1 00:01:29,339 --> 00:01:31,633 இவை உனக்குப் பொருந்துகிறதே. 2 00:01:31,717 --> 00:01:33,886 நீ ரொம்ப அழகாக இருக்கிறாய். உன்னைப் பாரேன். 3 00:01:36,805 --> 00:01:38,640 எல்லோரும் என் உடம்பையே பார்ப்பது போல் இருக்கிறது. 4 00:01:39,308 --> 00:01:41,185 பார்த்தால் என்ன? 5 00:01:42,519 --> 00:01:44,897 அதாவது, இது பெண்கள் சாதாரணமாக அணியும் ஆடை தான். 6 00:01:45,731 --> 00:01:47,649 நாள் பூராவும் இதை நீ அணியலாம், தெரியுமா? 7 00:01:47,733 --> 00:01:50,527 பூங்காவிற்கு, கடைக்கு. 8 00:01:50,611 --> 00:01:51,904 வெளியில் போவது பாதுகாப்பில்லை. 9 00:01:53,697 --> 00:01:54,823 நீ வெற்றி பெறுவாய். 10 00:01:54,907 --> 00:01:56,283 அங்கே கூட்டம் அதிகம் இருக்காது. 11 00:01:56,366 --> 00:01:58,493 நாங்கள் உனக்குக் கொஞ்சம் உடற்பயிற்சிகள் சொல்லித் தரலாம் அல்லவா? 12 00:01:58,577 --> 00:02:00,162 எங்களுடைய பயிற்சிக்கு நீ தயாரா? 13 00:02:01,371 --> 00:02:03,373 விவியன் டேல் 14 00:02:05,000 --> 00:02:07,878 இந்தப் பழைய இசைத்தட்டுகளை நீ கண்டுபிடித்ததை என்னால் நம்பவே முடியவில்லை. 15 00:02:07,961 --> 00:02:09,588 இவற்றையெல்லாம் பார்த்துப் பல வருடங்களாகி விட்டன. 16 00:02:11,840 --> 00:02:15,719 ஒரு தடவை, நியூ யார்க்கின், கீழ் கிழக்குப் பக்கத்தில் உள்ள 17 00:02:15,802 --> 00:02:18,472 ஒரு சிறிய கிளப்பில், விவியன் டேல் பாடுவதை நேரில் கேட்டிருக்கிறேன். 18 00:02:19,348 --> 00:02:20,933 அவள் சிறு வயதிலேயே இறந்துவிட்டாள். 19 00:02:22,059 --> 00:02:23,602 போதை மருந்தினால் என்று நினைக்கிறேன். 20 00:02:24,353 --> 00:02:26,480 ஒருவேளை அவளுடைய காதலன் ஏமாற்றியிருக்கலாம். 21 00:02:27,022 --> 00:02:31,109 எனக்கு ஞாபகமில்லை, ஆனால், அடடா, மேடையில் பாடும் போது, பெண் தெய்வம் மாதிரி இருப்பாள். 22 00:02:31,610 --> 00:02:36,281 அவள் அதிக வேதனை அனுபவித்தாள், ஆனால் தன் வேதனையை எல்லாம் ஆற்றலாக மாற்றிவிட்டாள். 23 00:02:38,408 --> 00:02:40,410 அருமையாக செய்கிறாய். அப்படித்தான்! 24 00:02:40,494 --> 00:02:41,662 கைகளை வெறுமென நீட்டக் கூடாது. 25 00:02:41,745 --> 00:02:44,540 சக்தி முழுவதும் விரல் நுனிகளுக்குச் செல்லும் விதத்தில் நீட்ட வேண்டும். 26 00:02:44,623 --> 00:02:46,792 ஆம், ஒவ்வொரு நிலையிலும் நீ இப்படித் தான் செய்ய வேண்டும். 27 00:02:48,252 --> 00:02:49,628 உன்னைப் பாரேன். 28 00:02:51,213 --> 00:02:52,756 என் நடனம் மோசமாக இருக்கும். 29 00:02:53,465 --> 00:02:54,466 என்ன? 30 00:02:55,509 --> 00:02:56,927 ஏன் அப்படிச் சொல்கிறாய்? 31 00:02:58,637 --> 00:03:00,222 என் அம்மா வழக்கமாக அப்படித் தான் சொல்வார். 32 00:03:02,266 --> 00:03:04,643 அழகுப் போட்டிக்காக நான் நடனம் கற்றுக்கொள்ளும் போதெல்லாம், 33 00:03:05,143 --> 00:03:07,729 நான் சரியாக ஆடும் வரை, இரவு உணவை சாப்பிடக் கூட அனுமதிக்க மாட்டார். 34 00:03:09,022 --> 00:03:12,442 எனக்கு ஞாபகம் இருக்கிறது, என்னால் முடிந்தளவு நன்றாக ஆட நான் முயற்சித்தேன். 35 00:03:12,943 --> 00:03:15,404 சரியாகப் பண்ணுவது என்பது முடியாத காரியமாகி விடும், 36 00:03:15,487 --> 00:03:18,115 இறுதியில் பசியும், சோர்வும் அடைந்து விடுவேன். 37 00:03:19,825 --> 00:03:21,285 அன்பே. 38 00:03:22,327 --> 00:03:23,871 டொரோதி, எனக்கு உன் உதவி வேண்டும்! 39 00:03:24,538 --> 00:03:25,664 என்ன விஷயம்? 40 00:03:26,290 --> 00:03:27,583 பாதுகாப்பு ஆள்! 41 00:03:28,125 --> 00:03:29,543 அடச்சே. 42 00:03:30,085 --> 00:03:32,921 அடக் கடவுளே, இந்த சந்திப்பிற்கு நான் போக வேண்டும். 43 00:03:33,005 --> 00:03:34,006 திரும்பி வருவீர்களா? 44 00:03:34,089 --> 00:03:37,885 இல்லை. மன்னித்துவிடு. நாம் மறுபடியும் நாளை தொடரலாம். சரியா? 45 00:03:53,817 --> 00:03:57,362 நான் உட்கார்ந்திருக்கிற இடத்திலிருந்து பார்த்தால், 15 பயங்கர அபாயங்கள் தெரிகின்றன. 46 00:03:58,030 --> 00:03:59,156 இந்த மேஜையில் இருந்து தொடங்கலாம். 47 00:04:00,073 --> 00:04:01,450 இதற்கு பம்பர்கள் போடுங்கள். 48 00:04:01,533 --> 00:04:03,952 இந்த ஆயுதக் கவசங்களை அங்கே பொறுத்த வேண்டும். 49 00:04:04,494 --> 00:04:05,537 கூரான முனைகளிலா? 50 00:04:05,621 --> 00:04:07,831 மோசமாக இருக்கிறது. குழந்தைகள் ஏற விரும்புவார்கள். 51 00:04:07,915 --> 00:04:10,417 மரச்சாமான்கள் மேல் இடித்துக் கொள்வதால், ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும், ஒரு குழந்தை இறக்கிறது. 52 00:04:10,501 --> 00:04:11,502 அடக் கடவுளே. 53 00:04:11,585 --> 00:04:14,338 ஹே. அதைச் சுவரோடு சேர்த்து அடித்து விடுவோம், சரியா? 54 00:04:14,421 --> 00:04:15,631 சரி. 55 00:04:16,130 --> 00:04:18,300 இப்பொழுது,வெளிப்புறம். 56 00:04:19,343 --> 00:04:21,845 மின்சாரம் தாக்கி ஒவ்வொரு வருடமும் நூறு குழந்தைகள் இறக்கின்றன. 57 00:04:22,596 --> 00:04:23,680 சோகம். ரொம்பச் சோகமான விஷயம். 58 00:04:26,725 --> 00:04:29,478 ஒவ்வொரு தளத்திலும் பாதுகாப்பு கதவுகள் அமைத்து அவற்றின் பக்கங்களில் ஃபிளெக்ஸி வைக்கலாம், 59 00:04:29,561 --> 00:04:32,022 ஏனெனில், தங்களது சின்ன தலைகளை இந்த கம்பிகளுக்குள் நுழைத்துக் கொள்வது குழந்தைகளுக்குப் பிடிக்கும். 60 00:04:33,774 --> 00:04:36,610 நாங்கள் முடிக்கும் வரை அவனைப் பார்த்துக்கொள்கிறாயா, லியன்? 61 00:04:36,693 --> 00:04:37,694 நன்றி. 62 00:04:48,288 --> 00:04:50,707 நாம் இந்தத் துப்புரவுப் பொருட்கள் அனைத்தையும் எடுக்க வேண்டும். 63 00:04:50,791 --> 00:04:54,962 வேண்டாம். கேபினட்களையெல்லாம் பூட்ட வேண்டும், அப்புறம் ஸ்டவ்விற்கும் திருகு போட வேண்டும். 64 00:04:55,963 --> 00:04:57,214 அது அவ்வளவு அவசியமா என்ன? 65 00:04:57,297 --> 00:04:59,967 நான் ஒரு தொழில்முறை சமையல் நிபுணர், சில பொருட்கள் இடைஞ்சலாக இருக்கக் கூடாது... 66 00:05:00,050 --> 00:05:01,593 -ஷான். -உங்களுக்கு இது தேவைப்படாது. 67 00:05:02,803 --> 00:05:05,055 நான் இங்கே இருக்கும் வரை, ஜெரிகோவிற்கு எதுவும் நேராது. 68 00:05:06,723 --> 00:05:07,724 லியன். 69 00:05:09,059 --> 00:05:11,603 அவனுக்குப் பசிக்கிறது. நீங்கள் அவனுக்கு பாலூட்ட வேண்டும். 70 00:05:14,690 --> 00:05:15,774 நாங்கள் இதோ வந்துவிடுகிறோம். 71 00:05:21,655 --> 00:05:24,157 குழந்தை பராமரிப்பாளருக்குத் தான் இங்கே முழு அதிகாரமா, என்ன? 72 00:05:33,125 --> 00:05:34,501 ...விசேஷ அறிக்கையோடு. 73 00:05:34,585 --> 00:05:36,628 இன்றைய நிகழ்ச்சியை இணைந்து நடத்தும் அமைப்பாளர்கள் சொன்னது... 74 00:05:36,712 --> 00:05:37,921 எனக்கு அந்த ஆளைப் பிடிக்கவே இல்லை. 75 00:05:39,381 --> 00:05:41,633 லியன், அவர் உன்னுடைய கிறுக்குப் பிடித்த சமூகத்தினர் கிடையாது. 76 00:05:42,301 --> 00:05:44,011 பல வருடங்களாக இந்த நிறுவனத்திற்குச் சொந்தக்காரர். 77 00:05:44,094 --> 00:05:46,346 என் மகனுக்கு எது நல்லது என எனக்குத் தெரியும் என்பதை நீ நம்ப வேண்டும் 78 00:05:46,430 --> 00:05:47,431 மாளிகையில் வசந்தம் 79 00:05:47,514 --> 00:05:49,266 ...டஸ்கணியில் உள்ள மாளிகையில் நீண்ட கால வாசம். 80 00:05:49,349 --> 00:05:51,476 “மாளிகையில் வசந்தம்” நிகழ்ச்சியை இசபெல் செய்வதை என்னால் நம்ப முடியவில்லை. 81 00:05:51,560 --> 00:05:53,854 இந்த விருந்து நிகழ்ச்சியை நான் எட்டு வருடங்களாக செய்கின்றேன். 82 00:05:53,937 --> 00:05:56,148 உங்களைக் கேட்கவில்லை என்பதில் எனக்கு சந்தோஷம் தான். 83 00:05:56,231 --> 00:05:58,442 -நீங்கள் இங்கே வீட்டில் இருக்க வேண்டும். -...“வசந்தம் மலர்ந்து விட்டது.” 84 00:05:58,525 --> 00:06:00,736 -நாம் கண்டிப்பாக... -இது ரொம்ப வேதனையாக இருக்கிறது. 85 00:06:00,819 --> 00:06:02,196 நான் இருப்பதே அவர்களுக்குத் தெரியவில்லை போல. 86 00:06:02,279 --> 00:06:04,740 நடன அரங்கம் நிறைந்துள்ளது, மதுக்கூடம் திறந்திருக்கிறது... 87 00:06:04,823 --> 00:06:07,159 கடவுளே, இவனுக்கு ஏதாவது கிடைக்கிறதா என்று கூடத் தெரியவில்லை. 88 00:06:07,826 --> 00:06:10,204 இவன் திட உணவு சாப்பிட ஆரம்பித்ததில் இருந்து எனக்குப் பால் சுரப்பது குறைந்துவிட்டது. 89 00:06:10,287 --> 00:06:12,664 அவனது எடை அதிகரிக்க, வைட்டமின் நிறைந்த வேறு உணவு தரவேண்டும். 90 00:06:12,748 --> 00:06:14,791 இல்லை. இல்லை, உங்களுடைய பாலே போதுமானது. 91 00:06:14,875 --> 00:06:16,710 நீங்கள் அவனுக்கு தேவைப்படும் போது பால் கொடுப்பதில்லை. 92 00:06:17,252 --> 00:06:19,588 போதுமான அளவு தண்ணீர் குடிப்பதுமில்லை. தயவுசெய்து, இதைக் குடிக்கிறீர்களா? 93 00:06:19,671 --> 00:06:21,673 -...உங்கள் வாழ்க்கையில் ஒரு ஆண் இருந்தால்... -இதைக் குடியுங்கள். 94 00:06:21,757 --> 00:06:24,051 -...அவர் திரையில் தோன்றாமல் இருந்திருந்தால்... -பரவாயில்லை. விடு. 95 00:06:24,134 --> 00:06:28,305 ...குறிப்பாக அவர் 55 வயதிற்கு மேல் இருந்தால், இதுதான் அதைச் செய்ய சரியான நேரம். 96 00:06:29,097 --> 00:06:31,433 எந்த சாக்குப் போக்கும் சொல்லிக்கொண்டு அதைத் தள்ளிப் போட வேண்டாம். 97 00:06:31,934 --> 00:06:33,685 டாக்டரிடம் செல்வதை ஆண்கள் எவ்வளவு வெறுக்கிறார்கள் என தெரியும், 98 00:06:33,769 --> 00:06:36,688 ஆனால் இது உண்மையிலேயே வாழ்விற்கும், சாவிற்கும் இடையே உள்ள விஷயம். 99 00:06:37,981 --> 00:06:40,234 வால்ட்டர், இதைப்பற்றி என் பயிற்சியாளரிடம் சொல்லிவிடாதே, சரியா? 100 00:06:47,115 --> 00:06:48,283 இங்கிருக்கிறாயா. 101 00:06:50,202 --> 00:06:53,121 உனக்கு நல்லது தான். கொஞ்சம் சுத்தமான காற்று கிடைக்கும். 102 00:06:57,167 --> 00:06:58,252 இப்பவும் நாம் நண்பர்கள் தானே? 103 00:07:08,345 --> 00:07:09,346 எங்கே போகிறீர்கள்? 104 00:07:10,305 --> 00:07:12,015 டிவி நிலையத்தில் ஒரு சந்திப்பிற்காக கேட்டிருந்தேன். 105 00:07:12,099 --> 00:07:14,852 சில சமயங்களில் நாமே நேராக போய், நமக்கு தேவையானதைக் கேட்க வேண்டும். 106 00:07:15,435 --> 00:07:17,020 ஜெரிகோ ஷானிடம் இருக்கிறான். எனக்கு வாழ்த்து சொல். 107 00:07:22,192 --> 00:07:23,318 என்னிடம் நெருங்கி வராதே. 108 00:07:23,402 --> 00:07:24,736 நான் உன்னிடம் பேச வேண்டும். 109 00:07:44,298 --> 00:07:45,424 -ஹே. -வணக்கம், செஃப். 110 00:07:46,133 --> 00:07:47,759 நீங்கள் இவளை சந்திக்க வேண்டும். 111 00:07:47,843 --> 00:07:49,344 -சில்வியா. ஹாய். -ஹாய். 112 00:07:49,428 --> 00:07:52,472 ஒருவரின் படகில் தனிப்பட்ட செஃப்பாக சில காலம் இருந்தேன், 113 00:07:52,556 --> 00:07:53,974 ஆனால் அவர் ஃபெட்களால் கைது செய்யப்பட்டார், 114 00:07:54,057 --> 00:07:56,810 எனவே இப்போது என் கல்வி கடனை அடைப்பதற்காக வேலைத் தேடுகிறேன், சரியா? 115 00:07:57,603 --> 00:07:58,645 ஆமாம், புரிகிறது. 116 00:07:59,188 --> 00:08:01,565 ஹே, லியன், என் காதலி, சில்வியாவை சந்திக்கிறாயா. 117 00:08:02,608 --> 00:08:04,151 லியன் தான் ஜெரிகோவைப் பார்த்துக்கொள்கிறாள். 118 00:08:05,402 --> 00:08:06,403 ரொம்ப அழகு. 119 00:08:06,987 --> 00:08:09,114 இவனுக்கு, 18 மாதங்கள் இருக்குமா? 120 00:08:09,198 --> 00:08:11,241 ஒன்பது மாதங்கள். அவன் சற்று பெரியவனாக இருக்கிறான். 121 00:08:11,325 --> 00:08:12,326 இவன் கச்சிதமாக இருக்கிறான். 122 00:08:15,704 --> 00:08:18,999 எனவே, ஒரு பெரிய வேலைக்கு உதவி தேவைப்பட்டால் 123 00:08:19,082 --> 00:08:21,627 கண்டிப்பாக, சில்வியா உங்களுக்கு உதவி செய்வாள். 124 00:08:21,710 --> 00:08:24,379 என்னிடம் பரிந்துரைகள் உண்டு. அதாவது, அந்த படகு ஆசாமி கிடையாது. அவர் சிறையில் இருக்கிறார். 125 00:08:24,463 --> 00:08:27,132 ஆனால் ஒரு வருடம் நான் ஜீன்-ஜார்ஜஸில் வேலை செய்ததால், எது வேண்டுமானாலும் சமைப்பேன். 126 00:08:27,216 --> 00:08:30,594 சரி, அது சிறப்பு. அருமை. பெரும்பாலும் நான்... 127 00:08:30,677 --> 00:08:33,263 காலம் கடக்கும் வரை, தங்களுக்கு உதவி தேவை என்றே மக்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். 128 00:08:38,059 --> 00:08:39,269 எனக்கு வேலை இருக்கிறது. 129 00:08:39,352 --> 00:08:42,940 சரி. வேண்டுமென்றால், நான் முதல் ஷிப்டில் இலவசமாக வேலை செய்கிறேன். சோதனை முயற்சியாக. 130 00:08:43,732 --> 00:08:45,400 சரி, நான் நினைவில் வைத்துக்கொள்கிறேன். 131 00:08:45,484 --> 00:08:47,611 நன்றி, செஃப். நாளை சந்திக்கலாம். 132 00:08:47,694 --> 00:08:49,821 -சரி. -உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. 133 00:08:49,905 --> 00:08:51,573 கோர்மெட் காண்ட்லெட்டில் உங்களை ரொம்ப ரசித்தேன். 134 00:08:54,034 --> 00:08:55,369 இது என்ன கன்றாவி? 135 00:08:55,869 --> 00:08:58,580 புது வேலை வேண்டும் என்று ஆவல், ஆனால் இப்படியா நடப்பது. 136 00:08:58,664 --> 00:09:00,916 ஏதோ ஒரு சமையல்காரியை என் மீது திணிப்பதை விட, டோபி வேறு ஏதாவது செய்யலாம். 137 00:09:01,708 --> 00:09:03,043 நாளை உங்களுக்கு என்ன வேலை? 138 00:09:03,126 --> 00:09:04,461 உணவு தயாரிக்கும் மோசமான வேலை தான். 139 00:09:04,545 --> 00:09:07,339 உண்மையில், நீ விரும்பினால், உனக்கு நான் சில வேலை தருகிறேன். 140 00:09:07,422 --> 00:09:08,715 சரி, மிக்க மகிழ்ச்சி. 141 00:09:09,424 --> 00:09:13,470 நல்லது. சரி, ஜெரிகோவோடு டொரோதி இருக்கலாம். நீ மிட்டாய் செய்திருக்கிறாயா? 142 00:09:14,346 --> 00:09:15,597 இல்லை. 143 00:09:15,681 --> 00:09:18,851 நாங்கள் பேஷன் ஃபுரூட் மற்றும் ஃபிளேர் டி செல் வைத்து சால்ட்வாட்டர் டாஃபி செய்கிறோம். 144 00:09:18,934 --> 00:09:21,937 அது காற்று புகுந்து வெள்ளை ஆகும் வரை, அதை ஹூக்கின் மேல், 145 00:09:22,437 --> 00:09:24,314 போட்டு போட்டு எடுக்க வேண்டும். 146 00:09:24,398 --> 00:09:25,399 அது வேடிக்கையானது. 147 00:09:25,482 --> 00:09:28,443 ஒல்லியான கைகளில் அது சற்று தசைகளை உருவாக்கும். 148 00:09:28,527 --> 00:09:30,654 ஹே, நான் வலிமையானவள் தான். 149 00:09:30,737 --> 00:09:34,116 ஆம், இந்த குட்டி பையனை தூக்கி கொண்டு அலைவதால், அது சரிதான். 150 00:09:36,368 --> 00:09:38,954 அவனைத் தூங்க வைத்து விட்டு, வா. நாம் மெனு பற்றி பேசலாம். 151 00:09:39,037 --> 00:09:40,038 சரி, செஃப். 152 00:09:40,873 --> 00:09:45,252 இப்பதான் குழந்தையை பாதுகாக்கும் வழிக்கான தொகை தெரிந்தது: 99 சென்ட்களுக்கு 3,000 டாலர்கள்... 153 00:09:45,335 --> 00:09:49,631 நன்றி. ஆமாம், நானும் தான். மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். 154 00:09:51,049 --> 00:09:54,469 நான் மீண்டும் வந்துவிட்டேன்! ஆட்டத்திற்குத் தயார். 155 00:09:54,553 --> 00:09:57,222 நகரிலுள்ள தெரு ஓவியங்களைப்பற்றிய விரிவான அறிக்கை. 156 00:09:57,306 --> 00:09:59,516 தெரியவில்லை, என் வாயை அடைக்க இதை செய்கிறார்கள் போலிருக்கிறது. 157 00:09:59,600 --> 00:10:02,936 யாருக்கு கவலை? நான் இதற்கு தகுதியானவள் என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கொடுக்கிறார்கள். 158 00:10:03,020 --> 00:10:04,771 நீ இதற்குத் தகுதியானவள் தான். 159 00:10:04,855 --> 00:10:06,023 அடச்சே! 160 00:10:06,106 --> 00:10:07,900 நாடு முழுவதும் பேசப்படக் கூடிய ஒரு விஷயம் இது. 161 00:10:07,983 --> 00:10:09,776 -எப்போது தொடங்குகிறது? -நாளைக்கு. 162 00:10:10,444 --> 00:10:12,196 எல்லாம் சரியாக நடந்தால், வாரம் முழுவதும் வேலையாக இருப்பேன். 163 00:10:13,113 --> 00:10:15,157 நாளைக்கு, கிச்சனில் லியனின் உதவி தேவை. 164 00:10:17,409 --> 00:10:18,911 டோபி இருக்கிறானே? 165 00:10:18,994 --> 00:10:21,496 ஆம், ஆனால் நிறைய முன்னேற்பாடு வேலை இருக்கிறது, அதனால் அவளது உதவியும் தேவை. 166 00:10:21,580 --> 00:10:23,665 ஜெரிகோவைப் பார்த்துக்கொள்ள வேறு யாராவது கிடைப்பார்களா? 167 00:10:25,459 --> 00:10:27,544 திடீரென்று, விரலை சொடுக்கி, நம் குழந்தையை பார்த்துக்கொள்ள 168 00:10:27,628 --> 00:10:30,047 ஒரு ஆளை என்னால் ஏற்பாடு செய்ய முடியுமா? 169 00:10:30,923 --> 00:10:33,550 முடியாது, ஆனால் லியன் இதை மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கிறாள். 170 00:10:33,634 --> 00:10:36,053 ஷான், அவள் எப்போது வேண்டுமானாலும் உங்களோடு சமைக்கலாம். 171 00:10:36,929 --> 00:10:40,057 இந்த ஒரு வாரம் என் மீதும், என்னுடைய வேலை மீதும், நான் கவனம் செலுத்த வேண்டும். 172 00:10:41,350 --> 00:10:42,476 உங்களால் இதாற்கு உதவ முடியுமா? 173 00:11:06,667 --> 00:11:09,795 மன்னித்துவிடு. இன்று என்னால் பாடம் எடுக்க முடியாது. 174 00:11:09,878 --> 00:11:11,338 ஏன் இப்படி உடை அணிந்திருக்கிறீர்கள்? 175 00:11:12,005 --> 00:11:15,634 இப்போது, எனக்கு உரித்தான மரியாதை கொடுக்கிறார்கள், 176 00:11:15,717 --> 00:11:17,261 மற்றும் ஒரு பெரிய வேலை கொடுத்திருக்கிறார்கள். 177 00:11:17,344 --> 00:11:20,013 எனவே, இந்த வாரம் நிறைய வேலை இருக்கிறது. 178 00:11:20,806 --> 00:11:23,433 கிச்சனில் உதவி செய்ய ஷானிற்கு வேறு ஆள் கிடைத்து விட்டார்கள் 179 00:11:23,517 --> 00:11:25,435 எனவே நீ ஜெரிகோவைப் பார்த்துக்கொள்ளலாம். 180 00:11:27,145 --> 00:11:28,981 இந்த பட்டன்களை சரியாக போட்டிருக்கிறேனா? 181 00:11:36,363 --> 00:11:37,614 எப்போது வீட்டிற்கு வருவீர்கள்? 182 00:11:39,491 --> 00:11:40,576 தாமதமாக. 183 00:11:41,243 --> 00:11:44,538 அது நேரலை தான், ஆனால் ஒரு பார்ட்டியின் காட்சிகள் எடுக்க வேண்டும். 184 00:11:47,791 --> 00:11:49,793 நீங்கள் தாமதமாக வருவது, ஜெரிகோவிற்கு நல்லதல்ல. 185 00:11:50,335 --> 00:11:53,714 லியன், நான் வீட்டில் இல்லாதது உனக்கு பதட்டமாக இருக்கிறது என்று தெரியும். 186 00:11:55,716 --> 00:11:57,176 இன்னும் சில பட்டன்கள் தான். 187 00:12:01,305 --> 00:12:04,266 வேலைக்கு போன பெண்களிடையே நீ வளரவில்லை என தெரியும், 188 00:12:05,392 --> 00:12:07,728 ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இது சாதாரணம் கிடையாது. 189 00:12:08,937 --> 00:12:10,272 என் வேலையை நேசிக்கிறேன். 190 00:12:11,440 --> 00:12:12,858 அது எனக்கு மகிழ்ச்சி கொடுக்கிறது. 191 00:12:13,567 --> 00:12:15,402 சிறப்பான தாயாக ஆக்குகிறது. 192 00:12:15,485 --> 00:12:19,823 ஒருவேளை, ஷானிற்கு ஏதாவது நேர்ந்தால், இந்த குடும்பத்தை என்னால் காப்பாற்ற முடியும். 193 00:12:21,450 --> 00:12:23,410 ஷானிற்கு எதுவும் நடக்க விட மாட்டேன். 194 00:12:27,998 --> 00:12:28,999 நன்றி. 195 00:12:30,959 --> 00:12:33,545 இந்த வாரம் எனக்கு உதவியாக இருப்பதற்கு நன்றி. 196 00:12:33,629 --> 00:12:36,632 தொலைக்காட்சியில் நீ என்னைப் பார்க்கும் போது, உன் உதவி இல்லாமல் 197 00:12:38,425 --> 00:12:41,220 இது கண்டிப்பாக சாத்தியம் இல்லை என்று நீ புரிந்துகொள்ள வேண்டும். 198 00:12:42,012 --> 00:12:44,389 கூடவே, உன்னுடைய எதிர்காலம் பற்றியும் நாம் யோசிக்க வேண்டும். 199 00:12:44,890 --> 00:12:47,518 உன்னுடைய ஹை ஸ்கூல் படிப்பை நீ முடிக்கலாம். 200 00:12:47,601 --> 00:12:50,395 வீட்டை விட்டு போகாமல் எல்லாவற்றையும் ஆன்லைனிலேயே நீ செய்யலாம். 201 00:12:50,479 --> 00:12:53,857 உன்னுடைய இலக்கை நோக்கி பயணம் செய்து, நீ விருப்பப்படும் 202 00:12:53,941 --> 00:12:56,610 பெண்ணாக ஆவதற்கு நாங்கள் உதவி செய்ய விரும்புகிறோம். 203 00:12:57,528 --> 00:12:59,488 இந்த குடும்பத்தைப்பற்றி மட்டும் தான் எனக்கு அக்கறை. 204 00:13:11,834 --> 00:13:14,086 ஹே, குட்டி. பச்சை பட்டாணி வேண்டுமா? 205 00:13:14,169 --> 00:13:16,171 வேண்டாம், முட்டாளே. அவனுக்கு மூச்சு திணறக்கூடும். 206 00:13:16,255 --> 00:13:17,840 அவன் அதோடு விளையாடலாமே. பரவாயில்லை. 207 00:13:20,259 --> 00:13:21,760 ஓவனில் இருக்கும் டார்ட் ஷெல்களை எடுத்து பார்த்தாயா? 208 00:13:21,844 --> 00:13:23,178 பார்த்தேன். ஐந்து நிமிடங்கள் இருக்கின்றன. 209 00:13:24,763 --> 00:13:26,557 அந்த மோதிரத்தை கழட்டி வைக்கிறாயா? 210 00:13:26,640 --> 00:13:28,976 அதில் இருக்கும் கல்லை ஆசிட் பாதிக்கக்கூடும். 211 00:13:29,059 --> 00:13:31,353 ஆமாம். அதை கழட்ட முடிந்தால், அப்படி செய்யலாம். 212 00:13:31,436 --> 00:13:33,438 தட்டான் அதை வெட்டித்தான் எடுக்க வேண்டும். 213 00:13:33,522 --> 00:13:36,400 இவ்வளவு சிறியது என நினைக்கவில்லை. அளவு ஆறு என சொன்னேன். 214 00:13:36,483 --> 00:13:38,151 என் இடது கையின் அளவு தான் ஆறு. 215 00:13:38,235 --> 00:13:40,320 நீ அதை உன் இடது கையில் போட்டுக் கொள்வாய் என்று நினைத்தேன். 216 00:13:40,404 --> 00:13:43,031 செல்லமே, இந்த விரலில் வைரம் போட்டுக்கொள்ள வேண்டும். 217 00:13:43,532 --> 00:13:44,908 -சரி. -நீ என்ன செய்கிறாய்? 218 00:13:44,992 --> 00:13:47,703 ஷான் ப்ருனோய்ஸ் என்று சொன்னாரே தவிர, மோசமான வத்திகுச்சிகள் என்றல்ல. இதோ. 219 00:13:48,912 --> 00:13:51,206 -ஹே, டோபி. நீ சற்று ஓய்வு எடுக்கிறாயா? -சரி. 220 00:13:51,290 --> 00:13:53,125 -இதை பூங்காவிலுள்ள குழந்தைகளுக்கு கொண்டு போ. -சரி. 221 00:13:59,298 --> 00:14:00,591 நீ ஏன் டோபியிடம் கோபப்படுகிறாய்? 222 00:14:01,592 --> 00:14:02,634 என்ன சொல்கிறாய்? 223 00:14:02,718 --> 00:14:04,136 ரடிச்சியோ கப்புகள் எங்கே? 224 00:14:07,264 --> 00:14:09,141 நல்லது, செஃப். நல்ல வேலை. 225 00:14:13,478 --> 00:14:17,524 ஹே, ஷான், நீங்கள் சொந்த உணவகம் ஆரம்பிக்க யோசித்திருக்கிறீர்களா? 226 00:14:18,066 --> 00:14:22,446 ஆமாம், யோசித்திருக்கிறேன். ஆனால் அது நடக்கும் என்று தோன்றவில்லை. 227 00:14:22,988 --> 00:14:24,823 சும்மா சொல்கிறேன். எனக்கு சில முதலீட்டாளர்களைத் தெரியும். 228 00:14:24,907 --> 00:14:27,951 அவர்கள் தேடும் சரியான வகை செஃப் நீங்கள் தான். 229 00:14:28,035 --> 00:14:31,455 இளமையான, துடிப்பான, குறிக்கோளுடைய நபர். ஒரு சூப்பர் ஸ்டார். 230 00:14:31,538 --> 00:14:33,957 சரி, இன்றைய பொழுதை சிறப்பாக கழிக்க இப்போது முயற்சி செய்கிறேன். 231 00:14:34,041 --> 00:14:36,043 சரி. உங்களுக்கு ஒரு மிஷேலின் ஸ்டார் கிடைக்கும் போது, 232 00:14:36,126 --> 00:14:37,544 என்னை நினைக்க மறக்காதீர்கள். 233 00:14:38,253 --> 00:14:41,089 ஹே, செஃப், அவர்கள் அங்கே இல்லை. போய் விட்டார்களோ? 234 00:14:41,173 --> 00:14:44,176 நீ என்ன முட்டாளா? ஆதரவில்லாத இளைஞர்கள் இப்படிப்பட்ட உணவை தவிர்ப்பார்களா? 235 00:14:47,012 --> 00:14:49,306 அடச்சே. இது பாதுகாப்புத்துறை அதிகாரி. 236 00:14:49,389 --> 00:14:52,184 லியன், கதவைத்திறந்து அவருக்கு தேவையானதை கொடுக்க முடியுமா? 237 00:14:58,315 --> 00:15:01,735 இதோ. வேறு ஏதாவது வேண்டுமென்றால், கிச்சனில் வந்து என்னைப் பாருங்கள். 238 00:15:01,818 --> 00:15:04,321 உண்மையில், நீ இங்கே கொஞ்சம் இருந்தால் நன்றாக இருக்கும். 239 00:15:04,404 --> 00:15:07,407 இது அழகான வீடு. நான் எதையும் பாழாக்க விரும்பவில்லை. 240 00:15:11,662 --> 00:15:13,413 நீ எவ்வளவு நாட்களாக இங்கே வேலை செய்கிறாய்? 241 00:15:13,497 --> 00:15:14,623 சில மாதங்களாக. 242 00:15:15,290 --> 00:15:16,416 உன்னை நன்றாக நடத்துகிறார்களா? 243 00:15:17,417 --> 00:15:18,710 மாலை ஓய்வு உண்டா? வாரக் கடைசி விடுமுறையா? 244 00:15:19,211 --> 00:15:20,546 நகரில் பல சிறப்பான கிளப்புகள் இருக்கின்றன. 245 00:15:22,047 --> 00:15:23,257 உன் வயது என்ன? 246 00:15:24,800 --> 00:15:25,801 18 வயதாகிறது. 247 00:15:30,055 --> 00:15:31,056 நீ உடற்பயிற்சி செய்வாயா? 248 00:15:32,349 --> 00:15:34,476 அதாவது, ஸூம்பா போன்ற ஏதாவது? 249 00:15:35,185 --> 00:15:37,855 நீ நன்றாக நடனம் ஆடுவாய். சரியா? 250 00:15:37,938 --> 00:15:39,273 எனக்கு கொஞ்சம் ஆடி காண்பி. 251 00:15:40,899 --> 00:15:42,067 ஹே, பரவாயில்லை. 252 00:15:42,651 --> 00:15:44,027 என்னைப் பார்த்து பயப்பட வேண்டாம். 253 00:15:48,824 --> 00:15:52,286 நகரில் என் நண்பனுக்கு ஒரு இடம் இருக்கிறது. பணக்காரர்கள் வரும் இடம். 254 00:15:52,369 --> 00:15:54,663 நான் உன்னை அழைத்துச் சென்றால், உன் ஐடியை கூட பார்க்க மாட்டார்கள். 255 00:16:06,633 --> 00:16:08,218 இது என் தவறு, சரியா? 256 00:16:08,302 --> 00:16:09,928 நான் வேசி போல இருக்கிறேனா? 257 00:16:10,512 --> 00:16:11,805 இப்போது உங்களுக்கு சந்தோஷமா? 258 00:16:12,347 --> 00:16:13,807 உங்களுக்கு சந்தோஷமா? 259 00:16:25,527 --> 00:16:27,196 என் வழி விட்டு விலகு. 260 00:16:31,033 --> 00:16:33,744 டோபி, அந்த மிட்டாய் தயாராகிவிட்டது. உனக்கு என்ன பிரச்சினை? 261 00:16:33,827 --> 00:16:35,245 அதை அலங்கரிக்க எனக்கு வந்து உதவு. 262 00:16:36,079 --> 00:16:37,247 என்ன? 263 00:16:39,249 --> 00:16:42,377 நிறுத்து! நிறுத்து! கடவுளே! நான் ஏற்கனவே செய்தவற்றை நீ பாழாக்க போகிறாய். 264 00:16:42,461 --> 00:16:44,963 டோபி! தயவு செய்து, குப்பையை வெளியே வை! 265 00:16:50,052 --> 00:16:52,012 உன்னிடம் அவள் அப்படி பேச நீ அனுமதிக்கலாமா? 266 00:16:52,095 --> 00:16:53,388 எல்லா செஃப்களும் அப்படித்தான் பேசுவார்கள். 267 00:16:53,472 --> 00:16:56,016 ஷான் உன்னிடம் நூறு தடவை இப்படி கத்துவதைப் பார்த்திருக்கிறேன். அது வேறு. 268 00:16:56,099 --> 00:16:57,309 அவள் உன்னைத் திட்டுகிறாள். 269 00:16:57,392 --> 00:17:00,437 சில்வியா வருத்தமான ஒரு நபர். சில நேரங்களில் அப்படிப்பட்டவர்கள்... 270 00:17:00,521 --> 00:17:02,606 அவளுக்கு உன்னைப் பிடிக்கவில்லை, டோபி. 271 00:17:03,273 --> 00:17:05,567 சாதாரண வாழ்க்கை வாழ நீ விரும்புகிறாய், 272 00:17:05,651 --> 00:17:08,612 ஆனால் மற்றவர்கள் தங்கள் இஷ்டப்படி உன்னை நடத்த நினைக்கிறார்கள். 273 00:17:08,694 --> 00:17:12,074 மோசமானவற்றை செய்கிறார்கள். நீ அதை எதிர்க்க மாட்டாய். 274 00:17:12,156 --> 00:17:13,575 அது நியாயம் இல்லை. 275 00:17:14,284 --> 00:17:16,578 லியன்! டொரோதி. 276 00:17:20,249 --> 00:17:21,290 ஹலோ. 277 00:17:23,794 --> 00:17:25,462 ஜெரிகோ சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாப்பிடுகிறான். 278 00:17:29,550 --> 00:17:30,551 எனக்கு நினைவிருக்கிறது. 279 00:17:38,267 --> 00:17:42,020 நான் கிராஃபிட்டி ஓவியர் டியேகோ வில்லியம்ஸுடன் இங்கே பிராட் ஸ்ட்ரீட்டில் இருக்கிறேன். 280 00:17:42,104 --> 00:17:43,480 சமூக உரிமைகளுக்காக தெரு சுவரோவியம் 281 00:17:43,564 --> 00:17:46,316 டியேகோவின் தெரு பெயர் டி. வில்ஸ் 282 00:17:46,400 --> 00:17:48,360 மற்றும் நம் உள்ளூர் ஃபில்லி பார்வையாளர்கள் 283 00:17:48,443 --> 00:17:51,405 நகரம் முழுவதும் அவர் டேக்கை பார்த்திருக்கக்கூடும். 284 00:17:51,488 --> 00:17:56,201 டியேகோ, தயவுசெய்து இந்த ஓவியத்திற்கு எது ஊக்கம் கொடுத்தது என்று சொல்லுங்கள். 285 00:17:56,285 --> 00:17:59,746 சமூக உரிமைகள் இயக்கத்தின் காட்மதராக ஐடா பி.வெல்ஸ் இருந்தார். 286 00:17:59,830 --> 00:18:02,583 அவர் 1800களின் பிற்பகுதியில் பத்திரிகையாளராக இருந்தார். 287 00:18:02,666 --> 00:18:04,042 என்ன நடக்கிறது என்பதை எல்லோரும் 288 00:18:04,626 --> 00:18:05,669 பார்க்க வேண்டும் என்று... 289 00:18:06,670 --> 00:18:08,213 அவர் வலியுறுத்தினார்... 290 00:18:09,381 --> 00:18:10,382 மிஸ்? 291 00:18:10,966 --> 00:18:11,967 நீங்கள் நலமா? 292 00:18:14,595 --> 00:18:16,805 நாங்கள் வேலை செய்யும் போது நீ அவனை இங்கே விடக் கூடாது. 293 00:18:18,348 --> 00:18:21,393 சரி, சரி. நான் இங்கிருக்கிறேன். நீ நலம் தான். 294 00:18:22,436 --> 00:18:24,021 -ஹே. நான் தடுக்கி விழவிருந்தேன். -மன்னிக்கவும். 295 00:18:24,104 --> 00:18:26,356 -செஃப். செஃப். -இதை எங்கே வைக்க வேண்டும்? 296 00:18:26,440 --> 00:18:29,234 அடச்சே. நான் தயார் இல்லை. ஐந்து நிமிடங்கள். டோபி, தயாரானதை அவர்களுக்கு காண்பி. 297 00:18:31,403 --> 00:18:33,780 இது தான் கடைசி அறை. நான் இப்போது ஆரம்பிக்க... 298 00:18:33,864 --> 00:18:35,365 வேண்டாம்! பொறு! முப்பது நிமிடங்கள்! 299 00:18:35,991 --> 00:18:37,534 நாம் தாமதித்தால், என் கார்ப்பென்டருக்கு அதிக பணம் தரவேண்டும். 300 00:18:37,618 --> 00:18:39,745 அப்படி என்றால் கிச்சனை தொடாதே! நான் செய்து கொள்கிறேன்! நன்றி. 301 00:18:39,828 --> 00:18:41,246 நீங்கள் தான் முதலாளி. 302 00:18:41,914 --> 00:18:44,166 ஆனால் இது தான் தேவை என்பதற்கு நீங்கள் இந்த இன்வாய்ஸில் கையெழுத்திட வேண்டும். 303 00:18:44,249 --> 00:18:45,792 லியன், தயவு செய்து, இதில் கையெழுத்து போடுகிறாயா? 304 00:18:56,512 --> 00:18:57,513 கவனமாக, செய். 305 00:18:59,431 --> 00:19:01,642 கவனம்! கடவுளே! 306 00:19:01,725 --> 00:19:03,060 நாங்கள் கிளம்புகிறோம். 307 00:19:04,269 --> 00:19:06,605 -என் தவறு. -இது என்ன கண்றாவி... 308 00:19:06,688 --> 00:19:09,358 கவனமாக கேள். இதை புளூட்டோனியம் போல ஜாக்கிரதையாக கையாள வேண்டும். 309 00:19:09,441 --> 00:19:10,442 கெவிச்சே எங்கே? 310 00:19:10,526 --> 00:19:12,069 கேவிச்சே எங்கே? 311 00:19:14,488 --> 00:19:16,406 -என்னை மன்னித்துவிடு. நான்... -அடக் கடவுளே! 312 00:19:16,490 --> 00:19:18,909 நீ ஏற்கனவே அவர்களுக்கு கேவிச்சே கொடுத்தாயா? பெரிய முட்டாள் நீ! 313 00:19:18,992 --> 00:19:20,452 நீ முடித்து விட்டாய் என நினைத்தேன். நான்... 314 00:19:20,536 --> 00:19:24,331 இவ்வளவு மட்டமான ஆளை நான் இது வரையில் பார்த்ததே இல்லை! 315 00:19:24,414 --> 00:19:25,999 என் திறமையை ஷானிடம் நிரூபிக்க முயற்சிக்கிறேன் 316 00:19:26,083 --> 00:19:29,753 ஆனால் நீயோ, நாள் முழுவதும் என்னை தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறாய்! 317 00:19:29,837 --> 00:19:33,465 என்னை எவ்வளவு சங்கடமாக உணர வைக்கிறாய் என்று உனக்குப் புரிகிறதா? 318 00:19:33,549 --> 00:19:35,717 இப்போது நீ என்ன செய்தாய் என்று உனக்குத் தெரியுமா? 319 00:19:35,801 --> 00:19:38,011 வடிகட்டின முட்டாள்! கேவலமானவனே! 320 00:19:38,095 --> 00:19:40,931 உன்னை யாருமே வேலைக்கு வைக்கக்கூடாது... 321 00:19:42,266 --> 00:19:43,392 அடச்சே. 322 00:19:45,936 --> 00:19:47,271 என் மோதிரம் மாட்டிக்கொண்டது. 323 00:19:56,363 --> 00:19:58,574 அடக் கடவுளே. அடக் கடவுளே. 324 00:19:59,449 --> 00:20:01,368 இப்போது என்ன நடந்தது? 325 00:20:01,451 --> 00:20:03,745 -அவள்... -அழுத்திப் பிடி! 326 00:20:03,829 --> 00:20:05,247 டோபி! அவள் விரல் எங்கே? 327 00:20:05,330 --> 00:20:07,040 -அவள் விரல் எங்கே? -என்ன? 328 00:20:07,124 --> 00:20:08,917 -அவள் விரலைத் தேடு. -விரல், விரல். 329 00:20:09,001 --> 00:20:11,795 அதை மறுபடியும் சேர்ப்பதற்கு, மருத்துவமனையில் அதைக் கேட்பார்கள், டோபி. 330 00:20:11,879 --> 00:20:15,174 -சரி, என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை! -அது கிடைத்ததா? 331 00:20:15,257 --> 00:20:17,009 -இல்லை! அது இங்கே எங்கும் இல்லை! -டோபி! 332 00:20:17,092 --> 00:20:18,302 -அது இங்கே இல்லை! -டோபி! 333 00:20:18,385 --> 00:20:20,053 -என்ன? என்ன? -டோபி! 334 00:20:20,137 --> 00:20:21,555 -டோபி! -என்ன? 335 00:20:59,176 --> 00:21:01,094 ஹே, டொரோதியை டிவியில் பார்த்தாயா? 336 00:21:02,930 --> 00:21:03,972 இல்லை. 337 00:21:05,098 --> 00:21:07,059 இங்கே ஒரு பெரிய விபத்து நேர்ந்தது. 338 00:21:07,142 --> 00:21:08,477 நீ இதைப் பார்க்க வேண்டும். 339 00:21:24,826 --> 00:21:25,869 மிஸ்? 340 00:21:26,411 --> 00:21:27,746 நீங்கள் நலமா? 341 00:21:29,748 --> 00:21:33,418 ஆம், நலம் தான். அவளை ஏன் வரைந்தீர்கள் என சொல்ல முடியுமா? 342 00:21:33,502 --> 00:21:35,546 அவள் பயமற்றவளாக இருந்தாள். 343 00:21:35,629 --> 00:21:37,381 தெற்கில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு நடந்த 344 00:21:37,464 --> 00:21:43,345 கொடுமைகளை அவள் தனி ஆளாக... வெளிப்படுத்தினாள். 345 00:21:44,888 --> 00:21:46,640 அடக் கடவுளே! 346 00:21:50,477 --> 00:21:54,064 அவளால் இதைக் கடந்து வரவே முடியாது. எல்லாம் முடிந்துவிட்டது. 347 00:22:32,895 --> 00:22:36,231 நீங்கள் அவனுக்கு பால் தரலாம் என்பதற்காக, நான் அவனுக்கு பாட்டிலில் கொடுக்கவில்லை. 348 00:22:44,406 --> 00:22:45,866 நீங்கள் வீட்டிற்கு வந்ததில் மகிழ்ச்சி. 349 00:22:57,294 --> 00:22:58,754 அவன் போன பிறகு... 350 00:23:00,881 --> 00:23:02,007 என்னுடைய குழந்தை மட்டும்... 351 00:23:05,010 --> 00:23:07,429 எனக்கு கிடைத்தால் போதும் என்றும், 352 00:23:08,680 --> 00:23:11,725 வேறு எதுவும் எனக்கு வேண்டாம் என்றும் நினைத்தேன். 353 00:23:18,857 --> 00:23:21,610 ஆனால் ஏதோ சரியில்லை. 354 00:23:26,281 --> 00:23:29,368 என்னால் விளக்க முடியவில்லை, ஆனால்... 355 00:23:32,663 --> 00:23:35,374 இந்த பிரபஞ்சம் என்னைக் காயப்படுத்துகிறது அல்லது... 356 00:23:39,837 --> 00:23:40,838 நான் எதையோ... 357 00:23:42,047 --> 00:23:43,423 இழந்துவிட்டது போல் தோன்றுகிறது. 358 00:23:44,466 --> 00:23:45,467 இங்கே வா. 359 00:23:48,095 --> 00:23:49,930 இது மட்டும் ஏன் போதவில்லை? 360 00:23:53,600 --> 00:23:56,687 என்னிடம் என்ன பிரச்சினை? 361 00:26:30,424 --> 00:26:32,426 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்