1 00:00:20,687 --> 00:00:23,357 பியனி மலரே உனக்கு ஒரு நல்ல செய்தி. 2 00:00:23,440 --> 00:00:25,025 ஒரு புதிய மலர் உன் செடியில் பூத்திருக்கிறது. 3 00:00:26,109 --> 00:00:27,361 மூலிகை மஞ்சள் மலரே. 4 00:00:27,444 --> 00:00:31,740 பூமிக்குள் இருந்து மீண்டும் பிறந்து வந்திருக்கிறாய். 5 00:00:32,533 --> 00:00:36,703 இனிமையான ஐரிஸ் மலரே, அழகான பாவாடையைப் போல் பூத்திருக்கிறாய். 6 00:00:38,956 --> 00:00:44,503 என்னுடைய தேனீக்கள், சுறுசுறுப்பாக தேனைச் சேகரிக்கின்றன. 7 00:00:48,966 --> 00:00:52,052 நம்மிடம் தோட்டம் இருந்தால், விருந்து, கொண்டாட்டம் எல்லாம் யாருக்குத் தேவை? 8 00:00:52,135 --> 00:00:54,888 இந்தப் பருவத்துக்கான சமூக நிகழ்வுகள் எல்லாம் இங்கு நடக்கின்றன. 9 00:01:03,605 --> 00:01:05,524 கடினமாகவா, அல்லது எப்போவாவது உழைக்கிறாயா? 10 00:01:06,525 --> 00:01:09,987 டெத். என் தோட்டத்தில் என்ன செய்கிறீர்கள்? 11 00:01:10,070 --> 00:01:12,573 உன்னைப் பார்த்து, என்னுடைய புது ஆடையை உன்னிடம் காட்ட வந்தேன். 12 00:01:14,616 --> 00:01:16,910 அடடா. ரொம்ப சுத்தமாக இருக்கிறீர்கள். 13 00:01:16,994 --> 00:01:20,455 ஆம். நீ என் வாழ்க்கையை சரிசெய்துவிட்டாய். நாம் போன முறை பேசிய போது, மனமுடைந்திருந்தேன். 14 00:01:20,539 --> 00:01:21,790 இப்பொழுது பரவாயில்லை. 15 00:01:21,874 --> 00:01:24,168 என்ன ஆச்சு? கொஞ்சம் ஓய்வு எடுத்தீர்களா அல்லது... 16 00:01:24,251 --> 00:01:26,086 வேலை செய்பவர்கள், விடுமுறை எடுக்க மாட்டார்கள். 17 00:01:27,504 --> 00:01:29,631 ஆனால் நான் கொஞ்சம் வேறு விதமாக யோசித்துப் பார்த்தேன். 18 00:01:29,715 --> 00:01:31,508 என் கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும். அவ்வளவுதான். 19 00:01:31,592 --> 00:01:34,720 ஆஹா. சரி. நல்லது, அதைப் பற்றிச் சொல்லுங்களேன். 20 00:01:35,554 --> 00:01:38,765 வந்து, நான் என்னை விமர்சித்துக் கொள்கிற மாதிரி எனக்குத் தோன்றியது. 21 00:01:39,933 --> 00:01:43,020 அதாவது, யாரும் பார்க்க விரும்பாத நபர் நான் என்கிற மாதிரி. 22 00:01:44,104 --> 00:01:46,607 முகத்திலிருந்து புழுக்கள் வெளியே வருமாறு புழுதியில் படுத்துக்கிடப்பது என்ற 23 00:01:46,690 --> 00:01:48,317 எண்ணமே யாருக்கும் பிடிக்காது. 24 00:01:48,400 --> 00:01:49,902 இல்லை, பிடிக்காது. 25 00:01:51,528 --> 00:01:53,697 அப்போது தான் நான் யோசிக்கத் தொடங்கினேன். 26 00:01:54,364 --> 00:01:57,659 மரணம் இல்லையென்றால், வாழ்க்கை என்பது என்ன? 27 00:01:57,743 --> 00:02:00,204 இது எல்லாமே ஒரே அமைப்பு முறை தான். 28 00:02:00,287 --> 00:02:01,955 இந்த மலர்களைப் போன்றது. 29 00:02:02,039 --> 00:02:05,334 வீணாகும் இந்த மண்ணில் தான் அவை வளர்கின்றன. 30 00:02:05,417 --> 00:02:09,545 அவை மலர்ந்து, மக்கி மீண்டும் மண்ணுக்கே சென்று விடுகின்றன. 31 00:02:10,047 --> 00:02:12,591 இதே விஷயம் தான் மீண்டும் மீண்டும் நடக்கின்றது. 32 00:02:12,674 --> 00:02:15,552 இது ஒரு சுழற்சி, அன்பே. மக்கள் இதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். 33 00:02:15,636 --> 00:02:19,306 சரி. நீங்கள் நன்றாக ஆகிவிட்டது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. 34 00:02:19,389 --> 00:02:21,767 இந்த சூட் பிரமாதமாக உள்ளது. 35 00:02:21,850 --> 00:02:27,022 ஆமாம். நீயும் புதுவிதமாகத் தோற்றமளிக்கலாமே என நினைத்துக்கொண்டு இருந்தேன். 36 00:02:27,105 --> 00:02:28,315 என் தோற்றத்தில் என்ன பிரச்சினை? 37 00:02:28,398 --> 00:02:30,859 வெளித் தோற்றமல்ல, நீ எப்படி உணர்கிறாய் என்பது தான் விஷயமே. 38 00:02:31,443 --> 00:02:34,363 நீ இப்படித்தான் என்று உன்னையே உணர வைக்கும் உடையை நீ அணிய வேண்டும். 39 00:02:34,446 --> 00:02:37,574 உன் ஆடை உன்னை மிகச் சிறந்த நபராக உணர வைக்க வேண்டும். 40 00:02:37,658 --> 00:02:41,828 மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை உடுத்திக்கொண்டு நீ நடக்கக் கூடாது. 41 00:02:41,912 --> 00:02:43,956 மிஸ். டிக்கின்சன், உனக்கு வேலை இருக்கிறது. 42 00:02:44,039 --> 00:02:48,377 வெளியிடப்படாத நூற்றுக்கணக்கான, மிகச் சிறந்த கவிதைகள் உன்னிடம் நிறைய உள்ளன. 43 00:02:48,460 --> 00:02:50,671 அதை வெளியிட வேண்டிய காலக் கெடுவும் நெருங்கிவிட்டது. 44 00:02:51,171 --> 00:02:54,091 இப்படி உடை அணிந்து கொண்டு அதை எப்படி விரைவாக முடிப்பாய் என தெரியவில்லை. 45 00:02:55,133 --> 00:02:56,677 அப்படியானால், நீ... 46 00:02:56,760 --> 00:02:59,137 நான் என்ன அணிய வேண்டும் என நினைக்கிறாய்? உன் சூட் மாதிரியா? 47 00:02:59,221 --> 00:03:00,806 என்னால் அதைச் சொல்ல முடியாது. 48 00:03:00,889 --> 00:03:04,643 நீ உன்னிடமே கேள், “எது எனக்கு ஏற்றது? 49 00:03:04,726 --> 00:03:08,063 எது என்னை முன்பு எப்போதையும் விட ஆழமாகச் செல்ல வைக்கும்? 50 00:03:08,146 --> 00:03:11,108 இது வரையிலும் பயணிக்காத தூரத்திற்கு கொண்டு செல்லும்?” என. 51 00:03:14,945 --> 00:03:17,948 உனக்கு வேலை இருக்கிறது, மிஸ். டிக்கின்சன். உனக்குச் சீருடை தேவைப்படும். 52 00:03:24,204 --> 00:03:27,332 இந்த உடை கொஞ்சம் அதிகமாகவே இறுக்கமாக இருக்கிறது. 53 00:03:27,416 --> 00:03:30,002 இன்னும் கொஞ்சம் தளர்வான உடையாக இருந்தால் நன்றாக இருக்கும். 54 00:03:30,627 --> 00:03:32,212 உனக்கு வேண்டியதை தேர்ந்தெடு, எமிலி. 55 00:03:32,296 --> 00:03:34,965 நீ நீயாக இரு, ஏனென்றால் காலம் விரைந்து செல்கிறது. 56 00:03:35,632 --> 00:03:36,758 நாம் கவிதைகள் எழுத வேண்டும். 57 00:04:18,550 --> 00:04:20,469 டிக்கின்சன் 58 00:04:20,552 --> 00:04:22,471 இவர் ஒரு கவிஞர்... 59 00:04:42,074 --> 00:04:46,453 மோசமான... கொடூரமான பட்டன்கள். 60 00:04:47,246 --> 00:04:48,580 அட. 61 00:04:49,873 --> 00:04:50,999 வின்னி! 62 00:04:52,584 --> 00:04:55,587 -என்ன? -இந்த அவஸ்தை பிடித்த உடையை கழற்ற முடியவில்லை. 63 00:04:55,671 --> 00:04:56,922 என் பட்டன்களை அவிழ்த்து விடுகிறாயா? 64 00:04:57,005 --> 00:04:59,258 நீ ஏன் உடையைக் கழற்றறுகிறாய்? இது பகல் தானே. 65 00:04:59,341 --> 00:05:01,301 நான் எழுத வேண்டும், இந்த கோர்செட் இறுக்கமாக இருப்பதால், 66 00:05:01,385 --> 00:05:03,595 என்னால் மூச்சு கூட விடமுடியவில்லை. 67 00:05:03,679 --> 00:05:05,764 சரி, வீட்டுக்கு யாரும் வர மாட்டார்கள் என நினைக்கிறேன். 68 00:05:05,848 --> 00:05:07,349 யார் என்னைப் பார்க்க வரப் போகிறார்கள்? 69 00:05:07,432 --> 00:05:08,600 அதோ. 70 00:05:09,101 --> 00:05:11,812 இந்தக் காலத்தில் பெண்களின் உடையெல்லாம் மடத்தனமாக இருக்கிறது. 71 00:05:11,895 --> 00:05:14,565 நாமே நம்முடைய உடைகளை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். 72 00:05:14,648 --> 00:05:17,025 வயது வந்தவராக இருக்க இதெல்லாம் அடிப்படைத் தேவை. 73 00:05:17,109 --> 00:05:20,863 எமிலி டிக்கின்சன், பெண்ணின் உருவ அமைப்பை நீ எப்படி கேள்வி கேட்கலாம்? 74 00:05:21,780 --> 00:05:25,701 ஈர்ப்பு என்பது மூச்சை உள்ளிழுத்தல் மாதிரி. நீ அதை உணரவில்லையா? 75 00:05:25,784 --> 00:05:28,370 ஈர்க்கப்படுவதற்கு, நாம் சுவாசிக்க வேண்டும். 76 00:05:28,453 --> 00:05:32,499 நான் என் இருக்கையில் அமர்ந்து மூச்சை நன்றாக என் நுரையீரல்களில் நிரப்ப வேண்டும். 77 00:05:32,583 --> 00:05:34,376 சரி, இது உன் பைத்தியக்காரத்தனம். 78 00:05:34,459 --> 00:05:37,379 -எனக்கு கோர்செட் அணிய விருப்பமில்லை. -சரி, நம் எல்லோருக்குமே கனவுகள் உண்டு. 79 00:05:40,340 --> 00:05:44,511 அடடா, ரத்தம் பாய்வதை என்னால் உணர முடிகிறது, ரத்தமும், கவிதையும். 80 00:05:44,595 --> 00:05:46,972 நீ எழுதுவதை எதனாலும் தடுக்க முடியாது, இல்லையா? 81 00:05:47,723 --> 00:05:49,099 இதுவரை எதுவும் தடுத்ததில்லை. 82 00:05:49,183 --> 00:05:50,642 மக்கள் முயன்றார்கள் என கடவுளுக்குத் தெரியும். 83 00:05:51,518 --> 00:05:53,937 அவர்களால் நான் எழுதுவதைத் தடுக்க முடியாது, வின்னி. 84 00:05:54,021 --> 00:05:56,398 ஏனென்றால், எழுதுவதுதான் என்னை உயிரோடு வைத்திருக்கிறது. 85 00:05:56,481 --> 00:05:59,693 எப்பொழுதும் நான் உனக்கு உதவ இங்கிருப்பேன். 86 00:06:00,277 --> 00:06:01,278 திரும்பு. 87 00:06:13,832 --> 00:06:16,335 நம்மைப் பாரேன், ஒரு மகிழ்ச்சியான குடும்பம். 88 00:06:17,461 --> 00:06:19,213 மகிழ்ச்சியான எல்லாக் குடும்பங்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. 89 00:06:30,974 --> 00:06:32,351 சரி. 90 00:06:35,354 --> 00:06:36,980 வந்து... 91 00:06:39,399 --> 00:06:40,984 யார் வந்திருக்கிறார்கள் என பாரேன். 92 00:06:41,068 --> 00:06:42,569 நாங்கள் விருந்தினரை எதிர்பார்க்கவில்லையே. 93 00:06:43,070 --> 00:06:45,239 அம்மா, அப்பா... 94 00:06:47,282 --> 00:06:48,784 நாங்கள் சமாதானத்திற்காக வந்திருக்கிறோம். 95 00:06:48,867 --> 00:06:51,245 உன்னோடு நான் எப்போதும் சண்டை போட்டதே இல்லையே. 96 00:06:52,538 --> 00:06:54,581 அது என் பேரனா? 97 00:06:54,665 --> 00:06:56,041 ஆமாம். 98 00:06:56,124 --> 00:06:57,626 சரி, உடனே உள்ளே வாருங்கள். 99 00:06:57,709 --> 00:07:00,921 பெயர் வைக்காத இந்தக் குட்டி செல்லம் தன் பாட்டியை தெரிந்துகொள்ள வேண்டும். 100 00:07:06,051 --> 00:07:07,970 சரி, இவனது பெயரைத் தேர்ந்தெடுத்து விட்டீர்களா? 101 00:07:08,637 --> 00:07:10,889 -கிட்டத்தட்ட. -கடவுளே, அப்புறம் என்ன தாமதம்? 102 00:07:10,973 --> 00:07:13,976 -அவனுக்கு குடும்ப பெயர் வைக்க விரும்புகிறோம். -அது சரியான விஷயம் தான். 103 00:07:14,059 --> 00:07:16,770 அதை செய்வதற்கு முன், எங்கள் குடும்பம் எப்படிப்பட்டது என்று தெரிய வேண்டும். 104 00:07:17,855 --> 00:07:19,523 இதற்கு என்ன அர்த்தம்? 105 00:07:19,606 --> 00:07:23,402 அப்பா, உங்களோடு நான் ஒரு விஷயம் பேச வேண்டும். 106 00:07:23,485 --> 00:07:27,531 எனக்கு ஒரு சட்ட வழக்கு வந்திருக்கிறது, உங்களுக்கு விருப்பம் என்றால், 107 00:07:27,614 --> 00:07:30,325 நாம் இருவரும் சேர்ந்து அதை எதிர்கொள்ளலாம். 108 00:07:30,409 --> 00:07:32,703 நீ உன் சொந்த நிறுவனம் ஆரம்பித்தாயே. 109 00:07:32,786 --> 00:07:35,664 இந்த வழக்கிற்கு என் முழு உழைப்பும் தேவை 110 00:07:35,747 --> 00:07:38,959 கூடுதலாக, உங்களுடைய திறமையும் தேவை. 111 00:07:41,086 --> 00:07:42,212 அப்படியா. 112 00:07:43,005 --> 00:07:44,798 மேலே சொல்லு. 113 00:07:44,882 --> 00:07:46,300 வழக்கு பற்றிய விவரங்கள் என்ன? 114 00:07:46,383 --> 00:07:50,012 ஏஞ்சலின் பால்மர் என்ற இளம், சுதந்திரமான கருப்பின பெண் இருக்கிறாள். 115 00:07:50,095 --> 00:07:52,931 இங்கே ஷா குடும்பத்தில் அவள் வேலைக்காரியாக இருந்தாள். 116 00:07:53,015 --> 00:07:54,183 எங்களுக்கு ஷா குடும்பம் தெரியுமே. 117 00:07:54,266 --> 00:07:56,768 -ஆமாம். கௌரவமான மக்கள். -அப்படி இல்லை. 118 00:07:57,853 --> 00:08:00,898 ஷா குடும்பத்தினர், ஜார்ஜியாவில் உள்ள ஒரு குடும்பத்திற்கு 119 00:08:00,981 --> 00:08:05,444 ஏஞ்சலினை 600 டாலர்களுக்கு அடிமையாக விற்கப் பார்த்தார்கள். 120 00:08:06,695 --> 00:08:08,363 ஷா குடும்பத்தினர் கிளம்புவதற்கு முன் 121 00:08:08,447 --> 00:08:11,366 அவளை வீட்டிலிருந்து ரகசியமாக அழைத்து போக ஏஞ்சலினின் சகோதரர்கள் முயற்சி செய்தார்கள், 122 00:08:11,450 --> 00:08:15,537 ஆனால் அவர்கள் பிடிபட்டு, கடத்தல் மற்றும் தாக்குதல் செய்ததற்கு கைது செய்யப்பட்டார்கள். 123 00:08:16,121 --> 00:08:19,082 அந்த ஆண்கள் இப்போது சிறையில் இருக்கிறார்கள், 124 00:08:19,166 --> 00:08:21,668 நம்முடைய சட்ட உதவியை ரொம்பவும் எதிர்ப்பார்க்கிறார்கள். 125 00:08:21,752 --> 00:08:25,339 இது ஒரு குழப்பமான வழக்கு. ஷா குடும்பத்தினருக்கு மேலிடத்தில் நட்பு உண்டு. 126 00:08:26,131 --> 00:08:28,884 சரி, நாம் எதற்காக டிக்கின்சன் பெயரை இந்த வழக்கோடு 127 00:08:28,967 --> 00:08:30,135 சம்பந்தப்படுத்த வேண்டும்? 128 00:08:30,219 --> 00:08:32,804 இதற்காகத்தான் நாம் இந்த வழக்கை எடுத்துக்கொள்ள வேண்டும். 129 00:08:33,388 --> 00:08:37,808 கொஞ்சம் யோசியுங்கள், அப்பா. இப்போது டிக்கின்சன் குடும்பத்திற்கு நல்ல பெயர் இல்லை. 130 00:08:38,477 --> 00:08:41,897 உங்களுடைய மோசமான நடத்தை மற்றும், என்னுடைய... 131 00:08:42,940 --> 00:08:44,191 பலவீனங்களையும் பார்த்தால், 132 00:08:44,942 --> 00:08:47,110 நம் இருவருக்குமே வாழ்க்கை சிறப்பாக இல்லை. 133 00:08:47,194 --> 00:08:50,822 இந்த வழக்கை எடுத்துக் கொண்டால் “டிக்கின்சன்” என்ற பெயருக்கு புது அர்த்தம் கிடைக்கும். 134 00:08:50,906 --> 00:08:53,825 நாம் சரியான ஒன்றிற்காக வாதாடினோம் என்ற பெயர் கிடைக்கும். 135 00:08:56,537 --> 00:09:00,499 ஒரு பின்னல், இரண்டு பர்ல். 136 00:09:00,582 --> 00:09:01,792 நீ என்ன பின்னுகிறாய்? 137 00:09:01,875 --> 00:09:06,088 -பார்ப்பாய். எல்லோரும் பார்ப்பார்கள். -எதைப் பார்ப்போம்? 138 00:09:06,171 --> 00:09:09,424 ஒரு பெரிய பின்னல் வெடிகுண்டு வருகிறது. 139 00:09:10,968 --> 00:09:13,637 காலை வணக்கம். அருமையான நாள். 140 00:09:13,720 --> 00:09:14,721 அப்படித்தான் இல்லையா? 141 00:09:14,805 --> 00:09:17,307 இந்த அழகான நாளில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். 142 00:09:17,391 --> 00:09:21,019 பறவைகளும் தேனீக்களும், இல்லையா? மகரந்தமும், தேனும். 143 00:09:21,103 --> 00:09:22,688 என்னை ரொம்பவும் மகிழ்ச்சியாக ஆக்குகிறது. 144 00:09:22,771 --> 00:09:26,191 ஒரு அழகான ஆண் வந்து என்னை சுற்றி அழைத்துப்போக விரும்புகிறேன். 145 00:09:26,275 --> 00:09:28,026 சரி, மேகிக்கு ஆசை வந்துவிட்டது. 146 00:09:28,861 --> 00:09:30,863 நான் எமிலியைப் பார்க்க வந்தேன். அவள் இருக்கிறாளா? 147 00:09:30,946 --> 00:09:34,324 -மாடியில், எழுதிக் கொண்டிருக்கிறாள். -ஏதாவது விஷயம் சொல்ல வேண்டுமா? 148 00:09:34,408 --> 00:09:36,952 அவள் எழுதிக் கொண்டிருந்தால், நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. 149 00:09:37,035 --> 00:09:41,707 அவள் எப்போதுமே எழுதிக்கொண்டும், யோசித்துக் கொண்டும் இருப்பாள். எமிலி யோசிக்க வேண்டும். 150 00:09:42,291 --> 00:09:44,501 எங்களுக்குள் அவள் மட்டும் தான் அதை செய்ய வேண்டும். 151 00:09:45,169 --> 00:09:46,920 மாடிக்கு போங்கள். உங்களை சந்திக்க விரும்புவாள். 152 00:09:48,964 --> 00:09:53,844 ஒரு பின்னல்... இரண்டு பர்ல். 153 00:09:58,640 --> 00:10:01,018 என்னுடைய போர் புத்தகங்களில் இருக்கிறது... 154 00:10:02,811 --> 00:10:04,104 யாரது? 155 00:10:06,231 --> 00:10:08,025 பெட்டி. உள்ளே வாருங்கள். 156 00:10:08,609 --> 00:10:10,027 நீ வேலையாக இருப்பாய் என்று தெரியும். 157 00:10:10,110 --> 00:10:14,781 பரவாயில்லை. ஏதாவது பிரச்சினையா? ஹென்ரியிடமிருந்து ஏதாவது தகவல் வந்ததா? 158 00:10:14,865 --> 00:10:18,035 இல்லை, எதுவும் வரவில்லை. அந்த நம்பிக்கையை இழக்க இருந்தேன்... 159 00:10:18,118 --> 00:10:22,497 பெட்டி, நான் வருந்துகிறேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. 160 00:10:22,581 --> 00:10:25,125 பரவாயில்லை, கேள். அதற்காகத் தான் வந்திருக்கிறேன். 161 00:10:25,209 --> 00:10:29,588 நீ எனக்கு உதவி செய்ய முயற்சித்தாய், நான் உன்னிடம் கடுமையாக நடந்து கொண்டேன். 162 00:10:29,671 --> 00:10:31,924 நீ எனக்கு நம்பிக்கை கொடுக்க விரும்பினாய். 163 00:10:32,007 --> 00:10:34,843 அதில் எந்த தவறுமே இல்லை, கண்டிப்பாக இல்லை. 164 00:10:34,927 --> 00:10:38,263 மற்றவர்களுக்கு உதவக்கூடிய மக்கள் உலகத்தில் இருப்பது நல்லது. 165 00:10:40,974 --> 00:10:42,518 தெரியவில்லை, ஆஸ்டின். 166 00:10:42,601 --> 00:10:46,813 என்னுடைய புகழ் அரசியலில் நிலைக்காது என்பதை... நான் புரிந்து கொண்டுவிட்டேன். 167 00:10:47,856 --> 00:10:53,445 என்னுடைய உண்மையான சொத்து இங்கே இருக்கும், என் குடும்பமும், என் பிள்ளைகளும் தான். 168 00:10:54,071 --> 00:10:57,741 சரி, உங்கள் பிள்ளைகளைப்பற்றி யோசியுங்கள். ஏஞ்சலினுக்கு பதினோரு வயது நிரம்பியிருந்தது. 169 00:10:57,824 --> 00:10:59,409 அந்த வயது எமிலியை கற்பனை செய்யுங்கள். 170 00:10:59,493 --> 00:11:03,872 ஒரு அந்நியரிடத்தில் அவளை 600 டாலருக்கு விற்கப் பார்த்தனர். 171 00:11:04,873 --> 00:11:06,875 உனக்கு இதில் அக்கறை உண்டு, இல்லையா? 172 00:11:06,959 --> 00:11:10,921 ஆமாம். மாற்றங்கள் அடைய வேண்டிய காலம் வந்துவிட்டது. 173 00:11:11,004 --> 00:11:13,966 பருவங்கள் மாறுகின்றன, அதே போல் சமுதாயங்களும் மாற வேண்டும். 174 00:11:14,049 --> 00:11:16,593 புது உலகின் ஒரு பகுதியாக நாம் இருக்கலாம், 175 00:11:17,177 --> 00:11:18,762 அல்லது அழிந்து தூசியாக போகலாம். 176 00:11:20,681 --> 00:11:21,723 நாம் இந்த வழக்கை வாதாடலாம். 177 00:11:28,856 --> 00:11:30,440 ஓ, அற்புதம். 178 00:11:30,524 --> 00:11:33,235 நீ நெப்ராஸ்காவிற்கு போகிறேன் என்று சொல்வாயோ என்று பயந்தேன். 179 00:11:33,318 --> 00:11:37,990 இல்லை, அவர் இங்கேயே அம்ஹெர்ஸ்டில் தங்கி இதை சிறந்த இடமாக மாற்ற முயற்சிப்பார். 180 00:11:38,490 --> 00:11:40,033 -அவனை என்னிடம் தருகிறீர்களா? -மாட்டேன். 181 00:11:40,117 --> 00:11:43,579 சரி, நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். 182 00:11:43,662 --> 00:11:45,122 என்ன அது? 183 00:11:45,205 --> 00:11:47,082 நான் ஒரு புது ஆடை தைக்க வேண்டும். 184 00:11:48,750 --> 00:11:51,670 கடையில் நிறைய ஆர்டர்கள் இருக்கின்றன... 185 00:11:51,753 --> 00:11:54,214 இல்லை, எனக்காக நீங்கள் அதை தைக்க வேண்டாம். 186 00:11:54,298 --> 00:11:55,465 அதை நானே தைக்க வேண்டும். 187 00:11:55,549 --> 00:11:57,009 -நீயேவா? -ஆமாம். 188 00:11:57,092 --> 00:11:59,094 எனக்கு நன்றாக தைக்கத் தெரியாது, 189 00:11:59,803 --> 00:12:02,556 இருந்தாலும் இதை நானே செய்வது முக்கியமானது. 190 00:12:02,639 --> 00:12:05,392 நான் எழுதும் போது அணியும் ஆடை. 191 00:12:05,475 --> 00:12:07,686 நாள் தோறும் அணியும் ஆடை. 192 00:12:08,979 --> 00:12:13,400 எனவே, இப்படிப்பட்ட ஆடை இருக்கிறதா என்று தெரியாததால், 193 00:12:14,401 --> 00:12:17,821 உங்களுடைய சிறப்பு கருத்து எனக்கு வேண்டும். 194 00:12:18,822 --> 00:12:21,283 சரி, மகிழ்ச்சியாக உதவுகிறேன். 195 00:12:21,366 --> 00:12:24,953 புதிய வடிவமைப்பில் உள்ள சவால் எனக்குப் பிடிக்கும். 196 00:12:25,037 --> 00:12:26,246 சிறப்பு. 197 00:12:27,664 --> 00:12:28,790 இங்கே உட்காருங்கள். 198 00:12:29,708 --> 00:12:32,878 சிறுமிகள் குழந்தையை எடுத்துக்கொண்டு போவதற்கு முன், அதன் பெயரைச் சொல்கிறாயா? 199 00:12:33,462 --> 00:12:36,173 சரி, சொல்கிறேன். 200 00:12:36,924 --> 00:12:38,550 நீயே சொல்கிறாயா, சூ? 201 00:12:38,634 --> 00:12:40,469 -சார் பூப்சலாட் என சொல்லலாமா? -சரியாக இருக்கும். 202 00:12:40,552 --> 00:12:42,763 நாங்கள் கவனிக்கிறோம். இந்த குட்டிக்கு என்ன பெயர்? 203 00:12:43,347 --> 00:12:48,310 சரி, நானும் ஆஸ்டினும்... 204 00:12:51,688 --> 00:12:53,607 -என்ன... -இல்லை, சொல்லு. சொல்லு. 205 00:12:53,690 --> 00:12:55,526 -யார் வந்திருக்கிறார்கள்? -யாரோ வந்திருக்கிறார்கள். 206 00:12:57,194 --> 00:12:58,570 வருகிறேன்! 207 00:13:05,285 --> 00:13:06,495 அடக் கடவுளே, 208 00:13:06,578 --> 00:13:09,915 நான் பார்க்கும் இந்த மிக அழகான மனிதர் யார்? 209 00:13:09,998 --> 00:13:12,417 என் பெயர் கர்னல் தாமஸ் வென்ட்வெர்த் ஹிக்கின்சன். 210 00:13:12,501 --> 00:13:14,753 சிறந்த கவிஞரான எமிலி டிக்கின்சனைப் பார்க்க வந்திருக்கிறேன். 211 00:13:23,136 --> 00:13:24,680 -அது என்ன? -...வேறு காலத்தின் பெயர். 212 00:13:24,763 --> 00:13:26,807 எமிலியைப் பார்க்க ஒருவர் வந்திருக்கிறார். 213 00:13:26,890 --> 00:13:28,016 எமிலியையா? யார் அது? 214 00:13:28,100 --> 00:13:31,770 படைவீரர், உயர் அதிகாரி, மிக அழகான மனிதர். 215 00:13:31,854 --> 00:13:36,900 அவரது பெயர் வின்ட்விக் ஹான்ஸ்வெர்த் டம்ப்டன் பாப்கார்ன். 216 00:13:36,984 --> 00:13:40,070 -மேகி, உனக்கு வலிப்பு வந்துவிட்டதா? -மெதுவாக சொல்லு, மேகி. 217 00:13:40,153 --> 00:13:42,739 ஹெம்ஸ்வெர்த் விகில்ஸ்டன் டென்டர்ஹுக்ஸ். 218 00:13:42,823 --> 00:13:43,824 என்ன? 219 00:13:46,326 --> 00:13:48,328 கர்னல் தாமஸ் வென்ட்வெர்த் ஹிக்கின்சன். 220 00:13:49,329 --> 00:13:52,165 உங்கள் மகள், எமிலி டிக்கின்சன்... 221 00:13:55,252 --> 00:13:56,670 நான் கண்ணால் பார்க்காத கடித நண்பர். 222 00:13:56,753 --> 00:13:59,631 கடித நண்பரா? வந்து... 223 00:13:59,715 --> 00:14:01,842 -உங்களுக்கு கடிதம் எழுதினாளா? -ஆமாம். 224 00:14:02,426 --> 00:14:04,887 பல கடிதங்கள் மற்றும் கவிதைகள். 225 00:14:05,721 --> 00:14:07,264 அசாதாரணமான கவிதைகள். 226 00:14:07,764 --> 00:14:13,228 போரின் தாக்கத்திலிருந்த எனக்கு எமிலியின் வார்த்தைகள், 227 00:14:13,812 --> 00:14:17,608 மனதுக்கு ஆறுதலாகவும், தேவையானதாகவும் இருந்தன. 228 00:14:18,483 --> 00:14:22,779 நான் தான் போர்க்களத்தில் இருந்தேன், ஆனால் எப்படியோ, 229 00:14:22,863 --> 00:14:26,116 அந்த அனுபவத்தை அவள் சிறப்பாக விவரித்தாள். 230 00:14:28,076 --> 00:14:32,789 போர்க்களத்திலிருந்து இவ்வளவு தொலைவில் இருக்கும் ஒரு பெண்ணால் 231 00:14:32,873 --> 00:14:35,667 எப்படி அங்கே இருக்கும் கடினமான, பயங்கரமான உண்மைகளை பேச முடிகிறது? 232 00:14:38,462 --> 00:14:40,214 நானே வந்து அவளையும், அவளது வீட்டையும் பார்த்து, 233 00:14:40,297 --> 00:14:42,591 அவளது குடும்பத்தையும் சந்திக்க விரும்பினேன். 234 00:14:44,009 --> 00:14:46,637 அவள் ஒரு மேதை என்று எப்போது புரிந்துகொண்டீர்கள்? 235 00:14:49,765 --> 00:14:53,560 இந்த ஆடையை நான் வாழ்நாள் முழுவதும் அணிந்து கொண்டிருப்பேன். 236 00:14:53,644 --> 00:14:56,396 சுய நினைவு இருக்கும் வரை அணிந்துகொள்வேன். 237 00:14:56,480 --> 00:14:59,233 சரி, கீழே புரளும் ஆடை உனக்கு வேண்டாம். 238 00:14:59,316 --> 00:15:01,568 சுயநினைவு சகதி போன்றது. 239 00:15:01,652 --> 00:15:03,445 ஆமாம். அது... சரிதான்! 240 00:15:03,529 --> 00:15:06,782 அனுபவத்தின் எல்லா பரிமாணங்களுக்கும் நான் போவதால் 241 00:15:06,865 --> 00:15:08,867 அது சுலபமாக துவைக்க கூடியதாக இருக்க வேண்டும். 242 00:15:08,951 --> 00:15:12,079 அப்படியென்றால் அது வெள்ளை நிறமாக இருக்க வேண்டும். வெள்ளை நிறத்தை துவைப்பதற்கு சுலபம். 243 00:15:12,162 --> 00:15:13,622 வெள்ளை நிற ஆடையா? 244 00:15:13,705 --> 00:15:17,584 ஆமாம். வெளிர் நிறமாக, வசந்த காலத்தில் மட்டும் இருக்கும் வெளிர் நிறத்தில் வேண்டும். 245 00:15:18,168 --> 00:15:22,005 அருமை. எப்படி வடிவமைக்கலாம்? 246 00:15:22,089 --> 00:15:24,758 கயிறுகள், கொக்கிகள், பட்டன்கள் வேண்டுமா? 247 00:15:24,842 --> 00:15:26,927 நிறைய பட்டன்கள் இருந்தால், அதைப் போட்டுக் கொள்ள உதவி தேவைப்படும். 248 00:15:27,010 --> 00:15:29,012 சரி, முன் பக்கம் முழுவதும் பட்டன்கள் இருந்தால் எப்படி இருக்கும்? 249 00:15:29,096 --> 00:15:31,348 அப்படியென்றால், அதை நீயே போட்டுக் கொள்ளலாம். 250 00:15:31,431 --> 00:15:33,267 -முன்பக்கம் பட்டன்கள் இருக்கும் ஆடையா? -அது வித்தியாசமானது. 251 00:15:33,350 --> 00:15:34,476 அது புதுமையானது! 252 00:15:34,560 --> 00:15:37,896 -முன் பக்கம் முழுவதும் பட்டன்கள். -சிறப்பு. 253 00:15:37,980 --> 00:15:40,482 இப்போது, வடிவத்தைப் பற்றி பேசலாம். 254 00:15:41,149 --> 00:15:44,862 இதைத்தான் நாம் நன்றாக அமைக்க வேண்டும். 255 00:15:44,945 --> 00:15:47,281 சலசலப்பு, பெட்டிகோட், வளையம் வேண்டுமா? 256 00:15:47,364 --> 00:15:50,158 இல்லை, வேண்டாம். எனக்கு சீராக இருக்க வேண்டும். 257 00:15:50,242 --> 00:15:51,785 என்னவெல்லாம் வேண்டாம் என சொல்கிறேன். 258 00:15:52,786 --> 00:15:54,329 -இது. -கோர்செட் வேண்டாமா? 259 00:15:54,413 --> 00:15:58,417 எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சௌகரியமாக வாழ இந்த ஆடை உதவ வேண்டும். 260 00:15:58,500 --> 00:16:01,044 கோர்செட்டுகள் பலவற்றை கெடுத்துவிடும். ஐயோ. 261 00:16:01,128 --> 00:16:04,882 உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். நானும் கோர்செட் அணிய மாட்டேன். 262 00:16:04,965 --> 00:16:07,509 அடடா. உங்கள் வடிவம் அதை அணிந்தது போலவே இருக்கிறதே? 263 00:16:07,593 --> 00:16:11,305 ஆம் ஆனால் இல்லை. நான் எலாஸ்டிக் வைத்து வடிவம் பெறுவேன். 264 00:16:11,388 --> 00:16:13,223 -பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும்... -ஆமாம். 265 00:16:13,307 --> 00:16:17,853 ...அந்த எலாஸ்டிக் நான் குனியும் போதும், நிமிரும் போதும் மூச்சுவிட சௌகரியமாக இருக்கிறது. 266 00:16:17,936 --> 00:16:19,104 நீ அதை உபயோகப்படுத்துகிறாயா? 267 00:16:19,188 --> 00:16:23,233 தெரியவில்லை. எந்த வடிவமும் வேண்டாம். வடிவம் இல்லாத தன்மை. 268 00:16:23,317 --> 00:16:26,737 மூச்சு விடுவதற்கு நிறைய இடம் இருக்கும், எமிலி டிக்கின்சன், ஆனால் பரவாயில்லை. 269 00:16:26,820 --> 00:16:30,782 கோர்செட் வேண்டாம், எலாஸ்டிக் வேண்டாம், வேலை செய்வதற்கு ஒரு சீருடை. 270 00:16:30,866 --> 00:16:33,952 இது உபயோகத்தைப் பற்றிய கேள்வி எழுப்புகிறது. 271 00:16:34,036 --> 00:16:37,331 -சொல்லுங்கள். -உன் வேலைக்கு தேவையான கருவிகள் என்ன? 272 00:16:37,414 --> 00:16:40,250 உதாரணமாக, என்னிடம் கத்திரிக்கோல் இருக்கிறது, திம்பிள் இருக்கிறது... 273 00:16:40,334 --> 00:16:42,669 எனக்கு ஒரு பென்சிலும், சில காகித துண்டுகளும் இருந்தால் போதும். 274 00:16:42,753 --> 00:16:43,754 சரி. 275 00:16:44,338 --> 00:16:46,924 திடீர் என்று யோசனை தோன்றும் போது, குறிப்பு எடுத்துக் கொள்வதற்காக, 276 00:16:47,007 --> 00:16:48,967 அவற்றை நீ உன்னோடு வைத்திருப்பாய் இல்லையா? 277 00:16:49,551 --> 00:16:50,719 சரியாகச் சொன்னீர்கள். 278 00:16:50,802 --> 00:16:53,931 அப்படியென்றால், கண்டிப்பாக உனக்கு சில... 279 00:16:54,014 --> 00:16:56,391 -பாக்கெட்டுகள். -...பாக்கெட்டுகள் தேவைப்படும். 280 00:16:58,477 --> 00:17:00,437 உன்னைப் பார்க்க ஒருவர் வந்திருக்கிறார், எமிலி. 281 00:17:00,521 --> 00:17:02,105 -உட்காருங்கள்... -ஒரு விருந்தாளி. 282 00:17:02,189 --> 00:17:03,565 விருந்தாளியா? யார்? 283 00:17:04,566 --> 00:17:06,359 கர்னல் வாட்ஸ்வெர்த் பென்ட்லீ டிட்லிவிங்ஸ். 284 00:17:06,944 --> 00:17:09,488 கர்னல் தாமஸ் வென்ட்வெர்த் ஹிக்கின்சனா? 285 00:17:09,570 --> 00:17:10,948 ஆமாம். நானும் அதைத்தான் சொன்னேன். 286 00:17:11,531 --> 00:17:13,325 அவர் வந்திருக்கிறாரா? நம் வீட்டிற்கு? 287 00:17:13,407 --> 00:17:15,618 கீழே உன் குடும்பத்தோடு உனக்காக காத்திருக்கிறார். 288 00:17:15,702 --> 00:17:16,703 அட, கடவுளே. 289 00:17:16,787 --> 00:17:19,330 அவர் இங்கே ஏன் வந்தார்? நேராக சந்திக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லையே? 290 00:17:19,414 --> 00:17:20,832 கடிதங்கள் மூலமாகத்தான் நாங்கள் பேசினோம். 291 00:17:20,915 --> 00:17:23,292 உன் சுயரூபம் அவருக்கு பிடிக்காதோ என வருந்துகிறாயா? 292 00:17:23,377 --> 00:17:27,714 என்ன நினைக்கப் போகிறார் என்று தெரியவில்லை. என்னையே தாழ்த்தி நான் விவரித்துக் கொண்டேன். 293 00:17:27,798 --> 00:17:29,800 சிட்டுக்குருவி போல சிறியவள் என்றும், 294 00:17:29,883 --> 00:17:32,177 என்னுடைய தலைமுடி வெளிர் நிறமுடையது என்றும் சொன்னேன். 295 00:17:32,261 --> 00:17:35,138 அப்படியா. நீ அவரை ஏமாற்றினாயா? 296 00:17:35,639 --> 00:17:37,808 என்னால் கீழே வர முடியாது. இல்லை, நாம் வந்து... 297 00:17:37,891 --> 00:17:40,394 ஏதாவது காரணம் சொல்ல வேண்டும். அவரிடம்... 298 00:17:40,477 --> 00:17:43,105 நான் பொருத்தமான ஆடை அணியவில்லை என்று அவரிடம் சொல். 299 00:17:43,188 --> 00:17:45,274 பெட்டி என்னுடைய அளவுகளை எடுத்து கொண்டிருக்கிறாள் என சொல். 300 00:17:45,357 --> 00:17:47,025 அவர் இன்னொரு நாள் வர வேண்டும் என்றும் சொல். 301 00:17:48,068 --> 00:17:50,153 சரி. அப்படியே சொல்கிறேன். 302 00:17:50,237 --> 00:17:52,823 அதற்கு முன்னால், எனக்குத் தெரிந்த வரை 303 00:17:52,906 --> 00:17:55,617 இவரைப் போன்ற அழகான ஆண் மகனை நான் இதுவரை பார்த்ததில்லை. 304 00:17:56,368 --> 00:18:00,664 எனக்கு கவலை இல்லை. நான் அவரை நேசிக்கவில்லை. என் கவிதைகள் பற்றிய கருத்துக்களை மட்டுமே கேட்டேன். 305 00:18:00,747 --> 00:18:03,625 அவரை சந்திக்க நான் தயாரில்லை. இன்னும் நெருக்கமாகவில்லை. 306 00:18:03,709 --> 00:18:05,711 நான் நிறைய எழுதவில்லை. அட, இப்போது தான் தொடங்குகிறேன். 307 00:18:05,794 --> 00:18:07,254 நான் தயாராவதற்கு பல வருடங்கள் ஆகும். 308 00:18:07,337 --> 00:18:10,257 நான் அவரோடு நெருங்கிப் பழகினால் உனக்கு ஆட்சேபனை இருக்காதா? 309 00:18:10,340 --> 00:18:12,843 மேகி, என்ன வேண்டுமானாலும் செய். அவரை அனுப்பி விடு. 310 00:18:12,926 --> 00:18:14,428 அவர் வந்ததையே என்னால் நம்ப முடியவில்லை. 311 00:18:14,511 --> 00:18:16,847 அடக் கடவுளே, சூ. சூ என்ன நினைப்பாள்? கோபப்படுவாளா? 312 00:18:16,930 --> 00:18:18,765 நீங்கள் டீ குடிப்பீர்களா, கர்னல்? 313 00:18:18,849 --> 00:18:21,727 மேலும், நெடுந்தூர பயணத்திற்கு பிறகு சோர்வாக இருப்பீர்கள். 314 00:18:21,810 --> 00:18:24,021 சாப்பிட வறுத்த கறி கொடுக்கவா? 315 00:18:24,104 --> 00:18:25,439 வேண்டாம். பரவாயில்லை. 316 00:18:25,522 --> 00:18:26,773 நான் சைவம் தான் சாப்பிடுவேன். 317 00:18:26,857 --> 00:18:28,108 மிகவும் நன்னெறியுடையவர். 318 00:18:28,692 --> 00:18:32,279 சரி, உங்களுக்கு காய்கறி கொண்டு வருகிறேன். இதோ வந்துவிடுகிறேன். 319 00:18:33,113 --> 00:18:35,490 உங்கள் ஜாக்கெட்டை கழட்டுகிறீர்களா, கர்னல்? 320 00:18:35,574 --> 00:18:38,202 உள்நாட்டுப் போரின் தூசி எல்லா இடத்திலும் விழுகிறது. 321 00:18:38,744 --> 00:18:41,580 நான் உங்களிடம் பேசலாமா, செல்லப் பாட்டி? 322 00:18:47,336 --> 00:18:49,588 நான் சொல்வதை நன்றாக கேளுங்கள். 323 00:18:49,671 --> 00:18:52,382 அங்கே இருக்கும் நபர் மிகவும் முக்கியமானவர். 324 00:18:52,466 --> 00:18:55,260 அவர் ஒரு எழுத்தாளர், சிந்தனைவாதி, புரட்சியாளர், 325 00:18:55,344 --> 00:18:58,555 மற்றும் அவர் எமிலியின் கவிதைகளை ரசிப்பதால், இவ்வளவு தூரம் வந்திருக்கிறார். 326 00:18:58,639 --> 00:19:02,976 உங்களுக்கு புரியவில்லையா? ஒரு நாள் அவர் எமிலியின் பெருமைக்கு காரணமாகக்கூடும். 327 00:19:03,560 --> 00:19:05,896 அவருக்கு நம்முடைய அழகான பாத்திரங்களில், 328 00:19:05,979 --> 00:19:09,858 டீ கொடுக்கப் போகிறோம். 329 00:19:09,942 --> 00:19:11,401 அவர் காபி கேட்டால், 330 00:19:11,485 --> 00:19:14,780 “த ஃப்ரூகல் ஹவுஸ்வஃப்” புத்தகத்தில் சொல்வது போல் இனிப்பு வெண்ணை மற்றும் முழு முட்டைகளுடன் 331 00:19:14,863 --> 00:19:17,533 காபி கொடுக்கப் போகிறோம். நான் சொல்வது புரிகிறதா? 332 00:19:18,367 --> 00:19:22,287 சூசன் கில்பெர்ட், நீ மிகவும் அற்புதமானவள். 333 00:19:22,371 --> 00:19:23,747 ஒன்றும் பிரச்சினை இல்லையே? 334 00:19:23,830 --> 00:19:27,793 இல்லை, நாங்கள் கர்னல் ஹிக்கின்சனிற்காக டீ தயாரிக்கிறோம். 335 00:19:28,836 --> 00:19:30,045 எமிலி எங்கே? 336 00:19:30,128 --> 00:19:32,297 சிறு பிரச்சினை. 337 00:19:33,048 --> 00:19:34,174 அவள் கீழே வர மறுக்கிறாள். 338 00:19:35,843 --> 00:19:37,928 -சீக்கிரம் கீழே வந்துவிடுவாள். -ரொம்பவும் அவமரியாதை. 339 00:19:38,011 --> 00:19:41,139 அவளுக்கு நன்னடத்தையை சொல்லிக் கொடுத்தேன், ஆனால் ஒரு அப்பாவின் கடமை முடிவதில்லை. 340 00:19:41,223 --> 00:19:43,267 அப்படி இல்லை. அவள் எழுதுவதில் பிஸியாக இருக்கலாம். 341 00:19:43,350 --> 00:19:47,604 அவள் ஆழமாக யோசித்து கொண்டிருக்கும் போது, நேரத்தை மறந்து விடுவாள் போலும். 342 00:19:47,688 --> 00:19:50,691 கொஞ்சம் சர்க்கரை க்ரீம் போடலாமா, கர்னல்? 343 00:19:50,774 --> 00:19:52,317 நீங்கள் சொன்னால் மட்டும் போதும். 344 00:19:52,401 --> 00:19:53,819 வேண்டாம். நான் அப்படியே குடிப்பேன். 345 00:19:55,404 --> 00:19:57,614 இந்தக் கவிஞரின் குடும்பத்தை சந்திப்பதில் பெருமைப்படுகிறேன். 346 00:19:58,991 --> 00:20:01,034 எனக்கு எமிலி பற்றி சொல்லுங்கள். அவள் எப்படிப்பட்டவள்? 347 00:20:01,118 --> 00:20:02,536 சிறிய விஷயமாக இருந்தாலும், சொல்லுங்கள். 348 00:20:02,619 --> 00:20:07,207 உண்மையில், சில நேரங்களில், எளிமையாக வாழ்பவர்கள் சிறப்பானவற்றை செய்வார்கள். 349 00:20:08,876 --> 00:20:10,085 சரி... 350 00:20:10,836 --> 00:20:13,839 எமிலி தனித்துவமானவள். 351 00:20:13,922 --> 00:20:18,510 -அவள் சற்று மாறுபட்டவள். -அவளுக்கு தைக்க, சமைக்க, சுத்தப்படுத்த தெரியாது. 352 00:20:18,594 --> 00:20:21,597 -ஆனால், சிறப்பாக சமைப்பாள். -அவளுக்கு பூக்கள் மிகவும் பிடிக்கும். 353 00:20:21,680 --> 00:20:23,473 அவள் தேனீக்களிடம் பேசுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். 354 00:20:23,557 --> 00:20:25,058 ஆமாம், அந்த தேனீக்கு என்ன ஆயிற்று? 355 00:20:25,142 --> 00:20:27,978 ரொம்பவும் கூர்மையாக கவனித்தால், அவள் ஒரு தனித்துவமான பெண். 356 00:20:28,061 --> 00:20:30,647 அட, ஆமாம். இந்த குடும்பத்தின் ஒரே பைத்தியக்காரி. 357 00:20:31,440 --> 00:20:32,941 நான் அப்படி நினைக்கவில்லை. 358 00:20:33,817 --> 00:20:35,903 -பைத்தியக்காரியா? -அட, ஆமாம். 359 00:20:35,986 --> 00:20:39,531 அதாவது, மற்றவர்கள் எல்லோரும் சாதாரணமானவர்கள். 360 00:20:39,615 --> 00:20:42,451 போரில் இருக்கும் ஒரு நாடு. 361 00:20:42,534 --> 00:20:45,579 பிளவுபட்டு, ஆண்கள் இறக்கிறார்கள். 362 00:20:45,662 --> 00:20:49,082 இது தனிமைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு பற்றிய கூற்று. 363 00:20:49,708 --> 00:20:52,211 நான் ஒரு பெண். 364 00:20:52,294 --> 00:20:53,587 ஆண்கள் இறக்கிறார்கள்! 365 00:20:55,088 --> 00:20:57,549 நம் எல்லோரையும் போல, 366 00:20:58,217 --> 00:21:01,803 வாழ்க்கையின் பிரச்சினைகளில் சிக்கி, 367 00:21:02,471 --> 00:21:04,723 நானும் இறக்கிறேன். 368 00:21:06,558 --> 00:21:07,851 நீங்கள் என்னுடைய அப்பா தானே? 369 00:21:07,935 --> 00:21:09,978 நான்தான் உன்... நான்தான் அவளுடைய அப்பா. 370 00:21:10,062 --> 00:21:13,023 ஒரு டிக்கின்சனாக மாட்டிக் கொண்டிருக்கிறேன். 371 00:21:13,106 --> 00:21:15,025 இவள் எமிலி இல்லை. 372 00:21:15,108 --> 00:21:16,485 இல்லை... 373 00:21:16,568 --> 00:21:18,445 அது வந்து... 374 00:21:20,822 --> 00:21:22,991 ஆமாம். இது வேலை செய்யும். 375 00:21:23,784 --> 00:21:24,785 அவ்வளவு தான். 376 00:21:26,453 --> 00:21:28,830 புது வகையான கவிதைக்கு... 377 00:21:29,957 --> 00:21:31,583 புது வகையான ஆடை. 378 00:21:34,294 --> 00:21:36,463 இதை உனக்காக நான் தைக்க வேண்டாமா? 379 00:21:36,547 --> 00:21:39,550 -அதற்கு சில வாரங்கள் ஆகும். -வேண்டாம். நானே தைக்க வேண்டும். 380 00:21:41,885 --> 00:21:44,638 இன்று என் கனவை நனவாக்க உதவி செய்ததற்கு நன்றி, பெட்டி. 381 00:21:49,852 --> 00:21:51,311 உன் குடும்பத்திடம் நான் என்ன சொல்வது? 382 00:21:52,479 --> 00:21:54,064 என்னால் கீழே வர முடியாது என சொல்லுங்கள். 383 00:21:56,733 --> 00:21:58,151 நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்... 384 00:21:59,319 --> 00:22:00,320 என்று அவர்களிடம் சொல்லுங்கள். 385 00:22:12,749 --> 00:22:14,042 என்ன தெரியுமா? 386 00:22:16,211 --> 00:22:19,923 இந்த உலகத்தை மாற்ற முடியாவிட்டாலும்... 387 00:22:22,050 --> 00:22:23,594 நான் தொடர்ந்து எழுதப் போகிறேன். 388 00:22:26,180 --> 00:22:28,265 யாரும் அக்கறை காட்டவில்லை என்றாலும். 389 00:22:30,726 --> 00:22:33,604 எமிலி டிக்கின்சன் என்ற பெயர் கொண்ட ஒரு நபர் 390 00:22:35,647 --> 00:22:40,152 ஒவ்வொரு நாளும், இந்த சிறு அறையில்... 391 00:22:42,196 --> 00:22:43,488 உட்கார்ந்துக் கொண்டு... 392 00:22:47,159 --> 00:22:48,702 தான் உணர்ந்தவற்றை... 393 00:22:50,996 --> 00:22:53,665 எழுதிக் கொண்டே இருந்தாள் என்பது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாவிட்டாலும் கூட. 394 00:22:58,504 --> 00:22:59,755 டீ நன்றாக இருக்கிறது. 395 00:22:59,838 --> 00:23:01,715 ஹாய். என் பெயர் வின்னி. 396 00:23:02,216 --> 00:23:03,884 தாமஸ் வென்ட்வெர்த் ஹிக்கின்சன். 397 00:23:04,927 --> 00:23:06,386 என்னை வென்ட்வெர்த் என அழையுங்கள். 398 00:23:07,179 --> 00:23:08,430 நிச்சயமாக. 399 00:23:08,514 --> 00:23:09,973 கையை எடு. அவர் என்னுடையவர். 400 00:23:10,682 --> 00:23:13,018 -லவினியா இங்கே வந்திருப்பதால்… -ஆசை வந்துவிட்டது. 401 00:23:13,101 --> 00:23:15,187 ...நம்முடைய விஷயத்தை சொல்லலாமா? 402 00:23:15,812 --> 00:23:19,066 நீ வருவதற்கு முன்னால், நாங்கள் குழந்தையின் பெயரை அறிவிக்க இருந்தோம். 403 00:23:19,149 --> 00:23:20,567 ஒரு வழியாக பெயரை தேர்ந்தெடுத்துவிட்டீர்கள். 404 00:23:20,651 --> 00:23:22,945 அதிக நேரம் எடுத்துக் கொண்டார்கள். குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் ஆகிறது. 405 00:23:23,028 --> 00:23:24,821 சரி, அதைச் சொல்லுங்கள்! 406 00:23:24,905 --> 00:23:28,283 -ஆருமை! யார் சொல்ல போகிறீர்கள்? -உண்மையில், குழந்தையே சொல்லப் போகிறது. 407 00:23:28,367 --> 00:23:30,035 -அப்படித்தானே, சூ? -ஆமாம். 408 00:23:31,495 --> 00:23:33,580 அவன் ஒரு கடிதம் எழுதியிருக்கிறான். 409 00:23:33,664 --> 00:23:36,834 அடடா, அவன் கடிதம் எழுதுபவன். தன்னுடைய அத்தையைப் போல. 410 00:23:36,917 --> 00:23:39,628 இது... உங்களுக்கு எழுதப்பட்டிருக்கிறது, திரு. டிக்கின்சன். 411 00:23:40,212 --> 00:23:42,339 -நான் அதை படிக்கவா? -கண்டிப்பாக. 412 00:23:42,422 --> 00:23:44,049 அந்த குரலில் படிக்க மறக்காதே. 413 00:23:45,092 --> 00:23:46,218 குரல் இருக்கிறதா? 414 00:23:49,096 --> 00:23:51,431 “அன்புள்ள தாத்தா... 415 00:23:53,058 --> 00:23:57,229 இந்த உலகில் நான் பல நாட்களாக இருக்கிறேன் 416 00:23:57,312 --> 00:23:59,773 ஆனால் இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.” 417 00:23:59,857 --> 00:24:01,567 ஆமாம். எமிலி தான் பைத்தியக்காரத்தனமானவள். 418 00:24:01,650 --> 00:24:05,028 “உங்கள் பெயர் அழகானது என்று என் அம்மா சொல்கிறார், 419 00:24:05,112 --> 00:24:09,241 அதே போல் எனக்கும் வைக்கலாமா என்று உங்களைக் கேட்கிறேன். 420 00:24:09,825 --> 00:24:13,370 இவ்வளவு சிறிய மனிதனுக்கு, உங்களைப் போன்ற பெரிய மனிதரின் பெயரை வைப்பதில் 421 00:24:14,079 --> 00:24:19,042 உங்களுக்கும் சம்மதம் என்றால்... என்னிடம் சொல்லுங்கள்.” 422 00:24:21,670 --> 00:24:24,381 குழந்தைக்கு உங்கள் பெயரான எட்வேர்ட் வைக்கிறோம். 423 00:24:24,464 --> 00:24:26,925 அதாவது, நீங்கள் அனுமதித்தால். 424 00:24:27,009 --> 00:24:29,887 என் நீண்ட வாழ்க்கையின் மிகப்பெரிய கௌரவம் இது. 425 00:24:29,970 --> 00:24:32,890 ஓ, எட்வேர்ட். குழந்தை எட்வேர்ட். 426 00:24:32,973 --> 00:24:35,767 -அவனை நெட் என்று அழைக்கப் போகிறோம். -குழந்தை நெட். 427 00:24:35,851 --> 00:24:37,311 இது மிக அழகானது. 428 00:24:40,439 --> 00:24:43,734 -குழந்தைக்கு பெயர் வைத்துவிட்டாய். -பெட்டி, நீ இன்னும் இங்கிருக்கிறாய் என தெரியாது. 429 00:24:43,817 --> 00:24:45,861 எமிலிக்கு புது ஆடை தைக்க உதவுகிறேன். 430 00:24:45,944 --> 00:24:47,112 இப்போது கிளம்புகிறேன். 431 00:24:47,696 --> 00:24:48,906 உனக்கு என் பாராட்டுக்கள். 432 00:24:48,989 --> 00:24:50,157 நன்றி. 433 00:24:50,240 --> 00:24:51,533 என் பேரனுக்கு, 434 00:24:51,617 --> 00:24:54,453 கிறிஸ்தவ பெயர் வைக்கப்பட்டுள்ளதால் ஞாயிறுகளில் அணியும் நிறைய உடைகள் தைக்க 435 00:24:54,536 --> 00:24:56,496 நான் ஆர்டர் கொடுக்க தயாராக இருக்கிறேன். 436 00:24:56,580 --> 00:24:59,541 குழந்தை நெட்டை தேவாலயத்திற்கு அழைத்துச் சென்று 437 00:24:59,625 --> 00:25:01,710 மற்ற பாட்டிகளை பொறாமைப்பட வைக்க தயாராக இருக்கிறேன். 438 00:25:01,793 --> 00:25:03,795 இதைத்தான் மதம் சொல்லிக் கொடுக்கிறது. 439 00:25:05,506 --> 00:25:06,548 பை. 440 00:25:06,632 --> 00:25:08,800 அவள் தான் பெட்டி. எங்கள் ஆடைகளை தைத்துக் கொடுப்பவள். 441 00:25:08,884 --> 00:25:12,221 ஆமாம். அம்ஹெர்ஸ்டிலேயே மிகச் சிறந்த தையல்காரி. 442 00:25:12,930 --> 00:25:14,223 நான் இதோ வந்துவிடுகிறேன். 443 00:25:17,100 --> 00:25:18,310 அந்த சீருடை அழகாக உள்ளது. 444 00:25:20,646 --> 00:25:22,147 அவருக்கு நம்மை பிடித்திருக்கிறது. 445 00:25:22,231 --> 00:25:24,149 எமிலி கீழே வருவாளா? 446 00:25:24,233 --> 00:25:25,526 மன்னிக்கவும், பெட்டி. 447 00:25:26,235 --> 00:25:27,236 நீங்கள் பெட்டி தானே? 448 00:25:27,819 --> 00:25:30,531 என்ன? நீங்கள் யார்? 449 00:25:31,406 --> 00:25:32,741 மன்னியுங்கள், மேடம். 450 00:25:34,117 --> 00:25:36,161 என் பெயர் கர்னல் தாமஸ் வென்ட்வெர்த் ஹிக்கின்சன். 451 00:25:36,745 --> 00:25:38,747 முதலாம் தெற்கு கரோலினா தன்னார்வலர்கள் என்ற 452 00:25:38,830 --> 00:25:40,916 முதல் கருப்பின யூனியன் வீரர்கள் படைப்பிரிவில் பணியாற்றிய 453 00:25:41,500 --> 00:25:43,460 கௌரவம் எனக்கு உண்டு. 454 00:25:43,544 --> 00:25:44,753 உங்களுக்கு அது பற்றி தெரிந்திருக்கலாம். 455 00:25:45,712 --> 00:25:46,880 நீங்கள் ஹென்ரியோடு போரிட்டீர்களா? 456 00:25:46,964 --> 00:25:48,340 இல்லை. 457 00:25:48,423 --> 00:25:51,510 இல்லை, அவரும், அவரது அணியினரும் சொந்தமாக போரிட்டார்கள். 458 00:25:52,094 --> 00:25:56,265 ஆயுதங்களை எடுத்துக்கொண்டு ஓடிச் சென்று எதிரிகளை சந்தித்தார்கள். 459 00:25:56,348 --> 00:25:57,808 அது மிகவும் தைரியமான விஷயம். 460 00:25:58,600 --> 00:26:03,647 சண்டை நடந்தது... சிறு சண்டை என்றாலும் ரொம்பவே ஆக்ரோஷமானது. 461 00:26:03,730 --> 00:26:07,234 கூட்டமைப்பாளர் படை, பியூஃபோர்டிற்கு அணிவகுத்துச் சென்றனர், 462 00:26:07,317 --> 00:26:10,779 அப்போது தெற்கு கரோலினா தன்னார்வலர்கள் அவர்களை வழிமறித்து... தாக்கினார்கள். 463 00:26:11,989 --> 00:26:15,284 அவர்களுள் ஹென்ரியும் ஒருத்தர். 464 00:26:15,868 --> 00:26:17,494 அவர்... அவர்... 465 00:26:18,078 --> 00:26:19,872 ஹென்ரி உயிரோடு இருக்கிறார். அவர்... 466 00:26:21,039 --> 00:26:22,124 உயிரோடு தான் இருக்கிறார். 467 00:26:25,586 --> 00:26:28,922 இனிமையான விஷயம்... காற்றினிலே... கேட்கிறது... 468 00:26:29,006 --> 00:26:30,716 புயல் மோசமாக இருக்கிறது... 469 00:26:30,799 --> 00:26:32,926 அந்த சிறு பறவையை தாக்கக்கூடும் 470 00:26:33,010 --> 00:26:34,636 அது பலரை கதகதப்பாக வைத்தது... 471 00:26:34,720 --> 00:26:36,096 நான் நம்பிக்கை இழந்துவிட்டேன். 472 00:26:38,223 --> 00:26:39,308 அப்புறம்... 473 00:26:42,603 --> 00:26:43,812 உங்களுக்காக இதை கொண்டு வந்தேன். 474 00:26:55,032 --> 00:26:56,283 ஹென்ரியின் கடிதங்கள். 475 00:26:57,743 --> 00:26:59,161 கடைசியில் சேர்த்து விட்டேன். 476 00:26:59,244 --> 00:27:03,624 சிறப்பான எழுத்து தன்னுடைய ரசிகர்களை சென்று அடைந்து விடும் என்று நான் எப்போதுமே சொல்வேன். 477 00:27:09,922 --> 00:27:11,215 மேடம். 478 00:27:28,148 --> 00:27:30,442 அவள் இன்னும் கீழே வராதது பற்றி வருந்துகிறேன், கர்னல். 479 00:27:31,151 --> 00:27:32,528 பரவாயில்லை. 480 00:27:34,279 --> 00:27:35,864 எவ்வளவு நேரமானாலும் காத்திருக்கிறேன். 481 00:27:38,033 --> 00:27:40,494 எமிலி போன்ற கவிஞருக்காக ஓரிரு மணி நேரம் காத்திருக்க முடியாதா என்ன? 482 00:27:42,329 --> 00:27:44,998 அவளைப் புரிந்துகொள்ள மக்கள் பல நூற்றாண்டுகள் கூட காத்திருக்கக்கூடும். 483 00:27:46,542 --> 00:27:50,796 பழைய ஐரிஷ் போர்களில், அந்த குழுக்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள் 484 00:27:50,879 --> 00:27:52,548 என்று சொல்லப்படும். 485 00:27:53,924 --> 00:27:56,468 போர் எவ்வளவு மோசமாக ஆனாலும், 486 00:27:57,511 --> 00:27:59,471 எவ்வளவு பேர் கொல்லப்பட்டாலும், 487 00:28:01,974 --> 00:28:04,268 கவிஞர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான் அது. 488 00:28:05,769 --> 00:28:07,729 “கவிஞர்களை கொல்லாதீர்கள்” என்று சொல்வார்கள், 489 00:28:08,480 --> 00:28:11,859 ஏனென்றால் கதையை சொல்வதற்கு கவிஞர்கள் தேவைப்பட்டார்கள். 490 00:28:16,738 --> 00:28:21,034 இவர் ஒரு கவிஞர்... அது தான் உண்மை... 491 00:28:23,120 --> 00:28:25,247 சாதாரண அர்த்தங்களை 492 00:28:26,206 --> 00:28:27,958 அற்புதமானவை ஆக்குவார்... 493 00:28:30,502 --> 00:28:32,880 அதிக வாசனை உடைய 494 00:28:40,345 --> 00:28:42,806 வசந்தகால பறவை போல 495 00:28:50,689 --> 00:28:53,275 சூரியன்... இப்பொழுது தான் உதித்தது... 496 00:29:00,407 --> 00:29:02,910 கோடை காலத்தின் இறுதி மகிழ்ச்சி... 497 00:29:10,417 --> 00:29:13,462 என் தொப்பி அணிந்து... மேலாடை அணிந்து கொண்டு... 498 00:29:22,763 --> 00:29:24,932 இலையுதிர் காலம்... என் பின்னலை எதிர்நோக்கியது... 499 00:29:35,859 --> 00:29:38,153 ஒரு புத்தகம் போன்ற போர்க்கப்பல் 500 00:29:44,910 --> 00:29:46,870 குளிர்காலத்தில் என் அறையில் 501 00:30:19,361 --> 00:30:20,696 நான் சீக்கிரமாக எழுந்தேன்... 502 00:30:24,575 --> 00:30:25,617 என் நாயை அழைத்துக் கொண்டு... 503 00:30:28,787 --> 00:30:30,247 கடற்கரைக்குப் போனேன்... 504 00:31:19,963 --> 00:31:24,384 எமிலி. வா, எமிலி! எமிலி... 505 00:31:27,888 --> 00:31:31,767 அடித்தளத்தில் இருந்த கடற்கன்னிகள் என்னைப் பார்க்க வந்தார்கள்... 506 00:31:33,018 --> 00:31:34,394 வா, எமிலி. வா. 507 00:32:21,191 --> 00:32:22,526 எனக்காக காத்திருங்கள். 508 00:32:24,069 --> 00:32:25,529 நான் வருகிறேன். 509 00:33:33,722 --> 00:33:35,724 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்