1 00:01:18,537 --> 00:01:19,830 நீ தூங்கினாயா? 2 00:01:20,914 --> 00:01:21,999 நலமாக இருக்கிறாயா? 3 00:01:25,627 --> 00:01:26,753 நான் அவரை எழுப்ப முயன்றேன். 4 00:01:49,026 --> 00:01:50,027 உடல் உறைந்திருக்கிறது. 5 00:02:02,080 --> 00:02:06,418 சொல்... திரு. எட்வர்ட்ஸிடம் யாரும் வரவில்லை என்று சொல். 6 00:02:07,002 --> 00:02:08,086 இது எழுவதற்கான நேரமா? 7 00:02:08,169 --> 00:02:09,880 முட்டாள்களின் கூட்டம் எல்லோரையும் எழுப்புகிறது. 8 00:02:10,881 --> 00:02:12,090 அட கடவுளே. 9 00:02:12,174 --> 00:02:13,926 நேற்று இரவு என் படுக்கையிலே படுத்திருப்பதாக கனவு கண்டேன். 10 00:02:14,009 --> 00:02:15,969 ஹேய், ஆல்ஃப், என் பையைக் கொடு. 11 00:02:16,053 --> 00:02:17,054 எழுந்திரு! 12 00:02:19,431 --> 00:02:20,766 திரு. ஈ எப்படி இருக்கிறார்? 13 00:02:21,433 --> 00:02:22,434 அவர் உறைந்திருக்கிறார். 14 00:02:31,318 --> 00:02:34,238 -ஹேய். இதைப் பிடி. -மிகவும் சோர்வாக இருக்கிறேன். 15 00:02:35,447 --> 00:02:37,199 நான் பல் துலக்க வேண்டும். 16 00:02:51,255 --> 00:02:52,673 ஓய், அவர் எழுந்துவிட்டாரா? 17 00:02:54,883 --> 00:02:57,135 -அவர்... -அவர் நன்றாக இல்லை... 18 00:02:57,219 --> 00:02:58,387 -அவர்... -அவருக்கு குணமடைந்துவிட்டதா? 19 00:02:58,470 --> 00:03:00,180 அவருக்கு ஆம்புலன்ஸ் தேவை. 20 00:03:02,599 --> 00:03:03,725 அவர்... 21 00:03:03,809 --> 00:03:06,186 -சகோ, அவர் குணமடைந்துவிட்டாரா? -பார், ஆம்புலன்ஸை அழை. 22 00:03:06,270 --> 00:03:07,354 இவர் இறந்துவிட்டார். 23 00:03:12,776 --> 00:03:14,444 திரு. எட்வர்ட்ஸ் இறந்துவிட்டார். 24 00:05:34,209 --> 00:05:35,210 அனீஷா? 25 00:06:01,737 --> 00:06:03,906 ஏன் அப்பா தரையில் படுத்திருக்கிறார்? 26 00:06:04,615 --> 00:06:06,241 அவருக்கு முதுகு வலித்திருக்கும். 27 00:06:06,325 --> 00:06:08,160 அப்படியென்றால் அவர் படுக்கையில்தானே இருக்க வேண்டும்? 28 00:06:09,328 --> 00:06:11,038 ஒருவேளை அவருக்கு பிடிக்காமல் இருக்கலாம். 29 00:06:12,915 --> 00:06:15,292 அம்மாவும் அப்பாவும் விவாகரத்து பெறப்போகிறார்களா? 30 00:06:15,375 --> 00:06:17,294 இல்லை. அப்படி நடக்காது. 31 00:06:19,213 --> 00:06:20,714 என்ன இது? 32 00:06:20,797 --> 00:06:22,841 நிறுத்து. இது என்னுடையது. நான் தான் இதை கண்டெடுத்தேன். 33 00:06:22,925 --> 00:06:24,885 -எங்கே? -கண்டெடுத்தேன், அவ்வளவுதான். 34 00:06:24,968 --> 00:06:27,179 இது என்னுடையது, எனவே இதைத் தொடாதே. 35 00:06:27,846 --> 00:06:28,847 சரி. 36 00:06:33,101 --> 00:06:34,520 எப்போது வீட்டிற்குப் போவோம்? 37 00:06:34,603 --> 00:06:37,564 தெரியாது. நாம் வடக்கு நோக்கி போவதுதான் தெரியும். 38 00:06:38,273 --> 00:06:40,776 கிளம்பும்போது உங்கள் தனிப்பட்ட பொருட்களை... 39 00:06:40,859 --> 00:06:43,278 இங்கே வெடிகுண்டு வீச வாய்ப்பே இல்லை. நாம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருக்கிறோம். 40 00:06:43,362 --> 00:06:45,531 ஆம், அது வெடிகுண்டாக இல்லை என்றால்? அணுகுண்டாக இருந்தால்? 41 00:06:45,614 --> 00:06:47,574 ...எடுத்துச்செல்ல மறக்காதீர்கள். 42 00:06:47,658 --> 00:06:48,825 ISIS ஆல் இது முடியாது. 43 00:06:48,909 --> 00:06:51,078 எரிபொருள் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது, மருத்துவமனைகள் மூடப்படுகின்றன... 44 00:06:51,161 --> 00:06:53,622 -மருத்துவமனைகளா? -மின்சாரம் இல்லை, கருவிகள் எரிந்துவிட்டன. 45 00:06:53,705 --> 00:06:55,165 புதின்தான் காரணம். 46 00:06:55,249 --> 00:06:58,919 இது உங்கள் கவனத்திற்கு! நாடு தழுவிய அவசரநிலை அறிவிக்கப்பட்டதன் காரணமாக, 47 00:06:59,002 --> 00:07:02,756 சென்டர், பிளேயர் மற்றும் கிளிண்டன் கவுண்டி மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. 48 00:07:03,298 --> 00:07:07,261 பாதுகாப்பை உறுதிசெய்ய முக்கிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். 49 00:07:08,720 --> 00:07:10,806 அம்மா, அவர் என்ன சொல்கிறார்? 50 00:07:10,889 --> 00:07:12,975 ஒன்றுமில்லை, செல்லம். போகும் வழியை சொல்கிறார். 51 00:07:13,517 --> 00:07:16,228 நீ உட்கார்ந்தால் உனக்கு இருக்கை பட்டை மாட்டுவேன். 52 00:07:16,311 --> 00:07:17,855 மிகவும் இறுக்கமாக இருக்கிறது. 53 00:07:17,938 --> 00:07:19,690 -லூக், உன் சகோதரிக்கு உதவு. -மீண்டும் சொல்கிறேன்... 54 00:07:19,773 --> 00:07:21,733 இது இறுக்கமாகத்தான் இருக்க வேண்டும். 55 00:07:22,317 --> 00:07:23,777 ஆனால் என் கழுத்தை அழுத்துகிறது. 56 00:07:23,861 --> 00:07:25,320 இது உன்னை பாதுகாக்கும். 57 00:07:25,404 --> 00:07:27,239 ...கவுண்டி மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. 58 00:07:27,322 --> 00:07:28,699 எதிலிருந்து பாதுகாக்கும்? 59 00:07:28,782 --> 00:07:30,701 பாதுகாப்பை உறுதிசெய்ய முக்கிய நெடுஞ்சாலைகளில் 60 00:07:30,784 --> 00:07:31,910 பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். 61 00:07:31,994 --> 00:07:34,997 மீண்டும் சொல்கிறேன். நாடு தழுவிய அவசரநிலை அறிவிக்கப்பட்டதன் காரணமாக... 62 00:07:35,080 --> 00:07:36,081 இதோ வருகிறேன். 63 00:07:36,164 --> 00:07:39,710 ...சென்டர், பிளேயர் மற்றும் கிளிண்டன் கவுண்டி மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. 64 00:07:43,380 --> 00:07:44,548 வேண்டாம்... 65 00:07:52,139 --> 00:07:53,473 நிறுத்து! 66 00:07:54,349 --> 00:07:55,601 நீ நிறுத்து. 67 00:07:57,895 --> 00:07:59,980 இது என் பை. உன்னுடையது அல்ல. 68 00:08:00,856 --> 00:08:03,108 மெஸ்ஸேஜஸ் A - மெஸ்ஸேஜ் அனுப்புவது தோல்வியுற்றது 69 00:08:04,067 --> 00:08:05,068 ஹேய்! 70 00:08:05,152 --> 00:08:07,321 நீ நலமா? பாதுகாப்பாக இருக்கிறாயா? சென்றடையவில்லை 71 00:08:09,448 --> 00:08:12,409 இதை என்னிடம் கொடுத்துவிடு. 72 00:08:12,492 --> 00:08:13,827 இல்லை, இது என்னுடையது. 73 00:08:25,881 --> 00:08:27,049 மற்ற ஆல்பங்கள் மறைக்கப்பட்டவை 74 00:08:27,132 --> 00:08:30,427 -கொடுத்துவிடு. -இது என்னுடையது. நிறுத்து. 75 00:08:31,136 --> 00:08:33,972 -முட்டாள்தனமாக செய்வதை நிறுத்து. -நீ நிறுத்து. 76 00:08:35,682 --> 00:08:38,684 -நீதான் முட்டாள்தனமாக செய்கிறாய். -நீதான் அப்படி செய்கிறாய். 77 00:08:38,769 --> 00:08:40,102 அதுதான் உன்னுடையது. 78 00:08:40,187 --> 00:08:42,813 -இது என்னுடையது. -இது என்னுடையது. 79 00:08:43,857 --> 00:08:45,817 இது என்னுடையது. 80 00:09:02,626 --> 00:09:04,795 தொடாதே. நிறுத்து! 81 00:09:04,878 --> 00:09:07,965 -நீ ஏன் நிறுத்தக்கூடாது? -நான் எதுவும் செய்யவில்லை. 82 00:09:13,679 --> 00:09:15,639 நிறுத்து. 83 00:09:20,394 --> 00:09:23,021 அம்மா, ஏன் கதவை பூட்டுகிறீர்கள்? 84 00:09:23,105 --> 00:09:24,648 அம்மா? 85 00:09:25,232 --> 00:09:27,317 -அம்மா? -ஏன் கதவை பூட்டுகிறீர்கள்? 86 00:09:35,659 --> 00:09:37,953 நெடுஞ்சாலை திறந்திருப்பதாக சொல்கிறார்கள். நாம் வடக்கு நோக்கி போகலாம். 87 00:09:41,707 --> 00:09:43,458 பாதுகாப்பாக இருக்க பூட்டினாயா? 88 00:09:55,012 --> 00:09:56,096 நீ இருக்கை பட்டை அணியவில்லை. 89 00:10:06,440 --> 00:10:07,608 ஹேய்! 90 00:10:08,317 --> 00:10:09,818 இன்னும் எவ்வளவு தூரம்? 91 00:10:14,281 --> 00:10:15,866 டிஷு எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? 92 00:10:16,533 --> 00:10:17,534 டிஷு? 93 00:10:21,663 --> 00:10:23,874 ஹேய்! நாம் எங்கிருக்கிறோம்? 94 00:10:26,001 --> 00:10:27,419 இது என்ன இடம்? 95 00:10:29,713 --> 00:10:30,756 என்ன? 96 00:10:43,185 --> 00:10:44,186 என்ன? 97 00:11:06,917 --> 00:11:08,335 ஹேய்! 98 00:11:08,418 --> 00:11:09,878 உதவி. தேடு. 99 00:11:09,962 --> 00:11:11,088 நீ என்ன செய்கிறாய்? 100 00:11:13,507 --> 00:11:16,635 என்ன? இந்த ஆடுகளைத் தேடவா என்னை இரண்டு நாட்களாக 101 00:11:16,718 --> 00:11:18,929 அலைய வைத்தாய்? ஆடுகளுக்காகவா? 102 00:11:20,722 --> 00:11:23,100 நீ என் ஆட்களை தேட எனக்கு உதவி இருக்க வேண்டும்! 103 00:11:23,976 --> 00:11:24,977 அடச்சே! 104 00:11:26,436 --> 00:11:28,981 நான் என் ஆட்களை தேட வேண்டும்... 105 00:11:29,982 --> 00:11:30,983 அடச்சே. 106 00:11:32,568 --> 00:11:33,735 அடச்சே! 107 00:11:34,236 --> 00:11:35,612 தேடு... 108 00:11:37,030 --> 00:11:38,031 அடச்சே! 109 00:11:45,539 --> 00:11:46,540 சாவேஸ். 110 00:12:00,679 --> 00:12:03,682 வீடியோ கோப்பு சேதமடைந்திருக்கலாம். 111 00:12:03,765 --> 00:12:04,766 சேதமடைந்திருக்குமா? 112 00:12:06,810 --> 00:12:08,770 எல்லா விண்வெளி வீரர்களும் எதையோ பார்த்திருக்கிறார்கள். 113 00:12:09,980 --> 00:12:12,649 விண்கலத்துடன் ஏதோ மோதியிருக்கிறது. 114 00:12:12,733 --> 00:12:16,695 விண்கலம் அருகே ஒரு பொருள் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. 115 00:12:17,196 --> 00:12:19,823 ஜப்பானிய செயற்கைக்கோள்களும் எதையும் கண்டுபிடிக்கவில்லை. 116 00:12:19,907 --> 00:12:23,202 அவை அதிவேக வால்மீன்கள் அல்லது விண்கற்களைக் கூட கண்டறியும் என்று உனக்கே தெரியும். 117 00:12:23,285 --> 00:12:24,745 சர்வதேச செயற்கைக்கோள்கள் என்ன ஆனது? 118 00:12:24,828 --> 00:12:28,582 அமெரிக்கர்களும் பிரிட்டிஷ்காரர்களும் தீவிரவாத தாக்குதல்களில் கவனம் செலுத்துகிறார்கள். 119 00:12:29,374 --> 00:12:30,918 இருந்தாலும், ஏதாவது தெரிந்திருந்தால், 120 00:12:31,001 --> 00:12:33,003 அவர்கள் நிச்சயமாக முன்கூட்டியே சொல்லியிருப்பார்கள். 121 00:12:35,380 --> 00:12:37,925 அநேகமாக அது விண்வெளி குப்பையாக இருக்கலாம். 122 00:12:38,926 --> 00:12:41,178 ஒரு சிறிய பொருள் கூட வெடிப்பை ஏற்படுத்தும். 123 00:12:41,803 --> 00:12:42,804 விண்வெளி குப்பைகளா? 124 00:12:43,805 --> 00:12:46,391 இது ஏதோ மிகப்பெரியது. இந்த வீடியோவைப் பாருங்கள். 125 00:12:46,475 --> 00:12:47,476 நாங்கள் பார்த்தோம். 126 00:12:50,729 --> 00:12:52,022 கைடோ என்னுடன் ஒத்துப்போகிறான். 127 00:12:55,776 --> 00:12:57,027 சரிதானா, கைடோ? 128 00:13:00,280 --> 00:13:03,534 அது வீடியோ ஒளிபரப்பில் கோளாறாக இருக்கலாம் என்று நினைத்தேன். 129 00:13:04,660 --> 00:13:07,287 அல்லது ஒருவேளை அது விண்வெளி குப்பையாக இருக்கலாம். 130 00:13:10,624 --> 00:13:13,794 திரு. யமடோ, உன்னை கைது செய்யாதது உன் அதிர்ஷ்டம். 131 00:13:15,587 --> 00:13:16,797 கிளம்பு, இப்போதே. 132 00:13:16,880 --> 00:13:19,633 நீ மீண்டும் இங்கே காலடி வைத்தால், சிறைக்குப் போவது உறுதி. 133 00:13:21,051 --> 00:13:22,052 புரிகிறதா? 134 00:13:27,766 --> 00:13:28,851 முட்டாள்கள். 135 00:13:31,103 --> 00:13:32,104 மிட்சுகி! 136 00:13:33,939 --> 00:13:34,940 மிட்சுகி. 137 00:13:35,440 --> 00:13:36,817 மிட்சுகி. 138 00:13:36,900 --> 00:13:38,151 விண்வெளி குப்பையா? 139 00:13:38,652 --> 00:13:40,153 என்னையும் வேலையிலிருந்து நீக்கியிருப்பார்கள். 140 00:13:40,237 --> 00:13:43,657 விண்கலத்தின் மீது ஏதோ மோதி ஒரு துளையை ஏற்படுத்தியிருக்கிறது. 141 00:13:47,035 --> 00:13:48,287 நன்றாக வேலை செய்தீர்கள். 142 00:13:49,454 --> 00:13:51,582 யாரோ அதை தாக்கியதாக நினைக்கிறாயா? 143 00:13:51,665 --> 00:13:55,002 நியூயார்க்கிலும் லண்டனிலும் தாக்குதல் நடந்துள்ளது, இல்லையா? ஏன் ஹோஷியில் நடந்திருக்காது? 144 00:13:55,085 --> 00:13:57,546 வளிமண்டலத்தில் தாக்குதலா? யார் தாக்கியிருப்பார்கள்? 145 00:13:57,629 --> 00:13:58,964 யாரோ. 146 00:13:59,548 --> 00:14:01,717 -ஏதோவொன்று ஹோஷியை தாக்கியுள்ளது. -ஏதோவொன்றா? 147 00:14:03,093 --> 00:14:04,928 "ஏதோவொன்று" என ஹினாடா சொன்னாள். 148 00:14:05,012 --> 00:14:06,680 அவள் சொன்னாள். 149 00:14:06,763 --> 00:14:09,433 அது ஒரு குறியீடாக இருக்கலாம். என்னிடம் ஏதோ சொல்ல முயற்சித்திருக்கலாம். 150 00:14:09,516 --> 00:14:12,811 அவர்கள் உடனடியாக இறந்துவிட்டனர். அது தொழில்நுட்ப கோளாறாக இருந்திருக்க வேண்டும். 151 00:14:15,480 --> 00:14:16,732 அது ஹினாடாதான். 152 00:14:18,942 --> 00:14:20,694 எந்த சந்தேகமும் இல்லை. 153 00:14:40,964 --> 00:14:45,219 திரு. எட்வர்ட்ஸ். நான்தான். 154 00:14:47,513 --> 00:14:48,514 திரு. எட்வர்ட்ஸ். 155 00:14:51,517 --> 00:14:52,518 திரு. எட்வர்ட்ஸ். 156 00:14:58,899 --> 00:14:59,900 திரு. எட்வர்ட்ஸ்? 157 00:15:05,155 --> 00:15:07,241 திரு. எட்வர்ட்ஸ்? நான்தான், போப்பி. 158 00:15:09,618 --> 00:15:10,619 திரு. எட்வர்ட்ஸ்? 159 00:15:11,537 --> 00:15:14,122 யாரும் வரப்போவதில்லை. நாம் அவ்வளவுதான். 160 00:15:14,206 --> 00:15:15,666 அடச்சே. நெருப்பு அணைந்துவிட்டது. 161 00:15:19,127 --> 00:15:20,212 நாம் தனியாக சிக்கிக்கொண்டோம். 162 00:15:21,338 --> 00:15:22,798 எந்த கைபேசியும் இன்னும் இயங்கவில்லை. 163 00:15:25,843 --> 00:15:30,013 உதவி செய்யுங்கள்! 164 00:15:32,975 --> 00:15:34,309 யாராவது இருக்கிறீர்களா! 165 00:15:37,604 --> 00:15:38,981 அவனை ஆறுதல் படுத்து, சகோ. 166 00:15:39,064 --> 00:15:40,065 ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட்தான். 167 00:15:40,566 --> 00:15:41,984 -அதுதான் அளவு. -உனக்கு என்ன ஆயிற்று? 168 00:15:42,067 --> 00:15:46,196 ஒரு நாளா? நாம் இறக்க இன்னும் எத்தனை நாள் இருக்கிறது? 169 00:15:46,989 --> 00:15:49,783 ஒரு நாள்தான் ஆகிறது. நான் சொல்லும் வரை யாரும் சாகமாட்டீர்கள். 170 00:15:49,867 --> 00:15:51,076 எல்லோரும் இறக்கிறார்கள்! 171 00:15:52,578 --> 00:15:54,788 சாப்பிட முடியவில்லை என்றால், நாம் இங்கிருந்து போக வேண்டும். 172 00:15:54,872 --> 00:15:57,499 அருகிலுள்ள பலசரக்கு கடை நூறு மைல்கள் தொலைவில் இருந்தாலும் கூட, 173 00:15:57,583 --> 00:15:59,585 -நாம் உதவி பெற்று யாரிடமாவது சொல்ல வேண்டும். -பார்! 174 00:16:00,294 --> 00:16:01,378 நாம் இங்கேயே இருப்பதாக முடிவெடுத்தோம்! 175 00:16:02,462 --> 00:16:03,589 -அவனிடம் சொல், எம். -எப்போது வரை? 176 00:16:04,590 --> 00:16:06,967 நம்மை கண்டுபிடிப்பார்கள் என்று எப்படித் தெரியும்? இந்நேரம் வந்திருக்க வேண்டும். 177 00:16:07,050 --> 00:16:09,761 உனக்குத் தெரியும். நாம் இங்கேயே இருப்போம். 178 00:16:09,845 --> 00:16:11,221 இங்கேயே இருந்ததால்தான் அவர் இறந்தார். 179 00:16:12,723 --> 00:16:15,767 -நாம் முயற்சித்தோம்... -இங்கேயே இருப்போம், அவ்வளவுதான். 180 00:16:15,851 --> 00:16:17,060 எங்களுக்கு நீ பொறுப்பில்லை. 181 00:16:19,563 --> 00:16:20,564 என்ன சொன்னாய்? 182 00:16:21,398 --> 00:16:22,816 எங்களுக்கு... 183 00:16:24,067 --> 00:16:25,611 நீ பொறுப்பில்லை என்றேன். 184 00:16:26,236 --> 00:16:27,529 கடவுளே. 185 00:16:27,613 --> 00:16:29,281 -அவனை விடு. -நிறுத்து. 186 00:16:29,364 --> 00:16:30,532 திரும்பப் பெறுகிறேன். 187 00:16:34,995 --> 00:16:36,955 நான் உனக்கு அளித்த ஓட்டை திரும்பப் பெறுகிறேன். 188 00:16:40,584 --> 00:16:42,085 எனவே நீ இனி பொறுப்பில்லை. 189 00:16:52,137 --> 00:16:54,264 நாம் இங்கே இருப்பது உன் தவறு, நினைவிருக்கிறதா? 190 00:16:56,475 --> 00:16:59,353 உன் அம்மா சக்கர நாற்காலியில் இருப்பது உன் தவறு போல. 191 00:17:05,692 --> 00:17:07,027 மன்னித்துவிடு, அது ரகசியமா? 192 00:17:08,487 --> 00:17:09,695 ஆம். 193 00:17:10,364 --> 00:17:11,365 ஆம். 194 00:17:12,115 --> 00:17:13,784 இவனது அப்பா இவனது அம்மாவை 195 00:17:13,867 --> 00:17:16,537 படிக்கட்டுகளில் தள்ளி விடுவதை இந்த முட்டாள் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறான். 196 00:17:20,290 --> 00:17:22,709 அவரது முதுகு உடைவதை வேடிக்கை பார்த்திருக்கிறான். 197 00:17:25,838 --> 00:17:27,130 இவன் அவரை காப்பாற்ற முயற்சி கூட செய்யவில்லை. 198 00:17:27,631 --> 00:17:28,632 முயற்சித்தாயா? 199 00:17:43,522 --> 00:17:45,232 -எங்கே போகிறாய்? -நலமாக இருக்கிறாயா? 200 00:17:45,941 --> 00:17:47,067 -காஸ்பர். -அவன் என்ன செய்கிறான்? 201 00:17:47,150 --> 00:17:48,193 என்ன கொடுமை அது? 202 00:17:49,653 --> 00:17:51,238 -ஹேய். எங்கே போகிறாய்? -அவன் என்ன செய்கிறான்? 203 00:17:52,239 --> 00:17:53,240 ஹேய், காஸ்பர்! 204 00:17:53,323 --> 00:17:54,324 ஓய்! 205 00:17:55,325 --> 00:17:56,618 ஹேய், காஸ்பர்! 206 00:18:00,455 --> 00:18:01,582 பரிதாபம். 207 00:18:02,249 --> 00:18:03,750 -அவன் என்ன செய்கிறான்? -அவன் என்ன செய்கிறான்? 208 00:18:04,334 --> 00:18:06,003 அவன்... சாலையை நோக்கி போகிறான். 209 00:18:21,059 --> 00:18:22,060 வாருங்கள், தோழர்களே. 210 00:18:35,699 --> 00:18:36,950 பார், அவன் போகிறான். 211 00:18:39,369 --> 00:18:40,913 அவன் பத்திரமாக இருக்க வேண்டும். 212 00:19:23,580 --> 00:19:25,290 தேசிய பாதுகாப்பு படை பயப்படுகிறார்கள். 213 00:19:26,458 --> 00:19:28,210 பாஸ்டன் அழிந்துவிட்டதாக யாரோ சொன்னதைக் கேட்டேன். 214 00:19:28,877 --> 00:19:30,754 யாரும் எதுவும் கேட்கவில்லை என்றார்கள். 215 00:19:31,588 --> 00:19:33,090 இப்போது ஊரடங்கு அமலில் உள்ளது. 216 00:19:36,552 --> 00:19:37,678 நீ நிறுத்து. 217 00:19:37,761 --> 00:19:39,137 நான் சிறுநீர் கழிக்க வேண்டும். 218 00:19:39,221 --> 00:19:42,140 நாம் தங்கும் விடுதியில் தானே இருந்தோம். ஏன் அங்கே சிறுநீர் கழிக்கவில்லை? 219 00:19:42,224 --> 00:19:45,060 -அப்போது வரவில்லை. -நாம் இப்போது நிறுத்த போவதில்லை, செல்லம். 220 00:19:45,143 --> 00:19:46,395 கொஞ்சம் பொறுத்துக்கொள். 221 00:19:47,145 --> 00:19:49,940 கனடாவிற்கு போவது தான் சரியான முடிவு என்றார். ஆம். 222 00:19:50,524 --> 00:19:52,734 அப்பா. பாருங்கள், மக்கள் அங்கே இருக்கிறார்கள். 223 00:19:55,028 --> 00:19:56,363 நிறுத்தாதே. 224 00:19:57,990 --> 00:19:59,157 ஹேய்! இங்கே. 225 00:19:59,241 --> 00:20:00,909 -இங்கே! -அவர்கள் உதவி கேட்கிறார்கள். 226 00:20:00,993 --> 00:20:02,244 ஹேய்! 227 00:20:02,327 --> 00:20:04,663 -நீ சிறுநீர் கழித்தாக வேண்டும். -நிறுத்தாதே. 228 00:20:10,502 --> 00:20:12,671 -ஏன் நிறுத்தவில்லை? -நிறுத்த முடியாது, செல்லம். சரியா? 229 00:20:12,754 --> 00:20:14,047 இப்போதே கழிக்க வேண்டும். 230 00:20:15,465 --> 00:20:16,466 ஜேடன் எப்படி? 231 00:20:17,968 --> 00:20:19,303 சிறுநீர் கழிக்க வேண்டும்! நிறுத்துங்கள்! 232 00:20:20,637 --> 00:20:22,931 இல்லை. ஒலிவியா. 233 00:20:23,432 --> 00:20:25,267 -நீதான் முட்டாள் போல செய்கிறாய். -அனீஷா? 234 00:20:25,350 --> 00:20:26,351 இல்லை. 235 00:20:26,852 --> 00:20:29,605 -பெக்கெட். -சிறுநீர் கழித்தாக வேண்டும். 236 00:20:29,688 --> 00:20:31,857 -அனீஷா, என்ன... நீ என்ன செய்கிறாய்? -மேடிசன்? 237 00:20:31,940 --> 00:20:33,567 -தியோ. -நீ என்ன செய்கிறாய்? 238 00:20:33,650 --> 00:20:35,485 -அம்மா. -குழந்தை பெயர்கள். 239 00:20:36,695 --> 00:20:38,906 குழந்தை பெயர்களை யோசித்துக்கொண்டிருந்தேன். 240 00:20:38,989 --> 00:20:40,282 அம்மா! 241 00:20:40,365 --> 00:20:41,450 அம்மா! 242 00:20:41,533 --> 00:20:44,369 -குழந்தை பெயர்களை யோசிக்க உதவுகிறேன். -சிறுநீர் கழிக்க வேண்டும்! 243 00:20:59,384 --> 00:21:00,385 சிறுநீர் கழிக்கப் போ. 244 00:21:00,886 --> 00:21:01,887 போ! 245 00:21:05,849 --> 00:21:06,850 அனீஷா? 246 00:21:06,934 --> 00:21:08,727 இனி நீ இந்த குடும்பத்தில் ஒருவன் கிடையாது. 247 00:21:08,810 --> 00:21:11,104 -நான் சொல்வதைக் கேள்... -குழந்தையா? 248 00:21:11,188 --> 00:21:12,189 அது ஒரு விபத்து. 249 00:21:12,272 --> 00:21:13,815 என்ன விளையாடுகிறாயா? 250 00:21:13,899 --> 00:21:15,234 -நாங்கள் வேண்டுமென்றே... -எதை? 251 00:21:15,317 --> 00:21:17,444 பாதுகாப்பில்லாமல் நீ அவளோடு உடலுறவு கொள்ளவில்லையா? 252 00:21:17,528 --> 00:21:20,030 -உஷ்! அனீஷா. உனக்கு என்ன ஆனது? -போ. 253 00:21:20,614 --> 00:21:23,283 போ. நீயும் அந்த குடும்பத்துடன் போ. 254 00:21:23,367 --> 00:21:25,911 அவனுடைய மனைவி அழகாக இருந்தாள். 255 00:21:25,994 --> 00:21:30,040 நீ அவளையும் கர்ப்பமாக்கலாம். ஒரு புதிய ஊரையே உருவாக்கு. 256 00:21:30,123 --> 00:21:31,875 -நீ அந்த முடிவை எடுக்க முடியாது. -அம்மா! 257 00:21:31,959 --> 00:21:33,585 -இல்லை, நீதான் செய்தாய். -அம்மா! 258 00:21:33,669 --> 00:21:35,838 -அது விபத்து அல்ல. அது நீ தேர்வு செய்தது. -அம்மா! 259 00:21:35,921 --> 00:21:38,090 -இப்போது அதன் பலனை அனுபவிக்க வேண்டும். -சரி. 260 00:21:38,173 --> 00:21:40,843 -எங்களைப் போலவே. -சரி. சரி, அனீஷா. 261 00:21:40,926 --> 00:21:44,429 -சரி. புரிந்தது. சரி. -லூக்கை காணவில்லை! 262 00:21:45,472 --> 00:21:46,598 லூக்? 263 00:21:48,392 --> 00:21:49,518 -லூக்! -லூக்! 264 00:21:52,312 --> 00:21:53,397 லூக்! 265 00:21:55,732 --> 00:21:56,733 லூக்! 266 00:21:58,986 --> 00:21:59,987 லூக்! 267 00:22:01,446 --> 00:22:02,447 லூக்! 268 00:22:02,531 --> 00:22:03,532 லூக்! 269 00:22:05,784 --> 00:22:06,785 லூக்! 270 00:22:08,161 --> 00:22:09,329 லூக்! 271 00:22:13,542 --> 00:22:14,668 லூக்! 272 00:22:40,861 --> 00:22:42,029 ஏறு, காஸ்ப். 273 00:23:05,219 --> 00:23:06,386 அவன் சாலைக்கு செல்கிறான். 274 00:23:13,977 --> 00:23:16,063 அந்த முட்டாளால் ஏற முடிந்தால், நம் எல்லோராலும் முடியும். 275 00:25:04,880 --> 00:25:06,632 இது திரு. முரையின் வீடா? 276 00:25:08,425 --> 00:25:10,886 என் பெயர் மிட்சுகி யமடோ, 277 00:25:10,969 --> 00:25:13,847 JASA வில் ஹினாடா உடன் பணிபுரிந்த ஒரு நிர்வாகி. 278 00:25:14,598 --> 00:25:16,642 நான் உள்ளே வரலாமா? 279 00:25:34,743 --> 00:25:37,079 நான் உள்ளே வருகிறேன். 280 00:25:42,376 --> 00:25:44,837 சௌகரியமாக உட்கார். 281 00:25:46,588 --> 00:25:47,840 நன்றி. 282 00:26:16,535 --> 00:26:19,037 அடுத்தது இந்தியாவிலிருந்து வரும் செய்தி. 283 00:26:19,746 --> 00:26:23,041 மும்பை தாக்கப்பட்டதாக பல தகவல்கள் வருகின்றன. 284 00:26:23,125 --> 00:26:24,376 இன்னும் பல உலகளாவிய தாக்குதல்கள் 285 00:26:24,459 --> 00:26:27,462 மேலும் நகரத்தின் மையப்பகுதியில் ஒரு பெரிய அளவிலான வெடிப்பு பதிவாகியுள்ளது. 286 00:26:28,046 --> 00:26:29,423 எங்கள் ஆதாரங்களின்படி, 287 00:26:29,506 --> 00:26:33,343 குண்டுவெடிப்புகளில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகத்தோடு 288 00:26:33,427 --> 00:26:36,138 பயங்கரவாத குழுவின் ஈடுபாட்டுக்கான சாத்தியக்கூறுகள்... 289 00:26:37,848 --> 00:26:43,604 மேலும், இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் பிரேசில் போன்ற அரசாங்கங்கள், 290 00:26:43,687 --> 00:26:48,650 பெரிய அளவிலான மின்சாரத் தடைகளை அனுபவிக்கிறார்கள்... 291 00:27:15,010 --> 00:27:16,512 திரு. முரை, 292 00:27:22,559 --> 00:27:24,853 நீங்கள் அதிகமாக அழுகிறீர்கள். 293 00:27:27,940 --> 00:27:28,941 ஆம். 294 00:27:29,024 --> 00:27:30,567 வேண்டாம், நான் வருந்துகிறேன். 295 00:27:32,236 --> 00:27:36,698 மக்கள் பூக்களை விட்டு செல்வதையும், அழுவதையும், மனமுடைந்து போவதையும் 296 00:27:36,782 --> 00:27:38,075 ஷிபுயா கிராசிங்கில் பார்த்தேன், 297 00:27:38,158 --> 00:27:42,579 அவர்களைப் பார்த்தால் அவள் சிரிப்பாள் என்று நினைக்கிறேன். அபத்தமாகத் தெரிகிறார்கள். 298 00:27:42,663 --> 00:27:44,998 ஹினாடா அதைப் பார்த்து சிரிப்பாள். 299 00:27:47,417 --> 00:27:48,961 அவள் செய்வாள். 300 00:27:55,050 --> 00:27:58,720 அவள் எப்போதாவது என்னைப் பற்றி பேசியிருக்கிறாளா? அவளுடைய அப்பாவை பற்றி? 301 00:28:03,016 --> 00:28:07,938 இல்லை, நாங்கள் அவ்வளவு நெருக்கம் இல்லை. 302 00:28:09,648 --> 00:28:12,150 நாங்கள் மூன்று வருடங்களாக பேசிக்கொள்ளவில்லை. 303 00:28:13,110 --> 00:28:17,698 அதற்கு முன், எங்கள் மாறுபட்ட கருத்துக்களைப் பற்றி பேசினோம். 304 00:28:17,781 --> 00:28:21,618 அவளுடைய தேர்வுகளுடன் நான் உடன்படவில்லை. 305 00:28:22,327 --> 00:28:25,163 அவள் யார் என தன்னை நினைத்தாள் என்று அவளிடம் கேட்டேன். 306 00:28:25,706 --> 00:28:28,417 அவள் என் சிந்தனையை வெறுத்தே வளர்ந்தாள், என்னை பழமைவாதி என்றாள். 307 00:28:30,460 --> 00:28:32,963 ஆனால் நான் சொன்னது சரிதான். 308 00:28:40,137 --> 00:28:41,889 நான் உங்கள் கழிவறையை பயன்படுத்தலாமா? 309 00:30:32,165 --> 00:30:33,166 ஓ, ச்சே. 310 00:30:33,250 --> 00:30:34,543 ஆம்புலன்ஸ் 311 00:30:44,845 --> 00:30:47,514 அடச்சே. ஓ, ச்சே. 312 00:31:10,037 --> 00:31:11,747 நீ எங்கே இருக்கிறாய், சாவேஸ்? 313 00:31:13,165 --> 00:31:14,416 நீ எங்கே இருக்கிறாய்? 314 00:31:15,209 --> 00:31:18,253 ச்சே. 315 00:33:43,398 --> 00:33:44,399 ச்சே. 316 00:33:46,443 --> 00:33:47,444 ஹேய்! 317 00:33:48,487 --> 00:33:49,488 கைகளை உயர்த்து! 318 00:33:51,573 --> 00:33:52,574 அவன் எங்கே? 319 00:33:53,951 --> 00:33:56,787 சுவரை ஒட்டி நில். சுவரை ஒட்டி நில். 320 00:33:59,081 --> 00:34:00,082 என்ன? 321 00:34:01,041 --> 00:34:02,960 அவன் எங்கே? 322 00:34:06,922 --> 00:34:07,923 சாவேஸ்? 323 00:34:16,181 --> 00:34:17,181 ஹேய், நண்பா. 324 00:34:18,934 --> 00:34:21,061 ஹேய். நண்பா, எழுந்திரு. 325 00:34:21,895 --> 00:34:24,523 எழுந்திரு. நான் உன்னை இங்கே சாக விட முடியாது. 326 00:34:25,190 --> 00:34:28,652 ஹேய், எழுந்திரு. எழுந்திரு. நீ இப்படியே வெளியே போக முடியாது. 327 00:34:29,152 --> 00:34:30,362 நீ ஒரு கடற்படை வீரன். 328 00:34:31,154 --> 00:34:34,241 வா, சாவேஸ். அப்படித்தான். 329 00:34:35,074 --> 00:34:36,201 ஹேய், நீ நலமா? 330 00:34:38,829 --> 00:34:41,373 நீ எங்கே இருந்தாய்? உங்கள் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. 331 00:34:41,456 --> 00:34:44,543 -கண் விழித்தபோது, யாரும் இல்லை. -ட்ரெவ், என்ன நடந்தது என்று தெரியவில்லை. 332 00:34:46,545 --> 00:34:47,920 என்னால் என் காலை உணர முடியவில்லை. 333 00:34:48,005 --> 00:34:49,590 என்ன நடந்தது? என்ன? 334 00:34:51,967 --> 00:34:53,302 ஹேய். 335 00:34:54,094 --> 00:34:56,179 நீ நன்றாகத்தான் இருக்கிறாய். சரியா? 336 00:34:58,015 --> 00:34:59,600 ஹேய், பின்னாடி போ. 337 00:35:00,934 --> 00:35:02,853 பின்னாடி போ. இவன் ஏன் இங்கே கீழே இருக்கிறான்? 338 00:35:03,729 --> 00:35:06,064 -பாதுகாப்புக்காக. -எனக்கு அவளைத் தெரியாது. 339 00:35:07,065 --> 00:35:08,358 இதோ. ஹேய், இதைக் குடி. 340 00:35:08,442 --> 00:35:09,985 கொஞ்சம் தண்ணீர் குடி, சரியா? 341 00:35:11,195 --> 00:35:12,905 குடி. 342 00:35:12,988 --> 00:35:14,198 பொறுமையாக. 343 00:35:24,374 --> 00:35:25,375 நீ அதை பார்த்தாய்தானே? 344 00:35:27,878 --> 00:35:30,797 ஆம். ஆம், நான் அதை பார்த்தேன். 345 00:35:32,216 --> 00:35:34,384 -அது என்ன? -எனக்குத் தெரியவில்லை. 346 00:35:34,468 --> 00:35:36,553 எனக்கும் தெரியாது, ஆனால் உன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன். 347 00:35:36,637 --> 00:35:37,971 நீ தயாரா? 348 00:35:38,055 --> 00:35:39,181 -யோ, ட்ரெவ்? -யோ? 349 00:35:41,308 --> 00:35:43,352 வீட்டுக்குப் போக வேண்டியவன் நான் மட்டுமே இல்லை. 350 00:35:56,031 --> 00:35:57,115 அங்கேயே இரு. 351 00:35:59,618 --> 00:36:02,329 ஒரு பள்ளியைத் தாக்கியிருக்கிறீர்கள். அதை ஏன் செய்தீர்கள்? 352 00:36:09,711 --> 00:36:12,506 எங்களிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டீர்கள். எல்லாவற்றையும். 353 00:36:13,757 --> 00:36:15,926 -குழந்தைகளைக் கொல்கிறீர்கள். -அப்படி பேசாதே. 354 00:36:18,136 --> 00:36:19,221 போராளிகளை அழைத்தாயா? 355 00:36:19,304 --> 00:36:20,639 நீதான் அவர்களை இங்கு அழைத்து வந்தாய். 356 00:36:26,603 --> 00:36:27,688 ச்சே! திரும்பு. போகலாம்! 357 00:36:31,441 --> 00:36:34,778 லூக்! 358 00:36:38,574 --> 00:36:41,910 லூக்! என்னை மன்னித்துவிடு! 359 00:36:43,579 --> 00:36:45,247 நாங்கள் இருவரும் வருந்துகிறோம்! 360 00:36:52,087 --> 00:36:53,505 லூக், நீ அங்கே இருக்கிறாயா? 361 00:36:58,844 --> 00:37:00,053 லூக்! 362 00:37:13,317 --> 00:37:15,110 நண்பர்களே, இது பேருந்திலிருந்து அல்ல. 363 00:37:15,611 --> 00:37:16,695 நிச்சயமாக இல்லை. 364 00:37:21,200 --> 00:37:23,827 -பொறு, பாப்பி, இதைப் பார். -இது என்ன? 365 00:37:23,911 --> 00:37:25,412 வானத்திலிருந்து உலோக மழை பொழிந்தது. 366 00:37:32,085 --> 00:37:33,754 இதுதான் பேருந்தைத் தாக்கியிருக்க வேண்டும். 367 00:37:34,922 --> 00:37:36,215 காஸ்பர். 368 00:37:37,090 --> 00:37:38,926 விபத்துக்கு காரணம் நீ அல்ல. 369 00:37:40,010 --> 00:37:41,386 ஆம். 370 00:37:41,470 --> 00:37:42,471 ஆம். 371 00:37:43,722 --> 00:37:44,932 நிஜம்தான். 372 00:37:45,015 --> 00:37:47,601 ஓய், மான்டி. நீ என் நண்பனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 373 00:37:47,684 --> 00:37:48,685 அதில் எனக்கு என்ன அக்கறை? 374 00:37:48,769 --> 00:37:50,771 -அவனது வலிப்பு... -வானத்திலிருந்து ஏதோ 375 00:37:50,854 --> 00:37:52,689 -வெடித்து சிதறியது போல தெரிகிறது. -அதற்கு வேறு வார்த்தை இருக்கிறதா? 376 00:37:52,773 --> 00:37:54,650 -இன்னும் சூடாக இருக்கிறது. -வலிப்பு. 377 00:37:59,696 --> 00:38:01,532 டார்வின், அது என்ன? 378 00:38:03,367 --> 00:38:05,661 ரஷ்யர்கள். அவர்கள் நம் மீது குண்டு வீசுகிறார்கள். 379 00:38:05,744 --> 00:38:08,121 இல்லை, வெடிகுண்டு அல்ல. இது ஒரு செயற்கைக்கோள். 380 00:38:08,205 --> 00:38:10,457 பார். சோலார் பேனல்கள் எல்லாம் இருக்கின்றன. 381 00:38:12,125 --> 00:38:14,586 இது வளிமண்டலத்தைக் கிழித்துக்கொண்டு வந்திருக்கும். 382 00:38:32,855 --> 00:38:33,856 நீ நலமா? 383 00:38:38,110 --> 00:38:39,486 இதை மறந்துவிட்டாய். 384 00:39:09,766 --> 00:39:10,976 பொறு, உனக்கு ரஷ்ய மொழி தெரியுமா? 385 00:39:11,059 --> 00:39:12,060 ஒன்றும் இல்லை. 386 00:39:14,521 --> 00:39:15,522 மன்னித்துவிடு, நான்... 387 00:39:20,402 --> 00:39:21,904 அப்பல்லோ திட்டம் 388 00:40:15,165 --> 00:40:19,628 மேலும் இந்த அலைவரிசையில், 389 00:40:19,711 --> 00:40:21,421 நான் சொல்வதை உங்களால் கேட்க முடிகிறதா? 390 00:40:22,589 --> 00:40:24,466 நான் தவறவிடுகிறேன்... 391 00:40:29,555 --> 00:40:35,435 "நான் சூரிய உதயத்தை தவறவிடுகிறேன்." 392 00:40:41,942 --> 00:40:43,485 உனக்கு சௌகரியமாக இருக்கிறதா? 393 00:40:44,987 --> 00:40:46,613 மன்னித்துவிடுங்கள். 394 00:40:50,742 --> 00:40:56,874 முதலில், அவள் என்னைப் போல ரேடியோ பொறியாளர் ஆக விரும்பினாள். 395 00:40:56,957 --> 00:40:59,126 நான் JASA வில் வேலை செய்யத் தொடங்கும் வரை. 396 00:41:00,460 --> 00:41:02,713 நீங்கள் JASA வில் வேலை செய்தீர்களா? 397 00:41:06,800 --> 00:41:08,886 "நிர்வாகி யமடோ"? 398 00:41:09,928 --> 00:41:11,180 எனக்குப் புரிகிறது. 399 00:41:12,514 --> 00:41:14,975 ஒரு இளம் பெண் நிர்வாகியாக. 400 00:41:15,058 --> 00:41:20,564 ஆனால் இது மிகவும் இயல்பானது, இல்லையா? குறிப்பாக பொன்னிற முடி கொண்டவள் கிடையாது. 401 00:41:26,111 --> 00:41:28,113 அது நீதான், இல்லையா? 402 00:41:29,573 --> 00:41:33,118 -என்ன? -ஒரு அப்பாவுக்குத் தெரியும். 403 00:41:40,125 --> 00:41:45,339 ஹினாடா தன் அப்பாவைப் பற்றி குறிப்பிடவில்லை. 404 00:41:46,548 --> 00:41:47,633 ஒருபோதும். 405 00:41:50,219 --> 00:41:51,678 அவள் ஏன் அப்படி செய்தாள்? 406 00:41:52,262 --> 00:41:54,806 உங்களின் இந்த பழமைவாத சிந்தனையுடன் இருக்கும் உங்களை போன்ற ஒரு பெற்றோர்... 407 00:41:54,890 --> 00:41:59,811 அவளைப் பற்றிய உங்கள் நினைவுகளை இந்த அறையில் அடைத்து வைக்க விரும்புகிறீர்கள், 408 00:41:59,895 --> 00:42:04,358 அவள் தவறான "தேர்வு" செய்தாள் என்று நம்பிக் கொண்டு அவளை உலகத்திடமிருந்தே மறைக்கிறீர்கள். 409 00:42:04,441 --> 00:42:05,901 நீங்கள் அருவருப்பானவர். 410 00:42:11,198 --> 00:42:13,408 ஒவ்வொரு நாளும் நான் எழுந்தவுடன், இதைத்தான் நினைப்பேன். 411 00:42:16,578 --> 00:42:20,999 அந்த விண்கலத்தில் நான் இருந்திருக்கலாம் என்று. 412 00:42:23,460 --> 00:42:25,420 ஒவ்வொரு நாளும். 413 00:42:28,549 --> 00:42:30,050 எனவே நீங்கள்... 414 00:42:30,133 --> 00:42:31,969 ஹினாடாவும் நானும் பேசுவதை நிறுத்தியதற்கான... 415 00:42:34,763 --> 00:42:36,640 காரணம்... 416 00:42:38,225 --> 00:42:41,520 அவள் என்னிடம் என்ன சொன்னாள் என்பது அல்ல... 417 00:42:44,648 --> 00:42:46,483 அவள் மறைந்திருந்தாள். 418 00:42:48,068 --> 00:42:53,031 ஏனென்றால் அவள் அதை உலகத்திடம் இருந்து மறைத்து வைத்திருந்தாள். 419 00:42:54,241 --> 00:42:55,450 அதை… 420 00:42:56,410 --> 00:42:58,579 என்னால் அதைத் தாங்க முடியவில்லை. 421 00:43:01,373 --> 00:43:07,087 அவள் யார் என்பதை மறைக்க அவள் ஒருவனுடன் டேட்டிங் செய்ய ஆரம்பித்தாள். 422 00:43:09,464 --> 00:43:11,925 இவை அனைத்தும் அவள் செய்த தேர்வுகள். 423 00:43:17,514 --> 00:43:18,515 ஆனால்… 424 00:43:20,350 --> 00:43:26,440 ஹினாடா தனது இதயத்தை மறைப்பதைப் பார்ப்பது எனக்கு வேதனையாக இருந்தது. 425 00:43:33,113 --> 00:43:34,781 அதனால் நான் மகிழ்ச்சியடைகிறேன்... 426 00:43:36,033 --> 00:43:37,951 அவள் அதை உன்னிடம் மறைக்கவில்லை என்பதற்காக. 427 00:43:43,165 --> 00:43:44,833 அது நீதான் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. 428 00:43:51,465 --> 00:43:53,467 எனவே, நீ எதற்கு இங்கே வந்தாய்? 429 00:44:06,688 --> 00:44:07,689 லூக்! 430 00:44:08,565 --> 00:44:09,566 லூக்! 431 00:44:26,667 --> 00:44:27,668 லூக்! 432 00:44:32,422 --> 00:44:33,423 ஹலோ? 433 00:44:35,175 --> 00:44:37,427 ஹலோ? தயவு செய்து. 434 00:44:38,679 --> 00:44:40,180 -அங்கேயே நில். -தயவுசெய்து. 435 00:44:43,767 --> 00:44:46,353 நான் என் மகனைத் தேடுகிறேன். தயவு செய்து. 436 00:44:50,440 --> 00:44:51,775 அவன் உள்ளேதான் இருக்கிறான். வா. 437 00:44:55,612 --> 00:44:57,489 -சரி. இப்போது உள்ளே வாருங்கள். -நன்றி. 438 00:45:02,202 --> 00:45:04,246 இப்படி நடந்துகொண்டதற்கு வருந்துகிறேன். இதில் தோட்டாக்கள் இல்லை. 439 00:45:04,329 --> 00:45:08,083 ஆனால் சமூகம் குழப்பத்தில் இருக்கும்போது ஆபத்தானவராக தோன்றுவது நல்லது. கெல்? 440 00:45:09,001 --> 00:45:10,335 எங்களிடம் இல்லை... 441 00:45:10,419 --> 00:45:13,672 கடவுளே! லூக்! கடவுளே! 442 00:45:13,755 --> 00:45:15,632 ஓ, கடவுளே. 443 00:45:15,716 --> 00:45:17,634 நீ மிகவும் பயந்து போயிருக்க வேண்டும். 444 00:45:17,718 --> 00:45:20,762 எங்களிடம் சாப்பிட நிறைய இல்லை, ஆனால் உங்களுக்கு குளிரடித்தால் கோகோ இருக்கிறது. 445 00:45:20,846 --> 00:45:22,639 யார் இது? 446 00:45:22,723 --> 00:45:24,141 -கேபி. -யார் இது? 447 00:45:24,224 --> 00:45:27,644 மிக்க நன்றி, சார். நாங்கள்... 448 00:45:27,728 --> 00:45:28,979 நாங்கள் வெளியேறிவிடுவோம். 449 00:45:29,062 --> 00:45:32,065 இல்லை. ஊரடங்கு அமலில் உள்ளது. 450 00:45:32,149 --> 00:45:36,403 ரோந்து பணியில் காவலர்கள் உள்ளனர். அவர்கள் துப்பாக்கிகளில் தோட்டா இருக்கும். 451 00:45:36,486 --> 00:45:38,447 நீங்கள் இருட்டில் சுற்றித்திரியக் கூடாது. 452 00:45:38,530 --> 00:45:40,782 -ஆம். -நன்றி. 453 00:45:41,825 --> 00:45:43,452 என் குடும்பம் உங்களுக்கு நன்றி செலுத்துகிறது, சார். 454 00:45:44,119 --> 00:45:45,120 -பரவாயில்லை. -ஆம். 455 00:45:50,375 --> 00:45:52,085 ஹேய், கெல்? 456 00:45:52,169 --> 00:45:53,837 கூடுதல் படுக்கையறையை தயார் செய்வோம். 457 00:45:55,088 --> 00:45:57,549 -தலையணை, போர்வையை எடுத்துவருகிறேன். -கவலைப்படாதீர்கள். 458 00:45:57,633 --> 00:45:58,634 நன்றி. 459 00:46:08,894 --> 00:46:10,771 உட்கார். 460 00:46:12,564 --> 00:46:13,732 அவர்கள் உனக்காக வந்திருக்கிறார்கள். 461 00:46:38,632 --> 00:46:40,759 போ. 462 00:46:56,984 --> 00:46:58,318 போ! 463 00:47:14,501 --> 00:47:15,878 ஓ, ச்சே. 464 00:47:23,677 --> 00:47:25,679 நான் உன்னைப் காப்பாற்றிவிட்டேன். 465 00:47:33,937 --> 00:47:36,440 உன்னைப் காப்பாற்றிவிட்டேன். 466 00:47:52,039 --> 00:47:53,624 ஹேய், நண்பா, நீ நலமா? 467 00:47:54,166 --> 00:47:55,375 ஹேய், நண்பா, நீ நலமா? 468 00:47:56,460 --> 00:47:57,461 சாவேஸ்? 469 00:47:59,463 --> 00:48:00,464 சாவேஸ்? 470 00:48:07,554 --> 00:48:08,555 அடச்சே! 471 00:48:09,556 --> 00:48:10,557 அடச்சே! 472 00:48:12,309 --> 00:48:13,977 அடச்சே! 473 00:48:25,322 --> 00:48:26,323 கேடுகெட்டவர்கள். 474 00:48:48,762 --> 00:48:51,181 மான்டி உள்ளே மென்மையானவன், இல்லையா? 475 00:48:51,265 --> 00:48:52,432 -என்ன அதிசயம். -ஹேய்! 476 00:48:53,267 --> 00:48:55,102 அம்மா அப்பாவை பார்க்க வீட்டிற்குச் செல்ல வேண்டுமா? 477 00:48:55,185 --> 00:48:56,979 -உங்கள் பற்களை உடைக்க வேண்டுமா? -ஹேய்! 478 00:48:58,647 --> 00:48:59,648 நாங்கள் வீட்டிற்கு போகிறோம். 479 00:49:00,274 --> 00:49:01,567 யாரும் எங்கும் போகப்போவதில்லை. 480 00:49:01,650 --> 00:49:04,111 -இங்கே எதுவும் இல்லை. -நாம் இங்கேயே இருப்போம் என்று சொன்னேன். 481 00:49:04,194 --> 00:49:06,989 நீ பொறுப்பில் இல்லை. உனக்கு அளித்த வாக்கு திரும்பப்பெறப்பட்டது. 482 00:49:08,615 --> 00:49:10,659 அதோடு தின்பண்டங்களைத் திருடுகிறாய். 483 00:49:13,245 --> 00:49:14,663 நீ ஏற்கனவே மிக மோசமாக நடந்துக் கொண்டாய். 484 00:49:16,248 --> 00:49:17,332 போதும், மான்டி. 485 00:49:17,416 --> 00:49:18,584 அதையும் பார்த்துவிடுவோம். 486 00:49:21,420 --> 00:49:22,588 உனக்கு ஒன்றுமில்லையே? 487 00:49:41,773 --> 00:49:43,025 எனக்கு மூன்று அண்ணன்கள் இருக்கிறார்கள். 488 00:49:45,777 --> 00:49:46,862 உன்னை விட பெரியவர்கள். 489 00:49:48,238 --> 00:49:49,239 மிகவும் பெரியவர்கள். 490 00:49:56,371 --> 00:49:59,374 இதற்கு முன் செய்யப்படாத ஒன்றை உன்னால் செய்ய முடியாது. 491 00:50:01,919 --> 00:50:02,920 இன்னும் மோசமாகவும் செய்ய முடியாது. 492 00:50:04,087 --> 00:50:05,339 எனக்கும் சவால் பிடிக்கும். 493 00:50:05,422 --> 00:50:07,549 நாங்கள் வீட்டிற்குச் செல்கிறோம், நீ இங்கேயே இரு, இது எப்படி? 494 00:50:08,050 --> 00:50:09,635 சிக்கல் தீர்ந்துவிட்டதா? 495 00:50:16,266 --> 00:50:19,061 போ. நான் கவலைப்படுகிறேனா என்று பார். 496 00:50:22,189 --> 00:50:24,399 ஓய்! எல்லோரும் எங்கே போகிறீர்கள்? 497 00:50:33,325 --> 00:50:39,081 நான் நினைத்தேன், நான் ஓடினால், எனக்குத் தெரியவில்லை... 498 00:50:42,584 --> 00:50:43,919 எல்லாம் நின்றுவிடும் என்று. 499 00:50:45,420 --> 00:50:46,421 காலம் உறைந்துவிடும் என்று. 500 00:50:48,173 --> 00:50:51,510 எல்லாமே அப்படியே முன்பு போலவே இருக்கும், மேலும் மோசமாகாது என்று. 501 00:50:53,804 --> 00:50:55,013 நான் சொல்வது புரிகிறதா? 502 00:50:59,476 --> 00:51:00,769 நீங்கள் எப்போதாவது ஓட விரும்புகிறீர்களா? 503 00:51:08,944 --> 00:51:09,945 இல்லை. 504 00:51:11,071 --> 00:51:12,322 ஆனால் நீ சொல்வது எனக்குப் புரிகிறது. 505 00:51:16,910 --> 00:51:18,161 நாம் இதை சமாளிப்போம். 506 00:51:19,288 --> 00:51:20,289 என்னைப் பார். 507 00:51:24,668 --> 00:51:25,836 நாம் எல்லோருமா? 508 00:51:27,588 --> 00:51:31,466 ஹினாடா தன் இறுதி தருணத்தில் ஏதோ சொன்னாள். 509 00:51:33,177 --> 00:51:34,178 "வாச்சோ." 510 00:51:35,512 --> 00:51:38,348 அவளுடைய இறுதி தருணங்களின் பதிவு இருக்கிறதா? 511 00:51:38,432 --> 00:51:42,144 ஆம், தகவல் தொடர்பு பதிவு. 512 00:51:43,854 --> 00:51:45,147 நான் அதைக் கேட்க விரும்புகிறேன். 513 00:51:49,651 --> 00:51:51,987 சாரா மீது நான் கோபப்படும் போதெல்லாம், 514 00:51:52,070 --> 00:51:57,117 "அவள் உன் சகோதரி" என்று எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்வீர்கள் இல்லையா? 515 00:51:58,535 --> 00:52:02,122 அது எல்லாவற்றையும் சரி செய்யாது. 516 00:52:03,248 --> 00:52:04,541 எனக்குத் தெரியும். 517 00:52:06,126 --> 00:52:08,879 ராஜா இறந்துவிட்டார். ராஜா வாழ்க. 518 00:52:11,548 --> 00:52:12,549 அவர்களை விடு. பரவாயில்லை. 519 00:52:14,009 --> 00:52:15,010 ஜே? 520 00:52:24,811 --> 00:52:27,356 நாம் இதை சமாளிக்கப்போகிறோம். 521 00:52:28,732 --> 00:52:29,733 சரியா? 522 00:52:32,069 --> 00:52:33,070 சரி. 523 00:52:41,453 --> 00:52:42,955 டீ-நாய்ஸர் 524 00:53:44,224 --> 00:53:45,475 வாச்சோ. 525 00:53:47,060 --> 00:53:48,228 வாச்சோ. 526 00:53:58,739 --> 00:53:59,740 என்ன நினைக்கறீர்கள்? 527 00:53:59,823 --> 00:54:01,783 இரைச்சல் அலைவரிசை 528 00:54:38,862 --> 00:54:43,408 JASA வில் பெரிய ஒலி அமைப்பு உள்ளதா? 529 00:56:19,338 --> 00:56:21,340 வசனத் தமிழாக்கம் அருண்குமார்