1 00:00:14,640 --> 00:00:18,310 மாசசூசெட்ஸ் சட்ட வல்லுனர்கள் சங்கம் உன் பேச்சை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது. 2 00:00:18,393 --> 00:00:20,187 நீ வருகிறாயா என்பதை என்னிடம் மும்முறை உறுதிப்படுத்திக் கொண்டனர். 3 00:00:20,270 --> 00:00:24,358 மன்னித்துவிடு, நான் என் குடும்ப விஷயமாகச் சற்று குழப்பத்தில் இருந்துவிட்டேன். 4 00:00:24,441 --> 00:00:28,237 இளைய ஸ்டர்ன்ஸ் அஞ்சலி நிகழ்வின் போது உன் குடும்பத்தினர் யாரும் பங்கு பெறாததற்கும் 5 00:00:28,320 --> 00:00:30,572 இதற்கும் தொடர்பில்லை அல்லவா? 6 00:00:30,656 --> 00:00:33,784 ஆமாம் என்று வருத்தத்துடன் சொல்கிறேன். என் மகன் வெறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டான், 7 00:00:33,867 --> 00:00:39,248 என் மனைவி படுத்தபடுக்கையாகி விட்டாள், இப்போது எமிலி கூட என் மீது கோபமாக இருக்கிறாள். 8 00:00:39,957 --> 00:00:43,460 எமிலி. சரி... அவளைக் கட்டுப்படுத்துவது எப்போதுமே கடினம் தான். 9 00:00:43,961 --> 00:00:46,588 கொஞ்சம் கட்டுப்பாட்டுக்குள் அடங்காத குழந்தை அவள். 10 00:00:46,672 --> 00:00:47,673 அப்படித்தான் நினைக்கிறேன். 11 00:00:47,756 --> 00:00:51,760 நாம் பாஸ்டன் போகும் வரை இதை ரகசியமாக வைத்திருக்கப் போகிறேன். 12 00:00:51,844 --> 00:00:54,888 ஆனால், உனக்காக சில நல்ல விஷயங்கள் காத்திருக்கின்றன. 13 00:00:54,972 --> 00:00:56,014 அது என்ன? 14 00:00:56,098 --> 00:00:57,224 எட்வர்ட் டிக்கின்சன், 15 00:00:57,307 --> 00:01:01,812 நீ இன்றிரவு சட்ட வல்லுனர்கள் சங்கத்தில் வெறும் உரை மட்டும் ஆற்றப் போவதில்லை. 16 00:01:01,895 --> 00:01:03,814 உண்மையில், மாசசூசெட்ஸ் குடியரசுக் கட்சித் தலைவர்கள் 17 00:01:03,897 --> 00:01:07,317 உன்னை வரவேற்கப் போகிறார்கள். 18 00:01:07,401 --> 00:01:12,322 அடுத்த லெப்டினன்ட் கவர்னருக்கான நியமனத்தை உனக்கு வழங்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். 19 00:01:12,406 --> 00:01:13,407 லெப்டினன்ட் கவர்னரா? 20 00:01:14,491 --> 00:01:16,535 -இது ஒரு கௌரவம். -நிச்சயமாக. 21 00:01:16,618 --> 00:01:19,037 குறுகிய மனப்பான்மை உடைய விக் கட்சியை விட்டு விலகி, 22 00:01:19,121 --> 00:01:22,541 உன்னை மீண்டும் அரசியலுக்குள் நுழைய வைப்பது எனக்கு மிகவும் உற்சாகமாக உள்ளது. 23 00:01:22,624 --> 00:01:25,919 யோசித்துப் பார், எட்வர்ட். நீ ஒரு குடியரசுக் கட்சியாளராக இருப்பாய். 24 00:01:26,003 --> 00:01:28,797 கடைசியில், வரலாற்றின் சரியான பக்கத்தில் இருப்பாய். 25 00:01:28,881 --> 00:01:30,632 என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. 26 00:01:31,216 --> 00:01:34,219 நீ இந்தப் பதவிக்கென்றே உருவானவன், எட்வர்ட். 27 00:01:34,303 --> 00:01:36,013 நீதான் அம்ஹெர்ஸ்டின் தூண், 28 00:01:36,096 --> 00:01:40,058 மாநிலத்தில் உள்ள நகரங்களில், அடிமை-ஒழிப்புக்கு சாத்தியமான நகரங்களில் இதுவும் ஒன்று. 29 00:01:40,142 --> 00:01:43,395 சட்டத்திற்கான கச்சிதமான, பாரம்பரிய அணுகுமுறை உன்னிடம் உள்ளது. 30 00:01:43,478 --> 00:01:47,691 என்னிடம் தகுதியும், திறமைகளும் இருந்தாலும், எனக்கு ஆசையில்லை. 31 00:01:48,567 --> 00:01:53,155 பாஸ்டனில் உள்ள குடியரசுக் கட்சியினருடன் அல்லாமல், அம்ஹெர்ஸ்டில் என் குடும்பத்தினரோடு இருக்க வேண்டும். 32 00:01:54,406 --> 00:01:56,158 தயவுசெய்து, கொஞ்சம் யோசித்துப் பாரேன்... 33 00:01:56,241 --> 00:01:58,952 என்னுடைய முடிவு தீர்மானமானது. 34 00:02:02,789 --> 00:02:04,791 -ஐயோ. -வண்டியை நிறுத்து! 35 00:02:06,502 --> 00:02:08,669 -என்ன இது? -நீ கீழே இறங்கு. 36 00:02:09,295 --> 00:02:11,590 இங்கேயா? நாம் பாஸ்டன் போகும் பாதி வழியில் இருக்கிறோம். 37 00:02:11,673 --> 00:02:13,509 சட்ட வல்லுனர்களின் சங்கக் கூட்டம் என்ன ஆயிற்று? 38 00:02:13,592 --> 00:02:16,512 -நீ என்னை ஏமாற்ற தவறியதே இல்லை, எட்வர்ட். -அட, கடவுளே. 39 00:02:16,595 --> 00:02:21,683 நீ, பழைய விக் கட்சியின் சகதியில் சிக்கிக் கொண்ட பிற்போக்குச் சிந்தனையாளனாகவே இருக்கிறாய். 40 00:02:21,767 --> 00:02:25,229 இந்த நாட்டின் தரம் முன்னேறிக்கொண்டு இருக்கிறது என்பதை உன்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. 41 00:02:25,312 --> 00:02:30,067 நீ இல்லாமல் அது முன்னேறிச் செல்ல வேண்டும் என்பது தான், நான் சொல்வதன் அர்த்தம். 42 00:02:30,150 --> 00:02:34,279 இப்பொழுதே கீழே இறங்கு! 43 00:02:38,617 --> 00:02:42,788 -எட்வர்ட் டிக்கின்சன், நீ ஒரு கோழை. -என்ன? 44 00:02:42,871 --> 00:02:45,290 ஆண்மையற்றவன். 45 00:02:45,374 --> 00:02:47,626 மற்றும் நீ ஒரு சுண்டெலி! 46 00:02:47,709 --> 00:02:49,837 -எப்படி? -புறப்படு, ஓட்டுனரே! 47 00:02:51,296 --> 00:02:52,297 கான்க்கீ. 48 00:02:56,093 --> 00:02:57,094 ஆமாம். 49 00:02:58,011 --> 00:02:59,805 சரி, நான் ஒரு சுண்டெலி தான். 50 00:03:01,682 --> 00:03:04,309 ஆனால் நான் என்னுடைய சிறிய சுண்டெலிக் குடும்பத்திடம் போக வேண்டும். 51 00:03:08,397 --> 00:03:10,315 டிக்கின்சன் 52 00:03:10,399 --> 00:03:12,359 துக்கம் ஒரு எலியைப் போல 53 00:03:27,916 --> 00:03:30,586 மோசமானதை அறிந்து கொள்ள இனி அச்சம் இல்லை... 54 00:03:31,628 --> 00:03:33,630 அவள் நம்மிடம் என்ன பேச விரும்புகிறாள் என தெரியவில்லை. 55 00:03:33,714 --> 00:03:35,841 எனக்கும் தெரியாது, ஆனால் இது அவசரம் என்று தோன்றுகிறது. 56 00:03:35,924 --> 00:03:38,135 உள்ளே ஒரு கேக் துண்டுடன் எனக்கு ஒரு பெட்டி கிடைத்தது. 57 00:03:38,218 --> 00:03:40,470 “இது அவசரம்” என்ற குறிப்பு அதன் மேல் எழுதப்பட்டு இருந்தது. 58 00:03:40,554 --> 00:03:42,472 ஆமாம், எனக்கும் ஒன்று வந்தது. 59 00:03:45,142 --> 00:03:46,143 அதோ இருக்கிறாள்! 60 00:03:46,810 --> 00:03:49,771 எமிலி, நீ எங்களைப் பார்க்க விரும்பினாயா? 61 00:03:50,772 --> 00:03:52,482 சகோதரனே, சகோதரியே. 62 00:03:53,317 --> 00:03:57,196 ஆமாம். நான் உங்களை அழைத்திருந்தேன். என் அழைப்பை ஏற்றதற்கு நன்றி. 63 00:03:57,279 --> 00:03:58,822 ஏன் இப்படி பேசுகிறாள்? 64 00:03:58,906 --> 00:04:02,576 அவசரமாக ஒரு விஷயத்தைப் பற்றி நாம் பேச வேண்டும் என்பதற்காகத் தான் உங்களை அழைத்திருந்தேன், 65 00:04:02,659 --> 00:04:07,247 நம் மூவரைப் பற்றிய விஷயம். நம் எதிர்கால உடன்பிறப்புகளைப் பற்றியதும் கூட. 66 00:04:07,331 --> 00:04:09,541 வேண்டுமென்றால், உடன்பிறப்புகளின் சந்திப்பு என்று கூட நாம் அழைக்கலாம். 67 00:04:09,625 --> 00:04:11,877 -நிச்சயமாக. -என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. 68 00:04:11,960 --> 00:04:14,922 வில்லியம் ஆஸ்டின் டிக்கின்சன், இந்தக் குடும்பத்தில் இருந்து 69 00:04:15,005 --> 00:04:17,798 விலகி இருக்க நீ முயற்சித்த போதிலும், அதிகாரப்பூர்வமாகவோ, 70 00:04:17,882 --> 00:04:22,721 சட்ட பூர்வமாகவோ எந்தப் பிரிவும் உருவாகவில்லை என்பது தான் உண்மை. 71 00:04:22,804 --> 00:04:26,975 ஆகவே, இந்தக் குடும்பம் கலையாமல் அப்படியே உள்ளது. 72 00:04:27,518 --> 00:04:30,479 -எனவே இதன் விளைவாக, எர்கோ... -எர்கோவா? 73 00:04:30,562 --> 00:04:35,108 எர்கோ, நீ இப்பவும் எங்களது சகோதரன் தான். இன்னமும் நீ எங்கள் தந்தையின் ஒரே மகன் தான். 74 00:04:35,192 --> 00:04:36,193 என்ன சொல்ல வருகிறாய்? 75 00:04:36,276 --> 00:04:39,154 எமிலி, நீ என்ன சொல்ல வருகிறாயோ அதை நேராகச் சொல்லலாமே, 76 00:04:39,238 --> 00:04:42,157 நாங்கள் ஏதோ குற்றம் புரிந்து விசாரணையில் இருப்பது போல் சொல்ல வேண்டாமே? 77 00:04:42,241 --> 00:04:45,118 சரி. அப்பா அவருடைய உயிலை நிறைவேற்றுபவராக என்னை இருக்கச் சொல்லியிருக்கிறார், 78 00:04:45,202 --> 00:04:49,081 நம்மையும் சேர்த்து, எல்லாவற்றையும் ஆஸ்டினுக்கே கொடுக்கச் சொல்லி அதில் இருக்கிறது. 79 00:04:49,164 --> 00:04:50,415 “நம்மையும் சேர்த்து” என்றால் என்ன? 80 00:04:50,499 --> 00:04:53,418 அப்பா இறந்தவுடன், ஆஸ்டின் தான் நம் பாதுகாவலன். 81 00:04:53,502 --> 00:04:57,673 அவனுக்கு இந்த வீடு, எல்லாச் சொத்துக்களும் மற்றும் நாமும் உடைமை. நாம் சொத்தின் ஒரு அங்கம் தான். 82 00:05:01,593 --> 00:05:04,429 சரி. எனக்குப் புரிந்துவிட்டது. 83 00:05:04,513 --> 00:05:07,182 நமக்கு கணவன் இல்லை என்றால், நம் தந்தை இறந்த பிறகு, 84 00:05:07,266 --> 00:05:09,226 நாம் நமது சகோதரனுக்குச் சொந்தமாகி விடுகிறோம். 85 00:05:09,309 --> 00:05:11,186 எல்லாவற்றுக்கும் மேலாக, இது ஆணாதிக்கம். 86 00:05:11,687 --> 00:05:13,856 சரி. நான் சும்மா உட்கார்ந்துக் கொண்டு, 87 00:05:13,939 --> 00:05:15,983 என் சகோதரன் என் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துவதை அனுமதிக்க மாட்டேன். 88 00:05:16,066 --> 00:05:17,526 நான் உன் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த விரும்பவில்லை. 89 00:05:17,609 --> 00:05:19,570 இந்தக் குடும்பத்தின் ஒரு அங்கத்தினனாகக் கூட இருக்க விரும்பவில்லை. 90 00:05:19,653 --> 00:05:21,238 அப்பா நம் விஷயத்தை சொதப்பி, கஷ்டப்படுத்திவிட்டார். 91 00:05:21,321 --> 00:05:24,366 என்னுடைய சொந்த சோகத்தைச் சமாளிக்கவே எனக்கு நேரமில்லை. 92 00:05:25,909 --> 00:05:28,245 -ஆம், அதைப் பற்றி தான் பேச வேண்டும். -சரி. 93 00:05:28,871 --> 00:05:33,292 கடந்த சில மாதங்களாக நம் தந்தை நம்மை ஏமாற்றிய எல்லா வழிகளிலும் 94 00:05:33,375 --> 00:05:37,838 எங்களது கவனத்தை ஈர்க்க, நீயும் முயன்றாய், ஆஸ்டின். 95 00:05:37,921 --> 00:05:41,258 நீ சரியாக சொன்னாய் என்பதை இப்போது ஒப்புக்கொள்கிறேன். 96 00:05:41,341 --> 00:05:42,551 எதைப் பற்றி? 97 00:05:42,634 --> 00:05:46,013 நம் அப்பா நம்மை ஏமாற்றிவிட்டார். 98 00:05:46,096 --> 00:05:49,224 -ஆமாம். -சமுதாய விதிமுறைகள் மற்றும் 99 00:05:49,308 --> 00:05:52,394 எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு எப்போதுமே அவர் நடந்து கொண்டிருக்கிறார், 100 00:05:52,477 --> 00:05:54,438 அதாவது, மிக கேவலமான மனிதராக. 101 00:05:54,521 --> 00:05:57,608 சரி, இதை நீ புரிந்துகொண்டது மகிழ்ச்சி. 102 00:05:57,691 --> 00:05:58,775 புரிந்துகொண்டேன். 103 00:05:59,985 --> 00:06:03,697 நீ சொன்னது சரி. நான் தான் தவறு செய்துவிட்டேன். உனக்கு பதில் அவரைத் தேர்ந்தெடுத்துவிட்டேன். 104 00:06:05,240 --> 00:06:06,241 அடடா. 105 00:06:06,992 --> 00:06:09,494 சரி. நன்றி. 106 00:06:10,913 --> 00:06:12,206 இப்போது, இங்கிருக்கிறோம். 107 00:06:13,081 --> 00:06:16,627 அவருடைய பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறாய். 108 00:06:16,710 --> 00:06:18,754 ஆனால் எங்கள் இருவருக்குமே, எந்த அதிகாரமும் இல்லை. 109 00:06:18,837 --> 00:06:21,173 -உன் பாதுகாப்பில் இருக்கிறோம். -நான் உங்களை அப்படி நினைக்கவில்லை. 110 00:06:21,256 --> 00:06:22,925 அதனால் தான் இப்போது இதைப்பற்றி பேசுகிறோம். 111 00:06:23,008 --> 00:06:26,386 -எங்களுக்கு நீ ஒரு சத்தியம் செய்ய வேண்டும். -என்ன சத்தியம்? 112 00:06:26,470 --> 00:06:29,431 இந்த வரலாறு மறுபடியும் நிகழக்கூடாது. 113 00:06:29,515 --> 00:06:31,725 நீ சொல்வதற்கு என்ன அர்த்தம்? 114 00:06:31,808 --> 00:06:35,354 கடந்த காலம் கடந்த காலம் தான். அது முடிந்துவிட்டது. 115 00:06:35,437 --> 00:06:37,439 அதை நம்மால் மாற்ற முடியாது. 116 00:06:38,148 --> 00:06:40,859 ஆனால் கடந்த காலத்தை நாம் எதிர்கொள்ள முடிந்தால், 117 00:06:40,943 --> 00:06:45,572 ஒருவேளை... எதிர்காலத்தை பற்றி நாம் ஏதாவது செய்ய முடியும். 118 00:06:45,656 --> 00:06:49,409 எனவே, ஆஸ்டின், நம் அப்பா போன்ற ஒரு நபராக 119 00:06:50,202 --> 00:06:52,663 நீ இருக்க மாட்டாய் என்று சத்தியம் செய்கிறாயா... 120 00:06:54,164 --> 00:06:56,625 சமுதாய விதிகள் என்ன சொன்னாலும், 121 00:06:56,708 --> 00:06:59,294 நாம் ஒன்றாக வாழும் வரை, எங்களை மரியாதையோடு நடத்தி 122 00:06:59,378 --> 00:07:03,423 எங்களுக்கு உரிய சுதந்திரத்தை, கொடுப்பாய் என்று சொல்வாயா? 123 00:07:03,507 --> 00:07:05,050 சகோதரிகளே... 124 00:07:07,094 --> 00:07:08,303 நீங்கள் என்னை நம்பலாம். 125 00:07:09,721 --> 00:07:10,931 சரி. 126 00:07:12,349 --> 00:07:13,350 ஒரே ஒரு நிபந்தனை. 127 00:07:13,433 --> 00:07:14,434 என்ன? 128 00:07:14,518 --> 00:07:15,853 வின்னி பூனைகளை வளர்க்கக் கூடாது. 129 00:07:15,936 --> 00:07:17,771 -எனக்கு சம்மதம். எனக்கும் அவை பிடிக்காது. -முடியாது! 130 00:07:17,855 --> 00:07:19,606 -எனக்கு பூனைகள் பிடிக்காது. -ஆமாம், எனக்கும் தான். 131 00:07:19,690 --> 00:07:21,525 என் பூனைகளை அனுப்ப முடியாது, மக்களே. 132 00:07:21,608 --> 00:07:25,362 வின்னி, ஒரு வாரத்திற்கு பால் மற்றும் க்ரீமிற்கு 36 டாலர் செலவு செய்கிறோம். அது கட்டுபடியாகாது. 133 00:07:25,445 --> 00:07:27,781 கேள்வி: நரிகள் பற்றி என்ன நினைக்கிறாய்? 134 00:07:27,865 --> 00:07:30,117 -என்ன? -பரவாயில்லை. அது உன் முடிவு கிடையாது. 135 00:07:30,200 --> 00:07:32,661 நாங்கள் சுதந்திரமான பெண்கள், நீ அதை மதிப்பதாக சொல்லி இருக்கிறாய். 136 00:07:32,744 --> 00:07:35,539 பிறகு விஷயங்களை பேசலாமா? இப்போது கை குலுக்கலாமா? 137 00:07:38,625 --> 00:07:39,626 நானும் கட்டிப்பிடிக்கணும். 138 00:07:39,710 --> 00:07:40,711 உன்னை ரொம்ப பிடிக்கும், அண்ணா. 139 00:07:40,794 --> 00:07:41,795 எனக்கும் தான். 140 00:07:43,672 --> 00:07:46,675 இப்போது சோகமாக இல்லாமல் இருப்பது ரொம்பவும் விசித்திரமாக இருக்கிறது. 141 00:07:49,553 --> 00:07:52,848 ஒவ்வொரு டிக்கின்சனாக மாற்றி உலகத்தை சிறப்பான இடமாக ஆக்குகிறேன். 142 00:07:59,980 --> 00:08:02,733 சரி, அம்மா. எழுந்திருங்கள். 143 00:08:02,816 --> 00:08:04,902 இன்று இனிய நாள். இது அழகாக உள்ளது. 144 00:08:04,985 --> 00:08:06,528 நீங்கள் எழுந்திருக்க வேண்டும். 145 00:08:06,612 --> 00:08:08,071 என்னைத் தனியாக விடு. 146 00:08:08,155 --> 00:08:11,283 முடியாது. பிடிக்கிறதோ, இல்லையோ, உங்களை உற்சாகப்படுத்தவே 147 00:08:11,366 --> 00:08:13,285 நான் வந்திருக்கிறேன். 148 00:08:13,368 --> 00:08:15,162 என்னைக் கட்டாயப்படுத்தாதே. 149 00:08:15,245 --> 00:08:16,955 அம்மா, உங்களை கட்டாயப்படுத்த வேண்டும். 150 00:08:17,039 --> 00:08:19,541 ஒரு வாரத்திற்கும் மேலாக படுத்துக்கொண்டிருக்கிறீர்கள். 151 00:08:20,125 --> 00:08:22,461 இப்படியே படுத்துக்கொண்டு சோகமாக இருக்க நான் விட மாட்டேன். 152 00:08:22,544 --> 00:08:24,755 மேலும், வீடு... ரொம்பவும் தூசியாக இருக்கிறது. 153 00:08:24,838 --> 00:08:27,758 மறுபடியும் துடைப்பம் வைத்து சுத்தம் செய்ய வேண்டும். நீங்கள் தான் துப்புரவு ராணி. 154 00:08:27,841 --> 00:08:29,635 புகழ்ச்சி வேலை செய்யாது. 155 00:08:30,385 --> 00:08:32,596 வாழ முடியாத அளவு நான் சோகமாக இருக்கிறேன். 156 00:08:32,679 --> 00:08:34,932 நிரப்ப முடியாத ஒரு வெறுமை என் இதயத்தில் இருக்கிறது. 157 00:08:35,015 --> 00:08:36,015 நாம் அதைப்பற்றி பேசலாமா? 158 00:08:36,099 --> 00:08:39,852 நான் பேச விரும்பும் ஒரே நபர் என் லவினியா தான். அவளும் இறந்துவிட்டாள். 159 00:08:39,937 --> 00:08:43,398 மனிதர்கள் இறந்தாலும், அவர்கள் ஆன்மா நம்மோடு இருக்கும். 160 00:08:43,482 --> 00:08:46,818 ஒரு பறவை ரூபத்தில், லவினியா சித்தியின் ஆன்மாவை 161 00:08:46,902 --> 00:08:48,153 நான் இறுதிச் சடங்கின்போது பார்த்தேன். 162 00:08:48,237 --> 00:08:51,114 அட, அதற்கு வாய்ப்பே இல்லை. அவளுக்கு பறவைகளே பிடிக்காது. 163 00:08:51,198 --> 00:08:55,452 -அப்படியா? எனக்குத் தெரியாது. -எனக்குத்தான் என் சகோதரியைப்பற்றி அதிகம் தெரியும். 164 00:08:55,536 --> 00:08:58,372 நான் தான் அவளை அதிகம் நேசித்தேன். அவளைப் பிரிந்து மிகவும் வருந்துகிறேன். 165 00:08:58,455 --> 00:08:59,873 உங்கள் வருத்தத்தை சொல்லுங்கள். 166 00:09:00,582 --> 00:09:02,042 எல்லாமே வருத்தம் தான். 167 00:09:02,125 --> 00:09:03,961 இன்று எதைப்பற்றி நினைத்தேன் தெரியுமா? 168 00:09:04,044 --> 00:09:07,840 நாங்கள் அருகில் இருந்தாலே, அவள் தன் கையை என் கையோடு கோர்த்துக் கொள்வாள். 169 00:09:07,923 --> 00:09:11,510 குழந்தைகளாக இருந்ததிலிருந்து அவள் அப்படி செய்வாள். எந்த தடையும் கிடையாது. 170 00:09:11,593 --> 00:09:14,680 நாங்கள் ஒட்டிப் பிறந்தவர்கள் போல தோன்றும். 171 00:09:14,763 --> 00:09:16,139 இன்னும் சொல்லுங்கள். வேறு என்ன? 172 00:09:16,223 --> 00:09:18,809 அவளது குரல், நாங்கள் பேசிக் கொண்ட நகைச்சுவை, 173 00:09:18,892 --> 00:09:20,686 என்னை அவள் சிரிக்க வைத்தது. 174 00:09:20,769 --> 00:09:24,398 நாங்கள் ஒரே மாதிரி பேசி, ஒரே மாதிரி உணர்ந்தோம். 175 00:09:24,481 --> 00:09:27,734 அவள் என்னில் ஒரு பகுதியாக, நான் விரும்பியபடி இருந்தாள். 176 00:09:28,652 --> 00:09:30,237 அது தான் சகோதரியின் மகிமை, சரியா. 177 00:09:30,320 --> 00:09:33,532 ஆமாம். அப்படி ஒருத்தி எனக்கும் இருக்கிறாள் என்பது சந்தோஷம் தான். 178 00:09:34,116 --> 00:09:38,287 ஒரே வீட்டில் நீயும், லவினியாவும் ஒன்றாக வளர முடிந்தது சிறப்பான விஷயம். 179 00:09:38,370 --> 00:09:40,372 இளமையில் வீட்டை விட்டு நான் வந்ததால், 180 00:09:40,455 --> 00:09:42,791 அப்படிப்பட்ட அனுபவம் எனக்கு இல்லை. 181 00:09:42,875 --> 00:09:45,502 உண்மையில், உங்களைப் பார்த்து நான் சில சமயம் பொறாமைப்படுவேன். 182 00:09:46,128 --> 00:09:48,172 ஐயோ, அம்மா, நீங்கள் அப்படி உணர்ந்தது எனக்குத் தெரியாது. 183 00:09:50,591 --> 00:09:54,386 உன் சகோதரியோடு இருக்கும் உறவு மிகவும் விலை உயர்ந்தது. 184 00:09:54,970 --> 00:09:58,140 சேர்ந்திருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் நினைத்து சந்தோஷப் படு, 185 00:09:58,223 --> 00:10:00,809 ஏனென்றால், ஒருநாள், அவள் இருக்க மாட்டாள். 186 00:10:02,769 --> 00:10:04,730 அம்மா, இந்த இடத்தை கடைசியாக எப்போது சுத்தம் செய்தீர்கள்? 187 00:10:04,813 --> 00:10:08,150 தெரியவில்லை. ரொம்ப காலம் ஆகிவிட்டது. ஏன்? 188 00:10:10,194 --> 00:10:11,528 ஏனென்றால்... 189 00:10:12,529 --> 00:10:14,198 இப்போது ஒரு எலியைப் பார்த்தேன்! 190 00:10:14,281 --> 00:10:16,575 -எலியா? என் படுக்கை அறையில் எலியா? -ஆமாம். ஆமாம். 191 00:10:17,951 --> 00:10:19,077 எங்கே அது? எங்கே போனது? 192 00:10:19,995 --> 00:10:22,080 இப்போது தான் அங்கே பார்த்தேன். மூலைக்கு ஓடிவிட்டது. 193 00:10:22,164 --> 00:10:25,375 வின்னிடம் 500 பூனைகள் இருந்தும், வீட்டில் எப்படி எலி இருக்கிறது? 194 00:10:25,459 --> 00:10:27,961 நீங்கள் வீட்டை சுத்தப்படுத்தவே இல்லையா? ரொம்பவும் அசுத்தமாக இருக்கு போல. 195 00:10:28,045 --> 00:10:29,546 நான் துடைப்பம் கொண்டு வந்து அதை விரட்டுகிறேன். 196 00:10:29,630 --> 00:10:31,673 -வேண்டாம். ஒரு யோசனை. -என்ன யோசனை? 197 00:10:31,757 --> 00:10:34,593 என் சகோதரி, உன் லவினியா சித்தி, பறவைகளை வெறுத்தாள்... 198 00:10:34,676 --> 00:10:37,387 -ஆமாம், சொன்னீர்கள். -...ஆனால் எலிகளை விரும்பினாள். 199 00:10:37,471 --> 00:10:38,847 அவற்றை செல்லப்பிராணிகளாக வளர்த்தாள். 200 00:10:38,931 --> 00:10:42,893 அவற்றுக்கு சீஸ் கொடுத்து, தனக்குப் பிடித்த கதாபாத்திரங்களின் பெயர் வைப்பாள். 201 00:10:42,976 --> 00:10:45,479 -ரபான்செல், ரம்பெல்ஸ்டில்ஸ்கின், ஸ்னோ ஒயிட். -ரொம்ப அழகு. 202 00:10:45,562 --> 00:10:48,482 எனக்கு எலி பயம் இருப்பதால், சில சமயம் என் மீது சேட்டை செய்வாள். 203 00:10:48,565 --> 00:10:50,692 -ஒருநாள், என் படுக்கையில் ஒரு எலியை வைத்தாள். -அது மோசம். 204 00:10:50,776 --> 00:10:52,027 எமிலி, உனக்குப் புரியவில்லையா? 205 00:10:52,110 --> 00:10:54,613 அந்த எலி, லவினியா சித்தியின் ஆன்மாவாக இருக்கலாம். 206 00:10:57,199 --> 00:10:58,200 அட, கடவுளே. 207 00:10:59,243 --> 00:11:00,244 அம்மா, நீங்கள் சொல்வது சரி. 208 00:11:00,327 --> 00:11:02,120 எப்படியிருந்தாலும் என் சகோதரியின் ஆன்மாவை கண்டுபிடிப்பேன். 209 00:11:02,746 --> 00:11:04,498 அந்த எலி அவள் போலவே நடந்து கொள்கிறது. 210 00:11:06,917 --> 00:11:08,210 அவரை பிடித்துவிட்டேன். 211 00:11:08,293 --> 00:11:10,462 வின்னி சித்தி, நீங்களா? 212 00:11:10,546 --> 00:11:12,589 -அவளை ஒன்றும் செய்யாதே. -நான் ஒன்றும் செய்ய மாட்டேன். 213 00:11:12,673 --> 00:11:14,132 அம்மா, வின்னி சித்தி வந்திருக்கிறார். 214 00:11:15,092 --> 00:11:18,220 நீங்கள் சொல்வதை கேட்பதற்காகவே வந்திருக்கிறார். 215 00:11:19,555 --> 00:11:20,556 பேசுங்கள். 216 00:11:23,934 --> 00:11:25,310 சகோதரி? 217 00:11:27,020 --> 00:11:28,814 அன்பு வின்னி, இது நீ தானா? 218 00:11:31,483 --> 00:11:34,069 பேசுங்கள், அம்மா. எல்லாவற்றையும் சொல்லுங்கள். 219 00:11:36,905 --> 00:11:39,324 சிறுமியாக இருந்த போதே வீட்டை விட்டு வந்ததற்கு வருந்துகிறேன். 220 00:11:40,868 --> 00:11:43,954 நாம் ஒன்றாக சேர்ந்து வளர முடியாமல் போய் விட்டது. 221 00:11:46,415 --> 00:11:49,459 திருமணம் செய்து குழந்தைகள் இருந்ததால் நாம் பிரிந்திருந்தோம். 222 00:11:49,543 --> 00:11:51,461 தொடர்ந்து பேசுங்கள். அம்மா, இது உதவுவதாக தோன்றுகிறது. 223 00:11:55,215 --> 00:11:57,342 நீ என் மிகச்சிறந்த தோழி. 224 00:11:58,927 --> 00:12:02,139 நான் வாழும் வரையில், உன் பிரிவால் வருந்துவேன். 225 00:12:09,229 --> 00:12:10,814 இப்போது உன்னை விட்டு விடுகிறேன். 226 00:12:17,654 --> 00:12:19,239 போய்விட்டார். 227 00:12:22,492 --> 00:12:24,620 அவளது இறுதிச் சடங்கில் இதைத்தான் பேச நினைத்தேன், 228 00:12:24,703 --> 00:12:26,330 ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. 229 00:12:26,413 --> 00:12:28,248 இப்போது நீங்கள் சொன்னதை கேட்டிருப்பார். 230 00:12:28,332 --> 00:12:30,459 இப்பவும் என் மனதில் ஒரு வெறுமை இருக்கிறது. 231 00:12:31,293 --> 00:12:33,754 ஆனால் அதில் இப்போது ஒரு எலி வாழ்கிறது. 232 00:12:33,837 --> 00:12:35,214 அம்மா, அது சிறப்பானது. 233 00:12:36,590 --> 00:12:38,217 இதை ஒரு கவிதையில் பயன்படுத்துவேன். 234 00:12:38,300 --> 00:12:41,261 அப்படியா? நான் மிகவும் மகிழ்வேன். 235 00:12:43,639 --> 00:12:47,559 சரி. ஆடை மாற்றிக் கொண்டு, இந்த வீடு முழுவதும் சுத்தம் செய்ய வேண்டும். 236 00:12:47,643 --> 00:12:50,729 மக்களே, திருமதி. டிக்கின்சன் திரும்பிவிட்டார்! 237 00:13:01,198 --> 00:13:04,910 ஆஸ்டின். நல்லது. வந்துவிட்டீர்களே. இப்போது தான் டீ போட்டேன். 238 00:13:04,993 --> 00:13:06,161 யாராவது வந்திருக்கின்றனரா? 239 00:13:06,245 --> 00:13:09,581 ஆமாம். உங்களைப் பார்க்க ஜார்ஜ் கௌல்ட் வந்திருக்கிறான். 240 00:13:10,290 --> 00:13:14,127 ஜார்ஜ். அவனுக்காக ஏன் இந்த சிறப்புத் தேநீர்க் கோப்பையைக் கொடுக்கிறாய்? 241 00:13:15,003 --> 00:13:16,171 ஹே, நண்பா. 242 00:13:17,005 --> 00:13:18,674 நான் குட்பை சொல்ல வந்தேன். 243 00:13:18,757 --> 00:13:19,758 ஜார்ஜ். 244 00:13:20,384 --> 00:13:21,677 சீருடையில். 245 00:13:22,719 --> 00:13:24,555 இப்போது தான் தையல்காரரிடம் வாங்கி வந்தேன். 246 00:13:25,305 --> 00:13:26,306 பொருத்தமாக உள்ளது தானே. 247 00:13:26,890 --> 00:13:27,850 எனவே நீ... 248 00:13:28,809 --> 00:13:30,018 நீ போருக்குப் போகிறாயா? 249 00:13:30,102 --> 00:13:31,645 ஆமாம். 250 00:13:31,728 --> 00:13:33,772 இரண்டு நாட்களுக்கு முன்னால் கடிதம் வந்தது. 251 00:13:34,523 --> 00:13:37,067 மாசசூசெட்ஸ் 21ல் சேரப் போகிறேன். 252 00:13:37,776 --> 00:13:39,486 அது ப்ரேசர் இருந்த படைப்பிரிவு. 253 00:13:39,570 --> 00:13:41,154 அவன் ஆன்மா சாந்தி அடையட்டும். 254 00:13:41,822 --> 00:13:42,906 நண்பா, 255 00:13:43,907 --> 00:13:45,617 என்னால் இதை நம்ப முடியவில்லை. 256 00:13:45,701 --> 00:13:47,911 யூனியனுக்கு எல்லா ஆண்களும் தேவை. 257 00:13:47,995 --> 00:13:52,332 ஆம்ஹெர்ஸ்டில் இருக்கும் ஒவ்வொரு ஆணும் அழைக்கப்படுகிறான். தினமும் கடிதம் வருகிறது. 258 00:13:52,416 --> 00:13:54,126 உன்னுடையது இன்னும் வராதது தான் ஆச்சரியமே. 259 00:13:54,209 --> 00:13:57,212 ஆமாம், என்னுடையது வெகு விரைவில் வரக்கூடும். 260 00:13:58,172 --> 00:13:59,256 எந்த நாள் வேண்டுமானாலும் வரலாம். 261 00:14:00,340 --> 00:14:03,010 ஜார்ஜ் கௌல்ட், நீ மிகவும் தைரியசாலி. 262 00:14:03,093 --> 00:14:04,469 என் கடமையைத்தானே செய்கிறேன். 263 00:14:06,054 --> 00:14:08,765 போருக்கு அழைக்கப்பட்டிருக்கிறேன், அதனால் போரிடுவேன். 264 00:14:08,849 --> 00:14:10,392 ஏனென்றால் ஜான் பிரவுன் போல, 265 00:14:11,560 --> 00:14:12,978 ப்ரேசர் போல, நானும் ஒரு மேம்பட்ட தேசத்தை 266 00:14:13,896 --> 00:14:14,897 விரும்புகிறேன். 267 00:14:16,815 --> 00:14:18,317 உன்னிடம் ஒன்றை சொல்ல வேண்டும். 268 00:14:19,359 --> 00:14:22,154 -இரண்டு பேரிடமும். -ஆஸ்டின். அது என்ன? 269 00:14:23,071 --> 00:14:28,035 நீங்கள் இருவருமே மன்னிக்க முடியாத அளவு ஒரு விஷயம் செய்திருக்கிறேன். 270 00:14:29,161 --> 00:14:30,579 அப்படி என்ன மோசமான விஷயம்? 271 00:14:32,831 --> 00:14:35,125 வேறு ஒருவனுக்கு பணம் கொடுத்து எனக்கு பதிலாக போருக்கு அனுப்பிவிட்டேன். 272 00:14:36,585 --> 00:14:40,380 என் அழைப்பு கடிதம் வந்துதது, சில நாட்களுக்குப் பிறகு, 273 00:14:40,464 --> 00:14:44,510 நான் ஒரு பாருக்கு சென்று, குடித்து விட்டு, 274 00:14:44,593 --> 00:14:48,847 எனக்கு பதிலாக போகும் படி அங்கிருந்த பார்டெண்டரிடம் பணம் கொடுத்தேன். 275 00:14:51,308 --> 00:14:55,354 அன்று தான் ப்ரேசர் இறந்து போனதை நாம் தெரிந்து கொண்டோம். 276 00:14:56,396 --> 00:14:57,397 நான்... 277 00:14:59,191 --> 00:15:00,776 என்னால் அவனை விட்டுப் போக முடியவில்லை. 278 00:15:00,859 --> 00:15:02,110 யாரை விட்டு? 279 00:15:02,194 --> 00:15:04,655 குழந்தையை. நம் மகனை விட்டு. 280 00:15:07,741 --> 00:15:09,952 ஒரு சிறந்த அப்பாவாக இருக்க விரும்புகிறேன். 281 00:15:10,452 --> 00:15:12,371 என் அப்பா போல நான் இருக்க விரும்பவில்லை. 282 00:15:12,454 --> 00:15:14,498 அப்படிப்பட்ட மனிதனாக இருக்க விரும்பவில்லை. 283 00:15:14,581 --> 00:15:16,124 மாறுபட்டவனாக இருக்க விரும்புகிறேன். 284 00:15:16,208 --> 00:15:18,168 நம் மகனும் மாறுபட்டவனாக இருக்க வேண்டும். 285 00:15:19,336 --> 00:15:24,508 நான் போய்விட்டு, மறுபடியும் திரும்பி வராவிட்டால், 286 00:15:25,509 --> 00:15:26,844 அவனுக்கு எப்படி கற்றுக் தருவது? 287 00:15:28,053 --> 00:15:29,763 டிக்கின்சன்களின் எதிர்காலம் கடந்த காலத்தை விட 288 00:15:29,847 --> 00:15:32,808 மாறுபட்டு இருப்பதை நான் எப்படி உறுதி செய்வது? 289 00:15:34,643 --> 00:15:39,356 இப்போது, களத்தில் யாரோ ஒரு ஐரிஷ்காரன் இறந்து போவான், 290 00:15:39,439 --> 00:15:42,484 நான் இங்கே இருப்பேன். 291 00:15:43,151 --> 00:15:44,194 ஒரு துரோகியாக. 292 00:15:44,903 --> 00:15:45,946 ஒரு கோழையாக. 293 00:15:46,738 --> 00:15:47,990 ஆஸ்டின். 294 00:15:49,741 --> 00:15:50,868 எனக்குப் புரிகிறது. 295 00:15:50,951 --> 00:15:53,704 நீ அப்படி சொல்ல வேண்டாம், ஜார்ஜ். 296 00:15:53,787 --> 00:15:55,038 உண்மையாகத்தான் சொல்கிறேன். 297 00:15:57,165 --> 00:15:58,625 செய்ததை செய்துவிட்டாய். 298 00:15:59,293 --> 00:16:03,172 இப்போது அதை மாற்ற முடியாது என்றாலும், எதுவும் நஷ்டமாகவில்லை. 299 00:16:03,255 --> 00:16:05,048 இன்னும் கூட உன்னால் இதை மாற்ற முடியும். 300 00:16:05,632 --> 00:16:08,677 சமூகத்தின் எல்லா இடங்களிலும் செய்வதற்கு வேலை இருக்கிறது. 301 00:16:09,386 --> 00:16:11,972 போருக்கு சென்று தான் ஆண்மகனாக இருக்க வேண்டும் என்பதில்லை. 302 00:16:12,639 --> 00:16:16,435 இங்கே வீட்டிலேயே இருந்து கொண்டு, குடும்பத்தை காப்பாற்றிக் கொண்டே, 303 00:16:17,477 --> 00:16:18,604 நாட்டை மேம்படுத்த உன்னால்... 304 00:16:20,063 --> 00:16:21,857 கண்டிப்பாக முடியும். 305 00:16:26,862 --> 00:16:28,614 நாம் வெல்ல எல்லாவற்றையும் செய்துவிட்டோம். 306 00:16:28,697 --> 00:16:30,199 ஆமாம். 307 00:16:30,282 --> 00:16:32,242 சிலருக்கு அது நடக்க வேண்டும். 308 00:16:32,951 --> 00:16:34,620 -சிலர் அது நடக்க விரும்புவார்கள். -ஆமாம். 309 00:16:34,703 --> 00:16:37,122 -சிலர் அதை நடத்துவார்கள். -சரிதான்! 310 00:16:37,206 --> 00:16:39,082 -நாம் அதை நடத்தினோம். -ஆமாம்! 311 00:16:39,166 --> 00:16:42,753 எதிர்மறை தருணத்தை நாம் நேர்மறை தருணமாக மாற்றினோம். 312 00:16:42,836 --> 00:16:44,880 -நாம் வெற்றிக்காக விளையாடுகிறோம்! -ஆமாம். 313 00:16:44,963 --> 00:16:46,840 சிறப்புதன்மை என்பது ஒரு பரிணாம நிகழ்வு தான். 314 00:16:48,008 --> 00:16:49,551 -என்னால் பறக்க முடியும். -போ, மைக்கேல் ஜோர்டன். 315 00:16:49,635 --> 00:16:51,845 உன்னால் பறக்க முடியும் என நானும் நம்புகிறேன், மைக்கேல் ஜோர்டன். 316 00:16:51,929 --> 00:16:53,055 நானும் நம்புகிறேன். 317 00:16:53,138 --> 00:16:55,557 இப்போது, அது நடந்ததைப் பார்த்தேன். 318 00:16:55,641 --> 00:16:57,643 தெற்கு பகுதியினர் மேல் பறந்தோம். 319 00:16:58,143 --> 00:17:02,356 நம்மை அவர்கள் கவனிக்கவில்லை. நம் விமான சத்தம் மட்டும் தான் அவர்களுக்குக் கேட்டது. 320 00:17:02,439 --> 00:17:04,566 -அருமை, ஹென்ரி. -நாங்கள் பறவைகள் போல இருந்தோம். 321 00:17:04,650 --> 00:17:08,237 சரி, நண்பா. நாங்கள் ஒன்றாக சென்றோம். ஒன்றாக பறந்தோம். 322 00:17:08,319 --> 00:17:10,614 வாழ்க்கை முழுதும் போர்க்கள நண்பர்கள்! புரிந்ததா? 323 00:17:10,696 --> 00:17:12,366 -போர்க்கள நண்பர்கள். -புரிந்ததா? 324 00:17:12,449 --> 00:17:14,576 -ஒரு பறவைக்கூட்டம். -ஒரு என்ன? 325 00:17:14,660 --> 00:17:15,827 ஒரு பறவைக்கூட்டம். 326 00:17:15,911 --> 00:17:19,665 அழகான வடிவத்தில் பறக்கும் பறவைக்கூட்டதின் பெயர் அது. 327 00:17:20,290 --> 00:17:23,752 அதற்கு சிறந்த உதாரணமே ஸ்டார்லிங் பறவைகள் தான், ஆனால் வாத்துக்களும் அப்படி செய்யும். 328 00:17:23,836 --> 00:17:27,089 -குடிக்கிறீர்களா, ஹென்ரி. -ஹே! அதோ இருக்கிறீர்களா! 329 00:17:27,172 --> 00:17:28,382 நாம் இப்போது வகுப்பில் இல்லை. 330 00:17:29,508 --> 00:17:31,385 எல்லோரும்! இதோ இருக்கிறீர்களா! 331 00:17:32,010 --> 00:17:34,346 -அடக் கடவுளே! அது மிக சிறப்பு. -என்ன விஷயம்? 332 00:17:34,429 --> 00:17:35,973 -யார் என பாரேன். -நலமா, கர்னல்? 333 00:17:36,056 --> 00:17:37,266 ஆமாம், நான்... 334 00:17:39,309 --> 00:17:41,353 இது ஒரு உணர்ச்சிகரமான 24 மணிநேரங்கள். 335 00:17:43,814 --> 00:17:46,525 நீங்கள் செய்தது புரிந்த உடன், எல்லோரும் இறந்து விட்டீர்கள் என்று நினைத்தேன். 336 00:17:47,693 --> 00:17:50,070 இல்லை. நாங்கள் சாகவில்லை. அவர்கள் இறந்துவிட்டார்கள். 337 00:17:52,406 --> 00:17:54,032 மன்னிக்கவும், சார், 338 00:17:54,741 --> 00:17:58,120 இறுதியில், நாங்கள் எங்கள் எதிர்காலத்தை உருவாக்கினோம். 339 00:17:58,203 --> 00:18:01,290 தெரிகிறது. நீங்கள் மிகச் சிறந்த வெற்றி பெற்றிருக்கிறீர்கள். 340 00:18:01,373 --> 00:18:03,208 நம்பவே முடியவில்லை. 341 00:18:03,292 --> 00:18:05,502 என்றாலும் படைத்தளத்தில் நீங்கள் ரொம்ப குழப்பம் செய்தீர்கள். 342 00:18:05,586 --> 00:18:07,421 சாக்ஸ்டன் என்னைத் திட்டுவார், அவ்வளவுதான். 343 00:18:07,504 --> 00:18:08,839 உங்களுக்கு பிரச்சினை தருவது எங்கள் நோக்கமில்லை. 344 00:18:08,922 --> 00:18:11,508 தயவுசெய்து. பிரச்சினை செய்பவனாக நான் இல்லாததை நீ நினைவூட்டினாய். 345 00:18:12,467 --> 00:18:14,428 நான் புரட்சியாளன், பின்பற்றுபவன் கிடையாது. 346 00:18:15,429 --> 00:18:21,268 உண்மையில், நான் முட்டாள் தனமாக நடந்ததால், சற்று ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் 347 00:18:21,351 --> 00:18:24,688 என்று முடிவு செய்திருக்கிறேன். 348 00:18:24,771 --> 00:18:25,689 ஒரு “சபாபா”? 349 00:18:26,398 --> 00:18:27,649 சப்பாட்டிகலா? 350 00:18:27,733 --> 00:18:30,861 ஆம், நான் யோசிக்க வேண்டியது, நினைக்க வேண்டியது நிறைய இருக்கிறது. 351 00:18:30,944 --> 00:18:34,114 அதைச் செய்ய சிறிது நேரம் ஒதுக்கப் போகிறேன். 352 00:18:34,198 --> 00:18:35,199 நான் ஓய்வில் இருக்கும் போது, 353 00:18:36,200 --> 00:18:37,451 நீ தான் இங்கே பொறுப்பு. 354 00:18:37,534 --> 00:18:39,203 நான் உன்னை சார்ஜெண்டாக்க போகிறேன். 355 00:18:39,286 --> 00:18:40,329 மன்னிக்கவும். 356 00:18:40,412 --> 00:18:43,874 -என்னையா? அதிகாரியாகவா? -ஆம், நீ தான். 357 00:18:43,957 --> 00:18:46,043 நீ உன்னை நிரூபித்துவிட்டாய். சரிதானே, நண்பர்களே? 358 00:18:46,126 --> 00:18:47,794 -ஹே! -வேறு யார் சிறந்தவர்? 359 00:18:48,545 --> 00:18:49,630 -ஆமாம். -ஹென்ரி. 360 00:18:49,713 --> 00:18:53,926 ஹென்ரி, ஹென்ரி, ஹென்ரி, ஹென்ரி, ஹென்ரி! 361 00:18:54,009 --> 00:18:55,427 முன்னேறுங்கள், எழுத்துக்கள்! 362 00:18:55,511 --> 00:18:57,262 -ஹே! -தீர்மானமாகிவிட்டது. 363 00:19:02,476 --> 00:19:03,769 நீங்கள் எங்கே போகிறீர்கள்? 364 00:19:03,852 --> 00:19:07,689 பாஸ்டன் நகரிலுள்ள வீட்டிற்கு. ஆனால் முதலில், அம்ஹெர்ஸ்டிற்கு போவேன். 365 00:19:07,773 --> 00:19:08,774 அம்ஹெர்ஸ்டா? 366 00:19:08,857 --> 00:19:13,111 ஆமாம். அங்கே இருக்கும் ஒருவரை நான் சந்திக்க வேண்டும். 367 00:19:13,195 --> 00:19:15,030 இந்த சோகமான மாதங்களில் எனக்கு 368 00:19:15,113 --> 00:19:17,199 ஆறுதலாக இருந்த வார்த்தைகளை கொடுத்த ஒரு கவிஞர். 369 00:19:17,282 --> 00:19:18,283 அவளது பெயர் எமிலி டிக்கின்சன். 370 00:19:19,993 --> 00:19:22,162 என்ன, ஹென்ரி? பேயை பார்த்தது போல நிற்கிறாய். 371 00:19:22,246 --> 00:19:23,789 எனக்கு எமிலி டிக்கின்சனைத் தெரியும். 372 00:19:25,249 --> 00:19:27,835 -என்ன? -நான் அவளது குடும்பதிற்கு வேலை செய்திருக்கிறேன். 373 00:19:27,918 --> 00:19:30,295 பொறு. இவ்வளவு காலமும் அவளைத் தெரிந்த 374 00:19:30,379 --> 00:19:32,631 ஒரு நபரோடு நான் இருந்தேனா? 375 00:19:32,714 --> 00:19:34,675 அவளை நேரில் பார்த்த ஒரு நபரோடா? 376 00:19:34,758 --> 00:19:39,096 எனக்கு இருக்கிறது என்று கூட தெரியாத உணர்வுகளை புரிந்து கொண்ட அந்த மேதையா? 377 00:19:39,680 --> 00:19:41,598 அவளது வரிகள் என்னை பாதிக்கின்றன. 378 00:19:42,224 --> 00:19:43,475 இதைக் கேளுங்கள். 379 00:19:44,184 --> 00:19:46,061 என் வாழ்க்கை குண்டு ஏற்றப்பட்ட துப்பாக்கி போல் நின்றுவிட்டது... 380 00:19:46,144 --> 00:19:47,646 மூலைகளில் - ஒரு நாள் வரை 381 00:19:48,272 --> 00:19:50,566 உரிமையாளர் கடந்து சென்றார் - அடையாளம் காணப்பட்டார்... 382 00:19:50,649 --> 00:19:51,817 என்னைக் கூட்டிச் சென்றார். 383 00:19:51,900 --> 00:19:54,945 -சரி. அடக்கடவுளே. -ஒரு வெள்ளைக்காரி இதை எழுதினாளா? 384 00:19:55,028 --> 00:19:56,071 அவள் பாதிப்பு ஏற்படுத்துகிறாள். 385 00:19:56,154 --> 00:19:57,948 ஹென்ரி, நீ என்னிடம் உண்மையாக சொல்ல வேண்டும். 386 00:19:58,031 --> 00:19:59,199 அவள் எப்படிப்பட்டவள்? 387 00:20:00,492 --> 00:20:04,454 அதை நீங்களே கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும். 388 00:20:05,205 --> 00:20:07,040 -சரியாகச் சொன்னாய். -சரி. 389 00:20:07,124 --> 00:20:08,792 நான் உடனே கிளம்ப இது ஒரு நல்ல காரணம். 390 00:20:09,835 --> 00:20:11,128 கொஞ்சம் பொறுங்கள், ஹிக்கின்சன். 391 00:20:11,211 --> 00:20:12,421 என்ன? 392 00:20:12,504 --> 00:20:14,089 நீங்கள் அம்ஹெர்ஸ்ட் போகிறீர்கள் என்றால், 393 00:20:15,090 --> 00:20:17,217 எனக்காக நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும். 394 00:20:22,806 --> 00:20:24,725 சரி, இதைப் பார்த்தீர்களா? 395 00:20:27,436 --> 00:20:28,604 அழகாக உள்ளது. 396 00:20:28,687 --> 00:20:29,688 ஆஹா. 397 00:20:32,566 --> 00:20:35,152 நான் உங்களிடம் சொல்வேன், நான் பறக்கக் கற்றுக்கொண்டதால்... 398 00:20:35,235 --> 00:20:38,113 அப்படியா? சரி, எங்களிடம் சொல். 399 00:20:39,531 --> 00:20:41,033 நான் இனி நடக்கவே மாட்டேன். 400 00:21:05,390 --> 00:21:06,391 எமிலி. 401 00:21:06,475 --> 00:21:07,976 உன்னைப் பார்க்கத்தான் வந்தேன். 402 00:21:09,144 --> 00:21:10,145 உள்ளே வா. 403 00:21:11,063 --> 00:21:12,105 விருந்தினர்கள் இருக்கிறார்களா. 404 00:21:12,814 --> 00:21:16,818 குட் பை சொல்வதற்காக ஆஸ்டின் சிலரை அழைத்திருக்கிறான். 405 00:21:17,486 --> 00:21:18,820 யாருக்கு குட்பை சொல்ல? 406 00:21:20,656 --> 00:21:23,116 ஜார்ஜ். அவன் போருக்குப் போகிறான். 407 00:21:23,825 --> 00:21:25,494 ஜார்ஜ் கூடவா? 408 00:21:31,124 --> 00:21:33,043 சரி, அவனுக்கு பை சொல்கிறேன், 409 00:21:34,127 --> 00:21:36,171 ஆனால் இன்றிரவு உன்னை தனிமையில் சந்திக்க வேண்டும். 410 00:21:37,005 --> 00:21:38,131 சரி. 411 00:21:38,215 --> 00:21:42,636 ஏதாவது, குறிப்பிட்ட விஷயம் பற்றி நீ பேச வேண்டுமா அல்லது... 412 00:21:42,719 --> 00:21:43,720 ஆமாம், 413 00:21:44,346 --> 00:21:45,931 ஆனால் அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. 414 00:21:46,014 --> 00:21:48,308 எமிலி. விருந்தினர்கள் இருக்கிறார்கள், எமிலி. 415 00:21:49,726 --> 00:21:51,228 நாம் இருவர் மட்டும். 416 00:21:51,854 --> 00:21:53,605 சரியா? இன்றிரவு. 417 00:21:59,111 --> 00:22:02,614 “வாருங்கள், இன்னொரு மோசமான இரவை கழிப்போம். 418 00:22:02,698 --> 00:22:04,741 என்னை அழையுங்கள், வருத்தமான கேப்டன்களே. 419 00:22:04,825 --> 00:22:06,410 நம் பாத்திரத்தை மறுபடியும் நிரப்புவோம். 420 00:22:06,952 --> 00:22:08,579 நள்ளிரவு வரை விழித்திருப்போம்.” 421 00:22:08,662 --> 00:22:10,414 அதை ஷேக்ஸ்பியர் கிளப்பில் இருந்து சொன்னேன். 422 00:22:11,957 --> 00:22:13,917 நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம், நண்பா. 423 00:22:57,336 --> 00:22:59,046 என்னைப் பார். 424 00:23:47,219 --> 00:23:48,220 ஹெலன்! 425 00:23:49,096 --> 00:23:50,472 உள்ளே வா, அன்பே. 426 00:23:51,390 --> 00:23:52,516 சாப்பாடு சூடாக இருக்கிறது. 427 00:24:00,399 --> 00:24:02,276 என்ன கொடுமை இது? 428 00:24:02,359 --> 00:24:03,527 பெட்டி. 429 00:24:04,194 --> 00:24:05,279 மாலை வணக்கம். 430 00:24:05,863 --> 00:24:07,990 திரு. டிக்கின்சன், உங்களுக்கு என்ன ஆயிற்று? 431 00:24:08,073 --> 00:24:09,908 குகையில் வாழ்ந்தவர் போல தோற்றமளிக்கிறீர்கள். 432 00:24:09,992 --> 00:24:11,535 நான் நலம் தான். நலம் தான். 433 00:24:12,452 --> 00:24:15,706 பாஸ்டனில் இருந்து வரும்போது பாதி வழியில் வண்டியில் இருந்து இறக்கப்பட்டேன். 434 00:24:15,789 --> 00:24:17,666 அதனால் நடந்து வந்தேன், ஆனால் நன்றாக இருக்கிறேன். 435 00:24:17,749 --> 00:24:19,168 உங்கள் கோட் கிழிந்திருக்கிறது. 436 00:24:19,251 --> 00:24:20,794 பசியாக இருப்பீர்கள். 437 00:24:20,878 --> 00:24:23,755 நீங்கள்... சூப் குடிக்கிறீர்களா? 438 00:24:23,839 --> 00:24:25,591 வேண்டாம், வேண்டாம். நீ இரக்கமுள்ளவள். 439 00:24:25,674 --> 00:24:27,718 அது மீட்பால் சூப். வயிறு நிரம்பும். 440 00:24:28,302 --> 00:24:29,678 மீட்பால் சூப்பா? 441 00:24:29,761 --> 00:24:31,263 உள்ளே வருகிறீர்களா? 442 00:24:31,346 --> 00:24:33,724 நிறைய உணவு இருக்கிறது. உங்கள் கோட்டையும் தைத்து தருகிறேன். 443 00:24:33,807 --> 00:24:36,226 இப்படிப்பட்ட தோற்றத்தில் நீங்கள் திருமதி. டிக்கின்சன்னை பார்க்கக் கூடாது. 444 00:24:36,727 --> 00:24:39,104 ஹாய், அம்மா. காட்டில் விளையாடிக் கொண்டிருந்தேன். 445 00:24:39,646 --> 00:24:42,774 -இவளுக்கு நிறைய கற்பனை திறன் இருக்கிறது. -என்னுடைய எமிலி போலவே. 446 00:24:42,858 --> 00:24:45,027 திரு. டிக்கின்சன் வந்து நம்மோடு சூப் குடிக்கப் போகிறார். 447 00:24:45,110 --> 00:24:47,154 -இல்லை, நான்... -இல்லை, பேசாமலிருங்கள். 448 00:24:47,237 --> 00:24:49,281 உங்களை பசியாக அனுப்ப முடியாது. 449 00:24:49,364 --> 00:24:51,074 அப்பாவின் நாற்காலியில் அவர் உட்காரட்டும். 450 00:24:52,159 --> 00:24:53,493 தன் அப்பாவின் பிரிவால் வாடுகிறாள். 451 00:24:53,577 --> 00:24:55,120 ஆமாம். அவரும் உன்னைப் பிரிந்து வருந்துவார். 452 00:24:56,371 --> 00:25:00,375 ஒரு அப்பாவாக இருப்பது தான் இந்த உலகத்தின் சிறந்த பரிசு. 453 00:25:02,878 --> 00:25:04,338 எனவே, ஆமாம். 454 00:25:04,421 --> 00:25:07,674 துக்கத்தைப் பற்றிய ஒரு புது கவிதையை எழுதிக்கொண்டிருக்கிறேன். 455 00:25:08,759 --> 00:25:11,637 நாம் எல்லோரும் அதிக துக்கத்தை உணர்கிறோம், இல்லையா? 456 00:25:12,262 --> 00:25:15,140 அன்பானவர்களை இழந்து விட்டோம். கூடுதலாகவும் இழந்து இருக்கிறோம். 457 00:25:17,017 --> 00:25:18,560 ஒரு பழைய உலகத்தை இழந்து விட்டோம். 458 00:25:19,228 --> 00:25:21,063 பழைய வாழ்க்கையை இழந்து விட்டோம். 459 00:25:22,397 --> 00:25:24,983 சரி, அந்த புது கவிதை என்ன? 460 00:25:25,067 --> 00:25:26,318 ஆம், அருமையாக இருக்கும் போலிருக்கே. 461 00:25:26,401 --> 00:25:28,779 அது இடம் சார்ந்தது. 462 00:25:28,862 --> 00:25:31,657 கொட்டகையில் இறக்கும் ஆட்டுக்குட்டியுடன் இருக்கும் போது அதை எழுதினேன். 463 00:25:31,740 --> 00:25:32,950 பழைய பெஸ்ஸி இல்லையே? 464 00:25:33,033 --> 00:25:33,867 அவளே தான். 465 00:25:34,618 --> 00:25:37,412 -இல்லை. -நான் பெஸ்ஸியின் எதிரே உட்கார்ந்து கொண்டு, 466 00:25:38,580 --> 00:25:42,084 அவளுடைய கண்களைப் பார்த்து, இறப்பைப்பற்றி யோசித்தேன். 467 00:25:42,960 --> 00:25:46,421 அந்த ஆடு மெதுவாக இறப்பதை, 468 00:25:47,381 --> 00:25:50,217 அவள் உடல் மெதுவாக அழுகுவதை, 469 00:25:50,926 --> 00:25:52,970 அவள் கண்கள் வெளியே விழுவதை 470 00:25:53,053 --> 00:25:55,597 ஜோசஃபின் கண் விழிகள் வெளியே விழுந்தது போல, 471 00:25:56,139 --> 00:25:57,391 ஒன்றன் பின் ஒன்றாக கற்பனை செய்தேன். 472 00:25:57,474 --> 00:25:59,476 பாப்! பாப். 473 00:26:00,727 --> 00:26:05,315 ஒருநாள் நாம் எல்லோரும் மண்ணாக போகும் உண்மையை ஆழ்ந்து யோசிப்பேன். 474 00:26:07,442 --> 00:26:08,944 “இறந்து போன ஆடு” என்பது தான் அதன் தலைப்பு 475 00:26:09,653 --> 00:26:12,239 அது, இறந்து போன என்னுடைய பழைய காதலர்களின் நினைவு அஞ்சலி. 476 00:26:12,823 --> 00:26:14,867 அதைப் பார்ப்பதற்கு நான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். 477 00:26:16,159 --> 00:26:17,494 பார்வையாளர்களே கிடையாது. 478 00:26:17,578 --> 00:26:18,871 எனக்கு ஆடுகள் பிடிக்கும். 479 00:26:19,538 --> 00:26:22,499 இத்தனை வருட போர் நம் எல்லோரையும் மாற்றிவிட்டது, இல்லையா? 480 00:26:22,583 --> 00:26:26,420 ஆமாம். நம் பெற்றோர்கள் வாழ்ந்த உலகத்தை விட முற்றிலும் மாறுபட்ட உலகத்தை 481 00:26:26,503 --> 00:26:27,713 நாம் பெற்றிருப்பதாக தோன்றுகிறது. 482 00:26:27,796 --> 00:26:29,173 அது நல்ல விஷயமாக இருக்கலாம். 483 00:26:29,256 --> 00:26:30,757 உலகமே குழப்பத்தில் உள்ளது, ஆனால்... 484 00:26:32,176 --> 00:26:34,928 சிறு முயற்சியாக இருந்தாலும் இதை மேம்படுத்தும் முறைகளை 485 00:26:35,012 --> 00:26:36,597 நம்மால் கண்டுபிடிக்க முடியும். 486 00:26:36,680 --> 00:26:38,348 இதை நம்ப விரும்புகிறேன், ஜார்ஜ். 487 00:26:39,016 --> 00:26:42,436 என் வழி எது என்று இன்னும் தெரியவில்லை, ஆனால் அதைக் கண்டுபிடிப்பேன். 488 00:26:42,519 --> 00:26:44,688 நீ எப்போது வீட்டிற்கு திரும்பி வந்தாலும்... 489 00:26:44,771 --> 00:26:47,149 நான் செய்ததை நினைத்து, நீ பெருமைப்படுவாய். 490 00:26:47,232 --> 00:26:50,819 சரி, நான் திரும்பி வருவேன் என்று நம்புகிறேன். 491 00:26:52,529 --> 00:26:54,364 நம்பிக்கை தன் வீட்டை அமைக்கும் முறை 492 00:26:55,532 --> 00:26:57,367 ஜன்னல் இருக்காது... 493 00:26:57,451 --> 00:26:59,995 கூரையோ அல்லது கட்டிடமோ இருக்காது 494 00:27:00,078 --> 00:27:01,371 கோபுரம் மட்டுமே இருக்கும்... 495 00:27:02,122 --> 00:27:03,707 நல்லவற்றை மட்டும் யோசி, ஜார்ஜ். 496 00:27:03,790 --> 00:27:08,086 நீ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், ஆபிரகாம் லிங்கன் உதவியுடன், 497 00:27:08,170 --> 00:27:11,006 நானும் என் கணவரும் வெளியிடும் டிரம்பீட் என்ற 498 00:27:11,089 --> 00:27:13,800 யூனியனின் இராணுவப் பத்திரிக்கையின் இலவச காப்பி உனக்கு கிடைக்கும். 499 00:27:13,884 --> 00:27:14,885 ஜனாதிபதி. 500 00:27:14,968 --> 00:27:19,348 இதோ. என்னிடம் ஒரு கூடுதல் காப்பி இருக்கிறது. 501 00:27:19,431 --> 00:27:21,892 இதில் எமிலி ஒரு கவிதை எழுதி இருக்கிறாள். 502 00:27:22,976 --> 00:27:24,019 கவிதையா? 503 00:27:24,102 --> 00:27:27,189 அச்சோ, அதாவது, அனாமதேயமாக. 504 00:27:28,190 --> 00:27:29,525 எனக்குப் புரியவில்லை. 505 00:27:29,608 --> 00:27:33,529 எமிலி, உன்னுடைய ஒரு கவிதையை நான் தான் அவர்களிடம் கொடுத்தேன். 506 00:27:34,196 --> 00:27:36,448 நீ... கொடுத்தாயா? 507 00:27:36,532 --> 00:27:39,785 பெயர் போடக் கூடாது என்று சொன்னேன். உனக்கு அது தான் பிடிக்கும் என்று நினைத்தேன். 508 00:27:40,744 --> 00:27:44,289 ஆனால் உன் சொற்கள் வலிமை உடையவை. 509 00:27:44,373 --> 00:27:47,251 இந்த நாட்டிற்கு அவை தேவை என்று நினைத்தேன். 510 00:27:50,712 --> 00:27:52,172 என்னை மன்னிப்பாயா? 511 00:27:54,925 --> 00:27:58,720 ஹே, அதை எங்களுக்காக படித்துக் காட்டு. 512 00:27:59,471 --> 00:28:00,681 அட, அது மிகவும் அட்டகாசமாக இருக்கும். 513 00:28:00,764 --> 00:28:04,101 -சரி. எமிலி எழுதிய கவிதை. -அவள் அதை படிக்க மாட்டாள். 514 00:28:04,184 --> 00:28:07,145 -அவள் எப்போதும் உரக்க படிக்க மாட்டாள். -படி, எமிலி. இந்த ஒரு முறை மட்டும். 515 00:28:07,229 --> 00:28:08,564 படிக்கிறாயா, எம்? 516 00:28:08,647 --> 00:28:10,440 உன்னுடைய குரலை மனதில் வாங்கிக் கொண்டு, 517 00:28:11,066 --> 00:28:12,901 பிரிந்து போவது எனக்கு ஒரு சிறந்த பிரிவு உபச்சார... 518 00:28:13,902 --> 00:28:14,903 பரிசாக இருக்கும். 519 00:28:18,949 --> 00:28:19,950 நான் படிக்கிறேன். 520 00:28:21,368 --> 00:28:22,661 உங்கள் எல்லோருக்காகவும் படிக்கிறேன். 521 00:28:26,707 --> 00:28:28,083 முக்கியமாக சூவிற்காக. 522 00:28:35,799 --> 00:28:38,010 பறவைகள் திரும்பி வரும் நாட்கள் இவை... 523 00:28:41,221 --> 00:28:42,347 மிகச் சில... 524 00:28:43,390 --> 00:28:45,184 ஒன்று அல்லது இரண்டு பறவை... 525 00:28:46,351 --> 00:28:48,020 திரும்பி பார்ப்பதற்காக. 526 00:28:51,064 --> 00:28:52,733 ஜூன் மாதத்தின் பழைய - பழைய அழகை 527 00:28:53,358 --> 00:28:54,610 வானம் காட்டக்கூடிய 528 00:28:55,569 --> 00:28:57,613 நாட்கள் இவை... 529 00:28:59,448 --> 00:29:01,825 நீலமும் தங்கமும் சேர்ந்த கலவை. 530 00:29:03,368 --> 00:29:06,038 ஒ தேனியை ஏமாற்ற முடியாது. 531 00:29:06,121 --> 00:29:07,831 உன் நம்பகத்தன்மை 532 00:29:07,915 --> 00:29:09,875 என் நம்பிக்கையை தூண்டுகிறது. 533 00:29:10,876 --> 00:29:13,545 விதைகள் அவற்றை பார்க்கும் வரை... 534 00:29:14,505 --> 00:29:17,883 மாறுபட்ட காற்றில் மெதுவாக 535 00:29:17,966 --> 00:29:20,219 ஒரு சிறு இலை நகர்கிறது. 536 00:29:24,389 --> 00:29:26,517 ஓ கோடை நாட்களின் சடங்கே, 537 00:29:26,600 --> 00:29:29,102 ஓ ஹேசின் கடைசி கம்யூனியனே - அனுமதி கொடு 538 00:29:29,186 --> 00:29:30,812 ஒரு குழந்தை சேர்வதற்கு... 539 00:29:36,944 --> 00:29:38,987 உன்னுடைய புனித சின்னங்களை பெறுவதற்கு... 540 00:29:40,781 --> 00:29:42,824 உன் புனித உணவை உண்பதற்கு 541 00:29:46,078 --> 00:29:48,038 மற்றும் உன் புனித ஒயினை அருந்துவதற்கு! 542 00:29:54,086 --> 00:29:56,255 என் கவிதையை வெளியிட்டதற்கு நன்றி. 543 00:29:57,840 --> 00:29:59,383 அதை எழுதியதற்கு நன்றி. 544 00:30:04,221 --> 00:30:06,056 தெரியுமா... 545 00:30:07,724 --> 00:30:09,017 இங்கே இருக்கும் இது... 546 00:30:11,019 --> 00:30:13,021 எல்லா கவிதையை விடவும் சிறந்தது. 547 00:30:36,211 --> 00:30:37,963 நான் எழுதும் எல்லா கடிதங்களும் 548 00:30:41,425 --> 00:30:43,468 இதைப்போன்று சிறப்பானது இல்லை... 549 00:30:49,600 --> 00:30:51,518 வெல்வெட் போன்ற எழுத்துக்கள்... 550 00:30:57,441 --> 00:30:59,693 அருமையான வாக்கியங்கள், 551 00:31:32,601 --> 00:31:35,562 வடிகட்டப்படாத ரூபி போன்ற ஆழங்கள், 552 00:31:37,231 --> 00:31:39,816 உனக்காக உதட்டை, மறைத்து... 553 00:31:42,069 --> 00:31:44,321 பாடும் சிறு பறவை போல இசைத்து... 554 00:31:46,532 --> 00:31:49,159 என்னை உறிஞ்சியது... 555 00:32:37,207 --> 00:32:39,209 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்