1 00:00:54,221 --> 00:00:55,222 வெள்ளி, ஆகஸ்டு 23, 2019 2 00:00:55,305 --> 00:00:58,225 சரி, நம் நேரம் முடியப் போகிறது, இன்னும் ஒரு கேள்வி உள்ளது. 3 00:00:58,308 --> 00:01:00,769 லூயிஸ் மற்றும் கிளார்க்கின் ஆய்வுப் பயண வெற்றிக்குப் பங்களித்த 4 00:01:00,853 --> 00:01:02,938 மூன்று விஷயங்கள் என்னென்ன? 5 00:01:03,021 --> 00:01:04,438 மூன்று விஷயங்கள். யார் கூறுகிறீர்கள்? 6 00:01:04,522 --> 00:01:06,149 -மேண்டி. எப்போதும் பதில் கூறுவாள். -சாகஜுவேயா. 7 00:01:06,233 --> 00:01:10,445 சாகஜுவேயா, ஷொஷோனி பழங்குடியைச் சேர்ந்த அவர்களது பெண் வழிகாட்டி. சிறப்பு. 8 00:01:10,529 --> 00:01:11,613 அடுத்ததை வேறு யார் கூறுகிறீர்கள்? 9 00:01:11,697 --> 00:01:13,323 ஏன் அவரை பெண் வழிகாட்டி என கூறுகிறீர்கள்? 10 00:01:13,407 --> 00:01:14,741 அவர்களது வழிகாட்டி என்று மட்டும் ஏன் கூற முடியவில்லை? 11 00:01:16,785 --> 00:01:20,372 அவர் பெண் என்பதால் அப்படி கூறினேன். 12 00:01:22,040 --> 00:01:24,543 லூயிஸ் மற்றும் கிளார்க்கின் காலத்தில், முந்தைய 1800களில், 13 00:01:24,626 --> 00:01:27,421 சாகஜுவேயா போன்ற ஒரு பெண்ணுக்கு எந்தவொரு... 14 00:01:28,922 --> 00:01:31,592 தலைமைப் பொறுப்பும் கொடுக்கப்படுவது மிகவும் அரிதான விஷயம். 15 00:01:32,342 --> 00:01:33,802 இன்றும் அது அரிதான விஷயம்தான். 16 00:01:34,928 --> 00:01:38,307 அது அருமையான விஷயம். இன்றும் அது அரிதான விஷயம்தான். 17 00:01:38,849 --> 00:01:44,605 நான் சொல்வது 200 ஆண்டுகளுக்கு முன், அது இன்னும் மோசமாக இருந்தது. 18 00:01:45,272 --> 00:01:48,775 அதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். 19 00:01:52,821 --> 00:01:53,822 உண்மை. 20 00:01:55,157 --> 00:01:56,992 அருமை. அடுத்து யார் கூறுகிறீர்கள்? 21 00:01:57,743 --> 00:01:58,994 நானே ஒரு பெயரை அழைக்கிறேன். 22 00:01:59,912 --> 00:02:01,246 -பால். -என்ன? 23 00:02:02,039 --> 00:02:03,624 -லூயிஸ் மற்றும் கிளார்க். -ஆம்? 24 00:02:03,707 --> 00:02:06,168 அவர்களது வெற்றிக்குப் பங்களித்த இன்னொரு விஷயத்தைத் தேடுகிறோம். 25 00:02:06,251 --> 00:02:08,169 எனக்குத் தெரியவில்லை. அவர்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்திருக்கலாம். 26 00:02:08,836 --> 00:02:10,547 இல்லை, அது ஒரு நல்ல பதில். 27 00:02:10,631 --> 00:02:13,091 -அவர்கள் அதிர்ஷ்டசாலி என நினைக்கிறாயா? -அதாவது, இருந்திருக்க வேண்டும். 28 00:02:13,175 --> 00:02:15,636 பல வெற்றிகள் அதிர்ஷ்டத்தால்தான் வருகின்றன என நினைக்கிறாயா? 29 00:02:15,719 --> 00:02:16,929 கண்டிப்பாக. 30 00:02:17,012 --> 00:02:20,599 சுவாரஸ்யமான பதில். சரி, பால் சொல்வதை யார் ஏற்கிறீர்கள்? 31 00:02:20,682 --> 00:02:22,684 யாராவது? யாராவது மறுக்கிறீர்களா? 32 00:02:23,477 --> 00:02:24,978 சிறப்பு. ரமோன், என்ன நினைக்கிறாய்? 33 00:02:25,062 --> 00:02:28,357 இல்லை. நீங்கள் வெற்றி பெற்றால் அது உங்கள் கடின உழைப்பால் வந்தது. 34 00:02:28,440 --> 00:02:30,567 நீங்கள் “நான் துரதிர்ஷ்டசாலி” எனக் கூறலாம். 35 00:02:30,651 --> 00:02:34,029 ஆனால் ஒருவர் தான் துரதிர்ஷ்டசாலி எனும்போது அவர்கள் ஏதாவது செய்திருப்பார்கள், இல்லையா? 36 00:02:34,112 --> 00:02:36,448 அவர்கள் பொய் சொல்லியிருப்பார்கள். திருடியிருப்பார்கள். 37 00:02:36,532 --> 00:02:39,326 அவர்களது பிறப்புறுப்பை நுழைக்கக்கூடாத இடத்தில் நுழைத்திருப்பார்கள்... 38 00:02:39,409 --> 00:02:40,410 -சரி. -உண்மையை சொல்கிறேன். 39 00:02:40,494 --> 00:02:41,870 தெரியும், அது ஒரு நல்ல விவாதம். 40 00:02:41,954 --> 00:02:44,915 ஆனால், நான் இதுபற்றி அனைவரும் என்ன நினைக்கிறீர்கள் என ஆர்வமாக உள்ளேன். 41 00:02:46,208 --> 00:02:48,126 இங்கிருப்பவர்களில் யார் தாங்கள் அதிர்ஷ்டசாலி என நினைக்கிறீர்கள்? 42 00:02:48,836 --> 00:02:52,172 இதற்கு அனைவரும் பதிலளிக்க வேண்டும். நீங்கள் சிந்திக்க ஒரு நொடி தருகிறேன். 43 00:02:52,256 --> 00:02:55,217 நீங்கள் அதிர்ஷ்டசாலி என நினைப்பவர்கள் கையை உயர்த்துங்கள். 44 00:02:57,135 --> 00:02:59,972 ரமோன் மட்டுமா? சரி, துரதிர்ஷ்டசாலி என நினைப்பவர்கள் கையை உயர்த்துங்கள். 45 00:03:01,765 --> 00:03:04,142 சரி, கையை கீழே இறக்கலாம். 46 00:03:04,226 --> 00:03:06,353 -நீங்கள் யார், கார்மன்? -என்ன? 47 00:03:06,436 --> 00:03:08,230 நீங்கள் கையை உயர்த்தவேயில்லை. 48 00:03:08,313 --> 00:03:12,860 நானா? இல்லை, நான்... அதாவது, நான் அதிர்ஷ்டசாலி என நினைக்கிறேன். 49 00:03:13,485 --> 00:03:14,486 கண்டிப்பாக. 50 00:03:17,239 --> 00:03:19,575 ஒன்று சொல்லவா? நேரமாகிவிட்டது, அனைவரும் கிளம்ப தயாராகுங்கள். 51 00:03:19,658 --> 00:03:23,787 மேலும் ஐந்தாம் வகுப்பின் முதல் வாரத்தை நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள். 52 00:03:23,871 --> 00:03:25,455 இது ஒரு முக்கியமான சாதனை. 53 00:03:25,539 --> 00:03:27,249 அனைவரும் வாரயிறுதியை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். 54 00:03:28,250 --> 00:03:29,626 அனைவரையும் திங்களன்று பார்க்கிறேன். 55 00:03:36,967 --> 00:03:38,177 கோல்டன் ஸ்டேட் அதிர்ஷ்ட வாழ்க்கை 25 ஆண்டுகளுக்கு வாரம் 1000 டாலர் வெல்லுங்கள்! 56 00:03:38,260 --> 00:03:39,761 என் வாழ்க்கையைப் பற்றி உனக்குத் தெரியும். 57 00:03:39,845 --> 00:03:41,680 இது போன்றவை வழக்கமாக எனக்கு நடக்காது. 58 00:03:41,763 --> 00:03:43,849 ஆம், அவன் எனக்கு மெசேஜ் செய்திருந்தான், திடீரென்று. 59 00:03:43,932 --> 00:03:47,186 நாங்கள் இன்றிரவு ஓரிடத்திற்கு செல்கிறோம். அது நாட்’ஸ் பெர்ரி ஃபார்ம். 60 00:03:47,269 --> 00:03:49,521 எனக்குத் தெரியும். இப்போது மிகவும் அதிர்ஷ்டத்துடன் இருக்கிறேன். 61 00:03:49,605 --> 00:03:50,606 அவ்வளவுதானா? 62 00:05:29,705 --> 00:05:33,041 சிறந்தவனாக இருப்பது வாய்ப்பின் விளையாட்டு இல்லை. 63 00:05:33,667 --> 00:05:37,838 அது சரியான முடிவு, இப்போது, எப்போதும். 64 00:05:37,921 --> 00:05:39,673 ஹேய், உனக்கு ஸ்பகட்டி வேண்டுமா? 65 00:05:42,050 --> 00:05:44,887 -நம்மிடம் சாஸ் உள்ளதா? -உப்பும் எண்ணெயும் உள்ளது. 66 00:05:44,970 --> 00:05:46,471 இல்லை, எனக்கு வேண்டாம். 67 00:05:46,555 --> 00:05:49,308 சாஸ் இல்லாததால் நீ சாப்பிடாமல் இருக்கப் போகிறாயா? 68 00:05:49,391 --> 00:05:51,768 என்றும் சிறப்பான காடிலாக் எஸ்கலேட். 69 00:05:51,852 --> 00:05:52,853 சரியாக சொல்கிறாய். 70 00:05:56,690 --> 00:05:59,067 -இது மிகவும் சுவையாக உள்ளது. -இன்றிரவு என்ன செய்ய விரும்புகிறாய்? 71 00:06:00,944 --> 00:06:01,945 என்ன? 72 00:06:02,738 --> 00:06:04,406 என் தவறுதான். ஏதேனும் நடந்ததா? 73 00:06:04,489 --> 00:06:06,992 -என்ன சொல்கிறாய்? -மேகன் வேறொருவரை விரும்புகிறாளா? 74 00:06:07,075 --> 00:06:08,702 எனக்குத் தெரியவில்லை. ஏன் அதை கேட்கிறாய்? 75 00:06:08,785 --> 00:06:11,246 ”இன்றிரவு என்ன செய்ய விரும்புகிறாய்” என விசித்திரமாக கேட்கிறாயே? 76 00:06:11,330 --> 00:06:12,664 -அது விசித்திரமில்லை. -அப்படித்தான். 77 00:06:12,748 --> 00:06:15,876 வெள்ளி இரவு என்ன செய்ய விரும்புகிறாய் என கேட்பது விசித்திரமானது இல்லை. 78 00:06:15,959 --> 00:06:18,879 உனக்கு விசித்திரமானது. அதனால்தான் கேட்கிறேன். நீ நன்றாக இருக்கிறாயா? 79 00:06:18,962 --> 00:06:20,672 நன்றாக இருக்கிறேன். நான்... 80 00:06:21,548 --> 00:06:23,217 -கடையில்... -என்ன? 81 00:06:23,300 --> 00:06:24,927 கடையில் ஒரு பெண்ணை பார்த்தேன். 82 00:06:25,010 --> 00:06:27,971 அவள் நாட்’ஸ் பெர்ரி ஃபார்மிற்கு செல்வது பற்றி ஃபோனில் பேசி கொண்டிருந்தாள். 83 00:06:28,055 --> 00:06:30,724 -எனக்கு தெரியவில்லை. நான்... -அதனால்... என்ன? 84 00:06:30,807 --> 00:06:33,227 -நீ நாட்’ஸுக்கு செல்ல வேண்டுமா? -இல்லை, நான் நாட்’ஸுக்கு செல்ல வேண்டாம். 85 00:06:33,310 --> 00:06:34,520 -அதாவது... -சரி, வேறென்ன? 86 00:06:34,603 --> 00:06:37,940 அவள் தனது வாழ்க்கை பற்றி மிகவும் உற்சாகமாக இருந்தாள். அது இனிமையாக இருந்தது. 87 00:06:38,023 --> 00:06:39,775 -நீ மிகவும் இனிமையானவன். -அது அருமையாக இருந்தது. 88 00:06:39,858 --> 00:06:41,610 -உன்னை நம்புகிறேன். -மிகவும் நன்றி. 89 00:06:41,693 --> 00:06:44,488 இன்றிரவு நான்... ஏதாவது செய்ய வேண்டும். அதைச் செய்யலாமா? 90 00:06:44,571 --> 00:06:46,406 நீ ஏன் ஏதேனும் இசைக்கக்கூடாது? 91 00:06:47,199 --> 00:06:48,575 -இல்லை. -இல்லையா? சரி. 92 00:06:48,659 --> 00:06:49,910 மேரியோ கார்ட் விளையாடலாமா? 93 00:06:50,410 --> 00:06:53,288 -நண்பா. இல்லை. நான் சொல்வது... -பிறகு நீ என்னதான் செய்ய விரும்புகிறாய்? 94 00:06:53,372 --> 00:06:55,958 -நான் உன்னைக் கேட்கிறேன். -சரி. 95 00:07:00,170 --> 00:07:01,588 -இது கடினமாக உள்ளது. -எனக்குத் தெரிகிறது. 96 00:07:01,672 --> 00:07:04,132 -இவ்வளவு கடினமாக இருந்திருக்க கூடாது. -எனக்குத் தெரிகிறது. 97 00:07:04,216 --> 00:07:07,135 சரி, நாம்... நாம் இதை கண்டுபிடிப்போம். 98 00:07:09,263 --> 00:07:11,306 வெளியே சென்று சில பெண்களைக் கண்டுபிடிக்கலாமா? 99 00:07:12,099 --> 00:07:13,767 -”பெண்களை கண்டுபிடிக்கலாமாவா”? -ஆம். 100 00:07:13,851 --> 00:07:16,144 -உன் சாவியை கண்டுபிடிப்பது போலவா? -அட. அதை... 101 00:07:16,228 --> 00:07:18,522 -வேட்டையாடி கொல்ல விலங்கை கண்டறிவது போலவா? -விலங்கு என்று யார் சொன்னது? 102 00:07:18,605 --> 00:07:20,148 -விலங்குகளைக் கொல்வது என்று யார் சொன்னது? -அவளை சாப்பிடவா? 103 00:07:20,232 --> 00:07:22,317 நீதானே கடையில் ஒரு இளம்பெண்ணைப் பார்த்ததாகக் கூறினாய். 104 00:07:22,401 --> 00:07:23,402 -ஏதோ... -பெண். 105 00:07:23,485 --> 00:07:25,404 -இளம்பெண் இல்லை. பெண் என்று கூறினேன். -ஓ, கடவுளே. 106 00:07:25,487 --> 00:07:27,614 நீ யாரிடம் பேசுவதாக நினைக்கிறாய்? நான் பெண்களை மதிக்கிறேன்... 107 00:07:27,698 --> 00:07:29,199 இது பெண்கள் பற்றிய விஷயமே இல்லை. 108 00:07:29,283 --> 00:07:31,660 -சரி, நாம்... பெண்கள். -பெண்கள். 109 00:07:31,743 --> 00:07:34,037 நாம் இன்றிரவு எது வேண்டுமோ செய்யலாம். 110 00:07:34,121 --> 00:07:35,163 -சரி. -சரியா? 111 00:07:35,247 --> 00:07:37,833 நாம் கார் ஓட்டும் முன்பு எப்படி இருந்தோம் என நினைவுள்ளதா? நாம் நினைப்பதை செய்ய 112 00:07:37,916 --> 00:07:40,836 முடியும் போது என்னென்ன செய்யலாம் என்பதைப் பற்றி பேசிக்கொண்டிருப்போம். 113 00:07:40,919 --> 00:07:43,630 நமக்கு மீண்டும் 15 வயதாக இருந்தால் நாம் என்ன செய்வோம்? 114 00:07:45,799 --> 00:07:47,801 -பாருக்கு சென்று பெண்களிடம் பேசுவோம். -உண்மைதான். 115 00:07:47,885 --> 00:07:49,511 -அடச்சை. -இல்லையா? விடு. 116 00:07:50,304 --> 00:07:51,722 என்ன, பாருக்கு வர விரும்பவில்லையா? 117 00:07:51,805 --> 00:07:53,765 இல்லை. ஒன்று சொல்லவா? நாம் போக வேண்டும். வா போகலாம். 118 00:07:53,849 --> 00:07:55,684 -நாம் பாருக்கு போக வேண்டியதில்லை. -நான் என்ன சொல்கிறேன் என்றால், 119 00:07:55,767 --> 00:07:58,353 நாம் பாருக்குச் சென்று சில பெண்களிடம் பேசினாலும், பேசுவதற்கு அவர்களிடம் 120 00:07:58,437 --> 00:08:00,772 சுவாரஸ்யமான விஷயம் எதுவும் இருக்காது. 121 00:08:00,856 --> 00:08:02,983 -ஏன் இருக்காது? -ஏனெனில் அவர்கள் பாரில் இருக்கும் பெண்கள். 122 00:08:03,734 --> 00:08:04,902 அது மிகவும் பாலின ரீதியான தாக்குதல். 123 00:08:04,985 --> 00:08:06,778 -நான் அதை அப்படி சொல்லவில்லை. -நீ மோசமானவன். 124 00:08:06,862 --> 00:08:09,281 அவர்கள் பெண்கள் என்பதால் இல்லை. அவர்கள் மக்கள் என்பதால். 125 00:08:09,364 --> 00:08:12,618 பெரும்பாலானவர்களிடம் சுவாரஸ்யமாக பேச எதுவும் இருக்காது, 126 00:08:12,701 --> 00:08:13,911 குறிப்பாக பாரில் இருப்பவர்களிடம். 127 00:08:14,786 --> 00:08:16,997 -இரு, நீ மேகனை பாரில்தானே சந்தித்தாய்? -அது வேறு. 128 00:08:17,080 --> 00:08:18,874 எங்களை ஒரு நண்பர் அறிமுகப்படுத்தி வைத்தார். 129 00:08:18,957 --> 00:08:20,292 -அது வேறு. -சரி. 130 00:08:20,375 --> 00:08:22,085 ஆனால் நீங்கள் பாருக்குள் இருந்தீர்கள், நண்பா. 131 00:08:22,169 --> 00:08:24,713 நான் சொல்ல வருவது, சுவாரஸ்யமாக எதுவும் சொல்வதற்கு இல்லாத ஒருவரிடம் 132 00:08:24,796 --> 00:08:27,132 நான் ஏன் பேச வேண்டும்? 133 00:08:27,216 --> 00:08:29,760 நான் என்ன செய்கிறேன்? பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொள்ள மட்டும் முயல்கிறேனா? 134 00:08:29,843 --> 00:08:33,138 நீ அது மட்டும் செய்ய முயலவில்லை. ஆம் என்று சொல்வது மோசமானது என ஏன் நினைக்கிறேன்? 135 00:08:33,222 --> 00:08:35,682 ஆம், உடலுறவு அற்புதமானது. அவர்கள் விரும்பினால் ஏன் செய்யக்கூடாது? 136 00:08:35,765 --> 00:08:38,434 ஆம், அவர்கள் விரும்பினாலும் அதை என்னால் அனுபவிக்க முடியாது, 137 00:08:38,519 --> 00:08:40,187 ஏனெனில் அவர் பாரில் சுவாரஸ்யமே இல்லாமல் 138 00:08:40,270 --> 00:08:42,272 பேசிய போது சுவாரஸ்யமாக இருப்பது போல் 139 00:08:42,356 --> 00:08:43,899 நடித்து, கேவலமான ஆள் போல சிரித்த 140 00:08:43,982 --> 00:08:47,444 அந்த சுவாரஸ்யம் இல்லாத விஷயங்கள் பற்றி 141 00:08:47,528 --> 00:08:49,821 யோசித்துக் கொண்டிருப்பேன். 142 00:08:50,948 --> 00:08:53,158 சரி. நாம் பாருக்கு போக வேண்டாம். 143 00:08:53,242 --> 00:08:55,327 -ஒருவேளை போக வேண்டும். அதாவது நீ... -நண்பா, என்ன? 144 00:08:55,410 --> 00:08:58,163 -நாம் ஏதாவது புதிதாக செய்வதாக கூறினோம். -நான் அப்படி கூறவில்லை. 145 00:08:58,247 --> 00:09:00,874 -நான் அப்படி கூறவேயில்லை. -நாம் இங்கேயே உட்காந்திருக்க முடியாது. சரி. 146 00:09:00,958 --> 00:09:05,462 நாம் பாருக்கு போக வேண்டும் அல்லது இங்கே கேம் விளையாட வேண்டும் என்றிருக்க முடியாது. 147 00:09:05,546 --> 00:09:07,464 இரண்டுக்கும் மேற்பட்ட தேர்வுகள் இருக்க வேண்டும். 148 00:09:09,883 --> 00:09:11,426 நண்பா, நீ சொல்வதைக் கேள். 149 00:09:11,510 --> 00:09:15,055 -நீ உண்மையாக சொல்ல முடியாது. இல்லை. -நான் உண்மையாகத்தான் சொல்கிறேன். 150 00:09:15,138 --> 00:09:17,015 -ஓராண்டிற்கு நீ எவ்வளவு சம்பாதிக்கிறாய்? -எனக்குத் தெரியாது. 151 00:09:17,099 --> 00:09:18,100 -என்ன? -சுத்தப் பொய். 152 00:09:18,183 --> 00:09:19,935 -அது ஏன் எனக்குத் தெரிய வேண்டும்? -நீ வரி கட்ட மாட்டாயா? 153 00:09:20,018 --> 00:09:21,353 -அதை நீ செய்கிறாய் தானே? -ஆம். 154 00:09:21,436 --> 00:09:23,063 ஆண்டு முழுவதும் அந்த தகவலை 155 00:09:23,146 --> 00:09:24,481 மனதில் வைத்துக்கொள்வதில்லை. 156 00:09:24,565 --> 00:09:27,067 -உன் அப்பாதானே உனக்கும் வரி கட்டுகிறார்? -ஆம். அவர்தான் கட்டுகிறார். 157 00:09:27,150 --> 00:09:28,151 சரி. 158 00:09:28,235 --> 00:09:29,903 நீ எவ்வளவு சம்பாதிக்கிறாய் என உனக்குத் தெரியாவிட்டாலும் அதற்காக 159 00:09:29,987 --> 00:09:31,822 நீ வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவன் என அர்த்தம் இல்லை. 160 00:09:31,905 --> 00:09:33,448 -நான் கண்டிப்பாக கீழே தான் இருக்கிறேன். -சரி, இரு. 161 00:09:33,532 --> 00:09:35,576 நாம் இங்கு போகலாம். அதன் பெயர் ரெண்டிஷன் ரூம். 162 00:09:35,659 --> 00:09:37,202 -நான் வருகிறேன். -அது 13 நிமிட தொலைவில் உள்ளது. 163 00:09:37,286 --> 00:09:38,912 நான் ஓட்டுகிறேன், ஆனால் நாம் இரண்டு கார்கள் எடுத்துவர வேண்டும். 164 00:09:38,996 --> 00:09:40,414 -சரி, நான் ஓட்டுவேன். -நீ இப்போதுதான் புகைபிடித்திருக்கிறாய். 165 00:09:40,497 --> 00:09:43,041 -ஆனால் நான் எதுவும் குடிக்கவில்லை. -உன்னால் பெட்ரோல் போட முடியுமா? 166 00:09:43,125 --> 00:09:44,459 சரி. நாம் அனைவரும் என் காரிலேயே போகலாம். 167 00:09:44,543 --> 00:09:46,461 உன் ஆண்டு வருமானம் உனக்கு உண்மையாகவே தெரியாதா? 168 00:09:46,545 --> 00:09:47,546 -இரு. -இல்லை, விக்டர், 169 00:09:47,629 --> 00:09:50,007 நம்மில் அனைவரும் உன்னைப் போல பெரும்பாலான எங்கள் வாழ்க்கையை 170 00:09:50,090 --> 00:09:52,593 -கார்ப்பரேட் ஏணியில் ஏற கழிப்பதில்லை. -யூபிஎஸ் பற்றி பொறாமையில் 171 00:09:52,676 --> 00:09:54,219 -தவறாக பேசாதே. -நான் தவறாக பேசவில்லை. 172 00:09:54,303 --> 00:09:57,264 அது ஒரு கார்ப்பரேஷன், நீ அதன் ஏணியில்... 173 00:09:57,347 --> 00:09:58,974 -அது ஒரு அற்புதமான நிறுவனம். -...தொடர்ச்சியாக ஏறுகிறாய். 174 00:09:59,057 --> 00:10:01,727 -அதற்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். -மன்னிப்பு கேட்கும்படி நான் கூறவில்லை. 175 00:10:01,810 --> 00:10:03,604 அது நியாயமானதாக இருப்பதால் அது ஒரு நல்ல நிறுவனம். 176 00:10:03,687 --> 00:10:06,565 -நண்பா. தயவுசெய்து நாம்... -என் டிரைவர்களிடம் இதை எப்போதும் கூறுவேன். 177 00:10:06,648 --> 00:10:08,817 நீங்கள் யூபிஎஸ்ஸை சரியாக நடத்தினால், யூபிஎஸ் உங்களை சரியாக நடத்தும், சரியா? 178 00:10:08,901 --> 00:10:10,694 நான் யூபிஎஸ்ஸை சரியாக நடத்துகிறேன். அருமை. 179 00:10:10,777 --> 00:10:11,778 என்னை கூட்டிச் செல்கிறாயா? 180 00:10:11,862 --> 00:10:14,489 சரியா? கார்ப்பரேஷனில் நான் இருக்கும் இடத்திற்கு ஒரே இரவில் வந்துவிட்டேனா? 181 00:10:14,573 --> 00:10:16,450 -நீ “கார்ப்பரேஷன்” எனக் கூறினாய். -நான் அங்கு சென்றவுடன், 182 00:10:16,533 --> 00:10:19,328 அவர்கள் “ஹேய், யோ. நீ மேற்பார்வையாளரா?” என கேட்பார்கள். கண்டிப்பாக கிடையாது. 183 00:10:19,411 --> 00:10:23,081 -யோ, எங்கே போகிறாய்? -நான் வெளியே... உலகத்திற்குள் போகிறேன். 184 00:10:32,716 --> 00:10:34,718 -நன்றாக இருக்கிறீர்களா? -ஆம். 185 00:10:34,801 --> 00:10:36,803 -மோசமாக குடித்திருக்கிறேன். -என்ன? 186 00:10:36,887 --> 00:10:39,598 -ஒன்றுமில்லை. கதவு மூடியுள்ளது. -இல்லை, மூடவில்லை. 187 00:10:39,681 --> 00:10:41,350 கடவுளே. ஏன் என்னால்... 188 00:10:42,976 --> 00:10:44,186 நன்றி. 189 00:10:50,234 --> 00:10:51,860 உங்கள் இரவு எப்படி இருந்தது? 190 00:10:51,944 --> 00:10:54,404 கேவலமாக இருந்தது. என் நண்பர்கள் அனைவரும் செயல்பட முடியாதவர்கள். 191 00:10:55,447 --> 00:10:58,992 -எப்படி இருக்கிறாய்? -நான் நன்றாக இருக்கிறேன். 192 00:10:59,076 --> 00:11:00,953 -அது என்ன? -என்ன? 193 00:11:01,036 --> 00:11:04,039 -கண்டிப்பாக உனக்கு ஏதோ சிக்கல் உள்ளது. -எனக்கு எதுவும் சிக்கல் இல்லை. 194 00:11:05,123 --> 00:11:06,291 சரி. 195 00:11:06,375 --> 00:11:10,128 உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும். உங்களுக்கு சாகஜுவேயா தெரியுமா? 196 00:11:10,212 --> 00:11:11,255 தெரியும். 197 00:11:11,338 --> 00:11:15,300 அவரை லூயிஸ் மற்றும் கிளார்க்கின் பெண் வழிகாட்டி என கூறுவது தவறா? 198 00:11:15,384 --> 00:11:18,470 -என்ன சொல்கிறாய்? -அவர்களது வழிகாட்டி என கூறுவதற்கு பதில். 199 00:11:20,013 --> 00:11:22,558 செல்லம். உனக்கு அப்படி செய்யாதே. 200 00:11:22,641 --> 00:11:24,393 எனக்கு எதுவும் செய்துகொள்ளவில்லை. 201 00:11:24,476 --> 00:11:25,602 நீ நல்லவன். 202 00:11:25,686 --> 00:11:28,647 நன்றி. உங்கள் நடுநிலையான கருத்தை பாராட்டுகிறேன். 203 00:11:28,730 --> 00:11:29,857 நீ நல்ல வேலையை செய்கிறாய், 204 00:11:29,940 --> 00:11:32,985 கற்க வேண்டிய இளம் வயதினருக்கு நீ கற்றுக்கொடுக்கிறாய். 205 00:11:33,944 --> 00:11:35,821 நீ கிடைத்தது அவர்கள் அதிர்ஷ்டம் தான். 206 00:11:35,904 --> 00:11:38,365 நான் பள்ளியில் படிக்கும்போது அது முழுவதும் வீணாக இருந்தது. 207 00:11:38,448 --> 00:11:41,201 பெரும்பாலான என் மாணவர்களும் அதையே கூறுவார்கள். 208 00:11:41,285 --> 00:11:43,787 சரி. நீ பயனற்றவனாக இருக்க விரும்புகிறாய். நீ பயனற்றவன். 209 00:11:44,913 --> 00:11:46,582 உன்னிடம் வேலையாவது உள்ளது. 210 00:11:46,665 --> 00:11:49,084 லிஸா தனது மகனை பற்றி சொல்வதைவிட இது அதிகம்தான். 211 00:11:49,835 --> 00:11:53,046 நாங்கள் ஒன்றாக இருக்கும்போது, நீ என்ன செய்கிறாய் என கேட்பார்கள், நான் சொல்லும் 212 00:11:53,130 --> 00:11:55,465 போது அனைவரும் உன்னை நினைத்து பெருமைப்படுவார்கள். 213 00:11:55,549 --> 00:11:57,593 அனைவரும் மிகவும் பெருமைப்படுகின்றனர். 214 00:11:57,676 --> 00:11:59,553 நீ இசைத் துறையில் இருக்கும்போது இருந்த அளவுக்கு இல்லை. 215 00:11:59,636 --> 00:12:01,889 -அப்போது அவர்கள் கவலைப்பட்டனர். -நான் இசைத்துறையில் இருந்ததில்லை. 216 00:12:01,972 --> 00:12:04,892 அதேதான். ஒரு துறையில் இருக்கிறாய் என்றால் பணம் சம்பாதிக்க வேண்டும். 217 00:12:04,975 --> 00:12:08,061 அதாவது, தவறாக எண்ணாதே, நான் இசையை நேசிக்கிறேன். 218 00:12:09,605 --> 00:12:12,399 அதுதான் முக்கியம் இல்லையா? நீ அதை நேசிப்பது. 219 00:12:13,025 --> 00:12:14,318 நீ வாசிப்பது. அதை நேசிப்பது. 220 00:12:14,401 --> 00:12:16,904 -அதுதான் முக்கியம். -ஆம், ஆனால் நான் வாசிப்பதில்லை. 221 00:12:16,987 --> 00:12:19,948 இல்லை, நிகழ்ச்சிகளில் இல்லை. உனக்காக வாசிப்பதைக் கூறினேன். 222 00:12:20,032 --> 00:12:21,742 ஆம், நான் அதைச் செய்வது இல்லை. 223 00:12:21,825 --> 00:12:24,036 ஓராண்டாக நான் எதையும் வாசிக்கவில்லை. 224 00:12:26,663 --> 00:12:28,332 நீ அதை என்னிடம் கூறவில்லை. 225 00:12:29,958 --> 00:12:30,959 ஆம். 226 00:12:33,128 --> 00:12:35,464 சரி, விடு. ஒரு விஷயம் குறைந்தது, இல்லையா? 227 00:12:36,632 --> 00:12:39,092 முடிவில், குடும்பம்தான் முக்கியம், அதனால்... 228 00:12:39,176 --> 00:12:42,012 -அது முக்கியமா? அது மனச்சோர்வு கொடுக்கும். -இல்லை, கொடுக்காது. 229 00:12:42,095 --> 00:12:44,681 அப்படியெனில் என் வாழ்க்கை முழுவதும் முக்கியமான விஷயம், நீங்களும் 230 00:12:44,765 --> 00:12:47,518 பெத்தும் மட்டும்தான் என்று கூறுகிறீர்களா? 231 00:12:47,601 --> 00:12:50,437 இல்லை, கண்டிப்பாக நான் அப்படி கூறவில்லை. 232 00:12:50,521 --> 00:12:52,356 அதாவது ஒருநாள் உனக்கென்று 233 00:12:52,439 --> 00:12:55,108 வரலாம், அப்போது நான் என்ன சொல்கிறேன் என்பது உனக்குப் புரியும். 234 00:12:55,192 --> 00:12:56,610 எனக்கென்று ஒரு குடும்பம் வராமல் போகலாம். 235 00:12:56,693 --> 00:12:58,695 -வரலாம் என்றுதான் கூறினேன். -அப்படியே குடும்பம் வந்தாலும் 236 00:12:58,779 --> 00:13:00,280 நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரியாமல் போகலாம். 237 00:13:00,364 --> 00:13:01,406 உனக்குப் புரியும். 238 00:13:04,660 --> 00:13:08,956 இந்த தருணத்தில் நாம் வாழ்வதுதான் முக்கியம் இல்லையா? 239 00:13:10,290 --> 00:13:11,291 இல்லை. 240 00:13:15,963 --> 00:13:16,964 சரி. 241 00:13:17,923 --> 00:13:19,132 சரி. 242 00:13:21,510 --> 00:13:22,719 நீ அற்புதமானவன். 243 00:13:23,637 --> 00:13:24,805 இல்லை. 244 00:13:24,888 --> 00:13:25,973 நன்றி. 245 00:13:27,558 --> 00:13:28,559 சரி. 246 00:13:29,351 --> 00:13:30,978 -நன்றி. -சரி. கவலைப்பட வேண்டாம். 247 00:13:57,087 --> 00:14:00,507 யோ நண்பா. வெகு நாட்கள் ஆகிவிட்டன. 248 00:14:00,591 --> 00:14:07,222 இன்றிரவு ஏதாவது நடக்கிறதா? 249 00:14:51,016 --> 00:14:52,184 யோ, இங்கிருக்கிறாய். 250 00:14:52,267 --> 00:14:53,268 -ஹாய். -யோ. 251 00:14:53,352 --> 00:14:55,437 -வந்து எவ்வளவு நேரம் ஆகிறது? -கொஞ்ச நேரம்தான். 252 00:14:55,521 --> 00:14:56,563 கடவுளே. மன்னித்துவிடு, நண்பா. 253 00:14:56,647 --> 00:14:58,690 -உன்னை பார்க்கவில்லை. எங்கே இருந்தாய்? -இங்கேதான். 254 00:14:58,774 --> 00:15:00,317 -என் தவறுதான். -பரவாயில்லை. 255 00:15:00,400 --> 00:15:01,902 எப்படி இருக்கிறாய்? 256 00:15:01,985 --> 00:15:03,403 நன்றாக இருக்கிறேன், நண்பா. 257 00:15:03,487 --> 00:15:05,572 அருமை. சமீபத்தில் எங்கேயும் வாசிக்கிறாயா... 258 00:15:07,658 --> 00:15:08,867 இல்லை, நான் நிறுத்திவிட்டேன். 259 00:15:09,660 --> 00:15:11,912 -நிறுத்திவிட்டாயா? -ஆம். 260 00:15:12,454 --> 00:15:13,872 இப்போது எனக்காக மட்டும் வாசிக்கிறேன். 261 00:15:13,956 --> 00:15:16,625 -அட, நீ அப்படி விட்டுவிடக்கூடாது. -ஆம். 262 00:15:18,544 --> 00:15:19,753 நீ என்ன செய்கிறாய்? 263 00:15:20,462 --> 00:15:22,798 நானா? நான் தொடர்ச்சியாக ஓய்வின்றி இருக்கிறேன் தெரியுமா? 264 00:15:22,881 --> 00:15:25,175 ஒவ்வொரு படியாக, வெற்றியை நோக்கி முன்னேறுகிறேன். 265 00:15:25,259 --> 00:15:27,135 சமீபத்தில் சிறப்பான இசைகளை இசைக்கிறேன், 266 00:15:27,219 --> 00:15:29,179 ஆனால் உண்மையில் இந்தத் துறையில் இப்போது பல திறமைகள் 267 00:15:29,263 --> 00:15:31,390 வைத்திருப்பதுதான் முக்கியம். 268 00:15:31,473 --> 00:15:33,809 பல்வேறு வாய்ப்புகளை பயன்படுத்துவது, எப்படியெல்லாம் முடியுமோ எடுக்க வேண்டும், 269 00:15:33,892 --> 00:15:36,186 ஏனெனில் திறமைக்கான தேவை இப்போது பெரிதாக உள்ளது. 270 00:15:36,270 --> 00:15:38,397 அதனால் நான் ஹோஸ்ட் செய்யத் தொடங்கிவிட்டேன் தெரியுமா? 271 00:15:38,480 --> 00:15:41,149 கொஞ்சம் நடிப்பு, முன்பே எழுதப்பட்டது, எழுதப்படாதது, 272 00:15:41,233 --> 00:15:43,360 கேமராவுக்கு பின்னால் வேலை செய்வது, ஆனால்... 273 00:15:43,443 --> 00:15:46,405 இரண்டு மாதங்களுக்கு முன்புதான் உறுதிசெய்யப்பட்டேன், ஆக, ஏதோ சரியாக செய்வதாகத்தானே அர்த்தம். 274 00:15:47,573 --> 00:15:48,866 மிகவும் அருமை. 275 00:15:48,949 --> 00:15:52,411 ஆம், நண்பா. எல்லாம் நன்றாக உள்ளன. 276 00:15:53,996 --> 00:15:55,998 -ஆம். -கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது. 277 00:15:56,081 --> 00:15:57,082 ஆம். 278 00:16:29,281 --> 00:16:32,367 யோ! கண்டிப்பாக. நண்பா! 279 00:17:09,320 --> 00:17:10,321 வேண்டாம். 280 00:17:10,989 --> 00:17:13,825 ”வேண்டாம்” என்றால் என்ன அர்த்தம். சிகரெட் பிடிக்கத்தான் உன்னை வெளியே கூப்பிட்டேன். 281 00:17:13,909 --> 00:17:15,493 அதற்காகத்தான் என்னை வெளியே கூப்பிட்டாயா? 282 00:17:16,078 --> 00:17:18,038 -மிகவும் நம்பிக்கைதான். -வேலை செய்ததா? 283 00:17:18,121 --> 00:17:19,748 -கண்டிப்பாக, ஆனால்... -உண்மையாகவா? 284 00:17:19,830 --> 00:17:22,041 -ஆனால் நீ குடிக்கவும் இல்லை. -உனக்கு எப்படி தெரியும்? 285 00:17:22,125 --> 00:17:24,419 உன்னை பார்த்த போது கையில் கிளப் சோடாவுடன் நின்றுகொண்டிருந்தாய். 286 00:17:24,502 --> 00:17:26,380 அது வோட்காவாக கூட இருக்கலாம். அதில் எலுமிச்சை இருந்தது. 287 00:17:26,463 --> 00:17:29,049 இல்லை, நீ குடிக்கவில்லை என்று தெரியும். கவலை வேண்டாம். எனக்கு பிடித்திருக்கிறது. 288 00:17:29,132 --> 00:17:30,300 நன்றி. 289 00:17:30,384 --> 00:17:31,385 ஒருவேளை... 290 00:17:32,803 --> 00:17:34,805 நீ மோர்மனா என்ன? 291 00:17:34,888 --> 00:17:36,181 நான் ஒரு முஸ்லிம். 292 00:17:36,265 --> 00:17:38,475 உண்மையாகவா? ஓ, அருமை. 293 00:17:39,142 --> 00:17:41,228 மன்னித்துவிடு. அது... நகைச்சுவைக்காக சொன்னேன். 294 00:17:42,771 --> 00:17:44,189 அது நகைச்சுவையாக இல்லை. 295 00:17:45,023 --> 00:17:47,818 முஸ்லிம்கள் குடிக்க மாட்டார்கள் என்பதால் சொன்னேன். 296 00:17:47,901 --> 00:17:49,862 நீ முஸ்லிம் இல்லையென்றால் உனக்கு அது எப்படி தெரியும்? 297 00:17:50,362 --> 00:17:52,281 அது அந்த மதத்தின் ஒரு பகுதி என தெரியும். 298 00:17:53,615 --> 00:17:56,285 அதை விளக்கியதற்கு நன்றி. 299 00:17:58,662 --> 00:18:00,163 நான் சிகரெட் பிடிக்கலாம் என நினைக்கிறேன். 300 00:18:00,247 --> 00:18:02,082 நீ குடிக்கத்தான் வேண்டும். 301 00:18:02,165 --> 00:18:05,919 இல்லை, நான் குடிக்க மாட்டேன். ஆனால் ஒரு சிகரெட் பரவாயில்லை. சரியா? 302 00:18:06,461 --> 00:18:08,005 சரி. 303 00:18:08,088 --> 00:18:09,464 உன் விருப்பம். 304 00:18:10,549 --> 00:18:12,342 அது பிரின்ஸஸ் பிரைடு வசனம்தானே? 305 00:18:12,426 --> 00:18:14,970 ஆம். கடவுளே. உன்னை மீண்டும் எனக்கு பிடித்துவிட்டது. 306 00:18:15,804 --> 00:18:16,805 அருமை. 307 00:18:20,684 --> 00:18:23,353 நீ எங்கிருந்து வருகிறாய்? 308 00:18:23,437 --> 00:18:24,438 இங்குதான். 309 00:18:24,521 --> 00:18:25,981 இல்லை, உன் சொந்த ஊர் எது? 310 00:18:26,064 --> 00:18:27,441 இங்குதான் பிறந்து வளர்ந்தேன். 311 00:18:27,524 --> 00:18:29,610 என்ன? நீ எல்ஏவைச் சேர்ந்தவனா? 312 00:18:29,693 --> 00:18:32,779 -இல்லை. யாரும் எல்ஏவை சேர்ந்தவர்கள் இல்லை. -நான் கேள்விப்பட்டிருக்கிறேன். 313 00:18:33,572 --> 00:18:35,574 உங்கள் குடும்பத்தினர் வணிகத்தில் உள்ளனரா? 314 00:18:35,657 --> 00:18:37,618 -பிளாஸ்டிக்கா? -என்ன? 315 00:18:38,952 --> 00:18:40,704 ஆம். இல்லை, அது... 316 00:18:40,787 --> 00:18:44,625 என் அம்மா ரியல் எஸ்டேட்டில் உள்ளார், அவரது அப்பா பிளம்பராக இருந்தார், 317 00:18:44,708 --> 00:18:46,126 அவர்கள் இருவருமே எல்ஏவை சேர்ந்தவர்கள். 318 00:18:46,210 --> 00:18:49,796 நிறுத்து. உன் அம்மாவும் அவரது அப்பாவும் எல்ஏவில் பிறந்தவர்களா? 319 00:18:50,380 --> 00:18:51,924 அது மிகவும் அற்புதமான விஷயம். 320 00:18:52,007 --> 00:18:53,759 மிகவும் ஆச்சரியமாக உள்ளது. 321 00:18:54,551 --> 00:18:55,719 நீ எங்கிருந்து வருகிறாய்? 322 00:18:56,261 --> 00:18:57,971 நான் வால்தாம், மாஸச்சூஸட்ஸிலிருந்து வருகிறேன். 323 00:18:58,055 --> 00:19:00,557 நீ கேள்விப்பட்டிருக்க மாட்டாய். இது பாஸ்டனின் புறநகர்ப்பகுதி. 324 00:19:00,641 --> 00:19:04,102 ஆனால் வால்தாமில் வசிக்கும் வால்தாம் மக்களை விட, இப்போது எல்ஏவில் வசிக்கும் 325 00:19:04,186 --> 00:19:06,188 வால்தாம் மக்களைத்தான் எனக்கு அதிகமாக தெரியும். 326 00:19:06,271 --> 00:19:08,774 அனைவரும் இங்கு குடிபெயர்ந்துவிட்டனர். இது கிறுக்குத்தனம். 327 00:19:08,857 --> 00:19:10,609 எல்ஏ அருமையான நகரம். 328 00:19:10,692 --> 00:19:12,736 -இல்லை. -ஆம். 329 00:19:12,819 --> 00:19:15,364 நீ ஒருவேளை வால்தாமிலிருந்து வராதவர்களை சந்திக்க வேண்டியிருக்கலாம். 330 00:19:15,447 --> 00:19:16,615 ஆம், இருக்கலாம். 331 00:19:17,282 --> 00:19:19,493 நீ எனக்கு இந்த ஊரை சேர்ந்தவர்களை அறிமுகப்படுத்துகிறாயா? 332 00:19:19,576 --> 00:19:20,744 எனக்கு பலரைத் தெரியும். 333 00:19:23,247 --> 00:19:24,540 நீ என்ன செய்கிறாய்? 334 00:19:25,541 --> 00:19:27,417 நான் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர். 335 00:19:27,501 --> 00:19:29,503 வாயை மூடு, உன்னை நான் நேசிக்கிறேன். 336 00:19:29,586 --> 00:19:32,548 எல்லாவற்றையும் எனக்கு சொல். எல்லாம் எனக்கு தெரியவேண்டும். 337 00:19:33,924 --> 00:19:37,511 எனக்கு தெரியவில்லை, ஐந்தாம் வகுப்பு என்பது... 338 00:19:37,594 --> 00:19:42,015 பத்து & 11 வயது மாணவர்கள் இருப்பார்கள். அவர்கள் அடிப்படையில் பெரியவர்கள். 339 00:19:42,099 --> 00:19:45,602 அதாவது, அவர்கள் பெரியவர்கள் இல்லை, ஆனால் அவ்வளவு வித்தியாசமானவர்கள் இல்லை. 340 00:19:46,728 --> 00:19:48,647 அல்லது பெரும்பாலான பெரியவர்கள், 341 00:19:48,730 --> 00:19:51,900 பத்து மற்றும் 11 வயது சிறுவர்களிடம் இருந்து அவ்வளவு வித்தியாசமானவர்களாக இல்லை என்று கூறலாம். 342 00:19:53,735 --> 00:19:54,820 அது அருமையான விஷயம். 343 00:19:55,529 --> 00:19:56,864 அது... 344 00:19:56,947 --> 00:20:00,534 அதாவது, அந்த குழந்தைகள்தான் எதிர்காலம் இல்லையா? 345 00:20:02,202 --> 00:20:03,745 அவர்கள் எதிர்காலத்தின் ஒரு பகுதி. 346 00:20:03,829 --> 00:20:04,830 ஆம். 347 00:20:05,372 --> 00:20:07,666 அதாவது, நீ செய்வது அற்புதமான வேலை. 348 00:20:07,749 --> 00:20:08,834 நன்றி. 349 00:20:14,673 --> 00:20:16,091 கேள், நீ என்னுடன்... 350 00:20:18,719 --> 00:20:19,720 சரி. 351 00:20:21,972 --> 00:20:23,599 -சரியா? -ஆம். 352 00:20:24,099 --> 00:20:26,685 -சரி. சரியா? சரி. -சரி. 353 00:20:27,728 --> 00:20:28,729 அற்புதம். 354 00:20:29,563 --> 00:20:32,566 டென் டென் வில்ஷைர் 10 10 355 00:20:39,573 --> 00:20:41,867 ஹாய், பேபி. ஹாய். 356 00:20:42,451 --> 00:20:45,787 இங்கே வா. நீ இல்லாமல் தவித்துவிட்டேன். 357 00:20:47,122 --> 00:20:48,540 இதுதான் லியாம். 358 00:20:49,416 --> 00:20:50,751 ”ஹாய், லியாம்” என சொல். 359 00:20:51,585 --> 00:20:53,212 -ஹாய் சொல். -ஹாய், லியாம். 360 00:20:55,088 --> 00:20:58,050 சரி, நீ போய் உன் மெத்தையில் படு. 361 00:20:58,717 --> 00:21:01,136 சிறிது நேரத்தில் உன்னை சந்திக்கிறேன். 362 00:21:03,180 --> 00:21:04,723 இது மிகவும் அழகான இடம். 363 00:21:04,806 --> 00:21:05,807 நன்றி. 364 00:21:25,118 --> 00:21:26,119 இசை வேண்டுமா? 365 00:22:01,196 --> 00:22:02,197 இதோ, நான் செய்கிறேன். 366 00:22:32,978 --> 00:22:35,105 நீ எனக்கு வேண்டும். 367 00:22:36,732 --> 00:22:38,650 -சரி, நான் ஆணுறை எடுத்து வருகிறேன். -சரி. 368 00:22:40,068 --> 00:22:41,320 உன் பேண்ட்டை கழட்டு. 369 00:22:41,820 --> 00:22:43,697 ஹாய், பேப். நல்ல பையன். 370 00:23:12,476 --> 00:23:13,685 அதை போட்டுவிட்டாயா? 371 00:23:17,105 --> 00:23:18,106 போட்டுவிட்டாயா? 372 00:23:19,358 --> 00:23:20,359 இன்னும் இல்லை. 373 00:23:24,488 --> 00:23:26,615 -என்ன ஆயிற்று? -ஒன்றுமில்லை. 374 00:23:28,325 --> 00:23:29,993 -நீ... -ஒன்றுமில்லை. ஒன்றுமில்லை. 375 00:23:32,996 --> 00:23:36,667 அடக் கடவுளே. அடக் கடவுளே. 376 00:23:36,750 --> 00:23:39,253 -இதற்கு முன் இது எனக்கு நடந்ததில்லை. -மன்னித்துவிடு. 377 00:23:39,920 --> 00:23:41,213 உனக்கு என்ன ஆயிற்று? 378 00:23:43,382 --> 00:23:45,008 -எனக்குத் தெரியவில்லை. -நீ... 379 00:23:45,634 --> 00:23:47,594 இது உனக்கு சாதாரணமானதா? 380 00:23:48,303 --> 00:23:51,265 -அப்படி இல்லை. -அப்படி இல்லையா? அப்படித்தான் இல்லையா? 381 00:23:53,183 --> 00:23:54,768 -நான் போக வேண்டும். -இல்லை, இல்லை, இல்லை. 382 00:23:54,852 --> 00:23:57,104 இது உனக்கு எப்போதெல்லாம் நடக்கும் என எனக்குத் தெரிய வேண்டும். 383 00:23:57,187 --> 00:24:00,190 -நான் இந்த விஷயத்தை அடிக்கடி செய்வதில்லை. -எந்த விஷயத்தை? 384 00:24:00,691 --> 00:24:03,443 -சமீபத்தில் சந்தித்த பெண்ணுடன் உடலுறவு... -நாம் உடலுறவு வைத்துக்கொள்ளவில்லை. 385 00:24:03,527 --> 00:24:06,488 சரி, சமீபத்தில் சந்தித்த பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொள்ள முயல்வது. 386 00:24:07,322 --> 00:24:09,700 -பிறகு ஏன் என்னுடன் வீட்டுக்கு வந்தாய்? -எனக்குத் தெரியவில்லை. 387 00:24:11,368 --> 00:24:12,369 நான்... 388 00:24:13,871 --> 00:24:15,873 புதிதாக முயற்சிக்கலாம் என்று நினைத்தேன். 389 00:24:16,498 --> 00:24:18,000 அது ஒரு பதில் இல்லை. 390 00:24:18,917 --> 00:24:22,254 என்னை மன்னித்துவிடு. எல்லாவற்றுக்கும் என்னை மன்னித்துவிடு. நான் போகிறேன். 391 00:24:23,964 --> 00:24:26,216 நீ என்னுடன் உண்மையாக இருப்பதையே நான் விரும்புகிறேன். 392 00:24:27,217 --> 00:24:28,218 உண்மையாக, 393 00:24:28,969 --> 00:24:30,053 எனக்குத் தெரியவில்லை. 394 00:24:30,137 --> 00:24:32,764 நீ உடலுறவு வைத்துக்கொள்ள நினைக்கும்போது ஏன் எனது ஆணுறுப்பு வேலை 395 00:24:32,848 --> 00:24:35,559 செய்யவில்லை என தெரியவில்லை. நீ மிகவும் அழகான பெண். 396 00:24:36,852 --> 00:24:40,230 உண்மையை சொல்லப் போனால், வேறொரு நேரத்தில் இதைப் பற்றி யோசித்து இது எப்படி 397 00:24:40,314 --> 00:24:42,649 நடந்திருக்க வேண்டுமோ அப்படி நடந்திருந்தால் என்ன மாதிரி 398 00:24:42,733 --> 00:24:46,320 இருந்திருக்கும் என கனவு காண்பேன், ஆனால்... 399 00:24:49,281 --> 00:24:51,742 உண்மையில், எதுவும் நடக்க வேண்டியபடி நடப்பதில்லை. 400 00:24:51,825 --> 00:24:54,536 குறைந்தது எனக்கு நடப்பதில்லை. அதனால்... 401 00:24:55,287 --> 00:24:58,832 பார், இது பெரிய விஷயம் இல்லை. 402 00:24:59,750 --> 00:25:01,877 சரியா? இது பலருக்கும் நடக்கும். 403 00:25:02,878 --> 00:25:06,423 நாம் சந்தித்த முதல் இரவிலேயே நாம் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, சரியா? 404 00:25:06,507 --> 00:25:09,510 இது உண்மையில்... உண்மையில் இது அழகாக உள்ளது. 405 00:25:11,512 --> 00:25:12,513 புரிகிறதா? 406 00:25:13,347 --> 00:25:15,682 நாம் ஒன்றாக நேரத்தை செழவழிப்போமா? 407 00:25:16,934 --> 00:25:20,229 -இல்லை, நான் போக வேண்டுமென நினைக்கிறேன்... -நீ இதில் அவமானப்பட வேண்டாம். 408 00:25:20,312 --> 00:25:23,190 -எனக்கு தெரியும். நன்றி, ஆனால் வேண்டாம்... -இல்லை, இங்கு வா. வந்து உட்கார். 409 00:25:24,608 --> 00:25:25,734 நான் போகிறேன். 410 00:25:26,902 --> 00:25:29,321 இது என் தவறு. நான் தவறு செய்துவிட்டேன். 411 00:25:31,532 --> 00:25:32,991 அடிப்படையில், நாம் உடலுறவு வைத்து கொள்ளவில்லை எனில், 412 00:25:33,075 --> 00:25:35,077 என்னுடன் நேரம் செலவழிப்பது வீண், அப்படித்தானே? 413 00:25:35,160 --> 00:25:37,329 -நான் அப்படி சொல்லவில்லை. -நீ வேறென்ன சொல்கிறாய்? 414 00:25:40,374 --> 00:25:41,375 நான் போக வேண்டும். 415 00:25:41,458 --> 00:25:43,836 நீ ஒரு தோற்றவனாக இருப்பது உனக்குப் பிடித்திருக்கிறது என்கிறாய் என நினைக்கிறேன். 416 00:25:49,800 --> 00:25:52,636 ஒன்று சொல்கிறேன், உன் மூச்சு மிகவும் நாற்றமடிக்கிறது. 417 00:25:56,849 --> 00:25:59,017 ஏனெனில் நான் உன் சிகரெட்டைப் பிடித்தேன். 418 00:25:59,518 --> 00:26:02,187 உன் மூச்சு எப்படி உள்ளது என நினைக்கிறாய்? எனக்கு விரைப்பு போனதில் ஆச்சரியம் இல்லை. 419 00:26:02,271 --> 00:26:04,648 நாம் முத்தமிடும்போதெல்லாம் உன் வாயில் வாந்தி எடுத்துவிடுவேன் என நினைத்தேன். 420 00:26:04,731 --> 00:26:07,484 இல்லை, இன்று ஏன் நீ ஆண்மையற்றவனாக இருக்கிறாய் என எனக்குத் தெரியும். 421 00:26:07,568 --> 00:26:09,403 -நான் உன்னைவிட அதிகமாக சம்பாதிக்கிறேன். -அவ்வளவுதான். 422 00:26:09,486 --> 00:26:12,406 உன்னால் ரிப்பேர் செய்ய முடியாத, பஞ்சரான டயர் கொண்ட உடைந்த உனது வண்டியில் 423 00:26:12,489 --> 00:26:14,533 -இங்கே வந்தோம். -அது இன்றுதான் நடந்தது. 424 00:26:14,616 --> 00:26:17,369 உன் வீடு மோசமாக இருப்பதால் என் வீட்டுக்கு நாம் வர வேண்டியிருந்தது. 425 00:26:17,452 --> 00:26:19,621 -நாம் லியாமுக்காக வந்தோம். -உன்னையே உன்னால் பார்த்துக்கொள்ள முடியாது. 426 00:26:19,705 --> 00:26:21,540 உன்னால் என்னையும் ஒரு குடும்பத்தையும் பார்த்துக்கொள்ள முடியாது. 427 00:26:21,623 --> 00:26:24,418 -நாம் இப்போது குடும்பமாகிவிட்டோமா? -ஒன்று சொல்கிறேன், 428 00:26:24,501 --> 00:26:27,171 உன் ஆசிரியர் வேலையில் எல்லா மாணவர்களையும் பிடிக்கும் என்று சொன்னாய் அல்லவா? 429 00:26:27,254 --> 00:26:28,547 அது எல்லாம் பொய். 430 00:26:29,089 --> 00:26:33,177 வேறு ஏதேனும் செய்ய முயற்சி செய்து கைவிட்டவர்களே 431 00:26:33,260 --> 00:26:34,428 ஆசிரியர்களாக ஆவார்கள். 432 00:26:43,395 --> 00:26:44,730 உன்னிடம் ஒன்று கேட்கலாமா? 433 00:26:48,650 --> 00:26:49,651 என்ன? 434 00:26:53,530 --> 00:26:54,656 நீ இளவயதாக இருக்கும்போது... 435 00:26:55,407 --> 00:26:58,160 உன் சிறுவயதில் அல்ல, இளமைக் காலத்தில், 436 00:27:00,370 --> 00:27:04,458 நீ தனியாகத்தான் சாகப் போகிறாய் என்று உனக்கு எப்போதும் தெரியுமா? 437 00:28:39,303 --> 00:28:40,470 வணக்கம், ஜோஷ். 438 00:28:40,971 --> 00:28:43,849 ஹேய், பியாட்ரிஸ். காலை வணக்கம்! 439 00:28:43,932 --> 00:28:47,060 காலை வணக்கம்! எப்படி இருக்கிறாய்? 440 00:28:47,144 --> 00:28:48,145 நன்றாக இருக்கிறேன். 441 00:28:49,521 --> 00:28:52,608 -உன் வாரயிறுதி எப்படி இருந்தது? -குறை சொல்ல முடியாது. 442 00:28:52,691 --> 00:28:54,735 நாங்கள் வறுமையில் இருக்கிறோம், அதைத் தவிர்த்து பேரக்குழந்தைகள் 443 00:28:54,818 --> 00:28:57,613 தாங்களாகவே உண்கின்றனர், அதனால் என்னால் தூங்க முடிகிறது. 444 00:28:57,696 --> 00:28:59,323 -நல்லது. -நீ என்ன செய்தாய்? 445 00:29:01,950 --> 00:29:02,951 ஆம். 446 00:29:03,035 --> 00:29:04,620 -அந்தளவுக்கு நன்றாக இருந்ததா? -இல்லை. பரவாயில்லை. 447 00:29:05,162 --> 00:29:06,371 எல்லாம் நன்றாக உள்ளது. 448 00:29:08,332 --> 00:29:10,959 -ஆம். -ஆம். 449 00:29:12,294 --> 00:29:14,254 -இந்த நாள் நன்றாக இருக்கட்டும். -சரி, உங்களுக்கும்தான். 450 00:29:32,481 --> 00:29:35,150 சரி, காலை வணக்கம். இனிய திங்களாக அமையட்டும். உங்கள் வாரயிறுதி எப்படி இருந்தது? 451 00:29:42,741 --> 00:29:44,535 -ஹாய். -ஹே, நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? 452 00:29:45,786 --> 00:29:47,996 ஆம். மன அழுத்தமுள்ள சிக்கல்களை சமாளித்துக் கொண்டிருக்கிறேன். 453 00:29:48,080 --> 00:29:51,500 -நீங்கள் பிஸியாக இருந்தால் விடுங்கள். -இல்லை, பிஸிதான், ஆனால் பரவாயில்லை. 454 00:29:51,583 --> 00:29:53,877 சொல். என்ன ஆயிற்று? 455 00:29:54,545 --> 00:29:56,505 ஒன்றுமில்லை. எல்லாம் நன்றாக உள்ளது. 456 00:29:56,588 --> 00:29:57,589 நான்... 457 00:29:58,549 --> 00:30:00,968 எல்லாம் நன்றாக நடக்கிறது. நான்... அது வந்து. 458 00:30:03,095 --> 00:30:05,055 எது வந்து? அது என்ன? 459 00:30:05,138 --> 00:30:08,433 அது... எப்போதும் அப்படி தோன்றியது இல்லை. 460 00:30:09,434 --> 00:30:13,397 அதாவது... அது யார் தவறு? 461 00:30:14,314 --> 00:30:17,401 -நன்றி, அம்மா. -நான் சொல்கிறேன். 462 00:30:17,484 --> 00:30:18,819 ஒன்று சொல்லவா? ஒன்றுமில்லை. 463 00:30:19,319 --> 00:30:20,362 இல்லை. சரி. 464 00:30:22,739 --> 00:30:24,533 உன் வாரயிறுதியின் மீதம் எப்படி இருந்தது? 465 00:30:24,616 --> 00:30:27,035 அற்புதமாக இருந்தது? ஒரு பெண்ணை சந்தித்தேன். 466 00:30:27,119 --> 00:30:30,581 அவளுக்கு என்னை பிடித்தது, என்னால்தான் விரைப்புத்தன்மையை வைத்திருக்க முடியவில்லை. ஆக... 467 00:30:30,664 --> 00:30:32,374 -நான் ஃபோனை வைக்கிறேன். -சரி. 468 00:33:55,160 --> 00:33:57,162 நரேஷ் குமார் ராமலிங்கம்