1 00:00:10,928 --> 00:00:12,763 ஐயோ, கடவுளே. என்ன நடக்கிறது? 2 00:00:13,639 --> 00:00:16,934 சரி. மக்கள் அலங்காரம் செய்துகொள்வதை நான் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. 3 00:00:17,017 --> 00:00:20,771 இது 11:15 மணிக்கு இருந்த நிக்கி இல்லை, இது... 11:28 மணியில் இருக்கும் நிக்கி. 4 00:00:20,854 --> 00:00:23,190 இவளை பிடிக்கவில்லை என்றால், 12 மணிக்கு நிக்கி எப்படி இருப்பாள் என யோசித்து பார். 5 00:00:23,273 --> 00:00:25,359 எனவே வேகமாக உடையணிந்து கொள்ளுங்கள். லோர்னா. 6 00:00:25,442 --> 00:00:26,902 புல்தரையில் இருக்கும் வாத்துகளை படம் பிடிக்கும் 7 00:00:26,985 --> 00:00:28,737 புகைப்படக்காரரிடம் நீ பேச வேண்டும், 8 00:00:28,820 --> 00:00:30,155 ஏனென்றால் அவை இந்த திருமணத்தின் ஒரு பகுதி கிடையாது, 9 00:00:30,239 --> 00:00:32,073 அவர் இன்னும் படம்பிடித்தால், திருமணம் வாத்துகளை பற்றியது என நினைக்கக் கூடும், 10 00:00:32,156 --> 00:00:33,075 நாம் சிறப்பாக திட்டமிட்டுள்ளோம். 11 00:00:33,158 --> 00:00:34,743 -சரி. -சரியா? சரி. 12 00:00:35,369 --> 00:00:37,079 நான் தலைமை சமையல்காரரிடம் பேசினேன். 13 00:00:37,162 --> 00:00:40,707 நாங்கள் காலை சிற்றுண்டி சாப்பிடாததால், மீதமிருக்கும் உணவு கொடுப்பதாக சொன்னார். 14 00:00:40,791 --> 00:00:42,793 அடக் கடவுளே. அவர் என்ன செய்கிறார்? 15 00:00:42,876 --> 00:00:44,837 அவள் தொழில்முறை சிகையலங்கார நிபுணருக்கு பணம் கொடுத்திருக்க வேண்டும். 16 00:00:44,920 --> 00:00:47,172 அவளுடைய காதலனின் சிகை அலங்கார நபரை யாரால் பயன்படுத்த முடியும்? 17 00:00:47,256 --> 00:00:50,092 -சரி. முடிந்துவிட்டது. -சரி. 18 00:00:50,175 --> 00:00:51,468 இங்கே என்ன நடக்கிறது? 19 00:00:51,927 --> 00:00:53,637 ஏமி தயாராகி விட்டாள். 20 00:00:54,763 --> 00:00:59,017 பாப் நட்சத்திரம் செப்நெம் ஃபெரா சிறந்த லெவென்ட் யுக்செல்லை சந்திக்கிறார். 21 00:00:59,101 --> 00:01:00,102 சரி. 22 00:01:00,185 --> 00:01:02,855 அவர்கள் யார் மற்றும் எதற்காக சந்திக்கிறார்கள் என எனக்குத் தெரியாது. 23 00:01:02,938 --> 00:01:05,315 அவர்களுடைய தலை முடி எவ்வளவு விசித்திரமாக இருக்கும் என பேச முடியும். 24 00:01:05,399 --> 00:01:09,903 ஒரு புது நிகழ்ச்சியாக நாம் நல்ல தலைமுடி அலங்காரத்தை விரைவாக செய்யலாம். சரியா? 25 00:01:10,946 --> 00:01:11,947 கடவுளே. 26 00:01:29,256 --> 00:01:30,382 அட, திருமணங்கள் மகிழ்ச்சியானவை. 27 00:01:39,850 --> 00:01:40,851 கேம்டென் லாக் 28 00:01:59,453 --> 00:02:02,831 நான் எழுதுவதை விட்டு விலகப் போகிறேன் என்று உன்னிடம் சொன்னேனா? 29 00:02:04,166 --> 00:02:05,334 -அப்படியா? -ஆமாம். 30 00:02:06,585 --> 00:02:08,419 மீண்டும் நிதித் துறையில் சேரப் போகிறேன். 31 00:02:09,922 --> 00:02:11,673 ஃபிரெட்டி. 32 00:02:12,549 --> 00:02:13,967 -ஒரு நிமிடம் பேசலாமா? -சரி. 33 00:02:14,468 --> 00:02:15,969 நீ என்ன சொல்ல போகிறாய் என தெரியும். 34 00:02:17,137 --> 00:02:20,766 “மன்னிக்கவும், ஸ்காட். ஜூன் 18, 2011 அன்று முதலாளித்துவம் அல்லது 35 00:02:20,849 --> 00:02:23,060 புதிய நிலப்பிரபுத்துவம் என்பது ஜனநாயகத்திற்கு புறம்பானது 36 00:02:23,143 --> 00:02:26,939 என்ற விஷயத்தை நீ புரிந்து, உன்னையே ஒரு சமதர்மவாதி என்று சொல்லிக்கொண்டது 37 00:02:27,022 --> 00:02:28,899 எனக்கு நினைவுக்கு வருகிறது.” 38 00:02:29,942 --> 00:02:31,568 இதோ, அதைப்பற்றி நான் இப்படி சொல்வேன்... 39 00:02:32,277 --> 00:02:33,278 சரி. 40 00:02:39,243 --> 00:02:41,912 சரி. கேள், நண்பா, எனக்கு உறவு பற்றிய அறிவுரை வேண்டும். 41 00:02:41,995 --> 00:02:44,164 நான் தனியானவன், என் மனைவி மற்றும் அவளது காதலனோடு 42 00:02:44,248 --> 00:02:46,124 ஒரு திருமணத்திற்கு வந்திருக்கிறேன். 43 00:02:46,208 --> 00:02:47,960 எனவே, நீ தேடிக்கொண்டிருக்கும் நபர் நான் தான். 44 00:02:48,043 --> 00:02:50,504 சரி. நிக்கியிடம் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்க விரும்புகிறேன். 45 00:02:50,587 --> 00:02:52,381 நண்பா. அது மிகவும் சிறப்பான விஷயம். 46 00:02:52,464 --> 00:02:53,715 -வாழ்த்துக்கள். -ஆனால் இங்கே கேட்க போகிறேன். 47 00:02:53,799 --> 00:02:55,133 என்ன, இங்கே இந்த திருமணத்திலா? 48 00:02:55,217 --> 00:02:57,219 ஆமாம். நாங்கள் இதைப் பற்றி யாருக்கும் சொல்ல மாட்டோம். 49 00:02:57,302 --> 00:02:58,637 எனக்குத் தெரியவில்லை, நண்பா. 50 00:02:58,720 --> 00:02:59,972 திருமணத்தில் ஒருவரை இப்படி கேட்பது, 51 00:03:00,055 --> 00:03:01,932 இறுதி சடங்கில் ஒருவரை கொலை செய்வது போன்றது. 52 00:03:02,015 --> 00:03:03,058 அது கவனத்தை ஈர்க்கும். 53 00:03:03,141 --> 00:03:04,434 இது அதிகபட்சம் என நினைக்கிறாயா? 54 00:03:04,518 --> 00:03:05,853 அது தேவையற்ற விஷயம் தான், நண்பா. 55 00:03:05,936 --> 00:03:07,980 -ஆமாம், நீ சொல்வது சரிதான். -ஆமாம். 56 00:03:09,273 --> 00:03:11,275 சரி. நான் போக வேண்டும். அழகு படுத்திக்கொள்ள வேண்டும். 57 00:03:15,571 --> 00:03:16,572 நீ என்ன நினைக்கிறாய்? 58 00:03:18,532 --> 00:03:19,741 காத்திருங்கள். ஹலோ? 59 00:03:21,743 --> 00:03:22,744 ஹலோ? 60 00:03:23,912 --> 00:03:24,913 ஹலோ? 61 00:03:25,539 --> 00:03:27,583 இங்கே நமக்கு சிக்னல் கிடைக்குமா? 62 00:03:27,666 --> 00:03:29,710 தெரியவில்லை. இந்த ஸ்பாவை அனுபவிக்க என் கைபேசியை அணைத்து விட்டேன். 63 00:03:29,793 --> 00:03:31,420 -இங்கே ஸ்பா இருக்கிறதா? -ஆம், ஆரஞ்சு மரங்கள் இருக்கும் இடத்தில். 64 00:03:31,503 --> 00:03:33,046 -ஆரஞ்சு மரங்கள் இருக்கின்றனவா? -ஆம், அந்த கூரையின் பின் பக்கத்தில். 65 00:03:33,130 --> 00:03:35,090 இங்கே... வேண்டாம். சரி. நிறுத்து. 66 00:03:35,966 --> 00:03:38,886 ஆனால், நான் மதியம் 2:00 மணிக்குள்ளாக இந்த ஆடைகளை தயார் செய்ய வேண்டும், 67 00:03:38,969 --> 00:03:40,929 மற்றும் அந்த சிந்தனை என்னை பதற்றமடைய வைக்கிறது. 68 00:03:41,013 --> 00:03:42,389 -சரி. -நீ என்ன செய்கிறாய்? 69 00:03:43,015 --> 00:03:44,099 -சிறப்பாக செய்கிறேன். -அப்படியா? 70 00:03:44,183 --> 00:03:46,310 நான் இப்போது ஒரு மேலதிகாரி, எனக்கு வேலை வாங்க தெரியும். 71 00:03:47,477 --> 00:03:49,021 -கடவுளே. நான் போக வேண்டும். -எங்கே போகிறாய்? 72 00:03:49,104 --> 00:03:50,731 அந்த மோதிரங்களை மறக்காதே. 73 00:03:50,814 --> 00:03:52,524 ஹேய்! இனி வாத்துக்களை படம்பிடிக்க வேண்டாம். 74 00:03:52,608 --> 00:03:54,026 வேண்டாம். இனி வாத்துக்கள் வேண்டாம். 75 00:03:54,109 --> 00:03:57,237 இல்லை, அவை அழகாக இருக்கின்றன. இது... வாத்தை மையமக கொண்ட திருமணம் கிடையாது. 76 00:04:27,309 --> 00:04:30,187 -கரேன். -என்ன நடக்கிறது? 77 00:04:30,771 --> 00:04:32,272 -அவள் வெளியே வர மறுக்கிறாள். -ஏன்? 78 00:04:32,356 --> 00:04:35,400 கதவைத் தாண்டி வந்தால், ஸ்காட்டை நெருங்க வேண்டுமோ என தயங்குகிறாள் போல. 79 00:04:35,484 --> 00:04:36,401 என்ன? ஏன்? 80 00:04:36,485 --> 00:04:39,238 அவர் ஆண்மையோடும், கம்பீரமாகவும் இருக்கிறார், அல்லவா? 81 00:04:39,321 --> 00:04:40,822 இல்லை. அதாவது... 82 00:04:40,906 --> 00:04:43,700 அவர், கால் மீது கால் வைத்து அமர்ந்திருக்கும் ஆண் போன்றவர் கிடையாது. 83 00:04:43,784 --> 00:04:45,369 ஆமாம். சரியாகச் சொன்னாய். 84 00:04:45,452 --> 00:04:47,162 -காஸ்? -நமக்கு நேரம் இருக்கிறது. 85 00:04:48,956 --> 00:04:49,957 காஸ், நான் உள்ளே வரலாமா? 86 00:04:59,758 --> 00:05:00,926 நான் நன்றாக இருக்கிறேனா? 87 00:05:05,889 --> 00:05:07,182 கண்டிப்பாக. 88 00:05:08,517 --> 00:05:10,644 நிறைய பேர் என்னை பார்ப்பதை நான் விரும்பவில்லை. 89 00:05:11,186 --> 00:05:12,771 சரி. நீ ஒரு ஆசிரியை இல்லையா? 90 00:05:12,855 --> 00:05:14,439 ஆனால், குழந்தைகள் பெரியவர்கள் இல்லையே. 91 00:05:14,523 --> 00:05:15,774 கரேன். 92 00:05:22,823 --> 00:05:24,283 நீ அழகாக இருக்கிறாய். 93 00:05:25,993 --> 00:05:27,494 நான் நானாகவே உணரவில்லை. 94 00:05:31,498 --> 00:05:32,624 இல்லை, இது நீ தான். 95 00:05:36,170 --> 00:05:38,213 நான் மறந்து விட்டேன். அவர்கள் இசை பற்றி கேட்கிறார்கள். 96 00:05:38,297 --> 00:05:40,465 நான் அதை என் கைபேசியில் ஒலிக்கச் செய்கிறேன். 97 00:05:41,300 --> 00:05:42,301 சரி. 98 00:05:43,177 --> 00:05:44,970 அந்த செயலியில் ஏதாவது விளம்பரங்கள் இருக்கின்றனவா? 99 00:05:45,053 --> 00:05:47,347 அவை நடுவில் தோன்றி, நமது மகிழ்ச்சியை கெடுக்காது அல்லவா? 100 00:05:47,431 --> 00:05:49,766 ஒரே ஒரு இரவிற்காக நான் நிறைய பணம் செலவு செய்ய விரும்பவில்லை. 101 00:05:50,434 --> 00:05:52,144 -சரி. -கடவுளே. 102 00:05:52,603 --> 00:05:53,854 நீ அப்படிப்பட்டவள் தான். 103 00:06:03,989 --> 00:06:05,741 கரேன் & ஸ்காட் 104 00:06:10,454 --> 00:06:11,997 நாம் களத்தில் இருந்ததாக நினைத்தேன். 105 00:06:12,080 --> 00:06:15,334 இல்லை, திட்டத்தில் மாற்றம் இருப்பதாகவும் நாம் நேரே செல்ல வேண்டும் என்றும் சொன்னார். 106 00:06:15,417 --> 00:06:16,418 கேள். 107 00:06:16,502 --> 00:06:17,669 -நிக்கி. -என்ன? 108 00:06:17,753 --> 00:06:19,129 -நீ மதகுருவை பார்த்தாயா? -வந்து... 109 00:06:19,838 --> 00:06:22,007 -மிகவும் மோசமான நபர். சரி. -நான்... 110 00:06:22,090 --> 00:06:23,091 -இல்லை. -அப்படி இல்லையா? 111 00:06:23,175 --> 00:06:24,176 ஆம், உனக்கு அவரை பிடித்திருக்கிறதா? 112 00:06:24,259 --> 00:06:26,136 -ஆம். அவர் திடமாக இருக்கிறார். -உண்மையாகவா? 113 00:06:26,220 --> 00:06:27,554 வேலை செய்பவரை எனக்கு பிடிக்கும். 114 00:06:27,971 --> 00:06:30,265 ஹாய். ஃப்ரெட்டி. 115 00:06:30,349 --> 00:06:31,517 எலியாட். 116 00:06:32,309 --> 00:06:33,477 என் மேல்சட்டையை ரயிலில் விட்டுவிட்டேன். 117 00:06:34,394 --> 00:06:35,562 என்னுடைய சட்டையையும் தான். 118 00:06:38,815 --> 00:06:41,193 கழிப்பறைகளில் இருந்து மிகவும் நீண்ட தூரம். 119 00:06:41,276 --> 00:06:43,111 எல்லோரும் ஏன் என்னை பின்தொடர்கிறார்கள் என புரியவில்லை. 120 00:06:43,195 --> 00:06:44,404 இங்கே பார். ஒரு கதவு இருக்கிறது. 121 00:06:44,488 --> 00:06:46,031 -ஓ, அட. -அட. 122 00:06:50,202 --> 00:06:52,704 -நான் தட்டட்டுமா? -ஆம். எப்போதுமே கதவை தட்ட வேண்டும். 123 00:06:56,583 --> 00:06:57,709 -அடக் கடவுளே. -ஆமாம். 124 00:06:57,793 --> 00:07:01,338 இரகசிய தோட்டத்திற்கு வரவேற்கிறோம் 125 00:07:01,421 --> 00:07:03,382 -இது தான் இரகசிய தோட்டம். -ஆமாம். 126 00:07:04,174 --> 00:07:05,175 ஜேஸ், நீ வந்து... 127 00:07:05,259 --> 00:07:07,094 இல்லை. எனக்கு எதுவும் தெரியாது. 128 00:07:08,762 --> 00:07:10,889 -ஹலோ. -ஹலோ. ஹாய். 129 00:07:11,598 --> 00:07:13,141 -ஜேஸ். -ஹலோ. 130 00:07:15,644 --> 00:07:17,396 ஓ, ஸ்காட். 131 00:07:17,479 --> 00:07:18,564 ஹலோ, அழகனே. 132 00:07:19,565 --> 00:07:21,984 -இதைப் பார். -ரொம்ப அழகாக இருக்கிறது. 133 00:07:22,568 --> 00:07:24,403 இது நம்முடைய பூக்களா? 134 00:07:24,486 --> 00:07:26,154 ஆமாம், கடனாக கொடுத்திருக்கிறேன். 135 00:07:26,238 --> 00:07:28,699 அவன் இனிமையானவன், செடிகள் பற்றி எந்த அறிவும் கிடையாது. 136 00:07:29,992 --> 00:07:32,786 அடக் கடவுளே. இதற்கு எவ்வளவு பணம் செலவானது? 137 00:07:32,870 --> 00:07:33,996 சும்மா யோசிக்கிறேன். 138 00:07:34,079 --> 00:07:36,415 எரிகாவிற்கு ஏதாவது புத்தகம் பிடிக்குமா? 139 00:07:42,796 --> 00:07:43,797 ஹலோ. 140 00:07:43,881 --> 00:07:46,133 இரகசிய தோட்டத்திற்கு வரவேற்கிறோம். 141 00:07:46,216 --> 00:07:48,302 நீங்கள் ஸ்காட்டின் தரப்பில் அமர்வீர்களா என... 142 00:07:48,385 --> 00:07:50,012 -சரி. -கேட்கவிருந்தேன் ஏனெனில் இது குடும்பம்... 143 00:07:51,013 --> 00:07:53,682 -மற்றும் நட்பிற்கு சமமாக இருக்கும். -அப்படியா? 144 00:07:54,349 --> 00:07:55,392 -சரி. நல்லது. -சரி. 145 00:07:55,475 --> 00:07:56,810 மிக்க நன்றி. 146 00:07:56,894 --> 00:07:59,021 -ஹாய். -ஹலோ. நீ நலம் தானே? 147 00:07:59,104 --> 00:08:02,316 இரகசிய தோட்டம். நாம் ஸ்காட்டின் பக்கம் அமரலாமா? 148 00:08:04,318 --> 00:08:05,736 உனக்கு விசித்திரமாக இருக்கிறதா? 149 00:08:06,278 --> 00:08:08,030 -நான் நலமாக இருக்கிறேன். ஆம். -நான் மட்டும் தானா? 150 00:08:09,156 --> 00:08:10,407 நீ நலம்தானே? 151 00:08:10,490 --> 00:08:12,576 அதனால், என்ன? நமக்கு பூக்கள் திரும்பி கிடைக்குமா? 152 00:08:12,659 --> 00:08:13,744 ஆமாம், திரும்ப கிடைக்கும். 153 00:08:17,206 --> 00:08:18,415 பார். 154 00:08:32,804 --> 00:08:34,681 இது பற்றி உங்களுக்குத் தெரியுமா? 155 00:08:34,765 --> 00:08:37,851 தெரியாது. அதாவது, நான்தான் இந்த வளையத்தை கட்டினேன் ஆனால்... 156 00:08:38,727 --> 00:08:39,895 நீ... கடவுளே. 157 00:08:40,437 --> 00:08:43,148 என்ன? இது ஒரு அடிப்படையான மர வளையம் தான். 158 00:08:44,107 --> 00:08:46,693 இல்லை, முடியவில்லை. 159 00:08:46,777 --> 00:08:49,071 இந்த முக ஒப்பனை மிகவும் விலை உயர்ந்தது மற்றும் மட்டமானது. 160 00:08:49,154 --> 00:08:50,239 ஆஹா. 161 00:08:51,323 --> 00:08:53,450 2012-க்கு பிறகு முதல் முறையாக அழுகிறேன். 162 00:08:54,618 --> 00:08:56,245 -மோ ஃபாரா. -சரி. 163 00:08:58,163 --> 00:08:59,164 ஹாய். 164 00:09:08,048 --> 00:09:09,049 நன்றி. 165 00:09:09,633 --> 00:09:10,634 பரவாயில்லை. 166 00:09:12,177 --> 00:09:13,262 அதாவது, ஒரு நாவல், 167 00:09:13,345 --> 00:09:16,265 தன்னுடைய தர்மங்களை பற்றி சிறிது கண்டிப்பாக இருக்கிறது ஆனால்... 168 00:09:16,348 --> 00:09:17,349 நன்றி. 169 00:09:23,772 --> 00:09:28,652 பிதா, சுதன், மற்றும் பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தில், 170 00:09:29,778 --> 00:09:34,408 நாம் கரேன் மேரி நியூமன் மற்றும் ஸ்காட் எக்ஸ்காலிபர் அடலான்டா ஃபில்பர்ட் 171 00:09:34,491 --> 00:09:37,160 ஆகியோரின் திருமணத்தை 172 00:09:37,244 --> 00:09:42,374 பார்ப்பதற்காக இங்கே இணைந்திருக்கிறோம். 173 00:09:46,295 --> 00:09:51,800 "ஏதோ ஒன்றை நேசித்தால் உங்களுடைய இதயம் காயப்பட்டு ஒருவேளை உடைக்கப்படலாம். 174 00:09:52,426 --> 00:09:56,555 அதை பத்திரமாக வைத்துக் கொள்ள விரும்பினால், அதை யாரிடமும் கொடுக்கக் கூடாது." 175 00:09:57,681 --> 00:09:59,266 அந்த வளையத்தின் மீது புல்-அப்ஸ் எடுக்க முடியுமா? 176 00:09:59,349 --> 00:10:01,935 "ஆனால் அது உடைக்க முடியாததாக இருக்கும். 177 00:10:02,019 --> 00:10:04,229 -அட... -காதல் செய்வது காயப்படுவதற்கு தான்." 178 00:10:10,068 --> 00:10:12,404 அது ரொம்ப நன்றாக இருந்தது. நீ ஒரு சிறப்பான எழுத்தாளர். 179 00:10:12,487 --> 00:10:13,614 இல்லை. நான்... 180 00:10:14,740 --> 00:10:15,824 அருமை. 181 00:10:17,159 --> 00:10:18,243 அதை நான் எழுதியதாக நினைக்கிறார்களா? 182 00:10:18,327 --> 00:10:20,495 சரி, அது புகழ் பெற்றது என்றால் யார் எழுதியது என சொல்ல வேண்டும். 183 00:10:21,246 --> 00:10:26,293 நம்மை நாம் நேசித்தால் தான், நம்மால் மற்றவர்களை நேசிக்க முடியும். 184 00:10:27,920 --> 00:10:30,756 நீங்கள் இருவரும் வாழும் வரை, 185 00:10:30,839 --> 00:10:33,217 மற்ற எல்லோரையும் விட்டு விட்டு, 186 00:10:33,300 --> 00:10:37,387 அவளை காதலித்தும், சௌகரியமாக வைத்தும் அவளுக்காக மட்டும் வாழ்வாயா? 187 00:10:37,471 --> 00:10:38,472 நான் செய்வேன். 188 00:10:39,139 --> 00:10:40,140 செய்வேன். 189 00:10:40,807 --> 00:10:44,353 நான் இப்போது உங்களை கணவன் மனைவியாக அறிவிக்கிறேன். 190 00:10:46,230 --> 00:10:47,231 நன்றி. 191 00:11:01,370 --> 00:11:04,289 கடவுளுக்கு நன்றி. நான் அவசரமாக கழிப்பறைக்கு செல்ல வேண்டும். 192 00:11:07,292 --> 00:11:10,754 இந்த வார்த்தைகள் உன்னை கவர்ந்தது பற்றி சந்தோஷம். தற்போது இதை வெளியிட திட்டமில்லை. 193 00:11:11,338 --> 00:11:14,049 உனக்கு வருத்தத்தின் ஆழ் உணர்வுகள் புரிகின்றன, இல்லையா? 194 00:11:14,132 --> 00:11:17,261 ஆமாம், எனக்கு அவை தெரியும். 195 00:11:17,344 --> 00:11:19,513 -எனக்கு ஏமாற்றம் கொடுக்காத ஒரே நபர், -மேலே சொல். 196 00:11:19,596 --> 00:11:22,057 கர்த்தர் மட்டும் தான் என உனக்குத் தெரியுமா? 197 00:11:23,934 --> 00:11:26,603 ஆமாம். உங்களோடு பேசிதில் மகிழ்ச்சி. 198 00:11:26,687 --> 00:11:27,521 ஹலோ. 199 00:11:27,604 --> 00:11:30,065 -நீங்கள் நலமா, ஷேக்ஸ்பியர்? -ஆமாம். நீ நலமா? 200 00:11:30,148 --> 00:11:32,693 -நலம் தான். -மிக அழகான திருமண விழா, இல்லையா? 201 00:11:32,776 --> 00:11:35,654 இதுவரை, இப்படி யாரும் சொன்னதில்லை, 202 00:11:35,737 --> 00:11:37,739 ஆனாலும் அது நன்றாக இருந்தது. 203 00:11:37,823 --> 00:11:39,449 ஆமாம். சரி, நாம் அங்கே போகலாம். 204 00:11:40,117 --> 00:11:41,451 இரு. எங்கே போகிறோம்? வரவேற்பு அந்தப்பக்கம். 205 00:11:41,535 --> 00:11:42,953 அந்த சொற்பொழிவுகளுக்கு முன்னால் 206 00:11:43,036 --> 00:11:44,162 நீ என்னோடு நடந்து வருகிறாயா. 207 00:11:44,246 --> 00:11:45,581 -பரவாயில்லையா? சரி. -சரி. 208 00:11:48,584 --> 00:11:51,587 நேரம் எடுத்துக்கொள்ள மாட்டேன். திருமண பரிசு பற்றி விவரிக்க வேண்டும். 209 00:11:51,670 --> 00:11:54,173 எல்லோரும் செய்வது போல அந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கக்கூடிய 210 00:11:54,256 --> 00:11:55,465 சாதாரண விஷயத்தை தான் நாம் செய்கிறோம் 211 00:11:55,549 --> 00:11:57,426 என்றாலும் அவள் அப்படி நினைப்பது எனக்குப் பிடிக்கவில்லை. 212 00:12:02,639 --> 00:12:03,640 அடக் கடவுளே. 213 00:12:04,808 --> 00:12:05,809 நான் உன்னை நேசிக்கிறேன்... 214 00:12:07,144 --> 00:12:08,187 நிக்கி. 215 00:12:08,770 --> 00:12:11,273 மேலும், ஒரு திருமணத்தில் வந்து உன்னிடம் திருமணத்திற்கு அனுமதி 216 00:12:11,356 --> 00:12:13,859 கேட்பது ஒரு மோசமான விஷயம் தான். 217 00:12:13,942 --> 00:12:16,570 ஆனால் இது புரிந்த பிறகு, அப்படி நான் செய்யாமல் இருக்கும் ஒவ்வொரு நாளும், 218 00:12:16,653 --> 00:12:19,907 மிகவும் விசித்திரமாகவும், அந்நியமாகவும், ஒரு வகையில் துரோகமாகவும் தோன்றுகிறது. 219 00:12:21,241 --> 00:12:22,951 நம்முடைய எஞ்சிய வாழ்க்கையில் உன்னைத் தொடர்ந்து 220 00:12:23,035 --> 00:12:25,412 நேசிக்கும் அளவு, நீ இரு மடங்கு அற்புதமானவளாக இருக்கிறாய். 221 00:12:25,495 --> 00:12:28,457 என்னிடம் மீதம் இருக்கும் அந்த அற்புதம் எல்லாம்... 222 00:12:28,540 --> 00:12:30,751 என் நிலையில் வேறொருவன் இருந்தால், இப்போதே, 223 00:12:30,834 --> 00:12:33,962 அவனுடைய எஞ்சிய வாழ்க்கையில் நேசிப்பதற்கு தேவையான அனைத்தும் அவனுக்கு இருக்கும். 224 00:12:36,590 --> 00:12:37,591 நிக்கி நியூமன். 225 00:12:40,385 --> 00:12:41,470 நீ... 226 00:12:41,553 --> 00:12:43,430 நிக்கி நியூமன். 227 00:12:44,097 --> 00:12:46,808 அடக் கடவுளே. நீ மாட்டேன் என்று சொல்லப் போகிறாயா, நிக்கி? 228 00:12:48,101 --> 00:12:49,102 அட... 229 00:12:50,103 --> 00:12:51,104 ஹாய். 230 00:12:53,899 --> 00:12:54,983 இது சரியான நேரமா? 231 00:13:04,159 --> 00:13:05,744 இப்படி குறிக்கிடுவதற்கு மன்னிக்கவும். 232 00:13:05,827 --> 00:13:07,329 -நான் அழைக்க முயற்சித்தேன். -சிக்னல் கிடைக்கவில்லை. 233 00:13:07,412 --> 00:13:09,081 -ஏட்ரியத்தில் மட்டும் கிடைக்கும். -ஏட்ரியம் இருக்கா? 234 00:13:09,164 --> 00:13:11,124 கடைசியில், உன் அலுவலகத்திற்கு அழைத்து, ஜென்னிடம் பேசினேன். 235 00:13:11,208 --> 00:13:13,460 நான் பொய் சொல்லவிருந்தேன், அவளுக்கு உன் மின்னஞ்சல் கடவுச்சொல் தெரிந்திருந்தது. 236 00:13:13,544 --> 00:13:14,378 இல்லை. 237 00:13:14,461 --> 00:13:15,754 ஆனால் அது யூகம் என்பது போல் நடித்தாள். 238 00:13:15,838 --> 00:13:17,130 ஆக, என்ன நடந்தது? என்ன? 239 00:13:17,214 --> 00:13:20,968 வந்து... சரி. நமக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. 240 00:13:21,969 --> 00:13:24,304 பிரின்சஸ் மற்றும் டைலருக்கு தத்து போக இடம் கிடைக்கவில்லை. 241 00:13:24,972 --> 00:13:26,098 அதற்குள்ளாகவா? ஏன்? 242 00:13:26,557 --> 00:13:28,267 நிக்கி, இவர்கள் சிக்கலான குழந்தைகள், 243 00:13:28,350 --> 00:13:30,018 எல்லோரும் போராட விரும்புவதில்லை. 244 00:13:30,102 --> 00:13:34,147 கவுன்சில் அலுவலகத்தில் எங்கும் போக வழி இல்லாமல் இருவரும் உட்கார்ந்திருக்கின்றனர். 245 00:13:34,231 --> 00:13:36,775 வளர்ப்பவர்கள் அவர்களை அழைத்துக்கொள்ள முடியாது. அங்கே இடமில்லை. 246 00:13:36,859 --> 00:13:40,487 எனவே நீங்கள் பிரின்சஸ்-ஐ அழைத்துப் போக முடியுமா என்று கேட்க வந்தேன். 247 00:13:41,905 --> 00:13:45,242 முதலில் தற்காலிகமாக, உங்களைப் பொறுத்தவரை, அது நிரந்தரமாகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. 248 00:13:45,325 --> 00:13:47,870 இல்லை என்றால், இடம் தெரியாத மற்றுமொரு தத்தெடுக்கும் இல்லத்திற்கு, 249 00:13:47,953 --> 00:13:49,538 அவர்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். 250 00:13:49,621 --> 00:13:53,625 தொடர்ந்து வைத்துக்கொள்ள முடியாத குழந்தையை பார்த்துக்கொள்ளும் படி கேட்கப் போகிறோம். 251 00:13:56,044 --> 00:13:57,462 சரி, ஏன் எங்களிடம் கேட்கிறீர்கள்? 252 00:13:57,546 --> 00:13:59,715 ஏனென்றால் நீங்கள் அன்பானவர்கள், பொறுப்பானவர்கள், 253 00:13:59,798 --> 00:14:01,884 ஒரே நாளில் உங்கள் வீட்டில் ஒரு அறையை தயார் செய்தீர்கள். 254 00:14:03,051 --> 00:14:05,012 எங்களுக்கு வேறு மாற்று வழிகளும் இல்லை. 255 00:14:08,223 --> 00:14:09,349 சரி, கொஞ்சம் அவகாசம் கிடைக்குமா? 256 00:14:09,433 --> 00:14:12,060 சரி, கண்டிப்பாக அடுத்த 60 நொடிகள் உங்களுக்கு அவகாசம் உண்டு. 257 00:14:12,144 --> 00:14:13,437 சரி, நாங்கள் இதைப்பற்றி அங்கே பேசலாமா? 258 00:14:13,520 --> 00:14:14,938 -சரி, பேசுங்கள், போங்கள். -சரி. 259 00:14:16,356 --> 00:14:18,483 -அடக் கடவுளே. -ஆமாம். சரி 260 00:14:18,567 --> 00:14:20,736 -சரி. நீ என்ன நினைக்கிறாய்? -கவலையாக இருக்கிறது. 261 00:14:20,819 --> 00:14:23,071 -நல்ல கவலையா கெட்ட கவலையா? அல்லது... -தெரியாது, ஜேசன். 262 00:14:23,155 --> 00:14:24,865 என் ஆடை இறுக்கமாக இருப்பதால், கஷ்டமாக இருக்கிறது. 263 00:14:26,033 --> 00:14:27,868 அவளை நம்மோடு வைத்துக்கொள்ள கூட முடியாமல் போகலாம். 264 00:14:30,120 --> 00:14:31,663 அவள் அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கிறாள், ஜேசன். 265 00:14:31,747 --> 00:14:33,874 -தனியாக. துணை இல்லாமல். -தெரியும். 266 00:14:34,791 --> 00:14:35,792 தெரியும். 267 00:14:40,672 --> 00:14:44,218 ஐயோ. இந்த சூழ்நிலையில் என்னால் யோசிக்க முடியவில்லை. 268 00:14:50,516 --> 00:14:53,185 நாம் அதை கடந்து வந்து விட்டோம். திரும்பவும் அதை செய்ய பயமாக இருக்கிறது. 269 00:14:53,268 --> 00:14:55,312 புரிகிறது. 270 00:15:00,150 --> 00:15:01,151 எனவே... 271 00:15:07,616 --> 00:15:08,617 வா. 272 00:15:09,368 --> 00:15:11,328 -நாம் அதை செய்யலாம். -ஆம், சரி. போகலாம். 273 00:15:16,416 --> 00:15:17,459 சரி. 274 00:15:30,180 --> 00:15:32,724 -நாங்கள் புறப்பட வேண்டும், கரேன். -என்ன? 275 00:15:32,808 --> 00:15:33,976 அது பிரின்சஸ் பற்றியது. 276 00:15:34,059 --> 00:15:36,728 அது சிக்கலானது, ஆனால் நாங்கள் அவளைத் தத்தெடுக்கக்கூடும். 277 00:15:37,437 --> 00:15:38,647 நீ விளையாடுகிறாய். 278 00:15:38,730 --> 00:15:40,023 என்னை மன்னித்துவிடு. 279 00:15:40,107 --> 00:15:43,944 இல்லை, மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. அடக் கடவுளே. நீ போய் உன் மகளை அழைத்து வா. 280 00:15:44,486 --> 00:15:46,822 -நான் உன்னை நேசிக்கிறேன். சரி. -நான் உன்னை நேசிக்கிறேன். 281 00:15:46,905 --> 00:15:47,906 வா. போகலாம். 282 00:15:47,990 --> 00:15:49,116 -சரி, போ. -பிறகு சந்திப்போம். 283 00:15:49,199 --> 00:15:50,742 சொற்பொழிவை குறுஞ்செய்தி அனுப்புகிறேன். மன்னித்துவிடு. 284 00:16:01,044 --> 00:16:02,671 -என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். -சரி. 285 00:16:10,846 --> 00:16:12,097 சரி! சரி! போ, போ! 286 00:16:12,181 --> 00:16:13,182 கை பிரேக், ஜேசன்! 287 00:16:28,197 --> 00:16:29,656 -நீ நலம் தானே? சரி. -நலம் தான். 288 00:16:34,203 --> 00:16:35,662 நரிக்கூட்டத்தின் பெயர்ச்சொல் என்ன? 289 00:16:36,455 --> 00:16:38,373 எனக்குத் தெரியாது, ஜேசன். ஏன்? 290 00:16:38,457 --> 00:16:40,375 ஏனெனில் இதை நாம் இப்போது தெரிந்துகொள்ள வேண்டும். 291 00:16:40,459 --> 00:16:41,460 எனக்காக கொஞ்சம் தேடுகிறாயா? 292 00:16:42,169 --> 00:16:43,212 சரி. 293 00:16:47,508 --> 00:16:49,968 நீ ஹோட்டலில் இருந்து சிறிய ஷாம்பூக்களை திருடினாயா? 294 00:16:50,052 --> 00:16:53,430 ஆம், ஹோட்டலில் இருந்து நான் ஷாம்புக்களைத் திருடினேன். இப்போது குடும்பம் இருக்கிறதே. 295 00:16:58,810 --> 00:17:01,271 அது கூட்டம். நரிக்கூட்டம். 296 00:17:02,022 --> 00:17:03,023 -நரிக்கூட்டமா? -ஆம். 297 00:17:03,106 --> 00:17:04,107 கண்டிப்பாக தெரியுமா? 298 00:17:07,361 --> 00:17:09,655 அது இலையுதிர் மரங்கள்... 299 00:17:09,738 --> 00:17:11,949 -மூச்சுவிடு, ஜேஸ். -அப்படியா? சரி. பரவாயில்லை. 300 00:17:13,075 --> 00:17:14,117 நாம் தயாராக உள்ளோம். 301 00:17:16,203 --> 00:17:18,288 சரி. 302 00:17:23,085 --> 00:17:24,545 எனக்காக இலையுதிர் மரங்களைப் பற்றி தேடுகிறாயா? 303 00:17:24,627 --> 00:17:25,753 சரி. 304 00:17:32,761 --> 00:17:34,471 சொற்பொழிவை தவறவிட்டது வருத்தமாக உள்ளது. 305 00:17:35,848 --> 00:17:37,391 கண்டிப்பாக சிறப்பாக இருந்திருக்கும். 306 00:17:38,183 --> 00:17:40,644 எனவே என்னிடம் ஒரு பட்டியல் உள்ளது 307 00:17:41,228 --> 00:17:45,983 குறிப்பாக இது ஒருபோதும் நடக்காது என்று சொன்னவர்களின் பட்டியல். 308 00:17:48,986 --> 00:17:50,737 "அபிகெயில் டர்னர்." 309 00:17:52,030 --> 00:17:54,741 இல்லை, நாம் அவரைப் பார்க்க வேண்டியதில்லை. அவர் யாரென்று அவருக்குத் தெரியும். 310 00:17:55,325 --> 00:17:58,328 "செலஸ்டே டேவிஸ்." இதோ. 311 00:17:59,913 --> 00:18:01,665 "கேத்தரின் மர்ஃபி." 312 00:18:01,748 --> 00:18:03,125 சரி, அதோ இருக்கிறார். 313 00:18:03,792 --> 00:18:05,794 உடன் யாரும் இல்லையா? சரி. 314 00:18:21,310 --> 00:18:22,895 -ஹாய். -ஹாய். 315 00:18:22,978 --> 00:18:24,438 -எல்லாம் சரிதானே? -ஆமாம். 316 00:18:25,105 --> 00:18:26,106 -ஹாய். -ஹலோ. 317 00:18:26,732 --> 00:18:29,193 இவர்கள் தான் நிக்கி மற்றும் ஜேசன், 318 00:18:29,276 --> 00:18:31,528 நீ கொஞ்ச காலம் அவர்களுடன் சென்று தங்குவாயா என்று 319 00:18:31,612 --> 00:18:33,280 அவர்கள் யோசித்துக்கொண்டிருந்தார்கள். 320 00:18:34,531 --> 00:18:36,658 அப்படியா? நல்ல பெண். 321 00:18:40,078 --> 00:18:42,247 வா, கிளம்பலாம், டைலர். 322 00:18:44,124 --> 00:18:45,918 இல்லை, அன்பே, ஏனெனில்... 323 00:18:46,585 --> 00:18:49,046 டைலர் இன்று உன்னுடன் வர மாட்டான் என்பது நினைவிருக்கிறதா? 324 00:18:50,631 --> 00:18:53,634 ஆனால் செவ்வாய்கிழமை நாம் அவனைப் பார்க்கப் போவோம். சரியா? 325 00:18:54,510 --> 00:18:55,719 சரியா? 326 00:18:55,802 --> 00:18:58,430 சரி, நாம் செவ்வாய்கிழமை அன்று அவனை சந்திப்போம், 327 00:18:58,514 --> 00:19:00,349 நீ டைலரை கட்டியணைக்கிறாயா? 328 00:19:03,310 --> 00:19:04,311 நல்ல பெண். 329 00:19:06,772 --> 00:19:08,815 சரி, அன்பே. இங்கே வா, செல்லமே. 330 00:19:09,691 --> 00:19:11,193 கிரெக், உதவ முடியுமா? 331 00:19:11,652 --> 00:19:13,278 இங்கே வா, செல்லமே. 332 00:19:13,362 --> 00:19:14,363 இது கடினம் என தெரியும். 333 00:19:15,239 --> 00:19:17,658 -வா, டைலர். -எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் தர முடியுமா? 334 00:19:17,741 --> 00:19:18,909 -சரி. -கண்டிப்பாக. 335 00:19:19,493 --> 00:19:21,328 பிரின்சஸ். தயவுசெய்து இங்கு வா, அன்பே. 336 00:19:27,709 --> 00:19:30,504 இது கண்டிப்பாக நன்றாக இருக்கும். உனக்கு சிறந்த... 337 00:19:30,963 --> 00:19:31,964 அப்படியா? 338 00:19:35,425 --> 00:19:36,552 -ஹலோ, செல்லமே. -ஹலோ. 339 00:19:36,635 --> 00:19:38,220 ஹலோ. ஹாய். 340 00:19:39,096 --> 00:19:41,682 -பரவாயில்லை, அன்பே. -நீ காரில் ஏறுகிறாயா? என்ன? 341 00:19:42,683 --> 00:19:44,685 -போ, அன்பே. எல்லாம் சரியாகிவிடும். -பரவாயில்லை. 342 00:19:44,768 --> 00:19:46,103 சமத்துப் பெண், பார். 343 00:19:46,186 --> 00:19:47,771 இதோ. பார் வண்டி அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. 344 00:19:48,522 --> 00:19:49,523 வா. 345 00:19:50,148 --> 00:19:51,149 சமத்துப் பெண். 346 00:19:55,571 --> 00:19:56,822 இதோ. 347 00:19:58,115 --> 00:20:00,742 இன்றிரவு நீ எங்களுடன் தங்க விரும்புகிறாயா? 348 00:20:00,826 --> 00:20:04,496 அதன் பிறகு, அதாவது... எப்போதைக்கும். 349 00:20:04,580 --> 00:20:06,665 இல்லை. அதற்கு நேரமில்லை. 350 00:20:06,748 --> 00:20:09,543 இப்போதைக்கு... நீங்கள் பெற்றோர். 351 00:20:09,626 --> 00:20:11,086 உங்களுக்கு கடமை இருக்கிறது. 352 00:20:12,462 --> 00:20:14,381 நீங்கள் விமான சிப்பந்திகள். 353 00:20:14,464 --> 00:20:16,550 எல்லாம் சரியாக இருக்கிறதா என்று அவள் பார்க்கிறாள். 354 00:20:17,509 --> 00:20:18,552 சரியா? 355 00:20:26,435 --> 00:20:27,769 நீ சிறப்பாக செய்வாய். 356 00:20:29,146 --> 00:20:30,689 மக்களே, 357 00:20:30,772 --> 00:20:33,400 கரேன் மற்றும் ஸ்காட் தங்களது முதல் நடனத்தை ஆடவிருக்கும் நிலையில் அவர்களுக்கான 358 00:20:33,483 --> 00:20:34,818 உங்கள் அன்பையும், பாசத்தையும் காட்டுங்கள். 359 00:20:39,865 --> 00:20:43,827 ஸ்காட்டிற்கு மிகவும் பிடித்த இசைக்கு. 360 00:20:53,378 --> 00:20:54,838 -நீ தயாரா? -ஆம். 361 00:21:18,070 --> 00:21:19,279 சிறுபிள்ளைத்தனமாக இருக்காதே. வா. 362 00:21:32,960 --> 00:21:34,503 நரி கும்பல் நரிக்கூட்டம் என அழைக்கப்படும். 363 00:21:34,586 --> 00:21:37,256 வேண்டாம், ஜேஸ். அது யதார்த்தமாக நடக்கட்டும். 364 00:22:12,791 --> 00:22:13,792 சரி. 365 00:22:15,294 --> 00:22:16,545 வீட்டிற்கு வந்துவிட்டோம். 366 00:22:18,172 --> 00:22:19,214 நாம் இதைச் செய்வோம். 367 00:22:24,636 --> 00:22:25,637 சரி, இறங்கு. 368 00:22:26,847 --> 00:22:28,056 நீ நலமா, செல்லமே? 369 00:22:30,184 --> 00:22:31,310 ஆம், இதுதான் நம் வீடு. 370 00:22:32,853 --> 00:22:34,062 அவளுடைய பையை எடுக்க வேண்டும். 371 00:22:34,771 --> 00:22:35,814 ஆமாம். 372 00:22:37,191 --> 00:22:38,233 வா. 373 00:22:39,109 --> 00:22:42,529 நான் சாவியைத் தேடுகிறேன். 374 00:22:48,243 --> 00:22:49,244 நிக்கி. 375 00:22:51,330 --> 00:22:52,331 -நிக்கி. -என்ன? 376 00:22:53,207 --> 00:22:54,208 இங்கு கொஞ்சம் வரமுடியுமா? 377 00:22:54,291 --> 00:22:55,209 அவளுடைய பையை எடு. 378 00:22:55,292 --> 00:22:57,961 இல்லை, உண்மையாக! உன்னால் இங்கு வர முடியுமா? 379 00:23:02,758 --> 00:23:03,759 என்ன? 380 00:23:04,635 --> 00:23:05,636 அடக் கடவுளே. 381 00:23:08,096 --> 00:23:09,139 சரி. 382 00:23:12,392 --> 00:23:13,393 நாம் என்ன செய்வது? 383 00:23:13,477 --> 00:23:14,645 எனக்குத் தெரியவில்லை. 384 00:23:16,146 --> 00:23:17,147 அவனை வெளியே அழைத்து வா. 385 00:23:17,231 --> 00:23:18,982 -வா, நண்பா. நீ நன்றாக இருக்கிறாயா? -ஹலோ. 386 00:23:19,066 --> 00:23:21,276 -நீ அங்கு என்ன செய்கிறாய்? -ஹேய், நீ அங்கு என்ன செய்கிறாய்? 387 00:23:22,778 --> 00:23:23,904 பிரின்சஸ் எங்கே? 388 00:23:23,987 --> 00:23:25,697 -அங்குதான் இருக்கிறாள். -அங்கே. 389 00:23:26,073 --> 00:23:27,824 -பிரின்சஸ்! -டைலர். 390 00:23:28,492 --> 00:23:29,910 நீ இங்கு இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. 391 00:23:29,993 --> 00:23:31,245 -நாம் என்ன செய்வது? -தெரியவில்லை. 392 00:23:32,496 --> 00:23:34,122 ஐயோ, ஜேசன். உண்மையாகவே, நாம் என்ன செய்வது? 393 00:23:34,206 --> 00:23:36,625 தெரியவில்லை. இப்போதுதான் நீ கேட்டாய், இருந்தாலும் எனக்குத் தெரியவில்லை, சரியா? 394 00:23:36,708 --> 00:23:37,876 அவனை வீட்டிற்குள் அழைத்துப் போக வேண்டுமா? 395 00:23:37,960 --> 00:23:39,419 இல்லை. அப்படி செய்யக்கூடாது. அது கடத்தல். 396 00:23:39,503 --> 00:23:41,255 -நாம் அவனை ஏற்கனவே கடத்திவிட்டோம். -இல்லை, அது... 397 00:23:41,338 --> 00:23:42,881 அவன் வந்தது தான் நமக்குத் தெரியாதே. 398 00:23:42,965 --> 00:23:44,883 இப்போது அவன் அங்கிருப்பது தெரியும். அவனை வேறு எங்காவது கொண்டு சென்றால்தான் கடத்தல். 399 00:23:44,967 --> 00:23:46,426 ஆனால் நாம் இன்னமும்... 400 00:23:46,510 --> 00:23:48,011 அவனை வைத்திருந்தால், நம்மை கைது செய்யமாட்டார்கள். 401 00:23:48,095 --> 00:23:50,556 அது திட்டம் கிடையாது என்று தெரியும், தானே? அப்படியே நிற்பதும் திட்டமல்ல. 402 00:23:54,101 --> 00:23:55,185 பென்னி-ஐ அழை. 403 00:24:18,876 --> 00:24:20,627 டௌடன்ஸ் கிட்சன்ஸில், 404 00:24:20,711 --> 00:24:22,838 நாங்கள் உங்களுக்கு ஏற்ற சமையலறையை முற்றிலும் புதிதாக அமைத்துத் தருவோம். 405 00:24:22,921 --> 00:24:25,048 ஷோரூம் விலையில் 50% வரை தள்ளுபடி, 406 00:24:25,132 --> 00:24:27,593 டௌடன்ஸுக்குச் செல்ல இதுதான் சிறந்த நேரம். 407 00:24:27,676 --> 00:24:29,636 டௌடன்ஸ், உங்களுடைய வீட்டிலிருந்து தள்ளியிருக்கும் வீடு. 408 00:24:29,720 --> 00:24:32,139 குறைவான ஒப்பந்தம் உண்டு. விதிமுறை மற்றும் நிபந்தனைகளுக்கு விவரங்களைப் பார்க்கவும். 409 00:24:46,195 --> 00:24:48,030 ஆம். இல்லை, எனக்குப் புரிகிறது. 410 00:24:48,113 --> 00:24:49,198 சரி. 411 00:24:50,032 --> 00:24:51,825 நன்றி. மிக்க நன்றி. 412 00:24:57,748 --> 00:24:59,499 -என்ன சொன்னார்கள்? -அவர்கள், 413 00:24:59,583 --> 00:25:03,795 இன்றிரவு நாம் அவனைப் பார்த்துக் கொள்ளலாம் நாளை காலை அவர்கள் வந்து அவனை... 414 00:25:03,879 --> 00:25:04,963 அழைத்துச் செல்வார்களாம். 415 00:25:05,881 --> 00:25:07,549 அநேகமாக, ஆமாம். 416 00:25:12,387 --> 00:25:13,847 -அவர்கள் அவனை அழைத்துச் செல்ல முடியாது. -நிக்கி. 417 00:25:13,931 --> 00:25:16,600 இல்லை. அவர்களால் முடியாது. இவர்களைப் பாரேன். 418 00:25:16,683 --> 00:25:19,269 ஆம், ஆனால் நம்மிடம் போதுமான இடம் இல்லை. 419 00:25:19,353 --> 00:25:21,188 ஜேஸ், தயவுசெய்து. 420 00:25:21,271 --> 00:25:26,610 அவனை தனியாக விட்டதால், தானாகவே ஓடிவந்து ஒரு மணிநேரமாக காரின் பின்புறத்தில் ஒளிந்து 421 00:25:26,693 --> 00:25:31,031 இப்போது இவளின் கையைப் பிடித்துக் கொண்டிருப்பதால் அவனுடைய பயம் குறைகிறது. 422 00:25:31,907 --> 00:25:35,285 குழந்தைக்கு பிடிக்காத ஒரு விஷயம் இருந்தால் அது அவர்களுடைய சொந்த இடம்தான். 423 00:25:41,959 --> 00:25:43,919 கடைசியில் நமக்கு குடும்பம் கிடைத்துவிட்டது, ஜேஸ். 424 00:25:45,254 --> 00:25:47,339 நாம் இப்போது அதை கட்டிக்காப்பாற்றினாலே போதும். 425 00:26:14,157 --> 00:26:15,784 -அடக் கடவுளே. -என்ன? 426 00:26:17,452 --> 00:26:18,871 உன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டாயே. 427 00:26:18,954 --> 00:26:21,415 ஆம், சரி... நான் அந்தளவுக்கு யோசிக்கவில்லை. 428 00:26:21,498 --> 00:26:22,708 ஜேசன். 429 00:26:23,333 --> 00:26:25,252 உன்னை திருமணம் செய்துகொள்ள நீ கேட்டதை நான் மறந்துவிட்டேன். 430 00:26:25,335 --> 00:26:26,628 இல்லை, பரவாயில்லை. நாம்... 431 00:26:26,712 --> 00:26:29,464 நாம் அதைப் பற்றி பிறகு பேசலாம். 432 00:26:29,548 --> 00:26:33,760 இப்போதைக்கு நாம்... கவனம் செலுத்த வேண்டிய வேறு மிக முக்கியமான விஷயங்கள் உள்ளன. 433 00:26:34,845 --> 00:26:38,182 -நிச்சயமாக, நான் திரும்பவும் பேசுவேன். -சரி, நாம் காத்திருக்கலாம். 434 00:26:39,057 --> 00:26:40,809 ஒரு நேரத்தில், ஒரு மதிப்புடைய விஷயம், ஹேய்? 435 00:27:04,917 --> 00:27:08,670 இல்லையென்றால், நாம் நீண்ட காலம் காத்திருந்துவிட்டோம் என்று நினைக்கிறேன். 436 00:27:48,126 --> 00:27:49,169 என்னவென்று தெரியுமா? 437 00:27:51,421 --> 00:27:52,673 நம்மால் சமாளிக்க முடியும். 438 00:27:53,423 --> 00:27:55,259 அப்படியா? எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. 439 00:27:59,096 --> 00:28:02,099 நிக்கி, எனக்கு பயமாக இருக்கிறது. 440 00:28:07,437 --> 00:28:09,273 ஆம். எனக்கும் தான். 441 00:28:10,691 --> 00:28:12,192 நீ நலம் தானே, அன்பே? 442 00:29:43,742 --> 00:29:45,744 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்