1 00:00:58,767 --> 00:01:02,729 ...28 வயதான நமது இசபெல் கேரிக், இன்று மாலை, சம்பவ இடத்திலேயே 2 00:01:02,813 --> 00:01:07,985 இறந்துவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் ஒரு வளர்ந்து வரும் நட்சத்திரம்... 3 00:01:10,112 --> 00:01:11,321 நீங்கள் நலம் தானே? 4 00:01:12,656 --> 00:01:13,657 இல்லை. 5 00:01:17,744 --> 00:01:19,162 அது என்ன, லியன்? 6 00:01:21,206 --> 00:01:22,833 உங்களுக்குப் புரியும் என்று நினைத்தேன். 7 00:01:27,254 --> 00:01:30,132 என்னுடைய சக ஊழியர் ஒருத்தி இப்போது இறந்துவிட்டாள், ஆனால் நீ... 8 00:01:32,342 --> 00:01:34,887 சந்தோஷப்படுவது போல் தெரிகிறது. 9 00:01:35,554 --> 00:01:37,389 இசபெல் உங்களைக் கஷ்டப்படுத்த நினைத்தாள். 10 00:01:38,348 --> 00:01:40,642 உங்களைக் கஷ்டப்படுத்த முயற்சிப்பதை அவள் நிறுத்தியிருக்கவே மாட்டாள். 11 00:01:42,060 --> 00:01:43,270 நான் உதவ விரும்பினேன். 12 00:01:45,522 --> 00:01:46,607 “உதவியா”? 13 00:01:49,651 --> 00:01:50,861 எப்படி உதவ? 14 00:02:01,288 --> 00:02:02,289 மன்னியுங்கள். 15 00:02:08,002 --> 00:02:09,588 நீங்கள் எல்லோரும் கிளம்புகிறீர்களா? 16 00:02:11,381 --> 00:02:13,717 கோர்ட்னிக்கு உடம்பு சரியில்லை. 17 00:02:14,885 --> 00:02:16,094 நான் காரில் காத்திருக்கிறேன். 18 00:02:17,179 --> 00:02:20,474 இன்றிரவு நடந்தவற்றுக்காக, என்னை மன்னித்துவிடுங்கள். 19 00:02:21,683 --> 00:02:23,852 மன்னிப்பு கேட்க ஒன்றுமில்லை, அன்பே. 20 00:02:23,936 --> 00:02:25,729 நீ பத்திரமாக இருக்கிறாயே அதுவே எனக்கு சந்தோஷம். 21 00:02:25,812 --> 00:02:30,275 நாம் பேசிக்கொண்டு இருந்த விஷயத்தைத் தொடரலாம் என்று நினைத்தேன். 22 00:02:30,359 --> 00:02:33,987 ஆமாம், உன்னுடைய நானி பற்றிய விஷயத்தை இந்த வாரம் பேசலாம். 23 00:02:34,530 --> 00:02:37,074 இப்போது உனக்குக் கட்டாயம் தூக்கம் தேவை. 24 00:02:38,200 --> 00:02:40,827 ஆமாம். உன்னுடைய முதுகுக்கு ஓய்வு கொடு. 25 00:03:06,520 --> 00:03:07,688 ஹே. 26 00:03:08,939 --> 00:03:10,107 உன்னுடைய மருந்துகள் எங்கே? 27 00:03:10,774 --> 00:03:13,443 அவற்றை வெளியே எறிந்துவிட்டேன், போதைக்காரி. 28 00:03:13,527 --> 00:03:14,528 ஏன்? 29 00:03:16,697 --> 00:03:18,866 நான் அதைத் தொடங்கினால், என்னால் அதை நிறுத்தவே முடியாது. 30 00:03:20,993 --> 00:03:22,202 அவை எனக்கு வேண்டும். 31 00:03:22,953 --> 00:03:27,332 என்னை நம்பு, அது உனக்கு துளிக்கூட உதவாது. 32 00:03:34,464 --> 00:03:35,465 என்ன? 33 00:03:44,183 --> 00:03:45,392 உன்னுடைய பேன்டைக் கழற்று. 34 00:03:46,226 --> 00:03:47,269 என்ன? 35 00:03:48,437 --> 00:03:49,438 இப்போதா? 36 00:03:50,105 --> 00:03:51,607 எல்லோரும் ஏற்கனவே தூங்கி விட்டார்கள். 37 00:04:18,509 --> 00:04:22,930 கேமரா 4 பின்பக்க முற்றம் 38 00:04:42,699 --> 00:04:44,493 பில்டாங்கும் கேவியரும் வேண்டுமா? 39 00:04:45,577 --> 00:04:47,621 நான் காபி குடிக்கப் போகிறேன். 40 00:04:54,461 --> 00:04:55,546 தயவுசெய்து, உட்கார். 41 00:05:15,732 --> 00:05:17,442 நீ சாப்பிடும் போது, நான் இவனை வைத்துக்கொள்கிறேன். 42 00:05:17,526 --> 00:05:19,278 அவன் என்னிடம் சமர்த்தாக இருப்பான். 43 00:05:24,533 --> 00:05:26,326 -நாம் பேசலாமா? -எதைப் பற்றி? 44 00:05:27,202 --> 00:05:28,328 நேற்றிரவைப் பற்றி. 45 00:05:29,621 --> 00:05:30,956 சொல்ல என்ன இருக்கிறது? 46 00:05:32,875 --> 00:05:36,420 டொரோதி, என் மேல் அன்பு காட்டாமல் இருக்க என்ன காரணம்? 47 00:05:37,588 --> 00:05:40,591 என்னவென்று உங்களுக்கே தெரியும், உங்களது கருத்தையும் என்னிடம் தெளிவாக சொல்லிவிட்டீர்கள். 48 00:05:41,925 --> 00:05:43,719 எப்போதும் உனக்கு ஆதரவாக இருப்பேன், டொரோதி. 49 00:05:56,481 --> 00:05:58,025 இன்று உங்களுக்கு வேலை இருக்கிறதா? 50 00:05:59,318 --> 00:06:02,404 ஆம், நாங்கள் நீதிபதி குழுவை இன்றிரவு முழுவதும் படம்பிடிக்கப் போகிறோம், நான் வர நேரமாகும். 51 00:06:02,487 --> 00:06:04,072 ஆனால், அவற்றை வேறு நாளுக்கு கூட ஒத்தி வைக்கலாம். 52 00:06:04,156 --> 00:06:08,035 வேண்டாம். அப்படி செய்யாதீர்கள். டிவியில் வேலை பார்ப்பது விளையாட்டில்லை, ஷான். 53 00:06:08,118 --> 00:06:11,246 கடினமான சூழ்நிலையை தைரியமாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர, அப்படியே விட்டுவிடக் கூடாது. 54 00:06:13,957 --> 00:06:15,209 என்ன செய்கிறாய்? 55 00:06:18,587 --> 00:06:19,671 படிக்கிறேன். 56 00:06:20,547 --> 00:06:21,673 எதைப் பற்றி? 57 00:06:22,299 --> 00:06:25,052 நீ குளித்துவிட்டு உடை மாற்றும் வரை நான் இவனை வைத்திருக்கிறேன். 58 00:06:25,135 --> 00:06:26,678 நான் இங்கே தானே இருக்கிறேன். 59 00:06:27,387 --> 00:06:29,681 வேண்டாம், என்னால் இதைச் சாப்பிட முடியாது. 60 00:06:31,475 --> 00:06:33,060 ரொம்ப நேரம் கஷ்டப்பட்டு இதை சமைத்தேன். 61 00:06:41,610 --> 00:06:43,028 கண்டதைச் சாப்பிடாதே. 62 00:06:47,241 --> 00:06:48,742 பால்? வேண்டாமா? 63 00:06:52,996 --> 00:06:53,997 ஏன் வேண்டாம்? 64 00:06:57,167 --> 00:06:58,627 என்ன கண்றாவி இது? 65 00:06:58,710 --> 00:06:59,837 தொண்டைக்குள்ளே போய் விட்டது. 66 00:07:00,587 --> 00:07:01,630 அதை சாப்பிட்டுவிட்டாயா? 67 00:07:01,713 --> 00:07:03,257 வாய்க்குள் அது நகர்வது மாதிரி இருந்தது. 68 00:07:03,340 --> 00:07:04,341 அதை விழுங்கிவிட்டாயா? 69 00:07:22,693 --> 00:07:28,991 முன் வாசல் 70 00:08:51,990 --> 00:08:56,453 தாத்தா, உங்களுக்காக ஷான் 71 00:09:25,357 --> 00:09:26,441 லியன்? 72 00:09:29,820 --> 00:09:31,446 நன்றாக ஓடினாயா? 73 00:09:32,155 --> 00:09:33,156 ஆமாம். 74 00:09:34,449 --> 00:09:36,493 ஒரு நிமிடம் என்னோடு வர முடியுமா? 75 00:09:36,577 --> 00:09:38,537 என்னுடைய டங்கரீஸில், நீ மிகவும் அழகாக இருக்கிறாய். 76 00:09:38,620 --> 00:09:40,998 உனக்காக வேறு ஏதாவது ஆடை பார்க்கலாமா என்று நினைத்தேன். 77 00:09:45,043 --> 00:09:46,253 லியன். 78 00:09:49,256 --> 00:09:50,883 இந்த காயங்கள் எப்படி ஏற்பட்டது? 79 00:09:57,806 --> 00:09:59,433 எனக்கே நான் தண்டனை கொடுத்துக்கொள்வது வழக்கம். 80 00:10:01,977 --> 00:10:03,979 நாங்கள் தவறே செய்யாதவர்களாக இருக்க வேண்டும். 81 00:10:05,772 --> 00:10:08,984 கெட்ட எண்ணம் கூடாது, சுயநலம் கூடாது. 82 00:10:10,861 --> 00:10:12,279 கடவுளுக்குக்கு மட்டும் சேவை செய்யணும். 83 00:10:14,740 --> 00:10:15,908 நேற்றிரவு, 84 00:10:16,950 --> 00:10:20,078 உதவ விரும்புவதாக நீ சொன்ன போது... 85 00:10:22,497 --> 00:10:26,335 இசபெலுக்கு நடந்ததற்கு, ஏதோ விதத்தில் நீ தான் காராணம் என உன்னையே குற்றம்சாட்டிக் கொள்கிறாயா? 86 00:10:30,297 --> 00:10:32,257 உன்னை நீயே துன்புறுத்திக்கொள்வதை பார்க்க நான் விரும்பவில்லை. 87 00:10:32,341 --> 00:10:36,178 நீ எதை நம்புகிறாய் என்று புரிந்துகொள்ள மட்டும் ஆசைப்படுகிறேன். 88 00:10:36,720 --> 00:10:37,721 அவ்வளவு தான். 89 00:10:39,473 --> 00:10:40,641 கவலைப்படாதீர்கள். 90 00:10:41,225 --> 00:10:42,226 கவலைப்பட வேண்டாமா? 91 00:10:43,310 --> 00:10:45,521 இனிமேல் என்னை நானே கஷ்டப்படுத்திக்கொள்ள மாட்டேன். 92 00:10:46,522 --> 00:10:48,190 அவர்களுடைய விதிமுறைகளை நான் பின்பற்றுவதில்லை. 93 00:10:49,483 --> 00:10:51,109 நான் இப்பொழுது தீர்மானிக்க வேண்டும். 94 00:10:53,904 --> 00:10:55,739 அது நன்றாக இருக்கும். 95 00:10:57,241 --> 00:10:58,534 ஆமாம். 96 00:11:01,203 --> 00:11:02,538 எவ்வளவு அழகாக இருக்கிறாய் என பார். 97 00:11:03,705 --> 00:11:07,042 என் பெண்ணோடு ஒரு புகைப்படம் எடுக்க விரும்புகிறேன். ஆம். 98 00:11:09,670 --> 00:11:10,671 இதோ. 99 00:11:22,975 --> 00:11:24,017 நான் பார்க்கிறேன். 100 00:11:45,831 --> 00:11:48,083 இது ஃபிராங்க் பியர்ஸ். தகவலை பதிவு செய்யவும். 101 00:11:48,834 --> 00:11:52,296 ஹாய், அப்பா. இதை கேட்டவுடன் என்னை அழையுங்கள். 102 00:11:52,379 --> 00:11:53,547 நன்றி. 103 00:11:55,215 --> 00:11:56,216 அடச்சே. 104 00:12:00,470 --> 00:12:01,763 இது ஃபிராங்க் பியர்ஸ். 105 00:12:10,522 --> 00:12:12,733 உடனே கூப்பிடு உன்னோடு ஒன்று பேச வேண்டும் 106 00:12:12,816 --> 00:12:15,485 உங்க நண்பர், அந்த மனநல மருத்துவருடைய பெயர் என்ன? 107 00:12:38,217 --> 00:12:40,511 டொரோதி, இப்போது அதிகாலை 2:00மணி ஆகிறது. 108 00:12:40,594 --> 00:12:42,346 மன்னித்துவிடுங்கள், அப்பா. 109 00:12:42,429 --> 00:12:44,556 இரவு முழுவதும் உங்களை தொடர்புகொள்ள முயன்றேன். 110 00:12:48,435 --> 00:12:49,645 இணைப்பில் இருக்கிறாயா? 111 00:12:52,189 --> 00:12:54,191 மன்னிக்கவும், அப்பா. நான் மீண்டும் அழைக்கிறேன். 112 00:13:09,581 --> 00:13:11,416 நீங்கள் டேல் மெக்கென்சியுடன் இன்னும் தொடர்பில் இருக்கிறீர்களா? 113 00:13:12,292 --> 00:13:13,293 என்ன? 114 00:13:13,836 --> 00:13:15,546 உங்களின் டாக்டர் நண்பர். 115 00:13:15,629 --> 00:13:19,633 ஆமாம். நானும் டேலும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பிக்கிள்பால் விளையாடுவோம். 116 00:13:19,716 --> 00:13:23,011 சிறப்பு. அவரை என் வீட்டிற்கு நீங்கள் வரச் சொல்ல வேண்டும். 117 00:13:24,388 --> 00:13:25,973 உனக்கு உதவும் என்றால், 118 00:13:26,056 --> 00:13:28,308 நான் ஏதாவது ஒரு ஏற்பாடு செய்வதில் சந்தோஷ... 119 00:13:28,392 --> 00:13:32,896 அவர் லியனை நேர்காணல் செய்து, காப்பகத்தில் சேர்க்க மனுவில் கையெழுத்து போடலாம். 120 00:13:32,980 --> 00:13:34,857 உண்மையாகத்தான் சொல்கிறாயா? 121 00:13:34,940 --> 00:13:36,984 ஆமாம். நான் நன்றாக யோசித்துவிட்டேன். 122 00:13:37,484 --> 00:13:40,153 அவள் தனக்கும், மற்றவர்களுக்கும், ஆபத்து ஏற்படுத்தக் கூடியவள். 123 00:13:40,237 --> 00:13:41,613 மருத்துவரீதியாக அவளுக்குப் பைத்தியம். 124 00:13:41,697 --> 00:13:44,241 நிஜத்தையும், கற்பனையையும், அவளால் பிரித்துப் பார்க்க முடியவில்லை. 125 00:13:44,324 --> 00:13:46,869 பிறரை ஏமாற்றுபவள். தன்னையே காயப்படுத்திக் கொள்கிறாள். 126 00:13:46,952 --> 00:13:48,203 இது, ஏதாவது ரசாயன குறைபாடா 127 00:13:48,287 --> 00:13:51,039 அல்லது அந்த சமூகத்தின் மூலம் நடக்கும் மூளை சலவையா என்று தெரியவில்லை, 128 00:13:51,123 --> 00:13:53,458 எதுவாக இருந்தாலும், அவள் வெளியேற வேண்டும். 129 00:13:54,418 --> 00:13:56,086 பிறகு எல்லாம் சரியாகிவிடும். 130 00:13:56,670 --> 00:13:58,255 நான் உங்களுக்கு புகைப்படங்களை அனுப்புகிறேன். 131 00:13:58,338 --> 00:14:03,135 நீங்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தால், நான் லியனை பேச வைக்கிறேன். 132 00:14:07,639 --> 00:14:10,225 காலையில் டேலை அழைக்கிறேன். 133 00:14:10,309 --> 00:14:11,685 நல்லது. விரைவாக பேசுங்கள். 134 00:14:14,146 --> 00:14:21,111 கேமரா 4 பின்பக்க முற்றம் 135 00:14:24,114 --> 00:14:27,993 சரி. இதோ. 136 00:14:28,076 --> 00:14:29,620 சரி. 137 00:14:29,703 --> 00:14:31,705 இது நன்றாக இருக்கிறதா? 138 00:14:38,086 --> 00:14:43,050 சில வருடங்களுக்கு முன்பு, நானும் ஷானும் தம்பதிகள் சிகிச்சைக்கு போனோம். 139 00:14:43,926 --> 00:14:45,761 அது எங்கள் வாழ்க்கையை மாற்றியது. 140 00:14:46,553 --> 00:14:47,596 எப்படி? 141 00:14:48,472 --> 00:14:52,476 அப்போது, நான் தான் சம்பாதித்தேன் என்பதால் அது எங்களிடையே 142 00:14:52,559 --> 00:14:54,186 நிறைய பிரச்சினைகளை ஏற்பட்டது. 143 00:14:54,937 --> 00:14:57,689 மேலும், நான் அப்போது, எல்லோரையும் சந்தோஷப்படுத்த விரும்பினேன், 144 00:14:57,773 --> 00:14:59,358 எல்லாவற்றையும் சரியாக செய்ய விரும்பினேன். 145 00:15:01,151 --> 00:15:02,528 இப்போதும் அப்படி தான் இருக்கிறீர்கள். 146 00:15:03,487 --> 00:15:05,239 வாழ்க்கை முழுவதும் அப்படித்தான் இருப்பேன். 147 00:15:07,449 --> 00:15:11,537 நாம் குழந்தை பருவத்திலில் அனுபவித்த பிரச்சினையிலிருந்து மீள்வதற்கு நிறைய காலம் ஆகும். 148 00:15:12,371 --> 00:15:14,623 அதைப்பற்றி யாரிடமாவது பேசியிருக்கிறாயா? 149 00:15:16,375 --> 00:15:18,252 மாற வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை. 150 00:15:19,419 --> 00:15:22,840 சரி, நீயும் நானும் இதை சேர்ந்து செய்யலாமா? 151 00:15:24,591 --> 00:15:26,885 உன்னையும், என்னையும் பற்றி, நான் நிறைய யோசிக்கிறேன். 152 00:15:29,263 --> 00:15:33,767 உன்னை புரிந்துகொண்டு நெருக்கமாக இருக்க விரும்புகிறேன். 153 00:15:35,561 --> 00:15:36,770 நாம் சேர்ந்து செய்ய முடியுமா? 154 00:15:42,025 --> 00:15:43,026 கண்டிப்பாக முடியும். 155 00:15:48,073 --> 00:15:49,408 சரி. 156 00:16:37,539 --> 00:16:40,834 அமைதியாக இரு, செல்லமே ஒரு வார்த்தைக் கூட பேசாதே 157 00:16:42,002 --> 00:16:45,756 அம்மா உனக்கு பாடும் பறவை வாங்கித் தருகிறேன் 158 00:16:47,382 --> 00:16:51,428 அந்தப் பாடும் பறவை பாடாவிட்டால் 159 00:16:52,346 --> 00:16:55,224 அம்மா உனக்கு வைர மோதிரம் வாங்கித் தருகிறேன் 160 00:16:57,100 --> 00:17:00,938 அந்த வைர மோதிரம் பித்தளையாக மாறி விட்டால் 161 00:17:02,147 --> 00:17:05,567 அம்மா உனக்கு பூதக்கண்ணாடி வாங்கித் தருகிறேன் 162 00:17:06,944 --> 00:17:11,156 அந்த பூதக்கண்ணாடி உடைந்து விட்டால் 163 00:17:12,532 --> 00:17:16,494 அம்மா உனக்கு ஒரு ஆடு வாங்கித் தருகிறேன் 164 00:17:32,261 --> 00:17:33,262 ஹலோ, டொரோதி. 165 00:17:33,345 --> 00:17:37,057 டாக்டர் மெக்கென்சி இங்கு வந்ததற்கு நன்றி. உள்ளே வாருங்கள். 166 00:17:40,811 --> 00:17:41,979 இந்த இடம் பரவாயில்லையா? 167 00:17:43,021 --> 00:17:45,148 ரொம்பவும் அந்தரங்கமாக இருக்கும் என்று நினைத்தேன். 168 00:17:45,232 --> 00:17:46,567 இதுவே போதுமானது. 169 00:17:57,369 --> 00:17:58,871 இதோ வந்துவிட்டாள். 170 00:17:59,454 --> 00:18:02,332 லியன், இவர் டாக்டர் மெக்கென்சி. 171 00:18:02,416 --> 00:18:03,750 உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி, லியன். 172 00:18:04,585 --> 00:18:05,586 ஹலோ. 173 00:18:06,253 --> 00:18:11,633 நம்மோடு தனித்தனியாக பேச டாக்டர் மெக்கென்சி விரும்புகிறார். 174 00:18:11,717 --> 00:18:12,843 நான் சொல்வது சரிதானே? 175 00:18:12,926 --> 00:18:14,845 இதை சேர்ந்து செய்யப் போகிறோம் என்று நினைத்தேன். 176 00:18:16,305 --> 00:18:19,099 இப்படி செய்வதன் மூலம், நீ சுதந்திரமாக பேசலாமே, லியன். 177 00:18:19,183 --> 00:18:21,560 உன்னைப் பற்றி, என்னைப் பற்றி. 178 00:18:22,144 --> 00:18:24,188 எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. 179 00:18:24,771 --> 00:18:25,772 சரியா? 180 00:18:25,856 --> 00:18:27,065 சரியாகச் சொன்னாய், டொரோதி. 181 00:18:33,030 --> 00:18:34,948 உட்காருகிறாயா, லியன்? 182 00:18:48,003 --> 00:18:49,838 நீ இங்கே என்ன செய்கிறாய்? 183 00:18:49,922 --> 00:18:51,131 நீ இங்கே என்ன செய்கின்றாய்? 184 00:18:51,632 --> 00:18:52,841 சுத்தம் செய்கிறேன். 185 00:18:54,551 --> 00:18:55,969 வந்து... 186 00:18:56,053 --> 00:18:57,721 ஷான் இருக்கிறானா? 187 00:18:59,097 --> 00:19:00,182 வேலைக்கு போய் இருக்கிறார். 188 00:19:02,100 --> 00:19:03,936 நீ லியனை பார்க்கத் தானே வந்தாய்? 189 00:19:06,772 --> 00:19:09,149 உன்னிடம் அடிப்படை விசுவாசத்தை தான் நான் எதிர்பார்த்தேன். 190 00:19:09,233 --> 00:19:11,693 என் வாழ்க்கையை நாசமாக்கும் ஒரு பெண்ணோடு உறவு கொள்ளாமல் இருப்பது. 191 00:19:11,777 --> 00:19:14,404 அதுவும் என் வீட்டிலேயே, என்னுடைய முகப்பு அறையிலேயே! 192 00:19:17,241 --> 00:19:18,617 எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை. 193 00:19:19,993 --> 00:19:21,662 அவள் யாரென்று உனக்குப் புரியவில்லை. 194 00:19:21,745 --> 00:19:23,872 உங்கள் யாரையும்விட அதிகமாக நான் அவளை புரிந்து வைத்திருக்கிறேன். 195 00:19:25,290 --> 00:19:28,001 லியனுடன் நீ சமாதானமாகப் போவது தான் 196 00:19:28,085 --> 00:19:29,503 எல்லோருக்கும் நல்லது என்று நினைக்கிறேன். 197 00:19:30,462 --> 00:19:33,090 இருவரும் ஏன் அவளைப் பார்த்து பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு என்ன பிரச்சினை? 198 00:19:33,173 --> 00:19:34,466 நான் அவளிடம் பேசுகிறேன். 199 00:19:34,550 --> 00:19:35,759 இல்லை, முடியாது 200 00:19:35,843 --> 00:19:38,262 ஏனென்றால் அவள் அலுவலகத்தில் டேல் மெக்கென்சியோடு பேசிக்கொண்டிருக்கிறாள். 201 00:19:38,762 --> 00:19:40,430 என்ன? அப்பாவின் நண்பரோடா? 202 00:19:40,514 --> 00:19:42,307 ஆமாம், அவர் பரிசோதனை செய்கிறார். 203 00:19:42,391 --> 00:19:45,143 அவன் மோசமானவன். நீ எதற்காக அப்பாவிடம் உதவி கேட்டாய்? 204 00:19:45,227 --> 00:19:46,979 ஏனென்றால் அவர் என் நானியோடு உறவு கொள்ளவில்லையே! 205 00:19:47,062 --> 00:19:49,314 இல்லை தான், ஆனால் சற்று பொறு. 206 00:19:49,398 --> 00:19:52,067 நான் மீண்டும் உன்னை நம்ப வேண்டுமென்றால், நீ இப்போது இங்கிருந்து வெளியேறி 207 00:19:52,150 --> 00:19:53,777 இதை என் வழியில் செய்யவிடு! 208 00:19:56,738 --> 00:19:57,865 சரி. 209 00:19:57,948 --> 00:20:00,701 உன் வழியிலேயே செய், ஆனால் இது பெரிய தவறு. 210 00:20:04,413 --> 00:20:06,665 ஹே, இது ஷான். தகவலை பதிவு செய்யவும். 211 00:20:06,748 --> 00:20:11,044 ஷான், நீ இப்பொழுதே இங்கு வர வேண்டும். பெரிய பிரச்சினை. எனக்கு ஃபோன் பண்ணு. 212 00:20:22,890 --> 00:20:24,600 நீங்கள் முடித்திருப்பீர்கள் என்று நினைத்தேன். 213 00:20:26,560 --> 00:20:27,811 அது எப்படி இருந்தது? 214 00:20:27,895 --> 00:20:28,896 நன்றாக இருந்தது. 215 00:20:29,521 --> 00:20:30,856 இப்போது உங்களுடைய முறை. 216 00:20:34,943 --> 00:20:36,945 அவளுடனான சந்திப்பை எப்படி சமாளித்தீர்கள் என தெரியவில்லை, 217 00:20:37,029 --> 00:20:41,700 அவள் தன்னைத் தற்காத்துக் கொண்ட மாதிரியோ அல்லது பயப்பட்ட மாதிரியோ தெரியவில்லை. 218 00:20:42,576 --> 00:20:44,661 எனவே நீங்கள் ரொம்பவே நன்றாகவே செய்கிறீர்கள். 219 00:20:45,913 --> 00:20:47,789 அவனை உட்கார வைக்கிறாயா? 220 00:20:47,873 --> 00:20:49,791 வேண்டாமே. அவன் இப்படியே இருக்கட்டும். 221 00:20:50,918 --> 00:20:52,961 உங்களுக்கு வேண்டிய தகவல்கள் கிடைத்தன தானே? 222 00:20:53,045 --> 00:20:56,798 கிட்டத்தட்ட. உன் அப்பாவிடம் இருந்து எல்லா தகவல்களும் கிடைத்தன. 223 00:20:57,591 --> 00:21:00,886 உனக்கு ஆட்சேபணை இல்லை என்றால், இன்னும் கொஞ்சம் அதிகமான விஷயங்கள் தேவை. 224 00:21:03,222 --> 00:21:04,515 வந்து, 225 00:21:05,390 --> 00:21:08,727 அவள் என்னிடம் சொன்ன சில விஷயங்களை உங்களிடம் சொன்னாளா என்று தெரியவில்லை. 226 00:21:09,937 --> 00:21:11,772 அந்தப் பிரமைகள். 227 00:21:13,565 --> 00:21:17,194 அவள் அடுத்ததாக என்ன செய்வாளோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது. 228 00:21:18,362 --> 00:21:20,906 ஷானுக்கும், ஜூலியனுக்கும், இது புரியவில்லை. 229 00:21:20,989 --> 00:21:23,450 அவளுடைய பிரமை நோய்க்கு அவர்கள் தொடர்ந்து முக்கியத்துவம் தருகிறார்கள். 230 00:21:23,534 --> 00:21:25,953 அவளும் அவர்களை முழுவதுமாகத் தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறாள். 231 00:21:26,036 --> 00:21:28,830 நம் தோலுக்குள்ளே நுழைந்து குடையும், புழு போன்றவள் அவள், 232 00:21:28,914 --> 00:21:32,167 இதயம் வரை ஊடுருவி, எல்லோரையும் தனக்கேற்ற மாதிரி மாற்றிவிடுவாள். 233 00:21:37,297 --> 00:21:38,549 நன்றி. 234 00:21:39,383 --> 00:21:40,467 நன்றி. 235 00:21:40,551 --> 00:21:43,595 கடைசியில் என் பேச்சைக் கேட்கும் ஒருத்தர் என்னோடு இருப்பது எனக்குச் சந்தோஷம் தான். 236 00:21:50,352 --> 00:21:52,896 மன்னித்துவிடு. என்ன நினைத்து அவனை உள்ளே கூப்பிட்டாள் என்று தெரியவில்லை. 237 00:21:52,980 --> 00:21:54,815 ஹே, பரவாயில்லை விடு. 238 00:21:55,941 --> 00:21:57,442 டொரோதி உதவி செய்யத் தான் முயன்றாள். 239 00:21:58,735 --> 00:22:02,489 உதவி செய்வது என்பது டொரோதியின் அகராதிப்படி... 240 00:22:06,577 --> 00:22:07,744 இது மைலோவுடையது. 241 00:22:08,787 --> 00:22:09,997 இது முன்பக்கம் இருந்தது. 242 00:22:11,999 --> 00:22:13,333 அவனை எங்கேயும் காணவில்லை. 243 00:22:19,131 --> 00:22:20,257 நன்றி. 244 00:22:22,968 --> 00:22:25,971 போகும் வழியில் இங்கு வந்ததற்கு நன்றி. 245 00:22:35,314 --> 00:22:37,399 உங்களுடைய நேரத்தை அதிகம் எடுத்துக்கொள்ள மாட்டேன். 246 00:22:37,482 --> 00:22:38,692 பரவாயில்லை. 247 00:22:38,775 --> 00:22:39,902 சரி. 248 00:22:48,660 --> 00:22:49,661 அப்பா? 249 00:22:51,079 --> 00:22:52,789 போகும் வழியில் இங்கு வருவீர்கள் எனத் தெரியாது. 250 00:22:54,583 --> 00:22:58,712 சரி, நாம் கொஞ்ச நேரம் பேசலாமா? 251 00:23:01,006 --> 00:23:02,674 இப்போதா? ஆமாம். 252 00:23:05,010 --> 00:23:08,597 சமையலறையில் கொஞ்சம் காபி இருக்கு. நான் போய் லியனை கூட்டி வருகிறேன். 253 00:23:08,680 --> 00:23:12,476 டொரோதி, இந்த வீட்டில் நிலவும் பதட்டமான சூழ்நிலையைப் பற்றிய 254 00:23:12,559 --> 00:23:14,770 தன் கவலையை உன் அப்பா என்னிடம் வெளிப்படுத்தினார். 255 00:23:14,853 --> 00:23:15,854 சரி. 256 00:23:15,938 --> 00:23:18,524 அவருடைய முக்கியமான கவலையே, தன்பேரனைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வது தான். 257 00:23:18,607 --> 00:23:21,360 ஆம், கண்டிப்பாக. இது எல்லாம் ஜெரிகோவிற்கு எது நல்லது என்பதைப் பற்றியது தான். 258 00:23:21,443 --> 00:23:23,111 -லியன்? -லியனை பரிசோதிக்க, 259 00:23:23,195 --> 00:23:25,030 நான் இங்கு அனுப்பப்படவில்லை. 260 00:23:29,034 --> 00:23:30,035 என்ன சொல்கிறீர்கள்? 261 00:23:31,203 --> 00:23:34,790 உன்னைப் பற்றி தான் எங்களுக்குக் கவலை. உன் நலத்தைப் பற்றி. 262 00:23:36,416 --> 00:23:37,709 அப்பா? 263 00:23:38,210 --> 00:23:39,211 ஹே. 264 00:23:41,129 --> 00:23:43,799 -வீட்டில் என்ன செய்கிறீர்கள்? -ஜூலியன் அழைத்திருந்தான். அவன் சில... 265 00:23:43,882 --> 00:23:45,425 என்ன நடக்கிறது என்று யாராவது சொல்கிறீர்களா? 266 00:23:45,509 --> 00:23:47,511 ஃபிராங்கும் நானும், டொரோதியுடன் ஒரு சொந்த விஷயம் பேசுகிறோம். 267 00:23:47,594 --> 00:23:49,638 -எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடு. -என்ன நடக்கிறது, டொரோதி? 268 00:23:49,721 --> 00:23:51,557 எனக்கு ஒன்றும் தெரியாது. 269 00:23:51,640 --> 00:23:53,100 லியன்? 270 00:23:54,017 --> 00:23:56,728 நீ சரியாகத் தூங்குவதில்லை, டோட்டி. 271 00:23:56,812 --> 00:23:58,939 யாரிடமும் குழந்தையைத் தர மறுக்கிறாய். 272 00:23:59,022 --> 00:24:02,192 உன்னுடைய இந்த மனநிலை, உனக்கோ, அல்லது ஜெரிகோவுக்கோ நல்லது அல்ல. 273 00:24:02,276 --> 00:24:04,027 -கொஞ்சம் பொறுங்கள். -அவன் சொல்லி முடிக்கட்டும், ஷான். 274 00:24:04,111 --> 00:24:07,239 கூட, உன்னோடு இருக்கும் பெண் மீது சித்தப்பிரமை பிடித்தது போல 275 00:24:07,322 --> 00:24:10,409 -வெறித்தனமான சந்தேகப்படுகிறாய். -சித்தப்பிரமை பிடித்தது போன்ற சந்தேகமா? 276 00:24:11,034 --> 00:24:13,036 அவள் தன்னையே வதைத்துக்கொள்கிறாள். 277 00:24:13,120 --> 00:24:14,872 அவள் என் குழந்தையை எடுத்துச் சென்றாள்! 278 00:24:14,955 --> 00:24:17,291 நீங்கள் இவரிடம் சொல்லுங்கள்! 279 00:24:17,374 --> 00:24:19,668 அவளுக்கு மனநிலை சரியில்லை என்ற உண்மையை இவரிடம் சொல்லுங்கள். 280 00:24:19,751 --> 00:24:22,921 உன் மனசாட்சியைக் கேள், கண்ணே. நீயே என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறாய். 281 00:24:23,005 --> 00:24:24,673 ஜூலியன் சொன்னது சரிதான். 282 00:24:24,756 --> 00:24:25,841 மோசக்காரன். 283 00:24:25,924 --> 00:24:30,053 நீங்கள் ஒரு தடவையாவது சரியான விஷயத்தை செய்வீர்கள் என்று நம்பினேன். 284 00:24:30,137 --> 00:24:34,016 நீ கொஞ்சம் ஓய்வெடுக்கவாவது, எங்கேயாவது போனால் தேவலை. 285 00:24:34,099 --> 00:24:35,726 -அப்பா! கடவுளே! -இதற்கு என்ன அர்த்தம்? 286 00:24:35,809 --> 00:24:38,187 நான் விளக்குகிறேன், ஒரு குழந்தை ஆபத்தில் இருக்கும் போது, 287 00:24:38,270 --> 00:24:40,314 அந்தச் சூழ்நிலையை சட்டபூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். 288 00:24:40,397 --> 00:24:42,816 -நீ ஒரு ஊறுகாய்த் தலையன்! -உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி, ஜூலியன். 289 00:24:42,900 --> 00:24:46,069 இதில் சட்டபூர்வ நடவடிக்கை எல்லாம் வேண்டாம் என்று டேலிடம் கேட்டிருக்கிறேன். 290 00:24:46,153 --> 00:24:47,696 ஆனால் சிகிச்சையை நீ ஏற்றுக் கொள்ளாவிட்டால்... 291 00:24:47,779 --> 00:24:49,823 -அவளைப் பயமுறுத்தாதீர்கள். -டொரோதி உதவ மறுத்தால், 292 00:24:49,907 --> 00:24:53,035 -எனக்கு வேறு வழி இன்றி, குழந்தை பாதுகாப்பு... -இது அவளுடைய நல்லதுக்குத் தான், ஷான். 293 00:24:53,118 --> 00:24:54,578 இதற்கு முன் என்ன நடந்தது என நமக்கே தெரியும். 294 00:24:54,661 --> 00:24:57,039 நீ அதை உன் வழியில் சமாளித்தாய், இப்பொழுது நான் என் பாணியில் சமாளிக்கிறேன். 295 00:24:57,122 --> 00:24:59,249 நிறுத்துங்கள். வாயை மூடுங்கள்! டொரோதி நிறைய மனக்கஷ்டத்தில் இருக்கிறாள். 296 00:24:59,333 --> 00:25:02,544 இது தவறு. இது தவறான வழி, ஃபிராங்க்! 297 00:25:05,130 --> 00:25:06,423 ஷான் சொல்வது தான் சரி. 298 00:25:08,509 --> 00:25:12,387 வீட்டில் இருந்து கொண்டே டொரோதி குணமாக நாம் எல்லோரும் உதவி செய்வோம். 299 00:25:14,181 --> 00:25:18,727 ஜெரிகோவையும், அவளையும் பிரிப்பது அவர்கள் இருவருக்குமே கொடுமையாக இருக்கும். 300 00:25:21,230 --> 00:25:23,857 டொரோதி ஒரு அருமையான அம்மா. 301 00:25:25,067 --> 00:25:27,903 அவள் தான் இந்தக் குடும்பத்தை ஒன்றாக இணைப்பவள். 302 00:25:28,987 --> 00:25:30,822 அவள் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறாள். 303 00:25:32,199 --> 00:25:34,451 அப்புறம், ஜெரிகோவுக்கு எந்த ஆபத்தும் இல்லை. 304 00:25:35,160 --> 00:25:38,413 அவனை நான் வைத்திருப்பதில் டொரோதிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. சரிதானே? 305 00:25:39,498 --> 00:25:42,084 கொல்லைப் பக்கத்தில் நேற்று நாமெல்லோரும் விளையாடிக் கொண்டிருந்தது ஞாபகமிருக்கா? 306 00:25:42,709 --> 00:25:43,877 நாம் அவர்களுக்கு காட்ட வேண்டுமா? 307 00:25:45,170 --> 00:25:46,171 இதோ. 308 00:25:49,591 --> 00:25:50,843 நன்றி, லியன். 309 00:25:53,345 --> 00:25:54,596 ஹாய். 310 00:25:54,680 --> 00:25:56,056 தயாரா? 311 00:26:04,273 --> 00:26:05,274 பார்த்தீர்களா? 312 00:26:06,441 --> 00:26:11,488 நான் முழு நேரமும் இங்கே இருந்து உதவுகிறேன், அப்பா. தவறாக எதுவும் நடக்க நாங்கள் விடமாட்டோம். 313 00:26:11,572 --> 00:26:13,949 ஆம். நாங்கள் எல்லோரும் அவளுக்கு ஆதரவாக இருக்கிறோம். 314 00:26:14,032 --> 00:26:17,119 நீங்கள் எல்லோரும் உங்களுக்கான பொறுப்பைப் புரிந்துகொண்டால், 315 00:26:17,202 --> 00:26:19,538 டொரோதியை நன்றாக கவனித்து, அவள் கொஞ்சம் ஓய்வெடுக்க உதவினால் சரிதான். 316 00:26:19,621 --> 00:26:21,331 இப்படி முயற்சி செய்வது எனக்கு பரவாயில்லை தான். 317 00:26:23,208 --> 00:26:24,334 நன்றி. 318 00:26:25,085 --> 00:26:27,129 இருவரும் விஷயங்கள் மோசமாக எப்படி அனுமதித்தீர்கள் என தெரியவில்லை. 319 00:26:27,212 --> 00:26:29,131 -நாசமாய் போங்க, அப்பா. -சரி. 320 00:26:29,214 --> 00:26:32,009 அவளுக்கு ட்ராசோடோன் மருந்தை எழுதித் தருகிறேன். 321 00:26:33,677 --> 00:26:38,473 தாக்குப் பிடிக்க வைக்க என்னிடம் போதுமான அளவிற்கு மாத்திரை இருக்கிறது. 322 00:26:38,557 --> 00:26:42,060 நீ இப்போதே அவற்றை சாப்பிடலாமே? அது நீ தூங்க உதவும். 323 00:26:55,574 --> 00:26:56,575 சமர்த்து. 324 00:26:56,658 --> 00:26:58,202 வா. நாம் போய், உட்காரலாம். 325 00:27:05,542 --> 00:27:09,171 அமைதியாக இரு, செல்லமே ஒரு வார்த்தைக் கூட பேசாதே 326 00:27:09,713 --> 00:27:13,342 அம்மா உனக்கு பாடும் பறவை வாங்கித் தருகிறேன் 327 00:27:14,343 --> 00:27:18,680 அந்தப் பாடும் பறவை பாடாவிட்டால் 328 00:27:19,306 --> 00:27:23,519 அம்மா உனக்கு வைர மோதிரம் வாங்கித் தருகிறேன் 329 00:27:24,770 --> 00:27:28,899 அந்த வைர மோதிரம் பித்தளையாக மாறி விட்டால் 330 00:27:29,608 --> 00:27:33,362 அம்மா உனக்கு பூதக்கண்ணாடி வாங்கித் தருகிறேன் 331 00:27:34,321 --> 00:27:38,492 அந்த பூதக்கண்ணாடி உடைந்து விட்டால் 332 00:27:39,243 --> 00:27:42,913 அம்மா உனக்கு ஒரு ஆடு வாங்கித் தருகிறேன் 333 00:27:43,789 --> 00:27:47,626 அந்த ஆடு இழுக்காவிட்டால் 334 00:27:48,460 --> 00:27:52,506 அம்மா உனக்கு எருதும், வண்டியும் வாங்கித் தருகிறேன் 335 00:28:21,118 --> 00:28:23,120 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்