1 00:00:01,668 --> 00:00:04,421 சரி, எனக்கு ஒரு பிரசன்னம் தோன்றியது. 2 00:00:05,005 --> 00:00:07,466 புதிய விஷயங்களை ஏற்றுக் கொள்வதை நான் எதிர்ப்பது தான் 3 00:00:07,549 --> 00:00:09,551 என்னுடைய பிரச்சனை என புரிந்துக் கொண்டேன். 4 00:00:09,635 --> 00:00:12,554 பயத்தினால் பல நேரங்களில், நான் முடியாது என்று சொல்வேன். 5 00:00:13,597 --> 00:00:17,392 அதனால் இனி மேல் விஷயங்களுக்கு 'சரி' என்று சொல்ல முடிவு செய்துள்ளேன். 6 00:00:17,476 --> 00:00:19,937 அதனால் தான் உங்களுக்கு வண்டி ஓட்ட ஆள் தேவைப்பட்ட போது, 7 00:00:20,020 --> 00:00:23,148 நான் சம்மதித்தேன் ஏனென்றால் நான் ஏதாவது புதியதாக கற்றுக்கொள்ள முடியும், இல்லையா? 8 00:00:23,232 --> 00:00:25,984 எப்படியோ. நான் என்ன சொல்ல நினைக்கிறேன் என்றால், 9 00:00:26,485 --> 00:00:29,154 வாழ்க்கையின் சில முக்கியமான விஷயங்களில் நீங்கள் எனக்கு உதவலாம், 10 00:00:29,238 --> 00:00:31,281 மற்றும் நான் அந்த வாய்ப்பிற்கு நன்றி சொல்கிறேன். 11 00:00:33,992 --> 00:00:35,536 நீ என்னிடமா பேசிக் கொண்டிருந்தாய்? 12 00:00:37,663 --> 00:00:38,872 ஆமாம். 13 00:00:38,956 --> 00:00:40,123 மன்னித்துவிடு, செல்லமே. 14 00:00:40,207 --> 00:00:44,211 பெண்களின் குரலின் சில ஒலிகளை என்னால் கேட்க முடியாது. 15 00:00:44,294 --> 00:00:46,505 நான் பெண் என அறிந்திருப்பதால், இதை பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன். 16 00:00:46,588 --> 00:00:49,049 உண்மையில், எனக்கு உதவி செய்ததை நான் பாராட்டுகிறேன். 17 00:00:49,132 --> 00:00:52,511 உனக்கு ஏற்கனவே தெரிந்தது போல, முக்கியமான விஷயமாக இல்லாவிட்டால் 18 00:00:52,594 --> 00:00:54,596 என் தனிமையில் இருந்து வெளியே வந்திருக்க மாட்டேன். 19 00:00:54,680 --> 00:00:57,516 ஆமாம், ஏதோ முக்கியமான விஷயம் போல தோன்றுகிறது, நண்பா. நாம் எங்கே போகிறோம்? 20 00:00:57,599 --> 00:01:00,811 ஒரு பழைய எழுத்தாளர் நண்பரின் வீட்டிற்கு. உண்மையில் அவன் ஒரு எதிரி. 21 00:01:01,645 --> 00:01:05,022 என்னுடைய காதலை திருடிய திறமையற்றவன். 22 00:01:05,107 --> 00:01:07,150 நாங்கள் 40 வருடங்களாக தொடர்பில் இல்லை, 23 00:01:07,234 --> 00:01:11,363 சமீபத்தில் அவன் என்னை தொடர்புகொண்டு தன்னை வந்து சந்திக்கும்படி கெஞ்சினான். 24 00:01:12,281 --> 00:01:14,575 மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொன்னான். 25 00:01:16,243 --> 00:01:17,327 அது நல்ல விஷயம் தானே. 26 00:01:17,411 --> 00:01:19,413 -ஆக, இருவரும் இணக்கமாகப் போகிறீர்களா? -இல்லை. 27 00:01:21,623 --> 00:01:23,917 நான் அவன் மனைவியோடு உறவுகொள்ளப் போகிறேன். 28 00:01:51,778 --> 00:01:54,031 கேளுங்கள், இது எனக்கு சௌகரியமாக இல்லை. 29 00:01:54,114 --> 00:01:56,783 கவலைப்படாதே. நான் உள்ளே சென்று 15 நிமிடத்தில் வெளியே வந்துவிடுவேன். 30 00:01:56,867 --> 00:01:58,702 சரி, நேரம் அல்ல என்னுடைய பிரச்சனை. 31 00:01:58,785 --> 00:02:01,288 நீங்கள் இன்னொருவனின் மனைவியோடு, உறவுகொள்ளப் போவது தான் எனக்கு பிரச்சனை. 32 00:02:01,371 --> 00:02:04,458 நான் உண்மையில் அவன் மனைவியோடு உறவுகொள்ளப் போவதில்லை. 33 00:02:04,541 --> 00:02:07,628 ஆன்னி பல வருடம் முன்பே இறந்துவிட்டாள். பேச்சுக்கு தான் அப்படி சொன்னேன். 34 00:02:07,711 --> 00:02:10,172 நான் இங்கே பீட்டர்-ஐ கேலி செய்ய வந்திருக்கிறேன். 35 00:02:10,255 --> 00:02:14,343 என்னுடைய வெற்றிகளை அவன் முகத்துக்கு நேரே காட்டி, அவனை நசுக்கப் போகிறேன். 36 00:02:15,886 --> 00:02:18,096 அது மிக மோசமாகவும் தேவையில்லாத பயங்கரமான விஷயமாகவும் தோன்றுகிறது. 37 00:02:19,014 --> 00:02:20,724 என் புத்தகங்களைப் பற்றி அவர்கள் அப்படித்தான் சொன்னார்கள். 38 00:02:21,391 --> 00:02:25,229 அந்த துறையில் பீட்டரை விட நான் சிறப்பாக உருவாகுவதற்கு அது தடையாக இல்லை. 39 00:02:25,312 --> 00:02:29,107 என்னுடைய எழுத்தின் சக்தியின் மூலம் அவனை நான் நசுக்கப் போகிறேன். 40 00:02:29,191 --> 00:02:33,111 சரியான தருணம் வரும்போது, அவனுக்கு காட்டப் போகிறேன். 41 00:02:33,195 --> 00:02:34,321 அப்படி செய்யாதீர்கள். 42 00:02:34,404 --> 00:02:38,283 ஓ, செய்வேன். நான் அவன் முகத்துக்கு நேரே காட்டப் போகிறேன். 43 00:02:41,119 --> 00:02:43,247 -என் நெபுலா விருதை. -அப்பாடா. 44 00:02:43,330 --> 00:02:45,707 நீ கூட உதவலாம். என் பெருமையைப் பற்றி அங்கே பேசு. 45 00:02:45,791 --> 00:02:47,918 வீடியோ கேம்கள் பற்றி எதுவும் பேசாதே. 46 00:02:48,001 --> 00:02:50,003 எழுத்தாளர் உலகத்தில் அது கேவலமாக நினைக்கப்படுகிறது. 47 00:02:50,087 --> 00:02:51,088 என் புத்தகங்களைப்பற்றி மட்டும் பேசு. 48 00:02:52,464 --> 00:02:53,841 நான் இதை எதிர்ப்பார்க்கவில்லை. 49 00:02:53,924 --> 00:02:57,636 நீ எதிர்ப்பார்த்தது எப்போதுமே கிடைப்பது சாத்தியமில்லை. 50 00:02:57,719 --> 00:02:59,763 உள்ளே வா. விசித்திரமாக நடந்துகொள். 51 00:02:59,847 --> 00:03:01,640 நீ உண்மையிலேயே ஏதாவது கற்றுக்கொள்ள முடியும். 52 00:03:02,766 --> 00:03:04,768 ஹலோ. நீங்கள் தான் திரு. லாங்பாட்டம் என்று நினைக்கிறேன். 53 00:03:05,269 --> 00:03:07,229 ஆமாம், நான் தான். 54 00:03:07,312 --> 00:03:09,106 நீங்கள் யார்? 55 00:03:09,189 --> 00:03:12,442 மாக்டா. மிக்க மகிழ்ச்சி. பீட்டர் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். 56 00:03:23,161 --> 00:03:26,290 -அழகான வீடு. -சரி, நன்றி, இனிமையானவனே. 57 00:03:26,790 --> 00:03:27,791 நான் ஒரு பெண். 58 00:03:28,876 --> 00:03:32,087 மன்னித்துவிடு. உன் தலைமுடி குழப்பிவிட்டது. 59 00:03:32,671 --> 00:03:34,256 -பீட்டர். -காரல். 60 00:03:37,134 --> 00:03:39,595 ஹலோ, நண்பா. 61 00:03:40,762 --> 00:03:43,432 சந்தித்து ரொம்ப காலம் ஆகிவிட்டது. 62 00:03:43,515 --> 00:03:45,058 ஆமாம், உண்மையில், ரொம்ப அதிக காலம். 63 00:03:46,476 --> 00:03:50,314 -நீ பார்க்க நலமாக இருக்கிறாய். -மோசமாக தெரிந்தாலும், நலமாக உணர்கிறேன். 64 00:03:50,397 --> 00:03:52,107 உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி. 65 00:03:54,693 --> 00:03:57,154 -மன்னிக்கவும். ஹாய்... -இவள் என்னுடைய ஓட்டுனர். 66 00:03:59,448 --> 00:04:01,450 ஆமாம். நான்தான் ஓட்டுனர். 67 00:04:02,659 --> 00:04:04,036 இருந்தாலும் நீ உள்ளே வந்துவிட்டாய். 68 00:04:05,579 --> 00:04:06,580 ஆமாம். 69 00:04:07,414 --> 00:04:08,999 அது ஒரு சுவரஸ்யமான முடிவு. 70 00:04:09,708 --> 00:04:11,752 -உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. -எனக்கும் தான். 71 00:04:11,835 --> 00:04:13,712 இங்கே எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்? 72 00:04:14,588 --> 00:04:16,839 குடிக்க ஏதாவது கொண்டு வரட்டுமா? தேநீர், எலுமிச்ச சாறு? 73 00:04:16,923 --> 00:04:19,134 தண்ணீர் சேர்க்காமல் விஸ்கி. என் ஓட்டுனரும் அதே குடிப்பாள். 74 00:04:20,761 --> 00:04:23,472 -இது கொஞ்சம் சீக்கிரம். -ஆமாம். 75 00:04:24,056 --> 00:04:25,057 அதோடு நான் வண்டி ஓட்ட வேண்டும். 76 00:04:25,974 --> 00:04:27,100 மிகவும் தொழில் சார்ந்தவள். 77 00:04:27,184 --> 00:04:29,853 சிறப்பானவர்களை தான் வேலைக்கு வைப்பேன். அவள் பங்கையும் நானே குடிக்கிறேன். 78 00:04:31,980 --> 00:04:33,148 கண்டிப்பாக. 79 00:04:34,441 --> 00:04:36,235 அவள் அழகாக இருக்கிறாள். 80 00:04:36,318 --> 00:04:37,903 அவள் பெயர் மாக்டா. 81 00:04:38,487 --> 00:04:42,658 சில வருடங்களாக என்னுடன் இருக்கிறாள். அவள் ஆதரவு இல்லாமல் நான் தவித்திருப்பேன். 82 00:04:42,741 --> 00:04:43,742 சுவாரஸ்யமாக இருக்கிறது. 83 00:04:45,077 --> 00:04:46,411 மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. 84 00:04:46,495 --> 00:04:49,373 ஹேய், இது நீங்களா, சி.டபிள்யூ? 85 00:04:50,582 --> 00:04:51,583 ஆமாம். 86 00:04:52,668 --> 00:04:54,795 நீ இதை வைத்திருப்பது ஆச்சரியமாக உள்ளது, நண்பா. 87 00:04:54,878 --> 00:04:58,173 ஏன் மாட்டேன்? அது என் வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்று. 88 00:04:59,216 --> 00:05:00,592 ஓ, ஆமாம். 89 00:05:01,718 --> 00:05:03,595 அப்போது தான் ஆன்னி-ஐ சந்தித்தேன். 90 00:05:06,181 --> 00:05:07,182 ஆமாம். 91 00:05:08,475 --> 00:05:12,187 இருவரும் சேர்ந்து அழகான குடும்பத்தை உருவாக்கினோம். 92 00:05:13,605 --> 00:05:15,732 உன்னால் நம்ப முடிந்தால் நம்பு, பத்து பேர குழந்தைகள் இருக்கிறார்கள். 93 00:05:15,816 --> 00:05:18,026 நிறைய பேர குழந்தைகள். எனக்கு 12 பேர்கள் இருக்கிறார்கள். 94 00:05:19,403 --> 00:05:21,196 -இவளும் என் பேத்தி தான். -என்ன? 95 00:05:21,280 --> 00:05:23,282 உன்னுடைய ஓட்டுனர் உன் பேத்தியா? 96 00:05:24,199 --> 00:05:26,952 கால்பூர்னியா. இவள் என்னுடைய சிறந்த ரசிகை. 97 00:05:29,121 --> 00:05:31,540 -ஆமாம். -அவள் ஒரு ஓரின சேர்க்கையாளரும் கூட. 98 00:05:34,293 --> 00:05:35,294 ஆமாம். 99 00:05:36,587 --> 00:05:37,713 ஆமாம், சரிதான். 100 00:05:38,964 --> 00:05:42,134 இந்த நெபுலா விருது. இது பரிச்சயமானது போல இருக்கிறது. 101 00:05:42,759 --> 00:05:45,888 இது ஆன்னி வாங்கியது. இவை எல்லாமே அவள் வாங்கியது. 102 00:05:46,763 --> 00:05:48,724 அவள் சிறந்த சாதனையாளர். 103 00:05:49,433 --> 00:05:52,436 ஆனால், பீட்டர், வந்து… 104 00:05:52,519 --> 00:05:55,606 "மிக நிறைய" என்பது சரியான வார்த்தையாக இருக்குமா? 105 00:05:55,689 --> 00:05:57,482 அப்படி சொல்லலாம் என நினைக்கிறேன். 106 00:05:57,566 --> 00:06:01,153 19 புதினங்களை எழுதியவரைப் பற்றி நாம் வேறு என்ன சொல்ல முடியும்? 107 00:06:01,236 --> 00:06:05,282 பத்தொன்பது! எல்லாம் ஒரே கதாபாத்திரத்தை பற்றி என்பதை மறக்கக்கூடாது. 108 00:06:05,824 --> 00:06:07,743 'த ஹாம்மர்ஃபால் சைக்கிள்' என்ற பெயர் கொண்டது. 109 00:06:08,994 --> 00:06:10,454 நீ அவற்றைப் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டாய். 110 00:06:11,371 --> 00:06:13,081 அவற்றில் ஒன்றை படிக்க விரும்புகிறாயா? 111 00:06:13,916 --> 00:06:15,542 ஆம், நன்றி. நல்லது. 112 00:06:16,084 --> 00:06:19,630 -இதை முதலில் படி. இது ஆன்னியுடையது. -சரி. 113 00:06:19,713 --> 00:06:21,215 அவள் ஒரு சிறந்த திறமையாளர். 114 00:06:21,298 --> 00:06:23,592 ஆமாம். மிகவும் அரிதான ஒரு திறமையாளர். 115 00:06:24,676 --> 00:06:25,969 இதோ. 116 00:06:27,054 --> 00:06:28,472 மிக்க நன்றி. 117 00:06:34,895 --> 00:06:39,816 சரி, இப்போது விஷயத்திற்கு வருவோம். 118 00:06:40,859 --> 00:06:42,778 பெண்களே, எங்களை கொஞ்சம் தனியாக விடுகிறீர்களா? 119 00:06:45,697 --> 00:06:47,908 உன்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. 120 00:06:47,991 --> 00:06:53,580 இல்லை, மன்னிப்பு கேட்க 40 வருடங்கள் நீண்ட காலம் தான். 121 00:06:54,498 --> 00:06:56,959 நானும் அப்படித்தான் நினைக்கிறேன். 122 00:07:02,506 --> 00:07:04,424 எப்படி தொடங்குவது என்பது கடினமாக இருக்கிறது. 123 00:07:09,179 --> 00:07:10,848 நீ தயாரானதும் தொடங்கலாம். 124 00:07:11,598 --> 00:07:13,267 நான் தயாராகத்தான் இருக்கிறேன். 125 00:07:14,017 --> 00:07:15,060 ஆமாம், நானும் தான். 126 00:07:20,649 --> 00:07:21,650 சொல். 127 00:07:21,733 --> 00:07:22,734 நானா? 128 00:07:23,944 --> 00:07:25,571 நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். நீதான் கேட்கப் போகிறாய். 129 00:07:26,280 --> 00:07:27,573 நான் கேட்க மாட்டேன். 130 00:07:29,950 --> 00:07:32,369 பின் எதற்காக நான் இவ்வளவு தூரம் வந்தேன்? 131 00:07:35,998 --> 00:07:38,375 நீ என்னிடம் மன்னிப்பு கேட்பாய். 132 00:07:38,458 --> 00:07:42,671 கண்டிப்பாக இல்லை. நீ தான் என்னை தொடர்பு கொண்டாய். 133 00:07:42,754 --> 00:07:44,673 எல்லாவற்றையும் சரிசெய்ய வேண்டும் என்றாய். 134 00:07:45,299 --> 00:07:47,050 -எல்லாவற்றையும் சரிசெய்ய வேண்டுமா? -ஆமாம். 135 00:07:48,468 --> 00:07:50,262 அடக் கடவுளே. 136 00:07:51,722 --> 00:07:56,727 ஜின்னி. என்னுடைய மகள். அவள் அம்மாவை போலவே திமிர் பிடித்தவள். 137 00:07:57,895 --> 00:07:59,271 அவள் தான் இதை ஏற்பாடு செய்திப்பாள். 138 00:08:01,565 --> 00:08:03,400 ஆனால் நீ வந்து, நான்... 139 00:08:03,483 --> 00:08:06,361 நான் மன்னிப்பு கேட்கக் கூடிய விஷயம் என்ன இருக்கிறது? 140 00:08:08,155 --> 00:08:09,990 அந்த ட்ரைபாட்டை உடைத்தற்கு. 141 00:08:10,073 --> 00:08:13,493 நீ எங்கள் வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி விட்டாய், காரல். 142 00:08:14,786 --> 00:08:18,498 ஆன்னியின் இறுதி சடங்கிற்கு கூட நீ வரவில்லை. 143 00:08:20,209 --> 00:08:21,793 இது அவளே தேர்ந்தெடுத்தது. 144 00:08:21,877 --> 00:08:23,170 புரிகிறது. 145 00:08:25,255 --> 00:08:27,257 நீ பொறாமைப்பட்டாய் என நான் எப்போதுமே சந்தேகித்தேன். 146 00:08:27,341 --> 00:08:29,468 பொறாமையா? மார்பகத்தாலா? 147 00:08:29,551 --> 00:08:34,264 தன் சொந்த குடும்பத்தினரால் ஏமாற்றப்பட்ட அளவிற்கு ஒரு முட்டாளா? கண்டிப்பாக இல்லை! 148 00:08:34,347 --> 00:08:35,807 போதும் நிறுத்து. 149 00:08:36,767 --> 00:08:38,143 நீ போகலாம். 150 00:08:41,145 --> 00:08:42,606 நீ மன்னிப்பு கேட்கும் வரை போக மாட்டேன். 151 00:08:42,688 --> 00:08:46,109 முட்டாள்தனமாக பேசாதே. நான் உன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமா? 152 00:08:46,193 --> 00:08:47,194 எனக்குத் தெரியவில்லை. 153 00:08:47,277 --> 00:08:50,989 ஆன்னிக்கு ஒரு தேவையற்ற சுமையாக இருந்ததற்காக. 154 00:08:51,073 --> 00:08:52,407 எனக்கு எதிராக அவள் மனதை மாற்றியதற்காக. 155 00:08:52,491 --> 00:08:55,577 நெபுலாவை வென்ற பிறகு நீ மிகவும் மோசமானவனாக மாறிவிட்டாய். 156 00:08:56,161 --> 00:08:58,247 எல்லா முறையும் என்னை இழிவுப்படுத்தினாய். 157 00:08:58,330 --> 00:08:59,331 நான் அப்படி எதுவும்... 158 00:08:59,414 --> 00:09:02,251 நான் ஒரு இழிவான எழுத்தாள கழிவு என்று ஆன்னியிடம் சொன்னாய். 159 00:09:02,334 --> 00:09:05,003 அது சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. ஆனாலும் நான் அப்படித்தான் சொன்னேன். 160 00:09:05,087 --> 00:09:07,506 அவளை எனக்கு எதிராக திருப்ப உன்னால் முடிந்த அனைத்தையும் செய்தாய்! 161 00:09:07,589 --> 00:09:10,884 இவ்வளவு அழகற்ற முகத்தை நான்தான் உனக்குக் கொடுத்தேனா? 162 00:09:10,968 --> 00:09:13,095 அது உன்னுடைய அம்மா கொடுத்தது என்று நினைத்தேன்! 163 00:09:13,178 --> 00:09:15,430 மோசமானவனே! 164 00:09:15,514 --> 00:09:16,932 ஹேய்! 165 00:09:17,683 --> 00:09:19,351 இங்கே வருவதற்கு உனக்கு எவ்வளவு தைரியம். 166 00:09:19,434 --> 00:09:26,108 நமது காலகட்டத்தின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரை திருமணம் செய்து, அந்த கேவலமான 167 00:09:26,191 --> 00:09:29,945 ஹாம்மர்ஃபால் அசிங்கத்தை 19 பகுதிகளாக எந்த தைரியத்தில் எழுதினாயோ அப்படித்தான். 168 00:09:30,028 --> 00:09:32,990 ஆன்னிக்கு 'த ஹாம்மர்ஃபால் சைக்கிள்' மிகவும் பிடித்திருந்தது. 169 00:09:33,073 --> 00:09:35,868 -துடிப்பானவை, ஆர்வத்தை தூண்டுபவை என்றாள். -"ஆர்வத்தைத் தூண்டுபவை." 170 00:09:35,951 --> 00:09:38,328 ஆமாம், அந்த அழுக்கான மேல் உரையில் இருக்கும் குறிப்பை நான் பார்த்தேன். 171 00:09:38,412 --> 00:09:40,747 ஒவ்வொரு புத்தகத்திலும் அது ஒரே மாதிரி இருக்கிறது. 172 00:09:40,831 --> 00:09:42,583 நான் மிக தரமாக எழுதினேன் என நினைக்கிறேன். 173 00:09:42,666 --> 00:09:44,626 அதனால் தான் 20வது புத்தகம் தாமதமாகிறதா? 174 00:09:44,710 --> 00:09:47,254 அதை படிப்பதற்கு யாரும் கிடைக்கவில்லையா? 175 00:09:47,337 --> 00:09:49,464 இன்னும் அதை எழுதவில்லை. 176 00:09:50,340 --> 00:09:52,217 ஆன்னி இறந்த பிறகு, என் ஆர்வத்தை இழந்துவிட்டேன். 177 00:09:52,301 --> 00:09:56,805 தயவுசெய்து. உன்னுடைய அரைகுறை இலக்கிய படைப்புகளுக்கு அவளை பழி சொல்லாதே. 178 00:09:56,889 --> 00:10:00,309 இப்போது உன் புத்தக அட்டையில் எப்படிப்பட்ட சிறப்பான வார்த்தைகள் இடம் பெறுகின்றன? 179 00:10:00,392 --> 00:10:03,604 ஹார்பெர்ஸ் நிறுவனம் என்னுடைய போன புத்தகத்தை 180 00:10:03,687 --> 00:10:06,565 "கட்டுக்கடங்காத விண்வெளி குப்பை" என்று சொன்னார்கள். 181 00:10:07,482 --> 00:10:09,276 உனக்கு என்ன நேர்ந்தது, தோழா? 182 00:10:10,110 --> 00:10:11,820 நீ எவ்வளவு ஆர்வத்துடன் தொடங்கினாய். 183 00:10:11,904 --> 00:10:13,113 டியர்ஸ் ஒரு சிறந்த… 184 00:10:14,489 --> 00:10:15,991 வெற்றியாக இருந்தது. 185 00:10:16,074 --> 00:10:18,994 உன்னால் அந்த மூன்று நெடுந்தொடர் புத்தகங்களை முடிக்க முடியவில்லை. ஏன்? 186 00:10:19,077 --> 00:10:20,871 நான் அதை எழுதிக் கொண்டிருக்கிறேன். 187 00:10:20,954 --> 00:10:25,209 உனக்கு தெரியாதது இல்லை, தோழா, சிறப்பாக எழுத நிறைய காலம் தேவைப்படும். 188 00:10:25,292 --> 00:10:28,587 42 வருடங்களாக குடித்து, கும்மாளம் அடிக்க எவ்வளவு நேரம் தேவைப்படும்? 189 00:10:35,511 --> 00:10:37,763 நான் ஒரு நெபுலா விருது வாங்கியிருக்கிறேன். 190 00:10:39,097 --> 00:10:42,184 நீ 10,000 புத்தகங்கள் கூட எழுதலாம் ஆனால் அப்படி ஒரு சிறப்பை அடைய முடியாது. 191 00:10:42,267 --> 00:10:46,772 ஆனால் நான் இனி வரும் நாட்களில் ஒரு வார்த்தை கூட எழுதாமல் இருந்தாலும், 192 00:10:47,564 --> 00:10:50,901 என்னுடைய முதல் புத்தகமே ஒரு மேதாவித்தனமான 193 00:10:50,984 --> 00:10:54,905 ஒரு படைப்பு என்பதற்கான திடமான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. 194 00:10:54,988 --> 00:10:56,782 ஆனால் அந்த தொடர் புத்தகம்… 195 00:10:58,742 --> 00:11:00,869 மிகவும் பிரபலம் அடையவில்லை, இல்லையா? 196 00:11:00,953 --> 00:11:02,579 அது சிறிது குறைவாகத்தான் இருந்தது. 197 00:11:09,336 --> 00:11:13,465 தன்னை யார் என நினைத்துக் கொண்டிருக்கிறான்? நான்... நானா? வாய்ப்பே இல்லை. 198 00:11:13,549 --> 00:11:16,260 அது மிகவும் கொடுமையாக இருந்தது. இங்கிருந்து போகலாமா, தாத்தா? 199 00:11:16,343 --> 00:11:19,847 இல்லை. இப்போது போக வேண்டாம். அவன் மனைவியோடு உறவுகொள்ளப் போகிறேன். 200 00:11:19,930 --> 00:11:21,139 தெரியும். பேச்சுக்காகத்தான் சொல்கிறீர்கள். 201 00:11:21,223 --> 00:11:25,561 இல்லை, உண்மையாகத்தான் சொல்கிறேன். அவன் மனைவியோடு உறவுகொள்ளப் போகிறேன். 202 00:11:25,644 --> 00:11:28,522 -யாரைப் பற்றி சொல்கிறீர்கள்? -அந்த கிழக்கு ஐரோப்பிய மோசமான பெண். 203 00:11:28,605 --> 00:11:30,482 அவளை என் சொந்தமாக்கிக் கொள்ளப் போகிறேன். 204 00:11:30,566 --> 00:11:32,359 மாக்டா அவருடைய செவிலி, தாத்தா. 205 00:11:34,319 --> 00:11:35,988 அப்போது, இது எல்லாவற்றையும் மாற்றுகிறது. 206 00:11:36,780 --> 00:11:38,532 நான் அவன் செவிலியோடு உறவுகொள்ளப் போகிறேன். 207 00:11:38,615 --> 00:11:39,950 கடவுளே. 208 00:11:40,617 --> 00:11:42,035 இங்கு எல்லாம் சரியாக இருக்கிறதல்லவா? 209 00:11:42,119 --> 00:11:43,412 -ஆம். -இல்லை. 210 00:11:43,912 --> 00:11:45,497 -இரவு உணவுக்கு தங்கப் போகிறீர்களா? -இல்லை. 211 00:11:45,581 --> 00:11:46,790 ஆமாம். 212 00:11:48,917 --> 00:11:50,210 ஆமாம். 213 00:11:56,884 --> 00:12:01,263 இந்த சிக்கன் மிகவும் ருசியாக உள்ளது, மாக்டா. நீ அருமையான சமையல்காரி. 214 00:12:01,889 --> 00:12:04,141 -இல்லை. நான்... -இல்லை. அடக்கம் வேண்டாம். 215 00:12:04,224 --> 00:12:06,810 இது நன்கு மெதுமெதுவென்று உள்ளது. 216 00:12:06,894 --> 00:12:09,146 அவள் சமைக்கவில்லை, காரல். 217 00:12:09,229 --> 00:12:10,606 அவள் ஒரு செவிலி, நினைவிருக்கிறதா? 218 00:12:10,689 --> 00:12:14,359 -என்னிடம் எதிர்த்து பேசாதே, கசாண்ட்ரா. -கால்பூர்னியா. 219 00:12:14,443 --> 00:12:16,445 ஓ, சரி. 220 00:12:16,528 --> 00:12:19,239 என்னுடைய பல பேரப்பிள்ளைகளின் பெயரால் நான் குழம்பிவிட்டேன். 221 00:12:20,949 --> 00:12:24,661 லாங்பாட்டம் குடும்பத்தினரால் பல குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். 222 00:12:27,915 --> 00:12:29,750 காரல், உனக்கு சாப்பாடு பிடித்ததில் மகிழ்ச்சி. 223 00:12:30,375 --> 00:12:35,005 சிக்கன் சுடும் கம்பியைப் பற்றி நன்கு அறிந்த ஒருவர் இப்படி சொல்வது பெருமை தான். 224 00:12:35,881 --> 00:12:40,260 மாநில கண்காட்சியில் உன் தாத்தா சிக்கன் விற்றார் என்பது தெரியுமா? 225 00:12:40,802 --> 00:12:43,013 அது வரலாற்று மறுமலர்ச்சி கண்காட்சி. 226 00:12:43,639 --> 00:12:46,350 விருது வென்ற சிக்கன் உணவகம் ஒன்றில் 227 00:12:46,433 --> 00:12:49,311 பெரிய ரோஸ்ட்-மாஸ்டராக இருந்தேன். 228 00:12:49,895 --> 00:12:52,898 40 ஆண்டுகளாக நீ நல்ல புத்தகம் எதையும் எழுதவில்லை என்பதில் எந்த ஆச்சரியமில்லை. 229 00:12:53,941 --> 00:12:55,526 நீ சமைப்பதில் மும்முரமாக இருந்தாய். 230 00:12:55,609 --> 00:12:57,694 எனது முத்தொகுப்பை முடிப்பதில் மும்முரமாக இருக்கிறேன். 231 00:12:58,195 --> 00:12:59,196 அதுவும் விருது-வென்றது. 232 00:12:59,279 --> 00:13:03,534 -அவற்றில் ஒன்று மட்டும். -ஆம். புத்தகங்கள் மாறுபடும். 233 00:13:03,617 --> 00:13:08,539 நம்மில் சிலருக்கு ஒரே புத்தகத்தை 19 முறை எழுதுவது பிடிக்காது. 234 00:13:08,622 --> 00:13:10,415 அது பத்தொன்பது புத்தகத் தொடர் என்று கூறப்படும். 235 00:13:11,375 --> 00:13:13,460 அதுதான் என்று உறுதியாக நம்புகிறேன். 236 00:13:14,044 --> 00:13:18,131 ஒரே விஷயத்தைப் பற்றி திரும்பத் திரும்ப பேசகிறோம், எனக்கு இன்னும் வேண்டும். 237 00:13:19,174 --> 00:13:20,676 செவிலியர். 238 00:13:20,759 --> 00:13:23,804 எனக்கு பிடித்த அளவு வேகமாக குடிப்பேன், கலிஃபோர்னியா. 239 00:13:26,056 --> 00:13:27,474 நீ முடித்துவிட்டாய் போல தெரிகிறது. 240 00:13:27,558 --> 00:13:29,601 நான் இப்போதுதான் ஆரம்பிக்கிறேன். 241 00:13:29,685 --> 00:13:30,936 உண்மையாகவா? 242 00:13:31,645 --> 00:13:33,814 ஏனெனில் என் கண்களுக்கு லட்சியமற்ற ஒரு ஆண் தான் தெரிகிறான். 243 00:13:35,107 --> 00:13:38,277 முடிந்துவிட்டது! நான் போகிறேன். 244 00:13:38,360 --> 00:13:40,487 -நல்லது, இது வேடிக்கையாக இருந்தது. -கழிவறைக்குப் போகிறேன். 245 00:14:15,981 --> 00:14:17,024 ஜாக்பாட். 246 00:14:21,653 --> 00:14:23,780 என்னை சிக்கன் சமைப்பவன் என்றாய். 247 00:14:41,006 --> 00:14:43,550 இந்த சிக்கன் சமைப்பவன்... 248 00:14:45,260 --> 00:14:48,347 அப்பா, உன் மேஜையை அசிங்கப்படுத்தப் போகிறேன். 249 00:15:02,444 --> 00:15:06,990 எனவே, கால்பூர்னியா, எவ்வளவு நாட்களாக நீ லெஸ்பியனாக இருக்கிறாய்? 250 00:15:07,074 --> 00:15:11,328 -அவரைப் போய் பார்த்துவிட்டு வருகிறேன். -தேவையில்லை. நான் இதோ இருக்கிறேன். 251 00:15:11,411 --> 00:15:12,538 என்ன இது? 252 00:15:12,621 --> 00:15:15,415 இதற்கு முன்பு நான் வரம்பு மீறியதற்காக மன்னிப்பு கேட்கிறேன். 253 00:15:16,291 --> 00:15:18,836 இப்போது நான் நானாக உணர்கிறேன். 254 00:15:18,919 --> 00:15:20,420 அது நிம்மதியாக இருக்குமா என தெரியவில்லை. 255 00:15:25,050 --> 00:15:26,760 இனிமேல் உன்னை நான் தொந்தரவு செய்யமாட்டேன். 256 00:15:26,844 --> 00:15:28,470 நாம் கிளம்பலாம், கலாமாரி. 257 00:15:28,554 --> 00:15:30,681 போய் காரை இயக்கி வை. நான் சற்று நேரத்தில் வந்துவிடுவேன். 258 00:15:30,764 --> 00:15:31,807 சரி! 259 00:15:32,933 --> 00:15:36,228 சரி, எங்களை அழைத்ததற்கு நன்றி, 260 00:15:36,311 --> 00:15:37,354 மற்றும் புத்தகங்களுக்கும். 261 00:15:37,437 --> 00:15:38,981 அவை இரண்டையும் நான் படிக்கிறேன். 262 00:15:39,064 --> 00:15:42,776 என்னை மன்னித்துவிடுங்கள், மற்றும் நான் கிளம்புகிறேன். 263 00:15:42,860 --> 00:15:45,070 -உன்னை வெளியே அழைத்துச் செல்கிறேன். -வேண்டாம். பரவாயில்லை. 264 00:15:45,153 --> 00:15:47,823 -இல்லை, தயவுசெய்து. -சரி. 265 00:15:52,995 --> 00:15:54,955 நாம் மோசமான வார்த்தைகளோடு பிரிய வேண்டாம். 266 00:15:55,998 --> 00:15:58,000 உண்மை என்னவென்றால் நான் உன்னை மதிக்கிறேன். 267 00:15:58,709 --> 00:16:01,420 ஏன் மாட்டேன்? நீ 19 புத்தகங்கள் எழுதியிருக்கிறாய். 268 00:16:01,503 --> 00:16:02,880 அது பாராட்டுக்குரியது. 269 00:16:04,047 --> 00:16:07,759 19 என்பது ஒற்றைப்படை எண். ஏன் 20வது புத்தகம் எழுதக்கூடாது? 270 00:16:09,761 --> 00:16:12,389 ஆம், ஆன்னி இறந்த பிறகு நீ எழுதுவதை நிறுத்திவிட்டாய். 271 00:16:13,098 --> 00:16:18,854 உத்வேகத்தை இழந்துவிட்டாய். அல்லது... உன்னுடைய தொழிலை இழந்தாயா? 272 00:16:20,272 --> 00:16:25,569 அனிஹைலேஷன் எண்டயர். ஹாம்மர்ஃபால் தொடரின் 20வது புத்தகம். 273 00:16:25,652 --> 00:16:27,029 அதை வைத்து நீ என்ன செய்கிறாய்? 274 00:16:27,112 --> 00:16:29,907 இதை நீ என்ன செய்கிறாய்? நீ எழுதவே இல்லை என்று சொன்னாயே! 275 00:16:29,990 --> 00:16:34,411 ஆனால் யாருக்கும் தெரியாமல் உன்னுடைய மேஜை அலமாரியில் இது இருக்கிறது. 276 00:16:34,494 --> 00:16:36,079 ஏன் வெளியிடவில்லை? 277 00:16:36,914 --> 00:16:38,916 -இன்னும் மேம்படுத்திக் கொண்டிருக்கிறேன். -பொய்! 278 00:16:39,583 --> 00:16:41,418 இதை முடித்துவிட்டாய். காப்புரிமைகூட வாங்கிவிட்டாய். 279 00:16:42,336 --> 00:16:43,545 அதைக் கொடு! 280 00:16:44,379 --> 00:16:45,756 அதைக் கொடு! 281 00:16:52,763 --> 00:16:54,431 கவனமாக இரு, நண்பா. 282 00:16:54,515 --> 00:16:57,017 ஹமர்ஃபால்1: த டார்கஸ்ட் ஹவர் எழுதிய 283 00:16:57,100 --> 00:17:01,396 எழுத்தாளரைப் போல இனி நீ சுறுசுறுப்பானவன் இல்லை. 284 00:17:01,480 --> 00:17:04,398 பீட்டர், தயவுசெய்து சொல், இந்த பொக்கிஷத்தை வெளியிட்டது யார்? 285 00:17:04,983 --> 00:17:07,361 இதோ. ராண்டம் ஹவுஸ். 286 00:17:08,028 --> 00:17:10,821 அந்த நேரத்தில் ஆன்னியின் வெளியீட்டாளர் யார்? 287 00:17:11,990 --> 00:17:14,785 ஆம், அதே ராண்டம் ஹவுஸ். என்ன ஒரு ஒற்றுமை. 288 00:17:14,867 --> 00:17:19,748 ஆனால் அதன் பிறகு ஒரு கட்டத்தில், அவள் வெளியீட்டாளரை மாற்றிவிட்டாள், அப்படிதானே? 289 00:17:19,830 --> 00:17:22,459 யார் அந்த புதிய வெளியீட்டாளர்? 290 00:17:22,542 --> 00:17:23,794 யார் அது... 291 00:17:24,670 --> 00:17:26,003 ஆமாம், டோர். 292 00:17:26,088 --> 00:17:28,006 இது சுவாரஸ்யமான விஷயம் அல்லவா? 293 00:17:29,299 --> 00:17:33,011 அந்த ஆண்டு நீயும் வெளியீட்டாளரை மாற்றிவிட்டாய். 294 00:17:33,095 --> 00:17:37,850 உன்னுடைய புதிய புத்தகத்தை வெளியிடும் அதிர்ஷ்டம் யாருக்கு இருந்தது? 295 00:17:39,518 --> 00:17:40,519 டோர், ஆஹா. 296 00:17:41,311 --> 00:17:45,148 அதாவது, உன்னுடையதையும் ஆன்னிவுடையதையும் டோர் தொடர்ந்து வெளியிட்டது. 297 00:17:45,732 --> 00:17:49,945 ஒவ்வொரு புத்தகத்தையும், அவள் சாகும் வரை. ஆஹா. 298 00:17:50,028 --> 00:17:54,199 நிச்சயமாக, அப்போது அவர்களால் ஆன்னியுடையதை தொடர்ந்து வெளியிட முடியவில்லை. 299 00:17:54,283 --> 00:17:57,119 அவள் இறந்துவிட்டாள். ஆனால் உன்னுடையதை அவர்கள் ஏன் நிறுத்தினார்கள்? 300 00:17:57,202 --> 00:17:59,371 ஏன் என்று நானே சொல்கிறேன். 301 00:18:00,122 --> 00:18:03,542 ஏனெனில் அவளுக்கு உதவி செய்வதற்காக மட்டுமே அவர்கள் உன்னுடையதை வெளியிட்டார்கள். 302 00:18:05,169 --> 00:18:06,211 சிறப்பு மிக்கவள்! 303 00:18:06,295 --> 00:18:09,882 அவள் இறந்துவிட்ட பிறகு, அவர்கள் பாரத்தை வெட்டிவிட்டார்கள். 304 00:18:13,135 --> 00:18:16,263 உன்னால் ஒருபோதும் அதை முடிக்க முடியாது, 305 00:18:16,346 --> 00:18:19,725 ஏனென்றால் அதைக் கேட்க யாரும் விரும்பவில்லை. 306 00:18:22,144 --> 00:18:24,605 அவர்கள் என்னுடைய கடைசி புத்தகத்தை நிராகரித்துவிட்டார்கள். 307 00:18:24,688 --> 00:18:26,732 கடைசியில் நமக்கு உண்மை தெரிந்துவிட்டது! 308 00:18:27,691 --> 00:18:30,485 இங்கே என்னை ஆசைக்காட்டி குடிக்க வைத்து சங்கடப்படுத்துவதற்காக 309 00:18:30,569 --> 00:18:35,115 உன் மகளையே பயன்படுத்தியது வெட்கக்கேடான செயல். 310 00:18:35,199 --> 00:18:37,451 நான் அப்படி எதுவும் செய்யவில்லை. 311 00:18:37,534 --> 00:18:39,536 உண்மையாகவா? அப்படியென்றால் அவள் ஏன் இதை செய்தாள்? 312 00:18:40,120 --> 00:18:42,247 ஏனெனில் நான் இறந்து கொண்டிருக்கிறேன், முட்டாளே. 313 00:18:46,752 --> 00:18:48,212 என்ன? 314 00:18:48,295 --> 00:18:49,922 நான் இறந்து கொண்டிருக்கிறேன். 315 00:18:52,299 --> 00:18:55,385 முடிவு உள்ளது என்பதை நம்பும் அளவுக்கு என் மகள்... 316 00:18:58,305 --> 00:19:00,432 இன்னும் வளரவில்லை. 317 00:19:06,188 --> 00:19:08,649 சரி, முடிவு இருக்கிறதே. 318 00:19:11,860 --> 00:19:13,695 உனக்கு மட்டும் கிடையாது. 319 00:19:17,574 --> 00:19:20,494 இன்னொரு விஷயம், சிக்கன் மிகவும் உலர்வாக இருந்தது. 320 00:19:21,662 --> 00:19:22,704 காரல். 321 00:19:25,165 --> 00:19:27,292 "ரோபாட்டிடம் கவனமாக இருங்கள்." 322 00:19:47,396 --> 00:19:48,564 ஓட்டு! 323 00:19:49,648 --> 00:19:52,067 -ஓட்டு! -ஓட்டிக்கொண்டுதான் இருக்கிறேன். 324 00:19:52,150 --> 00:19:54,027 கடவுளே, நண்பா. 325 00:19:58,657 --> 00:20:00,742 எனவே உங்களுக்கு வேண்டியது கிடைத்ததா? 326 00:20:02,953 --> 00:20:04,705 நீங்கள் அவரை அசிங்கப்படுத்தினீர்களா? 327 00:20:04,788 --> 00:20:05,914 ஆமாம். 328 00:20:06,832 --> 00:20:08,834 நான் வெற்றி பெற்றுவிட்டேன். 329 00:20:10,210 --> 00:20:12,462 சரி. அது நல்லது என்று நினைக்கிறேன். 330 00:20:13,630 --> 00:20:16,216 தெரியவில்லை, நாம் தொடங்கியதை விட இப்போது மிகவும் குழப்பமாக உணர்கிறேன். 331 00:20:16,300 --> 00:20:18,844 அதாவது, நான் வந்ததும், விஷயம் வினோதமாகிவிட்டது. 332 00:20:18,927 --> 00:20:20,596 ஆனால் நான் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. 333 00:20:20,679 --> 00:20:22,181 கவனமாக இரு. 334 00:20:23,140 --> 00:20:26,685 -என்ன? -கவனமாக... இரு... 335 00:20:28,187 --> 00:20:29,229 ரோபாட்... 336 00:20:29,813 --> 00:20:33,108 இல்லை, சி.டபிள்யூ! வேண்டாம்! 337 00:20:33,192 --> 00:20:35,194 நாள் முழுவதும் நான் சம்மதம் தெரிவித்தேன். 338 00:20:35,277 --> 00:20:37,654 என்னுடைய காரில் வாந்தி எடுக்க நான் சம்மதிக்க மாட்டேன். 339 00:20:37,738 --> 00:20:40,782 அடக் கடவுளே, நண்பா. உங்களுக்காக வண்டி ஓட்டவும், 340 00:20:40,866 --> 00:20:43,368 அந்த மோசமான கேலி செய்யும் விஷயத்திற்கும் சம்மதித்தேன். 341 00:20:43,452 --> 00:20:46,788 நீங்கள் சுயநினைவை இழக்குமளவு குடித்தை பார்த்தேன். எனக்கு சலித்துவிட்டது. 342 00:20:49,291 --> 00:20:50,459 ரோபாட். 343 00:20:52,044 --> 00:20:53,045 ரோபா... 344 00:20:55,631 --> 00:20:56,632 சி.டபிள்யூ? 345 00:20:59,092 --> 00:21:00,177 சி.டபிள்யூ? 346 00:21:01,553 --> 00:21:03,055 -சி.டபிள்யூ. -காரல். 347 00:21:05,265 --> 00:21:06,558 காரல். 348 00:21:09,061 --> 00:21:10,354 காரல். 349 00:21:13,398 --> 00:21:15,108 காரல். 350 00:21:21,907 --> 00:21:22,991 நீங்கள் நலமா? 351 00:21:23,784 --> 00:21:24,868 ஆன்னி? 352 00:21:24,952 --> 00:21:27,996 ஓ, இல்லை. நான் அவருடைய மகள், ஜின்னி. 353 00:21:29,456 --> 00:21:32,084 கடவுளே, அப்படியே அவளைப் போலவே இருக்கிறாயே. 354 00:21:32,835 --> 00:21:34,127 நன்றி, ஆம். 355 00:21:34,211 --> 00:21:37,506 என் அம்மாவின் தோற்றத்தையும் என் அப்பாவின் குணத்தையும் கொண்டுள்ளேன். 356 00:21:38,006 --> 00:21:40,217 இதோ. இதைக் குடியுங்கள். 357 00:21:41,176 --> 00:21:42,636 இங்கு எப்படி திரும்பி வந்தேன்? 358 00:21:42,719 --> 00:21:45,097 உங்கள் பேத்தி அழைத்து வந்தாள். 359 00:21:45,180 --> 00:21:48,183 அவளுடைய காரில் நீங்கள் மயங்கிவிட்டீர்கள், நீங்கள் சாகப் போவதாக நினைத்துவிட்டாள். 360 00:21:49,017 --> 00:21:50,102 எனக்குப் புரிந்துவிட்டது. 361 00:21:56,108 --> 00:21:57,526 ஒருவேளை அவள் சரியாக கூறியிருக்கலாம். 362 00:21:59,111 --> 00:22:02,072 எனவே சி.டபிள்யூ. லாங்பாட்டம் என்பவர் இப்படித்தான். 363 00:22:03,365 --> 00:22:05,492 நிச்சயம் நான் உங்களை இப்படி எதிர்பார்க்கவில்லை. 364 00:22:06,076 --> 00:22:08,996 நான் எதிர்பார்த்தபடி கூட நான் இல்லை. 365 00:22:09,079 --> 00:22:11,164 உன் அம்மா என்னைப் பற்றி நிச்சயம் தவறாக கூறியிருக்கிறார். 366 00:22:11,248 --> 00:22:13,584 சொல்லப் போனால், ஒருமுறைகூட அவர் உங்களைப் பற்றி சொன்னதில்லை. 367 00:22:15,544 --> 00:22:19,423 ஒருநாள், இதோடு அவர் வீட்டிற்கு வரும் வரை. 368 00:22:21,758 --> 00:22:23,552 இதை விசிஆர்-இல் போடச் சொன்னார். 369 00:22:23,635 --> 00:22:24,636 மித்திக் குவெஸ்ட் 370 00:22:24,720 --> 00:22:27,598 70 வயதான அம்மா, வீடியோ கேமோடு வீட்டிற்கு வருவது அரிதானது. 371 00:22:27,681 --> 00:22:30,601 ஆனால் தன் பழைய நண்பர் அதை எழுதியதாக அவர் சொன்னார். 372 00:22:32,603 --> 00:22:36,356 என்னை அவமானப்படுத்த என்னுடைய இந்த தோல்விச் சின்னத்தை வைத்திருந்தாள். 373 00:22:36,440 --> 00:22:38,734 என்ன? இல்லைவே இல்லை. 374 00:22:38,817 --> 00:22:41,028 உங்களுடைய படைப்பைப் பார்த்து, உங்களை நினைத்து பெருமைப்பட்டார். 375 00:22:41,695 --> 00:22:43,822 70களிலேயே நீங்கள் வீடியோ கேம் பற்றிய 376 00:22:43,906 --> 00:22:45,908 முழு விஷயத்தையும் கணித்தீர்கள் என்று சொன்னார். 377 00:22:47,743 --> 00:22:50,287 ஆமாம், நான் கணித்தேன் தான். 378 00:22:50,370 --> 00:22:51,455 அவளுக்கு நினைவிருந்திருக்கிறது. 379 00:22:51,538 --> 00:22:54,791 ஆம். முப்பது ஆண்டுகளாக நீங்கள் போதைப்பொருள் உட்கொள்வதாகவும் சொன்னார். 380 00:22:56,043 --> 00:22:57,377 அதுவும் சரிதான். 381 00:22:59,129 --> 00:23:03,300 எப்படியோ... தந்திரமாக உங்களை இங்கு வரவழைத்தற்காக மன்னித்துவிடுங்கள். 382 00:23:06,303 --> 00:23:09,473 ஒரே துறையில் இருந்த, ஒரே மாதிரி வினோதமான ஆர்வங்களைக் கொண்ட 383 00:23:09,556 --> 00:23:11,683 வயதான இருவரில், ஒருவர் இறப்பதாற்கு முன் 384 00:23:11,767 --> 00:23:14,561 அவர்களது நட்பை புதுப்பிக்க வேண்டும் என நான் நினைப்பது வேடிக்கை தான். 385 00:23:16,188 --> 00:23:17,981 தன்னுடைய தவறை ஒப்புக்கொள்ள முடியாமல் 386 00:23:18,065 --> 00:23:20,859 பிடிவாதமாக இருந்தால், மன்னிப்பு கிடைப்பது கடினம் என நினைக்கிறேன். 387 00:23:23,362 --> 00:23:25,113 நான் உங்களைப் பற்றி பேசுகிறேன். 388 00:23:25,822 --> 00:23:27,407 ஆமாம், எனக்குப் புரிந்துவிட்டது. 389 00:23:29,409 --> 00:23:30,410 அருமை. 390 00:23:35,040 --> 00:23:36,708 இதை மறந்துவிடாதீர்கள். 391 00:23:37,584 --> 00:23:39,711 கடவுளே, இப்போதும் இதை யாருக்காவது தருகிறார்களா? 392 00:23:42,005 --> 00:23:43,549 ஆமாம், தருகிறார்கள். 393 00:23:46,093 --> 00:23:47,803 இதில் ஒன்றை நான் எடுத்துக்கொள்ளப் போகிறேன். 394 00:23:52,724 --> 00:23:54,017 ஹேய். 395 00:23:55,143 --> 00:23:57,229 "ரோபாட்டிடம் கவனமாக இரு." 396 00:24:01,400 --> 00:24:02,568 ஒன்றுமில்லை. 397 00:24:15,247 --> 00:24:16,623 போய் வருகிறேன், கிழவியே. 398 00:24:42,983 --> 00:24:47,154 பீட்டர், நேற்றிரவு ஒரு மோசமான முட்டாள் போல நான் நடந்துக் கொண்டேன். 399 00:24:48,071 --> 00:24:51,825 அதோடு மன்னிக்க முடியாத விஷயங்களைப் பற்றி பேசினேன். 400 00:24:56,079 --> 00:24:58,457 நீ என் மேஜையைக் கூட அசிங்கப்படுத்தினாய். 401 00:24:59,333 --> 00:25:02,169 ஓ, ஆமாம். அதுவும் செய்தேன். 402 00:25:04,379 --> 00:25:06,840 ஆனால் நீ உண்மையைத்தான் சொன்னாய். 403 00:25:10,761 --> 00:25:12,012 நான்... 404 00:25:14,389 --> 00:25:16,099 அவருக்கு கொஞ்சம் சுத்தமான காற்று தேவை. 405 00:25:16,183 --> 00:25:17,184 நான்... 406 00:25:19,102 --> 00:25:20,354 நான் அழைத்துச் செல்லவா? 407 00:25:48,507 --> 00:25:49,716 அடக் கடவுளே. 408 00:25:52,761 --> 00:25:55,222 நாங்கள் இங்கு வந்த முதல் நாளன்று அவள் இதை ஆரம்பித்தாள். 409 00:25:59,601 --> 00:26:01,353 "முளைக்கும் விதைகளுக்காக." 410 00:26:03,146 --> 00:26:04,231 உண்மையாக. 411 00:26:05,315 --> 00:26:07,818 கண்டிப்பாக, நான் நகரத்தில் வாழத்தான் விரும்பினேன், ஆனால்... 412 00:26:08,735 --> 00:26:10,320 நீ அவளுக்காக இங்கே இருந்தாய். 413 00:26:11,238 --> 00:26:12,823 என்னைவிட நீ சிறந்தவன், பீட்டர். 414 00:26:14,241 --> 00:26:15,325 ஆமாம், ஒரு நல்ல மனிதன்... 415 00:26:17,160 --> 00:26:19,121 மற்றும் ஒரு சாதாரண எழுத்தாளர். 416 00:26:20,747 --> 00:26:22,249 எனக்கு அதைப் பற்றி தெரியாது. 417 00:26:23,542 --> 00:26:27,963 20 புத்தகங்கள் கொண்ட ஒரு தொடரை எழுதியதாக எத்தனை எழுத்தாளர்களால் சொல்ல முடியும்? 418 00:26:29,756 --> 00:26:30,757 நீ எப்படி... 419 00:26:31,425 --> 00:26:32,634 அது முக்கியமில்லை. 420 00:26:33,552 --> 00:26:37,014 அது எப்படி முடிகிறது என்பது உலகத்திற்கு தெரிய வராது என்பது வருத்தமளிக்கிறது. 421 00:26:37,097 --> 00:26:40,559 அது ஒரு சடலத்தோடு முடிகிறது. அதாவது என்னுடையது. 422 00:26:40,642 --> 00:26:46,023 இல்லை, ப்யோர்ன் ஹாம்மர்ஃபால் மற்றும் பெல்லெரோஃபானின் குழுவினரைச் சொன்னேன். 423 00:26:46,106 --> 00:26:48,275 நாம் அவர்களைக் கடைசியாக பார்த்தபோது, 424 00:26:48,942 --> 00:26:53,447 அவர்கள் ஆண்ட்ரோமெடா பகுதியிலிருந்து பெரிய வெற்றிடத்திற்கு தப்பிவிட்டனர். 425 00:26:53,530 --> 00:26:57,201 நீ 19வது அத்தியாயத்தைப் படித்தாயா? 426 00:27:00,287 --> 00:27:02,206 அவை எல்லாவற்றையும் நான் படித்தேன். 427 00:27:03,248 --> 00:27:05,250 சிலவற்றை ஒரு முறைக்கும் மேல் படித்தேன். 428 00:27:05,834 --> 00:27:07,669 நான் எப்போதும் ரசிகனாகத்தான் இருந்தேன். 429 00:27:09,838 --> 00:27:11,757 ஆமாம், பொறாமைப்பட்டேன். 430 00:27:11,840 --> 00:27:13,509 நிச்சயமாக, கோபமடைந்தேன். 431 00:27:13,592 --> 00:27:15,219 பெரும்பாலான நேரம் குடித்தேன். 432 00:27:17,804 --> 00:27:19,264 எப்போதும் ரசிகனாகத்தான் இருந்தேன். 433 00:27:26,522 --> 00:27:27,523 இதை வாங்கிக் கொள். 434 00:27:29,858 --> 00:27:31,777 குறைந்தபட்சம் ஒருவராவது இதை படிக்க முடியும். 435 00:27:34,571 --> 00:27:37,366 இதன் ஆசிரியரே, இதை வாசித்துக் காட்ட விரும்புகிறேன். 436 00:27:39,326 --> 00:27:42,913 இது கொஞ்சம் பெரியது. எவ்வளவு நேரம் இருப்பாய்? 437 00:27:55,926 --> 00:27:57,135 அது முடியும் வரை. 438 00:28:13,360 --> 00:28:15,571 "யுஎஸ்பிசி பேட்டில்-க்ரூஸர் பெல்லெரோஃபானின் 439 00:28:16,697 --> 00:28:22,286 கட்டளை மையத்தில் கேட்ட ஒரே சத்தம் என்னவென்றால் 440 00:28:23,745 --> 00:28:27,207 துணை-ஒளி இயக்கிகளின் மெல்லிய சத்தம் தான். 441 00:28:28,041 --> 00:28:34,715 ஆன்டிகான் 5-இன் சிதறிய எச்சங்களை வெளியே பார்த்தபோது குழுவினர் அமைதியாக நின்றனர்." 442 00:28:34,798 --> 00:28:36,592 "சிதறிய எச்சங்களா"? 443 00:28:36,675 --> 00:28:37,718 ஆன்டிகானுக்கு என்னவாயிற்று? 444 00:28:37,801 --> 00:28:41,680 "ஹாம்மர்ஃபால் அதிர்ச்சியோடு எழுந்தார். அது ஒரு கனவு." 445 00:28:44,600 --> 00:28:46,351 "அல்லது ஒரு கெட்ட கனவாக இருக்கலாம்." 446 00:28:51,231 --> 00:28:53,317 "ஒருவேளை எதிர்காலத்தைப் பற்றிய ஒரு நோக்கமாக இருக்கலாம். 447 00:28:53,400 --> 00:28:56,570 அவர் புவி-ஈர்ப்பு இல்லாத தொட்டிலில் இருந்து கால்களை அசைத்து, 448 00:28:56,653 --> 00:29:00,866 கட்டளைக் குழாமில் கால் பதித்து, அந்த இணைப்பு மேடையை அடைந்தார்." 449 00:30:04,680 --> 00:30:06,682 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்