1 00:00:13,222 --> 00:00:16,183 இந்தத் தொடரில் இடம்பெறும் சம்பவங்களும் கதாப்பாத்திரங்களும், முற்றிலும் கற்பனையே. 2 00:00:16,265 --> 00:00:18,769 மறைந்தவர்களுடனோ அல்லது நிகழ்காலத்தில் வாழ்பவர்களுடனோ ஒற்றுமை காணப்பட்டால், 3 00:00:18,852 --> 00:00:20,312 அது தற்செயலாக நிகழ்ந்ததே. 4 00:00:22,564 --> 00:00:24,900 மொசாட் தலைமையகம், இஸ்ரேல் 5 00:00:27,277 --> 00:00:28,278 எனக்கு ரிப்போர்ட் பண்ணு. 6 00:00:32,533 --> 00:00:33,909 அந்த இரண்டாவது காரில் ஏதோ நடக்குது. 7 00:00:42,292 --> 00:00:43,377 உள்வரும் படம் 8 00:00:43,460 --> 00:00:44,419 ச்சே. 9 00:00:44,503 --> 00:00:45,838 அது யாருன்னு உனக்குத் தெரியுமா? 10 00:00:46,463 --> 00:00:47,422 அவர் அங்கே என்ன செய்கிறார்? 11 00:00:47,506 --> 00:00:48,674 அவர் சிறையில்தானே இருக்க வேண்டும். 12 00:00:50,175 --> 00:00:51,093 அவர்தான் அந்த விஞ்ஞானியா? 13 00:00:51,176 --> 00:00:53,971 ஆம், அவர்தான் பீட்டர்சன். அவர்தான் அவங்களுக்கு அந்த வெடிகுண்டை பண்ண முடியும். 14 00:00:59,226 --> 00:01:00,686 அவரை உள்ளே கூட்டிட்டுப் போறாங்க. 15 00:01:03,063 --> 00:01:06,024 - அவருக்கு ஒரு செப்பா துணை இருக்கான். - நீ பக்கத்துல போய் அவரைப் பிடிக்க முடியுமா? 16 00:01:06,108 --> 00:01:09,403 வாய்ப்பே இல்லை. நான் அந்த லைட்டை பொருத்துவதே சாத்தியமான்னு தெரியலை. 17 00:01:09,486 --> 00:01:11,572 அவங்களுக்கு கூடுதலா உதவி செய்ய நம்மிடம் நல்ல குழு இருக்கா? 18 00:01:11,655 --> 00:01:13,740 அவங்களுக்கு அருகில் இருக்கிற குழு என்றால் 40 நிமிட தூரத்துல இருக்காங்க. 19 00:01:14,449 --> 00:01:16,785 அப்போ நீ தனியாதான் போகணும். 20 00:01:20,080 --> 00:01:21,540 அவளுக்கு ஆதரவு இருக்கு. 21 00:01:39,808 --> 00:01:41,685 நீ அந்த சுவரை எப்படி கடக்கப் போற? 22 00:03:09,356 --> 00:03:11,233 அந்த காவலன் நிற்கிறான், கவனமா இரு. 23 00:03:32,880 --> 00:03:34,923 இப்போ கிளியர். போகலாம். 24 00:04:21,053 --> 00:04:23,430 நான் திரும்பவும் உன்னைக் கேட்கிறேன். நாங்க இதை பயன்படுத்தும்போது... 25 00:04:23,514 --> 00:04:26,058 இல்லை. இல்லை. இல்லை. நான் மாட்டேன்... நான் கொடுக்க மாட்டேன்... 26 00:04:26,141 --> 00:04:28,268 - நான் விஞ்ஞானியைப் பார்க்கிறேன். - நமக்கு நேரமில்லை... 27 00:04:28,352 --> 00:04:29,895 அவங்க அவரிடம் எதையோ காட்டறாங்க. 28 00:04:29,978 --> 00:04:33,106 எதைக் காட்டறாங்க? டெக்கா, போர்க்கனைகளின் பாகமா? 29 00:04:33,190 --> 00:04:34,858 என்னால் பார்க்க முடியல. 30 00:04:34,942 --> 00:04:37,361 உனக்குப் புரியுதா? நீ எங்களுக்கு உதவி செய்யணும். 31 00:04:37,444 --> 00:04:39,279 ஆனால் அவர் அமைதியா இல்லை. பதட்டமா இருக்கார். 32 00:04:39,363 --> 00:04:42,282 சரி, எரிக் பீட்டர்சனைப் பற்றிய விவரங்களை எல்லாம் எனக்குக் கொடுங்க. 33 00:04:42,366 --> 00:04:44,493 அவங்களுக்கு உதவ அவரை வற்புறுத்தறாங்கன்னா, நாம் இப்போது செயலில் இறங்கணும். 34 00:05:13,188 --> 00:05:15,023 இங்கே இன்னும் வேறு யாரெல்லாமோ வர்றாங்க. 35 00:05:20,320 --> 00:05:21,780 அவங்க எல்லாம் யாரு? 36 00:05:25,117 --> 00:05:27,119 அந்த கதவைப் போய் பார். அங்கே என்ன நடக்குது? 37 00:05:27,202 --> 00:05:29,204 காவலாளிகளே, அங்கே போய் பாருங்க. 38 00:05:48,390 --> 00:05:49,683 அங்கே என்ன நடக்குது? 39 00:05:49,766 --> 00:05:52,102 ரிப்போர்ட் பண்ணு. யாராவது ரிப்போர்ட் பண்ணுங்க, அடச்சே! 40 00:05:54,313 --> 00:05:55,355 என்னால எதையும் பார்க்க முடியலை. 41 00:06:11,622 --> 00:06:12,539 அந்த பெட்டியைப் பார்க்க முடியுது. 42 00:06:13,123 --> 00:06:15,542 - தமார், நீ அதை எடுத்துக்கணும். - என்னால் பக்கதுல நெருங்க முடியாது. 43 00:06:18,962 --> 00:06:21,340 சுடுவதை நிறுத்து! சுடுவதை நிறுத்து. நீங்க பீட்டர்சனை சுடப் போறீங்க! 44 00:06:22,049 --> 00:06:23,759 அதை தயார் பண்ணு. நாம இப்போ போகணும்! 45 00:06:32,100 --> 00:06:34,228 - சுடாதீங்க! - நீ யாரு? 46 00:06:34,311 --> 00:06:35,521 நான் யாரும் இல்லை. யாரும் இல்லை. 47 00:06:36,980 --> 00:06:39,316 - நாடெர், காரைக் கொண்டு வா. - நாடெர், காரைக் கொண்டு வா. 48 00:06:48,492 --> 00:06:50,911 நிறுத்துங்க! சுட வேண்டாம்! அவரை சுடப் போறீங்க! 49 00:06:50,994 --> 00:06:52,204 தாக்குதல் செய்யறவங்க அவரை அழைச்சுட்டுப் போறாங்க. 50 00:06:52,287 --> 00:06:53,455 எழுந்திரு! 51 00:06:53,997 --> 00:06:55,207 சீக்கிரம் ஆகட்டும்! 52 00:06:56,333 --> 00:06:57,292 காஸெம். 53 00:07:01,922 --> 00:07:03,006 முசாவி போறான். 54 00:07:03,090 --> 00:07:04,925 - அவன் அந்த பாகங்களை எடுத்துக்கொண்டானா? - அவங்க ஒரு கனத்த பெட்டியை தூக்கிட்டு இருக்காங்க. 55 00:07:05,008 --> 00:07:05,884 நான் என்ன செய்யணும்? 56 00:07:05,968 --> 00:07:08,595 யார் அந்த பெட்டியை வச்சிருக்காங்களோ, அவங்கள சுடு. தமார் நீ அதை எடுத்துக்கோ. 57 00:07:32,286 --> 00:07:35,831 சீக்கிரம்! நாம போகணும்! 58 00:07:37,291 --> 00:07:39,001 - நாடெர்! - காஸெம்! 59 00:08:32,554 --> 00:08:33,514 கடவுளே. 60 00:08:34,847 --> 00:08:37,267 - ரொம்ப பட்டிருக்கா? - அதெல்லாம் ஒண்ணும் இல்லை. 61 00:08:38,059 --> 00:08:39,352 நாம திரும்பிப் போன பிறகு, உன்னை கவனிக்கிறோம். 62 00:08:40,229 --> 00:08:42,438 - இது ரொம்ப சுலபம்னு சொன்ன! - வாயை மூடு! 63 00:08:43,440 --> 00:08:45,359 நீ காவலர்கள் இருப்பதாகச் சொல்லவே இல்லையே. 64 00:08:45,442 --> 00:08:47,069 காவலர் அங்கே இருப்பாங்கன்னு தெரியாது, சரியா? 65 00:08:47,152 --> 00:08:49,404 இதெல்லாம் எதுவுமே நடந்திருக்கக் கூடாதுதான்! 66 00:08:49,488 --> 00:08:50,489 இது என்னது? 67 00:08:50,572 --> 00:08:52,574 - நீ என்ன கண்றாவியை செய்ய முயற்சி... - வாயை மூடு! 68 00:08:54,159 --> 00:08:55,494 உன் ஸ்கார்ஃபை என்னிடம் கொடு. 69 00:08:57,704 --> 00:08:59,248 இங்கே வா. 70 00:08:59,331 --> 00:09:00,874 - இல்லை. - வா இங்கே. 71 00:09:01,708 --> 00:09:03,210 வேண்டாம். பிளீஸ். 72 00:09:07,297 --> 00:09:09,466 நாம தெரியாம எதுல காலை விட்டிருக்கோம்? 73 00:10:18,410 --> 00:10:19,453 மிக்க நன்றி. 74 00:10:21,121 --> 00:10:23,248 நான் என் வேலையைத்தான் செய்தேன். 75 00:10:23,332 --> 00:10:25,459 நீங்க அதுக்கு மேலயே செய்துட்டீங்க. 76 00:10:26,251 --> 00:10:28,837 என்ன செய்யணுமோ, அதைச் செய்தேன். 77 00:10:36,929 --> 00:10:37,846 அவங்க பக்கத்திலதான் இருக்காங்க. 78 00:10:39,056 --> 00:10:41,683 இந்த குழப்பத்துல நமக்கு ஏதோ கிடைச்சதே. 79 00:10:44,269 --> 00:10:46,438 அந்த பெட்டி என்ன ஆனது? உன்னால அந்த லைட்டைப் பொருத்த முடிந்ததா? 80 00:10:47,940 --> 00:10:50,442 இல்லை. செப்பா அதை வச்சிருக்காங்க. 81 00:10:51,276 --> 00:10:53,362 அதுக்கு வாய்ப்பே இல்லை. ஒரே குழப்பமா இருந்தது. 82 00:10:54,029 --> 00:10:55,447 நீ அவளுக்கு வக்காலத்து வாங்குறயா? 83 00:10:57,032 --> 00:10:57,866 இல்லை. 84 00:11:00,244 --> 00:11:03,247 ஆனால் அந்த சூழ்நிலையில் அவளால் என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்தாள். 85 00:11:03,956 --> 00:11:05,332 எனவே யார் அந்த கொட்டகையைத் தாக்கியது? 86 00:11:06,708 --> 00:11:07,835 எனக்குத் தெரியாது. 87 00:11:07,918 --> 00:11:09,586 ஆனால் அதில் ஒருவனுடைய அடையாள அட்டை எனக்குக் கிடைச்சது. 88 00:11:12,130 --> 00:11:13,799 காஸெம் பிஜானி. 89 00:11:14,383 --> 00:11:15,759 அவன் இன்னிக்கு அந்த உணவகத்துல ரமீனுடன் இருந்தான். 90 00:11:17,219 --> 00:11:19,096 அவனுடைய அடையாள அட்டையை அனுப்புறேன். 91 00:11:21,849 --> 00:11:24,059 அதனால பீட்டர்சன் உயிருடன் தான் இருக்கிறார் என்று நாம் எடுத்துக்கலாமா? 92 00:11:24,142 --> 00:11:26,103 ஆமாம். நான் அந்த லைட் மட்டும் அவர் இருந்த கார்ல பொருத்திட்டேன். 93 00:11:27,104 --> 00:11:28,105 அதைப் பார்த்தேன். 94 00:11:28,939 --> 00:11:32,067 சரி, ஈரானியர்கள் அவரைப் பிடிக்கும் முன் நாம் அவரைப் பிடித்துவிட வேண்டும். 95 00:11:32,150 --> 00:11:34,111 அவருக்கு அந்த நியூக்கிளியர் போர்க்கனையைப் பற்றிய தகவல் தெரிந்திருக்க வேண்டும். 96 00:11:34,194 --> 00:11:35,112 புரியுது. 97 00:11:35,195 --> 00:11:38,490 தமிர், இந்த காஸெம் யாரு, யாருடன் அவனுக்குத் தொடர்புள்ளதுன்னு கண்டுபிடி. 98 00:13:42,823 --> 00:13:44,658 டிராவலெர்ஸ் கைட் - நார்வே 99 00:14:14,479 --> 00:14:15,314 ஹலோ? 100 00:14:15,397 --> 00:14:19,026 சகோதரா கமலி, நீங்க ரமீன் காஸிமியின் கொட்டகைக்குக் கொஞ்சம் வரணும். 101 00:14:19,109 --> 00:14:20,694 அங்கே ஒரு திருட்டு நடந்துவிட்டது. 102 00:14:20,777 --> 00:14:23,447 ஏதோ ஒரு கொட்டகையில நடந்த திருட்டைப் பற்றி எனக்கென்ன கவலை? 103 00:14:30,454 --> 00:14:32,080 நான் போக வேண்டும். வேலை வந்திருக்கு. 104 00:14:41,882 --> 00:14:43,258 நான் உன்னை அப்புறமா சந்திக்கிறேன். 105 00:14:43,342 --> 00:14:44,468 பார்ப்போம். 106 00:15:23,632 --> 00:15:24,716 அவா அட்டோபாக்கியை அழைக்கிறோம் 107 00:15:26,844 --> 00:15:27,803 நஹீத்? 108 00:15:28,679 --> 00:15:30,472 பார்த்து ரொம்ப நாள் ஆச்சு, அக்கா. 109 00:15:36,687 --> 00:15:38,605 அவங்க இங்கிருந்து இரண்டு பிளாக் தள்ளிதான் இருக்காங்க. 110 00:15:41,149 --> 00:15:43,193 நான் உங்களுக்கு ஒரு தகவல் சொல்லப் போறேன். 111 00:15:43,277 --> 00:15:44,778 நீங்க கண்டிபிடிச்ச அந்த இறந்த நபர், 112 00:15:44,862 --> 00:15:48,323 அவன் பரதரான் என்கிற ஒரு "சகோதரத்துவ" குழுவுடன் தொடர்புள்ளவன். 113 00:15:49,658 --> 00:15:52,160 ஒரு ரொம்ப சிறிய அமைப்பு, வன்முறையில ஈடுபடுறவங்க, 114 00:15:52,244 --> 00:15:55,414 மற்ற எதிர் கட்சிகளுடன் எந்த தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. 115 00:15:56,248 --> 00:15:59,459 அதில் ஒருவனை எனக்கு அடையளம் தெரியுது. அவன்தான் இன்னிக்கு ரமீனுடனும் இருந்தான். 116 00:16:04,715 --> 00:16:06,967 அதோடு, ஃபராஸ்? அவர் எப்படி இருக்கார்? 117 00:16:07,467 --> 00:16:08,802 அவர் நல்லா இருக்கார். 118 00:16:09,428 --> 00:16:11,138 வேலையில பிசியாக இருக்கார். 119 00:16:11,221 --> 00:16:16,393 ஆம், அப்படித்தான் இருப்பார். அவருடைய வேலை அப்படி, இன்னும் அதிகமா தான் ஆகும். 120 00:16:16,476 --> 00:16:17,603 பிளீஸ், அவா. அதைப் பற்றி பேச வேண்டாம். 121 00:16:17,686 --> 00:16:19,188 நான் செய்திகளைப் பார்க்கிறேன், நஹீத். 122 00:16:19,271 --> 00:16:21,023 அங்கே என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியும். 123 00:16:22,524 --> 00:16:25,027 - அதோட, உன் கணவர்தான் அங்கே... - வேண்டாம். 124 00:16:25,694 --> 00:16:27,863 ...அப்படி ஒருவராக இருக்க முடியும். கேளு. 125 00:16:27,946 --> 00:16:29,907 அவர் எப்போதுமே அப்படித்தான் இருந்திருக்கிறார், 126 00:16:29,990 --> 00:16:32,618 ஆனால் நீயும் அவங்கள்ல ஒருத்தியா இருப்பது தான் 127 00:16:33,660 --> 00:16:35,913 என்னால நம்ப முடியாத விஷயம். 128 00:16:39,708 --> 00:16:40,667 நஹீத்... 129 00:16:43,545 --> 00:16:46,507 உன்னிடம் அங்கே என்ன இருக்கு? பார்க்கட்டும். 130 00:16:47,174 --> 00:16:49,468 இங்கே வந்து ஆன்டிக்கு ஹலோ சொல்லு! 131 00:16:49,551 --> 00:16:53,472 இவன் தான் என் பேரன், அமீன். 132 00:16:53,555 --> 00:16:58,352 எங்கே கையை அசை, என் தங்கமே. 133 00:16:59,853 --> 00:17:03,774 அடடே, அவா. அவன் அப்பாவைப் போலவே இருக்கான், அவர் ஆன்மா சாந்தி அடையட்டும். 134 00:17:03,857 --> 00:17:07,152 பாரு, ஆன்டி நம்மள வந்து பார்க்க வேண்டாமா, அவங்களை வரச் சொல், சரியா? 135 00:17:07,236 --> 00:17:09,363 - அப்படியா? - ஆமாம். 136 00:17:27,839 --> 00:17:30,259 வந்து கதவைப் பிடி. சீக்கிரம். 137 00:17:30,342 --> 00:17:31,510 - பாருப்பா. - என்ன ஆச்சு? 138 00:17:31,593 --> 00:17:33,387 - அவனை வெளியே எடுங்கள். - இது என்னது? 139 00:17:33,470 --> 00:17:35,264 - இங்கே என்ன நடக்குது? - அவனை வெளியே கொண்டு வாங்க. 140 00:17:35,347 --> 00:17:37,432 வெளியே போ! போ! 141 00:17:37,516 --> 00:17:38,767 நக... நகரு. 142 00:17:38,851 --> 00:17:40,561 - என்னை எங்கே கொண்டு போறீங்க? - பேச்சை நிறுத்து. 143 00:17:40,644 --> 00:17:41,812 கார் நின்றுவிட்டது. 144 00:17:42,646 --> 00:17:45,524 - அவர்கள் எவ்வளவு கிட்டத்தில் இருக்கிறார்கள்? - இலக்கிலிருந்து ஏழு நிமிடங்கள். 145 00:17:46,149 --> 00:17:47,359 அவங்க நிறுத்திட்டாங்க. 146 00:17:47,442 --> 00:17:49,444 அவங்க நமக்கு முன்னாடித்தான் இருக்காங்க. இங்கே இடது பக்கம் திரும்பு. 147 00:18:16,138 --> 00:18:17,014 எனக்கு ரிப்போர்ட் பண்ணு. 148 00:18:17,556 --> 00:18:20,309 - ச்சே. - அவங்க கார்களை மாத்திட்டாங்க. 149 00:18:22,436 --> 00:18:24,771 - அந்த விஞ்ஞானி என்ன ஆனார்? - இங்கே யாரும் இல்லை. 150 00:18:26,565 --> 00:18:28,108 நாம இங்கிருந்து போய்விடணும். 151 00:18:47,836 --> 00:18:49,713 அவன் மீது அடையாள அட்டை எதுவும் இருக்கவில்லையா? 152 00:18:49,796 --> 00:18:51,798 இல்லை, சார். நாங்களும் அதைத்தான் தேடுறோம். 153 00:18:53,050 --> 00:18:55,260 அஹ்மட், இந்த கேடுகெட்டவங்க என்ன செய்திருக்காங்கன்னு பார்த்தாயா? 154 00:19:08,941 --> 00:19:09,775 கமலி. 155 00:19:11,235 --> 00:19:12,361 செப்பாவின் உளவுத் துறை. 156 00:19:12,444 --> 00:19:14,154 - ரமீன் காஸிமி. - நீ யாருன்னு எனக்குத் தெரியும். 157 00:19:14,238 --> 00:19:15,489 ஆனால் நீ இங்கே என்ன செய்யற? 158 00:19:15,572 --> 00:19:17,282 யாரோ எனக்கு உரிமையான இடத்தில் புகுந்து 159 00:19:17,366 --> 00:19:20,452 என் நிர்வாகம் டெலிவரி செய்துகொண்டிருந்த ஒரு பெட்டியை திருட முயற்சி செய்திருக்காங்க. 160 00:19:21,537 --> 00:19:25,749 அதுல ஏதாவது பிரச்சினை என்றால், எனக்கு உயர்ந்த இடத்தில் நண்பர்கள் உள்ளனர். 161 00:19:25,832 --> 00:19:27,501 இதில் பெரும்பான்மையான பொருட்கள் அவர்களுடையது தான். 162 00:19:29,419 --> 00:19:31,630 யார் இதைத் செய்திருப்பார்கள் என நம்புகிறீர்கள்? 163 00:19:36,385 --> 00:19:37,553 எனக்கு எப்படித் தெரியும்? 164 00:19:38,929 --> 00:19:40,305 அதோடு, நீங்கள் என்னை இன்னும் விசாரிக்க விரும்பினால், 165 00:19:40,389 --> 00:19:42,558 என்னை ஷிராஸ் உணவகத்தில பார்க்கலாம். 166 00:19:42,641 --> 00:19:43,475 சரியா? 167 00:19:46,019 --> 00:19:49,690 உங்கள் பாதுகாப்பு குறைபாட்டினால் தான் இப்படி நடந்ததென்றால், 168 00:19:50,899 --> 00:19:54,736 உங்களுடைய அந்த நண்பர்கள் தேவைப்படுவார்கள், ஹம்? 169 00:20:00,242 --> 00:20:03,036 உங்களிடம் நான் என்ன சொல்வது? சரி... 170 00:20:08,500 --> 00:20:11,628 நான் கிளம்புகிறேன். ஏதாவது நடந்தால் என்னைக் கூப்பிடவும். 171 00:21:26,870 --> 00:21:27,871 சீக்கிரம்! 172 00:21:27,955 --> 00:21:29,581 எங்களுக்கு வந்து உதவி செய். 173 00:21:29,665 --> 00:21:31,917 - அவனை எடுத்துட்டுப் போங்க! - அவன் கையைப் பிடியுங்கள்! 174 00:21:32,000 --> 00:21:33,335 மேஜையை சுத்தம் செய்! 175 00:21:33,919 --> 00:21:36,046 உடனே மேஜையிலிருந்து பொருட்களை எடு! 176 00:21:36,129 --> 00:21:37,798 உடனே மேஜையிலிருந்து பொருட்களை அப்புறப்படுத்து! 177 00:21:42,386 --> 00:21:43,220 பாஹ்ராம்! 178 00:21:45,430 --> 00:21:46,723 தரையில உட்காரு! 179 00:21:48,433 --> 00:21:49,685 கடவுளே. 180 00:21:50,185 --> 00:21:51,687 - பேசு! - சயெத்! 181 00:21:52,855 --> 00:21:54,481 - அதை என்னிடம் கொடு! - இந்தா எடுத்துக்கொள். 182 00:21:54,565 --> 00:21:56,733 அவனை ஏன் அங்கே தனியா விட்டோம்? 183 00:21:56,817 --> 00:21:57,776 அவனை நான் தனியா விடலைன்னு சொன்னேனே! 184 00:21:57,860 --> 00:21:58,777 பாரு, பாஹ்ராம்! 185 00:21:58,861 --> 00:22:01,405 - என்ன நடந்ததுன்னு யாராவது சொல்லுங்களேன்! - சயெத்... சயெத்... 186 00:22:02,781 --> 00:22:05,242 - நாம அவனை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகணும்! - போதும் நிறுத்துங்க! 187 00:22:05,325 --> 00:22:07,244 அனைவரும் கொஞ்சம் வாயை மூடிட்டு, என்னை யோசிக்க விடுங்க! 188 00:22:07,327 --> 00:22:09,913 - அவனுக்கு ரத்தம் நிறைய கசியுது... - சீக்கிரம், பாஹ்ராம். 189 00:22:09,997 --> 00:22:12,332 பாஹ்ராம், முதலில் ஒரு முதலுதவிப் பெட்டியை எடு. அவனுக்கு ரத்தம் ரொம்ப போகுது. 190 00:22:20,257 --> 00:22:22,092 - அவன் யாரு? - உன் வேலையை மட்டும் பாரு. 191 00:22:27,014 --> 00:22:28,557 - அதை என்னிடம் கொடு. - திறந்து விடு. சீக்கிரம். 192 00:22:28,640 --> 00:22:30,684 - ஏதாவது பண்ணு. - அவனுக்கு ரத்தம் கசியுது. 193 00:22:30,767 --> 00:22:33,896 அந்த தோட்டா உள்ளே போய் சிக்கிட்டு இருக்கு. 194 00:22:33,979 --> 00:22:37,107 - அதை வெளியே எடு! - அதனால ரத்தம் இன்னும் அதிகமா கசியும்! 195 00:22:37,191 --> 00:22:38,984 - அதை அழுத்து. - நாம அவனை ஒரு டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகணும். 196 00:22:39,067 --> 00:22:41,778 - இதோ. - சீக்கிரம். ரத்தப் போக்கை நிறுத்து. 197 00:22:41,862 --> 00:22:43,739 நான் காயம் பட்ட இடத்தை அழுத்தி பிடிக்கிறேன். நீ பாண்டேஜ் போடு! 198 00:22:43,822 --> 00:22:46,241 அவனை டாக்டரிடம் கூட்டிட்டுப் போகணும். அவனுக்கு இன்னும் ரத்தப் போக்கு இருக்கு. 199 00:22:51,538 --> 00:22:53,373 அந்த யூதர்கள் தான் இதுக்குக் காரணம்னு நினைக்கிறயா? 200 00:22:54,041 --> 00:22:59,171 இருக்கலாம், ஆனால் இதுல ஒரு கும்பலுக்கு மேல ஈடுபட்டிருக்காங்கன்னு தோணுது. 201 00:23:01,215 --> 00:23:03,717 பீட்டர்சன் எதுக்கு அங்கே இருந்தார்? 202 00:23:11,975 --> 00:23:17,689 இறக்குமதியான அந்த பொருட்கள்ல, சில விஷயங்களை சரிசெய்ய வேண்டியிருந்தது... 203 00:23:19,358 --> 00:23:21,652 ஆனால், அல்லாவிற்கு நன்றி, அது தொலைந்து போகல. 204 00:23:22,653 --> 00:23:25,030 அது மிகப்பெரிய ஒரு மாற்றத்துக்கு வேண்டிய... 205 00:23:26,156 --> 00:23:27,950 கடைசி பாகமா இருந்தது. 206 00:23:30,911 --> 00:23:33,956 இந்த ஆயுதம் நம் ஈரானை தூய்மைப்படுத்தும், பிரிய சகோதரா. 207 00:23:34,456 --> 00:23:36,375 நீ நேசிக்கும் ஈரானை. 208 00:23:37,501 --> 00:23:40,254 அந்த சூழ்நிலையில் உள்ள சங்கடங்களை நாம புறக்கணிக்க முடியாது. 209 00:23:40,838 --> 00:23:43,298 ஒரு முழு-நீள செப்பா விசாரணை செய்தால், அது நம் எதிரிகளை எச்சரித்து விடும் 210 00:23:43,382 --> 00:23:45,425 அதாவது, நமக்கு பீட்டர்சன் போன்ற அணு விஞ்ஞானிகள் இல்லாததை காட்டிவிடும். 211 00:23:46,552 --> 00:23:48,971 அவரைக் கண்டுபிடிப்பதே நமது முதல் வேலை, 212 00:23:49,763 --> 00:23:53,267 ஆனால் அதை நாம் மறைமுகமாகவே சாதிக்க வேண்டும். 213 00:23:56,353 --> 00:23:57,646 ஆமாம். 214 00:23:58,981 --> 00:24:00,357 எனக்குப் புரியுது. 215 00:24:02,276 --> 00:24:03,652 நல்லது. 216 00:24:07,406 --> 00:24:10,242 இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, 217 00:24:11,076 --> 00:24:13,161 உன் விசுவாசத்தை நிரூபித்து, 218 00:24:13,245 --> 00:24:14,746 உன் மேல் உள்ள சந்தேகங்களை தகர்த்திவிடு. 219 00:24:16,707 --> 00:24:18,000 சந்தேகங்களா? 220 00:24:18,959 --> 00:24:19,793 என்ன சந்தேகங்கள்? 221 00:24:23,714 --> 00:24:25,674 உன் சக ஊழியரின் தற்கொலை. 222 00:24:26,258 --> 00:24:28,927 அந்த மோன்டாசெமி பெண்ணுடன் உன் நெருக்கம், 223 00:24:29,011 --> 00:24:33,682 ஜென்ரல் முஹமடியின் மரணத்தின்போது நடந்த செக்யூரிட்டி பற்றாக்குறை. 224 00:24:37,019 --> 00:24:38,020 சரி. 225 00:24:38,812 --> 00:24:40,814 பீட்டர்சனை மீட்டு கொண்டு வா... 226 00:24:43,150 --> 00:24:45,611 நீ நம்பத் தகுந்தவன் என்று நிரூபித்துவிடு, 227 00:24:46,945 --> 00:24:49,698 அப்போது என்ன பரிசு கிடைக்கும்னு உனக்கே தெரியும். 228 00:25:00,667 --> 00:25:04,546 போலீஸ் 229 00:25:13,222 --> 00:25:14,097 ஹலோ. 230 00:25:14,473 --> 00:25:18,101 ஒரு ஃபோனை ஒட்டு கேட்கணும். 231 00:25:21,230 --> 00:25:22,773 ரமீன் காஸிமி. 232 00:25:29,154 --> 00:25:30,239 இங்கே இடது பக்கம். 233 00:25:37,579 --> 00:25:39,289 சரி. இது போதும். 234 00:25:49,508 --> 00:25:51,885 இங்கே இறங்கணுமா? உறுதியாதான் சொல்றயா? 235 00:25:52,678 --> 00:25:55,264 ஆமாம். இப்போது இது என் பேட்டை. 236 00:25:56,890 --> 00:25:58,225 நீங்க என்னைப் பத்தி கவலைப்படறீங்களா? 237 00:26:02,855 --> 00:26:07,067 போய் தூங்குற வழியைப் பாரு. அலுவலகத்திலிருந்து நாளைக்கு புதிய முன்னேற்றம் வருதான்னு பார்ப்போம். 238 00:26:08,443 --> 00:26:12,239 - அதெல்லாம் எதுவும் இல்லைன்னா? - நாம திரும்பவும் காஸிமியைச் சுற்றுவோம். 239 00:26:18,328 --> 00:26:19,454 எனக்காக இதை வச்சுக்கிறீங்களா? 240 00:27:31,860 --> 00:27:33,070 திரும்பவும் நீயா? 241 00:27:33,153 --> 00:27:34,238 - அவளைப் பிடியுங்க. - என்னை விடுங்க. 242 00:27:34,321 --> 00:27:35,405 - வாயை மூடு. - என்னை விடுங்க. 243 00:27:35,489 --> 00:27:36,657 வாயை மூடுன்னு சொன்னேன். 244 00:27:37,574 --> 00:27:39,535 - நீ என்ன செய்யற? - இது என்னது? 245 00:27:39,618 --> 00:27:41,203 என்ன? போகலாம் வா. 246 00:27:41,286 --> 00:27:42,454 என்னை விடு! 247 00:27:42,538 --> 00:27:43,705 வாயை மூடு! 248 00:27:50,462 --> 00:27:52,005 - சரி. - போயிட்டே இரு. போ. 249 00:27:53,006 --> 00:27:54,800 பெண்ணே, நீ என்ன பண்ணியிருக்க? 250 00:28:02,349 --> 00:28:04,142 நீ இங்கே இருக்கக் கூடாதே. 251 00:28:12,943 --> 00:28:14,403 பாஸ், 252 00:28:14,486 --> 00:28:16,446 அவளுடைய ஃபோனை வச்சிருக்கேன். அவளுக்கு ஒரு ஃபோன் வருது. 253 00:28:25,289 --> 00:28:26,248 ஹலோ? 254 00:28:27,165 --> 00:28:28,333 ஹலோ? 255 00:28:31,336 --> 00:28:32,921 ஹலோ? நீங்க ஆர்டர் செய்த டாக்ஸி. 256 00:28:34,006 --> 00:28:36,258 உங்களுக்கு இன்னும் டாக்ஸி தேவையா? ஹலோ? 257 00:28:36,842 --> 00:28:38,802 நீ சவாரி செய்ய முடியாதுன்னு நினைக்கிறேன். 258 00:28:45,726 --> 00:28:47,102 என்னை எப்படிக் கண்டுபிடிச்ச? 259 00:28:51,773 --> 00:28:52,774 அந்த மருந்து. 260 00:28:55,360 --> 00:28:56,528 என்னை பின்தொடர்ந்து வந்தியா. 261 00:28:56,612 --> 00:28:58,947 - நான் உன்னை காப்பாத்தினேன். - எனக்கு பாதுகாப்பு தேவையில்லை. 262 00:28:59,031 --> 00:29:01,200 உனக்கு எது தேவைன்னு நீ நினைப்பதைப் பத்தி எனக்குக் கவலையில்லை. 263 00:29:02,367 --> 00:29:06,747 உண்மையைப் பேசுவோம். நீ என் உணவகத்துக்கு வர, நான் உன்னை கவனிக்கும்படி செய்யற, 264 00:29:06,830 --> 00:29:10,709 அப்புறம் போலீஸ் வந்து உன்னை பிடிக்குது, பிறகு அதே நாள் திரும்பி வர, இது முடியுமா? 265 00:29:11,585 --> 00:29:12,920 இப்போ என்னை முட்டாளாக்கிட்ட. 266 00:29:13,003 --> 00:29:15,047 தென்பகுதியிலிருந்து வரும் எந்த பெண்ணாலும் இப்படிச் செய்ய முடியாது. 267 00:29:15,839 --> 00:29:17,299 - அதோட இன்னிக்கு மாலை... - என்ன இன்னிக்கு மாலை? 268 00:29:17,382 --> 00:29:18,383 நீ எங்கே இருந்த? 269 00:29:19,801 --> 00:29:20,969 நாசமா போக. 270 00:29:23,555 --> 00:29:26,642 இறக்குமதியான என்னுடைய ஒரு பொருளை யாரோ திருடப் பார்த்தாங்க. 271 00:29:26,725 --> 00:29:28,477 அதனால அவளிடம் நான் சில கேள்விகளை கேட்கணும். 272 00:29:28,560 --> 00:29:29,686 நான் அதுல ஈடுபட்டிருக்கேன்னு நினைக்கிறயா? 273 00:29:30,854 --> 00:29:32,189 நான் பொய் சொல்றவன்னு நினைக்கிறயா? 274 00:29:32,272 --> 00:29:33,106 இல்லையா? 275 00:29:33,190 --> 00:29:34,691 நீ உண்மையைத் தான் சொல்றயா? சரி. 276 00:29:34,775 --> 00:29:37,402 - இங்கே வந்து சேருங்க. இங்கே வாங்க, உடனே! - அவர் சொன்னபடி செய்யுங்க. 277 00:29:38,403 --> 00:29:41,156 சீக்கிரம்! நீ என்ன செய்யற? போ. 278 00:29:41,240 --> 00:29:44,535 நீ உன்னைப் பத்தி சொன்னதை அவளிடம் விசாரிச்சேன். 279 00:29:44,618 --> 00:29:49,748 நீ என்னிடம் சொன்னதுக்கும், அவளிடம் சொன்னதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. 280 00:29:57,881 --> 00:30:00,300 ரமீன் தமாரை பின்தொடர்ந்திருக்கிறான்னு நினைக்கிறேன். அவளைப் பிடிச்சுட்டான். 281 00:30:00,843 --> 00:30:02,386 அவளுடைய ஃபோனை வச்சிருக்கான். 282 00:30:02,469 --> 00:30:03,720 ச்சே. 283 00:30:09,017 --> 00:30:11,019 அவளுக்கு வேற வழியில்லை. அவள் இந்த நகரத்துல தனியா இருக்கா. 284 00:30:11,103 --> 00:30:13,230 - அவள் பொய்களைச் சொல்லித்தான் ஆகணும். - அவளுக்கு வக்காலத்து வாங்காதே. 285 00:30:13,313 --> 00:30:17,150 ஆனால், நீ, நீ இந்த புகலிடத்துக்குள்ள வந்திருக்க. இங்கே இருக்கும் பெண்களை பயமுறுத்தியிருக்க. 286 00:30:17,860 --> 00:30:21,071 அந்தப் பெண்கள் ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க... 287 00:30:21,154 --> 00:30:22,948 என்னிடம் விளையாடுறயா? என்ன? 288 00:30:25,242 --> 00:30:28,662 நான் உங்க ஒவ்வொருவரையும் புரட்டி எடுத்து உண்மையை வரவழைப்பேன், சொல்லிட்டேன்! 289 00:30:29,246 --> 00:30:31,331 உங்க வாழ்வை நரகமாக்கிடுவேன்! 290 00:30:31,415 --> 00:30:33,625 அதெல்லாம் உன்னாலதான். 291 00:30:33,709 --> 00:30:36,128 அது மாத்திரம் நிச்சயம்! 292 00:30:36,211 --> 00:30:39,173 என்னை நேரா பாரு. உனக்கு நான் சொல்றதுல நம்பிக்கை இல்லையா? 293 00:30:40,966 --> 00:30:42,926 நீ என்ன, உண்மையை கக்கப் போறயா இல்லையா? 294 00:30:46,972 --> 00:30:48,265 பாவம். 295 00:30:48,891 --> 00:30:50,893 அந்த கதவு பக்கத்துலயே இரு. ஜாஹன், அவங்க எல்லோரையும் ஒண்ணா சேரு. 296 00:30:50,976 --> 00:30:53,353 எல்லோரும் இங்கே வாங்க! நகருங்க! 297 00:30:53,437 --> 00:30:54,479 நகருங்க! 298 00:30:55,606 --> 00:30:58,442 - தயவுசெய்யுங்க, ஐயா. - பின்னாடி போ! 299 00:30:58,525 --> 00:31:00,819 வா இங்கே! உன்னைத்தான்! 300 00:31:00,903 --> 00:31:01,987 போதும் நிறுத்து! 301 00:31:16,001 --> 00:31:17,044 நான் சொல்றேன். 302 00:31:19,922 --> 00:31:21,590 - சிறப்பு. - ஆனால் இங்கே வேண்டாம். 303 00:33:33,847 --> 00:33:37,309 - நீ இங்கே இருக்கயா? - சரி, சார். நான் வெளியே இருக்கேன். 304 00:33:41,355 --> 00:33:43,023 நான் காட்டிக் கொடுப்பவள் கிடையாது. 305 00:33:44,316 --> 00:33:45,317 சரி. 306 00:33:48,028 --> 00:33:49,696 நீயும் நானும், ஒரு உடன்படிக்கைக்கு வருவோம். 307 00:33:50,656 --> 00:33:54,284 எனக்கு உதவும் தகவலைச் சொல்லு, நான் இந்தப் பெண்களை விட்டுவிடுவதோடு, 308 00:33:54,368 --> 00:33:55,577 அவங்களுக்கு மருந்துகளையும் அனுப்புறேன். 309 00:33:55,661 --> 00:33:57,663 நான் அவர்களுக்கு பாதுகாப்பு தரேன். அவங்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்யறேன். 310 00:33:57,746 --> 00:33:59,164 நான் வாக்குத் தரேன். 311 00:34:02,251 --> 00:34:03,460 என் ஷிப்மெண்ட்டை யார் திருடினாங்க? 312 00:34:05,629 --> 00:34:06,880 என்னை பாரு. 313 00:34:08,090 --> 00:34:09,925 என் ஷிப்மெண்ட்டை யார் திருடினாங்க? 314 00:34:10,926 --> 00:34:13,594 என்னால் அவனைப் பார்க்க முடியுது. அவளை விசாரிக்கிறான். 315 00:34:13,679 --> 00:34:14,804 அவுல், 316 00:34:15,889 --> 00:34:19,476 அவள் உண்மையை கக்கிடுவான்னு நீ நினைச்சால், அப்படி நடக்காம பார்த்துக்கொள்வது உன் பொறுப்பு. 317 00:34:31,947 --> 00:34:33,739 அதுக்கு காரணம் பரதரானா இருக்கலாம். 318 00:34:33,824 --> 00:34:35,117 யாரு? 319 00:34:35,617 --> 00:34:37,661 அவங்க ஒரு குழு. ரெஜீமுக்கு எதிரானவங்க. 320 00:34:37,744 --> 00:34:39,454 - நீயும் அதுல ஒருத்தியா? - இல்லை. 321 00:34:40,789 --> 00:34:42,623 - முன்னாடி அவங்கள்ல ஒருத்தனுடன் இருந்தேன். - பேரு? 322 00:34:45,668 --> 00:34:48,172 காஸெம். காஸெம் பிஜானி. 323 00:34:49,547 --> 00:34:50,632 உனக்கு அவங்க யாருன்னு தெரியுமே. 324 00:34:51,382 --> 00:34:54,636 நீ அவனுடைய நண்பனுடன் உணவகத்துல விவாதம் செய்வதை நான் பார்த்தேன். 325 00:34:54,719 --> 00:34:55,888 நீ இஸ்ஸாவைப் பத்தி பேசற. 326 00:34:55,971 --> 00:34:58,182 காஸெம்தான் உங்கிட்ட மருந்துப் பொருளைக் கேட்கும்படி சொன்னான். 327 00:34:59,224 --> 00:35:00,517 உன்னைப் பத்தி சில விஷயங்களைச் சொன்னான். 328 00:35:03,645 --> 00:35:04,646 இஸ்ஸா. 329 00:35:06,190 --> 00:35:08,400 என்ன தெரியுமா, நாங்க ஒரே மாதிரி யோசிப்போம், இவனும் நானும், ஆனால்... 330 00:35:18,619 --> 00:35:20,913 உன்னுடையது எதையோ எடுத்துக்கப் போறதாக அவங்கதான் சொன்னாங்க. 331 00:35:22,998 --> 00:35:25,167 - என்ன? - எனக்குத் தெரியாது. 332 00:35:26,585 --> 00:35:28,629 நீ அவனைத் தான் கேட்கணும். என்னை இல்லை. 333 00:35:44,770 --> 00:35:45,771 இஸ்ஸா! 334 00:35:47,147 --> 00:35:48,732 நாம திரும்பவும் சொதப்பிட்டோம். 335 00:35:49,399 --> 00:35:50,484 இது என்னது? 336 00:35:52,736 --> 00:35:54,071 இவன் ஏன் செய்திகள்ல வருகிறான்? 337 00:35:58,242 --> 00:35:59,618 இதை எடுத்துக்கொள். 338 00:36:07,793 --> 00:36:11,046 நீ யாருன்னு எனக்குத் தெரியும். டாக்டர் எரிக் பீட்டர்சன். 339 00:36:14,174 --> 00:36:17,094 உளவு வேலை பார்த்ததுக்காக கைதுசெய்திருக்காங்க. நீ என்ன செய்த? 340 00:36:19,721 --> 00:36:21,932 - நான் என் வேலையைத்தான் செய்ய முயற்சித்தேன். - நியூக்கிளியர் இன்ஸ்பெக்ட்டரா? 341 00:36:23,976 --> 00:36:24,977 ஆம். 342 00:36:27,104 --> 00:36:29,147 - உங்க அரசாங்கம்... - அது என் அரசாங்கம் இல்லை. 343 00:36:32,276 --> 00:36:38,198 ரெஜீம் கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகளை அது சரியா பின்தொடரலைன்னு நான் சந்தேகப்பட்டேன், 344 00:36:38,282 --> 00:36:39,533 அதை நான் ஆதாரத்துடன் நிரூபிக்கப் பார்த்தேன். 345 00:36:41,702 --> 00:36:43,161 தெரியுமா, அவங்க என்னைத் தேடுவாங்க. 346 00:36:44,413 --> 00:36:47,457 நீ என்னை அவர்களிடம் மீண்டும் ஒப்படைத்தால், அதுக்குப் பதிலாக நீ... 347 00:36:47,541 --> 00:36:51,670 உன்னை ஏற்கனவே கைதுசெய்திருக்கும் ஒரு ரெஜீமிடும் உன்னை திரும்பவும் ஒப்படைப்பதா? 348 00:36:52,421 --> 00:36:55,424 நாங்க அவங்களுக்கு உதவிகளை செய்ய மாட்டோம், அதோடு உனக்கு இங்கே எந்த அதிகாரமும் கிடையாது! 349 00:36:58,093 --> 00:36:59,928 நாங்க அங்கே போனது சில ரஸாயனங்களை எடுத்து வருவதற்காக. 350 00:37:00,512 --> 00:37:01,555 அரசு காவலர்கள் ஏன் அங்கே இருந்தாங்க? 351 00:37:02,556 --> 00:37:04,349 நீங்க ஏன் அங்கே இருந்தீங்க? 352 00:37:04,433 --> 00:37:07,561 நான்... நான்... பாருங்க, நான் ஒரு விஞ்ஞானி. 353 00:37:07,644 --> 00:37:08,687 ஒரு அமைதியான மனிதன். 354 00:37:09,271 --> 00:37:11,648 நாம இருவருமே இருக்கக் கூடாத இடத்துல இருந்துவிட்டோம். 355 00:37:11,732 --> 00:37:14,151 அது வெறும்... அது வெறும் துரதிர்ஷ்டம்தான். 356 00:37:17,654 --> 00:37:20,365 நீ சொல்வது சரிதான். அது வெறும் துரதிர்ஷ்டம்தான். 357 00:37:20,449 --> 00:37:22,284 ஓ, கடவுளே, வேண்டாம்! இல்லை, இல்லை. 358 00:37:22,367 --> 00:37:23,827 பிளீஸ், பிளீஸ், பிளீஸ். 359 00:37:23,911 --> 00:37:27,497 ரெஜீம் உன்னை திரும்பிப் பெற நினைத்தால், உன்னைக் கொல்ல அதைவிட வேற நல்ல காரணம் தேவையில்லையே! 360 00:37:27,581 --> 00:37:29,333 இல்லை! பிளீஸ், பிளீஸ். 361 00:37:29,917 --> 00:37:32,127 நான்... நான் உன் நண்பனுக்கு உதவ முடியும். 362 00:37:32,211 --> 00:37:33,337 நான் உதவ முடியும். 363 00:37:46,308 --> 00:37:48,393 - இது ரமீன். - எடுத்துப் பேசு, என்ன வேணும்னு பாரு. 364 00:37:54,274 --> 00:37:56,693 - ஹலோ? - இஸ்ஸா, எப்படிப் போகுது, நண்பா? 365 00:37:56,777 --> 00:37:59,071 நாம பேசணும்னு நினைச்சேன். 366 00:37:59,154 --> 00:38:00,030 எதைப் பத்தி? 367 00:38:00,906 --> 00:38:01,740 ஓ, ஒண்ணுமில்லை. 368 00:38:02,366 --> 00:38:03,659 அவன் ஃபோன்ல பேசுகிறான். 369 00:38:03,742 --> 00:38:05,994 - அப்படி என்றால்... - என்ன? 370 00:38:06,078 --> 00:38:08,580 நாம் அவளுடைய ஃபோனின் வழியாக ரமீன் போனில் பேசுவதை கேட்கலாமே. 371 00:38:08,664 --> 00:38:10,332 அதை ஒரு சாஃப்ட்வேர் அப்டேட்டைப் போல காண்பி. 372 00:38:11,166 --> 00:38:12,960 நமக்கு ஆடியோ கிடைக்க எவ்வளவு நேரம் ஆகும்? 373 00:38:16,255 --> 00:38:17,464 மூன்று நிமிடங்கள். 374 00:38:18,465 --> 00:38:20,050 உன்னைப் பார்த்தது சந்தோஷமா இருந்தது. 375 00:38:20,884 --> 00:38:24,304 இன்னொரு விஷயம், உணவகத்துல இருந்தானே, உன் நண்பன்... 376 00:38:26,098 --> 00:38:27,850 அவன் பெயர் காஸெம் தானே, இல்ல? 377 00:38:28,642 --> 00:38:30,310 நீ என்ன ஏதாவது ஜோக் அடிக்கிறயா? 378 00:38:30,811 --> 00:38:33,063 காஸெம் மரணமடைஞ்சுட்டான். இன்று மாலை. 379 00:38:33,146 --> 00:38:35,440 அப்படியா? கேட்கவே வருத்தமா இருக்கு. 380 00:38:35,983 --> 00:38:37,985 உனக்கு யார் அவன் பெயரைச் சொன்னாங்க? 381 00:38:38,068 --> 00:38:43,198 அது முக்கியமில்லை. நீ என் பொருளைத் திருட வந்தன்னு தெரிய வந்ததுதான் எனக்கு முக்கியம். 382 00:38:43,282 --> 00:38:45,492 ஆனால், அப்படி இல்லாமல் இருக்கலாம். உனக்கு அதுக்கான தைரியமில்லாமல் இருக்கலாம். 383 00:38:45,576 --> 00:38:48,912 நாங்கதான் வந்தோம்! நாங்க தான் செய்தோம், ஆனால் அது உன் பொருள் இல்லையே. 384 00:38:48,996 --> 00:38:51,164 அது நீங்க கும்பிடு போடும் ரெஜீமைச் சேர்ந்தது. 385 00:38:54,376 --> 00:38:56,670 இஸ்ஸா, போனால் போகுதுன்னு நீ சொன்னதை இப்போ மன்னிக்கறேன். 386 00:38:57,212 --> 00:39:01,175 நான் சொல்றதைக் கேளு. நீ எதைத் தேடி வந்தயோ அது உனக்கு கிடைக்கல. 387 00:39:02,009 --> 00:39:02,843 இல்லை. 388 00:39:06,221 --> 00:39:07,723 ஆனால் வேற இன்னொன்று கிடைச்சிருக்கே, 389 00:39:09,224 --> 00:39:10,934 அதைவிட விலை மதிப்புள்ளது. 390 00:39:12,936 --> 00:39:14,313 அது என்னன்னு தெரிஞ்சுக்க விரும்புறயா? 391 00:39:14,813 --> 00:39:16,231 என்ன அது? 392 00:39:17,566 --> 00:39:19,067 உன் பெயரை அவனிடம் சொல்லு. 393 00:39:22,154 --> 00:39:23,947 என் பெயர் எரிக் பீட்டர்சன். 394 00:39:24,531 --> 00:39:25,616 என்னை இந்த ஆட்கள் பிடிச்சு வச்சிருக்காங்க. 395 00:39:25,699 --> 00:39:27,951 உங்களால ஏதாவது செய்ய முடிந்தால்... நீங்க உதவ முடிந்தால்... 396 00:39:31,955 --> 00:39:34,708 அவனை நாட்டின் கைதியாக வச்சுக்க நினைச்சாங்க, 397 00:39:34,791 --> 00:39:35,959 ஆனால் இப்போது எங்க கைதி ஆயிட்டான். 398 00:39:36,585 --> 00:39:39,796 நீங்க செய்தது போல காண்பிச்சு, அவன் சடலத்தை ஆஜாதி ஸ்குயர்ல 399 00:39:39,880 --> 00:39:41,131 தூக்கிப் போடுற வரைக்கும், நாங்கதான் அவனை வச்சிருப்போம். 400 00:39:41,215 --> 00:39:44,510 பெருமையடிச்சுக்கறதை முதல்ல நிறுத்து. உனக்கு கிறுக்கு பிடிச்சிடுச்சு. 401 00:39:46,220 --> 00:39:47,888 - நம்ம நிலைமை என்ன? - கிட்டத்தட்ட கிடைச்சிடுச்சு. 402 00:39:48,514 --> 00:39:54,520 சரியான மாங்காய் மடையன். உன் மண்ணாங்கட்டி மூளையை உபயோகப்படுத்து. நாம ஒரு ஒப்பந்தம் செய்துக்கலாம். 403 00:39:56,480 --> 00:39:57,314 நான் யோசிக்கணும்... 404 00:39:57,397 --> 00:40:00,067 இஸ்ஸா. நீ நேரத்தை வீணாக்கினால், உன் வாழ்க்கையை மட்டும் இல்லை, 405 00:40:00,150 --> 00:40:03,737 அவங்க உன் குடும்பத்தின் வாழ்க்கையையும் அழிச்சுடுவாங்க. அது உனக்கே தெரியும். 406 00:40:03,820 --> 00:40:04,988 தொடர்பு கிடைத்தது 407 00:40:05,072 --> 00:40:08,033 தொடர்பு கிடைத்தது. நாம காஸிமியின் ஃபோனுடன் இணைஞ்சாச்சு. 408 00:40:08,534 --> 00:40:12,329 அவன் படத்தை அனுப்பு. அவன் நலமா இருக்கான்னு தெரியணும். காத்துட்டு இருக்கேன். 409 00:40:15,624 --> 00:40:16,959 அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. 410 00:40:29,054 --> 00:40:30,472 உள்வரும் மெஸ்ஸேஜ். 411 00:40:55,539 --> 00:40:57,040 நன்றி. 412 00:40:59,918 --> 00:41:02,045 எப்போது என் உதவி வேணுமானாலும் வரலாம்... உனக்கு நான் எங்கே இருப்பேன்னு தெரியும். 413 00:41:03,297 --> 00:41:04,298 உனக்குத் தேவைப்பட்டால். 414 00:41:09,678 --> 00:41:10,762 ரமீன் சரின்னு சொல்லிட்டான். 415 00:41:11,763 --> 00:41:14,641 டீலா? ரமீனுடனா? 416 00:41:14,725 --> 00:41:16,268 உனக்கு என்ன ஆச்சு? 417 00:41:16,351 --> 00:41:21,315 நமக்கு வேணுங்குற ஆயுதங்கள், வெடிகள், எல்லாமே கிடைக்குமே. 418 00:41:21,398 --> 00:41:23,483 இல்லை. நிச்சயமா இல்லை. 419 00:41:23,567 --> 00:41:25,235 ஆனால் நீ சொன்ன... 420 00:41:25,319 --> 00:41:30,324 நாம என்ன சொன்னோம்னு எனக்குத் தெரியும். வெறுமனே பேசுறது சுலபம், ஆனால் அதை செய்யறது... 421 00:41:30,866 --> 00:41:33,994 நமக்கு மனைவிகள், குடும்பங்கள் எல்லாம் இருக்கு. 422 00:41:34,077 --> 00:41:39,291 அவங்களுக்காகத்தானே நாம இதையெல்லாம் செய்யறோம். அவங்களுக்காக தானே போராடறோம். 423 00:41:41,210 --> 00:41:43,545 இவனை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகணும். 424 00:41:44,838 --> 00:41:47,216 நாம மருத்துவமனைக்குப் போக முடியாதுன்னு உனக்கே தெரியும். 425 00:41:48,175 --> 00:41:51,220 போகலாம். 426 00:42:10,489 --> 00:42:12,574 அவனுக்கு வேதனையிலிருந்து விடுதலை கொடு. 427 00:42:45,941 --> 00:42:48,485 நான் வெளியே இருக்கிறேன். நாம் ரமீனை பின்தொடர்வோம். 428 00:43:07,421 --> 00:43:11,133 நான் உங்களுக்கு தொந்தரவுதான் கொடுத்திருக்கேன். அதுக்காக வருத்தப்படறேன். 429 00:43:13,594 --> 00:43:15,846 அவன் உதவுவதாகச் சொல்லியிருக்கான். 430 00:43:17,556 --> 00:43:20,017 யாராவது உதவி செய்துதான் ஆகணும். 431 00:43:20,934 --> 00:43:22,227 நாங்க நன்றிக்கடன்பட்டிருக்கோம். 432 00:43:23,562 --> 00:43:24,688 குட்பை. 433 00:43:56,762 --> 00:43:58,180 நாசமா போறவன். 434 00:44:04,728 --> 00:44:05,979 போகலாம். 435 00:44:08,398 --> 00:44:10,609 கதவைத் தொட்டால் நான் உன்னை சுடுவேன். 436 00:44:12,778 --> 00:44:14,238 நான் ஏற்கனவே உன் பையைத் தேடிட்டேன். 437 00:44:16,031 --> 00:44:17,157 உன் துப்பாக்கி என்னிடம் தான் இருக்கு. 438 00:44:19,785 --> 00:44:22,079 நீ செய்த காரியங்களுக்கெல்லாம் இப்போ உனக்கு தண்டனை கிடைக்கப் போகுது. 439 00:45:37,946 --> 00:45:39,948 தமிழாக்கம் அகிலா குமார்