21:40,759 --> 00:21:42,259 ரொம்ப முயற்சிக்காதே. 388 00:21:42,344 --> 00:21:44,474 நான் அவளுக்கு சுற்றிக் காண்பிக்கணும் என்கிறார் திரு. மென்டோஸா 389 00:21:44,555 --> 00:21:46,595 ஆனால் அவள் என்னிடம் பேசக்கூடவில்லை என்றால், நான் எப்படி செய்வது? 390 00:21:46,682 --> 00:21:48,232 நான் கண்டுபிடித்துவிட்டேன். 391 00:21:48,308 --> 00:21:51,348 நான் ஒரு தெரியாத எழுத்தாளர் எழுதிய நூலில் உள்ள கற்பனை கதாபாத்திரம் 392 00:21:51,436 --> 00:21:53,646 அத்தோடு உங்க பேய் நண்பரால் இங்கு கொண்டு வரப் பட்டேன். 393 00:21:54,481 --> 00:21:55,481 முதல் முறையாக இது நடக்கிறது. 394 00:21:55,566 --> 00:21:58,936 நான் ஒரு கற்பனை தான் என்று நினைக்கும் போது சற்று வேதனையாக இருக்கிறது. 395 00:21:59,027 --> 00:22:00,817 நீங்கள் எங்களுக்கு எப்போதும் உண்மைதான். 396 00:22:00,904 --> 00:22:03,534 -நன்றி. -ஆனால் எப்படி கண்டுப்பிடித்தீர்கள்? 397 00:22:03,615 --> 00:22:06,365 அதாவது, முதலில் நான் ஷெர்லாக் ஹோம்ஸின் தொகுப்புகளை பார்த்தேன் 398 00:22:06,451 --> 00:22:08,001 சர் ஆர்தர் கோனன் டோயல் எழுதியது. 399 00:22:08,078 --> 00:22:11,208 அந்த கதாபாத்திரத்திற்கு என் பெயர் உள்ளது என்பது எனக்கு வித்தியாசமாக இருக்கு. 400 00:22:11,290 --> 00:22:14,040 பிறகு நான் உங்க பேய் நண்பரால் இங்கு அழைத்து வரப்பட்டேன் என புலப்பட்டது. 401 00:22:14,126 --> 00:22:17,836 அதோடு, நானும் ஒரு கதாபாத்திரம். பிறகு அந்த புத்தகத்தை ஷெவானின் பையில் கண்டேன். 402 00:22:18,547 --> 00:22:19,797 இது ஆச்சரியமானது. 403 00:22:20,215 --> 00:22:21,925 கர்டிஸ் நம்மை கலைக்கூடத்தில் சந்திக்க விரும்புகிறான். 404 00:22:22,009 --> 00:22:24,429 -ஏன்? -தெரியவில்லை, ஆனால் நாம் செல்வோம். 405 00:22:27,097 --> 00:22:28,557 கலைக் கூடம் 406 00:22:31,685 --> 00:22:34,645 உனது நண்பனுக்கு மிக அற்புதமான யோசனை வந்திருக்கு. 407 00:22:34,730 --> 00:22:35,770 என்ன அது? 408 00:22:35,856 --> 00:22:37,816 அவரின் பாதி முகம் மட்டுமே நிழலில் தெரிகிறதா? 409 00:22:37,900 --> 00:22:38,820 ஆம். 410 00:22:38,901 --> 00:22:41,821 நாம் அந்தப் பக்க முகத்தை ஒரு நகலெடுத்து அதை திருப்பி பார்த்தால் என்ன? 411 00:22:42,613 --> 00:22:45,033 அவரது முகத்தை மறுவடிவம் செய்ய சொல்கிறாயா? 412 00:22:45,115 --> 00:22:45,985 இது பேரறிவு. 413 00:22:53,165 --> 00:22:55,375 இந்த தொழில்நுட்பம் அபாரமானது. 414 00:22:56,126 --> 00:22:58,706 நீ அந்த காலத்தில் துப்புகளைத் தேடி லண்டனில், 415 00:22:58,795 --> 00:23:01,335 மழைக்கால இரவுகளில் அலைவது எவ்வளவு அருமை என சொல்ல மாட்டாயா? 416 00:23:09,640 --> 00:23:11,060 இப்போது இது ஒரு உண்மையான முகம். 417 00:23:12,059 --> 00:23:13,769 அதோடு நாம் ஏற்கனவே பார்த்த முகம். 418 00:23:17,773 --> 00:23:21,693 இந்த புத்தக கடை மீது நல்ல அதிர்வலைகளை பரப்புங்கள். 419 00:23:22,236 --> 00:23:23,946 மின்மினியில் பார்த்தது ஞாபகம் இருக்கா? 420 00:23:24,029 --> 00:23:26,659 நமது பாட்டிக்கு புத்தகக்கடைக்காக காசோலை கொடுத்தது இவர் தான். 421 00:23:29,868 --> 00:23:31,118 என்னால் இதை நம்ப முடியலை. 422 00:23:31,954 --> 00:23:34,874 உன் பாட்டிக்கு புத்தகக்கடைக்காக காசோலை கொடுத்தவர் தான்... 423 00:23:35,582 --> 00:23:36,792 மேஸன் ப்ரிக்ஸ். 424 00:24:35,350 --> 00:24:37,350 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்