1 00:00:11,595 --> 00:00:14,845 பக்கங்கள் வெறுமையாக இருக்கு. புது கதாபாத்திரங்கள் வெளியாகிவிட்டனவா? 2 00:00:14,932 --> 00:00:17,892 ஆனால் அந்த மந்திர பிரஷ் இப்போதுதான் அதன் புத்தகத்திற்குள் சென்றது. 3 00:00:17,976 --> 00:00:20,476 எங்களுக்கு ஒரு அமைதியான இரவை கொடுக்க மாட்டீர்களா, பேய் எழுத்தாளரே? 4 00:00:21,021 --> 00:00:22,441 இந்த அட்டைப்படம் நல்லா இருக்கு. 5 00:00:22,856 --> 00:00:24,316 த கோபால்ட் மாஸ்க் 6 00:00:25,526 --> 00:00:27,946 பழசாகத் தெரிகிறது. கண்டிப்பாக புது புத்தகம் இல்லை. 7 00:00:28,320 --> 00:00:29,400 இதன் ஆசிரியர் யார்? 8 00:00:31,949 --> 00:00:33,529 இதில் ஆசிரியரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. 9 00:00:33,992 --> 00:00:35,332 முதல்முறையாக இப்படி நடக்கிறது. 10 00:00:35,869 --> 00:00:38,539 அந்த புத்தகத்தைப் பற்றி தெரியாமல் அதில் உள்ள கதாபாத்திரங்களை 11 00:00:38,622 --> 00:00:40,332 நாம் எப்படி கண்டுபிடிக்கப் போகிறோம்? 12 00:00:41,083 --> 00:00:43,593 இது சுவாரஸ்யமாக இருக்கப் போகிறது. 13 00:00:55,556 --> 00:01:00,636 பேய் எழுத்தாளர் 14 00:01:02,646 --> 00:01:04,266 யாராவது சாக்லேட் வாங்கிக் கொள்கிறீர்களா? 15 00:01:04,690 --> 00:01:06,780 நீ மாணவ தலைவராக ஆவதற்கு அது எப்படி உதவும்? 16 00:01:06,859 --> 00:01:10,279 அது உதவாது. ஆனால் என் மாடல் யூஎன்-யின் நியூ யார்க் நகர கல்வி பயணத்திற்கு உதவும். 17 00:01:10,362 --> 00:01:12,032 நீ தேர்தலில் கவனமாக இருக்க வேண்டாமா? 18 00:01:12,114 --> 00:01:14,994 ஆமாம். அதனால் ஒரு சாக்லேட் வாங்கிக் கொள் எனக்கு தேர்தலுக்கு நிறைய நேரம் கிடைக்கும். 19 00:01:19,246 --> 00:01:20,866 ஹேய். நீங்க இங்கே இருக்கீங்களா. 20 00:01:20,956 --> 00:01:22,116 எல்லோருக்கும், ஹாய். 21 00:01:22,207 --> 00:01:24,457 உனக்காக இதை நான் அலுவலகத்தில் சேர்ப்பதாக இருந்தேன். 22 00:01:24,543 --> 00:01:27,133 நான் வீட்டை விட்டு கிளம்பும் முன் உன் குறுஞ்செய்தி வந்தது நல்லது. 23 00:01:27,713 --> 00:01:29,383 நன்றி, அம்மா. நீங்கள் காப்பாற்றிவிட்டீர்கள். 24 00:01:31,508 --> 00:01:32,508 ஏமி ரேனா தானே? 25 00:01:33,385 --> 00:01:35,135 ஓ, கடவுளே. 26 00:01:35,220 --> 00:01:36,430 இது நீயா? 27 00:01:36,513 --> 00:01:39,313 அட, என்ன ஆச்சரியம். உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி. 28 00:01:39,391 --> 00:01:40,851 உங்கள் இருவர்க்கும் பரிச்சயமுண்டா? 29 00:01:40,934 --> 00:01:42,444 ஆமாம், நாங்கள் மழலையர் பள்ளியிலிருந்து 30 00:01:42,519 --> 00:01:45,309 -மேல்நிலை பள்ளி வரை ஒன்றாக படித்தோம். -ஆமாம். ஆமாம். 31 00:01:45,397 --> 00:01:47,607 பேருந்திற்கு பதிலாக ஒரு பழைய காரில் பள்ளிக்கு வந்தாயே. 32 00:01:47,691 --> 00:01:50,571 சரி. இன்னும் வேடிக்கையாகதான் இருக்கிறாய். 33 00:01:50,652 --> 00:01:52,992 என்னால் நம்ப முடியலை. நீ அப்படியே தான் இருக்கிறாய். 34 00:01:53,488 --> 00:01:55,118 உன் தலை முடி மட்டும் நீலமாக இல்லை. 35 00:01:55,199 --> 00:01:57,279 உங்க தலை முடி நீலமாக இருந்ததா, மிஸ். ரேனா? 36 00:01:57,784 --> 00:01:59,204 -வினோதம். -அழகு. 37 00:01:59,286 --> 00:02:00,326 ஆமாம், சரிதானே? 38 00:02:01,580 --> 00:02:03,120 நாங்கள் வகுப்பிற்கு போகணும். 39 00:02:03,207 --> 00:02:05,377 சரி. நானும் தான், ஏன்னா நான் தான் ஆசிரியர். 40 00:02:05,459 --> 00:02:06,789 அய்யோ, இதை நம்ப முடியலை. 41 00:02:06,877 --> 00:02:08,627 ரூபனுக்கு திரு. சாண்டர்ஸ் என்ற ஆசிரியர் இருப்பது தெரிந்ததும் 42 00:02:08,711 --> 00:02:10,381 இதை புரிந்து கொள்ளாமல் போய்விட்டேனே. 43 00:02:10,464 --> 00:02:12,594 நானும் அப்படித்தான். உலகம் எவ்வளவு சிறிதானது. 44 00:02:13,050 --> 00:02:14,260 உன்னை பார்த்ததில் மகிழ்ச்சி, க்ரெக். 45 00:02:14,343 --> 00:02:15,973 -க்ரெக்கா? -எனக்கும் தான், ஏமி. 46 00:02:16,595 --> 00:02:17,595 பை. 47 00:02:18,096 --> 00:02:19,096 நீல முடி இல்லாமலும். 48 00:02:23,227 --> 00:02:24,437 வகுப்பில் பார்க்கலாம். 49 00:02:27,272 --> 00:02:29,902 திரு. சாண்டர்ஸின் முதல் பெயரை நாம் கண்டிபிடித்தது நம்பமுடியலை. 50 00:02:29,983 --> 00:02:32,113 அவரது முதல் பெயர் க்ரெக் என தெரியாதா? 51 00:02:32,194 --> 00:02:33,904 என் ஆசிரியர்களின் முதல் பெயர் எனக்கு தெரியும். 52 00:02:33,987 --> 00:02:38,407 இப்போது, டெப்ராவின் வகுப்பிற்கு போகணும். தாமதமாக போனால் அவங்களுக்குப் பிடிக்காது. 53 00:02:42,955 --> 00:02:44,495 ஹேய், செல்லமே. என்ன செய்கிறாய்? 54 00:02:44,581 --> 00:02:46,331 என் சட்டைக்கு புது கைகள் தைக்கிறேன். 55 00:02:46,416 --> 00:02:48,126 பழைய கைகளுக்கு என்னவாயிற்று? 56 00:02:48,210 --> 00:02:51,550 அவை எனக்கு பிடிக்கவில்லை. இந்த புதியவை நன்றாக இருக்கின்றன. 57 00:02:51,630 --> 00:02:55,050 சரி, இது அலுத்துப் போனால், வாழைப்பழ ப்ரெட் செய்ய எனக்கு உதவுகிறாயா? 58 00:02:56,426 --> 00:02:59,716 இல்லை முடியாது. நீங்க செய்து முடித்த பின் அதை சாப்பிடுவதில் உதவி செய்கிறேன். 59 00:02:59,805 --> 00:03:01,385 நீ பாத்திரத்தை நக்கலாம். 60 00:03:01,473 --> 00:03:02,813 அறிவியல் வகுப்பில் பச்சை முட்டைகளின் தீமைகள் பற்றி 61 00:03:02,891 --> 00:03:05,351 தெரிந்ததும், பாத்திரங்களை நக்குவதை நிறுத்திவிட்டேன். 62 00:03:05,435 --> 00:03:09,015 சரி, எதுவும் பேக் செய்ய வேண்டாம். வா, நாம் வேறு எதாவது செய்யலாம். 63 00:03:09,106 --> 00:03:12,026 வாரத்தில் பாதி நாட்கள் தான் உன்னை பார்க்க முடிகிறது. 64 00:03:12,109 --> 00:03:13,649 ஏதாவது கேம் விளையாடலாம். 65 00:03:13,735 --> 00:03:15,235 அல்லது நடக்கலாம். 66 00:03:15,320 --> 00:03:18,530 வாழைப்பழ ப்ரெடுக்கு பதிலாக பிரோயோ வாங்கலாம். அதுவும் ஆரோக்கியமானது. 67 00:03:18,615 --> 00:03:20,525 மன்னிச்சிடுங்க, அம்மா. இதை முடித்தாகணும். 68 00:03:20,617 --> 00:03:21,827 'பாரிஸ் ரன்வே' பார்க்கலாம். 69 00:03:23,036 --> 00:03:24,496 அது உங்களுக்கு பிடிக்காது தானே. 70 00:03:25,038 --> 00:03:26,118 பரவாயில்லை. 71 00:03:26,206 --> 00:03:28,376 அந்த மோசமான நீதிபதிகள் போட்டியாளர்களின் 72 00:03:28,458 --> 00:03:31,628 உடைகளை விமர்சித்து அவர்களை அழ வைப்பது எனக்கு பிடிக்கவில்லை. 73 00:03:31,712 --> 00:03:33,382 அது ஒவ்வொரு அத்தியாயத்திலும் நடக்கிறது. 74 00:03:35,257 --> 00:03:36,377 இதோ வருகிறேன். 75 00:03:54,651 --> 00:03:55,941 நல்ல வேலை செய்கிறாய், ரூபன். 76 00:03:56,445 --> 00:03:57,985 அந்த வாடகை காரை பாருங்க, தாத்தா. 77 00:03:59,781 --> 00:04:00,871 எந்த கார்? 78 00:04:04,453 --> 00:04:06,873 அது போயிருக்கும். பரவாயில்லை. 79 00:04:07,706 --> 00:04:11,536 சரி, வந்து, எனக்கு வேலை இருக்கு. நான் புராதன புத்தக பிரிவை ஒழுங்குபடுத்துகிறேன். 80 00:04:25,891 --> 00:04:26,981 ஹாய். 81 00:04:27,601 --> 00:04:28,851 ஓ, ஹே, பையா. 82 00:04:28,936 --> 00:04:31,186 நீ எனக்கு உதவ முடியுமா? நான் ரொம்ப தூரம் போகணும். 83 00:04:31,271 --> 00:04:34,151 சரி, உதவுவதில் எனக்கு மகிழ்ச்சி. என் பெயர், ரூபன். 84 00:04:34,525 --> 00:04:35,685 என் பெயர் ஃப்ராங்க். 85 00:04:36,443 --> 00:04:38,453 ஃப்ராங்க், நாம் துவங்குவதற்கு முன், 86 00:04:38,529 --> 00:04:40,909 உங்க காரை சாலையிலிருந்து அப்புறப்படுத்தணும். 87 00:04:41,698 --> 00:04:43,408 உதவிக்கு என் நண்பர்களை அழைக்கிறேன். 88 00:04:53,377 --> 00:04:55,877 சரி, ஃப்ராங்க்... நான் உங்களை ஃப்ராங்க் என அழைக்கலாமா? 89 00:04:55,963 --> 00:04:58,223 அது தான் என் பெயர். நீ வேறு எப்படி கூப்பிடுவாய்? 90 00:04:58,298 --> 00:05:00,508 தெரியவில்லை. முழு பெயர், செல்லப் பெயர், 91 00:05:00,592 --> 00:05:03,102 மற்ற ஓட்டுனர்களோடு பேசும் போது உபயோகிக்கும் சிபி ரேடியோ பெயர். 92 00:05:03,178 --> 00:05:04,468 அவற்றை அறிய விரும்புகிறேன். 93 00:05:04,555 --> 00:05:05,555 வெறும் ஃப்ராங்க் தான். 94 00:05:05,639 --> 00:05:06,639 நல்லது. 95 00:05:06,723 --> 00:05:09,603 இன்று உங்க கார் பழுதாகும் முன் எங்கிருந்து ஓட்டி வருகிறீர்கள்? 96 00:05:09,685 --> 00:05:10,885 எங்கிருந்தும், இல்லை. 97 00:05:10,978 --> 00:05:14,478 சும்மா நகரத்தை சுற்றி, என் பயணிகள் சொல்லும் இடத்திற்கு போனேன். 98 00:05:14,565 --> 00:05:15,765 ரொம்ப உதவியா இருந்தது. 99 00:05:15,858 --> 00:05:20,108 அண்மையில், நீங்க ஏதாவது கோபால்ட் மாஸ்கை எங்காவது பார்த்தீர்களா? 100 00:05:20,195 --> 00:05:23,275 எதை? இந்த காலத்து குழந்தைகள் பயன்படுத்தும் வார்த்தையா? 101 00:05:23,824 --> 00:05:28,164 சரி, உட்கார்ந்து அரட்டை அடிக்க ஆசைதான், ஆனால் நான் என் காரை சரி செய்தாகணும். 102 00:05:28,245 --> 00:05:32,115 நேரம் பொன்னானது, மற்றும் என் கார் இல்லாமல் என்னால் வேலை செய்ய முடியாது. 103 00:05:32,457 --> 00:05:35,247 நாங்க உதவுகிறோம். உங்க வண்டி எந்த வருடத்தின் தயாரிப்பு? 104 00:05:35,335 --> 00:05:39,755 அது 1952ம் ஆண்டு செக்கர் தர வண்டி. சில வருடங்களுக்கு முன், புதிதாக வாங்கினேன். 105 00:05:39,840 --> 00:05:41,130 புத்தம் புதுசா, என்ன? 106 00:05:41,216 --> 00:05:42,426 ஆமாம். 107 00:05:42,509 --> 00:05:45,759 அதனால்தான் அது கிளம்பாமல் இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கு. 108 00:05:45,846 --> 00:05:47,506 எல்லா பாகங்களும் வேலை செய்யணும். 109 00:05:47,598 --> 00:05:50,558 சரி, அதை சரி செய்யும் வரை உங்க வண்டியை இங்கே விடலாம். 110 00:05:52,102 --> 00:05:54,612 அதை யாரும் தொட மாட்டார்கள். என்னை நம்புங்க. 111 00:05:58,358 --> 00:05:59,438 எனக்குப் புரியவில்லை. 112 00:05:59,526 --> 00:06:01,776 அந்த கோபால்ட் மாஸ்க்கின் சுவடு கூட நமக்குத் தெரியலை. 113 00:06:01,862 --> 00:06:03,662 நாம் அதைப்பற்றி கேட்ட போது ஃப்ராங்கிற்கு 114 00:06:03,739 --> 00:06:04,989 எதுவும் தெரியவில்லை. 115 00:06:05,073 --> 00:06:07,663 அவர் அதிலிருந்து வராவிட்டால் 'த கோபால்ட் மாஸ்க்' ஏன் காலியாக இருக்கணும்? 116 00:06:08,035 --> 00:06:09,325 நல்ல கேள்வி. 117 00:06:09,411 --> 00:06:10,411 சரி. 118 00:06:10,495 --> 00:06:14,825 தன் வண்டி புத்தம் புதுசு என்று சொல்வதால் ஃப்ராங்க் 1950களை சேர்ந்தவரென தெளிவாகிறது. 119 00:06:14,917 --> 00:06:16,747 என்னை அந்த காலத்து செல்லப் பெயரில் அழைத்தார். 120 00:06:17,169 --> 00:06:18,339 அப்போ அவர் அந்த காலத்திலிருந்து 121 00:06:18,420 --> 00:06:21,220 இந்த காலத்திற்குள் எழுதப்பட்ட புத்தகத்திலிருந்து வந்திருக்கணும். 122 00:06:21,298 --> 00:06:22,838 இதனால் நமக்கு எந்த பயனும் இல்லை. 123 00:06:22,925 --> 00:06:24,675 அவரைப்பற்றி இன்னும் தெரிஞ்சிக்கணும். 124 00:06:24,760 --> 00:06:27,430 விரலில் மோதிரம் அணிந்திருந்தார், எனவே திருமணமாகி இருக்கணும். 125 00:06:27,513 --> 00:06:29,813 இதனாலும் நமக்கு எந்த பயனும் இல்லை. 126 00:06:30,140 --> 00:06:32,770 நானும் டோனாவும் அவரது காரை சரி செய்து தரலாமா என கேட்கணும். 127 00:06:32,851 --> 00:06:34,561 கார்களை சரி செய்ய உனக்கு தெரியுமா? 128 00:06:34,645 --> 00:06:38,225 என் அப்பாவிடம், அவர் தன் பெற்றோரிடமிருந்து பெற்ற ஒரு பழைய கார் இருக்கிறது. 129 00:06:38,315 --> 00:06:41,525 -நல்லா இருக்கும் ஆனா வேலை செய்யாது. -அவர் அதை சரி செய்ய எங்களை உதவ சொல்வார். 130 00:06:41,610 --> 00:06:44,200 அற்புதம். அவரைப் பற்றி அறிய இது ஒரு வாய்ப்பாக இருக்கும். 131 00:06:44,571 --> 00:06:45,911 -நல்ல யோசனை. -தெரியும். 132 00:06:47,574 --> 00:06:48,914 அதாவது, நன்றி. 133 00:06:48,992 --> 00:06:50,372 சரி, நான் என்ன செய்யணும்? 134 00:06:50,452 --> 00:06:53,542 வந்து, பள்ளி முடிந்த பின் என் பிரச்சார பேச்சை படம்பிடிக்க உதவி செய். 135 00:06:54,581 --> 00:06:57,581 ரூபன். இப்பதான் பாந்தியான் பற்றிய உன் கட்டுரையைப் படித்தேன். 136 00:06:58,210 --> 00:06:59,960 அதைப் பற்றி பிறகு பேசுவோம். 137 00:07:00,045 --> 00:07:01,455 நல்லது. ஆவலாக இருக்கிறேன். 138 00:07:02,381 --> 00:07:04,341 "பேசுவோம்" என்பதற்கு என்ன அர்த்தம்? 139 00:07:04,424 --> 00:07:07,014 ஏன் பேசணும்? அவருக்கு அது பிடிச்சிருக்கா? இல்லை பிடிக்கலையா? 140 00:07:07,094 --> 00:07:08,644 பிறகு தெரிந்துக்கொள்வாய். 141 00:07:09,179 --> 00:07:11,059 ரொம்பவே உதவிவிட்டாய், டோனா. நன்றி. 142 00:07:17,813 --> 00:07:19,273 பள்ளி முடிந்ததும் தானே விளையாட போவாய்? 143 00:07:19,356 --> 00:07:21,816 இப்போதுதான் புது சீருடை கிடைத்தது, காத்திருக்க முடியலை. 144 00:07:21,900 --> 00:07:23,110 இவை நன்றாக இருக்கிறதல்லவா? 145 00:07:23,193 --> 00:07:25,903 மாடல் யூஎன், நகர பயணத்திற்காக சாக்லேட் விற்று பணம் திரட்ட 146 00:07:25,988 --> 00:07:29,158 முடியாத போது, கூடைப்பந்து அணி சீருடைகள் வாங்க எப்படி பணம் சேர்த்தது? 147 00:07:29,241 --> 00:07:30,241 எனக்குத் தெரியலை. 148 00:07:30,576 --> 00:07:32,616 கோச் புது சீருடை தேவை என்றார் எங்களுக்கு கிடைத்துவிட்டது. 149 00:07:33,829 --> 00:07:36,959 இதற்கு பள்ளி பணம் கொடுத்ததா? விளையாடுகிறாயா? இது நியாயமில்லை. 150 00:07:37,040 --> 00:07:38,290 நீங்கள் சிறப்பாக கூட விளையாடலை. 151 00:07:38,709 --> 00:07:40,709 சரி, இது கஷ்டமாக இருக்கு. 152 00:07:41,211 --> 00:07:42,591 அப்புறம் தேவையற்றதும்கூட. 153 00:07:53,807 --> 00:07:55,887 சரி, ஃப்ராங்க், நீங்க எங்கே வளர்ந்தீர்கள்? 154 00:07:56,894 --> 00:07:58,064 உண்மையில், எங்கும். 155 00:07:58,145 --> 00:08:00,645 நான் எங்கே வளரவில்லை என்பதுதான் சரியான கேள்வி. 156 00:08:01,148 --> 00:08:03,568 உங்க நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள்? உங்களைப் போன்றவர்களா 157 00:08:03,650 --> 00:08:05,940 அல்லது அசாதாரணமான நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா? 158 00:08:06,028 --> 00:08:08,238 வந்து, ஒரு பேசும் கரடி போல ஏதோ ஒன்று. 159 00:08:08,322 --> 00:08:10,452 டோனா, உன் கற்பனை நிஜமாகவே அற்புதமானது. 160 00:08:14,661 --> 00:08:17,461 டோனா, கர்டிஸ். என்ன செய்றீங்க? 161 00:08:18,248 --> 00:08:19,248 மௌன நடிப்பு. 162 00:08:19,333 --> 00:08:22,043 ஆமாம். நாங்கள் மௌன நடிப்பை பயிற்சி செய்கிறோம். 163 00:08:22,878 --> 00:08:25,378 சிர்க்யூ டூ சொலில் எப்ப ஆள் எடுப்பாங்கன்னு நமக்கு தெரியாது. 164 00:08:26,798 --> 00:08:29,928 அப்போ சரி. உங்கள் மௌன நடிப்போடு... சந்தோஷமாக இருங்கள். 165 00:08:30,010 --> 00:08:33,300 ஒரு வளமான கற்பனை எப்போதுமே நல்லது தான் என்று நினைக்கிறேன். 166 00:08:34,431 --> 00:08:36,061 ரூபன் எங்கே என்று தெரியுமா? 167 00:08:36,517 --> 00:08:38,847 மாடியில் ஷெவானின் பிரச்சார காணொலிக்கு உதவுகிறான். 168 00:08:38,936 --> 00:08:40,146 அல்லது இப்படி சொல்ல வேண்டுமா... 169 00:08:43,941 --> 00:08:45,031 சரி. 170 00:08:54,409 --> 00:08:56,079 நான் இங்கு உட்காரவா, எழுந்து நிற்கவா? 171 00:08:56,495 --> 00:08:57,695 கண்டிப்பாக உட்கார். 172 00:08:58,830 --> 00:09:01,210 சரி. வந்து... 173 00:09:02,125 --> 00:09:03,125 பேசு. 174 00:09:04,795 --> 00:09:08,415 -ஹலோ. என் பெயர் ஷெவான் ரெட்மண்ட்... -ஹே, செல்லங்களே. என்ன செய்றீங்க? 175 00:09:09,967 --> 00:09:13,847 மாணவர் சங்க தேர்தலுக்காக ஷெவானின் பேச்சை பதிவு செய்து கொண்டிருக்கிறோம். 176 00:09:13,929 --> 00:09:15,139 சரி, மன்னிச்சிடுங்க. 177 00:09:15,222 --> 00:09:19,182 நீ குளிர்காயும் இடத்திற்கு அருகில் நிற்கலாமே? அது சிறப்பாக இருக்கும். 178 00:09:20,936 --> 00:09:22,686 உட்கார். என்னை நம்பு. 179 00:09:23,480 --> 00:09:26,860 குளிர்காயும் இடத்தின் மீது சாய்ந்து நிற்பது, ரொம்ப முயற்சிப்பது போல காட்டும். 180 00:09:27,317 --> 00:09:30,107 சரியா? நான் தயார், இப்போ... 181 00:09:31,989 --> 00:09:32,989 பேசு. 182 00:09:33,073 --> 00:09:36,623 என் பெயர் ஷெவான் ரெட்மண்ட், நான் மாணவர் சங்க தலைவர் பதவிக்காக போட்டியிடுகிறேன். 183 00:09:37,160 --> 00:09:40,290 விளையாட்டு அணிகளுக்கான சிறப்பு சலுகைகளை ரத்து செய்வேன் என உறுதி கூறுகிறேன். 184 00:09:40,372 --> 00:09:43,502 மாடல் யூஎன் போன்று உண்மை மதிப்பு வழங்கும் கல்வி குழுக்கள் தங்கள் 185 00:09:43,584 --> 00:09:47,094 கல்வி பயணங்களுக்குத் தேவையான பணத்தை, தாங்களே ஏற்பாடு செய்யும்போது 186 00:09:47,171 --> 00:09:49,211 இவர்களது சீருடைகளுக்கு பள்ளியே பணம் தருவது நியாயமற்றது. 187 00:09:49,298 --> 00:09:53,138 எது அதிக முக்கியம்: விளையாட்டா அல்லது கல்வியா? 188 00:09:54,511 --> 00:09:57,931 நம் இருவருக்குமே இதற்கான பதில் தெரியும், ஆனால் உங்கள் வாக்கு இதற்காக பேசட்டும். 189 00:09:58,015 --> 00:10:00,175 மாணவர் சங்க தலைவராக ஷெவானுக்கு வாக்களியுங்கள். 190 00:10:02,269 --> 00:10:03,269 சரி. 191 00:10:04,271 --> 00:10:05,481 சரி, நான் எப்படி பேசினேன்? 192 00:10:05,898 --> 00:10:08,438 வந்து, உன் கருத்து மிகவும் வலுவானது. 193 00:10:09,276 --> 00:10:10,276 நன்றி. 194 00:10:10,360 --> 00:10:11,360 ஆனால்... 195 00:10:11,904 --> 00:10:13,914 கர்டிஸ் கூடைப்பந்து அணியில் இருக்கிறான். 196 00:10:14,323 --> 00:10:16,333 அவன் வருந்துவான் என உனக்குத் தோணலையா? 197 00:10:16,408 --> 00:10:17,578 இது தனிப்பட்ட விஷயம் இல்லை. 198 00:10:18,827 --> 00:10:21,287 இங்கே பார். நீ கூடைப்பந்து அணிக்கு சிறப்பு அங்கீகாரம் 199 00:10:21,371 --> 00:10:23,501 கிடைப்பது நியாயம் என நினைக்கிறாயா? 200 00:10:23,582 --> 00:10:27,252 ஷெவான், நீங்க இருவருமே என் நண்பர்கள்தான். நான் யார் பக்கமும் சாயமாட்டேன். 201 00:10:29,588 --> 00:10:31,218 சிறப்பாக செய்துள்ளீர்கள், டோனா, கர்டிஸ். 202 00:10:31,298 --> 00:10:32,298 நன்றி. 203 00:10:32,382 --> 00:10:35,722 உங்க வயது குழந்தைகள் ஸ்பானர் கூட பிடிக்கத் தெரியாதவர்களாக இருப்பார்கள். 204 00:10:35,802 --> 00:10:39,932 உங்க அப்பா உங்களுக்கு நன்றாக கற்றுக் கொடுத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன். 205 00:10:40,015 --> 00:10:42,475 உண்மையில், எங்க அம்மாதான் டயரை மாற்ற சொல்லித் தந்தாங்க. 206 00:10:42,893 --> 00:10:44,143 வந்து, இது உண்மையா? 207 00:10:44,228 --> 00:10:46,558 எங்க வேலையை பார்த்தே, எங்க பெற்றோர் தான் கற்றுத்தந்தார்கள் என 208 00:10:46,647 --> 00:10:47,647 நீங்க சொன்னது சிறப்பானது. 209 00:10:47,731 --> 00:10:50,111 கவனித்தால் நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். 210 00:10:50,192 --> 00:10:51,862 நம்மை சுற்றி இருப்பவற்றை 211 00:10:51,944 --> 00:10:55,284 கூர்ந்து கவனித்தால், நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். 212 00:10:56,949 --> 00:10:57,949 ஹேய். 213 00:10:58,617 --> 00:11:00,737 இங்கு என்ன நடக்கிறது? ஏதாவது முன்னேற்றம் உண்டா? 214 00:11:00,827 --> 00:11:03,957 மெதுவாக ஆனால் நிச்சயமாக. இப்போது நேரம் என்ன என்று சொல்வாயா? 215 00:11:04,665 --> 00:11:06,745 மூன்று மணி ஆகிறது. ஏன்? 216 00:11:06,834 --> 00:11:09,464 இப்போது மில்க் க்ஷேக் குடித்தால் நல்லா இருக்கும். 217 00:11:09,545 --> 00:11:11,505 கொஞ்ச தூரத்தில் ஒரு உணவகத்தைப் பார்த்தேன். 218 00:11:11,588 --> 00:11:15,588 நாங்களும் உங்களோடு வருகிறோம். எனக்கும் மில்க் க்ஷேக் வேண்டும். 219 00:11:15,676 --> 00:11:18,296 சரி. நல்லது. நான் தயாராகிவிட்டு வருகிறேன். 220 00:11:21,098 --> 00:11:23,388 அவர் சொல்லும் உணவகம் உனக்கு தெரியுமா? 221 00:11:23,475 --> 00:11:27,095 அது 50களில் இருந்த உணவகம். தன் காலத்திற்கு போக நினைக்கிறார் போல. 222 00:11:27,187 --> 00:11:28,647 அதற்கு எதாவது அர்த்தம் இருக்கலாம். 223 00:11:28,730 --> 00:11:31,570 அவருக்கு இனிப்பு பிடிக்கும் என்பதுதான் இதன் அர்த்தம். 224 00:11:36,697 --> 00:11:39,737 இரண்டு வெனிலா, ஒரு சாக்லேட், மற்றும் இரண்டு ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் கொடுங்கள். 225 00:11:40,993 --> 00:11:43,953 நீங்கள் நால்வர் தானே. எதற்காக ஐந்து மில்க் ஷேக் கேட்கிறீர்கள்? 226 00:11:45,914 --> 00:11:47,334 நல்ல கேள்வி. 227 00:11:47,416 --> 00:11:48,456 ஷெவான்? 228 00:11:49,835 --> 00:11:52,835 அவை மிகவும் சுவையாக இருப்பதால், ஒன்று மட்டும் போதாது. 229 00:11:53,672 --> 00:11:54,882 இதோ கொண்டு வருகிறேன். 230 00:11:58,343 --> 00:12:00,973 சரி, ஃப்ராங்க், உங்களைப் பற்றி சொல்லுங்க. 231 00:12:01,763 --> 00:12:02,893 உனக்கு என்ன தெரியணும்? 232 00:12:02,973 --> 00:12:05,063 எதுவானாலும். உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? 233 00:12:05,517 --> 00:12:09,147 ஆமாம். என் பணியின் போதுதான் என் மனைவியை சந்தித்தேன். அது ஒரு வேடிக்கையான கதை. 234 00:12:09,605 --> 00:12:12,225 -அப்போது தான் எக் க்ரீம் சாப்பிட்டேன். -அது என்ன? 235 00:12:13,192 --> 00:12:16,242 உனக்கு எக் க்ரீம் என்றால் தெரியாதா? நீ எங்கே வாழ்கிறாய்? 236 00:12:16,320 --> 00:12:18,860 அது ஒரு சிக்கலான கேள்வி. நீங்க சொல்லுங்க. 237 00:12:18,947 --> 00:12:21,157 எக் க்ரீம், மில்க் ஷேக் போல தான். 238 00:12:23,076 --> 00:12:25,656 சரி, நான் பயணிகளை ஏற்ற, நகரத்தில் கார் ஓட்டிக் கொண்டு 239 00:12:25,746 --> 00:12:28,036 இருக்கும் போது அவள் என் காரில் ஏறினாள். 240 00:12:28,123 --> 00:12:29,503 அவளுக்காக கதவை திறந்துவிட்டேன், 241 00:12:29,583 --> 00:12:32,173 நான் பொதுவாக யாருக்கும் அப்படி செய்ய மாட்டேன், 242 00:12:32,252 --> 00:12:36,592 ஆனால் அவளிடம் ஏதோ ஒன்று இருந்தது. அவள் மிக அழகாக புன்னகை செய்தாள். 243 00:12:37,466 --> 00:12:38,676 அது ரொம்ப நல்லது. 244 00:12:39,426 --> 00:12:43,136 பிறகு திடீரென்று, எனக்கு மயக்கம் வந்தததால் 245 00:12:43,222 --> 00:12:45,932 அவளது சிகப்பு காலணிகள் மீது, என் எக் க்ரீமை கொட்டிவிட்டேன். 246 00:12:48,018 --> 00:12:50,018 ஹே, எல்லோரும். ஷேக் குடிக்கலாம். 247 00:12:51,897 --> 00:12:54,357 அப்புறம் உங்களுக்காக ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக், ஃப்ராங்க். 248 00:12:54,441 --> 00:12:59,321 இருவரும் மில்க் ஷேக்குகளை கொண்டு வந்தது மகிழ்ச்சி, ஆனால் நான்தான் பணம் தருவேன். 249 00:12:59,404 --> 00:13:02,124 ஏனென்றால், நீங்கள் என் காரை சரி செய்ய உதவினீர்கள். 250 00:13:03,992 --> 00:13:05,332 சில்லறையை வைத்துக்கொள். அது என் பரிசு. 251 00:13:05,827 --> 00:13:08,867 நன்றி, ஃப்ராங்க். நீங்க தாராளமானவர். 252 00:13:12,084 --> 00:13:13,504 என்ன யோசனை, ஷெவான்? 253 00:13:15,879 --> 00:13:17,089 ஒன்றுமில்லை. 254 00:13:18,382 --> 00:13:19,382 நிச்சயமாகவா? 255 00:13:19,466 --> 00:13:21,216 நீ உன் நகங்களை உடைக்கிறாய். 256 00:13:21,301 --> 00:13:24,301 நீ கவலையாக இருக்கும் போது அப்படி செய்வதை முன்பே கவனித்தேன். 257 00:13:24,888 --> 00:13:25,888 அப்படியா? 258 00:13:25,973 --> 00:13:27,523 அதை தான் நாங்கள் "அறிகுறி" என சொல்வோம். 259 00:13:28,183 --> 00:13:30,813 அது, நாம் யோசிப்பதை காட்டிக் கொடுக்கும் நடத்தை. 260 00:13:31,687 --> 00:13:33,517 நீ என்ன யோசிக்கிறாய் என என்னிடம் சொல்வாயா? 261 00:13:36,358 --> 00:13:37,568 வந்து... 262 00:13:38,652 --> 00:13:41,452 ஒரு அறிவு சார்ந்த பயணத்திற்காக நான் சாக்லேட்கள் விற்கையில், 263 00:13:41,530 --> 00:13:44,870 கூடைப்பந்து அணிக்கு சீருடைகள் கிடைத்தது எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. 264 00:13:44,950 --> 00:13:46,490 வந்து, நீ என்னிடம் கோபித்துக்கொள்வது 265 00:13:46,577 --> 00:13:48,617 எனக்கு சிறிது வருத்தமாக இருக்கிறது. 266 00:13:48,704 --> 00:13:51,254 பள்ளிக்கூடம் எங்களுக்கு புது சீருடை தந்தது என் குற்றமில்லை. 267 00:13:51,331 --> 00:13:53,961 சரி, ஆனால் எப்பொழுதுமே அதை அணிவதை தவிர்ப்பது நல்லது. 268 00:13:54,042 --> 00:13:57,052 என்னை எரிச்சலூட்டுகிறாய். அப்புறம், என்றைக்காவது நீ அதை துவைக்க வேண்டாமா? 269 00:13:57,129 --> 00:14:00,509 ஹே, வாருங்கள். நாம் இந்த மில்க் ஷேக்குகளை எடுத்துக்கொண்டு திரும்பி போகலாமா? 270 00:14:00,966 --> 00:14:02,176 என் காரை பழுது பார்க்கணும். 271 00:14:02,968 --> 00:14:04,548 ஹே, ஃப்ராங்க், நான் நினைத்தேன். 272 00:14:04,636 --> 00:14:07,006 அந்த க்ளட்ச் கேபிளை நாம் மறுபடியும் சரி பார்க்கணும். 273 00:14:09,808 --> 00:14:11,098 இதை கீழே போட்டுட்டீங்க. 274 00:14:12,144 --> 00:14:13,274 பரவாயில்லை. அதை விடு. 275 00:14:13,353 --> 00:14:15,813 ஸ்பேட் ஏ. யார் கண்டுபிடித்தாலும் அவர்களுக்கு அதிர்ஷ்டம் தான். 276 00:14:16,940 --> 00:14:21,490 முன்னரே வண்டியில் ஆயிலை நிரப்பியது, ஒரு நல்ல வேலை. 277 00:14:21,862 --> 00:14:23,202 என் அம்மா நன்றாக கற்றுத் தந்தாங்க. 278 00:14:23,280 --> 00:14:24,410 ஆமாம் சரிதான். 279 00:14:25,741 --> 00:14:28,701 புத்தக கடை கிராமப் புத்தகங்கள் 280 00:14:29,244 --> 00:14:32,294 சரி, இது வரைக்கும், 1950களில் இருந்து அவர் கார் ஓட்டுனர், அவருக்கு 281 00:14:32,372 --> 00:14:34,632 மில்க் ஷேக் பிடிக்கும், கூர்ந்து கவனிப்பவர் என தெரிந்தது. 282 00:14:34,708 --> 00:14:37,208 அவர் எதற்காக அந்த மேஜையின் மேல் ஒரு அட்டையை வைத்தார்? 283 00:14:37,294 --> 00:14:38,464 அது அதிர்ஷ்டத்திற்காக என்று சொன்னார். 284 00:14:38,545 --> 00:14:41,545 ஆனால் அவர் அதை வேண்டுமென்றே வைத்தது சற்று விசித்திரமாக இல்லையா? 285 00:14:41,632 --> 00:14:43,222 அவர் வேண்டுமென்றே செய்தது போல இருந்தது. 286 00:14:43,300 --> 00:14:45,640 ஆக, ஃப்ராங்க் 1950களில் இருந்து வந்திருக்கிறார் 287 00:14:46,094 --> 00:14:49,684 த கோபால்ட் மாஸ்க்கின் அட்டை 1950களில் இருந்தது போல தெரிகிறது. 288 00:14:49,765 --> 00:14:51,305 ஃப்ராங்க் அந்த புத்தகத்தில் இருந்து தான் வந்திருக்கணும். 289 00:14:51,391 --> 00:14:53,641 அதனால் தான் ஜீ.டபள்யூ. அதை வண்ணம் தீட்டி வெளியிட்டிருக்கணும். 290 00:14:53,727 --> 00:14:55,897 ஆனால் ஏன் அதை பற்றி நம்மால் எதுவும் கண்டுபிடிக்க முடியலை? 291 00:14:55,979 --> 00:14:57,859 டோனா சொல்வது சரி. நான் இணைதளத்தில் தேடினேன் 292 00:14:57,940 --> 00:14:59,820 ஆனால் த கோபால்ட் மாஸ்க் என்ற புத்தகத்தைப்பற்றி எதுவும் இல்லை. 293 00:14:59,900 --> 00:15:01,610 -ஹேய். -ஹேய். 294 00:15:03,111 --> 00:15:07,121 தாத்தா, நாங்கள் 'த கோபால்ட் மாஸ்க்' என்ற புத்தகத்தை தேடுகிறோம். 295 00:15:08,033 --> 00:15:09,493 அது கேள்விப்பட்டதாக இல்லை. 296 00:15:09,576 --> 00:15:11,786 அது புதுசா? நம் கடைக்காக நான் வாங்குகிறேன். 297 00:15:12,538 --> 00:15:14,618 இல்லை. அது ஒரு பழைய புத்தகம். 298 00:15:14,706 --> 00:15:18,586 சரி, நான் அதைப்பற்றி கேள்விப்படவில்லை என்றால், அது சிறந்ததாக இருக்காது. 299 00:15:22,297 --> 00:15:24,417 பார்த்தாயா? அதைப்பற்றி தாத்தா கூட கேள்விப்படலை. 300 00:15:24,508 --> 00:15:26,088 எல்லா புத்தகங்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறார். 301 00:15:26,176 --> 00:15:27,636 இது நிச்சயம் விசித்திரம் தான். 302 00:15:29,429 --> 00:15:30,509 இதோ. 303 00:15:30,597 --> 00:15:32,677 ஜீ.டபள்யூ. நமக்கு உதவி செய்வது போல தெரிகிறது. 304 00:15:33,642 --> 00:15:36,602 செய்யுள் = காரணம் 305 00:15:36,687 --> 00:15:39,817 உண்மையில், ஜீ.டபள்யூ, அர்த்தமுள்ள துப்பு தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 306 00:15:40,315 --> 00:15:42,315 "செய்யுளும் காரணமும் சமம்." 307 00:15:44,027 --> 00:15:45,897 என்ன செய்யுள்? பாடல் வரிகலா? 308 00:15:46,446 --> 00:15:47,696 அல்லது மழலையர் பாடலா. 309 00:15:48,824 --> 00:15:51,994 ஆனால், ஃப்ராங்கிற்கு மழலை பாடல் பிடிப்பது போல தெரியவில்லை. 310 00:15:52,077 --> 00:15:55,957 இரு! கவிதைகளில் செய்யுள் இருக்கும். ஜீ.டபள்யூ. கவிதையை பற்றி சொல்லியிருந்தால்? 311 00:15:56,582 --> 00:15:59,422 ஃப்ராங்க் 'த கோபால்ட் மாஸ்க்'யில் இருந்து வரவில்லையோ என்னமோ. 312 00:15:59,877 --> 00:16:01,297 அவர் ஒரு கவிதையிலிருந்து வந்திருக்கலாம். 313 00:16:06,091 --> 00:16:08,221 -இங்கே நிறைய கவிதை புத்தகங்கள் இருக்கு. -ஆமாம். 314 00:16:08,302 --> 00:16:10,642 ஒவ்வொரு புத்தகத்திலும் பல கவிதைகள் இருக்கு. எப்படி கண்டுபிடிக்க போகிறோம்? 315 00:16:10,721 --> 00:16:13,181 இது வைக்கோல்போரில் ஒரு ஊசியைத் தேடுவது போல இருக்கும். 316 00:16:14,808 --> 00:16:16,518 ஹேய்! நன்றி, பேய் எழுத்தாளரே. 317 00:16:16,602 --> 00:16:19,232 சரி, இப்போது அது ஒரு சிறிய வைக்கோல்போரில் உள்ள ஊசி. 318 00:16:23,358 --> 00:16:24,688 சவுண்ட்ஸ் ஆஃப் த சிட்டி 319 00:16:26,403 --> 00:16:27,823 நமது ஊசியை கண்டு பிடித்து விட்டேன். 320 00:16:30,574 --> 00:16:34,834 அது க்வாமே அலெக்ஸாண்டர் எழுதிய 'ஓட் டூ ஏ டாக்ஸி டிரைவர்' என்ற கவிதை. 321 00:16:34,912 --> 00:16:36,122 ஹே, அவரைப்பற்றி எனக்குத் தெரியும். 322 00:16:36,580 --> 00:16:38,750 கூடைப்பந்து பற்றி ஒரு முழு கவிதை புத்தகமே எழுதியுள்ளார். 323 00:16:38,832 --> 00:16:40,712 பயிற்சியாளர் டில்மான் எங்களுக்கு கொடுத்தார். 324 00:16:40,792 --> 00:16:44,462 "போருக்கு பிறகு, அங்கு கொண்டாட்டமாக இருந்தது." 325 00:16:44,546 --> 00:16:46,716 அப்போது தான் பிடித்த, சுவையான உணவு கிடைத்தது. 326 00:16:46,798 --> 00:16:50,838 சனிக்கிழமை இரவு அப்பாவின் சிரிப்பு,மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை அம்மாவின் பாடல் போல. 327 00:16:50,928 --> 00:16:53,308 இன்று, உணவு சுமார் தான்." 328 00:16:53,388 --> 00:16:56,228 ஐயோ. நான் இதை எதிர்பார்க்கவில்லை. 329 00:16:56,642 --> 00:16:59,232 கவிதைகள் இவ்வளவு நன்றாக இருக்கும் என யாருக்கு தெரியும்? 330 00:16:59,937 --> 00:17:01,767 -எனக்குத் தெரியும். -ஆம், உனக்குத் தெரியும். 331 00:17:02,481 --> 00:17:04,611 சும்மா சொல்கிறேன். இதில் எந்த சந்தமும் இல்லை. 332 00:17:04,691 --> 00:17:08,111 பல கவிதைகள் சுவாரஸ்யமாகவும், சிறந்த தாளம் கொண்டிருக்கும். இதைப் போல. 333 00:17:08,194 --> 00:17:09,864 ஆனால் இந்த கவிதை எதைப்பற்றியது? 334 00:17:10,446 --> 00:17:14,236 அது, ஒரு டாக்ஸி ஓட்டுனரின் பார்வையில், பயணிகளை பல இடங்களுக்கு 335 00:17:14,326 --> 00:17:18,116 அழைத்துச் செல்லும் போது, அவர் கவனிக்கும் விஷயங்களைப் பற்றியது. 336 00:17:18,204 --> 00:17:20,214 ஆக, கவிதையில் வரும் ஓட்டுனர் தான் ஃப்ராங்க். 337 00:17:20,290 --> 00:17:24,290 பேய் எழுத்தாளர் ஏன் த கோபால்ட் மாஸ்க்-ல் இருந்தும் கதாபாத்திரங்களை வெளியேற்றணும்? 338 00:17:24,377 --> 00:17:27,167 -ஏதாவது காரணம் இருக்கும். -நாம் அதை மறுபடியும் கேட்கணும். 339 00:17:30,384 --> 00:17:34,894 "எனவே, நான் நேரம் எடுத்துக்கொண்டு, மெதுவாக ஓட்டி, அவர்களுக்கு சுற்றி காண்பிப்பேன். 340 00:17:34,972 --> 00:17:39,392 அந்த ஜன்னலில் தெரியும் கிரிம்சன் நிற ஆடைபோல தாளம் இந்த நாளை சிறப்பாக்கட்டும்." 341 00:17:39,476 --> 00:17:40,476 கொஞ்சம் இரு. 342 00:17:41,186 --> 00:17:42,266 அப்படி என்றால்... 343 00:17:46,525 --> 00:17:47,725 சீக்கிரம்! மறைந்து கொள்ளுங்க. 344 00:17:47,818 --> 00:17:48,818 என்ன பிரச்சினை? 345 00:17:48,902 --> 00:17:50,242 திரு. சாண்டர்ஸ் இங்கே வந்திருக்கிறார். 346 00:17:50,320 --> 00:17:52,490 அதனால் என்ன? அவர் ஒரு ஆசிரியர். அவர்களுக்கு புத்தகங்கள் பிடிக்கும். 347 00:17:52,573 --> 00:17:54,743 ஆசிரியர்களுக்கு பிடித்த முதல் விஷயம் அதுதான். 348 00:17:54,825 --> 00:17:58,405 அவர் என் கட்டுரைக்காக இங்கே வந்திருந்தால்? அது அவ்வளவு மோசமாக இல்லைதானே? 349 00:17:58,495 --> 00:18:00,955 கண்டிப்பாக, இன்னும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்திருக்கலாம். 350 00:18:01,039 --> 00:18:03,829 ரூபன். நீ பயந்தால் நம்மால் எதுவும் கண்டுபிடிக்க முடியாது. 351 00:18:07,254 --> 00:18:09,264 -இல்லை. -தெரியும்.அவர்களால் கண்டுபிடிக்க முடியாது. 352 00:18:09,339 --> 00:18:12,339 அவர் உன் கட்டுரையைப்பற்றி பேசலை, ஏன்னா அவங்க கவலைப்படுவது போல தெரியலையே. 353 00:18:13,093 --> 00:18:14,803 எப்போது என் கட்டுரையைப் பற்றி பேசுவார்கள்? 354 00:18:14,887 --> 00:18:16,597 -தெரியும். -ஆக... 355 00:18:16,680 --> 00:18:20,100 சரி, அவர் உன் கட்டுரைக்காக வரவில்லை. அவருக்கு உன் அம்மாவைப் பிடிச்சிருக்கு. 356 00:18:23,061 --> 00:18:24,351 ஹே, அன்பே. என்ன செய்கிறாய்? 357 00:18:24,438 --> 00:18:26,358 கொஞ்சம் பள்ளிக்கூட வேலை இருந்தது. 358 00:18:30,277 --> 00:18:32,647 உனக்கு க்வாமே அலெக்ஸாண்டர் பிடிக்கும்னு எனக்கு தெரியாது. 359 00:18:33,071 --> 00:18:34,741 உங்களுக்கும் பிடிக்கும் என எனக்குத் தெரியாது. 360 00:18:38,493 --> 00:18:39,833 ஆக, நான் வந்து... 361 00:18:41,079 --> 00:18:43,959 நாளை இரவு கர்டிஸிற்கு கூடைப்பந்து பயிற்சி இருப்பதால், 362 00:18:44,041 --> 00:18:46,631 நாம் இருவரும் மட்டும் வெளியே செல்லலாம் என்று நினைத்தேன். 363 00:18:46,710 --> 00:18:49,920 நாம் போலிங் செய்யலாம், படம் பார்க்கலாம் அல்லது சுஷி சாப்பிடலாம். 364 00:18:50,339 --> 00:18:52,089 நிச்சயமாக. நல்ல திட்டம். 365 00:18:52,174 --> 00:18:55,264 ஆனாலும் நாம் பிறகு முடிவு செய்யலாமா? இப்போது கொஞ்சம் வேலையாக இருக்கிறேன். 366 00:18:56,178 --> 00:18:57,638 நிச்சயமாக. சரி. 367 00:18:58,347 --> 00:19:00,927 மூன்று முறை வெற்றியாளர் என்ற உன் பெயரை நீ தக்க வைத்து கொள்ள 368 00:19:01,016 --> 00:19:02,556 நினைப்பாய் என்று நினைத்தேன். 369 00:19:02,643 --> 00:19:04,773 அம்மா, உண்மையாகவே அதைப்பற்றி இப்போது யோசிக்க முடியாது. 370 00:19:04,853 --> 00:19:06,103 சரி, அதைப்பற்றி யோசி. 371 00:19:07,064 --> 00:19:09,484 -எதுவானாலும் எனக்கு சரிதான். -சரி. பிரமாதம். 372 00:19:24,623 --> 00:19:25,923 சிறப்பாக பேசினாய், ஷெவான். 373 00:19:26,291 --> 00:19:28,171 -நன்றி. -கோபித்துக் கொள்ளாதே. 374 00:19:29,837 --> 00:19:33,757 அது சரியான ஒப்பீடு கூட இல்லை. கூடைப்பந்து விளையாட சீருடைகள் கண்டிப்பாக தேவை. 375 00:19:33,841 --> 00:19:36,341 நியூ யார்க் நகருக்கு போகாவிட்டாலும் மாடல் யூஎன் இருக்கும். 376 00:19:36,426 --> 00:19:39,176 மக்கள் விருப்பத்தை தெரிவித்துவிட்டனர். என் கருத்துக்களை ஆமோதிக்கிறார்கள். 377 00:19:40,639 --> 00:19:42,019 எல்லோரும் ஆமோதிக்க மாட்டார்கள். 378 00:19:49,648 --> 00:19:50,978 எனக்குப் புரியலை. 379 00:19:51,316 --> 00:19:53,566 பத்து முறை படித்தேன் ஆனால் ஜீ.டபள்யூ. இந்த கவிதையை 380 00:19:53,652 --> 00:19:55,742 ஏன் தேர்ந்து எடுத்தார் என புரியலை. 381 00:19:55,821 --> 00:19:57,321 உனக்கும் புரியாதது மகிழ்ச்சி. 382 00:19:57,406 --> 00:19:59,866 நாம் ஃப்ராங்கிடம் பேசிக்கொண்டே இருக்கணும். இதை புரிந்து கொள்ள அது தான் ஒரே வழி. 383 00:19:59,950 --> 00:20:03,080 அவர் இங்கு இல்லை என்றால் அவரோடு பேசுவது கஷ்டம் தான். 384 00:20:03,662 --> 00:20:05,872 அவர் மில்க் ஷேக் வாங்க அந்த உணவகத்திற்கு போயிருக்கலாம். 385 00:20:05,956 --> 00:20:07,076 அது சரியாக இருக்காது. 386 00:20:07,165 --> 00:20:10,915 சரி, நாம் அவர் காரில் தேடி, ஏதாவது துப்பு கிடைக்கிறதா என பார்ப்போம். 387 00:20:11,003 --> 00:20:12,463 டோனா, ஃப்ராங்க் வருகிறாரா என பார். 388 00:20:12,546 --> 00:20:14,876 சரி. அவரைப் பார்த்தால், "பைனாப்பிள்" என்று சொல்கிறேன். 389 00:20:14,965 --> 00:20:17,425 அல்லது நேரடியாக, "ஹே, ஃப்ராங்க்" என்றே சொல்லலாம். 390 00:20:17,885 --> 00:20:19,295 என் திட்டம் தான் பிடிச்சிருக்கு. 391 00:20:39,489 --> 00:20:40,739 பாருங்க. 392 00:20:40,824 --> 00:20:42,704 இது 1950களில் இருந்த சுவிங்கம்மா? 393 00:20:42,784 --> 00:20:43,914 கொடுமை. 394 00:20:44,328 --> 00:20:45,868 சிறப்பு. எனக்கு ஒன்று வேண்டும். 395 00:20:48,749 --> 00:20:53,499 ஐயோ. அது சுவிங்கம் இல்லை. இது சிறிய ஒலி பதிவு செய்யும் கருவி. 396 00:21:01,887 --> 00:21:03,597 இந்த மை நிச்சயம் கண்ணுக்குத் தெரியாது. 397 00:21:06,099 --> 00:21:07,809 இந்த சிறு கேமராவைப் பார். 398 00:21:08,769 --> 00:21:10,399 ஒரு உளவாளி ரேடியோ. 399 00:21:12,397 --> 00:21:15,027 ஒரு கார் ஓட்டுனரிடம் எதற்காக இந்த உளவாளி கருவிகள் இருக்கணும்? 400 00:21:16,944 --> 00:21:18,284 பைனாப்பிள்! பைனாப்பிள்! 401 00:21:18,779 --> 00:21:19,989 சீக்கிரம்! அதை திருப்பி வைத்து விடு! 402 00:21:33,502 --> 00:21:34,712 ஹே, குழந்தைகளே. 403 00:21:35,671 --> 00:21:36,881 என்ன செய்கிறீர்கள்? 404 00:21:36,964 --> 00:21:38,094 எதுவுமில்லை. 405 00:22:47,868 --> 00:22:49,868 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்