1 00:00:11,845 --> 00:00:12,846 வின்னி. 2 00:00:13,722 --> 00:00:15,015 என்ன? 3 00:00:15,933 --> 00:00:17,267 அப்பா இறந்து விட்டாரா? 4 00:00:17,893 --> 00:00:18,894 இல்லை. 5 00:00:19,645 --> 00:00:20,646 அடக் கடவுளே. 6 00:00:20,729 --> 00:00:23,649 இது ஒரு லேசான மாரடைப்பு தான். அவர் நன்றாக இருக்கிறார். 7 00:00:24,608 --> 00:00:26,068 திரும்பவும் சொல்லேன். 8 00:00:26,818 --> 00:00:27,945 என்ன சொல்ல வேண்டும்? 9 00:00:28,028 --> 00:00:30,280 அப்பா இறக்கவில்லை என்று திரும்பவும் சொல். 10 00:00:30,364 --> 00:00:32,573 அவர் இறக்கவில்லை. 11 00:00:32,658 --> 00:00:36,370 மயங்கி விழுந்து, தலையில் அடிபட்டு, சுயநினைவை இழந்துவிட்டார். 12 00:00:36,453 --> 00:00:39,081 ஆனால் நாங்கள் அவர் மூக்கினடியில் அம்மோனியா நுகர் உப்பை வைத்தோம், 13 00:00:39,164 --> 00:00:42,042 கொஞ்சம் விஸ்கியை அவர் தொண்டையில் ஊற்றினோம், உடனேயே அவருக்கு சுயநினைவு வந்துவிட்டது. 14 00:00:42,125 --> 00:00:46,755 அவர் இரண்டு நாட்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும், மற்றபடி நன்றாகத் தான் இருக்கிறார். 15 00:00:46,839 --> 00:00:49,424 அவர் சுவாசிக்கிறார். அவருடைய பெயர் அவருக்கு நினைவிருக்கிறது. 16 00:00:50,259 --> 00:00:52,427 மருத்துவரை அழைக்க கூட வேண்டியதில்லை. 17 00:00:54,096 --> 00:00:57,015 கடவுளே, என்ன ஒரு பயங்கரமான விருந்து. ஐயோ. 18 00:00:57,099 --> 00:00:58,684 நான் சமைத்த புட்டிங் உனக்குப் பிடிக்கவில்லையா? 19 00:00:58,767 --> 00:01:01,478 உண்மையில், நான் உணவைப் பற்றிப் பேசவில்லை, வின்னி. 20 00:01:02,145 --> 00:01:05,691 நேற்றிரவு ஆஸ்டின் சொன்ன பயங்கரமான விஷயங்களைப் பற்றிச் சொல்கிறேன். 21 00:01:07,109 --> 00:01:09,319 நம் குடும்பம், நம் அப்பாவைப் பற்றி சொன்ன விஷயத்தை. 22 00:01:10,153 --> 00:01:12,573 -அவையெல்லாம் உண்மையாக இருந்தால்? -என்ன? 23 00:01:12,656 --> 00:01:14,700 கேள், எனக்குத் தெரியாது. சரியா? 24 00:01:15,450 --> 00:01:19,371 என் வாழ்க்கையில் என்ன தவறாகப் போனது என எனக்குத் தெரியாது, ஆனால் ஏதோ தவறு நடந்திருக்கிறது. 25 00:01:19,454 --> 00:01:21,582 நான் விரும்பிய இடத்தில், நான் இல்லை. 26 00:01:22,165 --> 00:01:23,709 நான் தொலைந்துவிட்டேன். 27 00:01:23,792 --> 00:01:26,920 என்னுடைய விருப்பங்கள் எல்லாம் தவறாக ஆனது போல இருக்கிறது. 28 00:01:27,004 --> 00:01:31,008 எனக்கு... சந்தோஷமே இல்லை, எமிலி. எனக்கு மிஞ்சியது எல்லாம் வருத்தம் தான். 29 00:01:32,259 --> 00:01:35,721 நான் ரொம்பவும் தனிமையாக இருக்கிறேன். நான் ஒரு துரதிஷ்டசாலி. 30 00:01:35,804 --> 00:01:37,181 சும்மா கேட்கிறேன், ஒருவேளை 31 00:01:37,264 --> 00:01:42,394 இதில் சில விஷயங்கள் அப்பாவின் தவறாக இருக்குமோ. 32 00:01:45,480 --> 00:01:47,274 ஜோசஃப் லைமேனைப் பற்றி பேசுகிறாயா? 33 00:01:48,025 --> 00:01:49,985 இது இறந்துவிட்ட என்னுடைய முன்னாள் காதலர்களைப் பற்றி... 34 00:01:52,154 --> 00:01:56,241 எனக்கு வாய்ப்பிருந்த போது நான் அவர்கள் யாரையாவது திருமணம் செய்திருக்க வேண்டும். 35 00:01:57,159 --> 00:02:02,289 அதை விட்டுவிட்டு, எனக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருப்பது போல இருந்துவிட்டேன். 36 00:02:02,372 --> 00:02:05,209 இப்பொழுது அந்த எதிர்காலத்தில் இருக்கிறோம், ஆனால் அது பயங்கரமாக இருக்கிறது. 37 00:02:05,792 --> 00:02:07,628 நான் நேசித்த அனைவருமே போய் விட்டார்கள். 38 00:02:07,711 --> 00:02:09,003 அது உண்மையில்லை. 39 00:02:11,256 --> 00:02:12,299 நான் இங்கே தான் இருக்கிறேன். 40 00:02:13,842 --> 00:02:16,053 நம் குடும்பத்தினரும் கூட இருக்கிறார்கள். 41 00:02:16,136 --> 00:02:18,430 -கடவுள் செயலால் அப்பாவும் தான். -ஆம். 42 00:02:18,514 --> 00:02:20,849 அவர் வாழ்க்கை நேற்றிரவே முடிந்திருக்க வேண்டும் ஆனால் முடியவில்லை. 43 00:02:22,351 --> 00:02:24,436 நங்கள் எல்லோரும் இருக்கிறோம், வின்னி. 44 00:02:25,229 --> 00:02:26,855 நாம் ஒருவருக்கொருவர் துணையாக இருப்போம். 45 00:02:28,273 --> 00:02:30,359 இந்தக் குடும்பம் சிதறிவிட நான் விடமாட்டேன். 46 00:02:30,442 --> 00:02:35,447 ஏற்கனவே உலகில் நிறைய சோதனைகளை அனுபவிக்கிறோம். 47 00:02:37,241 --> 00:02:38,367 நீ சொல்வது சரி தான். 48 00:02:39,034 --> 00:02:41,161 கவலைப்படுவதற்கு ஏராளம் இருக்கின்றன. 49 00:02:41,245 --> 00:02:43,330 நம் வீட்டிற்குள்ளேயே சண்டை போட்டுக்கொண்டு இருக்க என்னால் முடியாது. 50 00:02:43,413 --> 00:02:46,291 நேற்றிரவு நடந்தவற்றை நாம் ஒதுக்கிவிடுவோம். சரியா? 51 00:02:47,292 --> 00:02:50,712 ஆஸ்டின் அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு, இந்தக் குடும்பத்தை ஒற்றுமையாக்க வேண்டும். 52 00:02:51,755 --> 00:02:52,965 எனக்கு நம்பிக்கை இருக்கிறது. 53 00:02:53,549 --> 00:02:54,925 அவன் செய்வான் என்று நினைக்கிறாயா? 54 00:02:55,843 --> 00:02:57,344 அவன் "பிரிந்து செல்வதாக" சொன்னானே. 55 00:02:57,427 --> 00:03:01,014 ஆமாம். அப்படிச் செய்வதற்கு அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேட்கிறேன். 56 00:03:02,766 --> 00:03:04,893 நேற்றிரவு என்னை இங்கு உறங்க அனுமதித்ததற்கு நன்றி. 57 00:03:06,478 --> 00:03:08,438 திருமணம் செய்யாமல் இருப்பதில் உள்ள சிறந்த விஷயம் என்ன தெரியுமா? 58 00:03:09,147 --> 00:03:13,360 -என்ன? -செலவழிக்க நிறைய நேரம் இருக்கும்... 59 00:03:14,570 --> 00:03:15,779 அதுவும் என்னுடன்! 60 00:03:21,493 --> 00:03:23,412 டிக்கின்சன் 61 00:03:23,495 --> 00:03:25,497 உயிரோடு இருக்கவே அவமானமாக இருக்கிறது 62 00:03:46,518 --> 00:03:47,603 ஆஸ்டின்? 63 00:04:00,199 --> 00:04:01,200 குட் மார்னிங், சூ. 64 00:04:02,159 --> 00:04:03,160 ஹே. 65 00:04:04,328 --> 00:04:05,662 உனக்கு இங்கே நல்ல விருந்து போல. 66 00:04:06,997 --> 00:04:08,081 ஆஸ்டின் எங்கே? 67 00:04:08,165 --> 00:04:09,374 நான் அவரைப் பார்க்கவில்லையே. 68 00:04:09,458 --> 00:04:11,251 இந்த உணவு முழுவதுமே உனக்கே உனக்கா? 69 00:04:11,960 --> 00:04:14,671 எல்லாவற்றையும் சாப்பிட்டாலும், என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏற்ற அளவுக்கு இருக்காது. 70 00:04:14,755 --> 00:04:16,839 இதைப் பார்த்தால் மூன்று பேருக்கானது போல் இருக்கிறது. 71 00:04:16,923 --> 00:04:20,177 நேற்றிரவு குழந்தை என் வயிற்றில் உதைத்துக்கொண்டே இருந்ததை என்னால் உணர முடிந்தது. 72 00:04:20,260 --> 00:04:22,554 நிறைய பாதங்கள் சேர்ந்து உதைத்தது போல இருந்தது. 73 00:04:22,638 --> 00:04:24,431 உனக்குக் கர்ப்ப காலத் தசை வலிகள் ஏற்பட்டிருக்கலாம் என நினைத்தேன். 74 00:04:24,515 --> 00:04:26,183 நானும் தான். 75 00:04:26,266 --> 00:04:27,935 இது வெறும் மோசமான வாயுத் தொல்லை தான். 76 00:04:28,018 --> 00:04:29,269 -அடச்சே. -அட, எமிலி. 77 00:04:29,353 --> 00:04:32,064 இது இயற்கையின் வேலை. நீ இயற்கையை ரசிப்பவள். 78 00:04:32,147 --> 00:04:34,691 -எனக்கு வாயுத் தொல்லை பற்றிப் பேசப் பிடிக்கவில்லை. -மஃப்பின் வேண்டுமா? 79 00:04:34,775 --> 00:04:37,110 இல்லை, எனக்கு... வேண்டாம். 80 00:04:37,903 --> 00:04:39,613 எனக்குச் சாப்பிடவே தோன்றவில்லை. 81 00:04:41,573 --> 00:04:43,825 நேற்றிரவு ரொம்பவே பயங்கரமானது, சூ. 82 00:04:44,535 --> 00:04:46,662 என் அப்பா இறந்துவிட்டார் என்றே நினைத்துவிட்டேன். 83 00:04:46,745 --> 00:04:48,330 ஆஸ்டின் அவரைக் கொன்றுவிட்டான் என நினைத்தேன். 84 00:04:48,914 --> 00:04:49,957 ஆமாம். வந்து... 85 00:04:51,166 --> 00:04:54,711 நல்லவேளை, வார்த்தைகளால் மனிதர்களைக் கொல்ல முடிவதில்லை. 86 00:04:55,879 --> 00:04:57,631 உன்னுடைய வார்த்தைகளாலும் கூட முடியாது. 87 00:04:57,714 --> 00:05:00,008 நீ ஆஸ்டினை விடச் சிறந்த கவிஞர். 88 00:05:01,093 --> 00:05:02,970 ஆமாம். ஆஸ்டின் மன்னிப்பு கேட்க வேண்டும். 89 00:05:03,053 --> 00:05:05,931 அதனால்தான் நான் இங்கே வந்தேன். நான் எல்லோரையும் மீண்டும் ஒன்று சேர்க்க வேண்டும். 90 00:05:06,890 --> 00:05:08,559 நீ என்னைப் பார்க்கத் தான் வந்தாய் என நினைத்துவிட்டேன். 91 00:05:10,102 --> 00:05:11,103 சூ. 92 00:05:12,312 --> 00:05:13,730 உனக்குப் புரியவில்லையா, சூ? 93 00:05:14,857 --> 00:05:18,318 என் குடும்பமே இப்பொழுது குழப்பத்தில் இருக்கிறது. 94 00:05:19,486 --> 00:05:22,906 நேற்றிரவு ஆஸ்டின் சொன்னதெல்லாம் சரி என்றா நினைக்கிறாய்? கடவுளே. 95 00:05:24,324 --> 00:05:25,158 ஆமாம். 96 00:05:26,869 --> 00:05:29,705 சொல்லப்போனால், அவர் சொன்னதை நான் ஒத்துக்கொள்கிறேன். 97 00:05:32,332 --> 00:05:33,333 என்னது? 98 00:05:33,417 --> 00:05:36,253 உன் குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் இருக்கின்றன. 99 00:05:36,336 --> 00:05:38,463 துரதிருஷ்டவசமாக, தீர்க்க முடியாத பிரச்சினைகள். 100 00:05:38,547 --> 00:05:40,132 நீ எதைப் பற்றிப் பேசுகிறாய்? 101 00:05:41,842 --> 00:05:45,095 அதாவது, உன்னை அவர்கள் நடத்திய விதத்தைப் பார். 102 00:05:45,179 --> 00:05:47,848 உன் அம்மா, அப்பா எல்லோரும் உன்னிடம் வெறுப்புடன் தான் நடந்து கொள்கின்றனர். 103 00:05:49,975 --> 00:05:52,186 நீ எவ்வளவு சிறப்பானவள் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. 104 00:05:52,269 --> 00:05:55,564 அதாவது... மாறாக நீ ஒரு பைத்தியம் என்பது போல உன்னை நடத்துகிறார்கள். 105 00:05:57,900 --> 00:06:01,695 நான் அம்மாவாகப் போகிறேன் அல்லவா 106 00:06:01,778 --> 00:06:04,114 அதனால் என்னால் இதை அதிகம் கவனிக்க முடிகிறது. 107 00:06:04,198 --> 00:06:08,285 இந்தக் குழந்தை பிறந்ததும், 108 00:06:08,368 --> 00:06:12,664 அது எப்படி மாறினாலும், நான் அதை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் விரும்புவேன். 109 00:06:13,498 --> 00:06:14,917 அதே போல் தான் உன்னையும் நேசிக்கிறேன். 110 00:06:21,381 --> 00:06:24,760 எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும், எமிலி. 111 00:06:26,470 --> 00:06:29,681 என்னால் முடிவெடுக்க முடிந்தால், நாம்... 112 00:06:30,933 --> 00:06:34,603 நாம் இருவரும் உன் குடும்பத்தை விட்டு ஓடிப்போய் இந்தக் குழந்தையை ஒன்றாக வளர்க்கலாம். 113 00:06:35,479 --> 00:06:36,813 உன்னால் கற்பனை செய்ய முடிகிறதா? 114 00:06:37,397 --> 00:06:38,941 நாம் இங்கிருந்து தப்பித்து விட்டு, 115 00:06:39,691 --> 00:06:41,818 இந்த மக்களை இனி மேல் பார்க்கவே மாட்டோம். 116 00:06:44,488 --> 00:06:46,240 அவர்களைப் பிரிந்தால் நான் ரொம்ப வருந்துவேன். 117 00:06:47,658 --> 00:06:48,659 அப்படியா? 118 00:06:53,038 --> 00:06:55,415 ஆஸ்டின் எங்கே? நான் அவனிடம் பேச வேண்டும். 119 00:06:55,499 --> 00:06:57,793 நான் அவரைப் பார்க்கவில்லை. அவர் நேற்றிரவு வீட்டிற்கே வரவில்லை. 120 00:06:57,876 --> 00:07:01,255 -நிச்சயமாக, உனக்கு சாசேஜ் வேண்டாமா? -வேண்டாம். கண்டிப்பாக வேண்டாம். 121 00:07:01,338 --> 00:07:02,339 இது றொம்ப சுவையாக... 122 00:07:03,549 --> 00:07:04,967 -என்ன? -அடக் கடவுளே! 123 00:07:05,050 --> 00:07:07,052 -என்ன ஆச்சு? -அடக் கடவுளே. அது வருகிறது. 124 00:07:07,135 --> 00:07:08,428 -அது வாயு இல்லையே? -இல்லை. 125 00:07:08,512 --> 00:07:10,597 -நான் என்ன செய்வது? -யாரையாவது உதவிக்கு கூப்பிடுகிறாயா? 126 00:07:10,681 --> 00:07:12,307 -இதோ போகிறேன்! உனக்கு ஒன்றுமில்லையே... -சீக்கிரம்! 127 00:07:12,391 --> 00:07:13,475 -சரி. -போய் யாரையாவது உதவிக்குக் கூப்பிடு! 128 00:07:13,559 --> 00:07:15,227 -அம்மா! -நான் நலமாக இல்லை. 129 00:07:17,187 --> 00:07:20,190 உன்னைப் பயமுறுத்த நினைக்கவில்லை, மன்னித்துவிடு, என் மனைவியே. 130 00:07:20,274 --> 00:07:22,276 பரவாயில்லை, எட்வர்ட். நீங்கள் இறக்கவில்லை என எனக்குத் தெரியும். 131 00:07:22,359 --> 00:07:23,694 உனக்குத் தெரியுமா? எப்படி? 132 00:07:23,777 --> 00:07:25,863 ஏனென்றால் ஒரு மனைவிக்கு இதெல்லாம் தெரியும். 133 00:07:25,946 --> 00:07:28,073 நீங்கள் எங்களைத் திடீரென்று அப்படியே விட்டுவிட்டெல்லாம் போக மாட்டீர்கள். 134 00:07:28,156 --> 00:07:29,992 நீங்கள் தேவையில்லாமல் நீட்டிக்கிறீர்கள். 135 00:07:30,576 --> 00:07:31,743 குடிக்க ஏதாவது வேண்டுமா, அப்பா? 136 00:07:31,827 --> 00:07:33,871 வின்னி டீ கொண்டு வந்திருக்கிறாள். எவ்வளவு பிரியம் உனக்கு. 137 00:07:33,954 --> 00:07:38,250 ஒரு தனிமையான கன்னிப்பெண்ணுக்கு தன் அப்பாவை கவனித்துக்கொள்வதை விட வேறு என்ன வேலை? 138 00:07:38,333 --> 00:07:39,376 அதை அங்கே வைத்து விடு. 139 00:07:40,502 --> 00:07:43,005 உதவி! உதவி! யாராவது உதவுங்கள், சூவிற்குக் குழந்தை பிறக்கப் போகிறது! 140 00:07:43,088 --> 00:07:44,840 குழந்தை பிறக்கப் போகிறதா? நிச்சயமாகத் தெரியுமா? 141 00:07:44,923 --> 00:07:48,135 ஆமாம். அவளுக்குப் பிரசவ வலி வந்துவிட்டது. என்ன செய்யலாம்? டாக்டரைக் கூப்பிடவா? 142 00:07:48,218 --> 00:07:50,429 பால் ரெவேரேவைப் போல என்னால் நகருக்குள் போக முடியும். 143 00:07:50,512 --> 00:07:52,890 தேவையே இல்லை. டாக்டர்கள் தேவையில்லை. 144 00:07:52,973 --> 00:07:55,976 -தேவையில்லையா? -நானே இந்தப் பிரசவத்தைப் பார்த்துவிடுவேன். 145 00:07:56,059 --> 00:07:57,436 பொறுங்கள். என்ன? 146 00:07:57,519 --> 00:08:00,189 ஆமாம். நானே மருத்துவச்சியாக இதைப் பார்த்துக்கொள்கிறேன். 147 00:08:00,272 --> 00:08:03,609 ஏன், நான் நார்க்ராஸாக இருந்த போது, எங்களுக்கு டாக்டர்கள் தேவைப்படவே இல்லை. 148 00:08:03,692 --> 00:08:07,487 குழந்தை பிறக்கப் போகிறது என்றால், எங்களை தயார் செய்துக்கொண்டு, நாங்களே சமாளித்துவிடுவோம். 149 00:08:07,571 --> 00:08:09,823 -தாயையும் சேயையும் பற்றி சொல்லவே தேவையில்லை. -சரி. 150 00:08:10,490 --> 00:08:12,743 இப்பொழுது எனக்கு எல்லாமே ஞாபகம் வருகிறது. 151 00:08:12,826 --> 00:08:15,704 புது உத்வேகத்துடன் செயல்படப் போகிறேன், ஒரு ஆட்டுக்குட்டியின் 152 00:08:15,787 --> 00:08:20,334 பிரசவத்திற்குப் பின்னர், லவினியா சித்தியும், நானும் அந்த இடத்தைச் சுத்தம் செய்திருக்கிறோம். 153 00:08:20,417 --> 00:08:24,755 -சூவின் குழந்தை வெளியே வரும் நிலையில் உள்ளது... -ஒரு நிமிஷம் பொறு! 154 00:08:24,838 --> 00:08:27,341 -என்னை கவனித்துக்கொள்ளப் போவது யார்? -உங்களுக்கு ஒன்றுமில்லை, எட்வர்ட். 155 00:08:27,424 --> 00:08:31,386 -இது ஒரு சாதாரண மயக்கம் தான். -எனக்கு நன்றாகத் தெரியும் இது மாரடைப்பு தான். 156 00:08:31,470 --> 00:08:34,264 உங்களுக்குக் கொஞ்சம் ஓய்வு மட்டும் தான் தேவை. வின்னி உங்கள் கூட இருப்பாள். 157 00:08:34,347 --> 00:08:36,140 -சரிதானே, லவினியா? -சரி. 158 00:08:36,225 --> 00:08:38,852 நமக்குள்ளான இந்த உறவை நான் மறுபரிசீலனை செய்து கொண்டு இருக்கிறேன், எனவே 159 00:08:38,936 --> 00:08:42,188 -இது சங்கடத்தைத் தரலாம். -பரவாயில்லை. 160 00:08:42,272 --> 00:08:43,941 எமிலி, அந்த ஷீட்களை எடுத்துக்கொள். 161 00:08:44,024 --> 00:08:47,819 -ஷீட்கள். -மேகி, வாளிகளைக் கொண்டு வா! 162 00:08:51,949 --> 00:08:53,951 நம்மால் இவளுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா? 163 00:08:54,535 --> 00:08:55,869 இது தான் அதிக வலி என நினைக்கிறாயா? 164 00:08:55,953 --> 00:08:57,454 இப்பொழுது தானே ஆரம்பித்திருக்கிறோம். 165 00:08:57,538 --> 00:09:00,374 மயக்க மருந்து கொஞ்சம் வலி தெரியாமல் செய்யுமே. இப்பொழுதெல்லாம் இது தான் வழக்கம். 166 00:09:00,457 --> 00:09:02,793 -விக்டோரியா அரசியே இதை ஆதரித்துள்ளார்கள். -அப்படியா. நல்ல விஷயம். 167 00:09:02,876 --> 00:09:07,089 சுத்த மடத்தனம். நாங்கள் எல்லாம் நார்க்ராஸாக இருந்தபோது இந்த மாதிரியெல்லாம் பயன்படுத்தவில்லை. 168 00:09:07,172 --> 00:09:10,050 சூக்கு சுகப்பிரசவமே ஆகி விடும், இல்லையா, சூ? 169 00:09:10,133 --> 00:09:11,593 எனக்கு ரொம்ப வலியாக இருக்கிறது. 170 00:09:11,677 --> 00:09:12,761 நல்லது. 171 00:09:12,845 --> 00:09:15,013 -வலி தான் நீ உயிரோடு இருப்பதை உணர்த்தும். -அம்மா! 172 00:09:15,097 --> 00:09:18,433 அப்படி சொல்லாதீர்கள். சூவின் அம்மா பிரசவத்தின் போது தான் இறந்துவிட்டார். 173 00:09:18,517 --> 00:09:20,018 அப்படியா? 174 00:09:20,102 --> 00:09:23,272 -ஒரு பெண் இறப்பதற்கு இதைவிட நல்ல வழி இல்லை. -அம்மா. 175 00:09:23,355 --> 00:09:24,898 -உச்சகட்ட தியாகம். -கடவுளே. 176 00:09:24,982 --> 00:09:26,942 அவள் குணமாகிவிடுவாள், சரிதானே, மேகி? 177 00:09:27,025 --> 00:09:29,111 தெரியவில்லை. ரொம்ப மெல்லிய இடுப்பு. 178 00:09:29,736 --> 00:09:32,573 -குழந்தையை காப்பாற்றுவது தான் முக்கிய விஷயமே. -கடவுளே. 179 00:09:32,656 --> 00:09:34,116 இருவரையும் காப்பாற்ற நாம் முயற்சிக்கலாமே? 180 00:09:34,199 --> 00:09:37,536 எமிலி? என்னால் இது முடியும் என்று தோன்றவில்லை, எமிலி. 181 00:09:37,619 --> 00:09:43,041 ஒரு உயிரை இந்தச் சின்ன ஓட்டை வழியே எப்படி வெளியே கொண்டு வருவது? 182 00:09:43,125 --> 00:09:45,961 இது சாத்தியப்படாது. எப்படி இதை வெளியே இழுக்க முடியும்? 183 00:09:46,044 --> 00:09:47,588 போதும். 184 00:09:48,213 --> 00:09:49,965 இனி இது உன்னைப் பற்றிய விஷயம் கிடையாது, சூசன். 185 00:09:50,048 --> 00:09:53,010 ஒரு விலைமதிப்பற்ற உயிர் உனக்குள்ளே இருக்கிறது. அதற்காக நீ திடமாக இருக்க வேண்டும். 186 00:09:53,093 --> 00:09:55,304 -புரிகிறதா? -புரிகிறது. 187 00:09:55,387 --> 00:09:58,223 நல்லது. யாராவது ஆடு வெட்டும் பெரிய கத்தரிக்கோல்களைக் கொண்டு வாருங்கள். 188 00:09:58,307 --> 00:10:00,350 -ஆடு வெட்டுபவையா? -அவை எதற்கு உங்களுக்கு? 189 00:10:00,434 --> 00:10:03,103 நான் பண்ணை உபகரணங்கள் தான் அதிகம் உபயோகிப்பேன். 190 00:10:05,731 --> 00:10:07,232 பிரசவ வலி அடுத்தடுத்து வருகின்றன. 191 00:10:08,275 --> 00:10:09,359 சரி, கேள். 192 00:10:09,443 --> 00:10:11,945 குழந்தை வெளியே வரும்போது, ஆஸ்டின் இங்கே இருக்க வேண்டும். நான்... 193 00:10:12,029 --> 00:10:14,698 எமிலி டிக்கின்சன், அறையை விட்டு வெளியே போகாதே. 194 00:10:14,781 --> 00:10:17,034 ஆனால், அவன் தானே இந்தக் குழந்தையின் அப்பா. அவன் இங்கே இருக்க வேண்டும். 195 00:10:17,117 --> 00:10:19,077 எனக்கு ஆஸ்டின் வேண்டாம். நீ தான் வேண்டும். 196 00:10:19,161 --> 00:10:22,623 சரி. ஐயோ, உன்னுடைய மென்மையான கைகள் எப்படி இவ்வளவு வலிமையாக ஆனது? 197 00:10:22,706 --> 00:10:25,709 ஏனென்றால் நான் வலியில் இருக்கிறேன். 198 00:10:25,792 --> 00:10:28,253 இதைக் கொஞ்சம் குடித்துக்கொள். 199 00:10:28,337 --> 00:10:29,880 -அது கொஞ்சம் வலியைக் குறைக்கும். -சரி. 200 00:10:29,963 --> 00:10:32,049 தேவைப்படுமோ என பதுக்கி எடுத்து வந்தேன். 201 00:10:32,758 --> 00:10:35,594 ஆடு வெட்டும் கத்தரிக்கோல் வேண்டாம். பன்றிகளுக்கு பயன்படுத்தப்படும் ஸ்க்ராப்பர் தான் வேண்டும். 202 00:11:07,793 --> 00:11:10,712 -இதனால் தான் நீ புதிய இங்கிலாந்தில் வாழ்கிறாய். -அடக் கடவுளே. ரொம்ப சரி. 203 00:11:10,796 --> 00:11:13,507 மேபிள் சர்க்கரை செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். 204 00:11:13,590 --> 00:11:14,633 எனக்கும் தான். 205 00:11:14,716 --> 00:11:16,844 பூசணிக்காய் கார்வ் செய்வது தான் உனக்குப் பிடிக்கும் என்று சொன்னாய். 206 00:11:16,927 --> 00:11:19,721 -எனக்கு இரண்டு விஷயங்கள் பிடிக்க கூடாதா என்ன? -கூடாது, ஆபி. 207 00:11:19,805 --> 00:11:23,809 ஹே! இது என் தவறில்லை. புதிய இங்கிலாந்து எனக்கு மகிழ்ச்சி கொடுக்கிறது. 208 00:11:23,892 --> 00:11:25,644 என் மரம் எதுவும் கொடுக்கவில்லை. 209 00:11:25,727 --> 00:11:28,564 45 வயதான ஒரு மேபிள் மரத்தினால் தான் நல்ல மரச்சாறு கொடுக்க முடியும். 210 00:11:28,647 --> 00:11:30,649 ஜார்ஜ் நிறைய உண்மைகள் தெரிந்து வைத்திருக்கிறான். 211 00:11:30,732 --> 00:11:32,901 ஹே, ப்ரேசர் எங்கே? 212 00:11:32,985 --> 00:11:35,112 இது அவனுக்கான ஃபேர்வேல் பார்ட்டி தானே. 213 00:11:35,195 --> 00:11:36,780 அவன் போருக்குப் போகிறான் என்பதை நம்ப முடியவில்லை. 214 00:11:36,864 --> 00:11:39,116 போருக்குச் செல்ல ஒப்புகொள்வது கட்டாயமாகி வருகிறது, நண்பா. 215 00:11:39,199 --> 00:11:41,994 இன்னும் கொஞ்ச காலத்தில் எல்லோரும் போக வேண்டி வரும். 216 00:11:42,077 --> 00:11:44,037 நீ என்ன சொல்கிறாய், நண்பா? போருக்குப் போகிறாயா? 217 00:11:44,121 --> 00:11:46,331 படையில் என்னை விரும்ப மாட்டார்கள் என்று நினைக்கிறேன். 218 00:11:46,415 --> 00:11:47,875 இந்த நாட்களில் நான் குழப்பமாக இருக்கிறேன். 219 00:11:47,958 --> 00:11:49,293 அதோடு, உனக்கு குழந்தை பிறக்கப்போகிறது. 220 00:11:49,376 --> 00:11:51,795 வருத்தமான விஷயம் என்னவென்றால், இந்த போரில் நிறைய இளம் அப்பாக்கள் இருக்கிறார்கள். 221 00:11:52,421 --> 00:11:56,258 ஆமாம். இறுதியில் ஒரு ஆண், தன் கடமையைச் செய்தாக வேண்டுமே. 222 00:11:56,341 --> 00:11:57,801 பெண்கள் ஏன் படைவீரராக இருக்க முடியாது? 223 00:11:57,885 --> 00:12:00,470 -சற்று சமத்துவம் இருந்தால் என்ன? -ஆபி. 224 00:12:00,554 --> 00:12:03,640 புது மேபிள் சிரப்பில் முக்கிய பனிக்கட்டி எங்கு கிடைக்கும் என்று யாருக்காவது தெரியுமா? 225 00:12:05,225 --> 00:12:07,561 -ஹே, நண்பா. -ப்ரேசர், நண்பா! 226 00:12:07,644 --> 00:12:09,771 -நன்றாக இருக்கிறாய். நன்றாக இருக்கிறாய். -ஆமாம். 227 00:12:09,855 --> 00:12:11,690 என் அம்மா இப்போது தான் இந்த கோட்டின் காலரை தைத்து முடித்தார். 228 00:12:11,773 --> 00:12:14,484 -அழகாக இருக்கிறது. -ஒரு ஹீரோ போல இருக்கிறாய், ஸ்டர்ன்ஸ். 229 00:12:14,568 --> 00:12:17,154 -துணை அதிகாரி ஸ்டர்ன்ஸ் என்று சொல். -சரி தான். 230 00:12:17,237 --> 00:12:20,324 -அம்ஹெர்ஸ்டின் தங்க மகன், இவன் தான். -மிகவும் பெருமையாக இருக்கிறது, ப்ரேசர். 231 00:12:20,407 --> 00:12:23,076 எல்லோரையும் ஒன்றாக சேர்த்ததற்கு நன்றி. 232 00:12:23,160 --> 00:12:25,162 இறுதியாக உங்களை எல்லாம் ஒன்றாக பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. 233 00:12:26,121 --> 00:12:27,956 இறுதியாகவா? அப்படி சொல்லாதே. 234 00:12:28,040 --> 00:12:31,793 -போர் முடிந்த பிறகு, நாம் இங்கே சந்திப்போம். -ஆமாம். சரி. இருக்கலாம். 235 00:12:32,419 --> 00:12:35,047 இங்கே பார். அவர்கள் அம்ஹெர்ஸ்டின் சிறந்தவனை தோற்கடிக்க மாட்டார்கள். 236 00:12:35,130 --> 00:12:37,591 ஆமாம், நீதான் ஹாக்கி அணியின் நட்சத்திரம், 237 00:12:37,674 --> 00:12:41,303 -கல்லூரி முதல்வரின் மகன்... -போரும் ஹாக்கி மைதானமும் ஒன்றுதான். 238 00:12:43,722 --> 00:12:45,849 சரி, எப்படி இருந்தாலும், இனி அதிலிருந்து தப்பிக்க முடியாது. 239 00:12:45,933 --> 00:12:48,352 இங்கே பார். நீ எப்போதுமே எங்களில் சிறந்தவன். 240 00:12:48,435 --> 00:12:50,604 -நீ ஒரு உண்மையான ஹீரோ. -ஹே, எமிலி எங்கே? 241 00:12:50,687 --> 00:12:53,357 -யாரு? -எமிலி டிக்கின்சன். 242 00:12:53,440 --> 00:12:54,816 உன் சகோதரி? 243 00:12:54,900 --> 00:12:57,319 நான் குட்பை சொல்லலாம் என்றிருந்தேன். அவள் இங்கே வருவாளா? 244 00:12:58,946 --> 00:12:59,947 எனக்குத் தெரியாது. 245 00:13:00,739 --> 00:13:02,449 என் குடும்பத்தோடு நான் பேசுவதில்லை. 246 00:13:02,533 --> 00:13:05,327 -என்ன நடந்தது, ஆஸ்டின்? -அதைப் பற்றி பிறகு பேசலாம். 247 00:13:05,410 --> 00:13:08,497 சரி, இதை ஒரு சரியான பிரிவு உபசாரமாக ஆக்கலாம், என்ன? 248 00:13:08,580 --> 00:13:11,083 ப்ரேசர் ஸ்டர்ன்ஸை மூன்று முறை வாழ்த்துவோம். ஹிப், ஹிப்... 249 00:13:11,166 --> 00:13:12,626 -ஹுரே! -ஹிப், ஹிப்... 250 00:13:12,709 --> 00:13:14,628 -ஹுரே! -ஹிப், ஹிப்... 251 00:13:14,711 --> 00:13:17,548 நாம் - அதற்கு ஏற்றவர்களா... 252 00:13:18,674 --> 00:13:20,384 அவ்வளவு பெரிய முத்து 253 00:13:21,218 --> 00:13:24,221 வாழ்க்கையை - நமக்காக - தியாகம் செய்ய... 254 00:13:25,681 --> 00:13:27,516 போர்முனையில் - மோசமான இடத்தில்? 255 00:13:32,896 --> 00:13:36,525 மன்னிக்கவும். எனக்கு வயிறு குமட்டுகிறது. எனக்கு இது பிடிக்கவே இல்லை. 256 00:13:50,330 --> 00:13:52,374 நீங்கள் கொஞ்சம் அழுத்த... 257 00:13:52,457 --> 00:13:53,458 சரி. 258 00:13:55,252 --> 00:13:59,756 ஐயோ, குழந்தை பிறப்பு என்பது இவ்வளவு மெதுவாக நடக்கும் என்று எனக்குத் தெரியாது. 259 00:13:59,840 --> 00:14:02,342 தான் தயாராக இருக்கும் போது தான் குழந்தை பிறக்கும். 260 00:14:02,426 --> 00:14:03,927 கழுதைகளும் இப்படித்தான் பிறக்கும். 261 00:14:04,595 --> 00:14:06,388 குழந்தை பிறப்பு பற்றி எனக்கு எது பிடிக்கும் தெரியுமா? 262 00:14:06,471 --> 00:14:09,474 அந்த ஆச்சரியம் தான். நமக்கு எந்த குழந்தை பிறக்கப் போகிறது என்று தெரியாது. 263 00:14:10,058 --> 00:14:13,187 ஒரு முறை, என்னுடைய உறவினருக்கு இரட்டை குழந்தைகள் ஒட்டி பிறந்தனர். 264 00:14:13,270 --> 00:14:16,607 மூன்று கைகள், இரண்டு தலைகள். சூவிற்கும் அப்படிப்பட குழந்தைகள் உள்ளே இருக்கலாம். 265 00:14:18,275 --> 00:14:21,778 -இதற்கு இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? -அது ஒரு மர்மம், செல்லமே. யாருக்கும் தெரியாது. 266 00:14:21,862 --> 00:14:25,199 ஆனால் என்னால் யூகிக்க முடியும். நான் பார்க்கிறேன், சரியா? 267 00:14:25,282 --> 00:14:26,867 அடக் கடவுளே. வேண்டாம். என்னால் முடியாது... இல்லை. 268 00:14:29,077 --> 00:14:30,495 ஆடாமல் இரு, சூசன். 269 00:14:30,579 --> 00:14:33,248 இன்னும் மூன்று மணி நேரம் ஆகலாம். இப்போதுதான் கர்ப்பப்பைவாய் விரிய தொடங்கி இருக்கிறது. 270 00:14:34,416 --> 00:14:36,168 மூன்று மணி நேரம் தாங்குவேனா என்றே தெரியவில்லை. 271 00:14:36,251 --> 00:14:37,419 உன்னாலேயே முடியாதா? அப்போது நான்? 272 00:14:37,503 --> 00:14:40,589 கேள், லவினியா சித்தியும், நானும் சொல்லியிருக்கிறோமே, எமிலி. 273 00:14:40,672 --> 00:14:42,758 குதிரைகளை சமாளிக்க முடியாவிட்டால், லாயத்தில் இருந்து வெளியேறு. 274 00:14:42,841 --> 00:14:44,801 நீ வெளியே போய் காத்திருக்கலாம். 275 00:14:44,885 --> 00:14:46,970 கொஞ்சம் மூச்சுவிடு, அன்பே. உனக்கு அது தேவை. 276 00:14:49,306 --> 00:14:51,850 -நான் வெளியே போனால் பரவாயில்லையா... -போய் விடு. 277 00:14:54,436 --> 00:14:56,647 பின்னங்கால்களை வைத்து அவள் இன்னும் கூட அதிகமாக தள்ளலாம். 278 00:14:56,730 --> 00:15:00,359 -ஆர்வம் தூண்டும் விஷயம். -தவழ்வது போல செய், அன்பே. 279 00:15:05,822 --> 00:15:07,783 யாரது? ஆஸ்டினா? 280 00:15:09,910 --> 00:15:12,204 ப்ரேசர். நீங்களா. 281 00:15:12,287 --> 00:15:15,290 எமிலி. நான் குட்பை சொல்ல வந்தேன். 282 00:15:16,458 --> 00:15:18,001 குட்பை. 283 00:15:18,085 --> 00:15:20,879 ஆக, நீங்கள்... கிளம்புகிறீர்களா? 284 00:15:20,963 --> 00:15:23,757 ஆமாம். நாளைக்கு வர்ஜீனியாவுக்குப் போகிறேன். 285 00:15:23,841 --> 00:15:25,634 பிறகு வடக்கு கரோலினாவிற்கு அணிவகுத்துச் செல்கிறோம். 286 00:15:25,717 --> 00:15:27,052 அட. 287 00:15:27,135 --> 00:15:30,222 -ஆஸ்டின் இங்கு இல்லாதது பற்றி வருத்துகிறேன். -இல்லை, அவனை ஏற்கனவே பார்த்துவிட்டேன். 288 00:15:31,181 --> 00:15:32,933 உனக்கு குட்பை சொல்லத்தான் வந்தேன். 289 00:15:34,226 --> 00:15:35,602 நீ பிஸியாக இல்லை தானே? 290 00:15:35,686 --> 00:15:39,356 இல்லை. சும்மா உட்கார்ந்து, சூவின் குழந்தை பிறப்பதற்காக காத்திருக்கிறேன். 291 00:15:39,982 --> 00:15:41,525 அப்படியா. நான் தொந்தரவு தர விரும்பவில்லை. 292 00:15:41,608 --> 00:15:46,029 அப்படி இல்லை. பரவாயில்லை. அதற்கு ரொம்ப நேரம் எடுக்கிறது, நானும் ஏதாவது குடிக்கவேண்டும். 293 00:15:46,113 --> 00:15:47,114 நீங்கள் உள்ளே வரலாமே? 294 00:15:54,621 --> 00:15:55,622 நாம் திரும்பி போக வேண்டுமா? 295 00:15:58,292 --> 00:15:59,459 இதோ. 296 00:16:03,547 --> 00:16:04,548 சியர்ஸ். 297 00:16:13,807 --> 00:16:15,684 நீங்கள் என்னைப் பார்ப்பதற்காக வந்ததில் ரொம்ப சந்தோஷம். 298 00:16:18,437 --> 00:16:21,565 குட்பை சொல்லாமல் போயிருந்தால், நான் ரொம்ப வருத்தப்பட்டிருப்பேன். 299 00:16:21,648 --> 00:16:24,276 நானும் தான். நான் கிளம்புவதற்கு முன் உன்னைப் பார்க்க விரும்பினேன். 300 00:16:24,985 --> 00:16:28,739 தெரியுமா? நான் திரும்பி வராமல் கூட போகலாம். 301 00:16:32,201 --> 00:16:33,577 அதுவா? 302 00:16:34,912 --> 00:16:38,207 கேளுங்கள், நீங்கள் எப்படி இறக்கப் போகிறீர்கள் என்பதை நான் கற்பனை செய்வேன் என 303 00:16:38,290 --> 00:16:40,375 நீங்கள் நினைக்க வேண்டாம். 304 00:16:40,459 --> 00:16:43,003 நான் விசித்திரமானவள் என்பது உங்களுக்கே தெரியும். 305 00:16:43,086 --> 00:16:45,297 நான் ஒரு பைத்தியக்காரி. சரியா? 306 00:16:45,380 --> 00:16:48,634 -நீங்கள் நலமாக இருப்பீர்கள், அதோடு... -இப்படி செய்யாதே. 307 00:16:50,385 --> 00:16:51,678 எதை செய்யக்கூடாது? 308 00:16:52,387 --> 00:16:55,599 மற்றவர்களைப் போல போலியாக, மகிழ்ச்சியாக இருப்பது போல நடிக்காதே. 309 00:16:57,226 --> 00:17:00,812 இந்த போரினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி நீ மட்டும் தான் என்னிடம் உண்மையாக பேசியிருக்கிறாய். 310 00:17:02,898 --> 00:17:05,442 உனக்கு மட்டும் தான் உண்மையை எதிர்கொள்ளும் தைரியம் இருக்கிறது. 311 00:17:06,359 --> 00:17:08,654 போலியான நம்பிக்கையை கொடுக்க நீ முயற்சிக்க மாட்டாய். 312 00:17:11,448 --> 00:17:13,867 நம்மிடம் நம்பிக்கை மட்டுமே இருந்தால் என்ன செய்வது? 313 00:17:18,038 --> 00:17:19,665 சில சமயங்களில்... 314 00:17:22,584 --> 00:17:24,502 இருட்டை நேராக பார்ப்பது மட்டும் தான் 315 00:17:24,586 --> 00:17:28,632 நாம் செய்யக்கூடிய நம்பிக்கையான விஷயமாக இருக்கும். 316 00:17:32,553 --> 00:17:34,805 -அப்புறம், நீ பைத்தியம் என்று நான் நினைக்கவில்லை. -அப்படியா? 317 00:17:34,888 --> 00:17:35,889 இல்லை! 318 00:17:37,474 --> 00:17:38,934 இந்த உலகம் தான் பைத்தியகாரத்தனமானது. 319 00:17:40,310 --> 00:17:42,145 உன்னுடைய கருத்துக்களை நீ அப்படியே சொல்வது தான் 320 00:17:42,229 --> 00:17:44,273 உன்னை வேறுபடுத்தி காண்பிக்கிறது. 321 00:17:46,608 --> 00:17:49,987 அதுதான் ஒரு சிறந்த எழுத்தாளரின் அடையாளம், தெரியுமா? 322 00:17:50,070 --> 00:17:53,740 சோகமான விஷயம் என்றாலும் கூட, சிறந்த எழுத்தாளர்கள் உண்மையைத் தான் பேசுவார்கள். 323 00:17:54,449 --> 00:17:55,909 டாண்டேவைப் பார். 324 00:17:56,660 --> 00:17:57,870 "த இன்ஃபெர்னோ". 325 00:17:59,746 --> 00:18:01,582 அவர் நெடுந்தூரம் நரகத்திற்கு சென்று விட்டு, 326 00:18:02,499 --> 00:18:04,376 அதைப் பற்றி சொல்ல திரும்பி வந்தார். 327 00:18:05,502 --> 00:18:06,503 அது... 328 00:18:11,717 --> 00:18:13,719 நீங்கள் திரும்பி வருவீர்கள் என திடமாக நம்புகிறேன். 329 00:18:17,931 --> 00:18:18,932 பாஸ்டன் போஸ்ட் 330 00:18:19,016 --> 00:18:22,436 "ஜெனரல் லீயின் தீர்மானமான வெற்றி 2,000 யூனியன் படைவீரர்கள் இறப்பிற்கும், 331 00:18:22,519 --> 00:18:24,146 7,000 பேர்கள் அடிப்பட காரணமாக இருக்கிறது." 332 00:18:24,229 --> 00:18:27,774 அருமை. நான் திருமணம் செய்துகொண்டிருக்க வேண்டிய 2,000 பேர்கள். 333 00:18:27,858 --> 00:18:29,651 அதில் இன்னும் 2,000 பேர் இறந்துவிட்டனர். 334 00:18:29,735 --> 00:18:32,487 -கன்ஃபெடெரேட்கள் என்ன ஆனார்கள்? -அவர்களைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்? 335 00:18:32,571 --> 00:18:34,281 அவர்கள் பக்கத்தில் எத்தனை இழப்புகள்? 336 00:18:34,364 --> 00:18:38,035 -பெயர் பட்டியல் ஏதாவது இருக்கிறதா? -நீங்கள் சொல்வது புரிகிறது. 337 00:18:38,118 --> 00:18:42,039 நான் அவர்களையும் திருமணம் செய்திருக்கலாம். அரசியல் ரீதியாக வித்தியாசங்கள் இருந்திருக்கும் என்பது உண்மை 338 00:18:42,122 --> 00:18:45,959 ஆனால் காலை சிற்றுண்டியின் போது சுவாரஸ்யமான உரையாடல்கள் பேசியிருக்கலாம். 339 00:18:46,043 --> 00:18:48,921 என்னுடைய சகோதரன் இதில் ஈடுபட்டுள்ளானா என்று எனக்குத் தெரிய வேண்டும். 340 00:18:49,671 --> 00:18:52,674 உன்னுடைய சாம் அங்கிள், சவானாவில் எதிராளிக்காக சண்டை போடுகிறார். 341 00:18:57,888 --> 00:19:01,517 தெற்கிலிருந்து எந்த பெயர் பட்டியலும் இல்லை. 342 00:19:01,600 --> 00:19:03,977 அவர்களை நாம் மனிதர்களாகக்கூட நினைக்கவில்லை போலிருக்கிறது. 343 00:19:05,896 --> 00:19:08,190 வெறுப்பிற்கு இதுதான் அர்த்தம், வின்னி. 344 00:19:08,982 --> 00:19:10,817 வெறுப்பு மற்றும் பாகுபாடு. 345 00:19:12,319 --> 00:19:14,530 உயிரோடு இருக்கவே அவமானப்படும் காலம் இது. 346 00:19:16,490 --> 00:19:19,493 நேற்றிரவே என்னுடைய இதயம் நின்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். 347 00:19:21,119 --> 00:19:23,038 நீங்கள் பிழைத்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். 348 00:19:23,121 --> 00:19:24,414 அப்படியா? 349 00:19:24,498 --> 00:19:25,707 ஆமாம். 350 00:19:26,500 --> 00:19:29,711 இந்தப் போரினால், எனக்கான ஆத்மார்த்த துணையை நான் இழக்கிறேன். 351 00:19:30,671 --> 00:19:33,340 என் அப்பாவையும் இழந்துவிட்டால், அது இன்னும் மோசமாக இருந்திருக்கும். 352 00:19:35,092 --> 00:19:37,469 பேசாமல் விளையாட்டு பகுதியை மட்டும் படி. 353 00:19:39,596 --> 00:19:40,597 சரி. 354 00:19:45,769 --> 00:19:49,106 இன்று நீ பில்லியை அழைத்து வராதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 355 00:19:49,189 --> 00:19:51,191 அவனுக்கு மேபிள் சிரப் பனிக்கட்டிகள் ரொம்பவும் பிடிக்கும். 356 00:19:51,984 --> 00:19:53,861 அவன் நேற்றிரவு சரியாகத் தூங்கவில்லை. 357 00:19:55,112 --> 00:19:56,405 நான் கூடத்தான். 358 00:19:56,488 --> 00:19:59,408 நீ இல்லாமல் என்னாலும் சரியாகத் தூங்க முடியாது. 359 00:20:03,036 --> 00:20:04,496 நீ என் உயிரைக் காப்பாற்றினாய். 360 00:20:05,414 --> 00:20:07,416 உனக்கே அது தெரியும், இல்லையா? 361 00:20:08,750 --> 00:20:10,127 உன்னோடு இருந்து கொண்டு, 362 00:20:10,919 --> 00:20:12,921 பில்லியைப் பார்த்துக்கொள்வது மட்டும் தான் 363 00:20:14,047 --> 00:20:16,258 எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. 364 00:20:17,384 --> 00:20:18,385 அதுதான் எல்லாமுமாக இருக்கிறது. 365 00:20:20,137 --> 00:20:21,763 எனக்கென்று நீ மட்டும் தான் இருக்கிறாய். 366 00:20:22,890 --> 00:20:25,142 உனக்காக எதுவும் செய்வேன், ஜேன். 367 00:20:25,225 --> 00:20:26,643 கொஞ்சம் நில், ஆஸ்டின். 368 00:20:28,437 --> 00:20:30,772 நாம் இனியும் இதை தொடர முடியாது. நான் தான் சொன்னேனே. 369 00:20:31,356 --> 00:20:32,357 ஏன் முடியாது? 370 00:20:33,317 --> 00:20:35,319 ஏனென்றால் சூவிற்கு குழந்தை பிறக்கப் போகிறது. 371 00:20:36,278 --> 00:20:37,988 அதனால் எதுவும் மாறிவிடாது. 372 00:20:38,071 --> 00:20:39,990 சரிதான். ஆனால் நான்... 373 00:20:41,450 --> 00:20:43,118 நான் வேறொருவரை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். 374 00:20:44,077 --> 00:20:45,078 நீ... 375 00:20:46,914 --> 00:20:47,915 என்ன சென்னாய்? 376 00:20:48,498 --> 00:20:51,126 என் அப்பாவின் வியாபார நண்பர் ஒருவர் இருக்கிறார். 377 00:20:51,210 --> 00:20:52,628 அவரது பெயர் பியர். 378 00:20:53,921 --> 00:20:55,547 அவர் என்னை திருமணம் செய்ய விரும்புகிறார். 379 00:20:56,924 --> 00:20:59,468 பியர்... யார் அந்த பியர்? எனக்கு அவரைத் தெரியுமா? 380 00:20:59,551 --> 00:21:01,762 தெரியாது. அவர் இந்த ஊர் இல்லை. 381 00:21:02,387 --> 00:21:05,390 அவர் பிரான்ஸ் நாட்டவர். உண்மையில், வியட்நாம் நாட்டவர். 382 00:21:08,936 --> 00:21:10,395 அவர் ஒரு நெல் வயலுக்கு சொந்தக்காரர். 383 00:21:11,188 --> 00:21:12,439 மற்றும் அவர்... 384 00:21:13,815 --> 00:21:15,192 பிரெஞ்சில் வணிகம் செய்வதற்காக 385 00:21:15,275 --> 00:21:18,278 துறைமுகங்கள் உருவாக்குகின்றார். 386 00:21:19,279 --> 00:21:20,280 அட. 387 00:21:21,114 --> 00:21:22,783 அவர் ரொம்ப பிரச்சினைக்குரியவர் போல. 388 00:21:23,325 --> 00:21:25,827 அவரிடம் நிறைய பணம் இருக்கிறது, 389 00:21:25,911 --> 00:21:28,163 பில்லிக்கு நல்லதொரு கல்வியை கொடுக்க முடியும். 390 00:21:28,247 --> 00:21:31,208 -நான் அவனை படிக்க வைக்க தயாராக இருக்கிறேன். -ஆஸ்டின்... 391 00:21:33,126 --> 00:21:37,172 இது... இது சரி வராது. சரியா? இது ரொம்பவும் சிறிய நகரம். 392 00:21:37,256 --> 00:21:38,799 நான் அவமானத்தோடு வாழ வேண்டும் என சொல்கிறாய், 393 00:21:38,882 --> 00:21:40,717 -என்னால் அப்படி வாழ முடியாது. -இல்லை, இல்லை. 394 00:21:40,801 --> 00:21:42,094 ஜேன், ஜேன். 395 00:21:42,803 --> 00:21:43,804 தயவுசெய். 396 00:21:44,638 --> 00:21:47,558 தயவுசெய்து, போகாதே. 397 00:21:48,725 --> 00:21:51,311 வியட்நாமிற்கான எங்களுடைய டிக்கெட்டுகளை ஏற்கனவே வாங்கிவிட்டேன். 398 00:21:53,856 --> 00:21:55,482 எனக்கு வேறு வழி இல்லை. 399 00:21:56,650 --> 00:21:59,152 என்றாவது ஒருநாள் நீ அதை புரிந்துகொள்வாய். 400 00:22:02,698 --> 00:22:03,866 நான்... 401 00:22:04,867 --> 00:22:08,370 உன்னை நன்றாக கவனித்துக் கொள்ள உன் மனைவி கற்றுக் கொள்வாள் என்று நம்புகிறேன். 402 00:22:25,179 --> 00:22:26,763 நேரமாகிறது. 403 00:22:27,389 --> 00:22:28,807 நான் இன்னும் பேக் செய்ய வேண்டும். 404 00:22:30,475 --> 00:22:31,977 நீங்கள் போவதை நான் விரும்பவில்லை. 405 00:22:33,312 --> 00:22:34,688 விதி அழைக்கிறது. 406 00:22:37,733 --> 00:22:40,235 இந்த நகரத்திற்காக நான் ரொம்பவும் ஏங்குவேன். சிறப்பான பழைய அம்ஹெர்ஸ்ட். 407 00:22:40,319 --> 00:22:43,197 ஆமாம். எனக்கும் இந்த இடம் ரொம்ப பிடிக்கும். 408 00:22:43,280 --> 00:22:47,284 ஹே, நான் போருக்கு எடுத்துச் செல்ல, நீ எனக்கு ஏதாவது தர வேண்டும். 409 00:22:47,367 --> 00:22:48,368 எது வேண்டுமானாலும் தருகிறேன். 410 00:22:50,120 --> 00:22:51,121 ஒரு கவிதை. 411 00:22:54,291 --> 00:22:55,959 இதோ இந்த பாக்கெட்டில் சுமந்து செல்வேன். 412 00:22:59,922 --> 00:23:01,673 உன் வார்த்தைகள் எனக்கு நம்பிக்கைக் கொடுக்கும். 413 00:23:03,383 --> 00:23:04,635 போலி நம்பிக்கை இல்லையே? 414 00:23:04,718 --> 00:23:05,719 இல்லை. 415 00:23:06,803 --> 00:23:08,013 உண்மையான நம்பிக்கை. 416 00:23:10,140 --> 00:23:13,810 சில சமயங்களில் வாழ்க்கை சிறப்பாக இருக்காது என்ற கருத்தை தைரியமாக புரிந்துகொள்ளும் நம்பிக்கை. 417 00:23:20,484 --> 00:23:22,152 இதோ. இதை வைத்துக் கொள்ளுங்கள். 418 00:23:23,278 --> 00:23:24,696 இதை இன்று தான் எழுதினேன். 419 00:23:28,158 --> 00:23:29,826 யாருக்காக இதை எழுதினாய்? 420 00:23:31,203 --> 00:23:32,204 யாருக்காக எழுதினேன் என்றால்... 421 00:23:33,914 --> 00:23:34,915 யாருமில்லை. 422 00:23:44,424 --> 00:23:46,176 உயிரோடு இருக்கவே அவமானமாக இருக்கிறது 423 00:23:47,010 --> 00:23:49,680 தைரியமான மனிதர்கள் இறந்து போகும் போது... 424 00:23:50,681 --> 00:23:52,599 இறந்தவர்களைப் பார்த்து நான் பொறாமைப்படுகிறேன்... 425 00:23:53,934 --> 00:23:56,562 அனுமதிக்கப்பட்ட - மிகச் சிறந்த இடம்... 426 00:23:58,605 --> 00:23:59,815 நன்றி, எமிலி. 427 00:24:14,413 --> 00:24:16,206 குழந்தை பிறக்கப் போகிறது. எமிலி, சீக்கிரம் வா. 428 00:24:21,837 --> 00:24:25,340 மகிமை, மகிமை, அல்லேலூயா 429 00:24:26,508 --> 00:24:32,055 அவரது உண்மை அணிவகுத்து வருகிறது 430 00:24:33,473 --> 00:24:34,474 அட, கடவுளே. 431 00:24:34,558 --> 00:24:35,726 நீ வந்துவிட்டாயே. 432 00:24:37,144 --> 00:24:38,145 என்ன விஷயம், சகோதரி? 433 00:24:40,689 --> 00:24:42,149 ஆஸ்டின், நீ இதை தவறவிட்டுவிட்டாய். 434 00:24:42,232 --> 00:24:44,568 நான் அதை சரியாக செய்ததை பார்த்திருப்பாயே. 435 00:24:44,651 --> 00:24:47,279 இல்லை, இல்லை. அந்தக் குழந்தை. 436 00:24:47,905 --> 00:24:50,490 உன்னுடைய குழந்தை இப்போது தான் பிறந்தது. ஆஸ்டின், நீ அப்பாவாகிவிட்டாய். 437 00:24:57,456 --> 00:24:58,874 ஏன் யாரும் வந்து எனக்குத் தகவல் சொல்லவில்லை? 438 00:24:59,458 --> 00:25:02,085 நான் வர விரும்பினேன். உண்மையாகவே விரும்பினேன். நான்... நான்... 439 00:25:03,003 --> 00:25:05,088 நான் போகிறேன் என்று கூட... எல்லாமே... 440 00:25:05,172 --> 00:25:07,424 எல்லாமே... விரைவாக நடந்துவிட்டது. 441 00:25:09,593 --> 00:25:12,179 பொறு. நேற்றிரவு நடந்ததைப் பற்றி நாம் பேச வேண்டும். 442 00:25:12,262 --> 00:25:14,139 நேற்றிரவு நடந்ததைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. 443 00:25:14,806 --> 00:25:16,225 என் குழந்தையைப் பார்க்கவே விரும்புகிறேன். 444 00:25:16,308 --> 00:25:17,643 சரி. இல்லை, அது எனக்குத் தெரியும். 445 00:25:17,726 --> 00:25:20,312 ஆனால் நீ பேசிய சில விஷயங்களை, நீ திரும்ப பெற வேண்டும். 446 00:25:22,481 --> 00:25:24,942 இப்போது குழந்தை பிறந்திருப்பதால், இந்த குடும்பம் ஒன்றாக இருக்க வேண்டியது 447 00:25:25,025 --> 00:25:26,693 அவசியம் என்று நீ நினைக்கவில்லையா? 448 00:25:26,777 --> 00:25:28,445 அதற்கு காலம் கடந்துவிட்டது என நினைக்கிறேன். 449 00:25:28,529 --> 00:25:31,448 எதற்கும் காலம் கடக்கவில்லை, ஆஸ்டின். 450 00:25:31,532 --> 00:25:34,159 நம்மால் இதை சரிசெய்ய முடியும். நீ போய் அப்பாவிடம் மன்னிப்பு கேள். 451 00:25:35,160 --> 00:25:39,039 அந்த ஆளிடம் இனி என்னால் பேச முடியாது. 452 00:25:39,122 --> 00:25:40,123 நீ சும்மாதானே சொல்கிறாய். 453 00:25:41,625 --> 00:25:42,626 நான் அந்த உண்மையாகத்தான் சொல்கிறேன். 454 00:25:43,460 --> 00:25:45,671 இந்த வீடு பிளவுபட்டு இருக்கிறது, எமிலி. 455 00:25:46,421 --> 00:25:49,842 சீக்கிரமே, நீ ஏதாவது ஒரு பக்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டி வரும். 456 00:26:56,283 --> 00:26:58,285 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்