1 00:01:02,479 --> 00:01:05,065 அன்பே? இது இங்கே வந்துவிட்டது! 2 00:01:06,692 --> 00:01:07,693 டொரோதி? 3 00:01:07,776 --> 00:01:09,027 சத்தம் போடாதீங்க. 4 00:01:10,070 --> 00:01:12,197 மன்னிச்சிடு, வந்து இதைப் பார். 5 00:01:17,077 --> 00:01:20,289 குடலில் அஜீரணத்தினால் தான் வலி ஏற்பட வேண்டும் என்றில்லை என படித்திருக்கிறேன். 6 00:01:20,372 --> 00:01:22,875 அது மன ரீதியான வலியாகக் கூட இருக்கலாம். 7 00:01:22,958 --> 00:01:25,627 அவனுக்கு மன ரீதியாக இருக்காது, அன்பே. அவன் ஒரு குழந்தை. 8 00:01:25,711 --> 00:01:26,712 வந்து... 9 00:01:26,795 --> 00:01:29,423 கருவறையை விட்டு வெளியே வருவது அதிகக் கஷ்டத்தைக் கொடுக்கும். 10 00:01:29,506 --> 00:01:31,175 வந்து, இது எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும். 11 00:01:31,800 --> 00:01:34,428 இதை போதுமான அளவு குடித்தால், யார் தான் தூங்க விரும்புவார்கள்? 12 00:01:36,805 --> 00:01:38,849 இது மாய காஃப்பினைத் தயாரிக்கிறதா என்ன? 13 00:01:39,474 --> 00:01:41,018 அந்த மாதிரித் தான். 14 00:01:41,101 --> 00:01:42,936 அதன் நுரையை ருசிக்கும் வரை பொறுத்திரு. 15 00:01:43,478 --> 00:01:48,525 காபி ஃபில்டர். ஐம்பத்தி எட்டு மில்லி மீட்டர், குரோம் பூசப்பட்ட பித்தளை. 16 00:01:55,866 --> 00:01:57,242 வேண்டாம். 17 00:02:02,206 --> 00:02:05,125 -நான் போகிறேன். -உனக்கு மஷ்சியாட்டோ காபி போட்டு தருகிறேன். 18 00:02:23,310 --> 00:02:24,853 எங்கே அவள்? 19 00:02:25,729 --> 00:02:27,314 அவள் எங்கே? 20 00:02:27,397 --> 00:02:29,066 ஜூலியன், அவரை தடுத்து நிறுத்து. 21 00:02:29,149 --> 00:02:31,193 -இதைத் தாண்டி போகக் கூடாது. -கேளுங்கள். 22 00:02:31,276 --> 00:02:33,320 காரில் வரும்போது உங்களுக்கு இதைப் பற்றி விவரித்தேன். 23 00:02:33,403 --> 00:02:36,198 லியனைப் பார்க்க வேண்டும் என்றால், நீங்கள் ஜெரிகோவைக் கூட்டி வர வேண்டும். 24 00:02:36,281 --> 00:02:41,078 "ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காமல் இருப்பாயாக." 25 00:02:41,161 --> 00:02:42,162 உபாகமம். 26 00:02:42,788 --> 00:02:45,207 "வனத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இது நாளுக்கு நாள் மோசமாகிறது." 27 00:02:45,290 --> 00:02:46,375 கன்ஸ் அண்ட் ரோஸஸ். 28 00:02:47,292 --> 00:02:50,712 -லியன்! -என் வீட்டிற்குள் இப்படி கத்த வேண்டாம். 29 00:02:50,796 --> 00:02:54,591 அவள் இங்கு எப்படி திரும்பி வந்திருப்பாள்? புரிந்து கொண்டதாக உறுதியளித்திருந்தாளே. 30 00:02:54,675 --> 00:02:59,137 சரி. நாம் கொஞ்சம் அமைதியாகி, இதைப்பற்றி பண்பட்ட மனிதர்களைப் போல பேசுவோம். 31 00:02:59,221 --> 00:03:00,514 ஜார்ஜ். 32 00:03:00,597 --> 00:03:02,724 என்னோடு பேசுங்கள், சரியா? 33 00:03:03,392 --> 00:03:04,726 நாம் இதற்கு ஒரு தீர்வு காண்போம். 34 00:03:09,314 --> 00:03:11,441 நாம் ஒரு ஒப்பந்தத்திற்கு வருவோமா? 35 00:03:13,026 --> 00:03:14,987 இதைப் பற்றிப் பேசலாம். 36 00:03:16,238 --> 00:03:21,618 நான் செய்ததெல்லாம் வீணாகி விட்டது. ஷான், நீங்க உறுதியோடு, பணத்தைக் கண்காணியுங்க. 37 00:03:28,542 --> 00:03:31,837 அந்தக் குழந்தை எங்களோடு தங்கணும் என நாங்கள் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். 38 00:03:31,920 --> 00:03:33,589 உங்களுடைய ஒப்பந்தம் என்னோடு அல்ல. 39 00:03:33,672 --> 00:03:36,466 -இவரை எங்கிருந்து பிடித்தாய்? -அவர் மாலில் இருந்தார். 40 00:03:36,550 --> 00:03:38,677 லியன் தான் மீட்புத் தொகையை கேட்டு, உனக்குத் தொந்தரவு தந்தாள். 41 00:03:52,608 --> 00:03:54,818 யாரோ, நள்ளிரவில் திண்பண்டம் சாப்பிட்ட மாதிரி தெரிகிறது. 42 00:03:58,322 --> 00:04:00,490 திருமதி. டர்னர், உங்க மாலைப் பொழுது எப்படி இருந்தது? 43 00:04:00,949 --> 00:04:05,162 வெற்றி. உன் மாமவை கண்டுபிடித்து விட்டோம். நாம் பேசுகையில் அவர் கீழே இருக்கிறார். 44 00:04:06,205 --> 00:04:07,789 உங்களால் தத்ரூபமாக பொய் சொல்ல முடியாது. 45 00:04:08,749 --> 00:04:10,876 நீங்கள் எவ்வளவு தான் பயிற்சி செய்தாலும். 46 00:04:11,710 --> 00:04:15,297 லியன், நீ என்னை எவ்வளவு கோபப்படுத்தினாலும், அது என்னை பாதிக்காது. 47 00:04:15,923 --> 00:04:18,091 ஜெரிகோ வீட்டுக்கு வரப் போகிறான், அவன் வந்ததும், 48 00:04:18,175 --> 00:04:21,261 நீ உன் மாமாவோடு உன்னுடைய இடத்துக்குப் போக வேண்டியது தான். 49 00:04:21,345 --> 00:04:23,263 ஆனால் அது வரைக்கும் இங்கேயே அடைந்திருப்பாய். 50 00:04:36,443 --> 00:04:37,861 அழுகிவிட்டது. 51 00:04:40,155 --> 00:04:41,990 என்னவோ அழுகி இருக்கிறது. 52 00:04:42,574 --> 00:04:44,785 குழாய்கள். நாங்கள் குழாயை பழுது பார்க்கிறோம். 53 00:04:48,539 --> 00:04:51,959 நிச்சயம், வீட்டில் தான். 54 00:04:56,129 --> 00:04:57,464 ஜார்ஜ். 55 00:05:04,596 --> 00:05:07,766 -அவள் தான் இதைச் செய்தாள். -இது ஒரு பிளம்பிங் பிரச்சினை. 56 00:05:07,850 --> 00:05:10,269 இது ஒரு பழைய தண்ணீர்க் குழாய். பல வருடங்களுக்கு முன்பே மாற்றி இருக்கணும். 57 00:05:10,352 --> 00:05:11,812 அஸ்திவாரம் நொறுங்குகிறது. 58 00:05:12,521 --> 00:05:17,734 இது, அவள் கீழ்படியாமையால் கடவுளுக்கு ஏற்பட்ட விரக்தியா? 59 00:05:17,818 --> 00:05:19,444 என்னுடைய கருத்தின் படி, இல்லை. 60 00:05:22,155 --> 00:05:24,575 -இதோ இருக்கிறீர்கள். -எத்தனை நாட்களாக? 61 00:05:24,658 --> 00:05:26,994 -என்ன? -எத்தனை நாட்களாக இங்கு இருக்கிறாள்? 62 00:05:27,077 --> 00:05:30,122 -எத்தனை நாட்களாக... -அவள் ஒரு வாரமாக இங்கே இருக்கிறாள். 63 00:05:30,205 --> 00:05:32,666 நீங்கள் இவ்வளவு நாளும் அவளை வைத்திருந்தீர்களா? 64 00:05:34,126 --> 00:05:35,127 ஓ, இல்லை. 65 00:05:35,210 --> 00:05:37,880 இல்லை, இல்லை, இல்லை. 66 00:05:37,963 --> 00:05:39,631 -இல்லை, இல்லை, இல்லை. -கடவுளே! 67 00:05:39,715 --> 00:05:41,717 இது நடக்கக் கூடாது. 68 00:05:42,593 --> 00:05:45,137 -அவர் எதைப்பற்றி பேசுகிறார்? -அவருக்கு என்னவோ ஆகி விட்டது. 69 00:05:45,220 --> 00:05:47,890 -"செய்வது அறியாதிருக்கின்றனர்... -அவர் நமக்காக பிரார்த்திக்கறாரா? 70 00:05:47,973 --> 00:05:49,933 -இல்லை, அவர்... -ஹே! எனக்காக ஜெபிக்க வேண்டாம்! 71 00:05:50,017 --> 00:05:52,352 ...ஆண்டவரே,நீர் நல்லவரும்,மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர் மேலும் 72 00:05:52,436 --> 00:05:56,064 -கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்." -நான் மன்னிக்கப்படும் படி எதுவும் செய்யலை. 73 00:05:58,192 --> 00:06:02,196 சரி செய்வதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. 74 00:06:03,363 --> 00:06:04,364 அவரை தடுத்து நிறுத்து. 75 00:06:05,365 --> 00:06:06,366 ஷான்! 76 00:06:17,669 --> 00:06:19,171 நான் என்ன செய்யணும் என நினைக்கிறாய்? 77 00:06:19,254 --> 00:06:21,006 -மேலே போ. -அவள் எங்கே? 78 00:06:23,050 --> 00:06:24,176 அவள் எங்கே? 79 00:06:29,973 --> 00:06:32,809 ஜெரிகோ இருக்கும் இடத்தை சொல்லும் வரை அவரைத் சித்திரவதை செய்வேன். 80 00:06:32,893 --> 00:06:34,311 அதனால் என்ன பயன்? 81 00:06:34,811 --> 00:06:37,814 -என்ன செய்ய சொல்கிறீர்கள்? -நாம் அவருக்கு புரியும் படி பேச வேண்டும். 82 00:06:37,898 --> 00:06:39,316 அவர் சுத்த பைத்தியம். 83 00:06:39,900 --> 00:06:41,944 எனவே நேருக்கு நேராக அவரிடம் பேசுகிறேன். 84 00:06:43,153 --> 00:06:44,154 நீங்களா? 85 00:06:45,113 --> 00:06:47,032 நீ காரிலே முயற்சித்தாய். அது அவரைக் கோபமூட்டியது. 86 00:06:48,200 --> 00:06:49,910 எனவே நான் ஒத்துழைப்பது போல நடிக்கிறேன். 87 00:06:50,536 --> 00:06:52,788 அவரது பைத்தியக்கார கொந்தளிப்பான பேச்சுக்களை நம்புவதாக அவரை நம்ப வைப்பேன். 88 00:06:52,871 --> 00:06:54,498 அப்படி செய்தால், அவர் என்னை நம்புவார். 89 00:06:56,333 --> 00:07:00,003 என் வாழ்விலே கை முட்டிகளால் மூன்று சண்டைகள் போட்டுள்ளேன், 90 00:07:00,087 --> 00:07:02,798 அது ஒவ்வொன்றும் டொரோதியால் தான். 91 00:07:03,465 --> 00:07:07,594 -நான்கைக் கொண்டு வாருங்கள். -உன்னோடு சண்டை போட முடியாது, ஜூலியன். 92 00:07:07,678 --> 00:07:09,555 ஆனால் நீங்கள் குத்து வாங்க முடியும். 93 00:07:09,638 --> 00:07:11,473 நீ எப்படி பயப்படாமல் இருக்கிறாய்? 94 00:07:11,557 --> 00:07:13,183 -உங்களைப் பார்த்தா? -அவளைப் பார்த்து. 95 00:07:13,267 --> 00:07:15,185 அவள் செய்த காரியத்தால். 96 00:07:15,269 --> 00:07:18,230 குழந்தை விஷயம். அவன் இங்கு இருந்திருக்கவே கூடாது. 97 00:07:18,313 --> 00:07:20,732 அது ஒரு தவறு! 98 00:07:20,816 --> 00:07:22,359 நான் பார்த்துக் கொள்கிறேன், ஜூலியன். 99 00:07:22,442 --> 00:07:24,152 ஷான், உன்னால் முடியும் என தோன்றவில்லை. 100 00:07:25,863 --> 00:07:27,281 டொரோதி உன்னை தேடுகிறாள். 101 00:07:35,539 --> 00:07:38,000 அப்புறம்? ஜெரிகோ இருக்கும் இடம் பற்றி ஏதாவது சொன்னாரா? 102 00:07:38,083 --> 00:07:41,837 அவர் ஒரு முட்டாள். லியனை கூட்டிட்டுப் போவதைப்பற்றி தான் வாய் மூடாமல் பேசுகிறார். 103 00:07:42,462 --> 00:07:45,257 நாம் அவளை கண்டுப்பிடித்த அந்த வீடு அவ்வளவு முக்கியமானதா என்ன? 104 00:07:45,799 --> 00:07:47,801 நான் அவரை குத்த முயற்சித்தேன், ஆனால் அவர் விடவில்லை. 105 00:07:50,179 --> 00:07:53,348 லியன் எங்கே? 106 00:07:53,432 --> 00:07:54,766 அவள் பாதுகாப்பாக இருக்கிறாள். 107 00:08:01,523 --> 00:08:05,319 நீ என்ன செய்துள்ளாய், ஷான்? 108 00:08:07,446 --> 00:08:11,116 எங்களுக்கு உதவி தேவை, அவளிடம் மட்டும் தான் எங்களால் கேட்க முடியும். 109 00:08:11,200 --> 00:08:14,244 -அதனால் தான் அவளை கடத்திட்டு வந்தீர்களா? -எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. 110 00:08:16,330 --> 00:08:19,499 இது எல்லாம் அவளது தவறு தான். 111 00:08:21,460 --> 00:08:26,381 நடக்க முடியாத ஒரு விஷயத்திற்கு, உனக்கு நம்பிக்கை தந்தது அவள் தான். 112 00:08:27,341 --> 00:08:29,968 அது கொடூரமானது. பொறுப்பற்ற செயல். 113 00:08:32,221 --> 00:08:33,889 நாம் அவளைத் திருப்பி அனுப்ப வேண்டும். 114 00:08:35,432 --> 00:08:36,850 அந்த வீட்டிற்கா? 115 00:08:36,933 --> 00:08:40,312 அவள் ஏன் அங்கு திரும்பி செல்ல வேண்டும்? தயவுசெய்து, அதை எனக்கு விளக்குங்கள். 116 00:08:41,104 --> 00:08:43,482 அவள் சிறப்பானவள் என எனக்குத் தெரியும்... நீங்களும் தான். 117 00:08:44,066 --> 00:08:46,568 ஆனால் எனக்குப் புரியவில்லை. தயவுசெய்து சொல்லுங்கள். 118 00:08:51,365 --> 00:08:54,701 லியன் எப்போதுமே அந்தப் பையன் செய்து தந்த பிளாஸ்டிக் நெக்லஸை அணிந்திருப்பாள். 119 00:08:55,369 --> 00:08:57,579 நாம் அவளிடமிருந்து இன்னும் அதிகத் தகவல் பெற வேண்டும். 120 00:08:58,664 --> 00:09:02,209 அவளை நீ உயிரோடு புதைத்துவிட்டாய், டோட்டி. அவள் சொல்வதை அப்படியே நம்ப முடியாது. 121 00:09:03,544 --> 00:09:06,547 அவர் அவளைக் கண்டுபிடிக்கக் கூடாது. அவர்கள் திட்டமிட்டு சேர்ந்து முயற்சிப்பார்கள். 122 00:09:06,630 --> 00:09:08,465 உன் மருமகனின் வாழ்க்கை தீர்மானிக்கப்படும். 123 00:09:11,802 --> 00:09:13,262 நான் போய் அவள் கதவுக்கு காவல் காக்கிறேன். 124 00:09:17,349 --> 00:09:18,976 முதலில் பானத்தை நிரப்ப வேண்டும். 125 00:09:28,318 --> 00:09:32,406 லியன்... அவளிடம் கீழ்ப்படியாத தன்மை உள்ளது. 126 00:09:34,116 --> 00:09:36,285 சிறுவயதிலிருந்தே. 127 00:09:38,453 --> 00:09:39,872 இது அசெளகரியம் தான். 128 00:09:41,498 --> 00:09:45,294 அவள் பெரும்பாலும் எங்கள்... 129 00:09:46,670 --> 00:09:48,380 சமூக கட்டளைகளிலிருந்து விலகுவாள். 130 00:09:50,340 --> 00:09:51,341 அப்புறம்... 131 00:09:52,342 --> 00:09:55,137 சமுதாயம் என்பதைத்தான் சமூகம் என்று சொல்கிறீர்களா? 132 00:09:55,220 --> 00:09:56,722 நாங்கள் யார் என்று உனக்குத் தெரியும். 133 00:09:57,347 --> 00:10:00,017 -இல்லை, எனக்குத் தெரியாது. -உனக்குத் தெரியும். 134 00:10:00,100 --> 00:10:02,186 உனக்குத் தெரியாதது போல நடிக்கிறாய். 135 00:10:02,853 --> 00:10:06,190 ஜார்ஜ், நீங்கள் யார் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியாது. 136 00:10:10,110 --> 00:10:11,820 நாங்கள் எல்லோரும் உங்கள் மத்தியில் தான் இருக்கிறோம். 137 00:10:12,905 --> 00:10:15,115 எங்களுக்கான இடத்தை எடுத்துக்கொள்ள நாங்கள் முயலவில்லை. 138 00:10:16,617 --> 00:10:21,538 மேம்பாலங்களின் கீழ் இருக்கும் தெரு முற்றத்தில், நீங்கள் எங்களைப் பார்க்கலாம். 139 00:10:22,623 --> 00:10:25,834 எங்களுக்குத் தான் 140 00:10:25,918 --> 00:10:28,879 வாழ்கையில் இரண்டாம் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 141 00:10:30,214 --> 00:10:35,427 கடவுளின் தெய்வீக திட்டத்தை அடைய, நாங்கள் அதை பயன்படுத்துகிறோம். 142 00:10:36,512 --> 00:10:38,222 பிறருக்கு உதவ. 143 00:10:41,225 --> 00:10:44,102 ஆனால்... பொறுங்கள். அப்போ நீங்கள் சொல்வது, நீங்கள் ஒரு... 144 00:10:44,186 --> 00:10:48,941 யாருக்கு உதவ வேண்டும் என சொல்லப்பட்டுள்ளதோ அவர்களுக்குத் தான் நாங்கள் உதவ முடியும், 145 00:10:49,608 --> 00:10:51,276 ஆனால் லியன் அதற்கு கீழ்படியவில்லை. 146 00:10:52,903 --> 00:10:56,657 அவளுக்கு முரண்டுபிடித்தல் மற்றும் சுயமாய் செயல்களை செய்யும் 147 00:10:56,740 --> 00:10:58,825 கெட்டப்பழக்கம் இருக்கு. 148 00:11:02,663 --> 00:11:03,705 ஜெரிகோ. 149 00:11:05,165 --> 00:11:06,208 அது தானே அவனது பெயர்? 150 00:11:08,252 --> 00:11:09,253 ஜெரிகோ. 151 00:11:10,254 --> 00:11:12,256 அவனை இங்கே கொண்டு வந்தது, 152 00:11:12,881 --> 00:11:14,883 முதலில் அவள் இங்கு வந்தது... 153 00:11:15,884 --> 00:11:17,928 அது அவள் எடுக்க வேண்டிய முடிவே அல்ல. 154 00:11:19,179 --> 00:11:21,849 அவள் கடவுளின் விதிகளைப் பின்பற்றவில்லை. 155 00:11:22,474 --> 00:11:24,685 அதனால் தான் குழந்தையால் இங்கு தங்க முடியவில்லை. 156 00:11:27,396 --> 00:11:28,397 அப்புறம்... 157 00:11:29,523 --> 00:11:34,194 பின்னர் அவள் மீண்டும் மூக்கை நுழைத்தாள். அதன் விளைவுகளைப் பார். 158 00:11:36,029 --> 00:11:38,866 ஆனால் நான் என்ன செய்ய முடியும்? எப்படி இதை சரி செய்வது? 159 00:11:40,325 --> 00:11:41,326 அவன் பிரிவால் வாடுகிறேன். 160 00:11:43,203 --> 00:11:47,165 அவள் தேவைப்படும் இடத்தில் அவளை கொண்டு போய் சேர்ப்பதே உன் ஒரே நம்பிக்கை. 161 00:11:47,833 --> 00:11:49,543 அவள் இருந்த இடத்தில். 162 00:11:51,086 --> 00:11:52,671 அப்புறம் மன்னிப்பிற்காக பிரார்த்தனை செய். 163 00:11:54,965 --> 00:11:56,800 எதற்காக மன்னிப்பு? 164 00:11:58,844 --> 00:12:00,512 உனக்கு அதுவும் தெரியும்? 165 00:12:13,525 --> 00:12:15,569 -ஹலோ. -நீங்கள் ஷான் டர்னரா? 166 00:12:15,652 --> 00:12:16,987 -ஆம். -ஹாய், கோர்மெட் காண்ட்லெட்டிலிருந்து, 167 00:12:17,070 --> 00:12:20,115 டெய்லர் பேசுகிறேன். நீங்கள் இந்த நிகழ்ச்சி பார்த்திருக்கிறீர்களா? 168 00:12:20,199 --> 00:12:24,077 சில பகுதி பார்த்திருக்கிறேன்.நிகழ்ச்சியின் பெரிய ரசிகன். "உங்கள் பயணம் முடிந்தது." 169 00:12:24,161 --> 00:12:27,372 ஆமாம். இரண்டாம் சீசனில் கலந்து கொள்வது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 170 00:12:27,456 --> 00:12:29,875 -ஆஹா. உண்மையாகவா? -ஆமாம், எங்கள் தலைமை நடுவராக. 171 00:12:29,958 --> 00:12:32,044 நானா? பொறுங்கள். தலைமை நடுவரா? 172 00:12:32,753 --> 00:12:34,171 ஆமாம், இது நம்ப முடியாதது. 173 00:12:34,254 --> 00:12:36,423 இது சிறப்பானது. ஒரு வாரத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் படப்பிடிப்பு தொடங்கும். 174 00:12:36,507 --> 00:12:38,217 வக்கீல்களை ஆவணங்களை தயார் செய்ய சொல்கிறேன். 175 00:12:38,300 --> 00:12:40,511 சரி, அது என்னவென்றால், நான் இப்போது வீட்டை விட்டு வர முடியாது. 176 00:12:40,594 --> 00:12:43,430 ஃபில்லியில் படப்பிடிப்பு என்றால், முயற்சி செய்வேன், ஆனால்... 177 00:12:44,306 --> 00:12:45,891 எங்களுக்கு இரண்டு மாத குழந்தை இருக்கு. 178 00:12:45,974 --> 00:12:49,019 -ஆமாம், மிகுந்த வேலை இருக்கும். -ஆமாம். உண்மைதான். 179 00:12:54,858 --> 00:12:58,070 ஷான், நீ அவளை திருப்பி அனுப்பினால்... 180 00:12:59,154 --> 00:13:00,781 எல்லாவற்றையும் சரி செய்தால்... 181 00:13:05,327 --> 00:13:08,330 அவள் செய்ததை நான் மாற்றுகிறேன். 182 00:13:11,834 --> 00:13:13,502 நான் உன்னை குணமாக்குகிறேன். 183 00:13:15,379 --> 00:13:18,757 அப்படித் தான் நீ அவனோடு திரும்பவும் சேர முடியும். 184 00:13:33,313 --> 00:13:35,399 எங்கே போகிறீர்கள்? அவர் எங்கே போகிறார்? 185 00:13:35,482 --> 00:13:37,109 எனக்கு மருந்து தயாரிக்கப் போகிறார். 186 00:13:38,944 --> 00:13:41,655 சரி. மேலும் என்ன? எதாவது சொன்னாரா? 187 00:13:41,738 --> 00:13:44,199 ஒன்றும் இல்லை. அவருக்கு லியன் தான் வேண்டுமாம். 188 00:13:44,283 --> 00:13:46,159 ஆனாலும் மருத்துவர் போல நடிக்கிறார். 189 00:13:46,243 --> 00:13:47,536 அவரைப் பற்றி விவரிக்க சொல்லாதே. 190 00:13:47,619 --> 00:13:48,745 பன்றி கொழுப்பு 191 00:13:48,829 --> 00:13:52,249 நாம் மே மார்க்கமை தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். 192 00:13:52,916 --> 00:13:55,919 இதில் முடிவுகள் எடுப்பது நிச்சயம் அவர் தான். 193 00:13:57,129 --> 00:13:58,547 சரி, அதை எப்படி செய்வது? 194 00:13:58,630 --> 00:14:01,842 -தெரியலை. அவர் கைபேசியை வாங்கலாமா? -அவரிடம் இருப்பது சந்தேகம் தான். 195 00:14:01,925 --> 00:14:04,761 திருமணத்தின் போது அணிந்த ஆடை மற்றும் என் இத்தாலிய காலணிகளைத் தவிர 196 00:14:04,845 --> 00:14:05,888 அவரிடம் வேறு ஒன்றுமில்லை. 197 00:14:07,472 --> 00:14:10,017 சரி, அங்கே உங்களிடம் வேறு என்ன சொன்னார்? 198 00:14:10,100 --> 00:14:12,060 எதுவும் சொல்லவில்லை. அவர்... 199 00:14:12,144 --> 00:14:14,938 வந்து, லியன் மீண்டும் மரினோவிற்கு திரும்பணுமென சொல்லிக் கொண்டே இருந்தார்... 200 00:14:15,022 --> 00:14:18,817 கடவுளே, அந்த உடல் ஊனமுற்ற பெண்ணைப்பற்றி நான் மறுபடியும் கேட்க வேண்டுமா. 201 00:14:18,901 --> 00:14:21,069 அவர் அருள்மிக்க பின் விளைவுகளைப்பற்றி சொன்னார். 202 00:14:21,153 --> 00:14:23,030 என்ன? அது மதிப்பற்றது. 203 00:14:23,113 --> 00:14:26,408 என்ன சொன்னார்? கொப்பளங்களா? வெட்டுக்கிளிகளா? வெள்ளமா? 204 00:14:26,491 --> 00:14:29,119 -அது, தெரியும் ஆனால்... -ஆனால் என்ன? 205 00:14:32,456 --> 00:14:34,875 அது, நாம் அவளை அழைத்து வந்த அடுத்த நாளே நடந்த அந்த பாதாள அறை விஷயம். 206 00:14:38,420 --> 00:14:41,507 நீங்கள் சொல்லும் வார்த்தைகள் எனக்குப் பிடிக்கவில்லை, ஷான். 207 00:14:42,925 --> 00:14:47,095 என் குழந்தை என் கைகளுக்கு கிடைக்கும் முன் அவருக்கு லியன் கிடைப்பாள் என நினைத்தால்... 208 00:14:47,179 --> 00:14:48,514 இல்லை, எனக்குத் தெரியும். 209 00:14:48,597 --> 00:14:51,266 அவர் சொல்வதை நீங்க நம்பினால், நீங்களும் அவர்களை போலவே முட்டாள் தான். 210 00:14:51,350 --> 00:14:52,559 நான் அவரை நம்பவில்லை. 211 00:14:54,144 --> 00:14:55,854 ஷான், நீங்கள் பல முயற்சிகள் எடுத்தீர்கள், 212 00:14:55,938 --> 00:14:57,648 ஆனால் இனி நான் பார்த்துக் கொள்கிறேன். 213 00:15:27,010 --> 00:15:28,512 தெரிந்த ஒரு விஷயத்தை சொல்கிறேன், 214 00:15:28,595 --> 00:15:30,180 இப்போது இருக்கும் கைதிகளை வைத்திருக்க 215 00:15:30,264 --> 00:15:32,558 உன்னுடைய வீட்டில் போதிய இடமில்லை. 216 00:15:32,641 --> 00:15:34,059 அவர் ஒன்றும் கைதி கிடையாது. 217 00:15:34,142 --> 00:15:37,104 அவர் முதலில் டொரோதியை கடந்து வர வேண்டும், அதனால் அவர் நம் கைதி தான். 218 00:15:38,313 --> 00:15:39,898 ராபென்சல் போல அங்கே இருக்கிறாள். 219 00:15:40,607 --> 00:15:42,025 நான் அவளிடம் பேச வேண்டும். 220 00:15:44,152 --> 00:15:47,072 நீ நினைப்பது போல அவள் ஒன்றும் இனிமையானவள் இல்லை, ஷான். 221 00:15:47,155 --> 00:15:49,408 ஓ, அப்படியா? அப்படி என்றால் அவள் எப்படிப்பட்டவள்? 222 00:15:50,284 --> 00:15:52,411 ஜூலியன், நான் நிஜமாக கேட்கிறேன். அவள் எப்படிப்பட்டவள்? 223 00:16:00,794 --> 00:16:02,629 அவர் என்னைப்பற்றி என்ன சொன்னார்? 224 00:16:03,714 --> 00:16:04,840 என் மாமா. 225 00:16:05,507 --> 00:16:06,508 ஒன்றும் சொல்லவில்லை. 226 00:16:07,259 --> 00:16:08,468 நீங்கள் பேசியதை நான் கேட்டேன். 227 00:16:10,721 --> 00:16:13,599 ஒருவர் முதுகுக்கு பின்னால் அவர்களைப் பற்றி பேசுவது நாகரிகம் கிடையாது. 228 00:16:13,682 --> 00:16:16,518 உன்னை எங்கிருந்து கூட்டிட்டு வந்தோமோ அங்கேயே அனுப்ப வேண்டும் என்கிறார். 229 00:16:16,602 --> 00:16:18,687 நீ அங்கே தேவை என்று சொன்னார், அதனால்... 230 00:16:19,813 --> 00:16:21,023 அவர் சொன்னதை நம்புகிறீர்களா? 231 00:16:21,940 --> 00:16:23,567 நான் எதை நம்புகிறேன் என்று எனக்கே தெரியலை. 232 00:16:51,553 --> 00:16:56,225 உன் அத்தை, மாமாவின் பேச்சை மீறித் தான் நீ எங்களிடம் முதன்முதலில் வந்தாயா? 233 00:16:59,853 --> 00:17:01,855 அப்போ உதவி செய்வதற்காகத்தான் நீ வந்தாயா? 234 00:17:03,398 --> 00:17:05,608 தயவு செய், எங்களுக்கு இப்போது உன் உதவி தேவை. 235 00:17:07,486 --> 00:17:09,530 உங்களிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன். 236 00:17:11,949 --> 00:17:14,492 ஜெரிக்கோ திரும்ப வீட்டிற்கு வர முடியாது என நினைக்கிறேன், ஷான். 237 00:17:14,576 --> 00:17:17,412 ஆனால் அவன் வர வாய்ப்பு இருக்கலாம். நாம் அதை சரி செய்ய முடியுமென நினைக்கிறேன். 238 00:17:30,300 --> 00:17:33,220 பிரார்த்தனை செய்யும் ஒருவரை எப்போதும் தொந்தரவு செய்யக் கூடாது. 239 00:17:37,015 --> 00:17:41,562 இந்த காலத்தில் 200,000 டாலர்கள் வைத்து எதை எல்லாம் வாங்கலாம் என உங்களுக்கு தெரியுமா? 240 00:17:42,813 --> 00:17:45,440 அதாவது, நீங்கள் இல்லை, ஏனென்றால் உங்களுக்கு எதுவுமே தேவை இல்லை, 241 00:17:45,524 --> 00:17:48,068 ஆனால் இந்த நிஜ உலகத்தில்... 242 00:17:49,278 --> 00:17:51,738 இந்த பணத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நிறைய பேர்களுக்கு உதவலாம். 243 00:17:53,073 --> 00:17:57,619 அவர்களுக்கு உணவு கொடுக்கலாம். வீடுகள் கட்டித் தரலாம். இன்னும் எவ்வளவோ. 244 00:17:59,329 --> 00:18:01,748 ஏதாவது ஒரு தொண்டை தேர்ந்து எடுத்து, ஏழைகளுக்குக் கொடுங்கள். 245 00:18:33,530 --> 00:18:35,240 நீங்கள் மோசமானவர்! 246 00:18:35,324 --> 00:18:39,369 "தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்; 247 00:18:39,453 --> 00:18:43,749 நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்." 248 00:18:45,167 --> 00:18:47,252 நீங்களே உங்களை நீதிமான் என்று எப்படி சொல்கிறீர்கள்? 249 00:18:48,086 --> 00:18:49,796 நீங்கள் என் மகனை கடத்தியுள்ளீர்கள். 250 00:19:06,146 --> 00:19:08,565 அவள் இங்கே இருந்தாளா? 251 00:19:11,068 --> 00:19:12,069 இல்லை. 252 00:19:15,531 --> 00:19:17,324 எனக்குத் தெரியாது. இருந்திருக்கலாம். 253 00:19:18,867 --> 00:19:20,494 அது முன்னேறுகிறது. 254 00:19:22,037 --> 00:19:24,623 அவள் இங்கே இருப்பது, ஒரு தொற்று போன்றது. 255 00:19:26,083 --> 00:19:27,543 அது பரவுகிறது. 256 00:19:28,168 --> 00:19:31,338 -அவள் என்ன செய்திருக்கிறாள்? -இல்லை, நான்... 257 00:19:32,548 --> 00:19:36,343 -அது அப்படி இல்லை என நினைக்கிறேன். -பிறகு அதை எப்படி விவரிப்பாய்? 258 00:19:39,930 --> 00:19:41,139 அவள் உன்னிடம் என்ன சொன்னாள்? 259 00:19:42,391 --> 00:19:44,977 இன்றிரவு அவளை திரும்பவும் அந்த வீட்டிற்கு கூட்டிட்டுப் போகணும். 260 00:19:45,060 --> 00:19:47,104 அங்கே தான் குழந்தையை அடைத்து வைத்திருக்கிறார்களா? 261 00:19:47,604 --> 00:19:49,940 அவர்கள் இருவரையும் இங்கே வைத்திருக்க முடியாது என நீயே சொன்னாயே. 262 00:19:50,023 --> 00:19:53,318 -அவளைவிட அவர் மிகவும் உபயோகமாக இருப்பார். -மாமாவை வைத்துக் கொண்டு, லியனை விடுகிறோம். 263 00:19:54,570 --> 00:19:56,196 அவள் இருக்கும் இடமாவது நமக்குத் தெரியுமே. 264 00:19:56,280 --> 00:20:00,033 -இந்த திட்டத்தை டொரோதி ஏற்க மாட்டாள். -அதனால் தான் அவளிடம் சொல்லப் போவதில்லை. 265 00:20:00,117 --> 00:20:02,119 நான் செய்யப் போகிறேன், நீ எனக்கு உதவப் போகிறாய். 266 00:20:02,202 --> 00:20:03,412 செய்ய முடியாது. 267 00:20:04,204 --> 00:20:07,332 நீ அவள் கவனத்தை திசை திருப்ப வேண்டும். நீ சிக்க வைக்கும் பொறியாக இருப்பாய். 268 00:20:10,711 --> 00:20:12,546 என்னுடன் பிரார்த்தனை செய். 269 00:20:15,257 --> 00:20:16,258 முடியாது. 270 00:20:17,634 --> 00:20:21,722 அவளை மீண்டும் சரியான பாதைக்கு கொண்டு செல்லவதற்கு என்னுடன் பிரார்த்தனை செய். 271 00:20:21,805 --> 00:20:23,140 அவளுக்காக பிரார்த்தனை செய்யணுமா? 272 00:20:23,724 --> 00:20:25,559 முடியவே முடியாது. 273 00:20:25,642 --> 00:20:28,103 நீ சரணடைந்தாக வேண்டும், டொரோதி. 274 00:20:28,187 --> 00:20:29,730 யாரிடம் சரணடைய வேண்டும்? 275 00:20:29,813 --> 00:20:33,775 என் குழந்தையை கடத்திச் செல்ல உங்களுடைய விலையுயர்ந்த மலரை அனுமதித்த கடவுளிடமா? 276 00:20:33,859 --> 00:20:35,694 -ஹேய்! அவள் மீதிருந்து கையை எடுங்க! -ஆனாலும்... 277 00:20:35,777 --> 00:20:38,655 -ஜூஜூ, கவனமாக இரு. -நீ அவரிடம் என்ன சொன்னாய்? 278 00:20:39,615 --> 00:20:40,616 ஒன்றுமில்லை. 279 00:20:41,158 --> 00:20:42,701 இது என்ன? 280 00:20:42,784 --> 00:20:45,996 ஐயோ! அதன் மீது முழுவதும் சேறாக இருக்கிறது. 281 00:20:46,747 --> 00:20:49,750 இந்த இழிவான பணத்திற்காகவா நீ அழுகிறாய்? 282 00:20:50,501 --> 00:20:52,753 நீங்கள் செய்தவற்றிற்காக அழுங்கள். 283 00:20:57,674 --> 00:21:01,178 இன்றிரவு, உங்கள் உள்ளூர் மளிகைக் கடையில் உள்ள ஒரு பீநட் பட்டர் 284 00:21:01,261 --> 00:21:03,680 உங்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தக் கூடும். 285 00:21:03,764 --> 00:21:05,849 -பீநட் பட்டரா? -எனக்குத் தெரியும். 286 00:21:05,933 --> 00:21:08,185 பழைமையை கூட அனுபவிக்க முடியாது... 287 00:21:08,268 --> 00:21:09,978 -சரி, வா. -பொறுங்கள். பொறுங்கள். 288 00:21:11,563 --> 00:21:12,898 நான் உங்களுடன் வருகிறேன். 289 00:21:13,941 --> 00:21:16,610 ஆனால் என்னை வேறு எங்காவது அழைத்துச் செல்வதாக நீங்கள் உறுதியளிக்கணும். 290 00:21:18,487 --> 00:21:20,864 அவர்கள் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு என்னை அழைத்துச் செல்ல வேண்டும். 291 00:21:23,116 --> 00:21:26,495 எங்கு வேண்டுமானாலும், ஆனால் மிகவும் தூரமாக. 292 00:21:28,038 --> 00:21:29,665 சரியா? எனக்கு சத்தியம் செய்யுங்கள். 293 00:21:30,499 --> 00:21:32,793 -ஆனால் உன் மாமா சொன்னார்... -அவர் என்ன சொல்லியிருந்தாலும்... 294 00:21:33,585 --> 00:21:35,587 அவர் ஜெரிகோவை மீண்டும் அழைத்து வரமாட்டார். 295 00:21:38,131 --> 00:21:40,717 தயவுசெய்து. தயவுசெய்து, மிகவும் தூரமாக. 296 00:21:43,178 --> 00:21:44,388 சத்தியமாக. 297 00:21:45,347 --> 00:21:46,557 நீங்கள் பொய் சொல்கிறீர்கள். 298 00:21:48,433 --> 00:21:49,810 ஷான்! 299 00:21:52,980 --> 00:21:53,981 ஷான்! 300 00:22:02,656 --> 00:22:03,657 ஹலோ? 301 00:22:04,074 --> 00:22:07,286 கோர்மெட் காண்ட்லெட்டிலிருந்து டெய்லர், நீங்க அழைத்ததால் திரும்ப அழைக்கிறேன்,ஷான். 302 00:22:09,329 --> 00:22:11,081 என் காலணிகளை எடுக்கணும், இவனைப் பிடித்துக் கொள்கிறீர்களா? 303 00:22:11,164 --> 00:22:14,126 -தவறான நேரத்தில் அழைத்துவிட்டேனா? -கொஞ்ச நேரம் பொறுங்கள், டெய்லர். 304 00:22:17,504 --> 00:22:20,799 -ஹாய், டெய்லர்? இணைப்பில் உள்ளீர்களா? -ஆம், இருக்கிறேன். 305 00:22:20,883 --> 00:22:23,677 ஆம், நீங்கள் அழைத்ததில் மகிழ்ச்சி. மீண்டும் என்னை அழைத்ததற்கு நன்றி. 306 00:22:23,760 --> 00:22:29,016 எனக்கு சந்தர்ப்பம் உருவானது, லாஸ் ஏஞ்சலஸ் படப்பிடிப்பில் என்னால் பங்கேற்க முடியும். 307 00:22:29,099 --> 00:22:33,520 -ஃபில்லியை விட்டு வரமுடியாதோ என நினைத்தேன் -இல்லை. லாஸ் ஏஞ்சலஸ் பரவாயில்லை தான். 308 00:22:33,604 --> 00:22:35,355 அது ஒரு நல்ல செய்தி. 309 00:22:38,775 --> 00:22:42,279 ...நீச்சல் குளத்தில் குதித்து பூனையை காப்பாற்றிய பெண்மணி. 310 00:22:42,362 --> 00:22:45,741 சரி, மேலும் தீவிரமாக சொன்னால், இன்றைய இரவிற்கான நம்முடைய முக்கிய கதை, 311 00:22:45,824 --> 00:22:49,369 நாம் மேற்கு செஸ்டரில் வாழும் இசபெல்லைப் பார்க்கச் செல்கிறோம். 312 00:22:49,453 --> 00:22:50,662 நான் வாக்களிக்கிறேன். 313 00:22:51,413 --> 00:22:53,707 சமூகத்தை நிலைகுலையச் செய்த அவலம் நடந்த, 314 00:22:53,790 --> 00:22:56,168 மேற்கு செஸ்டரில் உள்ள மரினோ தோட்டத்திற்கு வெளியில் இருந்து 315 00:22:56,251 --> 00:22:58,378 நேரடி ஒளிப்பரப்பிற்காக நான் இசபெல் கேரிக். 316 00:22:58,462 --> 00:23:00,422 எந்தளவுக்கு என தெரியாது, ஆனால் துப்பாக்கி சூடு நடந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன. 317 00:23:00,506 --> 00:23:01,757 வீட்டிற்குள் துப்பாக்கி குண்டுகள் சுடப்பட்டன 318 00:23:04,635 --> 00:23:09,515 அவள், இந்த வீட்டை விட்டு வெளியேறவில்லை என்றால்... 319 00:23:09,598 --> 00:23:10,766 எனக்குக் கவலையில்லை. 320 00:23:10,849 --> 00:23:13,018 என்ன நடக்கிறது என்று எனக்கு கவலையில்லை. 321 00:23:13,393 --> 00:23:17,022 என் மகன் இல்லையென்றால் எனக்கு எதுவும் முக்கியமில்லை. 322 00:23:17,105 --> 00:23:20,526 நீ செய்தவற்றிற்கு நீதான் பொறுப்பேற்க வேண்டும், டொரோதி. 323 00:23:20,609 --> 00:23:22,819 செய்யக் கூடாத எதையும் நான் அவளுக்கு செய்யவில்லை. 324 00:23:23,529 --> 00:23:26,406 அப்போது மட்டும் ஷான் கீழே வராவிட்டால், நான் அவளை இங்கேயே விட்டிருப்பேன்! 325 00:23:29,576 --> 00:23:30,744 நீ என்ன செய்துள்ளாய்? 326 00:23:32,538 --> 00:23:33,872 உன்னால் இனி ஒருபோதும் 327 00:23:34,748 --> 00:23:37,543 ஜெரிகோவோடு மீண்டும் சேர முடியாது என்பதை இப்போது கூட நீ உணரவில்லையா? 328 00:23:38,460 --> 00:23:43,549 "ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால்... 329 00:23:43,632 --> 00:23:45,425 நீங்கள் என்னிடம் வாசகத்தை மீண்டும் 330 00:23:45,509 --> 00:23:48,345 -சொன்னால்! -...அனைத்திலும் குற்றவாளியாயிருப்பான்!" 331 00:24:05,612 --> 00:24:07,197 ஷான். ஷான், நீங்கள் என்ன செய்கிறீர்கள்? 332 00:24:07,281 --> 00:24:08,740 என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க 333 00:24:08,824 --> 00:24:11,618 பல துறைகள் முயற்சிக்கும்போது, அங்கு ஏராளமான போலீசார் இருப்பதாகத் தெரிகிறது. 334 00:24:12,661 --> 00:24:15,414 செய்தியாளர்களுக்கு அனுமதி இல்லை, நீங்கள் பார்ப்பது போலவே, 335 00:24:15,497 --> 00:24:18,876 சம்பவ இடத்திற்கு காவலர் கார்களும், ஆம்புலன்ஸ்களும் வந்து கொண்டிருக்கின்றன. 336 00:24:19,459 --> 00:24:23,797 அரை மணி நேரத்திற்கு முன், பக்கத்து வீட்டுக்காரர்கள், அதிகாலை 1:00 மணிக்கு 337 00:24:23,881 --> 00:24:25,340 துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாக சொன்னார்கள். 338 00:24:36,351 --> 00:24:38,395 எத்தனை பேர் இறந்தனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 339 00:24:39,354 --> 00:24:42,774 உள்ளே இருக்கும் குடும்பத்தின் பாதுகாப்பு மற்றும் நிலை பற்றி 340 00:24:42,858 --> 00:24:45,194 அதிகாரிகள் இன்னும் எந்த தகவலும் சொல்லவில்லை. 341 00:24:45,277 --> 00:24:49,031 மேலும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. நான் இசபெல் கேரிக், 8 நியூஸ். 342 00:24:50,782 --> 00:24:53,619 நீ என்ன செய்திருக்கிறாய் என்று பார். 343 00:25:32,115 --> 00:25:34,117 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்