1 00:00:09,301 --> 00:00:12,095 இத்தொடரில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் முற்றிலும் கற்பனையானவை. 2 00:00:12,179 --> 00:00:14,723 உண்மை நிகழ்வுகளோடு அல்லது உயிரோடிருக்கும் அல்லது இறந்த நபர்களோடு ஏதாவது வகையில் 3 00:00:14,806 --> 00:00:15,933 சம்பந்தப்பட்டிருந்தால், அது முற்றிலும் தற்செயலானது. 4 00:00:33,116 --> 00:00:37,788 தமார்! தமார், நான் தான், "ஈகிள்". 5 00:00:41,375 --> 00:00:42,501 நீ நலமா? 6 00:00:51,802 --> 00:00:53,011 இவர் அவளது மேலாளர். 7 00:00:53,637 --> 00:00:55,305 ஆமாம். அவர் என்னை கற்பழிக்க முயன்றார். 8 00:00:55,389 --> 00:00:57,307 அவர் ஜிலாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். 9 00:00:57,391 --> 00:00:59,101 இது எப்படி உங்களுக்கு தெரியாமல் போனது? 10 00:01:00,435 --> 00:01:02,354 யாராவது உங்கள் இருவரையும் பார்த்தார்களா? 11 00:01:02,437 --> 00:01:03,814 இல்லை என்று நினைக்கிறேன். 12 00:01:04,730 --> 00:01:06,775 பரவாயில்லை, இங்கு கேமராக்கள் இல்லை. 13 00:01:17,327 --> 00:01:18,537 தமார், எனக்கு உதவி செய். 14 00:01:19,746 --> 00:01:21,957 தமார், அவர் கால்களைப் பிடி. 15 00:01:30,424 --> 00:01:31,425 இங்கு வா. 16 00:01:43,228 --> 00:01:44,855 -வா. -சரி. 17 00:01:47,232 --> 00:01:48,817 -உனது பையை எடு. -சரி, சரி. 18 00:01:54,615 --> 00:01:55,866 சரி, சரி. 19 00:02:56,635 --> 00:02:59,638 இங்கு யாரும் இல்லை. அதனால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. 20 00:03:00,180 --> 00:03:03,058 எனது ஆட்கள் வருகின்றனர். நாங்கள் இந்த பிணத்தைப் பார்த்துக் கொள்கிறோம். 21 00:03:03,141 --> 00:03:06,395 அவளது நிலை என்ன? அவளால் வேலையை முடிக்க முடியுமா? 22 00:03:12,276 --> 00:03:13,694 சொல்வது கடினம் தான். 23 00:03:14,027 --> 00:03:15,445 நமக்கு எவ்வளவு நேரம் இருக்கு? 24 00:03:15,529 --> 00:03:16,989 ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக. 25 00:03:18,365 --> 00:03:21,994 உங்கள் முடிவு தான், ஆனால் நாம் இப்பொழுது செய்யாவிட்டால், இந்த இடம் பயன்படாது. 26 00:03:22,786 --> 00:03:24,246 நான் அவளிடம் பேசுகிறேன். 27 00:03:25,163 --> 00:03:26,164 சரி. 28 00:03:28,125 --> 00:03:29,501 அவள் உன்னிடம் பேச வேண்டுமாம். 29 00:03:34,381 --> 00:03:35,507 மன்னிச்சிடுங்க. 30 00:03:35,591 --> 00:03:37,759 நீ மன்னிப்பு கேட்க தேவையில்லை, உனக்கு வேறு வழி இல்லை. 31 00:03:37,843 --> 00:03:39,052 என்னால் தப்பிக்க முடியவில்லை. 32 00:03:39,136 --> 00:03:40,345 அது இப்பொழுது முக்கியமல்ல. 33 00:03:41,013 --> 00:03:42,639 இப்போதும், உன்னால் வேலையை முடிக்க முடியுமா? 34 00:03:42,723 --> 00:03:43,724 முடியும். 35 00:03:43,807 --> 00:03:45,100 சரி, கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொள். 36 00:03:49,104 --> 00:03:50,147 என்னால் முடியும். 37 00:03:51,315 --> 00:03:53,066 நமக்கு 50 நிமிடங்களை விட குறைவான நேரம் தான் இருக்கு. 38 00:03:53,150 --> 00:03:54,151 அதுவே அதிக நேரம்தான். 39 00:04:19,760 --> 00:04:21,094 நாம் திட்டத்தை தொடர்கிறோம். 40 00:04:26,558 --> 00:04:28,477 -நீ நலமா? -நலம். 41 00:04:28,560 --> 00:04:29,478 கவனமாக உள்ளாயா? 42 00:04:32,564 --> 00:04:33,690 சரி. 43 00:04:33,774 --> 00:04:37,528 இங்கு நடந்ததை, உன் மனதில் இருந்து அழித்து விடு. 44 00:04:37,611 --> 00:04:39,404 -புரிகிறதா? -சரி. 45 00:04:39,488 --> 00:04:42,991 சரி. நீ செய்ய வேண்டியவற்றிற்கு, உனக்கு 47 நிமிடங்கள் இருக்கிறது, பிறகு 46 00:04:43,617 --> 00:04:45,536 -உன்னை இங்கிருந்து அழைத்து செல்கிறேன். -சரி. 47 00:04:47,120 --> 00:04:49,540 -நாளை மதியம், நீ உன் வீட்டில் இருப்பாய். -சரி. 48 00:04:53,252 --> 00:04:55,212 -என்னுடன் தொடர்பிலேயே இரு. -சரி. 49 00:05:13,063 --> 00:05:15,065 ரஷீத், நீ எங்கு உள்ளாய்? 50 00:05:15,899 --> 00:05:18,110 நாங்கள் மூன்று நிமிடங்களில் அங்கு வருவோம். 51 00:05:45,762 --> 00:05:46,889 ரூட்: கடவுச்சொல்: 52 00:05:51,685 --> 00:05:53,187 இணையத்தில் இணைக்கப்பட்டது 53 00:05:53,854 --> 00:05:56,315 -டெஹ்ரானுடனான தொடர்பு மீட்டெடுக்கப்பட்டது. -நிலை? 54 00:05:56,398 --> 00:05:58,192 ரேடார் அமைப்பு இன்னும் தயாராகவில்லை. 55 00:05:58,275 --> 00:06:01,069 நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு 20 நிமிடங்கள் தான் இருக்கு. உனது முகவரின் நிலை என்ன? 56 00:06:01,528 --> 00:06:06,450 அவள் மேலே சென்று மத்திய முனையத்தில் தொடர்பு கொடுக்க நேரம் ஆகும். 57 00:06:10,412 --> 00:06:14,249 ஹோஷென், புறப்பட 20 நிமிடங்கள் இருக்கு, அனைத்து அமைப்புகளையும் சரி பார். 58 00:07:47,009 --> 00:07:50,179 மோசென்! ஒரு பிணம்! 59 00:07:50,888 --> 00:07:51,805 நிறைய இரத்தம் உள்ளது. 60 00:07:51,889 --> 00:07:53,056 நாங்கள் உள்ளே போகிறோம். 61 00:07:53,140 --> 00:07:55,559 இல்லை, இல்லை, வேண்டாம். நிறுத்துங்கள். போய் விடுங்கள். 62 00:07:56,143 --> 00:07:57,352 ஆனால் நாங்கள் வந்துவிட்டோம். 63 00:07:57,436 --> 00:07:58,687 இங்கிருந்து போய் விடுங்கள்! 64 00:07:59,479 --> 00:08:02,608 வந்த வேலை நடைபெறாது, ரஷீத்! இங்கிருந்து போய் விடுங்கள்! 65 00:08:02,691 --> 00:08:05,402 சரி, பாஸ். இங்கிருந்து போ. நாங்கள் நிறுத்துகிறோம். 66 00:08:31,929 --> 00:08:33,931 -என்ன? -யாரோ பிணத்தை பார்த்து விட்டார்கள். 67 00:08:36,225 --> 00:08:37,643 இன்னும் எவ்வளவு நேரம் தேவைப்படும்? 68 00:08:38,519 --> 00:08:42,981 எனக்குத் தெரியலை. 15 நிமிடங்கள், 20 கூட ஆகலாம். 69 00:08:43,065 --> 00:08:45,317 அது ரொம்ப அதிக நேரம். முடிந்த அளவுக்கு வேகமாக செய். 70 00:08:51,573 --> 00:08:56,036 டெஹ்ரான் ஐஆர்ஜீசி உளவு எதிர்ப்பு தலைமையகம் 71 00:10:12,029 --> 00:10:13,614 -அருமை. -என்ன? 72 00:10:13,697 --> 00:10:15,490 அவள் தொடர்பை நிலைப்படுத்திவிட்டாள். 73 00:10:15,574 --> 00:10:17,826 அவள் வைரஸ்ஸை காப்பி செய்தால் போதும், நான் மீதியை பார்த்துக் கொள்வேன். 74 00:10:39,932 --> 00:10:42,392 அனுமதி கட்டளைகளை சரி செய்துவிட்டால் என் வேலை முடிந்தது. 75 00:10:42,476 --> 00:10:45,062 காவலர்கள் வந்துவிட்டனர், நீ பின் கதவு வழியாக வெளியே வந்துவிடு. 76 00:10:46,605 --> 00:10:48,065 அவ்வளவுதான், கிட்டத்தட்ட முடித்துவிட்டேன். 77 00:10:48,148 --> 00:10:49,316 நான் சொல்வதை கேட்கிறாயா? 78 00:10:49,399 --> 00:10:52,861 ஐந்து நிமிடங்கள். நமக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்காது. 79 00:10:52,945 --> 00:10:54,363 அங்கிருந்து இப்போதே வெளியே வா! 80 00:10:59,743 --> 00:11:01,537 கவனியுங்கள். 81 00:11:01,912 --> 00:11:07,626 ஊழியர்கள் அனைவரும் உடனடியாக பிரதான அறைக்கு வரவும். 82 00:11:14,049 --> 00:11:15,133 நீ வருகிறாயா, ஜிலா? 83 00:11:16,510 --> 00:11:17,511 என்ன? 84 00:11:17,594 --> 00:11:19,429 அனைவரும் கீழே செல்கின்றனர். 85 00:11:20,389 --> 00:11:23,225 சரி, நீ போ. எனக்காக காத்திருக்காதே. 86 00:11:41,869 --> 00:11:42,870 ஹே! 87 00:11:43,787 --> 00:11:44,997 நீ என்ன செய்கிறாய்? 88 00:11:48,667 --> 00:11:51,295 அதை நிறுத்து. கேட்கிறதா? 89 00:11:51,378 --> 00:11:52,796 முடிக்கப் போகிறேன். 90 00:11:52,880 --> 00:11:54,840 ஒரு நொடியில் முடித்துவிடுவேன். சரியா? 91 00:11:55,215 --> 00:11:57,342 அடுத்து உன் தலையில் விழப் போகிறது. 92 00:11:57,801 --> 00:11:59,219 இப்பொழுதே, எழுந்து, போ. 93 00:11:59,761 --> 00:12:01,388 நான் என் பையை எடுத்துக் கொள்ளலாமா? 94 00:12:01,471 --> 00:12:02,306 சீக்கிரமாக! 95 00:12:12,566 --> 00:12:15,152 விதிமுறைகள் அழிக்கப்படுகின்றன. நீங்கள் பாருங்கள். 96 00:12:18,238 --> 00:12:19,239 இங்கும் தான். 97 00:12:20,991 --> 00:12:23,202 -இது என்ன? -"ஃபாக்ஸ் ஆன் த ரன்"-ஐ இயக்கிவிட்டாள். 98 00:12:24,494 --> 00:12:26,205 அவள் செய்த அனைத்தையும் அழிக்கின்றாள். 99 00:12:39,384 --> 00:12:40,552 இங்கு உட்கார். 100 00:12:41,470 --> 00:12:44,181 யாரும் பக்கத்தில் இருப்பவரிடம் பேசக் கூடாது. 101 00:12:44,848 --> 00:12:47,017 பேசினால் விளைவுகளை சந்திக்க வேண்டும். 102 00:12:47,100 --> 00:12:49,728 சட்ட மீறல் குற்றம் சாட்டப்படுவீர்கள். 103 00:12:49,811 --> 00:12:51,188 அவர்களை கவனியுங்கள். 104 00:13:18,298 --> 00:13:21,385 கட்டிடத்தில் காவலர் உள்ளனர். அவள் என் அழைப்பை ஏற்கவில்லை. 105 00:13:21,468 --> 00:13:24,471 நிலைமை மோசமாகிவிட்டது, நாம் தயாராக இருக்க வேண்டும். 106 00:13:24,555 --> 00:13:25,556 நன்றி. 107 00:13:26,849 --> 00:13:28,851 -எனக்கு தகவலை கொடுத்துக் கொண்டே இருங்க. -கண்டிப்பாக. 108 00:13:53,333 --> 00:13:54,334 ஹேலி. 109 00:13:55,460 --> 00:13:56,879 விமானிகளை நிறுத்த சொல். 110 00:14:05,429 --> 00:14:07,097 விமானிகளே, காத்திருங்கள். 111 00:14:07,181 --> 00:14:08,849 பிரதமர் அவர்களே. 112 00:14:10,100 --> 00:14:11,560 நாங்கள் ரத்து செய்கிறோம். 113 00:14:21,570 --> 00:14:23,989 இவர்கள் அனைவரும் தான் விமானத்தில் பயணித்தவர்கள். 114 00:14:24,072 --> 00:14:27,701 ஈரானிய குடிமக்கள் யாரும் இல்லை, இருமுறை சரி பார்த்துவிட்டோம். 115 00:14:29,036 --> 00:14:31,663 இவர்கள் ஜோர்டானில் ஏறிய பயணிகளா? 116 00:14:31,747 --> 00:14:32,789 ஆமாம். 117 00:14:32,873 --> 00:14:36,084 இந்தியாவில் இறங்குவோரின் பட்டியல் நம்மிடம் இல்லை. 118 00:14:36,168 --> 00:14:37,503 விமானம் இன்னும் தரை இறங்கவில்லை. 119 00:14:38,295 --> 00:14:41,381 ஆனால் அதை நமது நம்பகமான நபர் ஒருவர் கையாளுகிறார். 120 00:14:41,465 --> 00:14:44,885 இந்தியாவில் இறங்கியோரின் பாஸ்போர்ட்டுகளை நகல் எடுத்து நமக்கு அனுப்புவார். 121 00:14:45,677 --> 00:14:48,597 உடனடியாக விமான நிலையத்திற்கு போய், ஏதாவது கண்டுப்பிடிக்க முடிகிறதா என பார். 122 00:14:48,680 --> 00:14:51,683 அவர்கள் இருவரும் எங்கு இருந்து வந்தனர்? எங்கு செல்கின்றனர்? 123 00:14:51,767 --> 00:14:54,228 பாதுகாப்பு கேமரா பதிவுகளையும் சோதனை செய். 124 00:14:55,938 --> 00:14:57,481 உத்தேசமான நேரம் இருக்கிறதா? 125 00:14:57,564 --> 00:14:58,899 இரண்டில் இருந்து மூன்று மணி நேரம். 126 00:14:59,525 --> 00:15:02,861 வேண்டுமென்றால் ஓய்வு எடுங்கள். நான் உங்களுக்கு தகவல் அனுப்புகிறேன். 127 00:15:03,946 --> 00:15:05,280 நன்றி, அலி. 128 00:15:39,690 --> 00:15:41,316 போகக் கூடாது என்று ஏற்கனவே சொன்னேனே. 129 00:15:41,400 --> 00:15:43,110 என்னால் முடியலை, அதிகாரி. 130 00:15:43,819 --> 00:15:44,862 இது ஒன்றும்... 131 00:15:45,988 --> 00:15:47,114 வழக்கமானது கிடையாது. 132 00:15:47,739 --> 00:15:48,740 என்ன? 133 00:15:50,492 --> 00:15:51,785 இது... 134 00:15:52,536 --> 00:15:54,121 நான் மாற்ற வேண்டும்... 135 00:15:55,497 --> 00:15:56,498 சீக்கிரமாக செய். 136 00:15:56,582 --> 00:15:58,792 நன்றி, அதிகாரி. உங்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக. 137 00:16:32,159 --> 00:16:33,160 எப்படி இருக்கிறாய்? 138 00:16:33,952 --> 00:16:36,830 நன்றாக இல்லை. இங்கு இருக்கும் அனைவரையும் விசாரிக்கின்றனர். 139 00:16:37,247 --> 00:16:38,832 நாம் பேசியதை யாராவது கேட்டிருக்கலாம். 140 00:16:38,916 --> 00:16:43,337 சொல், அவர் அப்படி செய்வது அங்கு வேலை பார்க்கும் யாருக்காவது தெரியுமா? 141 00:16:43,795 --> 00:16:45,047 ஒரு பெண்மணிக்கு மட்டும். 142 00:16:45,506 --> 00:16:48,258 சரி. அவள் அதைப் பற்றி அவர்களிடம் எதுவும் சொல்ல கூடாது. 143 00:16:49,176 --> 00:16:50,469 நீ அவளிடம் பேச வேண்டும். 144 00:16:51,136 --> 00:16:52,638 கெய்சருக்கும் தெரியும். 145 00:16:52,721 --> 00:16:53,722 அவளது கணவர். 146 00:16:54,473 --> 00:16:55,766 கெய்சர்? 147 00:16:56,183 --> 00:16:57,267 நிச்சயமாகத் தெரியுமா? 148 00:16:57,351 --> 00:17:01,271 ஜிலா ஈரானுக்கு திரும்பி வர மாட்டாள் என கூறினார். இப்பதான் அது எனக்குப் புரிகிறது. 149 00:17:02,689 --> 00:17:03,774 சரி. 150 00:17:04,983 --> 00:17:06,484 கற்பழிப்பை பற்றி ஒன்றும் சொல்லாதே. 151 00:17:07,069 --> 00:17:10,030 மிகவும் முக்கியமான விஷயம் முடிந்தவரை இழுத்து அடி. 152 00:17:10,864 --> 00:17:13,032 நான் உன்னை அங்கிருந்து வெளியேற்றுகிறேன். சரியா? 153 00:17:17,454 --> 00:17:18,413 சீக்கிரம்! 154 00:17:19,080 --> 00:17:20,290 வருகிறேன். 155 00:17:29,091 --> 00:17:32,427 "அவருடன் நடந்தவை பற்றி எதுவும் சொல்லாதே." 156 00:18:16,722 --> 00:18:18,140 சாரா ஃபாராமண்ட்! 157 00:18:48,545 --> 00:18:50,297 -சரி. -நீங்க வருகிறீர்களா? 158 00:18:50,964 --> 00:18:52,174 ஆமாம். 159 00:18:52,257 --> 00:18:53,550 என்ன செய்யணும் என தெரியுமா? 160 00:18:55,093 --> 00:18:56,094 தெரியும், மேடம். 161 00:18:58,931 --> 00:18:59,932 மசூத். 162 00:19:00,015 --> 00:19:02,434 அவளை என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பாய் என நம்புகிறேன். 163 00:19:04,186 --> 00:19:05,854 எப்படியாவது அதை செய்து முடிப்பேன். 164 00:19:07,898 --> 00:19:08,899 சரி. 165 00:19:55,863 --> 00:19:57,865 ஹலோ, கெய்சார். தொந்தரவிற்கு மன்னிக்கவும். 166 00:19:57,948 --> 00:19:59,116 எல்லாம் சரியாக உள்ளதா? 167 00:19:59,199 --> 00:20:00,200 ஆமாம். 168 00:20:00,742 --> 00:20:02,995 -ஏதேனும் பிரச்சினையா? -இல்லை, நண்பா. 169 00:20:03,078 --> 00:20:05,163 உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். 170 00:20:05,247 --> 00:20:06,665 உள்ளே வரலாமா? 171 00:20:09,001 --> 00:20:10,043 சரி, வாங்க. 172 00:20:10,127 --> 00:20:11,879 மிக்க நன்றி. 173 00:20:12,671 --> 00:20:13,797 நன்றி. 174 00:20:28,353 --> 00:20:29,396 ஹலோ, அலி. 175 00:20:29,479 --> 00:20:30,647 ஹே, பாஸ். 176 00:20:30,731 --> 00:20:31,982 என்ன கண்டுப்பிடித்தாய்? 177 00:20:32,608 --> 00:20:35,527 அவளை ஏற்றி சென்ற வண்டி ஓட்டுனரிடம் பேசினேன். 178 00:20:36,111 --> 00:20:39,698 அவளுடைய ஃபார்ஸி, தாய் மொழி போல, நேர்த்தியாக இருந்ததாக சொன்னார். 179 00:20:40,782 --> 00:20:43,327 ஆனால் அவளது உச்சரிப்பு சற்று வித்தியாசமாக இருந்ததாம். 180 00:20:44,161 --> 00:20:48,957 கடைசியாக அவளை ரெவல்யூஷன் தெருவில் இறக்கிவிட்டதாக சொன்னார். 181 00:20:49,041 --> 00:20:50,292 வேறு என்ன? 182 00:20:50,918 --> 00:20:53,629 அவர் இதுவும் சொன்னார்... 183 00:20:53,712 --> 00:20:55,797 அவள் அழகாக இருந்தாள். 184 00:20:58,467 --> 00:21:02,346 சரி. நாம் இந்தியாவில் இருந்து தகவல் வர காத்திருப்போம். 185 00:21:02,429 --> 00:21:04,348 சரி. இரவு வணக்கம். 186 00:21:41,385 --> 00:21:42,594 கமலி பேசுகிறேன். 187 00:21:42,678 --> 00:21:45,305 நீங்க எவ்வளவு சிடுசிடுப்பானவர் என மறந்துவிட்டேன். 188 00:21:45,389 --> 00:21:47,391 நிறைய பேர் வெறுமென "ஹலோ" என்று சொல்வார்கள். 189 00:21:47,474 --> 00:21:49,351 நான் சிடுசிப்பானவன் தான். 190 00:21:49,434 --> 00:21:51,436 ரொம்பவும் சிடுசிடுப்பு. 191 00:21:53,814 --> 00:21:55,440 உன்னுடன் இருக்கும் போது கூடவா? 192 00:21:56,775 --> 00:22:00,070 நீங்க இன்னும் கொஞ்சம் சிரித்தால் எந்த நஷ்டமும் வராது. 193 00:22:02,072 --> 00:22:05,409 எனது சிரிப்பு நன்றாக இருக்காது. ஆனால் எனது நகைச்சுவை நன்றாக இருக்கும். 194 00:22:05,993 --> 00:22:07,578 சில நேரங்களில். 195 00:22:09,955 --> 00:22:11,456 நீ எப்படி இருக்கிறாய், அன்பே? 196 00:22:11,957 --> 00:22:14,751 நான் நலமாக உள்ளேன். ஹோட்டலில் இருக்கிறேன். 197 00:22:14,835 --> 00:22:16,295 மருத்துவர் என்ன சொன்னார்? 198 00:22:16,378 --> 00:22:17,671 அவர் நம்பிக்கையோடு இருக்கிறார். 199 00:22:18,297 --> 00:22:20,299 அதிர்ஷ்டவசமாக, அவர் நம்பிக்கையோடு இருக்கிறார். 200 00:22:21,633 --> 00:22:22,718 சரி. 201 00:22:22,801 --> 00:22:25,220 எனக்கு ஒரு நல்ல நகைச்சுவை சொல்ல முடியுமா? 202 00:22:27,264 --> 00:22:30,976 எனக்குத் தெரியாது. எல்லாவற்றையும் நீ முன்பே கேட்டுவிட்டாய். 203 00:22:31,560 --> 00:22:33,520 சரி, ஒரு நகைச்சுவை சொல்லுங்கள். 204 00:22:33,937 --> 00:22:35,230 சரி. 205 00:22:35,314 --> 00:22:40,611 சரி. புதிதாக ஒரு நகைச்சுவை சொல்கிறேன். அதை இன்றுதான் கேட்டேன். 206 00:22:42,738 --> 00:22:47,868 ஒரு இளைஞன் தன் தாயிடம், "அம்மா, நான் மணப்பெண்ணைப் பார்த்துவிட்டேன்!" என்றான். 207 00:22:48,952 --> 00:22:50,829 அம்மா, "உண்மையாகவா?" என கேட்டாள். அதற்கு அவன், "உண்மையாக. 208 00:22:50,913 --> 00:22:55,000 நாளை இரவு உணவுக்கு நான் மூன்று பெண்களை அழைத்து வருவேன், 209 00:22:55,083 --> 00:22:57,294 அவர்களில் அவள் யார் என்பதை நீங்க கண்டுபிடியுங்க" என்றான். 210 00:22:58,295 --> 00:23:04,718 அடுத்த நாள், மகன் மூன்று பெண்களை அழைத்து வந்து, வரிசையாக நிற்க வைத்து, 211 00:23:04,801 --> 00:23:08,055 "யார் என் மணப்பெண் என்று கண்டுபிடியுங்க" என்றான். 212 00:23:09,139 --> 00:23:11,934 அவர்களை ஆராய்ந்துவிட்டு, 213 00:23:12,976 --> 00:23:14,144 "வலப்பக்கத்தில் இருப்பவள்!" என்றாள். 214 00:23:14,686 --> 00:23:18,190 அவன், "அட, அம்மா, எப்படி தெரியும்?" என்று கேட்டான். 215 00:23:19,233 --> 00:23:23,195 அதற்கு அவள், "ஏனென்றால் இப்போதே எனக்கு அவளைப் பிடிக்கவில்லை!" என்றாள். 216 00:23:24,154 --> 00:23:25,489 நல்லா இருந்தது, தானே? 217 00:23:26,698 --> 00:23:29,034 எனக்கு தலை வலிக்கிறது. 218 00:23:31,036 --> 00:23:33,497 அன்பே, அங்கு உன்னுடன் இல்லாததற்காக வருந்துகிறேன். 219 00:23:34,831 --> 00:23:36,375 என்னை மன்னித்துவிடு. 220 00:23:39,169 --> 00:23:42,256 கடவுளின் சித்தமானால், நாளை அறுவை சிகிச்சை நல்லபடியாக நடக்கும். 221 00:23:43,549 --> 00:23:45,342 உன்னைப் பற்றி மட்டும் தான் நினைக்கின்றேன். 222 00:23:45,425 --> 00:23:49,012 நீங்கள் சொல்ல வேண்டாம். பரவாயில்லை. 223 00:23:49,096 --> 00:23:53,517 அன்பே. உன்னை கவனித்துக் கொள், நன்றாக தூங்கு. 224 00:23:53,600 --> 00:23:56,353 சரி. கடவுளின் சித்தம். நீங்களும் தான். 225 00:23:56,436 --> 00:23:58,564 இரவு வணக்கம், அன்பே, இரவு வணக்கம். 226 00:23:58,647 --> 00:23:59,815 முத்தங்கள். 227 00:24:26,592 --> 00:24:28,010 ஜிலா கோர்பானிஃபர்! 228 00:24:34,141 --> 00:24:35,309 உள்ளே போ. 229 00:24:38,770 --> 00:24:39,855 உட்காருங்கள். 230 00:24:45,527 --> 00:24:47,821 ஜிலா கோர்பானிஃபர்! சரியா? 231 00:24:48,530 --> 00:24:49,865 ஆமாம், அதிகாரி. 232 00:24:50,240 --> 00:24:56,205 உங்கள் மேலாளர் அஷ்கான், ஏன் உங்களிடம் சத்தம் போட்டு, உங்களை துரத்தி ஓடினார்? 233 00:24:57,372 --> 00:24:58,832 உங்களிடம் அவர் என்ன எதிர்ப்பார்த்தார்? 234 00:25:01,793 --> 00:25:04,171 நான் வேலை செய்வதற்காக கீழே சென்றேன், 235 00:25:05,172 --> 00:25:08,550 அதன் பிறகு அவர் வந்து என்னை கத்தினார். 236 00:25:09,343 --> 00:25:11,386 அவரைப் பார்த்து பயந்து, நான் வெளியே சென்றேன். 237 00:25:14,556 --> 00:25:16,517 அவர் ஏன் உங்களைக் கத்தினார்? 238 00:25:17,476 --> 00:25:18,644 எனக்குத் தெரியாது. 239 00:25:19,561 --> 00:25:22,814 இரவு ஷிப்ட் வேலை செய்ய வேண்டியிருந்ததால் அவர் எரிச்சலடைந்திருக்கலாம். 240 00:25:23,732 --> 00:25:26,193 உங்க தோழி சாரா எங்களிடம் அப்படி சொல்லவில்லை. 241 00:25:29,947 --> 00:25:32,699 அவர் உங்கள் மீது கோபமாக இருந்ததாக அவள் சொன்னாள். 242 00:25:33,492 --> 00:25:37,120 நீங்கள் மந்தமாக இருப்பதாகவும், தனிப்பட்ட அழைப்புகள் செய்வதாகவும் அவர் நினைத்தார். 243 00:25:38,330 --> 00:25:39,623 அவள் அப்படியா சொன்னாள்? 244 00:25:40,123 --> 00:25:43,752 அவள் பொய் சொல்கிறாள் என்று சொல்கிறீர்களா? அவள் பொய் சொல்பவளாக தோன்றவில்லை. 245 00:25:43,836 --> 00:25:47,965 பொய் சொல்பவள் கிடையாது, மற்றவர்களுடைய விஷயத்தில் அவள் மூக்கை நுழைக்கக் கூடாது. 246 00:25:48,048 --> 00:25:50,008 என்னோடு விளையாட வேண்டாம்! 247 00:25:51,009 --> 00:25:52,845 ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 248 00:25:53,470 --> 00:25:55,222 இப்போது சொல்லுங்க, 249 00:25:55,305 --> 00:25:58,308 அவர் எரிச்சலடையும் போது பொதுவாக இப்படிதான் நடந்து கொள்வாரா? 250 00:25:58,725 --> 00:26:00,227 ஆமாம், அதிகாரி. 251 00:26:00,686 --> 00:26:03,105 அவர் அப்படிதான் நடந்துகொள்வார். எல்லாரிடமும். 252 00:26:04,982 --> 00:26:06,900 உங்க ரைனோபிளாஸ்டி அறுவை சிகிச்சை எப்போது நடந்தது? 253 00:26:08,193 --> 00:26:09,361 இரண்டு நாட்களுக்கு முன். 254 00:26:10,237 --> 00:26:11,780 இது எந்த மாதிரியான உச்சரிப்பு? 255 00:26:12,948 --> 00:26:15,993 நான் டெஹ்ரானில் பிறந்தேன், ஆனால் என் அப்பா ஒரு வியாபாரி. 256 00:26:16,618 --> 00:26:18,412 அவர் எமிரேட்டிஸில் வேலை செய்தார். 257 00:26:18,829 --> 00:26:21,206 நான் கத்தாரில் வளர்ந்தேன். 258 00:26:22,791 --> 00:26:24,835 அங்குதான் என் கணவரை சந்தித்தேன். 259 00:26:25,335 --> 00:26:28,797 எங்களுக்கு திருமணம் ஆனதும், மீண்டும் டெஹ்ரானுக்கு வர முடிவு செய்தோம். 260 00:26:31,550 --> 00:26:33,177 நீங்கள் எவ்வளவு காலமாக இங்கு வாழ்கிறீர்கள்? 261 00:26:33,886 --> 00:26:36,430 நாங்கள் திரும்ப வந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிறது. 262 00:26:39,600 --> 00:26:43,228 சரி, வெளியில் என்ன நடந்தது? உங்கள் சண்டை தொடர்ந்ததா? 263 00:26:46,064 --> 00:26:49,359 அவர் கத்திக் கொண்டே இருந்தார். நான் பதிலளிக்கவில்லை. 264 00:26:50,360 --> 00:26:55,616 பிறகு ஒரு அமைதியான இடத்தைப் பார்த்து, நான் அமைதியடைந்து மீண்டும் உள்ளே சென்றேன். 265 00:26:57,034 --> 00:26:58,035 அப்போ அவர்? 266 00:26:59,411 --> 00:27:02,623 எனக்குத் தெரியாது. அவர் உள்ளே சென்றுவிட்டார் என நினைக்கிறேன். 267 00:27:04,333 --> 00:27:09,213 இப்போது சொல்லுங்கள், உங்கள் சண்டை கைகலப்பாக மாறியதா? 268 00:27:09,796 --> 00:27:11,340 இல்லை, அதிகாரி. 269 00:27:11,423 --> 00:27:16,845 நீங்கள் சண்டையிட்டு, அவர் உங்களை வெளியே துரத்தி ஓடி வந்து, 270 00:27:16,929 --> 00:27:20,349 உங்களை பார்த்து கத்த, நீங்கள் பதிலளிக்காமல், திரும்பி போன பிறகு, 271 00:27:20,432 --> 00:27:22,684 யாரோ ஒருவர் அவரது கழுத்தை நெறித்துவிட்டு, ஓடி போனது, 272 00:27:22,768 --> 00:27:25,062 எப்படி சாத்தியம் என்று விளக்க முடியுமா? 273 00:27:25,604 --> 00:27:29,816 என்னால் ஒருவரின் கழுத்தை நெறிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 274 00:27:29,900 --> 00:27:34,196 சொல்லட்டுமா, நீங்கள் பொய் சொல்வதாகத்தான் நான் நினைக்கிறேன். 275 00:27:34,279 --> 00:27:37,783 ஏதோ சரியாக இல்லை. இது வேலை சம்பந்தப்பட்ட வாக்குவாதமாகத் தெரியவில்லை. 276 00:27:37,866 --> 00:27:40,244 உங்கள் இருவருக்கும் இடையில் ஏதோ பிரச்சினை இருந்திருக்கிறது. 277 00:27:40,661 --> 00:27:43,247 நீங்கள் சொல்லிவிடுங்கள் இல்லையென்றால் நாங்களே கண்டுபிடிப்போம்! 278 00:27:43,330 --> 00:27:45,749 சத்தியமாக சொல்கிறேன். எங்களுக்குள் எதுவும் இல்லை. 279 00:27:46,250 --> 00:27:49,253 நீங்கள் சரிபார்க்கலாம். யாரை வேண்டுமானாலும் கேளுங்கள். 280 00:27:49,336 --> 00:27:51,088 உங்களுக்கு யோசிப்பதற்கு நேரம் இருக்கிறது. 281 00:27:51,547 --> 00:27:54,508 இன்றிரவு நீங்க எங்க காவலில் இருப்பீர்கள். உங்களுக்கு நிறைய நேரம் இருக்கு. 282 00:27:54,591 --> 00:27:55,592 அவரை அழைத்துச் செல்லுங்கள். 283 00:27:56,593 --> 00:27:59,012 எழுந்திருங்கள். 284 00:28:04,017 --> 00:28:05,143 போய் உட்காருங்கள். 285 00:28:26,707 --> 00:28:28,208 இதெல்லாம் பதிவில் இருக்கா? 286 00:28:28,959 --> 00:28:30,085 அவள் எப்படி இருக்கிறாள்? 287 00:28:30,169 --> 00:28:32,379 மற்ற ஊழியர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறாள். 288 00:28:32,838 --> 00:28:34,590 அவளை மீட்க ஈகிள் ஏற்பாடு செய்கிறார். 289 00:28:35,090 --> 00:28:38,010 விமானங்கள் மீண்டும் இஸ்ரேலுக்கு வரும் வரை அவளை வெளியே அனுப்ப வேண்டாம். 290 00:28:38,969 --> 00:28:40,262 தாக்குதல் இன்னும் நடக்கப் போகிறதா? 291 00:28:40,345 --> 00:28:42,848 முதல் திட்டம் தோல்வியடையந்தால், இரண்டாம் திட்டத்தை செயல்படுத்தணும், கடோஷ். 292 00:28:44,766 --> 00:28:48,061 நாம் திட்டத்தை மறுபரிசீலனை செய்து, அது ஆபத்தானது என்ற முடிவுக்கு வந்தோம். 293 00:28:48,437 --> 00:28:50,355 உன்னையும் உன் ஏஜண்ட்டுகளையும் நான் நம்பினேன். 294 00:28:50,439 --> 00:28:53,650 இது அமைதியாகவும் மலிவாகவும் இருக்கும் என நீங்கள் என்னை நம்ப வைத்தீர்கள். 295 00:28:53,734 --> 00:28:55,652 ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. 296 00:28:58,113 --> 00:29:01,575 நமது விமானிகள் சுடப்பட வாய்பு உள்ளதெனில் பிரதமர் அணுஉலைகள் மீது குண்டு போடமாட்டார். 297 00:29:02,075 --> 00:29:03,827 வானில் விமானங்கள் இருக்காது என உறுதியளித்துள்ளேன், 298 00:29:03,911 --> 00:29:06,538 அதாவது நாம் மீண்டும் ஈரானின் திட்டத்தையே செயல்படுத்துகிறோம். 299 00:29:39,613 --> 00:29:40,614 கமலி பேசுகிறேன். 300 00:29:41,365 --> 00:29:44,660 உங்களை எழுப்பியதற்கு மன்னிக்கவும். ஜிலா கோர்பானிஃபர். 301 00:29:45,702 --> 00:29:49,081 -என்ன? -ஜோர்டன் விமானம் நியூ தில்லியில் இறங்கியது 302 00:29:49,164 --> 00:29:52,125 நீங்கள் சொல்வது சரிதான், பாஸ், ஆள்மாறாட்டம் நடந்திருக்கு. 303 00:29:52,209 --> 00:29:56,004 ஜோர்டானிய பாஸ்போர்ட்டுடன் பயணித்த இப்திசாம் பாட்ரான் என்பவர் 304 00:29:56,088 --> 00:29:59,466 டெஹ்ரானில் ஒரு புகைப்படத்தோடும்,தில்லியில் வேறு புகைப்படத்துடனும் தரையிறங்கினார். 305 00:29:59,550 --> 00:30:02,052 ஆனால் அவளுடைய முகத்தை ஏற்கெனவே நம் தரவுத்தளத்தில் சரிபார்த்துவிட்டேன். 306 00:30:02,135 --> 00:30:03,762 இந்தியாவில் தரையிறங்கியவர் 307 00:30:03,846 --> 00:30:06,348 ஜிலா கோர்பானிஃபர் என்ற ஈரானிய பிரஜை. 308 00:30:06,431 --> 00:30:07,933 அவளை பற்றி என்ன தகவல் தெரியும்? 309 00:30:08,350 --> 00:30:10,060 அவள் மின்சார நிறுவனத்தில் வேலை செய்கிறாள். 310 00:30:10,143 --> 00:30:14,314 மற்றொரு பெண் நாம் தேடிக் கொண்டிருக்கும் ஏஜெண்டாக இருக்கலாம். 311 00:30:14,398 --> 00:30:15,899 எல்லாவற்றையும் எனக்கு அனுப்பு! 312 00:30:16,859 --> 00:30:18,902 ஏற்கனவே மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன். 313 00:30:19,361 --> 00:30:20,404 நன்றி. 314 00:30:28,245 --> 00:30:30,706 இப்திசம் அப்தல்லாஹ் இப்ராஹிம் பத்ரான் 315 00:31:08,410 --> 00:31:10,329 எழுந்திருங்க. 316 00:31:10,412 --> 00:31:12,039 எழுந்திருங்க. நாம் போகிறோம். 317 00:31:55,999 --> 00:31:57,042 போங்க. 318 00:32:05,759 --> 00:32:06,760 சீக்கிரம். 319 00:32:23,026 --> 00:32:26,071 சமத், நீங்கள் படிக்கட்டுகளில் வாருங்கள். நீங்க, உள்ளே போங்க. 320 00:32:35,622 --> 00:32:38,250 என்ன இது? 321 00:32:39,918 --> 00:32:41,962 -அன்பே... -தயவுசெய்து. 322 00:32:42,045 --> 00:32:44,673 என் கதவைத் திறந்தே வைக்கிறேன், உனக்கு ஏதாவது வேண்டுமென்றால் கேள். 323 00:32:48,177 --> 00:32:51,763 ஜிலா, அன்பே, என்னுடன் வா. 324 00:32:52,598 --> 00:32:53,932 நீ எப்படி இருக்கிறாய்? 325 00:32:55,684 --> 00:32:56,852 வா, அன்பே, உட்கார். 326 00:32:56,935 --> 00:32:58,437 இங்கு ஏன் காவலர்கள் இருக்கிறார்கள்? 327 00:32:58,520 --> 00:33:00,022 உட்கார், அன்பே. உட்கார். 328 00:33:00,105 --> 00:33:01,440 கெய்சார் எங்கே? 329 00:33:01,523 --> 00:33:02,816 உட்கார். 330 00:33:03,775 --> 00:33:07,362 ஜிலா, என் பெயர் மொஷ்கான். நான் ஒரு சமூக சேவகர். 331 00:33:07,988 --> 00:33:09,781 இது உங்கள் கணவரைப் பற்றியது. 332 00:33:10,782 --> 00:33:12,492 என்ன? அவர் நன்றாகதானே இருக்கிறார்? 333 00:33:12,576 --> 00:33:15,579 ஒரு மணி நேரத்திற்கு முன்பு உங்கள் கணவர் இறந்துவிட்டார். 334 00:33:17,122 --> 00:33:18,540 எப்படி? என்ன நடந்தது? 335 00:33:18,624 --> 00:33:20,083 தற்கொலை செய்துக் கொண்டார். 336 00:33:23,295 --> 00:33:28,592 ஜிலா, ஒரு கணம் நிதானமாக இருந்து இதை ஏற்றுக் கொள். 337 00:33:28,675 --> 00:33:30,511 -தண்ணீர் வேண்டுமா? -ஏன்? 338 00:33:31,053 --> 00:33:32,471 அவர் ஏன் அப்படி செய்தார்? 339 00:33:32,971 --> 00:33:37,017 உனக்கு குறிப்பைவிட்டு சென்றுள்ளார், அனைத்தையும் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். 340 00:33:37,935 --> 00:33:39,436 அவர் ஓருவரைக் கொன்றுவிட்டார் 341 00:33:40,229 --> 00:33:42,856 அந்த பாவத்தை அவரால் தாங்க முடியவில்லை. 342 00:33:52,658 --> 00:33:55,118 கெய்சருக்கும் தெரியும். அவளது கணவர். 343 00:33:55,202 --> 00:33:56,995 கெய்சருக்கா? நிச்சயமாக சொல்கிறாயா? 344 00:33:59,540 --> 00:34:00,541 ஜிலா, அன்பே... 345 00:34:00,624 --> 00:34:02,918 -கதவை மூடு! -ஜிலா, என்னைப் பார். 346 00:34:03,001 --> 00:34:05,712 ஜிலா, அன்பே, என்னைப் பார். 347 00:34:08,799 --> 00:34:10,801 -ஹலோ. -எங்கே இருக்கிறீர்கள், பாஸ்? 348 00:34:10,884 --> 00:34:13,053 அவளது இடத்திற்கு போகிறேன். கொஞ்ச நேரத்தில் சென்றுவிடுவேன். 349 00:34:13,136 --> 00:34:16,598 காவலர் அவளை வீட்டிற்கு அழைத்து சென்றனர். அவளது கணவர் தற்கொலை செய்துக் கொண்டார். 350 00:34:16,681 --> 00:34:18,641 என்ன? அவர் என்ன செய்தார்? 351 00:34:18,725 --> 00:34:21,228 அவளுடைய மேலாளரை கொன்றதாக ஒப்புக்கொண்டு, ஒரு குறிப்பை விட்டுச் சென்றுள்ளார். 352 00:34:23,188 --> 00:34:26,024 சரி. நான் வந்து கொண்டிருக்கிறேன். 353 00:34:26,108 --> 00:34:28,068 -சரி, பாஸ். -பை. 354 00:34:36,284 --> 00:34:37,369 நான் சொல்வதை கேள். 355 00:34:39,830 --> 00:34:40,831 ஜிலா, அன்பே... 356 00:34:50,007 --> 00:34:53,969 வந்து உட்கார். என்னைப் பார், நான் சொல்வதை கேள். 357 00:34:54,969 --> 00:34:56,346 உட்கார். 358 00:34:59,558 --> 00:35:01,310 இங்கே வா. 359 00:35:06,607 --> 00:35:09,067 நில், அன்பே. பொறு. 360 00:35:11,361 --> 00:35:14,114 பார்த்து. பார்த்து. பொறு. 361 00:35:15,574 --> 00:35:18,076 ஜிலா, பொறு. 362 00:35:18,160 --> 00:35:20,329 அக்கம்பக்கத்தினர் வந்துவிட்டார்கள். ஜிலா! 363 00:35:20,412 --> 00:35:21,914 ஜிலா, நில்! 364 00:35:21,997 --> 00:35:23,207 வேண்டாம்! 365 00:35:23,290 --> 00:35:24,875 குதிக்காதே! 366 00:35:25,834 --> 00:35:27,836 குதிக்காதே! ஜிலா! 367 00:35:28,879 --> 00:35:31,465 ஏன் அப்படி செய்தாய்? ஜிலா, நில்! 368 00:35:31,548 --> 00:35:33,383 -கண்டிப்பா இறந்திருப்பாள். -தப்பித்துவிட்டாள். 369 00:35:33,467 --> 00:35:36,220 -இங்கே என்ன நடக்கிறது? -பால்கனியிலிருந்து ஒருத்தி குதிச்சிட்டாள். 370 00:35:37,930 --> 00:35:39,139 நீ என்ன செய்கிறாய்? 371 00:35:42,559 --> 00:35:43,852 எனக்கு உதவுங்கள். 372 00:35:46,313 --> 00:35:48,524 உதவி! 373 00:35:53,695 --> 00:35:54,947 ஜிலா! 374 00:35:56,281 --> 00:35:57,491 அவளைப் பிடி! 375 00:36:25,978 --> 00:36:27,020 ஜிலா! 376 00:38:08,789 --> 00:38:09,790 ஹலோ. 377 00:38:09,873 --> 00:38:12,334 நான்தான் பேசுகிறேன். வானிலை... 378 00:38:13,252 --> 00:38:14,378 வானிலை நன்றாக இருக்கிறது. 379 00:38:16,171 --> 00:38:18,257 உன் குரலைக் கேட்டதில் சந்தோஷம். 380 00:38:19,675 --> 00:38:20,676 எங்கே இருக்கிறாய்? 381 00:38:20,759 --> 00:38:22,010 நன்றாக இருக்கிறேன், நான்... 382 00:38:22,427 --> 00:38:24,012 ஏதாவது பாதுகாப்பான இடத்திற்குப் போகிறேன். 383 00:38:24,096 --> 00:38:25,097 ஈகிளுடன் தானே. 384 00:38:26,348 --> 00:38:28,642 இல்லை. நான் அவருடன் தொடர்பை நிறுத்திவிட்டேன். 385 00:38:29,309 --> 00:38:30,310 ஏன்? 386 00:38:30,394 --> 00:38:33,939 அவர் சொதப்பிவிட்டார், நான் அவரை நம்ப மாட்டேன். தனியாகவே வீடு திரும்புவேன். 387 00:38:34,022 --> 00:38:36,066 தமார், நீ தலைமறைவாக இருக்கணும். 388 00:38:36,608 --> 00:38:38,485 நீ எல்லையை பாதுகாப்பாக கடக்கும் வரை 389 00:38:38,569 --> 00:38:41,238 ஈகிள் உன்னை ஒரு பாதுகாப்பான வீட்டிற்கு அழைத்துச் செல்வார், சரியா? 390 00:38:41,321 --> 00:38:43,073 இல்லை, கடோஷ், அது வேண்டாம். 391 00:38:43,407 --> 00:38:46,368 அவருக்கு தவறான தகவல் கிடைத்து, மாட்டிக் கொண்டு, ஒரு கொலையில் சிக்கிக் கொண்டார். 392 00:38:46,451 --> 00:38:48,412 அவர் என்னை ஆபத்தில் சிக்க வைக்கிறார். 393 00:38:48,495 --> 00:38:50,247 அந்த முடிவுகளை எங்களிடம் விட்டுவிடு. 394 00:38:50,330 --> 00:38:51,373 முடியாது. 395 00:38:51,707 --> 00:38:52,958 நான் தொடர்பைத் துண்டிக்கிறேன். 396 00:38:53,041 --> 00:38:55,210 இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இதைச் செய்ய நீங்கள் தான் கற்றுக் கொடுத்தீர்கள். 397 00:39:20,444 --> 00:39:21,528 இது அவளா? 398 00:39:23,238 --> 00:39:24,239 ஆமாம். 399 00:39:25,574 --> 00:39:29,161 நல்லது. நீங்கள் ஒரு உண்மையான நிபுணர், ஃபராஸ். 400 00:39:29,912 --> 00:39:30,954 நன்றி, சார். 401 00:39:31,038 --> 00:39:32,206 உண்மையாக. 402 00:39:32,289 --> 00:39:36,376 எப்போதும் உங்களுக்கு மக்கள் மீதுள்ள விசுவாசம் தான் முதல் இடம். 403 00:39:36,877 --> 00:39:38,170 உங்கள் குடும்பத்தை விடவும். 404 00:39:39,838 --> 00:39:41,131 உங்க மனைவி எப்படி இருக்காங்க? 405 00:39:42,466 --> 00:39:44,301 இரண்டு மணி நேரத்தில் அறுவை சிகிச்சை நடக்கும். 406 00:39:44,384 --> 00:39:46,011 அப்போ, நீங்கள் போக முடியாது. 407 00:39:46,386 --> 00:39:48,805 எல்லாம் வல்ல கடவுள் அவளைப் பாதுகாப்பார். 408 00:39:48,889 --> 00:39:50,891 அவள் குணமடைந்துவிடுவாள் என எனக்குத் தெரியும். 409 00:39:52,184 --> 00:39:53,810 சரி. அடுத்தது என்ன? 410 00:39:54,394 --> 00:39:56,897 இந்த புகைப்படம் பரவலாக விநியோகிக்கப்பட வேண்டும். 411 00:39:56,980 --> 00:39:58,774 அவளை இன்று பிடிக்க வேண்டும். 412 00:39:59,191 --> 00:40:03,237 அவளைத் தொடந்து தேடுங்கள், ஆனால் புகைப்படத்தை வெளியிட வேண்டாம். 413 00:40:03,320 --> 00:40:07,199 காவலர் அவளைத் தேடட்டும், அவள் கொலை-தற்கொலை ஆகியவற்றில் தேடப்படும் நபர். 414 00:40:07,282 --> 00:40:10,661 ஆனால் அவர்கள் ஜிலா கோர்பானிஃபரை தான் தேடுகிறார்கள், அவளை அல்ல. 415 00:40:10,744 --> 00:40:12,996 டெஹ்ரானில் இஸ்ரேலிய உளவாளிகள் உள்ளனர். 416 00:40:13,080 --> 00:40:15,916 நாம் அவர்களுடைய ஏஜெண்டைத் தேடுகிறோம் என்று அவர்களுக்குத் தெரியக்கூடாது. 417 00:40:16,375 --> 00:40:19,086 நாம் ஈரானிய பிரஜையைத் தேடுகிறோம் என்று அவர்கள் நினைக்கட்டும். 418 00:40:20,003 --> 00:40:23,841 ஸயனிஸ்டுகள் பெரியதாக ஏதாவது திட்டமிட்டிருக்க வேண்டும். 419 00:40:24,716 --> 00:40:27,803 அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி, அவர்களை முற்றிலும் முடக்க வேண்டும். 420 00:40:28,262 --> 00:40:30,264 உலகம் முழுவதும் அதைப் பார்க்க வேண்டும். 421 00:40:30,806 --> 00:40:34,518 எனவே நாம் மிகவும் வெளிப்படையாக இருக்க கூடாது. 422 00:40:35,644 --> 00:40:37,062 அப்படியே எதிர்மறையாக இருக்கணும். 423 00:40:37,813 --> 00:40:39,314 நாம் அமைதியாக தோன்றணும். 424 00:40:41,149 --> 00:40:43,569 மீன் தானாக தூண்டிலில் வந்து விழட்டும். 425 00:41:58,894 --> 00:42:00,312 ஹலோ. நான் உங்களுக்கு உதவணுமா? 426 00:42:02,314 --> 00:42:03,482 அரிஸோ... 427 00:42:05,943 --> 00:42:07,236 பாருங்கள். 428 00:42:18,080 --> 00:42:20,249 நான் உங்கள் சகோதரி யாசமினின் மகள். 429 00:43:27,441 --> 00:43:29,443 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்