1 00:01:01,562 --> 00:01:03,689 என் கணவரும், சகோதரனும் விபத்தில் மாட்டிக்கொண்டார்கள். 2 00:01:03,689 --> 00:01:04,772 காத்திருக்க முடியுமா? 3 00:01:04,772 --> 00:01:07,192 நிலைமையின் விபரீதத்தை புரிந்து கொள்ளுங்கள். 4 00:01:08,193 --> 00:01:12,030 அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்கள் நலமா என்று கூடத் தெரியவில்லை. 5 00:01:12,906 --> 00:01:13,907 சுற்றிலும் பாருங்கள், மேடம். 6 00:01:13,907 --> 00:01:16,326 குடும்பத்தினரை தொடர்புகொள்ள நீங்கள் மட்டும் முயலவில்லை. 7 00:01:16,326 --> 00:01:17,870 நீங்கள் காத்திருக்கத் தான் வேண்டும். 8 00:01:26,628 --> 00:01:27,754 என்னை ஹோல்டில் போட்டுவிட்டார்கள். 9 00:01:33,093 --> 00:01:36,680 பாரு, உன்னைக் கஷ்டப்படுத்த விரும்பவில்லை, ஆனால் அவர்களுக்கு என்ன ஆச்சு என்று தெரியவேண்டும். 10 00:01:39,057 --> 00:01:40,809 கவலைப்படாதீர்கள், டொரோதி. 11 00:01:41,977 --> 00:01:43,437 எல்லாம் சரியாகிவிடும். 12 00:01:44,021 --> 00:01:46,148 அவர்கள் பத்திரமாக வீட்டிற்கு திரும்புவார்கள் என்று நம்புகிறேன். 13 00:01:47,482 --> 00:01:48,817 திருமதி. டர்னர்? 14 00:01:48,817 --> 00:01:50,068 இதோ, இருக்கிறேன். 15 00:01:50,944 --> 00:01:53,197 இப்போது நான் தயார். நோயாளிகளின் பெயர்களைச் சொல்லுங்கள். 16 00:01:53,697 --> 00:01:55,908 சரி. ஷான் டர்னர் மற்றும் ஜூலியன் பியர்ஸ். 17 00:01:57,034 --> 00:02:01,288 - வேண்டுமென்றால், உங்களை இணைக்கிறேன். - ஓ, சரி. தயவு செய்து இணையுங்கள். மிக்க நன்றி. 18 00:02:01,288 --> 00:02:02,372 தயவு செய்து காத்திருங்கள். 19 00:02:02,998 --> 00:02:03,916 ஹலோ? 20 00:02:04,416 --> 00:02:06,668 ஷான். ஓ, ஷான். 21 00:02:07,169 --> 00:02:09,630 அப்பாடா. நீங்கள் நலமா? 22 00:02:09,630 --> 00:02:14,218 நான் நலம் தான், டொரோதி. கேளு, நான் உன்னைப் பார்க்க வேண்டும். 23 00:02:14,218 --> 00:02:16,136 ஒரு விஷயத்தைப் பற்றி நாம் பேச வேண்டும். 24 00:02:17,221 --> 00:02:18,222 யாராவது அருகில் இருக்கிறார்களா? 25 00:02:21,183 --> 00:02:24,186 நான் லியனோடு இருக்கிறேன். 26 00:02:28,982 --> 00:02:30,359 அன்பே, நாம் என்ன செய்யப் போகிறோம்? 27 00:02:32,069 --> 00:02:33,570 என்னால் வீட்டை விட்டு வெளியே வர முடியாது. 28 00:02:35,155 --> 00:02:36,156 அன்பே, 29 00:02:37,157 --> 00:02:39,826 நான் விரைவில் வீடு திரும்புவேன் என்று தோன்றவில்லை. 30 00:02:40,327 --> 00:02:41,537 மருத்துவமனையில் கும்பல் அதிகமாக இருக்கு. 31 00:02:43,997 --> 00:02:45,374 எவ்வளவு காலம் ஆகும்? 32 00:02:46,583 --> 00:02:49,211 தெரியவில்லை. சில நாட்கள். ஒரு வேளை ஒரு வாரம் கூட ஆகலாம். 33 00:02:52,714 --> 00:02:54,800 ஷான், இது வேலைக்காகாது. 34 00:02:56,009 --> 00:02:59,471 கேளு, டொரோதி, நான் உனக்கு ஒன்று அனுப்புகிறேன். 35 00:03:00,097 --> 00:03:02,975 டோபி உணவு கொண்டு வருவான், எனவே நீ கவலைப்படாதே. 36 00:03:04,226 --> 00:03:06,019 எனக்கு உணவு வேண்டாம். நீங்கள் வீட்டிற்கு வந்தால் போதும். 37 00:03:06,937 --> 00:03:09,231 - என்னால் இப்போது வர முடியாது. - இல்லை. 38 00:03:09,898 --> 00:03:11,483 உனக்காக ஏதாவது ஒன்று செய்கிறேன். 39 00:03:11,483 --> 00:03:14,403 ப்ரொஸ்குட்டோ, பிளாக் டிரூஃபிள்ஸ், உனக்கு பிடித்த உணவுகள் அனைத்தையும். 40 00:03:14,403 --> 00:03:15,988 வேண்டாம், ஷான். 41 00:03:16,488 --> 00:03:17,489 எனக்குத் தெரியும், அன்பே. 42 00:03:18,824 --> 00:03:23,161 கேளு, காலை 8:00 மணிக்கு, டோபி உணவு கொண்டு வருவான். 43 00:03:24,371 --> 00:03:25,372 மறந்து விடாதே. 44 00:03:26,540 --> 00:03:28,250 என்னை நம்பு. எல்லாம் சரியாகிவிடும். 45 00:03:29,543 --> 00:03:31,295 - உன்னை நேசிக்கிறேன். - சரி. 46 00:03:37,384 --> 00:03:41,013 நாம் ஒன்றாக இருக்கும் வரை, நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. 47 00:03:42,806 --> 00:03:44,850 நம் பயத்தை அவள் தெரிந்துகொள்ளக் கூடாது. 48 00:03:46,602 --> 00:03:48,020 நாம் நடிக்கலாம், சரியா? 49 00:03:52,733 --> 00:03:53,734 ஹலோ? 50 00:03:54,318 --> 00:03:55,527 ஹாய், டாக்டர் வுடெல். 51 00:03:56,069 --> 00:03:57,988 மறுபடியும் டொரோதி டர்னர் தான் பேசுகிறேன். 52 00:03:58,655 --> 00:04:00,490 ஹாய், டொரோதி. ஒரு நிமிடம் காத்திருங்கள். 53 00:04:02,367 --> 00:04:03,368 டொரோதி? 54 00:04:04,077 --> 00:04:05,787 எப்படி இருக்கிறீர்கள்? 55 00:04:05,787 --> 00:04:06,872 லியன்? 56 00:04:07,497 --> 00:04:10,334 கத்தி உங்கள் ரத்த குழாய்க்கு எவ்வளவு அருகில் இருந்தது என்று டாக்டர் வுடெல் சொன்னாரா? 57 00:04:10,918 --> 00:04:12,836 நீங்கள் உயிரோடு இருப்பதே அதிசயம் தான். 58 00:04:13,587 --> 00:04:16,089 எங்கள் இருவரை விடவும் டொரோதி மிகவும் தைரியமானவள். 59 00:04:16,089 --> 00:04:17,173 அவள் உன்னோடு போராடுவாள். 60 00:04:17,841 --> 00:04:19,051 நன்றாக ஓய்வெடுங்கள், ஷான். 61 00:04:19,593 --> 00:04:22,554 குணமான பிறகு, உங்களுக்கான ஒரு புது வாழ்க்கையை நீங்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். 62 00:04:23,347 --> 00:04:24,973 அதற்கு சற்று முயற்சி தேவைப்படும். 63 00:04:30,771 --> 00:04:31,772 டொரோதி? 64 00:04:37,236 --> 00:04:38,487 இன்று இரவு நான் இங்கே தங்குகிறேன். 65 00:04:40,572 --> 00:04:42,282 புயலால் ஜெரிகோ பயப்படக்கூடும். 66 00:04:42,783 --> 00:04:44,493 ஷான் இல்லாமல் நீங்கள் பயப்படுவீர்கள் என்று தெரியும். 67 00:05:26,243 --> 00:05:27,452 நாம் நலம் தான். 68 00:05:31,415 --> 00:05:33,542 நமக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. சரி. 69 00:05:56,690 --> 00:05:59,776 டிவியை நோக்கி சோஃபா இருப்பது புத்திசாலித்தனம் என்று நினைத்தேன். 70 00:06:01,945 --> 00:06:02,946 இதை எப்போது செய்தாய்? 71 00:06:04,239 --> 00:06:06,783 தூக்கம் வரவில்லை. ரொம்ப பரபரப்பாக இருந்தேன். 72 00:06:08,869 --> 00:06:11,496 நாம் மூவரும் ஒரு திரைப்படம் பார்க்கலாம் என்று நினைத்தேன். 73 00:06:13,123 --> 00:06:14,124 சரி. 74 00:06:15,083 --> 00:06:16,084 நீங்கள் விரும்பினால் மட்டும். 75 00:06:16,877 --> 00:06:17,878 இல்லை, எனக்கும் விருப்பம் தான். 76 00:06:18,879 --> 00:06:20,047 நல்லது. 77 00:06:23,258 --> 00:06:24,384 அது டோபியாக இருக்கும். 78 00:06:26,261 --> 00:06:27,262 போய் கதவைத் திறக்கிறாயா? 79 00:06:29,473 --> 00:06:30,807 நீங்கள் போய் திறங்களேன். 80 00:06:31,850 --> 00:06:32,851 டோபியும் நானும்... 81 00:06:34,394 --> 00:06:36,146 நான் கழிப்பறைக்கு போக வேண்டும். 82 00:06:40,526 --> 00:06:41,527 இதோ வருகிறேன். 83 00:07:07,928 --> 00:07:10,180 கட்டிடத்திற்குப் பின்னால். 84 00:07:10,180 --> 00:07:12,266 டோபியோடு பேசுவது போல நடி. 85 00:07:12,266 --> 00:07:14,351 நாம் பேச வேண்டும். மிகவும் அவசரமான விஷயம். 86 00:07:26,029 --> 00:07:28,365 சரி. மிக்க நன்றி, டோபி. 87 00:07:29,950 --> 00:07:33,120 நாங்களும் அவர்களைப் பிரிந்து கஷ்டப்படுகிறோம், ஆனால் அவர்கள் நலம் பெறுவதாக டாக்டர் சொல்கிறார். 88 00:07:35,998 --> 00:07:36,999 ஆமாம். 89 00:07:39,668 --> 00:07:42,379 சரி. நிச்சயமாக, அவளிடம் சொல்கிறேன். 90 00:07:43,005 --> 00:07:44,882 சரி, நன்றி. மீண்டும் சந்திக்கலாம். 91 00:07:59,146 --> 00:08:00,314 டோபி ஹலோ சொன்னான். 92 00:08:02,608 --> 00:08:04,318 அந்த கூடையை எடுத்து வருகிறாயா? 93 00:08:18,207 --> 00:08:19,208 நாம் என்ன பார்க்கலாம்? 94 00:08:20,375 --> 00:08:21,710 எதுனாலும் பரவாயில்லை. 95 00:08:22,544 --> 00:08:23,545 நீயே தேர்ந்தெடு. 96 00:08:24,087 --> 00:08:27,090 அதை மாடியில் வை, நானும் ஜெரிகோவும் ஒரு நொடியில் வருகிறோம். 97 00:08:29,718 --> 00:08:31,345 உங்களைப் பற்றி எனக்குத் தெரியாதா என்ன? 98 00:08:32,554 --> 00:08:34,640 என் கவனத்தை திசைத்திருப்பி நீங்கள் வெளியே போக நினைக்கிறீர்கள். 99 00:08:35,765 --> 00:08:36,892 எப்போதும் செய்வதைப் போல. 100 00:08:37,726 --> 00:08:38,727 வெளியே பாரு. 101 00:08:40,770 --> 00:08:44,816 என்னுடைய இந்த நிலையில், நானும் ஜெரிகோவும் வெளியே போக முடியும் என நினைக்கிறாயா? 102 00:08:48,529 --> 00:08:51,031 அப்படி போக முடிந்திருந்தால், இந்நேரம் போயிருப்பேன். 103 00:08:54,117 --> 00:08:55,452 நாம் இங்கேயே பார்க்கலாம். 104 00:09:01,333 --> 00:09:03,293 திரைப்படம் பார்க்க மழைக் காலம் தான் சிறப்பானது. 105 00:09:04,711 --> 00:09:06,255 பயமுறுத்தும் படம் ஏதாவது பார்க்கலாமா? 106 00:09:07,381 --> 00:09:10,133 இல்லை, அது ஒரு விபத்து. நான் யாரையும் கொல்ல நினைக்கவில்லை. 107 00:09:10,133 --> 00:09:13,512 என் அழகுக் குட்டி, என்னாலும் விபத்துகள் ஏற்பட வைக்க முடியும். 108 00:09:13,512 --> 00:09:15,556 அந்த மாணிக்க செருப்புகளை மறந்துவிட்டாயா? 109 00:09:15,556 --> 00:09:19,309 செருப்புகள், ஆமாம்! செருப்புகள்! 110 00:09:19,309 --> 00:09:20,394 லியன்? 111 00:09:22,396 --> 00:09:23,397 என்ன? 112 00:09:25,190 --> 00:09:26,483 எனக்கு உடம்பு சரியில்லை. 113 00:09:27,234 --> 00:09:28,235 அவற்றைக் காணோம்! 114 00:09:28,735 --> 00:09:30,237 என் முதுகும், கால்களும் வலிக்கின்றன. 115 00:09:32,739 --> 00:09:35,367 மாத்திரை சாப்பிட்டு சிறிது நேரம் தூங்கப் போகிறேன். 116 00:09:38,036 --> 00:09:41,415 கொஞ்சம் நேரம் ஜெரிகோவைப் பார்த்துக் கொள்கிறாயா? 117 00:09:43,000 --> 00:09:46,587 அவனைக் குளிப்பாட்டி, கதை புத்தகம் படித்துக் காட்டு. 118 00:09:49,131 --> 00:09:51,133 அவனை என்னிடம் கொடுப்பதில் உங்களுக்கு பிரச்சினையில்லையே? 119 00:09:52,718 --> 00:09:53,927 கண்டிப்பாக இல்லை. 120 00:09:55,554 --> 00:09:56,555 நீ அவனை நேசிப்பது தெரியும். 121 00:09:56,555 --> 00:09:59,516 - ...இங்கே உனக்கு அதிகாரம் இல்லை. - யாரும் வருவதற்கு முன்னே, போய்விடு... 122 00:10:18,452 --> 00:10:20,162 குளியல் பொம்மைகளை எடுத்து வருகிறாயா? 123 00:10:20,954 --> 00:10:24,041 நான் ஓய்வெடுக்கும் போது, நீயே அவனைக் குளிப்பாட்டிவிடு. சரியா? 124 00:10:24,750 --> 00:10:25,751 சரி. 125 00:10:33,550 --> 00:10:36,303 ஜெரிகோ, அம்மா வெளிய போய், அப்பாவிடம் பேசிவிட்டு, 126 00:10:37,137 --> 00:10:39,640 திரும்பி உனக்காக வருகிறேன். சத்தியமாக. 127 00:10:41,642 --> 00:10:45,145 அப்பாவிடம் பேசிவிட்டு வருகிறேன், நாம் இங்கிருந்து தப்பித்துவிடலாம். 128 00:10:46,313 --> 00:10:48,065 இனி அவளை நாம் பார்க்கத் தேவையே இல்லை. 129 00:10:50,359 --> 00:10:53,070 கொஞ்ச நேரம் தைரியமாக இரு. 130 00:10:55,864 --> 00:10:57,991 எல்லாவற்றிற்கும் மேலாக நான் உன்னை நேசிக்கிறேன். 131 00:11:01,286 --> 00:11:03,247 ஹே. நீங்கள் தயாரா? 132 00:11:03,830 --> 00:11:05,165 - ஆமாம். - சரி. 133 00:11:06,917 --> 00:11:08,877 நாம் குளிக்கப் போகலாம். 134 00:11:11,421 --> 00:11:12,422 வா. 135 00:11:13,715 --> 00:11:14,800 வா. 136 00:11:43,495 --> 00:11:44,788 நன்றாக ஓய்வெடுங்கள், டொரோதி. 137 00:11:46,957 --> 00:11:48,292 அம்மாவுக்கு “பை“ சொல்லு. 138 00:11:49,209 --> 00:11:51,128 பை. 139 00:12:31,752 --> 00:12:33,754 இங்கே வா. தலைக்கு குளிக்கலாம். 140 00:12:35,214 --> 00:12:39,885 ஜெரி, தலையை இப்படி வை. அது என்ன? 141 00:12:42,763 --> 00:12:45,349 இங்கே வா. வேண்டாம். 142 00:13:34,857 --> 00:13:35,941 என்ன செய்கிறாய்? 143 00:14:20,402 --> 00:14:22,446 என்ன? அதுவா? 144 00:14:22,446 --> 00:14:23,530 அதுவா? 145 00:14:24,031 --> 00:14:28,327 ஓ, சரி. அது உனக்கு வேண்டும். 146 00:15:31,849 --> 00:15:35,978 - ஹே. ஹாய். - டொரோதி. 147 00:15:42,109 --> 00:15:43,443 - கடவுளே. - ஹே. 148 00:15:43,443 --> 00:15:44,528 அப்பாடா. 149 00:15:45,445 --> 00:15:47,948 ஐயோ, மன்னியுங்கள். 150 00:15:47,948 --> 00:15:50,659 உங்கள் இருவருக்கும் என்ன ஆச்சு? லியன் தான் இப்படி செய்தாளா? 151 00:15:50,659 --> 00:15:53,078 ஒருவகையில். அவள் ஒரு பைத்தியக்காரி. 152 00:15:53,078 --> 00:15:55,122 நானும் அதைத்தான் சொல்ல முயற்சித்தேன், ஜூஜூ. 153 00:15:55,122 --> 00:15:56,206 ஆமாம். 154 00:15:57,416 --> 00:15:58,542 உனக்காக ஏங்கினேன். 155 00:15:59,543 --> 00:16:01,170 நான் இவ்வளவு தூரம் வருவேன் என்றே நினைக்கவில்லை. 156 00:16:01,920 --> 00:16:02,921 அந்தக் கூடை. 157 00:16:03,839 --> 00:16:05,883 எனக்கு முன்பாக லியன் அதைப் பார்த்திருந்தால்? 158 00:16:05,883 --> 00:16:08,135 சமீப காலமாக, அவள் தன்னைப் பார்க்க மறுப்பதாக டோபி சொன்னான், 159 00:16:08,135 --> 00:16:11,430 எனவே அவன் பெயரைக் கேட்டால், உன்னை தனியாக அனுப்புவாள் என்று நினைத்தேன். 160 00:16:11,430 --> 00:16:13,015 அவளுக்கு அவன் மீது ஏதோ இருக்கிறது. 161 00:16:20,189 --> 00:16:21,190 டோட்டி. 162 00:16:22,608 --> 00:16:27,154 ஷான்... நாம் இதைச் செய்தாக வேண்டும். 163 00:16:27,779 --> 00:16:28,780 எனக்குத் தெரியும். 164 00:16:29,364 --> 00:16:30,365 என்ன? 165 00:16:35,537 --> 00:16:36,872 டோட்டி. 166 00:16:38,957 --> 00:16:40,834 உன்னிடம் ஒரு விஷயத்தைப்பற்றி பேச வேண்டும். 167 00:16:43,128 --> 00:16:45,464 வேறு எங்காவது போய் இதைப்பற்றி பேசலாமே. 168 00:16:46,089 --> 00:16:47,549 ஃபிராங்க் வீட்டிற்குப் போகலாம். 169 00:16:48,675 --> 00:16:49,927 விளையாடுகிறாயா? என்னால் முடியாது. 170 00:16:51,011 --> 00:16:54,765 தெரிந்து தான் உன்னிடம் இப்படி கேட்கிறேன். ஆனால், இதில் நீ என்னை நம்ப வேண்டும். 171 00:16:54,765 --> 00:16:57,351 உங்களை நம்புவதா? ஜெரிகோ அவளோடு உள்ளே இருக்கிறான். 172 00:17:02,689 --> 00:17:03,524 டோட்டி. 173 00:17:03,524 --> 00:17:06,777 போதும்! இன்னும் ஒரு முறை கேட்டால் கூட, நான் காரை விட்டு இறங்கிவிடுவேன். 174 00:17:06,777 --> 00:17:09,946 சரி. சரி. 175 00:17:12,199 --> 00:17:15,077 ஜூலியன், இங்கேயே இதைப்பற்றி பேசலாம். 176 00:17:58,328 --> 00:18:00,914 டொரோதி, கடந்த ஆகஸ்ட் மாதம் பற்றி உனக்கு என்ன நினைவிருக்கிறது? 177 00:18:03,250 --> 00:18:04,251 ஆகஸ்டா? 178 00:18:10,299 --> 00:18:11,675 உங்களுக்கு அதைப்பற்றி யார் சொன்னது? 179 00:18:17,181 --> 00:18:19,308 உனக்கு என்ன நினைவிருக்கு? எதுவரை உனக்கு ஞாபகம் இருக்கு? 180 00:18:20,184 --> 00:18:21,935 ஷான், உங்களுக்கு எப்படி தெரிந்தது... 181 00:18:23,437 --> 00:18:26,899 பல வாரங்களாக இதை நினைத்து மனஉளைச்சலில் இருக்கிறேன். பைத்தியம் பிடிப்பது போல இருக்கிறது. 182 00:18:27,399 --> 00:18:29,818 அப்போது நான் தயாராக இல்லை, ஆனால் இப்போது தயார். 183 00:18:29,818 --> 00:18:32,738 டொரோதி, உனக்கு நான் உதவ முடியும். உனக்கு என்ன நினைவிருக்கிறது? 184 00:18:33,363 --> 00:18:34,364 எதுவும் ஞாபகம் இல்லை. 185 00:18:37,409 --> 00:18:38,994 எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை. 186 00:18:40,662 --> 00:18:43,457 லாஸ் ஏஞ்சலஸில் “கோர்மெட் காண்ட்லெட்” நிகழ்ச்சியில் நான் விருந்தாளியாக பங்கேற்றேன். 187 00:18:43,457 --> 00:18:45,834 இந்தத் தொடரை நான் தொகுத்து வழங்க காரணமே அது தான். 188 00:18:45,834 --> 00:18:47,085 சரி. 189 00:18:47,085 --> 00:18:49,713 படுக்கையறையில் இதைப்பற்றி பேச முயற்சித்தேன். நினைவிருக்கிறதா? 190 00:18:49,713 --> 00:18:53,258 எனக்குப் புரியவில்லை. இது என்ன? நாம் எதைப்பற்றி பேசுகிறோம்? 191 00:18:54,801 --> 00:18:56,637 அந்த வேலையை நான் செய்திருக்கவே கூடாது. 192 00:18:56,637 --> 00:18:58,472 அதை அப்போதே உணர்ந்திருந்தேன். 193 00:19:01,099 --> 00:19:02,100 மிகச் சோர்வாக இருந்தேன். 194 00:19:02,100 --> 00:19:04,436 அப்பாவாக இருப்பது எவ்வளவு கடினம் என்று யாரும் சொல்வதில்லை. 195 00:19:04,436 --> 00:19:06,522 நான் ஒரு இயல்பான அப்பா கிடையாது. உன்னைப் போல கிடையாது. 196 00:19:06,522 --> 00:19:08,315 அதை விட்டு வெளியேற விரும்பினேன், 197 00:19:08,315 --> 00:19:12,611 கொஞ்ச காலமாவது, வெளியே போக வேண்டும் என்று விரும்பினேன். 198 00:19:12,611 --> 00:19:14,530 நான் எப்போதுமே கோழையாக இருந்திருக்கிறேன். 199 00:19:15,822 --> 00:19:17,616 ஷான், கலிஃபோர்னியாவில் இருந்த போது வேறு ஒரு பெண்ணோடு 200 00:19:17,616 --> 00:19:19,701 உறவு கொண்டீர்கள் என்று சொல்ல வந்தால், அதை சொல்லத் தேவையே இல்லை, 201 00:19:19,701 --> 00:19:22,246 மற்றும் நம் குடும்பம் பாதுகாப்பான பிறகு இதைப் பற்றி பேசலாம். 202 00:19:24,456 --> 00:19:26,959 ஜூலியன், என்ன? என்ன விஷயம்? 203 00:19:28,418 --> 00:19:31,880 நீ என்னிடம் இரண்டு நாட்கள் கழித்து பேசினாய். 204 00:19:34,341 --> 00:19:36,593 நீ கஷ்டப்படுவதாக சொன்னாய். 205 00:19:38,679 --> 00:19:40,681 உன் குரலிலேயே அதைப் புரிந்துகொள்ள முடிந்தது. 206 00:19:40,681 --> 00:19:43,308 அப்படியா சொன்னேன்? நான் கஷ்டப்படவே இல்லையே. 207 00:19:43,308 --> 00:19:44,768 உனக்கு நினைவிருக்காது. 208 00:19:48,564 --> 00:19:50,983 நான் உனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். 209 00:19:54,152 --> 00:19:56,530 ஆனாலும் நான் வராமல் இருந்தேன். 210 00:19:57,114 --> 00:20:00,576 போதை மருந்து சாப்பிட விரும்பியதால், நான் நினைத்தேன்... 211 00:20:01,535 --> 00:20:04,413 நான் வராததற்கு என்னை மன்னித்துவிடு. 212 00:20:04,997 --> 00:20:06,748 நீங்கள் இருவருமே பைத்தியக்காரத்தனமாக பேசுகிறீர்கள். 213 00:20:08,041 --> 00:20:09,793 நான் உன்னை அழைக்கவே இல்லை. 214 00:20:13,755 --> 00:20:14,590 என்ன? 215 00:20:14,590 --> 00:20:16,133 ஜூஜூ. டோட்டி பேசுகிறேன். 216 00:20:18,010 --> 00:20:19,803 முக்கியமில்லை என்றால் நான் அழைக்க மாட்டேன், 217 00:20:19,803 --> 00:20:23,974 ஆனால், நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். 218 00:20:26,852 --> 00:20:31,857 ஜெரிகோ தொடர்ந்து அழுதுக் கொண்டே இருக்கிறான், எல்லாவற்றையும் செய்து பார்த்துவிட்டேன். ஆனாலும்... 219 00:20:34,359 --> 00:20:36,153 இப்போது எனக்கு மலைப்பாக இருக்கிறது. 220 00:20:37,613 --> 00:20:44,494 எனவே, இரண்டு மணி நேரமாவது, நீ இங்கே வா, ஜூஜூ. 221 00:20:46,413 --> 00:20:49,583 சரி. என்னிடம் திரும்ப பேசு, சரியா? 222 00:20:50,751 --> 00:20:51,752 பை. 223 00:20:53,170 --> 00:20:55,631 என்ன நடக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை. 224 00:20:56,256 --> 00:20:59,593 அதன் பிறகு, நத்தாலி உதவி செய்வாள் என்று நினைத்தோம். 225 00:21:00,135 --> 00:21:03,680 மக்களுக்கு உதவும் ஒரு புது சிகிச்சை முறை தனக்கு தெரியும் என்று சொன்னாள். 226 00:21:03,680 --> 00:21:07,267 டொரோதி, நீ புரிந்துகொள்ள வேண்டும், உனக்கு எப்படி உதவுவது என்று எங்களுக்கு தெரியவில்லை. 227 00:21:07,267 --> 00:21:10,062 அதாவது, நீ உடலளவில் அங்கே இருந்தாய், ஆனால் சுயநினைவோடு இல்லை, புரிகிறதா? 228 00:21:10,062 --> 00:21:12,814 கடினமான முடிவுகளை எப்போதும் எடுக்கக்கூடியவள் நீதான். 229 00:21:12,814 --> 00:21:14,566 என்ன நடக்கிறது? 230 00:21:15,526 --> 00:21:17,110 எனக்கு ஒன்றுமே புரியவில்லை. 231 00:21:17,110 --> 00:21:19,947 தயவுசெய்து, யாராவது புரியும்படி சொல்கிறீர்களா? 232 00:21:19,947 --> 00:21:22,908 சொல்ல முயற்சிக்கிறேன். ஒரு பொம்மை இருந்தது. 233 00:21:25,953 --> 00:21:27,663 அது உண்மையிலேயே நீ மீண்டுவர உதவியாக இருந்தது. 234 00:21:28,497 --> 00:21:31,667 நீ அந்தப் பொம்மையை அவன் என்று நினைத்துக்கொண்டாய். 235 00:21:34,419 --> 00:21:37,631 சீக்கிரமாகவே, எங்கள் டொரோதி எங்களுக்குத் திரும்ப கிடைத்துவிட்டாள். 236 00:21:41,343 --> 00:21:45,597 அது எத்தனை நாட்களுக்கு சரிவந்திருக்கும் எனத் தெரியவில்லை, 237 00:21:45,597 --> 00:21:50,394 ஆனால்... எனக்குப் பழைய டொரோதி கிடைப்பாள் என்றால் 238 00:21:50,394 --> 00:21:52,688 அது எத்தனை நாட்களுக்கு நீண்டாலும் பரவாயில்லை என நினைத்தேன். 239 00:21:54,439 --> 00:21:55,440 பொம்மையா? 240 00:22:00,112 --> 00:22:03,532 அந்தப் பொம்மையை நான் யாரென்று நினைத்தேன்? 241 00:22:04,616 --> 00:22:05,617 ஷான்? 242 00:22:06,827 --> 00:22:08,787 நீ உன்மீது பழி போட்டுக்கொள்வாய் என தெரியும், டொரோதி. 243 00:22:08,787 --> 00:22:11,665 அதுதான் நீ. ஆனால் அப்படி செய்யாதே. 244 00:22:13,333 --> 00:22:14,877 நாம் இருவருமே உணர்ச்சிவசத்தில் இருந்தோம், 245 00:22:14,877 --> 00:22:17,504 மேலும் நான் உன்னைத் தனியாக கஷ்டப்பட விட்டுவிட்டேன். 246 00:22:22,843 --> 00:22:25,596 அது ஒரு விபத்து அவ்வளவுதான். 247 00:22:26,346 --> 00:22:28,307 அது ஒரு பயங்கரமான விபத்து. 248 00:22:28,307 --> 00:22:31,059 உனக்கு... அந்தக் கோடைக்காலம் எவ்வளவு வெப்பமாக இருந்தது என ஞாபகமிருக்கிறதா? 249 00:22:32,060 --> 00:22:34,104 சாலைகள் வெப்பத்தால் உருகி ஒட்ட ஆரம்பித்தன. 250 00:22:39,026 --> 00:22:41,028 அவனை மளிகை கடைக்கு அழைத்துச் சென்றாய். 251 00:22:42,905 --> 00:22:44,198 உன் கைகள் முழுவதும் பொருட்கள் இருந்தன. 252 00:22:49,494 --> 00:22:52,706 - என்ன? - நீ அதை மறக்க நினைக்கிறாய் எனத் தெரியும், 253 00:22:52,706 --> 00:22:54,583 ஆனால் இப்போது அதை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும், டொரோதி. 254 00:22:56,001 --> 00:22:59,004 சின்ன தவறு நடந்துவிட்டது அவ்வளவுதான், அன்பே. 255 00:23:01,089 --> 00:23:03,675 டோட்டி, ஞாபகப்படுத்த முயற்சி செய். 256 00:24:43,358 --> 00:24:47,112 திருமதி. டர்னர், உங்களுக்கு ஒன்றுமில்லையே? 257 00:24:51,074 --> 00:24:53,202 நான் ஒரு காவல் அதிகாரி, திருமதி. டர்னர். 258 00:24:55,412 --> 00:24:57,831 உங்கள் மகனைப் பற்றி கேட்கலாமா? 259 00:24:59,708 --> 00:25:01,668 ஜெரிகோ, சரிதானே? 260 00:25:05,297 --> 00:25:06,423 என்ன நடந்தது? 261 00:25:09,593 --> 00:25:10,802 உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? 262 00:25:18,435 --> 00:25:19,728 {\an8}ரெயஸ் 263 00:25:28,779 --> 00:25:30,197 மன்னித்துவிடுங்கள், மேடம். 264 00:25:57,391 --> 00:25:58,392 டொரோதி. 265 00:26:00,352 --> 00:26:02,229 தயவுசெய்து என்னிடம் பேசு, அன்பே. 266 00:26:08,193 --> 00:26:09,862 சுயநினைவுக்கு வா, டொரோதி. 267 00:26:14,908 --> 00:26:16,827 தயவுசெய்து சுயநினைவுக்கு வா, டொரோதி. 268 00:26:25,419 --> 00:26:27,671 - ஜூலியன்! ஜூலியன்! - டொரோதி, நிறுத்து! 269 00:26:29,590 --> 00:26:32,593 டொரோதி, உன்னை நேசிக்கிறேன், நிறுத்து! 270 00:26:33,260 --> 00:26:36,471 டொரோதி! கடவுளே! டொரோதி! 271 00:26:37,306 --> 00:26:38,432 டொரோ... 272 00:26:40,267 --> 00:26:41,935 கடவுளே! டொரோதி! 273 00:26:44,479 --> 00:26:47,941 இல்லை! 274 00:26:50,736 --> 00:26:54,156 அடக் கடவுளே! ஐயோ! 275 00:28:14,403 --> 00:28:16,238 சரி. நாம் வந்துவிட்டோம், டோட்டி. வீட்டிற்கு வந்துவிட்டோம். 276 00:28:17,197 --> 00:28:19,074 லியன், கீழே வா! 277 00:28:19,950 --> 00:28:21,702 அவளிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டோம். எல்லாமே முடிந்துவிட்டது! 278 00:28:23,120 --> 00:28:24,121 லியன்! 279 00:28:24,872 --> 00:28:28,125 நான் இங்கு தான் இருக்கிறேன். கத்தாதீர்கள். 280 00:28:29,835 --> 00:28:31,962 அவளுக்கு எல்லா உண்மையும் தெரியும், லியன். எல்லாமே முடிந்துவிட்டது. 281 00:28:33,255 --> 00:28:35,215 இன்று ஜெரிகோ உங்களை மிஸ் பண்ணினான், டொரோதி. 282 00:28:35,215 --> 00:28:36,300 பாரு, ஷான். 283 00:28:40,095 --> 00:28:42,014 உங்கள் மகனைத் தூக்க விரும்புகிறீர்களா? 284 00:28:42,014 --> 00:28:42,973 அது வெறும் பொம்மை. 285 00:28:42,973 --> 00:28:45,809 - இது என்ன வேடிக்கை? - ஒன்றும் வேடிக்கையில்லை, ஷான். 286 00:28:45,809 --> 00:28:47,811 போதும் உன் விளையாட்டை நிறுத்து. 287 00:28:47,811 --> 00:28:48,896 சரியா? இது முடிந்துவிட்டது. 288 00:28:49,605 --> 00:28:50,522 நீ சுரங்கப்பாதை வழியாக 289 00:28:50,522 --> 00:28:53,609 குழந்தையையும், பொம்மையையும் மாற்றி எங்களை ஏமாற்றியது எங்களுக்குத் தெரியும். 290 00:28:53,609 --> 00:28:55,694 இனிமேலும் நீ எங்களை கட்டுப்படுத்த முடியாது. 291 00:28:56,195 --> 00:28:57,696 உன்னை யாரும் நம்பவில்லை. 292 00:28:58,488 --> 00:29:00,407 எனக்கு அப்படித் தோன்றவில்லை. 293 00:29:01,909 --> 00:29:02,910 டொரோதி? 294 00:29:06,496 --> 00:29:08,957 இது உங்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் எனப் புரிகிறது. 295 00:29:10,125 --> 00:29:13,003 இப்படி நடந்ததற்கு என்னை மன்னித்துவிடுங்கள். 296 00:29:14,505 --> 00:29:16,215 இப்போது, உங்களுக்கு எல்லாமே தெரியும். 297 00:29:17,716 --> 00:29:19,510 நான் உங்களுக்கு என்ன செய்திருக்கிறேன் என்றும் தெரியும். 298 00:29:20,302 --> 00:29:22,471 நீ இந்த வீட்டை விட்டு வெளியே போக வேண்டும், லியன். 299 00:29:23,138 --> 00:29:26,892 நீ மனநிலை சரியில்லாதவள், எங்களைத் தனியாக விடு. 300 00:29:27,684 --> 00:29:30,354 நீங்கள் செய்த தவறால் தான் அவன் இறந்தான் எனத் தெரிந்ததும்... 301 00:29:30,354 --> 00:29:31,563 இப்போதே கிளம்பு, லியன்! 302 00:29:31,563 --> 00:29:33,524 ...உங்கள் மீது ரொம்ப கோபமாக இருந்தேன். 303 00:29:34,858 --> 00:29:37,152 பிறகுதான் என் நோக்கத்தை நான் புரிந்துகொண்டேன். 304 00:29:38,278 --> 00:29:41,198 உங்கள் தவறைச் சரிசெய்வது தான் என் நோக்கம். 305 00:29:41,198 --> 00:29:42,950 இவள் ஒரு மனநோயாளி, டொரோதி. 306 00:29:42,950 --> 00:29:44,243 இவளை விட்டுத்தள்ளு. 307 00:29:45,035 --> 00:29:47,955 என்னால் அசாதாரணமான செயல்களை செய்யமுடியும், டொரோதி. 308 00:29:48,497 --> 00:29:50,749 நம்பவே முடியாத விஷயங்களைக் கூட செய்வேன். 309 00:29:51,667 --> 00:29:53,335 ஆனால் என் வாழ்வில் மிகப்பெரிய 310 00:29:53,335 --> 00:29:55,921 அசாதாரண விஷயத்தை உங்களுக்காகத்தான் செய்தேன். 311 00:29:57,089 --> 00:29:59,675 உங்கள் மகனைத் திரும்ப உயிருடன் கொண்டு வந்திருக்கிறேன். 312 00:29:59,675 --> 00:30:01,009 அவள் சொல்வதைக் கேட்காதே. 313 00:30:01,009 --> 00:30:04,388 அது ஜெரிகோ இல்லை, அன்பே. அது வேறொருவருடைய குழந்தை. 314 00:30:04,388 --> 00:30:05,556 இந்தப் பொம்மை 315 00:30:05,556 --> 00:30:08,934 இங்கு வந்ததற்கு காரணம், ஷானும் ஜூலியனும் எதையும் நம்பவில்லை. 316 00:30:10,310 --> 00:30:11,645 அவர்களைத் தண்டிக்க நினைத்தேன். 317 00:30:13,605 --> 00:30:17,109 எனவே, நான் இல்லாத இடத்திற்கு ஜெரிகோவை அனுப்பிவிட்டேன். 318 00:30:17,109 --> 00:30:19,111 டொரோதி, இரண்டு ஊர் தள்ளி, 319 00:30:19,111 --> 00:30:21,905 ஒரு குடும்பம் தங்கள் குழந்தையைக் காணவில்லை எனத் தேடிக் கொண்டிருக்கின்றனர். 320 00:30:23,240 --> 00:30:26,743 ஆமாம், இவள் அந்தக் குழந்தையை இன்னொரு பெண்ணிடமிருந்து திருடியிருக்கிறாள், அன்பே. 321 00:30:26,743 --> 00:30:29,204 இவளை நாம் சிறப்பானவள் என நினைப்பதற்காக இப்படிச் செய்திருக்கிறாள். 322 00:30:29,204 --> 00:30:31,123 இப்போது அவனை எங்காவது மறைத்து வைத்திருப்பாள். 323 00:30:31,123 --> 00:30:34,293 அவள் எங்களைக் கட்டுப்படுத்தியது போல் உன்னையும் கட்டுப்படுத்த நினைக்கிறாள். 324 00:30:34,293 --> 00:30:37,796 அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்களால் அது முடியாது. 325 00:30:39,131 --> 00:30:40,132 ஆனால் உங்களால் முடியும். 326 00:30:41,675 --> 00:30:44,011 ஒரு அம்மாவுக்கு தன் குழந்தையைத் தெரியும். 327 00:30:46,138 --> 00:30:49,808 அது ஜெரிகோ இல்லை, அன்பே. நான் சொல்வதைக் கேள். 328 00:30:50,434 --> 00:30:52,936 சில விஷயங்களை விளக்க முடியாது. 329 00:30:53,478 --> 00:30:56,190 அம்மாவுக்கும் குழந்தைக்கும் இருக்கும் பந்தத்தை விளக்க முடியாது. 330 00:30:56,982 --> 00:30:58,901 வாழ்க்கையையும் இறப்பையும் விளக்க முடியாது. 331 00:30:58,901 --> 00:30:59,985 என்னைப் பற்றியும். 332 00:31:01,403 --> 00:31:04,156 ஆனால் உங்களுக்கு உண்மை தெரியும், இல்லையா, டொரோதி? 333 00:31:04,740 --> 00:31:08,243 ஏனென்றால் நீங்கள் அவனைத் தூக்கியிருக்கிறீர்கள், அவன் இதயத்துடிப்பை உணர்ந்திருக்கிறீர்கள். 334 00:31:08,744 --> 00:31:11,246 அவன் ஜெரிகோ தான் என்று உங்களுக்குத் தெரியும். 335 00:31:11,246 --> 00:31:14,291 அவன் உங்கள் மகன் தான் என்று உங்களுக்கே தெரியும், டொரோதி. 336 00:31:15,042 --> 00:31:16,960 நீங்கள் என்னை நம்புகிறீர்கள், இல்லையா, டொரோதி? 337 00:31:18,295 --> 00:31:21,256 நீ மனதளவில் வலிமையற்றவள் எனத் தெரிந்து, அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்துகிறாள். 338 00:31:21,256 --> 00:31:22,716 அவள் சொல்வதைக் கேட்காதே. 339 00:31:23,926 --> 00:31:26,929 டொரோதி, நான் அவனை நிரந்தரமாகத் திரும்ப கொண்டுவந்து விடுவேன். 340 00:31:27,638 --> 00:31:30,349 வாயை மூடு. வாயை மூடித் தொலை! 341 00:31:31,558 --> 00:31:33,644 மறுபடியும் அப்படி நடக்க நாம் விடக்கூடாது. 342 00:31:34,144 --> 00:31:36,772 இனி நீங்கள், நான் மற்றும் அவன் மட்டும்தான். 343 00:31:37,397 --> 00:31:39,024 அவளிடமிருந்து விலகியிரு. 344 00:31:40,359 --> 00:31:43,403 ஜெரிகோவிற்காக என்ன வேண்டுமானாலும் செய்வீர்கள் என ஒருமுறை சொன்னீங்க. 345 00:31:44,321 --> 00:31:45,614 இதோ அதற்கான வாய்ப்பு. 346 00:31:47,074 --> 00:31:49,284 "சரி" என்று மட்டும் சொல்லுங்கள் போதும். 347 00:31:50,118 --> 00:31:51,286 சொல்லாதே. 348 00:31:52,287 --> 00:31:56,875 "சரி" என்று மட்டும் சொல்லுங்கள் எல்லாமே சரியாகிவிடும். 349 00:31:57,376 --> 00:32:00,045 உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் தருகிறேன். 350 00:32:01,463 --> 00:32:03,173 தயவுசெய்து சொல்லாதே, டொரோதி. 351 00:32:04,091 --> 00:32:05,300 "சரி" என்று மட்டும் சொல்லுங்கள். 352 00:32:08,804 --> 00:32:09,805 சரி. 353 00:32:45,174 --> 00:32:47,176 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்