1 00:00:09,176 --> 00:00:11,506 இத்தொடரில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் முற்றிலும் கற்பனையே. 2 00:00:11,595 --> 00:00:13,925 உண்மை நிகழ்வுகளோடு அல்லது உயிரோடிருக்கும் அல்லது இறந்த நபர்களோடு ஏதாவது வகையில் 3 00:00:14,014 --> 00:00:15,934 சம்பந்தப்பட்டிருந்தால், அது முற்றிலும் தற்செயலானது. 4 00:00:24,274 --> 00:00:26,534 -காலை வணக்கம். -காலை வணக்கம். 5 00:00:26,610 --> 00:00:28,200 எல்லா விஷயங்களும் எப்படி போகிறது? 6 00:00:28,278 --> 00:00:30,448 காலை வணக்கம். எல்லாம் நன்றாகப் போகிறது. 7 00:00:32,406 --> 00:00:34,276 சரி, உங்களுக்கு கோப்பு கிடைத்ததா? 8 00:00:35,452 --> 00:00:37,042 -ஆம். -கொஞ்சம் பொறுங்கள். 9 00:00:38,163 --> 00:00:39,673 ஹலோ, அமீர். எப்படி இருக்கிறீர்கள்? 10 00:00:40,666 --> 00:00:42,036 நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், அலி? 11 00:00:42,125 --> 00:00:43,955 வந்து... ஏதாவது தகவல் கிடைத்ததா? 12 00:00:44,044 --> 00:00:45,844 இந்தப் பிரதேசம் முழுவதையும் ஆராய்ந்து விட்டேன். 13 00:00:45,921 --> 00:00:50,131 ஒரு நிலையம் மட்டும் தான் இராணுவத்துடன் தொலைத் தொடர்பில் உள்ளது. 14 00:00:50,467 --> 00:00:51,887 இரண்டாம் மின் நிலையம். 15 00:00:51,969 --> 00:00:55,389 சில மூத்த என்ஜினியர்கள் பற்றிய தகவலை உங்களுக்கு அனுப்புகிறேன். 16 00:00:55,472 --> 00:00:56,562 அவர்களிடம் பேசுங்கள். 17 00:00:56,640 --> 00:00:58,600 நல்ல வேலை செய்தீர்கள், அமீர். நன்றி. 18 00:01:59,036 --> 00:02:01,616 இல்லை! அவனை சுடாதீர்கள்! மிலாத்தை சுடாதீர்கள். 19 00:02:36,782 --> 00:02:37,952 காலை வணக்கம். 20 00:02:40,285 --> 00:02:41,405 ஏதாவது தகவல் வந்ததா? 21 00:02:42,246 --> 00:02:43,246 நாம் காத்திருக்கணும். 22 00:02:46,708 --> 00:02:48,088 அவன் எப்படி இருக்கிறான்? 23 00:02:48,168 --> 00:02:49,418 அவன் நன்றாக இருக்கிறான். 24 00:02:53,340 --> 00:02:54,510 நான் அவனோடு பேசணும். 25 00:02:54,591 --> 00:02:56,131 அது ஒரு நல்ல யோசனை கிடையாது. 26 00:02:56,218 --> 00:02:58,048 அது கேள்வி அல்ல. 27 00:03:00,305 --> 00:03:04,055 நான் மட்டும் தான் உள்ளே சென்று அவனை பார்க்க வேண்டும். அவை தான் கட்டளைகள். 28 00:03:05,561 --> 00:03:07,061 யார் இந்த கட்டளையிட்டது? 29 00:03:07,145 --> 00:03:10,185 உனக்கும் எனக்குமான தலைவர்கள். 30 00:03:15,821 --> 00:03:17,071 அவன் நலமாக இருக்கிறானா? 31 00:03:18,240 --> 00:03:19,950 அவன் சாப்பிடுகிறானா, குடிக்கிறானா? 32 00:03:24,454 --> 00:03:25,874 நான் உன்னிடம் தான் பேசுகிறேன்! 33 00:03:27,082 --> 00:03:29,292 நாம் அவனை அந்த வீட்டிலேயே கொன்றிருக்க வேண்டும். 34 00:03:29,376 --> 00:03:30,746 நமக்கு அவன் தேவையில்லை. 35 00:03:30,836 --> 00:03:33,086 அவன் இன்னும் உயிரோடு இருப்பதற்காக நீ நன்றியோடு இருக்கணும். 36 00:03:33,547 --> 00:03:35,837 இது நீ சொல்வதா, அல்லது நம் தலைவர்கள் சொல்வதா? 37 00:03:38,260 --> 00:03:39,510 புரிகிறது. 38 00:03:40,012 --> 00:03:41,432 சரி, நான் சொல்வதைக் கேள், 39 00:03:42,181 --> 00:03:45,481 அவனுக்கு ஏதாவது நேர்ந்தால், அதற்கு நீதான் பொறுப்பு. 40 00:04:06,246 --> 00:04:07,656 -ஹலோ, முகமது. -ஹலோ. 41 00:04:14,296 --> 00:04:16,126 காலை வணக்கம், தமார். எப்படி இருக்கிறாய்? 42 00:04:17,257 --> 00:04:18,337 இங்கு என்ன செய்கிறீர்கள்? 43 00:04:18,966 --> 00:04:20,586 அட, என்னை ஒரு முறை அரவணைத்துக்கொள். 44 00:04:24,056 --> 00:04:25,596 நாம் வேலையை தொடர்கிறோமா? 45 00:04:25,682 --> 00:04:27,312 நாம் எல்லாவற்றையும் பற்றி பேசலாம், சரியா? 46 00:04:34,107 --> 00:04:35,937 கடவுளே, நீங்க இங்கு வந்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. 47 00:04:39,154 --> 00:04:41,994 ஃபராஸ் கமலி, இன்று காலை, இந்தப் படத்தை நமக்கு அனுப்பியுள்ளார். 48 00:04:42,074 --> 00:04:44,454 இவர் தமாரின் அப்பா, மோர்டிசாய் ராபின்யான். 49 00:04:44,535 --> 00:04:45,735 இது எடுக்கப்பட்ட, மூன்று மணி 40 நிமிடங்களுக்கு முன் 50 00:04:45,827 --> 00:04:48,247 அடடுர்க் விமான நிலையத்தில் மோர்டிசாய் தரையிறங்கியுள்ளார். 51 00:04:48,330 --> 00:04:50,540 அவர் எங்கு சென்றிருப்பார் என தேடிக்கொண்டு இருக்கிறோம், 52 00:04:50,624 --> 00:04:53,424 இஸ்தான்புல்லில் உள்ள ஏதாவது ஒரு விடுதிக்கு சென்றிருக்கலாம். 53 00:04:53,502 --> 00:04:56,552 விடுதியில் உள்ள தரை விரிப்பு வடிவத்தில் இருந்து அதைக் கண்டுபிடிக்க முடியும். 54 00:04:56,630 --> 00:04:58,510 இந்த நகரத்திலுள்ள பல விடுதிகளுக்கு விநியோகம் செய்யும் 55 00:04:58,590 --> 00:05:00,430 வடக்கிலுள்ள ஒரு விற்பனையாளரிடமிருந்து பெற்றது. 56 00:05:00,509 --> 00:05:01,929 இது தான் நம்முடைய முக்கிய இலக்கு. 57 00:05:03,262 --> 00:05:05,602 -அப்புறம் அவர் மனைவி? -டாக்டர். பென் ஆர்ஸியிடம் பேசினேன். 58 00:05:05,681 --> 00:05:08,431 அவர் இப்போது விமானப் பயணம் செய்வது மிகுந்த ஆபத்தானது. 59 00:05:08,517 --> 00:05:10,887 சரி, ஃபராஸிடம் நாம் பேசுவோம், 60 00:05:10,978 --> 00:05:12,858 எச்சரிக்கையோடு அறிந்து, எப்படி செய்யலாம் என பார்க்கலாம். 61 00:05:13,272 --> 00:05:15,822 மோர்டிசாய் கடத்தப்பட்டதை நான் கடோஷிற்கு தெரியப்படுத்துகிறேன். 62 00:05:32,291 --> 00:05:38,051 சார், என்னுடைய மகள், கணினியில் வேலை செய்கிறாள். 63 00:05:39,756 --> 00:05:42,886 அவள் நல்ல பெண், கொஞ்சம் ஜாலியாக இருப்பவள்... 64 00:05:46,013 --> 00:05:48,353 ஒரு மொசாட் உளவாளியா? 65 00:05:48,432 --> 00:05:49,432 இருக்கவே முடியாது! 66 00:05:51,810 --> 00:05:57,820 பார்ப்பதற்கு அவர்கள் ஏஜெண்டுகள் மாதிரி தெரிய மாட்டார்கள், அது அவர்களின் திறமை. 67 00:05:59,067 --> 00:06:01,237 அப்படி இருப்பவர்களைத்தான் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். 68 00:06:01,320 --> 00:06:03,450 அப்போ, நான் என்ன செய்தேன்? 69 00:06:03,906 --> 00:06:08,116 சார், உளவுத்துறை உலகிற்கு நான் அந்நியன், 70 00:06:08,202 --> 00:06:12,962 ஆனால் அதில் ஒழுக்கங்களும், மனித நேயங்களும் உண்டு என்று நினைத்தேன். 71 00:06:21,173 --> 00:06:22,553 புரிகிறது. 72 00:06:25,302 --> 00:06:28,892 புரட்சிகர காவலருடன் பேசிக்கொண்டு இருக்கிறேன் என்பதை நான் மறந்து விட்டேன். 73 00:06:29,806 --> 00:06:35,056 நீங்கள் எல்லாம், வெகு காலத்திற்கு முன்னரே மனசாட்சியை இழந்து விட்டீர்கள். 74 00:06:36,230 --> 00:06:38,820 எங்களின் அழகான நாட்டை நீங்கள் நாசமாக்கிவிட்டீர்கள். 75 00:06:39,233 --> 00:06:41,113 இனி ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது! 76 00:06:41,193 --> 00:06:42,823 ஒன்று கூட! 77 00:06:43,445 --> 00:06:44,775 உன் உணவை சாப்பிடு. 78 00:06:55,165 --> 00:06:59,285 பூமியின் கனியை உருவாக்கும் ஆண்டவரே, உம்மை வாழ்த்துகிறேன். ஆமென். 79 00:07:13,684 --> 00:07:17,064 ஒழுங்காக இரு. கத்தாதே, சொதப்பிவிடாதே. 80 00:07:17,646 --> 00:07:19,226 புரிந்ததா? 81 00:07:22,776 --> 00:07:23,896 ஹலோ. 82 00:07:24,444 --> 00:07:25,744 நீங்கள் இதைச் செய்திருக்கக் கூடாது. 83 00:07:26,780 --> 00:07:29,120 உங்களைப் போன்றவர்களுக்கு புரிகின்ற ஒரே மொழி இதுதான். 84 00:07:29,199 --> 00:07:33,369 ஃபராஸ், உங்கள் மனைவிக்கு மிகச் சிறந்த மருத்துவ வசதியைக் கொடுக்கிறோம். 85 00:07:33,453 --> 00:07:35,413 அவரைத் துன்புறுத்துவதில் எங்களுக்கு எந்த ஈடுபாடும் கிடையாது. 86 00:07:35,497 --> 00:07:37,877 இன்னும் சில நாட்களில் நாங்கள் அவரை விடுவித்து விடுவோம். 87 00:07:37,958 --> 00:07:39,328 நான் உங்களை நம்ப மாட்டேன். 88 00:07:39,793 --> 00:07:41,213 நீங்கள் என் மனைவியைக் கடத்தியுள்ளீர்கள். 89 00:07:42,546 --> 00:07:43,756 நான் அவளிடம் பேச வேண்டும். 90 00:07:43,839 --> 00:07:45,799 அது இப்பொழுது முடியாது என்று நினைக்கிறேன். 91 00:07:45,883 --> 00:07:46,973 ஏன் முடியாது? 92 00:07:47,759 --> 00:07:49,179 அவளுக்கு ஏதாவது ஆகிவிட்டதா? 93 00:07:49,261 --> 00:07:52,811 அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. அவருக்கு பரிசோதனைகள் நடக்கின்றன. 94 00:07:52,890 --> 00:07:55,140 அவர் இயல்பு நிலைக்குத் திரும்பிய பின் உங்களை தொடர்பு கொள்கிறோம். 95 00:07:55,559 --> 00:07:59,309 இதற்கிடையில், அவரை விடுதலை செய்வதற்கான நிபந்தனைகளைப் பற்றி பேச விரும்புகிறோம். 96 00:07:59,396 --> 00:08:01,146 நிபந்தனைகள் தெளிவாக உள்ளன. 97 00:08:01,231 --> 00:08:04,361 என்னுடைய மனைவி இன்று நள்ளிரவிற்குள் இஸ்தான்புல் வந்தடையா விட்டால்... 98 00:08:05,819 --> 00:08:07,399 நான் மோர்டிசாயைக் கொன்று விடுவேன். 99 00:08:08,780 --> 00:08:10,620 தயவுசெய்து, உங்க கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். 100 00:08:10,699 --> 00:08:12,409 இன்று நள்ளிரவு வரை உங்களுக்கு நேரம் இருக்கு. 101 00:08:12,993 --> 00:08:14,243 என்னை சோதிக்காதீர்கள். 102 00:08:28,300 --> 00:08:31,600 சரி, செல்போனை கட்டுப்படுத்தி, சிக்னல் கிடைக்காதபடி தடுத்துவிட்டார். 103 00:08:31,678 --> 00:08:35,678 ஸ்டாக்ஹோம் அருகில் உள்ள ஒரு தொலை நிலை ஆபரேட்டர் மூலம் அவர் இணைக்கப்பட்டுள்ளார். 104 00:08:35,765 --> 00:08:37,885 நாம் இரண்டு விஷயத்தில் முன்னேறி நகர வேண்டும், 105 00:08:37,976 --> 00:08:40,396 கைதி பரிமாற்றம், அப்புறம் அவரை கண்காணித்து மடக்க வேண்டும். 106 00:08:45,234 --> 00:08:49,664 துணை மின் நிலையம், டெஹ்ரான் 107 00:08:53,659 --> 00:08:54,659 பர்ஹாம் கஸ்ராய்? 108 00:08:55,577 --> 00:08:58,497 உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. உங்களிடம் கொஞ்சம் பேசலாமா? 109 00:08:59,665 --> 00:09:01,955 மன்னிக்கவும், நீங்கள் முன் அனுமதி பெற்றிருக்கிறீர்களா? 110 00:09:02,501 --> 00:09:05,051 இந்த விஷயங்கள் ரகசியமாக வைப்பது தான் சிறந்தது. 111 00:09:07,256 --> 00:09:08,546 நான் பேசலாமா? 112 00:09:13,887 --> 00:09:16,887 சரி, திரு. பர்ஹாம், 113 00:09:16,974 --> 00:09:18,734 நிலையத்தில் எவ்வளவு காலமாக வேலை செய்கிறீர்கள்? 114 00:09:19,518 --> 00:09:20,808 சுமார் 15 ஆண்டுகள். 115 00:09:20,894 --> 00:09:22,354 -15 ஆண்டுகளாகவா? -ஆமாம். 116 00:09:22,437 --> 00:09:23,557 அது ரொம்ப நீண்ட காலம். 117 00:09:24,273 --> 00:09:27,403 உங்கள் மனைவியை விட, இந்த கணினிகளைப்பற்றி உங்களுக்கு நிறைய தெரிந்திருக்கும். 118 00:09:30,737 --> 00:09:31,907 ஏதும் பிரச்சினை இல்லையே? 119 00:09:33,198 --> 00:09:34,578 இல்லை. 120 00:09:35,534 --> 00:09:39,294 இன்று நிறைய வேலை இருக்கு, இன்னும் சில நிமிடங்களில் சந்திப்பிற்கு செல்ல வேண்டும். 121 00:09:39,371 --> 00:09:42,541 மன்னிக்கவும். நேராக விஷயத்திற்கு வருவோம். 122 00:09:43,166 --> 00:09:47,586 உங்கள் கணினி சர்வர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதை அண்மையில் கண்டுபிடித்தோம். 123 00:09:47,963 --> 00:09:51,303 நிலையத்தின் சில சர்வர்கள் ராணுவ கணினிகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 124 00:09:52,426 --> 00:09:54,086 அது சாத்தியமா? 125 00:09:55,137 --> 00:09:56,967 ஆமாம், சாத்தியம் தான். 126 00:09:57,055 --> 00:09:59,635 ஆனால் அதில் அபாயம் இல்லை. அவை சேமிப்பு அமைப்புகள். 127 00:09:59,725 --> 00:10:01,305 அவற்றைத் துண்டிக்க முடியுமா? 128 00:10:01,393 --> 00:10:04,483 என்னால் முடியாது. அதன் பொறுப்பாளரின் தொடர்பு எண்ணைத் தருகிறேன். 129 00:10:10,194 --> 00:10:13,114 இவை என்ன சர்வர்கள் என்றாவது அவருக்குத் தெரியுமா? 130 00:10:14,448 --> 00:10:15,618 அவருக்கு தெரிந்திருக்கலாம். 131 00:10:15,699 --> 00:10:18,699 இது நீங்கள் உறுதியாக சொல்ல வேண்டிய விஷயம்! 132 00:10:22,706 --> 00:10:24,326 திரு. பர்ஹாம்... 133 00:10:26,335 --> 00:10:29,205 நான் சொல்லப் போவது நமக்குள் இருக்க வேண்டும். 134 00:10:29,296 --> 00:10:34,176 வெளிநாட்டு நிறுவனங்கள், இந்த சர்வர்களை ஊடுருவி 135 00:10:34,259 --> 00:10:36,469 ராணுவ கணினிகளை அணுக முயற்சி செய்யலாம். 136 00:10:37,221 --> 00:10:39,971 அப்படி நடக்க, நாம் அனுமதிக்க கூடாது தானே? 137 00:10:42,726 --> 00:10:43,766 ஆமாம். 138 00:10:44,353 --> 00:10:48,943 பாதுகாப்பு நிபுணரிடம் பேசி, அவர் வேலையை சரியாக செய்கிறார் என உறுதி செய்யலாம். 139 00:10:50,442 --> 00:10:51,612 சரி. 140 00:10:52,736 --> 00:10:57,236 நான் தொலைபேசியில் அழைத்து கூட்டத்தை ஒத்திவைக்கிறேன். 141 00:10:57,324 --> 00:10:58,994 ஒரு நிமிடத்தில் வந்துவிடுகிறேன். 142 00:11:01,286 --> 00:11:02,366 நான் வெளியில் இருக்கிறேன். 143 00:11:11,547 --> 00:11:15,427 ஆக? அவரது நடத்தை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது, இல்லையா? 144 00:11:16,218 --> 00:11:19,008 மிலாத், பர்ஹாம் பேசுகிறேன். நீ எங்கே இருக்கிறாய்? 145 00:11:19,096 --> 00:11:22,386 நீ உள்ளே போக முடியாது. இப்போது அது ஆபத்தானது. 146 00:11:22,474 --> 00:11:24,694 பிரச்சினைக்கான புகாரை நான் ரத்து செய்துவிட்டேன். 147 00:11:26,019 --> 00:11:27,939 காணொளியை பகிர வேண்டாம். 148 00:11:28,730 --> 00:11:30,770 தயவுசெய்து, நீ எனக்கு தம்பி மாதிரி. 149 00:11:41,159 --> 00:11:42,369 அதை ரத்து செய்துவிட்டார். 150 00:11:42,452 --> 00:11:44,292 உன்னால் புதிதாக ஒன்றை சமர்ப்பிக்க முடியுமா? 151 00:11:44,788 --> 00:11:46,158 உன்னிடம் அவருடைய தகவல் உள்ளதே. 152 00:11:46,248 --> 00:11:48,038 அவர்களின் கணினியை ஊடுருவ நேரம் எடுக்கும். 153 00:11:48,625 --> 00:11:52,245 அது பாதுகாக்கப்பட்ட பகுதி, எனவே குறியீடு வேண்டும். மேலும் அவருக்கு அறிவிப்பு வரும். 154 00:11:53,255 --> 00:11:54,505 அதை அவரேதான் செய்ய வேண்டும். 155 00:11:55,007 --> 00:11:57,967 நீதான் அவனோடு இருந்தாய். மீண்டும் அவனை கட்டாயப்படுத்த முடியுமா? 156 00:11:58,051 --> 00:12:00,301 நம்மில் ஒருவர் பர்ஹாமுடன் பேசினால், அவர் பயந்துவிடுவார். 157 00:12:00,387 --> 00:12:03,427 அவர் என்னைப் பார்த்த விதத்திலேயே, என்னை முற்றிலும் நம்பவில்லை என தெரிந்தது. 158 00:12:04,183 --> 00:12:05,643 இதை மிலாதால் தான் செய்ய முடியும். 159 00:12:06,560 --> 00:12:07,770 நான் மிலாதிடம் பேசுகிறேன். 160 00:12:13,942 --> 00:12:15,902 அவனை சம்மதிக்க வைக்க என்னால் முடியும், கடோஷ். 161 00:12:24,077 --> 00:12:25,077 சரி. 162 00:13:13,669 --> 00:13:15,169 எப்படி இருக்கிறாய்? 163 00:13:15,254 --> 00:13:16,634 வெளியே போ. 164 00:13:23,846 --> 00:13:25,096 நீ குடிக்க வேண்டும். 165 00:13:26,265 --> 00:13:27,635 என்ன பிரயோஜினம்? 166 00:13:28,934 --> 00:13:31,274 எப்படியிருந்தாலும் சீக்கிரமே என்னை கொன்றுவிடுவீர்கள், சரியா? 167 00:13:32,896 --> 00:13:34,686 யாரும் உன்னை கொல்லப் போவதில்லை. 168 00:13:41,196 --> 00:13:43,116 எனவே இதுதான் உன் சுயரூபமா? 169 00:13:45,200 --> 00:13:46,450 ஒரு உளவாளியா? 170 00:13:47,244 --> 00:13:48,454 ஒரு இஸ்ரேலியரா? 171 00:13:53,584 --> 00:13:54,754 புரிகிறது. 172 00:13:57,045 --> 00:13:59,375 பல மாதங்களாக இதற்காக தான் நீ என்னை ஏமாற்றி இருக்கிறாய். 173 00:13:59,464 --> 00:14:03,394 ரகசிய வலைத்தளத்தில் நாம் அரட்டை அடித்தது, நாம் ஒன்றாக செய்த அனைத்தும்... 174 00:14:04,303 --> 00:14:06,183 அது அத்தனையும் நடிப்பு. 175 00:14:07,973 --> 00:14:09,563 இப்போது இது தேவையற்றது. 176 00:14:12,561 --> 00:14:14,401 நான் எப்படி இதை எதிர்பார்க்காமல் இருந்தேன்? 177 00:14:17,858 --> 00:14:19,528 உன்னால் எப்படி எனக்கு இதை செய்ய முடிந்தது? 178 00:14:21,445 --> 00:14:22,735 என்னை மன்னித்துவிடு. 179 00:14:23,864 --> 00:14:25,574 உன்னைக் காயப்படுத்தும் நோக்கமில்லை. 180 00:14:25,657 --> 00:14:28,787 கரிம் வரவில்லை என்றால், அவன் என்னை மிரட்டவில்லை என்றால், 181 00:14:28,869 --> 00:14:32,159 -எல்லாம் சரியாக இருந்திருக்கும். -ஆனால் நடந்தது அது அல்ல தானே? 182 00:14:33,665 --> 00:14:34,825 இல்லை. 183 00:14:36,084 --> 00:14:37,594 நடந்தது அதுவல்ல. 184 00:14:41,965 --> 00:14:43,255 எங்களுக்கு ஒரு பிரச்சினை. 185 00:14:43,717 --> 00:14:46,427 பர்ஹாம் புகாரை ரத்து செய்துவிட்டார். எங்களால் உள்ளே போக முடியாது. 186 00:14:46,845 --> 00:14:48,505 அது உங்கள் பிரச்சினை. 187 00:14:48,597 --> 00:14:50,767 உன்னுடையது. அவருடையதும் கூட. 188 00:14:50,849 --> 00:14:53,519 ஏன்? அப்போ நீங்கள் எங்களைக் கொல்லப் போகிறீர்கள். 189 00:14:58,357 --> 00:15:01,277 போதும். இனி நான் அதில் ஈடுபட மாட்டேன். 190 00:15:02,319 --> 00:15:04,029 என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். 191 00:15:04,112 --> 00:15:06,162 -மிலாத். -நான் சொல்வது உனக்கு கேட்கவில்லையா? 192 00:15:06,240 --> 00:15:09,160 நீ சொல்லும் எதையும் நான் நம்பமாட்டேன், 193 00:15:09,243 --> 00:15:12,333 அதோடு இனி நான் உனக்கு உதவவும் மாட்டேன்! 194 00:15:12,412 --> 00:15:14,002 அதற்குப் பதிலாக நான் சாகக் கூட தயார்! 195 00:15:14,081 --> 00:15:15,371 வெளியே போ! 196 00:15:21,505 --> 00:15:22,585 நீ தவறு செய்கிறாய். 197 00:15:24,424 --> 00:15:26,054 இது ரொம்ப நல்லா இருந்தது. 198 00:15:27,219 --> 00:15:28,469 ரொம்பவே நல்லா இருந்தது. 199 00:15:47,114 --> 00:15:49,244 இஸ்தான்புல், துருக்கி 200 00:15:49,324 --> 00:15:51,454 திவானி 201 00:16:02,504 --> 00:16:05,924 எனக்கு என் மனைவிதான் உலகம். 202 00:16:07,593 --> 00:16:08,593 புற்றுநோய். 203 00:16:10,679 --> 00:16:13,389 அப்போ அரிஸோ உங்களிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள். 204 00:16:17,227 --> 00:16:23,357 என் மனைவியின் புற்றுநோய் ஒரு அறிகுறி தான், காரணம் அல்ல. 205 00:16:23,901 --> 00:16:27,361 அவளுடைய சிரமங்கள், எங்களுடைய சிரமங்கள்... 206 00:16:28,030 --> 00:16:30,700 எங்கள் விலைமதிப்புடைய நாட்டிலிருந்து விலகி, 207 00:16:30,782 --> 00:16:33,122 ஒரு புதிய நாட்டில் வசிப்பது, 208 00:16:33,202 --> 00:16:35,122 அதுவே அவளைக் கொன்றது. 209 00:16:35,204 --> 00:16:37,464 பாவம், அவள் துக்கத்தால் இறந்தாள். 210 00:16:39,333 --> 00:16:41,173 எப்படியிருந்தாலும் நீங்கள் ஏன் கிளம்பினீர்கள்? 211 00:16:42,252 --> 00:16:43,802 எங்களை சமாளிக்கும் தேவை உங்களுக்கு இருக்கவில்லையே. 212 00:16:46,089 --> 00:16:50,299 புனித பூமிக்கு வரவேண்டும் என்பது என் கனவு. 213 00:16:50,385 --> 00:16:52,425 ஜெருசலேம் சென்று, 214 00:16:52,971 --> 00:16:56,061 மேற்கு சுவற்றில் பிரார்த்திப்பது. 215 00:16:57,976 --> 00:17:01,606 நான் முதன்முதலில் ஜெருசலேமுக்குச் சென்றபோது, 216 00:17:01,688 --> 00:17:07,108 புனித சுவரையும், முஸ்லிம்கள் கட்டிய சுவர்களையும் பார்த்து, 217 00:17:07,778 --> 00:17:09,778 நான் அழுதுவிட்டேன். 218 00:17:10,781 --> 00:17:12,411 சரி, அப்புறம்? 219 00:17:12,741 --> 00:17:15,541 அங்கு நான் நாடு கடத்தப்பட்டவனைப் போல உணர்ந்தேன். 220 00:17:15,618 --> 00:17:18,578 ஈரானுக்கான ஏக்கம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தது. 221 00:17:20,374 --> 00:17:23,384 அது எவ்வளவு கடினமாக இருந்தது என்று உங்களுக்குத் தெரியாது. 222 00:17:25,587 --> 00:17:27,417 அப்படியென்றால் நீங்கள் ஏன் வெளியேறினீர்கள்? 223 00:17:30,259 --> 00:17:33,389 என் மகளுக்காகதான் நான் அப்படி செய்தேன். 224 00:17:36,265 --> 00:17:38,595 அதற்கு நல்ல கைமாறு செய்துவிட்டாள். 225 00:17:39,268 --> 00:17:41,438 அவள் உங்களுக்கு செய்திருப்பதைப் பாருங்கள். 226 00:18:00,372 --> 00:18:01,752 எப்படி இருக்கிறீர்கள்? 227 00:18:05,669 --> 00:18:07,169 நான் எப்போது வீட்டிற்கு போவேன்? 228 00:18:07,588 --> 00:18:09,838 உங்களுக்கு பாதுகாப்பானது என்று எங்களுக்குத் தெரிந்தவுடன். 229 00:18:09,923 --> 00:18:11,803 நான் என் கணவருடன் பேச வேண்டும். 230 00:18:13,677 --> 00:18:14,847 சீக்கிரமே பேசலாம். 231 00:18:15,220 --> 00:18:17,430 அதற்கு முன் நான் உங்களுடன் பேச வேண்டும். 232 00:18:18,932 --> 00:18:22,352 உங்கள் கணவர் ஒரு அப்பாவி இஸ்ரேலிய குடிமகனை கடத்திச் சென்று, 233 00:18:22,436 --> 00:18:25,106 நாங்கள் உங்களை விடுவிக்கவில்லையென்றால் அவரை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். 234 00:18:28,859 --> 00:18:32,649 இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். எனக்கும் இது தர்மசங்கடம் தான். 235 00:18:33,280 --> 00:18:37,120 ஆனால் இந்த உடல்நிலையில் நீங்க விமானத்தில் செல்ல முடியாது. என்னை நம்புங்கள். 236 00:18:37,201 --> 00:18:38,581 நீங்கள் சொன்னால் சரி. 237 00:18:38,660 --> 00:18:42,080 நஹீத், நீங்கள் நான் சொல்வதை நம்பி, உங்கள் கணவருக்கு விளக்க வேண்டும். 238 00:18:42,998 --> 00:18:46,288 பின்னால் வருத்தப்படக்கூடிய ஒரு செயலை அவர் செய்வதை நான் விரும்பவில்லை. 239 00:18:48,003 --> 00:18:51,593 அவரை அமைதிப்படுத்தி, யாருக்கும் தீங்கு விளைவிக்கவிக்காததை உறுதிபடுத்துங்கள். 240 00:18:52,132 --> 00:18:53,632 அவர் மனரீதியாக நிதானமாக இல்லை. 241 00:18:53,967 --> 00:18:57,467 மனரீதியாக நிதானமாக இல்லையா? அவருக்கு வேறு என்ன வாய்ப்பு கொடுத்தீர்கள்? 242 00:18:57,554 --> 00:18:59,934 உங்கள் மனைவி கடத்தப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? 243 00:19:02,017 --> 00:19:03,597 உண்மையாக சொல்ல வேண்டுமென்றால்... 244 00:19:05,395 --> 00:19:07,975 அவர் செய்ததை நான் செய்வேனா என்று எனக்குத் தெரியவில்லை. 245 00:19:08,398 --> 00:19:10,188 அவர் உங்களை மிகவும் நேசிக்கிறார். 246 00:19:10,901 --> 00:19:12,651 இதை உங்க மனைவியிடம் சொல்லிவிடாதீர்கள். 247 00:19:13,987 --> 00:19:15,737 அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். 248 00:19:17,032 --> 00:19:19,702 இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, என் மனைவி இறந்துவிட்டாள். 249 00:19:24,373 --> 00:19:26,503 என்னால் உங்களுக்கு உதவ முடியும் என தோன்றவில்லை. 250 00:19:27,835 --> 00:19:29,205 உங்களுக்கு அவரைப்பற்றி தெரியாது. 251 00:19:29,795 --> 00:19:31,915 ஒரு விஷயத்தை அவர் முடிவு செய்துவிட்டால், 252 00:19:32,589 --> 00:19:34,339 அவரிடம் பேசி பலன் இல்லை. 253 00:19:34,424 --> 00:19:35,804 உங்களால் முடியும் என நினைக்கிறேன். 254 00:19:36,426 --> 00:19:38,426 அவர் உங்களை நேசிக்கிறார், நீங்க சொல்வதைக் கேட்பார். 255 00:19:39,096 --> 00:19:41,846 வந்து, பல ஆண்டுகளுக்கு முன், 256 00:19:41,932 --> 00:19:45,272 நான் தளத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது... 257 00:19:47,396 --> 00:19:49,646 நான் மிகவும் மோசமான சூழலில் இருந்தேன். 258 00:19:50,482 --> 00:19:52,152 தப்பிக்க முடியாது என எனக்குத் தெரியும். 259 00:19:52,526 --> 00:19:54,316 நான் சாக போகிறேன் என்றும். 260 00:19:56,572 --> 00:20:01,242 எல்லா உத்தரவுகளுக்கும் எதிரானது என்றாலும், நான் என் மனைவியை அழைத்தேன். 261 00:20:01,785 --> 00:20:06,035 கடைசியாக பேசி, பிரியாவிடை சொல்ல அவளை அழைத்தேன். 262 00:20:07,291 --> 00:20:09,291 என்ன பேச வேண்டும் என்பதையெல்லாம் எழுதியிருந்தேன், 263 00:20:09,835 --> 00:20:12,125 ஆனால் அதை படித்துக்காட்ட அவள் விடவில்லை. 264 00:20:13,839 --> 00:20:15,089 அவள் என்னை தடுத்து நிறுத்தினாள். 265 00:20:15,799 --> 00:20:19,549 நான் சாகப் போவதில்லை என்பதால், அவள் அதை கேட்க விரும்பவில்லை என்று சொன்னாள். 266 00:20:22,264 --> 00:20:26,064 அவளுக்கு புரியவில்லை என்று நான் சொன்னேன். அவ்வளவுதான். 267 00:20:26,768 --> 00:20:27,898 இது முடிந்துவிட்டது என்றும். 268 00:20:32,608 --> 00:20:36,858 அதன் பிறகு, என்னுடன் விவாதிப்பதற்குப் பதிலாக, 269 00:20:37,863 --> 00:20:40,373 அவள் எனக்காக பாட ஆராம்பித்தாள். 270 00:20:44,578 --> 00:20:46,538 அது எங்களுடைய பாடல். 271 00:20:48,832 --> 00:20:50,042 பாடுங்கள். 272 00:20:52,002 --> 00:20:53,382 நான் பாடாமல் இருந்தால் நல்லது. 273 00:21:05,599 --> 00:21:09,979 என்னிடம் இசை கம்பிகள் இருந்தால், அவை அதிர்வை எழுப்பும் 274 00:21:11,188 --> 00:21:15,278 என்னுள் கவலை இருந்தால், பெரும்பாலும் அது வெளிப்படும் 275 00:21:16,276 --> 00:21:20,196 என்னுள் காதல் இருந்தால், அது மௌனமாக பேசும் 276 00:21:20,572 --> 00:21:23,532 என்னுள் வேர்கள் இருந்தால் அவை மெல்ல வளரும்... 277 00:21:23,617 --> 00:21:25,867 உங்களது பாடும் குரல் ரொம்ப மோசம். 278 00:21:26,828 --> 00:21:27,998 நன்றி. 279 00:21:31,667 --> 00:21:33,127 அதற்கு என்ன அர்த்தம்? 280 00:21:37,172 --> 00:21:39,882 அது காதலைப் பற்றியது. 281 00:21:41,552 --> 00:21:43,352 அன்றாட காதல். 282 00:21:44,513 --> 00:21:46,773 வாழ்க்கையின் வழக்கமான விஷயங்கள். 283 00:21:49,852 --> 00:21:51,272 அது அழகானது. 284 00:22:13,458 --> 00:22:14,588 ஹலோ. 285 00:22:14,668 --> 00:22:15,918 அன்பே... 286 00:22:16,962 --> 00:22:19,722 -எல்லாம் எப்படி இருக்கிறது? -நீ எப்படி இருக்கிறாய்? 287 00:22:20,215 --> 00:22:22,715 கடவுளின் அருளால், நன்றாக இருக்கிறேன். 288 00:22:23,343 --> 00:22:28,313 நான் கொஞ்சம் பலவீனமாக இருப்பதால், அவர்கள் என்னை அனுப்ப பயப்படுகிறார்கள். 289 00:22:29,099 --> 00:22:30,809 ஆனால் நான் இப்போது நன்றாக இருக்கிறேன். 290 00:22:31,393 --> 00:22:32,693 நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். 291 00:22:34,021 --> 00:22:35,691 நான் உன்னை நினைத்து கவலைப்படுகிறேன். 292 00:22:37,649 --> 00:22:39,569 அவர்கள் என்னை நன்றாக கவனிக்கிறார்கள். 293 00:22:40,068 --> 00:22:42,238 கடவுளின் சித்தமானால், நாம் விரைவில் சந்திப்போம். 294 00:22:44,031 --> 00:22:45,411 அன்பே... 295 00:22:46,366 --> 00:22:49,576 நீங்கள் ஒரு இஸ்ரேலிய குடிமகனை கடத்திவிட்டதாகவும், 296 00:22:50,287 --> 00:22:51,907 அவரைக் கொன்றுவிடுவேன் என்று 297 00:22:52,497 --> 00:22:54,827 மிரட்டுவதாகவும் அவர்கள் சொன்னார்கள். 298 00:22:55,250 --> 00:22:57,750 அவர்களின் பொய்யை நம்பாதே. 299 00:22:58,837 --> 00:23:01,047 அப்போ அது உண்மையில்லையா? 300 00:23:02,216 --> 00:23:04,836 இப்போது வீட்டில், ஜெம் டிவி பார்த்துக்கொண்டு இருக்கிறீர்களா? 301 00:23:05,219 --> 00:23:07,009 எனக்கு அந்த நிகழ்ச்சிகள் பிடிக்காது என உனக்கே தெரியும். 302 00:23:09,139 --> 00:23:13,889 பார்த்தீர்களா? நான் அங்கு இல்லாததால், சில சாதகமான விஷயங்கள் உள்ளன. 303 00:23:14,728 --> 00:23:19,438 நீங்கள் என்னோடு உட்கார்ந்து, என் துருக்கிய நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண்டியதில்லை. 304 00:23:22,277 --> 00:23:23,737 அன்பே... 305 00:23:25,072 --> 00:23:28,452 நீங்கள் எனக்காக தீவிரமாக எதையும் செய்யவில்லை என்று சத்தியம் செய்கிறீர்களா? 306 00:23:30,494 --> 00:23:32,504 கடவுள் தானாக உன்னை திரும்பக் கொண்டுவர மாட்டார். 307 00:23:34,748 --> 00:23:36,038 அவரை விட்டுவிடுங்கள். 308 00:23:36,667 --> 00:23:39,207 -நஹீத்... -நான் சொல்வதைக் கேளுங்கள். 309 00:23:39,294 --> 00:23:43,884 நான் இப்போது விமானத்தில் பயணம் செய்யும் நிலையில் இல்லை. 310 00:23:43,966 --> 00:23:46,836 அவரிடம் ஜாம்மர் உள்ளது அவருடைய இடத்தை கண்டுபிடிக்க முடியலை. 311 00:23:46,927 --> 00:23:50,467 அதற்கு சில நாட்கள் ஆகும். பொறுமையாக இருங்கள். 312 00:23:51,098 --> 00:23:54,558 அன்பே, அவர்களைப் போல் கொடூரமாக இருக்காதீர்கள். 313 00:23:55,018 --> 00:23:56,978 அவரை காயப்படுத்தாதீர்கள். 314 00:23:58,105 --> 00:24:00,265 நான் அதற்கு உறுதியளிக்க மாட்டேன். 315 00:24:00,816 --> 00:24:03,736 சத்தியமாக நான் உன்னை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவேன். 316 00:24:11,368 --> 00:24:12,538 நஹீத். 317 00:24:13,662 --> 00:24:15,162 அன்பே. 318 00:24:17,291 --> 00:24:21,251 அவர்கள் சார்பில் நீ பேசுவது எனக்கு கஷ்டமாக இருக்கு. 319 00:24:23,046 --> 00:24:25,546 அவர்களிடம் இனி பேசமாட்டாய் என்று சத்தியம் செய். 320 00:24:32,639 --> 00:24:33,849 நஹீத்? 321 00:24:36,560 --> 00:24:37,940 நான் உண்மையாக சொல்கிறேன். 322 00:24:40,856 --> 00:24:42,016 ஹலோ? 323 00:24:42,566 --> 00:24:43,776 போதும். 324 00:24:44,735 --> 00:24:46,895 இந்த மாதிரியான பேச்சை இனிமேல் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. 325 00:24:47,905 --> 00:24:49,905 உங்களது பிரிவால் வாடுகிறேன். 326 00:24:50,532 --> 00:24:54,292 உங்கள் குரல், உங்கள் அரவணைப்பு. 327 00:24:55,621 --> 00:24:59,251 நம் இருவரைப் பற்றி மட்டும் பேசுவோம். 328 00:25:00,584 --> 00:25:02,754 அவர்கள் கேட்கட்டும். கவலையில்லை. 329 00:25:03,879 --> 00:25:06,839 எனக்கு உங்களுடைய குரலை கேட்க வேண்டும் அவ்வளவுதான். 330 00:25:10,135 --> 00:25:11,675 நான் என்ன சொல்ல வேண்டும்? 331 00:25:12,596 --> 00:25:14,716 நீங்கள் பாட வேண்டும். 332 00:25:15,974 --> 00:25:20,734 ஃபராஸ், நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன். எனக்கு தூங்க வேண்டும். 333 00:25:22,439 --> 00:25:24,229 எனக்காக பாடுவீர்களா? 334 00:25:26,485 --> 00:25:30,275 அன்பே, நான் பாடும் நிலைமையில் இல்லை. 335 00:25:32,991 --> 00:25:36,331 நாம் இன்னும் 336 00:25:36,745 --> 00:25:39,285 நண்பர்களாக இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் 337 00:25:39,748 --> 00:25:43,208 கடந்து சென்ற நாட்களைப் போல 338 00:25:43,669 --> 00:25:46,839 ஒன்றாக அமர்ந்து கொண்டு விடியலுடன் எழுவது 339 00:25:46,922 --> 00:25:49,972 உங்கள் இதயம் புத்துணர்ச்சி பெற வேண்டும் 340 00:25:50,050 --> 00:25:53,180 என்னுடைய புதிய மெல்லிசையை ஏற்றுக்கொள்ளுங்கள்... 341 00:25:53,262 --> 00:25:54,812 சரி, அவர் ஸ்க்ராம்ப்ளரைப் பயன்படுத்துகிறார் 342 00:25:54,888 --> 00:25:58,058 ஆனால் இஸ்தான்புல்லுக்கு வரும் அழைப்புகளில் இந்த மென்பொருள் பாடலைக் கண்டுபிடிக்கும். 343 00:26:02,062 --> 00:26:05,442 நீங்கள் என்னுடன் இருக்க வேண்டுமென்றால் 344 00:26:05,524 --> 00:26:08,034 நாம் இளமையாக இருக்கும் போதே வாருங்கள் 345 00:26:08,777 --> 00:26:11,447 நம் எலும்பில் தசைகள் இருக்கும் போதே வந்துவிடுங்கள் 346 00:26:11,905 --> 00:26:14,985 என் இதயத்தை தனியாக விட்டுவிடாதீர்கள் 347 00:26:15,075 --> 00:26:18,115 என் இரவு புதிய நிறத்தை பூசிக்கொள்ளட்டும் 348 00:26:18,787 --> 00:26:22,117 என் புதிய மெல்லிசையை ஏற்றுக்கொள்ளட்டும் 349 00:26:22,207 --> 00:26:25,457 நிலத்தின் வண்ணத்தை ஏற்றுக்கொள்ளட்டும் 350 00:26:25,544 --> 00:26:29,344 நீங்கள் என்னை தனியாக விடாத அந்த இடத்தில் 351 00:26:31,466 --> 00:26:33,546 திவானி ஹோட்டல் அழைப்பின் மூல இடம் 352 00:26:33,969 --> 00:26:35,049 சபாஷ். 353 00:26:40,893 --> 00:26:42,643 தைரியமாக இருங்கள், என் அன்பே. 354 00:26:44,646 --> 00:26:46,356 நான் உங்களை நேசிக்கிறேன். 355 00:26:47,733 --> 00:26:49,573 நான் உன்னை விரைவில் சந்திப்பேன். 356 00:26:51,737 --> 00:26:53,027 சத்தியமாக. 357 00:27:03,207 --> 00:27:05,707 மன்னிக்கவும், நான் பேசலாமா? 358 00:27:06,752 --> 00:27:08,712 அவர்கள் நலமாக இருக்கிறார்களா? 359 00:27:08,795 --> 00:27:10,295 நீங்கள் அவர்களிடம் பேசினீர்களா? 360 00:27:11,423 --> 00:27:12,593 உள்ளே போ. 361 00:27:14,092 --> 00:27:16,092 அங்கே உட்கார்ந்திருப்பது, மிகவும் கடினமாக இருக்கு. 362 00:27:16,178 --> 00:27:18,258 நான் உன்னை உள்ளே போக சொன்னேன்! 363 00:27:18,931 --> 00:27:21,771 உள்ளே போ, இழிவான ஸயனிஸ்டே! உள்ளே போ! 364 00:27:50,671 --> 00:27:51,671 தமார். 365 00:27:57,594 --> 00:27:58,604 இதோ. 366 00:27:59,346 --> 00:28:00,886 -ஆக? -நன்றி. 367 00:28:11,358 --> 00:28:15,148 நீ ஆறு வயதில் புலம்பெயர்ந்து வந்தாய், நான் 15 வயதில் புலம்பெயர்ந்தேன். 368 00:28:16,071 --> 00:28:18,701 என் குழந்தைப்பருவம், என் இளமை காலம், இவற்றை நான் இங்கே கழித்தேன். 369 00:28:19,533 --> 00:28:21,453 நான் ஒரு முஸ்லிம் பள்ளிக்கு சென்றேன். 370 00:28:23,245 --> 00:28:25,115 ஆனால் நான் இஸ்ரேலுக்கு வந்த போது தான் 371 00:28:26,373 --> 00:28:27,793 அந்நியனாக உணர்ந்தேன். 372 00:28:30,210 --> 00:28:33,050 சில வருடங்களுக்கு முன் நான் இங்கே முதல் முறையாக திரும்ப வந்தேன். 373 00:28:34,840 --> 00:28:36,800 ஒரு மூத்த அதிகாரியை சந்தித்து... 374 00:28:37,509 --> 00:28:41,719 அவர் எங்களை ரகசிய தளத்திற்குள் அனுமதிக்க வைப்பதற்காக அவரை மயக்க வேண்டி நேர்ந்தது. 375 00:28:42,264 --> 00:28:43,604 விமான எதிர்ப்பு அமைப்பின் தலைமையகம். 376 00:28:44,224 --> 00:28:45,894 நான் அதைப்பற்றி கேள்விப்பட்டேன். 377 00:28:46,351 --> 00:28:48,191 நாங்கள் சில மாதங்கள் உறவில் இருந்தோம், 378 00:28:48,604 --> 00:28:50,444 ஆனால் அந்த உறவில்... 379 00:28:50,522 --> 00:28:52,692 நடக்ககூடாதது எல்லாம் நடந்தது. 380 00:28:55,402 --> 00:28:57,202 அவனை நான் பார்த்த போதெல்லாம், 381 00:28:57,613 --> 00:29:00,243 என் சொந்த இடத்தில இருந்த ஒரு பையனை பார்த்தது போல இருந்தது. 382 00:29:01,408 --> 00:29:06,328 ஒரு இஸ்ரேலியோடு எனக்கு தோன்றாத உறவும் மொழியும் எனக்கு அவனோடு தோன்றியது. 383 00:29:11,126 --> 00:29:12,416 தமார். 384 00:29:13,086 --> 00:29:17,256 எவ்வளவு சுலபமாக நடக்கும், அது நம்மை எப்படி பாதிக்கும் என எனக்கு முழுதுமாக புரிகிறது. 385 00:29:18,217 --> 00:29:20,007 அந்த தவறை செய்யாதே. 386 00:29:22,095 --> 00:29:24,465 உன் உண்மை அடையாளத்தை மறந்து விடாதே. 387 00:29:30,020 --> 00:29:31,520 இப்போது சென்று அவனைப் பார். 388 00:29:32,773 --> 00:29:35,323 அவன் இதயத்தை கவருமாறு பேசு, உன் இதயத்தில் இருந்து பேசாதே. 389 00:29:36,902 --> 00:29:38,242 உன் மூளையை உபயோகப்படுத்து. 390 00:29:53,168 --> 00:29:54,208 கடோஷ்... 391 00:29:55,754 --> 00:29:57,304 நீங்கள் சொன்ன அந்த அதிகாரி... 392 00:30:00,384 --> 00:30:01,644 அவர் இப்போது எங்கே இருக்கிறார்? 393 00:30:02,678 --> 00:30:04,008 அது தேவையற்றது. 394 00:30:04,930 --> 00:30:06,310 என்னைப் பொறுத்தவரை அவன் இறந்து விட்டான். 395 00:30:21,655 --> 00:30:24,195 நீ இருக்கும் சூழலைப்பற்றியோ, என் பின்னால் இருக்கும் 396 00:30:24,283 --> 00:30:26,743 நிறுவனத்தின் ஆற்றலை பற்றியோ, உனக்கு புரியவில்லை. 397 00:30:26,827 --> 00:30:28,907 இதற்கு என்ன அர்த்தம்? 398 00:30:28,996 --> 00:30:31,456 நீ மட்டும் தான் அவர்களின் இலக்கு என்று நினைக்கிறாயா? 399 00:30:31,999 --> 00:30:33,329 உன் குடும்பத்தை துன்புறுத்துவார்கள். 400 00:30:33,417 --> 00:30:34,377 அது உண்மையில்லை. 401 00:30:34,459 --> 00:30:37,339 உன்னை பற்றி அவர்கள் செய்த பின்புல ஆராய்ச்சியை உனக்கு காண்பிக்கவா? 402 00:30:37,838 --> 00:30:40,008 உன் அகங்காரத்தால் உனக்கு தீங்கு ஏற்படுத்தி விடாதே. 403 00:30:40,716 --> 00:30:41,966 அகங்காரமா? 404 00:30:42,718 --> 00:30:44,598 என் கண் முன்னே என் நண்பன் கொலை செய்யப்பட்டான். 405 00:30:44,678 --> 00:30:46,678 அவர்கள் மற்றவர்களையும் துன்புறுத்துவார்கள். 406 00:30:53,562 --> 00:30:55,482 நீ இங்கே யாரை பாதுகாக்கிறாய்? 407 00:30:56,356 --> 00:30:57,726 நீ வெறுக்கும் ஆட்சியாளர்களையா? 408 00:30:58,358 --> 00:31:01,698 நான் உன்னை இங்கே காப்பாற்ற விரும்புகிறேன். அது உனக்கு புரியவில்லையா? 409 00:31:02,946 --> 00:31:05,906 அவர்கள் நினைத்திருந்தால், உன்னை வீட்டிலேயே கொலை செய்து இருப்பார்கள். 410 00:31:06,408 --> 00:31:09,368 இந்த மிஷன் வெற்றி பெற்றால், அவர்கள் உன்னை விடுவிப்பார்கள். 411 00:31:10,746 --> 00:31:12,746 ஆனால் நீ எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். 412 00:31:17,336 --> 00:31:18,706 பர்ஹாமை அழை. 413 00:31:19,379 --> 00:31:20,919 அவரை சமாதானப்படுத்து. 414 00:31:21,340 --> 00:31:24,800 எல்லாம் சரியாகிவிடும் என்று அவரிடம் சொல், ஏனென்றால் எல்லாம் நிச்சயம் சரியாகிவிடும். 415 00:31:38,607 --> 00:31:39,687 ஹலோ? 416 00:31:39,775 --> 00:31:41,525 எப்படி இருக்கிறீர்கள், நண்பா? 417 00:31:42,319 --> 00:31:44,069 என்னை ஏன் அழைத்தாய்? 418 00:31:44,488 --> 00:31:47,488 அந்த கோளாறு பற்றிய புகாரை நீங்கள் ரத்து செய்துவிட்டீர்கள். 419 00:31:47,574 --> 00:31:49,084 எனக்கு வேறு வழி தெரியவில்லை. 420 00:31:49,159 --> 00:31:51,119 என் செய்தியை நீ கேட்கவில்லையா? 421 00:31:51,203 --> 00:31:53,963 பர்ஹாம், நீங்கள் சாந்தமாக இருக்க வேண்டும். 422 00:31:55,290 --> 00:31:56,710 போதும்! 423 00:31:56,792 --> 00:31:59,042 உனக்காக என்னால் இதை செய்ய முடியாது. 424 00:32:12,599 --> 00:32:13,889 பர்ஹாம்... 425 00:32:16,186 --> 00:32:18,516 உங்க காணொளி ஒரு தொடக்கம் தான். 426 00:32:19,022 --> 00:32:23,742 இதை செய்யவில்லை என்றால், உங்க மனைவியிடம் நீங்க உறவு கொண்ட பெண்களைப்பற்றி சொல்வோம். 427 00:32:24,778 --> 00:32:28,318 எங்களிடம் இருக்கும் உங்களைப் பற்றிய காணொளியை புரட்சிகர காவலருக்கு அனுப்புவோம். 428 00:32:28,740 --> 00:32:32,240 எல்லாம் பதிவாகி இருக்கிறது. எந்த தவறும் செய்யாதீர்கள். 429 00:32:33,328 --> 00:32:35,038 ஏதும் சொதப்பிவிடாதீர்கள். 430 00:32:39,084 --> 00:32:40,844 அப்படி செய்ய வேண்டாம் என்று... 431 00:32:42,462 --> 00:32:44,092 உன்னிடம் கெஞ்சி கேட்கிறேன். 432 00:32:46,049 --> 00:32:49,009 கோளாறுக்கான அழைப்பை மறுபடியும் தொடங்குங்கள். 433 00:32:55,017 --> 00:32:56,187 நான் அதை செய்துவிட்டேன். 434 00:33:07,070 --> 00:33:08,160 எங்களுக்கு கிடைத்துவிட்டது. 435 00:33:08,238 --> 00:33:09,778 பர்ஹாம்... 436 00:33:11,408 --> 00:33:13,408 கவலைப்படாதீர்கள், நண்பா. 437 00:33:19,374 --> 00:33:20,884 நீங்கள் சிறப்பான வேலை செய்துள்ளீர்கள். 438 00:33:21,376 --> 00:33:23,046 கொஸ்ரோ, இவரை கைது செய். 439 00:33:23,128 --> 00:33:24,918 -என்ன? -எழுந்திரு, துரோகியே! 440 00:33:25,756 --> 00:33:27,506 என்னை விடுவிப்பதாக உறுதியளித்தீர்களே. 441 00:33:27,591 --> 00:33:28,631 நான் எதற்கும் உறுதியளிக்கவில்லை. 442 00:33:29,384 --> 00:33:31,724 -சார், இது இத்தோடு முடியப் போவதில்லை. -இங்கிருந்து போ. 443 00:33:33,722 --> 00:33:35,602 நீ புத்திசாலித்தனமாக நடந்து கொண்டாய். 444 00:33:38,810 --> 00:33:40,690 உன்னை பார்த்தால் பாவமாக இருக்கு. 445 00:33:44,274 --> 00:33:46,654 இந்த கட்டிலில் நான் கட்டப்பட்டிருந்தாலும், 446 00:33:47,319 --> 00:33:49,239 நம் இருவரில், 447 00:33:50,489 --> 00:33:51,909 நான் தான் சுதந்திரமாக இருக்கிறேன். 448 00:33:52,699 --> 00:33:53,989 நீதான் கைதி. 449 00:33:54,660 --> 00:33:56,330 உன் ஆன்மா மோசமானது. 450 00:33:57,287 --> 00:33:59,617 மேலும் நீ என் இடத்தில் இருந்திருந்தால், கண்டிப்பாக 451 00:33:59,706 --> 00:34:02,126 உன் மொத்த குடும்பத்தையும் கைவிட்டு இருப்பாய், இல்லையா? 452 00:34:02,543 --> 00:34:05,463 ஏனென்றால் உன் உலகத்தில் அப்படித்தான் நடக்கும், சரியா? 453 00:34:06,213 --> 00:34:09,093 நீ தொடும் எதுவும் சபிக்கப்பட்டதாக இருக்கும். 454 00:34:22,603 --> 00:34:24,403 உன் செயல்பாட்டை பற்றி நம்பிக்கையாக இருக்கிறாயா? 455 00:34:25,065 --> 00:34:26,475 முழுமையாக. 456 00:34:26,984 --> 00:34:28,404 நாங்கள் அதை செய்து முடிப்போம். 457 00:34:28,819 --> 00:34:30,199 விமானங்கள் புறப்படலாம். 458 00:34:32,489 --> 00:34:33,489 சரி. 459 00:34:34,324 --> 00:34:35,454 கவனமாக இருங்கள். 460 00:34:36,076 --> 00:34:37,286 வாழ்த்துக்கள். 461 00:34:40,289 --> 00:34:41,709 நமக்கு அனுமதி கிடைத்துவிட்டது. 462 00:34:42,498 --> 00:34:45,038 போய் தயாராகு. நாம் இன்னும் 50 நிமிடங்களில் கிளம்ப வேண்டும். 463 00:35:26,084 --> 00:35:29,054 அப்பா 464 00:35:36,512 --> 00:35:38,972 "உன் அப்பா புரட்சிகர காவலரால் கடத்தப்பட்டுள்ளார். 465 00:35:39,056 --> 00:35:41,426 இன்று இரவே நீ சரணடையாவிட்டால், உன் குற்றங்களுக்காக அவர் தண்டனை அனுபவிப்பார்." 466 00:35:47,856 --> 00:35:49,016 தமார், என்னது அது? 467 00:35:51,360 --> 00:35:52,360 தமார்? 468 00:35:55,697 --> 00:35:56,777 இது உண்மையா? 469 00:36:06,291 --> 00:36:08,341 -இது உனக்கு எப்படி கிடைத்தது? -பதில் சொல்லுங்கள். 470 00:36:11,964 --> 00:36:14,724 அவர் காவலரால் சிறை பிடிக்கப்படவில்லை, அதோடு அவர் ஈரானிலும் இல்லை. 471 00:36:18,929 --> 00:36:20,259 அவர் எங்கே இருக்கிறார், என்ன... 472 00:36:23,225 --> 00:36:25,805 இது இன்று காலை நடந்தது. இதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். 473 00:36:25,894 --> 00:36:28,524 -இதை ஏன் என்னிடம் நீங்கள் சொல்லவில்லை? -தமார்... 474 00:36:28,605 --> 00:36:32,475 இது முடியாதது என்று எனக்கு தெரியும், ஆனால் இப்போதைக்கு இதை பற்றி கவலைப்பட வேண்டாம். 475 00:36:33,569 --> 00:36:34,739 என்னைப் பார். 476 00:36:36,446 --> 00:36:38,616 நமது சிறந்த ஏஜெண்டுகள் இதில் பணியாற்றுகிறார்கள். 477 00:36:38,699 --> 00:36:41,489 -சத்தியமாக, அவரை காப்பாற்றிவிடுவார்கள். -அவர்கள் அவரை கொன்றுவிடுவார்கள்... 478 00:36:46,290 --> 00:36:48,580 -அவர் இறக்க போகிறார்,அப்படித்தான் நடக்கும் -இல்லை. 479 00:36:49,418 --> 00:36:50,418 அவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள். 480 00:36:51,503 --> 00:36:53,383 தயவுசெய்து இதைப் பற்றி யோசிக்காமல் இரு. 481 00:36:54,173 --> 00:36:57,093 நாம் திரும்புவதற்குள் அவர் பாதுகாப்பாக இருப்பார். 482 00:36:57,176 --> 00:36:59,676 என்னால் முடியாது. என்னால் முடியாது... 483 00:37:03,390 --> 00:37:05,140 இதற்கு மாற்று என்ன? காத்திருப்பதா? 484 00:37:05,684 --> 00:37:07,904 இவ்வளவு தூரம் வந்துவிட்டோம், இது செயல்படுத்த வேண்டிய நேரம். 485 00:37:09,021 --> 00:37:10,061 நாம் இதை செய்யலாம். 486 00:37:10,856 --> 00:37:12,106 போகலாம். 487 00:37:12,900 --> 00:37:13,900 சரி. 488 00:37:14,735 --> 00:37:16,315 நாம் செய்யலாம். 489 00:37:16,403 --> 00:37:17,493 வா போகலாம். 490 00:37:40,719 --> 00:37:42,389 என் கட்டளையின்படி செயல்படுங்கள். 491 00:38:05,077 --> 00:38:06,947 -ஹாய், மாலை வணக்கம். -ஹலோ, மாலை வணக்கம். 492 00:38:07,037 --> 00:38:11,207 நாங்கள் இப்போது தான் அழைத்து, டினா மற்றும் பால் ரிச்சர்ட்ஸன் என்ற பெயரில் 493 00:38:11,291 --> 00:38:12,671 ஒரு பெரிய கட்டில் கொண்ட அறையை பதிவு செய்தோம். 494 00:38:12,751 --> 00:38:13,751 பாஸ்போர்டை காண்பியுங்கள். 495 00:38:18,423 --> 00:38:21,803 சரி, விடுதியின் வை-ஃபையில் இணைந்துவிட்டனர், அவர் அறையை கண்டுப்பிடி. 496 00:38:55,210 --> 00:38:56,300 மூன்றாம் குழு... 497 00:38:57,754 --> 00:38:59,554 பின்பக்க வாயிலில் என்ன நடக்கிறது? 498 00:39:00,257 --> 00:39:02,467 பின்பக்க வாயிலில் ஒன்றும் நடக்கவில்லை. 499 00:39:06,180 --> 00:39:07,930 அவர்கள் எங்கே? 500 00:39:13,145 --> 00:39:17,725 ஹாவா பார்டாஸ் 501 00:39:20,569 --> 00:39:23,279 அந்த கணிணியில் ஊடுருவி, அந்த அழைப்பு இருப்பதை உறுதி செய். 502 00:39:25,115 --> 00:39:26,275 தமார்... 503 00:39:39,671 --> 00:39:40,761 என்ன விஷயம்? 504 00:39:42,466 --> 00:39:43,836 அதை என்னால் கண்டுபிடிக்க முடியலை. 505 00:39:43,926 --> 00:39:44,926 அந்த அழைப்பையா? 506 00:39:47,304 --> 00:39:49,064 அந்த கணினி, அதையே கண்டுபிடிக்க முடியவில்லை. 507 00:39:49,598 --> 00:39:51,018 அது இருக்கும், மீண்டும் முயற்சி செய். 508 00:39:52,559 --> 00:39:54,309 -எனக்கு ஒரு மாதிரி இருக்கிறது. -ஹே! 509 00:40:00,484 --> 00:40:01,744 அலி, அங்கே பாருங்கள். 510 00:40:03,737 --> 00:40:06,157 ஒரு வேன் ரொம்ப நேரமாக அங்கே காத்துக் கொண்டு இருக்கிறது. 511 00:40:11,537 --> 00:40:14,457 ஓமிட், நாம் இரண்டு நிமிடங்கள் பார்ப்போம், 512 00:40:14,540 --> 00:40:16,710 அப்போதும் அது நகரவில்லை என்றால், அதன் அருகே செல்வோம். 513 00:40:33,475 --> 00:40:35,685 -மிக்க நன்றி. -பரவாயில்லை. 514 00:40:40,107 --> 00:40:41,107 ஹலோ. 515 00:40:41,567 --> 00:40:42,777 அவர்கள் வருகிறார்கள். 516 00:40:43,151 --> 00:40:44,361 அவர்கள் எப்போது வந்தார்கள்? 517 00:40:45,279 --> 00:40:46,449 இப்போது தான். 518 00:40:46,530 --> 00:40:48,200 அவர்கள் மேலே வந்து கொண்டு இருக்கிறார்கள். 519 00:40:48,282 --> 00:40:49,282 நன்றி. 520 00:40:50,325 --> 00:40:51,615 எழுந்திரு. 521 00:40:51,702 --> 00:40:52,542 -என்ன? -எழுந்திரு. 522 00:40:52,619 --> 00:40:53,789 -என்ன? -தரையில் முட்டி போடு. 523 00:41:00,127 --> 00:41:01,337 உள்ளே போ. 524 00:41:02,963 --> 00:41:04,343 மெதுவாக உள்ளே போ. 525 00:41:33,410 --> 00:41:36,460 கேளுங்கள், ஓ இஸ்ரேலே, தேவன் தான் நம் இறைவன், தேவன் ஒருவனே. 526 00:41:37,289 --> 00:41:38,829 அவளது அப்பாவைப்பற்றி அவளுக்கு தெரிந்துவிட்டது. 527 00:41:39,499 --> 00:41:41,249 எப்படியோ அவரை தொடர்பு கொண்டு இருக்கிறாள். 528 00:41:41,960 --> 00:41:42,960 அவளால் கவனம் செலுத்த முடியலை. 529 00:41:43,045 --> 00:41:45,045 நீ ஏன் இதை முன்னரே தெரிவிக்கவில்லை? 530 00:41:45,130 --> 00:41:48,180 இது ஒரு முறை கிடைக்கக்கூடிய வாய்ப்பு, அவள் செய்வாள் என்று நான் நினைத்தேன். 531 00:41:48,592 --> 00:41:50,012 யேல், உங்கள் இருவர் பணியும் முடிந்தது. 532 00:41:50,093 --> 00:41:52,013 அவளை காரில் ஏற்றி கொண்டு வெளியேறி விடுங்கள். 533 00:41:52,095 --> 00:41:54,385 விமானங்கள் விரைவில் புறப்படப் போகின்றன, நான் நெவோவை அனுப்புகிறேன். 534 00:42:07,528 --> 00:42:08,738 போ. 535 00:42:16,411 --> 00:42:18,121 அவர்கள் சென்று விட்டார்கள். அது நாம் தேடும் ஆட்கள் இல்லை. 536 00:42:45,983 --> 00:42:46,983 யாரும் இல்லை. 537 00:42:57,995 --> 00:42:58,995 அவரைத் தேடுங்கள். 538 00:43:03,000 --> 00:43:04,000 உனக்கு புரிந்ததா? 539 00:43:53,759 --> 00:43:57,599 ஹோஷென், பாரெகீட், ஓடெம்,யார்கான், ஹெவன்ஸ் கேட் செயல்படுகிறது 540 00:43:58,764 --> 00:44:01,814 புரிந்தது, ஹோஷென் வரிசையில் வந்து புறப்படுகிறது. 541 00:44:02,809 --> 00:44:05,809 ஓடெம் மற்றும் பாரெகீட் வரிசையில், அதன் பின்னே புறப்படுகிறது. 542 00:44:05,896 --> 00:44:07,726 மேலெழும்பிய பின் உங்களை கடந்து செல்ல அனுமதி தேவை. 543 00:44:08,690 --> 00:44:11,990 ஓடெம் மற்றும் பாரெகீட் புறப்படலாம், என் இடது பக்கம் கடக்கணும். 544 00:44:15,030 --> 00:44:16,950 யார்கான் வரிசையில் வந்து புறப்படுகிறது. 545 00:44:18,075 --> 00:44:20,235 யார்கான் புறப்பட்டது. எல்லோருக்கும், வாழ்த்துக்கள். 546 00:44:25,749 --> 00:44:27,209 தயவு செய்து, நெவோவை அழை. 547 00:44:29,002 --> 00:44:30,212 நெவோ, கேட்கிறதா? 548 00:44:30,671 --> 00:44:32,011 நீ எப்படி இருக்கிறாய், நெவோ? 549 00:44:32,464 --> 00:44:34,804 -நன்றாக இருக்கிறேன். -விமானங்கள் இப்போது தான் புறப்பட்டன. 550 00:44:35,717 --> 00:44:37,337 விமானங்கள் எந்த தடையும் இல்லாமல், 551 00:44:37,427 --> 00:44:40,427 இன்றிரவு தங்கள் பணியை முடித்து விடும் என்று பிரதமரிடம் சொல்ல வேண்டும். 552 00:44:41,265 --> 00:44:43,225 விமானிகள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்று சொல்ல வேண்டும். 553 00:44:44,393 --> 00:44:45,983 எல்லாம் சரியாக நடக்கப் போகிறது, சார். 554 00:44:46,728 --> 00:44:48,058 குழுவினர், வேலையை தொடங்குங்கள். 555 00:45:02,661 --> 00:45:03,911 எல்லாம் எப்படி இருக்கிறது? 556 00:45:03,996 --> 00:45:07,036 நன்றாக இருக்கிறது. தயவு செய்து, என்னை அவனிடம் பேச அனுமதியுங்கள். 557 00:45:09,084 --> 00:45:10,344 தமார். 558 00:45:10,419 --> 00:45:12,169 நான் உன் தந்தையை தொடர்பில் இணைக்கிறேன். 559 00:45:13,046 --> 00:45:14,506 இப்போதுதான் அவரை விடுவித்தார்கள். 560 00:45:20,470 --> 00:45:21,470 அப்பா? 561 00:45:21,555 --> 00:45:22,805 செல்லமே... 562 00:45:26,435 --> 00:45:27,555 அன்பே. 563 00:45:28,395 --> 00:45:30,265 எதற்காக நீ அழுகிறாய்? அழாதே. 564 00:45:30,355 --> 00:45:32,315 அழாதே. 565 00:45:32,399 --> 00:45:34,279 என் செல்லமே. அழாதே. 566 00:45:35,194 --> 00:45:36,244 அன்பே... 567 00:45:39,448 --> 00:45:40,738 என் செல்ல சலி... 568 00:45:43,243 --> 00:45:45,083 -ஹலோ. -பாதுகாப்பு இடத்திற்கு சென்று, 569 00:45:45,162 --> 00:45:48,712 வெளியேறும் செயல் முறையைத் தொடங்கி, முகமதை, அந்த ஈரானியனை தீர்த்துக்கட்ட சொல். 570 00:47:04,908 --> 00:47:06,908 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்