1 00:01:07,734 --> 00:01:11,655 எத்தனை ஃபில்லி மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை, 2 00:01:11,738 --> 00:01:16,159 ஆனால் நமது 8 நியூஸ் நடமாடும் குழு நம் இன்னொரு இடத்தில், 3 00:01:16,243 --> 00:01:19,162 கென்சிங்டனில் களத்தில் இருக்கிறது. 4 00:01:19,246 --> 00:01:22,040 வாக்கர், உங்களுக்கே தெரிந்தது போல, கிரேட்டர் ஃபிலடெல்ஃபியா சுற்றுப்புறத்தை, 5 00:01:22,124 --> 00:01:24,334 பருவகால வானிலையில் அதிகரித்து வரும் 6 00:01:24,418 --> 00:01:27,337 வினோதமான வகையான ஒரு கேட்டகரி 2 புயல் நெருங்குகிறது. 7 00:01:27,421 --> 00:01:30,424 இங்கே நகர மையத்தில், அதிக காற்று வீசுகிறது. 8 00:01:30,507 --> 00:01:32,634 வெள்ளப்பெருக்கு பற்றி நாம் கவலைப்பட வேண்டுமா? 9 00:01:32,718 --> 00:01:35,429 திடீர் வெள்ளப்பெருக்கு பற்றிய ஒரு எச்சரிக்கை இருக்கிறது. 10 00:01:35,512 --> 00:01:37,097 நிறைய கார்கள் நின்றுவிட்டன. 11 00:01:37,181 --> 00:01:40,309 மழைநீர் சாக்கடையோடு கலந்து தெருவில் வழிகிறது. 12 00:01:40,392 --> 00:01:42,019 ஜெஃப், வீட்டிலிருக்கும் மக்களைக் காட்ட முடியுமா? 13 00:01:42,978 --> 00:01:44,688 அந்த விசித்திரமான சத்தம் என்னது? 14 00:01:51,904 --> 00:01:57,492 ஐயோ. “கம்பத்தின் மீது ஏறும் எலிகள்” என்ற வாசகத்தைக் கேட்டிருப்பீர்கள், இல்லையா? 15 00:01:57,576 --> 00:01:58,994 அது அப்படித்தான் தோன்றியது. 16 00:01:59,077 --> 00:02:01,330 எலிகள் பற்றி பேசும் போது, நோய்களின் மையம்... 17 00:02:25,229 --> 00:02:28,398 இந்த நேரத்தில், ஃபிலடெல்ஃபியா சர்வதேச விமான நிலையத்தில் 18 00:02:28,482 --> 00:02:30,609 எல்லா பயணங்களும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது, 19 00:02:30,692 --> 00:02:33,403 சாலைகளும் விரைவில் மூடப்படும் என்று தெரிகிறது. 20 00:02:33,487 --> 00:02:35,906 இன்றைய புயல், சந்திர கிரகணத்தோடு இணைவதால், 21 00:02:35,989 --> 00:02:38,200 வெளியே இரவு போல இருட்டாக இருக்கிறது. 22 00:02:38,283 --> 00:02:40,285 விலங்குகளுக்கு என்ன ஆகும் என்று எப்போதாவது யோசித்ததுண்டா? 23 00:02:40,369 --> 00:02:43,205 பேச்சு இழப்பு மற்றும் மறைமுக அறிகுறிகள் மீதான மன உளைச்சலின் தாக்கம் 24 00:02:44,039 --> 00:02:45,207 என்ன படிக்கிறாய்? 25 00:02:45,290 --> 00:02:46,750 கடைசிக் காலம் 26 00:02:48,460 --> 00:02:49,461 வந்து... 27 00:02:49,962 --> 00:02:53,465 உனக்கே என்னைப் பற்றி தெரியும். விசித்திரமானவற்றை படிப்பது எனக்குப் பிடிக்கும். 28 00:02:54,633 --> 00:02:56,426 மனநலக் கோளாறுகள்? 29 00:02:57,261 --> 00:02:59,054 புத்தி கெட்டுவிடும் என்று பயப்படுகிறாயா? 30 00:03:02,558 --> 00:03:06,979 இரு. ஒன்று. இரன்டு. மூன்று. 31 00:03:08,397 --> 00:03:09,398 மூன்று நொடிகள். 32 00:03:09,481 --> 00:03:12,150 புயலின் மையம் மூன்று மைல்களுக்கு அப்பால் இருக்கிறது என்று அர்த்தம். 33 00:03:13,360 --> 00:03:14,528 அதை நினைத்து பயப்படுகிறாயா? 34 00:03:15,112 --> 00:03:16,154 கண்டிப்பாக இல்லை. 35 00:03:17,364 --> 00:03:18,824 எதையோ நினைத்து நீ பயப்படுகிறாய். 36 00:03:21,201 --> 00:03:24,955 அதாவது, ஒருவேளை பெரிய அளவிலான, 37 00:03:25,038 --> 00:03:27,708 தீவிர வானிலை நிகழ்வுகளால் நான் கொஞ்சம் பயப்படுவேன். 38 00:03:27,791 --> 00:03:31,086 ஆனால் ஒவ்வொரு புயலும் அந்த நூற்றாண்டிற்கான தாக்கத்தை ஏற்படுத்தும். 39 00:03:31,170 --> 00:03:32,838 அப்படி சொல்லி நம்மைப் பார்க்க வைக்கிறார்கள். 40 00:03:35,424 --> 00:03:39,553 இன்று என்னால் தூங்க முடியாது. மதியம் அதிகமாக காபி குடித்தேன். 41 00:03:40,637 --> 00:03:41,638 சரி. 42 00:03:47,436 --> 00:03:48,937 …மேற்கு கடற்கரைக்கு விரைகிறது. 43 00:03:49,021 --> 00:03:51,523 தெற்கே பென்சில்வேனியா வரை மிசௌரி முதல் ஆர்கன்சாஸ் வரை, 44 00:03:51,607 --> 00:03:53,817 திடீர் வெள்ளப்பெருக்குகள் ஏற்படலாம் என எச்சரிக்கப்படுகிறது. 45 00:03:53,901 --> 00:03:55,402 ஃபில்லியைப் பொறுத்தவரை, 46 00:03:55,485 --> 00:03:57,779 இந்த நூற்றாண்டின் புயலாக இது இருக்கலாம். 47 00:03:57,863 --> 00:04:00,616 ஷ்யூல்கில் விரைவுச்சாலையை தவிர்க்குமாறு வண்டி ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 48 00:04:00,699 --> 00:04:03,493 தெற்கிலிருந்து வரும் புயலை நாம் தொடர்ந்து கவனித்து வரும் நிலையில், 49 00:04:03,577 --> 00:04:05,996 -இதமான சூழ்நிலை மாறக்கூடிய... -அதை ஆஃப் செய்கிறாயா? 50 00:04:06,079 --> 00:04:07,664 தொடர்ந்து... 51 00:04:08,707 --> 00:04:09,875 ஐயோ. இவன் எழுந்துவிட்டான். 52 00:04:12,044 --> 00:04:15,130 சில சமயம் அவனை நேரே பார்க்காவிட்டால், மறுபடியும் தூங்கிவிடுவான். 53 00:04:17,925 --> 00:04:19,510 அவனது தொட்டிலை இங்கே ஏன் கொண்டு வந்தீர்கள்? 54 00:04:21,345 --> 00:04:22,596 இங்கே பத்திரமாக இருப்பான். 55 00:04:23,430 --> 00:04:27,059 அதாவது, புயல் சத்தம் அவனை எழுப்பினால், நம்முடன் இங்கே பத்திரமாக இருப்பான். 56 00:04:28,602 --> 00:04:31,980 -இரு. எல்லா ஜன்னல்களையும் மூடினாயா? -மூடினேன். 57 00:04:32,064 --> 00:04:34,024 பின்பக்க கதவுக்கு கீழே அந்த பெரிய டவலை போட்டீர்களா? 58 00:04:34,107 --> 00:04:36,485 -ஏனென்றால் தண்ணீர் சிந்திக் கொண்டே இருக்கும். -பெரிய டவலை போட்டுவிட்டேன். 59 00:04:45,702 --> 00:04:47,871 பேஸ்மென்ட் பற்றி நான் நினைக்கக்கூட விரும்பவில்லை. 60 00:05:15,190 --> 00:05:17,860 எங்களால் இனி பூங்காவில் தங்க முடியாது. 61 00:05:17,943 --> 00:05:19,278 நாங்கள் என்ன செய்ய வேண்டும்? 62 00:05:20,237 --> 00:05:22,614 நீங்கள் இங்கே இருப்பதை புயல் விரும்பாவிட்டால், நீங்கள் போகத்தான் வேண்டும். 63 00:05:23,198 --> 00:05:25,909 இங்கே உன்னைத் தனியாக விட முடியாது. இங்கே பாதுகாப்பு இல்லை. 64 00:05:26,827 --> 00:05:28,203 நீ என்னை நம்புகிறாயா? 65 00:05:31,874 --> 00:05:33,250 என்னுடைய இதயத்துடிப்பே நீ தான். 66 00:05:34,960 --> 00:05:35,794 அப்படியென்றால் போ. 67 00:05:37,296 --> 00:05:38,589 மற்றவர்களையும் அழைத்துப் போ. 68 00:05:40,090 --> 00:05:41,884 உலகத்தில் என் குரலாக இரு. 69 00:06:31,016 --> 00:06:32,601 தாமதத்திற்கு மன்னிக்கவும். 70 00:06:32,684 --> 00:06:35,020 டொரோதி தூங்கும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. 71 00:06:35,979 --> 00:06:37,898 அவர் அந்தப்பக்கத்தில் இருப்பார் என்று நம்புகிறாயா? 72 00:06:38,941 --> 00:06:41,068 அவளை அங்கே கொண்டு வந்தால் போதும் என்று சொன்னார். 73 00:06:43,111 --> 00:06:45,489 அவளிடம் பேசத்தான் போகிறார், இல்லையா? 74 00:06:45,572 --> 00:06:48,116 அவளை எங்காவது அழைத்துச் சென்று மனதை மாற்றுவாரா? 75 00:06:48,200 --> 00:06:50,702 கண்டிப்பாக. அது அவளுக்கு நல்லது தான். 76 00:06:53,080 --> 00:06:55,249 அவள் உன்னை நம்புகிறாள். எனவே, நீதான் அவளை அழைத்து வர வேண்டும். 77 00:06:55,332 --> 00:06:58,085 முடியாது. என்னை விட அவள் உன்னைத் தான் அதிகம் நம்புகிறாள். 78 00:06:58,168 --> 00:06:59,795 நீ அவளுக்கு ஒரு அப்பா போல. 79 00:06:59,878 --> 00:07:01,922 ஆனால், அவளை வெளியேற்ற முயல்கிறேன் என்று அவளுக்குத் தெரியும். 80 00:07:02,005 --> 00:07:03,590 மேலும், அவளிடம் நான் எப்படி, 81 00:07:03,674 --> 00:07:06,260 “ஹே, அதிகாலை 2:00 மணிக்கு நான் உன்னை பேஸ்மெண்டில் சந்திக்கலாமா?” என கேட்பது? 82 00:07:07,261 --> 00:07:09,847 மேலும், நீ அப்படிச் செய்தால், அதை ஒரு செக்ஸ் உறவாக ஆக்க முடியும். 83 00:07:09,930 --> 00:07:11,098 அடடா. 84 00:07:11,765 --> 00:07:15,894 இதை கேவலமாகவோஅல்லது அநியாயமாகவோ நீ ஆக்க மாட்டாய் என்று நினைத்தேன். 85 00:07:15,978 --> 00:07:17,271 ஓ, ஆமாம், நீ சொல்வது சரி. 86 00:07:18,188 --> 00:07:21,733 அவளைப் பிடித்து நான்கு படிக்கட்டுகள் இழுத்து வரவேண்டும், ஜூலியன். 87 00:07:21,817 --> 00:07:24,611 தன் வாழ்நாளின் பாதியை, உன் சகோதரியைப் பின்தொடர்ந்த மனநலம் குன்றியவள் அவள். 88 00:07:24,695 --> 00:07:26,530 இதில் என்னோடு ஒத்துழைப்பாயா, மாட்டாயா? 89 00:07:26,613 --> 00:07:29,074 -அவளை கீழே அழைத்து வரேன், சரியா? -நல்லது. 90 00:07:36,832 --> 00:07:38,000 ஷான்? 91 00:07:39,626 --> 00:07:40,878 ஷான்? 92 00:07:46,717 --> 00:07:47,718 அடக் கடவுளே. 93 00:08:38,018 --> 00:08:41,313 இது தரையை கெடுக்காமல் இருக்க, ஏதாவது கொண்டு வந்து இதை சுத்தம் செய்கிறாயா? 94 00:08:52,908 --> 00:08:53,909 ஓ, லியன். 95 00:08:55,410 --> 00:08:57,454 உன்னைப் போல யாரையும் நான் சந்தித்ததே இல்லை. 96 00:08:58,413 --> 00:09:00,541 சில சமயம் நீ என்னையே ஞாபகப்படுத்துகிறாய். 97 00:09:04,294 --> 00:09:06,004 மறக்காமல், அந்த விளக்கிற்கடியில் சுத்தம் செய். 98 00:09:08,549 --> 00:09:12,344 நீயும் நானும்… மிக உறுதியானவர்கள். 99 00:09:13,637 --> 00:09:14,847 பின்வாங்க மாட்டோம். 100 00:09:18,308 --> 00:09:20,519 எப்போதும், அது நல்ல விஷயமாக இருக்காது. 101 00:09:22,771 --> 00:09:25,399 என்னிடம் ஏதோ தவறு இருப்பது போலவே நீங்கள் நடந்துக்கொண்டீர்கள். 102 00:09:26,733 --> 00:09:28,610 என்னை வெளியேற்ற நினைப்பது போல நடந்துக்கொண்டீர்கள். 103 00:09:30,988 --> 00:09:33,448 நான் எப்போதும் உங்களை மகிழ்விக்கத்தான் விரும்பினேன். 104 00:09:34,199 --> 00:09:37,202 என்னை மகிழ்விப்பது உன் வேலை இல்லை. எப்போதும் அப்படி இருந்ததில்லை. 105 00:09:39,746 --> 00:09:42,249 என்னை நேசிப்பது உங்களுக்கு ஏன் இவ்வளவு கஷ்டமாக இருக்கு? 106 00:09:42,958 --> 00:09:44,960 ஓ, லியன். 107 00:09:45,711 --> 00:09:51,091 உலகத்தில் நிறைய மக்கள் இருக்கிறார்கள். ஏன் என்னை நேசிக்கிறாய்? 108 00:09:52,676 --> 00:09:55,137 ஷானிற்கும் ஜூலியனுக்கும் கூட இப்போது என்னைப் பிடிப்பதில்லை. 109 00:09:55,721 --> 00:09:58,557 நான் மோசமானவள் இல்லை என்று நீங்கள் அவர்களுக்கு விளக்கலாம். 110 00:10:02,519 --> 00:10:05,063 -பிரேஸ் அணிய உங்களுக்கு உதவி தேவையா? -வேண்டாம். 111 00:10:05,147 --> 00:10:06,815 இல்லை, பரவாயில்லை. நான் கழற்றி விடுகிறேன்... 112 00:10:06,899 --> 00:10:08,859 இல்லை, பரவாயில்லை. இனி எனக்கு அது தேவையே இல்லை. 113 00:10:08,942 --> 00:10:11,445 -ஆனால் டாக்டர் சொன்னார்... -அடக் கடவுளே, லியன், தயவுசெய்து விடு. 114 00:10:11,528 --> 00:10:14,281 நானே முயற்சி செய்து இதை செய்யப் பார்க்கிறேன். 115 00:10:15,824 --> 00:10:17,910 நாம் பேசிக்கொண்டே இருக்கலாம். 116 00:10:18,493 --> 00:10:21,205 ஒருவேளை விஷயங்களை மாற்றிப் பார்க்க நான் உனக்கு உதவலாம். 117 00:11:56,675 --> 00:11:58,844 அவ்வளவுதானா? 118 00:12:10,063 --> 00:12:12,149 என்ன செய்கிறாய்? கீழே வா! 119 00:12:21,658 --> 00:12:23,744 இது எல்லாம் எனக்காகத்தான், ஜூலியன். 120 00:12:26,914 --> 00:12:28,332 உனக்குப் புரியவில்லையா? 121 00:12:28,415 --> 00:12:31,960 இந்தப் புயல், இது அனைத்தும், எனக்காகத்தான்! 122 00:12:32,044 --> 00:12:35,297 என்னைத் தோற்கடிக்க முடியும் என்று நினைக்கிறான், ஆனால் அவனால் முடியாது. 123 00:12:36,089 --> 00:12:37,216 ஏனென்றால் நான் வென்றுவிட்டேன். 124 00:12:39,134 --> 00:12:41,136 கீழே வா. உனக்கு ஒன்றைக் காண்பிக்கணும். 125 00:12:45,015 --> 00:12:46,266 வர மாட்டேன். 126 00:12:49,603 --> 00:12:50,604 ஷான்! 127 00:12:51,438 --> 00:12:52,439 ஜூலியன்! 128 00:12:58,111 --> 00:12:59,321 ஷான்! 129 00:13:00,280 --> 00:13:02,616 தயவுசெய்து, என்னை விடுங்கள். 130 00:13:28,141 --> 00:13:30,769 -எதுவுமே தெரியவில்லை. -போய்க்கொண்டே இரு. 131 00:13:56,461 --> 00:13:58,130 ஹலோ, லியன். 132 00:14:02,176 --> 00:14:03,594 யார் அவர்கள்? 133 00:14:04,970 --> 00:14:06,471 நீங்கள் இருவரும் இப்போது போகலாம். 134 00:14:10,225 --> 00:14:11,310 அங்கு ஏன் நெருப்பு இருக்கிறது? 135 00:14:14,646 --> 00:14:15,856 நமக்குத் தேவையில்லாதது. வா போவோம். 136 00:14:16,899 --> 00:14:18,025 வா. வேலை முடிந்தது. 137 00:15:01,360 --> 00:15:02,778 வருகிறேன், மகனே. 138 00:15:04,530 --> 00:15:05,989 வருகிறேன், அன்பே. 139 00:15:13,455 --> 00:15:18,168 சரி, அன்பே. ஒன்றுமில்லை. அம்மா இங்கு தான் இருக்கிறேன். 140 00:15:26,301 --> 00:15:28,846 செய்துவிட்டோம். அவ்வளவுதான். அவள் போய்விட்டாள். 141 00:15:33,225 --> 00:15:37,563 நீ கஷ்டப்படத் தேவையில்லை. நான் சொல்வதை மட்டும் கேட்டால் போதும். 142 00:15:44,361 --> 00:15:45,529 சரி. 143 00:15:46,321 --> 00:15:48,365 இந்தக் கயிறால்... 144 00:15:49,992 --> 00:15:54,788 உன்னைக் கட்டிப்போட முடியுமா, என்ன? 145 00:15:56,164 --> 00:15:58,333 நீ யாரென நம் இருவருக்குமே தெரியும். 146 00:16:05,048 --> 00:16:07,176 நான் உன்னிடம் எப்போதாவது அன்பு காட்டியிருந்தால், 147 00:16:08,677 --> 00:16:10,888 தயவுசெய்து அதை மறந்துவிடாதே. 148 00:16:11,680 --> 00:16:15,893 நீ முதலில் இந்த வீட்டிற்கு வந்தபோது, உன்மீது அன்பை வெளிப்படுத்தினேன், 149 00:16:16,768 --> 00:16:19,771 ஆனால், அந்த அன்பு சுயநலமானது. 150 00:16:20,564 --> 00:16:24,985 அது எங்களுக்கு அழிவையும், மரணத்தையும் தான் தந்துள்ளது. 151 00:16:26,153 --> 00:16:30,949 இந்த உலகத்தில் தவறாக என்ன நடந்தாலும் அதற்கு அவர் தான் காரணம். நானில்லை. 152 00:16:31,658 --> 00:16:33,243 நீ அவரைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளாய். 153 00:16:34,912 --> 00:16:37,998 அவர் உன்னையோ அல்லது என்னையோ பார்க்க மாட்டார். 154 00:16:39,249 --> 00:16:43,212 அவரின் செயலைப் புரிந்துகொள்வது பெரிய விஷயமாக இருக்கிறது. 155 00:16:43,795 --> 00:16:46,256 நம்மால் சேவை மட்டும்தான் செய்ய முடியும். 156 00:16:46,840 --> 00:16:49,718 இதையே தான் என் வாழ்நாள் முழுவதும் சொன்னீர்கள். 157 00:16:51,637 --> 00:16:53,639 இனி அதை நான் நம்ப மாட்டேன். 158 00:16:54,640 --> 00:16:57,351 இனி எப்போதுமே நான் அவருக்கு சேவை செய்ய மாட்டேன். 159 00:16:58,810 --> 00:17:02,481 அப்படியென்றால் நீ உண்மையிலேயே எங்களை விட்டு பிரிந்துவிட்டாய். 160 00:17:11,281 --> 00:17:12,366 அழாதீர்கள். 161 00:17:12,950 --> 00:17:17,119 என் உடலில் பலம் இருக்கும் வரை அழுவேன், 162 00:17:17,204 --> 00:17:19,080 ஏனென்றால் இந்த உலகம் சீரழிந்துவிட்டது. 163 00:17:19,665 --> 00:17:20,999 முட்டாள்தனமாக நடந்துகொள்ளாதீர்கள். 164 00:17:22,334 --> 00:17:25,963 இந்த உலகம் அவர் எதிர்பார்த்தபடி இல்லாமல் இருக்கலாம், ஆனால் வாழ்க்கை போய்கொண்டே இருக்கும். 165 00:17:26,046 --> 00:17:28,799 இல்லை, அப்படி நடக்காது. தெளிவாகத் தெரிகிறது. 166 00:17:29,550 --> 00:17:31,009 உன்னைச் சுற்றிலும் பார். 167 00:17:31,802 --> 00:17:34,054 நீ இருக்கவே கூடாது. 168 00:17:34,972 --> 00:17:41,186 நீ இந்த உலகத்திற்குத் தீங்கு செய்தாய், இப்போது இந்த உலகமே கஷ்டப்படுகிறது. 169 00:17:41,270 --> 00:17:45,482 நீ நேசிக்கும் டொரோதியையும், இந்தக் குடும்பத்தையும், 170 00:17:45,566 --> 00:17:48,277 பேராபத்தில் சிக்க வைத்துள்ளாய். 171 00:17:49,736 --> 00:17:52,447 இன்றிரவு நடக்கும் பிரளயம் வெறும் ஆரம்பம் மட்டுமே. 172 00:17:53,782 --> 00:17:57,953 சமநிலை இல்லாத உலகம், பெரும் துன்பத்தை ஏற்படுத்தும், 173 00:17:58,036 --> 00:18:00,956 நீ உன் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்து எங்களைக் காப்பாற்றவில்லை என்றால் 174 00:18:02,332 --> 00:18:04,293 அந்த துன்பத்திற்கு முடிவே இருக்காது. 175 00:18:29,526 --> 00:18:32,529 நாங்கள் உன்னைக் கொல்ல முயன்றோம், 176 00:18:33,822 --> 00:18:35,699 ஆனால் எங்களால் உன்னைக் கொல்ல முடியவில்லை. 177 00:18:35,782 --> 00:18:41,205 உன் கோபத்தையும், பிடிவாதத்தையும் சமாளிக்க முடியவில்லை. 178 00:18:42,164 --> 00:18:45,792 இதை ஒரே ஒருவரால் தான் செய்ய முடியும். 179 00:18:47,419 --> 00:18:49,505 மனவலிமை அதிகமுடைய ஒருவர். 180 00:18:52,549 --> 00:18:53,842 அது நீ தான். 181 00:18:58,639 --> 00:18:59,723 என்னால் முடியாது. 182 00:19:00,557 --> 00:19:02,935 நான் உனக்கு உதவுகிறேன், செல்லக் குட்டி. 183 00:19:03,936 --> 00:19:06,688 முதலில் உன் கண்கள், பிறகு உன் கை கால்கள். 184 00:19:07,814 --> 00:19:11,902 நீ உண்மையிலேயே டர்னர் குடும்பத்தை விரும்பினால் அவர்களுக்கான வாழ்வை அவர்களை வாழவிடு. 185 00:19:11,985 --> 00:19:13,654 அவர்களை விட்டுவிடு. 186 00:19:15,113 --> 00:19:18,200 அவர்கள் உன்னை எப்போதுமே மறக்க மாட்டார்கள். 187 00:19:21,495 --> 00:19:25,624 எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுள் உன் எல்லா பாவங்களையும்... 188 00:19:27,501 --> 00:19:28,919 தீய செயல்களையும் மன்னித்துவிடுவார். 189 00:19:32,047 --> 00:19:33,632 நான் தீயவள் என யார் சொன்னது? 190 00:19:51,441 --> 00:19:52,442 போ. 191 00:19:55,404 --> 00:19:57,906 இன்னும் இங்கு தான் இருக்கிறோம். சீக்கிரம் வா! 192 00:19:58,699 --> 00:19:59,700 கவனமாக இரு! 193 00:20:01,535 --> 00:20:02,578 நிறுத்து! 194 00:20:43,327 --> 00:20:44,494 இனி இவர் உங்களுடையவர். 195 00:20:53,921 --> 00:20:55,172 யாரது? 196 00:21:00,385 --> 00:21:01,803 இது நம் திட்டமில்லை. 197 00:21:10,145 --> 00:21:13,315 வேண்டாம். அதைக் கீழே வை. நீ நிலைமையை மோசமாக்கிவிடுவாய். 198 00:21:15,609 --> 00:21:18,070 அவள் மனம் சோர்வடைந்த பெண். நிலைமை நம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. 199 00:21:24,660 --> 00:21:26,245 அதைக் கேட்டாயா? 200 00:21:26,328 --> 00:21:28,497 இந்தப் புயல்களெல்லாம் அவளால் தான் வருவதாகச் சொன்னாள். 201 00:21:30,916 --> 00:21:34,253 சுத்தப் பொய். அது வெறும் காற்று. 202 00:22:02,364 --> 00:22:03,365 ஐயோ. 203 00:22:08,704 --> 00:22:11,623 நாங்கள் உனக்கு செய்த தவற்றுக்காக என்னை மன்னித்துவிடு. 204 00:22:13,876 --> 00:22:17,296 என் ஃபோன் மேசையில் இருக்கிறது தயவுசெய்து எடுத்துக்கொடு. 205 00:22:18,130 --> 00:22:20,299 ஷானுக்காக 911ஐ அழைக்க வேண்டும். 206 00:23:09,264 --> 00:23:10,766 வேண்டாம். என் பக்கத்தில் வராதே! 207 00:23:16,271 --> 00:23:18,065 -என்னை விட்டு விலகு! -ஷான்! 208 00:23:28,408 --> 00:23:29,409 ஷான்! 209 00:23:39,127 --> 00:23:40,587 911. உங்கள் அவசர தேவை என்ன? 210 00:23:40,671 --> 00:23:42,548 எனக்கு இரண்டு ஆம்புலன்ஸ் வேண்டும். 211 00:23:43,048 --> 00:23:44,550 9780 ஸ்ப்ரூஸ் தெரு. 212 00:23:46,051 --> 00:23:47,302 இங்கு ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. 213 00:23:53,267 --> 00:23:54,351 லியன். 214 00:23:57,396 --> 00:24:01,191 என்ன நடந்தது? ஷான் எங்கே? 215 00:24:02,985 --> 00:24:04,611 உஷ். 216 00:24:05,195 --> 00:24:07,155 ஜெரிகோ நலமாக இருக்கிறானா என உறுதி செய்யுங்கள். 217 00:24:18,208 --> 00:24:19,751 இது ஒரு விபத்து என செவிலித் தாய் சொன்னார். 218 00:24:40,063 --> 00:24:42,482 உங்களை மறுபடியும் இந்த வீட்டிற்குள் விடமாட்டேன். 219 00:25:29,780 --> 00:25:31,073 நீ என்ன செய்தாய்? 220 00:25:35,077 --> 00:25:36,954 நான் எதுவும் செய்யவில்லை, திருமதி. டர்னர். 221 00:25:39,373 --> 00:25:40,791 அது ஒரு விபத்து. 222 00:25:42,960 --> 00:25:45,128 விபத்து எப்படி நடக்கும் எனத் தெரியும் தானே. 223 00:25:48,465 --> 00:25:50,050 இப்போது நீங்களும் நானும் மட்டும் தான் இருக்கிறோம். 224 00:26:24,710 --> 00:26:26,712 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்