1 00:00:11,762 --> 00:00:12,763 அம்மா! 2 00:00:14,431 --> 00:00:15,641 உங்க உதவி தேவை. 3 00:00:15,724 --> 00:00:17,309 ஆஸ்டின், என்னாச்சு? 4 00:00:17,392 --> 00:00:19,311 போடுறதுக்கு சுத்தமான சாக்ஸ் இல்லேன்னு சொல்லாத. 5 00:00:19,394 --> 00:00:21,355 இல்ல. இது அதை விட மோசமானது. 6 00:00:21,438 --> 00:00:25,025 என்னோட கல்லூரி நண்பர்களுக்கு விருந்து ஏற்பாடு பண்றேன், சூவும் ஊர்ல இல்ல. 7 00:00:25,108 --> 00:00:26,109 அவள் எங்கே? 8 00:00:26,193 --> 00:00:27,986 அவள் தோழியை பார்க்க போயிருக்கா. 9 00:00:28,070 --> 00:00:29,112 எந்தத் தோழி? 10 00:00:29,196 --> 00:00:30,489 எனக்குத் தெரியல. 11 00:00:30,572 --> 00:00:32,573 நான் என்ன முயற்சி பண்ணாலும், கூச்சகுணமுள்ள இந்த சூக்கு, 12 00:00:32,658 --> 00:00:34,910 எப்படி இவ்வளவு தோழிகள் கிடைச்சாங்கன்னு கண்டுப்பிடிக்க முடியாது. 13 00:00:34,993 --> 00:00:37,162 அம்மா! நான் இப்போ என்ன பண்றது? 14 00:00:37,246 --> 00:00:40,541 எல்லா பசங்களும் வராங்க, சாப்பாடு அல்லது சிற்றுண்டியாவது 15 00:00:40,624 --> 00:00:42,292 ஏற்பாடு பண்றேன்னு சொல்லிட்டேன். 16 00:00:42,376 --> 00:00:44,294 அட, கண்ணா. கவலைப்படாத. 17 00:00:44,378 --> 00:00:45,629 நான் உதவுறேன். 18 00:00:45,712 --> 00:00:47,548 கடவுளே. உண்மையாவா? 19 00:00:47,631 --> 00:00:49,216 கண்டிப்பா. 20 00:00:49,299 --> 00:00:52,219 உன்னோட புது சமையலறையில வேலை பார்க்கிறதுக்கு துடிச்சிட்டிருந்தேன். 21 00:00:52,302 --> 00:00:55,055 அந்த பளப்பளப்பான மாவு எந்திரத்தை பயன்படுத்த ஆசையா இருக்கு. 22 00:00:55,931 --> 00:00:57,099 ஆமா. 23 00:00:57,182 --> 00:01:00,018 உங்களுக்கு சிறந்த தேநீர் விருந்தை ஏற்பாடு பண்ணிடுறேன். 24 00:01:00,644 --> 00:01:01,770 சரி, என்னாச்சு? 25 00:01:01,854 --> 00:01:03,480 இவன் ஏன் இங்க செருப்பில வந்திருக்கான்? 26 00:01:03,564 --> 00:01:06,567 நம்ம பையன் நண்பர்களுக்கு தேநீர் விருந்து கொடுக்கிறான், நான் அவனுக்கு உதவ போறேன். 27 00:01:06,650 --> 00:01:08,735 ஏன், அவனால பார்த்துக்க முடியாதா? 28 00:01:08,819 --> 00:01:11,405 -இல்ல. -நீ ஏற்கனவே இங்க தேநீருக்கு வேணுமே. 29 00:01:11,488 --> 00:01:12,781 போர்டு மீட்டிங், ஞாபகம் இருக்கா? 30 00:01:12,865 --> 00:01:13,866 என்ன போர்டு மீட்டிங்? 31 00:01:13,949 --> 00:01:17,202 எட்வர்ட், மொத்த நியூ இங்கிலாந்தில, சிறந்த இல்லத்தரசியை கல்யாணம் பண்ணத மறந்திடாதீங்க. 32 00:01:17,286 --> 00:01:20,747 எனக்கு ரெண்டு தேநீர் விருந்தை ஏற்பாடு பண்றது விஷயமே இல்ல. 33 00:01:20,831 --> 00:01:22,666 அப்படி ஒன்னும் ஓடியாடி பண்ண வேண்டாம். 34 00:01:22,749 --> 00:01:23,834 எமிலி உதவி பண்ணலாமே. 35 00:01:23,917 --> 00:01:25,294 ஐயோ, அவளால முடியாது. 36 00:01:25,377 --> 00:01:27,379 அவள் நேற்றிலிருந்து அறையை விட்டு வெளிய வரவே இல்ல. 37 00:01:27,462 --> 00:01:29,298 அவள் கவிதை பிரசுரமானதிலிருந்து. 38 00:01:29,381 --> 00:01:30,716 யாரும் அவளை பார்க்கல. 39 00:01:30,799 --> 00:01:32,926 அவள் அவமானமா உணர்கிறாள்னு நினைக்கிறேன். 40 00:01:33,510 --> 00:01:34,511 நான் நேற்று ராத்திரி அவளை பார்த்தேனே. 41 00:01:35,429 --> 00:01:37,055 அப்படியா? எங்க? 42 00:01:38,807 --> 00:01:42,227 இல்ல, நான் அவளை பார்க்கல. 43 00:01:42,311 --> 00:01:43,312 விசித்திரமா இருக்கு. 44 00:01:43,395 --> 00:01:45,522 அவ இப்போ இப்படி அடிக்கடிப் பண்றா. 45 00:01:45,606 --> 00:01:48,150 பைத்தியக்காரி மாதிரி பரண்ல ஒளிஞ்சுக்கிறா. 46 00:01:48,567 --> 00:01:51,445 ரொம்ப பயமா இருக்கு. இது கடந்து போயிடும் நம்புறேன். 47 00:01:55,532 --> 00:01:57,451 டிக்கின்சன் 48 00:01:57,534 --> 00:01:59,536 வேதனையின் தோற்றம் எனக்குப் பிடிக்கும் 49 00:02:11,632 --> 00:02:12,633 அப்பா. 50 00:02:17,346 --> 00:02:18,764 இது என்ன போர்டு மீட்டிங்? 51 00:02:19,348 --> 00:02:23,143 த ஸ்பிரிங்ஃபீல்ட் ரிபப்ளிக்கன் மற்றும் துணைநிறுவனங்களோட முதலீட்டாளர்களோட 52 00:02:23,227 --> 00:02:25,270 போர்டு மீட்டிங், இப்ப நாமும் ஒரு முதலீட்டாளர். 53 00:02:26,480 --> 00:02:28,941 அந்தாளோட நிறுவனத்தில காசை போட்டீங்களா? 54 00:02:29,024 --> 00:02:31,527 ஆமா. நியுமேன் குடும்பத்து சொத்துக்கள்ல மீதம் இருந்தது. 55 00:02:31,610 --> 00:02:33,612 அதை திரு. பௌல்ஸ் கிட்ட முதலீடு பண்ண முடிவு பண்ணியிருக்கேன். 56 00:02:33,695 --> 00:02:35,155 -ஆனால், அப்பா, அவன்... -ஆமா, முதல்ல தயங்கினேன், 57 00:02:35,239 --> 00:02:38,283 ஆனால் அவன் பேசி என்னை ஏத்துக்க வச்சிட்டான். 58 00:02:38,367 --> 00:02:40,285 செய்தித்தாள் தொழில் நல்லா பெரிசாகலாம். 59 00:02:40,369 --> 00:02:41,828 அச்சு பத்திரிகைத் துறை தான் எதிர்காலம். 60 00:02:41,912 --> 00:02:43,956 ஆனால், அப்பா, எனக்குப் புரியல. 61 00:02:44,498 --> 00:02:45,499 அதாவது... 62 00:02:46,166 --> 00:02:49,920 எமிலியோட கவிதையை பிரசுரம் பண்ணவனுக்கு எப்படி பணத்தை கொடுக்கலாம்? 63 00:02:50,003 --> 00:02:52,047 நீங்க அதற்கு கடுமையான எதிர்ப்பா இருந்தீங்களே. 64 00:02:52,130 --> 00:02:54,383 அவன் இன்னும் நிறைய பிரசுரிக்க திட்டமிட்டிருக்கான். 65 00:02:54,466 --> 00:02:57,386 காலங்கள் மாறும், இல்லையா? 66 00:02:57,469 --> 00:02:59,388 அது போக, அதை நான் பெரிசுபடுத்தியிருந்தா, 67 00:02:59,471 --> 00:03:02,766 முதலீடு செய்றதை அது சிக்கலாக்கியிருக்கும். 68 00:03:02,850 --> 00:03:05,269 சரி. ஆக இது எல்லாம் பணத்தை பற்றியது தானா? 69 00:03:06,228 --> 00:03:07,229 புரியுது. 70 00:03:08,272 --> 00:03:09,898 உங்க கொள்கைகளை நல்லா பின்பற்றுறீங்க. 71 00:03:15,612 --> 00:03:17,239 என்கிட்ட அப்படி பேசாத. 72 00:03:17,322 --> 00:03:19,741 இந்த முடிவு எடுக்கிறதுக்கு முன்னால என் கூட பேசியிருக்கணும். 73 00:03:19,825 --> 00:03:21,159 உன் கூடவா? 74 00:03:21,243 --> 00:03:22,327 ஆமா. 75 00:03:22,411 --> 00:03:24,997 இந்த தொழில்ல உங்கக் கூட நானும் ஒரு பார்ட்னர். 76 00:03:25,080 --> 00:03:27,666 ஆனால், நான் இல்லாம தொடர்ந்து முடிவுகளை எடுக்குறீங்க! 77 00:03:27,749 --> 00:03:29,042 என்னை குழந்தை மாதிரி நடத்துறீங்க. 78 00:03:29,126 --> 00:03:31,753 கண்ணா, நீ ஒரு குழந்தை. கடவுளே, உன்னை பாரேன். 79 00:03:31,837 --> 00:03:34,089 மதியமாயிடுச்சு, நீ இன்னும் உன் உடையை மாத்தல. 80 00:03:34,173 --> 00:03:36,216 வேலையா இருந்ததால மாத்தல. 81 00:03:36,300 --> 00:03:40,470 உன்னோட நண்பர்களுக்கு தேநீர் விருந்து கொடுக்கிறதுக்கு பதறுகிற வேலை. 82 00:03:40,554 --> 00:03:44,224 நீ எந்த கட்டுப்பாடும் காட்டாத உன் வாழ்க்கையின் பல அம்சங்கள்ல அது ஒன்னு. 83 00:03:44,308 --> 00:03:47,895 என் கருத்தை மதிக்கிறதால இந்த நிறுவனத்தில என்னை பார்ட்னராக்கினீங்கன்னு நினைச்சேன். 84 00:03:47,978 --> 00:03:50,981 நீ என் மகனாயிருக்கிறதால உன்னை இந்த நிறுவனத்தில பார்ட்னர் ஆக்கினேன். 85 00:03:52,149 --> 00:03:55,569 அப்படி செய்யலைன்னா, நம்ம குடும்பத்தை பற்றி தப்பா பேசியிருப்பாங்க. 86 00:03:56,111 --> 00:03:59,406 உன்னோட கருத்துகளுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல. 87 00:03:59,865 --> 00:04:02,367 அதுவும் முக்கியமா முதலீடு குறிச்ச விஷயங்கள்ல. 88 00:04:05,287 --> 00:04:09,791 சரி, தெரிஞ்சிக்கோங்க, நான் சில விஷயங்கள்ல முதலீடு பண்ணியிருக்கேன். 89 00:04:09,875 --> 00:04:12,503 நல்ல விஷயங்கள். இந்த உலகத்தை நல்ல இடமா மாற்றும் விஷயங்கள். 90 00:04:12,586 --> 00:04:14,671 என்ன மாதிரி? அந்த போலி ஓவியம் மாதிரியா? 91 00:04:14,755 --> 00:04:16,839 அதைப் பற்றி நான் கண்டுப்பிடிக்க மாட்டேன்னு நினைச்சியா? 92 00:04:16,923 --> 00:04:19,343 சொல்லு, நான் உனக்கு கொடுத்த எல்லாத்தையும், தாம்பாளத்தில வச்சு 93 00:04:19,968 --> 00:04:22,387 உனக்கு கொடுத்த எல்லா வாய்ப்புகளையும் நினைக்கும் போது, 94 00:04:22,471 --> 00:04:25,516 அதை வச்சு என்ன பண்ணியிருக்க? நீ என்ன சாதிச்சிருக்க? 95 00:04:26,558 --> 00:04:27,768 எதுவுமில்ல. 96 00:04:28,852 --> 00:04:31,605 சும்மா ஒரு தோல்விக்கு அடுத்து இன்னொன்று. 97 00:04:31,688 --> 00:04:33,899 -நான்... -எமிலி பற்றி என்ன வேண்டும்னாலும் சொல்லு, 98 00:04:34,691 --> 00:04:36,985 ஆனால் அவகிட்ட அந்த எழவு கவிதைகளாவது இருக்கு. 99 00:04:38,445 --> 00:04:39,446 உள்ள வா. 100 00:04:39,947 --> 00:04:41,365 குட்மார்னிங், எல்லாருக்கும். 101 00:04:43,742 --> 00:04:45,118 தப்பான நேரத்தில வந்திட்டேனா? 102 00:04:45,202 --> 00:04:49,623 இல்ல, நம்ம கூட்டு முயற்சியோட இனிமையான செய்தியை ஆஸ்டின்கிட்ட சொல்லிட்டிருந்தேன். 103 00:04:49,706 --> 00:04:52,042 ஆமா. நம்ம போர்டின் புத்தம் புதிய உறுப்பினர்கள். 104 00:04:52,125 --> 00:04:55,420 நியூ இங்கிலாந்தின் மிகப்பெரிய செய்தித்தாளின் மதிப்புமிக்க தலைவர்கள். 105 00:04:55,504 --> 00:04:57,506 நாம சேர்ந்து இந்த உலகத்தை மாற்றப் போறோம். 106 00:04:58,257 --> 00:04:59,925 அதாவது அது தானா மாறாத போது. 107 00:05:00,717 --> 00:05:03,220 இதோ. இதை நீங்க நம்பப் போறதில்ல, எடி. 108 00:05:03,303 --> 00:05:04,304 உங்களை எடின்னு கூப்பிடலாமா? 109 00:05:04,388 --> 00:05:07,391 இதோ நியூயார்க்கில உள்ள திரு. கிரீலியிடமிருந்து ஒரு தந்தி. 110 00:05:07,808 --> 00:05:10,602 இப்போ வர்ஜினியாவிலிருந்து விசித்திரமான செய்தி வந்திருக்கு. 111 00:05:10,686 --> 00:05:12,145 என்ன செய்தி? என்னாச்சு? 112 00:05:12,229 --> 00:05:14,731 அந்த பைத்தியக்காரன், ஜான் பிரவுன், அடிமை ஒழிப்பு ஆர்வலரா? 113 00:05:14,815 --> 00:05:16,316 ஹார்ப்பர்ஸ் ஃபெர்ரியை சூறையாட முயற்சி பண்ணியிருக்கான். 114 00:05:16,400 --> 00:05:19,194 ஜான் பிரவுன். கான்சாஸில் எல்லா பிரச்சினையும் ஏற்படுத்திய, 115 00:05:19,278 --> 00:05:20,612 வில்லுக் கத்தி வச்சிருக்கும், அந்த இரத்தவெறி கொண்டவனா? 116 00:05:20,696 --> 00:05:21,864 ஆமா, அவனேதான். 117 00:05:21,947 --> 00:05:24,408 ஏதோ விவிலியத்தில வரும் தீர்க்கதரிசின்னு அவனுக்கு நினைப்பு. 118 00:05:24,491 --> 00:05:27,911 அதாவது என்னவொரு முகம், கேணத்தனமான முடி. கண்டிப்பா அவன் பிரபலம் ஆவான். 119 00:05:28,453 --> 00:05:30,372 அவனைப் பற்றி நம்ம செய்தித்தாள்ல நிறையவே எழுதுறோம். 120 00:05:30,455 --> 00:05:31,874 என்ன நடந்திச்சுன்னு சொல்லு. 121 00:05:31,957 --> 00:05:34,501 ம், அவன் ஏதோ ஒரு சின்னப் படையை உருவாக்கி, 122 00:05:34,585 --> 00:05:36,920 ஹார்ப்பர்ஸ் ஃபெர்ரியில் உள்ள ஆயுதக் கிடங்கை சூறையாட முயற்சிப் பண்ணியிருக்கான். 123 00:05:37,004 --> 00:05:40,549 தெற்கில ஒரு பெரிய அடிமைகள் புரட்சியை துண்டுறது அவனோட திட்டம்னு கேள்விப்பட்டேன். 124 00:05:40,632 --> 00:05:42,467 அடக் கடவுளே, அது பைத்தியக்காரத்தனம். 125 00:05:42,551 --> 00:05:44,136 அது வேலை செஞ்சிச்சா? 126 00:05:44,219 --> 00:05:46,096 கண்டிப்பா இல்ல. மொத்தமா சொதப்பிடுச்சு. 127 00:05:46,180 --> 00:05:47,264 அவனோட ஆட்கள் நிறைய பேர் கொல்லப்பட்டாங்க. 128 00:05:47,347 --> 00:05:50,184 மீதமுள்ளவங்க, பிரவுன் உட்பட, சீக்கிரம் ஜெயில்ல இருப்பாங்க. 129 00:05:50,267 --> 00:05:52,895 துரோகத்துக்காக பிரவுனை தூக்கிலிடுவாங்க, அப்புறம், இது அப்படியே 130 00:05:52,978 --> 00:05:55,480 பெரிசாகி, உள்நாட்டுப் போரா மாறினாக் கூட ஆச்சரியமில்ல. 131 00:05:55,564 --> 00:05:57,774 இல்ல, மாறக்கூடாது. மாறாது. 132 00:05:57,858 --> 00:05:59,359 நல்ல புத்தியுள்ளவங்க முன்னால வருவாங்க. 133 00:05:59,776 --> 00:06:01,195 அவங்க நிரந்தரமா முன்னால இருக்க முடியாது. 134 00:06:01,278 --> 00:06:04,698 அதாவது, இந்த தேசம் ஒரு வெடிகுண்டு, அதை பற்ற வைக்கிற தீக்குச்சியா இது இருக்கலாம். 135 00:06:04,781 --> 00:06:06,116 கடவுளே, என்ன ஒரு கேடு. 136 00:06:06,200 --> 00:06:08,368 எடி, நீங்க சொல்றது சரி. இது ஒரு கேடு. 137 00:06:08,744 --> 00:06:10,120 ஆனால் இது நமக்கு நல்லதா இருக்கலாம். 138 00:06:10,579 --> 00:06:12,039 என்ன சொல்ற நீ? 139 00:06:12,831 --> 00:06:14,249 போர்கள் செய்தித்தாள்கள் விற்பனையை கூட்டும், தோழரே. 140 00:06:15,083 --> 00:06:16,418 போர்கள் செய்தித்தாள்கள் விற்பனையை கூட்டும் 141 00:06:17,044 --> 00:06:18,629 இப்பக் கூட, வதந்திகள் பரவுது. 142 00:06:18,712 --> 00:06:20,714 பிரவுனோட கூட்டாளிங்க எல்லாரும் மாட்டுவாங்க. 143 00:06:20,797 --> 00:06:23,217 அதாவது, இந்த ஆளு நிறைய தவறுகள் பண்ணிட்டான். 144 00:06:23,300 --> 00:06:26,011 அவனோட கூட்டாளிங்க, அவனுக்கு பணம் கொடுத்தவங்க எல்லாரும் மாட்டுவாங்க. 145 00:06:26,094 --> 00:06:28,764 உண்மை வெளி வர வர நம்ம செய்தித்தாள் ஆயிரக்கணக்கில விற்கும். 146 00:06:29,223 --> 00:06:31,183 நல்ல வேளை இந்த ஆள் தோத்துட்டான். 147 00:06:31,642 --> 00:06:34,394 தான் நம்புற ஒரு விஷயத்துக்காக போராடுறவன் யாரும் தோத்தவன் இல்ல. 148 00:06:36,563 --> 00:06:37,773 வரேன். 149 00:06:37,856 --> 00:06:39,441 நீ கூட்டத்தில கலந்துக்கலையா? 150 00:06:39,525 --> 00:06:41,193 இல்ல, இங்க உட்கார்ந்து, போரில இருந்து எப்படி லாபம் பார்க்கிறது அப்படிங்கிறதை விட 151 00:06:41,276 --> 00:06:43,946 எனக்கு செய்ய வேற நல்ல விஷயங்கள் இருக்கு. 152 00:06:44,029 --> 00:06:45,989 ஆமா, அவன் ஒரு தேநீர் விருந்து வச்சிருக்கான். 153 00:06:50,911 --> 00:06:51,912 எமிலி எங்க? 154 00:06:53,580 --> 00:06:54,706 மேல அவளோட படுக்கையறையில இருக்கா. 155 00:07:17,396 --> 00:07:19,815 ஹென்றி. நல்ல வேளை நீ பாதுகாப்பா இருக்க. 156 00:07:19,898 --> 00:07:21,233 நான் பாதுகாப்பா இல்ல. 157 00:07:21,316 --> 00:07:23,235 மக்கள் எழுச்சி பெற்று வருவாங்கன்னு நினைச்சேன். 158 00:07:23,318 --> 00:07:25,654 இது ஒரு ஒட்டுமொத்த புது உலகத்தோட தொடக்கம்னு நினைச்சேன். 159 00:07:25,737 --> 00:07:28,740 நல்லா ஆகிறதுக்கு முன்னால விஷயங்கள் மோசமாகும். 160 00:07:28,824 --> 00:07:33,495 இந்த தேசத்தைக் குணப்படுத்தணும்னா முதல்ல அது அழிக்கப்படணும். 161 00:07:33,579 --> 00:07:35,455 நாம செய்றதுக்கு ஏதாவது இருக்கா? 162 00:07:35,789 --> 00:07:37,374 நான் செய்ய வேண்டியதை தான் செய்றேன். 163 00:07:37,791 --> 00:07:38,834 நான் போறேன். 164 00:07:39,376 --> 00:07:40,460 என்னோட குடும்பத்தோட. 165 00:07:41,837 --> 00:07:44,506 பெட்டி சொன்னது சரி. என்னோட மகளோட வாழ்க்கையை ஆபத்தில விட்டுட்டேன். 166 00:07:44,923 --> 00:07:48,218 அவங்க என்னைக் கண்டுப்பிடிச்சா, என்ன நடக்கும்னு கடவுளுக்குதான் வெளிச்சம். 167 00:07:48,302 --> 00:07:49,303 ஆனால்... 168 00:07:50,053 --> 00:07:51,180 நீ எங்க போவ? 169 00:07:51,638 --> 00:07:52,973 என்னால உங்ககிட்ட சொல்ல முடியாது. 170 00:07:55,350 --> 00:07:56,435 வரேன்... 171 00:07:57,436 --> 00:07:58,604 திரு. டிக்கின்சன். 172 00:08:02,649 --> 00:08:03,650 ஆஸ்டின். 173 00:08:05,319 --> 00:08:06,737 நான் உன்னை திரும்ப பார்ப்பேனா? 174 00:08:08,822 --> 00:08:10,240 சாத்தியம்னு தோணல. 175 00:08:53,909 --> 00:08:55,702 நீ இவ்வளவு தூரம் வந்தது சந்தோஷம். 176 00:08:55,786 --> 00:08:57,120 மேரி, இதிலென்ன இருக்கு? 177 00:08:57,538 --> 00:08:58,747 ரொம்ப நாளாச்சு. 178 00:08:59,831 --> 00:09:01,458 ரொம்ப தப்பாப் பட்டது, தெரியுமா? 179 00:09:01,542 --> 00:09:04,211 அதான், சாமை அடிக்கடிப் பார்க்கிறதும், உன்னை எப்போவாவது பார்க்கிறதும். 180 00:09:04,711 --> 00:09:06,338 ஆமா, நிறைய பேர் சாமை அடிக்கடிப் பார்ப்பாங்க. 181 00:09:07,631 --> 00:09:09,424 அவருக்கு மக்கள் மத்தியில இருக்கிறது பிடிக்கும். 182 00:09:09,508 --> 00:09:11,009 எனக்கு வீட்டிலிருக்கிறது தான் பிடிக்கும். 183 00:09:11,093 --> 00:09:12,302 ஆமா. எனக்குத் தெரியும். 184 00:09:13,637 --> 00:09:15,055 ஆனால், மேரி, உன்னை மனசு தேடுச்சு. 185 00:09:15,138 --> 00:09:16,265 அப்படியா? 186 00:09:16,640 --> 00:09:18,267 ஒரு சமயம் நீ என்னோட நெருங்கிய தோழி. 187 00:09:19,935 --> 00:09:21,353 அந்த கோடைக்காலம் ஞாபகம் இருக்கா? 188 00:09:21,937 --> 00:09:24,273 ஜெனிவாவில அந்த சூடான கோடைக்காலம். 189 00:09:24,356 --> 00:09:26,900 நானும், நீயும் தினமும் நீந்தப் போவேமே. 190 00:09:27,484 --> 00:09:30,112 ஆமா, அந்த கோடையில தான் என் அப்பா இறந்தார். 191 00:09:32,197 --> 00:09:33,240 அந்த கோடையிலா? 192 00:09:34,992 --> 00:09:36,618 நான் அதற்கடுத்த கோடைன்னு நினைச்சேன். 193 00:09:37,578 --> 00:09:38,829 என் அப்பா இறந்த கோடைக்காலம். 194 00:09:38,912 --> 00:09:41,331 இல்ல, உங்க அப்பா, எங்க அப்பா இறந்த அடுத்த வருஷம் இறந்தார். 195 00:09:42,332 --> 00:09:43,333 கடவுளே. 196 00:09:43,834 --> 00:09:45,586 நாம ரெண்டு பேரும் என்ன சந்தோஷமான குழந்தைப்பருவம் கொண்டிருந்தோம். 197 00:09:48,463 --> 00:09:50,299 ஆமா, ஆனால் வாழ்க்கை கஷ்டமா இருந்தது. 198 00:09:50,382 --> 00:09:51,383 நான் ஜெய்ச்சிட்டேன், சாம். 199 00:09:51,466 --> 00:09:52,467 எப்படியோ... 200 00:09:53,302 --> 00:09:56,930 அதை இப்போ திரும்பிப் பார்த்தா, அது தான் என் வாழ்க்கையில சிறந்ததா தோணுது. 201 00:09:57,806 --> 00:09:58,807 உண்மையாகவா? 202 00:09:59,766 --> 00:10:02,060 இப்போ அந்தளவு கஷ்டமா இருக்கா? 203 00:10:02,144 --> 00:10:03,145 அட, ஆமா, 204 00:10:03,228 --> 00:10:06,356 கல்யாணம், குழந்தைங்க, எல்லாமே சவால்தான். 205 00:10:08,066 --> 00:10:10,152 குட்டி சாம் அவங்க அப்பா மாதிரியே. 206 00:10:10,235 --> 00:10:11,278 அப்படியா? 207 00:10:11,361 --> 00:10:12,571 எந்த வகையில? 208 00:10:14,948 --> 00:10:16,366 ரொம்ப சுறுசுறுப்பு. 209 00:10:20,204 --> 00:10:23,123 உனக்கும், ஆஸ்டினுக்கும் இன்னும் குழந்தைங்க இல்லையா? 210 00:10:25,501 --> 00:10:28,921 அது ஒரு வழியில உனக்கு வாழ்க்கையை எளிதாக்கும்னு நினைக்கிறேன். 211 00:10:29,296 --> 00:10:31,507 முக்கியமா நீ சமூகத்தில நிறைய செயல்பாட்டோட இருக்கிறதால. 212 00:10:32,049 --> 00:10:34,968 உன்னோட இலக்கிய விருந்து பற்றி படிக்கும் போது பெருமையா இருந்திச்சு. 213 00:10:35,052 --> 00:10:37,262 உன் வீடு ரொம்ப நேர்த்தியா இருக்கும்னு தோணுது. 214 00:10:38,305 --> 00:10:39,306 தி எவர்கிரீன்ஸ் 215 00:10:39,389 --> 00:10:41,517 அது உண்மையில உலகத்தோட மையமாயிடுச்சு. 216 00:10:42,059 --> 00:10:43,227 ஆமா. 217 00:10:43,310 --> 00:10:45,604 நிச்சயமா, சாமுக்கு அதில பெரிய பங்கிருக்கு. 218 00:10:45,687 --> 00:10:47,940 அவர் அதை பற்றி நிறைய நல்லபடியா எழுதியிருக்கார். 219 00:10:48,023 --> 00:10:49,942 அவர் ரொம்ப பெருந்தன்மையுள்ளவர். 220 00:10:50,025 --> 00:10:51,276 நிச்சயமா. 221 00:10:51,360 --> 00:10:56,990 சாம் பற்றி எனக்குத் தெரியும், அவருக்கு பதிலுக்கு ஏதாவது கிடைக்கணுமே. 222 00:10:58,283 --> 00:10:59,326 பதிலுக்கா? 223 00:10:59,409 --> 00:11:00,410 ஆமா. 224 00:11:00,869 --> 00:11:03,622 ஏதோ அம்ஹெர்ஸ்ட் பெண் மேல அவர் கண் பட்டிருக்கு, சந்தேகமே இல்ல. 225 00:11:05,123 --> 00:11:06,124 நான்... 226 00:11:06,208 --> 00:11:10,295 இப்போதைக்கு, உனக்கு உதவ தனது செல்வாக்கை அவர் பயன்படுத்தினது சந்தோஷமாயிருக்கு. 227 00:11:11,171 --> 00:11:12,548 எனக்கு எப்பவுமே உன்னைப் பிடிக்கும், சூஸி. 228 00:11:13,465 --> 00:11:14,883 நீ ஒரு நெருங்கிய தோழி. 229 00:12:05,601 --> 00:12:08,729 நாம குடிச்சிட்டு, நார்த்தாம்டனுக்கு சறுக்கு வண்டியில போயிட்டு வந்தோம். கேளு! 230 00:12:08,812 --> 00:12:11,440 -ஷிப் க்வாட் பைக்கில மயங்கிட்டான். -ஆமா. 231 00:12:11,523 --> 00:12:14,776 என் வாழ்க்கையில சிறந்த நாள், ஆனால் எனக்கு அது ஞாபகம் கூட இல்ல. 232 00:12:16,528 --> 00:12:18,363 கல்லூரிதான் சிறந்தது. அம்ஹெர்ஸ்ட் வாழ்க! 233 00:12:20,449 --> 00:12:22,743 வாழ்க்கை ரொம்ப உற்சாகமா இருந்திச்சு. 234 00:12:23,577 --> 00:12:25,787 மக்களே, இந்தாங்க தேநீர். 235 00:12:26,288 --> 00:12:29,416 ஜார்ஜுக்கு நிறைய பாலாடையும், சக்கரையும் பிடிக்கும்னு தெரியும். 236 00:12:29,499 --> 00:12:32,169 ஷிப்லிக்கு, பாலாடை கிடையாது, ஆமா, ஆனால் நிறையத் தேன். 237 00:12:32,961 --> 00:12:35,672 ஆர்ச்சிபால்டுக்கு கொஞ்சம் பால், சர்க்கரைக் கிடையாது. 238 00:12:35,756 --> 00:12:38,133 சில்வெஸ்டருக்கு கொஞ்சம் சர்க்கரை, பால் கிடையாது. 239 00:12:38,800 --> 00:12:41,303 என் ஆஸ்டினுக்கு கடுங்காபிதான் பிடிக்கும். 240 00:12:41,386 --> 00:12:44,932 தோஷியாக்கிக்கு பச்சை தேநீர் பிடிக்கும், ஏன்னா அவனுக்கு அது வீட்டை ஞாபகப்படுத்தும். 241 00:12:45,015 --> 00:12:48,644 ஆனால், அம்மா, இந்த மாசம் நான் காபி குடிக்கிறத நிறுத்துறேன்.அம்மா 242 00:12:48,727 --> 00:12:50,687 எனக்கு எலுமிச்சை போட்டுக் கொஞ்சம் வெந்நீர் போதும். 243 00:12:51,605 --> 00:12:53,690 உங்க கோப்பையை பாருங்க, திரு. தோஷியாக்கி. 244 00:12:53,774 --> 00:12:55,108 உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன். 245 00:12:56,944 --> 00:12:59,029 இது எலுமிச்சையுடன் வெறும் வெந்நீர்தான். 246 00:12:59,404 --> 00:13:00,614 உங்களுக்கு எப்படித் தெரியும்? 247 00:13:00,697 --> 00:13:02,950 நான் போய் கொஞ்சம் பிஸ்கெட் எடுத்து வரேன். 248 00:13:08,956 --> 00:13:10,499 ஹே, ஆஸ்டின்? 249 00:13:11,625 --> 00:13:13,377 நீ இதை ஏற்பாடு பண்ணது ரொம்ப நல்லது. 250 00:13:13,877 --> 00:13:15,629 நாம போன முறை இப்படி எப்போ சேர்ந்து இருந்தோம்னு ஞாபகமில்ல. 251 00:13:15,712 --> 00:13:16,755 ஷிப்லி கூட இங்க இருக்கான். 252 00:13:16,839 --> 00:13:19,633 ஆமா. என் அப்பா-அம்மா கூட தான் தங்கியிருக்கான். 253 00:13:19,716 --> 00:13:21,260 ஆமா, நேற்றுதான் நான் வெளிய போனேன். 254 00:13:21,343 --> 00:13:23,929 ஆனால் இன்னைக்கு நாம கூடுறதால, திரும்ப வந்தேன். 255 00:13:24,596 --> 00:13:26,515 ஷிப்புக்கு லவினியாவோட நிச்சயமாயிருக்கு. 256 00:13:26,598 --> 00:13:28,267 -என்ன? -என்ன? விளையாடுறியா? 257 00:13:28,350 --> 00:13:29,601 -இல்ல. -வாழ்த்துகள்! 258 00:13:29,685 --> 00:13:30,894 நிச்சயம் ரத்தயாயிடுச்சு. 259 00:13:32,312 --> 00:13:33,939 எனக்கும் பெண்களுக்கும் ராசியே இல்ல. 260 00:13:34,481 --> 00:13:35,482 சரி... 261 00:13:35,899 --> 00:13:37,484 எல்லாருக்கும் இங்க வர முடிஞ்சதில சந்தோஷம். 262 00:13:37,568 --> 00:13:39,319 உங்கள மிஸ் பண்றேன். 263 00:13:39,403 --> 00:13:40,571 இங்க எல்லாரும் இருக்காங்க. 264 00:13:40,654 --> 00:13:43,448 இல்ல. எல்லாரும் இல்ல. இன்னும் ப்ரேசருக்காக காத்திருக்கோம். 265 00:13:43,532 --> 00:13:44,533 பொறு, ப்ரேசரா? 266 00:13:44,616 --> 00:13:46,159 -ப்ரேசர் ஸ்டர்ன்ஸ் வரானா? -ஆமா. 267 00:13:46,243 --> 00:13:47,953 -அவன் வெஸ்ட் பாயின்ட்ல தானே இருக்கான். -ஆமா. 268 00:13:48,036 --> 00:13:50,497 ஆனால் அவன் இப்போ விடுமுறையில இருக்கான். எத்தேச்சையா இசை நாடகத்தில பார்த்தேன். 269 00:13:50,581 --> 00:13:52,291 -இசை நாடகம்! -ஆமா, அதனால அவனை வரச் சொன்னேன். 270 00:13:52,374 --> 00:13:56,503 உண்மையில அவனை பார்த்த போது தான் இந்த விருந்தை ஏற்பாடு பண்ணணும்னு தோணுச்சு. 271 00:13:56,587 --> 00:13:58,797 -ப்ரேசர் ரொம்ப நல்ல பையன். -அவனை பார்க்க ஆவலாய் இருக்கு. 272 00:13:58,881 --> 00:14:02,342 கடவுளே, இந்தக் கூட்டத்தைத் திரும்பப் பார்க்க சந்தோஷமா இருக்கு, இல்லையா? 273 00:14:02,426 --> 00:14:03,844 ஆமா. 274 00:14:04,428 --> 00:14:07,723 பிறகு போர் வந்தா, நாம ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்கோம். 275 00:14:10,225 --> 00:14:12,352 நண்பா, அதைப் பற்றி ஏன் பேசின? 276 00:14:12,436 --> 00:14:14,563 ஹார்ப்பர்ஸ் ஃபெர்ரியில் உள்ள நிலைமை பற்றி பேசுறியா? 277 00:14:14,646 --> 00:14:15,898 ஆமா. ஜான் பிரவுன். 278 00:14:16,523 --> 00:14:18,025 ஜான் பிரவுன் மோசமானவன். 279 00:14:18,108 --> 00:14:21,028 அந்த பிரவுன் சகோதரர்கள் எல்லாத்தையும் எரிச்சுப் போட நினைக்கிறாங்க. 280 00:14:21,111 --> 00:14:22,696 அவங்க நினைக்கிறது சரியா இருக்கலாம். 281 00:14:22,779 --> 00:14:25,908 அல்லது, அது தப்பா இருந்தாலும், இப்போ அவங்கள தடுக்க முடியாது. 282 00:14:25,991 --> 00:14:27,993 டிக்கின்சன், நீ ஒரு குழந்தை. 283 00:14:28,493 --> 00:14:31,371 யாரும் போரை விரும்பலைன்னு கருத்து கணிப்பு சொல்லுது. கருத்து கணிப்பு தப்பானதே இல்ல. 284 00:14:31,455 --> 00:14:33,373 ஆமா. அதை வச்சு பார்க்கும் போது, 285 00:14:33,457 --> 00:14:35,834 அதாவது, நான் கணிக்கிற தொழிலை விட்டு வந்துட்டேன்னு சொன்னேன் தான், 286 00:14:35,918 --> 00:14:37,753 ஆனால், உறுதியா சொல்றேன் எந்த பிரச்சினையும் இருக்காது. 287 00:14:37,836 --> 00:14:39,505 இருக்கலாம், ஆனால் அப்படி இல்லேன்னா? 288 00:14:39,588 --> 00:14:41,215 நிலைமை நல்லாவே இல்லாம இருந்திருந்தா? 289 00:14:41,757 --> 00:14:43,759 அது நல்லாகிறதுக்கு, இன்னும் மோசமாகனும்கிற நிலைமை இருந்தா? 290 00:14:43,842 --> 00:14:45,636 ஹே, பைத்தியக்காரத்தனமான யோசனை. 291 00:14:47,387 --> 00:14:49,640 -நாம இப்படி வார வாரம் பண்ணலாமா? -என்ன பண்ணணும்? 292 00:14:49,723 --> 00:14:51,558 இப்படி, ஒன்னு கூடி, அரசியல் பற்றி பேசுறது. 293 00:14:51,642 --> 00:14:55,687 சும்மா அரட்டை அடிச்சு, ஆனால் கூடவே அரசியல் விஷயங்களையும் பகுப்பாய்வு பண்றது. 294 00:14:55,771 --> 00:14:57,606 அப்படியே எல்லாத்தை பதிவு பண்ணலாமா? 295 00:14:57,689 --> 00:14:59,900 அதையெல்லாம் அப்படியே எழுதி வச்சு. 296 00:14:59,983 --> 00:15:02,444 பின்னால மக்கள் அதை படிச்சு, கூட சேரலாம். 297 00:15:02,528 --> 00:15:04,029 நாம விளம்பரம் பண்ணலாம்... 298 00:15:04,905 --> 00:15:07,241 ஏப்ரன்களுக்கு. 299 00:15:07,824 --> 00:15:08,992 நீல ஏப்ரன்கள். 300 00:15:09,451 --> 00:15:12,329 எல்லாத்துக்கும் சுடச்சுட பிஸ்கெட்கள், ஜாமும். 301 00:15:12,412 --> 00:15:16,250 போர் வந்தா, நாமளும் சண்டையில சேர வேண்டியிருக்கும்னு உங்களுக்குத் தோணலையா? 302 00:15:16,708 --> 00:15:20,337 இது ஒன்னும் சின்ன வயசில நாம பொம்மை வீரர்களோட விளையாடியதைப் போல கிடையாது. 303 00:15:21,255 --> 00:15:24,591 ஆயிரக்கணக்கான மக்கள், நிஜ மக்கள், செத்துப் போவாங்க. 304 00:15:24,675 --> 00:15:26,260 நம்மள போல மக்கள். 305 00:15:26,343 --> 00:15:29,304 நம்ம தலைமுறைதான் முன்னணியில இருக்கும். 306 00:15:30,556 --> 00:15:32,808 இது ஆபிரகாம் லிங்கன் ஒரு மாநாட்டுல சொன்ன மாதிரி, 307 00:15:33,308 --> 00:15:35,561 “பிரிந்த வீடு, தாங்காது.” 308 00:15:36,436 --> 00:15:38,313 அட, அது அபத்தம். 309 00:15:39,106 --> 00:15:39,940 அம்மா? 310 00:15:40,023 --> 00:15:42,943 என்னால ரெண்டு தேநீர் விருந்தை கொடுக்க வழி கண்டுப்பிடிக்க முடியும்னா, 311 00:15:43,026 --> 00:15:46,238 அமெரிக்கர்களாகிய நம்மளால நாட்டை ஒன்னா வச்சிக்க வழியை கண்டுப்பிடிக்க முடியும். 312 00:15:47,114 --> 00:15:48,115 இல்ல, ஆர்வத்தில கேட்கிறேன், 313 00:15:48,198 --> 00:15:51,493 இந்த மொத்த ஹார்ப்பர்ஸ் ஃபெர்ரி நிகழ்வை பற்றி என்ன எழுதலாம்னு இருக்க? 314 00:15:51,577 --> 00:15:54,621 இதில முக்கியமானது ஜான் பிரவுனோட உத்வேகம், அவனோட செயல்கள் இல்ல. 315 00:15:54,705 --> 00:15:56,582 பாருங்க, இந்த அடிமை ஒழிப்பு ஆர்வலர்களை நம் பக்கம் வச்சிக்கணும், 316 00:15:56,665 --> 00:16:00,586 அதே சமயம், இந்த மிதமான, சில சமயம், தெற்கு பக்கம் சாயும் வாசகர்களையும், 317 00:16:00,669 --> 00:16:02,087 தனியா விட்டுறக் கூடாது. 318 00:16:02,671 --> 00:16:05,799 இந்த உத்தியோட, த ரிப்பப்ளிக்கன் சீக்கிரமா இந்த... 319 00:16:06,717 --> 00:16:08,051 பரவாயில்ல. நான் பார்த்துக்கிறேன். 320 00:16:08,135 --> 00:16:11,096 இது எத்தனை நாளா ஒரு தேசமா இருக்கும்னு யோசிக்கிறேன். 321 00:16:11,180 --> 00:16:12,764 கூடிய சீக்கிரம் இது ரெண்டு தேசமா மாறலாம். 322 00:16:12,848 --> 00:16:15,893 அப்படியான சூழலில், ரெண்டிலேயும் நம்ம பத்திரிகை இருக்கணும். 323 00:16:15,976 --> 00:16:18,979 இந்த தகவல் வளர்ச்சியில, இது வாசகர்கள் பற்றியது. 324 00:16:19,062 --> 00:16:22,566 முடிஞ்சளவு மக்கள், முடிஞ்சளவு நேரம் நம்ம பத்திரிகையை வாசிக்கணும். 325 00:16:22,649 --> 00:16:24,109 இது ஒரு கவன ஈர்ப்புப் பொருளாதாரம். 326 00:16:31,033 --> 00:16:32,659 கதவை மூடிட்டு போ, மா. 327 00:16:32,743 --> 00:16:34,578 இங்க நாங்க அரசு விஷயங்களை பேசிட்டிருக்கோம். 328 00:16:35,370 --> 00:16:36,455 சரி, எட்வர்ட். 329 00:16:36,914 --> 00:16:39,917 ம், என்னைப் பொறுத்தவரை... 330 00:16:42,127 --> 00:16:45,130 ஆண்களுக்கு நல்ல வழக்கங்கள் இருந்தா, போர்கள் நடக்காமல் கூட இருக்கலாம். 331 00:16:58,310 --> 00:16:59,353 திரு. ஷிப்லி. 332 00:16:59,978 --> 00:17:01,480 -ஹலோ. -ஹலோ, அம்மா. 333 00:17:02,022 --> 00:17:03,524 பிஸ்கெட்கள் அருமையா இருந்திச்சு. 334 00:17:03,607 --> 00:17:06,359 அதை சொன்னதுக்கு நன்றி. 335 00:17:07,944 --> 00:17:09,780 இன்றைக்கு கஷ்டப்பட்டு வேலை செஞ்சேன். 336 00:17:10,571 --> 00:17:12,574 ரெண்டு விருந்துகளை பிழையில்லாம பண்ணேன். 337 00:17:13,282 --> 00:17:14,617 ஆனால், யாருமே கவனிக்கல. 338 00:17:14,701 --> 00:17:15,786 பொறுமை. 339 00:17:15,868 --> 00:17:17,496 விளையாடுறீங்களா? நான் கவனிச்சேன். 340 00:17:18,372 --> 00:17:19,873 நீங்க ஒரு வீட்டு தேவதை, அம்மா. 341 00:17:20,540 --> 00:17:21,541 உண்மையா சொல்றேன். 342 00:17:21,625 --> 00:17:23,252 பெண்மைக்கான எல்லா லட்சணமும் உங்ககிட்ட இருக்கு. 343 00:17:25,878 --> 00:17:28,048 ரொம்ப கரிசனமா பேசின. 344 00:17:28,131 --> 00:17:29,925 -நன்றி. -உங்கள மாதிரி மனைவி எனக்கு வேணும். 345 00:17:31,134 --> 00:17:33,637 அதனாலதான் லவினியாவோட சமாதானம் பண்ண இங்க வந்திருக்கேன். 346 00:17:35,055 --> 00:17:38,058 ஏன்னா. ஒரு மகளவிட வேற யார் அவங்க அம்மா போல இருக்க முடியும்? 347 00:17:40,561 --> 00:17:42,271 நிச்சயதார்த்தம் ரத்தாயிடுச்சுன்னு நினைச்சேன். 348 00:17:43,897 --> 00:17:48,193 கேளுங்க. உள்நாட்டுப் போர் வந்தா, அதை கடக்க, என்னை நேசிக்கிற ஒருத்தர் வேணும். 349 00:17:56,201 --> 00:17:57,452 நன்றி, திரு. ஷிப்லி. 350 00:18:04,001 --> 00:18:06,420 லவினியா? நாம பேசணும். 351 00:18:06,503 --> 00:18:08,088 ஷிப், நீ தட்டிட்டு வரணும். 352 00:18:08,172 --> 00:18:09,673 நாட்டுல போர் வெடிக்கப் போகுது. 353 00:18:09,756 --> 00:18:12,926 நமக்குள்ள எந்த சச்சரவும் இருக்கிறது எனக்குப் பிடிக்கல. 354 00:18:13,010 --> 00:18:14,720 என்ன சொல்ற நீ? 355 00:18:14,803 --> 00:18:16,180 நாம இதைப் பற்றி பேசணும், வின்னி. 356 00:18:16,263 --> 00:18:18,473 நீதான் எனக்குப் பொருத்தமான மனைவி, எனக்கு அது தெரியும். 357 00:18:20,184 --> 00:18:21,185 நாம கல்யாணம் பண்ணிக்கலாம். 358 00:18:23,103 --> 00:18:26,648 ஷிப், உன்னால என்னை அப்படியே ஏத்துக்க முடியாததால தான் நாம பிரிஞ்சோம். 359 00:18:26,732 --> 00:18:30,569 ஒரு நிமிஷம் நான் ரொம்ப பாலியல் உணர்வோட இருக்கேன், மறு நிமிஷம் ரொம்ப புத்திசாலி. 360 00:18:32,196 --> 00:18:33,739 நீ நிஜமான லவினியாவை விரும்பவே மாட்ட. 361 00:18:33,822 --> 00:18:36,033 விரும்புவேன். அதாவது, நான் விரும்புறேன், வின்னி. 362 00:18:36,491 --> 00:18:37,910 அதை நான் எப்படி நிரூபிக்கிறது? 363 00:18:37,993 --> 00:18:43,165 நீ எது பண்ணாலும் நான் போக மாட்டேன்னு எபபடி நிரூபிக்கிறது? 364 00:18:47,711 --> 00:18:48,921 எனக்கு ஒரு யோசனை இருக்கு. 365 00:18:49,963 --> 00:18:51,381 என்னேட சாட்டையை ருசித்திடு. 366 00:18:52,257 --> 00:18:53,258 என்ன? 367 00:19:09,816 --> 00:19:11,151 என்ன எழவுடா இது? 368 00:19:34,842 --> 00:19:35,926 அட. 369 00:19:55,112 --> 00:19:57,114 உனக்கு உடம்பு சரியில்லேன்னு, கஷ்டமாயிருந்திச்சு. 370 00:19:57,948 --> 00:19:58,949 இப்போ நல்லா இருக்கியா? 371 00:19:59,283 --> 00:20:00,284 என்ன? 372 00:20:04,371 --> 00:20:07,416 புரியுது. அதை தான் சாம் எல்லார்கிட்டேயும் சொல்லிட்டிருக்கார். 373 00:20:09,001 --> 00:20:10,169 அப்போ, உடம்புக்கு ஒன்னுமில்லையா? 374 00:20:10,252 --> 00:20:11,587 உடலளவில இல்ல. 375 00:20:12,045 --> 00:20:13,046 அப்படின்னா... 376 00:20:13,755 --> 00:20:14,756 என்னதான் ஆச்சு? 377 00:20:18,218 --> 00:20:19,219 பாரு... 378 00:20:22,556 --> 00:20:24,975 எங்களுக்கு இந்த வருஷம் ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கணும். 379 00:20:27,019 --> 00:20:28,020 ஆனால்... 380 00:20:28,896 --> 00:20:29,897 அது இறந்திடுச்சு. 381 00:20:31,273 --> 00:20:32,274 எனக்குள்ளேயே. 382 00:20:34,193 --> 00:20:35,319 கடவுளே, மேரி. 383 00:20:36,904 --> 00:20:38,030 என்னை மன்னிச்சிடு. 384 00:20:38,113 --> 00:20:40,157 அது... அது... 385 00:20:41,783 --> 00:20:42,784 முடிஞ்சிடுச்சு. 386 00:20:51,668 --> 00:20:53,295 அது மாதிரி... 387 00:20:56,006 --> 00:20:57,841 அது மாதிரி எனக்கும் நடந்திச்சு. 388 00:20:59,760 --> 00:21:01,595 ஐயோ, என்னை மன்னிச்சிடு. 389 00:21:07,976 --> 00:21:09,686 நான் அந்த... 390 00:21:12,981 --> 00:21:16,485 அந்த வலியை மறக்க முயற்சி பண்ணிட்டிருக்கேன். 391 00:21:17,986 --> 00:21:19,571 அதை மறக்க வேண்டியதில்ல. 392 00:21:20,822 --> 00:21:22,241 அதை உணர்கிறதுல தப்பில்ல. 393 00:21:40,050 --> 00:21:41,218 ப்ரேசரா இருக்கும். 394 00:21:41,301 --> 00:21:42,636 ப்ரேசர் ஸ்டர்ன்ஸ். 395 00:21:42,719 --> 00:21:45,180 -ஐயோ, அவனுக்காக ஆவலாய் காத்திருக்கேன். -நாங்க தயார். 396 00:21:49,893 --> 00:21:50,936 ப்ரே... 397 00:21:51,019 --> 00:21:52,646 எமிலி. நீயா? 398 00:21:55,107 --> 00:21:56,650 நீ வேற யாரையாவது எதிர்பார்த்தியா? 399 00:21:56,733 --> 00:21:58,068 ஆமா. ஆனால் உன்னை பார்த்தில சந்தோஷம். 400 00:21:58,151 --> 00:21:59,236 -உள்ள வா. -நன்றி. 401 00:21:59,903 --> 00:22:01,113 இரு, இதை எடுத்திடுறேன். 402 00:22:03,782 --> 00:22:05,033 நீ நல்லா இருக்கியா? 403 00:22:09,288 --> 00:22:10,289 தெரியல. 404 00:22:11,748 --> 00:22:14,960 இங்க என் நண்பர்கள் வந்திருக்காங்க. 405 00:22:15,794 --> 00:22:16,795 நீயும் கூட வரியா? 406 00:22:17,880 --> 00:22:18,881 சரி. 407 00:22:20,048 --> 00:22:21,216 அதனால தான் இங்க வந்தேன். 408 00:22:22,092 --> 00:22:24,261 நான் இப்ப மக்களோட இருக்கணும்னு நினைக்கிறேன். 409 00:22:26,221 --> 00:22:27,222 சரி. 410 00:22:31,518 --> 00:22:34,188 இல்ல. தெரியல. நான்... 411 00:22:36,690 --> 00:22:38,108 -எமிலி. -ஹே, ஜார்ஜ். 412 00:22:41,111 --> 00:22:43,322 என் தங்கை ஞாபகம் இருக்கா, எமிலி. 413 00:22:45,032 --> 00:22:46,575 என்ன பண்ணிட்டிருக்கீங்க எல்லாரும். 414 00:22:46,658 --> 00:22:47,659 அட, வேறென்ன. 415 00:22:48,035 --> 00:22:49,328 செய்திகள் பற்றி பேசிட்டிருக்கோம். 416 00:22:50,037 --> 00:22:51,747 இந்த நாள் ரொம்ப விசித்திரமா இருக்கு. 417 00:22:51,830 --> 00:22:53,957 இங்க நடக்கிற அளவுக்கு விசித்திரமா இல்ல. 418 00:22:55,000 --> 00:22:59,046 கடவுளே, ஏதோ என் மூளை பிளந்த மாதிரி என் மனசில ஒரு பிளவு இருக்கு. 419 00:23:01,548 --> 00:23:02,758 உங்களுக்கு அந்த மாதிரி ஏற்பட்டிருக்கா? 420 00:23:05,802 --> 00:23:07,763 இந்த வாரம் இல்ல. 421 00:23:08,680 --> 00:23:09,806 என்னை கண்டுக்காதீங்க. 422 00:23:10,599 --> 00:23:12,100 நான் நெருப்பு பக்கத்தில போறேன். 423 00:23:25,948 --> 00:23:29,409 ஒரு வேளை நாம அரசியல் பற்றி பேசுறதை நிறுத்தணும்னு நினைக்கிறேன். 424 00:23:29,493 --> 00:23:31,411 உண்மையா சொல்றேன், ஒரு நல்ல மகிழ்ச்சியான நாள்ல, 425 00:23:31,495 --> 00:23:34,122 போர்ல என் நண்பர்கள் மடிவதை கற்பனை பண்ணி கழிக்க விரும்பல. 426 00:23:36,625 --> 00:23:38,126 நாளை மரிக்கப் போகும் மனிதன்... 427 00:23:38,877 --> 00:23:41,255 புல்வெளி பறவையின் பாடலைக் கேட்கிறான்... 428 00:23:42,923 --> 00:23:47,135 ஏனெனில் அதன் இசை தன் தலைக்கு வரும் கோடாலியை விலக்குகிறது 429 00:23:51,974 --> 00:23:52,975 நான் போய் பார்க்கிறேன். 430 00:23:56,812 --> 00:23:58,021 வேடிக்கை நிறைந்த பெண். 431 00:24:02,234 --> 00:24:04,361 ஹாய். எமிலி, தானே? 432 00:24:07,698 --> 00:24:09,741 நீ... யாருமில்ல. 433 00:24:11,785 --> 00:24:13,161 இல்ல. நான்... 434 00:24:13,245 --> 00:24:14,997 ப்ரேசர்! ஹே! 435 00:24:15,455 --> 00:24:16,665 இதோ. 436 00:24:17,249 --> 00:24:18,584 வந்திட்டியா? 437 00:24:21,295 --> 00:24:24,131 எமிலி, இது ப்ரேசர் ஸ்டர்ன்ஸ், என் பழைய கல்லூரி நண்பன். 438 00:24:24,214 --> 00:24:25,799 -உனக்கு ஞாபகம் இருக்கு, தானே? -ஆமா. 439 00:24:25,883 --> 00:24:27,801 நீங்க ஏற்பாடு பண்ண வீட்டு விருந்தில ரெண்டு மூனு முறை சந்திச்சோம்னு நினைக்கிறேன். 440 00:24:27,885 --> 00:24:30,095 இது யாருமில்லை. 441 00:24:30,179 --> 00:24:31,555 நீ... நீ யாருமில்லை. 442 00:24:31,638 --> 00:24:33,473 எமிலி, அப்படி பேசாதே. 443 00:24:33,557 --> 00:24:35,434 என் தங்கை கொஞ்சம் விசித்திரம். தப்பா நினைச்சிக்காத. 444 00:24:35,517 --> 00:24:37,019 இல்ல, இல்ல. பரவாயில்ல. எனக்கு ஞாபகமிருக்கு. 445 00:24:39,646 --> 00:24:40,564 அடக் கடவுளே. 446 00:24:43,442 --> 00:24:44,443 நீ சாகப் போற. 447 00:24:44,526 --> 00:24:46,111 எமிலி, அதை நிறுத்து. 448 00:24:46,195 --> 00:24:48,238 இல்ல, ஆஸ்டின். அவன் சாகப் போறான். நான் அதைப் பார்த்தேன்! 449 00:24:50,449 --> 00:24:52,868 உனக்கு ஞாபகமில்லையா? அந்த வயல்? 450 00:24:54,036 --> 00:24:57,831 அந்த வெடி, போர், தோட்டா. உன்னை பறவை போல தாக்கிச்சே. 451 00:24:57,915 --> 00:25:00,125 சரி. இது கொஞ்சம் மோசமா போகுது. 452 00:25:00,209 --> 00:25:02,127 நீ இங்கிருந்து போகணும். உன்னையே காப்பாத்திக்கோ! 453 00:25:02,211 --> 00:25:03,837 -போ... -எமிலி! எமிலி, போதும், நிறுத்து. 454 00:25:04,588 --> 00:25:06,340 பாரு, பசங்க ஹால்ல இருக்காங்க. 455 00:25:06,423 --> 00:25:09,343 போய் தேநீர் சாப்பிடு, நான் என் தங்கையை என்ன பண்றதுன்னு பார்க்கிறேன். 456 00:25:09,426 --> 00:25:10,636 சரி. நன்றி. 457 00:25:11,637 --> 00:25:12,596 எம். 458 00:25:14,848 --> 00:25:16,475 அடக் கடவுளே. சூ. 459 00:25:17,976 --> 00:25:20,145 ஆக, இது நிஜம். இது எல்லாமே நிஜம். 460 00:25:20,896 --> 00:25:23,649 எமிலி, என்ன சொல்ற? நீ அப்படி யார்கிட்டயும் பேசக் கூடாது. 461 00:25:23,732 --> 00:25:27,694 எனக்குப் பைத்தியம்னு நினைச்சேன். ஆனால் நான் நேற்று பார்த்த எல்லாம், 462 00:25:27,778 --> 00:25:30,364 -நான் அனுபவிச்ச எல்லாம்... -என்ன பேசுற நீ? 463 00:25:30,447 --> 00:25:33,408 ஆஸ்டின், உன்கிட்ட ஒன்னு சொல்லணும். ஒரு மோசமான விஷயம் சொல்லணும். 464 00:25:34,451 --> 00:25:35,452 என்ன? 465 00:25:39,081 --> 00:25:42,918 சாமோட சேர்ந்து சூ உனக்கு துரோகம் பண்ணிட்டா. 466 00:25:43,752 --> 00:25:45,379 அவங்களை இங்க பார்த்தேன். 467 00:25:46,922 --> 00:25:48,131 என்னை மன்னிச்சிடு. 468 00:25:50,843 --> 00:25:52,177 நான் சொன்னது உனக்கு கேட்டுச்சா? 469 00:25:52,261 --> 00:25:54,596 -சூ உனக்கு துரோகம் பண்ணிட்டா. -அது எனக்கு ஏற்கனவே தெரியும். 470 00:25:56,557 --> 00:25:57,558 தெரியுமா? 471 00:25:58,350 --> 00:25:59,351 ஆமா. 472 00:26:00,143 --> 00:26:01,186 பல வாரமா எனக்குத் தெரியும். 473 00:26:08,360 --> 00:26:09,570 ஆஹா, அருமை. 474 00:26:13,824 --> 00:26:16,034 அப்படின்னா உனக்கு எல்லாமே தெரியும். 475 00:26:17,411 --> 00:26:18,829 உனக்கு சாம் பற்றி தெரியும். 476 00:26:19,371 --> 00:26:20,706 உனக்குக் குழந்தை பற்றி தெரியும். 477 00:26:20,789 --> 00:26:22,416 என்ன குழந்தை? 478 00:26:27,296 --> 00:26:28,297 எமிலி. 479 00:26:30,007 --> 00:26:31,008 என்ன குழந்தை? 480 00:26:33,635 --> 00:26:34,761 என்னால சொல்ல முடியாது. 481 00:26:35,220 --> 00:26:36,430 சொல்லு. 482 00:26:38,098 --> 00:26:39,308 இப்ப தானே சொன்ன. 483 00:26:40,017 --> 00:26:41,977 எமிலி! என்ன குழந்தை? 484 00:26:42,060 --> 00:26:43,896 சூவோட, உன்னோட குழந்தை. 485 00:26:45,939 --> 00:26:47,149 சூவுக்கு குழந்தை பிறந்திச்சா? 486 00:26:47,733 --> 00:26:51,153 இல்ல, இல்ல, பிறக்கல. 487 00:26:56,033 --> 00:26:57,034 எப்போ? 488 00:26:58,285 --> 00:27:01,705 உங்க கல்யாணத்தின் போது. அவ கர்ப்பமா இருந்தா. கலைஞ்சிடுச்சு. 489 00:27:02,581 --> 00:27:06,210 என்னை மன்னிச்சிடு, ஆஸ்டின். நான் எதையும் சொல்லியிருக்கக் கூடாது. 490 00:27:13,217 --> 00:27:15,135 நீ... நீ ஏதாவது பேசுறியா? 491 00:27:15,219 --> 00:27:16,303 ஆஸ்டின்? 492 00:27:17,513 --> 00:27:19,139 ஏதாவது பேசு, ஆஸ்டின். 493 00:27:19,223 --> 00:27:20,265 ஐயோ, கடவுளே. 494 00:27:22,601 --> 00:27:23,727 அப்பா சொன்னது சரி. 495 00:27:25,103 --> 00:27:27,731 நான் தோத்தவன். மொத்தமா தோத்தவன். 496 00:27:28,232 --> 00:27:30,275 -நான் ஒரு வேடிக்கை. -இல்ல, அது உண்மையில்ல. 497 00:27:30,359 --> 00:27:32,569 ஆமா, அப்படிதான், எமிலி. 498 00:27:33,320 --> 00:27:34,321 ஆமா. 499 00:27:35,155 --> 00:27:36,240 உனக்குப் புரியாது. 500 00:27:38,408 --> 00:27:40,953 நான் செய்ற எதுவும் துலங்கல. 501 00:27:41,870 --> 00:27:45,290 நான் தொடுற எல்லாமே உடையுது. 502 00:27:48,001 --> 00:27:51,046 நான் ஒரு அர்த்தத்தை கண்டுப்பிடிக்க முயற்சி பண்ணிட்டிருந்தேன். 503 00:27:51,129 --> 00:27:53,549 எதையாவது... 504 00:27:55,467 --> 00:27:57,678 சூ என்னை விரும்ப வைக்கிற மாதிரி கண்டுப்பிடிக்கணும்னு. 505 00:27:58,595 --> 00:28:01,348 ஆனால் நான் எது செஞ்சாலும் பலிக்கல. 506 00:28:02,057 --> 00:28:03,684 நான் ஒரு வேடிக்கை, எமிலி. 507 00:28:05,811 --> 00:28:06,937 ஒரு மோசடிக்காரன்... 508 00:28:09,940 --> 00:28:13,151 எனக்குள்ள இருக்கிற வெறுமையை எதைக் கொண்டும் நிரப்ப முடியாது. 509 00:28:28,166 --> 00:28:32,045 வேதனையின் தோற்றம் எனக்குப் பிடிக்கும் ஏனெனில் அது உண்மையெனத் தெரியும்... 510 00:28:35,132 --> 00:28:37,259 ஆண்கள் நடுக்கத்தை பொய்யாய் காட்டுவதில்லை 511 00:28:38,010 --> 00:28:39,553 வலியிருப்பது போல் நடிப்பதுமில்லை... 512 00:28:45,100 --> 00:28:48,520 கண்கள் களையிழந்தால் அது மரணமே 513 00:28:50,606 --> 00:28:52,024 நடிக்க இயலாது 514 00:29:03,827 --> 00:29:05,495 நெற்றியில் வியர்வைத் துளிகள் 515 00:29:11,960 --> 00:29:13,962 உண்மை வலியை காட்டுகின்றன. 516 00:29:20,719 --> 00:29:21,762 ஆஸ்டின். 517 00:29:25,474 --> 00:29:28,685 நீ மோசடிக்காரன் இல்ல. 518 00:29:32,022 --> 00:29:34,650 உண்மையில, எனக்கு தெரிஞ்சு நீதான் ரொம்பவும் உண்மையான மனுஷன். 519 00:29:38,320 --> 00:29:41,657 நீ அன்பு நிறைஞ்சவன். கொடுக்கிறதுக்கு உன்கிட்ட நிறைய அன்பு இருக்கு. 520 00:29:41,740 --> 00:29:43,867 அது இல்லாமா நாங்க யாரும் உயிர் வாழ முடியாது... 521 00:29:46,453 --> 00:29:47,663 குறைந்தப்பட்சம், நானாவது. 522 00:29:53,794 --> 00:29:55,212 உண்மையாதான் சொல்றியா? 523 00:29:59,007 --> 00:30:00,634 நான் எப்பவுமே உண்மையதானே சொல்வேன்? 524 00:30:19,611 --> 00:30:21,947 பாரு, அப்ப நடந்துக்கிட்டதுக்கு மன்னிச்சிடு. 525 00:30:22,030 --> 00:30:24,324 -உன்னை பயமுறுத்த நினைக்கல. -பரவாயில்ல. 526 00:30:25,826 --> 00:30:28,203 போர் வீரனாக பயிற்சி எடுக்கிறேன். நான் கடினமானவனா இருக்கணும். 527 00:30:31,081 --> 00:30:33,584 அப்புறம், உன்னோட கவிதையை ரசிச்சேன். 528 00:30:33,667 --> 00:30:34,918 என்ன? 529 00:30:35,711 --> 00:30:36,795 உன்னோட கவிதை. 530 00:30:37,838 --> 00:30:38,881 செய்தித்தாள்ல வந்தது. 531 00:30:39,381 --> 00:30:43,093 ஓ, ஆமா. நன்றி. 532 00:30:44,052 --> 00:30:45,637 அது ரொம்ப அழகா இருந்திச்சு. 533 00:30:46,346 --> 00:30:47,472 இன்னும் நிறைய வச்சிருக்கியா? 534 00:30:48,015 --> 00:30:49,474 எனக்குப் படிக்க ஆசையா இருக்கு. 535 00:30:51,435 --> 00:30:52,603 என்கிட்ட நிறைய இருந்திச்சு. 536 00:30:54,855 --> 00:30:56,565 அனால் அதையெல்லாம் என் பதிப்பாசிரியர் கிட்ட கொடுத்திட்டேன். 537 00:31:00,068 --> 00:31:01,195 பெரிய தப்பு. 538 00:31:02,154 --> 00:31:04,698 ஏன்? உன் கவிதைகள் பிரசுரமாகிறது உனக்குப் பிடிக்கலையா? 539 00:31:05,240 --> 00:31:06,450 ஒரு பக்கம் பிடிச்சிருக்கு. 540 00:31:09,411 --> 00:31:10,412 அல்லது பிடிச்சிருந்திச்சு. 541 00:31:13,832 --> 00:31:17,085 ஆனால் மறுபக்கம், புகழ் எனக்கு நல்லதில்லைனு உறுதியா தோணுது. 542 00:31:20,464 --> 00:31:22,841 உண்மையில, அது ஆபத்தா இருக்கலாம்னு நினைக்கிறேன். 543 00:31:24,635 --> 00:31:25,761 எப்படி? 544 00:31:32,017 --> 00:31:33,435 அதை நான் எப்படி சொல்றது? 545 00:31:37,731 --> 00:31:40,150 புகழ் எனக்கு சொந்தமானதாக இருந்தால், என்னால் அவளைக் கடந்து செல்ல முடியாது... 546 00:31:42,903 --> 00:31:45,030 அப்படின்னா, நீ உன் கவிதைகளை திரும்ப வாங்குறது நல்லது. 547 00:32:39,877 --> 00:32:41,879 தமிழ் மொழியாக்கம் மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்