1 00:00:25,526 --> 00:00:26,527 தெய்வமே. 2 00:00:30,822 --> 00:00:31,823 ஆஹா. 3 00:00:37,162 --> 00:00:38,747 நாங்க வந்துவிட்டோம்! 4 00:00:42,835 --> 00:00:44,753 டிக்கின்சன் 5 00:00:44,837 --> 00:00:46,839 குயிலைப் பிளந்து 6 00:00:53,929 --> 00:00:56,765 சரி, மக்களே. வாருங்கள் இந்த இசை நாடகம் பிரபலம் ஆவதன் காரணத்தை பார்ப்போம். 7 00:00:57,266 --> 00:01:00,435 எல்லோரும் மிக எழிலாக தோன்றுகிறார்கள். நான் என் மேலாடையை அணிந்திருக்க வேண்டும். 8 00:01:00,519 --> 00:01:03,105 எனக்குப் பசிக்கின்றது. இங்கே பாப்கார்ன் விற்பார்களோ? 9 00:01:03,689 --> 00:01:06,191 இசை நாடகங்களில் பாப்கார்ன் விற்பதில்லை, ஷிப். 10 00:01:06,817 --> 00:01:09,069 எப்படியோ, கடைசியில் இங்கு வந்தோமே, மகிழ்ச்சியாக உள்ளது. 11 00:01:09,570 --> 00:01:12,155 இந்த இத்தாலிய தயாரிப்பைப் பற்றிய விமர்சனங்கள் எல்லாம் படித்து விட்டேன். 12 00:01:12,531 --> 00:01:13,615 நான் ஆவலில் துடித்துக் கொண்டிருக்கிறேன். 13 00:01:13,699 --> 00:01:15,409 ஏன் எப்போதும் இது போல பெரிய வார்த்தைகளை பயன்படுத்துகிறாய்? 14 00:01:15,951 --> 00:01:18,787 சுவாரசியமாக இருந்தால்தான் நல்லது. தலையை அடமானம் வைத்தேன் டிக்கெட்டுகளை வாங்க. 15 00:01:18,871 --> 00:01:21,456 -நமக்கு நல்ல இருக்கைகள் கிடைத்தால் போதும். -பாரு, சூவும் ஆஸ்டினும் வந்துவிட்டனர். 16 00:01:21,540 --> 00:01:22,749 ஹை! 17 00:01:22,833 --> 00:01:25,377 கண்டிப்பாக. அவள் மேலாடையை அணிந்து வந்திருக்கிறாள். 18 00:01:25,460 --> 00:01:26,837 -ஹை. -ஆஹா. 19 00:01:28,463 --> 00:01:30,465 சூ, நீ மிகவும் அழகாக இருக்கிறாய். 20 00:01:30,549 --> 00:01:31,758 நீங்களும் எல்லோரும் அழகாக இருக்கிறீர்கள். 21 00:01:31,842 --> 00:01:34,136 -ஆமாம், லவினியா அத்தையின் இடம் எப்படி? -அவர் எலிகுஞ்சுகளை வளர்க்கிறார். 22 00:01:34,219 --> 00:01:35,846 ஹோட்டல் எப்படி இருந்தது? 23 00:01:35,929 --> 00:01:36,972 அது நன்றாக இருந்தது. 24 00:01:37,055 --> 00:01:40,392 அதாவது, ஒன்று இரண்டு இரவுகள் தங்கலாம். ஆனால் அதற்கு மேல் இருக்க இயலாது. 25 00:01:40,475 --> 00:01:43,020 ஆம், அதற்கு மேல் அங்கு தங்குவதற்கு உனக்கு வசதி போதாது. 26 00:01:43,937 --> 00:01:45,856 ஆக எல்லோருக்கும் ஆவலாக இருக்கிறதா? 27 00:01:46,273 --> 00:01:47,774 நாம் முதல் நாள் இரவே வந்துள்ளோம், 28 00:01:47,858 --> 00:01:50,194 மேலும் பாஸ்டன் நகரமே இந்த முன்னணி பாடகியைப் பற்றி புகழ்ந்து வருகிறது. 29 00:01:50,277 --> 00:01:52,654 ஆமாம். மிக உன்னதமான அடிலேய்ட் மே. 30 00:01:52,738 --> 00:01:55,949 இத்தாலியிலிருந்து சமீபத்தில் வந்தவர், மேலும் வேர்டியிடமே பயின்றவர். 31 00:01:56,575 --> 00:01:58,744 ஃபிலடெல்ஃபியா அவருக்கு சொந்த ஊர் தெரியுமா. 32 00:01:58,827 --> 00:02:01,163 முக்கால்வாசி அமெரிக்கர்களுக்கு, எப்படியும், இசை நாடகமெல்லாம் தெரியாது, 33 00:02:01,246 --> 00:02:03,707 ஆனால் அடிலேய்ட் தன் குரலினால் ஐரோப்பாவையே மயங்க வைத்திருக்கிறார். 34 00:02:03,790 --> 00:02:06,877 அவருடைய மேல் ஸ்தாய் ஸ்வரத்தினால் ஒரு விமர்சகரின் கண்ணாடிக்கூட உடைந்ததாமே. 35 00:02:06,960 --> 00:02:07,961 இல்லை! 36 00:02:08,044 --> 00:02:10,047 அதெல்லாம் வெறும் கதை. கட்டுக் கதையாகதான் இருக்க வேண்டும். 37 00:02:12,424 --> 00:02:13,425 அவர் வந்துவிட்டார். 38 00:02:19,848 --> 00:02:21,058 டிக்கின்சன்ஸ். 39 00:02:21,141 --> 00:02:22,851 -ஹை. -இசைநாடகத்திற்கு வருக. 40 00:02:22,935 --> 00:02:24,520 எங்களுக்கு இங்கு வருவதில் மிக்க மகிழ்ச்சி. 41 00:02:24,603 --> 00:02:27,189 இப்போதுதான் தெரிந்தவர் ஒருவரை கீழே பார்த்ததாய் ஞாபகம். 42 00:02:27,272 --> 00:02:28,857 ஒரு நிமிடம், வந்து விடுகிறேன். 43 00:02:31,235 --> 00:02:32,402 திடீர்ரென்று போயிவிட்டான். 44 00:02:32,486 --> 00:02:34,821 சாம், நீங்க டிக்கெட்டுகள் கொடுத்து உதவியதற்கு மிக்க நன்றி. 45 00:02:34,905 --> 00:02:36,657 அந்த பெட்டியில் இடம் கிடைத்தது பற்றி மிக்க மகிழ்ச்சி. 46 00:02:36,740 --> 00:02:37,950 ஒரு நிமிடம் பொறு. 47 00:02:38,033 --> 00:02:39,326 நாம் எங்கே உட்காருகிறோம்? 48 00:02:39,743 --> 00:02:41,620 இசைக்குழு. அதன் பின் வரிசையில். 49 00:02:42,496 --> 00:02:43,747 நமக்கு ஏன் வேறு பெட்டியில் வாங்கவில்லை? 50 00:02:43,830 --> 00:02:47,167 ஆமாம். முதலில் என்னை குழியில் தள்ளினாய். இப்போது, பெட்டியில் அடைக்கப் பார்க்கிறாய். 51 00:02:47,251 --> 00:02:48,877 இசைக்குழுவும் நன்றாக தான் இருக்கும். 52 00:02:48,961 --> 00:02:50,170 ஆமாம், கண்டிப்பாக. 53 00:02:50,587 --> 00:02:52,798 வாங்க, எட்வர்ட், வாங்க போய் பின் வரிசையை கண்டுபிடிப்போம். 54 00:02:53,632 --> 00:02:54,675 சரி, வா போகலாம். 55 00:02:54,758 --> 00:02:56,176 எமிலி, நீ எங்களுடன் வருகிறாயா? 56 00:02:56,885 --> 00:02:58,720 நான் கொஞ்சம் சூவுடன் பேச வேண்டும். 57 00:02:58,804 --> 00:03:00,722 -சரி, நாங்கள் வருகிறோம். -சரி, வாருங்கள். ஆம், வாருங்கள். 58 00:03:01,682 --> 00:03:03,851 சரி. அப்போது, நான் உங்களை நிகழ்ச்சி முடிந்ததும் சந்திக்கலாமா? 59 00:03:03,934 --> 00:03:05,561 இல்லை, சாம், பொறுங்கள். போகாதீர்கள். 60 00:03:06,228 --> 00:03:07,771 நீங்கள் இருவரும் பேச விரும்பினீர்கள் என நினைத்தேன். 61 00:03:10,315 --> 00:03:13,151 இல்லை, உண்மை அதுவல்ல. நான் உங்களுடன் தான் பேச விரும்பினேன். 62 00:03:13,777 --> 00:03:14,736 சரி. 63 00:03:15,612 --> 00:03:16,613 கண்டிப்பாக. 64 00:03:17,281 --> 00:03:19,449 கவியும், பத்திரிகை ஆசிரியரும் நிச்சயமாக பேசிக்கொள்ள வேண்டும். 65 00:03:19,533 --> 00:03:20,701 சரி. 66 00:03:21,702 --> 00:03:24,037 சாம், நீங்க இங்கே தனியாகவாக வந்திருக்கிறீர்கள்? மேரி எங்கே? 67 00:03:24,121 --> 00:03:26,331 அவளால் வரமுடியவில்லை. 68 00:03:26,415 --> 00:03:28,542 அடப் பாவமே. நான் அவரைப் பார்க்க மிக ஆவலாக இருந்தேன். 69 00:03:28,625 --> 00:03:31,628 ஆமாம். வந்து, கொஞ்சம் உடம்பு சரியல்லை. 70 00:03:32,129 --> 00:03:33,130 மறுபடியும். 71 00:03:33,630 --> 00:03:36,550 வந்து, நான் நினைக்கிறேன் அதவும் ஒரு விதத்தில் எமிலிக்கு நல்லதுதான். 72 00:03:37,718 --> 00:03:38,719 எனக்கா? 73 00:03:38,802 --> 00:03:41,013 ஆம், ஏன்னென்றால் நீ இப்போது சாமுடன் அந்த பெட்டியில் உட்கார முடியுமே. 74 00:03:41,555 --> 00:03:44,266 -நான் உண்மையில்... -சாம், அவள் உட்கார்ந்துதான் ஆகணும். 75 00:03:44,349 --> 00:03:47,811 இதுவே அவள் முதல் முறையாக ஒரு இசை நாடகத்தை பார்க்கிறாள், அதுவும் அடிலேய்ட் மே பாட்டு. 76 00:03:47,895 --> 00:03:49,563 இந்த சந்தர்ப்பம் வாழ்வில் ஒரு முறையே கிடைக்கும். 77 00:03:49,646 --> 00:03:51,982 அதுவும் எமிலியைப் போல ஒரு நுணுக்கமாக உணரக்கூடிய ஒரு கலைப்பெண்ணிற்கு. 78 00:03:53,692 --> 00:03:56,278 உங்களுக்கு விரோதம் இல்லையேல், நான் உங்களுடன் உட்காருவதை விரும்புகிறேன். 79 00:03:56,361 --> 00:03:58,572 நீ நிச்சயமாக செய்யணும்! 80 00:03:58,655 --> 00:04:00,908 சாம், பண்புள்ளவனாக இரு. அவள் உன்னுடன் உட்காரட்டும். 81 00:04:01,408 --> 00:04:03,368 அவள் அங்கே எங்கேயோ பின்னாடி உட்கார்ந்திருந்தால், 82 00:04:03,452 --> 00:04:05,078 அவளால் பார்க்கக்கூட முடியாது. 83 00:04:05,787 --> 00:04:07,247 நினைவிருக்கிறதா, அவளுக்கு கண் உபாதைகள் உள்ளன. 84 00:04:07,706 --> 00:04:08,874 ஐரிட்டிஸ். 85 00:04:10,292 --> 00:04:13,212 வந்து, அது சரி, சும்மா காலியாக ஒரு இருக்கையை விடுவதும் வீண்தானே. 86 00:04:13,295 --> 00:04:14,296 வா. 87 00:04:32,231 --> 00:04:33,357 ஹே. 88 00:04:37,069 --> 00:04:38,570 யாரது, சாம் பௌல்ஸுக்கு பக்கத்தில் உட்கார்ந்து இருப்பது? 89 00:04:38,654 --> 00:04:40,197 அடேடே, இது புதுசு. 90 00:04:46,495 --> 00:04:48,830 இன்றிரவு அடிலேய்ட் மே பாடுவதை கேட்க ஆவலாக இருக்கிறேன். 91 00:04:49,456 --> 00:04:51,542 அவருக்கு மிகவும் நல்ல திறமையுள்ளதாக எல்லோரும் கூறுகின்றனர். 92 00:04:52,125 --> 00:04:53,877 இசைக் குயிலைப் போல பாடுகிறார், என்கிறார்கள். 93 00:04:53,961 --> 00:04:55,003 காத்திருக்க முடியவில்லை. 94 00:04:55,796 --> 00:04:59,800 "சர்வதேச இசைப் புயல்." அப்படிதான் அந்த சுவரொட்டியில் போட்டிருக்கிறது. 95 00:04:59,883 --> 00:05:02,845 அவங்க நிஜமாகவே மிகவும் இனிமையானவர் என்றும் சொல்கிறார்கள். 96 00:05:02,928 --> 00:05:03,929 நிஜமாகவா? 97 00:05:06,557 --> 00:05:08,809 இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் நான் அவர்களை பேட்டிக் காணவிருக்கிறேன். 98 00:05:10,352 --> 00:05:11,562 நீங்கள் ஒப்பனையறைக்கு போக அனுமதி உண்டா? 99 00:05:12,312 --> 00:05:13,355 கண்டிப்பாக. 100 00:05:13,814 --> 00:05:16,942 இது ஒரு புதிய இசை நாடக அரங்கம். அவர்களுக்கு பத்திரிகை விளம்பரம் தேவை. 101 00:05:18,151 --> 00:05:20,028 இது மிக அற்புதமாக இருக்கிறது. 102 00:05:26,827 --> 00:05:27,828 பாரு. 103 00:05:28,704 --> 00:05:29,705 ஹே, அம்மா! 104 00:05:35,002 --> 00:05:36,211 ஏன் இவ்வளவு நேரம் ஆனது? 105 00:05:37,212 --> 00:05:39,298 நான் பாரில் யாரை சந்தித்தேன் என்று சொன்னால் நீ நம்பமாட்டாய். 106 00:05:39,756 --> 00:05:40,966 யாரு? 107 00:05:41,341 --> 00:05:42,593 ப்ரேசர் ஸ்டர்ன்ஸ். 108 00:05:44,011 --> 00:05:45,012 யாரது? 109 00:05:45,095 --> 00:05:47,431 ப்ரேசர். என்னுடைய பள்ளி நண்பன். 110 00:05:47,514 --> 00:05:49,516 அசத்தலான மனிதன். கல்லூரி முதல்வரின் மகன். 111 00:05:50,851 --> 00:05:51,935 உனக்கு நினைவிருக்கணுமே. 112 00:05:52,895 --> 00:05:54,521 ஆம். கொஞ்சம். 113 00:05:54,605 --> 00:05:57,065 அடேடே. ப்ரேசர் ஸ்டர்ன்ஸ். 114 00:05:58,108 --> 00:05:59,568 உலகிலேயே மிகவும் இனிமையானவன். 115 00:06:01,486 --> 00:06:03,447 நாங்கள் படிப்பை முடித்த பின் சந்தித்துக் கொள்ளவேயில்லை. 116 00:06:03,947 --> 00:06:05,199 அவன் இப்போது வெஸ்ட் பாயிண்டில் இருக்கிறான். 117 00:06:05,991 --> 00:06:07,159 அவன் தன்னுடைய சீருடையை அணிந்துள்ளான். 118 00:06:07,784 --> 00:06:09,203 உண்மையான சிப்பாய் போலவே இருந்தான். 119 00:06:11,038 --> 00:06:12,664 கடவுளே, அந்த பழைய நண்பர்கள் கூட்டத்தின் இழப்பை உணர்கிறேன். 120 00:06:14,124 --> 00:06:15,792 மறுசந்திப்பு விழா ஏதாவது நடத்தணுமோ. 121 00:06:19,171 --> 00:06:20,797 ஆஹா, அந்த நாட்கள்தான் உன்னதமான நாட்கள். 122 00:06:22,674 --> 00:06:24,301 நாங்கள் அதுபோல உன்னதமான நாட்கள் எல்லாம் அனுபவித்துள்ளேன். 123 00:06:24,927 --> 00:06:27,763 இப்பவும் நல்ல நாட்களாக தானே இருக்கின்றன. இல்லையா? 124 00:06:48,075 --> 00:06:50,827 "லா ட்ராவியடா." "விழுந்துவிட்டவள்" என்பதுதான் அதன் பொருள். 125 00:06:50,911 --> 00:06:52,162 ஆம், எனக்குத் தெரியும். 126 00:06:52,955 --> 00:06:56,041 -தெரியுமா? -கல்லூரியில் இத்தாலிய மொழி படித்துள்ளேனே? 127 00:06:56,124 --> 00:06:57,960 ஆம், ஆனால் விட்டுவிட்டீர்களே. 128 00:06:58,877 --> 00:07:01,380 சரி. இருந்துவிட்டுப்போகட்டும். 129 00:07:02,256 --> 00:07:07,719 தெரியுமா, முதல் முறையாக இசை நாடகங்களைப் பார்க்கும் போது மிகையாகத் தெரியும். 130 00:07:08,428 --> 00:07:10,264 சிலருக்கு அது பிடித்துவிடும் அல்லது வெறுத்து விடும். 131 00:07:10,722 --> 00:07:12,850 பிடித்துப் போனால், காலத்திற்கும் பிடித்துவிடும். 132 00:07:12,933 --> 00:07:15,477 ஆனால் பிடிக்கவில்லையெனில், ஒரு வேளை அவர்கள் அதை ரசிக்க கற்கலாம், 133 00:07:15,561 --> 00:07:18,188 ஆனால் அது அவர்களின் ஆன்மாவுடன் எப்போதும் கலக்காது. 134 00:07:20,274 --> 00:07:21,275 நல்லது. 135 00:07:22,150 --> 00:07:23,569 நான் சிறுநீர் கழிக்க வேண்டும். 136 00:07:25,487 --> 00:07:26,488 இப்போதுதானே சென்று வந்தீர்கள். 137 00:07:27,030 --> 00:07:28,949 லவினியா, எனக்குத் தெரியும். 138 00:07:35,455 --> 00:07:37,583 அவன் அந்த தொப்பியை இந்த நிகழ்ச்சியின் இறுதிவரை அணியப் போகிறானா? 139 00:07:37,666 --> 00:07:38,917 என்ன ஏமாற்று வேலையிது. 140 00:07:39,001 --> 00:07:40,878 நம்மால் சரியாக பார்க்கக்கூட முடியவில்லை. 141 00:07:41,461 --> 00:07:42,629 இங்கே இருப்பவர்கள் எல்லோரும் எப்படி... 142 00:07:43,380 --> 00:07:46,425 ஆமாம். நல்லது. ஆம், கண்டிப்பாக. 143 00:07:47,176 --> 00:07:48,260 ...இவ்வளவு வேஷமிடுகிறார்கள். 144 00:07:51,180 --> 00:07:53,056 இது முழுவதுமே இத்தாலிய மொழியில் இருக்கப் போகிறதா என்ன? 145 00:07:53,932 --> 00:07:55,392 ஓ, கடவுளே. 146 00:07:56,059 --> 00:07:57,477 இத்தாலிய மொழி. 147 00:07:59,688 --> 00:08:01,899 இதற்கு பதில் ஏதாவது வேடிக்கை நாடகத்தையாவது பார்த்திருக்கலாம் என தோன்றுகிறது. 148 00:08:02,900 --> 00:08:03,901 ஆமாம். 149 00:08:07,487 --> 00:08:09,198 நீ உண்மையாகவே இசை நாடகம் பார்த்ததே இல்லையா? 150 00:08:09,281 --> 00:08:12,117 இல்லை. இல்லை, நான் அதைப் பற்றி கனவுதான் கண்டுள்ளேன். 151 00:08:13,869 --> 00:08:15,746 நல்லது, உன் கனவுகள் எல்லாம் மெய்யாகி வருகின்றன போல உள்ளதே. 152 00:08:17,289 --> 00:08:20,000 என்னுடைய பலதரப்பட்டக் கனவுகள் உங்களால் மெய்யாகி வருகின்றன. 153 00:08:22,461 --> 00:08:24,421 -எமிலி... -சாம், உங்களுக்கு என் நன்றிக் கடன். 154 00:08:24,505 --> 00:08:27,633 பரவாயில்லை. பெரிதாக ஒன்றும் இல்லை. இந்த பெட்டி இருக்கை இலவசமாக வந்தது தான். 155 00:08:27,716 --> 00:08:29,134 ஓ, இல்லை, அதற்காக இல்லை. 156 00:08:29,718 --> 00:08:31,136 அதற்காக மட்டும் இல்லை. 157 00:08:31,220 --> 00:08:33,138 -அதாவது, அதற்கெல்லாம் சேர்த்து. -எமிலி, தயவுசெய்து... 158 00:08:33,222 --> 00:08:35,557 -நீங்கள் எனக்கு தந்திருப்பதெற்கெல்லாம். -பரவாயில்லை, அது ஒன்றுமில்லை. 159 00:08:36,225 --> 00:08:37,226 அது பெரிய விஷயம்தான். 160 00:08:38,559 --> 00:08:41,772 நீங்கள் என் வாழ்க்கையை மாற்றிவிட்டீர்கள். நீங்கள் வரும்முன், நான் யாருமில்லை. 161 00:08:43,065 --> 00:08:44,107 இப்போது... 162 00:08:45,108 --> 00:08:46,735 இப்போது என் கவிதை வெளியாகிவிடும். 163 00:08:55,118 --> 00:08:56,370 எமிலி, ஒரு பிரச்சனை இருக்கு. 164 00:08:59,289 --> 00:09:00,457 பிரச்சனையா? 165 00:09:00,541 --> 00:09:01,542 ஆமாம். 166 00:09:02,376 --> 00:09:03,377 நீ... 167 00:09:04,962 --> 00:09:06,380 நீ, மேரிக்கு கடிதம் எழுதி இருக்கிறாய். 168 00:09:09,591 --> 00:09:10,592 ஆம். 169 00:09:11,844 --> 00:09:12,845 எழுதினேன். 170 00:09:14,221 --> 00:09:17,307 ஆம். அது நல்ல முடிவாக இருக்கவில்லை. 171 00:09:20,727 --> 00:09:23,397 ஆனால் நான்... என்ன சொல்கிறீர்கள்? 172 00:09:23,480 --> 00:09:28,110 நீ மேரிக்கு கடிதம் எழுதியுள்ளாய், அதனால் அவள் மிகவும் நொந்து போய் இருக்கிறாள். 173 00:09:29,278 --> 00:09:30,571 நாங்கள் இருவருமே, எனச் சொல்ல வேண்டும். 174 00:09:30,654 --> 00:09:32,614 எங்கள் இருவருக்குமே மிகவும் அருவருப்பாக இருந்தது. 175 00:09:33,532 --> 00:09:35,158 அந்தக் கடிதம் மேரியை மிகவும் கோபப்படுத்தி இருக்கிறது. 176 00:09:36,326 --> 00:09:38,537 அவள் இன்றிரவு இங்கு வராததற்கு காரணமே அதுதான். 177 00:09:40,080 --> 00:09:44,459 உன் கடித்தினால் அவள் காயப்பட்டுவிட்டதாக உணர்கிறாள், அதனால்தான் அவள் வரவில்லை. 178 00:09:48,338 --> 00:09:49,381 எனக்கு விளங்கவில்லை. 179 00:09:49,464 --> 00:09:51,466 அந்த கடிதத்தில் ஏதேதோ பைத்தியக்காரத்தனமாக எழுதியிருக்கிறாய். 180 00:09:52,718 --> 00:09:54,219 நான் ஏதோ சூரியன் என்றும் கூறியிருக்கிறாய். 181 00:09:54,636 --> 00:09:56,555 நான் இல்லாதபோது நீ மிகவும் வாடிப்போவதாகவும். 182 00:09:57,514 --> 00:10:00,517 நான் ஒவ்வொரு முறை அம்ஹெர்ஸ்டை விட்டுச் செல்லும் போதும், உனக்கு குளிர்காலம் என்று. 183 00:10:01,435 --> 00:10:02,936 எதற்கு அதுபோல எல்லாம் எழுதுகிறாய்? 184 00:10:03,020 --> 00:10:04,104 ஏனென்றால் நான் அப்படி தான் உணர்கிறேன். 185 00:10:04,188 --> 00:10:05,606 ஒரு திருமணமானவனைப் பற்றியா? 186 00:10:06,982 --> 00:10:08,192 அதுவும் அவன் மனைவியிடமே இப்படிச் சொல்லலாமா? 187 00:10:09,943 --> 00:10:11,528 நான் அவரை துன்புறுத்த நினைக்கவில்லை. 188 00:10:11,904 --> 00:10:13,030 நான் என் நன்றியுணர்ச்சியை, என் வியப்பை 189 00:10:13,113 --> 00:10:14,573 -காட்ட முயற்சித்தேன்... -ஆம், அதெல்லாம் சரி... 190 00:10:14,656 --> 00:10:16,533 பாரு, மிகவும் அதிகப்படியாகிவிட்டது இம்முறை. 191 00:10:16,617 --> 00:10:17,618 என்னை மன்னியுங்கள். 192 00:10:19,453 --> 00:10:22,748 சில சமயங்களில் நான் எழுதும் போது... என் கட்டுப்பாட்டை இழக்கிறேன். 193 00:10:27,794 --> 00:10:30,631 எனக்குப் புரிகிறது. அதுவேதான் உன்னை ஒரு சிறந்த கலைஞராகவும் ஆக்குகிறது. 194 00:10:33,091 --> 00:10:35,260 ஆனால் நீ இந்த வதந்திகளை எல்லாம் கேட்டிருப்பாயே. 195 00:10:37,304 --> 00:10:39,389 -எந்த வதந்திகள்? -அட, உனக்குத் தெரிந்திருக்கும். 196 00:10:40,682 --> 00:10:43,310 நான் ஒவ்வொரு முறை ஒரு பெண் கலைஞரை ஆதரிக்கும் போதும், 197 00:10:43,393 --> 00:10:46,772 எனது உள்நோக்கத்தை குறித்து ஈஸ்ட் கோஸ்ட்டில் பரப்பப்படும் வதந்திகள். 198 00:10:48,398 --> 00:10:50,234 மேலும் மேரியின் காதில் இவையெல்லாம் விழுகின்றன... 199 00:10:51,568 --> 00:10:52,778 அவளைச் கோபப்படுத்துகின்றன. 200 00:10:53,612 --> 00:10:54,821 அவளை அவை தாக்குகின்றன... 201 00:10:55,739 --> 00:10:59,159 ...நான் அவளுக்கு துரோகம் செய்ய மாட்டேன் என ஆழ்மனதில் அவளுக்கு தெரிந்த போதும். 202 00:11:01,453 --> 00:11:03,872 இப்போதே நான் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். 203 00:11:05,165 --> 00:11:07,167 நான் உன் மீது காட்டும் இந்த பரிவு? 204 00:11:08,377 --> 00:11:10,212 இது சுத்தமாக தொழிலடிப்படையானது மட்டுமே. 205 00:11:12,548 --> 00:11:14,383 நீ ்அதை புரிந்துகொண்டிருப்பாய் என நினைக்கிறேன், விளங்குகிறதா? 206 00:11:16,260 --> 00:11:17,261 நிச்சயமாக. 207 00:11:20,639 --> 00:11:22,641 இந்த உலகத்தில் எனக்கென நான் ஏற்பது மேரி ஒருவளைதான். 208 00:11:25,060 --> 00:11:26,186 நான் ஒருபோதும் அவளுக்கு துரோகம் செய்யமாட்டேன். 209 00:11:26,270 --> 00:11:27,479 சாம், தயவுசெய்து என்னை மன்னியுங்கள். 210 00:11:28,605 --> 00:11:30,190 நான் எந்தவித தவறான எண்ணத்துடனும் செய்யவில்லை. 211 00:11:30,274 --> 00:11:32,484 உங்கள் திருமண வாழ்க்கையின் மீது எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. 212 00:11:33,735 --> 00:11:36,613 நீங்கள் உங்கள் மனைவிக்கு உண்மையாக இருப்பதே, உங்கள் உயர்ந்த குணத்தை 213 00:11:36,697 --> 00:11:38,448 எடுத்துக்காட்டும் ஒரு விஷயமாகிறது. 214 00:11:45,747 --> 00:11:47,207 பாரு, எனக்குத் தெரியும் இது மிகவும் மனோகரமான ஒன்று என... 215 00:11:48,834 --> 00:11:50,460 ...உன் கவிதை வெளியாவதெல்லாம், 216 00:11:51,211 --> 00:11:53,547 அதுவும் நீ இவ்வளவு காலம் காத்திருந்ததற்கு பிறகு. 217 00:11:55,299 --> 00:11:56,925 ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள், எமிலி, 218 00:11:58,594 --> 00:11:59,803 இந்த மனோகரமான உணர்வு... 219 00:12:01,680 --> 00:12:04,892 அது உனக்கும் உனக்கும் மட்டும்தான். 220 00:12:42,930 --> 00:12:44,515 உன்னுடைய விருந்துகளைப் போல தெரிகிறதே. 221 00:13:22,886 --> 00:13:23,887 மன்னிக்கணும். 222 00:13:39,194 --> 00:13:40,404 இது சற்றும் சுவாரசியம் இல்லாததாக இருக்கிறது. 223 00:13:40,487 --> 00:13:45,158 தெரியும், ஆனால், கடவுளே, எனக்கு இன்னும் எவ்வளவு நேரம் தாங்கும் எனத் தெரியவில்லை. 224 00:14:06,847 --> 00:14:08,932 அவளுக்கு காச நோய் உள்ளது. 225 00:14:17,774 --> 00:14:19,818 ஷிப், இங்கே இசை நாடகத்தில் வேண்டாம். 226 00:14:24,448 --> 00:14:26,825 போ, போ, போ. 227 00:14:27,743 --> 00:14:30,621 அப்பாடி, விடுதலை. விடுதலை! 228 00:14:30,704 --> 00:14:33,290 ஒ, கடவுளே, அது பயங்கரம்! தாங்க முடியவில்லை. 229 00:14:33,373 --> 00:14:35,751 ஓ, விடுதலை-ஓ. லா லா குப்பையல்லா. 230 00:14:35,834 --> 00:14:37,461 லா லா குப்பையல்லா! 231 00:14:37,544 --> 00:14:39,880 இங்கிருந்து முதலில் வெளியேறுவோம்! 232 00:14:39,963 --> 00:14:41,590 -நன்று, நன்று! -ஓ, கடவுளே. 233 00:14:41,673 --> 00:14:43,050 தயவுசெய்து! போகலாம் வா. 234 00:14:43,509 --> 00:14:45,177 வாங்க. 235 00:15:15,249 --> 00:15:16,875 முழு கவனத்தையும் கவர்கிறார், இல்லை? 236 00:15:20,504 --> 00:15:23,131 என் மனது அப்படியே பிளந்துவிடும் போலத் துடிக்கிறது. 237 00:15:33,642 --> 00:15:34,643 நான் போக வேண்டும். 238 00:15:34,726 --> 00:15:36,061 என்ன? இப்போதே போக வேண்டுமா? 239 00:15:36,144 --> 00:15:37,145 நான் வந்திருக்கவே கூடாது. 240 00:15:37,229 --> 00:15:38,772 மேரி எனக்காக காத்திருப்பாள். நான் வீட்டிற்குச் செல்ல வேண்டும். 241 00:15:38,856 --> 00:15:39,690 சாம், பொறுங்கள்! 242 00:15:44,945 --> 00:15:46,363 நான் உங்களுக்காக ஏதோ எழுதியிருக்கிறேன். 243 00:15:51,785 --> 00:15:52,786 நீயே வைத்துக் கொள். 244 00:16:56,266 --> 00:16:57,100 குயிலைப் பிளந்து - அதனுள் கிடைக்கும் இனிய இசை - 245 00:16:57,184 --> 00:16:58,018 ஒவ்வொரு துளியிலும், வெள்ளியாய் உருண்டு. 246 00:16:58,101 --> 00:16:58,977 கோடையில் அதன் பாடலை கேட்டப் போதிலும் ஆண்டுகள் போயினும் செவிக்கு யாழென இசைதரும். 247 00:17:06,609 --> 00:17:12,574 குயிலைப் பிளந்து 248 00:17:14,576 --> 00:17:19,414 அதனுள் கிடைக்கும் இனிய இசை 249 00:17:21,458 --> 00:17:28,464 ஒவ்வொரு துளியிலும், வெள்ளியாய் உருண்டு 250 00:17:28,882 --> 00:17:29,883 சூ... 251 00:17:31,426 --> 00:17:37,224 கோடையில் அதன் பாடலை கேட்டப் போதிலும் 252 00:17:38,141 --> 00:17:40,269 உன் செவிக்கு யாழென இசைதரும். 253 00:17:40,352 --> 00:17:44,815 யாழ் பழையதாயினும் 254 00:17:48,443 --> 00:17:54,241 வெள்ளத்தை திறந்துவிடு அது அலையலையாய் அதனுள் பார்ப்பாய் 255 00:17:55,242 --> 00:18:01,415 அதன் ஒவ்வொரு துடிப்பும் உனக்காக 256 00:18:02,165 --> 00:18:08,088 இரத்த நிற பரிசோதனை! நம்ப மறுக்கும் தோமஸ்! 257 00:18:09,047 --> 00:18:11,091 இப்போது, உனக்கு இன்னும் சந்தேகமோ 258 00:18:11,175 --> 00:18:17,723 அந்த குயில் உனக்கு உண்மையாக இருந்ததென்று? 259 00:18:18,932 --> 00:18:25,189 குயிலைப் பிளந்து - அதனுள் கிடைக்கும் இனிய இசை - 260 00:18:26,315 --> 00:18:33,238 ஒவ்வொரு துளியிலும், வெள்ளியாய் உருண்டு 261 00:18:42,623 --> 00:18:43,832 நன்று! 262 00:19:17,449 --> 00:19:19,284 நீஙகள் வண்டியைக் கொண்டு வரப்போகிறீர்களா? 263 00:19:20,327 --> 00:19:22,162 இல்லை, நான் ப்ரேசரை சந்திக்கப் போகிறேன். 264 00:19:22,246 --> 00:19:24,706 நிகழ்ச்சி முடிந்தததும் அவனை வந்து சந்திக்கும்படி கூறியிருக்கிறான். 265 00:19:25,666 --> 00:19:27,501 அதனால், என்ன இப்போது? 266 00:19:27,584 --> 00:19:28,836 நீங்கள் என்னை இங்கேயே விட்டு விட்டுப்போகிறீர்களா? 267 00:19:29,753 --> 00:19:31,922 நீ மீண்டும் ஹோட்டலுக்கு ஒரு குதிரை வண்டியை பிடித்துச் செல். 268 00:19:32,297 --> 00:19:33,298 தனியாகவா? 269 00:19:34,341 --> 00:19:35,676 அல்லது யாருடன் வேண்டுமானாலும். 270 00:19:54,278 --> 00:19:55,988 பாஸ்டன் இசை நாடக அரங்கம் ஒப்பனை அறை பத்திரிகையாளர் அனுமதி அட்டை 271 00:20:01,785 --> 00:20:03,871 வந்து கொண்டிருக்கிறது! மன்னியுங்கள். 272 00:20:15,716 --> 00:20:17,342 யாரையாவது தேடுகிறீர்களா? 273 00:20:17,968 --> 00:20:20,220 ஆம், நான் அடிலேய்ட் மேயை தேடுகிறேன். 274 00:20:20,888 --> 00:20:22,014 நிச்சயமாக தேடுவீர்கள். 275 00:20:22,097 --> 00:20:24,850 அவர் தன்னுடைய ஒப்பனை அறையில் உள்ளார், ஆனால் இப்போது போக வேண்டாம். 276 00:20:24,933 --> 00:20:26,977 நீங்கள் யார்? அவருடைய தோழியா? 277 00:20:27,060 --> 00:20:29,062 இல்லை, நான் ஒரு எழுத்தாளர். 278 00:20:30,397 --> 00:20:31,732 என்ன மாதிரி எழுத்தாளர்? 279 00:20:32,608 --> 00:20:34,443 ஒரு பத்திரிகை நிருபர். 280 00:20:35,194 --> 00:20:36,320 பாருங்க, நான் ஊடகத்திலிருந்து வருகிறேன். 281 00:20:37,154 --> 00:20:40,407 ஒரு பெண் நிருபரா? நான் கேள்விப்பட்டதே இல்லையே. 282 00:20:40,490 --> 00:20:42,284 ஆம், நான் த ஸ்பிரிங்ஃபீல்ட் ரிபப்லிக்கனில் வேலை செய்கிறேன். 283 00:20:42,367 --> 00:20:45,287 உண்மையிலேயே இங்கு மாஸச்சுஸெட்ஸில் காலத்திற்கேற்ற முன்னேற்றம் இருக்கிறது. 284 00:20:45,370 --> 00:20:46,455 எனக்கு குடிக்க எதும் தேவை. 285 00:20:46,538 --> 00:20:47,539 யாருக்குத் தேவையில்லை? 286 00:20:47,623 --> 00:20:50,042 நீயும் எங்களுடன் வந்து எதுவும் அருந்துகிறாயா, பெண் நிருபரே? 287 00:20:50,125 --> 00:20:52,753 ஆம்! எங்களைப்பற்றி எழுதலாம். நாங்கள் மிக அதிசயமானவர்கள். 288 00:20:53,337 --> 00:20:55,339 இல்லை, நான் இப்போது அடிலேய்ட் மேயை தான் பேட்டிக் காண வந்துள்ளேன். 289 00:20:55,422 --> 00:20:58,050 அடிலேய்ட் பேட்டி கொடுப்பதில்லை. 290 00:20:58,133 --> 00:20:59,635 எல்லோருக்கும் ஏற்கனவே அவர் யாரென்று தெரியும். 291 00:20:59,718 --> 00:21:03,305 மிக சரி. பாருங்க, பேட்டிகள் எல்லாம் எங்களைப் போல பாவங்களுக்கு தான் தேவை. 292 00:21:03,388 --> 00:21:06,725 உண்மையான நட்சத்திரங்கள், அவர்கள் மறைந்து கொள்ள இயலும். 293 00:21:31,375 --> 00:21:32,417 யார் அது? 294 00:21:34,169 --> 00:21:35,170 அது... 295 00:21:36,630 --> 00:21:37,631 நான்தான். 296 00:21:38,006 --> 00:21:39,216 சரி, உள்ளே வா. 297 00:21:39,883 --> 00:21:42,427 வருவதானால் உள்ளே வா. கதவைத் தாளிடு வேகமாக. 298 00:21:44,388 --> 00:21:46,932 நான் இன்றிரவு யாருடைய இடிகளையும் தாங்கும் நிலையில் இல்லை. 299 00:21:47,558 --> 00:21:49,977 என் தொண்டை வலிக்கிறது, மேலும் எனக்கு கையொப்பம் இட இன்று விருப்பமில்லை. 300 00:21:50,060 --> 00:21:53,230 அது மோசம்தான், எனக்குத் தெரியும், ஆனால் எனக்கு இன்று அதற்கெல்லாம் சக்தியில்லை. 301 00:21:53,939 --> 00:21:55,566 ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. 302 00:21:56,316 --> 00:21:58,777 அவர்கள் என்னை அபரிமிதமாக நேசித்து என்னை கொன்றுவிடுவார்கள் போலும். 303 00:21:59,278 --> 00:22:01,905 மிக களைப்பாக உள்ளது. இன்றிரவு என்னால் அதைச் செய்யமுடியாது. 304 00:22:02,865 --> 00:22:04,074 தொந்தரவிற்கு மன்னிக்கணும். 305 00:22:04,157 --> 00:22:06,034 இல்லை, நீ உன் கடமையைதானே செய்கிறாய். 306 00:22:06,118 --> 00:22:09,121 ஆடையை களைய எனக்கு உதவிபுரிய வந்தவள், இல்லையா? நான் தயார். 307 00:22:12,082 --> 00:22:13,625 உண்மையில் நான்... 308 00:22:14,293 --> 00:22:15,502 நான் வந்து... 309 00:22:17,629 --> 00:22:20,257 நான் உங்கள் ரசிகை, நீங்கள் மிக அற்புதமானவர் என கூற வந்தேன். 310 00:22:20,340 --> 00:22:21,758 நீயும் அந்த கூட்டத்தில் ஓருத்திதான். 311 00:22:23,719 --> 00:22:25,304 நான் அரங்கில் உட்கார்ந்து இன்று பார்த்தேன். 312 00:22:25,387 --> 00:22:26,471 உங்கள் கானம்... 313 00:22:26,555 --> 00:22:28,473 நான் அது போல இதுவரை கேட்டதேயில்லை. 314 00:22:28,557 --> 00:22:31,310 அதன் இனிமை, என் மனதை நெருடிவிட்டது. 315 00:22:32,269 --> 00:22:33,937 ஆமாம், அப்படிதான் அவர்கள் எல்லோரும் கூறுகின்றனர். 316 00:22:34,021 --> 00:22:35,230 இல்லை, ஆனால் நான் சொல்வது உண்மை. 317 00:22:36,315 --> 00:22:40,527 நான் இதுவரை உணராத பல விஷயங்களை உங்கள் கானத்தை கேட்டப் போது உணர்ந்தேன். 318 00:22:40,611 --> 00:22:42,029 உண்மையாகவா? அப்படியா இருந்தது? 319 00:22:42,696 --> 00:22:43,697 என்ன? 320 00:22:43,780 --> 00:22:44,990 உணரும் அளவிற்கு. 321 00:22:47,242 --> 00:22:49,077 வந்து, உங்களுக்கே தெரிந்திருக்குமே எப்படி இருக்கும் என்று. 322 00:22:50,204 --> 00:22:52,706 நீங்கள் அதை அப்படியே கண் முன் கொண்டு நிறுத்தினீர்கள். 323 00:22:53,916 --> 00:22:56,835 நானே வியொலெட்டாவைப் போல உணரச்செய்தீர்கள். 324 00:22:56,919 --> 00:22:58,921 அது ஒரு நாடக வேஷம் தான். 325 00:22:59,963 --> 00:23:04,051 வியொலெட்டா பாத்திரத்தை பலமுறை செய்துள்ளேன் அதை தூங்கிக் கொண்டே செய்யமுடியம். 326 00:23:05,177 --> 00:23:09,139 உனக்கு அது மிகவும் உணர்ச்சியூட்டுவதாக இருப்பினும், என்னை அது பாதிக்கவே இல்லை. 327 00:23:11,183 --> 00:23:14,937 இதோ, இப்படி உட்கார். என்னைச் சுற்றி ஜனங்கள் நிற்பது, எனக்குப் பிடிக்காது. 328 00:23:15,020 --> 00:23:17,356 பாதிக்காமல் இருக்கவே முடியாது. நீங்கள் அழுதீர்களே. 329 00:23:18,440 --> 00:23:20,234 அதெல்லாம் உண்மை கண்ணீர்தானே. 330 00:23:20,317 --> 00:23:21,318 உண்மை கண்ணீரா என்ன? 331 00:23:21,985 --> 00:23:23,445 எது உண்மை என்பதே இப்போது எனக்கு தெரியவில்லை. 332 00:23:23,529 --> 00:23:26,865 இது எந்த நகரம் என்று கூட இப்போதெல்லாம் தெரிவதில்லை. பாரசீகமா? ரோமாபுரியா? 333 00:23:28,742 --> 00:23:31,828 அதெல்லாம் ஒரு பொருட்டேயில்லை. எல்லா இரவும் ஒன்றுதான். 334 00:23:32,955 --> 00:23:35,249 ஒரே மாயம். ஒரு கனவு. 335 00:23:36,166 --> 00:23:41,213 இன்னொரு மனிதர் என்னை காதலிக்கிறார், இன்னொறு சுற்று மது, கைதட்டல்கள் இதேதான். 336 00:23:41,880 --> 00:23:44,216 எத்தனையோ பேர்கள் என் மீது காதல் வயப்பட்டுள்ளனர். 337 00:23:44,299 --> 00:23:45,425 கணக்கே இல்லை. 338 00:23:46,343 --> 00:23:48,053 நான் யதார்த்தத்துடன் தொடர்பை இழந்து விட்டேன். 339 00:23:48,136 --> 00:23:49,346 எது யதார்த்தம்? 340 00:23:50,013 --> 00:23:51,306 நான் யார்? 341 00:23:51,390 --> 00:23:52,808 நீங்கள் தான் அடிலேய்ட் மே. 342 00:23:54,017 --> 00:23:55,769 நீங்கள்தான் உலகிலேயே மிகச் சிறந்த உச்ச சுருதி பாடகி. 343 00:23:57,312 --> 00:23:58,522 அது என் உண்மையான பெயர் இல்லை. 344 00:23:58,605 --> 00:24:00,023 அது வெறும் மேடைப் பெயர் தான். 345 00:24:01,817 --> 00:24:07,281 வந்து, உங்கள் பெயர் எதுவாயினும், இன்றிரவு நீங்கள் என் வாழ்க்கையை மாற்றிவிட்டீர்கள். 346 00:24:11,201 --> 00:24:14,413 உங்கள் குரல் என்னை எப்போதும் துரத்திக் கொண்டே இருக்கும். 347 00:24:18,417 --> 00:24:20,085 எதுவுமே நிரந்தரம் கிடையாது. 348 00:24:21,003 --> 00:24:22,629 உனக்கு அது தெரியாதா, கண்ணே? 349 00:24:24,047 --> 00:24:27,092 குரல் எல்லாம் மங்கிவிடும். நினைவெல்லாம் மறந்து போகும். 350 00:24:28,051 --> 00:24:29,887 நாகரீகம் போகும் வரும், மாறிக்கொண்டே இருக்கும். 351 00:24:29,970 --> 00:24:33,182 காலப் போக்கில், நாம் எல்லோருமே, மெல்ல, மறக்கப் படுவோம். 352 00:24:34,975 --> 00:24:38,395 வந்து, நான் உங்களை மறக்க மாட்டேன். 353 00:24:42,816 --> 00:24:44,443 மேடையைப் பார்க்க விருப்பமா? 354 00:24:45,485 --> 00:24:46,486 உண்மையாகவா? 355 00:24:48,947 --> 00:24:49,948 என்னுடன் வா. 356 00:24:52,868 --> 00:24:56,079 விளக்குகள் இல்லாமல் யாரும் மேடையேற தடையுள்ளது, ஆனால் எனக்குக் கவலையில்லை. 357 00:24:56,997 --> 00:24:58,207 அது ஒரு குயில். 358 00:25:03,337 --> 00:25:04,922 மிகவும் அழகாக உள்ளது. 359 00:25:05,005 --> 00:25:07,925 ஆமாம். யாரும் இல்லாதபோதே எனக்கு இது இன்னும் பிடித்தமாக உள்ளது. 360 00:25:31,240 --> 00:25:32,491 நன்று! 361 00:25:39,414 --> 00:25:40,415 எமிலி! 362 00:25:41,834 --> 00:25:43,836 இன்னும் வேண்டும், எமிலி! 363 00:25:58,308 --> 00:25:59,518 நான் பிரபலமாக ஆசை. 364 00:26:01,019 --> 00:26:02,187 உனக்கு ஆசையா? 365 00:26:02,271 --> 00:26:03,647 கண்டிப்பாக. எல்லோருக்கும் அந்த ஆசை இருக்காதா? 366 00:26:04,273 --> 00:26:05,941 நீ ஏன் பிரபலமாக ஆசைப்படுகிறாய்? 367 00:26:07,401 --> 00:26:08,861 ஏனென்றால் நான் ஒரு எழுத்தாளர். 368 00:26:09,778 --> 00:26:13,740 நான் கவிதை மேல் கவிதையாக எழுதித்தள்ள, அவை என் பெட்டியிலேயே முடங்கிக்கிடக்கின்றன, 369 00:26:14,283 --> 00:26:18,537 இருட்டறையிலேயே விழுந்தடைந்து, வெளிச்சத்தை பார்க்கவே இல்லை. 370 00:26:20,414 --> 00:26:21,790 அதாவது, அது போதாதே. 371 00:26:22,207 --> 00:26:23,208 போதாதா என்ன? 372 00:26:24,543 --> 00:26:26,962 அவை வெளிச்சத்திற்கு வர வேண்டாமா? நானும் பிரபலமாக... 373 00:26:27,880 --> 00:26:28,881 வேண்டாமா? 374 00:26:30,883 --> 00:26:31,884 எனக்குத் தெரியவில்லை. 375 00:26:31,967 --> 00:26:33,802 நீ பிரபலமாகி விட்டால், அம்பலத்திற்கு வந்து விடுவாய். 376 00:26:34,678 --> 00:26:38,599 அம்பலத்திற்கு வந்துவிடுவதெல்லாமே வெகு விரைவில், அதாவது, பழையதாகி விடும். 377 00:26:40,142 --> 00:26:41,268 வந்து, எல்லாம் அப்படியாகாது. 378 00:26:41,351 --> 00:26:42,978 ஆமாம், எல்லாமே. 379 00:26:43,395 --> 00:26:46,732 விமர்சகர்கள், அவர்கள் உன்னை ஒரு நிமிடம் உயர்த்துவார்கள், பிறகு கீழே தள்ளுவார்கள். 380 00:26:48,066 --> 00:26:50,485 நீ சலித்துப் போன பின்பு, அவர்கள் உன்னை அழித்து விடுவார்கள். 381 00:26:52,070 --> 00:26:54,698 அவர்கள் உன் மீது விருப்பம் கொண்டதால், உன்னை வெறுப்பார்கள். 382 00:26:56,575 --> 00:27:00,829 அவர்களுக்கு நீ ஒரு விலை மகள், உன் சரஸநாடகத்தில் அவர்கள் மயங்கினார்கள். 383 00:27:02,539 --> 00:27:05,459 வந்து, அவர்கள் சொல்வதைப் பற்றி நாம் ஏன் கவலை படணும்? அவர்கள் என்ன நினைத்தால் என்ன? 384 00:27:06,126 --> 00:27:07,127 மிகச் சரியாக சொன்னாய். 385 00:27:07,961 --> 00:27:10,797 அதற்கு யாருமே பார்க்காமல் தனிமையிலே ஒரு அறையிலேயே இருந்து விடலாமே. 386 00:27:15,344 --> 00:27:16,553 உங்களால் எப்படி இது முடிகிறது? 387 00:27:17,846 --> 00:27:22,351 எப்படி இத்தனை பேர் முன்பில் நின்று தைரியமாக உங்களால் பாட முடிகிறது? 388 00:27:22,976 --> 00:27:25,395 அது, நான் அவர்கள் யாரும் இங்கு இல்லாதது போல பாசாங்கு செய்வேன். 389 00:27:27,481 --> 00:27:29,483 ஆனால் நான் இன்று இங்கு இருந்தேனே. 390 00:27:31,360 --> 00:27:32,444 நான் இங்கு இருந்தேனே. 391 00:27:35,072 --> 00:27:37,741 சரி, அப்போ நான் உனக்காக இன்று பாடியதாக வைத்துக் கொள். 392 00:27:44,873 --> 00:27:46,416 உண்மையில் உனக்கு என்ன வேண்டும்? 393 00:27:47,292 --> 00:27:48,961 உனக்குள்ளிருந்து உன்னைத் தாக்கும் அந்த ஆழ் மன ஏக்கம்தான் என்ன? 394 00:27:49,044 --> 00:27:51,463 சூ. நீ என்ன சொல்கிறாய்? 395 00:27:51,547 --> 00:27:57,719 இந்த புகழுக்கு ஆசைப்படுகிறேன் எனும் புழுதிக்கு அடியில், நீ எதற்கு ஏங்குகிறாய்? 396 00:27:59,805 --> 00:28:01,014 உனக்கு ஒரு ஆதாரம் கிடைக்க ஏங்குகிறாய். 397 00:28:02,015 --> 00:28:03,225 நீ அழகிற்காக ஏங்குகிறாய். 398 00:28:05,811 --> 00:28:07,020 நீ அன்பிற்காக ஏங்குகிறாய். 399 00:28:09,273 --> 00:28:15,737 குயிலைப் பிளந்து 400 00:28:16,780 --> 00:28:23,370 அதனுள் கிடைக்கும் இனிய இசை 401 00:28:42,347 --> 00:28:44,558 ஹே! அங்கே என்ன செய்து கொண்டு இருக்கிறாய்? 402 00:28:45,934 --> 00:28:47,144 மேடையை விட்டு இறங்கு. 403 00:28:49,521 --> 00:28:52,608 உடனே மேடையிலிலருந்து இறங்கவில்லை எனில், நான் உன்னைப் பற்றி புகார் கொடுப்பேன். 404 00:28:55,652 --> 00:28:57,279 உனக்கு நான் யார் என்பது கூடத் தெரியாது. 405 00:29:52,835 --> 00:29:54,837 தமிழ் மொழி பெயர்ப்பு [அகிலா குமார்]