1 00:00:16,642 --> 00:00:17,892 ஹலோ, ரூபன். 2 00:00:17,976 --> 00:00:21,226 ஹாய், லிடியா. வந்தததற்கு நன்றி. எல்லோரும் பின்புறம் இருக்கிறார்கள். 3 00:00:21,313 --> 00:00:22,313 சரி போகலாம். 4 00:00:23,815 --> 00:00:26,145 இன்று நீ என்னை அழைப்பாய் என்று எனக்கு தோன்றியது. 5 00:00:26,235 --> 00:00:28,235 ஓ, சரி, நீங்கதான் பேய்களுடன் பேசுபவர் ஆயிற்றே. 6 00:00:28,320 --> 00:00:29,950 அது உண்மைதான், சரி. 7 00:00:31,406 --> 00:00:34,276 நீங்க வந்தது மகிழ்ச்சி. உங்களிடம் சில முக்கிய கேள்விகள் கேட்கணும். 8 00:00:37,829 --> 00:00:39,789 அடடே, இங்கே என்ன நடந்தது? 9 00:00:40,749 --> 00:00:42,249 நாங்கள் இங்கே... 10 00:00:43,877 --> 00:00:44,877 மறுசீரமைப்பு செய்கிறோம். 11 00:00:46,463 --> 00:00:48,763 நீங்க என்னிடம் சில கேள்விகள் கேட்கணுமா? 12 00:00:48,841 --> 00:00:52,801 ஆமாம். புத்தகக்கடையில் பேய் இருப்பது பற்றி ரூபனின் பாட்டியிடம் பேசிய போது, 13 00:00:52,886 --> 00:00:55,926 -அந்த பேய் யார் என சொன்னார்களா? -துரதிர்ஷ்டவசமாக இல்லை. 14 00:00:56,014 --> 00:00:58,104 சரி, அதை தெரிந்து கொள்ள எங்களுக்கு உதவுகிறீர்களா? 15 00:00:58,183 --> 00:00:59,393 அதோடு பேச முடியுமா? 16 00:00:59,977 --> 00:01:01,227 என்னால் கேட்க தான் முடியும். 17 00:01:02,437 --> 00:01:06,357 ஒரு ஆன்மா என்னோடு பேச விருப்பப்பட்டால், அதோடு உரையாட நான் முயற்சிப்பேன். 18 00:01:14,741 --> 00:01:18,371 எங்க பேய், எழுத்து மூலமாக பேசும் என்பதால் நீங்க கண்களை திறந்து வைக்கணும். 19 00:01:21,039 --> 00:01:22,039 சரி. 20 00:01:25,836 --> 00:01:27,666 சரி, அது இங்கே இருப்பதை என்னால் உணர முடிகிறது. 21 00:01:29,631 --> 00:01:33,221 ஆனால் என்னோடு பேச அது விரும்பவில்லை. உங்க மூலமாக தான் பேச விரும்புகிறது. 22 00:01:34,303 --> 00:01:35,303 நாம் என்ன செய்வது? 23 00:01:35,387 --> 00:01:38,637 என் பாட்டி தான் பேயாக வருகிறார்கள் என்று நினைத்தது நன்றாக இருந்தது ஆனால்... 24 00:01:39,308 --> 00:01:41,058 இந்த பேய் யார் என்றே எங்களுக்கு தெரியலை. 25 00:01:41,143 --> 00:01:43,403 சரி, துரதிர்ஷ்டவசமாக, என்னால் உங்களுக்கு உதவ முடியலை. 26 00:01:44,730 --> 00:01:50,280 உங்க பேய்க்கு முடிக்கப்படாத வேலை இருந்தால் அது முடியும் வரை அமைதியாகாது. 27 00:02:01,872 --> 00:02:07,592 பேய் எழுத்தாளர் 28 00:02:07,669 --> 00:02:09,959 10 புத்தகங்கள் வாங்கினால் ஒன்று இலவசம்! 29 00:02:10,047 --> 00:02:12,087 இன்னும் ஒன்பது புத்தகங்கள் வாங்கினால், அடுத்தது இலவசம். 30 00:02:12,174 --> 00:02:15,054 ஓ, கண்டிப்பா வாங்குகிறேன். உங்க புத்தகக்கடை எனக்கு ரொம்ப பிடிக்கும். 31 00:02:16,220 --> 00:02:17,850 நீங்கள் எட்டு புத்தகங்கள் வாங்கினா போதும். 32 00:02:19,598 --> 00:02:21,848 -இந்த கதைகளை படித்து மகிழுங்கள். -நிச்சயமாக. 33 00:02:23,519 --> 00:02:25,269 நன்றி. இந்த நாள் நல்ல நாளாக இருக்கட்டும். 34 00:02:25,646 --> 00:02:27,646 கிராமப் புத்தகங்கள் 35 00:02:40,536 --> 00:02:43,616 கிராமப் புத்தகங்கள் 36 00:02:49,503 --> 00:02:50,593 உள்ளே வாருங்கள். 37 00:02:50,671 --> 00:02:51,671 ஹேய். 38 00:02:53,298 --> 00:02:54,838 நீ உன் அறையை சுத்தப்படுத்தணும். 39 00:02:55,092 --> 00:02:57,592 இதை சொல்வதற்காகவா இங்கே வந்தீர்கள்? 40 00:02:58,095 --> 00:03:00,255 நானும் உன் தாத்தாவும் இந்த மறுசீரமைப்பு வேலையில், 41 00:03:00,347 --> 00:03:03,677 கவனமாக இருப்பதால் நீ கடையில் எங்களுக்கு உதவியாக இருந்தால், 42 00:03:03,767 --> 00:03:07,597 நன்றாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். 43 00:03:07,688 --> 00:03:08,688 நான் உதவியாகத்தான் இருக்கிறேன். 44 00:03:09,398 --> 00:03:11,858 வந்து, என் சிறு வயதில் நான் செய்ததது போல செய்ய வேண்டும். 45 00:03:11,942 --> 00:03:13,782 நீ பண விஷயத்தை பார்த்து கொள்ள கற்றுக்கலாம். 46 00:03:13,861 --> 00:03:15,951 அது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். 47 00:03:16,029 --> 00:03:18,279 ஆனால் உங்க சிறு வயதில் அது உங்களுக்கு பிடிக்காது என சொன்னீர்கள். 48 00:03:18,657 --> 00:03:22,577 ஆமாம், இப்போது பெரியவளாக இருப்பதால், என்னால் சிறப்பாக செய்ய முடிகிறது. 49 00:03:22,995 --> 00:03:24,955 உண்மையிலேயே, அது எனக்கு வேலை பண்பாடு, 50 00:03:25,038 --> 00:03:27,328 நேர கட்டுப்பாடு, கணக்கு பார்ப்பது, மக்களிடம் எப்படி பேசுவது என கற்பித்தது... 51 00:03:27,416 --> 00:03:29,706 அம்மா, நிறுத்துங்கள், நான் அதை செய்கிறேன். 52 00:03:30,919 --> 00:03:33,049 தாத்தாவோடு நேரம் செலவழிப்பது நன்றாக இருக்கும். 53 00:03:33,547 --> 00:03:39,087 மேலும், எனக்கு தரும் பணத்தை விட அதிகமாக தந்து வேலைக்கு ஆள் வைக்க வசதி இல்லை. 54 00:03:40,220 --> 00:03:41,220 செல்லமே... 55 00:03:42,556 --> 00:03:44,596 உனக்கு பணம் தர கூட எனக்கு வசதி இல்லை. 56 00:03:53,817 --> 00:03:56,067 ஹே, ஷெவான் நீ வீட்டில்தான் இருக்கிறாயா? 57 00:03:56,445 --> 00:03:57,445 ஹாய், அம்மா. 58 00:03:57,863 --> 00:04:00,533 எல்லாம் சரியாக உள்ளதா, அன்பே? நாங்க குறுஞ்செய்தி அனுப்பினோம். 59 00:04:00,824 --> 00:04:03,244 மன்னிச்சிடுங்க, என் வரலாற்று பாடம் எழுதிக்கொண்டிருந்தேன். 60 00:04:03,702 --> 00:04:06,662 இன்றிரவு நாம் எல்லோரும் வெளியே சென்று சுஷி சாப்பிடலாம் என நினைத்தேன். 61 00:04:07,581 --> 00:04:08,791 நாம் பார்சல் வாங்கி வரலாமா? 62 00:04:09,750 --> 00:04:13,670 மன்னிச்சிடுங்க, இந்த பாடம் படிக்கணும், அப்புறம் பட்டிமன்றத்திற்கு தயாராகணும். 63 00:04:14,129 --> 00:04:16,709 கூடவே, என் பியானோ கச்சேரிக்காக ஷூபேர்ட் பயிற்சி செய்யணும். 64 00:04:17,591 --> 00:04:20,221 பள்ளி முதல்வர் ஃபாங்கிற்கு, மாடல் யூஎன் பற்றி மின்னஞ்சல் அனுப்பணும். 65 00:04:20,844 --> 00:04:21,894 அவ்வளவு தானா? 66 00:04:21,970 --> 00:04:24,140 நீ ஏதாவது ஒரு விஷயத்தை நிறுத்தலாமே. 67 00:04:24,806 --> 00:04:26,976 -இல்லை, நான் பார்த்துக் கொள்கிறேன். -பார், செல்லமே, 68 00:04:27,059 --> 00:04:29,059 நீ இவ்வளவு விடாமுயற்சியுடன் இருப்பது எங்களுக்கு பெருமை தான், 69 00:04:29,144 --> 00:04:32,364 ஆனால் நீ ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் செய்ய நினைக்கிறாய். நீ ஒரு நபர் தான். 70 00:04:32,439 --> 00:04:35,189 என்னால் முடியும். என்னை நம்புங்கள். 71 00:04:37,319 --> 00:04:39,109 சரி, நீ செய்வாய் என்று நம்புகிறோம். 72 00:04:40,322 --> 00:04:43,662 இரவு உணவிற்கு வேறு ஏதாவது வாங்கலாமா? பார்சல் வாங்கி வரும் சுஷி நல்லா இருக்காது. 73 00:04:51,416 --> 00:04:54,376 ஜன்னலை மூடு, கர்டிஸ். ரொம்ப குளிராக இருக்கு. 74 00:04:56,588 --> 00:04:58,008 இல்லை, ரொம்ப சூடாக இருக்கு! 75 00:04:58,090 --> 00:04:59,340 அல்லது உன் கேம் சத்தத்தையாவது குறை. 76 00:04:59,424 --> 00:05:01,554 நீ குறட்டை விடுவதை மறைக்க தான் இவ்வளவு சத்தமாக வைத்திருக்கிறேன். 77 00:05:01,635 --> 00:05:02,635 நான் குறட்டை விடமாட்டேன்! 78 00:05:02,719 --> 00:05:04,639 அசந்து தூங்கும் போது உனக்கு எப்படி அது தெரியும்? 79 00:05:04,721 --> 00:05:06,811 அவ்வளவு தான். நான் ஜன்னலை மூடுகிறேன். 80 00:05:06,890 --> 00:05:07,980 வேண்டாம், மூடாதே... 81 00:05:08,058 --> 00:05:09,058 ஹேய்! 82 00:05:10,018 --> 00:05:11,228 இங்கே என்ன சத்தம்? 83 00:05:11,311 --> 00:05:14,191 டோனா குறட்டை விடுகிறாள், ஜன்னலை மூடினால் சூடாக இருக்கு! 84 00:05:14,273 --> 00:05:17,653 கேளுங்க, உங்க அம்மா வீட்டிலிருப்பது போல இங்கே உங்களுக்கு தனி அறைகள் இல்லை தான், 85 00:05:17,734 --> 00:05:19,404 ஆனால் எப்போதும் நீங்க இப்படியே நடந்துக் கொள்ள கூடாது. 86 00:05:19,486 --> 00:05:21,356 நீங்களே முடிவு செய்து, உங்களில் ஒருவர் சோஃபாவில் படுங்கள். 87 00:05:21,446 --> 00:05:23,816 என்னால் சோஃபாவில் தூங்க முடியாது. நாளை கூடைப் பந்து விளையாடணும். 88 00:05:23,907 --> 00:05:27,237 வெளி வகுப்புகளுக்கு சென்று, வீட்டுப் பாடத்திற்கு அதிக நேரம் செலவிடுகிறேன். 89 00:05:27,327 --> 00:05:30,117 உன் அண்ணன் சொல்வது சரி. நீ சோஃபாவில் படுத்துக் கொள்கிறாயா? 90 00:05:32,499 --> 00:05:33,669 சரி. 91 00:05:34,168 --> 00:05:35,538 நான் இப்போது டிவி பார்ப்பேன். 92 00:05:35,878 --> 00:05:38,298 முடியாது. இப்போது நீ தூங்கணும். 93 00:05:38,964 --> 00:05:40,134 இது ரொம்பவும் மோசம்! 94 00:05:40,215 --> 00:05:41,215 கேம் விளையாடாதே. 95 00:05:49,933 --> 00:05:52,773 -பேய் எழுத்தாளரிடமிருந்து தகவல் வந்ததா? -இல்லை, எந்த சுவடும் இல்லை. 96 00:05:52,853 --> 00:05:54,983 அது ஆணா, பெண்ணா என்று தெரியவில்லை. 97 00:05:55,397 --> 00:05:56,687 அந்த அந்நிய பேய். 98 00:05:56,773 --> 00:05:59,743 இன்னும் ஏன் இதை சரி செய்யலை? ஒரு மாதமாக ஒழுகிக் கொண்டிருக்கு. 99 00:05:59,818 --> 00:06:01,818 அந்த வாளி தடுக்கி யாராவது விழப்போகிறார்கள். 100 00:06:01,904 --> 00:06:04,454 உனக்கு இது பிடிக்கவில்லை என்றால், நீ மாணவர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடு. 101 00:06:06,283 --> 00:06:09,913 எனக்கும் ஆசைதான். ஆனால், எனக்கு நிறைய வேலை இருக்கு. 102 00:06:09,995 --> 00:06:11,955 ஹாம்மெட்டுக்கு போட்டியிடுங்க மாணவ அரசு 103 00:06:12,497 --> 00:06:14,367 நான் ஏற்கனவே நிறைய வேலைகள் செய்வதாக என் பெற்றோர்கள் நினைக்கிறார்கள். 104 00:06:14,458 --> 00:06:15,998 மேலும், அவர்களுக்கு... 105 00:06:20,881 --> 00:06:22,091 பேய் எழுத்தாளர் வந்துவிட்டார். 106 00:06:22,174 --> 00:06:23,184 உண்மையாகவா? 107 00:06:25,844 --> 00:06:28,514 ஓ. இது எந்த புத்தகத்திலிருந்து வந்ததோ. 108 00:06:32,601 --> 00:06:34,851 ஹே, சின்ன டிராகனே. உன் பெயர் என்ன? 109 00:06:37,689 --> 00:06:39,269 அதை தனியாக விட வேண்டும் போல. 110 00:06:40,609 --> 00:06:42,859 மன்னிச்சிடு. உன்னை பயமுறுத்த நினைக்கலை. 111 00:06:44,488 --> 00:06:45,818 நான் உன்னை கொஞ்சலாமா? 112 00:06:53,497 --> 00:06:54,667 இது கிச்சுகிச்சு மூட்டுகிறது. 113 00:06:59,044 --> 00:07:00,094 கொடுமை. 114 00:07:00,170 --> 00:07:01,760 என்ன? இது அழகாக இருக்கு. 115 00:07:02,464 --> 00:07:03,514 அது ஒரு டிராகன். 116 00:07:04,550 --> 00:07:06,550 நிச்சயம் அவள் என் முகத்தை நக்க கூடாது. 117 00:07:11,265 --> 00:07:13,425 என்ன பிரச்சினை என தெரியலை, தொடர்ந்து தவறுகிறது. 118 00:07:13,517 --> 00:07:15,767 உனக்கு பயிற்சி பத்தலை. மீண்டும் முயற்சி செய். 119 00:07:19,106 --> 00:07:20,646 பரவாயில்லை. நீ நன்றாக செய்வாய். 120 00:07:20,732 --> 00:07:21,902 கவலைப்படாதே. 121 00:07:24,069 --> 00:07:26,149 என் அப்பா வீட்டில் துணி துவைக்கும் போது 122 00:07:26,238 --> 00:07:27,698 என் அதிர்ஷ்ட ஸ்லீவை தொலைத்து விட்டதால் தான். 123 00:07:27,781 --> 00:07:28,821 முயற்சி செய். 124 00:07:32,077 --> 00:07:33,997 இது மோசம். பழைய ஸ்லீவ் தான் வேணும். 125 00:07:34,079 --> 00:07:36,619 நீ தேவை இல்லாமல் கவலைப்படுகிறாய். அது ஸ்லீவினால் இல்லை. 126 00:07:37,958 --> 00:07:40,538 மூன்று சீசனின் எல்லா கேமிலும் அதை அணிந்திருந்தேன். 127 00:07:41,044 --> 00:07:42,554 ஆமாம், அது நல்லாவே இல்லை. 128 00:07:44,590 --> 00:07:47,010 ஹே, ஜேக். இனி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். 129 00:07:48,510 --> 00:07:49,680 கர்டிஸ், முழங்கையை கிட்ட கொண்டு போ. 130 00:07:50,179 --> 00:07:51,349 அவள் சொல்வது சரி. 131 00:07:51,430 --> 00:07:52,930 நான் சரியான நிலையில் நிற்கவே இல்லை. 132 00:07:53,348 --> 00:07:54,638 அவனை ரொம்ப நேரம் இருக்கவிடாதே. 133 00:07:54,725 --> 00:07:57,225 நாளை பார்க்கலாம். நீ திரும்ப வந்தது சந்தோஷம். 134 00:08:04,276 --> 00:08:05,526 உங்கள் முகங்களை பார்த்தால், 135 00:08:05,611 --> 00:08:08,161 பேய் எழுத்தாளர் மற்றொரு கதாபாத்திரத்தை வெளியே விட்டிருக்கிறார் என புரிகிறது. 136 00:08:09,156 --> 00:08:11,156 இது சின்ன புத்தகத்திலிருந்து வந்திருக்கட்டும். 137 00:08:16,622 --> 00:08:18,622 புத்தகக்கடை கிராமப் புத்தகங்கள் 138 00:08:23,128 --> 00:08:25,298 ஹே, அப்பா, இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 139 00:08:26,757 --> 00:08:27,757 அது என்ன? 140 00:08:28,091 --> 00:08:30,511 பின்பக்க அறையை சீரமைத்த பிறகு வைக்க ஒரு காபி மெஷின். 141 00:08:30,594 --> 00:08:33,224 இந்த தெருவின் எதிர்புறத்தில் ஒரு டோனட் கடையில் காபி விற்கிறார்கள். 142 00:08:33,304 --> 00:08:36,854 ஆமாம், அந்த பணமெல்லாம் நம் புத்தகக்கடைக்கு பதிலாக டோனட் கடைக்கு செல்கிறது. 143 00:08:36,933 --> 00:08:38,273 நம்மிடம் இதற்கு பணமில்லை. 144 00:08:38,352 --> 00:08:40,232 ஒரு ஏற்பாடு செய்துள்ளேன். வந்து பாருங்கள். 145 00:08:42,272 --> 00:08:44,862 நமது புது இணையதளத்தை... 146 00:08:45,817 --> 00:08:48,357 நீங்கள் பார்க்க வேண்டும். 147 00:08:48,987 --> 00:08:50,407 நமக்கு எதற்கு இணையதளம்? 148 00:08:50,489 --> 00:08:52,619 ஏனென்றால் யாரும் தொலைபேசி புத்தகத்தை உபயோகிப்பதில்லை. 149 00:08:52,699 --> 00:08:55,869 நாம் செய்த செல்லப்பிராணி தத்து எடுக்கும் நிகழ்ச்சி போன்றவற்றை இதில் பதிவிடலாம், 150 00:08:56,203 --> 00:08:58,833 இது நிஜமாகவே நம் கடைக்கு மக்களை வர வழைக்கும். 151 00:09:00,582 --> 00:09:03,462 இந்த இடத்தை நீங்கள் மாறுபட்ட கோணத்தில் பார்க்க ஆரம்பிக்கணும். 152 00:09:15,347 --> 00:09:16,597 நீ ஒரு திறமையான ஓவியர். 153 00:09:19,059 --> 00:09:20,059 நன்றி. 154 00:09:21,103 --> 00:09:22,443 உங்களுக்கு புத்தகத்தை எடுத்துத் தரவா? 155 00:09:22,521 --> 00:09:25,571 இல்லை, சும்மா பார்க்கிறேன். இந்த இடம் நன்றாக இருக்கிறது. 156 00:09:25,649 --> 00:09:26,729 இது என் தாத்தாவினுடையது. 157 00:09:27,651 --> 00:09:28,861 எனக்கு உங்க காலணிகள் பிடிச்சிருக்கு. 158 00:09:28,944 --> 00:09:30,614 நன்றி. அவை ஃபெய் ஷென். 159 00:09:30,696 --> 00:09:32,156 -அது என்ன? -அது ஒரு பிரான்ட். 160 00:09:32,239 --> 00:09:33,619 "பறக்கும் கடவுள்" என அர்த்தம். 161 00:09:34,283 --> 00:09:35,283 சரி. 162 00:09:35,868 --> 00:09:37,198 பிறகு சந்திக்கலாம். 163 00:09:42,791 --> 00:09:44,381 ரூபன், உன் பாட்டி... 164 00:09:44,459 --> 00:09:47,669 அதாவது, அந்நிய பேய், மற்றுமொரு கதாபாத்திரத்தை வெளியிட்டுள்ளார். 165 00:09:51,466 --> 00:09:53,086 சரி, நண்பர்களே. நமக்கே தெரியும். 166 00:09:53,177 --> 00:09:54,887 இவள் எந்த புத்தகத்தில் இருந்து வந்திருக்கிறாள் என கண்டுபிடிப்போம். 167 00:09:54,970 --> 00:09:57,310 'டிராகன்ஸ் லவ் டாகோஸ்' புத்தகம்? அது நினைவு இருக்கா? 168 00:09:57,389 --> 00:10:00,099 பேய் எழுத்தாளரின் முடியுறாத பணி டாகோ சம்பந்தப்பட்டதாக இருக்காது. 169 00:10:00,184 --> 00:10:01,194 யாருக்குத் தெரியும். 170 00:10:04,271 --> 00:10:06,111 ரூபன், ஏதும் பிரச்சினை இல்லையே? 171 00:10:07,441 --> 00:10:08,861 இது அபத்தமாக இருக்கலாம், 172 00:10:08,942 --> 00:10:12,702 ஆனால் நான் நேற்று இரவு வரைந்த டிராகன் போலவே அந்த டிராகனும் இருக்கிறது. 173 00:10:15,782 --> 00:10:16,872 எனக்குத் தெரியும். 174 00:10:16,950 --> 00:10:21,250 நேற்றிரவு, இதில் தான் டிராகனை வரைந்தேன், இப்பொழுது அவள் இங்கே இருக்கிறாள். 175 00:10:24,708 --> 00:10:26,958 பேய் எழுத்தாளர் தான் அவளை ஓவியத்தில் இருந்து விடுவித்திருக்கணும். 176 00:10:27,044 --> 00:10:29,804 ஆனால் இதுவரை, புத்தக கதாபாத்திரத்தை தானே விடுவித்துள்ளார். 177 00:10:29,880 --> 00:10:32,550 இதுவரை, ரூபனின் பாட்டிதான் பேய் எழுத்தாளர் என நினைத்தோம். 178 00:10:32,633 --> 00:10:34,013 இருக்கும் சூழலில், எதுவும் நடக்கலாம். 179 00:10:36,053 --> 00:10:37,473 நீ வேறு ஏதாவது வரைந்தாயா? 180 00:10:37,554 --> 00:10:38,564 ஆமாம். 181 00:10:42,184 --> 00:10:43,694 -அட, கடவுளே. -அது என்ன? 182 00:10:45,854 --> 00:10:50,114 ஷெவான், கவனி, நான் எனது கலை வகுப்பிற்காக தினமும் ஒரு படம் வரைய வேண்டும். 183 00:10:50,192 --> 00:10:52,952 ஒரு பதிவேடு போல. யாருக்கும் காட்டுவதற்கு அல்ல, எனக்காக வரைவது. 184 00:10:53,028 --> 00:10:54,698 இதை ஏன் என்னிடம் சொல்கிறாய்? 185 00:10:55,072 --> 00:10:58,412 வந்து, அன்றைக்கு நான் "சே-ட்-டை" என்ற வார்த்தையை சொன்ன பொழுதெல்லாம் 186 00:10:58,492 --> 00:11:00,912 நீ என்னை திருத்திக் கொண்டே இருந்தது ஞாபகம் இருக்கு தானே. 187 00:11:00,994 --> 00:11:02,664 அது "சேட்டை." 188 00:11:03,330 --> 00:11:04,540 எனக்கு எல்லாம் தெரியும் 189 00:11:07,584 --> 00:11:09,504 அவள் ஷெவானின் நகலி. 190 00:11:10,170 --> 00:11:11,260 ஒரே மாதிரி இருக்கின்றனர். 191 00:11:11,630 --> 00:11:13,920 அப்படி இல்லை. நான் அனைத்தும் அறிந்தவள். 192 00:11:14,258 --> 00:11:16,008 ஏனென்றால் ரூபன் உன்னைப் பற்றி அப்படி தான் நினைக்கிறான். 193 00:11:16,093 --> 00:11:17,853 அதனால் தான், இந்த "எனக்கு எல்லாம் தெரியும்" சட்டை. 194 00:11:21,181 --> 00:11:22,641 நான் அனைத்தும் அறிந்தவள் என நினைக்கிறாயா? 195 00:11:23,392 --> 00:11:25,852 இல்லை, மன்னிச்சிடு. என் மன அழுத்தத்தை வெளிப்படுத்தினேன். 196 00:11:25,936 --> 00:11:28,646 நாம் எது வரைந்தாலும், பேய் எழுத்தாளர் அதற்கு உயிர் கொடுப்பார் என நினைக்கிறாயா? 197 00:11:28,730 --> 00:11:30,230 கண்டுப்பிடிக்க ஒரு வழிதான் உள்ளது. 198 00:11:31,233 --> 00:11:32,653 ஒரு நட்சத்திரம் போல ஏதாவது வரை. 199 00:11:32,734 --> 00:11:34,654 அது மிகவும் புண்படுத்துகிறது. உனக்கு தெரிந்திருக்கணும். 200 00:11:34,736 --> 00:11:36,106 அவள் அதைப் பார்ப்பாள் என நினைக்கவில்லை. 201 00:11:36,196 --> 00:11:37,316 என்னவோ. எனக்கு பரவாயில்லை. 202 00:11:37,781 --> 00:11:40,491 இதோ. முடித்துவிட்டேன், ஆனால் அது இன்னும் இங்கு தான் உள்ளது. 203 00:11:40,576 --> 00:11:41,576 கொடு, நான் முயற்சிக்கிறேன். 204 00:11:41,660 --> 00:11:44,710 நீ "சேட்டை" எனும் வார்த்தையை தப்பாக தான் உச்சரிக்கப் போகிறாயா? 205 00:11:45,289 --> 00:11:46,289 இருக்கலாம். 206 00:11:49,918 --> 00:11:53,338 எதுவும் நடக்கவில்லை. ஒரு வேளை ரூபனுடைய ஓவியங்கள் மட்டும் உயிர் பெறலாம். 207 00:11:55,966 --> 00:11:56,966 ரூபன், 208 00:11:58,093 --> 00:11:59,683 நீ எதாவது வரைய வேண்டும். 209 00:12:02,264 --> 00:12:05,484 நண்பா, நீ நன்றாக வரைகிறாய். எனக்கு எச்சில் ஊறுகிறது. 210 00:12:05,809 --> 00:12:06,809 நன்றி. 211 00:12:08,145 --> 00:12:09,345 வேலை செய்யுமென நினைக்கிறாயா? 212 00:12:11,982 --> 00:12:13,072 வேலை செய்தது! 213 00:12:14,026 --> 00:12:16,396 சமையலறையில் சான்விட்ஜை வைத்துள்ளாயா, ரூபன்? 214 00:12:16,486 --> 00:12:17,856 ஆமாம், மன்னிச்சிடுங்க. 215 00:12:19,072 --> 00:12:21,952 பொறு. அவங்களால் சான்விட்சை பார்க்க முடிகிறது என்றால்... 216 00:12:22,034 --> 00:12:23,414 எல்லாவற்றையும் பார்க்க முடியும். 217 00:12:24,745 --> 00:12:27,035 சீக்கிரம், அந்த டிராகனை அலமாரிக்குள் மறையுங்கள். 218 00:12:31,543 --> 00:12:33,593 ஹலோ, இதோ உன் சான்விட்ச், ரூபன். 219 00:12:33,670 --> 00:12:35,340 அது என்னுடையது. நன்றி. 220 00:12:36,215 --> 00:12:37,625 ஷெவான் வந்ததை நீங்க பார்த்தீர்களா? 221 00:12:38,842 --> 00:12:40,222 ஆமாம், பார்த்தேன். 222 00:12:40,302 --> 00:12:42,642 -நல்ல சட்டை. -நன்றி. ரூபன் செய்தான். 223 00:12:43,222 --> 00:12:45,932 கீழே சென்று கணக்கு வேலை பார்த்துக் கொண்டே 224 00:12:46,016 --> 00:12:47,676 உன் நண்பர்களுடன் அரட்டை அடிக்கிறாயா? 225 00:12:48,185 --> 00:12:50,935 சரி. மன்னியுங்க, என் கவனம் சிதறிவிட்டது. இப்பவே கீழே வருகிறோம். 226 00:12:51,021 --> 00:12:52,021 நன்றி. 227 00:12:55,067 --> 00:12:56,777 இது அருமையாக உள்ளது. 228 00:12:56,860 --> 00:12:59,700 பேய் எழுத்தாளர் ரூபனின் ஓவியங்களை உயிர்ப்பிக்கிறார். 229 00:12:59,780 --> 00:13:02,490 அம்மாவால் எப்படி ஷெவானின் நகலையும் சான்விட்சையும் பார்க்க முடிந்தது? 230 00:13:02,574 --> 00:13:05,084 அவை புத்தகங்களில் அல்லாமல் ஓவியங்களில் இருந்து வருவதால் இருக்கலாம். 231 00:13:05,160 --> 00:13:08,370 பேய் எழுத்தாளர் நாம் எதையோ வரையணும் என எதிர்ப்பார்க்கிறார். ஆனால் என்ன? 232 00:13:15,462 --> 00:13:17,212 நாம் கண்டுப்பிடிக்கப் போவதாக நினைக்கிறேன். 233 00:13:19,341 --> 00:13:21,391 ஜீ.டபள்யூ.விற்கு ஆங்கிலம் அலுத்துவிட்டது போல. 234 00:13:21,468 --> 00:13:24,138 நான்தான் சொன்னேனே. இப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். 235 00:13:24,847 --> 00:13:27,597 ஷெவான், உன் ஃபோனை எடு. அதில் பொழிபெயர்ப்பு செயலி உள்ளது. 236 00:13:28,517 --> 00:13:30,017 ஆமாம். புத்திசாலி. 237 00:13:30,102 --> 00:13:31,102 ஓ. நான்தான் நீ. 238 00:13:38,110 --> 00:13:40,070 அது சீன மொழி. "தங்க டிராகன்". 239 00:13:41,071 --> 00:13:44,241 பேய் எழுத்தாளருக்கு தேவையானதை நாம் ஏற்கனவே வரைந்து விட்டோம். 240 00:13:44,324 --> 00:13:47,794 இது தங்க நிறத்தில் உள்ள டிராகன். 241 00:13:49,204 --> 00:13:50,794 அதை வைத்து நாம் என்ன செய்ய வேண்டும்? 242 00:13:54,835 --> 00:13:55,915 நான் கண்டுப்பிடிக்கிறேன். 243 00:13:57,671 --> 00:13:58,671 அப்போ அவள்... 244 00:13:59,339 --> 00:14:02,219 அவள் என்னோடு வரலாம். நான் அவளை உபயோகப்படுத்திக் கொள்வேன். 245 00:14:02,634 --> 00:14:04,894 எனது பெற்றோர் சொன்னது போல, நான் ஒரு நபர் தான். 246 00:14:13,604 --> 00:14:16,364 அருமை. நீ அந்த ஏ பிரிவை சற்று வேகமாக செய்கிறாய். 247 00:14:16,440 --> 00:14:17,820 சரி. நன்றி. 248 00:14:18,483 --> 00:14:21,153 அடுத்த முறை ஒழுங்காக செய்கிறேன். வரலாற்று பாடம் எப்படி இருக்கு? 249 00:14:21,236 --> 00:14:22,486 நீ கேட்க வேண்டுமா? 250 00:14:22,905 --> 00:14:23,855 ஷெவான்? 251 00:14:23,947 --> 00:14:25,027 சீக்கிரம், மறைந்து கொள். 252 00:14:25,115 --> 00:14:27,865 இல்லை. நீ மறைந்து கொள். நான் பார்த்துக் கொள்கிறேன். 253 00:14:30,120 --> 00:14:31,250 உள்ளே வாருங்கள். 254 00:14:34,583 --> 00:14:36,593 -பியானோ வாசிப்பதாக நினைத்தேன். -வாசித்தேன். 255 00:14:36,668 --> 00:14:38,418 இப்பொழுது எனது வரலாறு பாடத்தை எழுதுகிறேன். 256 00:14:38,504 --> 00:14:41,224 வந்து, அது கேட்க நன்றாக இருந்தது. அப்படியே செய். 257 00:14:41,298 --> 00:14:42,798 நன்றி. உங்களை நேசிக்கிறேன், அப்பா. 258 00:14:49,598 --> 00:14:51,978 வந்து, இது அருமையாக இருக்கு. 259 00:14:52,976 --> 00:14:54,726 சேர்ந்து, நாம் எதையும் செய்யலாம். 260 00:14:56,438 --> 00:14:58,728 மாணவர் சங்க தலைவராக கூட போட்டியிடலாம். 261 00:14:59,900 --> 00:15:02,440 சரி. முதலில் இருந்து ஆரம்பிக்கலாம். உட்கார். 262 00:15:02,528 --> 00:15:03,528 நீ உட்காருவாயா? 263 00:15:04,780 --> 00:15:06,160 யார் நல்ல சிறுமி? 264 00:15:09,535 --> 00:15:11,695 என்னால் கோல் போட முடியலை. என் அதிஷ்ட ஸ்லீவ் வேண்டும். 265 00:15:11,787 --> 00:15:13,657 நான் உன்னை நிறுத்த சொன்னேன், கர்டிஸ். 266 00:15:13,747 --> 00:15:16,287 நாளை எனக்கு போட்டி இருக்கு ஆனால் என்னால் ஒரு கோல் கூட போட முடியலை. 267 00:15:16,375 --> 00:15:17,785 நான் பயிற்சி செய்யணும். 268 00:15:20,003 --> 00:15:22,303 இல்லை, கீழே போடு. கெட்ட டிராகன்! 269 00:15:22,381 --> 00:15:24,471 -டோனா, அவளை கீழே போட சொல். -கீழே போடு. 270 00:15:27,469 --> 00:15:29,929 -இன்றிரவு நீ சோஃபாவில் தூங்கு. -முடியாது. அப்பா சொன்னார். 271 00:15:30,013 --> 00:15:33,643 சரி. உனக்கு டிராகனுடன் தூங்க வேண்டுமா? ஏனென்றால் அவள் உள்ளே தான் இருக்கணும். 272 00:15:42,359 --> 00:15:45,449 ராக்கோ, மன்னிச்சிடு, நீ இங்கு இருக்க வேண்டாம் என நினைக்கிறேன். 273 00:15:46,947 --> 00:15:48,527 சரி, ஆனால் உன்னை எச்சரித்துவிட்டேன். 274 00:15:55,122 --> 00:15:57,752 இப்பொழுது, நல்லபடியாக ஒருவரை ஒருவர் முகர்ந்துக் கொள்ளுங்கள். 275 00:15:59,209 --> 00:16:00,289 நண்பர்களாக இருக்கலாம். 276 00:16:12,931 --> 00:16:14,061 கர்டிஸ்! 277 00:16:14,141 --> 00:16:16,891 என் ஒரே நம்பிக்கையான, அதிர்ஷ்ட ஸ்லீவை நான் கண்டுப்பிடிக்கணும். 278 00:16:16,977 --> 00:16:18,687 நீ ஹாலுக்கு போ. 279 00:16:21,523 --> 00:16:25,283 ரூபன்! எனக்காக ஸ்லீவை வரையலாம். நான் ஏன் இதை முன்னரே யோசிக்கலை. 280 00:16:25,986 --> 00:16:27,276 உனது துணிகளை எடு! 281 00:16:31,408 --> 00:16:32,908 எப்படி கிழிந்திருக்கு தெரியுதா? 282 00:16:32,993 --> 00:16:33,993 அந்த ஓரத்திலா? 283 00:16:34,077 --> 00:16:36,787 ஆம். அது முக்கியம். அப்படியே இருக்க வேண்டும். 284 00:16:38,540 --> 00:16:39,920 டோனா குறுஞ்செய்தி அனுப்புவதை நிறுத்த மாட்டாள். 285 00:16:40,542 --> 00:16:43,302 -நீ பதில் அளிக்கலாமே. -வேறு என்ன? 286 00:16:43,712 --> 00:16:45,422 முழங்கை கிட்ட ஒரு கறை உள்ளது. 287 00:16:45,506 --> 00:16:47,376 அதில் மஞ்சள் மார்கரால் என் பெயரை எழுதியுள்ளேன். 288 00:16:47,466 --> 00:16:50,086 தெரியவில்லை, கர்டிஸ். நாம் இதை செய்யலாமா என உறுதியாக தெரியலை. 289 00:16:50,177 --> 00:16:52,927 தயவுசெய்து. எனக்கு கண்டிப்பாக வேணும். என் அணி என்னை நம்பியிருக்கு. 290 00:16:53,013 --> 00:16:55,313 -நாளை ஒரு பெரிய போட்டி உள்ளது... -சரி, சரி. 291 00:16:55,390 --> 00:16:57,060 அனைத்து புகைப்படங்களையும் எனக்கு அனுப்பு. 292 00:17:01,563 --> 00:17:03,073 ஹே, கர்டிஸ் அங்கு உள்ளானா? 293 00:17:03,398 --> 00:17:05,608 நீ தரையில் போட்டுட்டுப் போன சட்டை ஒன்றை டிராகன் கடித்து விட்டது 294 00:17:05,692 --> 00:17:07,992 மற்ற சட்டைகளை கடிப்பதை நிறுத்த முடியுமா என தெரியலை. 295 00:17:08,069 --> 00:17:11,029 -நீ அவற்றை எடுத்து வைக்கலாமே? -உன் துணிகளை எடுப்பது என் வேலை அல்ல. 296 00:17:11,906 --> 00:17:13,616 அறையை பகிர்ந்துக் கொள்வதை வெறுக்கிறேன். 297 00:17:13,700 --> 00:17:16,790 ஹேய், ஸ்லீவை வரைவதற்கு நன்றி, நண்பா. நீ செய்வது பேருதவி. 298 00:17:20,082 --> 00:17:21,502 அப்புறம், எப்படி போகுது? 299 00:17:21,583 --> 00:17:23,883 சிறப்பாக இல்லை. கர்டிஸ் ரொம்ப எரிச்சலூட்டுகிறான். 300 00:17:23,961 --> 00:17:26,341 நேற்றிரவு, அவனால் நான் சோஃபாவில் தூங்க வேண்டியதாயிற்று. 301 00:17:26,421 --> 00:17:28,131 டிராகனை வைப்பதற்கு வேறு இடமில்லை. 302 00:17:28,214 --> 00:17:30,594 என் அப்பாவின் வீடு மிகவும் சிறியது. 303 00:17:32,094 --> 00:17:34,814 புரியுது. குளியலறையை என் அம்மா மற்றும் தாத்தாவுடன் பகிர்கிறேன். 304 00:17:34,888 --> 00:17:36,678 எனக்கென்று ஒரு இடமிருக்க ஆசையாக இருக்கு. 305 00:17:36,765 --> 00:17:38,805 ஹேய், எனக்கு வேலை இருக்கு, போகணும். 306 00:17:38,892 --> 00:17:40,352 சரி. பிறகு சந்திக்கலாம். 307 00:17:43,188 --> 00:17:44,688 ஹேய். பார்த்து நடங்க. 308 00:17:46,400 --> 00:17:47,400 ஹேய். 309 00:17:59,162 --> 00:18:00,162 ராக்கோ. 310 00:18:02,165 --> 00:18:03,745 நிறுத்து, ராக்கோ! 311 00:18:24,855 --> 00:18:26,765 டோனா, எழுந்திரு, ரூபன் செய்துவிட்டான்! 312 00:18:29,109 --> 00:18:32,199 என் அதிர்ஷ்ட ஸ்லீவ் கிடைத்துவிட்டது. என்னால் மீண்டும் கோல் போட முடியும்! 313 00:18:32,279 --> 00:18:33,819 நான் தூங்க முயற்சிக்கிறேன். 314 00:18:34,573 --> 00:18:35,873 பிள்ளைகளே, எழுந்திருங்கள். 315 00:18:35,949 --> 00:18:37,579 உங்களிடம் ஒன்றை காண்பிக்கணும். 316 00:18:42,623 --> 00:18:45,213 இந்த வீடு நம்முடைய கட்டடத்திலேயே வாடகைக்கு கிடைத்தது. 317 00:18:45,292 --> 00:18:48,132 அது நல்ல விலைக்கு கிடைத்தது. நாம் இன்றே குடியேறலாம்! 318 00:18:48,212 --> 00:18:49,552 எதிர்பாராத விஷயம் என்னவென்றால், 319 00:18:49,630 --> 00:18:52,510 முன்பு இருந்த வாடகைதாரர் அனைத்து பொருட்களையும் விட்டுச் சென்றார். 320 00:18:53,091 --> 00:18:56,551 தையல் இயந்திரம் மற்றும் என்னுடைய வடிவமைப்புக்கான விஷன் ஃபோர்ட் இருக்கின்றன. 321 00:18:56,637 --> 00:18:58,427 இந்த அறை எனக்காக செய்யப்பட்டது போல இருக்கு. 322 00:18:58,514 --> 00:18:59,724 எனக்கு ஒன்றும் புரியவில்லை. 323 00:18:59,806 --> 00:19:01,096 உனக்கு தனியறை கிடைத்துவிட்டது. 324 00:19:02,684 --> 00:19:04,604 ஆம், அந்த ஷூட்டிங் ஸ்லீவ் கூட. 325 00:19:04,686 --> 00:19:05,726 இதைப் பாருங்கள். 326 00:19:06,230 --> 00:19:07,900 ராக்கோவிற்குகூட தனி அறை கொடுக்கலாம். 327 00:19:11,068 --> 00:19:13,488 உண்மையில், அதை வேறு விதமாக பயன்படுத்தலாமென நினைக்கிறேன். 328 00:19:13,570 --> 00:19:16,910 சரி, உன் விருப்பம் போல் செய். இது உன்னுடைய அறை. 329 00:19:20,827 --> 00:19:24,247 சரி. நான் பள்ளியில் இருக்கும் போது, நம் வரலாற்று பாடத்தை நீ எழுதிவிடு. 330 00:19:24,331 --> 00:19:27,421 பள்ளி முடிந்ததும், நான் பியானோ பயிற்சி செய்கிறேன் நீ பட்டிமன்றத்துக்கு போ. 331 00:19:27,501 --> 00:19:29,041 மிகவும் சுலபமான தலைப்பு, 332 00:19:29,127 --> 00:19:31,377 "மாணவர்களால் ஆசிரியர்களை தரம் பிரிக்க முடியுமா?" 333 00:19:31,463 --> 00:19:32,973 நீ இதை எழுதிக் கொள்கிறாயா? 334 00:19:33,048 --> 00:19:35,378 நீ பள்ளியில் இருக்கும் போது, நான் வரலாற்று பாடத்தை எழுதிவிடுவேன். 335 00:19:35,467 --> 00:19:39,177 பள்ளி முடிந்ததும், நீ பியானோ பயிற்சி செய், நான் பட்டிமன்றத்திற்கு போவேன். தலைப்பு... 336 00:19:39,263 --> 00:19:41,433 சரி. சரி. எனக்குப் புரிகிறது. 337 00:19:42,015 --> 00:19:44,725 -உனக்கு எல்லாம் தெரியும். -ரூபன் அதை கெட்ட விஷயம் என நினைத்தான். 338 00:19:47,020 --> 00:19:49,940 நான் ஒன்றை தெளிவுபடுத்துகிறேன். நீ அவர்களின் புதிய வீட்டை வரைந்தாயா? 339 00:19:50,023 --> 00:19:51,533 ஆம். அது அற்புதமாக இருக்கு. 340 00:19:51,608 --> 00:19:53,238 ஆனால் அது அதிகபடியானது. 341 00:19:53,652 --> 00:19:55,952 எனது அலமாரியே எங்க பழைய படுக்கையறையை போல பெரியது. 342 00:19:56,405 --> 00:19:58,235 டிராகனை அங்கே வைக்கலாம் என நினைத்தேன். 343 00:19:58,323 --> 00:20:01,203 ஆம், என்னுடைய அதிர்ஷ்ட ஸ்லீவ், இது அதிர்ஷ்டத்தையும் கடந்தது. 344 00:20:01,285 --> 00:20:03,155 சொல்லப்போனால் அதுவொரு மாயம். இதைப் பாருங்க. 345 00:20:07,541 --> 00:20:09,921 நான் அதை சாப்பிட வைத்திருந்தேன். 346 00:20:13,589 --> 00:20:15,419 ரூபன். நீ என்ன செய்கிறாய்? 347 00:20:15,883 --> 00:20:17,973 பேய் எழுத்தாளர் உன் ஓவியங்களை வெளியிடுவது, 348 00:20:18,051 --> 00:20:19,641 நம் தேவைகளை நீ வரைவதற்காக அல்ல. 349 00:20:19,720 --> 00:20:22,220 இருக்கலாம், ஆனால் நாம் கொஞ்சம் ஜாலியாக இருக்கக்கூடாதா? 350 00:20:22,306 --> 00:20:24,466 நான் மில்லியன் டாலர் பணத்தை ஒன்றும் வரையவில்லை. 351 00:20:26,393 --> 00:20:27,773 -சரி. -உண்மையாகவா? 352 00:20:28,145 --> 00:20:30,725 நீ என்ன நினைத்தாலும் சரி, எனக்கு எல்லாம் தெரியாது. 353 00:20:31,732 --> 00:20:34,652 எல்லாம் தெரிந்தவள் என்று உன்னை சொல்லியிருக்கக்கூடாது. மன்னிச்சிடு 354 00:20:35,152 --> 00:20:36,152 நாம் நண்பர்கள் தானே? 355 00:20:36,570 --> 00:20:37,570 நாம் நண்பர்கள் தான். 356 00:20:42,367 --> 00:20:45,367 -அங்கிருந்து ஒருபோதும் கோல் போட முடியாது. -அப்படியா? இதைப் பார். 357 00:20:51,335 --> 00:20:53,375 அதிர்ஷ்ட ஸ்லீவ் திரும்ப கிடைத்துவிட்டது! 358 00:20:54,922 --> 00:20:56,972 இன்று மதியம் நாம் ஓக்மாண்டை வீழ்த்தப் போகிறோம். 359 00:20:57,049 --> 00:20:59,429 அதிர்ஷ்ட கைவளையம் போன்ற எதையாவது நான் முயற்சி செய்யணுமா? 360 00:20:59,510 --> 00:21:02,640 இது என் அதிர்ஷ்ட ஸ்லீவால் இல்லை. இது பயிற்சியால் தான். 361 00:21:03,138 --> 00:21:05,138 நீ சொன்னது சரிதான். நான் பயிற்சி பண்ண வேண்டியிருந்தது. 362 00:21:05,599 --> 00:21:06,599 இந்தா, பந்தை போடு. 363 00:21:09,853 --> 00:21:10,853 மன்னிச்சிடு. 364 00:21:11,271 --> 00:21:13,981 புரிகிறது. நீ தொடந்து வெற்றி பெறுகிறாய். அதை கெடுக்க வேண்டாம். 365 00:21:14,650 --> 00:21:16,570 -ஆட்டத்தின் போது பார்க்கலாம். -சரி. 366 00:21:22,199 --> 00:21:23,199 என்ன? 367 00:21:23,659 --> 00:21:25,539 அட. நன்றாக வேலை செய்கிறது. 368 00:21:25,619 --> 00:21:26,909 ஆம், ரொம்ப நன்றாகவே. 369 00:21:26,995 --> 00:21:29,245 இது வித்தியாசமாக இருக்கு. இது கோல் மட்டும் தான் போடுகிறது. 370 00:21:29,331 --> 00:21:31,211 பார். பந்தை உன்னிடம் போட முயற்சிக்கிறேன். 371 00:21:36,672 --> 00:21:37,672 பார்த்தாயா? 372 00:21:37,756 --> 00:21:40,626 நான் என்ன செய்வது? என்னால் பந்தை பாஸ் பண்ண முடியாது. 373 00:21:40,717 --> 00:21:42,257 ஷூட்டிங் ஸ்லீவை எடு. 374 00:21:42,344 --> 00:21:43,354 ஓ, சரி. 375 00:21:46,014 --> 00:21:47,104 அதை எடுக்க முடியாது. 376 00:21:48,267 --> 00:21:50,887 ஏனென்றால் ரூபன் இதை என் கையில் வரைந்தான். 377 00:21:50,978 --> 00:21:54,358 சரி, உன்னால் ஒரு கோல் கூட போட முடியவில்லை என்பதைவிட இது சிறந்தது தான். 378 00:21:59,611 --> 00:22:02,241 -ஹாய். -ஹே, வரலாற்று பாடம் முடிந்ததா? 379 00:22:02,531 --> 00:22:03,661 ஆமாம். உன் மேஜையிலிருக்கு. 380 00:22:10,330 --> 00:22:12,500 இது 20 பக்கங்கள். ஐந்து பக்கங்கள் தான் இருந்திருக்கணும். 381 00:22:12,583 --> 00:22:16,133 உனக்குப் பிடிக்காததை நீக்கிவிடு. ஆனால் ஒவ்வொரு வார்த்தையையும் முக்கியம். 382 00:22:16,587 --> 00:22:18,757 எனக்கு நேரமில்லை. நான் பியானோ பயிற்சி செய்யணும். 383 00:22:19,756 --> 00:22:22,376 -நீ பட்டிமன்றத்திற்கு தயாராகிவிட்டாயா? -ஆம். அது சுலபம் தான். 384 00:22:23,051 --> 00:22:26,391 நான் உயர்ந்த தரத்தை எடுப்பேன், அதனால் நான் மிகவும் நம்பகமான பேச்சாளர். 385 00:22:26,471 --> 00:22:27,891 அதனால், விவாதத்தில் வெற்றி பெறுகிறேன். 386 00:22:28,682 --> 00:22:29,812 அப்படி சொல்ல முடியாது. 387 00:22:30,601 --> 00:22:33,731 ஏன்? "அதனால்" என்பது பாசாங்குத்தனமா? "எனவே" என்று சொல்கிறேன். 388 00:22:34,229 --> 00:22:35,939 இல்லை. இது பிரச்சினையாகப் போகிறது. 389 00:22:36,690 --> 00:22:38,070 நாம் புதிய திட்டம் தீட்டணும். 390 00:22:38,150 --> 00:22:40,320 ஷெவான், நீ தயாரா? பட்டிமன்றத்திற்கு போக, 391 00:22:40,402 --> 00:22:41,492 -நாம் இப்போது கிளம்பணும். -வருகிறேன். 392 00:22:41,570 --> 00:22:42,860 இரு. 393 00:22:43,238 --> 00:22:45,368 பார், நன்றாக ஆடை அணிந்துள்ளாய். 394 00:22:46,074 --> 00:22:48,874 நம்பகமான பேச்சாளர் போல் ஆடை அணிந்துள்ளேன், நடுவர்களும் என்னை அப்படி பார்ப்பார்கள். 395 00:22:48,952 --> 00:22:51,002 இது ஒரு மேலோட்டமான தந்திரம், ஆனால் பயனுள்ளது. 396 00:22:53,874 --> 00:22:55,084 நீ சொன்னால் சரி. 397 00:23:02,132 --> 00:23:05,262 ஒப்புக்கொள்ளுங்க, அப்பா. இணையத்தளம் வேலை செய்கிறது. கூட்டத்தைப் பாருங்க. 398 00:23:05,844 --> 00:23:07,854 சும்மா இருங்க. பத்து பேர் தான் இருப்பார்கள். 399 00:23:07,930 --> 00:23:09,470 -ரூபன். -நான் விளையாடினேன், அம்மா. 400 00:23:10,057 --> 00:23:12,137 உண்மையாகவே, நீங்க சிறப்பான வேலை செய்துள்ளீர்கள். 401 00:23:12,226 --> 00:23:14,226 நீ சொல்வதை நான் அடிக்கடி கேட்க வேண்டும். 402 00:23:15,229 --> 00:23:16,979 சரி, நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பதால், 403 00:23:17,773 --> 00:23:21,073 நான் குழந்தையாக இருந்தபோது கடையில் நீங்க ஜாஸ் கிட்டார் வாசித்தது நினைவிருக்கா? 404 00:23:22,361 --> 00:23:25,991 மீண்டும் ஒருநாள் ஜாஸ் இசை இரவு நிகழ்ச்சி நடத்தலாம். அது மக்களை ஈர்க்கும். 405 00:23:28,951 --> 00:23:30,161 எனக்கு பிடிச்சிருக்கு. 406 00:23:31,787 --> 00:23:32,787 ஹேய், ஷெவான். 407 00:23:32,871 --> 00:23:35,291 ஹாய், நான் கொஞ்சம் ரூபனிடம் பேச வேண்டும். 408 00:23:35,374 --> 00:23:36,424 சரி. 409 00:23:38,210 --> 00:23:39,550 நீ என் நகலை நிறுத்த வேண்டும். 410 00:23:39,628 --> 00:23:41,958 அவளை அழித்துவிடு அல்லது நிலவில் வரைந்துவிடு. எனக்கு கவலையில்லை. 411 00:23:42,047 --> 00:23:43,717 ஆனால் பட்டிமன்றத்தை தவிர. தயவுசெய்து! 412 00:23:44,716 --> 00:23:45,716 சரி. 413 00:23:49,596 --> 00:23:51,556 இதை செய்வதற்கு மிகவும் நன்றி. 414 00:23:53,141 --> 00:23:54,311 என்னுடைய வர்ண தூரிகை எங்கே? 415 00:23:54,393 --> 00:23:56,313 அந்த டப்பாவில் நிறைய தூரிகைகள் இருக்கின்றன. 416 00:23:57,521 --> 00:24:00,021 இவை ஆயில் ஓவியங்களுக்காக. நான் நீர்வர்ண தூரிகையை பயன்படுத்தினேன்... 417 00:24:00,107 --> 00:24:03,607 ரூபன். இது அவசரம். தயவுசெய்து வேறு ஏதாவது தூரிகையை பயன்படுத்து. 418 00:24:03,694 --> 00:24:04,904 சரி. சரி. 419 00:24:10,409 --> 00:24:12,409 எனக்கு எல்லாம் தெரியும் 420 00:24:15,831 --> 00:24:17,171 எனவே, நீ என்ன நினைக்கிறாய்? 421 00:24:18,542 --> 00:24:21,342 நன்றாக இருக்கிறது. அது ஏன் பேப்பரில் இருந்து மறையலை? 422 00:24:22,379 --> 00:24:23,589 கொஞ்ச நேரம் கொடு. 423 00:24:26,466 --> 00:24:28,466 சரி, உங்க வேலையை செய்யுங்க, பேய் எழுத்தாளரே. 424 00:24:30,929 --> 00:24:32,009 அது ஏன் வேலை செய்யவில்லை? 425 00:24:32,097 --> 00:24:34,847 தெரியலை. இதற்கு முன் நான் வரைந்த ஒவ்வொன்றும் உயிர்பெற்றது. 426 00:24:34,933 --> 00:24:36,443 ஒரே வித்தியாசம்... 427 00:24:37,394 --> 00:24:38,734 வர்ண தூரிகை. 428 00:24:39,688 --> 00:24:41,568 சரி, அப்போ அந்த தூரிகை எங்கே? 429 00:24:41,648 --> 00:24:44,648 எனக்கு தெரியாது. அது... போய்விட்டது. 430 00:25:46,380 --> 00:25:48,380 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்