1 00:00:08,592 --> 00:00:10,511 இது ரொம்ப விசித்திரமா இருக்கு. 2 00:00:11,261 --> 00:00:13,680 - அது இங்கதான் இருந்தது. - அது… அது எப்படி இருக்கும்? 3 00:00:14,473 --> 00:00:15,557 கேரட் கேக் மாதிரி இருக்கும். 4 00:00:15,641 --> 00:00:17,518 - அதுல கிரீம் ஏதாவது இருக்குமா, இல்ல… - இல்ல. 5 00:00:17,601 --> 00:00:18,977 அந்த ஐசிங் என்ன கலர்ல இருந்தது? 6 00:00:19,061 --> 00:00:22,314 இதக் கேளு, நீ எந்த கேரட் கேக்கைப் பார்த்தாலும், அத கொஞ்சம் என்கிட்ட காட்டுறியா? 7 00:00:22,397 --> 00:00:23,774 அது நிஜமாவே இங்கதான் இருந்தது. 8 00:00:23,857 --> 00:00:25,692 இல்ல, என்ன நடந்திருக்கும்னு எனக்கு… 9 00:00:31,406 --> 00:00:32,406 ஹாய். 10 00:00:34,535 --> 00:00:35,827 பாரு, அவளை தேவையில்லாம கோபப்படுத்தாத. 11 00:00:35,911 --> 00:00:37,162 என்னது? நான் எதுவும் பண்ணலையே. 12 00:00:37,704 --> 00:00:39,248 என்ன? அவ என்னை என்னைக்குத்தான் மன்னிப்பாளோ? 13 00:00:39,998 --> 00:00:41,041 எனக்குத் தெரியும் 14 00:00:41,124 --> 00:00:42,626 அவளோட அம்மாவை கண்டுபிடிச்ச விஷயத்தை நான் அவகிட்ட சொல்லல, 15 00:00:42,709 --> 00:00:45,379 அது அவ்வளவு நல்ல விஷயம் இல்லதான், ஆனா அது நிஜமாவே இந்தளவுக்கு மோசமானதா? 16 00:00:45,462 --> 00:00:49,508 அதாவது, ஹிட்லர் இங்க இருக்காரு. சரியா? அமால் க்லூனி இங்க இருக்காங்க. நான் எங்க இருக்கேன்? 17 00:00:49,591 --> 00:00:50,717 நீயே சொல்லு. 18 00:00:52,594 --> 00:00:54,012 நிஜமாவா? எலெனைத் தாண்டியா? 19 00:00:56,014 --> 00:00:57,724 சரி, இப்போ லான்ஸ் ஆம்ஸ்ட்ராங்கையும் தாண்டியாச்சு. 20 00:00:57,808 --> 00:00:59,142 சரி. 21 00:00:59,226 --> 00:01:01,645 பிரின்ஸ் ஆண்ட்ரூ இங்க இருக்காரு. இல்ல. உண்மையாவா? 22 00:01:03,063 --> 00:01:04,147 ஜாஸர்சைஸ்ல இருக்குற கேட்லின்னா? 23 00:01:04,230 --> 00:01:05,399 - ஆமா. - நீ நிஜமாவாத்தான் சொல்றியா? 24 00:01:05,482 --> 00:01:06,817 கெய்ட்லினை விட மோசமானவளா… 25 00:01:06,900 --> 00:01:09,194 சரி, இல்ல, மன்னிச்சிடு, நீ இத சீரியஸாவே எடுத்துக்க மாட்டேன்ற. 26 00:01:09,278 --> 00:01:10,696 பாரு, இதுக்கு நீ கொஞ்சம் அவகாசம் தரணும். 27 00:01:10,779 --> 00:01:12,197 அப்புறம், ஒரு முக்கியமான விஷயம், 28 00:01:12,281 --> 00:01:13,866 அடுத்த முறை யாரையாவது ரகசியமா பின்தொடர்றப்போ, 29 00:01:13,949 --> 00:01:15,576 அவங்களை உன் ஃபோன்ல செல்ஃபி எடுக்க அனுமதிக்காத. 30 00:01:15,659 --> 00:01:19,079 மறுபடியும் சொல்றேன், ஜேஸ், அவ அப்படிப் பண்ணுவாள்னு எனக்குத் தெரியாது. 31 00:01:19,162 --> 00:01:20,664 உனக்கு எப்படித் தெரியாம இருக்கும்? உண்மையாவே, நிக். 32 00:01:20,747 --> 00:01:23,083 ஏன்னா நான் எப்பவும் என் ஃபோட்டோக்களை பாத்துட்டே இருக்க மாட்டேன். 33 00:01:23,166 --> 00:01:24,168 எனக்கு ஒண்ணும் 23 வயசு கிடையாது. 34 00:01:24,251 --> 00:01:26,712 நான் ஃபோட்டோ எடுப்பேன், ஆனா பொறுப்பான பெரியவங்களைப் போல அதைத் திரும்ப பாக்கவே மாட்டேன்… 35 00:01:27,254 --> 00:01:28,964 நீங்க ரெண்டு பேரும் இன்னைக்கு நிஜமாவே கூட வரணுமா? 36 00:01:29,047 --> 00:01:30,132 - ஆமா. - ஆமா, 37 00:01:30,215 --> 00:01:32,551 ஆமா, எல்லா சந்திப்புகளும் கண்காணிப்புலதான் இருக்கணும்னு நாங்க நோவா கிட்ட ஒத்துக்கிட்டோம். 38 00:01:32,634 --> 00:01:36,013 தீம் பார்க்ல நீங்க எல்லாரும் என் கூடவே இருந்தா, நான் எப்படி என் அம்மாவைப் பத்தித் தெரிஞ்சுக்கிறது? 39 00:01:36,096 --> 00:01:37,931 அப்புறம் ஏன் எல்லாத்தையும் நீங்களே முடிவு பண்றீங்க? 40 00:01:38,015 --> 00:01:39,516 ஏன்னா நாங்கதான் பெரியவங்க, 41 00:01:39,600 --> 00:01:41,059 - நீ சின்னப் பொண்ணு, அதுதான் விஷயம். - ஆமா. 42 00:01:41,143 --> 00:01:44,605 அப்புறம் ஜேசன் காலேஜுக்குப் போற முதல் நாளுக்கு முன்னாடி தீம் பார்க் போறது சின்ன ட்ரீட்டா இருக்கும். 43 00:01:44,688 --> 00:01:46,106 ஆமா. 44 00:01:46,857 --> 00:01:49,610 கேளு, இன்னும் சில மாசங்கள்ல, எல்லாம் நல்லபடியா நடந்தா, 45 00:01:49,693 --> 00:01:52,404 கண்டிப்பா நீ அவங்க கூட தனியா நேரம் செலவிடலாம். நான் சத்தியம் பண்றேன். 46 00:01:52,487 --> 00:01:53,530 - நீங்க சத்தியம் பண்றீங்களா? - ஆமா. 47 00:01:53,614 --> 00:01:55,157 நீங்க திரும்பவும் பொய் சொல்லலைன்னு நான் எப்படி நம்புறது? 48 00:01:55,240 --> 00:01:57,910 - திரும்ப சொல்றேன், அது நல்லதுக்காக சொன்ன பொய். - நல்லதுக்காக. 49 00:01:57,993 --> 00:01:59,286 அப்புறம் என்னை மன்னிச்சிடு. 50 00:01:59,369 --> 00:02:02,122 இல்ல! நாங்க சின்னப் பிள்ளையா இருந்தப்போ எங்களை அடிக்கடி வேற இடத்துக்கு மாத்திக்கிட்டே இருந்தாங்க, 51 00:02:02,206 --> 00:02:06,043 அப்போ எல்லாரும் என்னைப் பாதுகாக்குறதுக்காக, "இனிமே எல்லாம் சரியாயிடும். 52 00:02:06,126 --> 00:02:07,711 கண்டிப்பா இதுதான் கடைசி இடமாற்றம்"னு பொய் சொன்னாங்க. 53 00:02:08,503 --> 00:02:12,257 நல்லது பண்றதா நினைச்சு நல்லவங்க என்கிட்ட சொன்னது தான், நான் கேட்டதுலயே மிகவும் மோசமான வார்த்தைகள். 54 00:02:12,341 --> 00:02:14,927 நான் மனசார மன்னிப்பு கேட்கிறேன். உண்மையாவே. 55 00:02:15,010 --> 00:02:16,512 சரி, இங்க பாரு, இங்க பாரு. 56 00:02:17,137 --> 00:02:22,392 இப்போ இருந்து, நாம எல்லாரும் நேர்மையாகவும் நம்பிக்கையோடும் 57 00:02:23,560 --> 00:02:25,604 - ஒன்னா சேர்ந்து முன்னேறிப் போவோம். சரியா? - சரி. சரி. 58 00:02:25,687 --> 00:02:27,189 மூணு நாளைக்கு முன்னாடியே நீங்க சாப்பிட்ட கேரட் கேக்கை, 59 00:02:27,272 --> 00:02:28,982 இப்போ அவங்க கூட சேர்ந்து தேடுற மாதிரி நடிச்சிட்டு இருக்கீங்க. 60 00:02:29,066 --> 00:02:30,734 - வாயை மூடு. - ஒரே மூச்சுல. 61 00:02:30,817 --> 00:02:32,986 அவரு அந்தப் பெட்டியை தெருவுல இருக்கற குப்பைத் தொட்டியில போட்டாரு. 62 00:02:33,904 --> 00:02:35,364 இருபது நிமிஷமா நாம அத தேடிட்டு இருக்கோம். 63 00:02:37,366 --> 00:02:39,201 "அந்த ஐசிங் என்ன கலர்ல இருந்தது?" 64 00:02:42,704 --> 00:02:43,705 கேம்டென் லாக் 65 00:03:01,890 --> 00:03:04,059 சரி, இது நல்லா இருக்குல? 66 00:03:05,602 --> 00:03:06,937 நாம ரெண்டு பேர் மட்டும் இருப்பது. 67 00:03:09,314 --> 00:03:10,732 அடுத்த ஒன்பது வாரங்களுக்கு. 68 00:03:13,443 --> 00:03:15,279 அப்பா அட்லாண்டிக் கடல்ல படகு ஓட்டிட்டு வர்ற வரைக்கும். 69 00:03:16,280 --> 00:03:19,783 அது அவருக்கு ரொம்ப முக்கியமான விஷயம், அதை அவர் செஞ்சே ஆகணும், ஆனா… 70 00:03:23,579 --> 00:03:26,081 நாம அவருக்கு ஃபோன் பண்ணலாமா? படகுல இருக்குறப்போ. 71 00:03:26,164 --> 00:03:27,249 சரி! 72 00:03:27,332 --> 00:03:29,960 சரி. இதோ பண்ணலாம். 73 00:03:31,420 --> 00:03:32,421 உன்னால பாக்க முடியுதா? 74 00:03:32,504 --> 00:03:33,505 ஓ, ஹலோ. 75 00:03:33,589 --> 00:03:35,465 - ஹலோ. - ஹாய், அப்பா. 76 00:03:35,549 --> 00:03:37,342 - ஹாய். - எப்படிப் போகுது? 77 00:03:37,426 --> 00:03:38,927 அங்க அமைதியா இருக்கா? 78 00:03:39,011 --> 00:03:42,014 இல்ல, இது உலகத்துலயே ரொம்ப பிஸியான கப்பல் போக்குவரத்துப் பாதை. 79 00:03:42,764 --> 00:03:44,766 நான்… ஓ. ஒரு டேங்கர் கப்பல் வருது. 80 00:03:44,850 --> 00:03:46,268 சாரி, சும்மா விசிலடிக்கணும். 81 00:03:47,352 --> 00:03:48,353 அட… 82 00:03:52,149 --> 00:03:55,152 என்கிட்ட இருக்குற ஃபிளேர்ஸும் தீர்ந்துடுச்சு, அது கொஞ்சம் கவலைக்குரிய விஷயம் தான். 83 00:03:55,235 --> 00:03:57,070 நீங்க அங்க போய் ரெண்டே வாரம்தான் ஆகுது. 84 00:03:57,154 --> 00:03:58,238 ஆமா எனக்குத் தெரியும், நான்… 85 00:03:59,323 --> 00:04:02,576 ஒரு கடற்பறவை மேல பொறுமையை இழந்துட்டேன். பரவாயில்ல. இனிமே அது வராதுன்னு நினைக்கிறேன். 86 00:04:02,659 --> 00:04:05,287 உங்களால விடுதலைச் சிலையை பார்க்க முடியுதான்னு இவளுக்குத் தெரியணுமாம். 87 00:04:05,370 --> 00:04:09,333 ஆமா, ஃபோன் பண்றதுக்கு முன்னாடி, நாம இந்த கேள்விகள் எல்லாம் தேவையான்னு சரிபார்த்துக்கலாமே. 88 00:04:09,416 --> 00:04:12,419 இந்த சேட்டிலைட் ஃபோன்ல சார்ஜ் ரொம்பக் கம்மியாதான் இருக்கு. 89 00:04:13,587 --> 00:04:16,548 ஸ்டீவி, நீ போய் பார்ட்டிக்கு ரெடியாகுறியா? 90 00:04:16,632 --> 00:04:17,841 போ. 91 00:04:18,341 --> 00:04:20,802 சரி, உன்னை நேசிக்கிறேன், செல்லம். இதையெல்லாம் உனக்காகத்தான் பண்றேன், ஞாபகம் வச்சுக்கோ! 92 00:04:23,430 --> 00:04:24,848 இது இன்னும் எவ்வளவு நாளைக்குத் தொடரும்? 93 00:04:24,932 --> 00:04:26,683 நான் இங்க பல வேலைகளைச் சமாளிச்சிட்டு இருக்கேன். 94 00:04:26,767 --> 00:04:27,851 என்ன வேலைகள், செல்லம்? 95 00:04:27,935 --> 00:04:29,019 ஸ்டீவி. 96 00:04:31,313 --> 00:04:33,857 மன்னிச்சிடு, சிக்னல் போயிடுச்சுன்னு நினைக்கிறேன். "ஸ்டீவி"ன்னு மட்டும்தான் கேட்டுச்சு. 97 00:04:35,025 --> 00:04:36,652 நீ வேணும்னா நண்பர்கள்கிட்ட உதவி கேட்கலாமே? 98 00:04:36,735 --> 00:04:38,153 எனக்கு நண்பர்கள் யாரும் இல்ல. 99 00:04:38,779 --> 00:04:41,198 என் முகம் எந்தக் குறையுமே இல்லாம ரொம்ப அழகா இருக்குறதால மத்த அம்மாக்களுக்கு என்னை பிடிக்காது. 100 00:04:41,281 --> 00:04:44,952 அதாவது, நாம இதப் பத்தி ஏற்கனவே பேசியிருக்கோம். உங்களால கொஞ்சம் வேகமாக முடிக்க முடியுமா? 101 00:04:45,035 --> 00:04:46,161 முடிஞ்ச வரை முயற்சி பண்ணிட்டுதான் இருக்கேன். 102 00:04:46,245 --> 00:04:50,165 அப்புறம்… இதையெல்லாம் ஸ்டீவிக்காகத்தான் பண்றீங்கன்னு அவகிட்ட சொல்லாதீங்க. 103 00:04:50,249 --> 00:04:52,835 ஏன்னா ஒருவேளை நீங்க இறந்துட்டா, அவ அந்த குற்ற உணர்ச்சியோடயே வாழ வேண்டியிருக்கும். 104 00:04:52,918 --> 00:04:54,586 சரி, புரிஞ்சுது. நான்… 105 00:04:54,670 --> 00:04:57,464 ஓ, அந்த கடற்பறவை திரும்ப வந்துடுச்சு. 106 00:04:57,548 --> 00:04:58,549 ஷூ! 107 00:04:58,632 --> 00:05:01,677 - ஸ்காட். ஸ்காட், உங்க சத்தம் சரியா கேட்கல. என்னால… - இது உன் சொத்து இல்ல! 108 00:05:02,177 --> 00:05:03,762 - உனக்கு வானம் இருக்கு! - என்ன… 109 00:05:04,429 --> 00:05:05,639 இறங்கு! 110 00:05:06,223 --> 00:05:07,474 நீ இந்தப் படகை விட்டுப் போகணும்! 111 00:05:13,230 --> 00:05:16,233 விக் ராஸ், கைதேர்ந்த தொழிலாளி. வேலையோட முதல் நாளே தாமதமா வந்ததுக்கு மன்னிச்சிடுங்க. 112 00:05:16,316 --> 00:05:17,317 நீங்க அஞ்சு நிமிஷம் முன்னாடியே வந்துட்டீங்க. 113 00:05:17,401 --> 00:05:18,402 குழாய் ஒழுகுற பிரச்சனை தானே? 114 00:05:19,027 --> 00:05:20,696 நீங்க என்ஜினை ஆஃப் பண்ணாமயே வந்துட்டீங்க. 115 00:05:33,584 --> 00:05:36,587 எல்லாம் முடிஞ்சுது. கூலி எதுவும் வேணாம். வாஷருக்கு மட்டும் 25 பைசா கொடுங்க. 116 00:05:36,670 --> 00:05:39,131 ஜி-பே பண்ணாலும் சரி. உங்களுக்கு நல்லா நாளா அமையட்டும். 117 00:05:40,257 --> 00:05:41,466 நன்றி! 118 00:05:42,968 --> 00:05:45,262 நிக், நிக், நான் ஒரு வழி கண்டுபிடிச்சுட்டேன்னு நினைக்கிறேன், எல்லாம் நல்லபடியா நடந்தா… 119 00:05:45,345 --> 00:05:46,346 கேஸ்மென்ட் ரோடு 120 00:05:46,430 --> 00:05:48,140 நாம "பேரோஸ் ஃபியூரி" ராட்டினத்துல ரெண்டாவது தடவை போகலாம். 121 00:05:48,223 --> 00:05:50,100 சூப்பர். ஏற்கனவே நம்ம வாழ்க்கை பயங்கரமா இல்லன்னு இது வேறயா? 122 00:05:50,184 --> 00:05:51,768 உனக்கு இது பிடிக்கும், என்னை நம்பு. 123 00:05:53,061 --> 00:05:54,855 நீ நல்லா இருக்கியா? ஆமாவா? 124 00:05:56,732 --> 00:05:59,234 அவன் கேட் மேல எந்த ஆர்வமும் காட்டாம இருக்குறது உனக்கு விசித்திரமாத் தெரியல? 125 00:05:59,318 --> 00:06:01,737 அவன் நல்லா இருக்கான்னு நினைக்கிறேன். அவன் அவனோட வழியில இதைக் கையாளுறான். 126 00:06:02,779 --> 00:06:05,407 அவன் இப்படியே விசித்திரமா இருந்து, யாரு கூடயும் பழகாம, 127 00:06:05,490 --> 00:06:08,702 எப்பவும் நம்ம கூடவே இருக்கணும்னு என் மனசுல ஒரு ஓரமா ஒரு ஆசை இருக்கு. 128 00:06:10,120 --> 00:06:11,371 - அது ஒரு சின்ன ஆசைதான். - அப்படியா? 129 00:06:11,455 --> 00:06:14,583 அது ரொம்பச் சின்னது. சொல்லப்போனா அதைப்பத்திப் பேசுறதே வீண். 130 00:06:14,666 --> 00:06:15,667 நிச்சயமா. 131 00:06:16,668 --> 00:06:19,421 - அவ தாமதமா வர்றா. - அவ வெறும் பத்து நிமிஷம்தான் தாமதம், செல்லம். 132 00:06:19,505 --> 00:06:21,507 - விடு, அவளுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம், என்ன? - எனக்கு அவ மேல நம்பிக்கை இல்ல. 133 00:06:21,590 --> 00:06:25,260 கவனி, பிரன்சஸ் அவளாவே இதைப் புரிஞ்சுக்கணும்னு நீ விடணும். 134 00:06:25,344 --> 00:06:27,221 அவளுக்குப் பாதுகாப்பு தேவை. 135 00:06:27,304 --> 00:06:29,681 ஜேஸ், அவளோட கண் மேக்கப்பை பாத்து அவ ரொம்பத் தைரியசாலினு நினைச்சுக்காத. 136 00:06:30,349 --> 00:06:32,100 பாரு, இன்னைக்கு உனக்கு பதட்டமா இருந்தா, 137 00:06:32,184 --> 00:06:33,477 - நீ ஒரு விஷயம் பண்ணணும்னு விரும்புறேன். - சரி. 138 00:06:33,560 --> 00:06:35,687 நல்லா மூச்சு விடு, நிதானமா இரு, 139 00:06:35,771 --> 00:06:39,608 அப்புறம் கொஞ்சம் தண்ணி குடி, சரியா? 140 00:06:40,275 --> 00:06:42,027 எல்லாம் சரியாயிடும். நான் வாக்கு தர்றேன். 141 00:06:42,110 --> 00:06:43,487 - ஹாய்! - அதோ வந்துட்டா. வா போலாம். 142 00:06:43,570 --> 00:06:44,863 ஹாய், பிரன்சஸ். 143 00:06:44,947 --> 00:06:46,406 பத்து நிமிஷம் தாமதம், இதுல கையில காபி வேற. 144 00:06:46,490 --> 00:06:48,909 - அடக் கடவுளே. உன் தலைமுடி. - ஹாய். ஆமா. 145 00:06:48,992 --> 00:06:50,285 - ஹாய். தாமதத்துக்கு மன்னிச்சிடுங்க. - ஓ, இல்ல. 146 00:06:50,369 --> 00:06:51,745 பரவாயில்ல. அதப் பத்திக் கவலைப்படாதீங்க. 147 00:06:51,828 --> 00:06:54,164 நான் ரயில்ல சாப்பிடுறதுக்கு… சில பொருட்கள் வாங்கணும்னு நினைச்சேன். 148 00:06:55,040 --> 00:06:57,835 என்னை உங்க குடும்பத்துல ஒருத்தியா ஏத்துக்கிட்டதுக்கு ஒரு சின்ன நன்றிக்கடன். 149 00:06:58,836 --> 00:07:00,379 திரும்பவும் ஒரு அம்மாவா இருக்குறது ரொம்பச் சந்தோஷமா இருக்கு. 150 00:07:00,462 --> 00:07:02,339 - அது உங்களோட பெருந்தன்மை. - அது நல்ல விஷயம். 151 00:07:09,596 --> 00:07:11,598 சரி, நாம போலாமா? சரி, கிளம்பலாம். 152 00:07:13,809 --> 00:07:15,936 நீயும் வா, போலாம். இன்னும் அஞ்சு நிமிஷத்துல ட்ரெயின் கிளம்பிடும். 153 00:07:33,287 --> 00:07:34,621 - ஹலோ. - ஹாய். 154 00:07:35,330 --> 00:07:36,373 இந்தாங்க. 155 00:07:37,499 --> 00:07:40,043 - இது ஒரு குடும்ப டிக்கெட். - ஆமா. 156 00:07:40,836 --> 00:07:42,004 இதுல மூணு பெரியவங்க இருக்காங்க. 157 00:07:42,087 --> 00:07:43,589 - ஆமா. மன்னிச்சிடுங்க. - ஆமா. 158 00:07:43,672 --> 00:07:45,424 நான்… கடவுளே, ரொம்ப சத்தமா இருக்கு. 159 00:07:45,507 --> 00:07:49,595 சாரி, இதுதான் விஷயம், இந்த ரெண்டு குழந்தைகளுக்கு நாங்க ரெண்டு பேரு தான் சட்டப்பூர்வமான பெத்தவங்க. 160 00:07:49,678 --> 00:07:50,679 - ஹலோ. - ஹலோ. 161 00:07:50,762 --> 00:07:52,681 அப்புறம் இங்க இருக்குற இந்த மேடம். 162 00:07:52,764 --> 00:07:55,100 சரி, இவங்க பெயர் கேட், இப்போதான் திரும்ப இவங்க கூடப் பழக்கம் ஏற்பட்டுச்சு, 163 00:07:55,184 --> 00:07:57,019 இவங்கதான் பசங்களோட பெத்த அம்மா. 164 00:07:57,102 --> 00:08:00,564 இப்போ, நாங்க ஒன்னா இருக்கோம், சரியா? நாங்க ஒரே குடும்பம், சரிதானே? ஆமா, நாங்க அப்படித்தான். 165 00:08:00,647 --> 00:08:03,483 இதுக்கு அப்புறம் எல்லாம் எப்படி இருக்கும்னு எங்களுக்குத் தெரியுமா? இல்ல, கண்டிப்பா தெரியாது. 166 00:08:03,567 --> 00:08:05,652 இதுனால எதிர்காலத்துல பிரச்சனைகள் வருமா? 167 00:08:05,736 --> 00:08:06,737 கண்டிப்பா வரும்தான். 168 00:08:06,820 --> 00:08:08,238 ஆனா நாங்க இப்போ ஒண்ணா இருக்கோம்னு நினைக்கிறேன், சரியா? நாங்க… 169 00:08:08,322 --> 00:08:10,741 - உள்ளே போங்க. - சரி, ரொம்ப நன்றி. 170 00:08:10,824 --> 00:08:13,410 - ஹே ஹே! - நன்றி. நல்ல நாளா அமையட்டும். பை. 171 00:08:16,580 --> 00:08:20,834 நாம எங்க இருந்து ஆரம்பிக்கலாம்? நாம இங்க இருக்கோம். அப்படியே போனோம்னா… 172 00:08:20,918 --> 00:08:23,587 சரி, பிரன்சஸ்ஸை, கேட் கூட கண்காணிப்பு இல்லாம விட முடியாது. 173 00:08:23,670 --> 00:08:25,672 நீ அவங்க கூட எல்லா ரோலர் கோஸ்டர் ரைட்லயும் போவியா? 174 00:08:25,756 --> 00:08:26,924 போயிருப்பேன், ஆனா எனக்குத் தலை சுத்தும், 175 00:08:27,007 --> 00:08:29,885 அப்புறம் ரயில்லலேயே பாதி தலைசுத்தல் மாத்திரைகளைச் சாப்பிட்டுட்டேன். 176 00:08:29,968 --> 00:08:31,887 சரி, பரவாயில்ல. அதாவது, எனக்கும் ஆசைதான், 177 00:08:31,970 --> 00:08:34,222 ஆனா டைலர் என்கிட்ட ஏதோ பேசணும்னு விரும்புறான். 178 00:08:34,306 --> 00:08:36,183 சரி, முடிஞ்சளவுக்கு சீக்கிரம் வந்து என்னைக் காப்பாத்துவியா? 179 00:08:36,265 --> 00:08:39,394 சரி. நீ எங்க கூட வரலாமே? அவங்க பாத்துப்பாங்க. 180 00:08:39,477 --> 00:08:42,523 ஜேஸ், உனக்கு அவளைப் பத்தி தெரியாது. அவ ஒரு கெட்ட சகவாசம். 181 00:08:42,606 --> 00:08:46,193 அவங்களை நாம தனியா விட்டா, வங்கில எல்லாம் கொள்ளையடிச்சுக்கிட்டு, 182 00:08:46,276 --> 00:08:49,238 போதையில சுத்த ஆரம்பிச்சுடுவாங்க. 183 00:08:49,321 --> 00:08:52,115 - அது வெறும் பாடல் வரிகள்தான், நிக். - அது நடக்காதுன்னு சொல்ல முடியாது, ஜேஸ். 184 00:08:52,199 --> 00:08:54,701 - ஹாய். - சரி. நானும் அம்மாவும் ரோலர் கோஸ்டர்ல போகறோம். 185 00:08:55,536 --> 00:08:57,621 ஓ, சரி. சரி, நானும் அதுக்குத் தயார். 186 00:08:57,704 --> 00:08:58,789 - நிஜமாவா? - ஆமா. 187 00:08:59,289 --> 00:09:03,126 - குளிச்சுட்டு வந்தாலே உங்களுக்குத் தலை சுத்துமே… - இல்ல. இல்ல. இல்ல, அதெல்லாம் ஒண்ணுமில்ல. 188 00:09:03,210 --> 00:09:05,546 இந்த ராட்டினத்துல ஏறத்தான், அந்தத் தலைசுத்தல் பயிற்சியெல்லாமே. 189 00:09:06,463 --> 00:09:08,048 சரி, போலாம். ரோலர் கோஸ்டர்ல ஏறுவோம். 190 00:09:12,177 --> 00:09:13,345 - நீ உறுதியா இருக்கியா? - ஆமா. 191 00:09:14,847 --> 00:09:17,099 சரி, அது அப்படி ஒண்ணும் பயங்கரமா ஆடாதுல்ல? 192 00:09:31,530 --> 00:09:34,616 - ஹலோ. - ஓ, ஹாய். இதோ வந்துட்டா. 193 00:09:34,700 --> 00:09:36,994 அவளுக்குத் தலையில அரிக்குது, ஒருவேளை பேனா இருக்கலாம். 194 00:09:37,661 --> 00:09:39,496 ஓ, சரி, அவ இப்போ உள்ள வந்துட்டா. 195 00:09:39,580 --> 00:09:41,874 நீங்க எப்படி இருக்கீங்க? இதையெல்லாம் எப்படி சமாளிக்கிறீங்க? 196 00:09:43,834 --> 00:09:46,879 ஸ்காட் இல்லாதது கஷ்டமா இருக்கா? நாங்க எல்லாரும் உங்களைப் பத்திதான் யோசிச்சிட்டு இருந்தோம். 197 00:09:47,546 --> 00:09:50,883 ஆமா. ஆமா, இல்ல, இல்ல, நாங்க நல்லா இருக்கோம். நன்றி. 198 00:09:51,925 --> 00:09:53,927 சரி, நான் திரும்ப 2:00 மணிக்கு வர்றேன். 199 00:09:54,011 --> 00:09:56,013 அவர் செய்யுறது ரொம்ப ஆச்சரியமான விஷயம். 200 00:09:56,096 --> 00:09:58,390 காலநிலை மாற்றத்தைப் பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறது ரொம்ப முக்கியம். 201 00:09:58,473 --> 00:10:01,476 ஆனா இதப் பத்தி இன்னும் யாருமே கேள்விப்படாம இருப்பாங்களான்னு தெரியல, ஆனா பரவாயில்ல. 202 00:10:02,936 --> 00:10:04,438 நீங்க உள்ள வர்றீங்களா? 203 00:10:04,521 --> 00:10:05,939 என்னை இங்கேயே இருக்கச் சொல்றீங்களா? 204 00:10:06,648 --> 00:10:08,650 ஆமா. உங்களுக்கு விருப்பம் இருந்தா. 205 00:10:10,694 --> 00:10:12,738 பெத்தவங்க இங்கேயே இருக்கலாம்னு எனக்குத் தெரியாம போச்சு. 206 00:10:13,488 --> 00:10:16,491 ஆமா, ஆமா, இருக்கலாம். உள்ளே வாங்க. 207 00:10:24,666 --> 00:10:26,418 அடக் கடவுளே. 208 00:10:26,502 --> 00:10:27,878 இது ரொம்ப ஜாலியா இருந்தது. 209 00:10:28,462 --> 00:10:29,463 ஆமா! 210 00:10:30,297 --> 00:10:31,673 நாங்க தனியாவே சமாளிச்சுப்போம்னு உங்களுக்கே தெரியும். 211 00:10:31,757 --> 00:10:33,467 நீங்க வேணும்னா போய் டீ மாதிரி ஏதாவது குடிச்சிட்டு வரலாமே. 212 00:10:33,550 --> 00:10:36,053 - என்ன? இதையெல்லாம் விட்டுட்டா? - வா போலாம். 213 00:10:36,845 --> 00:10:40,516 சரி, வரிசை இன்னும் கம்மியாதான் இருக்கு, அப்போ நாம திரும்பவும் ஒரு தடவை போலாம். 214 00:10:40,599 --> 00:10:41,767 - சரி. - சரியா? 215 00:10:42,267 --> 00:10:44,436 ஆமா, இல்ல, அதுவும் ஒரு வழிதான். 216 00:10:44,520 --> 00:10:49,691 இல்ல அங்க செல்லப் பிராணிகள் இருக்குற ஸூ, இல்லன்னா தகவல் மையம் ஏதாவது இருக்குமா? 217 00:10:50,734 --> 00:10:52,819 இதோ வந்துட்டோம், கண்ணா. இங்க ஒரு நிமிஷம் உட்காரு. 218 00:10:54,363 --> 00:10:55,489 சரி, இப்போ சொல்லு. 219 00:10:56,865 --> 00:10:58,867 என்ன பிரச்சனை? உன் அம்மாவைப் பத்தியா? 220 00:10:58,951 --> 00:11:01,537 உனக்கு அவங்க மேல ஏதாச்சும் கரிசனம் இருந்ததுன்னா, நீ எப்பவும் எங்ககிட்ட பேசலாம். 221 00:11:01,620 --> 00:11:06,333 அதெல்லாம் இல்ல. அப்படி இருக்கணும்னு தெரியும், ஆனா அவங்கள எனக்கு ஞாபகமே இல்ல. அது தப்பில்லயே? 222 00:11:06,416 --> 00:11:08,418 கண்டிப்பா தப்பில்ல, கண்ணா. ஆமா, அதெல்லாம் தப்பே இல்ல. 223 00:11:09,253 --> 00:11:11,088 - அப்போ, வேற என்ன? - ஒரு பொண்ணைப் பத்தி. 224 00:11:11,171 --> 00:11:12,172 அது சரி. 225 00:11:12,256 --> 00:11:15,092 அவளோட தோழி அவளுக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னா, அப்புறம் அவ எனக்கு மெசேஜ் பண்ணா. 226 00:11:15,175 --> 00:11:16,885 இப்போ அவளுக்கு என்ன பதில் அனுப்புறதுன்னு தெரியல. 227 00:11:16,969 --> 00:11:18,303 சரி, உனக்கு அவளைப் பிடிச்சிருக்கா? 228 00:11:18,387 --> 00:11:23,559 ஆமா, ஆனா விஷயம் என்னன்னா, நான் பொய் சொல்லிட்டேன். எனக்கு இதுக்கு முன்னாடி காதலி இருந்ததே இல்ல. 229 00:11:23,642 --> 00:11:25,686 என்ன சொல்ற? அப்போ அனஸ்டாஸியா என்ன ஆனாள்? 230 00:11:25,769 --> 00:11:28,188 - பியான்ஸேவோட டான்சர். - அதெல்லாம் நான் சும்மா கதை கட்டுனது. 231 00:11:28,272 --> 00:11:29,273 அப்படியா? 232 00:11:30,440 --> 00:11:32,192 சரி, இது ஒரு ஆச்சரியமான விஷயம் தான். 233 00:11:33,485 --> 00:11:35,487 இங்க பாரு கண்ணா, அவளுக்கு உன்னைப் பிடிச்சிருக்குன்னு தான் தோணுது. 234 00:11:35,571 --> 00:11:36,822 - சரி. - சரி. 235 00:11:36,905 --> 00:11:40,325 உங்க தலைமுறை பண்ண விஷயங்களால, இப்போ இருக்குற பொண்ணுங்களுக்கு நல்ல பசங்களைத்தான் பிடிக்குது. 236 00:11:40,951 --> 00:11:44,955 சரி. நன்றியெல்லாம் சொல்ல வேணா. சரி. 237 00:11:50,460 --> 00:11:51,879 நான் ஒரு சின்ன டீ பிரேக் எடுத்துக்கிட்டா பரவாயில்லயா? 238 00:11:51,962 --> 00:11:54,047 சரி, தாராளமா எடுத்துக்கோங்க. நீங்க ரொம்ப நேரமா வேலை பாக்குறீங்க. 239 00:12:02,055 --> 00:12:04,933 நன்றி. தாமதத்துக்கு மன்னிச்சிடுங்க. 240 00:12:11,148 --> 00:12:13,442 ஓ, அந்த டாட்டூ ரொம்ப சூப்பரா இருக்கு. 241 00:12:14,193 --> 00:12:15,736 - தலையைப் பின்னாடி சாயுங்க. - ஓ, நன்றி. 242 00:12:15,819 --> 00:12:17,821 மன்னிச்சிடுங்க. இத யாரு பண்ணது? 243 00:12:17,905 --> 00:12:20,949 உண்மையாவே எனக்கு ஞாபகம் இல்ல. ஓ, கொஞ்சம் பொறு. 244 00:12:21,033 --> 00:12:22,534 அப்பவே அவரோட பெயரையும் சேர்த்துதான் டாட்டூ பண்ணார். 245 00:12:22,618 --> 00:12:24,995 - அப்படியா? - இல்ல, அத எட்டிப் பாக்க முடியல. 246 00:12:25,078 --> 00:12:26,079 நீ விரும்பினா, நாம போய் அவரைப் பாக்கலாமா? 247 00:12:26,163 --> 00:12:27,623 - அடடா. சரி. - ஓ, ஓ. 248 00:12:27,706 --> 00:12:30,792 ஹே, அது… நாம… 249 00:12:35,047 --> 00:12:36,381 எல்லாரும் எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? 250 00:12:36,465 --> 00:12:37,883 நல்லா இருக்கீங்களா? நல்லா இருக்கீங்களா? 251 00:12:37,966 --> 00:12:39,134 - ஒரு பிரச்சனையும் இல்ல. - உட்காருங்க. 252 00:12:39,218 --> 00:12:41,386 - ப்ளீஸ். - சரி, மன்னிச்சிடுங்க. 253 00:12:50,521 --> 00:12:53,524 ஓ. ஐயோ. கடவுளே. கடவுளே. 254 00:13:00,030 --> 00:13:01,031 பெண்களுக்கு என்ன பிடிக்கும்? 255 00:13:02,824 --> 00:13:05,202 நான் சில பாட்காஸ்ட்-களைக் கேட்டு ஒரு பட்டியல் தயார் பண்ண ஆரம்பிச்சேன். 256 00:13:05,285 --> 00:13:08,413 அப்படியா? சரி, அதுல என்னென்ன இருக்கு? 257 00:13:10,040 --> 00:13:11,041 வாவ். 258 00:13:11,124 --> 00:13:12,209 "நாய்க்குட்டிங்க." 259 00:13:12,960 --> 00:13:14,878 - "ட்ரை ஷாம்பு." - ஆமா, அது உண்மைதான். 260 00:13:14,962 --> 00:13:16,505 "குளுட்டன்-ஃப்ரீ மெனு பத்தி கேக்குறது." 261 00:13:16,588 --> 00:13:18,841 சரி, கண்ணா, இதோட நிறுத்திக்கலாம், ஏன்னா பெண்களுக்குப் பிடிக்காத ஒரு விஷயம் என்னன்னா, 262 00:13:18,924 --> 00:13:22,052 ஏதோ வேற்று கிரகத்துல இருந்து வந்தவன் மாதிரி அவங்களை இப்படி ஆராய்ச்சி பண்றது, சரியா? 263 00:13:22,135 --> 00:13:24,555 நீ இதையெல்லாம் எழுதி வைக்கத் தேவையில்ல. சரியா? 264 00:13:25,138 --> 00:13:26,723 அவ என்ன மெசேஜ் அனுப்பினா? காட்டு பார்ப்போம். 265 00:13:30,352 --> 00:13:31,353 "பார்பராவா?" 266 00:13:32,437 --> 00:13:33,438 அவ பெயர் பார்பராவா? 267 00:13:34,022 --> 00:13:35,440 - ஆமா. - அவளுக்கு என்ன வயசு இருக்கும், கண்ணா? 268 00:13:35,524 --> 00:13:36,775 என் வயசு தான். 269 00:13:36,859 --> 00:13:39,570 சரி. சரி, இது கொஞ்சம் விசித்திரமா தான் இருக்கு. 270 00:13:40,445 --> 00:13:41,989 சரி, அவ என்ன சொல்லியிருக்காள்னு பார்ப்போம். 271 00:13:42,072 --> 00:13:43,490 பார்பரா - ஐமெசேஜ் வியாழக்கிழமை - ஹே 272 00:13:43,574 --> 00:13:45,784 "ஹே." இவங்க ஏன் எப்பவும் இப்படி மனசோட விளையாடுறாங்க? 273 00:13:45,868 --> 00:13:48,161 நான் என்ன பதில் சொல்றது? உங்களைப் போலவே கிண்டலா பேச எனக்குக் கத்துக்கொடுங்க. 274 00:13:48,245 --> 00:13:50,914 லூசுத்தனமா பேசாத, டைலர். அதை யாராலும் கத்துக்கொடுக்க முடியாது. 275 00:13:50,998 --> 00:13:53,041 இந்த உலகத்துலயே நீங்கதான் ரொம்ப கிண்டலா பேசுற ஆளு. 276 00:13:53,125 --> 00:13:56,253 சரிதான், எனக்கு வாழ்க்கையை ஒரு நக்கலான கண்ணோட்டத்துல பாக்குறது பிடிக்கும்தான், 277 00:13:56,336 --> 00:13:58,338 ஆனா என்னோட பலமே இந்த மிமிக்ரி குரல்கள் தான், 278 00:13:58,422 --> 00:14:00,632 அது மெசேஜ்ல எடுபடாது. 279 00:14:02,050 --> 00:14:03,135 கவனி, கண்ணா. 280 00:14:03,760 --> 00:14:05,637 ஆண்கள் பொதுவா ஒரு தப்பு பண்ணுவாங்க, சரியா? 281 00:14:05,721 --> 00:14:07,139 ஒரு பொண்ணுக்குத் தன்னை பிடிச்சிருக்குன்னு தெரிஞ்ச உடனே, 282 00:14:07,222 --> 00:14:09,391 தெரிஞ்ச உடனே, அவங்க வேற யாரோ மாதிரி மாற முயற்சி பண்ணுவாங்க. 283 00:14:10,517 --> 00:14:12,936 நீ நீயாவே இரு, கண்ணா. சரியா? 284 00:14:13,687 --> 00:14:18,400 உனக்கு எப்பவாச்சும் சந்தேகம் வந்தா, "டைலர் என்ன பண்ணுவான்"னு உன்கிட்டயே கேட்டுக்கோ. 285 00:14:20,444 --> 00:14:21,445 சரி. 286 00:14:25,199 --> 00:14:27,201 நிக்கி ரொம்ப ஜாலியா இருக்கா போலயே. 287 00:14:29,077 --> 00:14:32,664 ஓ, அவர் எங்கயோ தனியா இருக்கார்னு நினைக்குறப்போ உங்களுக்கு கஷ்டமாதான் இருக்கும். 288 00:14:32,748 --> 00:14:34,917 ஓ, நீங்க அவரை பார்த்ததில்ல. அவர் இங்க இருக்குறப்போதான் இன்னும் கஷ்டமா இருக்கும். 289 00:14:36,502 --> 00:14:38,879 நாம இதுக்கு முன்னாடி ஏன் எங்கயும் சந்திச்சுக்கல? 290 00:14:38,962 --> 00:14:41,215 ஏன்னா வழக்கமா நான் என் கார்ல உட்கார்ந்து, புத்தம் படிச்சிட்டு இருப்பேன். 291 00:14:54,353 --> 00:14:56,021 ஓ, இது நல்லா இருக்கு. 292 00:14:56,104 --> 00:14:57,523 அடக் கடவுளே. 293 00:14:58,524 --> 00:14:59,858 எனக்கு பாத்ரூம் போகணும். 294 00:15:00,943 --> 00:15:04,196 இதோ அங்க ஒண்ணு இருக்கு. நாங்க தனியா பாத்துக்குவோம். 295 00:15:06,323 --> 00:15:08,325 இல்ல, இந்த டீமை பிரிக்க நான் விரும்பல. 296 00:15:09,409 --> 00:15:11,286 - இது இப்போ சரியாயிடும். - சரி. 297 00:15:11,370 --> 00:15:12,538 நிச்சயம் சரியாயிடும். 298 00:15:16,041 --> 00:15:18,669 சரி, உன்னோட அடுத்த பிளான் என்னன்னு ஏதாச்சும் யோசிச்சிருக்கியா? 299 00:15:20,045 --> 00:15:23,340 சூரிய வெளிச்சம் பூமியை அடைய ஏழு நிமிஷம் ஆகும்னு உனக்குத் தெரியுமா? 300 00:15:25,175 --> 00:15:27,594 ஒருவேளை சூரியன் வெடிச்சா கூட, ஏழு நிமிஷம் வரைக்கும் நமக்குத் தெரியாது. 301 00:15:28,095 --> 00:15:32,140 நாம இன்னும் சில நிமிஷங்கள்தான் உயிரோட இருக்கலாம், நிக்கி. ஆனா யாருக்கும் அது தெரியாது. 302 00:15:33,809 --> 00:15:35,811 அதனால நான் வர்றதை அப்படியே ஏத்துக்கிறேன். 303 00:15:38,063 --> 00:15:41,692 சரி, ஆனா… இப்பதான் ஒரு வழியா அவளை 304 00:15:41,775 --> 00:15:44,027 ஒரு நிலைக்குக் கொண்டு வந்தோம், அதனால நாம… 305 00:15:44,111 --> 00:15:46,738 அவ அப்படி செட்டில் ஆகியிருந்தா, என்னைத் தேடி வந்திருக்க மாட்டாள். 306 00:15:47,406 --> 00:15:50,033 டைலர் கொஞ்சம் வளர்ற வரைக்கும் நான் காத்திருக்கணும்னு எனக்குத் தெரியும், 307 00:15:50,117 --> 00:15:51,618 ஆனா பிரின்ஸஸுக்கு முடிவு எடுக்கிற வயசு வந்துடுச்சு. 308 00:15:51,702 --> 00:15:53,912 - அவளுக்கு நான் திரும்ப வேணும்னு ஆசை, அதனால… - சரி. 309 00:15:55,622 --> 00:15:57,040 இன்னைக்கு உனக்கு ரொம்பத் தாகமா இருக்கு போல. 310 00:15:57,124 --> 00:15:58,667 ஹே, நாம "த ரெக்கனிங்" ரைடுக்கு போலாம். 311 00:15:58,750 --> 00:15:59,877 சரி. 312 00:15:59,960 --> 00:16:01,378 இல்லன்னா, நீங்க இந்த ஒரு ரைடுக்கு மட்டும் வரலையா? 313 00:16:01,461 --> 00:16:04,464 இல்ல! இல்ல! எனக்கு இது ரொம்பப் பிடிச்சிருக்கு. 314 00:16:07,050 --> 00:16:09,595 வயித்துக்குள்ள ஏதோ பண்ற மாதிரி அந்த உணர்வு எனக்கு ரொம்பப் பிடிக்கும். 315 00:16:09,678 --> 00:16:10,846 சரி, வா போலாம். 316 00:16:13,724 --> 00:16:14,892 சரி, இது சூப்பரா இருக்கு. 317 00:16:16,560 --> 00:16:18,270 வேற யாருக்காவது பாத்ரூம் போகணுமா? 318 00:16:18,896 --> 00:16:20,647 வேணாமா? சரி. 319 00:16:27,321 --> 00:16:31,033 ஓ, மன்னிச்சிடுங்க, நீங்க கீழ இருக்குற பாத்ரூமை பயன்படுத்தினா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். 320 00:16:31,116 --> 00:16:33,327 உங்க சிங்க் அடியில இருக்குற பைப்ல கேட்ட சத்தம், 321 00:16:33,410 --> 00:16:35,829 உங்க ஷவர்ல பிரஷர் குறையுதுன்னு எனக்குத் தோணுச்சு. 322 00:16:35,913 --> 00:16:37,873 கூடுதல் கட்டணம் எதுவும் இல்ல, எல்லாத்துக்கும் கேரண்டி உண்டு. 323 00:16:37,956 --> 00:16:40,709 அடுத்த 25 வருஷத்துல எப்போ பிரஷர் குறைஞ்சாலும் சொல்லுங்க, நான் வந்து சரி பண்றேன். 324 00:16:45,464 --> 00:16:46,882 நான் உயிரோட இருக்குற வரைக்கும். 325 00:16:48,550 --> 00:16:52,054 எப்படி இருக்க? 326 00:16:52,679 --> 00:16:53,889 எப்படிப் போயிட்டு இருக்கு? 327 00:17:01,813 --> 00:17:02,814 என்ன விஷயம்? 328 00:17:02,898 --> 00:17:04,273 எனக்கு என்ன டைப் பண்றதுன்னு தெரியல. 329 00:17:09,988 --> 00:17:10,989 - சரி. - என்ன? 330 00:17:11,073 --> 00:17:12,491 - நான் டைப் பண்ணிட்டேன். - என்ன டைப் பண்ண? "ஹே." 331 00:17:12,574 --> 00:17:13,825 ஹே 332 00:17:14,451 --> 00:17:16,453 இது சூப்பர், கண்ணா. அனுப்பிடு. சீக்கிரம் அனுப்பு. 333 00:17:16,537 --> 00:17:18,539 - எனக்கு பயமா இருக்கு. - எனக்கு புரியுது, கண்ணா. தைரியமா இரு. 334 00:17:18,622 --> 00:17:20,249 - வா, மூச்சு விடு. - சரி. 335 00:17:20,332 --> 00:17:21,750 - அனுப்பு. - அனுப்பிட்டேன். 336 00:17:22,416 --> 00:17:23,585 - அடக் கடவுளே. - சரி, அவ்வளவுதான். 337 00:17:23,669 --> 00:17:25,587 - இது ஒரு மாதிரியா இருந்தது. - சரி, தலையை முட்டிக்கு இடையில வச்சுக்கோ. 338 00:17:25,671 --> 00:17:27,673 - அடக் கடவுளே. - அப்படியே இரு. மூச்சு விடு, சமத்து பையன். 339 00:17:28,257 --> 00:17:31,510 - இது ரொம்பப் பயங்கரமா இருக்குல்ல? - ஆமா, நண்பா. ஒவ்வொரு தடவையும் அப்படித்தான். 340 00:17:32,135 --> 00:17:35,430 அவ்வளவுதான். சரி, நாம ராட்டினத்துல விளையாடலாம். 341 00:17:37,641 --> 00:17:38,725 - அடக் கடவுளே. - என்ன? 342 00:17:38,809 --> 00:17:41,353 - அவ பதில் அனுப்பிட்டா. - அவ பதில் அனுப்பிட்டாளா? 343 00:17:41,436 --> 00:17:42,437 அவ பதில் அனுப்பிட்டா! 344 00:17:42,521 --> 00:17:45,691 - அடடா, செல்லமே. ஜாலி! சூப்பர். - ஜாலி! 345 00:17:45,774 --> 00:17:47,901 - அடக் கடவுளே. - அவ்வளவுதான் முடிஞ்சது. வா போலாம். 346 00:17:48,735 --> 00:17:50,153 ஆனா எனக்கு இன்னொன்னு அனுப்பணும்னு இருக்கு. 347 00:17:50,237 --> 00:17:51,238 அப்படியா? 348 00:17:52,990 --> 00:17:54,575 வா அனுப்பு, ரோமியோ. என்ன அனுப்பப் போற? 349 00:17:55,617 --> 00:17:59,580 ஆமா, ஸ்டீவி அவரோட குரலைக் கேட்குறதுக்காகவே நாங்க தினமும் ஃபோன் பண்ணுவோம். 350 00:17:59,663 --> 00:18:00,664 ஓ, சூப்பர். 351 00:18:00,747 --> 00:18:03,041 உங்க முகம் எந்தக் குறையுமே இல்லாம ரொம்ப அழகா இருக்கு. 352 00:18:03,125 --> 00:18:04,751 ஓ, ரொம்ப நன்றி. 353 00:18:04,835 --> 00:18:06,211 அவங்க புத்தக குரூப்ல சேரணும். 354 00:18:06,295 --> 00:18:09,298 நாங்க சால்வோஸுக்குப் போய், படிக்காத ஒரு புக்கைப் பத்தி பேசுற மாதிரி நடிச்சுக்கிட்டு, 355 00:18:09,381 --> 00:18:11,466 அங்க இருக்குற மத்தவங்களைப் பத்தி புரணி பேசுவோம். 356 00:18:11,550 --> 00:18:12,718 ஓ, எனக்கு அது ரொம்பப் பிடிக்கம். 357 00:18:12,801 --> 00:18:15,053 - அப்புறம், எனக்கும் சில கருத்துகள் இருக்கு. - உங்க நம்பர் என்ன? 358 00:18:15,137 --> 00:18:16,555 நான் உங்களை அந்த பேரண்ட்ஸ் குரூப்ல சேர்த்துடுறேன். 359 00:18:16,638 --> 00:18:18,140 ஓ, வேணா. நான் ஏற்கனவே அதுல இருக்கேன்னு நினைக்கிறேன். 360 00:18:18,223 --> 00:18:21,059 இல்ல, நான் சொல்றது அந்த உண்மையான குரூப். 361 00:18:23,562 --> 00:18:25,272 மம்மி, எனக்கு போர் அடிக்குது. 362 00:18:25,355 --> 00:18:26,565 நாம இப்போ கிளம்பலாமா? 363 00:18:26,648 --> 00:18:29,943 இன்னும் ஒரு பத்து நிமிஷம் மட்டும் குடுக்குறியா? ப்ளீஸ்? போ. 364 00:18:33,822 --> 00:18:39,536 ஐயோ. கடவுளே. கடவுளே. கடவுளே! 365 00:18:43,790 --> 00:18:44,791 சாக்-ஐஸஸ். 366 00:18:44,875 --> 00:18:46,376 - நன்றி. - நன்றி. 367 00:18:46,460 --> 00:18:48,086 நான் போய் கொஞ்சம் டிஷ்யூ பேப்பர் எடுத்துட்டு வர்றேன். 368 00:18:51,173 --> 00:18:52,174 நீ நல்லா இருக்க தானே? 369 00:18:52,257 --> 00:18:53,258 ஆமா. 370 00:18:54,718 --> 00:18:56,929 ஆமா. ஆமா, ஆமா, ஆமா, ஆமா, ஆமா. 371 00:18:57,763 --> 00:19:00,182 ஓ, இல்ல, இல்ல, இல்ல, இல்ல, இல்ல, கண்டிப்பா இல்ல. 372 00:19:00,682 --> 00:19:02,017 உனக்கு தண்ணி புடிச்சுட்டு வந்திருக்கேன். 373 00:19:02,100 --> 00:19:03,143 நன்றி. 374 00:19:03,227 --> 00:19:05,604 ஒரு நாளைக்கு நாலு மாத்திரை தான் சாப்பிடணும்னு உனக்குத் தெரியும்ல? 375 00:19:05,687 --> 00:19:07,773 ஆமா, ஆனா இது ஒண்ணும் சாதாரண நாள் இல்லையே, ஜேஸ்? 376 00:19:07,856 --> 00:19:09,191 அவங்களை என்னால தனியா விட முடியாது. 377 00:19:09,274 --> 00:19:11,276 நாம அவளை நம்பித்தான் ஆகணும்னு நினைக்கிறேன், நிக். 378 00:19:11,360 --> 00:19:14,071 நமக்குத் தெரியாத ஒருத்தரை, ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்க 379 00:19:14,154 --> 00:19:15,489 வாய்ப்புள்ள ஒருத்தரை, 380 00:19:15,572 --> 00:19:19,493 நம்ம வாழ்க்கைக்குள்ள கூப்பிடுறத பத்தி நீ பேசுற, இது எங்க போய் முடியும்னு நமக்கே தெரியாது. 381 00:19:19,576 --> 00:19:22,955 ஆனா, போன முறை நாம இப்படி பண்ணப்போ எல்லாம் நல்லபடியா தான் முடிஞ்சது. இல்லயா? 382 00:19:25,582 --> 00:19:27,125 கீழ இறங்குறதுதான் ரொம்பப் பயமா இருக்கு. 383 00:19:27,209 --> 00:19:28,627 அவ முயற்சி பண்றா, நிக். 384 00:19:29,336 --> 00:19:33,715 ஒருவேளை அவளோட முயற்சி நம்மோட முயற்சி மாதிரி இல்லாம இருக்கலாம். அவ்வளவுதான். 385 00:19:38,178 --> 00:19:39,137 உண்மையச் சொல்லப்போனா, 386 00:19:39,638 --> 00:19:42,474 இந்த மாதிரி நேரத்துலதான், உன்னை இப்படி ஒரு முழுமையான மனுஷனா 387 00:19:42,558 --> 00:19:43,809 நான் மாத்தியிருக்கக் கூடாதுன்னு தோணுது, 388 00:19:43,892 --> 00:19:45,894 ஏன்னா அது இப்போ எனக்கே எதிராத் திரும்புது. 389 00:19:47,771 --> 00:19:48,772 ரொம்ப ஜாலியா இருந்தது. 390 00:19:49,982 --> 00:19:52,401 ஓ, சரி, வாங்க பசங்களா, ரயில் கிளம்புற நேரம் ஆகிடுச்சு. 391 00:19:52,484 --> 00:19:53,819 வாங்க, எல்லாத்தையும் எடுத்து வைப்போம். 392 00:19:58,323 --> 00:19:59,825 வாங்க, எல்லாத்தையும் எடுத்துட்டு கிளம்புவோம். 393 00:20:16,675 --> 00:20:18,010 நீ நல்லாதானே இருக்க? 394 00:20:18,093 --> 00:20:19,094 ஆமா. 395 00:20:22,014 --> 00:20:24,766 பாரு, சீக்கிரமே நீங்க ரெண்டு பேரும் தனியா நேரம் செலவிடலாம்னு நான் சத்தியம் பண்றேன், 396 00:20:24,850 --> 00:20:27,769 ஆனா பிரன்சஸ், அதுக்கான சரியான நேரம் வரணும். 397 00:20:28,353 --> 00:20:30,480 நீ தயாரா இருக்கன்னு எங்களுக்குத் தோணுறப்போ. சரியா? 398 00:20:31,273 --> 00:20:32,608 சரி. 399 00:20:32,691 --> 00:20:34,776 அந்த கவரை நான் குப்பைத் தொட்டியில போடவா? 400 00:20:35,611 --> 00:20:36,862 இல்ல, பரவாயில்ல. நானே போட்டுடுறேன். 401 00:20:36,945 --> 00:20:37,946 சரி. 402 00:20:54,755 --> 00:20:56,882 ஓ, ஒரு நிமிஷம். என்னால அந்த ஃபோட்டோ வாங்காம இருக்க முடியாது. 403 00:20:56,965 --> 00:20:58,008 ரேஜ் 404 00:21:18,320 --> 00:21:20,989 - சீக்கிரம். வாங்க, வேகமா. - …பிளாட்ஃபார்ம் ஒன்று. 405 00:21:21,865 --> 00:21:23,408 டிக்கெட்டுகளைத் தயாரா வச்சுக்கோங்க, ப்ளீஸ். 406 00:21:23,492 --> 00:21:25,202 - …பிளாட்ஃபார்ம் ஒன்று. - அவ்வளவுதான், உள்ள போங்க. 407 00:21:25,285 --> 00:21:27,037 - சீக்கிரம், பிரன்சஸ். - சரி, போயிட்டேன். 408 00:21:28,288 --> 00:21:29,790 சீக்கிரம், கண்ணா. அப்படித்தான். 409 00:21:33,293 --> 00:21:34,670 இது வேலை செய்யல. 410 00:21:34,753 --> 00:21:36,255 - என்ன? - இது வேலை செய்ய மாட்டேங்குது. 411 00:21:36,338 --> 00:21:38,549 - அது… ரயில்… - இல்ல, ஜேசன். டைலர். 412 00:21:38,632 --> 00:21:39,883 - என்னை விட்டுட்டுப் போகாதீங்க! - ரயில் கிளம்பப் போகுது! 413 00:21:39,967 --> 00:21:42,386 - விட்டுட்டுப் போகாதீங்க! இது வேலை செய்யல! - அப்போ சீக்கிரம் பண்ணு, ப்ளீஸ்! 414 00:21:42,469 --> 00:21:44,137 ஓ, பிரமாதம். சூப்பர். 415 00:21:44,847 --> 00:21:46,223 சரி, அது நிஜமாவே… 416 00:21:48,684 --> 00:21:49,810 நீ போகலாம். 417 00:22:03,115 --> 00:22:04,116 என்னால முடியல… 418 00:22:06,034 --> 00:22:07,244 உன் டிக்கெட்டை காட்டு பாக்கலாம். 419 00:22:08,871 --> 00:22:11,206 அது சரி. இது டிக்கெட்டே இல்ல, சரியா? 420 00:22:11,707 --> 00:22:13,292 இது ஸூக்கான உன்னோட மெம்பர்ஷிப் கார்டு. 421 00:22:14,793 --> 00:22:15,794 ஓ, ஆமா. 422 00:22:16,712 --> 00:22:18,714 இன்னும் அந்த தலைசுத்தல் குறையல போல. 423 00:22:19,506 --> 00:22:21,717 - ஓ, இதோ இருக்கு. ஆமா. - கிடைச்சுதா? சரி. 424 00:22:21,800 --> 00:22:24,553 வூப். இதோ திறந்திடுச்சு. 425 00:22:24,636 --> 00:22:27,389 நாம வேற கம்பார்ட்மென்ட்டுல போயிருக்கலாம்னு உனக்குத் தெரியும்ல? 426 00:22:27,472 --> 00:22:29,141 ஒரு மணிநேரத்துக்கு அப்புறம்தான் அடுத்த ரயில் வரும். 427 00:22:36,190 --> 00:22:37,399 - டிக்கெட் காட்டுங்க, ப்ளீஸ். - ஹே, 428 00:22:37,482 --> 00:22:38,483 - அவங்க… - என்ன? 429 00:22:38,567 --> 00:22:40,402 - …அடுத்த ரயில்ல வர்றதா சொன்னாங்க. - சரி, சூப்பர். 430 00:22:50,787 --> 00:22:52,080 - நீங்க… - அப்போ, நீ… 431 00:22:52,164 --> 00:22:55,042 - சாரி. இல்ல, இல்ல, நீங்க சொல்லுங்க. - இல்ல. பரவாயில்ல. நீ சொல்லு. 432 00:22:55,125 --> 00:22:57,419 - நிஜமாவா? இல்ல, இல்ல, பரவாயில்ல. - ஆமா. நீயே சொல்லு. நீயே சொல்லு. 433 00:22:57,503 --> 00:22:59,505 - சரி. - டிக்கெட்டைக் காட்டுங்க, ப்ளீஸ். 434 00:23:06,553 --> 00:23:08,055 இதெல்லாம் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல செல்லாது. 435 00:23:13,352 --> 00:23:15,103 இது ஃபர்ஸ்ட் கிளாஸ். 436 00:23:17,981 --> 00:23:19,775 நீங்க இங்க உட்கார முடியாது. 437 00:23:19,858 --> 00:23:21,568 நீங்க அபராதம் கட்ட வேண்டியிருக்கும். 438 00:23:24,154 --> 00:23:25,155 அவங்க என்ன சொல்றாங்க? 439 00:23:27,908 --> 00:23:28,909 ஷகீராவா? 440 00:23:30,077 --> 00:23:32,120 - என்ன? - ஷகீரா, 441 00:23:32,204 --> 00:23:33,455 டுவா லிபா. சந்தானா. 442 00:23:34,289 --> 00:23:36,041 அகிலெரா கூட பாக்கோ ரபேன். 443 00:23:36,124 --> 00:23:38,126 லின்-மானுவல் மிராண்டா, சரியா? 444 00:23:38,752 --> 00:23:42,214 - ஈவா லொங்கோரியா, ஈவா, ஆமா, ஆமா. - ஈவா லொங்கோரியா! ஈவா லோங்கோரியா. ஆமா, ஆமா. 445 00:23:49,888 --> 00:23:51,181 இது ஜாலியா இருந்துச்சு. 446 00:23:54,017 --> 00:23:55,227 - ஐயோ. - என்ன? 447 00:23:55,310 --> 00:23:56,645 - அவர் திரும்ப வர்றாரு. கிளம்பு. - ஐயோ. 448 00:23:56,728 --> 00:23:58,939 - வா, வா, வா. வா. - ஹே, அசையாதீங்க! 449 00:24:00,232 --> 00:24:02,526 இருங்க, ஓய்! நில்லுங்க, ஓய்! 450 00:24:02,609 --> 00:24:03,777 கொஞ்சம் நில்லுங்க. 451 00:24:04,695 --> 00:24:05,821 நீங்க ஸ்பானிஷ் கிடையாதுன்னு எனக்குத் தெரியும். 452 00:24:17,165 --> 00:24:18,542 விக் ராஸ் கைதேர்ந்த தொழிலாளி 453 00:24:22,629 --> 00:24:25,924 உங்கள் வேலைக்கு 5-ஸ்டார் ரேட்டிங் கிடைத்துள்ளது 454 00:24:31,346 --> 00:24:33,432 இன்னைக்கு நான் ஒரு அழகான நாய்க்குட்டியைப் பார்த்தேன் எனக்கு நாய்க்குட்டின்னா ரொம்ப பிடிக்கும்! 455 00:24:33,515 --> 00:24:34,766 அப்புறம் ட்ரை ஷாம்பு கூட எனக்கும் தான்! 456 00:26:17,286 --> 00:26:19,288 வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன்