1 00:00:48,382 --> 00:00:50,050 ஆலிஸ். ஆலிஸ். 2 00:00:51,886 --> 00:00:53,053 அடக் கடவுளே. 3 00:00:54,972 --> 00:00:56,140 ஆலிஸ். 4 00:00:58,142 --> 00:00:59,101 ஐயோ. 5 00:01:38,307 --> 00:01:43,103 த லாஸ்ட் ஃப்ளவர்ஸ் ஆஃப் ஆலிஸ் ஹார்ட் 6 00:01:43,187 --> 00:01:46,649 பாகம் நான்கு லிலி நதி 7 00:01:46,732 --> 00:01:51,529 பொருள்: ரகசிய நேசம் 8 00:02:45,374 --> 00:02:47,960 -அப்போ, குடிச்சிருந்தாளா? -இல்ல, இருக்காது. 9 00:02:49,128 --> 00:02:52,464 -மறுபடி ஃபோன் செய்து பார். -அதை அணைச்சிருக்கு. 10 00:02:52,882 --> 00:02:53,799 விடாம ஃபோன் செய். 11 00:02:57,887 --> 00:03:01,056 கடைசியா நான் பார்த்தது, நீ சுகம் பெற்று மீண்டு வர, 12 00:03:01,140 --> 00:03:03,642 உன் அறையில் மலர்களை அலங்கரித்து வைத்ததை. 13 00:03:04,018 --> 00:03:06,437 யெல்லோ பெல், வயலெட் மலர்கள். 14 00:03:07,521 --> 00:03:10,816 அதன் பிறகு, புயலின் போதான தேவைகளை வாங்க நகரம் போனாள். 15 00:03:14,361 --> 00:03:19,658 தபால் அலுவலகத்துக்கும், நகர தபால் பெட்டியிலிருந்து கடிதங்களை சேகரிக்க. 16 00:03:26,665 --> 00:03:28,000 எங்கே இருக்கே? 17 00:03:28,584 --> 00:03:34,465 உனக்கு என்ன ஆச்சுன்னே தெரியல, ஆனா நல்லா இருக்கியானு மட்டும் சொல்லு. சரி. பை. 18 00:03:39,136 --> 00:03:42,264 இதைப் பார்க்கும்போது, என்னை நினை ஆக்னஸ் எக்ஸ் 19 00:03:46,477 --> 00:03:48,270 இப்பதான் கர்ப்பப் பையை நீக்கினாங்க. 20 00:03:48,478 --> 00:03:51,482 உனக்கு சிகிச்சைத் தையல் பிரிஞ்சுடப் போவுது ஜூன். போதும். 21 00:03:56,070 --> 00:03:56,946 அடப் பாவமே. 22 00:04:02,493 --> 00:04:06,705 நகருக்குப் போய், தெரிந்தவர்களிடமெல்லாம் அவ வந்தாளா, இல்ல பேசினாளா கேள். 23 00:04:07,665 --> 00:04:10,584 போலீஸை அவ டிரக்கை தேடச்சொல். 24 00:04:11,210 --> 00:04:14,088 ஒருவேளை கூப்பிட்டா, நான் இங்கிருக்கேன். 25 00:04:14,505 --> 00:04:17,632 -நல்ல வேடிக்கை. -ஆகட்டும். 26 00:04:35,609 --> 00:04:41,573 துரோகம் 27 00:06:08,118 --> 00:06:12,790 எல்லா சோதனை முடிவுகளும் நல்லா இருக்கு. எல்லாம் கச்சிதமா குணமாயிருக்கு. 28 00:06:13,624 --> 00:06:16,543 -அப்போ, இன்னொரு சிறுநீரகம் சரிதானே? -ஆம். 29 00:06:17,044 --> 00:06:20,255 அவனுக்குப் பரவாயில்ல. அதைவிட மேல்தான். 30 00:06:23,258 --> 00:06:27,179 -அப்போ, மறுபடி வர வேண்டியதில்லையா? -இல்ல. பிரச்சினை வந்தாதான். 31 00:06:28,013 --> 00:06:29,848 இதுக்குதான் காத்திருந்தோம். 32 00:06:33,936 --> 00:06:35,854 -நன்றி. -மகிழ்ச்சி. 33 00:06:42,903 --> 00:06:44,696 ஹை. அழைத்திருப்பது சாலி மோர்கன். 34 00:06:44,780 --> 00:06:47,574 உங்கள் செய்தியை பதிக்கவும். விரைவில் பதில் தருவேன். 35 00:06:49,576 --> 00:06:51,954 இதைக் கேட்டதும் அழைக்கவும். 36 00:06:55,249 --> 00:06:56,250 நான் ஜூன். 37 00:07:19,606 --> 00:07:21,942 ஆலிஸ் ஹார்ட் மலர்வழி தொடர்பாளர் 38 00:07:43,005 --> 00:07:46,383 ஹேய். நில். நில். 39 00:07:48,260 --> 00:07:50,095 நிறுத்து. என்ன செய்யறீங்க? 40 00:07:54,057 --> 00:07:56,768 -ஹேய், இங்கே வா. -ஒழி. 41 00:07:58,020 --> 00:07:58,854 ஹேய். 42 00:08:02,399 --> 00:08:03,317 நலமா? 43 00:08:49,404 --> 00:08:50,864 ஆக்னஸ் பாறைமுகடு 44 00:09:01,667 --> 00:09:06,004 இப்பதான் மருத்துவமனையிலிருந்து வந்தவ, இப்படி விஸ்கி குடிக்கலாமா? 45 00:09:06,755 --> 00:09:09,549 அறுபது வயதுப் பெண் கஞ்சா அடிக்கலாமா? 46 00:09:15,055 --> 00:09:17,391 ஒரு நல்ல விஷயம். புற்று நோய் வந்தா, 47 00:09:17,474 --> 00:09:20,727 இதை மருத்துவத்துக்காக வளர்த்து, நல்ல பணம் பார்க்கலாம். 48 00:09:22,062 --> 00:09:25,649 -அப்போ, போய் புற்று நோயை கொண்டுவா. -தமாஷுக்கு சொன்னேன். 49 00:09:41,665 --> 00:09:42,749 ஜூன் பேசறேன். 50 00:09:45,961 --> 00:09:50,507 உன் செய்தி கிடைத்தது. அதான், இல்ல. ஆலிஸ் என்னிடம் பேசல. 51 00:09:51,091 --> 00:09:53,552 அவளுக்கு நீ கடிதம் எழுதலயா? இல்ல பேசலையா? 52 00:09:53,885 --> 00:09:55,595 இல்லை. சொன்னேனே... 53 00:09:57,097 --> 00:10:00,434 தன்னிடம் தொடர்பு வேணாம்னு ஆலிஸ் தெளிவா சொல்லிட்டா, நாங்க 54 00:10:00,517 --> 00:10:01,977 அதை மதித்து நடந்தோம். 55 00:10:02,644 --> 00:10:05,230 அதாவது, இந்த 14 வருடமா. 56 00:10:07,065 --> 00:10:09,109 எங்கே இருப்பான்னு ஏதும் தெரியுமா? 57 00:10:09,609 --> 00:10:12,612 கண்டிப்பா நல்லா இருப்பா. தன்னை நல்லா பார்த்துப்பா. 58 00:10:14,031 --> 00:10:17,159 அவ உன்னிடம் பேசினா, எனக்கு சொல். 59 00:10:22,331 --> 00:10:25,000 இது டெஸ். கடைத் தெருவிலருந்து. 60 00:11:41,326 --> 00:11:42,577 இப்படி செய்யலாமா? 61 00:11:44,871 --> 00:11:48,333 ஜூன், ஜூன். எழுந்துக்கோ. 62 00:11:51,420 --> 00:11:54,339 கடவுளே. உனக்கு கொதிக்குதே. எப்படி இருக்கே? 63 00:11:56,133 --> 00:11:56,967 பரவாயில்ல. 64 00:11:57,843 --> 00:11:59,052 ஐயோ. 65 00:12:02,431 --> 00:12:04,516 -உன் மருந்து இங்கிருக்கா? -ஆமாம். 66 00:13:45,325 --> 00:13:46,326 ஆக்னஸ் பாறைமுகடு வரவேற்கிறது 67 00:13:46,409 --> 00:13:47,911 ஆஹா. வந்துட்டோம், கண்ணு. 68 00:13:48,453 --> 00:13:49,538 என்னாச்சு? 69 00:13:51,122 --> 00:13:51,957 ஐயோ. 70 00:13:57,087 --> 00:13:59,172 ஐயோ. சரி பரவாயில்ல. 71 00:14:02,842 --> 00:14:03,802 அடடா. 72 00:14:09,182 --> 00:14:10,600 ஐயோ, பாவம். 73 00:14:14,020 --> 00:14:16,273 பரவாயில்ல. சரியாயிடும். 74 00:14:18,775 --> 00:14:21,903 கால்நடை மருத்துவமனை 75 00:14:32,038 --> 00:14:35,542 -ஹலோ? -மன்னிக்கணும். சனி 1:00 பிறகு விடுமுறை. 76 00:14:39,504 --> 00:14:40,839 யார் நீங்க? 77 00:14:41,673 --> 00:14:43,925 கத்தறதை நிறுத்தவே இல்ல. சிறுநீரில் ரத்தம் வருது. 78 00:14:47,053 --> 00:14:50,724 ரொம்ப கஷ்டப் பட்டிருக்கு இது. 79 00:14:52,225 --> 00:14:53,476 இதுக்கு என்ன வயது? 80 00:14:53,852 --> 00:14:56,104 எனக்குத் தெரியாது. லாரி ஷெட்ல பார்த்தேன். 81 00:14:56,563 --> 00:14:59,566 புதியவரா. இந்த ஊர்க்காரங்க அனாதை நாயை தொடமாட்டாங்க. 82 00:15:00,942 --> 00:15:02,611 அடடே. ரொம்ப மோசமா இருக்கே. 83 00:15:03,486 --> 00:15:07,532 மூத்திர கோச தொற்று. எடை குறைவு. ஐயோ பாவம். 84 00:15:09,618 --> 00:15:11,453 உனக்கு மென்மையான ஆதரவு தேவை. 85 00:15:14,956 --> 00:15:16,791 கவலை வேணாம். நான் பார்த்துக்கறேன். 86 00:15:19,669 --> 00:15:21,796 வேணும்னா, உங்க கையை கழுவிக்கலாம். 87 00:15:28,470 --> 00:15:34,267 சில விஷயங்கள் தேவை. பெயர், ஃபோன் எண், முகவரி. இது போல. 88 00:15:34,351 --> 00:15:35,352 ஹேய். 89 00:15:36,978 --> 00:15:37,979 ஆலிஸ். 90 00:15:39,898 --> 00:15:41,858 இப்போதைக்கு இவ்ளோதான். 91 00:15:46,404 --> 00:15:48,031 என்னை "மாஸ்"னு கூப்பிடுவாங்க. 92 00:15:56,539 --> 00:15:58,165 டேய் பசங்களா, வேணாம். 93 00:16:44,003 --> 00:16:46,840 -என்னாச்சு? -மயங்கி விழுந்தீங்க. 94 00:16:48,299 --> 00:16:49,134 இதோ. 95 00:16:51,553 --> 00:16:53,263 மெதுவா எழுந்தா போதும். 96 00:16:57,934 --> 00:16:59,644 குடித்து சாப்பிட்டது எப்போ? 97 00:17:02,731 --> 00:17:04,607 டேய் பசங்களா, வேற எங்காவது போங்க. 98 00:17:07,694 --> 00:17:08,778 -கொஞ்ச... -போதும். 99 00:17:11,030 --> 00:17:13,867 நீங்க வண்டி ஓட்டக்கூடாதுன்னு சொல்றேன். 100 00:17:15,117 --> 00:17:18,371 -நான் கொண்டு விடறேன். -பரவாயில்ல. 101 00:17:20,999 --> 00:17:23,251 நீங்களே கார் அலங்கார வேலையை செய்யலாம், 102 00:17:23,460 --> 00:17:25,753 இது உண்மைல நல்லாவே இருக்கு. 103 00:17:28,089 --> 00:17:32,218 ஹேய், ஆலிஸ், நான் ஹோட்டல்ல கொண்டு விடறேனே. 104 00:17:32,302 --> 00:17:35,054 என்னால நல்லா ஹோட்டலுக்குப் போக முடியும். 105 00:17:35,138 --> 00:17:36,890 நான் பரிதாபமான பூப்போன்ற நபரல்ல. 106 00:18:34,364 --> 00:18:36,908 அம்மா ஒரு நாள் பல்கேரியா திரும்பிடணும்ன்றாங்க. 107 00:18:36,991 --> 00:18:41,120 பெரியவனானதும் அவங்களை பல்கேரியா ரோஸ் பள்ளத்தாக்குக்கு கூட்டிப் போவேன். 108 00:18:42,205 --> 00:18:43,331 இதுதான் எங்க இடம். 109 00:18:43,915 --> 00:18:46,125 அரசிகள் மரத்தின் கீழ் புதைக்கப் பட்டுள்ளனர், 110 00:18:47,335 --> 00:18:49,671 அதனால்தான் ரோஜா அவ்ளோ வாசனைன்னு சொல்வாங்க. 111 00:18:50,088 --> 00:18:52,131 உண்மைல, கடைசி கற்பனை துளி, எனது. 112 00:18:58,680 --> 00:19:01,057 -நாம் வேற எங்கே போகலாம்? -ப்ரான்டே ஹவுஸ். 113 00:19:01,641 --> 00:19:04,936 அவங்க எழுதிய மேஜைல உட்கார்ந்து, கல்லறையை பார்த்து எழுதணும். 114 00:19:05,937 --> 00:19:08,439 -புல்காகோவ். செஞ்சதுக்கம். -ஆம். 115 00:19:08,523 --> 00:19:10,024 மாஸ்கோ, சாத்தானை சந்திக்குமிடம். 116 00:19:11,401 --> 00:19:15,446 -செர்ரி ப்ளாஸ்ஸம். முகராமி. -ஜப்பானில். ஆம், அங்கேயும் போகணும். 117 00:19:24,497 --> 00:19:25,999 உன்னோடு எங்கும் வருவேன். 118 00:19:33,965 --> 00:19:35,842 உனக்கு மின்னஞ்சல் அனுப்ப முயன்றேன், என்னை அழை - அன்புடன், ஆகீ 119 00:19:35,925 --> 00:19:38,720 நாங்க போனா, திரும்பி வர முடியாது, தெரியும்தானே? 120 00:19:40,805 --> 00:19:43,433 என் அப்பாவை விட்டு வந்தப்ப, பல்கேரியா போனார். 121 00:19:44,517 --> 00:19:46,477 நானும் என் அம்மாவும் கூட போயிருக்கணும். 122 00:19:47,103 --> 00:19:52,025 நாங்க இங்கே இருப்பது சட்ட விரோதம், போனா மறுபடி திரும்பி வர முடியாது, ஆலிஸ். 123 00:20:03,119 --> 00:20:04,370 நாம் ஓடிபோயிடலாம். 124 00:20:06,456 --> 00:20:07,665 நாம் ஓடிப் போனா என்ன? 125 00:20:08,541 --> 00:20:10,960 நாம திருமணம் செய்து ரெண்டு பாஸ்போர்ட்டோடு, 126 00:20:11,044 --> 00:20:13,463 நாம் விரும்பும் இடத்தில் வேலை செய்து வாழ்வோம்... 127 00:20:14,464 --> 00:20:16,466 உன்னை திருமணமா செய்யச் சொல்றே? 128 00:20:19,886 --> 00:20:20,762 ஆமாம். 129 00:20:23,806 --> 00:20:26,559 -ஆம். -அது ரகசியமா இருக்கும். 130 00:20:27,936 --> 00:20:29,687 ஆம், அது நம் ரகசியம். 131 00:21:15,274 --> 00:21:17,151 போதையை விட பார்க்கிறேன் 132 00:21:24,409 --> 00:21:28,329 ஓசைக்கு நான் சரண் அடைந்தால் 133 00:21:34,627 --> 00:21:35,837 ஓசை 134 00:22:52,830 --> 00:22:54,248 ரொம்ப வருந்தறேன், ஆலிஸ். 135 00:22:59,337 --> 00:23:03,966 யாரோ, குடியேற்ற துறையில் போட்டுக் கொடுத்தாங்க, ஆகீயை நாடு கடத்திட்டாங்க. 136 00:23:17,688 --> 00:23:22,401 அன்பு ஆலிஸ், நீ நான் மறுபடி உன்னை தொடர்பு கொள்வதை விரும்பலன்னு எழுதிட்டே, ஆனால், 137 00:23:27,115 --> 00:23:29,659 உண்மைல நீ என்னை இன்னும் காதலிக்கிறாயெனவே எண்ணி 138 00:23:29,742 --> 00:23:32,495 ஐந்து ஆண்டாக தொடர்ந்து எழுதிகிட்டு இருக்கேன். 139 00:23:33,621 --> 00:23:37,792 ரொம்ப நாள்வரை, நீ இப்படி உறவை முறித்ததை ஏத்துக்கவே முடியல. 140 00:23:37,875 --> 00:23:41,546 அதுவும் மின்னஞ்சலில். எப்படி எல்லாம் நமக்குள் உறுதி எடுத்தோம். 141 00:23:42,672 --> 00:23:46,968 நாம் பேசிய பயணத்தை நான் இறுதியா மேற்கொண்டதை உனக்கு சொல்லவே எழுதுகிறேன். 142 00:23:47,760 --> 00:23:48,845 ஒருத்தியை பார்த்தேன். 143 00:23:51,222 --> 00:23:54,851 அவள் பெயர் ஆனா. நாங்க திருமணம் செய்துக்கறோம், ஆலிஸ். 144 00:24:17,165 --> 00:24:18,166 ஆலிஸ். 145 00:24:19,584 --> 00:24:22,545 உனக்குத் தெரியுமா? நீயும் உடந்தையா? 146 00:24:23,129 --> 00:24:26,090 -எதுக்கு உடந்தை? -ஆகீயை கழட்டி விட்டது. 147 00:24:27,091 --> 00:24:31,512 -அந்த கடிதங்கள். பாழாய்ப்போன பொய்கள். -என்ன? என்ன பேசறே நீ? 148 00:24:32,305 --> 00:24:33,639 ஆகீ கடிதம் அனுப்பினான். 149 00:24:33,723 --> 00:24:36,475 ஒண்ணுதான் என்னிடமிருக்கு. ஜூன் மத்ததை அழித்தார். 150 00:24:36,934 --> 00:24:41,480 அவன் மின்னஞ்சலை தடை செய்தார். நான் அவனை கழட்டி விட்டதுபோல் மின்னஞ்சல் அனுப்பினார். 151 00:24:44,400 --> 00:24:46,194 அவர் தான் அவனை நாடுகடத்த செய்தது. 152 00:24:50,072 --> 00:24:51,782 நான் ரொம்ப வருந்தறேன், ஆலிஸ். 153 00:24:52,950 --> 00:24:58,873 எனக்கு எல்லாமே தெரியும்னு சொல்லு. அவங்க கட்டுப்பாட்டு மடத்தனம் எல்லாம். 154 00:25:01,792 --> 00:25:04,295 நான் நேசித்த ஒரே ஒருவனிடமிருந்து பிரித்தார். 155 00:25:06,214 --> 00:25:07,924 இப்போ திருமணம் செய்துக்கறான். 156 00:25:11,594 --> 00:25:14,513 -எங்கே இருக்கே? -நான் சொல்ல மாட்டேன். 157 00:25:16,224 --> 00:25:17,683 திரும்பி வரவும் மாட்டேன். 158 00:25:21,562 --> 00:25:22,605 அவரை வெறுக்கிறேன். 159 00:26:27,169 --> 00:26:30,423 ஆக்னஸ் பாறைமுகடு நடைபழகும் பாதைகளுக்கு வரவேற்கிறோம் 160 00:27:31,692 --> 00:27:34,236 -ஹேய். -ஹேய். 161 00:27:36,364 --> 00:27:39,867 -நீந்தப் போறீங்களா? -ஆம். 162 00:27:41,160 --> 00:27:43,704 இங்கே தண்ணீர் இல்ல. நீருற்று வறண்டுடுச்சு. 163 00:27:45,206 --> 00:27:46,332 அட, பொய் சொன்னாங்க. 164 00:27:48,709 --> 00:27:50,378 இருந்தாலும் வந்தது பயனானது. 165 00:27:53,214 --> 00:27:54,090 பார்க்கலாமா? 166 00:28:02,098 --> 00:28:06,727 நீங்க நீந்தணும்னா, இதுதான் சரியான இடம். 167 00:28:07,561 --> 00:28:10,648 ஜல்ங்கே நீரூற்று. ஒரு மணி நேர பயண தூரத்தில். 168 00:28:11,774 --> 00:28:15,569 ஆனா, அங்கே மாயாஜால நேரம் 7:30க்குத்தான் போகணும். 169 00:28:16,195 --> 00:28:19,824 காத்திருந்து பாருங்க. அது மாயாஜாலம். 170 00:28:24,286 --> 00:28:25,204 நன்றி. 171 00:28:28,207 --> 00:28:31,710 -உங்களுக்கு மலர்கள் பிடிக்குமா? -ஆம். எனக்குப் பிடிக்கும். 172 00:28:32,253 --> 00:28:34,922 அப்போ, இங்கே மழை பெய்யும்போது, 173 00:28:35,756 --> 00:28:38,843 மொத்த தரையிலும், பாலைவன மலர் இதழ்கள் கடலா பரவிவிடும். 174 00:28:43,097 --> 00:28:44,390 அதை பார்க்க ஆசைதான். 175 00:28:47,351 --> 00:28:48,269 ஆமாம். 176 00:28:50,604 --> 00:28:51,981 -நன்றி. -சரி. 177 00:28:57,111 --> 00:29:00,698 ஜல்ங்கே. 7:30, ஒரு மணி நேர பயண தூரத்தில். 178 00:29:04,285 --> 00:29:05,286 புரியுது. 179 00:29:42,031 --> 00:29:44,325 மன்னியுங்க. பணம் கட்டிவிடுகிறேன். 180 00:29:45,993 --> 00:29:50,080 மாஸ் பேசினான். உன் நாய் தயாரா இருக்காம். ஆனா இங்கே வெச்சுக்க முடியாது. 181 00:29:52,750 --> 00:29:53,667 சரி. 182 00:29:54,210 --> 00:29:58,172 நீ பார்க்க ரொம்ப அழகா இருக்கே. ரொம்ப நன்றி. 183 00:29:59,882 --> 00:30:01,342 ரொம்ப நல்லாதான் இருக்கு. 184 00:30:06,305 --> 00:30:08,474 இதை பொது இடத்தில வெச்சுக்க முடியாது. 185 00:30:10,309 --> 00:30:14,313 இன்னும் கொஞ்ச நாள் இங்கயே இருக்கட்டுமே? நான் முடிவு செய்யும் வரை? 186 00:30:15,523 --> 00:30:19,068 எடுத்தெறிந்து பேசினதுக்கு வருந்தறேன், அவ்ளோ இனிமையா இருந்தும். 187 00:30:20,110 --> 00:30:24,156 -நமக்குள்ள ரொம்ப அறிமுகமில்லதான்... -கார் அலங்காரத்தில் மேதை நீங்க. 188 00:30:25,324 --> 00:30:27,618 கண்ணாடி உடைக்க, மினிபார்லாம் பிடிக்கும். 189 00:30:31,080 --> 00:30:33,958 பெரிய நகரில்லை, இதெல்லாம் சீக்கிரம் தெரிஞ்சுடும். 190 00:30:35,042 --> 00:30:37,336 பானம் வாங்கி தந்தா, பிப் என்னோட வரலாம். 191 00:30:37,670 --> 00:30:39,296 அதுக்கு விளையாட நிறைய இடம். 192 00:30:47,388 --> 00:30:48,639 ஏன் இங்கே வர நினைத்தே? 193 00:30:51,058 --> 00:30:53,352 என் அம்மா பெயரா இருந்ததால். ஆக்னஸ். 194 00:30:54,395 --> 00:30:56,355 எனக்கு ஏதையோ குறிப்பதா தோணிச்சு. 195 00:30:57,815 --> 00:31:00,818 டிரக்ல பட்டாம்ப்பூச்சிங்க கீழே மறைந்திருப்பது என்ன? 196 00:31:02,194 --> 00:31:03,320 ஒரு குறியீடு. 197 00:31:05,698 --> 00:31:07,575 "ஆலிஸ் ஹார்ட். மலர்வழி தொடர்பாளர்" 198 00:31:08,200 --> 00:31:10,828 என்னன்னு புரியல, ஆனா செறிவாதான் தெரியுது. 199 00:31:10,911 --> 00:31:15,416 -ஒரு மலர் பண்ணைல வளர்ந்தேன். -மலர் பண்ணையா? ரோஜாவில் பால் கறப்பீங்களா? 200 00:31:15,916 --> 00:31:18,586 அப்போ எந்திரங்கள் ரொம்ப நுணுக்கமா இருக்குமே. 201 00:31:21,171 --> 00:31:26,176 நாங்க ஆஸ்திரேலிய பழங்குடிகளை ஆய்பவர்கள். எங்க ஊரில் எல்லா மலருக்கும் பொருள் உண்டு. 202 00:31:26,260 --> 00:31:30,139 நாங்க உண்மை வார்த்தைகளுக்கு பதில் உபயோகிப்போம். அப்படிதான் பேசுவோம். 203 00:31:30,222 --> 00:31:31,432 மலர். மலர்வழி தொடர்பு. 204 00:31:33,309 --> 00:31:34,393 நான் பார்க்கலாமா? 205 00:31:37,021 --> 00:31:37,938 பார்க்கலாம். 206 00:31:48,699 --> 00:31:52,661 "உயிர்த்தெழுதல்." "என் ரகசிய மதிப்பு." 207 00:31:53,621 --> 00:31:56,498 "உன் காதல், வாழ்வு, மரணத்திலும் கூடவே." 208 00:31:58,208 --> 00:32:00,419 "என் ரகசிய மதிப்பு." அவ்ளோ சுவாரசியமா? 209 00:32:01,295 --> 00:32:03,714 "இரவில் எறிந்து காலைல பார்ப்பது" அல்லது, 210 00:32:04,465 --> 00:32:07,718 "உன் முடி ரொம்ப அருமை"ன்னு சொல்லும் ஏதும் இருக்கா? 211 00:32:14,600 --> 00:32:16,018 நீ வேற எங்காவது போகணுமா? 212 00:32:21,690 --> 00:32:24,234 இல்ல. இல்ல. 213 00:32:27,196 --> 00:32:29,281 ஆக, குமாரி மலர்வழி தொடர்பாளரே, 214 00:32:30,032 --> 00:32:31,867 -சொல். -"மாஸ்"னா என்ன? 215 00:32:33,410 --> 00:32:36,413 அதை சொல்ல தேவையான போதை இல்லை. 216 00:32:36,497 --> 00:32:38,707 -அவ்ளோ தேவையா? போதும்னு இருந்தேன். -சரி... 217 00:32:39,541 --> 00:32:40,751 இன்னொரு சுத்து தேவையா? 218 00:32:42,127 --> 00:32:44,963 இன்னொரு சுத்து அருந்துவோம். ஷாட்ஸ் அடிக்கிறாயா? 219 00:32:56,642 --> 00:33:00,062 கரேஜ் இன் தி ஃபேஸ் ஆஃப் ஃபியர். இந்த புத்தகம் என் அம்மாவிடமும். 220 00:33:01,480 --> 00:33:04,149 அவங்களை பத்திய நினைப்பு இப்போ எதுக்கு. 221 00:33:04,817 --> 00:33:07,486 பழம் பஞ்சாங்கம். பார்த்து ரொம்ப நாளாச்சு. 222 00:33:26,880 --> 00:33:28,132 நான் போயிடணும் போல. 223 00:33:31,260 --> 00:33:35,264 அதில்லாம, "மாஸ்"னா "வாய் துர்நாற்றம்" அல்லது 224 00:33:36,765 --> 00:33:39,184 "தொட்டாலே அசிங்கம்"னு அர்த்தமோ என்னமோ. 225 00:33:50,154 --> 00:33:51,321 இந்த நாளுக்கு நன்றி. 226 00:33:52,781 --> 00:33:53,741 மகிழ்ச்சியானேன். 227 00:33:56,034 --> 00:33:59,121 போக வேணாம். எனக்கு நீ இருக்கணும். 228 00:34:11,425 --> 00:34:12,592 நிச்சயமா சொல்றியா? 229 00:34:14,803 --> 00:34:15,763 ஆம். 230 00:34:18,931 --> 00:34:20,851 ஏன் இவ்ளோ பட்டன்கள்? 231 00:34:34,864 --> 00:34:36,533 -இது இருக்கட்டுமா? -பரவாயில்ல. 232 00:34:38,869 --> 00:34:39,828 திற. 233 00:34:44,248 --> 00:34:46,126 நாள் முழுக்க உள்ளாடை இல்லாமதானா? 234 00:34:47,710 --> 00:34:51,255 அட, இப்படி நடக்கும்னு நான் நினைக்கல. 235 00:35:50,649 --> 00:35:53,527 பின்வரும் மின்னஞ்சல் முகவரிகள் தடைசெய்யப் பட்டுள்ளன: 236 00:35:55,946 --> 00:35:57,155 என்ன செய்யறே, கண்ணு? 237 00:36:00,117 --> 00:36:01,201 ஆலிஸ் சொன்னது சரி. 238 00:36:02,035 --> 00:36:04,788 என்னது? அவ பேசினாளா? 239 00:36:07,249 --> 00:36:09,209 எப்போ? நல்லா இருக்காளா? 240 00:36:10,210 --> 00:36:12,337 -உங்களுக்கு தெரியுமா? -என்ன தெரியுமா? 241 00:36:13,255 --> 00:36:15,048 ஜூன் ஆகீயை கழட்டி விட்டது. 242 00:36:19,553 --> 00:36:21,471 -ஆலிஸ் நலமா? -அவ நலமில்லதான். 243 00:36:21,555 --> 00:36:22,431 எங்க இருக்கா? 244 00:36:22,514 --> 00:36:25,142 எனக்கு தெரிஞ்சாலும், ஏன் சொல்லணும்? 245 00:36:33,942 --> 00:36:37,321 ஆலிஸ் கேண்டியிடம் பேசினா. ஆகீயிடமிருந்து வந்த அந்த கடிதம். 246 00:36:38,530 --> 00:36:39,531 ஆகீ... 247 00:36:43,410 --> 00:36:44,369 அடடே. 248 00:36:47,122 --> 00:36:49,917 இது தமாஷ் இல்ல. உனக்கு என்ன பிரச்சினை ஆச்சு? 249 00:36:50,292 --> 00:36:53,128 அவளுக்கு என்னவோ ஏதோன்ன ஆச்சோன்னு பயந்துட்டேன். 250 00:36:53,211 --> 00:36:57,507 ஆச்சு தான். அவளுக்கு தெரிந்திருக்கு. உன் பேச்சை நான் கேட்டிருக்கவே கூடாது. 251 00:36:57,591 --> 00:36:59,468 விடு. எப்பவோ நடந்தது அது. 252 00:37:00,093 --> 00:37:04,264 அவ வாழ்க்கையை தொலைத்துவிட்டு, ஆகீ கூட பல்கேரியா போவது நமக்கு பிடிக்கல. 253 00:37:04,514 --> 00:37:05,599 நாம் ஒப்புக்கிட்டது. 254 00:37:12,314 --> 00:37:15,233 அப்போ, கேண்டிக்கு ஆலிஸ் இருக்குமிடம் தெரியுமா? 255 00:37:16,902 --> 00:37:17,778 தெரியாது. 256 00:37:20,030 --> 00:37:21,740 இதை நீதான் தீர்க்கணும், ஜூன். 257 00:37:22,491 --> 00:37:24,910 நான் இன்னொரு குழந்தையை இழக்க விரும்பல. 258 00:37:39,967 --> 00:37:42,886 ஹலோ. இது ஜானின் ஃபோன். சார்லி பேசறேன். 259 00:37:46,431 --> 00:37:47,265 ஹலோ? 260 00:37:49,393 --> 00:37:50,352 இருக்கீங்களா? 261 00:37:53,522 --> 00:37:54,606 ஜூன் ஹார்ட் பேசறேன். 262 00:37:55,816 --> 00:37:56,692 ஜூனா? 263 00:38:00,404 --> 00:38:02,030 நான்தான். 264 00:38:04,074 --> 00:38:05,033 சார்லி பேசறேன். 265 00:38:07,619 --> 00:38:11,873 -உங்களுக்கு இதை கேட்டா மகிழ்ச்சியாகும்... -ஃபோனை உன் அப்பாவிடம் கொடேன்? 266 00:38:13,250 --> 00:38:15,335 உடம்பு முழுக்க மாவு பூசியிருக்கே. 267 00:38:15,585 --> 00:38:18,046 உண்மைல நாங்க கொண்டாடிட்டு இருக்கோம். 268 00:38:18,130 --> 00:38:20,716 உன் அப்பாவிடம் ஃபோனைக் கொடு. நேரமில்லை. 269 00:38:32,102 --> 00:38:33,103 ஒண்ணுமில்லயே? 270 00:38:36,648 --> 00:38:37,983 ஜூன். என்ன வேணும்? 271 00:38:40,402 --> 00:38:42,237 ஆலிஸை கண்டுபிடிக்க உதவணும். 272 00:39:38,877 --> 00:39:42,130 அவளை கண்டுபிடிக்க ஜான் மோர்கன் உதவுவார். 273 00:39:48,470 --> 00:39:49,429 ஜூன். 274 00:39:52,099 --> 00:39:54,309 கேண்டி! கேண்டி! 275 00:39:55,185 --> 00:39:56,061 ஜூன்! 276 00:39:57,687 --> 00:39:59,231 -என்னாச்சு? -தெரியாது. 277 00:40:00,982 --> 00:40:01,900 ஜூன். 278 00:40:20,877 --> 00:40:21,711 ஆம். 279 00:40:27,759 --> 00:40:31,179 -இந்த இடம் பத்தி எப்படி தெரியும்? -ஒரு நண்பனால். 280 00:40:34,891 --> 00:40:35,767 வா. 281 00:40:45,569 --> 00:40:46,611 ஜாக்கிரதை... 282 00:40:47,654 --> 00:40:49,030 முதலைன்னுலாம் சொல்லாதே. 283 00:40:49,114 --> 00:40:52,200 முதலை இருக்கா என்ன? முதலை இருக்கா என்ன? 284 00:41:13,638 --> 00:41:15,140 உன் குடும்பம் பத்தி சொல். 285 00:41:17,726 --> 00:41:19,561 வருடத்தில் சில நாட்கள் போவேன். 286 00:41:19,936 --> 00:41:22,272 ஒரிரண்டு நாளுக்குள் திரும்பி வர ஆசையாகும். 287 00:41:23,732 --> 00:41:26,943 தப்பா நினைக்காதே. அவங்க பிடிக்கும். ஆனா, தெரியல, 288 00:41:28,737 --> 00:41:31,156 இந்த பாலைவனத்தை விட்டு இருக்க முடியல. 289 00:41:32,574 --> 00:41:34,242 விட்டு இருந்தா, அற்பமா உணருவேன். 290 00:41:38,121 --> 00:41:40,332 உங்க பெற்றோர் பத்தி? எங்க இருக்காங்க? 291 00:41:42,500 --> 00:41:44,211 இறந்துட்டாங்க. என் ஒன்பது வயதில். 292 00:41:45,045 --> 00:41:47,505 -அடப் பாவமே. மன்னிச்சுடு. -இருக்கட்டும். 293 00:41:47,589 --> 00:41:49,883 -சங்கடப் படுத்தறதே என் வேலை. -பரவாயில்ல. 294 00:41:50,008 --> 00:41:52,552 அதனாலதான் உன் பாட்டியோடு பண்ணையில் வளர்ந்தாய். 295 00:41:53,178 --> 00:41:54,930 பரவாயில்ல. அதாவது... 296 00:41:56,848 --> 00:41:58,850 இப்ப திரும்பி போகவே முடியாது, ஆனா... 297 00:42:00,352 --> 00:42:01,186 ஏன்? 298 00:42:03,396 --> 00:42:05,190 பொய், கட்டுப்படுத்தல், 299 00:42:05,315 --> 00:42:08,944 என் மேல் அக்கறை உள்ளவங்களை எல்லாம், கழட்டி விட்டாங்க. 300 00:42:09,819 --> 00:42:12,030 -உன்னையும் கழட்டிவிடுவாங்க. -அது சரியா? 301 00:42:12,989 --> 00:42:15,659 -எப்படி அதை செய்வார்? -அவருக்கு தெரியும். 302 00:42:16,701 --> 00:42:20,622 அப்போ, நீ இங்கேயே இருப்பதுதான் நல்லது என்பேன். 303 00:42:29,714 --> 00:42:33,134 அடடே, உண்மைல இவங்கல்லாம் எனக்கு யாருன்னே தெரியாது. 304 00:42:36,888 --> 00:42:40,100 மார்கரிடாஸ் தாங்களேன். நாலு குவளை. இல்ல அஞ்சா தாங்க. 305 00:42:40,600 --> 00:42:43,687 இல்ல. இல்ல. பாரு. இவங்க யாருன்னே தெரியாது. 306 00:42:43,770 --> 00:42:45,981 -ஹேய். -ஹை. 307 00:42:47,524 --> 00:42:50,902 -நான் லூலு. -நான் ஆலிஸ். 308 00:42:51,695 --> 00:42:55,490 எங்களோடு சேர். இன்றிரவு தக்கரின் பிறந்தநாள் விருந்து. 309 00:42:55,699 --> 00:42:56,950 போவோம். 310 00:42:59,327 --> 00:43:00,161 நன்றி. மெர்லி. 311 00:43:06,001 --> 00:43:07,585 மியா டுகுர்டா தேசிய பூங்கா 312 00:43:32,360 --> 00:43:36,364 அவன் நலம்தானா? ராத்திரி முழுக்க பேசவே இல்ல. 313 00:43:37,324 --> 00:43:40,160 அவன் 14 வயது பையன். பேசாம இருந்தாதான் இயல்பு, சரி. 314 00:43:41,453 --> 00:43:44,414 ஆனா, நாம் கொண்டாடறோம், ஜூன் பேசி, கெடுத்தா. 315 00:43:44,497 --> 00:43:47,959 -அப்போ விஷயம் தெரியும். -அவளுக்கு ஆலிஸ் பத்தி கவலை. 316 00:43:49,669 --> 00:43:52,630 -அவளுக்கு முட்டு கொடுக்கிறாயா? -நான் படுக்கணும். 317 00:43:53,423 --> 00:43:54,632 ரொம்ப நேரம் முழிக்காதே. 318 00:44:03,266 --> 00:44:04,726 ஆரம்பி, மாஸ். 319 00:44:06,353 --> 00:44:09,230 காதல் சுட்டெரிக்கும் 320 00:44:09,731 --> 00:44:10,857 ஆம். 321 00:44:12,650 --> 00:44:15,403 தகிக்கும் வளையத்தை உருவாக்கும் 322 00:44:20,200 --> 00:44:21,618 கட்டுக்கடங்கா ஆசை முட்டும் 323 00:44:21,951 --> 00:44:22,952 ஆம். 324 00:44:25,372 --> 00:44:27,749 நான் விழுந்தேன் அது நெருப்பின் விட்டம் 325 00:44:29,417 --> 00:44:32,921 தகிக்கும் வளையத்தில் விழுந்தேன் 326 00:44:33,213 --> 00:44:35,924 விண்பள்ளத்துக்கு நீ போகாததை நம்ப முடியல. 327 00:44:36,007 --> 00:44:38,635 தேசிய பூங்கால. அதுக்காகதான் எல்லோரும் வருவது. 328 00:44:38,718 --> 00:44:41,137 -அற்புதமா இருக்குமோ. -ஆம். சொல்லவா? 329 00:44:41,471 --> 00:44:44,224 நாளை சூரிய அஸ்தமன பயணத்தில் உன்னையும் சேர்ப்பேன். 330 00:44:44,349 --> 00:44:47,268 -எனக்கு பிடிக்கும். -நீயும் மாஸும். 331 00:45:01,533 --> 00:45:02,367 ஒழியட்டும். 332 00:45:09,416 --> 00:45:10,417 ஐய்யய்யோ. 333 00:45:13,169 --> 00:45:15,797 -ஜூனின் ஃபோன் இது. -சரி. அவங்களோட பேசலாமா? 334 00:45:15,880 --> 00:45:19,175 -அவசரம். -இப்போ இல்லை. நானே சொல்றேனே? 335 00:45:20,009 --> 00:45:21,761 ஆம். நிஜமா நீங்களே சொல்லலாம். 336 00:45:22,220 --> 00:45:23,513 அவங்ககிட்ட சொல்லுங்க, 337 00:45:24,097 --> 00:45:26,433 இன்று அவன் சொன்னத அக்கறையா கேட்டிருந்தா, 338 00:45:26,516 --> 00:45:30,145 அவங்க பேரனுக்கு உடல் நிலை முழுசா தேறியது தெரிந்திருக்கும். 339 00:45:30,770 --> 00:45:34,232 அக்கறையா இருப்பதா காட்டி தொலைப்பது கூட அவ்ளோ கஷ்டமா? 340 00:45:34,524 --> 00:45:39,446 -புரியல. யார் நீங்க? -சாலி மோர்கன். எங்க வேலையை செய்தோம். 341 00:45:39,571 --> 00:45:43,116 ஜூனுக்கு, சார்லியின் உடல் நிலை பத்தி அப்பப்போ தெரிவித்தோம், 342 00:45:43,199 --> 00:45:45,493 அவளால ஒரு ஹலோ கூட சொல்ல முடியல. 343 00:45:46,494 --> 00:45:48,204 ஆலிஸ் ஓடி போனதுல வியப்பில்லை. 344 00:45:48,288 --> 00:45:51,124 அவங்களோட இன்னொரு கணமும் தாக்கு பிடிக்க முடியல போல. 345 00:45:53,001 --> 00:45:54,669 ஆலிஸ் ஒரு வேளை பேசினா, 346 00:45:55,628 --> 00:45:59,048 அவளோட தம்பி அவளை பார்க்க ஆசைப் படறான்னு சொல்லுங்களேன்? 347 00:46:01,634 --> 00:46:04,929 ஹலோ, கேட்கறீங்களா? 348 00:47:12,580 --> 00:47:14,249 ராயல் ஜார்ஜ் மருத்துவமனை சார்லி 349 00:47:19,337 --> 00:47:20,964 முக்கிய ஆவணங்கள் உள்ளே 350 00:47:29,097 --> 00:47:31,516 சுவீகரிப்புக்குப் பின் குழந்தையின் பெயர் மோர்கன் சார்லி 351 00:47:31,599 --> 00:47:33,601 சுவீகாரத் தாய் மோர்கன் சாலி 352 00:47:40,108 --> 00:47:41,359 நாயே. 353 00:47:44,320 --> 00:47:46,614 நாயே. நாயே. 354 00:47:49,617 --> 00:47:50,827 மட்டமான நாயே. 355 00:47:50,910 --> 00:47:52,996 ஆலிஸ் ஹார்ட்டுக்கு 356 00:47:55,748 --> 00:47:59,210 அனுப்புநர் சார்லி மோர்கன் 357 00:48:05,258 --> 00:48:06,426 அடடா. ஐயோ. 358 00:48:08,886 --> 00:48:10,179 இதோ பார். 359 00:48:45,214 --> 00:48:46,174 ஒண்ணுமாகலயே? 360 00:48:50,094 --> 00:48:52,263 நீங்க நீருற்று நபர்தானே. 361 00:48:55,183 --> 00:48:57,310 தம் அடிப்பீங்கன்னு நினைக்கல. 362 00:48:58,436 --> 00:48:59,896 போதையாகிடுச்சு போல. 363 00:49:00,813 --> 00:49:02,398 இருக்கட்டும், நான் டிலன். 364 00:49:03,733 --> 00:49:04,692 நான் ஆலிஸ். 365 00:49:08,696 --> 00:49:13,034 சொல்லவா, நான் ஜங்க்லே நீரூற்று போனேன் இன்று. 366 00:49:13,951 --> 00:49:17,830 -அதுவும் மந்திர நேரத்து மந்திரத்தில். -நானும் போனேன். 367 00:49:18,873 --> 00:49:19,749 நேற்று. 368 00:49:26,339 --> 00:49:28,091 ஸ்டர்ட் டெஸர்ட் பீ. 369 00:49:33,888 --> 00:49:34,722 அழகு. 370 00:49:36,099 --> 00:49:38,351 -டிலன், இங்கே எப்போ வந்தே? -ஹேய். 371 00:49:39,977 --> 00:49:40,937 இப்பதான். 372 00:49:41,020 --> 00:49:44,399 ஆலிஸ் தெரியுமா? இன்றிரவின் முக்கியமான நபர். 373 00:49:44,899 --> 00:49:47,485 இன்னொரு சுத்து கொண்டு வந்தேன். உள்ளே வாயேன்? 374 00:49:47,568 --> 00:49:49,320 -எனக்கு காத்து வாங்கணும். -சரி. 375 00:49:49,487 --> 00:49:51,447 -நீ நலம்தானே? கண்டிப்பா? -ஆம். 376 00:51:10,193 --> 00:51:13,279 இவ்ளோ காலைல யாரோட செய்தி? ஞாயித்துக் கிழமைல? 377 00:51:14,864 --> 00:51:17,492 நீயும் மாஸும் சூரிய அஸ்தமன பயணத்தில். 5 மணிக்குப் பாரப்போம்! 378 00:51:18,242 --> 00:51:21,871 லூலு. என்னை விண்பள்ள சூரிய அஸ்தமன பயணத்தில் சேர்த்திருக்கா. 379 00:51:27,919 --> 00:51:29,629 ஒரே டிக்கட் கிடைத்தது அவளுக்கு. 380 00:51:31,380 --> 00:51:33,549 பரவாயில்ல. நான் ஏற்கனவே பார்த்துட்டேன். 381 00:51:35,635 --> 00:51:37,762 நாலு மணி நேர பயண அனுபவம் வேணாமே. 382 00:51:40,807 --> 00:51:42,350 அந்த மோசமான மது. 383 00:51:53,152 --> 00:51:54,070 ஹை. 384 00:51:57,490 --> 00:52:00,368 -ட்விக் எங்கே? -சாலி பேசினா. 385 00:52:01,702 --> 00:52:03,329 ட்விக், எனக்கு, சார்லி 386 00:52:05,039 --> 00:52:06,040 பத்தி தெரியும். 387 00:52:14,173 --> 00:52:16,509 ஹேய். நிறுத்துங்க. வேணாம். 388 00:52:17,051 --> 00:52:20,304 ஹேய், இல்ல. இல்ல. என்னால் முடியாது. படு. 389 00:52:21,097 --> 00:52:23,307 -ஜூன், வேணாம். வேணாம். -நான் போகணும். 390 00:52:51,127 --> 00:52:52,879 அவன் சாகிறான்னு சொன்னாங்க. 391 00:52:54,088 --> 00:52:57,717 ஆலீஸுக்கு தேவையில்லாதது, இன்னொரு குடும்ப உறவு இறப்பது. 392 00:52:57,884 --> 00:53:00,219 ஒழிஞ்சு போ, ஜூன். அவனுக்கு வயது 14. 393 00:53:01,554 --> 00:53:06,267 அவன் இருப்பது தெரிந்தும், ஆலிஸை அவனுடைய சாவுக்கு வருந்தச் செய்தே. அவன் அவ தம்பி. 394 00:53:06,350 --> 00:53:09,061 -நான் அப்படி பார்க்கல. -நீ படு கோழை. 395 00:53:09,604 --> 00:53:14,317 ஆம். கோழைதான். நாம் பேசுவது க்ளெமின் மகனை பத்தி. 396 00:53:14,942 --> 00:53:17,403 அந்த குழந்தை என்ன செய்யுமோன்னு பயந்தேன். 397 00:53:17,904 --> 00:53:21,908 அது அவ ரத்தம். அவ தம்பி. ஆலிஸ் சார்லியோடு வளர்ந்திருக்கலாமே. 398 00:53:23,951 --> 00:53:27,955 என் குழந்தைகளை என்னிடமிருந்து பிரித்தப்போ, என் ஒரே ஆறுதலா இருந்தது 399 00:53:28,956 --> 00:53:30,958 அவங்க ஒண்ணா இருப்பாங்களேன்னுதான். 400 00:53:31,751 --> 00:53:34,378 -உனக்கு தெரியாத மாதிரி நடிக்காதே. -தெரியும்... 401 00:53:34,462 --> 00:53:35,296 இல்ல. 402 00:53:37,048 --> 00:53:40,676 இத்தனை நாளா எங்களிடம் புளுகினே. ஆலிஸிடம் புளுகினே. அவ யாரை 403 00:53:41,177 --> 00:53:43,596 பார்க்கணும், விரும்பணும்னு கட்டுப்படுத்தினே. 404 00:53:43,930 --> 00:53:47,350 நீ வெறுக்கும் ஆண்களுக்கும் உனக்கும் வித்தியாசம்தான் என்ன? 405 00:53:47,433 --> 00:53:50,937 இந்த குடும்பத்தின் ஒட்டு மொத்த நலனுக்காகதான் முடிவெடுத்தேன். 406 00:53:52,647 --> 00:53:53,606 மண்ணாங்கட்டி. 407 00:54:44,615 --> 00:54:47,243 -ஆலிஸ், வந்துட்டே. -ஹை. 408 00:54:48,202 --> 00:54:50,371 ஹேய். மாஸ் எங்கே? 409 00:54:50,705 --> 00:54:53,249 -அவனால் வர முடியல. -சரி. 410 00:54:57,837 --> 00:54:59,255 எங்களோட சேர்ந்ததுக்கு நன்றி. 411 00:54:59,338 --> 00:55:02,508 நீங்க எங்க பிரதேசத்துக்கு வந்ததில் மனம் பூரிக்கிறது. 412 00:55:02,591 --> 00:55:05,386 இந்த பிரதேசம், மேற்கு அர்ரென்டே மக்களது சொந்தம். 413 00:55:05,469 --> 00:55:09,640 என் பாட்டியின், என் தாயின், அதோடு என் பிரதேசமும். 414 00:55:09,890 --> 00:55:12,852 நீங்க எங்களோடு சேர்ந்ததில் எங்களுக்கு கெளரவம். 415 00:55:13,227 --> 00:55:17,064 உங்களுக்கு சொல்லப் போகும் கதை, எல்லா குழந்தைகளுக்கும், வழக்கமா, 416 00:55:17,148 --> 00:55:19,400 சொக்கப்பனையை சுற்றி அமர்ந்து சொல்வது. 417 00:55:19,483 --> 00:55:24,363 எங்க கலாச்சாரத்தை, எங்க பாடல்களை, எங்க கதைகளை உயிர்ப்போடிருக்க நாங்க செய்வது இது. 418 00:55:43,049 --> 00:55:47,219 ஒரு மாலை நேரத்தில், பால் வீதியின் தாரகை பெண்கள் நடனமாடி கொண்டிருந்தனர், 419 00:55:47,511 --> 00:55:49,889 அப்படி நடனமாடுகையில், ஒரு தாய் தன் குழந்தையை 420 00:55:50,723 --> 00:55:54,268 டூர்னா எனும் ஒரு குழிந்த மரப் பாத்திரத்தில் தவழ வைத்தாள். 421 00:55:56,020 --> 00:55:58,564 அந்தக் குழந்தை ஆடி ஆடி, 422 00:55:58,939 --> 00:56:02,651 வேகமாக ஆடி, நட்சத்திரங்களிலிருந்து பூமியில விழுந்தது. 423 00:56:05,112 --> 00:56:09,950 டூர்னா குழந்தை மேலே விழுந்து அதை மூடிக் கொண்டது, அதுதான் விண் பள்ளம். 424 00:56:14,288 --> 00:56:17,583 குழந்தையின் தாயும் தந்தையும் குழந்தை காணாமல் போனதை கண்டனர். 425 00:56:19,418 --> 00:56:21,003 அதை எங்கும் தேடினர், 426 00:56:21,712 --> 00:56:24,381 டூர்னாவின் கிழே குழந்தைய அவங்களால பார்க்க முடியல. 427 00:56:25,716 --> 00:56:27,676 அவங்க வேதனையில் அழுதனர். 428 00:56:38,270 --> 00:56:41,649 இன்றுவரை, விண்பள்ளத்தின் சுவர்கள் குழந்தையை பாதுகாக்கின்றன. 429 00:56:41,732 --> 00:56:42,858 இதயவலிக்கு மருந்து 430 00:56:42,942 --> 00:56:44,985 நாம் அதன் பெற்றோரைப் பார்க்கிறோம், 431 00:56:45,361 --> 00:56:49,990 அவைதான் அசைந்து செல்லும், மாலை நேர தாரகைகள். 432 00:56:50,574 --> 00:56:53,953 அவை குழந்தையை முடிவே இல்லாம தேடி அலைகின்றன. 433 00:57:10,886 --> 00:57:16,851 மன்னித்துவிடு என்னை. நீ இல்லாம நான் ஒன்றுமில்லை. 434 00:58:11,906 --> 00:58:13,240 நான் வந்தேன், அம்மா. 435 00:58:49,235 --> 00:58:52,696 தைரியம் கொள், மனம் தளராதே 436 00:59:14,343 --> 00:59:15,344 நான் வந்தேன். 437 01:01:02,409 --> 01:01:04,411 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 438 01:01:04,495 --> 01:01:06,497 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்