1 00:00:51,260 --> 00:00:52,386 கோர்மெட் காண்ட்லெட் 2 00:00:52,928 --> 00:00:55,055 என் வாழ்க்கை சுமுகமாக இருந்ததேயில்லை. 3 00:00:57,266 --> 00:01:00,936 பெற்றோர் என்னைப் பற்றி கவலைப்படவில்லை, 17 வயதில் வீடில்லாமல் தெருவிற்கு வந்துவிட்டேன். 4 00:01:04,480 --> 00:01:05,941 சமையல் தான் என்னைக் காப்பாற்றியது. 5 00:01:08,819 --> 00:01:13,031 என்னை எப்படி நடத்த வேண்டும், மற்றவர்களை எப்படி நடத்த வேண்டும் என்று கற்றுத் தந்தது. 6 00:01:16,577 --> 00:01:19,496 நாம் எங்கே இருந்தோம் என்பது பொருட்டல்ல என்று கற்றுக்கொண்டேன். 7 00:01:21,707 --> 00:01:24,126 இன்று நாம் யாருக்கு உணவளிக்கிறோம் என்பதுதான் முக்கியம். 8 00:01:28,130 --> 00:01:32,551 உணவு நம்மைத் தூக்கி விடவும் முடியும், நம் இதயத்தை உடைக்கவும் முடியும். 9 00:01:36,138 --> 00:01:38,307 உங்களால் அந்த உஷ்ணத்தைத் தாங்க முடியவில்லை என்றால்... 10 00:01:39,975 --> 00:01:42,394 என் சமையலறையை விட்டு போய் விடுங்கள். 11 00:01:44,813 --> 00:01:46,190 கோர்மெட் காண்ட்லெட் ஃபிலடெல்ஃபியா 12 00:01:50,485 --> 00:01:52,196 உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். 13 00:01:52,279 --> 00:01:53,947 அவர் தான் உன்னுடைய அப்பா. 14 00:01:54,031 --> 00:01:55,282 இது அட்டகாசமாக இருக்கு, ஷான். 15 00:01:56,158 --> 00:01:57,826 இது உங்கள் வாழ்க்கையையே மாற்றப் போகிறது. 16 00:01:57,910 --> 00:01:58,911 தெரியவில்லை. 17 00:01:58,994 --> 00:02:01,205 ஒரு நிஜ பிரபல சமையல்காரர் போட்டிருக்கிற கவர்ச்சியான டாட்டூக்களை 18 00:02:01,288 --> 00:02:02,706 அவன் போடவில்லையே. 19 00:02:02,789 --> 00:02:07,878 இல்லை. கோர்மெட் காண்ட்லெட்: ஃபிலடெல்ஃபியா தான் அவர்கள் வரலாற்றில், வெற்றிகரமான சீசனாக இருக்கும். 20 00:02:08,836 --> 00:02:11,173 எல்லோருக்கும் ஷான் டர்னர் என்ற பெயர் தெரியப் போகிறது. 21 00:02:11,256 --> 00:02:15,135 என்ன நடக்கிறதோ, அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை, நீங்கள் அற்புதமாகச் செய்தீர்கள், 22 00:02:15,886 --> 00:02:17,888 நாங்கள் எல்லோரும் உங்களுக்காக உற்சாகத்துடன் காத்திருக்கிறோம். 23 00:02:19,473 --> 00:02:21,558 -அப்படியா, டொரோதி? -என்ன? 24 00:02:23,018 --> 00:02:24,019 நிச்சயமாக. 25 00:02:25,395 --> 00:02:27,231 ஜெரிகோவை வெளியே கூட்டிச் செல்ல வேண்டும். 26 00:02:29,274 --> 00:02:30,567 ஹே, தயாரா? 27 00:02:31,485 --> 00:02:34,821 அட. சரி, சரி. 28 00:02:35,489 --> 00:02:37,783 “பேர்ஃபுட் கான்ட்டஸா” படத்தை விட நீ மேல் என்று சொல்லாமல் இருந்தால் சரி. 29 00:02:37,866 --> 00:02:39,284 அவள் தேசத்தின் அடையாளம். 30 00:02:40,577 --> 00:02:42,955 ஆக, பத்மா லக்ஷ்மியை எப்பொழுது எனக்கு அறிமுகப்படுத்தப் போகிறாய்? 31 00:02:43,664 --> 00:02:45,082 எப்பவும் மாட்டேன். 32 00:02:46,208 --> 00:02:47,251 சரி, ஈனா கார்டன்? 33 00:02:47,876 --> 00:02:49,419 இது சமையல் சானல் இல்லை. 34 00:02:56,051 --> 00:02:59,972 ஆக? நீ கிளம்பி இங்கு வருவதற்கு ஒரு காரணம் இருக்கும் என்று நினைத்தேன் ஷான். 35 00:03:00,055 --> 00:03:02,683 நீ அந்த நானியோடு உறவு கொள்வதை நிறுத்த வேண்டும். 36 00:03:04,643 --> 00:03:07,646 எனக்கு மனது சரியில்லை, தயவுசெய்து அதை மறுக்க முயற்சிக்காதே. அதை நிறுத்திவிடு. 37 00:03:10,899 --> 00:03:12,109 நிறுத்திவிட்டேன், சரியா? 38 00:03:13,777 --> 00:03:15,654 எதற்காக, டோட்டி? 39 00:03:15,737 --> 00:03:16,947 வேலை விஷயங்களுக்காகவா? 40 00:03:17,865 --> 00:03:19,950 வாய்ப்புகள் இல்லாமல் நீ கஷ்டப்படுகிறாய். இதுவும் கடந்து போகும். 41 00:03:20,033 --> 00:03:22,411 யாரோ அவளைத் தாக்கினார்கள், ஜூலியன். 42 00:03:24,872 --> 00:03:25,873 அவளுக்கு ஒன்றுமில்லையே? 43 00:03:26,373 --> 00:03:28,208 யாருக்குத் தெரியும்? சரியாகி விட்டது என்று தான் சொல்கிறாள். 44 00:03:29,918 --> 00:03:31,587 எனக்கு அதைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. 45 00:03:33,797 --> 00:03:38,427 உண்மையில், ஷான் போன வருடம் “கோர்மெட் காண்ட்லெட்” நிகழ்ச்சியில் இருந்தது கூட எனக்கு ஞாபகம் இல்லை. 46 00:03:39,928 --> 00:03:41,763 என் மனதுக்கு என்னவோ ஆகிவிட்டது என்றே தோன்றுகிறது. 47 00:03:41,847 --> 00:03:43,849 ஆனால், நீ நிறைய மன அழுத்தத்தில் இருந்தாய். 48 00:03:44,600 --> 00:03:45,601 பரவாயில்லை. 49 00:03:46,977 --> 00:03:50,606 பிரசவத்திற்குப் பின் ஏற்பட்ட மன அழுத்தத்தில் சில விஷயங்களை மறந்துவிட்டேன். இதுதான் வாழ்க்கை போலும். 50 00:03:52,733 --> 00:03:56,945 லியனை விட்டுக் கொஞ்சம் தள்ளியே இரு. அவளை அப்படியே கையாள்வது கஷ்டம். 51 00:03:58,071 --> 00:03:59,781 அவளை எப்படி சமாளிப்பது என்று பார்க்க வேண்டும். 52 00:04:01,158 --> 00:04:03,368 இது மறுபடியும் நம் வாழ்க்கைக்குள் திரும்பி வரக்கூடாது. 53 00:04:12,252 --> 00:04:14,254 லியன், நான்... 54 00:04:15,714 --> 00:04:18,716 நீ நினைத்த போது வரலாம், போகலாம். 55 00:04:18,800 --> 00:04:21,053 ஆனால், எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? 56 00:04:22,095 --> 00:04:23,597 என்ன செய்யணும், டொரோதி? 57 00:04:25,849 --> 00:04:30,646 நீ நடந்து செல்லும் பொது, பூங்கா பக்கம் போகாதே. 58 00:04:32,856 --> 00:04:35,192 அங்கே, சில நாடோடிகள் வந்து முகாமிட்டுத் தங்கி இருக்கிறார்கள், 59 00:04:35,275 --> 00:04:41,573 அங்கே நடந்ததை யோசிக்கையில், இது தான் பாதுகாப்பு என்று நினைக்கிறேன். 60 00:04:47,079 --> 00:04:49,915 ஆபத்து இருந்தது, ஆனால் இப்போது அப்படி இல்லை. 61 00:04:52,584 --> 00:04:54,169 அவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. 62 00:04:55,921 --> 00:04:57,130 அன்பே. 63 00:04:57,756 --> 00:05:01,552 அங்கே இருக்கும் மக்கள், வேறு சமூகத்தினர், அவ்வளவு தான். 64 00:05:02,219 --> 00:05:04,054 இங்கே அது மாதிரி ஆபத்து எதுவும் தெரிகிறதா? 65 00:05:04,680 --> 00:05:06,098 வந்து, நாம் விஷயங்களை வேறு கோணத்தில் பார்க்கிறோம். 66 00:05:07,099 --> 00:05:13,021 பொதுவாக, நீ முடிவெடுக்கும் விதத்தைப் பற்றித் தான் நான் கவலைப்படுகிறேன். 67 00:05:14,940 --> 00:05:18,277 அதனால் தான் ஒரு மகளிர் மருத்துவரிடம் அப்பாயின்மென்ட் வாங்கி வந்திருக்கிறேன். 68 00:05:18,861 --> 00:05:19,945 என் சகோதரனுடன் 69 00:05:20,028 --> 00:05:22,447 நீ உறவு வைத்துக் கொண்டாய் என்ற விஷயம் என் காதுக்கு எட்டியது. 70 00:05:26,159 --> 00:05:28,120 என் விஷயங்களில் எல்லாம் அலசுகிறீர்களா, டொரோதி? 71 00:05:28,203 --> 00:05:29,204 இல்லை. 72 00:05:30,080 --> 00:05:31,081 நிச்சயமாக இல்லை. 73 00:05:32,833 --> 00:05:35,085 அது என்னை வருத்தப்படுத்தும். 74 00:05:35,961 --> 00:05:38,922 நான் லெஸ்ஸர் செயின்ட்ஸில் இருந்த போது எங்களுக்கு அந்தரங்க விஷயங்கள் அனுமதிக்கப்படவில்லை. 75 00:05:39,006 --> 00:05:41,091 உன் அந்தரங்கத்திற்கு உனக்கு உரிமை உண்டு. 76 00:05:42,593 --> 00:05:45,512 இந்த வீட்டில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும், 77 00:05:45,596 --> 00:05:49,266 அதனால் தான் எல்லாவற்றிலும் நாம் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும். 78 00:05:49,349 --> 00:05:51,560 இந்த உரையாடலுக்கு நன்றி, டொரோதி. 79 00:05:52,352 --> 00:05:54,438 என்னை நிறைய யோசிக்க வைத்துவிட்டது. 80 00:05:55,355 --> 00:05:59,318 ஹாய். சரி, இதோ. 81 00:07:59,229 --> 00:08:03,358 சரி. கொஞ்சம் அசௌகரியம் தான், ஆனால் இது பெரும்பாலும் பாதிப்பில்லாதது. 82 00:08:03,442 --> 00:08:05,694 கேலி செய்வது இளைஞர்களின் வாழ்க்கையில் 83 00:08:05,777 --> 00:08:08,405 சாதாரண விஷயம் தான். 84 00:08:09,489 --> 00:08:13,911 சொல்வதற்கு சுலபம். நீங்கள் கேலி செய்யப் படவில்லையே. 85 00:08:15,454 --> 00:08:17,581 இது அப்படி அல்ல. நான்... 86 00:08:17,664 --> 00:08:21,877 அவளுடைய பிரச்சினைகள் எல்லாம் நம்மால் சமாளிக்க முடியாது என்பது தான் என் கவலை. 87 00:08:21,960 --> 00:08:25,881 நான் குறை சொல்லவில்லை, ஆனால் அவள் பொறுப்பில்லாதவள். 88 00:08:25,964 --> 00:08:28,717 அவளுக்கு வீடற்ற சிறுவர்கள் மேல் ஈர்ப்பு இருக்கிறது. 89 00:08:28,800 --> 00:08:29,801 அப்புறம்? 90 00:08:30,928 --> 00:08:32,513 “அப்புறமா”? 91 00:08:32,596 --> 00:08:37,518 வெறிபிடித்தவர்கள் நம் வீடு வரை அவளைத் துரத்தினர். மனச் சோர்வடைந்தவர்களுக்கு அவள் ஒரு காந்தம் மாதிரி. 92 00:08:37,601 --> 00:08:39,811 பைத்தியங்களிடம் என் மகன் மாட்டக் கூடாது! 93 00:08:39,895 --> 00:08:43,065 ஜெரிகோ பத்திரமாகத் தான் இருக்கிறான், டொரோதி. நீ மன அழுத்தத்தில் இருக்கிறாய். 94 00:08:43,148 --> 00:08:44,608 அனுபவமில்லாத ஆட்கள் மாதிரி நீ இங்கேயே உட்கார்ந்து கொண்டு 95 00:08:44,691 --> 00:08:47,903 ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என்று காத்திருக்கக் கூடாது. 96 00:08:49,238 --> 00:08:51,073 இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? 97 00:08:51,156 --> 00:08:56,495 இன்றைய இரவு ஒரு வரம். போன் அழைப்பு, ஆயத்தமாவது, கோர்மெட் காண்ட்லெட், எதுவும் கிடையாது. 98 00:08:56,578 --> 00:09:01,208 நான்... சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் சந்தோஷமாகக் கொண்டாடப் போகிறேன். 99 00:09:03,252 --> 00:09:05,128 மன்னித்துவிடுங்கள், பாபி ஃப்ளே. 100 00:09:05,212 --> 00:09:08,507 நம் குடும்பத்தைப் பற்றி நான் கவலைப்படுவது உங்கள் பிஸியான வேலைகளுக்குத் தொந்தரவு கொடுக்கிறதா? 101 00:09:08,590 --> 00:09:10,968 நான் பெரிய அளவில் ஜெயிக்க போகிறேன், எனக்கு உறுதுணையாக இருக்க மாட்டாயா? 102 00:09:11,051 --> 00:09:13,887 -ஷான். -இது என் வெற்றி அல்ல. இது நம்முடைய வெற்றி... 103 00:09:13,971 --> 00:09:15,889 ஷான்! ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி உங்களுடன் பேச முயல்கிறேன். 104 00:09:15,973 --> 00:09:17,683 ஆமாம், பூங்காவில் உள்ள பசியோடு இருக்கும் அந்தக் குழந்தைகள், 105 00:09:17,766 --> 00:09:20,394 அவர்களால் ஏதோ ஒரு வகையில் நம் குடும்பத்திற்கு மோசமான பிரச்சினை உள்ளது. 106 00:09:26,149 --> 00:09:28,151 இரவு உணவு தயாரானதும் சொல். 107 00:09:52,050 --> 00:09:53,218 நன்றி. 108 00:09:53,969 --> 00:09:54,970 வா. 109 00:10:14,156 --> 00:10:15,157 இவன் அழகாக இருக்கிறான். 110 00:10:17,618 --> 00:10:18,619 இவன் ஒரு அதிசயம். 111 00:10:30,839 --> 00:10:33,634 இங்கே வா. உன்னிடம் சில விஷயங்களை காட்ட வேண்டும். 112 00:10:39,348 --> 00:10:40,432 ஹே, அழகா. 113 00:10:49,608 --> 00:10:51,151 அவள் எப்படி? 114 00:10:54,196 --> 00:10:56,156 அவள் அசாதரணமானவள். 115 00:10:56,240 --> 00:10:58,075 எதிர்க்கிற அளவுக்குத் தைரியசாலி. 116 00:10:59,076 --> 00:11:00,077 யாரை எதிர்க்கும் அளவு? 117 00:11:01,411 --> 00:11:03,038 அவள் வழியில் குறுக்கிடும் எவரையும். 118 00:11:35,571 --> 00:11:36,697 -அட, கடவுளே. -ஹே. 119 00:11:36,780 --> 00:11:37,781 மன்னியுங்கள். 120 00:11:43,161 --> 00:11:46,164 கொஞ்சம் வழிவிடுங்கள். வழிவிடுங்கள். 121 00:11:46,248 --> 00:11:47,457 டொரோதி. 122 00:11:50,294 --> 00:11:51,503 அவனுடைய வண்டியை கொண்டு வா. 123 00:12:05,475 --> 00:12:08,270 அவனை வீடற்ற முகாமிற்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என வெளிப்படையாகச் சொன்ன பிறகும், 124 00:12:08,353 --> 00:12:12,441 என் மகனின் உயிருக்கு ஆபத்தை உண்டாக்க உனக்கு என்ன அவசியம் வந்தது? 125 00:12:13,066 --> 00:12:15,194 டொரோதி, உங்களுக்கு புரியவில்லை. 126 00:12:15,277 --> 00:12:17,446 பாதுகாப்பில்லாத இடத்திற்கு நான் அவனை அழைத்து போக மாட்டேன். 127 00:12:17,529 --> 00:12:19,239 அங்கே எல்லோரும் அன்பானவர்கள் மற்றும் கனிவானவர்கள். 128 00:12:19,323 --> 00:12:22,534 எல்லாம் தயார். புல்காகி ஆறக்கூடாது, வாருங்கள் சாப்பிடலாம். 129 00:12:23,911 --> 00:12:28,332 லியன். உனக்கு 18 வயது, அதனால், நீ பத்திரமாக உணரலாம். 130 00:12:28,415 --> 00:12:29,917 அப்படியில்லை, என்று நான் சொல்கிறேன். 131 00:12:30,000 --> 00:12:33,504 என் குழந்தைக்கு எது பாதுகாப்பானது என்று முடிவு செய்ய உனக்கு உரிமையில்லை. 132 00:12:33,587 --> 00:12:36,089 ஏற்கனவே, உன்னிடம் இனிமையாக சொன்னேன், ஆனால் இப்போது வேறு வழியில்லை. 133 00:12:36,173 --> 00:12:37,758 அந்த பூங்காவிற்கு நீ இனி போகவே கூடாது. 134 00:12:38,425 --> 00:12:40,677 நீங்கள் இப்படி கட்டுப்படுத்துவது வேடிக்கையாக உள்ளது. 135 00:12:40,761 --> 00:12:43,430 மே அத்தை போல தோன்றுகிறது. இது எவ்வளவு பயங்கரம் இல்லையா? 136 00:12:45,182 --> 00:12:46,433 அருமையான வாசனை, ஷான். 137 00:12:46,517 --> 00:12:48,685 சாப்பிட்டு பாரேன். எங்களோடு சாப்பிடுகிறாயா? 138 00:12:53,565 --> 00:12:56,485 ஷான், அவள் குழந்தையை அவர்களிடம் கூட்டிச் சென்றாள். 139 00:12:57,736 --> 00:12:58,820 அவனுக்கு அடிபட்டதா? 140 00:12:58,904 --> 00:12:59,905 இல்லை, ஆனால்... 141 00:13:00,822 --> 00:13:03,116 -சரி, அவளிடம் அது பற்றி பேசலாம். -போதாது. 142 00:13:04,243 --> 00:13:06,203 நான் என்ன செய்யட்டும்? அவளை வெளியேற்றவா? 143 00:13:06,870 --> 00:13:08,163 லியன் சிறப்பானவள் இல்லை தான், 144 00:13:08,247 --> 00:13:10,541 ஆனால் அவளுக்கு உதவலாம் என்று நீ தானே சொன்னாய். 145 00:13:10,624 --> 00:13:12,251 எனவே, இப்போது ஏன் கைவிடுகிறாய்? 146 00:13:12,876 --> 00:13:14,545 என்ன... நான் கைவிடவில்லை. 147 00:13:14,628 --> 00:13:18,715 பிறகு நீ ஏன் மகிழ்ச்சியாக இல்லை? லியனின் பிரச்சினைகளை நாம் தீர்க்கலாம். 148 00:13:18,799 --> 00:13:21,718 ஆனால் இப்போது, சற்று காலமாக இல்லாத நல்ல நிலைமையில் நாம் இருக்கிறோம். 149 00:13:21,802 --> 00:13:25,806 எனவே இந்த உணவை ரசித்து நான் வாங்கி வந்த சிலியன் சைராவை சாப்பிடலாம்... 150 00:13:27,975 --> 00:13:30,978 அட வா, டொரோதி. உணவு ஆறுகிறது, அன்பே. 151 00:13:31,895 --> 00:13:32,896 டொரோதிக்கு ஏதாவது பிரச்சினையா? 152 00:13:34,064 --> 00:13:35,315 இல்லை, அவள் நன்றாக இருக்கிறாள். 153 00:13:36,108 --> 00:13:39,111 உன்னையும், பூங்காவிலுள்ள சிறுவர்களைப் பற்றியும் 154 00:13:39,194 --> 00:13:40,404 அவள் கவலைப்படுகிறாள். 155 00:13:45,158 --> 00:13:46,535 அவர்கள் என்னிடம் கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். 156 00:13:49,079 --> 00:13:50,998 அவர்கள் என்னிடம் பார்ப்பதை இதுவரை யாரும் பார்த்ததில்லை. 157 00:13:51,081 --> 00:13:53,208 அவர்கள் உன்னை ஏன் அப்படி நடத்துகிறார்கள் என நினைக்கிறாய்? 158 00:13:57,379 --> 00:13:58,422 அதற்கு நான் தகுதியோ என்னமோ. 159 00:14:12,227 --> 00:14:14,396 லியன்! இங்கே கொஞ்சம் வருகிறாயா? 160 00:14:18,066 --> 00:14:20,068 -ஹாய், வீரா. -எப்படி இருக்கிறாய்? 161 00:14:20,152 --> 00:14:21,153 நலம் தான். 162 00:14:22,863 --> 00:14:24,281 எதாவது வேண்டுமா, டொரோதி? 163 00:14:24,364 --> 00:14:25,574 வந்து உட்காரு. 164 00:14:25,657 --> 00:14:26,658 ஹாய், லியன். 165 00:14:33,790 --> 00:14:35,751 லியன், உண்மையைச் சொல்கிறேன். 166 00:14:35,834 --> 00:14:37,878 நேற்றிரவு நான் உன் மேல் ரொம்ப கோபப்பட்டுவிட்டேன். 167 00:14:37,961 --> 00:14:41,465 ஆனால் நன்றாக தூங்கி எழுந்து, உடற்பயிற்சி செய்த பிறகு, 168 00:14:41,548 --> 00:14:43,133 எனக்கு ஞானம் வந்துவிட்டது. 169 00:14:43,217 --> 00:14:48,305 நீ வீட்டிலேயே அடைபட்டிருப்பதால் தான், நீயும், நானும் சண்டை போடுகிறோம். 170 00:14:49,348 --> 00:14:50,432 எனக்குத் தெரிந்த வரை, 171 00:14:50,516 --> 00:14:53,435 சுதந்திரமாக இருக்க உனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 172 00:14:54,019 --> 00:14:57,231 வீரா நடனமாடுவாள் என்று ஜூலியன் சொன்னான். 173 00:14:57,314 --> 00:15:01,360 ஆமாம். உனக்கு நடனமாடுவது பிடிக்கும் என்று டொரோதி சொன்னாள். 174 00:15:01,443 --> 00:15:03,362 நீ திறமைமிக்கவள் என்று சொல்கிறாள். 175 00:15:04,488 --> 00:15:07,574 நடன குறியீட்டியலிற்கு நீ ரொம்பவும் ஏற்றவள் என்று நினைக்கிறேன். 176 00:15:07,658 --> 00:15:09,201 கேள். இது உனக்கு ரொம்ப பிடிக்கும். 177 00:15:10,786 --> 00:15:11,912 இங்கே என்ன நடக்கிறது? 178 00:15:13,789 --> 00:15:14,873 கிளம்புங்கள் அல்லது அமைதியாக இருங்கள். 179 00:15:15,541 --> 00:15:18,669 கேள், அது நியூஜெர்சியில் இருக்கும் ஒரு நடனப்பள்ளி, 180 00:15:18,752 --> 00:15:21,839 அதில் இரண்டு மாத சிறப்பு நடன குறியீட்டியல் பயிற்சி இருக்கிறது, 181 00:15:21,922 --> 00:15:26,134 இதில் எல்லா பயிற்சியும், வகுப்புகளும் நடக்கும், கூடவே உடல்கூறு பற்றிய 182 00:15:26,677 --> 00:15:28,554 அடிப்படை விஷயங்கள் மற்றும் தினசரி பேச்சில் 183 00:15:28,637 --> 00:15:31,598 எப்படி குறியீட்டைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிந்துகொள்ளலாம். 184 00:15:31,682 --> 00:15:35,477 கொஞ்சம் தத்துவத்தோடு கூடிய நடன கலைஞர்களுக்கான அறிவியல் போன்றது. 185 00:15:35,561 --> 00:15:37,145 அது படிப்பு மட்டுமல்ல. 186 00:15:37,229 --> 00:15:41,066 வாரத்தில் இரு முறை, பௌலிங் போன்று மாணவர்களுக்கு பிடித்தவற்றை அவர்கள் செய்யலாம். 187 00:15:42,401 --> 00:15:46,697 உன் வாழ்க்கைக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். 188 00:15:46,780 --> 00:15:49,449 உதாரணத்திற்கு, உனக்கு குழந்தைகள் பிடிக்கும். 189 00:15:49,533 --> 00:15:52,661 குழந்தைகளுக்கு நடன வகுப்பு எடுக்க நீ விருப்பப்படுகிறாய் என்பது, 190 00:15:52,744 --> 00:15:54,454 உன் சுய விவரத்தில் அழகு சேர்க்கும். 191 00:15:55,330 --> 00:15:59,459 முக்கியமான விஷயம், அங்கே இடம் கிடைப்பது சுலபமல்ல, 192 00:15:59,543 --> 00:16:04,464 ஆனால் வீரா சிபாரிசு செய்திருப்பதால், இப்போதே நீ சேர்ந்துக் கொள்ளலாம். 193 00:16:07,134 --> 00:16:11,346 எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீ சரி என்று சொன்னால் மட்டும் போதும். 194 00:16:11,430 --> 00:16:14,600 ஆமாம். நீ என்ன நினைக்கிறாய், லியன்? 195 00:16:17,311 --> 00:16:19,813 அறிவும், கற்பனையும் மிகுந்த நீ 196 00:16:19,897 --> 00:16:23,525 இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை இழக்க மாட்டாய். 197 00:16:23,609 --> 00:16:24,610 இல்லையா? 198 00:16:25,611 --> 00:16:27,571 அது முடிந்தவுடன், நீ எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம். 199 00:16:28,405 --> 00:16:31,825 ஆமாம், கண்டிப்பாக. நீ இங்கே வந்து பார்க்கலாம். 200 00:16:35,579 --> 00:16:38,582 அருமை, நாளைக்கு செல்ல, உன் பெயரில் ரயில் டிக்கெட் வாங்கி விட்டேன். 201 00:16:40,000 --> 00:16:41,960 திங்கட்கிழமை தான் வகுப்புகள் தொடங்கும். 202 00:16:42,044 --> 00:16:44,463 சரி, ஏன் தாமதிக்க வேண்டும்? 203 00:16:45,297 --> 00:16:48,008 தன்னுடைய பயண ஏற்பாடுகளை லியன் செய்ய வேண்டுமே. 204 00:16:58,352 --> 00:16:59,561 சிறு ஞாபகார்த்தம். 205 00:17:01,688 --> 00:17:02,731 போன வருடம் 206 00:17:02,814 --> 00:17:05,442 ஜூலியனின் பிறந்தநாள் பார்ட்டியில் இதை அணிந்து கொண்டு அழகாக இருந்தாய். 207 00:17:06,026 --> 00:17:07,528 உனக்கு கொடுக்க விரும்பினேன். 208 00:17:11,031 --> 00:17:12,241 பரவாயில்லை. 209 00:17:14,367 --> 00:17:15,993 எனக்கு உங்கள் ஆடை வேண்டாம். 210 00:17:32,177 --> 00:17:35,597 என்னைக் கேட்காமல் இதை எல்லாம் நீ ஏன் செய்தாய்? 211 00:17:37,641 --> 00:17:38,934 நான் முயன்றேன். 212 00:17:39,017 --> 00:17:41,520 மகிழ்ச்சியாக என்னை உணவு சாப்பிடச் சொன்னீர்களே. 213 00:17:42,855 --> 00:17:45,023 என்னால் இவளை நம்ப முடியவில்லை. இது சரிபட்டுவரவில்லை. 214 00:17:47,192 --> 00:17:48,694 ஜெரிகோ இவள் மேல் பாசமாக இருக்கிறான். 215 00:17:50,988 --> 00:17:53,407 இவள் இருப்பது எனக்கு பதற்றமாக இருக்கிறது. 216 00:17:53,907 --> 00:17:55,701 அவள் ஜெரிகோவுடன் தனியாக இருப்பது எனக்கு பிடிக்கவில்லை, 217 00:17:55,784 --> 00:17:59,204 ஜெரிகோவோடு இருப்பது தான் அவள் வேலை என்பது ஒரு பிரச்சினை. 218 00:18:00,205 --> 00:18:01,748 நாம் உண்மையை எதிர்கொள்ள வேண்டும். 219 00:18:01,832 --> 00:18:05,419 அவள் இங்கிருக்கும் வரை, எந்த நேரத்திலும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கே வரலாம். 220 00:18:05,919 --> 00:18:07,713 இல்லை, இது இப்படி தான் நடக்க வேண்டும். 221 00:18:08,422 --> 00:18:11,592 இந்த நடன முகாம், அவளுக்கு நன்மையாக இருக்கும், தெரியுமா? 222 00:18:11,675 --> 00:18:13,927 நம்மால் கொடுக்க முடிந்ததை விட அவளுக்கு மற்றவையும் தேவை என்று 223 00:18:14,011 --> 00:18:16,013 அவள் புரிந்துகொள்வாள், அது எல்லோருக்கும் நன்மையாக இருக்கும். 224 00:18:18,974 --> 00:18:21,476 என் மகனின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்றே எனக்குத் தெரியவில்லை. 225 00:18:21,560 --> 00:18:23,896 என் உணர்ச்சிகள் முக்கியமில்லை. உன் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய். 226 00:18:23,979 --> 00:18:25,480 என்னை எதிர்க்காத, 227 00:18:25,564 --> 00:18:28,025 என் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்காத ஒருவருக்கு பதில் 228 00:18:28,108 --> 00:18:30,444 என்னை ஆதரிக்கும் ஒருவர் தான் எனக்கு கணவராகத் தேவை. 229 00:18:30,527 --> 00:18:31,904 -“ஆதரிக்கும்”? -ஆமாம்! 230 00:18:32,905 --> 00:18:35,324 எல்லாம் சரியாக இருக்கிறது, நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று 231 00:18:35,407 --> 00:18:39,161 மட்டும் சொல்ல வேண்டாம், ஏனென்றால் எதுவும் அப்படி இல்லை! 232 00:18:40,412 --> 00:18:42,039 நீங்கள் எனக்கு தானே ஆதரவாக இருக்க வேண்டும்! 233 00:18:52,090 --> 00:18:57,554 பயிற்சி முடிந்தவுடன், நாம் அவளைப் பற்றி மறுபடியும் யோசிப்போம். 234 00:18:57,638 --> 00:18:58,889 அது தான் நியாயம். 235 00:19:01,600 --> 00:19:03,685 விவியன் டேல் ஆன்மாவை தொடுவது 236 00:21:00,844 --> 00:21:03,805 லியன், எங்களோடு வந்து உட்காருகிறாயா? 237 00:21:03,889 --> 00:21:06,308 வேண்டாம், நன்றி, திருமதி. டர்னர். இங்கேயே இருக்கிறேன். 238 00:21:14,691 --> 00:21:16,026 இது மோசமான யோசனை. 239 00:21:16,109 --> 00:21:18,153 தொலை தூரத்திலிருந்து என்னால் மோசமான யோசனையை புரிந்துகொள்ள முடியும், 240 00:21:18,237 --> 00:21:19,238 அப்படித் தான் தோன்றுகிறது. 241 00:21:19,321 --> 00:21:20,781 அதிர்ஷ்டவசமாக, இது நீ எடுக்கும் முடிவு அல்ல. 242 00:21:20,864 --> 00:21:22,741 சரியாகச் சொன்னாய். ஜூலியன், உனக்கு வேலை இருக்கிறது. 243 00:21:22,824 --> 00:21:24,117 அவர்கள் விஷயத்தில் தலையிடாதே. 244 00:21:24,201 --> 00:21:26,745 சொதப்பலாக முடிவு எடுப்பதைப் பற்றி நான் பேச கூடாது தான், 245 00:21:26,828 --> 00:21:29,206 ஆனாலும் இந்த இடத்தில், அப்படிப்பட்ட உன் முடிவை பற்றி பேசப் போகிறேன். 246 00:21:29,289 --> 00:21:31,750 கேள், அன்பே! இது உன்னைப் பற்றிய விஷயமில்லை, சரியா? 247 00:21:33,752 --> 00:21:38,465 எல்லோருடைய அக்கறையும் பாராட்டுகிறேன், ஆனால் விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை. 248 00:21:39,216 --> 00:21:42,219 லியன் இன்று கிளம்புகிறாள், அது தான் உண்மை. 249 00:21:45,681 --> 00:21:46,682 என்ன? 250 00:21:46,765 --> 00:21:48,934 ரயில் நிலையத்திற்கு லியனை அழைத்துப்போக வந்திருக்கிறேன். 251 00:21:49,017 --> 00:21:51,019 டோபி, சீக்கிரமாக வந்திருக்கிறாய். 252 00:21:51,103 --> 00:21:52,563 சரி, நான் காத்திருக்கிறேன்... 253 00:21:53,397 --> 00:21:58,944 சரி, இதோ உன் டிக்கெட். பதிவு எண் இங்கே இருக்கிறது. 254 00:21:59,444 --> 00:22:02,865 பயிற்சி நிலையத்தின் முகவரி, பெயர், மற்றும் தொலைபேசி எண் இதோ... 255 00:22:02,948 --> 00:22:04,658 -கொடு, கொடு. சரி. -சரி. 256 00:22:04,741 --> 00:22:07,744 நீ இப்போது அவனுக்கு குட்பை சொல்லி விடு, லியன். 257 00:22:11,415 --> 00:22:12,416 சரி. 258 00:22:13,292 --> 00:22:15,460 அவளுக்கு எது தேவை என்று நீ எப்போதாவது கேட்டாயா? 259 00:22:15,544 --> 00:22:17,963 இது ஒரு அரிய வாய்ப்பு என்று லியனுக்கு தெரியும். 260 00:22:18,964 --> 00:22:21,633 இது என்ன கண்றாவி? நடன செமியோடிக்ஸ்? இது உண்மையா? 261 00:22:21,717 --> 00:22:24,011 -அது நல்லது. நல்லது. -ஏமாற்று வேலை போல தோன்றுகிறது. 262 00:22:24,094 --> 00:22:25,929 -அது நேர்மையானது தான். -பாரு, உன் நாற்காலி. 263 00:22:26,013 --> 00:22:27,931 90 நிமிடங்கள் தேடிப் பார்த்ததில் இது உனக்கு தெரிந்ததா? 264 00:22:28,015 --> 00:22:30,475 உனக்கு இந்த நாற்காலி பிடிக்கும், இல்லையா? சரி. 265 00:22:30,559 --> 00:22:32,686 -உனக்கு இந்த நாற்காலி மிகவும் பிடிக்கும். -அமைதியாக இரு. 266 00:22:32,769 --> 00:22:35,480 இந்த பயிற்சி நிலையத்தின் இயக்குனரை வீராவிற்கு நன்றாக தெரியும். 267 00:22:35,564 --> 00:22:38,901 வீரா மோசமானவள். அவளுக்கு எதுவும் தெரியாது. 268 00:22:38,984 --> 00:22:40,903 அவளை போவதை ஏன் இவ்வளவு எதிர்க்கிறாய்? 269 00:22:40,986 --> 00:22:44,990 கத்துவதற்கு பதில் நாம் அமைதியாக பேசலாமா? 270 00:22:45,073 --> 00:22:46,200 பரவாயில்லை. 271 00:22:47,910 --> 00:22:51,997 மிஸ்டர். டர்னர், நான் போகிறேன். இரண்டு மாதங்கள் தான். 272 00:23:21,944 --> 00:23:23,737 உனக்கு அது மிகவும் பிடிக்கும். 273 00:23:24,321 --> 00:23:25,739 சத்தியமாக. 274 00:23:46,301 --> 00:23:47,553 அவன் கழிவறைக்கு போக வேண்டும். 275 00:23:49,054 --> 00:23:50,097 நானே அவனுக்கு உடை மாற்றுவேன், 276 00:23:50,180 --> 00:23:52,516 ஆனால் அவள் மென்மையான உடலில் என்னுடைய அழுக்கான கைகள் படுவதை 277 00:23:52,599 --> 00:23:53,809 நீ விரும்ப மாட்டாய். 278 00:23:55,060 --> 00:23:58,313 நீ நினைப்பதை தாண்டி, இது ஒரு சிக்கலான விஷயம் தெரியுமா. 279 00:23:58,397 --> 00:24:00,983 -இதில் பல விஷயங்கள் இருக்கிறது. -நான் மோசமானவள் என்று நீ சொன்னாய். 280 00:24:01,066 --> 00:24:02,860 இதில் எந்த சிக்கலும் இல்லை, ஜூலியன். 281 00:24:02,943 --> 00:24:05,487 மாற்ற முடியாத சில விஷயங்களை நான் செய்து, வருத்தப்பட்டு இருக்கிறேன், 282 00:24:05,571 --> 00:24:09,658 அதனால் அவற்றை ஒத்துக் கொள்வேன் ஏனெனில் அவமானப்படாவிட்டால் மறுபடியும் அதை செய்வேன். 283 00:24:10,367 --> 00:24:13,620 என் சொந்த விஷயங்களை எனக்கு எதிராக பயன்படுத்த நல்ல யோசனை. 284 00:24:13,704 --> 00:24:15,455 நீ சொல்வது சரி. எனக்கு வருத்தமில்லை. 285 00:24:15,539 --> 00:24:16,748 சரி, நீ வந்து... 286 00:24:28,844 --> 00:24:31,471 இப்படி மறுபடியும் செய்ய மாட்டேன். என்னால் முடியாது. 287 00:24:32,890 --> 00:24:34,725 -இது என்ன கண்றாவி? -ஒன்றுமில்லை. 288 00:24:34,808 --> 00:24:35,809 அவன் எங்கே? 289 00:24:35,893 --> 00:24:37,811 என்ன சொல்கிறாய்? அந்த உயர்ந்த நாற்காலியில் அவனை வைத்தேன். 290 00:24:37,895 --> 00:24:40,772 உயர்ந்த நாற்காலியில் அவனை வைத்தேன். நான் எதுவும் செய்யவில்லை. 291 00:24:42,191 --> 00:24:43,192 செல்லார். 292 00:24:44,318 --> 00:24:46,320 -அப்பாடா. -கடவுளே, மறுபடியுமா? 293 00:24:51,575 --> 00:24:55,495 நான் எதுவும் செய்யவில்லை. அந்த உயர்ந்த நாற்காலியில் அவனை வைத்தேன். 294 00:24:55,579 --> 00:24:56,997 வாயை மூடு! 295 00:24:58,290 --> 00:25:00,959 -சமையலறை! -நீ அங்கே தானே இருந்தாய்! 296 00:25:07,174 --> 00:25:10,010 அந்த உயர்ந்த நாற்காலியில் அவனை வைத்தேன். ஜூலியன், இரு. 297 00:25:31,865 --> 00:25:33,575 -ஐயோ. -நான் கேமரா பதிவைப் பார்க்கிறேன். 298 00:25:35,118 --> 00:25:37,162 எல்லோரும் கொடூரமாக கற்பனை செய்கிறோம். காவலரை அழைக்கலாம். 299 00:25:37,246 --> 00:25:39,289 அவனை நீ எப்படி விட்டுவிடலாம்? 300 00:25:39,373 --> 00:25:40,374 உனக்கு என்ன ஆச்சு? 301 00:25:40,999 --> 00:25:42,626 உனக்கு என்ன ஆச்சு? 302 00:25:49,842 --> 00:25:52,719 லியன். ஹே, நீ நலமா? 303 00:25:53,637 --> 00:25:55,597 -இந்த பதற்றத்தால் நீ சுயநினைவோடு சிந்திக்கவில்லை. -அடச்சே. 304 00:25:55,681 --> 00:25:58,016 அப்படி இல்லை என்பது போல நீ நடந்துகொள்ள முடியாது. 305 00:25:58,100 --> 00:26:00,352 உளவியல் மருத்துவரின் மகள் என்பதால், நீ உளவியல் மருத்துவர் கிடையாது. 306 00:26:02,062 --> 00:26:05,482 நான் வேலை செய்கிறேன். ஒவ்வொரு நாளும், என் பிரச்சினைகளை சமாளிக்கிறேன். 307 00:26:06,066 --> 00:26:07,776 அது வேடிக்கையாக இல்லாவிட்டாலும், நான் செய்கிறேன். 308 00:26:07,860 --> 00:26:11,196 நலமாக வேண்டுமென்றால் உன் கொடுமையான வலிகளை 309 00:26:11,280 --> 00:26:12,906 நீ எதிர்நோக்கித்தான் ஆக வேண்டும். 310 00:26:12,990 --> 00:26:15,409 அதற்கு என்னால் உதவ முடியாது. 311 00:26:15,993 --> 00:26:17,327 நான் என்னை பாதுகாக்க வேண்டும். 312 00:26:17,411 --> 00:26:20,205 நல்லது. என்னை விட்டு தள்ளி போய், பாதுகாப்பாக இரு. 313 00:26:47,316 --> 00:26:48,317 அடச்சே. 314 00:26:49,443 --> 00:26:50,444 டொரோதி? 315 00:27:02,915 --> 00:27:04,249 என்ன இது? 316 00:27:36,323 --> 00:27:40,744 லியன்? இப்போது கிளம்பவில்லை என்றால், நீ கண்டிப்பாக ரயிலை தவற விடுவாய். 317 00:27:42,246 --> 00:27:43,247 அடச்சே. 318 00:27:45,541 --> 00:27:47,000 நான் நினைப்பது போல நீ புத்திசாலி என்றால், 319 00:27:47,084 --> 00:27:48,919 அந்த ரயிலில் ஏறி போய்விடுவாய், திரும்பி வரமாட்டாய். 320 00:27:50,546 --> 00:27:51,755 எனக்கு குழப்பமாக இருக்கிறது. 321 00:27:53,841 --> 00:27:54,842 லியன்? 322 00:27:57,678 --> 00:27:58,887 வீட்டிற்கு போ, டோபி. 323 00:28:10,941 --> 00:28:13,193 கம்பளிப்பூச்சியா? என்ன இது? 324 00:28:34,214 --> 00:28:36,175 என் மகன் எங்கே? 325 00:28:37,259 --> 00:28:40,262 உனக்கு பத்து நொடிகள் தான் அவகாசம். நான் எப்படிப்பட்டவள் என்று உனக்கே தெரியும். 326 00:28:43,098 --> 00:28:44,516 அவன் தொட்டிலில் தூங்குகிறான். 327 00:28:47,603 --> 00:28:48,854 இவ்வளவு நேரமும் அங்கே தான் இருந்தான். 328 00:28:49,730 --> 00:28:50,939 அது சாத்தியமில்லை. 329 00:28:51,899 --> 00:28:53,734 நான் வீடு முழுவதும்... 330 00:29:11,543 --> 00:29:12,544 அடக் கடவுளே. 331 00:29:14,129 --> 00:29:16,798 -செல்லமே. என் செல்லமே. -ஹே. 332 00:29:24,431 --> 00:29:26,600 சரி. சரி. 333 00:29:39,238 --> 00:29:40,614 வீரா போய் விட்டாள். 334 00:29:45,118 --> 00:29:46,328 அது தவிர்க்க முடியாதது 335 00:29:46,870 --> 00:29:48,288 அவள் உனக்கு பொருத்தமற்றவள். 336 00:29:49,831 --> 00:29:51,041 இருவருமே மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள். 337 00:29:52,835 --> 00:29:54,419 ஆனால் நீ மாற வேண்டியதில்லை. 338 00:30:00,759 --> 00:30:01,969 லியன் இங்கேயே தான் இருப்பாள். 339 00:30:03,512 --> 00:30:07,140 லியன் இருந்தால் தான், ஜெரிகோவும் இங்கிருப்பான், எனவே, லியன் இங்கே தான் இருப்பாள். 340 00:30:08,642 --> 00:30:09,768 நீங்கள் பைத்தியமா என்ன? 341 00:30:09,852 --> 00:30:12,145 யாரையோ நம் வீட்டிற்குள் விட்டிருக்கிறாள், 342 00:30:12,229 --> 00:30:15,357 நம் குழந்தையை மறைத்து வைத்து, ஆட்டம் காட்டியிருக்கிறாள். 343 00:30:15,440 --> 00:30:16,441 அவளுக்கு மனநலம் சரியில்லை. 344 00:30:16,525 --> 00:30:18,151 மறுபடியும் என் மகனை இழக்க விருப்பமில்லை. 345 00:30:18,902 --> 00:30:19,903 லியன் இங்கே தான் இருப்பாள். 346 00:30:23,615 --> 00:30:26,535 இல்லை. ஷான், ஒரு திட்டம் இருக்கிறது. 347 00:30:26,618 --> 00:30:28,036 -இப்படி செய்யாதீர்கள். -லியன், 348 00:30:28,120 --> 00:30:30,831 என் மனைவிக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். 349 00:30:31,623 --> 00:30:33,041 எனக்காக நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டாம். 350 00:30:33,125 --> 00:30:38,255 உனக்கு தோன்றும் வரை நீ எங்களோடு இருக்கலாம், அது தான் எங்களுக்கும் சந்தோஷம். 351 00:30:38,338 --> 00:30:39,840 அது எனக்கும் ரொம்ப சந்தோஷம் தான். 352 00:30:48,432 --> 00:30:51,143 என் திறமைகளை மேம்படுத்த உதவியதற்கு நன்றி, டொரோதி. 353 00:30:53,520 --> 00:30:55,147 ஆனால் என்னால் ஜெரிகோவை விட்டு விலக முடியாது. 354 00:30:56,231 --> 00:30:59,443 நான் இங்கே இல்லை என்றால், அவனுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். 355 00:31:40,776 --> 00:31:42,778 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்