1 00:00:07,007 --> 00:00:09,635 அதாவது, இத நம்பவே முடியல. இத பாரு. இது ஒரு மாதிரி… 2 00:00:10,135 --> 00:00:12,638 இந்த பையை மூட முடியல. நீ இதுல ரொம்ப அதிகமான பொருட்களை வச்சிருக்க. 3 00:00:13,639 --> 00:00:15,973 நாம ஏன் ஸ்பீடிஜெட்-ல போறோம்? 4 00:00:15,974 --> 00:00:18,893 போன மாசம் அவங்களோட ஒரு விமானம் ரன்வேல இருந்து வழுக்கிக்கிட்டு போயிடுச்சு. 5 00:00:18,894 --> 00:00:22,605 ஹே, உனக்கு பிடிச்ச அந்த மினி பிரெட்ஸெல்ஸை விமானத்துல கொடுக்குறதாலயா? 6 00:00:22,606 --> 00:00:25,525 அதுவும் ஒரு காரணம்தான். ஆமா. ஆமா. ஆனா அது மட்டும் இல்ல. 7 00:00:25,526 --> 00:00:27,944 குழந்தைகளை பாத்துக்க கரேனை கூப்பிட்டு இருக்கலாம்னு நிச்சயமா உனக்குத் தோணலையா? 8 00:00:27,945 --> 00:00:30,238 என் வாழ்நாள் முழுக்க நான் டைலரை பாத்துட்டுதான் இருக்கேன். நிஜமாவா சொல்றீங்க? 9 00:00:30,239 --> 00:00:33,241 தெரியும், ஆனா பார்பரா இப்பதான் அவனை பிரேக்-அப் பண்ணா, அவன் இந்த இழப்பை ஏத்துக்கிறது கஷ்டம். 10 00:00:33,242 --> 00:00:35,076 அவன் ஒரு விஷயத்தை இழந்துட்டா, இன்னொரு விஷயத்துல ரொம்ப வெறியா இருப்பான். 11 00:00:35,077 --> 00:00:36,244 ஆமா, தனக்கு பிடிச்ச ஸ்பூனை 12 00:00:36,245 --> 00:00:40,081 தொலைச்சுட்டு, எரிமலைகள் மேல வெறியா இருக்குற இன்னொரு சூழ்நிலை நமக்கு வேண்டாம், இல்லையா? 13 00:00:40,082 --> 00:00:41,916 பரவாயில்ல. எனக்கு அதோட அறிகுறிகள் தெரியும். 14 00:00:41,917 --> 00:00:43,501 அவனை ஒரே விஷயத்துல முழ்க விடாத. 15 00:00:43,502 --> 00:00:45,670 அந்த அழைப்பிதழைக் காட்டு. நமக்கு அவ்வளவு பொருட்கள் தேவையில்லையா இருக்கும். 16 00:00:45,671 --> 00:00:48,798 அது ஒரு மாதிரி, தெரியல, வெறும் கால்ல இருக்குற மாதிரி ஒரு போஹோ ஸ்டைல் கல்யாணமா இருக்கும். 17 00:00:48,799 --> 00:00:50,341 இல்ல, அந்த அழைப்பிதழ் உன்கிட்ட இருக்குன்னு நினைச்சேனே? 18 00:00:50,342 --> 00:00:51,634 அது ஏன் என்கிட்ட இருக்கணும்? லாரி உன்னோட தோழி ஆச்சே. 19 00:00:51,635 --> 00:00:53,052 அதை கூரியர்ல இருந்து நீதான் வாங்கின. 20 00:00:53,053 --> 00:00:55,054 - ஓ, அப்போ அது கூரியர்ல வந்ததா? - அப்படித்தான் இருக்கணும், ஆமா. 21 00:00:55,055 --> 00:00:56,347 அப்போ நீ அதப் பார்த்திருக்கியா? 22 00:00:56,348 --> 00:00:58,391 - நீ பார்த்துட்டதா என்கிட்ட சொன்ன. - நான் பார்க்கல. 23 00:00:58,392 --> 00:00:59,518 ஹே? 24 00:01:00,435 --> 00:01:04,729 ஜேசன். நமக்கு இந்த கல்யாணத்துக்கு அழைப்பிதழ் வந்திருக்குன்னு உனக்கு 100% உறுதியா தெரியுமா? 25 00:01:04,730 --> 00:01:07,441 ஹே, டைலர்! இங்கே வா! இங்கே செம ஜாலியா இருக்கு, மிஸ் பண்ணிடாதே! 26 00:01:07,442 --> 00:01:09,068 முட்டாள்தனமா பேசாதே. நிச்சயமா நமக்கு அழைப்பிதழ் வந்தது. 27 00:01:09,069 --> 00:01:11,572 அப்போ அவ உண்மையாவே, "கல்யாணத்துக்கு வாங்க"ன்னு சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கா? 28 00:01:12,739 --> 00:01:15,616 ஆமா, அவ சொன்னா, அவ… அவ… அவ இப்படி சொன்னா, 29 00:01:15,617 --> 00:01:19,120 "ஓ, நாங்க பயன்படுத்தப் போற இந்த அழகான கல்யாண மண்டபத்தைப் பாரு." 30 00:01:19,121 --> 00:01:22,540 அப்புறம் அதோட நிறைய ஃபோட்டோக்களை… அந்த யூனிவர்சிட்டி குரூப்ல போட்டா. 31 00:01:22,541 --> 00:01:24,584 - அந்த மெசேஜைக் காட்டு. - சரி. என்கிட்ட இருக்கு. 32 00:01:24,585 --> 00:01:27,378 இதோ இருக்கு. ஆமா, பார்த்தியா? சரி. 33 00:01:27,379 --> 00:01:28,754 டைலர்! நிஜமாவே, நீ இதைத் தவறவிடுற! 34 00:01:28,755 --> 00:01:31,383 இல்ல, ஜேஸ். அவ சும்மா உன்கிட்ட இதைப் பத்தி சொல்லியிருக்காள்னு நினைக்கிறேன். 35 00:01:32,426 --> 00:01:35,094 நம்மைக் கூப்பிடவே இல்லாத ஒரு கல்யாணத்துக்கு நீ எதுக்கு ஹோட்டல் புக் பண்ணுன? 36 00:01:35,095 --> 00:01:36,762 இல்ல, நம்மைக் கூப்பிடுவாங்கன்னு நான் நினைச்சேன்… 37 00:01:36,763 --> 00:01:37,847 ஐயோ கடவுளே. 38 00:01:37,848 --> 00:01:40,016 …மலிவான ரூம் எல்லாம் தீர்ந்து போறதுக்கு முன்னாடியே புக் பண்ணிடலாம்னு நினைச்சேன். 39 00:01:40,017 --> 00:01:43,811 அதாவது, சில ரூமெல்லாம் நாற்பதாயிரம். என் உள்ளுணர்வு சொல்லுச்சு, உடனே செஞ்சுட்டேன். ச்சே. 40 00:01:43,812 --> 00:01:45,897 சூப்பர், அப்போ நம்மைக் கூப்பிடவே இல்லாத ஒரு கல்யாணம் நடக்கப்போற 41 00:01:45,898 --> 00:01:48,566 டஸ்கனில நாம ஒரு லீவுக்காக புக் பண்ணியிருக்கோம். 42 00:01:48,567 --> 00:01:49,859 அற்புதம். 43 00:01:49,860 --> 00:01:52,029 சரி, இப்போ நமக்கு பணம் திரும்பக் கிடைக்காது, இல்லையா? 44 00:01:53,780 --> 00:01:54,906 நாம இப்பவும் போகணும் தானே? 45 00:01:54,907 --> 00:01:56,866 இல்ல! கூப்பிடாத ஒரு கல்யாணத்துக்கு நான் வர மாட்டேன், ஜேஸ். 46 00:01:56,867 --> 00:01:58,951 நாம அவங்களைப் பார்க்க வேணாம். நாம வெளியில சுத்திட்டு இருப்போம். 47 00:01:58,952 --> 00:02:01,205 சான்… சான் சிமெண்டோ ஒரு பெரிய இடம்னு நான் பந்தயம் கட்டுறேன், சரிதானே? 48 00:02:03,207 --> 00:02:04,208 வந்து… 49 00:02:04,833 --> 00:02:06,584 ஆமா, அது ஒரு சின்ன கல்யாணமாத்தான் இருக்கணும். 50 00:02:06,585 --> 00:02:08,585 - ஆமா. - நாம யாரையும் பார்க்க மாட்டோம்னு நம்புவோம். 51 00:02:08,586 --> 00:02:11,380 நம்மைக் கூப்பிடலைன்னா, அது வெறும் நெருங்கிய சொந்தக்காரங்களுக்காகத்தான் இருக்கும். 52 00:02:11,381 --> 00:02:12,590 அதேதான். 53 00:02:12,591 --> 00:02:14,050 அப்புறம் நாம ரெண்டு பேர் மட்டும் 54 00:02:14,051 --> 00:02:15,134 கொஞ்சம் நேரம் செலவழிக்கணும், சரியா? 55 00:02:15,135 --> 00:02:17,095 - அதேதான். - ரொம்ப மோசம். 56 00:02:19,556 --> 00:02:21,349 சரி. சரி, சரி. அதை செய்வோம், நாம போவோம். 57 00:02:21,350 --> 00:02:22,517 என்ன? 58 00:02:22,518 --> 00:02:25,520 இந்தக் கல்யாணத் துணிகளை எல்லாம் பையில இருந்து எடுத்துட்டா, 59 00:02:25,521 --> 00:02:26,896 இதை அழகா மூடிடலாம். 60 00:02:26,897 --> 00:02:28,231 வந்து, ஒரு உண்மையைச் சொல்றேன். 61 00:02:28,232 --> 00:02:30,691 வெளியூர்ல நடக்குற கல்யாணத்துல, கல்யாணம்தான் இருக்குறதுலயே மோசமான விஷயம், இல்லயா? 62 00:02:30,692 --> 00:02:32,026 - ஆமா. - ஓ, அவங்களுக்கு ஏதாவது பரிசு வாங்கினியா? 63 00:02:32,027 --> 00:02:33,236 - ஆமா, வாங்கினேன். - ஆமா. 64 00:02:33,237 --> 00:02:34,403 - நான் ஒண்ணு சொல்லவா? - வேணாம். 65 00:02:34,404 --> 00:02:36,030 - அவங்களுக்கு இப்போ இது கிடைக்காது. - கண்டிப்பா கிடைக்காது. 66 00:02:36,031 --> 00:02:39,283 சரி. இப்போ ஒரு நேப்கின் செட் நமக்கு லாபம், கல்யாணத்துக்கும் போக வேண்டியதில்ல. 67 00:02:39,284 --> 00:02:40,409 போட்டுக்கோ! 68 00:02:40,410 --> 00:02:42,495 - எல்லாம் நல்லபடியா நடக்குது. - ஆமா. சரி. 69 00:02:42,496 --> 00:02:43,705 இது ஒர்த் தான். 70 00:02:44,373 --> 00:02:46,875 இது மூட மாட்டேங்குதே. டைலர். என் முதுகுல ஏறு. 71 00:02:47,793 --> 00:02:48,794 கேம்டென் லாக் 72 00:03:07,980 --> 00:03:09,814 அவங்க கொண்டு வரும்போது உன்னோட மினி பிரெட்ஸெல்ஸை நானே எடுத்துக்கவா? 73 00:03:09,815 --> 00:03:11,149 - சரி. சரி. - சரி. 74 00:03:13,193 --> 00:03:14,861 - ஹலோ, உங்களுக்கு மினி பிரெட்ஸெல்ஸ் பிடிக்குமா? - ஜேசன். 75 00:03:14,862 --> 00:03:16,779 அதுல ஓரிகானோ சேர்த்து பேக் பண்ணியிருப்பாங்க, இல்லையா? 76 00:03:16,780 --> 00:03:18,197 அது ரொம்ப நல்லா இருக்கும். வேற எங்கேயும் அது கிடைக்காது. 77 00:03:18,198 --> 00:03:19,907 - கொஞ்சம் சும்மா இருக்கியா? - என்னை நம்பு, நான்… முயற்சி பண்ணி இருக்கேன். 78 00:03:19,908 --> 00:03:20,992 இதைப் படிக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன். 79 00:03:20,993 --> 00:03:23,202 என்ன, நீ கடைசியா விமானத்துல போனதுல இருந்து இது மாறிடுச்சா? 80 00:03:23,203 --> 00:03:24,996 அவங்க அடிக்கடி இதை அப்டேட் பண்ணுவாங்க. 81 00:03:24,997 --> 00:03:28,584 அப்புறம் இது ஏர்லைன்ஸைப் பொறுத்தும், விமான வகையைப் பொறுத்தும் மாறும். அதனால… 82 00:03:30,752 --> 00:03:33,045 ஏன்னா உங்களுக்கு அது பிடிக்கலைன்னா, அப்பவும் அதை வாங்க முடியுமா? ஏன்னா நான்… 83 00:03:33,046 --> 00:03:35,631 மத்தவங்ககிட்ட மினி பிரெட்ஸெல்ஸ் கேட்கிறதை நிறுத்துறியா? 84 00:03:35,632 --> 00:03:36,800 மன்னிச்சிடு. மன்னிச்சிடு. 85 00:03:37,968 --> 00:03:39,970 ஓ. ஒருவழியா, எனக்கு முட்டிக்கிட்டு வருது. 86 00:03:41,597 --> 00:03:44,224 நான் சொன்ன மாதிரி, அப்பவும் அதை வாங்குங்க. நான்… நான்… நான் அதை உங்ககிட்ட இருந்து வாங்கிக்கிறேன். 87 00:03:47,436 --> 00:03:50,271 மணப்பெண்கள்! ஐயோ, கடவுளே. ஐயோ, கடவுளே. ஐயோ, கடவுளே. 88 00:03:50,272 --> 00:03:52,023 - அவங்க விமானத்துல இருக்காங்க. - யாரு? 89 00:03:52,024 --> 00:03:53,566 - கிளேரும் லாரியும். - என்ன? 90 00:03:53,567 --> 00:03:55,067 ஒரு நாளைக்கு அஞ்சு விமானம் இருக்கு, ஆனா அவங்க இதுல இருக்காங்க. 91 00:03:55,068 --> 00:03:56,987 - அவங்க எங்கே இருக்காங்க? - இல்ல, பார்க்காதே! 92 00:03:59,406 --> 00:04:00,907 - சரி, இதைப் போட்டுக்கோ. - என்ன? 93 00:04:00,908 --> 00:04:02,575 - ஒளிஞ்சுக்கோ. - ஹஹ்? 94 00:04:02,576 --> 00:04:04,578 மினி பிரெட்ஸெல்ஸ் வேணுமா? 95 00:04:07,039 --> 00:04:08,539 - உங்களுக்கு டீ இல்ல காஃபி வேணுமா? - வேணாம். 96 00:04:08,540 --> 00:04:09,624 இல்ல, வேணாம். 97 00:04:09,625 --> 00:04:12,085 - உங்களுக்கு மினி பிரெட்ஸெல்ஸ் வேணுமா? - ஆமா, கொடுங்க. 98 00:04:12,753 --> 00:04:14,922 இல்ல, வேணாம். சாரி. நன்றி. 99 00:04:17,673 --> 00:04:19,009 உங்களுக்கு காஃபி வேணுமா இல்ல டீ வேணுமா? 100 00:04:23,055 --> 00:04:24,473 {\an8}ஜெல்லிஃபிஷ் பற்றிய உண்மைகள் 101 00:04:28,977 --> 00:04:30,229 அவங்க வந்துட்டாங்க. 102 00:04:33,065 --> 00:04:34,942 {\an8}நிக்கி மெசேஜ் 103 00:04:41,406 --> 00:04:43,407 விமானம் குலுங்குது. இதுதான் நான் அனுப்பற கடைசி மெசேஜா இருந்தா எப்படி இருக்கும்னு யோசி ஹாஹா 104 00:04:43,408 --> 00:04:44,409 டைலர் எப்படி இருக்கான்? அவன் எதையாவது பத்தி யோசிச்சுட்டே இருக்கானா? 105 00:04:45,494 --> 00:04:47,788 அவன் நல்லா இருக்கான். 106 00:04:51,166 --> 00:04:53,751 2,000-க்கும் அதிகமான ஜெல்லிஃபிஷ் வகைகள் இருக்குன்னு உனக்கு தெரியுமா? 107 00:04:53,752 --> 00:04:54,753 தெரியாது. 108 00:05:12,646 --> 00:05:14,398 டாக்ஸி 109 00:05:18,986 --> 00:05:21,571 சரி, நாம இங்க கூட்டத்தோட கூட்டமா தெரியல, இல்லையா? 110 00:05:21,572 --> 00:05:24,615 ஆமா. அதாவது, இது உலகத்திலேயே ரொம்ப அமைதியான இடங்கள்ல இதுவும் ஒண்ணு. 111 00:05:24,616 --> 00:05:26,325 - ஓ, ஆமா. - நமக்கு இது ரொம்ப மோசமா போச்சு. 112 00:05:26,326 --> 00:05:29,996 சரி, சீக்கிரம் வா. உள்ள போலாம். அவங்க நமக்கு பின்னாடி ஒரு டாக்ஸில ஏறுறதை பார்த்தேன். 113 00:05:29,997 --> 00:05:31,664 - நன்றி! - பை! 114 00:05:31,665 --> 00:05:32,749 பை! 115 00:05:34,042 --> 00:05:37,004 அப்புறம், இந்த ரெஸ்டாரண்ட்ல நவீன இத்தாலிய உணவுகள் கிடைக்கும்… 116 00:05:37,629 --> 00:05:39,463 - சூப்பர். - …அந்தந்த சீசன் பொருட்களை வச்சு செய்றாங்க. 117 00:05:39,464 --> 00:05:40,840 ஆனா இது ரொம்ப திறந்த வெளியா இருக்குல்ல? 118 00:05:40,841 --> 00:05:43,509 ஆமா. ரொம்பவே திறந்த வெளியா தான் இருக்கு. அங்கே இருந்தா நாம எல்லாருக்கும் நல்லா தெரிவோம். 119 00:05:43,510 --> 00:05:44,803 உங்ககிட்ட தனியா உட்காருற மாதிரி பூத் இருக்கா? 120 00:05:46,263 --> 00:05:47,346 பூத்தா? 121 00:05:47,347 --> 00:05:48,848 பரவாயில்ல, நாம ரூம் சர்வீஸ் சொல்லிக்கலாம், சரியா? 122 00:05:48,849 --> 00:05:50,641 - ஆமா. ரூம் சர்வீஸ், சரி. - ஆமா. ஆமா, ரூம் சர்வீஸ். 123 00:05:50,642 --> 00:05:52,101 சரி. 124 00:05:52,102 --> 00:05:53,687 - இதோ உங்க சாவி. அப்புறம்… - நன்றி. 125 00:05:54,563 --> 00:05:55,938 ஓ, கடவுளே. 126 00:05:55,939 --> 00:05:57,941 இது ஃபோட்டோவுல பார்த்ததை விட ரொம்ப நல்லா இருக்கு. 127 00:05:59,067 --> 00:06:01,444 அது லாரியும் கிளேரும் தான். அவங்க பேசுறது எனக்கு நல்லா கேக்குது. 128 00:06:01,445 --> 00:06:02,945 - சீக்கிரம். போ. - சரி. 129 00:06:02,946 --> 00:06:04,572 - நன்றி. வா போலாம். - நன்றி. 130 00:06:04,573 --> 00:06:05,782 சீக்கிரம். சீக்கிரம். 131 00:06:08,827 --> 00:06:11,412 இது ரொம்ப நல்லா இருக்கு. 132 00:06:11,413 --> 00:06:13,332 அடக் கடவுளே. அடக் கடவுளே. நீங்க வந்துட்டீங்களே. 133 00:06:17,127 --> 00:06:18,544 ஓ, என்னது? 134 00:06:18,545 --> 00:06:21,131 யூனிவர்சிட்டி கேங் எல்லாரும் இங்க வந்துட்டாங்க. 135 00:06:21,715 --> 00:06:26,553 பெத். ஆபி. டிஸ். ஜேக்கி? 136 00:06:27,262 --> 00:06:29,013 என்னது இது… ஜேக்கி ஏன் இங்க இருக்கான்? 137 00:06:29,014 --> 00:06:31,558 - ஜேசன். வா போலாம். - ஜேக்கி ஒரு இனவெறியன். 138 00:06:33,060 --> 00:06:34,352 சீக்கிரம். 139 00:06:34,353 --> 00:06:36,854 வா. அதுதான் நம்ம ரூம்! அங்க இருக்கு. 140 00:06:36,855 --> 00:06:38,273 - போ, போ, போ, போ. - ஆமா. 141 00:06:40,442 --> 00:06:41,735 கதவை மூடு! 142 00:06:53,330 --> 00:06:55,165 அவங்க எல்லாரும் மாடியில குடிச்சுட்டு இருக்காங்க. 143 00:06:56,208 --> 00:06:57,500 ஆமா. 144 00:06:57,501 --> 00:06:58,836 இது பார்க்க சூப்பரா இருக்கு. 145 00:07:00,295 --> 00:07:01,879 ஆபி குடிக்கல போலிருக்கு. 146 00:07:01,880 --> 00:07:03,465 அவ கர்ப்பமா இருப்பாளோன்னு உனக்கு தோணல? 147 00:07:04,299 --> 00:07:05,926 நிக்கோவுக்கு புதுசா காதலி கிடைச்சுட்டாளா? 148 00:07:07,135 --> 00:07:09,054 சரி, ஜெஸ்ஸுக்கு என்ன ஆச்சு? எனக்கு ஜெஸ்ஸை பிடிச்சிருந்தது. 149 00:07:10,013 --> 00:07:11,014 நாசமா போச்சு. 150 00:07:11,598 --> 00:07:13,516 நானும் லாரியும் ரொம்ப நெருக்கமானவங்கன்னு நினைச்சேன். 151 00:07:13,517 --> 00:07:15,977 நாங்க டேட்டிங் பண்ணுறதா நடிச்சு, அவ அம்மா அப்பா கிட்ட உண்மையை சொல்ல அவளுக்கு உதவி கூட பண்ணேன், 152 00:07:15,978 --> 00:07:18,230 அப்பதான் அவ ஒரு லெஸ்பியன்னு தெரிய வரும்போது அவங்க நிம்மதி அடைவாங்கன்னு அப்படி பண்ணோம். 153 00:07:18,772 --> 00:07:21,482 - நீ என்ன பார்த்துட்டு இருக்க? - ஓமிசிடியோ அ ரோமா. 154 00:07:21,483 --> 00:07:23,109 ஆனா உனக்கு இத்தாலியன் பேச தெரியாதே, நிக். 155 00:07:23,110 --> 00:07:24,861 ஆமா, ஆனா ஹோட்டல் டிவியில இந்த ஒரு படம் தான் ஓடுது, ஜேஸ். 156 00:07:24,862 --> 00:07:26,821 ஒண்ணு இதை பார்க்கணும், இல்லன்னா அந்த சோகமான ஜன்னலை பார்க்கணும். 157 00:07:26,822 --> 00:07:29,282 ஓ, கடவுளே. அது பெட்ரீஷியாவா? 158 00:07:29,283 --> 00:07:30,825 பெட்ரீஷியாவுக்கு அழைப்பு வந்திருக்கு, நமக்கு வரலையா? 159 00:07:30,826 --> 00:07:33,327 அது அவளோட எலும்பு சிகிச்சை நிபுணர், நிக். நான்தான் அவளை சிபாரிசு பண்ணேன். 160 00:07:33,328 --> 00:07:36,163 அவளோட டாக்டரே அங்கே ஜாலியா இருக்காங்க, நாம இங்க மாட்டிக்கிட்டு இருக்கோமா? 161 00:07:36,164 --> 00:07:37,624 நம்பவே முடியல. பெட்ரீஷியாவா? 162 00:07:38,584 --> 00:07:41,919 எது எப்படியோ, நாம இங்க இருக்குறதுக்கு ஒரு பிளான் போட்டு வச்சிருக்கேன். 163 00:07:41,920 --> 00:07:45,464 காலைல 6:00 மணில இருந்து 6:30 மணிக்குள்ள கொஞ்சம் காத்து வாங்க வெளிய போயிட்டு வரலாம், 164 00:07:45,465 --> 00:07:48,843 அப்புறம் காலைல 6:30 மணியில இருந்து ராத்திரி 10:00 மணி வரைக்கும் ரூமுக்குள்ளயே இருக்கலாம். 165 00:07:48,844 --> 00:07:51,053 அதுக்கப்புறம், மாடியில கொஞ்ச நேரம் நடந்துட்டு வரலாம். 166 00:07:51,054 --> 00:07:52,181 இருட்டுனதுக்கு அப்புறம். 167 00:07:52,764 --> 00:07:54,182 நீ என்ன விளையாடுறியா? 168 00:07:54,183 --> 00:07:56,017 இல்ல… இல்ல, நிஜமாவே… நிஜமாவே… 169 00:07:56,018 --> 00:07:58,645 பக்கத்துல இருக்க ஒரு கன்னியாஸ்திரீ மடத்துக்கு டூர் கூட்டிட்டு போறாங்கன்னு இப்பதான் பார்த்தேன். 170 00:07:59,646 --> 00:08:02,440 இரு, உடனே ஒரு முடிவுக்கு வராத. அங்க இன்னும் அந்த பழைய காலத்து கல் கிணறு அப்படியே இருக்கு. 171 00:08:02,441 --> 00:08:04,026 ஓ, இதை ஏன்நீ முதல்லயே சொல்லல? 172 00:08:05,402 --> 00:08:07,737 நாம ரெண்டு பேரும் மட்டும் அதிக நேரம் செலவிடணும்னு நீதானே சொன்ன. 173 00:08:07,738 --> 00:08:09,822 ஆமா, ஜேஸ். ஒரு ஜோடியா இருக்கணும்னு சொன்னேன், கைதியா இல்ல. 174 00:08:09,823 --> 00:08:11,116 வந்து… 175 00:08:16,121 --> 00:08:19,208 இருந்தாலும், எல்லாரையும் மறுபடியும் பார்க்குறது நல்லா இருக்குல? 176 00:08:22,294 --> 00:08:24,963 நாம பசங்களை பார்த்துக்க சொல்லி கரேன்கிட்ட கேட்டிருக்கணும், தெரியுமா? 177 00:08:26,173 --> 00:08:28,091 அதாவது, அவங்க அங்க என்ன பண்ணுறாங்கன்னு யாருக்கும் தெரியாது. 178 00:08:28,675 --> 00:08:31,719 …ஆனா மோனா லிசா ஓவியம் வெறும் ஒரு ஆர்டருக்காக மட்டும் வரையப்பட்டது இல்ல. 179 00:08:31,720 --> 00:08:32,803 காலை கீழ வை. 180 00:08:32,804 --> 00:08:34,889 லியோனார்டோ புளோரன்ஸ் நகரை விட்டு வெளியேறிய நீண்ட காலத்திற்குப் பிறகும், 181 00:08:34,890 --> 00:08:37,267 அந்த ஓவியத்தை பல வருடங்களாக தன்னுடன் வைத்திருந்து அதில் தொடர்ந்து பல மாற்றங்களைச் செய்தார். 182 00:08:46,693 --> 00:08:48,570 சரி, மணி பத்து ஆச்சு. வா, போலாம். 183 00:08:51,865 --> 00:08:54,283 நான் பேண்ட் போட்டுக்கவா? என் காலை பார்த்தா அவங்க கண்டுபிடிச்சிருவாங்களா? 184 00:08:54,284 --> 00:08:56,577 நிக், உன் காலை பார்த்தா நானே கண்டுபிடிக்க மாட்டேன். வா போலாம். 185 00:08:56,578 --> 00:08:58,205 ஓ, அது ரொம்ப வருத்தமா இருக்கு. 186 00:09:00,207 --> 00:09:02,542 மாறு வேஷத்துக்கு உனக்கு இந்த கூலிங் கிளாஸ் செட் ஆகல, இல்லையா? 187 00:09:02,543 --> 00:09:05,295 ஏன்னா ஒரு நார்மல் சைஸ் தலை இருக்குறவங்களோட கம்பேர் பண்ணா, இது உன் முகத்தை கம்மியா தான் மறைக்குது. 188 00:09:06,421 --> 00:09:07,755 சரி. போலாம். 189 00:09:07,756 --> 00:09:09,132 ஆமா. 190 00:09:14,680 --> 00:09:15,805 நிக்கி. சீக்கிரம் வா. 191 00:09:15,806 --> 00:09:17,098 இரு, இரு, இரு, ஜேஸ். 192 00:09:17,099 --> 00:09:18,141 அவன் இப்பதான் அவகிட்ட சொல்ல போறான்… 193 00:09:25,107 --> 00:09:26,108 ஓ, பாரு. 194 00:09:26,733 --> 00:09:28,735 - சரி. இதோபோச்சு. - சரி. 195 00:10:03,854 --> 00:10:07,690 இது பார்க்க ரொம்ப அழகா இருக்கும் போல இருக்கு. நம்மால இத பாக்க முடிஞ்சா நல்லா இருக்கும். 196 00:10:07,691 --> 00:10:11,736 ஆமா. இவ்வளவு அழகான ஒரு இடத்துல இருக்குறது, 197 00:10:11,737 --> 00:10:13,572 நான் எதிர்பார்த்த மாதிரியே ரொம்ப அழகா இருக்கு. 198 00:10:14,114 --> 00:10:16,116 அருமையான டஸ்கன் நிறங்கள். 199 00:10:17,075 --> 00:10:18,076 இருக்கலாம். 200 00:10:19,786 --> 00:10:20,996 அடக் கடவுளே. 201 00:10:23,040 --> 00:10:25,291 எனக்கு இப்ப நீச்சல் அடிக்கணும் போல இருக்கு. 202 00:10:25,292 --> 00:10:26,418 ஆமா. 203 00:10:26,919 --> 00:10:29,086 ஆனா நம்மகிட்ட நீச்சல் உடைகள் இல்ல தானே? 204 00:10:29,087 --> 00:10:30,088 இல்ல. 205 00:10:37,221 --> 00:10:39,097 ஓ, எனக்கு ஆந்தைங்க சத்தம்னா ரொம்ப பிடிக்கும். 206 00:10:40,974 --> 00:10:45,187 நம்ம ஒரு ஆந்தை வளர்க்கலாமா? இல்ல இது வெறும் சுற்றுலா மனநிலையா? 207 00:10:46,355 --> 00:10:47,940 விமானத்துல போகும்போது உனக்கு எப்படி தோணுதுன்னு பார்ப்போம், சரியா? 208 00:10:49,191 --> 00:10:50,942 நம்மைப் பாரேன், ம்? 209 00:10:50,943 --> 00:10:54,196 ஒரு அழகான வார இறுதி விடுமுறையில இருக்குற சாதாரண தம்பதி மாதிரி இருக்கோம். 210 00:10:55,072 --> 00:10:57,658 லாரி. லாரி. 211 00:10:59,117 --> 00:11:00,618 லாரி, இப்படி பண்ணாத. 212 00:11:00,619 --> 00:11:03,120 எனக்கும் கருத்து சொல்ல உரிமை இருக்கு, கிளேர். 213 00:11:03,121 --> 00:11:06,082 பாரு, இல்ல, நீ இப்ப பதட்டத்தை மறைக்கறதுக்காக சும்மா சண்டை போடுற. 214 00:11:06,083 --> 00:11:07,959 - இது முக்கியம். - நான் சூப் குடிக்கிற விதமா? 215 00:11:07,960 --> 00:11:09,293 - ஆமா. நீ சத்தமா உறிஞ்சு குடிக்கிற. - போ! 216 00:11:09,294 --> 00:11:11,838 அது சூடா இருந்துச்சு. அதான் குடிக்கும்போது அப்படியே ஆற வச்சேன். 217 00:11:11,839 --> 00:11:14,173 கடவுளே, ஆமா. ஏன்னா நீ எப்பவுமே இப்படித்தான், இல்லையா? 218 00:11:14,174 --> 00:11:16,759 நீ எல்லாத்தையும் அவசரப்படுத்துற. சூப், கல்யாணம்னு. 219 00:11:16,760 --> 00:11:18,052 சரி, நாம பதட்டப்பட வேண்டாம். 220 00:11:18,053 --> 00:11:19,387 இது நடக்கும்னு நமக்குத் தெரியும். 221 00:11:19,388 --> 00:11:20,847 அதனாலதான் நம்ம ஃபிட்ஜெட் ஸ்பின்னரை கொண்டு வந்தோம். 222 00:11:20,848 --> 00:11:22,014 அடக் கடவுளே. 223 00:11:22,015 --> 00:11:24,767 ஏன் நீ எதையாச்சும் நினைச்சு கவலைப்பட்டா அது பொறுப்பான விஷயம், 224 00:11:24,768 --> 00:11:27,103 ஆனா நான் எதையாச்சும் நினைச்சு கவலைப்பட்டா, "ஓ, அவ அப்படித்தான், ஆமா, ஆமா, ஆமா. 225 00:11:27,104 --> 00:11:28,646 அவ பதட்டப்படுறா. அவகிட்ட ஃபிட்ஜெட் ஸ்பின்னரை கொடுப்போம்"-ன்னு சொல்ற? 226 00:11:28,647 --> 00:11:31,649 ஏன்னா உன் ஆன்ட்டிக்குத் தேவையான இன்சுலினை வைக்க ஹோட்டல்ல பிரிட்ஜ் இருக்கான்னு நான் கவலைப்படுறேன், 227 00:11:31,650 --> 00:11:33,067 ஆனா நீ நான் சூப் குடிக்கிற விதத்தைப் பத்தி கவலைப்படுற. 228 00:11:33,068 --> 00:11:35,695 சரி, கருத்துக்களை ஏத்துக்க மாட்டேன்னா அப்புறம் ஏன் என்னை ரிஹர்சல் டின்னருக்கு கூட்டிட்டு வந்த? 229 00:11:35,696 --> 00:11:38,030 நீ சொல்லாதே… நான் ஏத்துக்க மாட்டேன்னு சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம்… 230 00:11:38,031 --> 00:11:39,156 நான் கருத்துக்களை ஏத்துக்க மாட்டேனா? 231 00:11:39,157 --> 00:11:40,576 அந்த சீட் கவர்ஸ் விஷயம் என்ன ஆச்சு? ஹம்? 232 00:11:41,118 --> 00:11:45,204 உனக்கு ஒரு லிங்க் அனுப்பினேன். நீயும்… அந்த நீலமும் வெள்ளையும் கலந்த கோடுகளை ஓகே பண்ணுன. 233 00:11:45,205 --> 00:11:47,957 கோடுகள் இன்னும் அகலமா இருக்கும்னு நான் நினைச்சேன்! 234 00:11:47,958 --> 00:11:49,251 அடக் கடவுளே. வாவ். 235 00:11:52,379 --> 00:11:53,588 {\an8}நில் 236 00:11:53,589 --> 00:11:55,132 ஜேஸ்! ஜேஸ்! 237 00:11:57,801 --> 00:11:59,261 அந்தப் பொண்ணுகிட்ட பேசுறதுல ரொம்ப பிஸியா இருந்த! 238 00:11:59,887 --> 00:12:02,306 அவளுக்கு பேனிக் அட்டாக் வந்துச்சு. 239 00:12:02,848 --> 00:12:04,265 - ஆமா, எனக்கும்தான். - பைத்தியக்காரத்தனம். 240 00:12:04,266 --> 00:12:05,475 அடிப்படையில. 241 00:12:08,854 --> 00:12:13,192 என்னால எப்பவும் முடியாது. சரியா? என்னால அத பண்ண முடியாது… 242 00:12:13,859 --> 00:12:15,026 உன்னோட உறுதிமொழிகளை நான்தான் எழுதினேன். 243 00:12:15,027 --> 00:12:17,028 - 35 நிமிஷம் ஆயிடுச்சு. - நீயே முடிவு பண்ணு. 244 00:12:17,029 --> 00:12:19,031 லெஸ்பியன்ஸ் எவ்வளவு நேரம் சண்டை போடுவாங்க? 245 00:12:19,990 --> 00:12:23,160 "சரி, ஏதோ ஒன்னு"-ன்னு சொல்லிட்டு போறதுக்கு அங்க ஆம்பளைங்க யாரும் இல்ல, இல்லையா? 246 00:12:23,827 --> 00:12:25,745 கிளேர் லாரிகிட்ட சொல்றதை நான் கேட்டேன், 247 00:12:25,746 --> 00:12:28,498 2011-ல நடந்த அந்த மதிய உணவுல அவளை கண்டுக்கலையாம், 248 00:12:29,041 --> 00:12:31,250 அவ எதைப்பத்தி பேசுறான்னு லாரிக்கு சரியா தெரிஞ்சிருக்கு. 249 00:12:31,251 --> 00:12:32,335 இது ரெண்டு பொண்ணுங்களோட உறவு, ஜேஸ். 250 00:12:32,336 --> 00:12:33,544 அவங்க உறவுல நடந்த எதையுமே, 251 00:12:33,545 --> 00:12:35,880 ஒரு சின்ன விஷயத்தைக் கூட அவங்க ரெண்டு பேருமே மறக்க மாட்டாங்க. 252 00:12:35,881 --> 00:12:36,882 வசதியா உட்காரு. 253 00:12:40,552 --> 00:12:41,637 நிக்? 254 00:12:42,554 --> 00:12:45,140 நீ என்னைக்காவது சன் லவுஞ்சர்ல செக்ஸ் வச்சிருக்கியா? நீச்சல் குள ஜெனரேட்டர் பக்கத்துல? 255 00:12:46,517 --> 00:12:47,518 ஆமா. 256 00:13:05,577 --> 00:13:06,620 ஹேய். 257 00:13:35,524 --> 00:13:38,776 பாரு, நாம திரும்பவும் ரூமுக்கே போய் சாப்பிடலாம். 258 00:13:38,777 --> 00:13:42,531 இல்ல, ஜேஸ், வீட்டுக்காவல்ல இருக்குற மாதிரி அந்த ரூம்ல என்னால இன்னொரு வேளை சாப்பிட முடியாது. 259 00:13:43,907 --> 00:13:45,409 நான் விக்கிலீக்ஸ் ஆள் மாதிரி உணர்றேன். 260 00:13:47,661 --> 00:13:50,037 ஓ, கடவுளே. அந்த மெனுவைப் பாரு. 261 00:13:50,038 --> 00:13:51,455 {\an8}வில்லா கொலினா ரோஸ்ஸா காலை உணவு - இத்தாலிய கிளவுட் எக்ஸ் 262 00:13:51,456 --> 00:13:52,583 {\an8}- இத்தாலிய கிளவுட் எக்ஸ். - என்ன? 263 00:13:53,917 --> 00:13:56,253 மஸ்கார்போன் புளோரண்டைன் ஃபிரிட்டாட்டா. 264 00:13:57,504 --> 00:13:58,588 கன்னோலி. 265 00:13:58,589 --> 00:14:01,091 சரி, கடைசி ஆளும் போயாச்சு. இப்ப யாரும் இல்ல. வா, போலாம். 266 00:14:05,971 --> 00:14:07,054 எங்களுக்குக் கிடைக்குமா… 267 00:14:07,055 --> 00:14:09,390 ஓ, என்னை மன்னிச்சுடுங்க. ரெஸ்டாரண்ட் இப்ப மூடியாச்சு. 268 00:14:09,391 --> 00:14:10,892 - விளையாடுறீங்களா? - என்ன? 269 00:14:10,893 --> 00:14:12,143 எல்லா உணவும் தீர்ந்துடுச்சு. 270 00:14:12,144 --> 00:14:13,812 நாங்க சாப்பிடுறதுக்கு எதுவுமே இல்லையா? 271 00:14:15,981 --> 00:14:17,357 ப்ளீஸ். 272 00:14:29,828 --> 00:14:31,078 நிக்? 273 00:14:31,079 --> 00:14:33,498 ஏன் அவங்க நம்மையே முறைச்சுப் பார்க்குறாங்க? அவங்க கை… கை காட்டுறாங்க. 274 00:14:34,291 --> 00:14:36,042 ஆமா. இல்ல, நாம ரொம்ப பிரபலம்னு நினைக்கிறாங்க. 275 00:14:36,043 --> 00:14:37,293 என்ன? ஏன்? 276 00:14:37,294 --> 00:14:38,794 ஏன்னா நாம எப்பவும் மாறுவேஷத்துல இருக்கோம், 277 00:14:38,795 --> 00:14:40,671 அப்புறம் யாரும் இல்லாதப்ப தான் ரூமை விட்டு வெளிய வர்றோம். 278 00:14:40,672 --> 00:14:41,839 நாம யாருன்னு அவங்க நினைக்கிறாங்க? 279 00:14:41,840 --> 00:14:44,050 - நீ செத் ரோகன்-னு அவங்க நினைக்கிறாங்க. - செத் ரோகனா? 280 00:14:44,051 --> 00:14:46,470 ஆமா, அவங்க சிரிச்சுக்கிட்டே இன்னொருத்தர்கிட்ட சொல்றதை நான் கேட்டேன். 281 00:14:47,012 --> 00:14:48,013 ஹாய், லேடீஸ். 282 00:14:49,097 --> 00:14:50,349 - ஜேஸ். - என்ன? 283 00:14:51,475 --> 00:14:53,351 - அப்போ நீ யாருன்னு அவங்க நினைக்கிறாங்க? - உன்னோட பி.ஆர்-னு. 284 00:14:53,352 --> 00:14:55,937 அதுல எனக்கு ஒண்ணும் வருத்தப்படல. 285 00:14:55,938 --> 00:14:59,524 செத் ரோகனோட பி.ஆர். கண்டிப்பா ஒரு கெத்தான ஆளா தான் இருப்பாங்கன்னு நினைக்கிறேன். 286 00:14:59,525 --> 00:15:01,193 ஆமா. நீ நல்லா பண்ணிருக்க. 287 00:15:04,363 --> 00:15:05,947 நேர்ல பார்க்கும்போது உங்க தலை ரொம்ப பெருசா இருக்கு. 288 00:15:05,948 --> 00:15:07,950 ஆமா. நிறைய பேர் இப்படி சொல்லிருக்காங்க. 289 00:15:17,292 --> 00:15:19,043 - ஓ, ஹலோ. நாங்கதான் பேசுறோம். - ஹாய். 290 00:15:19,044 --> 00:15:20,879 சும்மா எப்படி இருக்கீங்கன்னு கேட்க கூப்பிட்டோம். 291 00:15:21,547 --> 00:15:23,297 எல்லாம் எப்படி போகுது? எல்லாம் ஓகேவா? 292 00:15:23,298 --> 00:15:25,341 - ஆமா, நல்லா இருக்கு. - அவன் ஒரே விஷயத்தை யோசிச்சுட்டு இருக்கானா? 293 00:15:25,342 --> 00:15:27,009 கடவுளே. நீங்க அதையே தான் யோசிச்சுட்டு இருக்கீங்க. 294 00:15:27,010 --> 00:15:28,595 அவன் சூப்பரா இருக்கான். 295 00:15:29,346 --> 00:15:31,722 நான் கிளம்பணும். உங்க பிரண்ட்ஸை பார்க்காம ஜாலியா என்ஜாய் பண்ணுங்க. 296 00:15:31,723 --> 00:15:33,559 - சரி, ஓகே. பை, லவ் யூ… - பை! 297 00:15:36,520 --> 00:15:38,604 நீ பிஸியா இருக்கியா? நான் இந்த வேர்ஹவுஸை காலி பண்ணணும். 298 00:15:38,605 --> 00:15:39,689 என்ன? ஏன்? 299 00:15:39,690 --> 00:15:41,190 கடவுளே, அவங்க வாடகையை ஏத்திட்டாங்க. 300 00:15:41,191 --> 00:15:43,318 உன் காரை யூஸ் பண்ணிக்கலாமா? ஏன்னா எனக்கு இங்கே வண்டி ஓட்ட அனுமதி இல்ல. 301 00:15:44,152 --> 00:15:46,822 இல்ல ஸ்பெயின்லயும் தான். ஆனா இங்க செக் பண்ணுவாங்க, அதான்… 302 00:15:47,573 --> 00:15:48,990 சரி. அதாவது, சரிதான். 303 00:15:48,991 --> 00:15:50,825 நான் வேணும்னா இந்த வாரம், கடைசியில வரட்டுமா? 304 00:15:50,826 --> 00:15:52,869 - இல்ல, நான் இன்னைக்கே காலி பண்ணணும். - இன்னைக்கா? 305 00:15:52,870 --> 00:15:54,705 ஆமா, ரொம்ப நேரம் ஆகாது. நான் எல்லாத்தையும் பேக் பண்ணிட்டேன். 306 00:15:55,497 --> 00:15:56,999 சரி, சரி… 307 00:15:58,500 --> 00:16:02,087 இருங்க, எனக்கு கொஞ்சம்… சரி, சரி. ஆமா. நான் என் சாவியை எடுத்துட்டு வர்றேன். 308 00:16:03,088 --> 00:16:04,506 நான் கிட்டத்தட்ட… எல்லாத்தையும் பேக் பண்ணிட்டேன். 309 00:16:05,757 --> 00:16:07,968 உன்கிட்ட ஏதாவது பாக்ஸ் இருந்தா எடுத்துட்டு வா, சரியா? 310 00:16:10,637 --> 00:16:11,805 அப்புறம் டேப்பும்! 311 00:16:13,473 --> 00:16:14,891 அப்புறம் பிளாஸ்டிக் பைகளும்! 312 00:16:14,892 --> 00:16:18,936 டைலர், நான் வெளிய போகணும். கேட் ஏதோ உதவி கேட்குறாங்க. 313 00:16:18,937 --> 00:16:20,563 - நீ இதை விளையாடிட்டு தான் இருப்ப, இல்லையா? - ஆமா. 314 00:16:20,564 --> 00:16:21,607 சரி, விசித்திரமா எதுவும் பண்ணிடாதே! 315 00:16:33,493 --> 00:16:34,619 ஜெல்லிஃபிஷ்களின் மகத்தான பயணங்கள் 316 00:16:34,620 --> 00:16:37,496 டைனோசர்களுக்கு முன்பே, ஜெல்லிஃபிஷ்கள் இருந்தன. 317 00:16:37,497 --> 00:16:40,167 பூமியிலேயே பல உறுப்புகள் கொண்ட மிகத் தொன்மையான உயிரினம்… 318 00:16:43,629 --> 00:16:44,795 இது கேவலமா இருக்கு. 319 00:16:44,796 --> 00:16:46,297 வா, இங்கிருந்து போயிடலாம். ப்ளீஸ். 320 00:16:46,298 --> 00:16:49,258 எங்க? கன்னியாஸ்திரிகள் மடத்துக்கா? 321 00:16:49,259 --> 00:16:50,593 அங்க நாம பாதுகாப்பா இருப்போம். ஏன்? 322 00:16:50,594 --> 00:16:52,554 ஏன்னா எல்லாரும் கல்யாணத்துக்கு ரெடியாக இங்கேதான் இருப்பாங்க. 323 00:16:53,305 --> 00:16:56,390 பாரு, ஒன்னு அங்க போகணும் இல்லன்னா பேசின்ல தண்ணியை நிரப்பி அது வடியறதை வேடிக்கை பாக்கணும். 324 00:16:56,391 --> 00:16:57,392 நீயே முடிவு பண்ணு. 325 00:16:58,310 --> 00:16:59,811 - வா போலாம்! - சரி. 326 00:17:02,147 --> 00:17:04,815 நீங்க இந்த இடத்தை காலி பண்ணுறது வருத்தமா இருக்கு. உங்களுக்கு இது பிடிச்சது. 327 00:17:04,816 --> 00:17:07,068 ஆமா. இந்த ஆளுங்களுக்கு எல்லாம் காசு தான் முக்கியம். 328 00:17:07,069 --> 00:17:09,694 நிஜமாவா? இது ஏதோ கலைஞர்களோட குழுமம்னு நினைச்சேன். 329 00:17:09,695 --> 00:17:12,532 ஆமா, ஆனா அவங்க எல்லாரும் பெரிய ஆர்ட் கம்பெனிங்க கிட்ட காசு வாங்கிட்டு இருக்காங்க. 330 00:17:15,577 --> 00:17:16,994 இது கஷ்டம்னு எனக்குத் தெரியும், ஆனா, 331 00:17:18,079 --> 00:17:21,414 நான் என்ன சொல்ல வரேன்னா, நீங்க இப்படி முயற்சி பண்றதுக்கெல்லாம் 332 00:17:21,415 --> 00:17:23,167 நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கேன். 333 00:17:24,545 --> 00:17:25,963 நீங்க இங்க இருந்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது. 334 00:17:29,132 --> 00:17:31,009 டைலர் அவனோட பிரேக்-அப்ல இருந்து எப்படி மீண்டு வர்றான்? 335 00:17:31,718 --> 00:17:33,094 ஓ, ஆமா. அவன் நல்லா இருக்கான். 336 00:17:33,095 --> 00:17:34,179 - அப்படியா? - ஆமா. 337 00:17:35,013 --> 00:17:38,432 ஜெல்லிஃபிஷ்கள் நீரோட்டத்தின் வழிகாட்டுதலோடு தனியாகப் பயணம் செய்யும். 338 00:17:38,433 --> 00:17:41,477 ஆனா அந்த நீரோட்டங்கள் ஒன்றாக சேரும்போது, மற்றவையும் வந்து சேரும். 339 00:17:41,478 --> 00:17:43,730 ஒரு பெரிய கூட்டமே ஒன்றாக சேர்ந்து நகரும். 340 00:17:44,314 --> 00:17:47,775 கடல் தன் பிடியைத் தளர்த்தும்போது, அவை மீண்டும் பிரிக்கப்படுகின்றன, 341 00:17:47,776 --> 00:17:50,487 அப்புறம் ஜெல்லிஃபிஷ் மீண்டும் தனியாக… மிதந்து செல்கிறது. 342 00:17:52,614 --> 00:17:54,907 இது… இது எங்கே எடுத்தது? 343 00:17:54,908 --> 00:17:56,325 அது ஹாம்ப்ஸ்டெட் ஹீத். 344 00:17:56,326 --> 00:17:58,035 நீ சின்ன பிள்ளையா இருந்தப்ப உன்னை அங்க வாக்கர்ல கூட்டிட்டு போவேன். 345 00:17:58,036 --> 00:17:59,120 ஜூலை 11, 2011 346 00:17:59,121 --> 00:18:00,454 - அப்புறம் நீ வாத்துங்க மேல பிரெட்டை வீசுவ. - கொடுப்பேனா? 347 00:18:00,455 --> 00:18:01,957 இல்ல. கண்டிப்பா அதுங்க மேல வீசுவ. 348 00:18:03,166 --> 00:18:04,584 நான் சின்ன வயசுல எப்படி இருந்தேன்? 349 00:18:04,585 --> 00:18:05,668 பயங்கரமா இருப்ப. 350 00:18:05,669 --> 00:18:06,836 நான் உனக்கு இந்த பொம்மைகளை வாங்கித் தந்தேன் 351 00:18:06,837 --> 00:18:09,130 ஆனா நீ அதோட கை கால்களை எல்லாம் பிச்சிருவ. 352 00:18:09,131 --> 00:18:10,715 அவ்வளவு கோபம். 353 00:18:10,716 --> 00:18:12,926 - நான் ஏன் அப்படி இருந்தேன்? - எனக்குத் தெரியல. 354 00:18:14,303 --> 00:18:16,053 நீங்க ஏன் என்னை "பிரின்சஸ்"-னு கூப்பிட்டீங்க? 355 00:18:16,054 --> 00:18:19,015 பழைய ஈஸ்ட் எண்ட் பழக்கம். அந்த காலத்துல எல்லாரையும் பிரின்சஸ்னு தான் கூப்பிடுவாங்க. 356 00:18:19,016 --> 00:18:22,018 நடுத்தர வர்க்கத்து ஆளுங்க அந்தப் பேர் கொண்ட யாரையும் தத்தெடுக்க விரும்பல. 357 00:18:22,019 --> 00:18:24,730 உன்னோட உண்மையான அடையாளத்தை புரிஞ்சுக்காதவங்க உன் வாழ்க்கையில இருக்கவே தகுதி இல்லாதவங்க. 358 00:18:25,981 --> 00:18:28,232 நீங்க ஏன் விட்டுட்டு போனீங்கன்னு எனக்கு இன்னும் முழுசா புரியல. 359 00:18:28,233 --> 00:18:30,694 உண்மையைச் சொல்லணும்னா, இன்னமும் நான் என்னை புரிஞ்சுக்க முயற்சி பண்ணுறேன். 360 00:18:31,403 --> 00:18:32,653 எங்களை பத்தி நினைச்சுப் பார்த்தீங்களா? 361 00:18:32,654 --> 00:18:33,739 எப்பவுமே. 362 00:18:38,911 --> 00:18:40,453 ஸ்பெயின்ல என்கிட்ட இன்னும் நிறைய ஃபோட்டோஸ் இருந்தது… 363 00:18:40,454 --> 00:18:41,537 கோ சாமுய் 2014. 364 00:18:41,538 --> 00:18:43,957 …ஆனா சூட்கேஸ்ல இடம் இல்லாததால அதையெல்லாம் தூக்கிப் போட வேண்டியதாயிடுச்சு. 365 00:18:44,458 --> 00:18:46,293 எதையும் விட்டுட்டு வர்றது எனக்குப் பிடிக்காது. 366 00:19:00,307 --> 00:19:02,934 சரி, இன்னைக்கு நாள் நல்லா அமையட்டும். கன்னியாஸ்திரீ மடம் மோசமா இருக்குமா என்ன? 367 00:19:02,935 --> 00:19:05,479 ஆமா, ரொம்ப ஜாலியா இருக்கும். அதனாலதான் டிஸ்னிலேண்ட்ல கூட ஒண்னு இருக்கு. 368 00:19:07,940 --> 00:19:09,024 நன்றி. 369 00:19:16,573 --> 00:19:18,909 - ஹே, மேடம்! தொடாதீங்க. - வேண்டாம். அதைத் தொடாதே. 370 00:19:21,954 --> 00:19:22,955 சாரி. 371 00:19:28,043 --> 00:19:29,211 இல்ல, இல்ல. 372 00:19:34,758 --> 00:19:35,759 ஆமா. 373 00:19:39,346 --> 00:19:41,764 நாம கிளம்பலாமா? இது ரொம்ப போரடிக்குது. 374 00:19:41,765 --> 00:19:43,976 - சீக்கிரம், நிக், ஓடிடு! - ஹே. 375 00:19:47,938 --> 00:19:50,023 வா. போய் ஏதாவது குடிக்கலாம். 376 00:19:51,108 --> 00:19:52,109 ஹலோ. 377 00:20:09,710 --> 00:20:11,460 சரி, பிரின்சஸ் கிட்ட இருந்து பதில் இல்ல. 378 00:20:11,461 --> 00:20:15,131 ரெண்டு பேரும் செத்துட்டாங்கன்னு நினைக்கிறேன். அவங்களை பார்த்துக்க கரேனை கூப்பிட்டிருக்கலாம். 379 00:20:15,132 --> 00:20:18,719 நீ கொஞ்ச நேரத்துக்கு அவங்களை பத்தி நினைக்காம இருக்க முயற்சி பண்ணலாமே? 380 00:20:19,344 --> 00:20:20,429 முயற்சி பண்ணிப் பாரு. 381 00:20:23,265 --> 00:20:25,600 ஓ, இல்ல, இல்ல, இல்ல. இல்ல, ஏதோ கீழ விழுற மாதிரி இருக்கு. 382 00:20:25,601 --> 00:20:26,684 சரி, நான் ஒண்ணு சொல்லுறேன். 383 00:20:26,685 --> 00:20:29,437 நீ அவங்கள பத்தி நினைக்கிறதை நிறுத்து, நான் அவங்கள பத்தி கொஞ்ச நேரம் நினைக்கிறேன். இது ஓகேவா? 384 00:20:29,438 --> 00:20:30,605 - ஓ, நிஜமாவா? - ஆமா. 385 00:20:30,606 --> 00:20:32,064 - சத்தியமா? - நான் இப்போ ஆரம்பிக்கட்டுமா? 386 00:20:32,065 --> 00:20:33,734 - சரி. - ஒண்ணு, ரெண்டு, மூணு. 387 00:20:40,115 --> 00:20:42,201 ஓ, இது ரொம்ப நல்லா இருக்கு. 388 00:20:44,077 --> 00:20:46,079 கடவுளே, மத்தவங்களுக்கும் இப்படித்தான் இருக்குமா? 389 00:20:47,247 --> 00:20:48,373 அப்படியே இரு. 390 00:20:53,795 --> 00:20:58,425 சரி, அந்த யோசனை ஒரு உண்மையை புரிய வச்சிருக்கு… 391 00:20:59,176 --> 00:21:01,011 வாவ், இதுக்கு டக்குனு பலன் கிடைக்கும்னு நினைக்கல. 392 00:21:02,679 --> 00:21:04,097 நான் இவ்வளவு நாளா தப்பா பண்ணிட்டு இருந்திருக்கேன். 393 00:21:06,183 --> 00:21:08,143 எல்லாம் கைமீறி போகும்னு நான் காத்துட்டு இருந்தேன். 394 00:21:09,186 --> 00:21:12,731 ஒருவேளை பிரின்சஸ் நான் நினைச்சதை விட ரொம்ப பக்குவமானவளோ என்னவோ. 395 00:21:13,815 --> 00:21:15,150 இப்போ இருக்குற எல்லா பசங்களும் அப்படித்தான். 396 00:21:16,610 --> 00:21:18,612 இப்போ 17 வயசுங்கிறது, அப்போ 30 வயசு மாதிரி. 397 00:21:19,154 --> 00:21:22,281 அப்புறம் 40 வயசுங்கிறது இப்போ 30 வயசு மாதிரி, அதனால நாம ரெண்டு பேரும் ஒரே வயசுதான். 398 00:21:22,282 --> 00:21:23,534 கண்டிப்பா, ஆமா. 399 00:21:24,910 --> 00:21:26,328 நான் எதையும் குறையா பார்க்கிறதை நிறுத்தணும். 400 00:21:28,288 --> 00:21:31,333 சில நேரங்கள்ல விஷயங்கள் நல்லபடியா நடக்கும்ங்குறதை நான் கத்துக்கணும். 401 00:21:34,837 --> 00:21:36,296 உனக்காக நான் எதை பத்தியாவது கவலைப்படட்டுமா? 402 00:21:38,632 --> 00:21:42,052 சரி, நீ காலேஜ் பத்தி கொஞ்ச நேரம் கவலைப்படலாம். 403 00:21:43,887 --> 00:21:46,014 எனக்கு ஒரு சமூக சேவகரா இருக்க தகுதி இருக்கான்னு தெரியல, நிக். 404 00:21:46,890 --> 00:21:50,018 எனக்கு பிடிச்சவங்களுக்கு உதவி செய்யுற அளவுக்கு என்கிட்ட தெம்பு இருக்குன்னு நினைக்கிறேன். 405 00:21:51,687 --> 00:21:53,438 ஆனா மத்த எல்லாருக்கும் என்னால அதை செய்ய முடியும்னு தோணல. 406 00:21:55,607 --> 00:21:58,317 சரி… அப்போ நீ என்ன பண்ணலாம்னு இருக்க? 407 00:21:58,318 --> 00:22:00,153 மறுபடியும் டாக்ஸி டிரைவரா போகலாம்னு நினைக்கிறேன். 408 00:22:01,697 --> 00:22:07,286 சில நேரங்கள்ல விஷயங்கள் சரியா அமையாதுங்கிறதையும் நான் கத்துக்கணும்னு நினைக்கிறேன். 409 00:22:09,538 --> 00:22:12,040 எனக்குத் தெரியல. எனக்குத் தெரியல. 410 00:22:13,375 --> 00:22:15,919 இரு. அப்போ நாம ரெண்டு பேருமே மொக்கைங்கிறதுதான் நாம கண்டுபிடிச்ச உண்மையா? 411 00:22:16,795 --> 00:22:17,963 ஆமா, ஆனா அப்படி இருக்குறதுல தப்பு இல்ல. 412 00:22:19,339 --> 00:22:20,423 அது வந்து, இந்த காட்சியைப் பாரு. 413 00:22:20,424 --> 00:22:23,427 ஜெயிக்கிற ஒரு ஜோடிக்கு இது எப்படி தெரியுமோ, அதே மாதிரிதான் நமக்கும் தெரியுது. 414 00:22:35,314 --> 00:22:37,398 சரி, இந்த புது இடம் ரொம்ப தூரமா? 415 00:22:37,399 --> 00:22:39,525 ஏன்னா நான் டைலர் கிட்ட போய் அவன் நல்லா இருக்கான்னு பார்க்கணும். 416 00:22:39,526 --> 00:22:40,569 பாவம் டைலர். 417 00:22:41,236 --> 00:22:42,237 இரு. 418 00:22:50,621 --> 00:22:51,704 என்ன பண்ணுறீங்க? 419 00:22:51,705 --> 00:22:53,289 புது வீடு தேடிட்டு இருக்கேன். 420 00:22:53,290 --> 00:22:54,374 என்ன? 421 00:22:55,334 --> 00:22:56,667 இப்போதான் தேடுறீங்களா? 422 00:22:56,668 --> 00:22:57,752 ஆமா, ஏன்? 423 00:22:57,753 --> 00:23:00,087 இப்போ வரைக்கும் ஏன் தேடாம இருந்தீங்க? 424 00:23:00,088 --> 00:23:02,256 இப்போதான் வேலை போச்சு, வீட்டை விட்டும் வெளிய வந்திருக்கேன். 425 00:23:02,257 --> 00:23:03,716 ஐயோ, கடவுளே. 426 00:23:03,717 --> 00:23:07,179 அம்மா, இது ரொம்ப டென்ஷனா இருக்கு! உங்க வேலைக்கு என்ன ஆச்சு? 427 00:23:07,679 --> 00:23:09,096 வந்து, அது சரியா அமையல. 428 00:23:09,097 --> 00:23:10,681 ஆனா அது ரொம்ப நல்லா போயிட்டு இருந்துச்சே! 429 00:23:10,682 --> 00:23:12,391 ஒரு விஷயம் உருப்படியா மாறணும்னா, 430 00:23:12,392 --> 00:23:14,352 அது எவ்வளவு காலம் நல்லா போகணும்னு உனக்கு தெரியுமா? 431 00:23:14,353 --> 00:23:16,979 எனக்கு எதுவுமே ரொம்ப நேரத்துக்கு சரியா அமையாது. 432 00:23:16,980 --> 00:23:18,064 நாம ஒரு பிளான் வச்சிருந்தோம், அம்மா. 433 00:23:18,065 --> 00:23:21,442 அந்த பிளானோட கடைசியில நாம போய் சேர வேண்டிய இடத்தை என்னால பார்க்க முடியல. 434 00:23:21,443 --> 00:23:23,612 அதெல்லாம் வேற மாதிரி வாழ்க்கை வாழுறவங்களுக்கு. 435 00:23:24,196 --> 00:23:25,197 சரி. 436 00:23:25,822 --> 00:23:28,324 அப்போ என்ன, நீங்க கார்லயே தூங்க போறீங்களா? 437 00:23:28,325 --> 00:23:29,742 நான் அந்த அளவுக்கு யோசிக்கல. 438 00:23:29,743 --> 00:23:31,078 ராத்திரி ஆயிடுச்சு! 439 00:23:31,995 --> 00:23:34,080 ஏதாவது ஒரு வழி பிறக்கும், சரியா? 440 00:23:34,081 --> 00:23:36,083 எப்பவும் அப்படி நடக்கும். எல்லாம் சரியாயிடும். 441 00:23:55,185 --> 00:23:57,645 மன்னிச்சிடுங்க, ஒரு நிமிஷம். என்ன நடக்குது? 442 00:23:57,646 --> 00:23:59,147 மணமகள் போயிட்டாள். 443 00:23:59,898 --> 00:24:01,232 அவள் இறந்துட்டாளா? 444 00:24:01,233 --> 00:24:03,318 ஐயோ, இல்ல. இல்ல, இல்ல. ஓடிப் போயிட்டாள். 445 00:24:04,611 --> 00:24:06,904 - யாராலயும் கண்டுபிடிக்க முடியல. - அடக் கடவுளே. 446 00:24:06,905 --> 00:24:07,948 எனக்குத் தெரியும். 447 00:24:10,284 --> 00:24:12,119 ஓ, இது ரொம்ப மோசமா இருக்கே. 448 00:24:13,996 --> 00:24:17,331 'நாக்டு அப்' படம் ரொம்ப நாள் ஷூட்டிங் போச்சு, ஆனா நாம ஒரு குடும்பம் மாதிரி ஆயிடுவோம், இல்லயா? 449 00:24:17,332 --> 00:24:18,708 கடவுளே, ஜேசன்… 450 00:24:18,709 --> 00:24:20,084 எனக்கு நல்ல நினைவுகள் இருக்கு. உங்களைச் சந்திச்சதுல சந்தோஷம், நண்பா. 451 00:24:20,085 --> 00:24:21,419 ஆமா, என்ன? 452 00:24:21,420 --> 00:24:23,921 லாரி காணாம போயிட்டாள். அவ ஓடிப் போயிட்டாள். 453 00:24:23,922 --> 00:24:25,548 நீ என்ன சொல்ற? அவ எங்க போயிருப்பா? 454 00:24:25,549 --> 00:24:26,924 நல்ல கேள்வி, ஜேஸ். பிரச்சனை முடிஞ்சது. 455 00:24:26,925 --> 00:24:30,762 நாம ஒரு மலை மேல இருக்குற ஹோட்டல்ல இருக்கோம். அவ எங்கே போய் ஒளிஞ்சுக்க முடியும்? 456 00:24:50,157 --> 00:24:51,325 - ஆமா. அவ அங்கதான் இருக்கா. - அப்படியா? 457 00:24:52,284 --> 00:24:54,453 நாம இப்ப என்ன பண்ணலாம்? நீ அந்த வெயிட்டர்கிட்ட சொல்லுறியா இல்ல… 458 00:24:55,245 --> 00:24:57,247 ஜேஸ், அவ ரொம்ப சோகமா இருக்க மாதிரி தெரியுது. 459 00:24:58,290 --> 00:24:59,458 உண்மையாவே சோகமாத்தான் இருக்கா. 460 00:25:02,127 --> 00:25:03,212 ஓ, இது ரொம்ப அபத்தமா இருக்கு. 461 00:25:07,424 --> 00:25:08,842 - லாரி? - லாரி? 462 00:25:11,678 --> 00:25:14,805 ஜேசன்? என்ன? இரு, நிக்கி? நீங்க இங்கே என்ன பண்ணுறீங்க? 463 00:25:14,806 --> 00:25:15,891 உனக்குத் தெரியுமா… 464 00:25:17,684 --> 00:25:18,727 அது என்னன்னு உனக்குத் தெரியுமா? 465 00:25:19,978 --> 00:25:21,062 - சரி. - சரி. 466 00:25:21,063 --> 00:25:23,689 சரி, இந்த இடத்தோட ஃபோட்டோக்களை நீ காட்டுனது ஞாபகம் இருக்கா? 467 00:25:23,690 --> 00:25:26,359 - இந்த ஹோட்டல். ஆமா. - நீ… நீ அதை குரூப்ல போட்டல? 468 00:25:26,360 --> 00:25:27,902 நான் அப்பவே, ஆஹ், இது ரொம்ப சூப்பரா இருக்கும்னு நினைச்சேன். 469 00:25:27,903 --> 00:25:30,404 கடைசியில உன்னோட கல்யாணம் நடக்குற அதே தேதியிலயே நாங்களும் இங்கே புக் பண்ணிட்டோம்! 470 00:25:30,405 --> 00:25:31,489 அதே தேதியில! 471 00:25:31,490 --> 00:25:33,157 என்னது? இது ரொம்ப ஆச்சரியமா இருக்கே! 472 00:25:33,158 --> 00:25:35,244 - ஆமா. பைத்தியக்காரத்தனம். - இது நிஜமாவே ஆச்சரியமா இருக்கு. 473 00:25:39,456 --> 00:25:42,291 - உங்களை அழைக்காதது ரொம்ப வருத்தமா இருக்கு. - ஆமா. 474 00:25:42,292 --> 00:25:46,462 செலவு ரொம்ப அதிகமாயிட்டே போச்சு, அதனாலதான் ஒரு சின்ன குரூப்போட முடிச்சுக்கிட்டோம். 475 00:25:46,463 --> 00:25:48,047 அப்புறம் ஒரு ஆஸ்டியோபாத்தையும். 476 00:25:48,048 --> 00:25:49,383 என்ன சொல்ற, நிக்கி? 477 00:25:50,133 --> 00:25:54,220 அது ஒரு பழைய கல் பாதை. 478 00:25:54,221 --> 00:25:56,722 - ஓ, ரொம்ப அழகான பழைய கல் பாதை. - பிரமாதம். 479 00:25:56,723 --> 00:25:58,474 - இது கல்லா? - அது கல் மாதிரிதான் தெரியுது. 480 00:25:58,475 --> 00:25:59,476 அது கல்லுன்னுதான் நினைக்கிறேன். 481 00:25:59,977 --> 00:26:01,019 வித்தியாசமான தரை அமைப்பு. 482 00:26:03,564 --> 00:26:04,773 உனக்கு ஒண்ணுமில்லயே? 483 00:26:05,816 --> 00:26:07,191 உன்னை எல்லாரும் தேடுறாங்கன்னு நினைக்கிறேன். 484 00:26:07,192 --> 00:26:08,235 ஆமா. 485 00:26:11,738 --> 00:26:12,906 என்ன நடக்குது? 486 00:26:21,623 --> 00:26:26,253 நானும் கிளேரும் மட்டும் ஒண்ணா இருந்தப்ப, எங்களை பத்தி எனக்கு எந்த சந்தேகமும் இல்ல. 487 00:26:28,005 --> 00:26:29,590 இப்போ எல்லாரும் இங்கே பறந்து வந்துட்டு இருக்காங்க. 488 00:26:32,342 --> 00:26:33,509 இது சீரியஸான விஷயம். 489 00:26:33,510 --> 00:26:34,635 ஆமா. 490 00:26:34,636 --> 00:26:36,054 இது என்னோட மீதி வாழ்க்கை. 491 00:26:37,598 --> 00:26:40,267 இனிமே நான் நிர்வாணமா பார்க்கப் போற கடைசி பெண் அவள்தான். 492 00:26:41,310 --> 00:26:44,061 வந்து, எங்களுக்குக் கல்யாணம் ஆகி எட்டு வருஷம் ஆகுது… 493 00:26:44,062 --> 00:26:45,313 - எட்டு வருஷம், ஆமா. - …ஆமா. 494 00:26:45,314 --> 00:26:47,565 அந்த நேரத்துல நான் ஒரு 30 பெண்களை நிர்வாணமா பார்த்திருப்பேன்னு நினைக்கிறேன். 495 00:26:47,566 --> 00:26:49,192 - அப்படியா? - ஆமா, ஏதோ ஒரு வழியில. 496 00:26:49,193 --> 00:26:51,944 ஆமா, வருஷத்துக்கு சராசரியா நாலு பேர். 497 00:26:51,945 --> 00:26:53,155 - சரி. - நீங்க கணக்கு எடுத்தா, 498 00:26:53,822 --> 00:26:56,116 கலை கண்காட்சிகள், ஃபிரெஞ்சு கடற்கரைகள். 499 00:26:56,617 --> 00:27:00,036 ஓ, நான் சமீபத்துல தெரியாம யோகா கிளாஸ்ல இருக்குற பெண்கள் உடை மாத்துற அறைக்குள்ள போயிட்டேன். 500 00:27:00,037 --> 00:27:01,954 சொல்லப்போனா, அந்த 30-ல எட்டு அங்கேயே முடிஞ்சது. 501 00:27:01,955 --> 00:27:04,290 சரி. நாம பிரச்சனயோட ஆணிவேர பத்தி பேசவே ஆரம்பிக்கலன்னு நினைக்கிறேன். 502 00:27:04,291 --> 00:27:06,042 இல்ல, இல்ல, இல்ல. இல்ல, இல்ல, இல்ல. இல்ல, 503 00:27:06,043 --> 00:27:08,045 - இது நிஜமாவே கொஞ்சம் உதவியா இருக்கு. - அப்படியா? 504 00:27:10,547 --> 00:27:12,049 ஒருவேளை, அது ஒரு யோசனையா இருக்கலாம். 505 00:27:13,050 --> 00:27:15,469 நாம அதை வெளியில சொல்லும்போது, அது அப்படியே மறைஞ்சுடும். 506 00:27:17,679 --> 00:27:19,181 இப்போ இதுல ஆன்ட்டிங்க வேற தலையிட ஆரம்பிச்சிட்டாங்க. 507 00:27:22,100 --> 00:27:27,605 ஒருவேளை, உன்னோட மீதி வாழ்க்கையை அவளோட கழிக்கப் போறேன்னு யோசிக்காதே. 508 00:27:27,606 --> 00:27:28,856 ஆமா. 509 00:27:28,857 --> 00:27:30,859 அவ இல்லாம உன் வாழ்க்கை எப்படி இருக்கும்னு கொஞ்சம் யோசிச்சுப் பாரு. 510 00:27:31,735 --> 00:27:33,362 அப்போ உனக்கு எப்படித் தோணுது? 511 00:27:34,446 --> 00:27:36,698 - எனக்குத் தெரியல. ரொம்ப கொடுமையா தோணுது. - அவ்வளவுதான் விஷயம். 512 00:27:37,908 --> 00:27:39,660 உண்மையான கேள்வி என்னன்னா… 513 00:27:41,662 --> 00:27:43,247 நாளைக்கு அவளோட நேரம் கழிக்க நீ விரும்புறியா? 514 00:27:43,956 --> 00:27:45,122 ஆமா, விரும்புறேன். 515 00:27:45,123 --> 00:27:46,708 அப்ப போய் அதைச் செய். 516 00:27:48,168 --> 00:27:52,214 அப்புறம் அடுத்த நாள், அதுக்கு அடுத்த நாள்னு அதையே தொடர்ந்து செய். 517 00:28:02,182 --> 00:28:03,683 - நீ நல்லா இருக்கியா? - ஆமா. 518 00:28:03,684 --> 00:28:04,934 - அப்படியா? - ஆமா, நீ நல்லா இருக்க. 519 00:28:04,935 --> 00:28:06,018 - ஆமா. - ஆமா. 520 00:28:06,019 --> 00:28:07,104 அப்போ, வா போலாம். வா. 521 00:28:11,817 --> 00:28:13,651 - வருஷத்துக்கு நாலு பேரா? - ஆமா, வருஷத்துக்கு நாலு. 522 00:28:13,652 --> 00:28:14,735 இருந்தாலும், அது வந்து, 523 00:28:14,736 --> 00:28:16,821 நீ எப்போ வேணும்னாலும் பெண்கள் உடை மாத்துற அறைக்குள்ள போகலாம், இல்லயா? 524 00:28:16,822 --> 00:28:17,906 அதனால உனக்கு இன்னும் அதிகமா இருக்கும். 525 00:28:18,407 --> 00:28:21,451 - அட, ஆமா. - அது உண்மைதான். ஹ்ம். 526 00:28:57,863 --> 00:28:59,323 பெரிதாகக் கனவு காணுங்கள்! அன்புடன் செத் X 527 00:29:05,370 --> 00:29:07,206 {\an8}பிரெட்ஸல்ஸ் 528 00:29:51,124 --> 00:29:52,626 துணிகள் & இதர பொருட்கள் 529 00:29:57,506 --> 00:29:59,549 குழந்தைகளைப் பார்த்துக்க நாம கரேனை கூப்பிட்டிருக்கணும். 530 00:29:59,550 --> 00:30:00,551 ஆமா. 531 00:30:56,648 --> 00:30:58,650 வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன்