1 00:00:16,225 --> 00:00:20,020 அன்பு தோழி, சில சமயங்களில் உன் கடிதங்கள் மற்றும் கவிதைகளை எடுத்து, 2 00:00:20,771 --> 00:00:23,732 அவற்றின் அதிசயமான சக்தியை உணரும் போது, 3 00:00:24,816 --> 00:00:26,276 எழுதுவது எனக்குக் கடினமாக இருக்கிறது. 4 00:00:27,694 --> 00:00:31,782 உன்னை ஒருமுறையாவது பார்த்து நீ உண்மைதான் என்று அறிந்த பிறகு, 5 00:00:33,116 --> 00:00:34,451 நான் சற்று ஆசுவாசம் அடையலாம். 6 00:00:35,619 --> 00:00:39,957 இப்படிப்பட்ட சிறந்த எண்ணங்களை மனதில் வைத்துக்கொண்டு 7 00:00:40,040 --> 00:00:43,168 உன்னால் எப்படி தனிமையில் வாழ முடிகிறது என்பது எனக்குப் புரியவில்லை. 8 00:00:43,252 --> 00:00:46,672 ஆனால், இப்படிப்பட்ட அருமையான எண்ணங்கள் உனக்கு வருவது போல் 9 00:00:46,755 --> 00:00:50,801 மற்றவர்களுக்கும் வருவது, ஒரு கட்டத்திற்கு மேல் கடினமாக இருக்கும். 10 00:00:51,468 --> 00:00:54,096 எனவே இருப்பிடம் என்பது எந்த மாறுதலையும் உண்டாக்குவதில்லை. 11 00:00:55,013 --> 00:00:57,099 உன்னால் எப்போதாவது பாஸ்டனுக்கு வர முடியுமா? 12 00:00:58,100 --> 00:00:59,309 எல்லா பெண்களும் வருவார்கள். 13 00:01:00,602 --> 00:01:04,022 என்றும் உன் நண்பன், ஹிக்கின்சன். 14 00:01:06,900 --> 00:01:08,068 எமிலி. 15 00:01:08,944 --> 00:01:09,945 எமிலி. 16 00:01:10,529 --> 00:01:12,197 அம்மா இன்னும் எழுந்திருக்கவில்லை, மேகி வேலைக்கு வர மாட்டாள், 17 00:01:12,281 --> 00:01:14,449 நம் வீட்டிற்குள் குழாய் இல்லை. எனவே... 18 00:01:16,118 --> 00:01:17,536 நீ போய் தண்ணீர் கொண்டு வா. 19 00:01:17,619 --> 00:01:18,620 என்ன தெரியுமா? 20 00:01:20,539 --> 00:01:22,916 சில சமயங்களில் நான் தவறான நூற்றாண்டில் பிறந்தது போல தோன்றுகிறது. 21 00:01:27,004 --> 00:01:28,922 டிக்கின்சன் 22 00:01:29,006 --> 00:01:30,924 எதிர்காலம் ஒருபோதும் பேசாது 23 00:01:41,018 --> 00:01:42,477 அருமையான வசந்தகால காலைப்பொழுது! 24 00:01:43,061 --> 00:01:44,605 காலை வணக்கம், சூரிய ஒளியே. 25 00:01:46,732 --> 00:01:48,108 நான் டச்சு மொழி பேசுவேன் என்று தெரியுமா? 26 00:01:48,984 --> 00:01:51,486 இது அற்புதமான நாள். தபால் வருமென நம்புகிறேன். 27 00:01:51,570 --> 00:01:53,405 ஏன்? உனக்கு தபால்காரரைப் பிடிக்குமா? 28 00:01:53,488 --> 00:01:56,491 என்ன? இல்லை. ஹென்ரியிடமிருந்து வரும் கடிதத்திற்காக காத்திருக்கிறேன். 29 00:01:57,409 --> 00:01:59,745 -மறுபடியும் அதே குழப்பம். -நிலைமை மோசமாக இருக்குமோ என பயமாக உள்ளது. 30 00:02:00,746 --> 00:02:02,080 விரைவில் அவரிடமிருந்து கடிதம் வராவிட்டால், 31 00:02:02,164 --> 00:02:06,376 அவர் இறந்துவிட்டதை தவிர வேறு என்ன... காரணம் இருக்க முடியும்? 32 00:02:06,460 --> 00:02:08,753 -எனக்கு வேறு ஒரு விளக்கம் தோன்றுகிறது. -அப்படியா? 33 00:02:08,836 --> 00:02:11,465 பார், ஹென்ரி எங்கே பயணிக்கிறான் என எனக்குத் தெரியாது, 34 00:02:11,548 --> 00:02:14,176 ஆனாலும் ஒரு ஆண் தான் செல்லும் திசையை, தீர்மானிப்பது காம்பஸ் அல்ல. 35 00:02:14,259 --> 00:02:17,012 எங்கிருந்தாலும், அவன் வேறு ஒருத்தியுடன் உறவுகொள்ள முடியும். 36 00:02:17,095 --> 00:02:19,932 அப்படி இருந்தாலும், அவர் ஹெலனுக்கு கடிதம் எழுதலாமே. 37 00:02:20,015 --> 00:02:22,142 பெண்ணே, நீ யாருக்கு வக்காலத்து வாங்குகிறாய்? 38 00:02:22,226 --> 00:02:24,478 அவன் உன்னையும் ஹெலனையும் பிரிந்துவிட்டான். 39 00:02:24,561 --> 00:02:26,605 நீ மறுபடியும் சமுதாயத்தில் பழக வேண்டும். 40 00:02:27,189 --> 00:02:30,359 -என்ன சொல்கிறீர்கள்? -நீ மறுபடியும் டேட்டிங் செய்ய வேண்டும். 41 00:02:30,442 --> 00:02:32,819 உள்நாட்டு போரின் போது, என்னை டேட்டிங் செய்ய சொல்கிறீர்களா? 42 00:02:32,903 --> 00:02:37,282 கேள், எதுவும் நல்ல நேரம் கிடையாது, ஆனால் போர் காலமாக இருந்தாலும், இது வசந்த காலம். 43 00:02:37,366 --> 00:02:39,952 பறவைகள் பாடுகின்றன. பூக்கள் மலர்கின்றன. 44 00:02:40,035 --> 00:02:42,162 வசந்த காலம் தான் புது காதலுக்கான காலம், 45 00:02:42,246 --> 00:02:45,165 தன்னுடைய ஒழிப்புவாதி பத்திரிக்கையை முதன்மையாக நினைத்து 46 00:02:45,249 --> 00:02:48,377 உன்னை இரண்டாவதாக நினைக்கும், உன் முன்னாள் கணவனைப் பற்றி கவலைப்படாதே. 47 00:02:48,460 --> 00:02:49,670 கடந்த காலத்தை மறந்துவிட்டு, 48 00:02:49,753 --> 00:02:51,797 ஒரு புது எதிர்காலத்திற்கு நீ தயாராக வேண்டும். சீக்கிரம்! 49 00:02:51,880 --> 00:02:53,757 சுலபமாக சொல்லிவிட்டீர்கள். 50 00:02:54,633 --> 00:02:57,177 எப்படி இவ்வளவு தைரியமாக இருக்கிறீர்கள்? 51 00:02:57,261 --> 00:02:59,972 ஏனென்றால் எனக்குள் இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்த கடவுள் என்னை அழைத்தார். 52 00:03:00,055 --> 00:03:05,769 இப்போது, என் தோழி பெட்டிக்கு, அவளுடைய பழைய திறமைகள் வந்துவிட்டன என்று நம்புகிறேன். 53 00:03:06,353 --> 00:03:09,189 இப்படிப்பட்ட காலத்தில் நான் யாரை சந்திப்பேன்? 54 00:03:09,273 --> 00:03:10,816 வணக்கம், பெண்களே! 55 00:03:21,618 --> 00:03:22,870 -இவனா? -ஏன் கூடாது? 56 00:03:23,453 --> 00:03:26,164 -என்னால் முடியாது. நான் தயாராக இல்லை. -இது தான் சிறந்த காலம். 57 00:03:26,248 --> 00:03:27,875 எங்களுக்கு ஏதாவது கடிதம் இருக்கிறதா, ஃபிரெடி? 58 00:03:27,958 --> 00:03:29,251 துரதிஷ்டவசமாக, எதுவும் இல்லை. 59 00:03:29,877 --> 00:03:32,379 உனக்காக ஏதாவது கொண்டு வர விரும்புவேன், பெட்டி. 60 00:03:32,462 --> 00:03:34,590 உன் அழகான புன்னகையை பார்க்க எனக்கு பிடிக்கும். 61 00:03:34,673 --> 00:03:36,258 நடப்பதற்கு அருமையான நாள், இல்லையா? 62 00:03:36,341 --> 00:03:37,885 யாரால் நடக்க முடியும் என எனக்குத் தெரியும். 63 00:03:37,968 --> 00:03:40,345 அம்ஹெர்ஸ்டின் கடின உழைப்பாளியான தையல்காரி. 64 00:03:41,388 --> 00:03:43,390 என்னோடு தபால் விநியோகம் செய்ய, நீயும் வரலாம். 65 00:03:43,473 --> 00:03:46,310 அது டேட் இல்லை, அது வேலை. அவளை பிக்னிக் மாதிரி எங்காவது அழைத்துச் செல். 66 00:03:46,393 --> 00:03:50,439 சரி, உனக்கு விருப்பமென்றால், நாம் அதைச் செய்யலாம். 67 00:03:51,315 --> 00:03:52,357 நான்... 68 00:03:54,151 --> 00:03:55,527 சரி, அப்படி செய்யலாம். 69 00:03:56,737 --> 00:03:58,238 வெளிக்காற்றை சற்று சுவாசிக்கலாமே. 70 00:03:59,448 --> 00:04:03,952 ஆனால் விடியலுக்கு முன்னால், அதிக இருளாக இருக்கும் என்பதை மறக்காதே. 71 00:04:06,496 --> 00:04:09,708 எனக்குள்ளே இருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்காக நான் பேசுகிறேன்! 72 00:04:09,791 --> 00:04:11,877 பெண்ணே, எனக்கு 60 வயதாகிறது. 73 00:04:15,464 --> 00:04:16,673 எமிலி. 74 00:04:22,763 --> 00:04:23,931 மேலே பார். 75 00:04:25,974 --> 00:04:26,975 சூ. 76 00:04:28,393 --> 00:04:29,686 அங்கே என்ன செய்கிறாய்? 77 00:04:29,770 --> 00:04:31,355 உனக்காக காத்திருக்கிறேன். 78 00:04:32,105 --> 00:04:33,106 நாம் பேச வேண்டும். 79 00:04:33,899 --> 00:04:34,942 சரி, பேசலாம். 80 00:04:41,365 --> 00:04:42,991 நீ ஏன் என்னைப் பார்க்க வரவில்லை? 81 00:04:44,826 --> 00:04:46,620 நீ என் மீது கோபமாக இப்பதாக நினைத்தேன். 82 00:04:46,703 --> 00:04:49,164 கோபமாகத்தான் இருக்கிறேன். அதனால்தான் நீ என்னைப் பார்க்க வந்திருக்கணும். 83 00:04:49,248 --> 00:04:50,374 சூ, கேள். 84 00:04:52,000 --> 00:04:54,169 என்னுடைய வேலையைப்பற்றி நான் வேறு ஒருவரிடம் பேசியதற்காக 85 00:04:54,253 --> 00:04:57,589 நீ என் மீது கோபப்படுவது சரியில்லை. 86 00:04:58,131 --> 00:04:59,508 அதற்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 87 00:04:59,591 --> 00:05:01,426 முற்றிலும் சம்பந்தம் இருக்கிறது. 88 00:05:01,510 --> 00:05:04,137 எனக்காக மட்டுமே நீ எழுதுவதாக ஒருமுறை என்னிடம் சொல்லியிருக்கிறாய். 89 00:05:04,221 --> 00:05:06,974 ஆனால் என்னைப் பற்றிய எண்ணங்கள் மட்டுமே இப்போது உனக்கு போதவில்லை என நினைக்கிறேன். 90 00:05:07,057 --> 00:05:09,768 எனக்கு குழந்தை பிறந்துவிட்டதால், என் கருத்து மதிப்பற்றது என நினைக்கிறேன். 91 00:05:09,852 --> 00:05:12,479 இல்லை, குழந்தை பிறந்த பிறகு என் கவிதையை படிக்க உனக்குத்தான் நேரமில்லை. 92 00:05:12,563 --> 00:05:14,147 நீ எப்போதும் கவிதை எழுதிக் கொண்டிருப்பதால் 93 00:05:14,231 --> 00:05:16,692 என்னுடைய குழந்தையோடு நேரம் செலவிட மறுக்கிறாய்! 94 00:05:19,319 --> 00:05:20,529 இதோ சொல்லிவிட்டாயே. 95 00:05:21,488 --> 00:05:23,240 என்னுடைய கவிதைகள் மீது உனக்கு அக்கறை இல்லை. 96 00:05:23,323 --> 00:05:24,575 கண்டிப்பாக உண்டு. நான் வந்து... 97 00:05:24,658 --> 00:05:27,369 அப்படியென்றால் நான் வேறு ஒருவரிடம் கருத்து கேட்பதைப் பற்றி 98 00:05:27,452 --> 00:05:28,704 -நீ ஏன் கோபப்படுகிறாய்? -ஒரு ஆணிடமா? 99 00:05:28,787 --> 00:05:31,748 ஒரு அன்னியரிடமா? உனக்கு அறிமுகம் இல்லாதவரிடமா? 100 00:05:31,832 --> 00:05:32,916 ஆமாம்! 101 00:05:33,917 --> 00:05:35,669 அவருக்கு என்னைப்பற்றி ஒன்றும் தெரியாது. 102 00:05:35,752 --> 00:05:37,462 என் வார்த்தைகள் மட்டும்தான் தெரியும். 103 00:05:37,546 --> 00:05:40,883 அவருடைய உணர்ச்சிகள் பற்றி நான் கவலைப்படத் தேவை இல்லை. 104 00:05:42,092 --> 00:05:44,386 நீ ஒரு பகுதியை வெறுக்கிறேன் என்று சொல்வது போல. 105 00:05:46,388 --> 00:05:49,308 குழந்தையின் துணியை மாற்ற நான் உதவாதது தான் உனக்கு கோபம். 106 00:05:49,391 --> 00:05:51,643 அல்லது, உனக்கு ஒரு வரி பிடித்திருக்கிறது என்று சொல்லும் போது, 107 00:05:51,727 --> 00:05:53,937 அதற்கு உண்மையான அர்த்தம், நீ என்னை நேசிப்பதாக இருக்கலாம். 108 00:05:54,021 --> 00:05:56,565 நான் உன்னை நேசிக்கிறேன் தான், எமிலி, அதில் என்ன தவறு? 109 00:05:58,692 --> 00:06:02,070 கடவுளே, இப்படி வாழ்வது மிகவும் கொடுமை. ரொம்பவும் துயரமானது. 110 00:06:02,821 --> 00:06:06,325 என் தேவையெல்லாம், உன்னோடு இருந்து, 111 00:06:06,408 --> 00:06:08,619 இரவில் உன்னோடு படுக்கையில் தூங்குவது தான். 112 00:06:08,702 --> 00:06:12,247 அதற்கு பதிலாக, நாட்கள் மற்றும் வாரக் கணக்காக நான் எதுவும் இல்லாமல் காத்திருக்கிறேன். 113 00:06:13,040 --> 00:06:14,124 எதுவும் இல்லாமல் இல்லை. 114 00:06:15,209 --> 00:06:17,044 நான் கடிதம் எழுதுகிறேன். அது முக்கியமில்லையா? 115 00:06:17,127 --> 00:06:19,755 எமிலி, நீ ஒரு கவிஞர். 116 00:06:19,838 --> 00:06:21,715 நீ கடினமாக உழைத்து கவிதைகள் எழுதுகிறாய். 117 00:06:21,798 --> 00:06:23,717 உனக்கு ஒவ்வொரு வரியும் சரியாக இருக்க வேண்டும். 118 00:06:23,800 --> 00:06:25,010 ஆனால் எனக்கோ குழப்பம் தான் வேண்டும். 119 00:06:25,802 --> 00:06:28,096 வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்றுதான் எனக்கு வேண்டும். 120 00:06:29,765 --> 00:06:31,058 எனக்கு நீதான் வேண்டும். 121 00:06:32,184 --> 00:06:33,810 நீயும் அப்படி நினைக்கவே நான் விரும்புகிறேன். 122 00:06:34,520 --> 00:06:35,979 நிச்சயமாக எனக்கு நீ வேண்டும். 123 00:06:37,064 --> 00:06:39,316 ஆனால் என்னால் உன் வீட்டில் வாழ முடியாது. 124 00:06:39,399 --> 00:06:41,735 ஒரு விஷயம், ஆஸ்டின் என்னோடு பேசுவது கூட இல்லை. 125 00:06:41,818 --> 00:06:42,819 சரி. 126 00:06:43,487 --> 00:06:45,948 ஆஸ்டின் போருக்கு சென்றுவிட்டால்? அது பரவாயில்லையா? 127 00:06:47,241 --> 00:06:50,702 -என்ன சொல்கிறாய்? -திடமான ஆண்களை போருக்கு அனுப்புகிறார்களே. 128 00:06:50,786 --> 00:06:51,995 அவரும் போக வேண்டி வரும். 129 00:06:52,913 --> 00:06:56,041 ஆஸ்டின் போருக்குச் சென்றால், நீ வந்து என்னை சந்திப்பாயா? 130 00:06:56,124 --> 00:06:58,168 அல்லது ஏதாவது காரணம் சொல்வாயா? 131 00:07:01,505 --> 00:07:02,840 நான் போய் தண்ணீர் கொண்டு வருகிறேன். 132 00:07:02,923 --> 00:07:04,216 மழை வரப்போகிறது. 133 00:07:04,842 --> 00:07:05,843 என்னை முத்தமிடு. 134 00:07:10,806 --> 00:07:11,807 என்னால் முடியாது. 135 00:07:13,559 --> 00:07:14,852 இன்று நாள் நன்றாக இல்லை. 136 00:07:14,935 --> 00:07:18,355 அட, கடவுளே, எமிலி. இன்று மட்டும் தான் நம்மிடம் இருக்கிறது, சரியா? 137 00:07:22,442 --> 00:07:23,861 வேதனை! 138 00:07:26,029 --> 00:07:27,239 கொடுமை. 139 00:07:33,120 --> 00:07:34,121 வின்னி? 140 00:07:35,038 --> 00:07:37,207 வின்னி? என்ன பிரச்சினை? 141 00:07:39,084 --> 00:07:40,085 என்னைப் பார், 142 00:07:40,169 --> 00:07:44,173 என்னுடைய அம்மாவுக்காக, நாளும் பொழுதும் வீட்டு வேலை செய்கிறேன், 143 00:07:44,256 --> 00:07:47,009 ஆனால் நாளும் பொழுதும், நான் கனவு காண்பது, 144 00:07:47,092 --> 00:07:49,887 என் அழகான ஆனால் உணர்ச்சிபூர்வமாக இல்லாத கணவனுக்காக வீட்டு வேலை 145 00:07:49,970 --> 00:07:52,848 செய்ய வேண்டும் என்பது தான். 146 00:07:53,682 --> 00:07:56,143 கடவுளே, இனியும் என்னால் பொறுக்க முடியாது. 147 00:07:56,226 --> 00:07:59,313 என்னாலும் தான். வாழ்க்கை மோசமானது. 148 00:07:59,396 --> 00:08:02,065 நான் தனியாக இருக்கிறேன், அமெரிக்காவில் உள்நாட்டு போர் நடக்கிறது, 149 00:08:02,149 --> 00:08:03,775 இப்போது மழைப் பொழிகிறது. 150 00:08:03,859 --> 00:08:05,944 ஆமாம், இன்று மிகவும் மோசமான நாள். 151 00:08:06,028 --> 00:08:07,070 ஆமாம். 152 00:08:07,654 --> 00:08:08,822 இந்த போரின் ஒவ்வொரு நாளும், 153 00:08:08,906 --> 00:08:11,700 எல்லா விஷயங்களும் சரியாகிவிடும் என்று நான் நம்பிக் கொண்டே இருந்தேன், 154 00:08:12,284 --> 00:08:13,785 பிரச்சினைகள் முடிந்து, 155 00:08:13,869 --> 00:08:16,330 பிரகாசமான எதிர்காலத்தை நாம் பார்க்க முடியும் என்று நினைத்தேன். 156 00:08:16,413 --> 00:08:18,040 ஆனால் இது எதுவுமே நடக்கவில்லையே. 157 00:08:19,082 --> 00:08:20,751 நம் குடும்பம் பிரிந்து செல்கிறது. 158 00:08:20,834 --> 00:08:22,836 நான் கடந்த காலத்திற்கே போக விரும்புகிறேன். 159 00:08:22,920 --> 00:08:26,715 போர் ஆரம்பிப்பதற்கு முன்னர், என்னுடைய காதலர்கள் இறந்ததற்கு முன்னர். 160 00:08:26,798 --> 00:08:28,926 இல்லை, நான் எதிர்காலத்திற்குப் போக விரும்புகிறேன். 161 00:08:29,009 --> 00:08:33,388 இந்த குழப்பங்களை எல்லாம் தாண்டி போர் முடிந்து எல்லாம் வேறு விதமாக இருக்கும் காலம். 162 00:08:33,972 --> 00:08:36,390 கற்பனையில் நாம் ஒரு முறை கண் சிமிட்டி எதிர்காலத்திற்கு... 163 00:08:38,184 --> 00:08:40,102 செல்ல முடியும். உடனேயே போய்விடலாம். 164 00:08:43,732 --> 00:08:45,734 -அதைப் பார்த்தாயா? -அது என்ன? 165 00:08:45,817 --> 00:08:47,069 என்ன நடக்கிறது? 166 00:08:49,905 --> 00:08:51,073 எமிலி. 167 00:08:52,324 --> 00:08:53,575 -வின்னி? -என்ன? 168 00:08:53,659 --> 00:08:55,702 -நாம் நகர்கிறோமா? -அப்படித்தான் நினைக்கிறேன். 169 00:08:56,286 --> 00:08:57,287 எமிலி? 170 00:08:58,038 --> 00:08:59,665 -என்ன நடக்கிறது? -எனக்குத் தெரியவில்லை. 171 00:09:00,999 --> 00:09:02,793 -வின்னி! -எமிலி! 172 00:09:02,876 --> 00:09:03,877 அட, கடவுளே! 173 00:09:11,385 --> 00:09:12,886 அது என்ன? 174 00:09:12,970 --> 00:09:14,054 இப்போது என்ன நடந்தது? 175 00:09:15,514 --> 00:09:17,641 இந்த கஸிபோ சுற்ற ஆரம்பித்தது. 176 00:09:18,475 --> 00:09:19,560 ஆமாம், பிறகு நின்றுவிட்டது. 177 00:09:19,643 --> 00:09:20,894 மழையும் நின்றது. 178 00:09:22,020 --> 00:09:23,772 -வின்னி? -என்ன? 179 00:09:23,856 --> 00:09:25,941 இந்த வீடு உனக்கு வித்தியாசமாக தோன்றுகிறதா? 180 00:09:27,276 --> 00:09:29,403 -இரு... பயமாக இருக்கு, எமிலி. -என்ன... 181 00:09:32,072 --> 00:09:35,784 -அந்த வண்டியில் குதிரைகள் இல்லை! -அதன் பின்புறத்தில் இருந்து புகை வருகிறது! 182 00:09:35,868 --> 00:09:36,869 என்ன? 183 00:09:38,537 --> 00:09:40,539 -அட... -என்ன? 184 00:09:49,298 --> 00:09:50,340 என்ன? 185 00:09:53,385 --> 00:09:55,804 அம்ஹெர்ஸ்ட் 1955 ஆம் ஆண்டு மாணவர் புது சாதனை படைத்திருக்கிறார் 186 00:09:55,888 --> 00:09:57,306 1955? 187 00:09:59,141 --> 00:10:00,767 நாம் எதிர்காலத்தில் இருக்கிறோம்! 188 00:10:04,563 --> 00:10:08,525 கோடே'ஸ் லேடி'ஸ் புக் 189 00:10:08,609 --> 00:10:09,610 ஏப்ரான்களின் புது வகைகள் 190 00:10:09,693 --> 00:10:10,694 திருமதி. டிக்கின்சன்? 191 00:10:12,112 --> 00:10:15,240 எட்வர்ட், ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள்? நான் என் சரணாலயத்தில் இருக்கிறேன். 192 00:10:17,868 --> 00:10:19,578 கவலை தரும் ஒரு விஷயத்தைப் பார்த்தேன். 193 00:10:21,246 --> 00:10:22,539 எமிலியின் கிரீன்ஹவுஸில். 194 00:10:23,457 --> 00:10:24,625 நீ அறிய விரும்புவாய் என நினைத்தேன். 195 00:10:24,708 --> 00:10:27,711 என்ன? கிரீன்ஹவுஸா? எதைப்பற்றி பேசுகிறீர்கள்? 196 00:10:31,089 --> 00:10:33,717 அவள் வளர்த்த செடிகளுக்கிடையே, இது வளர்ந்து இருந்தது. 197 00:10:35,677 --> 00:10:37,262 சரி. இது என்ன? 198 00:10:38,680 --> 00:10:42,684 திருமதி. டிக்கின்சன், இது தான் கனாபிஸ். 199 00:10:43,769 --> 00:10:44,895 என்ன சொல்கிறீர்கள்? 200 00:10:44,978 --> 00:10:46,396 கனாபிஸ் சட்டிவா. 201 00:10:46,480 --> 00:10:49,358 ஹெம்ப், ஹாஷிஷ், டெவில்ஸ் வீட் என்று அதற்கு வேறு பெயர்கள் உண்டு. 202 00:10:50,400 --> 00:10:51,527 இது புது விதமான போதைப்பொருள். 203 00:10:51,610 --> 00:10:53,487 கிழக்கு நாடுகளில், இதை சுருட்டி புகைப்பார்கள். 204 00:10:53,570 --> 00:10:54,988 இது போதை தரும், திருமதி. டிக்கின்சன். 205 00:10:55,072 --> 00:10:57,824 சரி, ஆனால் இது பற்றி எமிலிக்கு நிச்சயம் எதுவும் தெரிந்திருக்காது. 206 00:10:57,908 --> 00:11:00,827 அழகாக இருந்ததால், அதை வளர்த்திருப்பாள். 207 00:11:00,911 --> 00:11:03,455 அட, நீ சொல்வது சரிதான். அவளுக்கு இது பற்றி தெரியாதிருக்கலாம். 208 00:11:03,539 --> 00:11:04,957 ஆனால் இது ஆபத்தான பொருள். 209 00:11:05,040 --> 00:11:10,128 இது பல விதமான கற்பனைகள், கனவுகள், மற்றும் மாயைகளை உண்டாக்கலாம். 210 00:11:10,963 --> 00:11:11,964 சரி... 211 00:11:13,090 --> 00:11:14,091 நாம் இதை சாப்பிடலாமா? 212 00:11:16,593 --> 00:11:18,512 என்ன? அப்படி செய்ய வேண்டுமா? 213 00:11:19,638 --> 00:11:21,139 ஒருமுறை தான் வாழ்கிறோம். 214 00:11:23,183 --> 00:11:24,434 -ஹலோ? -இது பூட்டியிருக்கிறது. 215 00:11:24,518 --> 00:11:26,228 -ஹலோ? -பூட்டியிருக்கிறது, நாம் எதிர்காலத்தில் உள்ளோம். 216 00:11:26,311 --> 00:11:28,397 இது சிறப்பு. இது பிரமாதம். 217 00:11:28,480 --> 00:11:30,899 இது நம் வீடு. அவர்கள் நம்மை அனுமதிக்க வேண்டும். 218 00:11:30,983 --> 00:11:33,235 யார் அந்த “அவர்கள்”? உள்ளே யார் இருக்கிறார்கள்? 219 00:11:33,318 --> 00:11:36,488 எமிலி, நாம் எதிர்காலத்தில் நூறு ஆண்டுகள் முன்னே வந்திருக்கிறோம். 220 00:11:37,489 --> 00:11:39,157 நம் மொத்த குடும்பமும் இறந்துவிட்டார்கள். 221 00:11:39,241 --> 00:11:42,411 சரி, எனக்கு சில பதில்கள் தேவை, அதுவும் விரைவாக தேவை. 222 00:11:45,706 --> 00:11:48,166 கண்டிப்பாக சைக்கிள்களுக்கு அனுமதி இல்லை 223 00:11:48,250 --> 00:11:49,251 உங்களால் உள்ளே போக முடியாது. 224 00:11:49,334 --> 00:11:51,211 செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் இதை பூட்டி வைப்பார்கள். 225 00:11:51,795 --> 00:11:53,881 பைத்தியக்கார பாட்டிகள் போல, ஏன் உடை உடுத்தியிருக்கிறீர்கள்? 226 00:11:55,215 --> 00:11:56,884 இது மலை ஏறும் நாளிற்கான உங்களுடைய உடையாக இருக்க வேண்டும். 227 00:11:56,967 --> 00:11:58,427 புரிகிறது. சிறப்பு. 228 00:11:58,510 --> 00:12:00,012 -மலை ஏறும் நாளா? -ஆமாம். 229 00:12:00,095 --> 00:12:02,681 ஸ்மித் கல்லூரியின் மலை ஏறும் நாள். செமஸ்டருக்கு ஒரு முறைதான் நடக்கும். 230 00:12:02,764 --> 00:12:04,016 வகுப்புகள் ரத்து செய்யப்படும், 231 00:12:04,099 --> 00:12:06,101 வெளியில் எல்லோரும் சுதந்திரமாக சுற்றி வந்து, 232 00:12:06,185 --> 00:12:07,686 சேட்டைகள் செய்து மகிழலாம். 233 00:12:08,395 --> 00:12:11,356 பெண்கள் மட்டும் படிக்கும் கல்லூரிகளும், அவற்றின் அதிசயமான விழாக்களும் பிடிக்குமா? 234 00:12:11,440 --> 00:12:15,194 பெண்கள் மட்டும் படிக்கும் கல்லூரிகளா? பெண்கள் இப்போது கல்லூரிக்குச் செல்கிறார்களா? 235 00:12:15,277 --> 00:12:17,362 ஆமாம். நம்மையே பாரேன், நாம் கல்லூரியில் இருக்கிறோம். 236 00:12:17,446 --> 00:12:20,657 ஆஹா! இந்த காலகட்டத்தில் வாழும் பெண்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது. 237 00:12:21,450 --> 00:12:22,701 இல்லை. இது சோகமானது. 238 00:12:23,202 --> 00:12:25,996 என் மனநலம் பாதிக்கப்பட்டு நான் பலமுறை தற்கொலை செய்துகொள்ள முயன்றேன். 239 00:12:27,206 --> 00:12:28,665 நான் சீனியர். நீங்கள் எந்த வருடம்? 240 00:12:28,749 --> 00:12:32,252 நாங்கள்... 1862ல் இருந்து வருகிறோம். 241 00:12:32,336 --> 00:12:34,546 சரி, நன்றாக நடிக்கிறீர்கள். 242 00:12:34,630 --> 00:12:36,507 ஆடைகள் எல்லாம் பொருத்தமாக இருக்கின்றன. 243 00:12:36,590 --> 00:12:38,842 இவற்றில் எப்படி நீங்கள் மூச்சு விடுகிறீர்கள் என்று புரியவில்லை. 244 00:12:38,926 --> 00:12:41,011 சரி, தயவுசெய்து, வழி விடுங்கள். நான் உள்ளே போக வேண்டும். 245 00:12:41,929 --> 00:12:43,305 உன்னிடம் சாவி இருக்கிறதா? 246 00:12:43,931 --> 00:12:46,350 அவர்கள் மறைத்து வைத்திருக்கும் இடம் தெரியும். இங்கே அடிக்கடி வருவேன். 247 00:12:46,934 --> 00:12:48,268 நீ வருவாயா? எதற்காக? 248 00:12:48,352 --> 00:12:49,728 ஏனென்றால் நான் ஒரு கவிஞர். 249 00:12:49,811 --> 00:12:52,940 இதுதான் அமெரிக்காவின் மிகச் சிறந்த கவிஞர், எமிலி டிக்கின்சனின் வீடு. 250 00:12:55,609 --> 00:12:56,610 எனவே... 251 00:12:58,070 --> 00:13:00,697 எமிலி டிக்கின்சன் இங்கே வாழ்ந்தாளா? 252 00:13:00,781 --> 00:13:02,282 ஆமாம், ரொம்ப காலத்திற்கு முன்னர். 253 00:13:02,366 --> 00:13:03,742 இப்போது எல்லாம் மூடப்பட்டுவிட்டது, 254 00:13:03,825 --> 00:13:06,912 என்றாலும் கல்லூரி பொறுப்பாளர்கள் சில சமயங்களில், சுற்றி அழைத்துச் செல்வர். 255 00:13:06,995 --> 00:13:10,165 -நான் சில முறை போயிருக்கிறேன். -நீ ஒரு கவிஞரா? 256 00:13:10,249 --> 00:13:12,334 ஆமாம். அப்படி ஆக முயற்சிக்கிறேன். 257 00:13:12,918 --> 00:13:15,963 இருந்தாலும் சில சமயங்களில் எந்தவித அழகான கருத்து அல்லது உண்மையும் 258 00:13:16,046 --> 00:13:18,298 என்னுடைய கற்பனை வளம் இல்லாத மூளையில் இருந்து தோன்றும். 259 00:13:18,882 --> 00:13:21,885 மனநல சிகிச்சையின் போது எனக்கு கொடுக்கப்பட்ட மின்சார அதிர்வினால் அப்படி இருக்கலாம். 260 00:13:21,969 --> 00:13:24,096 அல்லது என்னுடைய திறமையான ஆளுமையினால் இருக்கலாம். 261 00:13:24,179 --> 00:13:26,765 உன்னுடைய பெயர் என்ன? 262 00:13:28,100 --> 00:13:29,434 என் பெயர் சில்வியா. 263 00:13:29,518 --> 00:13:30,769 சில்வியா பிளாத். 264 00:13:31,687 --> 00:13:33,730 சிறந்த அமெரிக்க கவிஞர். 265 00:13:39,069 --> 00:13:40,487 எதிர்காலம் ஒருபோதும் பேசாது... 266 00:13:41,864 --> 00:13:43,949 முட்டாளை அவனுக்குப் பிடிக்காது 267 00:13:45,158 --> 00:13:47,286 சைகை மூலம் காட்டப்படும் வார்த்தை 268 00:13:48,579 --> 00:13:50,706 பெரிதாக இனி வரப்போகிறது... 269 00:14:02,509 --> 00:14:03,510 கர்னல் ஹிக்கின்சன்? 270 00:14:04,928 --> 00:14:07,055 கொஞ்சம் கவனிக்க முடியுமா, சார்? 271 00:14:07,139 --> 00:14:08,849 ஹென்ரி. கைகள் சேர்க்கலாம். 272 00:14:12,311 --> 00:14:13,562 உன்னை எதிர்பார்க்கவில்லை. உள்ளே வா. 273 00:14:16,356 --> 00:14:18,984 இந்த வரைபடத்தை புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். 274 00:14:19,067 --> 00:14:20,569 எனக்கு வரைபடங்கள் புரியாது. 275 00:14:21,904 --> 00:14:24,198 ஆனால், நீ என்ன கேட்க வந்தாய்? 276 00:14:30,162 --> 00:14:32,456 கூட்டமைப்பாளர்கள் முன்னேறி வந்து, இன்னும் கொஞ்ச காலத்தில் 277 00:14:32,539 --> 00:14:34,374 பியூஃபோர்டிற்கே போர் வந்துவிடும் என்பது 278 00:14:34,458 --> 00:14:38,045 உங்களுக்கு நன்றாகத் தெரியும். 279 00:14:38,128 --> 00:14:39,213 ஆமாம். 280 00:14:39,296 --> 00:14:41,757 உண்மையில், இதை நான் சரியாக புரிந்துகொண்டிருந்தால், 281 00:14:41,840 --> 00:14:43,675 நமது எதிரி இங்கிருந்து வந்து... 282 00:14:43,759 --> 00:14:44,760 அகலமான ஆறு 283 00:14:44,843 --> 00:14:46,386 ...நம்முடன் இதோ இந்த இடத்தில்... 284 00:14:46,470 --> 00:14:48,639 போர்ட் ராயல் தீவு 285 00:14:48,722 --> 00:14:49,723 ...போரிடுவார்கள். 286 00:14:53,268 --> 00:14:54,436 இது மோசமாக இருக்கப் போகிறது. 287 00:14:57,272 --> 00:14:58,273 ஹென்ரி... 288 00:15:00,859 --> 00:15:02,319 சில நேரங்களில் அட்லாண்டிக் பத்திரிக்கையின் 289 00:15:02,402 --> 00:15:04,404 சௌகரியமான அலுவலகத்தில் இளம் கவிஞர்களுக்கு, 290 00:15:04,988 --> 00:15:06,198 அறிவுரை சொல்வதையே விரும்புகிறேன். 291 00:15:06,949 --> 00:15:10,911 பறவைகளின் வாழ்க்கைப் பற்றி கட்டுரைகள் எழுதுவது இப்போது இனிமையான வாழ்க்கையாக தோன்றுகிறது. 292 00:15:11,662 --> 00:15:12,663 போர் நரகம் போன்றது. 293 00:15:12,746 --> 00:15:14,665 நான் இதை ஒப்புக்கொள்கிறேன், கர்னல். 294 00:15:15,707 --> 00:15:17,251 ஆனால் போர் வரும் போது, 295 00:15:17,334 --> 00:15:20,295 நம்முடைய ஆட்கள் என்ன செய்ய வேண்டும், என்று நினைக்கிறீர்கள்? 296 00:15:20,879 --> 00:15:23,215 அவர்களுக்கு உடற்பயிற்சி கொடுத்து தேர்வு நடத்தி, 297 00:15:23,298 --> 00:15:27,803 சீருடை கொடுத்து வீரர்கள் போல ஆக்கியிருக்கிறீர்கள், ஆனால் ஆயுதங்கள் கொடுக்கவில்லையே. 298 00:15:27,886 --> 00:15:32,808 வரிசையில் நின்று பீரங்கிக்கு அவர்கள் பலியாக வேண்டுமா? 299 00:15:32,891 --> 00:15:34,852 தடுப்புகளை பாதுகாத்து நிற்கும் படி ஜெனரல் சாக்ஸ்டன் 300 00:15:34,935 --> 00:15:36,562 இவர்களுக்கு ஆணையிட்டிருக்கிறார். 301 00:15:37,688 --> 00:15:39,022 மரியாதையுடன் சொல்வதென்றால், கர்னல், 302 00:15:39,106 --> 00:15:42,359 உண்மையான தடுப்புகள் இந்த அறையில் இருப்பது போல எனக்குத் தோன்றுகிறது. 303 00:15:46,363 --> 00:15:49,157 லிங்கன் அனுமதி கொடுத்த உடனேயே, என் வீரர்களின் கைகளில் துப்பாக்கி இருக்கும். 304 00:15:49,241 --> 00:15:50,868 அப்படிப்பட்ட நாள் வரவில்லை என்றால்? 305 00:15:50,951 --> 00:15:53,495 கண்டிப்பாக வரும்! அது நடக்கும்! 306 00:15:54,079 --> 00:15:56,498 ஆனால் நாம் அவசரப்படுத்தினால், 307 00:15:56,582 --> 00:15:58,959 ஏற்கனவே இருக்கும் நன்மையை இழக்க வேண்டி வரும். 308 00:15:59,042 --> 00:16:01,461 இந்த படைப்பிரிவை உருவாக்குவதற்காக நான் எப்படிப்பட்ட, 309 00:16:01,545 --> 00:16:03,255 கண்காணிப்பில் இருக்கிறேன் என உனக்குத் தெரியாது. 310 00:16:03,338 --> 00:16:05,591 ஒரு பயிரை வளர்த்து, அது எப்படி வளர்கிறது என்பதைப் பார்க்க, 311 00:16:05,674 --> 00:16:08,468 அதை தொடர்ந்து வெளியே எடுப்பது போன்றது இது. 312 00:16:08,552 --> 00:16:11,638 ஒரு சிறு தவறு கூட நம்மை நூறு ஆண்டுகளுக்கு பின்னால் கொண்டு சென்றுவிடும். 313 00:16:12,347 --> 00:16:15,058 -உனக்குப் புரியாது... -எனக்குப் புரியும், சார். 314 00:16:15,142 --> 00:16:18,520 ஒவ்வொரு நாளும்... நான் அப்படித்தான் வாழ்கிறேன். 315 00:16:18,604 --> 00:16:20,189 சரி, நான் என்ன செய்ய வேண்டும்? 316 00:16:22,399 --> 00:16:25,068 ஜனாதிபதியின் கட்டளையை மீறி, ஆயுதங்களைக் கொடுக்க வேண்டுமா? 317 00:16:26,236 --> 00:16:30,282 அது தீவிரவாதி செய்யக் கூடிய செயலாகத் தோன்றுகிறது. 318 00:16:30,908 --> 00:16:31,909 சரி... 319 00:16:33,285 --> 00:16:34,453 என்னால் அப்படி செய்ய முடியாது. 320 00:16:35,954 --> 00:16:36,955 அப்படியா. 321 00:16:41,960 --> 00:16:42,961 ஆனால்... 322 00:16:45,839 --> 00:16:46,840 ஆனால்... 323 00:16:50,093 --> 00:16:54,264 இவர்களுக்கு யாராவது ஆயுதம் கொடுக்க நினைத்தால், அவர்கள் என்ன செய்யலாம் என்று நான் சொல்வேன். 324 00:16:56,308 --> 00:16:57,559 அவர்கள்... 325 00:16:58,560 --> 00:17:01,188 ஷெல் ரோட்டில் கொண்டு வரப்படும் புது ரைஃபில்களை 326 00:17:01,271 --> 00:17:02,564 அவர்கள் கைப்பற்றலாம். 327 00:17:06,026 --> 00:17:09,445 சார்லஸ்டன் தொழிற்சாலையில் இருந்து வரும் ஓட்டுனரிடம், என் ஆணையின் படி 328 00:17:09,530 --> 00:17:11,865 அவர்கள் இடைத்தரகர்களாக வந்ததாக சொல்லலாம். 329 00:17:12,699 --> 00:17:15,786 அந்த தொழிற்சாலை பணியாளர்களுக்கு ராணுவ சட்டங்கள் பற்றி எதுவும் தெரியாது, 330 00:17:15,868 --> 00:17:17,371 எனவே யார் எதை சொன்னாலும் நம்புவார்கள். 331 00:17:19,122 --> 00:17:20,915 வேகன் நிறைய துப்பாக்கிகள் 332 00:17:22,125 --> 00:17:25,420 அப்படியே உங்களிடம் கொடுக்கப்படும். 333 00:17:31,885 --> 00:17:33,387 பியூஃபோர்ட் 334 00:17:38,767 --> 00:17:40,102 கர்னல் ஹிக்கின்சன்? 335 00:17:40,686 --> 00:17:41,770 ஆமாம். 336 00:17:50,821 --> 00:17:52,322 என் படுக்கையறையை என்ன செய்திருக்கிறார்கள்? 337 00:17:53,365 --> 00:17:55,117 அது என் படுக்கையே கிடையாது. 338 00:17:55,200 --> 00:17:56,869 நீ மிகவும் நன்றாக நடிக்கிறாய். 339 00:17:57,369 --> 00:17:59,413 நியூயார்கில் ஸ்ட்ராஸ்பெர்கில் பயிற்சி எடுத்தாயா? 340 00:17:59,496 --> 00:18:01,039 அவருக்குப் பெண்களை பிடிக்காது என கேள்விப்பட்டேன். 341 00:18:08,839 --> 00:18:10,632 வால்பேப்பர் மங்கியிருக்கிறது, 342 00:18:11,675 --> 00:18:13,093 அந்த ஓவியம் அந்த இடத்தில் இருக்கக்கூடாது. 343 00:18:13,177 --> 00:18:14,636 ஆனால் மேஜை சரியான இடத்தில் இருக்கிறது. 344 00:18:14,720 --> 00:18:17,681 ஆமாம், தென்மேற்கு ஜன்னலுக்கு அருகில் இருக்கிறது. 345 00:18:19,349 --> 00:18:20,893 ஐயோ. சரி. 346 00:18:20,976 --> 00:18:23,103 இந்த இடத்திற்கு சொந்தக்காரி போல உட்கார்ந்திருக்கிறாய். 347 00:18:23,187 --> 00:18:25,981 எமிலியின் ஆன்மாவோடு நான் இப்படித்தான் தொடர்புகொள்வேன். 348 00:18:30,736 --> 00:18:33,572 வேடிக்கை. இன்று அவளைத் தொடர்பு கொள்வது கடினமாக இருக்கிறது. 349 00:18:33,655 --> 00:18:34,865 வந்து, நான் இங்கே இருக்கிறேன், எனவே... 350 00:18:38,577 --> 00:18:39,828 இது உதவியாக இருக்கும். 351 00:18:40,746 --> 00:18:43,123 -அது என்ன? -எமிலி டிக்கின்சனின் கவிதைகள். 352 00:18:43,707 --> 00:18:46,126 இந்த முழு தொகுப்பு, இந்த வருடம் தான் வெளியிடப்பட்டது. 353 00:18:47,878 --> 00:18:49,505 த போயம்ஸ் ஆஃப் எமிலி டிக்கின்சன் ஜான்சன் 354 00:18:51,048 --> 00:18:53,967 நான் இறக்கும் போது, என்னுடைய எல்லா கவிதைகளையும் எரித்துவிடும்படி உன்னிடம் சொன்னேனே. 355 00:18:54,468 --> 00:18:56,136 நீ அந்த மனதார சொல்லவில்லை என்று தெரியும். 356 00:18:56,220 --> 00:18:58,347 என் சகோதரியை யாரும் மறக்க நான் விடுவதாக இல்லை. 357 00:18:58,430 --> 00:19:01,683 இப்போது பார், எதிர்காலத்தில், நீ உண்மையாகவே பிரபலமாக இருக்கிறாய். 358 00:19:01,767 --> 00:19:02,893 அவ்வளவு பிரபலமாக இல்லை. 359 00:19:04,436 --> 00:19:06,980 உள்ளூரில் மட்டுமே பிரபலமாக இருக்கிறேன். 360 00:19:07,064 --> 00:19:10,984 வருத்தமான, கடினமான வாழ்க்கை வாழ்ந்த புகழ் பெறாத, விசித்திரமான பெண் கவிஞர். 361 00:19:11,068 --> 00:19:12,069 அது உண்மை இல்லை. 362 00:19:12,152 --> 00:19:15,864 இருபதாவது நூற்றாண்டில் யாரும் எமிலி டிக்கின்சனைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை. 363 00:19:16,573 --> 00:19:20,244 அவளுடைய கவிதைகள் பரண் மேலே தூசி படிந்து இருக்கும். 364 00:19:20,953 --> 00:19:23,288 ஆனால் எனக்கு அக்கறை உண்டு. அவளோடு ஏதோ ஒரு பந்தம் தோன்றுகிறது. 365 00:19:24,248 --> 00:19:27,209 அவள் ரொம்பவும் சோகமாக இருந்தாள். நானும் ரொம்ப சோகமாக இருக்கிறேன். 366 00:19:27,292 --> 00:19:28,585 அவள் அப்படி இல்லை. அவள்... நான்... 367 00:19:28,669 --> 00:19:31,004 தன் வாழ்நாள் முழுவதையும் அவள் தனிமையில் கழித்தாள் என்பது தெரியுமா? 368 00:19:31,088 --> 00:19:32,297 “தனிமையில்” என்று ஏன் சொல்கிறாய்? 369 00:19:32,381 --> 00:19:35,968 அவள் ஒரு கன்னிப்பெண். சோகமான, உணர்ச்சிகளற்ற கன்னிப்பெண். 370 00:19:36,051 --> 00:19:40,097 திருமணம் செய்யவில்லை, காதல் அனுபவிக்கவில்லை. தன் அறையை விட்டு கூட வெளியே வரவில்லை. 371 00:19:40,180 --> 00:19:44,101 வெள்ளை ஆடை உடுத்திக்கொண்டு, அழுவது மட்டும் தான் எமிலி டிக்கின்சன் செய்தாள். 372 00:19:45,018 --> 00:19:47,688 அது உண்மை இல்லை. அவள் எப்போதுமே வெள்ளை ஆடை உடுத்த மாட்டாள். 373 00:19:47,771 --> 00:19:50,983 எமிலி டிக்கின்சன் மன வருத்தமாக இல்லை. அவளுக்கு இறக்க விரும்பவில்லை. 374 00:19:51,066 --> 00:19:53,902 எழுத்துக்களின் மூலம் வாழ்ந்து, இந்த உலகத்தோடு இணைப்பில் இருக்கவே விரும்புகிறாள். 375 00:19:54,611 --> 00:19:57,072 அவள் தன் படுக்கை அறையில் தனியாக இறந்து போனாள் என்று என்னால் வாதாட முடியும். 376 00:19:57,739 --> 00:20:02,411 சரி. 377 00:20:02,494 --> 00:20:06,498 இந்த மலை ஏறும் நாளை நீ மிகவும் சிரத்தையாக நினைப்பது பயமாக இருக்கிறது. 378 00:20:08,292 --> 00:20:09,793 எங்கிருந்து இந்தத் தகவல்களைப் பெற்றாய்? 379 00:20:09,877 --> 00:20:11,295 இது பொதுவான தகவல் தான். 380 00:20:12,421 --> 00:20:15,340 எமிலி டிக்கின்சன் தான் உண்மையான சோகப் பெண். 381 00:20:15,924 --> 00:20:18,010 அதாவது, அவளுடைய வாழ்க்கை மோசமாக இருந்தது. 382 00:20:18,093 --> 00:20:20,387 அவள் ரொம்பவும் நேசித்த ஆனால் அவளை நேசிக்காத, 383 00:20:20,470 --> 00:20:22,890 ஒரு ஆணோடு அவளுக்கு தொடர்பு இருந்ததாக சொல்கிறார்கள். 384 00:20:22,973 --> 00:20:24,558 அட, கடவுளே. 385 00:20:24,641 --> 00:20:26,143 -ஒரு ஆண். இது உண்மையா? -இல்லை. 386 00:20:26,226 --> 00:20:27,686 -இல்லை, இது... -ஆமாம், ஒரு ஆண் இருந்தார், 387 00:20:27,769 --> 00:20:30,314 யார் என்று யாருக்கும் தெரியாது, மற்றும் அவர் இவளை நேசிக்கவில்லை. 388 00:20:30,397 --> 00:20:33,358 எனவே, அவள் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தாள் என்று நினைக்கிறேன். 389 00:20:33,442 --> 00:20:34,860 சந்தேகமே இன்றி தற்கொலைக்கு முயற்சித்தாள். 390 00:20:34,943 --> 00:20:39,323 என் காலை அறுத்துக்கொண்டு, என் அம்மாவின் தூக்க மாத்திரைகளை நான் சாப்பிட்டது போல. 391 00:20:39,406 --> 00:20:40,449 -ஐயோ. -சரி. 392 00:20:40,532 --> 00:20:43,911 நான் தற்கொலை செய்ய முயற்சிக்கவே இல்லை. எப்போதுமே அப்படி செய்ய மாட்டேன். 393 00:20:43,994 --> 00:20:45,537 நான் ஒரு ஆணை நேசிக்கவும் இல்லை. 394 00:20:45,621 --> 00:20:47,915 -எமிலி. அது ஜார்ஜா? -இல்லை. 395 00:20:47,998 --> 00:20:49,166 -ப்ரேசரா? -இல்லை! 396 00:20:49,249 --> 00:20:51,668 அது... தோஷியாக்கியா? 397 00:20:52,252 --> 00:20:55,506 சரி. என் வாழ்நாளில் நான் எப்போதுமே ஒரு ஆணை நேசித்ததே இல்லை, லவினியா. 398 00:20:55,589 --> 00:20:57,257 ஆமாம், நீ சொல்வது சரியாக இருக்கலாம். 399 00:20:57,841 --> 00:21:01,386 சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளியிடப்பட இருந்த ஒரு புத்தகம் பெரிய அவதூறை உண்டாக்கியதால், 400 00:21:01,470 --> 00:21:03,013 அது வெளியிடப்படாமல் போக நேர்ந்தது. 401 00:21:03,805 --> 00:21:09,728 ஏனென்றால் இந்த புத்தகத்தில், அதன் எழுத்தாளர் எமிலி டிக்கின்சன் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று சொன்னார். 402 00:21:11,772 --> 00:21:13,607 -என்ன? -ஓரினச் சேர்க்கையாளர். 403 00:21:14,191 --> 00:21:16,193 இல்லை, அவள் அமெரிக்கன். 404 00:21:17,069 --> 00:21:18,111 என்ன? 405 00:21:18,195 --> 00:21:20,405 நான் உறவைப் பற்றி பேசுகிறேன், அன்பே. 406 00:21:20,489 --> 00:21:25,536 அவளொரு சப்பாணி, ஓரினச்சேர்க்கையாளர், பெண்ணை நேசிக்கும் ஒரு பெண். 407 00:21:26,119 --> 00:21:30,123 உனக்கு இது தெரிந்திருக்க வேண்டும். நீ ஸ்மித் கல்லூரியில் படிக்கிறாயே. 408 00:21:30,207 --> 00:21:33,085 எமிலி, இது... உண்மையா? 409 00:21:33,168 --> 00:21:34,461 நான்... 410 00:21:34,545 --> 00:21:36,588 அட, கடவுளே. யார் அது? 411 00:21:36,672 --> 00:21:38,090 மன்னிக்கவும், நாம் வேறு ஏதாவது பேசலாமா? 412 00:21:38,173 --> 00:21:40,843 ஏன்... அவளுடைய அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி பேசுகிறோம்? 413 00:21:40,926 --> 00:21:42,427 அவளுடைய கவிதையில் கவனம் செலுத்தலாமா? 414 00:21:42,511 --> 00:21:44,471 அவை இரண்டையும் தனியாக பிரிக்க முடியும் என நினைக்கிறாயா? 415 00:21:45,597 --> 00:21:47,683 அதாவது, இருளான மனஆழங்கள், ஆசை, 416 00:21:47,766 --> 00:21:52,145 கட்டுக்கடங்காத வேட்கை, இவற்றிலிருந்து தானே கவிதை தோன்றுகிறது? 417 00:21:52,646 --> 00:21:55,065 தனிப்பட்ட முறையில், டான்டே சரியாக சொன்னதாக நான் நினைக்கிறேன். 418 00:21:56,108 --> 00:22:02,573 கவிதை எழுதுவதற்கு, நரகத்திற்கு கூட செல்ல தயாராக இருக்க வேண்டும். 419 00:22:03,907 --> 00:22:07,703 சரி, உன் ஆற்றல் வலிமை மிகுந்தவை, இதை எமிலி டிக்கின்சன் சொல்கிறாள். 420 00:22:11,582 --> 00:22:14,918 “படுக்கைக்கு வர என்னை நீ மயக்கிவதாக கனவு கண்டேன்...” 421 00:22:15,002 --> 00:22:16,003 சரி. 422 00:22:16,086 --> 00:22:19,631 ...“நிலவின் ஒளியில் பாடி, மூர்க்கத்தனமாக எனக்கு முத்தமிட்டாய். 423 00:22:20,591 --> 00:22:23,302 (உன்னை என் கற்பனையில் உருவாக்கியதாக நினைக்கிறேன்.) 424 00:22:24,261 --> 00:22:27,806 கடவுள் வானத்திலிருந்து விழுகிறார், நரகத்தின் நெருப்பு மங்குகிறது: 425 00:22:28,307 --> 00:22:30,976 தேவதை மற்றும் சாத்தானின் ஆட்கள் வெளியேறுகிறார்கள்: 426 00:22:31,476 --> 00:22:37,191 நான் கண்ணை மூடினேன் உலகமே இறந்துப் போகிறது.” 427 00:22:39,026 --> 00:22:41,737 நல்லது. நாங்கள் கிளம்புகிறோம். 1862 ஆண்டிற்குத் திரும்பிப் போகிறோம். 428 00:22:41,820 --> 00:22:43,697 ஆமாம், எதிர்காலம் நாம் எதிர்பார்த்தது போல இல்லை. 429 00:22:43,780 --> 00:22:45,157 எதிர்காலமா? 430 00:22:45,657 --> 00:22:46,783 உங்களுக்குத் தெரியாதா? 431 00:22:47,784 --> 00:22:49,995 பெண்களுக்கு எப்போதும் எதிர்காலமே கிடையாது. 432 00:22:52,581 --> 00:22:53,749 -வின்னி? -என்ன? 433 00:22:53,832 --> 00:22:55,083 எப்படி வீட்டிற்குத் திரும்புவது? 434 00:23:25,072 --> 00:23:27,282 நம்ப முடியாத அளவு விநோதமாக உணர்கிறேன். 435 00:23:27,366 --> 00:23:28,700 அப்படியென்றால் இது வேலை செய்கிறது. 436 00:23:29,493 --> 00:23:31,870 இந்தப் படுக்கையிலிருந்து நான் எழுந்து கொள்ளும் முயற்சி 437 00:23:31,954 --> 00:23:35,457 பூஜ்ஜியத்தில் இருந்து இன்னும் கீழே மோசமாக போய்விட்டது. 438 00:23:35,541 --> 00:23:37,876 என் சவப்பெட்டியில் தான் என்னை வெளியே எடுத்துச் செல்ல வேண்டும் போல. 439 00:23:43,257 --> 00:23:45,676 -சவப்பெட்டியில். -நான் மறுபடியும் புகைக்கிறேன். 440 00:23:45,759 --> 00:23:47,803 -இல்லை. தீர்ந்துவிட்டது. நாம் தீர்த்துவிட்டோம். -இல்லை, இல்லை. 441 00:23:47,886 --> 00:23:49,721 -எனக்கு வேண்டும். -எல்லாவற்றையும் புகைத்துவிட்டோம். 442 00:23:49,805 --> 00:23:50,806 எனக்கு ரொம்ப பசிக்கிறது. 443 00:23:50,889 --> 00:23:53,183 -போய் ஏதாவது சமையுங்கள். -இல்லை, நீ போய் ஏதாவது சமை. 444 00:23:53,767 --> 00:23:55,978 -நான் போக மாட்டேன். -எனக்கு பயங்கர பசி. 445 00:23:56,687 --> 00:23:57,771 அதோடு, நான் ஒரு ஆண். 446 00:23:58,438 --> 00:24:01,608 எனக்கு சமைக்கவும் தெரியாது. 447 00:24:02,192 --> 00:24:03,569 எனக்கு இது பிடிக்கவில்லை. 448 00:24:03,652 --> 00:24:05,028 என்ன, இந்த கனாபிஸா? ஏன்? 449 00:24:05,112 --> 00:24:07,197 ஏனென்றால் இதை புகைக்கும் முன், நான் வருத்தமாக இருந்தேன். 450 00:24:07,281 --> 00:24:11,743 இப்போது வருத்தமாக, பசியாக, மயக்கமாக, 451 00:24:12,995 --> 00:24:14,997 கொஞ்சம் பயமாக உணர்கிறேன். 452 00:24:15,080 --> 00:24:18,125 சில பயங்கரமான உணர்வுகளை நீ தள்ளி வைக்கிறாய். 453 00:24:18,208 --> 00:24:20,252 தயவுசெய்து என்னை மீண்டும் தனியே விடுங்கள். 454 00:24:20,335 --> 00:24:23,172 கீழே சமயலறைக்கு போகும் போது, ஸ்பூன்களை எண்ணுங்கள். 455 00:24:23,255 --> 00:24:25,048 மேகியை நம்ப முடியாது. 456 00:24:27,801 --> 00:24:30,137 நான் சற்று நேரம் தூங்கலாம் என்று நினைக்கிறேன். 457 00:24:31,805 --> 00:24:32,806 இதோ. 458 00:24:37,352 --> 00:24:39,229 இது ரொம்பவும் மோசம், நண்பா. 459 00:24:39,730 --> 00:24:44,067 உண்மையில்... என் குழந்தை மீது எனக்கு அக்கறை இருக்கிறது, தெரியுமா? 460 00:24:44,151 --> 00:24:46,361 அவனை... தூக்கிக்கொள்ள விரும்புகிறேன். 461 00:24:47,154 --> 00:24:49,156 அவனை வளர்க்க விரும்புகிறேன். 462 00:24:49,865 --> 00:24:51,074 அவனை முகர்ந்து பார்க்க விரும்புகிறேன். 463 00:24:51,158 --> 00:24:52,826 அவனை தெரிந்துகொள்ள ஆரம்பிக்கும் போது, 464 00:24:52,910 --> 00:24:55,871 இந்த அழைப்பு வருகிறது, 465 00:24:56,914 --> 00:24:59,291 அதனால் இப்போது, என்ன? 466 00:25:00,584 --> 00:25:02,836 நான் போய் இறந்துவிட வேண்டுமா, என்ன? 467 00:25:03,420 --> 00:25:04,963 உனக்குப் பிடிக்காத எதையும் நீ செய்ய வேண்டியதில்லை. 468 00:25:06,256 --> 00:25:08,258 இல்லை, நான் அப்படி செய்ய வேண்டும். 469 00:25:08,967 --> 00:25:10,093 அதற்கு டிராஃப்ட் என்று பெயர். 470 00:25:10,177 --> 00:25:12,095 அது, ஒரு சட்டபூர்வ நடவடிக்கை. 471 00:25:12,179 --> 00:25:15,474 நான் ஒரு வக்கீல் என்பதால், இதைப்பற்றி தெரியும். 472 00:25:15,557 --> 00:25:18,894 சரிதான். நீ ஒரு வக்கீல், ஒரு வக்கீலின் மகன். 473 00:25:19,394 --> 00:25:22,231 அதாவது, ஹலோ. நீ பணக்காரன். 474 00:25:22,314 --> 00:25:24,316 பணக்காரர்களால் எதையும் செய்ய முடியும். 475 00:25:24,399 --> 00:25:26,777 அதுதான் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் சட்டம். 476 00:25:26,860 --> 00:25:29,488 தெரியவில்லை, நண்பா. பட்டியலில் என் பெயர் இருக்கிறது. 477 00:25:30,072 --> 00:25:34,451 சரி. உன் பெயரில் வேறு ஒருவனை காசு கொடுத்து அனுப்பு. 478 00:25:36,828 --> 00:25:37,829 அப்படிச் செய்ய முடியுமா? 479 00:25:38,455 --> 00:25:41,834 பணம் இருந்தால், எல்லாவற்றிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். 480 00:25:41,917 --> 00:25:43,919 சரி, ஆனால் நான் யாருக்கு பணம் கொடுப்பது? 481 00:25:44,628 --> 00:25:45,629 யாருக்கு வேண்டுமானாலும். 482 00:25:45,712 --> 00:25:46,922 அந்த ஆள். 483 00:25:47,798 --> 00:25:49,299 அந்த ஆள். 484 00:25:49,383 --> 00:25:51,134 அல்லது அவன். 485 00:25:51,677 --> 00:25:53,387 இன்னும் கொஞ்சம் குடிக்கிறீர்களா, நண்பர்களே? 486 00:25:53,470 --> 00:25:54,596 இரண்டாகக் கொடு. 487 00:25:55,722 --> 00:25:57,474 இந்த ஆளுக்கு நிறைய டிப்ஸ் வேண்டும். 488 00:25:57,558 --> 00:26:00,394 உன் வேலைக்கு கொடுக்கும் விலை 500 டாலர். அது அவனுக்கு மில்லியன் டாலர் போன்றது. 489 00:26:00,978 --> 00:26:02,604 கண்டிப்பாக வாய்ப்பை ஏற்றுக்கொள்வான். 490 00:26:06,692 --> 00:26:07,901 இல்லை, என்னால் முடியாது. 491 00:26:08,569 --> 00:26:09,570 சரி. 492 00:26:12,865 --> 00:26:15,325 நாம் இன்னும் கொஞ்சம் குடித்து விட்டு, மறுபடியும் பேசலாம். 493 00:26:17,286 --> 00:26:18,704 அப்பாடா மழை நின்றுவிட்டதே. 494 00:26:19,454 --> 00:26:20,956 நான் வானிலையை கவனிக்கவில்லை. 495 00:26:22,958 --> 00:26:26,879 சூரியன், மழை, பனி. எனக்கு இதனால் எந்த பாதிப்பும் கிடையாது. 496 00:26:26,962 --> 00:26:30,883 தபால்காரராக இருந்தால், வானிலை பற்றி கவலைப்படக்கூடாது. 497 00:26:30,966 --> 00:26:32,801 அது வேலையின் ஒரு பகுதி. 498 00:26:32,885 --> 00:26:35,429 இடி, வெப்ப காற்று, பனிக்கட்டி மழை. 499 00:26:35,512 --> 00:26:36,805 இவற்றால் என்னைத் தடுக்க முடியாது. 500 00:26:36,889 --> 00:26:38,640 நான் எப்போதும் என் வேலையை செய்வேன். 501 00:26:39,725 --> 00:26:40,726 அதை நான் மதிக்கிறேன். 502 00:26:40,809 --> 00:26:42,352 மன்னிக்கவும். உனக்கு சலிப்பை ஏற்படுத்த விரும்பவில்லை. 503 00:26:42,936 --> 00:26:45,480 -என்ன? இல்லை. -தபால் சேவை எப்படி இருக்கும் என்பதைப்பற்றி 504 00:26:45,564 --> 00:26:47,733 என்னைப் போல எல்லோருக்கும் ஆர்வமாக இருக்க மாட்டார்கள் என தெரியும். 505 00:26:47,816 --> 00:26:51,069 இல்லை, இல்லை. எனக்கு யூஎஸ் தபால் சேவை ரொம்பவும் பிடிக்கும். 506 00:26:51,153 --> 00:26:53,155 அது... வந்து... 507 00:26:53,238 --> 00:26:55,115 தெரியுமா? எனக்கு சோர்வாக இருக்கிறது. 508 00:26:55,199 --> 00:26:56,533 என்னால் கற்பனை செய்ய முடிகிறது. 509 00:26:58,118 --> 00:27:00,078 நீயே எல்லா வேலையும் செய்கிறாய். 510 00:27:00,162 --> 00:27:01,622 அது மோசம் இல்லை. 511 00:27:01,705 --> 00:27:03,081 குழந்தையை வளர்ப்பது. 512 00:27:03,165 --> 00:27:05,125 உன் வியாபாரத்தை சமாளிப்பது. 513 00:27:05,209 --> 00:27:06,668 நீ தைரியமான பெண், பெட்டி. 514 00:27:07,878 --> 00:27:09,505 ஆனால் இது ஆபத்தான காலம். 515 00:27:11,048 --> 00:27:13,634 ஒரு தைரியமான பெண் கூட, ஒரு ஆணின் பாதுகாப்பை நாடலாம். 516 00:27:14,343 --> 00:27:16,178 என்னை நானே பாதுகாத்துக்கொள்ள முடியும். 517 00:27:17,095 --> 00:27:19,264 மேலும், ஹெலனுக்காக, அவளுடைய அப்பா 518 00:27:20,265 --> 00:27:23,685 திரும்பி வருவார் என்ற நம்பிக்கையை நான் இன்னும் இழக்கவில்லை. 519 00:27:24,811 --> 00:27:26,021 பியூஃபோர்டில் இருந்தா? 520 00:27:26,980 --> 00:27:29,024 -அது இயலாது. -எங்கிருந்து? 521 00:27:29,775 --> 00:27:32,194 ஹென்ரி பியூஃபோர்ட், தெற்கு கரோலினாவில் இருக்கிறார். 522 00:27:33,862 --> 00:27:35,697 -உனக்கு தெரியும் என்று நினைத்தேன். -தெரியாது. 523 00:27:36,490 --> 00:27:39,701 இல்லை, உங்களுக்கே தெரிந்தது போல. பல மாதங்களாக அவரிடமிருந்து கடிதம் வரவில்லை. 524 00:27:40,702 --> 00:27:44,164 -உங்களுக்கு வந்ததா? -நேரடியாக வரவில்லை. ஆனால் செய்தி கேட்டேன். 525 00:27:44,248 --> 00:27:47,835 தெற்கு கரோலினா தன்னார்வலர்களோடு சில காலமாக இருக்கிறார். 526 00:27:48,335 --> 00:27:50,629 அது போர்ட் ராயல் பரிசோதனையின் ஒரு பகுதி. 527 00:27:51,129 --> 00:27:52,130 கற்பனை செய்துப் பார். 528 00:27:52,631 --> 00:27:56,844 யூனியன் போர் படையில் கருப்பர்கள் சேர்க்கப்பட்டு, போர் புரிய பயிற்சி கொடுக்கப்படுகிறது. 529 00:27:56,927 --> 00:28:00,180 ஹென்ரி இப்போது ஒரு படைவீரரா? 530 00:28:00,264 --> 00:28:01,473 அப்படித்தான் கேள்விப்பட்டேன். 531 00:28:02,516 --> 00:28:04,226 நான் இப்படி சொல்லலாம் என்றால், 532 00:28:05,352 --> 00:28:08,647 அவர் உயிரோடு திரும்புவதற்கான வாய்ப்பு என்பது... 533 00:28:09,815 --> 00:28:10,816 வந்து... 534 00:28:11,900 --> 00:28:14,444 அதிக எடையுள்ள ஒரு பார்சல், குறைந்த மதிப்பு ஸ்டாம்ப் ஒட்டப்பட்டு 535 00:28:14,528 --> 00:28:16,238 உரிய இடத்தில் சென்று சேர்வது போல. 536 00:29:14,963 --> 00:29:16,006 நல்லது. 537 00:29:16,089 --> 00:29:19,468 இன்று காலை நாம் நிகழ்காலத்தில் சிக்கிக்கொண்டோம், இப்போது எதிர்காலத்தில் சிக்கிக்கொண்டுள்ளோம். 538 00:29:19,551 --> 00:29:21,011 சரி, இங்கு இருக்கும் போதே... 539 00:29:22,346 --> 00:29:24,389 -நான் ஒன்று கேட்க வேண்டும். -என்ன? 540 00:29:24,473 --> 00:29:26,141 நீ மற்ற பெண்ணை விரும்புவது பற்றி, 541 00:29:26,767 --> 00:29:30,354 அவள் சொன்னது உண்மையா? 542 00:29:34,775 --> 00:29:35,984 அது சூ. 543 00:29:36,860 --> 00:29:39,363 எப்போதுமே சூ மட்டும் தான். நான் சூவை நேசிக்கிறேன். 544 00:29:41,615 --> 00:29:43,033 அது எனக்கு தெரிந்த விஷயம் தான். 545 00:29:45,285 --> 00:29:47,579 இப்போது அது முக்கியமில்லை, ஏனென்றால் நான் அதை பாழாக்கிவிட்டேன். 546 00:29:48,163 --> 00:29:49,706 பாழாக்கி விட்டேன் என்றால் என்ன அர்த்தம்? 547 00:29:50,415 --> 00:29:51,416 தெரியவில்லை. 548 00:29:51,917 --> 00:29:56,880 பார், உண்மையில் நான் யாரையும் காதலிக்காத போது கூட 549 00:29:56,964 --> 00:30:03,554 கவிதை எழுதும் போது அப்படி காதலிப்பதாக நினைத்துக் கொள்வது, சுலபமாக இருக்கிறது. 550 00:30:04,471 --> 00:30:06,181 சரி, நான் என்ன நினைக்கிறேன் என்று சொல்கிறேன். 551 00:30:08,225 --> 00:30:11,270 நீ உண்மையாக நேசிக்கும் ஒருவரோடு, வாழ்க்கையை வாழ முடிவது 552 00:30:11,353 --> 00:30:13,897 ரொம்பவும் அதிர்ஷ்டவசமானது என நினைக்கிறேன். 553 00:30:14,815 --> 00:30:17,943 எனக்கு அந்த அதிர்ஷ்டம் இருந்தால், நான் ரொம்பவும் மகிழ்வேன். 554 00:30:18,652 --> 00:30:21,113 இப்போது நிகழ்காலத்தில், அந்த இடத்தில் என்னோடு, 555 00:30:21,196 --> 00:30:22,865 அந்த நபர் உயிரோடு இருந்தால்... 556 00:30:24,366 --> 00:30:27,995 நான் ஓடிச்சென்று அவரை கட்டிப்பிடித்து எங்கும் செல்லாமல் பார்த்துக்கொள்வேன். 557 00:30:31,582 --> 00:30:33,417 ஆமாம், வின்னி, நீ சொல்வது சரிதான். 558 00:30:35,335 --> 00:30:37,337 நான் எதற்காக எதிர்காலத்திற்கு செல்ல ஆசைபட்டேன்? 559 00:30:37,421 --> 00:30:39,339 நிகழ்காலத்திலேயே என்னிடம் எல்லாம் இருந்தது. 560 00:30:39,923 --> 00:30:41,216 எனக்கு சூ இருந்தாள். 561 00:30:55,647 --> 00:30:57,608 அட, கடவுளே. நாம் வந்து விட்டோம்! 562 00:30:58,692 --> 00:31:02,112 -நாம் இப்போது எதிர்காலத்தில் இல்லை. -என்ன சொல்கிறாய்? 563 00:31:02,196 --> 00:31:03,864 சற்று முன் நாம் எதிர்காலத்தில் தானே இருந்தோம். 564 00:31:05,824 --> 00:31:08,493 நான் வெளியில் சென்று என் அம்மாவின் சிறுநீரை கொட்ட போனேன், 565 00:31:08,577 --> 00:31:10,162 ஏனென்றால் என் வாழ்க்கையே பயங்கர கனவு போன்றது, 566 00:31:10,245 --> 00:31:12,623 பிறகு இந்த கஸிபோவிற்குத் திரும்பி வந்து அழ ஆரம்பித்தேன். 567 00:31:12,706 --> 00:31:15,417 அப்போது நீ இங்கே வந்து சூவைப்பற்றி ஏதோ பேச ஆரம்பித்தாய், 568 00:31:16,001 --> 00:31:18,086 அதன் பிறகு நாம் மனம்விட்டுப் பேசினோம். 569 00:31:20,255 --> 00:31:22,758 என்னிடமிருந்து என் கற்பனை ஓடிப் போகிறது. 570 00:31:22,841 --> 00:31:25,135 நானும் அதைத்தான் சொல்கிறேன், எமிலி. 571 00:31:25,844 --> 00:31:29,139 உண்மையான காதல் உன்னுடைய கற்பனையில் இருக்காது. 572 00:31:29,223 --> 00:31:30,807 உண்மை என்று நாம் சொல்லும், 573 00:31:31,475 --> 00:31:35,187 இந்த மோசமான கொடூரமான இடத்தில் தான் அது இருக்கிறது. 574 00:31:37,356 --> 00:31:38,357 அதோ பார், ஜார்ஜ் வருகிறான். 575 00:31:40,692 --> 00:31:41,693 என்ன விஷயம், ஜார்ஜ்? 576 00:31:43,820 --> 00:31:45,697 ஜார்ஜ், நீ நலமா? என்ன விஷயம்? 577 00:31:45,781 --> 00:31:46,782 இது ப்ரேசர் பற்றியது. 578 00:31:47,282 --> 00:31:49,409 -ப்ரேசர் ஸ்டர்ன்ஸா? -ஆமாம். ப்ரேசர். அவன்... 579 00:31:50,452 --> 00:31:52,579 -அவனை சுட்டுவிட்டனர். -சுட்டுவிட்டனரா? 580 00:31:52,663 --> 00:31:54,665 நியூ பெர்ன் போரில், வடக்கு கரோலினாவில். 581 00:31:55,666 --> 00:31:58,418 ப்ரேசர் கொல்லப்பட்டான். 582 00:32:03,465 --> 00:32:07,678 நான் எதிர்காலத்தைப் பார்த்ததாக நினைக்கிறேன். 583 00:32:59,646 --> 00:33:01,565 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்