1 00:00:09,760 --> 00:00:11,261 தபால் நிலையம் 2 00:00:20,938 --> 00:00:22,356 அன்புள்ள மிஸ் டிக்கின்சன், 3 00:00:22,439 --> 00:00:27,110 உங்கள் கவிதைகள் முற்றிலும் புதியவை, சுயமானவை என்பதை உங்களது எழுத்து கூறுகிறது. 4 00:00:27,194 --> 00:00:31,240 "முற்றிலும் புதியவை, சுயமானவை." 5 00:00:34,910 --> 00:00:36,161 என் கவிதை இறக்கவில்லை. 6 00:00:37,120 --> 00:00:38,664 அது சாகவில்லை. உயிரோடு இருக்கிறது! 7 00:00:44,753 --> 00:00:46,713 உள்ளத்தில் இருந்து பாடினேன், ஐயா 8 00:00:53,345 --> 00:00:57,307 வின்னி! வின்னி! நீ இதை நம்பமாட்டாய். 9 00:00:57,391 --> 00:01:00,310 இப்போதுதான், தாமஸ் வென்ட்வெர்த் ஹிக்கின்சனிடம் இருந்து, எனக்கு ஒரு கடிதம் வந்தது. 10 00:01:01,562 --> 00:01:02,813 அவர் யார் என்று தெரியுமா? 11 00:01:03,564 --> 00:01:05,482 சரி. அவர் அருமையான மனிதர், வின்னி. 12 00:01:05,566 --> 00:01:08,485 அவர்... ஒரு ஒழிப்புவாதி மற்றும் அமைச்சர், 13 00:01:08,569 --> 00:01:10,237 திஅட்லாண்டிக்கில் கட்டுரைகள் எழுதியுள்ளார். 14 00:01:10,320 --> 00:01:13,532 அவர் ஒரு சிந்தனாவாதி மற்றும் இயக்கவாதி, வின்னி. 15 00:01:13,615 --> 00:01:16,451 இந்த உலகத்திற்காக உண்மையிலேயே அக்கறைப்படுபவர், 16 00:01:16,535 --> 00:01:18,161 ஒன்று சொல்லவா? 17 00:01:18,245 --> 00:01:19,496 அவருக்கு என் கவிதைகள் பிடித்துள்ளது. 18 00:01:21,331 --> 00:01:23,041 என்னுடைய மற்ற கவிதைகளையும் அனுப்பச் சொன்னார். 19 00:01:23,125 --> 00:01:27,254 நானாகப் போருக்கெல்லாம் போக முடியாது, ஆனால், இவரிடமிருந்து கற்றுக்கொள்வதால், 20 00:01:27,337 --> 00:01:30,174 மக்களுக்கு உண்மையாகத் தேவைப்படும் கவிதைகளை என்னால் எழுத முடியும். 21 00:01:30,257 --> 00:01:31,800 மக்களுக்கு உதவும் கவிதைகள். 22 00:01:36,096 --> 00:01:37,931 நீ ஏன் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறாய்? 23 00:01:41,685 --> 00:01:45,480 சரி. படையினருடன் ஒற்றுமையாக இருப்பதற்காக மௌனமாக இருக்கிறாயோ. 24 00:01:47,191 --> 00:01:49,610 லவினியா, எல்லைகளைத் தாண்டி உன்னுடைய கலைத்திறன் வெளிப்படுகிறது 25 00:01:49,693 --> 00:01:52,487 நவீன யுத்திகளும், புதுப்புது சோதனை முயற்சிகளும், கைவரப் பெற்றுள்ளாய். 26 00:01:54,740 --> 00:01:57,451 அம்ஹெர்ஸ்ட் கம்பளி மற்றும் சுகாதாரப் பொருட்கள் விற்கும் விழா 27 00:01:58,202 --> 00:02:00,621 ஐக்கிய வீரர்களின் நலனுக்காக 28 00:02:34,530 --> 00:02:38,033 தயவுசெய்து, உங்கள் கண்களால் பாருங்கள், கைகளால் தொட வேண்டாம். 29 00:02:38,116 --> 00:02:39,743 -இந்தத் தையல் மிகவும் சிக்கலானது. -ஆம். 30 00:02:39,826 --> 00:02:41,954 இங்கே ரகசியச் செய்திகளை இப்படித் தான் பெறுகிறோம். 31 00:02:42,037 --> 00:02:43,080 என்ன? 32 00:02:44,581 --> 00:02:47,876 ஆஹா. அமெரிக்கா உருவாகி 100 வருடங்களுக்குள் தான் இருக்கும், 33 00:02:47,960 --> 00:02:50,170 மெத்தையை தாங்கள் தான் கண்டுபிடித்தோம் என நினைக்கின்றனரா? 34 00:02:50,254 --> 00:02:51,296 அப்படித்தான் போல. 35 00:02:52,047 --> 00:02:53,799 -ஹாய், எமிலி. ஹாய் லவினியா. -ஹாய். 36 00:02:54,883 --> 00:02:56,301 லவினியா இன்று பேச மாட்டாள். 37 00:02:56,385 --> 00:02:59,096 போரில் வீழ்ந்தவர்களுக்காக அவள் மௌன விரதம் இருக்கிறாள். 38 00:03:00,097 --> 00:03:01,139 ஹலோ, லவனியா. 39 00:03:03,183 --> 00:03:05,644 அப்படியானால், நீங்கள் உங்களுக்கு பிடித்ததைப் பார்க்கிறீர்கள், இல்லையா? 40 00:03:05,727 --> 00:03:09,106 அது... மிகவும் சிறியதாக இருக்கிறதே. அது குழந்தைக்கா? 41 00:03:09,189 --> 00:03:10,357 ஆமாம். 42 00:03:10,440 --> 00:03:11,441 பெண்களுக்கான வாக்குகள்! 43 00:03:11,525 --> 00:03:13,652 -ஒரு பெண்ணியக்கவாதக் குழந்தை. -ஆஹா. சரி. 44 00:03:16,864 --> 00:03:20,450 ஓ, பெட்டியின் கம்பளி உறைகளைப் பாரேன். அருமை. 45 00:03:20,534 --> 00:03:23,453 நன்றி. இதற்காக நிதி திரட்டுவதில் மகிழ்ச்சியே. 46 00:03:23,954 --> 00:03:25,080 இந்தக் கட்டங்கள் பொருத்தமாக இல்லை. 47 00:03:25,664 --> 00:03:28,667 அவை வெவ்வேறு வடிவமும், அளவும் உள்ளன. அவை ஒரே மாதிரியாக இல்லை. 48 00:03:28,750 --> 00:03:31,587 இங்கே என்ன நடக்கிறது? இந்தக் கம்பளிக்கு என்ன அர்த்தம்? 49 00:03:31,670 --> 00:03:33,255 கலைக்கு அர்த்தம் தேவையில்லை. 50 00:03:33,338 --> 00:03:34,381 அவள் ஒரு மேதை. 51 00:03:34,464 --> 00:03:35,883 -நான் இதை வாங்குகிறேன். -நான்தான் முதலில் வந்தேன். 52 00:03:37,384 --> 00:03:38,385 நன்றி. 53 00:03:39,261 --> 00:03:41,180 தெரியுமா? நான் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொண்டேன். 54 00:03:41,263 --> 00:03:42,264 என்ன அறிவுரை? 55 00:03:42,347 --> 00:03:45,184 நான் உலகிற்கு ஒரு கடிதம் எழுதினேன். உலகம் எனக்குப் பதில் எழுதியது. 56 00:03:45,267 --> 00:03:46,894 பிரமாதம். 57 00:03:59,406 --> 00:04:02,326 மக்கள் நம்மை முறைத்துப் பார்ப்பது போல இருக்கிறதா, எட்வர்ட்? 58 00:04:02,409 --> 00:04:03,243 இல்லை. 59 00:04:04,286 --> 00:04:05,287 கொஞ்சம் இருக்கலாம். 60 00:04:06,246 --> 00:04:09,166 இந்த நகர மக்களிடமிருந்து நிறைய நிராகரிப்புகள் தான் வருகின்றன. 61 00:04:10,042 --> 00:04:11,543 ஏலம் விடும் நேரம் வந்துவிட்டது. 62 00:04:11,627 --> 00:04:13,795 என் பாட்டியின் நார்க்ராஸ் கம்பளியைத் தானம் கொடுத்துவிட்டேன். 63 00:04:13,879 --> 00:04:15,714 நிச்சயம் அதற்கு நல்ல விலை கிடைக்கும். 64 00:04:15,797 --> 00:04:18,091 இதற்கான ஏலத்தொகை ஐந்து டாலர் என்று ஆரம்பிப்போம். 65 00:04:18,759 --> 00:04:20,010 என்ன சொன்னீர்கள்? 66 00:04:20,511 --> 00:04:23,889 1822இல் மான்சனில் நடந்த கம்பள உறை ப்ளூ ரிப்பன் தையல் போட்டியில் என் அம்மாவிற்கு, 67 00:04:23,972 --> 00:04:24,973 இதற்காகப் பரிசு கிடைத்தது. 68 00:04:25,057 --> 00:04:26,350 இது ஆரம்ப விலை தான். 69 00:04:26,433 --> 00:04:29,937 வாங்குபவர்கள் தான் உங்களுடைய இந்த அன்பளிப்பின் விலையை நிர்ணயிப்பார்கள், திருமதி. டிக்கின்சன். 70 00:04:30,020 --> 00:04:31,313 இது நியாயமில்லை. 71 00:04:31,396 --> 00:04:33,273 ஏலம் இப்படித்தான் நடக்கும். 72 00:04:33,857 --> 00:04:37,694 என்னுடைய குடும்ப வாரிசுத் தறி வேலைக்கு ஐந்து டாலர்கள் தானா? இது சுத்த மோசம். 73 00:04:37,778 --> 00:04:38,987 இல்லை. 74 00:04:39,071 --> 00:04:41,907 மன்னியுங்கள். இதை... விற்கப் போவதில்லை. அதை என்னிடம் திரும்பக் கொடுங்கள். 75 00:04:41,990 --> 00:04:44,660 நீங்கள்... படையினருக்கு ஆதரவளிப்பீர்கள் என நினைத்தேன், திருமதி. டிக்கின்சன். 76 00:04:44,743 --> 00:04:46,119 கண்டிப்பாக நான் ஆதரவு தருகிறேன். 77 00:04:46,203 --> 00:04:47,663 என் சகோதரி சமீபத்தில் தான் இறந்தாள், 78 00:04:47,746 --> 00:04:50,374 அவள் ஞாபகார்த்தமாக மீதமிருப்பது இந்த கம்பளி உறை தான். 79 00:04:50,457 --> 00:04:51,291 என்னிடம் கொடுங்கள். 80 00:04:51,375 --> 00:04:53,836 இந்தக் கம்பளி வேண்டுமால், இதை ஏலத்தில் தான் எடுக்க வேண்டும். 81 00:04:55,462 --> 00:04:56,588 எட்வர்ட். 82 00:04:56,672 --> 00:04:57,756 என்ன? 83 00:04:57,840 --> 00:04:59,633 நீங்கள் தான் இந்தக் கம்பளியை திரும்ப வாங்கித் தர வேண்டும். 84 00:04:59,716 --> 00:05:02,052 நமக்குக் திருமணம் ஆனதில் இருந்து, பரணிலேயே கிடந்த இந்தக் கம்பளிக்காக 85 00:05:02,135 --> 00:05:05,138 நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை செலவு செய்ய மாட்டேன், திருமதி. டிக்கின்சன். 86 00:05:05,222 --> 00:05:08,016 எல்லா விஷயத்தை விடவும் குடும்பம் தான் முக்கியம், எட்வர்ட். 87 00:05:08,100 --> 00:05:11,603 என்னுடைய இறந்து போன சகோதரியின் ஒரே ஞாபகார்த்தமே, இந்தக் கம்பளி தான். 88 00:05:11,687 --> 00:05:12,729 இருபது டாலர்கள்? 89 00:05:12,813 --> 00:05:13,814 இது உங்களுக்கே. 90 00:05:13,897 --> 00:05:15,148 ஓ, நன்றி. 91 00:05:19,945 --> 00:05:21,655 நீ தேவையில்லாமல் செய்கிறாய், திருமதி. டிக்கன்சன். 92 00:05:21,738 --> 00:05:22,865 -சரி. -சும்மா... 93 00:05:22,948 --> 00:05:23,991 டிக்கின்சன். 94 00:05:24,074 --> 00:05:25,325 கான்க்கீ. 95 00:05:25,409 --> 00:05:26,952 உன்னை இங்கே பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. 96 00:05:27,035 --> 00:05:28,287 ஆச்சரியமா? ஏன்? 97 00:05:28,787 --> 00:05:30,247 இது ஒரு முக்கியமான சமூக நிகழ்ச்சி. 98 00:05:30,330 --> 00:05:32,332 அதோடு, நான் தானே கல்லூரியின் பொருளாளர். 99 00:05:32,416 --> 00:05:34,042 ஆமாம். ஆமாம். 100 00:05:34,668 --> 00:05:38,755 பதிப்பாசிரியருக்கு நீ அண்மையில் அனுப்பிய கடிதத்திற்குப் பிறகு, 101 00:05:38,839 --> 00:05:40,883 நம் யூனியன் படைவீரர்களை நீ ஆதரிக்கிறாய் என்பதை 102 00:05:40,966 --> 00:05:42,467 புரிந்து கொண்டேன். 103 00:05:42,551 --> 00:05:43,802 என்ன சொன்னாய், இதமார். 104 00:05:43,886 --> 00:05:45,637 எட்வர்ட், மோசமான கூட்டமைப்பாளர்களைப் பாராட்டி, 105 00:05:45,721 --> 00:05:49,474 இன்றைய செய்தித்தாளில் நீ அனுப்பிய கடிதத்தில் பாராட்டுக்களும் அனுதாபங்களும் மட்டுமே இருக்கின்றன. 106 00:05:49,558 --> 00:05:51,018 நான் அப்படி செய்யவில்லை. 107 00:05:51,101 --> 00:05:53,270 அப்படித்தான் செய்தீர்கள்! துரோகி! 108 00:05:54,188 --> 00:05:55,939 என்ன இது, ஜெரால்ட். 109 00:05:59,943 --> 00:06:04,448 1850ல், மோசமான ஃப்யூஜிடிவ் அடிமை சட்டத்திற்கு ஆதரவு கொடுத்து நீ வாக்களித்த போது... 110 00:06:04,531 --> 00:06:06,116 -மறுபடியும். -...நம் பலவீனமான அமைதியை 111 00:06:06,200 --> 00:06:08,785 பாதுகாப்பதற்காக நீ இந்த சமரசம் செய்துகொண்டதாக சொன்ன 112 00:06:08,869 --> 00:06:10,996 நியாயப்படுத்துலை நான் ஏற்றுக்கொண்டேன். 113 00:06:11,079 --> 00:06:13,999 ஆனால் இப்போது, நடக்கும் போர், 114 00:06:14,082 --> 00:06:16,543 நமது தைரியமான மகன்களின் உயிர்களைபறிக்கும் போது, 115 00:06:16,627 --> 00:06:22,049 சிறிதும் அக்கறை இல்லாமல்... இந்த நாகரீகமான நடத்தைக்கான வேண்டுகோளை, 116 00:06:22,132 --> 00:06:24,301 இரு பக்கத்தையும் கேட்டு, நடக்கும்படி நீ எழுதுகிறாய். 117 00:06:24,384 --> 00:06:25,385 கடவுளே, எட்வர்ட். 118 00:06:25,469 --> 00:06:28,805 நீ கொடுமைத்தனத்திற்காகவும், தீமைக்காகவும் மன்னிப்பு கேட்கிறாய். 119 00:06:28,889 --> 00:06:29,973 என்ன துணிச்சல் உனக்கு. 120 00:06:30,682 --> 00:06:33,060 என் சகோதரனின் சார்பில் நான் அந்த கடிதத்தை எழுதினேன். 121 00:06:33,143 --> 00:06:36,563 அவன் ஜார்ஜியாவில் வாழ்கிறான் என்பதால், அவன் நம் எதிரியாகிவிட முடியாது. 122 00:06:36,647 --> 00:06:39,900 -அது அப்படித்தான்! -அப்படித்தான் உள்நாட்டு போர்கள் நடக்கும். 123 00:06:39,983 --> 00:06:41,944 -நன்றி. -உன் தோனி கீழ்த்தரமாக இருந்தது, 124 00:06:42,027 --> 00:06:44,613 மற்றும் தற்போதைய சூழ்நிலைக்கு, உன் செய்தி தொடர்பில்லாமல் இருந்தது. 125 00:06:44,696 --> 00:06:47,574 நீ வைராக்கியம் உடையவன் போல தோன்றினாய். அதிலும்... 126 00:06:48,367 --> 00:06:49,368 என்ன? 127 00:06:49,451 --> 00:06:50,285 ஒரு பழமைவாதி போல. 128 00:06:51,495 --> 00:06:54,414 ஆமாம், இன்று எனக்கு ஒரு வயது கூடி இருக்கிறது, அதனால் நீ சொல்வது சரிதான். 129 00:06:54,498 --> 00:06:57,709 அட, கடவுளே. இன்று உங்கள் பிறந்த நாளா? பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 130 00:06:57,793 --> 00:06:58,836 பிறந்தநாள் வாழ்த்துக்கள். 131 00:06:58,919 --> 00:07:01,255 -எனக்குத் தெரியாது. -நான் அதை பெரிதாக கொண்டாடுவதில்லை. 132 00:07:01,338 --> 00:07:03,507 தன் பிறந்தநாளை ஒரு பெரிய விஷயமாக அவர் நினைக்க மாட்டார். 133 00:07:03,590 --> 00:07:09,638 எந்த பக்கம் சேர வேண்டும் என்று முடிவு செய்யும் நேரம் வந்துவிட்டது, எட்வர்ட். 134 00:07:13,267 --> 00:07:16,645 என் சொந்த குடும்பத்திற்கு எதிராக நான் நிற்க முடியாது. 135 00:07:17,396 --> 00:07:22,276 அப்படி என்றால், இந்தக் கல்லூரியின் பொருளாளர் என்ற பதவி மற்றும் இன்னும் வேறு ஏதாவது பொறுப்பையும் 136 00:07:22,359 --> 00:07:24,778 இழக்கக்கூடிய சூழ்நிலையைச் சந்திக்கத் தயாராக இரு. 137 00:07:30,742 --> 00:07:32,160 நீ என்னைத் திருமணம் செய்திருக்கலாம். 138 00:07:39,126 --> 00:07:41,044 -அப்பா, நீங்கள் நலமா? -ஆமாம். 139 00:07:41,128 --> 00:07:43,589 திரு. கான்க்கீ உங்களை இப்படித் தாக்கினார் என்பதை நம்ப முடியவில்லை. 140 00:07:43,672 --> 00:07:47,009 -அந்த ஆள் எப்போதுமே உணர்ச்சிவசப்படுவான். -அதுவும் உங்கள் பிறந்த நாளன்று. கடவுளே, அப்பா. 141 00:07:47,092 --> 00:07:48,343 அதனால், என்ன மாறிவிடப் போகிறது? 142 00:07:49,261 --> 00:07:50,596 நான் விரைவில் இறந்து போவேன். 143 00:07:56,310 --> 00:07:58,478 சமீபகாலமாக எல்லாமே கடினமாக இருக்கிறது. 144 00:07:58,562 --> 00:08:00,856 அவருடைய பிறந்த நாளன்று, அவர் வருத்தமாக இருக்கக் கூடாது. 145 00:08:00,939 --> 00:08:03,400 சரி, நாம் என்ன செய்யலாம்? ஏற்கனவே அவருக்கு ஒரு ஷூஹார்ன் வாங்கித் தந்தேன். 146 00:08:05,235 --> 00:08:06,904 -எனக்குத் தெரியும். -என்ன? 147 00:08:06,987 --> 00:08:09,740 டிக்கின்சன்கள் சேர்ந்து பாடும் சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யலாம். 148 00:08:10,490 --> 00:08:14,703 அது ஒரு அற்புதமான யோசனை,எமிலி. ரொம்ப நாளாக நாம் அதைச் செய்யவில்லை. 149 00:08:14,786 --> 00:08:17,414 சரி, வரவேற்பறையில் நெருப்பு மூட்டுவோம். பியானோவை சுற்றி அமர்ந்து கொள்வோம். 150 00:08:17,497 --> 00:08:19,166 அவருக்கு பிடித்த பழைய பாடல்களைப் பாடுவோம். 151 00:08:19,249 --> 00:08:20,667 சரி. அது சிறப்பாக இருக்கும். 152 00:08:20,751 --> 00:08:22,628 பழைய காலங்கள் போலவே, உங்கள் சிறு வயதில், 153 00:08:22,711 --> 00:08:25,506 நெருப்பைச் சுற்றி அமர்ந்து கொண்டு, உங்களோடு பாடியது போல இருக்கும். 154 00:08:25,589 --> 00:08:27,257 உன் அப்பாவிற்கு இப்படி சேர்ந்து பாடுவது பிடிக்கும். 155 00:08:27,341 --> 00:08:30,469 செல்லங்களே, குடும்பம் மட்டும் தான் முக்கியம். 156 00:08:30,552 --> 00:08:31,720 நான் ஒப்புக்கொள்கிறேன். 157 00:08:32,261 --> 00:08:36,015 நாம் எல்லோரும் பாடுவது அப்பாவை அவருடைய பிறந்தநாளில் மிகவும் மகிழ்ச்சிப்படுத்தும்! 158 00:08:37,893 --> 00:08:39,311 வின்னி. 159 00:08:40,437 --> 00:08:41,980 நீ பாடலுக்கு ஏற்ப வாயசைக்கிறாயா? 160 00:08:42,063 --> 00:08:43,690 இஅது நல்லதுக்காக தான், லவினியா. 161 00:08:44,733 --> 00:08:47,486 -இப்போது நமக்கு ஒரே ஒரு பிரச்சினை இருக்கிறது. -என்ன? 162 00:08:47,569 --> 00:08:50,572 மொத்த குடும்பமும் இல்லாமல், நம்மால் சேர்ந்து பாடும் நிகழ்ச்சியை நடத்த முடியாது. 163 00:08:51,073 --> 00:08:52,741 ஆஸ்டின் மற்றும் சூ என்ன செய்வார்கள்? 164 00:08:53,325 --> 00:08:54,826 அவர்கள் வர வேண்டும் என நினைக்கிறீர்களா? 165 00:08:55,536 --> 00:08:58,247 குழந்தையை தூக்க, சூ உங்களை அனுமதிக்காவிட்டாலும் கூடவா? 166 00:08:59,331 --> 00:09:02,543 குடும்பம் மட்டும் தான் முக்கியம். அது அவ்வளவு எளிமையானது. 167 00:09:02,626 --> 00:09:03,710 நீங்கள் சொல்வது சரிதான், அம்மா. 168 00:09:04,336 --> 00:09:06,547 இன்றிரவு அவர்களை நான் வரவழைக்கிறேன். நான் அதை பார்த்துக்கொள்கிறேன். 169 00:09:14,429 --> 00:09:15,430 சூ! 170 00:09:20,143 --> 00:09:22,479 சூ. என்ன பிரச்சினை? 171 00:09:24,398 --> 00:09:28,318 நேற்றிரவு முழுவதும் குழந்தை தூங்கவில்லை, இப்போது அழுது கொண்டே இருக்கிறான், 172 00:09:28,402 --> 00:09:30,612 எனக்கு ரொம்பவும் சோர்வாக இருக்கிறது. 173 00:09:31,196 --> 00:09:34,992 இவ்வளவு சோர்வாக இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. நான் வந்து... 174 00:09:35,576 --> 00:09:38,161 என்னால் இதை செய்ய முடியும் என்று தோன்றவில்லை, எமிலி. 175 00:09:38,245 --> 00:09:40,914 ஆனால் இதை நீ ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறாய், சூ. 176 00:09:40,998 --> 00:09:42,958 உன் குழந்தையை சிறப்பாக பார்த்துக்கொள்கிறாய். 177 00:09:45,836 --> 00:09:47,129 உன் குழந்தை எங்கே, சூ? 178 00:09:47,212 --> 00:09:48,839 கிளாரா மற்றும் அன்னாவிடம் இருக்கிறான். 179 00:09:48,922 --> 00:09:50,966 தெரியும், அவர்கள் சற்று ஆபத்தானவர்கள், 180 00:09:51,049 --> 00:09:54,094 ஆனால் அவன் அழுவதை என்னால் காது கொடுத்து கேட்க முடியவில்லை. 181 00:09:54,678 --> 00:09:57,639 எனக்கு... சற்று ஓய்வு தேவைப்பட்டது. அது தவறா? 182 00:09:57,723 --> 00:09:59,808 இல்லை, இல்லை. கண்டிப்பாக இல்லை. 183 00:09:59,892 --> 00:10:01,185 சரி. 184 00:10:02,644 --> 00:10:03,854 நான் சொல்வதைக் கேள், சூ. 185 00:10:05,772 --> 00:10:06,815 நான் உன்னை நேசிக்கிறேன். 186 00:10:08,692 --> 00:10:10,444 அட, நான் இதை எதிர்ப்பார்க்கவில்லை. 187 00:10:10,527 --> 00:10:13,739 இந்த உலகிலேயே, வேறு எவரை விடவும், உன்னை அதிகமாக நேசிக்கிறேன், 188 00:10:13,822 --> 00:10:16,909 அதன் ஆழத்தை நீ சந்தேகமில்லாமல் தெரிந்துகொள்ள வேண்டும். 189 00:10:18,368 --> 00:10:20,245 தீர்க்கமாக நீ அதை உணர வேண்டும். 190 00:10:21,747 --> 00:10:23,540 அவ்வளவு ஆழமாக அது உனக்குப் புரிவதற்காக, 191 00:10:23,624 --> 00:10:26,001 நான் தினந்தோறும் சொல்ல வேண்டும் என்றாலும், நான் அதைச் சொல்கிறேன். 192 00:10:26,668 --> 00:10:29,254 ஏனென்றால் நீ தான் எனக்கு எல்லாமும், சூ. 193 00:10:29,338 --> 00:10:30,547 எமிலி. 194 00:10:30,631 --> 00:10:32,049 நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது, 195 00:10:32,799 --> 00:10:34,801 நீ இல்லாமல் என்னால் சுவாசிக்க முடியாது, 196 00:10:34,885 --> 00:10:36,428 நீ இல்லாமல் என்னால் எழுத கூட முடியாது. 197 00:10:37,429 --> 00:10:38,972 இதெல்லாம் எங்கிருந்து வருகிறது? 198 00:10:39,056 --> 00:10:40,766 என் சிறிய இதயத்திலிருந்து. 199 00:10:45,771 --> 00:10:47,272 நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். 200 00:10:47,356 --> 00:10:49,525 சரி, நல்லது. நர்ஸ் எமிலி உனக்கு சேவை செய்வாள். 201 00:10:49,608 --> 00:10:52,152 நன்றி, நர்ஸ். நீ என் உயிரைக் காப்பாற்றிவிட்டாய். 202 00:10:54,112 --> 00:10:57,574 அப்பாவின் பிறந்தநாளுக்காக, இன்றிரவு குடும்பமாக சேர்ந்து பாடும் நிகழ்ச்சியை நடத்துகிறோம். 203 00:10:58,325 --> 00:10:59,618 நீயும் வந்து, கலந்துகொள்வாயா? 204 00:11:00,661 --> 00:11:02,496 அது நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. 205 00:11:03,247 --> 00:11:04,456 நிச்சயம் வருகிறேன். 206 00:11:04,540 --> 00:11:06,083 நன்றி, சூ. 207 00:11:07,751 --> 00:11:11,004 நீ இல்லாமல் இந்த குடும்பம் முழுமையடையாது. 208 00:11:13,632 --> 00:11:15,259 இப்போது ஆஸ்டினை மட்டும் தான் சமாதானப்படுத்தணும். 209 00:11:15,342 --> 00:11:18,303 -கவலைப்படாதே. நான் பார்த்துக்கொள்கிறேன். -அப்படியா? 210 00:11:18,887 --> 00:11:22,850 எப்படியும், நான் அவனுடைய மனைவி. நான் சொல்வதை அவன் செய்தாக வேண்டும். 211 00:11:23,517 --> 00:11:26,812 நீ அவனுடைய மனைவியாக இருந்தாலும், நான் உன்னுடையவள். 212 00:11:31,775 --> 00:11:33,819 அட, கடவுளே. எனக்காக அழுகிறான் போல. 213 00:11:33,902 --> 00:11:34,903 -போ. -மன்னித்துவிடு. 214 00:11:34,987 --> 00:11:36,530 பரவாயில்லை. இன்றிரவு சந்திக்கலாம். 215 00:11:37,197 --> 00:11:38,323 வருகிறேன். 216 00:11:49,918 --> 00:11:51,378 மிஸ் இ டிக்கின்சன் அம்ஹெர்ஸ்ட், மாசச்சூசெட்ஸ் 217 00:11:51,461 --> 00:11:53,797 கர்னல். டி.டபிள்யூ. ஹிக்கின்சன் பியூஃபோர்ட், எஸ்சி 218 00:11:54,381 --> 00:11:57,259 சேஃப் இன் தெயர் அலபாஸ்டர் சேம்பர்ஸ்... 219 00:11:57,342 --> 00:11:58,677 காலையால் தொடப்படாமல்... 220 00:11:58,760 --> 00:12:00,345 மதியத்தாலும் தொடப்படாமல்... 221 00:12:00,971 --> 00:12:03,640 உயிர்த்தெழுதலின் பலவீனமான உறுப்பினர்கள் தூங்குகிறார்கள், 222 00:12:04,224 --> 00:12:07,394 சாட்டின் ராஃப்ட்டர் மற்றும் கல் கூரை... 223 00:12:09,396 --> 00:12:13,609 ஆரம்பிப்பதற்கு முன், நான் வருகை பதிவு செய்கிறேன். 224 00:12:13,692 --> 00:12:15,986 தயவுசெய்து, ஒவ்வொருவரும் உங்கள் பெயரைச் சொல்கிறீர்களா? 225 00:12:16,069 --> 00:12:20,365 அப்படியே, உங்களைப்பற்றி ஓரிரு வார்த்தை சொல்கிறீர்களா? 226 00:12:20,449 --> 00:12:21,658 நான் ஆரம்பிக்கிறேன். 227 00:12:23,160 --> 00:12:24,912 என் பெயர் எவெரெட். 228 00:12:25,412 --> 00:12:27,497 உட்புற வடிவமைப்பில் எனக்கு நல்ல திறமை இருக்கிறது. 229 00:12:27,581 --> 00:12:30,209 என் கடந்தகாலத்தைப்பற்றி பேச நான் விரும்பவில்லை, சரியா? 230 00:12:30,834 --> 00:12:32,336 என் எதிர்காலத்தைப்பற்றி பேச விரும்புகிறேன். 231 00:12:32,419 --> 00:12:34,546 இந்த இடத்தை விட்டு வெளியேற உதவும் எதிர்காலம். 232 00:12:34,630 --> 00:12:35,881 ஆமாம். 233 00:12:35,964 --> 00:12:38,509 -நன்றாக சொன்னாய். -ஆமாம், நண்பா. ஆமென். 234 00:12:38,592 --> 00:12:40,844 நீங்கள் பல காலமாக இங்கேயே வாழ்கிறீர்களா? 235 00:12:40,928 --> 00:12:45,098 இராஸ்மஸ்ஸைத் தவிர, எல்லோரும் இங்கே தான் பிறந்தோம். அவன் எங்கிருந்து வந்தான்... யாருக்குமே தெரியாது. 236 00:12:45,182 --> 00:12:46,266 நேரம் கற்பனையானது. 237 00:12:46,350 --> 00:12:49,853 எல்லா கதையும் போல, நான் வரலாற்றில் என்னை புகுத்திக்கொள்வேன். 238 00:12:50,354 --> 00:12:52,564 எப்போதாவது, நான் சிலந்தியின் வடிவம் எடுப்பேன். 239 00:12:52,648 --> 00:12:55,859 நண்பா, நீ வித்தியாசமானவன். 240 00:12:56,610 --> 00:12:57,986 சரி. 241 00:12:58,070 --> 00:12:59,530 சரி, நீ? 242 00:12:59,613 --> 00:13:00,864 நான் தான் "த வால்." 243 00:13:00,948 --> 00:13:02,449 பெரிதாக இருப்பதால், என்னை "த வால்" என்பார்கள், 244 00:13:02,533 --> 00:13:05,744 ஆனால் முரணாக, எல்லாவற்றிற்கும் மேலாக என் குணத்தின் வலிமைக்காக புகழ் பெற்றிருக்கிறேன். 245 00:13:05,827 --> 00:13:06,954 அவன் மீது சாய்ந்துகொள்ளலாம். 246 00:13:07,037 --> 00:13:08,205 நான் தான் "த வால்." 247 00:13:08,288 --> 00:13:09,498 -புரிந்தது. -சரி. 248 00:13:09,581 --> 00:13:11,667 சரி. உன் பெயர் என்ன? 249 00:13:11,750 --> 00:13:12,751 மைக்கேல் ஜோர்டன். 250 00:13:13,418 --> 00:13:14,628 மைக்கேல் ரிவர் ஜோர்டன். 251 00:13:14,711 --> 00:13:17,005 மைக்கேல் ஜோர்டன், உனக்குள்ளே ஒரு சிறப்புத் தன்மை இருக்கிறது. 252 00:13:17,965 --> 00:13:21,260 ஒருநாள், நீ சிறப்பாக விளையாடுவதைப் பார்க்க மக்கள் ஸ்டேடியங்களில் குவிவார்கள். 253 00:13:21,844 --> 00:13:23,345 இராஸ்மஸால் எதிர்காலத்தைப் பார்க்க முடியும். 254 00:13:23,428 --> 00:13:27,850 சரியான பார்வை இருந்தால் எதிர்காலம், கடந்த காலமும் இணைந்து இருக்கலாம். 255 00:13:27,933 --> 00:13:29,726 அது தான் கருப்பின் சிறப்பு. 256 00:13:31,520 --> 00:13:34,231 ஆஹா. சரி. 257 00:13:36,024 --> 00:13:37,651 நீ, பகிர்ந்துகொள்ள உன்னிடம் ஏதாவது கதை இருக்கிறதா? 258 00:13:37,734 --> 00:13:39,278 என் பெயர் சாலமன். 259 00:13:39,361 --> 00:13:43,448 இங்கே சமையலறையில் வேலை செய்து, மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் பற்றி அறிந்து கொண்டேன். 260 00:13:43,532 --> 00:13:44,575 நீ ஒரு சிறந்த சமையல்காரனா? 261 00:13:44,658 --> 00:13:45,826 நான் ஒரு கொலைகாரன். 262 00:13:45,909 --> 00:13:47,953 உங்களுக்கே தெரியாமல் உங்களுக்கு விஷம் கொடுப்பேன். 263 00:13:48,662 --> 00:13:50,372 நான் கவனமாக இருக்கிறேன். 264 00:13:50,455 --> 00:13:51,748 முயற்சி செய்யுங்கள்! 265 00:13:56,420 --> 00:13:59,548 சரி, வருகைப் பதிவு முடிந்துவிட்டது... 266 00:13:59,631 --> 00:14:01,049 ஆல்ஃபபெட் தெரிந்துவிட்டால், 267 00:14:01,133 --> 00:14:04,469 ஆங்கில மொழியில் எந்த வார்த்தையையும், உங்களால் வாசிக்க முடியும். 268 00:14:04,553 --> 00:14:05,762 “என் துப்பாக்கி எங்கே?” என வாசிக்க முடியுமா? 269 00:14:06,930 --> 00:14:08,348 என் நண்பா! 270 00:14:08,432 --> 00:14:11,727 “உன்னுடைய படையில் நான் இருந்தால், என் ஆயுதத்தை தருகிறாயா?” என வாசிக்க முடியுமா? 271 00:14:11,810 --> 00:14:12,895 பூம். 272 00:14:12,978 --> 00:14:15,022 எங்களது துப்பாக்கிகளை வாங்கித் தருவீர்கள் என நினைத்தேன், பக்ரா. 273 00:14:15,105 --> 00:14:17,191 ஆமாம், ஹிக்கின்சனோடு பேசப் போவதாக சொன்னீர்களே? 274 00:14:17,274 --> 00:14:18,692 ஆமாம், சொன்னார். என்ன நடந்தது? 275 00:14:18,775 --> 00:14:21,361 -ஆமாம், நான் அவரிடம் அது பற்றி பேசினேன். -அவர் என்ன சொன்னார்? 276 00:14:22,196 --> 00:14:24,740 “செயல்முறையில் இருக்கிறது” என்றார். 277 00:14:24,823 --> 00:14:28,202 “செயல்முறையில் இருக்கிறது.” இதற்கு என்ன அர்த்தம்? 278 00:14:28,785 --> 00:14:29,912 ஹிக்கின்சனின் சொல் படி, 279 00:14:29,995 --> 00:14:34,082 முதலாம் தெற்கு கரோலினா தன்னார்வலர்கள் இன்னும் பரிசோதனையில் இருக்கிறார்கள். 280 00:14:34,166 --> 00:14:35,125 பரிசோதனை. 281 00:14:35,209 --> 00:14:38,754 நீங்கள் அதிகாரபூர்வமான படைப்பிரிவு இல்லையாம். 282 00:14:38,837 --> 00:14:41,423 விடுதலைக்கான அறிக்கையில் லிங்கன் கையெழுத்திடும் வரை. 283 00:14:41,507 --> 00:14:43,258 சரி. அதன் பிறகு என்ன நடக்கும்? 284 00:14:43,342 --> 00:14:44,801 ஜனவரி 1, 1863. 285 00:14:44,885 --> 00:14:46,720 விரைவில் நடக்கும் என ஹிக்கின்சன் நினைக்கிறார், 286 00:14:47,304 --> 00:14:49,264 அவர் நினைப்பதால் மட்டும் உங்களுக்கு ஆயுதங்களைத் தர முடியாது. 287 00:14:49,973 --> 00:14:51,892 லிங்கனே அனுமதி கொடுக்கும் வரை, 288 00:14:51,975 --> 00:14:54,686 காத்திருக்க வேண்டிய ஜெனரல் சாக்ஸ்டனிடமிருந்து அவருக்கு அனுமதி வேண்டும். 289 00:14:54,770 --> 00:14:58,190 எண்ணவே முடியாத அளவு, வெள்ளைநிற மனிதர்கள், நமக்குத் தடையாய் இருக்கிறார்கள். 290 00:14:58,273 --> 00:15:02,319 உங்களுக்கு உதவ ஆசை தான், ஆனால் உங்களுக்கு படிக்கக் கற்று தரத்தான் இங்கே வந்துள்ளேன். 291 00:15:02,402 --> 00:15:05,739 -நாங்கள் படிக்க அல்ல, சண்டையிட விரும்புகிறோம். -எதிர்காலத்திற்கு போக விரும்புகிறோம். 292 00:15:06,615 --> 00:15:07,950 சரி, நான் இதை சொல்கிறேன். 293 00:15:09,618 --> 00:15:12,746 எதிர்காலத்திற்கு செல்ல, நீங்கள் கடந்த காலத்தை புரிந்துகொள்ள வேண்டும். 294 00:15:13,664 --> 00:15:16,333 அப்படியென்றால் வரலாற்றைப் பற்றி, 295 00:15:17,334 --> 00:15:21,004 எல்லா துன்பங்களையும் பற்றி, 296 00:15:21,088 --> 00:15:22,756 அந்த வலியைப் பற்றி, 297 00:15:22,840 --> 00:15:24,132 அந்த முரண்பாடைப் பற்றி படிக்க வேண்டும். 298 00:15:25,467 --> 00:15:29,137 அமெரிக்காவே ஒரு முரண்பாடு, அதை நாம் படிக்க வேண்டும். 299 00:15:30,556 --> 00:15:33,475 ஏனென்றால் இருளை நாம் எதிர்கொள்ளவில்லை என்றால், 300 00:15:34,351 --> 00:15:37,354 எப்படி வெளிச்சத்திற்கு முன்னேறுவது? 301 00:15:42,818 --> 00:15:44,862 இந்த பக்ரா சொல்வது சரிதான். 302 00:15:45,529 --> 00:15:46,530 ஆமாம். 303 00:15:49,157 --> 00:15:50,659 படிக்கக் கற்றுக்கொள்வோம். 304 00:15:56,623 --> 00:15:58,292 இங்கே இருக்கிறாயா,ஆஸ்டின். 305 00:15:58,375 --> 00:16:00,961 போய் தயாராகு. இன்றிரவு உன் அப்பா வீட்டிற்குப் போக வேண்டும். 306 00:16:01,044 --> 00:16:03,589 என்ன? நான்தான் என் அப்பாவோடு பேசுவதில்லையே. 307 00:16:03,672 --> 00:16:07,467 ஆமாம், தெரியும், ஆனால் இன்று அவர் பிறந்தநாள், அவர்கள் ஒரு சேர்ந்து பாடப் போகிறார்கள்... 308 00:16:07,551 --> 00:16:09,928 நான் சொல்லும் எதையுமே நீ கேட்கமாட்டாய், இல்லையா? 309 00:16:10,512 --> 00:16:12,598 என் அப்பாவிடமிருந்து நான் பிரிந்துவிட்டேன். 310 00:16:12,681 --> 00:16:16,685 அவர் பிறந்தநாளுக்கு நான் வரமாட்டேன். நீ போவதை நிச்சயம் தடுக்கவும் மாட்டேன். 311 00:16:16,768 --> 00:16:19,396 உண்மையில், நீ போவதை நான் விரும்புகிறேன். 312 00:16:19,479 --> 00:16:21,565 குழந்தையோடு என்னைத் தனியாக விடு. 313 00:16:21,648 --> 00:16:24,985 அவனோடு நேரம் கழிக்கவே முடியவில்லை. ஒரு இரவாவது, நானும் அவனும் தனியாகயிருக்கிறோம். 314 00:16:25,611 --> 00:16:29,323 எதற்காக ஒரு அப்பா தன் குழந்தையோடு தனியாக இருக்க வேண்டும்? 315 00:16:29,406 --> 00:16:32,409 நீங்கள் வரவில்லை என்றால், குழந்தையை கிளாராவும், அன்னாவும், பார்த்துக்கொள்வார்கள். 316 00:16:32,492 --> 00:16:33,744 அவர்கள் அவனைப் பாத்துக்கொள்ளட்டும். 317 00:16:33,827 --> 00:16:35,370 மறுபடியும் நான் சொல்வதை நீ கவனிக்கவில்லை. 318 00:16:36,747 --> 00:16:39,541 நான் அவனைப் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னேன். 319 00:16:40,626 --> 00:16:43,587 உங்களை கவனித்துக்கொள்ளவே உங்களால் முடியாது. 320 00:16:44,171 --> 00:16:46,215 மதியம் முழுதும் என்ன செய்தீர்கள்? 321 00:16:46,298 --> 00:16:48,425 குடித்துக் கொண்டிருந்தீர்கள், இல்லையா. 322 00:16:49,218 --> 00:16:52,221 இல்லை. குழந்தையோடு உங்களை தனியாக விடமுடியாது. 323 00:16:52,304 --> 00:16:55,766 ஜன்னலில் இருந்து அவனை வீசிவிடுவீர்கள், அல்லது வேறு ஏதாவது பயங்கரகமான விபத்தை உண்டாக்குவீர்கள். 324 00:16:57,017 --> 00:17:00,187 அப்பாக்களால் நன்றாக வளர்க்க முடியாது, ஆஸ்டின். 325 00:17:00,270 --> 00:17:01,772 அது அப்படித்தான். 326 00:17:01,855 --> 00:17:03,273 ஆண்களுக்கு வேறு வேலைகள் இருக்கிறது. 327 00:17:03,941 --> 00:17:05,817 அப்படியா? எது போல? 328 00:17:06,318 --> 00:17:08,069 போரில் சண்டை போடுவது போல. 329 00:17:08,779 --> 00:17:12,449 நீங்காள் ஒரு சீருடை அணிந்து, செய்ய வேண்டியதை செய்யலாமே? 330 00:17:12,950 --> 00:17:14,034 ஆண்கள் அதைத்தான் செய்வார்கள். 331 00:17:15,661 --> 00:17:18,539 அப்போதாவது உங்களுடைய அப்பா உங்களைப்பற்றி பெருமையாக நினைப்பார். 332 00:17:23,502 --> 00:17:24,545 என் பாட்டு உன்னிடம் இருக்கிறதா? 333 00:17:25,295 --> 00:17:27,923 நல்ல பாட்டு. “பிளென்டி ஆஃப் ஃபிஷ் இன் த சீ” பாடல் உள்ளதா? 334 00:17:28,006 --> 00:17:29,466 -ஆமாம். -சரியான வரிசையில் உள்ளதா? 335 00:17:29,550 --> 00:17:31,134 -ஆமாம். -நல்லது. 336 00:17:37,140 --> 00:17:40,644 அவர் ஒரு மகிழ்ச்சியான ஆள் அவர் ஒரு மகிழ்ச்சியான ஆள் 337 00:17:41,520 --> 00:17:42,688 எட்வர்ட்! 338 00:17:42,771 --> 00:17:44,773 நான் பேசுவது கேட்கிறதா, எட்வர்ட்? 339 00:17:44,857 --> 00:17:46,859 நன்றாக கேட்கிறது, ஆன்பே. 340 00:17:47,693 --> 00:17:49,361 அது தான் என்னை கொல்லப் பார்த்தது. 341 00:17:49,444 --> 00:17:51,321 அப்பாடா. அந்த முறை நீங்கள் இறந்துவிட்டீர்கள் என நினைத்தேன். 342 00:17:53,490 --> 00:17:54,741 இதெல்லாம் என்ன ஆரவாரம்? 343 00:17:55,325 --> 00:17:58,704 -அது, என்னுடைய யோசனை. -அப்படியா? 344 00:17:58,787 --> 00:18:01,957 உங்கள் பிறந்த நாளன்று சேர்ந்து பாடும் ஒரு நிகழ்ச்சியை 345 00:18:02,040 --> 00:18:03,166 நடத்த நினைத்தேன். 346 00:18:03,750 --> 00:18:04,793 சரி... 347 00:18:05,711 --> 00:18:07,880 கொஞ்சம் இசை இருந்தால் நன்றாக இருக்கும். 348 00:18:07,963 --> 00:18:09,756 ஆமாம். அது எனக்குப் பிடிக்கும். 349 00:18:10,883 --> 00:18:14,553 அவர் ஒரு மகிழ்ச்சியான ஆள் அவர் ஒரு மகிழ்ச்சியான ஆள் 350 00:18:14,636 --> 00:18:19,641 அவர் ஒரு மகிழ்ச்சியான ஆள் அதை யாராலும் மறுக்க முடியாது 351 00:18:23,937 --> 00:18:26,523 கடினமான குழப்பமான காலத்தில் வாழ்கிறோம் 352 00:18:26,607 --> 00:18:29,151 மகிழ்ச்சியில்லாமல் சோகமாக, பாடல்கள் பிடிக்காமல் 353 00:18:29,234 --> 00:18:31,862 அமைதி பாடல்கள் தங்கள் ஓசையை இழந்துவிட்டன 354 00:18:31,945 --> 00:18:34,531 அதுதான் இப்போது முக்கியம் 355 00:18:34,615 --> 00:18:37,034 நாம் உண்மை சகோதரர்களாக நினைத்தவர்கள் 356 00:18:37,117 --> 00:18:39,786 எதிர் அணியினராக மாறிவிட்டனர் 357 00:18:39,870 --> 00:18:42,497 நாம் அவற்றை இப்போது நிறைவேற்ற வேண்டும் 358 00:18:42,581 --> 00:18:45,417 அதுதான் இப்போது முக்கியம் 359 00:18:45,501 --> 00:18:47,794 அதுதான் முக்கியம் 360 00:18:47,878 --> 00:18:50,547 போராளிகள் பிரிய வேண்டும் 361 00:18:50,631 --> 00:18:53,634 அவர்களை போக வைப்போம் பூமி அல்லது கடல் வழியாக 362 00:18:53,717 --> 00:18:56,678 அதுதான் இப்போது முக்கியம் 363 00:18:56,762 --> 00:18:59,681 ஓ, சூரியன் பளிச்சிடுகிறது 364 00:18:59,765 --> 00:19:02,976 என் பழைய கென்டக்கி வீட்டின் மீது 365 00:19:03,060 --> 00:19:08,482 இது கோடை, மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் 366 00:19:09,149 --> 00:19:11,902 சோள கதிர்கள் வளர்ந்திருக்கின்றன 367 00:19:11,985 --> 00:19:14,905 புல்வெளி பூத்திருக்கிறது 368 00:19:14,988 --> 00:19:20,494 நாள் முழுவதும் பறவைகள் பாடுகின்றன 369 00:19:21,495 --> 00:19:24,456 தன்னைப் பார்க்க வருபவர்களைப் பார்த்து 370 00:19:24,540 --> 00:19:27,417 ஒரு பெண் தலையசைத்து மறுத்தாள் 371 00:19:27,501 --> 00:19:30,504 அவர்கள் செய்த சத்தியங்களை கேலி செய்து சிரித்தாள் 372 00:19:30,587 --> 00:19:33,632 மெய் அல்லது பொய்யான இதயங்களைப் பார்த்து 373 00:19:33,715 --> 00:19:36,718 அவள் ஆனந்தமாக பாடிக்கொண்டு 374 00:19:36,802 --> 00:19:39,930 நாள் முழுவதும் கவலை இல்லாமல் 375 00:19:40,013 --> 00:19:42,933 கடலில் நிறைய மீன்கள் இருக்கின்றன 376 00:19:43,016 --> 00:19:46,103 எவ்வளவு பிடிக்கப்பட்டதோ அவ்வளவு 377 00:19:46,186 --> 00:19:49,314 கடலில் நிறைய மீன்கள் இருக்கின்றன 378 00:19:49,398 --> 00:19:52,609 எவ்வளவு பிடிக்கப்பட்டதோ அவ்வளவு 379 00:19:57,531 --> 00:19:59,658 கேலிப்பறவையின் சத்தத்தைக் கேளுங்கள் 380 00:19:59,741 --> 00:20:01,952 கேலிப்பறவையின் சத்தத்தைக் கேளுங்கள் 381 00:20:02,035 --> 00:20:06,164 தன் கல்லறையின் மீது கேலிப்பறவை இன்னும் பாடுகிறது 382 00:20:06,248 --> 00:20:08,542 கேலிப்பறவையின் சத்தத்தைக் கேளுங்கள் 383 00:20:08,625 --> 00:20:10,752 கேலிப்பறவையின் சத்தத்தைக் கேளுங்கள் 384 00:20:10,836 --> 00:20:15,090 வில்லோ மரங்கள் ஆடும் இடத்தில் இன்னும் பாடிக்கொண்டு இருக்கிறது 385 00:20:15,174 --> 00:20:17,718 -ஹே, வின்னி! -வின்னி! ஹே! இன்னும். இன்னும். 386 00:20:18,594 --> 00:20:19,636 தொடர்ந்து வாசி. 387 00:20:20,929 --> 00:20:22,222 எனக்கு இது தேவைப்பட்டது. 388 00:20:22,973 --> 00:20:23,974 நன்றி. 389 00:20:24,558 --> 00:20:26,894 ஓ, கடவுளே. என் எண்ணங்கள் தெளிவாகின்றன, நான்... 390 00:20:27,561 --> 00:20:30,647 உன்னுடைய கவிதை பற்றி ஒரு கருத்து சொல்ல விரும்பினேன். 391 00:20:30,731 --> 00:20:32,566 என் கவிதையா? எந்த கவிதை? 392 00:20:32,649 --> 00:20:35,485 குழந்தை பிறப்பதற்கு கொஞ்சம் முன்னர், நீ எனக்கு கொடுத்த கடைசி கவிதை. 393 00:20:36,695 --> 00:20:38,780 “சேஃப் இன் தெயர் அலபாஸ்டர் சேம்பர்ஸ்.” 394 00:20:38,864 --> 00:20:40,699 நிறைய கவிதைகளோடு, இதை நான் அனுப்பியது... 395 00:20:40,782 --> 00:20:42,534 நிறைய கவிதைகளோடு, இதை யாருக்கு அனுப்பினாய்? 396 00:20:42,618 --> 00:20:45,537 உனக்கு தான். அது... சரி, சொல். 397 00:20:46,788 --> 00:20:51,668 சரி, அதாவது, அது... அது ஒரு அசாதரணமான கவிதை. 398 00:20:51,752 --> 00:20:55,506 இறப்பு மற்றும் பனியின் படத்தை விவரித்தது. 399 00:20:55,589 --> 00:20:57,633 அது ரொம்ப அருமையாக இருந்தது, எமிலி. 400 00:20:58,842 --> 00:20:59,843 ஆனால்? 401 00:21:00,969 --> 00:21:03,096 -ஆனால் என சொன்னாயா? -இல்லை. இல்லை. 402 00:21:03,180 --> 00:21:06,642 ஆனால் கிடையாது, இருக்கலாம் என சொல்வேன். நான்... 403 00:21:07,851 --> 00:21:11,021 இரண்டாவது செய்யுள் இல்லை என்றால், அது இன்னும் சிறப்பாக இருக்கும். 404 00:21:11,104 --> 00:21:12,272 அது இல்லாமலா? 405 00:21:12,356 --> 00:21:14,441 வந்து, இது என்னுடைய அபிப்ராயம் தான். 406 00:21:15,192 --> 00:21:19,363 ஆனால் வேறு எதையும் விட என்னுடைய அபிப்ராயம் உனக்கு முக்கியம் என்று தெரியும். 407 00:21:19,947 --> 00:21:22,074 பழையதை நினைத்துப் பார்க்கும் நேரமிது. 408 00:21:22,157 --> 00:21:24,409 நம் இனிமையான நினைவுகளை பகிர்ந்துக்கொள்ளலாம், எட்வர்ட். 409 00:21:24,493 --> 00:21:25,827 நமக்கு அப்படி இருக்கிறதா? 410 00:21:25,911 --> 00:21:27,037 கண்டிப்பாக இருக்கிறது. 411 00:21:27,120 --> 00:21:29,414 நீங்கள் முதலில் எப்படி சந்தித்தீர்கள் என்று சொல்லுங்களேன்? 412 00:21:29,498 --> 00:21:30,499 சரி. 413 00:21:31,291 --> 00:21:33,627 -15வது நூற்றாண்டில்... -எட்வர்ட்! 414 00:21:33,710 --> 00:21:35,128 -...நான்... -கதையைச் சொல்லுங்கள். 415 00:21:35,212 --> 00:21:37,840 சரி. சரி. சரி. 416 00:21:37,923 --> 00:21:39,049 சரி. வந்து... 417 00:21:40,050 --> 00:21:44,012 நான் ஒரு துடிப்பான இளைஞன், மாசச்சூசெட்ஸ் மாநில பாதுகாப்பு படையின் உறுப்பினர். 418 00:21:44,513 --> 00:21:46,431 மான்சனில் வேலை செய்தேன். 419 00:21:46,515 --> 00:21:47,975 அங்கே தான் நான் வளர்ந்தேன். 420 00:21:48,058 --> 00:21:50,811 ஒருநாள் இரவு, மான்சன் அகாடமியில் நடந்த ஒரு வேதியல் விரிவுரை கேட்க சென்றிருந்தேன், 421 00:21:50,894 --> 00:21:51,895 அப்போது பார்த்தால், 422 00:21:51,979 --> 00:21:55,148 இளமையான மிஸ். எமிலி நார்க்ராஸ், என் அருகில் அமர்ந்திருந்தாள். 423 00:21:55,232 --> 00:21:56,942 என்ன? நீங்கள் வேதியல் விரிவுரை கேட்க போனீர்களா, அம்மா? 424 00:21:57,025 --> 00:22:00,237 சத்தியமாக, என் சகோதரனுக்காக ஒரு இடம் பிடிக்கத்தான் அங்கே சென்றேன். 425 00:22:00,320 --> 00:22:03,490 அந்த விரிவுரை ஆரம்பித்த உடனேயே வீட்டிற்கு வந்துவிட முடிவு செய்திருந்தேன். 426 00:22:03,574 --> 00:22:06,910 ஆமாம், ஆனால் எங்களின் கெமிஸ்ட்ரியால், அங்கேயே இருந்துவிட்டாள். 427 00:22:08,370 --> 00:22:12,624 அவர் ஒரு மேஜர், சேஷ் மற்றும் வாள் எல்லாம் வைத்திருந்தார். 428 00:22:13,333 --> 00:22:14,668 கண்டதும் காதலித்துவிட்டேன். 429 00:22:14,751 --> 00:22:17,921 அதனால் தான் மூன்று மாதங்களுக்கு, என் விருப்ப கடிதத்திற்கு நீ பதிலளிக்காமல் இருந்தாயா? 430 00:22:18,505 --> 00:22:19,840 அவ்வளவு காலம் ஒன்றும் இல்லை. 431 00:22:19,923 --> 00:22:22,176 மூன்று மாதங்கள். மூன்று மாதங்களுக்கு பதில் சொல்லாமல் வாட்டினாள். 432 00:22:22,259 --> 00:22:24,428 -நம்பவே முடியவில்லை. -திருமணம் எப்படி நடந்தது? 433 00:22:24,511 --> 00:22:26,680 திருமணம். சொல்கிறேன். 434 00:22:27,431 --> 00:22:30,517 முதல் நாள் இரவு, நான் மிகவும் பரபரப்பாக இருந்ததால் தூங்கவில்லை. 435 00:22:30,601 --> 00:22:33,770 அங்கே எரிந்த மெழுகுவர்த்தியை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருந்தேன், 436 00:22:33,854 --> 00:22:37,024 அதன் ஒளி மறையும் வரை பார்த்தேன். 437 00:22:40,611 --> 00:22:45,199 என் சகோதரி, லவினியா, நான் திருமணம் செய்துகொள்வதை விரும்பவில்லை. 438 00:22:45,282 --> 00:22:47,117 எனக்கு ரொம்பவும் சிறுவயது என்று நினைத்தாள். 439 00:22:47,201 --> 00:22:49,536 என் உதவி இல்லாமல், பண்ணையில் தான் எப்படி வாழ்வது என்று நினைத்தாள். 440 00:22:49,620 --> 00:22:51,121 அதைப்பற்றி உண்மையாகவே ரொம்ப பயந்தாள். 441 00:22:51,205 --> 00:22:54,082 எங்களுடைய திருமண நாளை, அவள் அழுதுகொண்டே கழித்தது நினைவிருக்கிறது. 442 00:22:54,958 --> 00:22:55,959 அது... 443 00:22:58,921 --> 00:23:01,507 சரி, எப்படியோ, எல்லாம் நன்றாக நடந்தது. 444 00:23:01,590 --> 00:23:04,718 எட்வர்டுடன் ஒரு சிறந்த வாழ்க்கை, மூன்று அழகான குழந்தைகள். 445 00:23:05,302 --> 00:23:07,304 என் அம்மாவை மீண்டும் பார்க்க முடியாதது பற்றி கவலை இல்லை, 446 00:23:07,387 --> 00:23:09,389 ஏனென்றால், நீ பிறந்த பிறகு, 447 00:23:09,473 --> 00:23:10,766 நான் மான்சனுக்கு திரும்பி போவதற்குள், 448 00:23:10,849 --> 00:23:12,768 அவளுக்கு மஞ்சள் காமாலை வந்துவிட்டது. 449 00:23:17,773 --> 00:23:18,774 இனிய நினைவுகள். 450 00:23:18,857 --> 00:23:22,027 ஆமாம். சிறப்பு. 451 00:23:22,110 --> 00:23:24,780 தெரியுமா, இன்று காலை, என் திருமண உடையைப் பார்த்தேன். 452 00:23:24,863 --> 00:23:28,116 அது தூசி படிந்து கொண்டு பாட்டி நார்க்ராஸின் படுக்கையோடு, 453 00:23:28,200 --> 00:23:29,201 வைக்கப்பட்டிருந்தது. 454 00:23:29,284 --> 00:23:30,536 அந்த உடை நினைவிருக்கு. 455 00:23:32,162 --> 00:23:34,081 அப்படியா? 456 00:23:34,164 --> 00:23:36,542 -ஆமாம். நீ அதை அணிந்துகொள். -எட்வர்ட். 457 00:23:37,417 --> 00:23:39,419 நிறுத்துங்கள், எட்வர்ட். 458 00:23:39,503 --> 00:23:41,630 -அது இப்போது பொருந்தாது. -முயற்சி செய்யுங்கள், அம்மா. 459 00:23:41,713 --> 00:23:44,007 அட, தன் குடும்பத்திலிருந்து பிரித்து, 460 00:23:44,091 --> 00:23:47,052 உன் அப்பா அழைத்து வந்த, அந்த குழந்தைப்பருவ மணமகள் இல்லை நான். 461 00:23:47,135 --> 00:23:49,596 எப்போதுமே அந்த குழந்தைப்பருவ மணமகளாகத்தான் எனக்குத் தெரிகிறாய். 462 00:23:49,680 --> 00:23:50,931 சரி, அது... 463 00:23:53,016 --> 00:23:54,351 என் சகோதரியை பிரிந்து வருந்துகிறேன். 464 00:23:58,856 --> 00:24:00,899 வாழ்க்கைக் கடினமாக இருக்கிறது, இல்லையா? 465 00:24:03,360 --> 00:24:05,529 ஹே, எனக்கு அதைப்பற்றி ஒரு பாடல் தெரியும். 466 00:24:06,488 --> 00:24:07,823 சரி, பாடு. 467 00:24:31,680 --> 00:24:35,475 வாழ்க்கைப் பயணத்தில் கொஞ்சம் ஓய்வு எடுப்போம் 468 00:24:35,559 --> 00:24:38,228 அதன் பல கண்ணீரை எண்ணுவோம் 469 00:24:38,312 --> 00:24:43,692 ஏழைகள் தான் சோகப்படுவார்கள் என்று நினைக்கிறோம் 470 00:24:45,319 --> 00:24:49,281 தொடர்ந்து ஒலிக்கும் பாடல் ஒன்று உண்டு 471 00:24:49,364 --> 00:24:51,909 நம் காதுகளில் எப்போதும் ஒலிக்கும் 472 00:24:51,992 --> 00:24:57,164 ஓ, கடுமையான நேரங்களே இனி திரும்பவும் வராதீர்கள் 473 00:24:58,916 --> 00:25:01,084 இது தான் அந்த பாடல் 474 00:25:01,168 --> 00:25:03,962 சோர்வானவர்களின் பெருமூச்சு 475 00:25:04,046 --> 00:25:06,256 அன்பு பெட்டி மற்றும் ஹெலன் 476 00:25:06,340 --> 00:25:09,801 கடினமான நேரங்களே, கடினமான நேரங்களே 477 00:25:09,885 --> 00:25:12,513 இனி திரும்பவும் வராதீர்கள் 478 00:25:12,596 --> 00:25:16,350 நிறைய நாட்கள் இருந்திருக்கிறீர்கள் 479 00:25:16,433 --> 00:25:19,102 என் அறையின் வாசலிலேயே 480 00:25:19,186 --> 00:25:22,147 ஓ, கடினமான நேரங்களே 481 00:25:22,231 --> 00:25:24,441 இனி திரும்பவும் வராதீர்கள் 482 00:25:26,235 --> 00:25:30,197 நாங்கள் களிப்பையும், அழகையும் நாடுகிறோம் 483 00:25:30,280 --> 00:25:32,866 மகிழ்ச்சியான, இனிமையான இசையையும் 484 00:25:32,950 --> 00:25:35,744 பலவீனமானவை இருக்கின்றன 485 00:25:35,827 --> 00:25:37,829 வாசலில் மயக்கமுற்றவாறே 486 00:25:39,373 --> 00:25:43,544 அவற்றின் குரல் மெலிதாக இருந்தாலும் 487 00:25:43,627 --> 00:25:46,046 அவற்றின் கெஞ்சும் பார்வை சொல்லிவிடும் 488 00:25:46,129 --> 00:25:49,049 ஓ, கடினமான நேரங்களே 489 00:25:49,132 --> 00:25:52,052 இனி திரும்பவும் வராதீர்கள் 490 00:25:52,970 --> 00:25:56,098 ஓ, கடினமான நேரங்களே 491 00:25:56,765 --> 00:25:58,892 இனி திரும்பவும் வராதீர்கள் 492 00:26:00,143 --> 00:26:01,520 நீ வந்துவிட்டாயே. 493 00:26:03,313 --> 00:26:04,982 பிறந்தநாள் வாழ்த்துக்கள், அப்பா. 494 00:26:05,858 --> 00:26:08,610 நன்றி. நீ அந்தப் பாடலின் போது வந்தது சந்தோஷம். 495 00:26:09,194 --> 00:26:10,821 அது ஒரு அழகான பாடல். 496 00:26:11,321 --> 00:26:12,906 ஆமாம். எனக்கும் பிடிக்கும். 497 00:26:12,990 --> 00:26:16,034 நீங்கள் இருவரும், இதை உங்கள் மகனுக்கு சொல்லித் தர வேண்டும். 498 00:26:16,118 --> 00:26:17,452 அதாவது, நானும் எமிலியுமா? 499 00:26:18,203 --> 00:26:19,830 இல்லை. நீயும் ஆஸ்டினும். 500 00:26:22,040 --> 00:26:24,334 நாங்கள் இன்றிரவு சில பழைய நினைவுகளை அசை போட்டோம். 501 00:26:24,418 --> 00:26:27,796 பழைய நினைவுகள் என்றவுடன், இதோ திரும்பி வருகிறேன். 502 00:26:27,880 --> 00:26:29,548 -எங்கே போகிறாய்? -மாடிக்கு. 503 00:26:30,257 --> 00:26:31,341 என்ன? 504 00:26:31,425 --> 00:26:33,260 இதோ ஒரு நொடியில் வருகிறேன். 505 00:26:36,180 --> 00:26:38,765 ஆஸ்டின், ஏற்கனவே நிறைய குடித்துவிட்டீர்கள் தானே? 506 00:26:39,600 --> 00:26:41,810 உன் மனைவி சொல்வதைக் கேள். அவள் சரியாகச் சொல்கிறாள். 507 00:26:43,478 --> 00:26:48,192 உண்மையில், பரவாயில்லை என்றால், நான் சில வார்த்தைகள் பேச வேண்டும். 508 00:26:48,275 --> 00:26:50,527 பிறந்தநாள் வாழ்த்து. சரி, சொல். 509 00:26:51,153 --> 00:26:52,863 வாழ்த்து கிடையாது. 510 00:26:55,490 --> 00:26:57,075 ஓ, கடவுளே. 511 00:26:57,159 --> 00:26:59,036 சரி. இதோ. 512 00:27:00,037 --> 00:27:01,371 நான் யோசித்துக் கொண்டிருந்தேன். 513 00:27:01,455 --> 00:27:03,332 அது உனக்கு வழக்கமானது கிடையாதே. 514 00:27:04,458 --> 00:27:08,795 நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்காது. 515 00:27:09,505 --> 00:27:13,800 ஆமாம், நம் தேசமே வருத்தமாகவும், வலியோடும் இருக்கிறது. 516 00:27:14,301 --> 00:27:19,431 சில சமயங்களில் சமுதாயத்தில் இருந்து நமது வலியை வேறுபடுத்தி காண்பிக்க முடியாது, 517 00:27:19,515 --> 00:27:20,516 இல்லையா? 518 00:27:20,599 --> 00:27:24,269 ஆனால் உண்மை என்னவென்றால், என் வாழ்க்கை போகும் பாதை எனக்குப் பிடிக்கவில்லை. 519 00:27:24,937 --> 00:27:26,939 எண்ண முடியாத அளவு காரணங்களினால். 520 00:27:27,648 --> 00:27:31,193 “போகும் பாதை”? நீ சின்னப் பையன், மகனே. 521 00:27:31,276 --> 00:27:32,819 ஆமாம், அது சரிதான். 522 00:27:33,570 --> 00:27:35,322 என் வாழ்க்கை இன்னும் முடியவில்லை, 523 00:27:35,405 --> 00:27:38,075 அதனால் அதில் மாற்றங்கள் செய்ய எனக்கு இன்னும் சக்தி இருக்கிறது. 524 00:27:38,158 --> 00:27:39,451 “மாற்றங்கள்” என்று எதைச் சொல்கிறாய்? 525 00:27:39,535 --> 00:27:41,912 -இதைப்பற்றி பேச இது சரியான நேரமில்லை... -நான் பேச வேண்டும், எமிலி. 526 00:27:43,580 --> 00:27:45,207 இன்றிரவு நான் சில முக்கிய முடிவுகள் எடுத்திருக்கிறேன், 527 00:27:45,290 --> 00:27:46,708 அதை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். 528 00:27:48,585 --> 00:27:53,674 முதலாவதாக, "எட்வர்ட் டிக்கின்சன் அண்ட் சன்" என்ற சட்ட நிறுவனத்திலிருந்து நான் வெளியேறுகிறேன். 529 00:27:54,299 --> 00:27:56,343 சொந்த நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கப் போகிறேன். 530 00:27:56,426 --> 00:27:57,594 உன் சொந்த நிறுவனமா? 531 00:27:58,387 --> 00:27:59,721 நீ அதற்குத் தயார் இல்லையே. 532 00:28:00,305 --> 00:28:02,683 உன் கட்சிக்காரர்களை எப்படி பெறுவாய்? 533 00:28:02,766 --> 00:28:04,393 அல்லது என் கட்சிக்காரர்களை பெற முயற்சிப்பாயா? 534 00:28:04,476 --> 00:28:06,728 எனக்கு ஏற்கனவே கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள், அதோடு, 535 00:28:06,812 --> 00:28:09,314 ஒரு புது துறையில் நான் நிபுணராகப் போகிறேன். 536 00:28:09,398 --> 00:28:12,067 என்ன? எந்த துறையில்? 537 00:28:13,026 --> 00:28:14,027 விவாகரத்து. 538 00:28:15,487 --> 00:28:17,573 அதைப்பற்றி படித்து வந்தேன். 539 00:28:17,656 --> 00:28:21,785 இந்த நாட்களில், விவாகரத்து வக்கீல்களுக்கு நிறைய தேவை இருக்கிறது போலிருக்கிறது. 540 00:28:21,869 --> 00:28:25,330 நிறைய திருமணங்களில், ஆழமாக கவனித்துப் பார்த்தால், 541 00:28:25,414 --> 00:28:28,166 யாங்கீஸ் மற்றும் கூட்டமைப்பாளர்கள் போல நிறைய, 542 00:28:28,250 --> 00:28:30,627 தீர்க்க முடியாத வேறுபாடுகள் இருக்கின்றன. 543 00:28:30,711 --> 00:28:34,298 ஒன்றாக சேர்ந்து வாழ முடியாத ஒரு கட்டம் வந்து விடுகிறது. 544 00:28:34,923 --> 00:28:36,925 அப்படிப்பட்ட ஒரு திருமணத்தை, 545 00:28:37,426 --> 00:28:39,803 நானே அனுபவித்துள்ளதால், எனக்கு இது சுலபமாக இருக்கும். 546 00:28:41,972 --> 00:28:43,432 நான் உன்னை விவாகரத்து செய்கிறேன், சூசன். 547 00:28:44,516 --> 00:28:46,685 குழந்தைக்கான முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்வேன். 548 00:28:48,729 --> 00:28:51,440 என் திருமண ஆடையை அணிந்திருக்கிறேன். பார்த்தீர்களா, இப்பவும் கச்சிதமாக இருக்கிறது. 549 00:28:52,941 --> 00:28:54,860 -அட, என்ன நடக்கிறது? -அது... 550 00:28:58,113 --> 00:29:00,324 உண்மையாகத்தான் சொல்கிறேன். நம் திருமணம் முடிந்துவிட்டது. 551 00:29:00,407 --> 00:29:05,621 இது எதுவாக இருந்திருந்தாலும், அது முடிந்துவிட்டது. 552 00:29:13,420 --> 00:29:15,964 நாளை காலை, இது உங்களுக்கு ஞாபகம்கூட இருக்காது. 553 00:29:17,216 --> 00:29:19,301 நான் மறுபடியும் மாடிக்குப் போகிறேன். 554 00:29:27,309 --> 00:29:29,186 நீ எப்படி இப்படி செய்யலாம், ஆஸ்டின்? 555 00:29:29,269 --> 00:29:30,812 எப்படி என்று உனக்கே தெரியும், எமிலி. 556 00:29:30,896 --> 00:29:32,898 மற்றவர்களைவிட உனக்கு இதைப்பற்றி நன்றாக தெரியும், அல்லவா. 557 00:29:32,981 --> 00:29:35,317 நீ அளவுக்கதிகமாக குடிக்கிறாய். 558 00:29:35,400 --> 00:29:37,361 நீயே உன்னை அழித்துக்கொள்ள, நான் விடமாட்டேன், ஆஸ்டின். 559 00:29:37,903 --> 00:29:40,072 உன்னுடைய வாழ்க்கையை அழித்துக்கொள்ள விடமாட்டேன்! 560 00:29:40,155 --> 00:29:42,658 அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். ஏற்கனவே நீங்கள் அதை அழித்துவிட்டீர்கள். 561 00:29:42,741 --> 00:29:45,327 இப்போதே, நீ இதை நிறுத்த வேண்டும்! 562 00:29:45,410 --> 00:29:48,080 நீங்கள் வந்து என்னை அடிக்கலாமே? அடிங்களேன். 563 00:29:48,664 --> 00:29:50,123 இவளை அடிப்பது போல என்னை அடிங்களேன். 564 00:29:51,708 --> 00:29:52,584 ஆஸ்டின். 565 00:29:53,210 --> 00:29:54,211 என்ன? 566 00:29:54,711 --> 00:29:57,339 எங்களுக்கு தெரியும். தெரியாதது போல் நடித்தோம். 567 00:29:57,923 --> 00:30:01,635 ஆனால் இனியும் இந்த முட்டாளின் உணர்வுகளை நான் பாதுகாக்கப் போவதில்லை. 568 00:30:01,718 --> 00:30:03,595 -எம். -கடந்த காலத்தை பற்றி பொய் சொன்னால் 569 00:30:03,679 --> 00:30:06,098 என்னால் புது எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள முடியாது. 570 00:30:13,772 --> 00:30:15,482 கடந்த காலத்தை என்னால் மாற்ற முடியாது. 571 00:30:16,066 --> 00:30:18,068 ஆனால் இந்த குடும்பத்தை கைவிடமாட்டேன், 572 00:30:18,819 --> 00:30:20,445 உன்னையும் கைவிடமாட்டேன். 573 00:30:23,824 --> 00:30:25,659 வெளியே போ, ஆஸ்டின். வெளியே போய்விடு. 574 00:30:25,742 --> 00:30:27,744 நீ முயன்றாலும் என்னை இங்கே இருக்க வைக்க முடியாது. 575 00:30:30,706 --> 00:30:32,791 ஹே, நான் சொல்வதைக் கேள். 576 00:30:33,292 --> 00:30:34,293 என்ன? 577 00:30:37,671 --> 00:30:40,257 நான் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் வரும் என்று நீ சொன்னாய். 578 00:30:41,049 --> 00:30:43,802 ஒன்று உன்னை அல்லது அவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றாய். 579 00:30:45,596 --> 00:30:46,889 சரி, ஒன்று சொல்லவா? 580 00:30:48,473 --> 00:30:49,641 நான் அவரைத் தேர்ந்தெடுக்கிறேன். 581 00:30:50,767 --> 00:30:52,769 நம் அப்பாவைத் தேர்ந்தெடுக்கிறேன். 582 00:30:58,525 --> 00:31:00,819 சரி, அது உன் இஷ்டம். 583 00:31:00,903 --> 00:31:02,696 வின்னி. எனதருமை சகோதரி. 584 00:31:02,779 --> 00:31:04,907 -அம்மா? -வின்னி, என்னை மன்னி... 585 00:31:10,495 --> 00:31:11,538 அடக் கடவுளே! 586 00:31:15,292 --> 00:31:18,795 எட்வர்ட், மன்னிக்கவும். எனக்கு சம்மதம் தான். 587 00:31:19,838 --> 00:31:21,048 கடவுளே. 588 00:31:22,466 --> 00:31:23,717 எனக்கு எந்த வருத்தமுமில்லை. 589 00:31:23,800 --> 00:31:26,345 எல்லோரையும் மகிழ்விக்கத்தான் நான் விரும்பினேன். 590 00:31:26,428 --> 00:31:28,013 எமிலி, என் கண்ணே. 591 00:31:30,766 --> 00:31:33,602 சரி, என் மௌன விரதத்தை மீறி 592 00:31:34,228 --> 00:31:36,230 இது பைத்தியக்கார குடும்பம் என்று சொல்கிறேன். 593 00:31:46,073 --> 00:31:47,157 சூ, நான்... 594 00:31:47,241 --> 00:31:48,992 என்னை இப்போது தொடாதே, எமிலி. 595 00:31:51,411 --> 00:31:53,288 நீ எவ்வளவு வருத்தமாய் இருப்பாய் என்று தெரியும். 596 00:31:53,830 --> 00:31:55,207 அவன் அதை உண்மையாக சொல்லவில்லை. 597 00:31:55,290 --> 00:31:57,793 -அவன் உன்னை விட்டு போக மாட்டான், சூ. -எனக்கு ஆஸ்டின் பற்றி கவலையில்லை, எமிலி. 598 00:31:57,876 --> 00:31:59,294 உன்னைப்பற்றி தான் கவலை. 599 00:32:00,212 --> 00:32:02,297 நீ இதை எனக்கு விளக்க வேண்டும். 600 00:32:09,471 --> 00:32:12,015 -அவரது பெயர் ஹிக்கின்சன், மேலும்... -அவர் யார் என எனக்குத் தெரியும். 601 00:32:12,641 --> 00:32:13,934 அவரது படைப்புகளைப் படித்திருக்கிறேன். 602 00:32:14,434 --> 00:32:17,020 -எனக்கு மூளை இருக்கிறது. தெரியுமில்லையா? -ஆமாம். 603 00:32:17,104 --> 00:32:19,439 எனக்குக் கொடுத்த அதே பாடலை இவருக்கும் ஏன் கொடுத்தாய் 604 00:32:19,523 --> 00:32:21,984 என்பது தான் எனக்குப் புரியவில்லை. 605 00:32:24,236 --> 00:32:28,532 இளம் எழுத்தாளர்களை தொடர்புகொள்ளுமாறு சொல்லியிருந்தார், அதனால் நான் அனுப்பினேன். 606 00:32:29,032 --> 00:32:31,994 “சேஃப் இன் தெயர் அலபாஸ்டர் சேம்பர்ஸ்” கவிதையை அனுப்பினாய், 607 00:32:33,871 --> 00:32:35,122 ஆமாம். 608 00:32:39,793 --> 00:32:44,381 “எனக்குத் தேவைப்படும்... நண்பராக இருக்க உங்களுக்கு நேரம் இருக்கிறதா? 609 00:32:44,464 --> 00:32:46,341 என் வடிவம் மிகவும் சிறியது. 610 00:32:46,425 --> 00:32:51,388 உங்கள் மேஜையில் அதிக இடம் எடுக்கவோ, சுண்டெலி போல கீச்சிடவோ மாட்டேன்.” 611 00:32:51,471 --> 00:32:56,852 “திரு. ஹிக்கின்சன், என் ஆசிரியராக இருப்பீரா? நான் ஆபத்தில் இருக்கிறேன், சார்...” 612 00:32:56,935 --> 00:32:58,228 அட, கடவுளே, எமிலி. 613 00:32:58,312 --> 00:33:01,106 இந்த கடிதம், நீ நிர்கதியாக இருப்பது போல தொனிக்கிறது. 614 00:33:01,732 --> 00:33:05,068 நீ தனியாக இருப்பது போல இருக்கிறது, என்னைப்பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. 615 00:33:05,152 --> 00:33:08,405 -பார், எழுத விரும்பினேன் தான். நான்... -குழந்தைப் பிறந்தது முதல், 616 00:33:08,488 --> 00:33:10,407 நான் மறைந்துவிட்டது போல இருக்கிறது! 617 00:33:10,490 --> 00:33:11,533 சூ, இப்படி பேசாதே! 618 00:33:12,784 --> 00:33:13,785 என்ன தெரியுமா? 619 00:33:16,955 --> 00:33:18,373 நீயும் ஆஸ்டின் போலத் தான். 620 00:33:21,084 --> 00:33:22,920 இதற்கு என்ன அர்த்தம்? 621 00:33:23,670 --> 00:33:25,881 நீ எதற்காகவோ போராடுவதுபோல நினைக்கிறாய், ஆனால் உண்மையில், 622 00:33:27,132 --> 00:33:28,592 நீ விலகி ஓடுகிறாய். 623 00:34:22,396 --> 00:34:24,398 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்