1 00:00:21,146 --> 00:00:22,272 ஹாய். 2 00:00:24,066 --> 00:00:25,067 உனக்கு என்ன வேண்டும்? 3 00:00:25,984 --> 00:00:28,028 பார், நாம் இருவரும் சண்டையில் இருக்கிறோம், 4 00:00:28,111 --> 00:00:31,782 ஆனால், இன்று நம் சண்டையை நிறுத்தி வைத்து விட்டு, 5 00:00:31,865 --> 00:00:35,661 ப்ரேசரின் இறுதிச் சடங்கிற்கு ஒன்றாகச் செல்லலாம் என்று நினைக்கிறேன். 6 00:00:36,703 --> 00:00:37,704 நான் வரப் போவதில்லை. 7 00:00:38,330 --> 00:00:40,624 என்ன பேசுகிறாய்? நீ வரத்தான் வேண்டும். 8 00:00:40,707 --> 00:00:42,292 ப்ரேசர் உன்னுடைய வகுப்புத் தோழன். 9 00:00:42,376 --> 00:00:45,629 -அவன் உன்னுடைய சிறந்த நண்பரும் கூட. -அதை நீ எனக்குச் சொல்ல வேண்டியதில்லை. 10 00:00:45,712 --> 00:00:49,007 தனக்கு ப்ரேசரை நன்றாகத் தெரியும் என காட்டிக்கொண்டு, அவனுடைய மரணத்தைப் பயன்படுத்தி, 11 00:00:49,091 --> 00:00:52,010 அப்பா மற்றவர்கள் கவனத்தை ஈர்ப்பதைப் பார்க்க நான் விரும்பவில்லை. 12 00:00:52,970 --> 00:00:54,221 எனக்குள்ளாகவே துக்கத்தை அனுசரித்துக்கொள்வேன். 13 00:00:54,304 --> 00:00:57,391 நீ அங்கே இல்லாவிட்டால், இந்த நகரமே உன் அப்பாவைப்பற்றி தான் பேசும். 14 00:00:57,474 --> 00:01:01,770 நீ உன்னைப் பற்றியே யோசிக்கிறாய். குடும்பத்தைப் பற்றி ஒருமுறை கூட யோசிக்க மாட்டாயா? 15 00:01:04,022 --> 00:01:06,483 எனக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது, நான் அவர்களைத் தான் பார்க்க வேண்டும். 16 00:01:06,567 --> 00:01:08,569 சூ எங்கே? நிச்சயம் நான் சொல்வதை அவள் ஒப்புக்கொள்வாள். 17 00:01:08,652 --> 00:01:12,114 சூவிற்கும் எனக்கும் எங்கள் குழந்தை தான் இப்பொழுது முக்கியம். 18 00:01:12,739 --> 00:01:15,075 உனக்கென்றே குழந்தைகள் இருந்திருந்தால் உனக்குப் புரிந்திருக்கும். 19 00:01:15,158 --> 00:01:16,451 எனக்கென்று குழந்தைகள் இருந்திருந்தால், 20 00:01:16,535 --> 00:01:18,996 குடும்ப கௌரவம் என்னவென்று சொல்லிக் கொடுத்து, அது எவ்வளவு முக்கியம் என 21 00:01:19,079 --> 00:01:20,706 அவர்களுக்கு தெரிய வைத்திருப்பேன். 22 00:01:20,789 --> 00:01:23,458 கடவுளே, எமிலி. உனக்கு என்ன ஆச்சு? 23 00:01:23,542 --> 00:01:25,544 நீ வழக்கமாக... 24 00:01:26,837 --> 00:01:28,338 வழக்கத்திற்கு மாறாக இருப்பாய். 25 00:01:28,422 --> 00:01:31,049 இப்பொழுது அப்பா மாதிரியே இருக்கிறாய். 26 00:01:32,593 --> 00:01:33,677 போய் விடு. 27 00:01:34,803 --> 00:01:39,558 அப்படியே ஓடிப்போய், அப்பாவின் கையை பிடித்துக்கொள். ஞாபகம் வைத்துக்கொள், நீ அவரைத்தான் தேர்ந்தெடுத்தாய். 28 00:01:45,856 --> 00:01:47,774 டிக்கின்சன் 29 00:01:47,858 --> 00:01:49,776 என் வாழ்க்கை குண்டு ஏற்றப்பட்ட துப்பாக்கி போல் நின்றுவிட்டது 30 00:01:56,617 --> 00:02:01,205 ப்ரேசர் அகஸ்டஸ் ஸ்டர்ன்ஸ், அம்ஹெர்ஸ்ட் நகரின் நாணயம் மிக்கவராக வாழ்நாள் முழுவதும் இருந்தவர். 31 00:02:02,956 --> 00:02:07,377 ப்ரேசர் இந்த நகரின் ஆன்மாவிற்கு எடுத்துக்காட்டாக இருந்தார். அதன் ரத்தமும் சதையுமாக இருந்தவர். 32 00:02:08,127 --> 00:02:11,006 அவருக்கு விடை கொடுப்பது என்பது எனக்கு வேதனையளிப்பதானாலும்... 33 00:02:11,089 --> 00:02:12,090 ஆஸ்டின் எங்கே? 34 00:02:13,342 --> 00:02:14,426 தெரியவில்லை. 35 00:02:15,511 --> 00:02:16,845 அவன் இங்கு இல்லாதது அற்பத்தனம். 36 00:02:16,929 --> 00:02:19,056 அவர்கள் யாரும் இங்கே இல்லாதது தான் அற்பத்தனம். 37 00:02:19,139 --> 00:02:22,142 எல்லாவற்றையும் அற்பத்தனம் என்று சொல்லுவதை நிறுத்தலாமா? இது அவமதிப்பான செயல். 38 00:02:22,226 --> 00:02:24,269 அதோடு, எமிலி இங்கே இருக்கிறாள். 39 00:02:24,853 --> 00:02:29,107 இந்த நகருக்குப் பெருமை கொண்டு வந்தவர். 40 00:02:29,191 --> 00:02:35,906 அவருடைய ஞாபகார்த்தமாக இந்த பீரங்கியை அவருக்கு அர்ப்பணிக்கிறேன். 41 00:02:35,989 --> 00:02:37,157 பீரங்கியா? 42 00:02:37,991 --> 00:02:39,117 எனக்கா? 43 00:02:40,244 --> 00:02:41,453 ப்ரேசர்! 44 00:02:43,121 --> 00:02:45,040 -நான் யாருமில்லை. -நீ இங்கே இருக்கிறாய். 45 00:02:46,083 --> 00:02:48,418 என்னுடைய இறுதிச் சடங்கை நான் தவற முடியாது அல்லவா. 46 00:02:52,422 --> 00:02:57,094 இளைய ப்ரேசர் இந்த நாட்டிற்காகத் தன் உயிரை நீக்கிய இடமான, நியூ பெர்னில் தான்... 47 00:02:57,177 --> 00:02:58,804 இவரை உன்னால் நம்ப முடிகிறதா? 48 00:02:58,887 --> 00:03:00,180 ...இந்த பீரங்கி இருந்தது. 49 00:03:00,264 --> 00:03:04,601 மன்னித்துவிடு. அவர் உன் அப்பா என தெரியும். ஆனால் அவர் மிகவும் நேர்மையற்றவர். 50 00:03:04,685 --> 00:03:06,520 அவர் உன்னை கௌரவிக்க முயல்கிறார். 51 00:03:07,229 --> 00:03:09,606 நீ போருக்குச் சென்றதற்கு அது தானே முழுக் காரணம்? 52 00:03:10,482 --> 00:03:12,442 உனக்கு இப்போது புகழ் கிடைத்துள்ளது, ப்ரேசர் ஸ்டர்ன்ஸ். 53 00:03:12,526 --> 00:03:14,987 போர் முடிந்ததும், 54 00:03:15,487 --> 00:03:18,615 நம் தேசம் இந்தப் பெரும் காயங்களில் இருந்து குணமடையும், 55 00:03:19,283 --> 00:03:23,620 ப்ரேசர் ஸ்டர்ன்ஸ் போன்றோரின் நினைவுகள் தான் 56 00:03:23,704 --> 00:03:27,332 நமக்கான மருந்து. 57 00:03:27,416 --> 00:03:30,627 அப்படியானால், அது எப்படி இருந்தது? 58 00:03:31,295 --> 00:03:34,006 -எது எப்படி இருந்தது? -போர். 59 00:03:35,340 --> 00:03:37,009 நான் கற்பனை செய்ததைவிட மோசமாக இருந்தது. 60 00:03:38,177 --> 00:03:39,928 இருண்ட நகரத்தில் உள்ள நரகத்தின் வாய்க்குள் 61 00:03:40,012 --> 00:03:42,514 நேரே நுழைந்த மாதிரி. 62 00:03:42,598 --> 00:03:43,557 டான்டேவைப் போலவா. 63 00:03:44,474 --> 00:03:46,894 ஆமாம், டான்டே மாதிரியே தான். 64 00:03:46,977 --> 00:03:49,229 -அங்கே என்ன பார்த்தாய்? -உண்மையை. 65 00:03:50,731 --> 00:03:53,233 மிகவும் மோசமான அசிங்கமான உண்மை. 66 00:03:53,734 --> 00:03:54,943 போரில் எதையும் மறைக்க முடியாது. 67 00:03:55,027 --> 00:03:58,071 உன் எதிரியை எதிர்கொள்வதாக நினைக்கிறோம், ஆனால் உண்மையில் நம்மை நாமே எதிர்கொள்கிறோம். 68 00:03:59,448 --> 00:04:01,575 போரில் நீ ஒருவன் மட்டும் இல்லையே. 69 00:04:01,658 --> 00:04:04,620 அதனால் தான் உன்னையும், ஆஸ்டினையும் நினைத்து நான் வருந்துகிறேன். 70 00:04:04,703 --> 00:04:08,457 பரவாயில்லை. 71 00:04:09,625 --> 00:04:11,627 எல்லாம் நல்லதிற்குத் தான். 72 00:04:12,794 --> 00:04:14,213 நான் நிறையக் கற்றுக்கொண்டேன். 73 00:04:14,296 --> 00:04:15,756 உண்மையாகவா? என்ன மாதிரி? 74 00:04:16,548 --> 00:04:20,511 வந்து, என் சகோதரன் ஒன்றுக்கும் உதவாதவன் ஆகி விட்டான் என்றும், அவனில்லாமலும் நாங்கள் 75 00:04:20,594 --> 00:04:22,346 நன்றாகவே இருப்போம் என்றும் கற்றுக்கொண்டேன். 76 00:04:23,430 --> 00:04:26,058 நிச்சயமாக, அம்மாவும் வின்னியும் தேறிக்கொண்டு இருக்கிறார்கள், 77 00:04:26,141 --> 00:04:28,519 ஆனால் நானும், அப்பாவும் எப்பொழுதையும்விட மனவலிமையோடு இருக்கிறோம். 78 00:04:28,602 --> 00:04:33,106 எங்களது மனமார்ந்த ஒப்புதல்களைத் தயவுசெய்து பொறுத்துக்கொள்ளுங்கள்... 79 00:04:33,190 --> 00:04:35,567 குடும்பத்தின் மீது இவ்வளவு நம்பிக்கையை நான் இதற்கு முன் உணர்ந்ததில்லை. 80 00:04:36,985 --> 00:04:37,986 என்ன? 81 00:04:38,070 --> 00:04:41,490 -மன்னித்துவிடு. நான் உன்னை நம்பவில்லை. -என்ன சொல்கிறாய்? 82 00:04:42,533 --> 00:04:44,993 உன்னுடைய இந்த நம்பிக்கை சற்று பொய் போலத் தோன்றுகிறது. 83 00:04:45,077 --> 00:04:48,872 “...மரண காயத்துடன், ரயில்பாதையில் எதிரிகளைத் தாக்க 84 00:04:48,956 --> 00:04:53,335 அவர் தன் ஆட்களை உற்சாகப்படுத்தினார்.” 85 00:05:08,559 --> 00:05:11,812 ஆமாம், சார். வந்ததற்கு நன்றி. மிக்க நன்றி. இதைப் பாராட்டுகிறேன். 86 00:05:11,895 --> 00:05:13,897 சரியாகச் சொன்னாய், எட்வர்ட். 87 00:05:13,981 --> 00:05:16,567 இது அருமையான உரை. அற்புதமான வேலை. 88 00:05:16,650 --> 00:05:18,569 உண்மையில் அருமை. 89 00:05:18,652 --> 00:05:20,404 நன்றி, இதமார். நீ அவ்வாறு நினைத்ததற்கு நன்றி. 90 00:05:20,487 --> 00:05:24,992 அப்படித்தான் நினைக்கிறேன். உன்னை எப்பொழுதேனும் சந்தகப்பட்டிருந்தால், என்னை மன்னித்துவிடு. 91 00:05:25,075 --> 00:05:27,494 நீ யூனியன் படைகளைப் போலவே அர்ப்பணிப்போடு இருக்கிறாய். 92 00:05:27,578 --> 00:05:31,373 ஆம். யாராவது என்னை வேறு விதமாக நினைப்பது, என்னை வேதனைப்படுத்துகிறது. 93 00:05:32,291 --> 00:05:35,961 வந்து, இந்த நகரம் மீண்டு வந்த கதையைக் கேட்க மிகவும் விரும்புகிறது. 94 00:05:36,044 --> 00:05:38,297 உனது குடும்பத்தினர் இங்கு இல்லாததற்காக நான் வருந்துகிறேன். 95 00:05:38,380 --> 00:05:41,383 -ஆனால் நாங்கள் இருந்தோமே. -எவலினா! 96 00:05:41,466 --> 00:05:44,636 உன்னுடைய அப்பாவின் சிறப்பான பெருமையை இப்பொழுது தான் நான் பாராட்டிக்கொண்டிருந்தேன். 97 00:05:44,720 --> 00:05:46,305 ஆமாம், அது சிறப்பாக இருந்தது, இல்லையா? 98 00:05:46,388 --> 00:05:48,557 லிங்கனால் கூட இதை விடச் சிறப்பாக சொல்லியிருக்க முடியாது. 99 00:05:48,640 --> 00:05:50,017 உண்மை தான். 100 00:05:50,100 --> 00:05:52,227 மேடைப் பேச்சில் நீ எப்போதுமே சிறந்தவன் தான், எட்வர்ட். 101 00:05:52,311 --> 00:05:54,271 நீ ஏன் அரசியலை விட்டு விலகினாய் என யோசிக்கிறேன். 102 00:05:54,354 --> 00:05:55,564 அதைப்பற்றி எனக்குத் தெரியாது. 103 00:05:56,148 --> 00:05:58,358 ஒருவேளை யோசித்துப் பார்க்கலாமோ? 104 00:05:59,026 --> 00:06:01,653 உங்கள் இருவருக்கும் நல்ல நாளாக அமையட்டும். 105 00:06:02,154 --> 00:06:03,363 நல்ல நாளாக அமையட்டும், கான்க்கீ. 106 00:06:05,407 --> 00:06:08,911 -வாழ்த்துக்கள், அப்பா. தூள் கிளப்பிவிட்டீர்கள். -அப்படியா நினைக்கிறாய்? 107 00:06:08,994 --> 00:06:09,995 நிச்சயமாக. 108 00:06:10,662 --> 00:06:12,664 உங்கள் மகளாக நான் இவ்வளவு பெருமைப்பட்டதே இல்லை. 109 00:06:14,249 --> 00:06:17,503 வாருங்கள். நாம் நடந்தே வீட்டிற்குச் செல்லலாம். வசந்த கால மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. 110 00:06:17,586 --> 00:06:18,587 சரி. 111 00:06:21,173 --> 00:06:22,549 திரு. டிக்கின்சன். 112 00:06:36,271 --> 00:06:38,232 சூ, நீ வந்துவிட்டாயே. 113 00:06:38,315 --> 00:06:40,442 -ஆமாம், கண்டிப்பாக. -உன் கணவர் இல்லாமல். 114 00:06:40,526 --> 00:06:42,986 அவர் குழந்தையைக் கவனித்துகொண்டு இருக்கிறார். நாங்கள் வீட்டு வேலைகளை 115 00:06:43,070 --> 00:06:44,988 தனித் தனியாகப் பிரித்து செயல்படுகிறோம். 116 00:06:46,949 --> 00:06:50,077 இருவரும் இப்பவும்“ட்ரம் பீட்” பத்திரிக்கையில் வேலை செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன், சரிதானே? 117 00:06:50,160 --> 00:06:52,996 ஜனாதிபதி லிங்கனின் அபிமானப் பத்திரிக்கையில் என்றா சொல்கிறாய்? 118 00:06:53,080 --> 00:06:55,624 ஆம், நாங்கள் அதில்தான் வேலை செய்கிறோம். ஏன்? 119 00:06:56,208 --> 00:06:59,586 அனாமதேயமாக, ஒரு விஷயத்தைச் சமர்ப்பிக்க விரும்புகிறேன். 120 00:07:08,178 --> 00:07:10,347 -அது வேடிக்கையாக இருந்தது. -ஆம். 121 00:07:12,516 --> 00:07:14,768 இதற்கு முன்னர் நான் டாஃபடில்ஸுடன் பேசியதே இல்லை. 122 00:07:14,852 --> 00:07:18,230 நீங்கள் அடிக்கடி பேச முயற்சிக்க வேண்டும். எப்போதுமே அவர்கள் நன்கு கவனிப்பவர்கள். 123 00:07:18,313 --> 00:07:21,984 ஆமாம். அவர்கள் நான் சொல்வதெற்கெல்லாம் தலையை ஆட்டிக்கொண்டே இருந்தார்கள். 124 00:07:22,860 --> 00:07:24,319 ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம். 125 00:07:27,322 --> 00:07:30,117 நான் உன்னிடம் வேறு விஷயம் பற்றி பேச நினைத்தேன், எம். 126 00:07:30,200 --> 00:07:31,118 என்னது? 127 00:07:31,201 --> 00:07:34,079 அது முக்கியமான விஷயம். எனக்காக நீ செய்ய வேண்டும் என்று கேட்க நினைத்தேன். 128 00:07:35,455 --> 00:07:39,334 நான் என்ன முடியுமோ... அதைச் செய்கிறேன்... டாஃபடில் மலர் மாதிரி சிறியதாக இருந்தாலும்... 129 00:07:39,418 --> 00:07:41,545 டாஃபடில், புத்திசாலித்தனம். 130 00:07:41,628 --> 00:07:45,507 சரி... என் அலுவலகத்திற்குள் வருகிறாயா? வா. 131 00:07:48,135 --> 00:07:49,720 அலங்கோலமாக இருப்பதற்கு மன்னிக்கவும். 132 00:07:49,803 --> 00:07:51,555 இந்த இடத்தை யாரோ சூறையாடியது போலத் தெரிகிறது. 133 00:07:51,638 --> 00:07:54,766 ஆம். மரபை உருவாக்க, கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. 134 00:07:54,850 --> 00:07:59,354 ஆனால், யாருக்கு எதை விட்டுச் செல்கிறேன் என்பதை ஒருவழியாக தீர்மானித்து விட்டேன். 135 00:07:59,438 --> 00:08:01,398 அதற்காகத் தான் உன் உதவி எனக்குத் தேவைப்படுகிறது. 136 00:08:02,524 --> 00:08:03,525 சரி. 137 00:08:03,609 --> 00:08:06,153 என்னுடைய உயிலை நீதான் நிறைவேற்ற வேண்டும். 138 00:08:06,820 --> 00:08:08,822 -நானா? -ஆமாம், நீதான். 139 00:08:08,906 --> 00:08:11,700 இது வழக்கத்திற்கு மாறான வேண்டுகோள் என்று தெரியும். 140 00:08:12,451 --> 00:08:16,455 ஆனால், ஒரு உயிலை நிறைவேற்றுபவர், ஆரோக்கியமான உடல் மற்றும் மன நலத்துடன் இருக்க வேண்டும், 141 00:08:17,039 --> 00:08:21,001 உயிலின் சாராம்சங்களை நிறைவேற்றுபவராக இருக்க வேண்டும், 142 00:08:21,084 --> 00:08:23,670 நம்மால் பேச முடியாத போது, நமக்காகப் பேசுபவராக இருக்க வேண்டும், 143 00:08:23,754 --> 00:08:26,632 உங்கள் நம்பிக்கைக்கு உரியவராக இருக்க வேண்டும். 144 00:08:29,510 --> 00:08:32,179 அப்பா. நீங்கள் என்னை இப்படி நினைக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. 145 00:08:32,260 --> 00:08:35,807 ஆமாம், வழக்கமாக, இந்தப் பொறுப்பு மூத்த மகன் மேல் தான் விழும், 146 00:08:35,890 --> 00:08:39,436 ஆனால், இந்தக் குடும்பத்தில் விஷயங்கள் வேறு மாதிரி ஆகிவிட்டன. 147 00:08:40,229 --> 00:08:42,731 கவலைப்படாதீர்கள், அப்பா. 148 00:08:44,107 --> 00:08:48,862 ஒரு மகன் உங்களுக்குச் சேவை செய்ய இருக்கிறான். நீங்கள் இதற்கு முன் கவனிக்காமல் இருந்திருக்கலாம். 149 00:08:49,363 --> 00:08:51,740 ஒத்துக்கொள்கிறேன், நான் கவனிக்கவில்லை. 150 00:08:51,823 --> 00:08:53,075 ஆனால், தாமதமாகி விடவில்லை. 151 00:08:53,158 --> 00:08:55,202 -தயவுசெய்து, உட்காரு. -நன்றி. 152 00:08:55,285 --> 00:08:56,912 இது என் பாக்கியம். 153 00:08:57,663 --> 00:09:00,499 -சார். -நல்ல பையன். நல்ல பையன். 154 00:09:00,582 --> 00:09:01,834 சீக்கிரம் செயல்படு. 155 00:09:03,585 --> 00:09:04,711 சரியா? 156 00:09:05,295 --> 00:09:07,422 -நீங்கள் தயாராக இருந்தால், நானும் தயார், அப்பா. -பிரமாதம். 157 00:09:08,090 --> 00:09:12,177 எட்வர்ட் டிக்கின்சன் எனும் நான், தெளிவான மனதுடனும், பகுத்துணர்வுடனும்... 158 00:09:14,513 --> 00:09:19,977 இது என் இறுதி உயில் சாசனம் என்று அறிவிக்கிறேன். 159 00:09:20,060 --> 00:09:21,645 தெளிவான மனதுடனும் பகுத்துணர்வுடனும் 160 00:09:21,728 --> 00:09:23,021 என்னுடைய இறுதி உயில் சாசனம் 161 00:09:23,105 --> 00:09:24,106 கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸ் 162 00:09:24,189 --> 00:09:25,732 இந்த இறுதி உயில் சாசனத்தில் என்னுடைய பெயர் 163 00:09:33,740 --> 00:09:35,576 இறுதி உயில் சாசனம் 164 00:10:05,230 --> 00:10:07,357 அட்டேன்ஷன்! 165 00:10:26,251 --> 00:10:27,336 அடச்சே. 166 00:10:42,976 --> 00:10:44,394 கர்னல் டி டபள்யூ ஹிக்கின்சன் பியூஃபோர்ட், தெற்கு கரோலினா 167 00:10:44,478 --> 00:10:46,939 எமிலி டிக்கின்சன் ஆம்ஹர்ஸ்ட், மாசசூசெட்ஸ் 168 00:10:54,905 --> 00:10:56,406 எமிலி. 169 00:10:56,490 --> 00:10:58,575 அந்தக் கடைசி உரிமை புரிந்ததா? 170 00:10:58,659 --> 00:11:01,203 புரிந்தது. மன்னிக்கவும்... ஆமாம். 171 00:11:01,286 --> 00:11:04,665 “ஆம்ஹெர்ஸ்ட் கல்லூரி அறக்கட்டளைக்கு 1000 டாலர் தொகை கொடுக்கப்படும்.” 172 00:11:04,748 --> 00:11:05,874 -நல்லது. -ஆம். 173 00:11:05,958 --> 00:11:09,086 -ஒரு கணம், நீ கவனிக்கவில்லையோ என நினைத்தேன். -அப்பா, நான் என்ன யோசித்தேன் தெரியுமா? 174 00:11:10,003 --> 00:11:12,047 உதவித் தொகை அளிக்கும் ஒரு அமைப்பை நீங்கள் உருவாக்க வேண்டும். 175 00:11:12,130 --> 00:11:13,215 உதவித் தொகையா? 176 00:11:13,715 --> 00:11:18,762 ஆம். உங்கள் பாரம்பரியத்தை விரிவாக்க, மக்களிடம் முதலீடு செய்வதை விடச் சிறந்த வழி வேறு என்ன? 177 00:11:18,846 --> 00:11:20,931 பெயரை ஒரு கட்டிடத்தில் பொறிப்பது மட்டும் போதாது. 178 00:11:22,558 --> 00:11:25,435 இது புத்திசாலித்தனமான விஷயம். மிகவும் அருமையான விஷயம். 179 00:11:27,396 --> 00:11:29,982 கடவுளே. ஆஸ்டின் இந்த மாதிரி எதையும் யோசித்தே இருக்க மாட்டான். 180 00:11:30,065 --> 00:11:31,275 வந்து... 181 00:11:32,568 --> 00:11:34,236 தெரியுமா, எம்... 182 00:11:36,321 --> 00:11:39,199 நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று எனக்கு இப்பொழுது புரிகிறது. 183 00:11:40,242 --> 00:11:43,078 சமீப காலமாக நம் குடும்பத்தினர் என்னைக் கைவிட்டதாக உணர்ந்தேன், ஆனால்ஒருபோதும் நீ என்னைக் கைவிடவில்லை 184 00:11:43,161 --> 00:11:44,663 என்பதை நான் ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும். 185 00:11:44,746 --> 00:11:46,665 நீ எப்பொழுதும் எனக்கு விசுவாசமாகத் தான் இருந்தாய், 186 00:11:47,541 --> 00:11:50,127 நான் அதற்குத் தகுதியானவன் இல்லை என்றாலும் கூட. 187 00:11:51,461 --> 00:11:54,756 நீ என்னை நிறையவே மன்னிக்க வேண்டும். 188 00:11:56,633 --> 00:12:00,304 நான் இறக்கும் போது அதற்காக உனக்கு நன்றியோடு இருப்பேன் என்பதை நீ தெரிந்துகொள்ள வேண்டும். 189 00:12:00,387 --> 00:12:05,350 நான் விரும்பியது எல்லாம்... எப்போதும் உன்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே. 190 00:12:05,976 --> 00:12:08,812 எனக்குத் தெரியும், அப்பா. நன்றி. 191 00:12:09,479 --> 00:12:12,649 நீயும் நானும் இந்தக் குடும்பத்தின் மீது அதிக அக்கறையுடன் இருக்கிறோம். 192 00:12:12,733 --> 00:12:13,734 உண்மை தான். 193 00:12:14,818 --> 00:12:18,488 உங்களுடைய சகோதரன் எதிரணியில் இருப்பது, எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று எனக்குப் புரிகிறது. 194 00:12:19,865 --> 00:12:22,701 இனி நம் இருவருக்குமிடையில் இப்படி எதுவும் நடக்காமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். 195 00:12:23,660 --> 00:12:27,122 இல்லை. இனி எதுவும் நம்மைப் பிரிக்காது. 196 00:12:28,040 --> 00:12:29,166 அது நடக்காது. 197 00:12:46,850 --> 00:12:48,185 அப்போ, கிட்டத்தட்ட முடித்துவிட்டோம். 198 00:12:48,769 --> 00:12:52,689 -ஆம். கடைசிப் பகுதி மட்டும் தான் உள்ளது. -சரிதான். 199 00:12:54,107 --> 00:12:55,359 -சொல்லுங்கள். -சரி. 200 00:12:56,860 --> 00:12:58,445 இந்த குடும்பத்தின் வீடு. 201 00:12:58,529 --> 00:13:00,280 280 மெயின் ஸ்ட்ரீட், அம்ஹெர்ஸ்ட்... 202 00:13:01,907 --> 00:13:06,787 எஞ்சியிருக்கும் மற்ற உடைமைகளுடன், 203 00:13:08,539 --> 00:13:11,208 என்னுடைய மகன்... 204 00:13:13,877 --> 00:13:17,381 வில்லியம் ஆஸ்டின் டிக்கின்சன் எஸ்கொயருக்கு கொடுக்கப்படும். 205 00:13:28,433 --> 00:13:31,478 என் வாழ்க்கை குண்டு ஏற்றப்பட்ட துப்பாக்கி போல் நின்றுவிட்டது... 206 00:13:32,062 --> 00:13:37,442 அவனுடைய மரணத்திற்குப் பின்னர், அவை அவனுடைய மகனுக்கு... 207 00:13:37,526 --> 00:13:38,569 கடவுளே. 208 00:13:41,530 --> 00:13:43,949 அந்த சிறுவனுக்கு இன்னும் பெயர் கூட வைக்கவில்லை. 209 00:13:44,658 --> 00:13:46,952 “அவனுடைய மூத்த மகன்” என்று மட்டும் போடு. 210 00:13:48,829 --> 00:13:50,914 மூலைகளில் - ஒரு நாள் வரை 211 00:13:52,457 --> 00:13:53,542 அதைக் கற்பனை செய்து பார். 212 00:13:54,418 --> 00:13:56,420 பெயரே வைக்கப்படாத உன் சகோதரனின் மகன், 213 00:13:56,503 --> 00:13:59,006 ஒரு நாள் உனக்கும் பாதுகாவலனாக ஆக முடியும் என்பதை. 214 00:14:00,674 --> 00:14:02,301 வாழ்க்கை எவ்வளவு வேடிக்கையானது. 215 00:14:02,885 --> 00:14:05,804 உரிமையாளர் கடந்து சென்றார் - அடையாளம் காணப்பட்டார்... 216 00:14:07,848 --> 00:14:09,850 என்னைக் கூட்டிச் சென்றார். 217 00:14:11,435 --> 00:14:13,437 என்ன விஷயம், அன்பே? 218 00:14:14,354 --> 00:14:15,939 எல்லாவற்றையும் ஆஸ்டினுக்கே... 219 00:14:17,774 --> 00:14:19,902 கொடுத்து விடுவதாக, உண்மையாகத்தான் சொல்கிறீர்களா? 220 00:14:22,613 --> 00:14:23,822 சும்மா அப்படியே? 221 00:14:25,157 --> 00:14:28,035 இவ்வளவு நடந்த பிறகுமா? எல்லாவற்றையுமா? 222 00:14:28,952 --> 00:14:29,995 நிச்சயமாக. 223 00:14:32,539 --> 00:14:33,916 வேறு யாருக்கு அது போக முடியும்? 224 00:14:36,502 --> 00:14:37,503 பெண்கள் உங்களுக்கா? 225 00:14:38,086 --> 00:14:41,006 ராஜ வனங்களில் நாம் சுற்றி வருகிறோம் 226 00:14:42,132 --> 00:14:43,509 இப்போது பெண் மானை வேட்டையாடுகிறோம்... 227 00:14:45,219 --> 00:14:47,387 நான் ஒவ்வொரு முறை அவரைப் பற்றி பேசும் போதும் 228 00:14:48,847 --> 00:14:50,516 நான் எல்லாவற்றையும் என் மகளுக்குக் கொடுத்து விட்டதால், 229 00:14:51,475 --> 00:14:53,143 அது எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார். 230 00:14:53,227 --> 00:14:55,479 அந்த உயிலை வங்கியே கிழித்துவிடவும் வாய்ப்புள்ளது. 231 00:14:55,562 --> 00:14:59,066 எனக்குப் புத்தி சரியில்லை என்று நினைப்பார்கள். பெண்களுக்குச் சொத்தில் உரிமை இல்லை. 232 00:14:59,149 --> 00:15:01,568 இல்லை, எம், அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறார்கள், இது அவர்களைப் பாதிக்கும். 233 00:15:01,652 --> 00:15:04,112 அவர்கள் சொந்த முடிவுகளை எடுப்பார்கள் என்று சும்மா நம்ப முடியாது. 234 00:15:04,196 --> 00:15:06,240 அதனால் தான் அவர்களை ஆணின் பொறுப்பில் விட வேண்டியுள்ளது. 235 00:15:06,323 --> 00:15:09,910 எனக்குப் பிறகு, ஆஸ்டினின் பொறுப்பில். அவனுக்குப் பிறகு, அவனுடைய மகனின் பொறுப்பில். 236 00:15:09,993 --> 00:15:12,204 வரப்போகும் பல தலைமுறைகளிலும் இந்தக் குடும்பத்தில் 237 00:15:12,287 --> 00:15:15,249 ஆண்கள் தான் பொறுப்பில் இருப்பார்கள். 238 00:15:15,332 --> 00:15:17,876 பெண்களாகிய நீங்கள் சுதந்திரம் என்ற பளுவை 239 00:15:17,960 --> 00:15:21,088 உங்கள் தோள்களில் சுமக்க வேண்டியதில்லை. 240 00:15:24,508 --> 00:15:26,051 அதற்காகக் கவலைப்படாதே, அன்பே. 241 00:15:26,718 --> 00:15:28,720 உங்களை நன்கு கவனித்துக்கொள்வோம். 242 00:15:30,347 --> 00:15:33,058 எப்படி இருந்தாலும், நான் உறுதியளிக்கிறேன், 243 00:15:33,141 --> 00:15:36,144 இது மாசசூசெட்ஸ் சட்டப்படி கச்சிதமாக நடக்கும். 244 00:15:40,148 --> 00:15:42,609 மலைகள் நேரடியாகப் பதில் அளித்தன... 245 00:15:45,028 --> 00:15:48,740 இப்படிப்பட்ட ஒரு மனிதன், எனக்கு அப்பாவாக கிடைத்ததற்கு... 246 00:15:50,784 --> 00:15:54,872 நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்ற நினைப்பில் தான் நான் வளர்ந்தேன். 247 00:15:56,790 --> 00:16:00,627 குறிக்கோள் உடைய மனிதன், அற்புதமான விஷயங்களை செய்யக்கூடிய, 248 00:16:01,170 --> 00:16:02,713 வலிமை வாய்ந்த, 249 00:16:02,796 --> 00:16:04,882 இந்த உலகத்தையே மாற்றக் கூடிய மனிதன். 250 00:16:10,637 --> 00:16:11,972 ஆனால் உண்மையில்... 251 00:16:16,643 --> 00:16:17,978 நீங்கள் அப்படி கிடையவே கிடையாது. 252 00:16:18,729 --> 00:16:19,938 மன்னிக்கவும், என்ன? 253 00:16:21,231 --> 00:16:24,610 நீங்கள் ஒரு பயந்து போன ஆடு போன்றவர். 254 00:16:26,278 --> 00:16:31,700 எவ்வித கற்பனையும் இல்லாததால் உங்களால் எதையும்... 255 00:16:33,869 --> 00:16:35,704 மாற்ற முடியாது. 256 00:16:37,247 --> 00:16:42,503 அந்த காரணத்திற்காக, நீங்கள் யார், எப்படிப்பட்டவர் என்பதில் யாரும் அக்கறை கொள்ள மாட்டார்கள். 257 00:16:47,674 --> 00:16:49,176 நான் ஒரு தவறு செய்துவிட்டேன். 258 00:16:54,640 --> 00:16:56,892 உங்களைப் பற்றி ஆஸ்டின் சொன்னது சரி. 259 00:17:00,687 --> 00:17:01,897 நான் நினைத்தது தான் தவறு. 260 00:17:06,608 --> 00:17:07,611 எம். 261 00:17:08,278 --> 00:17:11,281 பள்ளத்தாக்கின் வெளிச்சத்தில் 262 00:17:13,951 --> 00:17:15,577 நான் இனிமையாக சிரிக்கிறேனா... 263 00:17:18,872 --> 00:17:20,832 அது ஒரு வெசுவியன் போன்ற முகம் 264 00:17:22,791 --> 00:17:25,045 தன்னுடைய மகிழ்ச்சியை வெளியே... 265 00:17:25,127 --> 00:17:26,380 -கவனமாக இரு! -அட, கடவுளே! 266 00:17:26,463 --> 00:17:29,049 -பெட்டி, மன்னிக்கவும். நான் கவனிக்கவில்லை. -நீ கவனிக்க வேண்டும். 267 00:17:29,132 --> 00:17:30,843 விஷயங்கள் மோசமாகிக் கொண்டே போகின்றன. 268 00:17:30,926 --> 00:17:33,345 -நான் கிளம்புகிறேன். -பெட்டி, இதை எப்படி செய்வது என சொல்லுங்காள். 269 00:17:33,428 --> 00:17:34,513 தயவுசெய்து. 270 00:17:34,596 --> 00:17:37,099 எப்படி? எல்லாவற்றையும் எப்படி சமாளிக்கிறீர்கள்? 271 00:17:38,141 --> 00:17:40,602 ஏனென்றால் உலகம் மிகவும் குழப்பமானது, உண்மையில், 272 00:17:41,478 --> 00:17:42,896 என்னால் இனி சமாளிக்க முடியவில்லை. 273 00:17:42,980 --> 00:17:48,151 மன்னிக்கவும். என்னால் முடியாது. இதற்கு என்னிடம் நேரம் இருக்கிறது என்று உனக்கு எப்படி தெரியும்? 274 00:17:48,861 --> 00:17:51,446 -பெட்டி, என்ன பிரச்சினை? -தெற்கில் உள்ள படைப்பிரிவில் 275 00:17:51,530 --> 00:17:53,574 ஹென்ரி இப்போது சேர்ந்திருப்பது தான் பிரச்சினை. 276 00:17:53,657 --> 00:17:57,119 -அவர் உனக்கு கடிதம் எழுதினார். -இல்லை! தபால்காரர் மூலம் தெரிந்துகொண்டேன். 277 00:17:57,202 --> 00:18:00,539 அப்படியென்றால், தன் குடும்பத்திற்கு தவிர பிறருக்கு கடிதம் எழுத 278 00:18:00,622 --> 00:18:01,748 ஹென்ரியால் முடிகிறது. 279 00:18:01,832 --> 00:18:04,418 ஆக, ஹெலன் தன் அப்பாவை இழக்கப் போகிறாள் என்பது மட்டுமல்ல, 280 00:18:04,501 --> 00:18:07,087 அதைப் பற்றி எங்களிடம் சொல்ல கூட அவருக்கு அக்கறை இல்லை. 281 00:18:07,171 --> 00:18:09,298 இல்லை. அவருக்கு அக்கறை உண்டு, கண்டிப்பாக உண்டு. 282 00:18:10,048 --> 00:18:12,676 பெட்டி, அவர் உன்னைங்களையும், ஹெலனையும் நேசிக்கிறார். 283 00:18:12,759 --> 00:18:14,678 இப்போது அவர் இருக்கும் இடம் உங்களுக்கு தெரிந்துவிட்டது. 284 00:18:14,761 --> 00:18:18,390 அவர்களை நோக்கி ஒரு கூட்டமைப்பாளர் படை வருகிறது, அவர்களிடம் துப்பாக்கிகள் கூட இல்லை. 285 00:18:18,932 --> 00:18:21,101 -நான் வருந்துகிறேன், பெட்டி. -எனக்கு உன் வருத்தம் தேவையில்லை! 286 00:18:21,685 --> 00:18:25,522 இல்லை, அப்படிச் சொல்லவில்லை... நான் தெளிவாக இப்போது யோசிக்கவில்லை. 287 00:18:25,606 --> 00:18:27,316 என் அப்பாவோடு இப்போது தான் சண்டை போட்டேன். 288 00:18:27,399 --> 00:18:28,400 -பிறகு... -ஆமாம்! 289 00:18:28,483 --> 00:18:33,238 தங்களையே நாசமாக்கி கொள்வதில் உன் குடும்பம் மும்முரமாக இருக்கிறார்கள். 290 00:18:33,322 --> 00:18:36,366 அதற்குள்ளாகவே, இந்த உலகம் என் குடும்பத்தை நாசமாக்கிவிட்டது. 291 00:18:36,450 --> 00:18:37,868 நம்பிக்கையோடு இருங்கள், பெட்டி. 292 00:18:37,951 --> 00:18:40,579 நம்பிக்கையா? நம்பிக்கை என்பதே பொய்! 293 00:18:40,662 --> 00:18:44,374 எமிலி, என் நிலைமையில் நீ ஒருநாள் இருந்தால், அதை புரிந்துகொள்வாய். 294 00:18:44,458 --> 00:18:47,878 சரி, போய் வேண்டுமளவு கவிதைகளை எழுது. 295 00:18:47,961 --> 00:18:49,838 அது எதையும் மாற்றாது. 296 00:18:50,714 --> 00:18:52,549 நம்பிக்கை என்ற விஷயத்தில் எனக்கு ஈடுபாடு இல்லை. 297 00:18:53,217 --> 00:18:54,218 எதுவும் இல்லை. 298 00:18:54,801 --> 00:18:56,929 நம்பிக்கை என்னை அழ மட்டும் தான் வைத்தது. 299 00:18:59,306 --> 00:19:00,641 பெட்டி. 300 00:19:05,145 --> 00:19:07,856 இரவு நேரத்தில் - நமது நாள் முடிவு பெற்ற பின்... 301 00:19:08,398 --> 00:19:10,317 என் தலைவனை நான் காவல் காப்பேன்... 302 00:19:10,943 --> 00:19:12,861 எய்டர்-டக்கின் ஆழமான தலையணையைவிட 303 00:19:12,945 --> 00:19:15,697 அதை பகிர்ந்து கொண்டது - சிறப்பானது... 304 00:19:15,781 --> 00:19:18,450 அவனுடைய எதிரியுடன் - நான்தான் அந்த எதிரி... 305 00:19:18,534 --> 00:19:20,202 இரண்டாவது முறை யாரும் வரவில்லை... 306 00:19:24,748 --> 00:19:27,000 கவனமாக அவர்களை பார்த்தேன்... 307 00:19:27,084 --> 00:19:28,627 கைகளை தயாராக வைத்து... 308 00:19:29,920 --> 00:19:32,673 அவனை விட நான் - நீண்டு வாழ முடியும் 309 00:19:32,756 --> 00:19:35,217 என்னை விட - அவன் நீண்டு வாழ வேண்டும்... 310 00:19:55,320 --> 00:19:58,574 கொலை செய்யும் சக்தி எனக்கு இருக்கிறது 311 00:20:01,034 --> 00:20:04,454 இறக்கும் - சக்தி இல்லை... 312 00:20:29,688 --> 00:20:30,689 நீ செய்துவிட்டாய். 313 00:20:35,986 --> 00:20:36,987 ஒரு குழியா? 314 00:20:39,323 --> 00:20:40,324 ஒரு நெருப்புக் குழம்பு. 315 00:20:43,869 --> 00:20:45,412 “நம்பிக்கை முழுவதையும் இழந்து விடு.” 316 00:20:46,914 --> 00:20:49,875 நம்பிக்கை முழுவதையும் இழந்தால், உண்மையான நம்பிக்கை எங்கிருக்கிறது என தெரியும், 317 00:20:49,958 --> 00:20:51,460 மிகவும் இருட்டான, 318 00:20:52,794 --> 00:20:54,296 நீ பார்க்காத இடத்தில் இருக்கும். 319 00:20:56,215 --> 00:20:57,216 நீ தயாரா? 320 00:20:57,799 --> 00:20:58,967 அப்படித்தான் நினைக்கிறேன். 321 00:21:00,093 --> 00:21:01,136 நீ முதலில் போ. 322 00:21:13,190 --> 00:21:14,316 பொறு! 323 00:21:15,359 --> 00:21:16,360 ப்ரேசர்? 324 00:21:18,028 --> 00:21:19,029 யாருமில்லை? 325 00:22:20,132 --> 00:22:21,633 வின்னி! 326 00:22:22,134 --> 00:22:23,135 நீ தானா. 327 00:22:24,469 --> 00:22:25,679 இங்கு என்ன செய்கிறாய்? 328 00:22:25,762 --> 00:22:27,139 எப்படித் தெரிகிறது? 329 00:22:27,222 --> 00:22:29,224 என் எல்லா கணவர்களையும் உயிரோடு வைக்க முயற்சி செய்கிறேன். 330 00:22:30,309 --> 00:22:31,602 இவர்கள் எல்லோரும் உன் கணவர்களா? 331 00:22:31,685 --> 00:22:34,479 எல்லோரும் மற்றும் யாருமில்லை என்று ஆக்கியதற்கு உனக்கு தான் நன்றி சொல்லணும். 332 00:22:34,563 --> 00:22:35,647 எனக்கு நன்றியா? 333 00:22:36,231 --> 00:22:38,358 ஆமாம். உனக்குத் தான். 334 00:22:38,442 --> 00:22:41,528 என் வாழ்க்கை முழுவதையும் சுதந்திரமான, படைப்பாற்றல் பற்றி, 335 00:22:41,612 --> 00:22:45,324 நீ பேசியதைக் கேட்காமல் இருந்திருந்தால், உண்மையான அன்பைக் கண்டுபிடித்திருப்பேன். 336 00:22:45,407 --> 00:22:50,037 திருமணம் செய்வதை பற்றி யோசிக்க வேண்டிய நேரத்தில் நீ என்னை கலை கவிதை போன்ற 337 00:22:50,120 --> 00:22:52,247 எல்லா குப்பை பற்றியும் யோசிக்க வைத்து, கெடுத்துவிட்டாய். 338 00:22:54,625 --> 00:22:56,251 -இரு, அவை என்ன... -உன் கவிதைகளா? 339 00:22:56,335 --> 00:22:59,087 ஆமாம். தெரியுமா? அவற்றை நான் எரித்து விடுகிறேன். 340 00:22:59,171 --> 00:23:01,840 -அவை அதுக்குத்தான் லாயக்கு. -வேண்டாம். வேண்டாம்! 341 00:23:01,924 --> 00:23:03,217 வேண்டாம், வின்னி, நிறுத்து! 342 00:23:03,300 --> 00:23:07,554 இல்லை, நீ நிறுத்து. எது முக்கியமோ அதிலிருந்து என்னை திசை திருப்புவதை நிறுத்து. 343 00:23:08,138 --> 00:23:11,016 நான் மகிழ்ச்சியாக இருப்பதை கெடுப்பதை நிறுத்து. 344 00:23:13,810 --> 00:23:15,062 ஐயோ பாவம். 345 00:23:22,444 --> 00:23:24,112 எமிலி. 346 00:23:52,891 --> 00:23:55,102 ஆஸ்டின்? ஆஸ்டின், பொறு. நீ என்னை எங்கு அழைத்துச் செல்கிறாய்? 347 00:23:55,185 --> 00:23:58,188 மன்னித்துவிடு, எமிலி, நீ பைத்தியக்காரி. நீ உள்ளே அடைக்கப்பட வேண்டும். 348 00:23:58,272 --> 00:23:59,565 என்ன? ஏன்? 349 00:23:59,648 --> 00:24:01,900 நீ எனக்கு செய்ததை யாருக்கும் செய்யக்கூடாது என்பதற்காக. 350 00:24:01,984 --> 00:24:03,944 என்ன? நான் என்ன செய்தேன்? 351 00:24:04,027 --> 00:24:07,239 என் திருமணம் முறிந்ததற்கு நீ தான் முழு காரணம். 352 00:24:07,322 --> 00:24:09,825 ஆஸ்டின், இது நியாயமே இல்லை. நான் சூவை நேசித்தது உனக்கே தெரியும். 353 00:24:09,908 --> 00:24:13,328 அந்த மாதிரி நேசித்தாய் என தெரியாது. மேலும், நீ சூவை நேசிக்கவில்லை. 354 00:24:13,412 --> 00:24:17,291 சூவை நேசிப்பதாக கவிதை எழுத உனக்குப் பிடிக்கும். உன் அக்கறையெல்லாம் கவிதைகள் எழுதுவது பற்றி தான். 355 00:24:17,374 --> 00:24:18,500 அது உண்மை இல்லை. 356 00:24:18,584 --> 00:24:20,252 உண்மை தான். உனக்கே அது தெரியும். 357 00:24:20,335 --> 00:24:22,713 ஆஸ்டின், நான் சூவை நேசிக்கிறேன். உன்னையும் நேசிக்கிறேன். 358 00:24:22,796 --> 00:24:25,340 அது உண்மை என்றால், எங்களுக்கு நீ ஒரு வாய்ப்பு கொடுத்திருப்பாய். 359 00:24:25,424 --> 00:24:29,094 ஆனால், தொடர்ந்து அவளுக்காக கவிதைகள் எழுதினாய். உன்னால் கட்டுபடுத்த முடியவில்லை, இல்லையா? 360 00:24:29,178 --> 00:24:31,847 ஒவ்வொன்றும், ஒரு சிறு துளி விஷம். 361 00:24:31,930 --> 00:24:35,392 நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் வாய்ப்பை மெதுவாக கொல்லக்கூடிய சிறு துளிகள். 362 00:24:36,560 --> 00:24:37,603 ஆஸ்டின். 363 00:24:39,396 --> 00:24:41,190 சத்தியமாக, உன்னை காயப்படுத்த நினைக்கவில்லை. 364 00:24:42,482 --> 00:24:44,067 நீ என்னை காயப்படுத்தவில்லை, எமிலி. 365 00:24:45,402 --> 00:24:46,820 நீ என்னை அழித்துவிட்டாய். 366 00:24:55,787 --> 00:24:59,374 தனிமையில், பயத்தோடு இருக்கிறேன், எமிலி என் அம்மாவை இழந்துவிட்டேன். 367 00:24:59,458 --> 00:25:01,919 -அம்மா? -எனக்கு சாப்பாடு கொடுப்பாயா, எமிலி? 368 00:25:04,046 --> 00:25:05,297 அட, கடவுளே. 369 00:25:44,419 --> 00:25:45,420 அப்பா. 370 00:25:47,381 --> 00:25:48,382 அப்பா? 371 00:25:51,343 --> 00:25:52,386 அப்பா. 372 00:25:53,971 --> 00:25:55,347 அட, கடவுளே. 373 00:25:56,306 --> 00:25:57,933 இல்லை. இல்லை. 374 00:25:58,016 --> 00:26:00,394 இல்லை, இல்லை, இல்லை, இல்லை! அப்பா! 375 00:26:00,477 --> 00:26:02,813 அப்பா, இல்லை. இல்லை, இல்லை, இல்லை, இல்லை. 376 00:26:02,896 --> 00:26:04,314 எமிலி. 377 00:26:05,983 --> 00:26:11,864 அவர் இறந்துவிட்டார். 378 00:26:11,947 --> 00:26:14,700 ஆமாம். இனி நாம் ஒன்றாக இருக்கலாம். 379 00:26:14,783 --> 00:26:17,411 ஐயோ. இது என் தவறு. என் தவறு தான். நான் தான் அவரைக் கொன்றுவிட்டேன். 380 00:26:18,036 --> 00:26:20,122 குட் பை சொல்லிவிட்டு என்னோடு வா. 381 00:26:28,964 --> 00:26:29,965 என்னை மன்னித்துவிடுங்கள். 382 00:26:31,341 --> 00:26:32,342 நான் வருந்துகிறேன். 383 00:27:07,044 --> 00:27:10,005 பார். இப்போது நீயும் நானும் மட்டும் தான். 384 00:27:14,259 --> 00:27:15,469 இது அற்புதம். 385 00:28:56,570 --> 00:28:58,280 ஒருவேளை, நாம் இப்படி... 386 00:28:58,363 --> 00:29:02,659 கவலைப்படாதே, எமிலி. இங்கே நம்மை யாராலும் பார்க்க முடியாது. நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். 387 00:29:02,743 --> 00:29:05,120 நான் அதைச் சொல்லவில்லை. வந்து... 388 00:29:05,204 --> 00:29:07,915 என்ன? எனக்கு முத்தம் கூட கொடுக்க மாட்டாயா? 389 00:29:07,998 --> 00:29:10,375 இல்லை, கொடுப்பேன். கண்டிப்பாக கொடுப்பேன். வந்து... 390 00:29:11,043 --> 00:29:12,377 நீ சற்று மாறி... 391 00:29:12,461 --> 00:29:14,713 எனக்குத் தெரியும். இப்போது உனக்கு என் மேல் ஈர்ப்பு இல்லை. 392 00:29:14,796 --> 00:29:16,423 என் வாயிலிருந்து வார்த்தைகளை பிடுங்குகிறாய். 393 00:29:16,507 --> 00:29:19,259 சரி, அதை வேறு ஏதாவது செய்கிறேன். 394 00:29:19,927 --> 00:29:21,720 இரு, ஐயோ. 395 00:29:21,803 --> 00:29:23,472 -அட, கடவுளே, சூ! -என்னை விடு, எமிலி! 396 00:29:28,101 --> 00:29:30,020 நாம் உறவாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை, சரியா? 397 00:29:30,103 --> 00:29:32,856 -என்ன சொல்கிறாய்? -இனி எப்போதும் என்னைத் தொடாதே. 398 00:29:35,484 --> 00:29:36,527 இரு, சூ. 399 00:31:01,612 --> 00:31:02,654 சுடுங்கள்! 400 00:31:10,746 --> 00:31:11,788 ஹென்ரி! 401 00:31:25,010 --> 00:31:27,137 தாக்குங்கள்! 402 00:31:43,362 --> 00:31:45,239 இல்லை. ஹென்ரி! 403 00:31:59,586 --> 00:32:01,171 உங்களால் முடியும், ஹென்ரி! 404 00:32:01,255 --> 00:32:03,340 சோர்ந்து விடாதீர்கள்! தொடர்ந்து சண்டையிடுங்கள்! 405 00:32:06,301 --> 00:32:08,053 உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் தேவை. 406 00:32:24,278 --> 00:32:25,445 நாம் ஜெயித்து கொண்டிருக்கிறோம்! 407 00:32:26,029 --> 00:32:27,906 வெற்றி நமதே! 408 00:32:42,838 --> 00:32:44,339 அட, கடவுளே. 409 00:34:18,891 --> 00:34:20,893 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்