1 00:00:09,301 --> 00:00:12,101 இத்தொடரில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் முற்றிலும் கற்பனையானவை. 2 00:00:12,179 --> 00:00:14,719 உண்மை நிகழ்வுகளோடோ அல்லது உயிரோடிருக்கும் அல்லது இறந்த நபர்களோடோ ஏதாவது வகையில் 3 00:00:14,806 --> 00:00:15,926 சம்பந்தப்பட்டிருந்தால், அது முற்றிலும் தற்செயலானது. 4 00:00:17,643 --> 00:00:20,443 அமான், ஜோர்டான் 5 00:00:23,607 --> 00:00:27,437 விமானம் 159 அமான் - நியூ தில்லி 6 00:00:50,050 --> 00:00:51,300 நான் பார்க்கிறேன். 7 00:00:53,846 --> 00:00:55,096 நீ எப்படி உணருகிறாய்? 8 00:00:57,391 --> 00:00:59,021 சரியாகிவிடும். பயப்படாதே. 9 00:01:08,360 --> 00:01:10,200 உன்னைப் பழி வாங்குவேன், மோசமானவளே. 10 00:01:10,821 --> 00:01:12,361 விடு, அனுபவங்களை ரசிப்போம். 11 00:01:12,447 --> 00:01:14,407 என்ன அனுபவம்? விசாரணையின்றி கொல்லப்படுவதா? 12 00:01:15,409 --> 00:01:16,289 ஹலோ? 13 00:01:16,368 --> 00:01:18,578 அந்நாட்டில், ஓரினச் சேர்க்கையாளர்களை என்ன செய்வார்கள் தெரியுமா? 14 00:01:18,662 --> 00:01:20,162 யோனி, பயப்படாதே, யாரும் உன்னைத் தொந்தரவு பண்ண மாட்டார்கள். 15 00:01:21,039 --> 00:01:22,879 கறுப்பு உடையணிந்த இந்த பெண்களுடன் ஒரு செல்ஃபி எடுக்கணும். 16 00:01:22,958 --> 00:01:24,668 -அந்த உடையை எப்படி அழைப்பர்? -புர்கா. 17 00:01:24,751 --> 00:01:25,881 விளையாடாதே, ஷிரா. 18 00:01:25,961 --> 00:01:27,211 கேட்பது கண்ணியம் தானே? 19 00:01:32,217 --> 00:01:33,427 வழிவிடுங்கள். 20 00:01:33,510 --> 00:01:34,600 நன்றி. 21 00:01:40,893 --> 00:01:41,773 ஹேய்! 22 00:01:41,852 --> 00:01:42,902 பொறுமை, நண்பா. 23 00:01:42,978 --> 00:01:45,058 -ஓ, கடவுளே, மன்னிச்சிடுங்க. -அதை என் முகத்தில் போட்டுவிட்டாய். 24 00:01:45,147 --> 00:01:46,897 -மன்னிச்சிடுங்க, சார். -பரவாயில்லை. 25 00:01:46,982 --> 00:01:49,482 -ஆமாம், சரி, மன்னிச்சிடுங்க. -சரி. 26 00:01:49,568 --> 00:01:50,818 நான் உதவுகிறேன். 27 00:01:50,903 --> 00:01:51,863 என்ன? 28 00:01:51,945 --> 00:01:52,905 நான் உதவுகிறேன். 29 00:01:52,988 --> 00:01:55,568 -சரி. நன்றி. -பரவாயில்லை. 30 00:01:55,657 --> 00:01:56,697 வழிவிடுங்கள். 31 00:02:02,539 --> 00:02:04,169 அவருக்கு எவ்வளவு கோபம் வந்தது பார்த்தாயா? 32 00:02:04,249 --> 00:02:05,169 நியாயமானது தான். 33 00:02:05,792 --> 00:02:06,882 ஐயோ. 34 00:02:07,669 --> 00:02:09,299 ஏற்கனவே இஸ்ரேல் ஏர்லைன்ஸில் டிக்கெட் எடுத்திருந்தோம். 35 00:02:09,378 --> 00:02:10,458 அதன் விலை ஆயிரம் டாலர்கள். 36 00:02:10,547 --> 00:02:12,797 இது பாதி விலைதான், எனவே இந்தியாவில் இன்னும் இரு மாதங்கள் இருக்கலாம். 37 00:02:12,883 --> 00:02:15,723 பொறுமை என்றது சரிதான். நீ அவர் முகத்தில் பையால் இடித்து விட்டாய். 38 00:02:15,802 --> 00:02:17,722 சரி. இனி உன்னை சமாளிக்க முடியாது, சரிதானே? 39 00:02:18,138 --> 00:02:19,308 -சரி. -சரி. 40 00:02:20,140 --> 00:02:21,310 உனக்கு ஆர்வமாக இல்லையா? 41 00:02:21,391 --> 00:02:23,101 -எதைப்பற்றி? -உற்சாகமாக இரு, இந்தியாவுக்குப் போகிறோம். 42 00:02:23,185 --> 00:02:24,475 இந்தியாவிற்கு போனதும், உற்சாகமடைகிறேன். 43 00:02:24,561 --> 00:02:26,061 சரி, நாம் செல்ஃபி எடுத்துக் கொள்வோம். 44 00:03:13,443 --> 00:03:16,493 -விளக்குகள் அணைந்துவிட்டனவா? -இல்லை, காற்றுக் கொந்தளிப்பாக இருக்கலாம். 45 00:03:17,072 --> 00:03:18,242 என்ன, காற்றுக் கொந்தளிப்பா? 46 00:03:18,323 --> 00:03:20,993 மக்களே, உங்கள் இருக்கைக்குச் சென்று 47 00:03:21,076 --> 00:03:22,326 சீட் பெல்ட்டை அணியுங்கள். 48 00:03:22,411 --> 00:03:25,411 மக்களே, தயவு செய்து சீட் பெல்ட்டை அணிந்து கொள்ளுங்கள். நன்றி. 49 00:03:25,497 --> 00:03:27,747 -சீட் பெல்ட்டை அணிந்தீர்களா? -இது என்னுடையது. 50 00:03:28,750 --> 00:03:30,170 உங்க சீட் பெல்ட்டைப் போடுங்கள். 51 00:03:31,420 --> 00:03:32,630 ஹே, பரவாயில்லை. 52 00:03:35,632 --> 00:03:36,632 சரி. 53 00:03:36,717 --> 00:03:39,967 மக்களே, உங்கள் கேப்டன் பேசுகிறேன். 54 00:03:40,053 --> 00:03:44,353 தற்சமயம், நம் என்ஜின்களில் ஒன்றில், தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. 55 00:03:44,433 --> 00:03:47,983 எச்சரிக்கை நடவடிக்கையாக, இன்னும் அரை மணி நேரத்தில், 56 00:03:48,061 --> 00:03:50,561 அருகில் உள்ள டெஹ்ரான் விமான நிலையத்தில் தரையிறங்கப் போகிறோம். 57 00:03:50,647 --> 00:03:54,737 அங்கிருந்து உங்கள் பயணச் சுமைகள் வேறு ஒரு விமானத்திற்கு மாற்றப்படும், 58 00:03:54,818 --> 00:03:57,028 அதன் மூலம் நீங்கள் இந்தியப் பயணத்தைத் தொடர்வீர்கள். 59 00:03:57,112 --> 00:04:00,662 ஏதேனும் கேள்விகள் அல்லது பிரச்சினைகள் இருந்தால், எங்கள் விமான ஊழியர்கள் உதவுவர். 60 00:04:00,741 --> 00:04:02,621 -"டெஹ்ரான்" என்றா சொன்னார்? -நன்றி. 61 00:04:05,913 --> 00:04:07,003 முடியாது. 62 00:04:09,041 --> 00:04:10,291 வழிவிடுங்கள். 63 00:04:10,375 --> 00:04:11,335 மன்னியுங்கள். 64 00:04:13,253 --> 00:04:15,463 -சார்... -சார், தயவுசெய்து இருக்கையில் உட்காருங்க. 65 00:04:15,547 --> 00:04:18,967 தயவு செய்து, கேளுங்கள், சார். நான் இஸ்ரேலியன். நாங்கள் இஸ்ரேலியர்கள். 66 00:04:19,051 --> 00:04:20,391 நாங்கள் டெஹ்ரானில் இறங்க முடியாது. 67 00:04:20,469 --> 00:04:22,389 நமக்கு வேறு வழியில்லை. தயவுசெய்து இருக்கைக்கு போங்க. 68 00:04:22,471 --> 00:04:26,601 முடியாது, விமானத்தில் இரண்டு இஸ்ரேலியர்கள் உள்ளதாக கேப்டனிடம் சொல்லுங்கள், 69 00:04:26,683 --> 00:04:28,853 நாங்கள் டெஹ்ரானில் இறங்க முடியாது, தயவுசெய்து. 70 00:04:31,230 --> 00:04:34,110 கேப்டன் சார்பாகவும், என் சார்பாகவும் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், 71 00:04:34,191 --> 00:04:36,151 எல்லாப் பயணிகளும் ஒன்றாக, 72 00:04:36,235 --> 00:04:37,855 மாற்று விமானத்திற்கு மாற்றப்படுவீர்கள். 73 00:04:37,945 --> 00:04:39,145 அவர்கள் எங்களை கைது செய்வார்கள். 74 00:04:39,238 --> 00:04:41,698 நம்மை கைது செய்வார்கள், உனக்குப் புரியவில்லையா, ஷிரா? 75 00:04:41,782 --> 00:04:43,782 ஈரானில் இருந்து இஸ்ரேலியர்கள் திரும்பி வர முடியாது. 76 00:04:43,867 --> 00:04:45,697 நான் கேப்டனிடம் பேசுகிறேன், சார். 77 00:04:45,786 --> 00:04:47,076 தயவுசெய்து உங்க இருக்கைக்கு போங்க. 78 00:04:47,496 --> 00:04:49,496 சரி, அமைதியாக இரு, நாம் உட்காருவோம். 79 00:05:08,559 --> 00:05:09,849 சீட் பெல்ட்டை அணிந்து கொள். 80 00:05:30,455 --> 00:05:31,915 இது டெஹ்ரான் என்றா நினைக்கிறாய்? 81 00:05:35,252 --> 00:05:36,302 எனக்குத் தெரியவில்லை. 82 00:05:41,216 --> 00:05:42,506 மூச்சு கூட விடமுடியவில்லை, ஷிரா. 83 00:06:52,704 --> 00:06:54,044 நீங்க விமானத்தை விட்டு இறங்கணும். 84 00:06:55,958 --> 00:06:57,288 முடியாது, நாங்கள் இறங்க மாட்டோம். 85 00:06:57,376 --> 00:06:58,456 இறங்கித்தான் ஆகணும். 86 00:06:59,253 --> 00:07:02,263 அல்லது நான் உங்களைப் பற்றி தெரியப்படுத்தி, வலுக்கட்டாயமாக வெளியேற்றுவேன். 87 00:07:03,090 --> 00:07:04,840 அப்படி நடப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். 88 00:07:24,820 --> 00:07:26,570 ஈரானுக்கு வரவேற்கிறோம் 89 00:07:38,834 --> 00:07:40,134 பாஸ்போர்ட்டுகளை காண்பியுங்கள். 90 00:07:41,295 --> 00:07:42,375 என்ன? 91 00:07:42,462 --> 00:07:43,672 பாஸ்போர்ட்டுகள். 92 00:07:55,434 --> 00:07:56,354 என்னைப் பின் தொடருங்கள். 93 00:08:15,245 --> 00:08:16,535 சரி. வாழ்த்துக்கள். 94 00:08:16,997 --> 00:08:18,457 கடவுள் சித்தம் இருந்தால், விரைவில் சந்திப்போம். 95 00:08:18,999 --> 00:08:20,039 கடவுளின் சித்தம். 96 00:09:19,935 --> 00:09:21,895 ஷிரா... 97 00:09:21,979 --> 00:09:23,689 யோனி, எனக்கு உடம்பு சரியில்லை. 98 00:10:07,107 --> 00:10:08,647 என் கணவரிடம், என்னை மன்னிக்க சொல். 99 00:10:09,943 --> 00:10:11,493 எனக்கு வேறு வழியில்லை. 100 00:10:30,088 --> 00:10:30,918 மன்னியுங்க... 101 00:10:34,927 --> 00:10:36,427 எனக்கு உங்களைத் தெரியும்! 102 00:10:36,762 --> 00:10:38,762 கிளிலோட்டில் நாம் ஒரே தளத்தில் பணிபுரிந்தோம். 103 00:10:40,224 --> 00:10:41,604 இது என்ன, இங்கு என்ன செய்கிறீர்கள்? 104 00:10:41,683 --> 00:10:43,523 மன்னிச்சிடுங்க... நீங்க சொல்வது புரியலை. 105 00:10:43,602 --> 00:10:45,902 உங்களுக்கு புரிகிறது. தயவுசெய்து உதவுங்க. இங்கு என்ன நடக்குது? 106 00:10:45,979 --> 00:10:47,229 நாம் ஈரானில் என்ன செய்கிறோம்? 107 00:10:48,565 --> 00:10:49,815 என்ன நடக்குது? 108 00:10:50,734 --> 00:10:52,534 இவள் தொல்லை செய்கிறாள், சார். 109 00:10:52,611 --> 00:10:54,401 என்னிடம் என்ன எதிர்ப்பார்க்கிறாள் என தெரியலை. 110 00:10:55,155 --> 00:10:57,485 மன்னிச்சிடுங்க, மேடம். 111 00:10:59,618 --> 00:11:00,578 வாருங்கள். 112 00:11:00,661 --> 00:11:02,081 இல்லை, பொறுங்க. நான்... 113 00:11:02,162 --> 00:11:03,962 பரவாயில்லை, வாருங்கள். 114 00:11:44,580 --> 00:11:46,040 எப்படி இருக்க, ஜிலா? 115 00:11:47,332 --> 00:11:48,462 பரவாயில்லை. 116 00:11:50,002 --> 00:11:51,382 எல்லாம் சரியாக நடந்ததா? 117 00:11:55,632 --> 00:11:56,592 நல்லது. 118 00:12:00,596 --> 00:12:02,006 இப்போது குறியீடுகளை கொடு. 119 00:12:03,724 --> 00:12:05,064 அவை என்னிடம் இல்லை. 120 00:12:08,270 --> 00:12:09,190 என்ன சொல்கிறாய்? 121 00:12:09,855 --> 00:12:12,315 ஒவ்வொரு இரவும் 6:00 மணியளவில் குறியீடுகள் மாற்றப்படும். 122 00:12:12,399 --> 00:12:14,109 எனக்கு மாலை 6:00 மணிக்குத்தான் அவை தெரிய வரும். 123 00:12:14,193 --> 00:12:16,323 நான் இப்படி கேள்விப்படவில்லை. 124 00:12:16,695 --> 00:12:18,105 நான் மசூதிடம் சொன்னது உங்களுக்குத் தெரியும். 125 00:12:18,864 --> 00:12:21,164 நாம் நியூ தில்லியில் தரை இறங்கியதும் குறியீடுகள் கிடைக்கும். 126 00:12:24,328 --> 00:12:25,408 என்னிடம் பொய் சொல்லாதே! 127 00:12:25,495 --> 00:12:26,745 நான் பொய் சொல்லவில்லை. 128 00:12:27,956 --> 00:12:29,956 விசாரணையில் நீ ஏன் பொய் சொன்னாய்? 129 00:12:30,792 --> 00:12:33,252 ஈரானை விட்டு வெளியேற வேண்டுமென்பதில் நான் உறுதியாக இருந்தேன். 130 00:12:34,505 --> 00:12:36,545 நான் இங்கே தங்குவதை விட இறப்பதே மேல். 131 00:12:38,967 --> 00:12:40,967 என் கையை விடுங்கள், இல்லையென்றால் நான் கத்துவேன். 132 00:13:04,993 --> 00:13:07,833 இஸ்ரேல் - மொசாட் தலைமையகம் 133 00:13:17,673 --> 00:13:21,643 ஜோர்டானிய விமான இயக்கம் இன்னும் நம் கட்டுப்பாட்டில் தான் உள்ளதா? 134 00:13:22,636 --> 00:13:24,756 நல்லது. எனக்குத் தெரியப்படுத்திக் கொண்டே இரு. 135 00:13:26,557 --> 00:13:28,057 கொஞ்சம் பொறுங்கள். 136 00:13:28,141 --> 00:13:30,021 டெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து அழைப்பு வந்திருக்கு. 137 00:13:37,067 --> 00:13:38,067 காலை வணக்கம், சார். 138 00:13:38,610 --> 00:13:39,700 எப்படி இருக்கிறீர்கள்? 139 00:13:39,778 --> 00:13:41,408 நலம், கடவுளுக்கு நன்றி. 140 00:13:41,488 --> 00:13:43,318 இன்றைய காலை வானிலை அனுகூலமாக இருந்தது. 141 00:13:44,032 --> 00:13:45,332 நல்ல விஷயம். 142 00:13:45,409 --> 00:13:47,119 ஆம், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். 143 00:13:53,667 --> 00:13:54,747 சரி, புரிந்தது. 144 00:13:55,294 --> 00:13:56,504 நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். 145 00:13:58,964 --> 00:13:59,974 பயணி பொய் சொல்லிவிட்டாள், 146 00:14:00,048 --> 00:14:01,968 அவர்கள் தில்லிக்கு போன பிறகுதான் குறியீடுகள் கிடைக்கும். 147 00:14:02,050 --> 00:14:03,760 அப்போ, நான்கு மணி நேரம் தாமதம் ஆகும். 148 00:14:03,844 --> 00:14:06,314 அவ்வளவு நேரமில்லை. விஷயம் ஏற்கனவே விமானிகளுக்கு தகவல் கொடுத்தாச்சு. 149 00:14:06,388 --> 00:14:08,518 அந்தக் குறியீடுகளைப் பெற வேறு வழிகள் உள்ளன. 150 00:14:08,599 --> 00:14:10,389 தமாரால் இதைக் கையாள முடியும் என நம்புகிறேன். 151 00:14:11,226 --> 00:14:13,096 அதனால் தான் நாம் ஒரு ஹேக்கரை அனுப்பியுள்ளோம். 152 00:14:13,187 --> 00:14:14,557 அந்த இரண்டு இஸ்ரேலியர்களின் நிலை? 153 00:14:14,646 --> 00:14:16,056 விசாரணைக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். 154 00:14:16,148 --> 00:14:18,568 கடைசி நேரத்தில் டிக்கட்டுகள் வாங்கி விமானத்தில் ஏறிவிட்டனர். 155 00:14:19,193 --> 00:14:21,203 புறப்படுவதற்கு 15 நிமிடம் முன்பு தான் நமக்கு தெரிய வந்தது. 156 00:14:21,612 --> 00:14:22,572 மைக், 157 00:14:22,654 --> 00:14:24,574 அவர்களைப் பற்றிய முழு விவரமும் எனக்கு வேண்டும். 158 00:14:29,161 --> 00:14:30,541 உட்காருங்கள். 159 00:14:36,835 --> 00:14:39,335 இதை போட்டுக் கொண்டு, உங்கள் முடியை மூடுங்கள். 160 00:14:41,673 --> 00:14:43,343 தயவுசெய்து, உங்கள் மேலாடையை மூடுங்கள். 161 00:14:45,302 --> 00:14:46,642 இங்கே காத்திருங்கள், சரியா? 162 00:14:46,720 --> 00:14:47,550 வா. 163 00:15:01,318 --> 00:15:03,108 என் தளத்தில் இருந்த ஒரு அதிகாரியை கழிப்பறையில் பார்த்தேன். 164 00:15:04,863 --> 00:15:06,823 உனக்கு மூளை குழம்பிவிட்டதா? 165 00:15:07,282 --> 00:15:09,372 யோனி, நிச்சயமாக, எனக்கு அவளைத் தெரியும். 166 00:15:09,451 --> 00:15:12,791 சுதந்திர தினத்தன்று எம்ஐடி தலைவரிடமிருந்து சிறந்த அதிகாரிக்கான விருது பெற்றாள். 167 00:15:12,871 --> 00:15:14,291 அழகானவள், நிறைய முறை பார்த்திருக்கிறேன். 168 00:15:14,373 --> 00:15:16,543 -லட்சம் முறை... -போதும். எனக்கு அதைக் கேட்கப் பிடிக்கலை. 169 00:15:16,625 --> 00:15:18,415 -யோனி, கொஞ்சம் கேள்... -போதும் நிறுத்து! 170 00:15:27,010 --> 00:15:28,680 நமக்கு என்ன நேரும் என்று நீ நினைக்கிறாய்? 171 00:15:28,762 --> 00:15:29,762 தெரியலை. 172 00:15:31,098 --> 00:15:32,138 என்ன? 173 00:15:32,224 --> 00:15:33,734 தெரியவில்லை, யோனி. நிறுத்து. 174 00:15:37,271 --> 00:15:38,271 எனக்குத் தெரியும். 175 00:15:39,565 --> 00:15:41,935 அந்த விமானத்தில் நாம் ஏறியிருக்கவே கூடாது. 176 00:16:47,049 --> 00:16:49,429 விமான நிலையத்தில் இரு இஸ்ரேலியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் 177 00:16:49,510 --> 00:16:51,800 ஆள் மாறாட்டம் செய்த பின் அவள் என்னைப் பார்த்துவிட்டாள் 178 00:16:51,887 --> 00:16:53,347 ஆனால் நமக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை 179 00:17:06,777 --> 00:17:08,067 கொஞ்சம் பொறுங்கள். 180 00:17:09,445 --> 00:17:11,865 இது ரொம்ப அழகாக இருக்கு. 181 00:17:17,454 --> 00:17:18,294 என்ன? 182 00:17:19,957 --> 00:17:20,957 என்ன சொல்கிறாய்? 183 00:17:22,000 --> 00:17:24,630 கொஞ்சம் கவலைப்படாமல் இருக்கிறீர்களா? 184 00:17:25,045 --> 00:17:27,795 பரவாயில்லை, அன்பே. எல்லாம் நன்றாகவே நடக்கும். 185 00:17:27,881 --> 00:17:29,011 நானா? 186 00:17:29,550 --> 00:17:31,010 உன்னை பற்றி நான் கவலைப்படவில்லை... 187 00:17:31,718 --> 00:17:35,138 நீ பார்த்துக்கொண்டிருக்கும் அட்டிகையின் விலையை நினைத்து கவலைப்படுகிறேன். 188 00:17:37,057 --> 00:17:38,137 உனக்கு வேண்டுமா? 189 00:17:38,225 --> 00:17:39,475 இனி வேண்டாம். 190 00:17:40,185 --> 00:17:41,345 அட... சும்மா அணிந்துப் பார். 191 00:17:41,436 --> 00:17:42,396 பரவாயில்லை... 192 00:17:42,479 --> 00:17:43,609 போடு... 193 00:17:49,069 --> 00:17:50,489 மன்னிச்சிடு. அழைப்பை எடுத்தாகணும். 194 00:17:51,488 --> 00:17:53,028 அணிந்துப் பார். 195 00:17:53,115 --> 00:17:54,485 இங்கே தான் இருக்கிறேன். இரண்டு நிமிடங்கள் தான் ஆகும். 196 00:17:55,367 --> 00:17:56,367 சொல், அலி. 197 00:17:56,451 --> 00:17:58,501 ஹலோ, சார். எப்படி இருக்கீங்க? 198 00:17:58,579 --> 00:18:01,789 தொந்தரவு செய்ததற்கு மன்னியுங்க. நீங்க விமான நிலையத்தில் இருப்பது தெரியும். 199 00:18:01,874 --> 00:18:03,464 என்ன விஷயம்? விஷயத்தை சொல். 200 00:18:03,542 --> 00:18:07,632 ஜோர்டானிலிருந்து வந்த ஒரு விமானம் இங்கு அவசரமாக தரையிறங்கியது. 201 00:18:07,713 --> 00:18:11,183 விமானத்தில் இருந்த இரண்டு இஸ்ரேலியர்கள் சிறப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்கள். 202 00:18:11,258 --> 00:18:12,888 நாங்கள் அங்கு விரைவில் வந்துவிடுவோம். 203 00:18:12,968 --> 00:18:14,178 இல்லை, அங்கேயே இருங்கள். 204 00:18:14,636 --> 00:18:15,636 அது உங்க வேலை இல்லை. 205 00:18:16,263 --> 00:18:17,143 சரி, சார். 206 00:18:17,222 --> 00:18:19,102 நான் பார்த்துக் கொள்கிறேன். சரி, சரி. 207 00:18:20,601 --> 00:18:22,771 வேறேதேனும் வேண்டுமா? 208 00:18:24,396 --> 00:18:25,396 அப்புறம்? 209 00:18:26,273 --> 00:18:27,273 ரொம்ப நல்லா இருக்கு! 210 00:18:27,858 --> 00:18:29,528 அது என்ன விஷயம்? யாரது? 211 00:18:29,943 --> 00:18:32,953 ஒன்றுமில்லை, அலிதான் அழைத்தான். நான்... 212 00:18:33,030 --> 00:18:35,410 நான் விமான நிலையத்தில் செய்ய வேண்டிய வேலை ஒன்று இருக்கு. 213 00:18:35,490 --> 00:18:38,120 அதற்கு நிறைய நேரம் ஆகாது. நான் நேரத்திற்குள் வந்துவிடுவேன். சரியா? 214 00:18:38,994 --> 00:18:40,374 சரியில்லை என்று சொன்னால்? 215 00:18:42,873 --> 00:18:44,793 சரி. உங்களை நுழைவு வாயிலில் சந்திக்கிறேன். 216 00:18:44,875 --> 00:18:47,035 சரி. சீக்கிரம் வந்துவிடுவேன். 217 00:18:47,127 --> 00:18:48,877 சரி, போங்கள். 218 00:18:56,428 --> 00:18:59,008 அணு ஒப்பந்தத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 219 00:18:59,932 --> 00:19:04,652 ஒரே நாளில், பணத்தின் கால்வாசி மதிப்பு குறையும் போது யாருக்கு அணுகுண்டு தேவை? 220 00:19:06,230 --> 00:19:07,270 சரிதான். 221 00:19:08,065 --> 00:19:11,775 எல்லா மாதமும் நிறைய சம்பாதிப்பேன், ஆனால் போன மாதத்ததை விட பாதி பணம் தான் இருக்கு. 222 00:19:11,860 --> 00:19:14,530 ஆனால் மேல்தட்டில் இருக்கும் மக்களுக்கு எங்களைப் பற்றிக் கவலை இல்லை. 223 00:19:20,244 --> 00:19:22,084 எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கு வளர்ந்தீர்கள்? 224 00:19:23,121 --> 00:19:24,621 நான் டெஹ்ரானில் வளர்ந்தேன். 225 00:19:25,916 --> 00:19:27,036 எங்கே? 226 00:19:28,502 --> 00:19:29,552 கார்டெனில். 227 00:19:30,212 --> 00:19:31,882 நல்ல சுற்றுச்சூழல்... 228 00:19:31,964 --> 00:19:34,094 எனக்கு அங்கு ஒரு குடும்பம் உள்ளது, அஸிஸி குடும்பம். 229 00:19:35,175 --> 00:19:36,925 எங்க பக்கத்து வீட்டாரின் பெயர் அஸிஸி தான். 230 00:19:37,010 --> 00:19:40,470 உண்மையாகவா? அதாவது, இது ஒரு பெரிய குலம்... 231 00:19:40,556 --> 00:19:42,136 கொடாடாடின் குடும்பம். 232 00:19:42,516 --> 00:19:45,136 அவர்களின் மகன் தேசிய அணிக்காக கால்பந்து விளையாடினான். 233 00:19:45,227 --> 00:19:48,017 இல்லை, அவர்களில்லை. வேறொரு அஸிஸி குடும்பம். 234 00:19:48,856 --> 00:19:50,646 தவறாக நினைக்காவிட்டால், உங்க பேச்சுவழக்கு வித்தியாசமாக இருக்கு. 235 00:19:52,651 --> 00:19:55,451 என் தந்தை ஒரு வியாபாரி, நாங்கள் உலகம் முழுதும் சென்றோம். 236 00:19:55,946 --> 00:19:57,566 கடைசியாக கத்தாரில் குடியேறினோம். 237 00:19:58,031 --> 00:20:00,281 நல்லது, நல்லது! நல்ல விஷயம்! 238 00:20:11,753 --> 00:20:12,843 என்ன நடக்கிறது? 239 00:20:13,505 --> 00:20:15,085 யாரையோ தூக்கிலிடுகிறார்கள். 240 00:20:30,647 --> 00:20:31,977 அவர் என்ன செய்தார்? 241 00:20:32,941 --> 00:20:34,571 அவர் ஒரு வங்கி மேலாளராக இருந்தார். 242 00:20:34,651 --> 00:20:38,281 அவர் எண்ணை நிதியில் மோசடி செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டார். 243 00:20:57,007 --> 00:20:57,877 இந்தாருங்கள். 244 00:21:09,770 --> 00:21:10,600 நன்றி. 245 00:21:11,021 --> 00:21:12,231 வைத்துக்கொள்ளுங்க, பரவாயில்லை. 246 00:21:14,858 --> 00:21:18,988 இது மாதிரியான கொடூரங்களையெல்லாம் பார்க்க மக்கள் வருகிறார்கள் என்பதை நம்பமுடியலை. 247 00:23:15,479 --> 00:23:16,649 வாங்க. 248 00:23:18,357 --> 00:23:19,397 நன்றி. 249 00:23:20,025 --> 00:23:21,275 ஜிலா எப்படி இருக்கிறாள்? 250 00:23:22,277 --> 00:23:23,317 நன்றாக இருக்கிறாள். 251 00:23:24,071 --> 00:23:25,821 பிறகு எல்லாம் எப்படி சென்றது? 252 00:23:25,906 --> 00:23:27,446 எந்த பிரச்சினையும் இல்லையே? 253 00:23:27,533 --> 00:23:28,993 எல்லம் நன்றாக நடந்தது. 254 00:23:29,493 --> 00:23:30,743 எந்த பிரச்சினையுமே இல்லை. 255 00:23:33,080 --> 00:23:34,870 என்னுடைய அறையை காண்பிக்கிறீர்களா? 256 00:23:36,124 --> 00:23:37,254 கண்டிப்பாக. 257 00:23:39,586 --> 00:23:40,666 என்னைப் பின்தொடருங்கள். 258 00:23:50,514 --> 00:23:52,564 இவையெல்லாம் ஜிலா வேலைக்கு அணிந்து செல்லும் ஆடைகள். 259 00:23:52,641 --> 00:23:53,891 சிறப்பு. நன்றி. 260 00:23:55,811 --> 00:23:58,561 நீங்கள் சாப்பிட வரலாம். நமக்காக இரவு உணவு சமைத்திருக்கிறேன். 261 00:23:59,147 --> 00:24:00,937 நன்றி, உண்மையிலேயே எனக்கு பசி இல்லை. 262 00:24:01,024 --> 00:24:02,114 ஏன்? அது நன்றாக இருக்கும். 263 00:24:02,192 --> 00:24:05,362 நன்றி. நான் இப்போது தயாராக வேண்டும். 264 00:24:08,657 --> 00:24:09,617 கண்டிப்பாக. 265 00:24:34,057 --> 00:24:35,307 அது அவளா? 266 00:24:35,392 --> 00:24:36,442 ஸ்பீக்கரில் போடு. 267 00:24:37,769 --> 00:24:38,649 ஹலோ. 268 00:24:38,729 --> 00:24:40,359 மதிய வணக்கம். 269 00:24:40,439 --> 00:24:41,729 ஹலோ. 270 00:24:42,482 --> 00:24:43,692 வானிலை எப்படி இருக்கிறது? 271 00:24:44,651 --> 00:24:45,821 தெளிவாக. 272 00:24:45,903 --> 00:24:47,653 நல்லது, நல்லது. 273 00:24:47,738 --> 00:24:49,158 நீ வீட்டிற்குச் சென்றுவிட்டாயா? 274 00:24:52,242 --> 00:24:53,242 ஆமாம். 275 00:24:54,286 --> 00:24:55,696 அங்கு அவர் இருந்தாரா? 276 00:24:56,872 --> 00:24:58,122 ஆமாம், கொஞ்சம் பதட்டமாக இருக்கிறார். 277 00:24:58,207 --> 00:25:01,167 விமான நிலையத்தில், அந்த இஸ்ரேலியர் ஆள் மாறாட்டத்தை கண்டுபிடித்ததாக நினைக்கிறாயா? 278 00:25:02,377 --> 00:25:03,747 நான் அப்படி நினைக்கவில்லை, அவள்... 279 00:25:03,837 --> 00:25:06,167 கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டாள், அவளை விசாரிக்க அழைத்துச் சென்றனர். 280 00:25:07,508 --> 00:25:08,718 நாம் திட்டத்தை தொடர்கிறோமா? 281 00:25:09,134 --> 00:25:10,394 ஜிலா அந்த குறியீடுகளை தரவில்லை. 282 00:25:11,595 --> 00:25:13,465 உன்னிடம் அவற்றை கடக்க ஏதேனும் வழியிருக்கிறதா? 283 00:25:17,851 --> 00:25:19,351 நான் யோசிக்க வேண்டும்... 284 00:25:19,436 --> 00:25:21,096 முடியும். ஆம், முடியும். 285 00:25:21,688 --> 00:25:22,608 எப்படி? 286 00:25:23,148 --> 00:25:25,228 எனக்கு தெரிந்த ஈரானிய ஹேக்கர் ஒருவர் இருக்கிறார். 287 00:25:25,692 --> 00:25:26,692 யார் அவர்? 288 00:25:27,069 --> 00:25:29,319 என் தொடர்பில் இருப்பவர், கேள்வி கேட்கமாட்டார், வெறும்... 289 00:25:29,404 --> 00:25:30,494 பணம் மட்டும்தான் கேட்பார். 290 00:25:30,948 --> 00:25:33,578 சரி, நன்று. எங்களுக்கு தகவல் கொடுத்துக் கொண்டே இரு. 291 00:25:42,793 --> 00:25:43,843 என்ன நடக்கிறது? 292 00:25:43,919 --> 00:25:45,919 அவள் அதை ஹேக் செய்யவதற்கு நீங்கள் தயாரா? 293 00:25:46,004 --> 00:25:46,884 ஆம், சார். 294 00:25:46,964 --> 00:25:49,174 அவள் ஈரானிய விமான எதிர்ப்பு அமைப்போடு தொடர்பு அமைத்த உடனே, 295 00:25:49,258 --> 00:25:51,178 அவள் ஏற்படுத்திய அந்த தொடர்பை செயல்பட வைக்கணும், 296 00:25:51,260 --> 00:25:53,640 பிறகு என்னால் ஈரானிய ரேடாரை அணு உலையைச் சுற்றி கட்டுபடுத்த முடியும். 297 00:25:53,720 --> 00:25:55,510 நான் சொல்வதை மட்டும் தான் அது பார்க்கும். 298 00:25:55,597 --> 00:25:57,517 விமானிகளுக்கு எவ்வளவு நேரம் கிடைக்கும்? 299 00:25:58,350 --> 00:26:01,140 விமான எதிர்ப்பு தாக்குதல் இல்லாத போது குறைந்தது ஐந்து நிமிடம். 300 00:26:11,029 --> 00:26:13,069 -அவர்களை பிரித்து வையுங்கள். -சரி, சார். 301 00:26:13,156 --> 00:26:14,156 இதோ. 302 00:26:16,493 --> 00:26:17,703 வாருங்கள். 303 00:26:51,361 --> 00:26:55,321 அப்போது நீங்கள் இங்கு தவறாக வந்துவிட்டீர்கள் என்று எனக்குப் புரிகிறது. 304 00:26:55,991 --> 00:26:56,831 ஆமாம். 305 00:26:56,909 --> 00:26:58,159 பரவாயில்லை. 306 00:26:58,702 --> 00:26:59,872 இதுபோன்ற விஷயங்கள் நடக்கும். 307 00:26:59,953 --> 00:27:03,333 உங்களை இங்கு தேவையில்லாமல் நீண்ட நேரம் வைப்பதற்கு நாங்கள் ஆசைப்படவில்லை. 308 00:27:04,249 --> 00:27:09,209 ஆனால் நீங்கள் எதிரி நாட்டின் பிரஜையாக இருப்பதனால்... 309 00:27:12,090 --> 00:27:15,680 உங்கள் இருவரிடமும் ஒரு சிறிய உரையாடல் நடத்தும் நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன். 310 00:27:16,261 --> 00:27:18,971 ஆனால்... அந்த ஜோர்டான் விமானம் எங்களுக்காக காத்திருக்குமா? 311 00:27:19,056 --> 00:27:21,306 பரவாயில்லை. அவர்கள் காத்திருப்பார்கள். 312 00:27:23,519 --> 00:27:26,099 நீங்கள் இஸ்ரேலிய ராணுவத்தில் என்ன செய்தீர்கள்? 313 00:27:28,190 --> 00:27:31,190 ஹீப்ரூவில் மஷாகிட் டாஷ் என அழைக்கப்படும். 314 00:27:31,944 --> 00:27:34,574 வீட்டில் பிரச்சினை இருக்கும் ராணுவத்தினருக்கு உதவுவேன், 315 00:27:34,655 --> 00:27:36,775 அதாவது அவர்களிடம் பணமில்லை என்றாலோ அல்லது... 316 00:27:36,865 --> 00:27:38,615 அவர்களது பெற்றோர்களில் ஒருவர் இறந்துவிட்டாலோ. 317 00:27:39,660 --> 00:27:41,120 உங்க தளம் எங்கிருந்தது? 318 00:27:41,703 --> 00:27:43,463 என்னுடைய வீட்டின் அருகில், டெல் அவிவில். 319 00:27:43,539 --> 00:27:46,459 நீங்கள் ஏதேனும் ரகசிய தகவல்களை கையாண்டீர்களா? 320 00:27:46,542 --> 00:27:47,842 இல்லை, இல்லை, இல்லை. 321 00:27:47,918 --> 00:27:51,378 யாருடைய பெற்றோர்கள் விவாகரத்து பெற்றார்கள் என்பதற்கு மேல் எதுவும் தெரியாது. தெரியுமா? 322 00:27:54,049 --> 00:27:57,719 ஏன் ஜோர்டான் வழியாக வந்தீர்கள்? 323 00:27:59,012 --> 00:28:01,272 ஏனென்றால் அது மிக மலிவானது, அது பாதி விலைதான். 324 00:28:05,978 --> 00:28:06,898 ஹலோ. 325 00:28:06,979 --> 00:28:09,439 இன்னும் 20 நிமிடங்களில் கதவை மூடுகிறார்கள். வருகிறீர்களா? 326 00:28:09,523 --> 00:28:10,773 இரண்டு நிமிடங்களில் வருகிறேன். 327 00:28:12,067 --> 00:28:16,907 அவர்களிடம், நான் யாரென்றும், பாதுகாப்பு சம்பந்தமான விஷயம் இருக்கிறது என்றும் சொல். 328 00:28:17,531 --> 00:28:18,781 நான் அங்கு வந்துவிடுகிறேன். 329 00:28:18,866 --> 00:28:22,906 நீங்க யார் என்பது அவர்களுக்கு கவலையில்லை. 300 பேர் இங்கிருந்து செல்ல வேண்டும்! 330 00:28:24,538 --> 00:28:25,828 இரண்டு நிமிடத்தில் வருகிறேன். 331 00:28:31,837 --> 00:28:32,837 நன்றி. 332 00:28:33,797 --> 00:28:36,177 அவர்கள் பேசியவற்றின் மொழிப்பெயர்ப்பு இதோ, சார். 333 00:28:38,093 --> 00:28:40,143 ஷிரா: என் தளத்தில் இருந்த ஒரு அதிகாரியை கழிப்பறையில் பார்த்தேன். 334 00:28:40,220 --> 00:28:41,310 யோனி: உனக்கு மூளை குழம்பிவிட்டதா? 335 00:28:44,808 --> 00:28:46,018 சரி. நன்றி. 336 00:29:06,538 --> 00:29:07,578 ஷிரா... 337 00:29:08,874 --> 00:29:09,964 என்ன? 338 00:29:10,042 --> 00:29:12,542 அந்த விமான பணியாளரோடு கழிப்பறையில் என்ன நடந்தது? 339 00:29:14,755 --> 00:29:15,755 என்ன? 340 00:29:16,548 --> 00:29:19,378 உங்களுக்கு சற்று முன் ஒரு விமான பணியாளருடன் 341 00:29:19,468 --> 00:29:21,638 கழிப்பறையில் ஒரு சின்ன சம்பவம் நடந்ததென்று கேள்விப்பட்டேன். 342 00:29:22,846 --> 00:29:26,516 பாதுகாப்பு காவலாளி நீங்கள் பேசுவதை பார்த்துள்ளார். 343 00:29:27,684 --> 00:29:29,354 ஆக, நீங்கள் எதைப் பற்றி பேசினீர்கள்? 344 00:29:31,897 --> 00:29:34,227 நான் அவளது சீருடையை பார்த்து ஆர்வமடைந்தேன். 345 00:29:37,027 --> 00:29:41,567 ஆக... நீங்கள் ஒரு எதிரி நாடால் கைது செய்யப்பட்டீர்கள்... 346 00:29:42,074 --> 00:29:45,954 அதோடு சிறிது நேரத்திற்கு முன் பயத்தால் கிட்டத்தட்ட மயங்கியே விட்டீர்கள், 347 00:29:46,036 --> 00:29:49,576 பின் திடீரென்று நீங்கள் அந்த சீருடையைப் பார்த்து ஆர்வமாகிவிட்டீர்கள். 348 00:29:51,291 --> 00:29:55,341 ஆம், சார்... நான் ஆர்வமாக இருந்தேன், அதோடு அவள் கொஞ்சம் பதட்டமடைந்தாள். 349 00:29:56,797 --> 00:30:00,007 பின், ஏன் அவள் பதட்டமடைய வேண்டும்? 350 00:30:00,092 --> 00:30:01,262 எனக்குத் தெரியாது, அவளைக் கேளுங்கள். 351 00:30:05,973 --> 00:30:07,773 நீங்கள் சீருடையைப் பற்றி பேசவில்லை. 352 00:30:08,267 --> 00:30:09,767 எதை பற்றி பேசிக் கொண்டிருந்தீர்கள்? 353 00:30:09,852 --> 00:30:11,352 உன் நண்பர் எதை கேட்க விரும்பவில்லை? 354 00:30:12,354 --> 00:30:15,114 -என்ன? -அந்த விமான பணியாளருடன் என்ன நடந்தது? 355 00:30:15,691 --> 00:30:17,731 உன் நண்பரிடம் நீ சொல்ல விரும்பிய ஆனால் 356 00:30:17,818 --> 00:30:19,028 அவன் கேட்க விரும்பாத விஷயம் என்ன? 357 00:30:19,862 --> 00:30:22,992 நான் மொஸாதிலிருந்து வரவில்லை, இந்தியாவிற்குத் தான் பயணித்தேன். 358 00:30:24,157 --> 00:30:25,527 என்னிடம் பொய் சொல்லிக் கொண்டே இருந்தால்... 359 00:30:27,327 --> 00:30:29,407 நீ உயிருடன் வீடு திரும்ப மாட்டாய். 360 00:30:35,544 --> 00:30:37,134 எனக்கு அவளைத் தெரியுமென நினைத்தேன். 361 00:30:38,630 --> 00:30:39,720 எப்படி? 362 00:30:51,643 --> 00:30:54,103 அவளை உனக்கு எப்படி தெரியும்? அவள் பெயர் என்ன? 363 00:30:57,774 --> 00:30:59,694 எனக்கு பெயர் ஞாபகம் இல்லை... 364 00:31:00,527 --> 00:31:01,777 ராணுவ தளத்தில் தான் அவளைத் தெரியும். 365 00:31:01,862 --> 00:31:03,662 எந்த ராணுவ தளத்தில் நீ பணியாற்றினாய்? 366 00:31:03,739 --> 00:31:04,909 என்ன ராணுவ பிரிவு? 367 00:31:05,574 --> 00:31:08,244 அது 8200. 368 00:31:08,327 --> 00:31:09,577 அது உளவுத்துறை பிரிவு. 369 00:31:09,661 --> 00:31:12,081 8200 என்றால் என்ன என்று எனக்குத் தெரியும். 370 00:31:12,164 --> 00:31:14,254 8200-யில் அவளின் பணி என்ன? 371 00:31:14,333 --> 00:31:16,963 எம்ஐடியின் தலைவரிடமிருந்து அவளுக்கு ஏன் விருது கிடைத்தது? 372 00:31:17,044 --> 00:31:19,134 எனக்கு இதைப் பற்றி ஏதும் தெரியாது, ஏனென்றால்... 373 00:31:19,213 --> 00:31:21,473 என் வேலை, வீரர்கள் நலன் சம்பந்தப்பட்டது தான். 374 00:31:21,548 --> 00:31:25,008 8200 பிரிவில் இருக்கும் அதிகாரி 375 00:31:25,093 --> 00:31:27,603 டெஹ்ரான் விமான நிலையக் கழிப்பறையில் ஏன் இருக்க வேண்டும்? 376 00:31:27,679 --> 00:31:28,929 எனக்குத் தெரியலை! 377 00:31:29,014 --> 00:31:30,604 நீ அதற்கு பதில் சொன்னால்... 378 00:31:31,642 --> 00:31:32,642 உன்னை நான் விட்டு விடுவேன். 379 00:31:32,726 --> 00:31:35,896 அது அவள் தானா என எனக்கு நிச்சயமாக தெரியலை, ஏனெனில்... அவள் ஆங்கிலத்தில் பேசினாள், 380 00:31:35,979 --> 00:31:38,399 நான் யாரைப் பற்றி பேசுகிறேன் என்று தெரியவில்லை என சொன்னாள். 381 00:31:39,233 --> 00:31:42,073 அதனால் நான் குழம்பி இருக்கலாம். 382 00:31:55,457 --> 00:31:57,077 டி-அரட்டை சிக்-பாய் இடத்திற்கு வருக 383 00:31:57,167 --> 00:31:59,837 என்னை தொடர்பு கொள்ள இந்த கணக்கு புதிரை கண்டுபிடிக்கவும் 384 00:32:01,004 --> 00:32:02,054 இவன் ஒரு தொல்லை. 385 00:32:08,428 --> 00:32:10,348 ஷக்கீரா ஆன்லைனில் இருக்கிறாள் 386 00:32:10,430 --> 00:32:12,890 சிக்-பாய்: ஷக்கீரா! வெகு நாட்கள்... 387 00:32:13,934 --> 00:32:16,064 ஷக்கீரா: யார் திரும்பி வந்துள்ளார் என கண்டுபிடி... 388 00:32:16,144 --> 00:32:18,064 சிக்-பாய்: நீ உறுதியளித்த டேட்டிங் என்னவாயிற்று? 389 00:32:18,939 --> 00:32:21,229 ஷக்கீரா:ஷக்கீராவோடு சுற்றுவது ஒரு பரிசு... நீ அதை இன்னும் வெல்லவில்லை. 390 00:32:23,235 --> 00:32:26,025 சிக்-பாய்: ஷக்கீராவோடு டேட்டிங் செய்ய நான் என்ன செய்யணும்? 391 00:32:27,281 --> 00:32:31,121 ஷக்கீரா: மின் நிறுவனத்துடன் நான் விளையாடப் போகிறேன் என்று வைத்துக் கொள்ளலாம். 392 00:32:32,202 --> 00:32:34,792 ஆனால் அதன் சேவையகத்தின் குறியீடுகள் என்னிடம் இல்லை... 393 00:32:34,872 --> 00:32:37,422 சிக்-பாய்: டேட்டிங்க்கு பதிலாக நான் குறியீடுகளை தர வேண்டுமா? 394 00:32:40,502 --> 00:32:41,752 ஷக்கீரா: ஆமாம். 395 00:32:47,301 --> 00:32:53,061 விமானத்தின் கணினி சார்ந்த பிரச்சினை தீர்க்கப்பட்டது. 396 00:32:53,140 --> 00:32:57,900 விமானம் புறப்பட போகிறது, அனைவரும் நுழைவாயிலுக்கு வரவும். 397 00:33:06,862 --> 00:33:08,072 ஆமாம், ஃபராஸ். 398 00:33:08,155 --> 00:33:09,405 சார். 399 00:33:09,489 --> 00:33:12,329 ஜோர்டானிய விமானத்தில் வந்த இரண்டு இஸ்ரேலியர்களை 400 00:33:12,409 --> 00:33:14,749 விசாரிக்க நான் விமான நிலையத்தில் உள்ளேன். 401 00:33:14,828 --> 00:33:16,248 ஆம். என்னிடம் அதைப் பற்றிய விவரம் உள்ளது. 402 00:33:16,997 --> 00:33:22,837 இந்தப் பெண் இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரியை 403 00:33:22,920 --> 00:33:26,420 ஈரானிய விமான பணிப்பெண் சீரூடையில் பார்த்ததாக சொல்கிறாள். 404 00:33:26,507 --> 00:33:28,217 அது நிஜம் என உங்களுக்கு தோன்றுகிறதா? 405 00:33:28,300 --> 00:33:29,680 எனக்குத் தெரியவில்லை. 406 00:33:29,760 --> 00:33:33,220 இந்த இஸ்ரேலியர், நம்பிக்கைக்குரியவளா? 407 00:33:36,391 --> 00:33:39,191 அவள் ஏன் பொய் சொல்லப் போகிறாள்? 408 00:33:39,269 --> 00:33:43,149 அது உண்மை என எடுத்துக் கொண்டால், அவளுக்கு அதில் ஏதாவது பங்கு இருக்குமா? 409 00:33:43,649 --> 00:33:45,939 அவள் அங்கு இருந்திருக்கவே கூடாது. 410 00:33:46,026 --> 00:33:50,856 ஆனால் என்னை முடிவெடுக்க சொன்னால், இரவு முழுவதும் அவளை விசாரிப்பேன். 411 00:33:50,948 --> 00:33:52,738 அவளுக்கு ஏதாவது நினைவுக்கு வரலாம். 412 00:33:54,117 --> 00:33:55,077 சரி. 413 00:33:56,745 --> 00:34:00,205 நமக்கு நல்லது செய்வதை விட அவள் தீங்கு செய்யப் போகிறாள் என தோன்றுகிறது. 414 00:34:00,290 --> 00:34:03,340 இப்போது நமக்கு எந்த சர்வதேச பிரச்சினையும் வேண்டாம். 415 00:34:03,418 --> 00:34:06,418 அவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் இணைப்பு விமானத்தில் செல்லட்டும். 416 00:34:08,507 --> 00:34:11,887 உங்க மனைவியுடன் பாரிஸ் செல்ல விமான நிலையத்தில் இருக்கிறீர்கள், அல்லவா? 417 00:34:11,969 --> 00:34:13,429 ஆமாம். 418 00:34:13,512 --> 00:34:17,102 சரி, உங்க மனைவியிடம் போங்க அலி இதனைப் பார்த்துக் கொள்வான். 419 00:34:17,181 --> 00:34:18,811 வாழ்த்துக்கள். 420 00:34:18,891 --> 00:34:19,851 அவளுக்காக நான் பிரார்த்திக்குறேன். 421 00:34:20,853 --> 00:34:22,273 நன்றி. 422 00:34:34,699 --> 00:34:35,699 சாயித். 423 00:34:36,659 --> 00:34:42,169 பெண்கள் கழிப்பறையில் இருந்து பாதுகாப்பு வீடியோ காட்சிகள் எனக்கு வேண்டும் 424 00:34:42,248 --> 00:34:45,088 ஜோர்டானிய விமானம் தரையிறங்கியதில் இருந்து. 425 00:34:45,168 --> 00:34:46,838 -சரி, சார். -எங்கு உள்ளது? 426 00:35:34,885 --> 00:35:36,755 நீ கொஞ்சம் அவளைப் போல இருக்கிறாய், தெரியுமா? 427 00:35:39,181 --> 00:35:40,471 அது ஒரு பாராட்டு. 428 00:35:41,600 --> 00:35:43,690 உங்க மனைவி ரொம்ப அழகா இருக்காங்க. 429 00:35:45,771 --> 00:35:47,151 இது எல்லாமே அவளுடைய யோசனை. 430 00:35:48,357 --> 00:35:51,937 முதலில் நான் கேட்கவில்லை, ஆனால் அவள் கட்டாயப்படுத்தினாள். 431 00:35:54,321 --> 00:35:56,111 நான் பணத்திற்காக இதை செய்யவில்லை. 432 00:35:57,699 --> 00:35:59,489 அவளை நேசிப்பதால் தான் இதை செய்கிறேன். 433 00:36:02,120 --> 00:36:04,790 கடவுள் சித்தமானால், நாளை மறுபடியும் அவளைப் பார்ப்பீர்கள். 434 00:36:04,873 --> 00:36:07,083 இல்லை, பார்க்க மாட்டேன். 435 00:36:09,336 --> 00:36:11,046 அவள் திரும்பி வர போவதில்லை, அன்பான ஜிலா. 436 00:36:13,632 --> 00:36:14,762 எதனால் நீ அப்படி சொல்கிறீர்கள்? 437 00:36:15,843 --> 00:36:18,933 ஏனென்றால் எனக்குத் தெரியும்... 438 00:36:22,641 --> 00:36:24,431 அவள் இனிமேல் இங்கு வரப்போவதில்லை. 439 00:36:31,149 --> 00:36:32,359 கடவுள் உன்னை காப்பாற்றுவார். 440 00:36:34,528 --> 00:36:35,568 நன்றி. 441 00:37:18,113 --> 00:37:19,623 காத்திரு. நிறுத்து. 442 00:37:20,115 --> 00:37:21,575 முன்னாடி செல், முன்னாடி. 443 00:37:24,077 --> 00:37:24,947 நிறுத்து. 444 00:37:30,292 --> 00:37:31,382 இதை போடு. 445 00:37:39,009 --> 00:37:43,759 பாருங்க. இதில் இடது கையை பயன்படுத்துகிறாள் ஆனால் இதில் வலது கையை பயன்படுத்துகிறாள். 446 00:37:44,223 --> 00:37:45,433 ஆமாம், சார். 447 00:37:47,434 --> 00:37:49,774 பாருங்கள், இப்போது அவள் நுழைகிறாள். 448 00:37:49,853 --> 00:37:52,773 6:30 நிமிடங்களுக்கு பிறகு, வெளியே போகிறாள். 449 00:37:55,943 --> 00:37:58,153 இது வெவ்வேறு ஆட்கள் என நினைக்கிறேன். 450 00:37:58,237 --> 00:37:59,777 ஒருவர் தான் என்று நினைக்கிறேன். 451 00:38:00,864 --> 00:38:02,124 பெரிதாக்கி பார். 452 00:38:11,834 --> 00:38:15,254 இது இரு வேறு மனிதர்கள். ஆள் மாறாட்டம் செய்துள்ளார்கள். 453 00:38:15,337 --> 00:38:18,467 நியூ தில்லி செல்லும் ஜோர்டானிய விமானத்தை உடனடியாக நிறுத்துங்கள்! 454 00:38:18,549 --> 00:38:20,589 என்ன நடந்தாலும்! விமானத்தை புறப்பட அனுமதிக்காதீர்கள்! 455 00:38:20,676 --> 00:38:21,886 சரி, சார். 456 00:38:25,556 --> 00:38:27,306 நாம் எப்போது புறப்படுவோம்? 457 00:38:27,391 --> 00:38:28,431 நான் பதட்டமாக உள்ளேன். 458 00:38:29,518 --> 00:38:31,098 இன்னும் சில நிமிடங்களில் புறப்படுவோம். 459 00:38:32,187 --> 00:38:33,517 அமைதியாக இரு, சரியா? 460 00:39:12,728 --> 00:39:14,098 உங்க பை எங்கே? 461 00:39:14,188 --> 00:39:15,688 நஹீத்... 462 00:39:15,772 --> 00:39:17,772 முடித்து விட்டீர்களா? 463 00:39:17,858 --> 00:39:18,978 இல்லை. 464 00:39:19,484 --> 00:39:22,654 இங்கு ஒரு முக்கியமான சம்பவம் நடந்துள்ளது. 465 00:39:23,447 --> 00:39:24,817 நான் இங்கிருக்க வேண்டும். 466 00:39:29,536 --> 00:39:31,366 மேடம், மேடம்... 467 00:39:31,455 --> 00:39:34,035 நாங்கள் நுழைவாயிலை மூட வேண்டும், மொத்த விமானமும் காத்திருக்கிறது. 468 00:39:34,124 --> 00:39:35,584 சரி. ஒரு நிமிடம், தயவு செய்து. 469 00:39:36,543 --> 00:39:38,213 நான் இங்கிருக்க வேண்டும். 470 00:39:39,087 --> 00:39:40,587 என்னை மன்னிச்சிடு. 471 00:39:41,340 --> 00:39:43,430 நாளை முதல் விமானத்தில் நான் வருகிறேன். 472 00:39:46,595 --> 00:39:48,175 நான் எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன். 473 00:39:48,597 --> 00:39:51,017 முழு நேரமும் நான் உன்னுடன் தொடர்பிலேயே இருப்பேன். 474 00:39:52,976 --> 00:39:56,476 உன்னை ராணிப் போல பார்த்து கொள்வார்கள், நான் உறுதியளிக்கிறேன். 475 00:39:57,814 --> 00:39:59,274 நாளை அல்லது மறு நாள் நான் உன்னிடம் வருவேன். 476 00:40:01,276 --> 00:40:03,816 நீங்கள் கடைபிடிக்காத இந்த வாக்குறுதிகள் எனக்கு சலித்துவிட்டது. 477 00:40:09,409 --> 00:40:10,909 இது அழகாக உள்ளது! 478 00:40:12,371 --> 00:40:13,711 உனக்கு அழகாக உள்ளது. 479 00:40:16,708 --> 00:40:18,588 கடவுள் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார். 480 00:40:19,628 --> 00:40:21,258 நீ மீண்டு வருவாய், அன்பே. 481 00:40:22,548 --> 00:40:23,718 கடவுளின் சித்தமானானல். 482 00:40:30,138 --> 00:40:31,768 தயவு செய்து வேகமாக வாருங்கள். 483 00:40:31,849 --> 00:40:33,559 -வழிவிடுங்கள். -நன்றி. 484 00:40:37,855 --> 00:40:39,435 -பாதுகாப்பான பயணம் அமையட்டும். -நன்றி. 485 00:40:48,115 --> 00:40:49,155 என்ன? 486 00:40:49,241 --> 00:40:52,701 மன்னியுங்க, பாஸ், அவர்களை விட்டு விட வேண்டும் என ஆணை வந்தது. 487 00:40:52,786 --> 00:40:53,866 விமானம் புறப்பட்டது. 488 00:41:05,090 --> 00:41:07,300 விமானம் புறப்பட்டதாக இப்போது தான் உறுதியானது. 489 00:41:07,384 --> 00:41:10,724 இரண்டு இஸ்ரேலியர்கள், அஷ்ரஃப் மற்றும் புதிய பெண் அதில் பயணிக்கிறார்கள். 490 00:41:27,404 --> 00:41:28,744 நேரமாயிடுச்சு. 491 00:41:29,239 --> 00:41:30,659 நான் உன்னை அங்கு அழைத்து செல்லவா? 492 00:41:31,533 --> 00:41:33,293 இல்லை. நன்றி. நான் பார்த்துக் கொள்வேன். 493 00:41:34,912 --> 00:41:37,002 -கடவுள் துணையிருப்பார். -உங்களுக்கும். 494 00:41:51,845 --> 00:41:52,755 ஜிலா? 495 00:41:52,846 --> 00:41:55,846 கடைசியில் சிகிச்சை செய்துக் கொண்டாய் போல. 496 00:41:56,266 --> 00:41:59,726 வாழ்த்துக்கள்! நான் பரிந்துரைத்த மருத்துவரை நீ பார்த்தாயா? 497 00:42:00,354 --> 00:42:01,364 ஆமாம். 498 00:42:01,730 --> 00:42:04,020 நல்லது, அவர் சிறப்பாக செய்திருப்பார் என நம்புகிறேன். 499 00:42:04,816 --> 00:42:06,896 அதற்குள்ளே வேலைக்கு போகிறாயா? அதுவும் இவ்வளவு தாமதமாக? 500 00:42:07,819 --> 00:42:10,159 -சரி, மாலை நன்றாக அமையட்டும், அன்பே. -உங்களுக்கும். 501 00:43:03,417 --> 00:43:06,087 ஈரான் தேசிய மின் நிறுவனம் 502 00:43:25,355 --> 00:43:26,515 ஜிலா... 503 00:43:27,482 --> 00:43:29,822 சிறப்பு! கடைசியில் சிகிச்சை செய்துக் கொண்டாய் போல? 504 00:43:30,819 --> 00:43:33,449 நாங்கள் பார்க்க வேண்டும், எப்போது கட்டைப் பிரிப்பாய்? 505 00:43:34,239 --> 00:43:35,619 சில நாட்களில். 506 00:43:40,913 --> 00:43:42,083 என் மேல் உனக்கு கோபமா? 507 00:43:56,929 --> 00:43:58,929 அவர் உன்னிடம் தவறாக நடக்கிறார், ஜிலா. 508 00:43:59,556 --> 00:44:02,306 அவர் பெண்களிடம் இப்படி நடந்து கொள்வது முதல் முறையும் அல்ல. 509 00:44:03,018 --> 00:44:05,808 யாரெனும் அந்த காட்டுமிராண்டியை நிறுத்த வேண்டும். 510 00:44:05,896 --> 00:44:08,436 நீ அதை செய்யவில்லை என்றால், நான் செய்வேன். 511 00:44:16,532 --> 00:44:17,662 அவர் இங்கு தான் இருக்கிறார். 512 00:44:17,741 --> 00:44:19,991 எதோ ஒரு பிரச்சினைக்காக, இங்கு வரவழைக்கப்பட்டார். 513 00:44:20,077 --> 00:44:22,617 அவர் கோபமாக உள்ளார், கவனமாக இரு. 514 00:44:31,046 --> 00:44:35,046 ஏஜெண்ட் உள்ளே சென்றுவிட்டாள். 40 நிமிடங்களில் நம்மால் இயக்க முடியும். 515 00:44:37,177 --> 00:44:38,507 கன்டோர். 516 00:44:38,595 --> 00:44:40,255 விமானிகளை தயாராக இருக்கச் சொல். 517 00:44:40,347 --> 00:44:41,517 உந்துவிசை பயன்முறைக்கு மாற்று. 518 00:44:49,690 --> 00:44:52,610 ஹோஷென் ஒன்றில் இருந்து நான்கு, 1-8-யில் செலுத்துவதற்கு தயார். 519 00:44:52,693 --> 00:44:55,783 ஹோஷென் ஒன்றில் இருந்து நான்கு, 1-8-யில் செலுத்த தயார் நிலையில் உள்ளது. 520 00:45:52,461 --> 00:45:55,881 ஷக்கீரா: எனக்கு இப்போதே கடவுச்சொல் வேண்டும். 521 00:46:09,603 --> 00:46:11,563 சிக்-பாய்: 490607 522 00:46:14,233 --> 00:46:15,943 சிக்-பாய்: நம் டேட்டிங்கிற்காக காத்திருக்கிறேன். 523 00:46:20,364 --> 00:46:21,204 நுழைவு மறுக்கப்பட்டது 524 00:46:26,995 --> 00:46:28,495 நுழைவு அனுமதிக்கப்பட்டது 525 00:46:31,500 --> 00:46:33,170 டெஹ்ரானில் இருந்து நமக்கு ஒரு இட அமைவு கிடைத்துள்ளது. 526 00:46:37,923 --> 00:46:39,843 சரி, வெற்றிகரமாக மின் நிறுவனத்தின் காப்புப்பிரதி 527 00:46:39,925 --> 00:46:42,635 மூலமாக திருட்டுத்தனமாக விமான எதிர்ப்பு அமைப்பில் நுழைந்து விட்டாள். 528 00:47:14,710 --> 00:47:16,300 அவள் ஊடுருவலை துவங்கிவிட்டாள். 529 00:47:29,016 --> 00:47:30,766 நீ இங்கு இருப்பதாக சொன்னார்கள். 530 00:47:33,353 --> 00:47:35,613 ஹேய்! நான் உன்னுடன் தான் பேசிக் கொண்டிருக்கிறேன்! 531 00:47:36,356 --> 00:47:37,266 தொடர்பு துண்டிக்கப்பட்டது 532 00:47:37,357 --> 00:47:38,777 இரு, என்ன இது? 533 00:47:39,401 --> 00:47:41,861 எனக்குப் புரியலை, அவள் பதிலளிக்கவில்லை. என்ன பிரச்சினை என பார். 534 00:47:44,031 --> 00:47:45,241 இங்கு வா. 535 00:47:45,699 --> 00:47:48,199 ஜிலா, நில்! 536 00:47:48,619 --> 00:47:49,789 ஜிலா! 537 00:47:52,331 --> 00:47:53,371 அன்பே! 538 00:47:56,126 --> 00:47:57,536 எந்த பதிலுமில்லை. 539 00:48:06,970 --> 00:48:08,600 -என்ன விஷயம், வேசியே? -ஹேய்! 540 00:48:08,680 --> 00:48:10,810 உன் கணவன் கண்டுபிடித்துவிட்டதால், பயப்படுகிறாயா? 541 00:48:11,517 --> 00:48:12,807 எதிர்க்காதே. 542 00:48:15,896 --> 00:48:17,396 இங்கு வா, அன்பே. 543 00:48:17,481 --> 00:48:19,981 வா, என்னோடு உறவு கொள். 544 00:48:27,157 --> 00:48:28,327 இது என்ன? யார் நீ? 545 00:49:41,315 --> 00:49:43,315 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்