1 00:00:09,176 --> 00:00:12,054 இத்தொடரில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் முற்றிலும் கற்பனையானவை. 2 00:00:12,137 --> 00:00:14,681 உண்மை நிகழ்வுகளோடு அல்லது உயிரோடிருக்கும் அல்லது இறந்த நபர்களோடு ஏதாவது வகையில் 3 00:00:14,765 --> 00:00:15,891 சம்பந்தப்பட்டிருந்தால், அது முற்றிலும் தற்செயலானது. 4 00:00:17,809 --> 00:00:19,853 நீ இங்கு என்ன செய்கிறாய்? 5 00:00:21,897 --> 00:00:23,106 நான் உள்ளே வரலாமா? 6 00:00:24,274 --> 00:00:25,817 தயவுசெய்து. 7 00:00:26,568 --> 00:00:27,653 அரிஸோ... 8 00:00:27,736 --> 00:00:28,737 இரு. 9 00:00:30,405 --> 00:00:32,031 -அது யார்? -யாரும் இல்லை. 10 00:00:32,366 --> 00:00:34,326 நான் சிறிது தூரம் நடக்க போகிறேன், சரியா? 11 00:00:34,409 --> 00:00:36,286 இப்பொழுது சாப்பிடலாம் என்று தானே சொன்னாய்? 12 00:00:36,370 --> 00:00:39,456 சிறிது நேரம் தான். வெளியே நன்றாக இருக்கு. 13 00:00:44,336 --> 00:00:45,212 வா. 14 00:00:56,390 --> 00:00:58,934 நீ இங்கு என்ன செய்கிறாய்? நீ எப்படி ஈரான் வந்தடைந்தாய்? 15 00:00:59,268 --> 00:01:01,395 அதை பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். 16 00:01:04,397 --> 00:01:06,358 மன்னிச்சிடு, என்னால் முடியாது. 17 00:01:07,234 --> 00:01:09,570 நீ ஒரு யூதர், மற்றும் இஸ்ரேலி. 18 00:01:11,154 --> 00:01:13,448 எனக்கு குடும்பம் இருக்கு, ஒரு மகள் இருக்கிறாள். 19 00:01:14,449 --> 00:01:15,784 என்னை மன்னிச்சிடு. 20 00:01:15,868 --> 00:01:17,578 அரிஸோ, உங்களை கெஞ்சி கேட்கிறேன். 21 00:01:19,037 --> 00:01:20,455 எனக்கு வேறு போக்கிடம் இல்லை. 22 00:01:20,956 --> 00:01:22,124 ஒரு இரவு மட்டும் தான் தங்குவேன். 23 00:01:23,208 --> 00:01:24,877 எனது மகளுக்குத் தெரியாது. 24 00:01:25,335 --> 00:01:27,462 என்னால் அவர்களை ஏமாற்ற முடியாது. 25 00:01:27,546 --> 00:01:31,091 பொய் சொல்லி, அவர்களது உயிரை பணயம் வைக்க முடியாது. 26 00:01:31,466 --> 00:01:33,677 இஸ்ரேலியருக்கு உதவி செய்தால் என்ன ஆகும் தெரியுமா? 27 00:01:34,094 --> 00:01:35,804 நான் எதுவும் சொல்ல மாட்டேன். 28 00:01:37,014 --> 00:01:38,307 எந்த வித்தியாசமும் இருக்காது. 29 00:01:45,981 --> 00:01:50,861 அவங்க உங்களுடன் பேசிய போது நான் அந்த அறையில் தான் இருந்தேன். 30 00:01:53,739 --> 00:01:56,658 அவங்க உங்களைப் பார்க்க கெஞ்சினாங்க, அவங்க சாகும் முன்... 31 00:01:58,327 --> 00:02:00,037 நீங்க என் அம்மாவுக்கு கடமைப்பட்டிருக்கீங்க. 32 00:02:00,370 --> 00:02:04,374 அவங்க உங்க விருப்பதிற்கேற்ப தொடர்பை துண்டித்தாங்க, ஆனால்... 33 00:02:07,544 --> 00:02:09,170 உங்களைப் பற்றி நினைக்காமல் இருந்ததில்லை. 34 00:02:12,216 --> 00:02:14,718 சாகும் நாள் வரை உங்களை நேசித்தார்கள். 35 00:02:16,470 --> 00:02:18,722 நீங்கள் எனக்கு உதவ வேண்டும். 36 00:02:19,556 --> 00:02:21,642 அவங்களுக்காகவாவது. 37 00:02:36,406 --> 00:02:38,283 இது என் தங்கையின் ஆரம். 38 00:02:43,747 --> 00:02:45,207 இதை நீ ஒளித்து வைக்க வேண்டும். 39 00:03:45,893 --> 00:03:47,352 இங்கேயே இரு. 40 00:03:55,611 --> 00:03:58,238 நீ எங்கு சென்றாய்? கொஞ்ச நேரம் என்று தானே சொன்னாய். 41 00:03:58,864 --> 00:04:00,574 மன்னிச்சிடுங்க, கொஞ்சம் தாமதமாகிவிட்டது. 42 00:04:01,491 --> 00:04:03,452 எல்லாம் சரிதானே? ஏதேனும் பிரச்சினையா? 43 00:04:34,525 --> 00:04:35,734 இங்க பாருங்க, நீங்க யார்? 44 00:04:37,444 --> 00:04:38,612 ஹலோ. 45 00:04:39,446 --> 00:04:41,198 நீ அரிஸோவின் மகளாக இருக்க வேண்டும். 46 00:04:42,658 --> 00:04:44,034 உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி. 47 00:04:46,662 --> 00:04:48,038 உன் வீடு போல நினைத்துக் கொள். 48 00:04:48,121 --> 00:04:49,414 -ஹலோ. -ஹலோ. 49 00:04:49,498 --> 00:04:52,960 இவள் சஹாரா, எனது முன்னாள் மாணவி. 50 00:04:53,794 --> 00:04:55,921 இவர் எனது கணவர், டாரியுஷ். 51 00:04:56,004 --> 00:04:59,299 அப்புறம் இந்த அழகான பெண், ராசியா, எங்களது மகள், அவள் ஒரு மாணவி. 52 00:05:00,259 --> 00:05:01,343 உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. 53 00:05:04,429 --> 00:05:07,015 சஹாராவிற்கு வீட்டில் அவள் கணவருடன் சின்ன பிரச்சினை. 54 00:05:07,099 --> 00:05:10,853 அவள் அது சரியாகும் வரை இரவு இங்கு தங்க முடியுமா என கேட்டாள். 55 00:05:12,646 --> 00:05:15,691 நாம் அவளை கனிவோடும் அன்போடும் வரவேற்போம் என உறுதியளித்துள்ளேன். 56 00:05:16,525 --> 00:05:18,110 நம் குடும்ப உறுப்பினர் போல. 57 00:05:19,778 --> 00:05:21,697 வருக. எங்களது வீடு உங்களது வீடு போல. 58 00:05:25,033 --> 00:05:26,326 நன்றி. 59 00:05:34,084 --> 00:05:35,794 உங்களது வீடு அழகாக உள்ளது. 60 00:05:37,087 --> 00:05:39,798 நான் நினைத்ததை விட அழகாக உள்ளது. 61 00:05:39,882 --> 00:05:41,633 நன்றி, அதை சொல்வது உன் பெருந்தன்மை. 62 00:05:49,266 --> 00:05:52,644 இது ராசியாவின் பழைய துணிகள், உனக்கு தேவைப்பட்டால் எடுத்துக் கொள். 63 00:05:54,897 --> 00:05:57,399 உன் துணிகளை கூடையில் போடு, நான் துவைத்து விடுவேன். 64 00:05:57,482 --> 00:06:00,194 அனைத்திற்கும் மிக்க நன்றி. 65 00:06:00,736 --> 00:06:03,739 நீ தெரிந்துக்கொள், இவை அனைத்தும் எனக்கு சுலபமான விஷயம் அல்ல. 66 00:06:04,823 --> 00:06:06,200 அது என்னை மிகவும் காயப்படுத்தியது. 67 00:06:07,826 --> 00:06:09,870 எனக்கு என் சகோதரியை ரொம்ப பிடிக்கும். 68 00:06:11,079 --> 00:06:14,791 ஆனால் நான் என கணவருடனும் மகளுடனும் இங்கு தங்க முடிவு செய்தேன். 69 00:06:15,125 --> 00:06:17,252 அதற்கு நான் தியாகம் செய்யணும் என எனக்குத் தெரியும். 70 00:06:20,047 --> 00:06:20,923 எனக்குப் புரிகிறது. 71 00:06:21,423 --> 00:06:22,674 பார். 72 00:06:24,176 --> 00:06:26,470 டாரியுஷின் சகோதரர் போரில் கொல்லப்பட்டார். 73 00:06:27,179 --> 00:06:30,349 டாரியுஷ் நீதிதுறையில் பெரிய பதவியில் உள்ளார். 74 00:06:32,226 --> 00:06:34,019 நாங்கள் இங்கு ஆழமாக வேரூன்றியவர்கள். 75 00:06:34,895 --> 00:06:36,146 புரிகிறதா? 76 00:06:41,235 --> 00:06:43,237 உன் அப்பா எப்படி இருக்கிறார்? நலமா? 77 00:06:45,322 --> 00:06:48,450 நன்றாக இருக்கிறார். 78 00:06:50,619 --> 00:06:52,329 அவரது உடல் நலம்? வேலை எல்லாம்? 79 00:06:57,292 --> 00:07:00,921 அம்மா இறந்த பிறகு அவர் மிகவும் கஷ்டப்பட்டார். 80 00:07:02,881 --> 00:07:04,800 அவர் அவங்களை எவ்வளவு நேசித்தார் என உங்களுக்குத் தெரியும். 81 00:07:07,719 --> 00:07:12,099 ஆனால் எப்படியோ தேறிவிட்டார். 82 00:07:15,018 --> 00:07:16,395 எனக்காக. 83 00:07:20,190 --> 00:07:23,110 கடவுளுக்கு நன்றி. அதை கேட்பதில் எனக்கு மகிழ்ச்சி. 84 00:07:24,570 --> 00:07:26,613 கடவுளின் ஆசீர்வாதத்தால் நாம் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருப்போம். 85 00:07:30,409 --> 00:07:32,619 -இரவு வணக்கம். -இரவு வணக்கம். 86 00:07:45,883 --> 00:07:49,428 பாட் யம், இஸ்ரேல் 87 00:07:51,930 --> 00:07:55,058 ஹாய், மோர்டிசாய். நான் தமாரின் மேலாளர் நோவா. 88 00:07:55,559 --> 00:07:58,020 சரி, ஹலோ. தயவுசெய்து உள்ளே வாருங்கள். 89 00:08:00,772 --> 00:08:03,650 உங்களை முன்பே அழைத்தேன், தமாரின் மடிக் கணினியை வாங்கி செல்ல வந்துள்ளேன். 90 00:08:03,734 --> 00:08:04,902 நான் தொந்தரவு செய்யவில்லையே. 91 00:08:04,985 --> 00:08:07,613 இல்லை, பரவாயில்லை. நான் கணினியை எடுத்து வருகிறேன். 92 00:08:16,955 --> 00:08:20,375 "ஒரு கண் ஜெருசலேமையும், இன்னொரு கண் இஸ்ஃபஹானையும் பார்க்கிறது." 93 00:08:21,168 --> 00:08:22,878 அந்த வாக்கியத்தை நான் மறக்கவே மாட்டேன். 94 00:08:23,253 --> 00:08:26,215 இறந்துப்போன, என் அப்பா, அதை எப்பொழுதும் சொல்லிக் கொண்டே இருப்பார். 95 00:08:29,718 --> 00:08:31,345 இது போல வேறு புகைப்படங்கள் இருக்கா? 96 00:08:31,678 --> 00:08:33,639 ஒருவேளை என் குடும்பத்தை கண்டுப்பிடிக்கலாம். 97 00:08:34,264 --> 00:08:37,058 ஈரானில் இருந்த மாதிரி புகைப்படங்களா? கண்டிப்பாக இருக்கு. 98 00:08:37,518 --> 00:08:40,062 தயவுசெய்து. தயவுசெய்து, வா. 99 00:08:46,777 --> 00:08:48,946 ஈரானியர்கள் நல்லவர்கள். 100 00:08:49,655 --> 00:08:50,739 அன்பானவர்கள். 101 00:08:51,073 --> 00:08:52,533 அருமையானவர்கள். 102 00:08:53,492 --> 00:08:55,702 எங்களுக்கு நடந்தது ஒரு பேரிடர். 103 00:08:56,119 --> 00:08:59,998 நாங்கள் அப்பொழுதே அந்த முஸ்லிம் வெறியர்களை எதிர்த்திருக்க வேண்டும், 104 00:09:00,082 --> 00:09:01,959 கோமேனி பிரபலமடையும் பொழுதே. 105 00:09:02,042 --> 00:09:04,711 யாருமே இவ்வளவு தீவிரம் அடையும் என நினைக்கவில்லை. 106 00:09:06,338 --> 00:09:08,715 அந்த எழுச்சி மக்களை மாற்றிவிட்டது. 107 00:09:09,591 --> 00:09:15,097 மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் இருந்தவர்கள், இப்பொழுது பயத்தில், பொய்யாக வாழ்கின்றனர். 108 00:09:15,180 --> 00:09:16,932 அதற்குப் பிறகு எவ்வளவு காலம் அங்கே இருந்தீங்க? 109 00:09:17,015 --> 00:09:18,267 15 வருடங்கள். 110 00:09:19,560 --> 00:09:21,478 உங்களது குடும்பத்தினர் யாராவது அங்கேயே இருந்து விட்டனரா? 111 00:09:23,647 --> 00:09:28,235 இல்லை. நாங்கள் அனைவரும் ஒன்றாக வந்துவிட்டோம். 112 00:09:29,027 --> 00:09:33,490 நான், எனது குடும்பம், யாசமின் மற்றும் அவளது சகோதரன். 113 00:09:35,409 --> 00:09:37,452 யார் இந்த அழகான பெண்? 114 00:09:43,458 --> 00:09:46,253 அவள் அரிஸோ. 115 00:09:48,755 --> 00:09:50,257 எனது மனைவியின் சகோதரி. 116 00:09:51,800 --> 00:09:53,552 அவளுடன் இருப்பது டாரியுஷ். 117 00:09:54,094 --> 00:09:55,596 அவர் ஒரு முஸ்லிம். 118 00:09:55,679 --> 00:09:58,432 அவர்கள் பள்ளியில் ஒன்றாக படித்தனர். காதலித்தனர். 119 00:09:59,266 --> 00:10:02,436 திருமணம் செய்து கொண்டு, அவளும் முஸ்லிமாக மாறிவிட்டாள். 120 00:10:02,519 --> 00:10:04,146 அவங்கள் அங்கேயே இருந்துவிட்டார்களா? 121 00:10:04,521 --> 00:10:06,273 அவர்கள் டெஹ்ரானுக்குச் சென்றனர். 122 00:10:07,149 --> 00:10:10,694 அங்கு யாருக்கும் அவர்களை பற்றித் தெரியாது. அவர்களது குடும்ப பெயரை மாற்றிக் கொண்டனர். 123 00:10:10,777 --> 00:10:12,654 அவர் தனக்கென ஒரு வேலை அமைத்துக் கொண்டார். 124 00:10:12,738 --> 00:10:14,531 நீதி துறையில். 125 00:10:14,990 --> 00:10:16,366 செல்வாக்குமிக்கவர். 126 00:10:16,450 --> 00:10:18,619 டாரியுஷ் மற்றும் அரிஸோ. 127 00:10:19,119 --> 00:10:20,829 அழகான காதல் கதை. 128 00:10:23,248 --> 00:10:25,626 டெஹ்ரானில் இருக்கும் டாரியுஷ் மற்றும் அரிஸோ. 129 00:10:25,709 --> 00:10:28,295 டாரியுஷ் நீதி துறையில் பெரிய பதவியில் உள்ளார். 130 00:10:28,378 --> 00:10:29,296 குடும்ப பெயர்? 131 00:10:29,379 --> 00:10:31,465 எனக்குத் தெரியாது. அவர்கள் மாற்றிக் கொண்டனர். 132 00:10:31,798 --> 00:10:35,469 நீதித் துறையில் வேலை செய்யும் டாரியுஷ் என்ற ஒருவர்... 133 00:10:35,886 --> 00:10:38,722 10 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு நகரத்தில். 134 00:10:40,182 --> 00:10:41,225 கண்டுபிடிக்க நேரமாகும். 135 00:10:41,308 --> 00:10:45,562 அவரது மனைவியின் பெயர் அரிஸோ, அவர்கள் 50 வயது கடந்தவர்கள். 136 00:10:45,646 --> 00:10:47,314 இஸ்ஃபஹானில் இருந்து வந்தவர்கள். 137 00:10:47,731 --> 00:10:49,650 உங்களுக்கு போதிய அளவு தகவல் கிடைத்துவிட்டது. 138 00:10:50,817 --> 00:10:52,778 சரி. உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறேன். 139 00:11:07,793 --> 00:11:09,837 டி-சாட் சிக்-பாய் இடத்திற்கு வருக 140 00:11:11,588 --> 00:11:13,757 ஷக்கீரா: தூங்கிவிட்டாயா? 141 00:11:14,883 --> 00:11:16,051 சிக்-பாய்: இன்னும் இல்லை. 142 00:11:16,134 --> 00:11:17,678 வீட்டில், விளக்குகள் அணைவதற்காக காத்திருக்கிறேன்... 143 00:11:22,432 --> 00:11:24,184 ஷக்கீரா: ஒரு பிரச்சினை... 144 00:11:24,268 --> 00:11:26,478 நான் உன்னிடம் சொன்னது போலவே நடந்துக் கொள்வேன். 145 00:11:27,938 --> 00:11:30,732 நாம் எப்பொழுதும் சந்திக்கலாம்? 146 00:11:31,817 --> 00:11:34,236 சிக்-பாய்: அது நல்ல யோசனையாக எனக்குத் தெரியவில்லை. 147 00:11:36,280 --> 00:11:38,949 ஷக்கீரா: கவலைப்படாதே, நான் கடித்துவிட மாட்டேன். 148 00:11:40,075 --> 00:11:42,494 சிக்-பாய்: நான் கடித்தால்? 149 00:11:43,745 --> 00:11:45,831 ஷக்கீரா: நான் துணிந்து வருவேன். 150 00:12:01,388 --> 00:12:02,764 அது ரொம்ப சீக்கிரம். 151 00:12:04,016 --> 00:12:05,058 ஆமாம். 152 00:12:05,851 --> 00:12:08,103 ஆங்கிலத்தில் பேசலாமா? 153 00:12:08,645 --> 00:12:10,397 சரி. ஆங்கிலம் நல்லது. 154 00:12:10,731 --> 00:12:14,484 இங்கு பிறந்து, கதாரில் வளர்ந்து, இரண்டு ஆண்டுக்கு முன்பு இங்கு வந்தேன். 155 00:12:14,568 --> 00:12:16,904 நிஜமாகவா. நீ இங்கு திரும்பி வந்தாயா? 156 00:12:17,863 --> 00:12:19,948 -ஏன்? -அது ஒரு சிக்கலான கதை. 157 00:12:20,991 --> 00:12:22,367 நாம் சந்திக்கும் போது அதை சொல்வாயா? 158 00:12:23,243 --> 00:12:24,119 சரி. 159 00:12:24,870 --> 00:12:27,122 சரி, நாளைக்கு? 160 00:12:28,582 --> 00:12:30,459 நான் நேரம் உள்ளதா என பார்க்கிறேன், சரியா? 161 00:12:33,462 --> 00:12:35,422 இல்லை, நாளை எனக்கு வேலை இருக்கு. 162 00:12:37,758 --> 00:12:39,134 விளையாடினேன். 163 00:12:39,218 --> 00:12:41,929 நான் மர்மமான ஷக்கீராவை சந்திப்பதை தவறவிடுவேன் என நினைத்தாயா? 164 00:12:44,014 --> 00:12:45,349 மதியம் 1:00 மணி பரவாயில்லையா? 165 00:12:45,933 --> 00:12:47,351 சரி, நல்லது. 166 00:12:47,684 --> 00:12:48,519 சிறப்பு. 167 00:12:49,061 --> 00:12:51,271 இடத்தை உனக்கு தெரியப்படுத்துகிறேன். 168 00:12:51,688 --> 00:12:52,523 சீக்கிரம் பார்க்கலாம். 169 00:12:53,106 --> 00:12:54,233 சிக்-பாய். 170 00:12:55,817 --> 00:12:57,236 நான் ஒரு கேள்வி கேட்கணும். 171 00:12:58,946 --> 00:13:00,364 எனக்கு உன் உதவி தேவை. 172 00:13:01,365 --> 00:13:02,366 என்ன உதவி? 173 00:13:03,617 --> 00:13:05,077 எனக்கு ஒரு பாஸ்போர்ட் தேவை. 174 00:13:07,079 --> 00:13:09,039 வாங்கி கொடுக்க முடியுமா இல்லையா என சொல். 175 00:13:09,957 --> 00:13:11,708 நீ ரகசியம் காப்பாய் என நம்புகிறேன். 176 00:13:17,673 --> 00:13:19,508 நாம் ஒரு ஒப்பந்தம் செய்துக் கொள்ளலாம், ஷக்கீரா. 177 00:13:20,175 --> 00:13:22,052 நாளை நீ எனக்கு உதவி செய்தால், 178 00:13:22,886 --> 00:13:24,388 உனக்கு பாஸ்போர்ட் வாங்கி தருகிறேன். 179 00:13:24,471 --> 00:13:25,889 உனக்கு என்ன தேவை? 180 00:13:25,973 --> 00:13:27,850 நாளை, மதியம் 1:00 மணி. 181 00:13:28,809 --> 00:13:30,269 இரவு வணக்கம், ஷக்கீரா. 182 00:13:38,277 --> 00:13:39,111 லாலே பார்க் 183 00:13:39,194 --> 00:13:40,279 மருத்துவ அறிவியலுக்கான டெஹ்ரான் பல்கலைக்கழகம் 184 00:14:04,052 --> 00:14:06,096 நீங்கள் காவலரா? 185 00:14:06,180 --> 00:14:07,055 என்ன சொல்கிறீர்கள்? 186 00:14:07,139 --> 00:14:09,850 நீங்கள் ஆதாரங்கள் தேடுவதாக தெரிகிறது. நீங்கள் காவலரா? 187 00:14:09,933 --> 00:14:12,644 -என்ன சொல்கிறீர்கள்? -நான் சலோமி, எதிர் வீட்டில் வாழ்கிறேன். 188 00:14:12,728 --> 00:14:16,148 -நான் தொந்தரவு தரவில்லை என நினைக்கிறேன். -இல்லை. தயவுசெய்து உள்ளே வாருங்கள். 189 00:14:17,274 --> 00:14:18,108 ஓ. 190 00:14:18,942 --> 00:14:21,945 கெய்சர் இப்படி செய்வார் என்று யாரும் நினைக்கவில்லை. 191 00:14:22,529 --> 00:14:23,906 பாவம் ஜிலா. 192 00:14:23,989 --> 00:14:25,407 உங்களுக்கு அவர்களை நன்றாக தெரியுமா? 193 00:14:25,490 --> 00:14:26,658 நன்றாகவே தெரியும். 194 00:14:27,993 --> 00:14:32,122 கெய்சர் மிகவும் கடவுள் பக்தியான, அமைதியான மனிதர். 195 00:14:32,664 --> 00:14:37,044 ஜிலா பெருந்தன்மையானவள். எப்போதும் சிரித்தவாறே, அன்பாக இருப்பாள். 196 00:14:37,127 --> 00:14:39,379 ஜிலாவிற்கு யாராவது நண்பர்கள் உண்டா? 197 00:14:39,463 --> 00:14:43,592 இங்கே அடிக்கடி வருபவர்கள் யாராவது? 198 00:14:43,675 --> 00:14:44,843 -இல்லை. -இல்லை. 199 00:14:45,469 --> 00:14:47,971 அவளுக்கு நண்பர்களோ குடும்பமோ கிடையாது. அவள் குடும்பம் கத்தாரில் வாழ்கிறார்கள். 200 00:14:49,431 --> 00:14:51,975 மன்னிச்சிடுங்க நீங்கள் எங்கு வாழ்வதாக சொன்னீர்கள்? 201 00:14:53,101 --> 00:14:54,228 அங்கே எதிர் வீட்டில். 202 00:14:54,311 --> 00:14:56,355 ஜிலா குதித்த அந்த வீட்டிலா? 203 00:14:56,438 --> 00:14:57,397 அதே தான். 204 00:14:57,856 --> 00:14:59,441 அது எப்படி நடந்தது? 205 00:14:59,525 --> 00:15:01,235 -வீட்டிற்குள் வந்து அப்படியே குதித்தாளா? -ஆமாம். 206 00:15:02,110 --> 00:15:05,072 அவள் தற்கொலை செய்து கொள்ளப் போகிறாள் என்று உங்களுக்கு தோன்றவில்லையா? 207 00:15:05,614 --> 00:15:07,866 நீங்கள் ஏன் அவளை தடுக்கவில்லை? 208 00:15:07,950 --> 00:15:11,161 எல்லாமே விரைவாக நடந்ததால், எதுவும் செய்ய எனக்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டது. 209 00:15:11,537 --> 00:15:14,289 கெய்சரின் மரணமே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 210 00:15:15,290 --> 00:15:16,166 மன்னிச்சிடுங்க. 211 00:15:17,292 --> 00:15:18,126 ஹலோ. 212 00:15:21,755 --> 00:15:24,508 சரி, சரி, நான் வருகிறேன். 213 00:15:25,050 --> 00:15:27,219 வருகிறேன். இங்கே விஷயங்களை முடித்துவிட்டு வருகிறேன். 214 00:15:27,719 --> 00:15:29,388 மன்னிச்சிடுங்க, மேடம். நான் போக வேண்டும். 215 00:15:29,471 --> 00:15:30,722 சரி. 216 00:15:33,684 --> 00:15:36,311 சார், நான் உங்களை ஒன்று கேட்கலாமா? 217 00:15:36,770 --> 00:15:39,439 -கேளுங்கள். -வந்து, ஏற்கனவே காவலரிடம் பேசி விட்டோம், 218 00:15:39,523 --> 00:15:40,607 இப்போது நீங்க வந்து இருக்கிறீர்கள்... 219 00:15:40,691 --> 00:15:42,734 ஏதாவது நடந்தால், நாங்கள் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்? 220 00:15:43,235 --> 00:15:46,196 நேரிடையாக என்னை அழையுங்கள். இதோ என் கார்ட். 221 00:15:47,114 --> 00:15:48,657 -என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். -நன்றி. 222 00:15:48,740 --> 00:15:49,825 நன்றி, மேடம். 223 00:16:03,172 --> 00:16:04,715 அவளது மடிக்கணினியை பார்க்க முடிந்தததா? 224 00:16:04,798 --> 00:16:06,717 ஆமாம். இரவு முழுவதும் முயற்சி செய்தேன். 225 00:16:06,800 --> 00:16:09,219 நீ சிறப்பானவன், ஓம்ரி. இது என்ன இணையதளம்? 226 00:16:09,303 --> 00:16:11,847 கடந்த சில மாதங்களில் தமார் இதை பலமுறை பயன்படுத்தியிருக்கிறாள். 227 00:16:11,930 --> 00:16:14,892 அது ஈரானில் கணினிகளை ஹாக் செய்யும் சேவையை வழங்குகிறது. 228 00:16:14,975 --> 00:16:17,227 நமது சாட் மென்பொருளை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். 229 00:16:17,311 --> 00:16:19,229 இதோ, இது ஒரு ஹாகருடனான உரையாடல். 230 00:16:19,646 --> 00:16:21,148 ஷக்கீரா தான் தமாரா? 231 00:16:21,773 --> 00:16:22,983 ஷக்கீரா... 232 00:16:25,360 --> 00:16:26,486 அவர்கள் எப்போது பேசினார்கள்? 233 00:16:26,570 --> 00:16:28,280 நேற்று இரவு 9:30 மணிக்கு. 234 00:16:28,363 --> 00:16:30,365 பல்கலைக்கழகத்திற்கு அருகே அவர்கள் சந்திக்கிறார்கள். 235 00:16:30,449 --> 00:16:32,576 ஈரானுக்கும் நமக்கும் ஒன்றரை மணி நேர வித்தியாசம் என்பதால், 236 00:16:32,659 --> 00:16:34,870 நமக்கு இரண்டு மணி நேரம் 15 நிமிடங்கள் அவகாசம் இருக்கிறது. 237 00:16:36,455 --> 00:16:38,999 கவனமாக இரு, அவரிடம் காண்பிக்க வேண்டும். 238 00:16:39,082 --> 00:16:41,960 இதோ அவர் வருகிறார். 239 00:16:42,377 --> 00:16:44,046 -எப்படி இருக்க, அலி? -ஹலோ, சார். 240 00:16:45,547 --> 00:16:46,632 காலை வணக்கம். 241 00:16:48,967 --> 00:16:50,719 அந்த வீட்டில் ஏதாவது துப்பு கிடைத்ததா? 242 00:16:51,428 --> 00:16:54,056 இல்லை. அது ஆதாரம் இல்லாதபடி சுத்தமாக இருந்தது. 243 00:16:55,098 --> 00:16:56,558 ரொம்ப சுத்தமாக. 244 00:16:58,018 --> 00:17:00,270 சரி, நீ ஏதாவது கண்டுபிடித்தாயா? 245 00:17:00,938 --> 00:17:02,564 -உங்க அனுமதியோடு சொல்கிறேன். -வா. 246 00:17:04,148 --> 00:17:06,151 கடவுள் நமக்கு அதிருஷ்டத்தை கொடுக்கட்டும். 247 00:17:06,234 --> 00:17:07,569 கொஞ்சம் பொறுங்க. 248 00:17:08,694 --> 00:17:09,905 சரி. 249 00:17:09,988 --> 00:17:13,867 இது தெரு கேமராவில் பதிவான மின்சார அலுவலகத்தின் நுழைவாயில் காட்சிகள். 250 00:17:14,535 --> 00:17:16,203 இந்த காரைப் பாருங்கள். 251 00:17:17,162 --> 00:17:19,039 அவர் எங்கே போகிறார் என்று பாருங்கள். 252 00:17:20,040 --> 00:17:21,375 இது வேறு ஒரு கேமராவின் காட்சி. 253 00:17:22,416 --> 00:17:25,045 கொலை நடந்த நேரத்தில் அந்த பிரேதத்தை அவர்கள் 254 00:17:25,420 --> 00:17:27,172 இந்த சந்தில் தான் கண்டுபிடித்தார்கள். 255 00:17:28,507 --> 00:17:31,093 அவர் இப்போது காருக்கு திரும்பி சென்று காத்திருக்கிறார். 256 00:17:32,177 --> 00:17:34,012 இதோ கிளம்பி போகிறார்... 257 00:17:34,680 --> 00:17:36,139 இப்போது, இதைப் பாருங்க. 258 00:17:37,432 --> 00:17:43,230 இது 40 நிமிடங்கள் கழித்து ஜிலா மற்றும் கெய்சர் கோர்பானிஃபரின் வீட்டிற்கு, 259 00:17:43,313 --> 00:17:44,857 பல வீடுகள் தள்ளி இருக்கும் கேமரா. 260 00:17:44,940 --> 00:17:46,108 பாருங்க. 261 00:17:46,483 --> 00:17:48,986 இரண்டு காணொளியிலும் வண்டியின் எண் தெளிவாக இல்லை. 262 00:17:49,069 --> 00:17:49,945 என்ன நினைக்கிறீர்கள்? 263 00:17:52,823 --> 00:17:53,991 அதை மறுபடியும் ஓடவிடு. 264 00:17:55,617 --> 00:17:57,244 -நிறுத்து. -நிறுத்துகிறேன். 265 00:17:57,327 --> 00:17:58,620 இப்போது இரண்டாவது காணொளியை போடு. 266 00:18:01,957 --> 00:18:03,250 இரண்டுமே ஒரே கார் தான். 267 00:18:03,834 --> 00:18:05,252 பக்கவாட்டில் அந்த சின்னம் தெரிகிறதா? 268 00:18:06,503 --> 00:18:08,005 எதோ ஒரு வகை கருப்புநிற பறவை. 269 00:18:08,338 --> 00:18:10,174 நான் அந்த சின்னத்தை ஒரு முறை பார்த்துள்ளேன்... 270 00:18:11,800 --> 00:18:13,844 அது வேட்டையாடும் ஒரு பறவை வகை. 271 00:18:15,262 --> 00:18:17,389 ஒரு ராஜாளி அல்லது ஒரு கழுகு. 272 00:18:20,434 --> 00:18:22,603 அது ஒரு சுற்றுலா நிறுவனத்தின் சின்னம். 273 00:18:25,022 --> 00:18:27,774 டெஹ்ரானில் உள்ள சுற்றுலா நிறுவனங்களின் சின்னங்களை தேடு. 274 00:18:34,072 --> 00:18:35,699 "தப்ரிஸி டூர்ஸ்." 275 00:18:37,367 --> 00:18:38,994 ஒரு சுற்றுலா நிறுவனம். 276 00:18:41,955 --> 00:18:45,000 அதன் உரிமையாளர், மசூத் தப்ரிஸி. 277 00:18:45,417 --> 00:18:47,544 அவரை நிச்சயம் ஸயனிஸ்டுகள்தான் வேலைக்கு சேர்த்திருப்பார்கள். 278 00:18:47,628 --> 00:18:49,755 அவ்வளவு உறுதியாக சொல்லாதே. 279 00:18:50,672 --> 00:18:52,216 அவருக்கு இழப்பதற்கு நிறைய இருக்கின்றன. 280 00:18:54,551 --> 00:18:56,720 இரண்டு குழுக்களை அவரை பின் தொடர சொல். 281 00:18:57,429 --> 00:18:59,556 ஆனால் அவர் அருகே போகக் கூடாது. 282 00:19:00,224 --> 00:19:01,350 சரி. 283 00:19:01,433 --> 00:19:02,476 சிறப்பான செயல். 284 00:19:11,610 --> 00:19:16,240 15 ஆம் தேதி கிளம்புகிறது, 3 மில்லியன் டோமன் செலவாகும். 285 00:19:16,323 --> 00:19:17,616 ஹலோ, மேடம். 286 00:19:18,158 --> 00:19:20,369 -ஒரு நொடி. -திரு. தப்ரிஸி இங்கு இருக்கிறாரா? 287 00:19:20,452 --> 00:19:22,579 உள்ளே உங்களுக்காக காத்திருக்கிறார், உள்ளே போங்க. 288 00:19:22,663 --> 00:19:23,705 நன்றி. 289 00:19:24,540 --> 00:19:26,333 மதியம்... 290 00:19:27,376 --> 00:19:28,293 என்ன? 291 00:19:30,754 --> 00:19:33,090 அமீர் போர்மாண்ட். 292 00:19:34,800 --> 00:19:36,885 அவரை நேரில் தொடர்பு கொள்ளுமாறு கூறினார். 293 00:19:38,387 --> 00:19:39,429 வேறு என்ன? 294 00:19:39,513 --> 00:19:42,891 ஒன்றும் இல்லை. அந்த வீடு காலியாகவும், இருள் சூழ்ந்தும் இருந்தது. 295 00:19:45,853 --> 00:19:48,105 சரி. கவனத்துடன் பதுங்கியிருங்க. 296 00:19:51,275 --> 00:19:54,528 அரிஸோ மற்றும் டாரியுஷ் பற்றி ஏதேனும் தகவல் இருக்கா? அவர்களை கண்டுபிடித்தீர்களா? 297 00:19:54,611 --> 00:19:57,114 இல்லை, ஆனால் சீக்கிரம் கண்டுபிடித்து விடுவோம். 298 00:19:58,031 --> 00:19:59,449 இன்று அதை கண்டுபிடித்துவிடுவேன். 299 00:20:01,159 --> 00:20:02,202 நன்றி. 300 00:20:04,496 --> 00:20:05,706 திருமதி. சொல்தானி. 301 00:20:06,498 --> 00:20:08,208 -பயணம் இனிதாக அமையட்டும். -நன்றி. 302 00:20:08,292 --> 00:20:09,835 இதோ, மேடம். 303 00:20:13,005 --> 00:20:14,715 நன்றி, திரு. தப்ரிஸி. 304 00:20:14,798 --> 00:20:16,133 -பரவாயில்லை. -குட் பை. 305 00:20:16,216 --> 00:20:18,218 -குட் பை. பயணம் இனிதாக அமையட்டும். -நன்றி. 306 00:20:26,768 --> 00:20:32,232 "அமீர் போர்மாண்ட்" 307 00:20:33,859 --> 00:20:35,277 வீட்டை கண்பிடித்துவிட்டீர்களா? 308 00:20:35,360 --> 00:20:36,320 இன்னும் இல்லை. 309 00:20:36,403 --> 00:20:40,115 பிரின்ஸஸை வேறு யாரோ தேடுகிறார்கள் என உங்களுக்கு தெரியப்படுத்த நினைத்தேன். 310 00:21:00,677 --> 00:21:03,722 ஃபராஸ் கமலியின் பல பெயர்களில் அது ஒன்று. 311 00:21:03,805 --> 00:21:05,474 நான் உங்களுக்கு புகைப்படம் அனுப்புகிறேன். 312 00:21:16,944 --> 00:21:19,321 அவர் கெய்சர் வீட்டிற்கு இன்று வந்திருந்தார். 313 00:21:19,780 --> 00:21:21,990 அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை செய்தார். 314 00:21:22,074 --> 00:21:24,826 நேற்றிரவு, அவர் பிரின்ஸஸை துரத்தி கொண்டு சென்றதையும் நான் பார்த்தேன். 315 00:21:24,910 --> 00:21:26,036 சரி. 316 00:21:26,119 --> 00:21:27,454 நாங்கள் அதை பார்த்துக் கொள்கிறோம். 317 00:21:27,538 --> 00:21:32,543 கேளுங்க, நான் பல்கலைக்கழகம் அருகேயுள்ள, ஆயகூறுகளை அனுப்புகிறேன். 318 00:21:32,626 --> 00:21:34,795 மதியம் 1:00 மணிக்கு பிரின்ஸஸ் அங்கே வருவாள். 319 00:21:34,878 --> 00:21:39,424 பாதுகாப்பாக இடத்திற்கு அவளை அழைத்துச் செல்ல நீங்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம். 320 00:21:40,050 --> 00:21:41,009 புரிந்தது. 321 00:21:42,427 --> 00:21:43,595 குட் பை. 322 00:21:54,773 --> 00:21:55,858 வணக்கம். 323 00:21:55,941 --> 00:21:57,025 காலை வணக்கம். 324 00:21:59,361 --> 00:22:00,571 அது என்னுடைய ஆடைகளா? 325 00:22:02,155 --> 00:22:04,491 உன் அம்மா தான் எனக்கு தந்தாங்க, நன்றி. 326 00:22:04,950 --> 00:22:06,410 அவங்க முதலில் என்னிடம் கேட்டிருக்கலாம். 327 00:22:10,539 --> 00:22:11,957 "எனக்கு என் ஹிஜாப் பிடிக்கும்" 328 00:22:13,375 --> 00:22:15,669 என்ன இது? எதாவது போராட்டம் நடக்கிறதா? 329 00:22:15,752 --> 00:22:17,880 ஆமாம். இன்று. 330 00:22:18,797 --> 00:22:20,966 அடக்கமற்ற ஆடைகளுக்கு எதிராக பல்கலைக்கழகத்தில். 331 00:22:21,633 --> 00:22:23,886 எல்லா அராஜகவாதிகளுக்கும் எதிராக. 332 00:22:27,181 --> 00:22:30,475 நீங்களும் வருகிறீர்களா? மாணவர்கள் பாசிஜில் நானும் ஒருத்தி. 333 00:22:30,976 --> 00:22:32,936 எங்களுக்கு நிறைய ஆட்கள் வேண்டும். 334 00:22:33,020 --> 00:22:36,607 தொல்லை தருபவர்களை நாம் சும்மா விடக் கூடாது. 335 00:22:36,690 --> 00:22:40,235 எனக்கு போராட்டங்கள் என்றாலே சிரமம் தான். நிறைய மனிதர்கள் இருப்பார்கள். 336 00:22:40,777 --> 00:22:42,237 -காலை வணக்கம். -காலை வணக்கம். 337 00:22:43,155 --> 00:22:45,616 சமையலறையில் எனக்கு உதவுகிறாயா? 338 00:22:46,325 --> 00:22:47,159 கண்டிப்பாக. 339 00:22:48,577 --> 00:22:49,786 உங்களுக்கு என் உதவியும் தேவையா? 340 00:22:49,870 --> 00:22:52,331 இல்லை, பரவாயில்லை. தயாரானதும் நான் உன்னை அழைக்கிறேன். 341 00:22:55,751 --> 00:22:57,461 போராட்டத்திற்கு என் வாழ்த்துக்கள். 342 00:23:03,717 --> 00:23:07,679 ராசியாவை நினைத்து நான் வருந்துகிறேன். 343 00:23:08,805 --> 00:23:11,517 முஸ்லிம் மாணவர்களோடு சேர்ந்து இந்த முட்டாள் தனத்தில் 344 00:23:11,600 --> 00:23:14,686 அவள் எப்படி நுழைந்தாள் என எனக்குத் தெரியவில்லை. 345 00:23:14,770 --> 00:23:15,771 இதுவும் கடந்து போகும். 346 00:23:16,855 --> 00:23:18,023 இது வயசுக் கோளாறு. 347 00:23:19,775 --> 00:23:20,984 நான் உங்களுக்கு உதவுகிறேன். 348 00:23:21,068 --> 00:23:23,278 இல்லை, எனக்கு எந்த உதவியும் வேண்டாம். 349 00:23:24,363 --> 00:23:25,614 தயவு செய்து. 350 00:23:26,406 --> 00:23:28,534 என்னை விருந்தினர் போல் உணர வைக்காதீர்கள். 351 00:23:29,493 --> 00:23:31,119 சரி, நான் செய்து காட்டுகிறேன். 352 00:23:33,664 --> 00:23:34,498 எனக்கு செய்ய தெரியும். 353 00:23:35,541 --> 00:23:36,834 சரி செய். 354 00:23:47,511 --> 00:23:50,764 ஆஹா. அற்புதம். நன்றாக செய்திருக்கிறாய். 355 00:23:54,977 --> 00:23:55,853 அப்புறம்... 356 00:23:56,603 --> 00:23:58,397 நீ இன்று கிளம்புகிறாய், அல்லவா? 357 00:23:58,981 --> 00:24:00,148 ஆமாம். 358 00:24:00,899 --> 00:24:02,776 நான் உறுதியளித்தது போலவே. 359 00:24:04,862 --> 00:24:08,991 சிறிது நேரத்தில் நான் போய், மாலை திரும்பி வந்து என் பொருட்களை எடுத்து கொள்கிறேன். 360 00:24:11,243 --> 00:24:12,077 கேள்... 361 00:24:13,078 --> 00:24:15,497 மற்றுமொரு இரவு நீ தங்க வேண்டும் என்றால்... 362 00:24:17,583 --> 00:24:18,750 மிக்க நன்றி, சித்தி. 363 00:24:20,669 --> 00:24:22,337 நான் பார்த்துக் கொள்வேன். 364 00:24:43,609 --> 00:24:45,777 ஹலோ, எப்படி இருக்கிறாய்? 365 00:24:46,403 --> 00:24:48,030 -எப்படி போகுது? -ஹாய், எப்படி இருக்க? 366 00:24:50,365 --> 00:24:53,619 -மற்றவர்கள் எப்போது வருவார்கள்? -தெரியவில்லை. தாமதமாக வருவார்கள். 367 00:24:54,077 --> 00:24:55,329 அழகான உடை! 368 00:25:16,934 --> 00:25:17,976 சிக்-பாய்? 369 00:25:21,563 --> 00:25:22,439 ஷக்கீரா. 370 00:25:24,399 --> 00:25:26,151 ஆமாம், சஹாரா. 371 00:25:28,904 --> 00:25:30,822 கடைசியில் உன்னை நேரில் சந்திப்பதில் மகிழ்ச்சி. 372 00:25:32,449 --> 00:25:33,325 எனக்கும் தான். 373 00:25:35,035 --> 00:25:38,247 நீ வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. இனிமேல் இது மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. 374 00:25:40,123 --> 00:25:42,960 சரி, என்ன நடக்கிறது? 375 00:25:43,460 --> 00:25:44,461 ஒப்பந்தம் இருக்கிறதா? 376 00:25:44,545 --> 00:25:45,587 ஆமாம். 377 00:25:46,088 --> 00:25:48,298 நீ எனக்கு ஒன்று செய்தால், நான் உனக்கு ஒன்று செய்வேன். 378 00:25:50,259 --> 00:25:51,260 வா. 379 00:25:56,014 --> 00:26:00,018 சரி, இந்த பகுதியில் உள்ள கேமராக்களுக்கான நகரின் கட்டுப்பாட்டு அமைப்பு இதுதான். 380 00:26:00,102 --> 00:26:01,812 நான் அதை கட்டுப்படுத்தி, செயலிழக்க செய்யணும், 381 00:26:01,895 --> 00:26:04,314 இல்லையென்றால் இங்கிருக்கும் பாதிப்பேர் நாளை கைது செய்யப்படுவார்கள். 382 00:26:04,773 --> 00:26:08,235 ஏதோ ஒரு காரணித்திற்காக நான் ஊடுருவ முடியாத ஒரு மென்பொருள் இது, அதனால்... 383 00:26:08,318 --> 00:26:10,487 -உன்னிடம் ஒப்படைக்கிறேன். -சரி, நான் பார்க்கிறேன். 384 00:26:31,300 --> 00:26:33,343 கடுமையான போக்குவரத்து நெரிசல் வரப் போகிறது. 385 00:26:33,927 --> 00:26:34,928 எவ்வளவு நேரமாகும்? 386 00:26:36,054 --> 00:26:38,640 பத்து நிமிடம், ஆனால் உத்தேசமான நேரம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 387 00:26:39,474 --> 00:26:40,893 கடுமையான போக்குவரத்து நெரிசல் வரப்போகிறது. 388 00:26:40,976 --> 00:26:42,436 இது மோசம். 389 00:26:42,895 --> 00:26:43,729 ஹலோ. 390 00:26:43,812 --> 00:26:45,355 போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டுள்ளோம். 391 00:26:45,439 --> 00:26:48,150 நமது இலக்கு மாணவர் போராட்டத்தை நோக்கி செல்கிறார். 392 00:26:48,233 --> 00:26:49,568 அவரைத் தவறவிட்டு விடாதீர்கள். 393 00:26:49,651 --> 00:26:52,404 அவர் அந்த ஏஜென்டை சந்திக்கலாம். 394 00:26:52,487 --> 00:26:54,948 கவலைப்படாதீர்கள். நாங்கள் அனைவரும் அவரைக் கண்காணிக்கிறோம். 395 00:26:55,032 --> 00:26:56,074 நல்லது. 396 00:26:56,158 --> 00:26:57,075 நான் அவரை கண்காணிக்கிறேன், பாஸ். 397 00:26:57,159 --> 00:26:57,993 நன்றி. 398 00:27:16,970 --> 00:27:18,472 ஐயோ! 399 00:27:18,972 --> 00:27:21,141 ஹே, அவ்வளவுதான். இது வேலை செய்கிறது. 400 00:27:21,475 --> 00:27:24,061 நான் போக்குவரத்து சமிக்ஞை அமைப்பிலும் நுழைந்துவிட்டேன். 401 00:27:24,144 --> 00:27:25,604 அவற்றையும் செயலிழக்க செய்கிறேன். 402 00:27:25,687 --> 00:27:26,980 இது உனக்கான வெகுமதி. 403 00:27:28,857 --> 00:27:29,775 ஹலோ. 404 00:27:29,858 --> 00:27:32,861 பல்கழைக்கழகத்தைச் சுற்றி இருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யவில்லை. 405 00:27:33,278 --> 00:27:34,696 அதை உடனே கவனியுங்கள். 406 00:27:37,032 --> 00:27:37,991 அற்புதம். 407 00:27:39,076 --> 00:27:40,786 ஷாஹின், கரிம்! 408 00:27:40,869 --> 00:27:42,037 எல்லாம் தயார், நண்பா. 409 00:27:42,120 --> 00:27:42,996 -தயாரா? -தயார். 410 00:27:43,080 --> 00:27:44,039 நீதான் சிறந்தவன். 411 00:27:44,122 --> 00:27:46,667 வாருங்கள், மக்களே, வாருங்கள். எனக்கு உன் உதவி தேவை. 412 00:27:48,919 --> 00:27:51,046 பார்விஸ் ஒரு வாரத்திற்கு முன் கைது செய்யப்பட்டார். 413 00:27:51,129 --> 00:27:52,589 சரி, சரி. 414 00:27:52,673 --> 00:27:55,634 அப்புறம் பெகாஹ்விற்கு ஆறு வருடங்கள் சிறை தண்டனை கிடைத்தது. 415 00:27:56,051 --> 00:27:57,469 ஆறு வருடங்கள்! 416 00:27:58,637 --> 00:28:01,473 இந்த ஆட்சி நாடு முழுவதையும் சீரழிக்கிறது. 417 00:28:01,557 --> 00:28:03,767 போதும்! 418 00:28:03,851 --> 00:28:06,895 நம்மிடத்தில் பணமுமில்லை, வேலையுமில்லை. 419 00:28:06,979 --> 00:28:10,941 எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது, ஆனால் அவர்களுக்கு நாம் எவ்வளவு கண்ணியமாக 420 00:28:11,024 --> 00:28:13,485 உடையணிகிறோம் என்று பார்க்க ஆட்கள் வேண்டுமாம். 421 00:28:13,569 --> 00:28:15,487 அட! 422 00:28:15,571 --> 00:28:18,448 உலகம் நமக்கானது, நடந்ததெல்லாம் போதும்! 423 00:28:18,532 --> 00:28:19,366 போதும்! 424 00:28:19,449 --> 00:28:22,035 இது அன்பின் உலகம், சுதந்திரத்தின் உலகம்! 425 00:28:22,119 --> 00:28:24,830 சுதந்திரம்! அன்பு! சுதந்திரமும் அன்பும்! 426 00:28:26,748 --> 00:28:27,666 உன்னை நேசிக்கிறோம், கரிம். 427 00:28:27,749 --> 00:28:30,127 நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை அவர்களுக்கு காண்பிப்போம். 428 00:28:30,878 --> 00:28:34,089 கை கோர்த்து. குழுக்களாக ஒன்றாக இணைந்து. 429 00:28:34,173 --> 00:28:36,300 அடக்குமுறைக்கு எதிராக, பொய்களுக்கு எதிராக, 430 00:28:36,383 --> 00:28:38,969 சீரழிவிற்கு எதிராக, பாகுபாட்டிற்கு எதிராக, 431 00:28:39,052 --> 00:28:40,971 இவையனைத்திற்கும் எதிராக ஒன்றாய் நிற்போம். 432 00:28:41,054 --> 00:28:43,056 அது சரிதான்! 433 00:28:43,140 --> 00:28:44,558 நாம் அவர்களுக்கு காட்டுவோம்! 434 00:28:46,018 --> 00:28:52,024 எண்ணங்களின் சுதந்திரம் எங்களது அடிப்படை உரிமை... 435 00:28:52,107 --> 00:28:52,941 ஹே! 436 00:28:56,028 --> 00:28:58,572 -அப்போது, நான் இங்கேயே இருக்கிறேன். -என்ன? 437 00:28:58,989 --> 00:28:59,990 கவலைப்படாதே, நாம போகலாம். 438 00:29:00,073 --> 00:29:01,575 இல்லை. நாம் கைது செய்யப்படலாம். 439 00:29:02,201 --> 00:29:04,786 உண்மையாகவே வீட்டிற்கு போகணுமா? இது எவ்வளவு சிறந்தது என பார்க்க வேண்டாமா? 440 00:29:05,996 --> 00:29:07,247 இதற்கு பிறகு உன்னை எங்கே சந்திப்பது? 441 00:29:08,540 --> 00:29:09,458 இல்லை. 442 00:29:09,541 --> 00:29:11,460 வா, ஷக்கீரா, பயப்படாதே. நான் இருக்கிறேன். 443 00:29:12,669 --> 00:29:18,675 எண்ணங்களின் சுதந்திரம் எங்களது அடிப்படை உரிமை... 444 00:29:24,056 --> 00:29:28,060 எண்ணங்களின் சுதந்திரம் நமது அடிப்படை உரிமை... 445 00:29:28,143 --> 00:29:32,105 எண்ணங்களின் சுதந்திரம் நமது அடிப்படை உரிமை... 446 00:29:32,189 --> 00:29:36,151 எண்ணங்களின் சுதந்திரம் நமது அடிப்படை உரிமை... 447 00:29:36,235 --> 00:29:40,113 எண்ணங்களின் சுதந்திரம் நமது அடிப்படை உரிமை... 448 00:29:40,197 --> 00:29:43,742 எண்ணங்களின் சுதந்திரம் நமது அடிப்படை உரிமை... 449 00:29:43,825 --> 00:29:46,328 இங்கேயே இருந்து, என்னோடு தொலைபேசியில் தொடர்பில் இரு. 450 00:30:07,432 --> 00:30:09,268 சகோதர, சகோதரிகளே. 451 00:30:10,102 --> 00:30:14,731 நாம் அராஜகவாதிகள், நம்பிக்கையற்றவர்கள், 452 00:30:14,815 --> 00:30:18,360 துரோகிகள் மற்றும் புது பணக்கார குடிகாரர்கள் ஆகியோரை 453 00:30:18,443 --> 00:30:20,529 நமது பல்கலைக்கழகத்திற்குள் வர அனுமதிக்கக் கூடாது. 454 00:30:22,281 --> 00:30:26,243 அவர்கள் நம் பல்கலைக்கழகத்தை முதலாளிகளின் கழிவறையாக மாற்ற நினைக்கின்றனர். 455 00:30:27,744 --> 00:30:31,123 அவர்கள் அந்த பெருஞ் சாத்தானுக்கும் குட்டிச் சாத்தானுக்கும் சேவை செய்கின்றனர். 456 00:30:31,206 --> 00:30:33,417 அமெரிக்கர்களும், ஸயனிஸ்டுகளும். 457 00:30:33,500 --> 00:30:37,379 பாசிஜ் ஒழிக! 458 00:30:37,462 --> 00:30:42,009 அவர்களை எதிர்த்து டெஹ்ரானின் புனித சாலைகளை அவர்கள் களங்கப்படுத்தாமல் தடுப்போம். 459 00:30:43,302 --> 00:30:48,098 பெண்கள் ஹிஜாப் இல்லாமல் பல்கலைக்கழகத்தில் இருக்க நாம் அனுமதிக்க கூடாது. 460 00:30:53,478 --> 00:30:55,022 பாசிஜ் ஒழிக! 461 00:30:55,105 --> 00:30:58,150 நம் புரட்சியை துரோகிகள் திருட அனுமதிக்க மாட்டோம். 462 00:30:58,233 --> 00:31:00,736 -அல்லாஹு அக்பர்! -பாசிஜ் ஒழிக! 463 00:31:00,819 --> 00:31:02,237 அல்லாஹு அக்பர்! 464 00:31:07,826 --> 00:31:11,705 பெண்கள் கடவுளால் படைக்கபட்டவர்கள், ஆனால் ஒளிந்திருக்க அல்ல. 465 00:31:12,915 --> 00:31:16,668 நாங்கள் இங்கு ஹிஜாபிற்காக மட்டும் இல்லை. 466 00:31:16,752 --> 00:31:18,670 இங்கே இன்னும் பெரிய பிரச்சினைகள் உள்ளன. 467 00:31:18,754 --> 00:31:22,716 வேலையின்மை, நேரத்திற்கு சம்பளம் கிடைக்கப்பெறாத பணியாளர்களுக்காக, 468 00:31:22,799 --> 00:31:24,760 சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்களுக்காக. 469 00:31:28,055 --> 00:31:31,975 காமேனி எதிரிகளுக்கு எதிராக ஜிஹாத் செய்ய சொல்லியிருந்தால், அவர்கள் அவ்வளவுதான். 470 00:31:32,059 --> 00:31:36,230 அல்லாஹு அக்பர்! 471 00:31:36,313 --> 00:31:38,941 சீர்த்திருத்தவாதிகளே, பழமைவாதிகளே, உங்கள் கதை முடிந்தது! 472 00:31:39,024 --> 00:31:42,402 உங்க கதை முடிந்தது, சீர்த்திருத்தவாதிகளே, பழமைவாதிகளே! 473 00:31:43,362 --> 00:31:46,782 காமேனிதான் எங்க தலைவர், அவர்தான் நபிகளின் வாரிசு. 474 00:31:47,115 --> 00:31:49,159 நீங்கள் வாக்குக் கொடுத்த எண்ணை நிதி எங்கே? 475 00:31:49,243 --> 00:31:52,579 இலவச தண்ணீரும் மின்சாரமும் எங்கே? நீங்கள் வாக்குக்கொடுத்த எண்ணை நிதி எங்கே? 476 00:31:52,663 --> 00:31:56,250 அராஜகவாதிகளே, துரோகிகளே உங்க பொந்துகளுக்குள் திரும்பி செல்லுங்கள்! 477 00:31:58,669 --> 00:32:02,297 ஒரு மாணவன் அவமானப்படுவதற்கு பதிலாக சாவை ஏற்றுக் கொள்வான்! 478 00:32:02,381 --> 00:32:06,051 ஒரு மாணவன் அவமானப்படுவதற்கு பதிலாக சாவை ஏற்றுக்கொள்வான்! 479 00:32:09,221 --> 00:32:11,265 துரோகி, கீழே இறங்கு! கீழே இறங்கு! 480 00:33:31,136 --> 00:33:33,931 துரோகிகளே! நம்பிக்கையற்றவர்களே! 481 00:33:55,285 --> 00:33:57,913 மன்னிச்சிடுங்க, சார். மன்னிச்சிடுங்க. நீங்கள் நலம் தானே? 482 00:33:57,996 --> 00:34:01,875 -மன்னிச்சிடுங்க! -என் மேலிருந்து இறங்குங்க, ஐயோ! 483 00:34:03,085 --> 00:34:04,878 ஐயோ கடவுளே! நீங்கள் என்ன குருடா? 484 00:34:06,255 --> 00:34:07,172 மன்னிச்சிடுங்க. 485 00:34:07,256 --> 00:34:08,382 உங்களுக்கான நேரம் வரும். 486 00:34:17,516 --> 00:34:18,641 அம்மா. 487 00:34:18,725 --> 00:34:19,726 அம்மா! 488 00:34:20,226 --> 00:34:21,311 என்ன விஷயம்? 489 00:34:21,395 --> 00:34:25,190 அந்த நயவஞ்சகியை வெளியே அனுப்பணும்! இன்றே! நான் சொல்வது கேட்கிறதா? 490 00:34:25,274 --> 00:34:26,942 -என்னவாயிற்று? -என்னை நச்சரிக்காதீர்கள்! 491 00:34:27,025 --> 00:34:28,443 நான் உன்னிடம்தான் பேசுகிறேன்! 492 00:34:28,527 --> 00:34:31,029 போராட்டத்தில் அவள் இருந்தாள். சதிகாரர்களுக்கு ஆதரவாக! 493 00:34:31,112 --> 00:34:32,155 அவள் ஒரு துரோகி! 494 00:34:32,531 --> 00:34:33,907 வார்த்தையை விடாதே! 495 00:34:34,699 --> 00:34:35,993 என்ன நடக்கிறது? 496 00:34:36,534 --> 00:34:37,452 அப்பா. 497 00:34:38,536 --> 00:34:39,371 நான் பார்க்கிறேன். 498 00:34:39,454 --> 00:34:41,581 பல்கலைக்கழகத்தில் நடந்த கலவரத்தில் சஹாராவைப் பார்த்திருக்கிறாள். 499 00:34:41,665 --> 00:34:43,083 அவளுக்கு அங்கு என்ன வேலை? 500 00:34:43,750 --> 00:34:45,960 -எனக்குத் தெரியாது. -உங்களுக்கு நன்றாக தெரியும்! 501 00:34:46,335 --> 00:34:48,422 அவள் கருத்து வேறுபாடு உடையவள் என உங்களுக்கு தெரியும்! 502 00:34:49,130 --> 00:34:50,632 நான் பார்க்கிறேன். 503 00:34:54,928 --> 00:34:58,182 நீ பைத்தியமாகிவிட்டாய்! உனக்கு மூளை குழம்பிவிட்டது! 504 00:34:58,974 --> 00:35:02,227 நீ என்ன நினைத்தாய்? அவள் ஒரு இஸ்ரேலி! 505 00:35:02,978 --> 00:35:04,813 மொசாட் பற்றி நீ கேள்விப்பட்டதில்லையா? 506 00:35:05,230 --> 00:35:07,649 அவள் நம்மை ஆபத்தில் நிறுத்த மாட்டாள், எனக்குத் தெரியும். 507 00:35:07,733 --> 00:35:10,485 அவள் இங்கே மறைந்திருப்பதே நமக்கு ஆபத்து தான்! 508 00:35:10,986 --> 00:35:15,574 அவள் இங்கே இருப்பது யாருக்காவது தெரிந்தால் என் வேலைக்கு பிரச்சினையாகும் என தெரியுமா? 509 00:35:24,541 --> 00:35:26,710 நம் குடும்பத்தைவிட உனக்கு அவள் முக்கியமாகிவிட்டாள். 510 00:35:27,336 --> 00:35:28,295 அதுதான் இதற்கு அர்த்தம். 511 00:35:29,505 --> 00:35:33,550 அவர்கள் வெளியேறிய போது, அவர்களோடு இனி எந்த தொடர்பும் இருக்காது என உறுதியளித்தாய். 512 00:35:33,634 --> 00:35:36,011 -நான் அதை செய்தேன். -அப்போ அவள் எப்படி நம்மை கண்டுபிடித்தாள்? 513 00:35:36,094 --> 00:35:37,471 சத்தியமாக, எனக்குத் தெரியாது. 514 00:35:39,139 --> 00:35:41,433 இனி ஒரு நிமிடம்கூட அவள் இங்கிருக்கக்கூடாது! 515 00:35:41,517 --> 00:35:42,809 ஒரு நிமிடம்கூட! 516 00:36:00,369 --> 00:36:01,870 நான் அவனை இடித்ததும் கீழே விழுந்துவிட்டான். 517 00:36:05,582 --> 00:36:08,418 நாம் கம்பால் தாக்கிய அந்த கொழுத்த பாசிஜ் ஆளை பார்த்தீர்களா? 518 00:36:08,502 --> 00:36:10,045 நல்லது. 519 00:36:10,128 --> 00:36:14,049 -"அடங்கி இரு, பாசிஜ் முட்டாளே" என்றேன். -நான் அவனை இன்னும் கொஞ்சம் அடித்தேன். 520 00:36:14,550 --> 00:36:16,009 அவனுக்கு வாய்ப்பே இல்லை. 521 00:36:23,433 --> 00:36:25,853 "சகோதர, சகோதரிகளே... 522 00:36:26,937 --> 00:36:32,734 டெஹ்ரானின் சுத்தமான வீதிகள் அழுக்காக நாம் அனுமதிக்க கூடாது." 523 00:36:32,818 --> 00:36:35,112 வாங்க, போகலாம்! 524 00:36:36,488 --> 00:36:38,824 மாடிக்குச் சென்று, அவர்களிடம் சத்ததைக் குறைக்க சொல். 525 00:36:38,907 --> 00:36:40,367 நன்றி. 526 00:36:46,582 --> 00:36:47,958 இது என்ன இடம்? 527 00:36:49,668 --> 00:36:54,548 தொடக்கத்தில் கலைஞர்களின் மன்றமாக இருந்தது, இப்போது எல்லோரும் இங்கே வாழ்கிறார்கள். 528 00:36:54,631 --> 00:36:57,217 ஆனால் சிறப்பானவை. பார், விருந்துகள், நேரடி நிகழ்ச்சிகள் நடக்கும். 529 00:36:57,301 --> 00:36:59,261 அங்கே, அதுதான் என்னுடைய அறை. 530 00:37:00,596 --> 00:37:01,430 வா. 531 00:37:31,627 --> 00:37:33,170 உன் ஆரோக்கியத்திற்காக! 532 00:37:33,712 --> 00:37:35,506 -எனக்கு வேண்டாம். -அட, குடி... 533 00:37:37,299 --> 00:37:39,176 எனக்கு இன்று நீதான் சிறப்பு விருந்தினர். 534 00:37:39,510 --> 00:37:42,346 அந்த கேமராக்கள் விஷயம், எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. 535 00:37:45,807 --> 00:37:48,018 -சியர்ஸ். -உன் ஆரோக்கியதிற்காக. 536 00:37:51,647 --> 00:37:53,899 இது குமட்டாது, பின்விளைவு ஏற்படுத்தாது என நம்புகிறேன். 537 00:37:55,317 --> 00:37:58,362 மிலாத், நண்பா! 538 00:38:01,281 --> 00:38:02,533 நடனமாடுவோம். 539 00:38:02,616 --> 00:38:03,992 -வேண்டாம். -வா. 540 00:38:04,076 --> 00:38:05,744 -இல்லை, இல்லை, வேண்டாம்... -வா. 541 00:38:06,370 --> 00:38:07,663 நான் கிளம்ப வேண்டும். 542 00:38:08,956 --> 00:38:09,915 எங்கே போகிறாய்? 543 00:38:09,998 --> 00:38:10,999 நாளை சந்திக்கலாம். 544 00:38:11,375 --> 00:38:12,626 நாளையா? 545 00:38:12,709 --> 00:38:13,919 ஏன்? 546 00:38:14,419 --> 00:38:16,255 இப்போது நீ உதவி செய்ய வேண்டிய தருணம். 547 00:38:17,422 --> 00:38:18,549 அப்படியா? 548 00:38:21,260 --> 00:38:22,970 எனக்கு பாஸ்போர்ட் வாங்கி தர உறுதியளித்துள்ளாய். 549 00:38:25,681 --> 00:38:26,807 புரிகிறது. 550 00:38:31,979 --> 00:38:33,105 சரி. 551 00:38:46,994 --> 00:38:48,537 இப்படித்தான் அவள் மறைவாக இருக்கிறாளா? 552 00:38:48,620 --> 00:38:50,873 காவலர் எதிரிலேயே மாணவர் போராட்டமா? 553 00:38:51,206 --> 00:38:53,959 அவளிடமிருந்து அவன் ஒரு மீட்டர் தொலைவில்தான் இருந்தான்! ஒரு மீட்டர்தான்! 554 00:38:54,042 --> 00:38:55,878 -தப்ரிஸி. -அவளால் நான் நிறைய அனுபவித்துவிட்டேன்! 555 00:38:55,961 --> 00:38:57,754 அவள் பொறுப்பற்றவள்! 556 00:38:57,838 --> 00:38:59,173 முதலில் அவள் என்னை விட்டு ஓடினாள், 557 00:38:59,256 --> 00:39:01,842 பின்னர் அவள் இருப்பதிலேயே மோசமான ஒரு இடத்தில் இருக்கிறாள்! 558 00:39:01,925 --> 00:39:03,177 மோசமான இடம்! 559 00:39:03,260 --> 00:39:05,637 நான் அங்கு இல்லாதிருந்தால் அவளுக்கு என்ன நேர்ந்திருக்கும்? 560 00:39:05,721 --> 00:39:07,222 சொல்லுங்கள், கோரேவ். 561 00:39:07,306 --> 00:39:09,141 அவள் அங்கே என்ன தேடிக் கொண்டிருந்தாள்? 562 00:39:09,224 --> 00:39:10,559 இப்போது அது முக்கியமில்லை. 563 00:39:10,642 --> 00:39:13,937 இதை நான் மிகவும் முக்கியமாக கேட்கிறேன், மசூத். 564 00:39:14,771 --> 00:39:18,066 ஃபராஸின் ஆட்கள் அங்கு உன்னைத் தேடி வந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா? 565 00:39:19,193 --> 00:39:20,736 உன்னைப் பின்தொடர்ந்தனரா? 566 00:39:21,945 --> 00:39:23,197 எதனால் அப்படி நினைக்கிறீர்கள்? 567 00:39:23,280 --> 00:39:26,617 மின் நிலையம் மற்றும் அபார்ட்மெண்ட் ஆகிய இரு இடங்களிலும் நீதான் இருந்தாய். 568 00:39:28,911 --> 00:39:30,412 எனக்குத் தெரியாது. அது... 569 00:39:30,829 --> 00:39:31,788 அதற்கு வாய்ப்பிருக்கு. 570 00:39:33,790 --> 00:39:36,376 அந்த சித்தி விஷயம் என்னவாயிற்று? முகவரி கிடைத்ததா? 571 00:39:38,003 --> 00:39:39,046 கிடைத்தது. 572 00:39:39,588 --> 00:39:42,132 அவர்களைக் கண்டுபிடித்துவிட்டோம். எங்களிடம் முகவரி இருக்கிறது. 573 00:39:42,216 --> 00:39:45,344 அப்போ, இன்றிரவு உன் ஆட்களுடன் அங்கிருந்து அவளை வெளியே அழைத்துச் செல்ல வேண்டும்! 574 00:39:47,012 --> 00:39:49,806 ஆனால் அவர்கள் உன்னை பின்தொடரக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள், சரியா? 575 00:39:49,890 --> 00:39:52,059 நான் எப்போதும் அதை கவனத்தில் வைத்துக் கொள்கிறேன். 576 00:39:52,476 --> 00:39:53,519 நான் உன்னை நம்புகிறேன். 577 00:40:05,739 --> 00:40:06,698 உள்ளே வா. 578 00:40:17,876 --> 00:40:19,294 நீ என்ன நினைத்துக் கொண்டிருந்தாய்? 579 00:40:19,378 --> 00:40:20,963 நீ கைது செய்யப்பட்டிருந்தால்? 580 00:40:21,922 --> 00:40:23,131 நீ எங்கிருந்திருப்பாய்? 581 00:40:23,715 --> 00:40:25,843 என் குடும்பத்திற்கு என்ன நடந்திருக்கும்? 582 00:40:25,926 --> 00:40:28,512 என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம், 583 00:40:28,595 --> 00:40:30,639 ஒருபோதும் உங்க குடும்பத்தை ஆபத்தில் சிக்க வைக்க மாட்டேன். 584 00:40:30,722 --> 00:40:33,016 என்னுடைய குடும்பம் ஏற்கனவே ஆபத்தில் தான் இருக்கு. 585 00:40:40,482 --> 00:40:41,775 நான் இப்போதே கிளம்புகிறேன். 586 00:40:45,779 --> 00:40:47,114 மன்னித்துவிடுங்கள். 587 00:40:48,490 --> 00:40:49,825 நான் ரொம்ப வருந்துகிறேன். 588 00:40:51,368 --> 00:40:53,996 நான் இங்கு வந்திருக்கவே கூடாது. 589 00:40:59,710 --> 00:41:01,044 நீ வந்தது நல்லதுதான். 590 00:41:03,338 --> 00:41:04,965 அதுதான் விதி. 591 00:41:05,549 --> 00:41:07,759 என் சகோதரி தான் உன்னை என்னிடம் அனுப்பினாள். 592 00:41:11,722 --> 00:41:15,684 நிச்சயம் எனக்காக நீங்க செய்த பெரும் தியாகத்தை அவங்க பார்த்திருப்பாங்க. 593 00:41:29,907 --> 00:41:34,161 அவங்களோடும் குடும்பத்தோடும் இஸ்ரேலுக்கு போகாதது பற்றி நீங்கள் வருத்தப்பட்டதுண்டா? 594 00:41:36,163 --> 00:41:38,665 என் அப்பா, உன் தாத்தா... 595 00:41:39,666 --> 00:41:42,336 அவர் எப்போதும் ஒரு விஷயத்தை சொல்லிக் கொண்டிருப்பார். 596 00:41:42,419 --> 00:41:45,839 "ஒரு கண் ஜெருசலேமையும், இன்னொரு கண் இஸ்ஃபஹானையும் பார்க்கிறது." 597 00:41:48,634 --> 00:41:51,386 ஒரு கண்ணை மூட, நான் முடிவு செய்தேன். 598 00:42:03,565 --> 00:42:04,858 இந்தப் பக்கமாக போ. 599 00:42:14,159 --> 00:42:15,869 கடவுள் உன்னை காப்பாற்றுவார். 600 00:43:17,598 --> 00:43:19,808 மசூத் தப்ரிஸி, கைகளை மேலே உயர்த்தி வெளியே வாருங்கள்! 601 00:43:21,768 --> 00:43:23,061 அல்லது நான் உங்களை கைது செய்யவா? 602 00:43:31,236 --> 00:43:32,404 காரின் மீது கைகளை வையுங்கள். 603 00:43:33,739 --> 00:43:35,032 நீங்களும்தான், வெளியே வாருங்கள்! 604 00:43:47,669 --> 00:43:48,837 அவள் யார்? 605 00:43:49,213 --> 00:43:50,380 என்னுடைய வாடிக்கையாளர். 606 00:43:50,839 --> 00:43:54,092 அவங்க விமான டிக்கெட்டுகளையும் ஹோட்டல் முன்பதிவு ரசீதையும் கொடுக்க இங்கு வந்தேன். 607 00:43:54,176 --> 00:43:56,261 அதைச் செய்ய உங்களிடம் உதவியாளர்கள் இல்லையா? 608 00:43:57,513 --> 00:44:00,724 எனது வாடிக்கையாளர்களுடன் நான் தனிப்பட்ட உறவைப் பேண விரும்புகிறேன். 609 00:44:03,393 --> 00:44:04,520 அவரை கைது செய்யுங்கள். 610 00:44:06,355 --> 00:44:07,272 கைகளை நீட்டுங்க. 611 00:44:08,106 --> 00:44:09,191 சீக்கிரம். 612 00:44:43,517 --> 00:44:44,560 சொல்லுங்கள்... 613 00:44:44,643 --> 00:44:47,229 ஹலோ, மேடம். நீங்கள் டாக்ஸி கேட்டிருந்தீர்களா? 614 00:44:47,312 --> 00:44:50,190 டாக்ஸியா? ஏதோ தவறாக நடந்திருக்கிறது என்று நினைக்கிறேன். 615 00:44:50,274 --> 00:44:52,693 இது நெக்கோமார்ட் குடியிருப்பு தானே? 616 00:44:53,235 --> 00:44:54,069 ஆமாம். 617 00:44:54,653 --> 00:44:56,864 உங்கள் பெயரில் எனக்கு அழைப்பு வந்தது. 618 00:44:56,947 --> 00:44:58,448 ஒருவேளை விருந்தினர் யாராவது அழைத்தனரா? 619 00:44:59,992 --> 00:45:01,368 அவள் போய்விட்டாள். 620 00:45:01,910 --> 00:45:03,287 அவள் இப்போதுதான் சென்றாள். 621 00:45:03,787 --> 00:45:06,415 சரி, நன்றி. இரவு வணக்கம், மேடம். 622 00:46:53,105 --> 00:46:55,107 தமிழாக்கம்: மேனகா மணிகண்டன்