1 00:01:40,559 --> 00:01:41,977 காலை வணக்கம்! 2 00:01:42,060 --> 00:01:45,272 பாரேன். யாரோ என்னுடைய டுங்காரீஸைப் கண்டுபிடித்திருக்கிறார்கள் போல. 3 00:01:46,273 --> 00:01:47,816 -இது நன்றாக இருக்கிறதா? -ஆமாம். 4 00:01:47,900 --> 00:01:50,277 மேலே எந்த மாதிரி உடை அணிந்தாலும் இதற்குச் சரியாக இருக்கும். 5 00:01:50,360 --> 00:01:52,988 அப்படியானால் நான் நினைப்பது மாதிரி தானே? நீயும் இன்று வருகிறாய் தானே? 6 00:01:54,740 --> 00:01:56,033 உங்களுக்குக் கேட்டதா? 7 00:01:56,116 --> 00:01:58,911 -லியன் திருவிழாவிற்கு வரப் போகிறாள். -நல்லது, லியன். 8 00:01:58,994 --> 00:02:01,079 நிறைய நபர்கள் சுற்றி இருப்பது, பெரிய முன்னேற்றம் தான். 9 00:02:01,163 --> 00:02:02,164 நான் தயாராகிவிட்டேன். 10 00:02:02,247 --> 00:02:05,250 நல்லது, இது பிரமாதமான நாள், நாங்கள் எல்லோரும் உன் அருகிலேயே இருப்போம். 11 00:02:05,334 --> 00:02:09,213 -அதைப் பார். கரையான்கள் நிறைய இருக்கின்றன. -கரு மிளகு மாதிரி இருக்கிறது. 12 00:02:09,295 --> 00:02:11,548 இல்லை, அப்படி இல்லை. நான் படங்களைப் பார்த்தேன். அது கரையான் புற்று தான். 13 00:02:11,632 --> 00:02:14,968 அது சமையல் அலமாரியில் இருக்கிறது. பூச்சிகள் அழிப்பவரை வைத்து அதை அகற்ற வேண்டும். 14 00:02:15,052 --> 00:02:16,053 ஷான் சொல்வது சரி தான். 15 00:02:16,678 --> 00:02:18,305 எனக்கு புரிந்துவிட்டது. இது கரையான்களின் எச்சம். 16 00:02:18,388 --> 00:02:21,683 நமக்கே தெரியுமே, இந்த வீடு கட்டப்பட்டு 175 வருடங்கள் ஆகின்றன. 17 00:02:21,767 --> 00:02:24,269 ஆகையால், இது இன்றைக்கே விழுந்துவிடும் என்று எனக்குத் தோன்றவில்லை. 18 00:02:24,353 --> 00:02:28,190 தயவுசெய்து, நான் உங்களுக்கு ஒன்று காட்டட்டுமா? நீங்கள் இங்கே தான் இருக்கப் போகிறீர்கள், 3-பி. 19 00:02:28,273 --> 00:02:29,525 பவுன்ஸ் வீட்டிற்கு அருகிலா? 20 00:02:29,608 --> 00:02:31,443 இடமே போதாது. 21 00:02:31,527 --> 00:02:33,904 ஆயிரம் குழந்தைகள், என் காதுக்குள் கத்துவது மாதிரி எனக்கு இருக்கிறது. 22 00:02:33,987 --> 00:02:36,448 உண்மை தான். இது பிளாக் பார்ட்டி, அன்பே. 23 00:02:36,532 --> 00:02:38,367 இந்த உணவு டிரக்குகளில் என்ன இருக்கு? 24 00:02:41,078 --> 00:02:43,622 -என்னது இது? -திரவ நைட்ரஜன். 25 00:02:44,122 --> 00:02:47,251 சமையலறையில் வைக்கக் கூடாத அபாயகரமான ரசாயனம் தான். மன்னித்துவிடு. 26 00:02:47,334 --> 00:02:50,212 தயவுசெய்து, நாம் இந்த இடத்தை விட்டுப் போய் விடலாமா? 27 00:02:50,295 --> 00:02:53,841 இந்த பிளாக் பார்ட்டியில், ஷான் பெரிய ஆச்சரியம் தரப் போகிறார். 28 00:02:53,924 --> 00:02:55,050 கெட்ட சகுனம் போல தோன்றுகிறது. 29 00:02:55,133 --> 00:02:56,969 வீரா எங்கே? 30 00:02:57,052 --> 00:02:59,221 அவளால் வர முடியவில்லை. கடைசி நேரத்தில் ஏதோ வேலை வந்துவிட்டது. 31 00:02:59,304 --> 00:03:01,306 அதனால், நான் தனியே வரலாமே என்று நினைத்தேன். 32 00:03:01,390 --> 00:03:03,892 வழக்கம் போல, தேவையான அளவு நடந்துவிட்டேன். கொஞ்சம் உதவு, சகோதரியே. 33 00:03:03,976 --> 00:03:05,853 ஃபனல் கேக்குக்காகத் தான் இங்கே வந்திருக்கிறாய், இல்லையா? 34 00:03:05,936 --> 00:03:08,981 நீ அவற்றை விரும்பிச் சாப்பிடுவாயே. 35 00:03:09,064 --> 00:03:11,108 -கொஞ்சம் அதிகம் தான். -நிறுத்து. 36 00:03:11,733 --> 00:03:13,068 பூங்காவைப் பார்த்தாயா? 37 00:03:13,151 --> 00:03:15,320 -அவர்களை? -அந்த வீடற்ற குழந்தைகளையா? 38 00:03:15,404 --> 00:03:18,073 -இப்பொழுது நிறைய பேர் இருக்கிறார்கள். -சும்மா இந்தப் பக்கமாகப் போகின்றனர். 39 00:03:18,156 --> 00:03:20,200 ஆமாம், நீ அவர்களுக்கு சுவையானவற்றைக் கொடுக்கிறாய்! 40 00:03:20,284 --> 00:03:23,161 இப்படித் தான் ஆரம்பிக்கிறது. உனக்குத் தெரிய வருவதற்குள் நிறைய பேர் வந்து விடுகின்றனர், 41 00:03:23,245 --> 00:03:25,080 அப்புறம் இந்த வீட்டிற்கு ஒரு பிரயோசனமும் இருக்காது. 42 00:03:25,163 --> 00:03:27,666 சரி, நான் இன்று எதைப்பற்றியும் சிந்திக்க விரும்பவில்லை. 43 00:03:28,333 --> 00:03:30,502 -இன்றைக்கு இதையா அணிந்து கொள்கிறாய்? -ஜூலியன்! 44 00:03:31,587 --> 00:03:33,213 உனக்கு எப்படி இருக்கிறது? 45 00:03:33,755 --> 00:03:36,592 நன்றாக இருக்கிறேன். எல்லாம் நல்லபடியாகப் போனால் சரி என்று இருக்கிறது. 46 00:03:36,675 --> 00:03:39,011 இந்த மாதிரி நிகழ்ச்சியில் நிறைய அசையும் நிகழ்வுகள் இருக்கும். 47 00:03:39,094 --> 00:03:42,890 மக்களுக்கு வெளியே வந்தால் போதும். டிஸ்னிலேண்ட் மாதிரியெல்லாம் எதிர்பார்க்க மாட்டார்கள். 48 00:03:43,473 --> 00:03:44,516 விடு. நாம் போகலாமா? 49 00:03:45,934 --> 00:03:47,144 லியன்? நீயும் வருகிறாயா? 50 00:04:11,043 --> 00:04:13,337 லியன்! ஹே, இங்கே வா! 51 00:04:14,421 --> 00:04:15,964 இங்கே. மன்னியுங்கள். 52 00:04:24,348 --> 00:04:26,767 இதோ. நம்மிடம் ஐஸ் கிரீம் தயார். 53 00:04:29,186 --> 00:04:31,188 என்னுடைய கணவர். நிகழ்ச்சி நடத்துவதில் வல்லவர். 54 00:04:31,271 --> 00:04:32,272 வீடற்றவரின் பசிக்கு முடிவு கட்டுங்கள் 55 00:04:32,356 --> 00:04:33,941 மேப்பில் சிரப்பும், பேன்செட்டாவும் தடவிய 56 00:04:34,024 --> 00:04:36,193 ஒரு சிறிய ஃபிரெஞ்சு டோஸ்ட்டைப் பரிமாறப் போகிறேன். 57 00:04:36,276 --> 00:04:39,071 -செஃப் டோபி அதை உங்கள் வாய்க்குள் திணிப்பார். -...இருவரும் வாருங்கள். நான் சுற்றி காட்டுகிறேன். 58 00:04:39,154 --> 00:04:40,989 நாம் வரிசையாக நிற்கலாமா? 59 00:04:42,074 --> 00:04:45,827 இதோ, இங்கே கோடாரி எறியும் சாவடி இருக்கிறது. 60 00:04:45,911 --> 00:04:48,830 இது கொஞ்சம் விலை உயர்ந்தது தான், ஆனால் மக்கள் இதை விளையாடப் பைத்தியமாக இருக்கிறார்கள். 61 00:04:49,414 --> 00:04:52,626 இது தான் நம் கிராமிய நடனத்திற்கான இடம். 62 00:04:52,709 --> 00:04:55,838 இது தான் பார்பிக்யூ கூடாரம். பக்ஸ் கவுண்டியில் இருந்து அவை வரவழைக்கப்படுகின்றன. 63 00:04:55,921 --> 00:04:58,549 அது விசேஷமாக இருக்கும். நீங்கள் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும். 64 00:04:58,632 --> 00:04:59,716 ஓ, நாம்... 65 00:05:03,220 --> 00:05:04,263 என்ன விஷயம்? 66 00:05:05,389 --> 00:05:07,307 நாசமாய் போனவர்கள். 67 00:05:07,391 --> 00:05:09,184 அவளை அனுப்பிவிட்டார்களா? 68 00:05:11,395 --> 00:05:13,146 நிச்சயம், வேண்டுமென்றே செய்திருக்க மாட்டார்கள், டொரோதி. 69 00:05:13,230 --> 00:05:14,606 கண்டிப்பாக வேண்டுமென்றே தான் செய்தார்கள். 70 00:05:14,690 --> 00:05:18,235 இந்த பிளாக் பார்ட்டியைப் பற்றி நான் அவர்களுக்குப் பல வாரங்களுக்கு முன்னரே தெரிவித்திருந்தேன். 71 00:05:18,735 --> 00:05:22,573 இந்த அமைப்பினர் என்னை ஒதுக்கித் தள்ளி விடுவார்கள், நான் அமைதியாக வெளியேறிவிடுவேன். 72 00:05:24,575 --> 00:05:25,576 உனக்கு ஒன்று தெரியுமா? 73 00:05:26,285 --> 00:05:27,286 இதோ. 74 00:05:27,911 --> 00:05:29,705 அம்மாவிடம் வா. வா. 75 00:05:29,788 --> 00:05:31,290 -நிச்சயமாகவா? -ஆமாம். 76 00:05:31,373 --> 00:05:34,334 குட்டி ஜெரிகோ, தன் முதல் டிவி நிகழ்ச்சிக்கு தயார். 77 00:05:34,418 --> 00:05:37,379 -என்ன செய்கிறாய், டோட்டி? -நான் தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் தாய். 78 00:05:37,462 --> 00:05:40,048 இன்று இருக்கும் நிலைமைக்கு வர நான் ரொம்பவே கஷ்டப்பட்டு உழைத்தேன். 79 00:05:40,132 --> 00:05:43,135 இந்த மாதிரி புதிதாக வந்தவர்களால், என் இடத்தைப் பிடிக்க முடியாது. 80 00:05:43,218 --> 00:05:44,636 அவர்களை விட மாட்டேன். நான் கேமரா முன் போகிறேன். 81 00:05:44,720 --> 00:05:47,306 -தயவுசெய்து கொஞ்சம் யோசி. -யோசித்துவிட்டேன். 82 00:05:47,389 --> 00:05:50,601 இப்பொழுது இந்த நிலைமையைக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம், தோற்று விடக்கூடாது. 83 00:05:50,684 --> 00:05:52,811 அவன் கதி என்ன? மே அத்தை பார்த்தால் என்னவாகும்? 84 00:05:52,895 --> 00:05:54,813 அவள் செய்திகளைப் பருந்து போல பார்த்துக்கொண்டு இருப்பாள். 85 00:05:54,897 --> 00:05:57,357 எனக்கு மகனே இல்லை என்பது போல, என்னால் நடிக்க முடியாது. 86 00:05:58,108 --> 00:06:00,611 8 நியூஸ் 87 00:06:00,694 --> 00:06:02,362 டொரோதி, ஹே! 88 00:06:02,446 --> 00:06:04,072 இசபெல், அன்பே. 89 00:06:04,156 --> 00:06:06,700 ரொம்பவும் உற்சாகமாக இருக்கிறாய். 90 00:06:06,783 --> 00:06:09,703 அமைப்பாளருக்கான அதிகாரப்பூர்வ உடை. 91 00:06:09,786 --> 00:06:13,624 உண்மையில், உன் ஒளிபரப்பு பகுதிக்கு என்னிடமிருந்து ஒரு அறிக்கை வேண்டும் என தெரிந்துகொண்டேன். 92 00:06:17,544 --> 00:06:19,046 அதாவது... கண்டிப்பாக. 93 00:06:19,129 --> 00:06:21,131 -ஒரு சிறிய விஷயம் தான் செய்கிறோம், ஆனால்... -பிரமாதம். 94 00:06:21,215 --> 00:06:23,133 கார்லோஸ், நாம் கேமராவை நடுப்பகுதியில் வைக்க வேண்டும், 95 00:06:23,217 --> 00:06:25,427 அப்பொழுது தான் நல்ல கோணங்களில் காட்சிகள் அமையும். 96 00:06:26,094 --> 00:06:28,847 சரி, ஷான் பற்றி ஏற்கனவே எடுத்த வீடியோவுடன் மற்றொன்றும் எடுத்துக்கொள்ள வேண்டும். 97 00:06:29,598 --> 00:06:32,184 பொம்மலாட்ட நிகழ்ச்சி இன்னும் ஐந்து நிமிடத்தில் தொடங்கும் என்பது சிறப்பான விஷயம். 98 00:06:32,267 --> 00:06:34,436 நான் ஷானுடன் பேசப் போகிறேன். நீ இங்கேயே இருக்கிறாயா? 99 00:06:35,437 --> 00:06:36,563 சரி. 100 00:06:44,029 --> 00:06:45,489 இது உங்களுக்குப் பிடிக்கும். 101 00:06:45,572 --> 00:06:46,990 -நன்றி, நண்பா. -கண்டிப்பாக. 102 00:06:48,825 --> 00:06:50,244 -ஹே. -லியன் எப்படி இருக்கிறாள்? 103 00:06:50,327 --> 00:06:51,954 -டொரோதியுடன். -நண்பா, வரிசை இருக்கிறது பார். 104 00:06:52,037 --> 00:06:53,830 நான் அதற்காக வரவில்லை, மடையா. 105 00:06:53,914 --> 00:06:55,749 அவள் ஒளிபரப்பிற்குப் போய்விட்டாள். என்னால் அவளிடம் பேச முடியவில்லை. 106 00:06:55,832 --> 00:06:56,834 இது நல்ல விஷயம் தானே? 107 00:06:56,917 --> 00:06:59,419 நல்லதா? அந்தக் கண்றாவி மீம்ஸைப் பார்த்தாயா? 108 00:06:59,503 --> 00:07:01,547 -என்ன, அந்தப் பசு சமாச்சாரமா? -ஆமாம், மூ. 109 00:07:01,630 --> 00:07:03,382 டொரோதி நிச்சயம் ட்விட்டர் ட்ரோல்களைச் சமாளிப்பாள். 110 00:07:03,465 --> 00:07:04,550 நான் சொல்வதை நீ கேட்க மறுக்கிறாய். 111 00:07:04,633 --> 00:07:06,552 அவள் ஜெரிகோவை வலுக்கட்டாயமாக கேமரா முன்னால் நிறுத்துகிறாள். 112 00:07:06,635 --> 00:07:07,970 நீ பின் வாங்க வேண்டும். 113 00:07:08,053 --> 00:07:09,137 என்ன? 114 00:07:09,221 --> 00:07:10,806 டிஎன்ஏ விஷயத்தில் நீ நடத்திய பித்தலாட்டம் தெரியும். 115 00:07:11,682 --> 00:07:13,183 நீ கிட்டத்தட்ட எல்லாவற்றையும் கெடுத்துவிட்டாய். 116 00:07:13,267 --> 00:07:15,310 -நான் இதைச் சரிசெய்ய மட்டுமே முயற்சிக்கிறேன். -ஜூலியன். 117 00:07:15,394 --> 00:07:18,230 உதவி செய்ய வேண்டும் என்றால், போ, போய் சந்தோஷமாக இரு. ஜாலியாக இரு. 118 00:07:18,313 --> 00:07:20,315 டொரோதி இதில் நிறைய உழைத்திருக்கிறாள். 119 00:07:21,233 --> 00:07:22,860 ஏன் இவ்வளவு சூடாக இருக்கிறது? 120 00:07:22,943 --> 00:07:24,486 கொஞ்சம் ஐஸ் கிரீம் சாப்பிடு. 121 00:07:24,570 --> 00:07:25,571 ஷான். 122 00:07:26,280 --> 00:07:27,990 நான்சி. அடடா, ஹே! 123 00:07:28,073 --> 00:07:30,367 காபி இடைவேளையின் போது எங்களுக்கு முக்கியமான தகவல்கள் கொடுக்கிறீர்கள். 124 00:07:30,450 --> 00:07:32,744 திருமதி. டர்னர் எங்கே? 125 00:07:32,828 --> 00:07:35,747 பிஸியாக இருக்கிறாள். இதை எல்லாவற்றையும் தலைமை ஏற்கிறாள். எனவே... 126 00:07:35,831 --> 00:07:37,291 -ஆமாம். பிஸியான பெண். -ஆமாம். 127 00:07:37,374 --> 00:07:40,294 -உங்களை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். -அது மிகவும் நல்லது. 128 00:07:40,377 --> 00:07:43,172 -உங்களுக்கும் கொஞ்சம் வேண்டுமா? -நான் பால் பொருட்கள் சாப்பிட மாட்டேன். 129 00:07:43,255 --> 00:07:45,048 சரி. 130 00:07:45,132 --> 00:07:47,301 இந்தப் பகுதிக்கு வந்தேன். பார்த்து ஹலோ சொல்ல நினைத்தேன். 131 00:07:47,384 --> 00:07:48,802 சரி, உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. 132 00:07:48,886 --> 00:07:50,012 அடுத்த வாரம் சந்திக்கலாம். 133 00:07:50,095 --> 00:07:51,096 செஃப், கையுறைகள். 134 00:07:51,180 --> 00:07:52,514 நான் நினைத்தேன். 135 00:07:53,098 --> 00:07:56,101 -அவள் என்னுடைய தோழி. -அவள் ஒன்றும் தோழி இல்லை. 136 00:07:56,185 --> 00:07:57,644 “காபி இடைவேளை?” 137 00:07:57,728 --> 00:08:00,731 இது என்ன, சோகத்தை பகிர்ந்துகொள்வதா? எல்லோரும் கூடி பேசும் கூட்டமா? 138 00:08:00,814 --> 00:08:02,482 -இது ஏஏவா? -இல்லை, அப்படி எதுவும் இல்லை. 139 00:08:02,566 --> 00:08:04,109 அவளொரு... இறை பணியாளர். 140 00:08:04,193 --> 00:08:06,028 அடக் கடவுளே. எவ்வளவு காலமாக? 141 00:08:06,528 --> 00:08:08,530 இரண்டு மாதங்களாக. எனக்கு உதவுகிறாள். அது நன்றாக இருக்கிறது. 142 00:08:08,614 --> 00:08:09,990 அதுபற்றி மகிழ்கிறேன். 143 00:08:10,073 --> 00:08:11,909 -டொரோதிக்கு தெரியுமா? -இன்னும் தெரியாது. 144 00:08:12,618 --> 00:08:14,119 சரி, அப்படியே இருக்கட்டும். 145 00:08:15,579 --> 00:08:18,707 இப்போது, எல்லாம் புரிகிறது. நீ கடவுளை நம்பாத போது உன்னைப் பிடித்தது. 146 00:08:18,790 --> 00:08:20,918 ஆமாம், நீ குடிகாரனாக இருந்த போது எனக்கு மிகவும் பிடித்தது. 147 00:08:22,211 --> 00:08:27,799 நாங்கள் அற்புதமான அக்ரோபாட்டிக்ஸ் குழுவோடு, “ஸ்ப்ரிங் ஆன் ஸ்ப்ரூஸ்” நிகழ்ச்சியில் இருக்கிறோம். 148 00:08:27,883 --> 00:08:31,261 “த காட்ஸ் பனிஷ் வைல்டுலி” குழுவினர் ஃபில்லியைச் சேர்ந்தவர்கள். 149 00:08:33,722 --> 00:08:35,057 நீ நலமா? 150 00:08:38,227 --> 00:08:39,645 அவர்கள் உன்னை தொந்தரவு செய்கிறார்களா, அன்பே? 151 00:08:40,729 --> 00:08:42,188 இது, ஆதரவற்றவர்களுக்கு-உணவு தரும் செஃப் போன்றது. 152 00:08:42,272 --> 00:08:44,316 அதாவது, அவர் செய்வது சிறப்பு, 153 00:08:44,399 --> 00:08:46,443 ஆனால் ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு வரம்பு இருக்க வேண்டும். 154 00:08:46,527 --> 00:08:48,362 இது ஒரு குடும்ப நிகழ்ச்சி. 155 00:08:48,445 --> 00:08:50,280 நம்மால் அவர்களை போக சொல்ல முடியுமா? 156 00:08:51,114 --> 00:08:52,824 என்னால் அதைவிட சிறப்பாக செய்ய முடியும். 157 00:08:53,867 --> 00:08:55,661 ஹே, நீங்கள் இதற்கு பணம் கொடுத்தீர்களா? 158 00:08:55,744 --> 00:08:58,372 பிளாக் பார்ட்டியில் கலந்துகொள்ள பணம் செலுத்த வேண்டும். 159 00:08:58,455 --> 00:08:59,748 பணம் கொடுத்தாயா? இல்லையா? 160 00:08:59,831 --> 00:09:02,251 கிளம்புங்கள். நீங்கள் கிளம்ப வேண்டும். இப்பொழுதே. 161 00:09:03,710 --> 00:09:06,713 பிளாக்கின் கடைசிக்கு சென்று இந்த இடத்திலிருந்து வெளியேறலாம். 162 00:09:08,173 --> 00:09:09,967 பிளாக் பார்ட்டி. இதில் கலந்துகொள்ள நீங்கள் பணம் கட்ட வேண்டும். 163 00:09:10,050 --> 00:09:12,094 வா. போகலாம். 164 00:09:40,080 --> 00:09:42,416 நன்றி. நீங்கள் போகலாம். 165 00:09:43,959 --> 00:09:45,169 உனக்கு என்ன வேண்டும்? 166 00:09:45,669 --> 00:09:46,920 ஒரு புலி. 167 00:09:47,004 --> 00:09:48,213 இதோ. 168 00:09:48,922 --> 00:09:50,340 இங்கே வந்து, உட்காரு. 169 00:09:55,679 --> 00:09:57,306 உன் உடை பிடித்திருக்கிறது. 170 00:09:58,473 --> 00:09:59,683 நன்றி. 171 00:10:00,559 --> 00:10:03,395 என் அம்மா கொடுத்தார். இவை அவருடையவை. 172 00:10:03,478 --> 00:10:04,730 அது ரொம்ப சிறப்பு. 173 00:10:04,813 --> 00:10:08,442 தனது மோசமான பதற்றத்தைத் தான், எனது அம்மா எனக்குக் கொடுத்தார். 174 00:10:09,735 --> 00:10:12,905 உன் முகத்தை சாதாரணமாக வை. அருமை. 175 00:10:28,795 --> 00:10:30,506 நீ இப்போதும் உன் அம்மாவோடு பேசுகிறாயா? 176 00:10:45,103 --> 00:10:46,522 மன்னிக்கவும். 177 00:10:46,605 --> 00:10:49,733 நான் ஒரு நொடி நகர்ந்து போனேன். நீ என்ன சொல்லிக்கொண்டு இருந்தாய்? 178 00:10:53,237 --> 00:10:57,574 -எதுவுமில்லை. -சரி, உன் முகத்தை சாதாரணமாக வை. 179 00:10:58,408 --> 00:11:00,285 கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. 180 00:11:05,249 --> 00:11:06,458 மன்னிக்கவும். நான் கிளம்புகிறேன். 181 00:11:27,271 --> 00:11:28,814 ஸோயி! 182 00:11:30,482 --> 00:11:31,775 மெயின் ஸ்டேஜ் ஸ்ப்ரிங் ஆன் ஸ்ப்ரூஸ் 183 00:11:41,326 --> 00:11:44,413 தங்கள் வாழ்க்கையின் சிறந்த விஷயங்களை மட்டுமே மக்கள் சொல்ல விரும்புகிறார்கள். 184 00:11:44,496 --> 00:11:48,166 தவறாக நினைக்காதே, இந்த வருடம் பிளாக் பார்ட்டிக்கு அவள் ஒரு வரப்பிரசாதம். 185 00:11:48,250 --> 00:11:49,501 நல்ல விஷயங்களா? 186 00:11:50,002 --> 00:11:52,921 அவளும், அவளது கணவரும் அன்பான தம்பதி போல திரிகிறார்கள், ஆனால்... 187 00:11:53,422 --> 00:11:55,382 நான் சொல்லக் கூடாது. 188 00:11:55,465 --> 00:11:57,009 பரவாயில்லை. சொல்லுங்கள். 189 00:11:57,801 --> 00:12:02,806 ஒருமுறை அவர்கள் வீட்டிற்கு வெளியே ஆம்புலன்ஸைப் பார்த்தேன். 190 00:12:03,765 --> 00:12:05,392 இரண்டு முறையாவது போலீஸ் கார்கள் நின்றிருக்கும். 191 00:12:05,475 --> 00:12:07,186 -நீங்களே புரிந்துகொள்ளுங்கள். -மன்னிக்கவும். 192 00:12:08,061 --> 00:12:10,689 மற்றவர்களைப் பற்றி புரளி பேசுவது நல்லதல்ல. 193 00:12:12,107 --> 00:12:14,610 அதே போல ஒட்டு கேட்பதும் நல்லதல்ல. 194 00:12:15,110 --> 00:12:16,612 -உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. -எனக்கும் தான். 195 00:12:16,695 --> 00:12:17,863 பை. 196 00:12:17,946 --> 00:12:20,073 ஓ! நீதான் அந்த செவிலித்தாயா? 197 00:12:20,157 --> 00:12:22,451 -நீ ஜெரிகோவின் ஞானஸ்தானத்திற்கு வந்திருந்தாய். -ஆமாம். 198 00:12:22,534 --> 00:12:23,869 உன் பெயர் என்ன? 199 00:12:23,952 --> 00:12:25,078 லியன். 200 00:12:25,162 --> 00:12:27,414 -ஆமாம். கிரேமென்? கிரே... -க்ரேசன். 201 00:12:28,957 --> 00:12:31,376 கடவுளே, அவள் வாயை மூட மாட்டாள். 202 00:12:31,460 --> 00:12:32,461 உனக்குத் தெரியுமா? 203 00:12:32,544 --> 00:12:34,087 நீ பேசியதற்கு மகிழ்ச்சி. 204 00:12:35,214 --> 00:12:36,548 நானும், டொரோதியும் பழைய நண்பர்கள். 205 00:12:36,632 --> 00:12:39,301 அவள் இல்லை என்றால், எனக்கு முதல் கேமரா டெஸ்ட் நடந்திருக்காது. 206 00:12:39,384 --> 00:12:43,013 நீயும், டொரோதியும் சிறந்த நண்பர்கள் என்றால், எதற்காக அவளை கஷ்டப்படுத்துகிறாய்? 207 00:12:43,096 --> 00:12:44,640 நான் கஷ்டப்படுத்தவில்லை. 208 00:12:45,933 --> 00:12:48,727 ஏன் அப்படி சொல்கிறாய். நான் என் வேலையைத் தானே செய்கிறேன். 209 00:12:49,937 --> 00:12:50,938 சரி. 210 00:13:00,072 --> 00:13:01,406 லியன் க்ரேசன் 211 00:13:02,824 --> 00:13:04,535 காணவில்லை லியன் க்ரேசன் 212 00:13:08,455 --> 00:13:11,542 எல்லோரும், பாருங்கள். இவள் தான் நமது கடைசி போட்டியாளர். 213 00:13:11,625 --> 00:13:13,085 -உன் பெயர் என்ன? -கேலி. 214 00:13:13,168 --> 00:13:14,461 -கேலி, உனக்கு என்ன வயசு? -எட்டு. 215 00:13:14,545 --> 00:13:18,131 சரி, எல்லோரும், கேலிக்காக கை தட்டுங்கள். 216 00:13:35,440 --> 00:13:39,069 ஆடு, கேலி. போய் ஆடு, கேலி. 217 00:13:40,112 --> 00:13:42,155 -ஹே. -ஹே. 218 00:13:43,532 --> 00:13:44,867 நீ பாதி புலியாக இருக்கிறாய். 219 00:13:44,950 --> 00:13:46,535 இ... இல்லை, எனக்கு இது பிடித்திருக்கிறது. 220 00:13:49,246 --> 00:13:50,289 நீ வேலை செய்வதாக நினைத்தேன். 221 00:13:51,123 --> 00:13:54,084 எங்களிடம் ஐஸ்கிரீம் தீர்ந்துவிட்டது, எனவே வேலையும் முடிந்துவிட்டது. 222 00:13:54,168 --> 00:13:55,711 கேலி! 223 00:13:55,794 --> 00:13:57,629 ஒன்று செய்யலாமா? 224 00:13:59,131 --> 00:14:00,841 என்ன செய்யலாம் என நினைக்கிறாய்? 225 00:14:01,466 --> 00:14:02,926 ஜாலி! 226 00:14:03,010 --> 00:14:05,179 ஜாலி. ஜாலி. 227 00:14:05,262 --> 00:14:06,597 திருமதி. டர்னர்? 228 00:14:06,680 --> 00:14:08,473 -என்ன? -குறிக்கிடுவதற்கு மன்னிக்கவும். 229 00:14:09,224 --> 00:14:11,602 நான்... உங்களை டிவியில் பார்த்திருக்கிறேன். 230 00:14:11,685 --> 00:14:14,271 லிபெர்ட்டி யூனிடேரியனைச் சேர்ந்த நான்சி. 231 00:14:14,354 --> 00:14:18,025 நான் ஷானின் மினிஸ்டர். அவர் உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார். 232 00:14:18,650 --> 00:14:21,737 ஹாய், ஜெரிகோ. உன்னை பார்த்ததும் மகிழ்ச்சி. 233 00:14:22,529 --> 00:14:26,408 மன்னிக்கவும். ஷான் உங்களுடைய தேவாலய சேவைக்கு வருகிறாரா? 234 00:14:26,491 --> 00:14:29,536 தங்கள் நம்பிக்கையை ஒருவர் மறுபடியும் ஏற்றுக்கொள்வது மிகவும் நல்லது. 235 00:14:29,620 --> 00:14:30,662 உங்களை வற்புறுத்தவில்லை, 236 00:14:30,746 --> 00:14:33,790 ஆனால் ஒரு நாள் உங்களையும் தேவாலயத்தில் பார்ப்பதற்கு ஆசைப்படுகிறேன், திருமதி. டர்னர். 237 00:14:34,499 --> 00:14:35,834 நாங்கள் கடிக்க மாட்டோம். 238 00:14:38,462 --> 00:14:39,796 டொரோதி. 239 00:14:39,880 --> 00:14:42,925 மன்னிக்கவும். நீங்கள்... உங்கள் பெயர் என்ன, மினிஸ்டர்... 240 00:14:43,008 --> 00:14:45,469 -ஓ, என் பெயர் நான்சி. -நான்சி. 241 00:14:45,552 --> 00:14:46,762 உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. 242 00:14:48,639 --> 00:14:49,973 ஹே. பரவாயில்லை. 243 00:14:50,974 --> 00:14:52,184 சில்வியா எப்படி இருக்கிறாள்? 244 00:14:55,395 --> 00:14:56,605 தெரியவில்லை. 245 00:14:57,397 --> 00:15:01,235 அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவள் என்னை “கோஸ்ட்” செய்துவிட்டாள். 246 00:15:01,318 --> 00:15:03,612 -“கோஸ்ட்”? -என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டாள். 247 00:15:05,697 --> 00:15:06,782 அது உன் தவறல்லவே. 248 00:15:07,866 --> 00:15:11,036 நான் தான் அந்த சூழ்நிலையை உருவாக்கினேன், எனவே... 249 00:15:13,372 --> 00:15:14,831 உண்மையில், எனக்கு நிம்மதியாக இருக்கிறது. 250 00:15:14,915 --> 00:15:17,835 ஆரம்பத்திலிருந்தே, அவள் எனக்கு சரியானவள் என்று தோன்றவில்லை. 251 00:15:18,836 --> 00:15:21,797 முழுவதுமே மோசமான உறவாக இருந்தது. 252 00:15:21,880 --> 00:15:23,048 அது முடிந்தது பற்றி மகிழ்கிறேன். 253 00:15:28,303 --> 00:15:31,515 -அருமை! -நல்ல வேலை. உனக்கு எது வேண்டும்? 254 00:15:36,103 --> 00:15:37,104 அந்த லாமா. 255 00:15:40,774 --> 00:15:42,401 -நன்றி. -நன்றி, நண்பா. 256 00:15:43,360 --> 00:15:44,695 இதோ. 257 00:15:44,778 --> 00:15:47,072 இல்லை, இல்லை. அது உனக்கு தான். நீயே வைத்துக்கொள். 258 00:15:47,155 --> 00:15:48,365 இல்லை, இதை நீ வைத்துக்கொள். 259 00:15:48,448 --> 00:15:50,868 சரி. உனக்காக இதை நான் பிடித்துகொள்ளவா? 260 00:15:50,951 --> 00:15:51,952 -சரி. -சரி. 261 00:15:52,911 --> 00:15:56,206 உனக்கு இஷ்டம் என்றால், நாம் அந்த பௌன்ஸ் செய்யும் இடத்திற்கு போகலாம். 262 00:15:56,290 --> 00:15:57,499 -சரி. -உனக்கு போக வேண்டுமா? 263 00:15:57,583 --> 00:15:59,084 -ஆம், நிச்சயமாக. -என்ன? 264 00:15:59,168 --> 00:16:01,670 -நாம் பௌன்ஸ் செய்யும் இடத்திற்கு போகலாம். -நீ அங்கு போயிருக்கிறாயா? 265 00:16:01,753 --> 00:16:03,463 -இல்லை. -நீ போனதில்லையா... 266 00:16:06,508 --> 00:16:08,343 மூலையில் என்ன செய்கிறாய்? 267 00:16:08,427 --> 00:16:09,595 அது பயமாக இருக்காது. சத்தியமாக. 268 00:16:10,554 --> 00:16:12,222 இது ரொம்பவும் வேடிக்கையானது. 269 00:16:12,306 --> 00:16:13,599 -அப்படியா? -ஆமாம். 270 00:16:20,355 --> 00:16:22,149 தெரியும். இது ஷார்க் தானே. 271 00:16:22,232 --> 00:16:24,484 இவையெல்லாம் அதன் பற்கள், இது ஷார்க்கின் தாடை. 272 00:16:24,568 --> 00:16:26,111 -நீ சரியாக சொல்லவில்லை. -என்ன? 273 00:16:26,195 --> 00:16:28,405 -அந்த உலகின் விலங்கு கூட இல்லை. -சாம்பல் நிறத்தைப் பயன்படுத்தினாள். யானையா? 274 00:16:28,488 --> 00:16:31,283 டேபிள் மேல் வைக்கப்பட்டிருக்கும் 275 00:16:31,366 --> 00:16:35,746 உன்னுடைய கார்டுகள் மீது இதமான சூரிய ஒளி படுவதை உணர்கிறாயா? 276 00:16:35,829 --> 00:16:36,955 மூன்று நிமிடங்கள் அதிகமானவை. 277 00:16:37,039 --> 00:16:39,458 மூன்று நிமிடங்கள் மட்டும், பிறகு அது வெடிக்கும். 278 00:16:39,541 --> 00:16:42,419 பிறகு... எல்லா இடமும் பிங்க் நிறம் ஆகும். 279 00:16:42,503 --> 00:16:46,215 ஷான் என்னை ஓவன் முழுவதும் சுத்தம் செய்ய வைப்பார். 280 00:16:46,298 --> 00:16:49,426 ஒரு சிறு பொட்டு பிங்க் கூட தெரிய கூடாது, இல்லையென்றால், எனக்கு வேலை போய்விடும். 281 00:17:06,609 --> 00:17:08,529 -ஹலோ? -ஹே, ஷான். 282 00:17:08,612 --> 00:17:11,198 நான், “கோர்மெட் காண்ட்லெட்” நிகழ்ச்சியில் இருந்து டெய்லர் பேசுகிறேன். 283 00:17:11,281 --> 00:17:13,492 என்னை நினைவிருக்கிறதா? ஒரு நிமிடம் பேசலாமா. 284 00:17:13,575 --> 00:17:16,118 நீங்கள் மிகவும் பிஸி என்று தெரியும், ஆனால் நாங்கள் 285 00:17:16,203 --> 00:17:18,454 ஒரு புது தொடர் நிகழ்ச்சி தயாரிக்கிறோம் என்று சொல்ல அழைத்தேன். 286 00:17:18,539 --> 00:17:19,665 அது கிழக்கு கடற்கரையில் நடக்கிறது, 287 00:17:19,748 --> 00:17:21,875 நீங்கள் முன்னிலை கதாபாத்திரமாக நடிக்க விரும்புகிறோம். 288 00:17:21,959 --> 00:17:23,167 நாங்கள் வந்து... 289 00:17:35,639 --> 00:17:37,140 நீ நடனமாட விரும்புகிறாயா? 290 00:17:37,224 --> 00:17:38,350 உண்மையாகவா? 291 00:17:39,059 --> 00:17:40,060 ஆமாம். 292 00:17:56,785 --> 00:17:58,370 பார், அவன் வேகமான இசை போடுகிறான். 293 00:18:05,085 --> 00:18:07,588 இங்கே இருக்கிறாயா. 294 00:18:10,090 --> 00:18:13,010 நான் உங்களது மினிஸ்டரை சந்தித்தேன். 295 00:18:16,805 --> 00:18:18,891 ஜெரிகோவையும் தேவாலயத்திற்கு அழைத்துச் செல்கிறீர்களா? 296 00:18:18,974 --> 00:18:19,975 ஆமாம். 297 00:18:22,311 --> 00:18:24,104 வேண்டுமென்றே, என்னிடம் சொல்ல மறந்துவிட்டீர்கள். 298 00:18:26,440 --> 00:18:28,275 அது முட்டாள்தனம் என நினைப்பாயோ என்று நினைத்தேன். 299 00:18:28,901 --> 00:18:30,235 நாசமாய் போ. 300 00:18:30,736 --> 00:18:32,029 நான் நினைத்தது தவறா? 301 00:18:33,155 --> 00:18:35,157 கண்டிப்பாக அது முட்டாள்தனம் தான். 302 00:18:35,240 --> 00:18:37,034 உங்களுக்கு கடவுள் நம்பிக்கை வந்துவிட்டதா, என்ன? 303 00:18:37,868 --> 00:18:40,495 நான் தேவாலயத்திற்கு போக ஆரம்பித்தது முதல், நல்ல விஷயங்கள் நடக்கின்றன. 304 00:18:40,579 --> 00:18:42,414 சரி, அது உங்களுக்கு நல்லது தான். 305 00:18:42,497 --> 00:18:44,499 ஆனால் நம் மகனை ஒரு மடத்தனமான நிகழ்ச்சிக்கு அழைத்து சென்று 306 00:18:44,583 --> 00:18:46,502 கடவுளை அவன் மீது திணிக்கிறீர்கள். 307 00:18:46,585 --> 00:18:48,629 -நீ அவனுக்கு ஞானஸ்தானம் கொடுத்தாயே. -அது வேறு. 308 00:18:48,712 --> 00:18:50,422 அது எப்படி வேறாகும்? 309 00:18:51,006 --> 00:18:52,508 அது ஒரு சைகை. 310 00:18:52,591 --> 00:18:54,218 உனக்கு அப்படி இருக்கலாம். 311 00:18:54,718 --> 00:18:56,929 என்ன ரகசியம் வேண்டுமானாலும் வைத்துகொள்ளுங்கள். எனக்கு கவலை இல்லை. 312 00:18:57,012 --> 00:19:00,390 ஆனால் நம் மகன் விஷயத்தில், எல்லாமே வெளிப்படையாக இருக்க வேண்டும். 313 00:19:03,393 --> 00:19:06,313 ஜெரிகோவின் வாழ்க்கையில் தேவாலயம் நல்லது செய்யும் என நினைக்கிறேன். 314 00:19:06,939 --> 00:19:08,524 அவனுக்கு நம்பிக்கை கொடுக்கும். 315 00:19:09,191 --> 00:19:10,776 அது எனக்கு முக்கியமான விஷயம். 316 00:19:11,568 --> 00:19:13,612 சரி, இது தான் ஆரம்பம். 317 00:19:14,404 --> 00:19:17,866 நீ நினைப்பது போல் இல்லை. அங்கு ஒன்றும் லத்தீன் மற்றும் சாம்பிராணி மட்டுமில்லை. 318 00:19:17,950 --> 00:19:21,537 உன்னையும், என்னையும் போன்ற, சாதாரணமான மக்கள் இருப்பார்கள். 319 00:19:21,620 --> 00:19:25,249 நீ முயற்சி செய்தால், உனக்கும் நான்சியை பிடிக்கும். 320 00:19:25,332 --> 00:19:26,333 நல்லது. 321 00:19:27,876 --> 00:19:29,795 அப்படியென்றால், நம் டின்னர் விசித்திரமாக இருக்காது. 322 00:19:31,338 --> 00:19:34,299 -நம் டின்னரா? -ஆமாம். அவளை டின்னருக்கு அழைத்திருக்கிறேன். 323 00:19:34,383 --> 00:19:37,636 -நாம் அதைப்பற்றி பேச வேண்டுமா? -எப்போதிலிருந்து நாம் விஷயங்களை பேசுகிறோம்? 324 00:20:09,334 --> 00:20:10,919 -எனக்கு பசிக்கிறது. -என்ன? 325 00:20:11,003 --> 00:20:13,046 பசி! சாப்பாடு! 326 00:20:30,564 --> 00:20:31,648 மன்னிக்கவும். 327 00:20:31,732 --> 00:20:33,108 ஹாய். 328 00:20:34,067 --> 00:20:35,652 இங்கே சாப்பாடு கிடைக்குமா? 329 00:20:41,533 --> 00:20:42,743 மன்னிக்கவும். 330 00:21:03,680 --> 00:21:05,933 டோபி. டோபி! 331 00:21:06,934 --> 00:21:08,143 டொரோதி! 332 00:23:12,851 --> 00:23:15,479 -நீங்கள் நலமா? -ஆமாம். எல்லாம் நலம். 333 00:23:16,271 --> 00:23:17,523 லியன்? 334 00:23:17,606 --> 00:23:19,274 நிச்சயம் அவள் மாடியில் தான் இருப்பாள். 335 00:23:24,154 --> 00:23:25,531 இதோ இருக்கிறாய். 336 00:23:25,614 --> 00:23:27,324 அப்பாடா. உன்னைப் பற்றி கவலைப்பட்டோம். 337 00:23:27,407 --> 00:23:28,992 நீ டோபியை விட்டு ஓடியதாக சொன்னான். 338 00:23:29,076 --> 00:23:30,744 எனக்கு சற்று சோர்வாக இருந்தது. 339 00:23:30,827 --> 00:23:32,412 அப்படியா சரி. 340 00:23:33,497 --> 00:23:34,831 உன்னைப் பாரேன். 341 00:23:35,749 --> 00:23:38,043 ரொம்பவும் சோர்வாக இருப்பாய். 342 00:23:38,126 --> 00:23:42,130 உனக்கு இது மிகப் பெரிய விஷயம். பல அன்னியர்கள் நடுவில் இருப்பது. 343 00:23:42,214 --> 00:23:44,675 நாங்கள் இருவரும் இதற்கு பெருமைப்படுகிறோம். அப்படித்தானே, ஷான்? 344 00:23:45,676 --> 00:23:46,969 இதை வைத்து என்ன செய்வது? 345 00:23:47,928 --> 00:23:49,096 ஜெரிகோவிற்காக இதை ஜெயித்தேன். 346 00:23:49,179 --> 00:23:51,014 அதை தொட்டிலில் வைக்கிறேன். 347 00:23:54,810 --> 00:23:57,062 -நீ நலமா? -ஆமாம். 348 00:23:57,813 --> 00:24:00,524 டோபியோடு ஏதாவது பிரச்சினையா? 349 00:24:00,607 --> 00:24:03,318 இல்லை, எதுவும் இல்லை. நான் மகிழ்ச்சியாக இருந்தேன். 350 00:24:04,486 --> 00:24:05,487 எனக்கும் சந்தோஷம் தான். 351 00:24:05,571 --> 00:24:07,656 சரி, நான் தூங்க போகிறேன். 352 00:24:08,448 --> 00:24:10,534 ஜெரிகோவை நான் தூங்க வைக்கவா? 353 00:24:10,617 --> 00:24:13,871 வேண்டாம். இன்னும் கொஞ்சம் நேரம் நான் அவனோடு விளையாடப் போகிறேன். 354 00:24:15,414 --> 00:24:16,415 நீ போய் தூங்கு. 355 00:26:05,107 --> 00:26:07,109 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்