1 00:00:05,715 --> 00:00:09,594 விண்வெளியில் ஸ்நூப்பி ஜீவனுக்கான தேடல் 2 00:00:12,889 --> 00:00:15,350 ஆபரேஷன் ஆஸ்ட்ராய்ட் 3 00:00:17,519 --> 00:00:20,689 உயிரினத்திற்கான தேடலில் நாம் முக்கிய மைல்கல்லை எட்டியிருக்கிறோம். 4 00:00:20,772 --> 00:00:22,190 சார்லீ பிரவுனால், 5 00:00:22,274 --> 00:00:25,694 நம் சூரிய குடும்பத்தைக் கடந்து செல்லும் ஒரு ஆஸ்ட்ராய்டை நாம் கண்டுபிடித்திருக்கிறோம். 6 00:00:25,777 --> 00:00:27,696 அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள். 7 00:00:27,779 --> 00:00:30,323 நாங்கள் உனக்கு நன்றி சொல்கிறோம், முட்டாளே! 8 00:00:31,366 --> 00:00:33,285 அப்படியென்றால் பரவாயில்லை. 9 00:00:33,368 --> 00:00:36,788 நமது சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்தும் ஒரே திசையில் சுற்றுகின்றன, 10 00:00:36,871 --> 00:00:40,917 ஆனால் இந்த ஆஸ்ட்ராய்ட் எதிர் திசையில் செல்வதை ஃப்ராங்க்லின் கவனித்திருக்கிறான். 11 00:00:41,001 --> 00:00:46,131 அப்படியென்றால் அது வேறொரு சூரிய குடும்பத்தில் இருந்து வந்திருக்க வேண்டும், 12 00:00:46,214 --> 00:00:49,134 எனவே அது விண்மீன்களுக்கு இடையில் பயணிக்கிறது. 13 00:00:49,217 --> 00:00:53,054 {\an8}இந்த விண்மீன் பயணத்திற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. 14 00:00:53,138 --> 00:00:54,931 {\an8}பிளாபி கிரீன் ஏலியன்கள் எங்கே? 15 00:00:55,015 --> 00:00:57,767 {\an8}பறக்கும் தட்டுகள் எங்கே? ஸ்பெஷல் எஃபெக்டஸ் எங்கே? 16 00:00:57,851 --> 00:00:58,894 {\an8}தொப்! 17 00:00:58,977 --> 00:01:01,146 இது ஒன்றும் அறிவியல் புனைக்கதை இல்லை, லூசி. இது ஒன்றும் அறிவியல் புனைக்கதை இல்லை, லூசி. 18 00:01:01,229 --> 00:01:03,148 இது அதைவிட சிறப்பானது! 19 00:01:03,231 --> 00:01:04,858 பல சகாப்தங்களாக இது சொல்லப்படவில்லை, 20 00:01:04,940 --> 00:01:08,862 ஒரு சிறந்த வான்வழி பயணத்தில், இந்த ஆஸ்ட்ராய்ட் நட்சத்திரங்களை சுற்றி வந்திருக்கிறது. 21 00:01:08,945 --> 00:01:12,949 அது கடந்து சென்றிருக்கக் கூடிய பில்லியன் கணக்கான சூரிய மண்டலங்களில், 22 00:01:13,033 --> 00:01:15,577 நம்முடையதில் அது வருவதற்கான வாய்ப்பு என்ன? 23 00:01:16,745 --> 00:01:20,081 {\an8}நீ அதை இப்படி கேட்டால், அது ஒருவித மகிழ்ச்சிக்காக என்று நினைக்கிறேன். 24 00:01:21,124 --> 00:01:22,667 ஒரு பாறைக்கு. 25 00:01:22,751 --> 00:01:24,252 ஒருவிதமா? 26 00:01:24,336 --> 00:01:26,338 இது அற்புதமான விஷயம்! 27 00:01:26,421 --> 00:01:30,759 பல ஆண்டுகளாக, விண்மீன்களுக்கு இடையில் பயணிக்கும் ஒன்றைக் கண்டுபிடிக்க நாசா முயல்கிறது, 28 00:01:30,842 --> 00:01:34,262 ஏனென்றால் அவற்றால் தொலைதூர கிரகங்களைப் பற்றி நாம் நிறைய தெரிந்துகொள்ள முடியும். 29 00:01:34,346 --> 00:01:35,639 பில்லியன்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, 30 00:01:35,722 --> 00:01:40,560 சூரியனின் ஈர்ப்பு விசையால், பனிப்பந்தை உருவாக்குவது போல 31 00:01:40,644 --> 00:01:42,270 தூசிகள் ஒன்றுடன் ஒன்று மோதின. 32 00:01:42,354 --> 00:01:47,484 அவற்றில் சில, கோள்களாக உருவாகும் வரை பெரிதாகிக் கொண்டே இருந்தன, 33 00:01:47,567 --> 00:01:51,321 மீதமிருந்த சிறியவையெல்லாம் ஆஸ்ட்ராய்ட்களாகிவிட்டன. 34 00:01:51,404 --> 00:01:54,282 ஆஸ்ட்ராய்ட்கள், வளிமண்டலத்தால் பாதுகாக்கப்படவில்லை என்பதால் 35 00:01:54,366 --> 00:01:58,370 அவற்றை மாற்ற காற்று அல்லது மழை அல்லது புயல்கள் இல்லை, 36 00:01:58,453 --> 00:02:02,290 அதாவது அவை உருவானதிலிருந்தே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதாவது அவை உருவானதிலிருந்தே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 37 00:02:02,374 --> 00:02:05,710 எனவே, அதில் ஒன்றை நம்மால் நெருக்கமாகப் பார்க்க முடிந்தால், 38 00:02:05,794 --> 00:02:09,965 கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கோள்கள் உருவாக காரணமாக இருந்த 39 00:02:10,048 --> 00:02:12,050 பொருட்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள முடியும். 40 00:02:12,133 --> 00:02:15,845 அது உருவான விதம் பற்றிய தகவல், ஆஸ்ட்ராய்ட்களில் இருக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம். 41 00:02:15,929 --> 00:02:21,393 எனவே, வாழ்க்கை எவ்வாறு தொடங்கியது என்பது பற்றிய முக்கிய விஷயங்களும் இந்த ஆஸ்ட்ராய்டில் இருக்கலாம். 42 00:02:21,476 --> 00:02:24,646 {\an8}எல்லா பாராட்டும் சார்லீ பிரவுனுக்கா? 43 00:02:24,729 --> 00:02:27,023 {\an8}இந்த பிரபஞ்சம் எதை நோக்கிப் போகிறதோ? 44 00:02:27,107 --> 00:02:30,902 பொறு, விண்மீன்களுக்கு இடையில் பயணிக்கும் அதை நாம் கண்டுபிடித்துவிட்டால், 45 00:02:30,986 --> 00:02:34,614 வேறு எங்காவது ஏதாவது உயிரினம் இருக்குமா என்பதை பற்றிய தகவலையும் தெரிந்துகொள்ளலாம். 46 00:02:34,698 --> 00:02:36,283 ஆஹா! 47 00:02:36,366 --> 00:02:40,161 அது சரி தான். அது அற்புதமான மைல்கல்லாக இருக்கும். 48 00:02:40,245 --> 00:02:42,747 சரி, நாம் எதற்காக காத்திருக்கிறோம்? 49 00:02:42,831 --> 00:02:44,958 வாருங்கள், அந்த ஆஸ்ட்ராய்டைப் பிடிப்போம். 50 00:02:49,087 --> 00:02:51,464 உங்களுடைய ஆர்வம் பிடித்திருக்கிறது, நண்பர்களே. 51 00:02:51,548 --> 00:02:56,094 ஆனால் ஒரு ஆஸ்ட்ராய்டைப் பிடிப்பது மிகவும் கடினமான விஷயம். 52 00:02:56,177 --> 00:02:58,638 நாம் ஒரு திட்டம் தீட்ட வேண்டும். 53 00:02:58,722 --> 00:03:01,433 அருமை. அருமை. அருமை. அருமை. 54 00:03:01,516 --> 00:03:05,562 ஊப்ஸ். கணினியில் சில சிக்கல்களை சரிசெய்ய அதை ரீபூட் செய்ய வேண்டும் போல. 55 00:03:05,645 --> 00:03:08,398 அதற்கு அதிக நேரம் எடுக்காது. வாழ்த்துகள், நண்பர்களே. 56 00:03:15,614 --> 00:03:18,116 {\an8}ஏலியன் நிபுணர் உள்ளே இருக்கிறார் 57 00:03:26,499 --> 00:03:27,500 எனக்குத் தெரியும்! 58 00:03:27,584 --> 00:03:31,213 நான் பட்டாம்பூச்சிகளைப் பிடிக்க, அதற்கான வலையைப் பயன்படுத்துவேன். 59 00:03:31,296 --> 00:03:33,882 சரி. நல்ல தொடக்கம். 60 00:03:37,928 --> 00:03:42,182 துரதிர்ஷ்டவசமாக, இந்த ஆஸ்ட்ராய்ட் வலையைவிட மிகப் பெரியது போலத் தோன்றுகிறது. 61 00:03:48,897 --> 00:03:51,691 சரி, வலையை பயன்படுத்த முடியாது. 62 00:03:51,775 --> 00:03:55,362 - வேறு எப்படியெல்லாம் பிடிக்க முடியும்? - எனக்கு புரிந்துவிட்டது. 63 00:03:55,445 --> 00:03:58,823 எதையாவது பிடிக்க வேண்டுமென்றால், மாடு மேய்ப்பவர்கள் லாஸோவைப் பயன்படுத்துவார்கள். 64 00:04:02,661 --> 00:04:03,870 ஆஹா! 65 00:04:06,957 --> 00:04:08,250 நல்ல யோசனை. 66 00:04:11,878 --> 00:04:16,507 ஒரு திறமையான மாடு மேய்ப்பவனால்கூட, இந்த ஆஸ்ட்ராய்டின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது. 67 00:04:18,759 --> 00:04:20,262 ஆஹா! 68 00:04:23,181 --> 00:04:27,143 வேறு ஏதாவது செய்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். 69 00:04:27,227 --> 00:04:30,605 சரி, அதுவும் வேண்டாம். வேறு என்ன செய்யலாம்? 70 00:04:30,689 --> 00:04:32,399 எல்லோருக்குமே மீன்பிடிப்பது பிடிக்கும். 71 00:04:32,482 --> 00:04:35,902 நம்மால் மீனைப் பிடிக்க முடியுமென்றால், ஆஸ்ட்ராய்டையும் பிடிக்க முடியுமே. 72 00:04:35,986 --> 00:04:38,196 நிச்சயமாக. முயற்சித்துப் பார்ப்போம். 73 00:05:34,252 --> 00:05:37,088 {\an8}வலைகளா? லாஸோக்களா? மீன் பிடிக்கும் தூண்டில்களா? 74 00:05:37,172 --> 00:05:39,591 {\an8}இதுபோன்ற முட்டாள்தனமான யோசனைகள் ஒருபோதும் வேலைக்கு ஆகாது. 75 00:05:41,218 --> 00:05:43,511 நீ ஆச்சரியப்படுவாய், லூசி. 76 00:05:43,595 --> 00:05:47,265 நாசா பயன்படுத்தும் எல்லா முறைகளும், ஆரம்பத்தில் யோசனையாகத்தான் தொடங்கியது. 77 00:05:47,349 --> 00:05:49,601 நிலவிற்கு மக்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது 78 00:05:49,684 --> 00:05:52,062 அல்லது தொலைதூர இடத்தை ஆராய ரோபோக்களை பயன்படுத்துவது 79 00:05:52,896 --> 00:05:56,191 போன்றவற்றை இன்று நாம் சாதாரணமாகக் கருதுகிறோம். 80 00:05:56,816 --> 00:06:01,988 நல்ல அறிவியல் சோதனை என்பது பல்வேறு அறிவியல் கோட்பாட்டு தீர்வுகளைச் சோதித்து பார்ப்பது தான், நல்ல அறிவியல் சோதனை என்பது பல்வேறு அறிவியல் கோட்பாட்டு தீர்வுகளைச் சோதித்து பார்ப்பது தான், 81 00:06:02,072 --> 00:06:04,866 அந்த நேரத்தில் அது எவ்வளவு முட்டாள்தனமாக தோன்றினாலும்கூட. 82 00:06:48,034 --> 00:06:49,327 ஹேய்! 83 00:07:04,050 --> 00:07:06,595 நிச்சயமாக! அவ்வளவுதான். 84 00:07:06,678 --> 00:07:09,431 ஆஸ்ட்ராய்டைச் சுற்றி வர, நாம் ஒரு விண்கலத்தை அனுப்பி, 85 00:07:09,514 --> 00:07:13,184 அங்கிருந்து மாதிரியை எடுப்பதற்கு ரோபோ கையின் பிடியைப் பயன்படுத்தலாம். 86 00:07:13,268 --> 00:07:16,938 நமக்கு முழு ஆஸ்ட்ராய்டும் தேவையில்லை. அதன் சிறு துண்டை ஆராய்ந்தாலே போதும். 87 00:07:17,022 --> 00:07:19,190 இது ஒரு நல்ல யோசனை, ஃப்ராங்க்லின். 88 00:07:19,816 --> 00:07:20,859 உண்மையாகவா? 89 00:07:20,942 --> 00:07:23,987 தளவாட பொருட்களை ஒன்றுசேர்க்க கொஞ்சம் நேரம் எடுக்கும், 90 00:07:24,070 --> 00:07:27,824 ஆனால் நீ அருமையான யோசனையை கூறியிருக்கிறாய். 91 00:07:27,908 --> 00:07:31,202 கண்டிப்பாக இந்த மிஷனை நாசா ஏற்றுக்கொள்வார்கள். 92 00:07:31,286 --> 00:07:34,039 அபாரமான நாளாக முடிந்தது. 93 00:07:34,122 --> 00:07:35,707 ஆஹா! 94 00:07:38,418 --> 00:07:40,462 யோசனைக்கு நன்றி, ஸ்நூப்பி. 95 00:07:49,054 --> 00:07:50,055 சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில் 96 00:08:12,994 --> 00:08:14,996 தமிழாக்கம் மேனகா மணிகண்டன் 97 00:08:18,083 --> 00:08:19,000 நன்றி, ஸ்பார்க்கி. என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள்.