1 00:00:45,838 --> 00:00:47,214 உனக்கு என்ன வேண்டும், மைக்கா? 2 00:00:49,383 --> 00:00:50,843 இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். 3 00:00:50,926 --> 00:00:52,553 அப்படியென்றால் உண்மையை சொல்லி விடு. 4 00:00:53,971 --> 00:00:55,764 நாம் எதிரிகளாக இருக்க வேண்டிய தேவையில்லை. 5 00:00:56,723 --> 00:00:58,433 ஒரு காலத்தில் நாம் ஒருவரை ஒருவர் நேசித்தோம். 6 00:00:59,810 --> 00:01:01,353 நீ எனக்கு வழிகாட்டியாக இருந்தாய். 7 00:01:02,563 --> 00:01:04,397 அப்படி சொல்ல விரும்புகிறேன். 8 00:01:04,480 --> 00:01:07,234 டிஸ்கார்டிற்கு நீ தான் வழிகாட்டியாக இருந்தாய் என்று சொல்ல விரும்புகிறேன். 9 00:01:08,402 --> 00:01:13,115 ரோஸ், நீ தவறாக நினைத்துவிட்டாய் என்று பாபியிடம் சொல்லு. 10 00:01:13,198 --> 00:01:14,199 பொய் சொல்ல வேண்டும். 11 00:01:15,325 --> 00:01:17,119 அப்படித்தான் சொல்கிறாய், இல்லையா? பொய் சொல்ல வேண்டும். 12 00:01:17,786 --> 00:01:19,580 -அது பொய்யா? -ஆமாம். 13 00:01:19,663 --> 00:01:23,292 நீ பலமுறைகள் இந்த கதையை சொல்லி இருப்பதால், இது உன் வாழ்க்கை என்று நினைக்கலாம், 14 00:01:23,375 --> 00:01:25,252 ஆனால் அப்படி கிடையாது. அது என்னுடைய வாழ்க்கை. 15 00:01:25,335 --> 00:01:26,336 முழுவதும் அப்படி கிடையாது. 16 00:01:27,004 --> 00:01:30,424 அந்த கிளப்பில் நீ தாக்கப்படவில்லையே. 17 00:01:30,507 --> 00:01:31,800 அது எனக்கு தானே நடந்தது. 18 00:01:32,551 --> 00:01:34,970 நீ வெளி ஆள் என்பதால் அவன் உன்னை தாக்கினான் என்று சொன்னாய். 19 00:01:35,053 --> 00:01:37,264 நான் கருப்பினத்தவள் என்பதால் தான் அவன் என்னைத் தாக்கினான். 20 00:01:38,015 --> 00:01:42,227 -நீ அதை மாற்றிவிட முடியாது. -இந்த கதை பாதிப்பு உண்டாவதைப் பற்றியது. 21 00:01:42,311 --> 00:01:44,521 பள்ளியிலிருந்து திரும்பி வீட்டிற்கு வந்து 22 00:01:44,605 --> 00:01:48,775 உன்னைத் தத்தெடுத்த பெற்றோர்கள், உன்னை தனியே விட்டு, எங்கோ போய் விட்டார்கள். 23 00:01:48,859 --> 00:01:49,860 எவ்வித முன்னெச்சரிக்கையும் செய்யாமல். 24 00:01:50,444 --> 00:01:51,820 அது யாருடைய கதை? 25 00:01:51,904 --> 00:01:53,030 -ரோஸ், கேள்... -யாருடையது? 26 00:01:53,614 --> 00:01:56,241 உனக்குள் சொல்லிக்கொள்ள முடியாவிட்டால் என்னிடமாவது உண்மையை சொல். 27 00:01:57,743 --> 00:02:01,663 நம் இருவரையும் விட உண்மை பெரியது. 28 00:02:03,332 --> 00:02:05,918 ஆயிரக்கணக்கான பெண்களுக்கு என் உதவி தேவை. 29 00:02:06,001 --> 00:02:07,544 நீ என்னை பயன்படுத்திக் கொண்டாய். 30 00:02:08,377 --> 00:02:09,755 ஹோல்டின் அன்பை பயன்படுத்திக் கொண்டாய். 31 00:02:09,838 --> 00:02:11,757 -அது ஒன்றும் உண்மை இல்லை. -அது பொய்யும் இல்லை. 32 00:02:12,758 --> 00:02:16,887 உன்னை நேசிக்க ஆரம்பித்த போது ஹோல்டின் டிஎன்ஏ மாறிவிட்டது. 33 00:02:18,222 --> 00:02:20,474 பாதிக்கப்பட்ட பையன், பாதிக்கப்பட்ட பெண்ணை சந்திக்கிறான். 34 00:02:21,016 --> 00:02:23,519 அவளுடைய கூரான குணங்கள் அவனை கிழித்துவிட்டன. 35 00:02:32,903 --> 00:02:35,614 மின்னாவில் நாம் தங்கியிருந்த இடம் உனக்கு ஞாபகமிருக்கா? 36 00:02:37,324 --> 00:02:38,992 சரி, நீ அங்கே உனக்கென்று ஒரு வாழ்க்கை வாழலாம். 37 00:02:42,996 --> 00:02:44,289 இது உன்னுடையது. 38 00:02:45,123 --> 00:02:46,333 இதற்காக நான் என்ன செய்ய வேண்டும்? 39 00:03:55,903 --> 00:03:57,112 கவனமாக இரு. 40 00:03:57,196 --> 00:03:59,114 சரி, நான் கவனமாக இருக்கிறேன். 41 00:04:03,368 --> 00:04:05,746 -சரி. இதோ இந்த இடம் தான். -சரி. 42 00:04:07,748 --> 00:04:09,041 அங்கேயா? 43 00:04:09,124 --> 00:04:11,335 -நம்பிக்கையோடு இரு. இதோ. -நின்றுவிட்டதா? 44 00:04:11,418 --> 00:04:13,962 ஆமாம். அது சாய்ந்து இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. நான் பார்க்கிறேன். 45 00:04:19,927 --> 00:04:21,470 -அது நன்றாக இருக்கிறது. -ஆமாம். 46 00:04:22,262 --> 00:04:28,477 "ஒருவருடைய கடந்த காலம், வரலாறு ஆகியவற்றை ஏற்றுக்கொள்வது என்பது 47 00:04:29,394 --> 00:04:31,939 அதிலேயே மூழ்குவது போன்றதல்ல, 48 00:04:33,357 --> 00:04:35,150 அதை எப்படி பயன்படுத்துவது என்று கற்றுத் தருவது. 49 00:04:35,234 --> 00:04:39,238 ஆனால் உருவாக்கப்பட்ட கடந்த காலம் உபயோகப்படாது. 50 00:04:39,321 --> 00:04:42,616 வரட்சியான காலத்தில் களிமண் உடைந்து நெருங்குவதை போல 51 00:04:42,699 --> 00:04:45,994 வாழ்க்கையின் சிக்கல்களில் அது நொருங்கி போய் விடும்" என ஜேம்ஸ் பால்டுவின் எழுதியிருந்தார். 52 00:04:46,578 --> 00:04:50,874 மைக்கா கீத்திற்கு இந்த வறட்சி இப்பொழுது அதிகார பூர்வமாக தொடங்கிவிட்டது. 53 00:04:50,958 --> 00:04:54,711 பல ஆண்டுகளாக நடந்த மோசடி இப்போது பூகம்பம் வந்தது போல நடுங்கப் போகிறது. 54 00:04:54,795 --> 00:04:55,921 மைக்கா கீத்தை ரத்து செய்!!! 55 00:04:56,004 --> 00:04:57,673 இப்போது என்ன நடக்கும் என்பது தான் கேள்வி. 56 00:04:57,756 --> 00:04:59,049 நம்மிடையே ஒரு ஏமாற்றுபவள் இருக்கிறாள் அவளுடைய பெயர் மைக்கா 57 00:04:59,633 --> 00:05:03,679 உணர்வு ரீதியாக குற்றம் செய்தது தான் மைக்காவின் மோசடி. 58 00:05:04,304 --> 00:05:08,684 நம்மிடையே மிகவும் பாதிக்கப்பட்டவர்களின் வலியை 59 00:05:09,351 --> 00:05:14,398 அவள் தன்னுடைய சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டாள். 60 00:05:14,982 --> 00:05:19,278 அவளோடு தொடர்பில் வந்த பெரும்பாலானவர்கள் அந்த விளைவுகளை உணர்ந்திருக்கிறார்கள். 61 00:05:21,029 --> 00:05:23,490 என்னுடைய சொந்த கணப்பும் இருக்கிறது. 62 00:05:24,366 --> 00:05:26,159 நான் செய்த தேர்வுகளினால்... 63 00:05:28,203 --> 00:05:30,539 அந்த செயற்பாட்டில் சிலர் பாதிக்கப்பட்டனர். 64 00:05:37,713 --> 00:05:42,676 என் தவறுகளைப்பற்றி நான் நேர்மையாக இருக்க, இந்த கதை என்னை வலியுறுத்தியிருக்கிறது. 65 00:05:43,677 --> 00:05:45,012 என்னுடைய சொந்த செய்தி சேகரிக்கும் முறை. 66 00:05:45,721 --> 00:05:48,015 மைக்காவை வெளிப்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம் அல்ல. 67 00:05:48,932 --> 00:05:51,727 ஜோஷுவா கீத் மற்றும் அவருடைய மகன், ட்ரூ டர்னியின் கொலைகளுக்கு 68 00:05:51,810 --> 00:05:57,774 விடை காண வேண்டும் என்பது தான் என்னுடைய ஒரே குறிக்கோளாக இருந்தது. 69 00:06:02,696 --> 00:06:03,906 சரி. 70 00:06:04,489 --> 00:06:05,490 ரோஸ் அழைக்கிறாள். 71 00:06:07,993 --> 00:06:10,704 -ஹலோ? -மருத்துவமனை என்னை டிஸ்சார்ஜ் செய்தது. 72 00:06:10,787 --> 00:06:13,624 வெளியே போகாதே. நான் அங்கே உடனே வருகிறேன். 73 00:06:16,502 --> 00:06:18,545 நீ எதற்காக ரோஸிடம் போக வேண்டும்? 74 00:06:19,254 --> 00:06:20,464 எனக்கு வேறு வழி இல்லை. 75 00:06:20,547 --> 00:06:22,174 அவளுக்கு வேறு புகலிடம் இல்லை. 76 00:06:22,257 --> 00:06:24,676 அவளை சந்திக்க நீ ஏன் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறாய்? 77 00:06:25,844 --> 00:06:28,430 நேற்றிரவு அவளுடன் நான் பேசிய நேர்காணலை கேட்டுப் பார்த்தேன், 78 00:06:28,514 --> 00:06:32,434 அதில் ஜோஷின் ஆவணப்படத்தினால் அவனுக்கு மிரட்டல் வந்தது என்று சொன்னாள். 79 00:06:32,518 --> 00:06:33,602 அது நமக்கே தெரியுமே. 80 00:06:34,102 --> 00:06:37,314 -ஆனால் அவளுக்கு எப்படித் தெரிந்தது? -தெரியவில்லை. ஜோஷ் சொல்லி இருக்கலாம். 81 00:06:37,397 --> 00:06:39,650 நினைப்பதை விட, அவளுக்கு நிறைய தெரிந்திருக்கலாம். 82 00:06:39,733 --> 00:06:40,984 இது மைக்காவை பற்றியதா? 83 00:06:41,068 --> 00:06:44,363 உனக்கு அவள் நம்பிக்கை துரோகம் செய்த பிறகும் நீ ஏன் அவளை பாதுகாக்க நினைக்கிறாய்? 84 00:06:44,446 --> 00:06:47,282 மைக்கா பதில் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அவள் இறப்பதை நான் விரும்பவில்லை. 85 00:06:47,783 --> 00:06:48,784 புரிகிறது. 86 00:06:50,577 --> 00:06:52,120 மைக்கா கீத் டிஸ்கார்ட் 87 00:06:52,704 --> 00:06:55,123 பொருட்களை திருப்பித் தருவது பற்றி வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் உதவி செய்வர். 88 00:06:55,207 --> 00:06:56,333 உங்கள் அழைப்பை அவர்களோடு இணைக்கிறேன். 89 00:06:58,502 --> 00:07:00,796 நீங்கள் ஷெல்டரை தொடர்பு கொண்டுள்ளீர்கள். உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? 90 00:07:00,879 --> 00:07:03,257 தொலைபேசியை துண்டித்து விடுங்கள். என்ன நடந்தது? 91 00:07:04,007 --> 00:07:07,261 இன்று காலை நாங்கள் இங்கே வந்த போது, வெளியே மக்கள் மிகவும் கோபமாக நின்று கொண்டிருந்தனர். 92 00:07:07,344 --> 00:07:11,056 -உள்ளே நுழைந்து பொருட்களை கைப்பற்றினார்கள். -முதலில் ஆழமாக மூச்சுவிடு. 93 00:07:11,139 --> 00:07:13,934 சரி, யாருக்கும் அடிபடாத வரை, அது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. 94 00:07:14,017 --> 00:07:15,185 ஐவி எங்கே? 95 00:07:15,269 --> 00:07:17,312 இப்போது தான் போர்டுடனான சந்திப்பை முடித்தாள். 96 00:07:19,231 --> 00:07:21,483 என் காலண்டரில் எந்த போர்டு மீட்டிங்கும் இல்லையே. 97 00:07:23,235 --> 00:07:24,778 அதை நீக்குமாறு ஐவி தான் என்னிடம் சொன்னாள். 98 00:07:33,954 --> 00:07:34,955 எனக்குப் புரிகிறது, 99 00:07:35,038 --> 00:07:38,125 ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய சந்தாக்களை ரத்து செய்கிறார்கள். சரி. 100 00:07:38,208 --> 00:07:40,502 இதை சரி செய்ய ஐந்து நிமிட அவகாசம் கொடு. உன்னை அலுவலகத்தில் சந்திக்கிறேன். 101 00:07:40,586 --> 00:07:44,798 இல்லை, நோர்ட்ஸ்ட்ரோம் மற்றும் ப்ளூமிங்டேல் இருவருமே சரும பாதுகாப்பு பொருட்களை கைவிட்டு விட்டார்கள். 102 00:07:44,882 --> 00:07:46,717 எனக்குத் தெரியாது. நானும் அதை தான் சொன்னேன். 103 00:07:46,800 --> 00:07:48,510 மைக்காவிற்கு தெரியாமல் ஐவி போர்டுடன் தனியாக சந்திக்கிறாள் 104 00:07:48,594 --> 00:07:50,512 இல்லை, இல்லை. உன்னை மீண்டும் அழைக்கிறேன், சரியா? 105 00:08:04,651 --> 00:08:06,236 இதை எப்படி செய்ய விரும்புகிறாய்? 106 00:08:08,488 --> 00:08:10,157 போர்ட் உன்னை வெளியேற்ற நினைக்கிறார்கள். 107 00:08:11,033 --> 00:08:12,117 எனக்கு பதிலாக யாரை வைக்கிறார்கள்? 108 00:08:12,993 --> 00:08:14,453 போர்ட் என்னை கேட்டார்கள். 109 00:08:20,501 --> 00:08:23,295 என்னுடைய சொந்த நிறுவனத்திலிருந்து என்னையே நீ வெளியேற்றப் போகிறாயா? 110 00:08:23,879 --> 00:08:25,297 நீ எனக்கு வேறு தேர்வு கொடுக்கவில்லையே. 111 00:08:26,131 --> 00:08:27,132 சரி. 112 00:08:28,592 --> 00:08:30,135 இதை நாம் பரிசோதித்துப் பார்ப்போம். 113 00:08:31,345 --> 00:08:34,181 மக்கள் யாரிடம் அதிகமாக விசுவாசமாக இருக்கிறார்கள் என பார்ப்போம். உன்னிடமா அல்லது என்னிடமா. 114 00:08:34,264 --> 00:08:36,099 இது ஒரு சண்டையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 115 00:08:39,561 --> 00:08:41,020 அப்படி இருக்காது. 116 00:08:52,324 --> 00:08:53,492 மன்னித்துவிடு. 117 00:08:55,160 --> 00:08:57,496 யுனைடெட் ஸ்டேட்ஸ் தபால் துறை 118 00:09:03,710 --> 00:09:05,212 ஹே, ரோஸ். 119 00:09:06,171 --> 00:09:07,589 நீ என்னை அழைத்தது எனக்கு சந்தோஷம். 120 00:09:07,673 --> 00:09:10,425 அவர்களுக்கு என் படுக்கை தேவைப்பட்டது, அதனால் என்னை வெளியேற்றிவிட்டனர். 121 00:09:11,593 --> 00:09:13,595 சரி, உனக்கு சில பொருட்கள் வாங்கி வந்திருக்கிறேன். 122 00:09:13,679 --> 00:09:17,683 உடைகள், காலணிகள், சுகாதார பொருட்கள், மற்றும் உனக்கு உதவுவதற்காக கொஞ்சம் பணமும். 123 00:09:19,017 --> 00:09:20,227 நன்றி. 124 00:09:20,310 --> 00:09:23,522 உன்னால் என்னுடைய சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா? 125 00:09:25,274 --> 00:09:31,238 தன்னுடைய ஆவணப்படத்தினால் ஜோஷிற்கு அச்சுறுத்தல் இருந்தது என்று நீ சொன்னாய். 126 00:09:31,321 --> 00:09:33,073 அதற்கு என்ன அர்த்தம்? 127 00:09:33,156 --> 00:09:37,494 சில மாதங்களுக்கு முன் அதன் வெளியீட்டிற்கு சென்றிருந்தேன், அவன் ஒரு ஆளோடு விவாதித்தான். 128 00:09:37,578 --> 00:09:39,371 அவன் மிகவும் கோபமாக இவனை கொன்று விடுவதாக அச்சுறுத்தினான். 129 00:09:39,454 --> 00:09:40,914 எந்த விதத்திலாவது, அவனது பெயர் தெரியுமா? 130 00:09:43,000 --> 00:09:45,294 ஆனால் அவன் பார்ப்பதற்கு பணக்காரனாக தோன்றினான். 131 00:09:46,503 --> 00:09:47,838 பணக்காரனா? 132 00:09:57,139 --> 00:09:58,432 இவர்களில் யாரையாவது தெரியுமா? 133 00:10:04,521 --> 00:10:05,731 கேலரி 134 00:10:07,441 --> 00:10:09,735 அது இவன் தான். அதோ அங்கே இருக்கிறான். 135 00:10:11,945 --> 00:10:14,489 இதை ஏம்ஸிற்கு அனுப்பு. அவருக்கு இவன் யார் என்று தெரிகிறதா என பாப்போம். 136 00:10:14,573 --> 00:10:17,201 -இவன் தான் ஜோஷை அச்சுறுத்தினான் என்று தெரியுமா? -ஆமாம், நான் அவனைப் பார்த்தேன். 137 00:10:17,951 --> 00:10:19,203 அவன் என்னைப் பார்க்கவில்லை. 138 00:10:21,455 --> 00:10:22,915 மைக்கா இங்கே வந்தாள். 139 00:10:23,790 --> 00:10:27,419 நான் அமைதியாக இருப்பதற்காக எனக்கு ஒரு வீடு கொடுப்பதாக சொன்னாள். 140 00:10:28,504 --> 00:10:30,881 என் வாழ்க்கையைப் பற்றி நான் பொய் சொல்ல போவதில்லை. 141 00:10:30,964 --> 00:10:32,925 என்னிடம் இருப்பது அது ஒன்று தான். நல்லதோ கெட்டதோ. 142 00:10:33,717 --> 00:10:35,802 உனக்கு தங்க இடம் வேண்டும் என்றால், என்னால் உதவ முடியும். 143 00:10:35,886 --> 00:10:37,012 எப்படி? 144 00:10:37,095 --> 00:10:39,348 என்னுடைய சகோதரி சில தங்குமிடங்கள் தெரியும். 145 00:10:39,431 --> 00:10:41,934 ஒன்று அல்பனியில் இருக்கிறது, ஒன்று எல் செரிடோவில் இருக்கிறது. 146 00:10:42,017 --> 00:10:44,937 ஏதாவது ஒரு இடத்திற்கு உன்னை அழைத்துச் சென்று, அங்கே நீ தங்க உதவுகிறேன். 147 00:10:45,020 --> 00:10:46,897 என்னை நீ சுலபமாக கை கழுவி விட முடியும், அப்படித்தானே? 148 00:10:47,731 --> 00:10:51,026 அது என் நோக்கம் கிடையாது. நான் உதவவே விரும்புகிறேன். 149 00:10:51,109 --> 00:10:53,862 இரண்டு இடங்களுமே நன்றாகவும், சுத்தமாகவும் இருக்கும். 150 00:10:57,491 --> 00:10:58,492 எங்கு போகிறாய்? 151 00:11:01,119 --> 00:11:03,664 என் வாயை மூடுவதற்காக மைக்கா இங்கே வந்தாள். 152 00:11:04,331 --> 00:11:06,208 -என்னை பயன்படுத்திக்கொள்ள நீ வந்திருக்கிறாய். -அது உண்மையில்லை. 153 00:11:06,291 --> 00:11:08,210 என்னை நானே பார்த்துக்கொள்வது தான் நல்லது. 154 00:11:13,423 --> 00:11:15,050 சரி. ஏம்ஸ்சிடமிருந்து பதில் வந்திருக்கிறது. 155 00:11:15,133 --> 00:11:17,636 ரோஸ் அடையாளம் காட்டிய நபர் மார்ட்டின் ஹேவுட். 156 00:11:18,178 --> 00:11:21,014 ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை, சான் ஃபிரான்சிஸ்கோ காவல் துறையில் இருந்தான். 157 00:11:21,098 --> 00:11:22,391 -உண்மையாகவா சொல்கிறாய்? -ஆமாம். 158 00:11:22,474 --> 00:11:24,142 காலையில் ஏம்ஸ் நம்மை சந்திக்க விரும்புகிறார். 159 00:11:24,726 --> 00:11:27,396 சரி. நீ அவரோடு பேசு, நான் பிறகு இணைந்து கொள்கிறேன். 160 00:11:31,316 --> 00:11:34,945 ஹே, அப்பா. நான் தான் பேசுகிறேன். நான் வந்து கொண்டே இருக்கிறேன். 161 00:11:35,028 --> 00:11:37,823 மிஸ் ஷெர்லி பற்றிய முழு கதையையும் சொல்ல விரும்புகிறேன். 162 00:11:37,906 --> 00:11:39,908 பாட்காஸ்டில் சொன்ன விஷயங்களைப் பற்றி அல்ல. 163 00:11:45,497 --> 00:11:49,168 உன் அப்பா உண்மையிலேயே உன்னை நேசித்திருந்தால், அவர் சிறையில் இருக்க மாட்டார். 164 00:11:52,504 --> 00:11:55,465 மக்கள் எதிர்பார்க்கக்கூடிய விஷயங்களை அவள் எப்போதும் செய்ததில்லை. 165 00:11:56,300 --> 00:12:00,179 என்னை ஒரு சுமையாக, தேவையில்லாத ஆளாக உணர வைத்தாள். 166 00:12:02,556 --> 00:12:05,267 பிறகு வார்த்தைகளால் காயப்படுத்துவாள். 167 00:12:07,352 --> 00:12:09,730 அவற்றால் என்னை துன்புறுத்த அவளுக்கு மிகவும் பிடித்தது. 168 00:12:11,023 --> 00:12:12,774 என்னைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டதால், 169 00:12:13,942 --> 00:12:17,821 எனக்கு எது துன்பத்தைக் கொடுக்கும் என்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. 170 00:12:19,114 --> 00:12:20,741 நான் அங்கே ஒரு மாதம் இருந்தேன், 171 00:12:21,408 --> 00:12:24,578 அப்பா ஏன் எனக்கு எந்த கடிதமும் எழுதவில்லை, என்று யோசித்துக்கொண்டு இருந்தேன், 172 00:12:26,163 --> 00:12:27,956 அப்போது மேஜையின் மீது ஒரு கடிதத்தைப் பார்த்தேன். 173 00:12:30,083 --> 00:12:34,338 அதை நான் தொடவோ, பிரிக்கவோ, படிக்கவோ அவள் விடவில்லை. 174 00:12:35,589 --> 00:12:39,510 நான் கெஞ்சினேன். அழுதேன். வேண்டினேன். 175 00:12:41,261 --> 00:12:42,679 அவள் என்னைப் பார்த்து சிரித்தாள். 176 00:12:45,390 --> 00:12:47,392 அது அங்கே ஒரு வாரமாக இருந்தது. 177 00:12:50,812 --> 00:12:52,689 இறுதியாக அதை பிடுங்கிக் கொண்டு ஓடினேன். 178 00:12:54,483 --> 00:13:00,030 என்னை அவள் பிடித்த போது, என்னுடைய உச்சபட்ச குரலில் கூச்சலிட்டேன். 179 00:13:01,532 --> 00:13:04,993 அவள் என்னைத் தொடவில்லை ஆனாலும், நான் கூச்சலிட்டுக் கொண்டே இருந்தேன். 180 00:13:07,246 --> 00:13:08,497 அவள்... 181 00:13:09,498 --> 00:13:11,792 அவள் அதைப் பிடுங்கி நெருப்பில் போட்டாள். 182 00:13:13,544 --> 00:13:17,881 அந்த கடிதத்தின் ஓரங்களை நெருப்பு பற்றி கொண்ட போது, 183 00:13:19,508 --> 00:13:21,134 என்னால் எந்த வித ஒலியும் எழுப்ப முடியவில்லை. 184 00:13:22,177 --> 00:13:27,307 என்னுடைய குரலை அது அப்படியே பறித்து விட்டது போல தோன்றியது. 185 00:13:28,559 --> 00:13:29,560 என்றென்றைக்கும் பறித்து விட்டது போல. 186 00:13:32,813 --> 00:13:34,940 அதன் பிறகு என்னால் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 187 00:13:35,816 --> 00:13:39,069 என்ன... இவ்வளவு காலம் இதையெல்லாம் நீ உள்ளேயே வைத்திருந்தாயா? 188 00:13:39,152 --> 00:13:41,280 நீ ஏன் எதையுமே சொல்லவில்லை? 189 00:13:46,201 --> 00:13:48,453 ஞாபகம் இருக்கட்டும், நீ வலிமையாக இருக்க வேண்டும். 190 00:13:52,708 --> 00:13:53,709 அழாதே. 191 00:13:55,544 --> 00:13:57,963 ஒரு கருப்பின சிறுமியின் கண்ணீரைப் பற்றி யாரும் கவலைப்படமாட்டார்கள். 192 00:14:04,636 --> 00:14:07,097 வாழ்வதற்கு தேவையான விஷயத்தைத்தான் நீ செய்தாய். 193 00:14:09,516 --> 00:14:10,517 என்னை மன்னித்துவிடு. 194 00:14:12,603 --> 00:14:13,604 எதற்காக? 195 00:14:14,104 --> 00:14:16,273 உன் பிரச்சினைகளை நான் எப்போதும் புரிந்துகொள்ளாமல் இருந்ததற்காக. 196 00:14:16,356 --> 00:14:18,108 இல்லை, அது உன்னுடைய தவறு இல்லை. 197 00:14:20,068 --> 00:14:21,570 அப்படியென்றால் அது யாருடைய தவறு? 198 00:14:22,070 --> 00:14:23,071 அப்பா. 199 00:14:25,657 --> 00:14:27,075 நான் போய் அவரிடம் பேசுகிறேன். 200 00:14:42,674 --> 00:14:43,842 நீ இங்கே என்ன செய்கிறாய்? 201 00:14:43,926 --> 00:14:48,388 உன் அப்பா தன் சாவியை என்னிடம் கொடுத்துள்ளார், நான்தான் ஒரு மரியாதைக்காக அதை பயன்படுத்தவில்லை. 202 00:14:48,472 --> 00:14:52,351 -சுடப்படக் கூடாது என முடிவெடுத்திருப்பாய். -ஆம், அதுவும் சரி தான். 203 00:14:52,851 --> 00:14:55,646 -ஏதாவது குடிக்கிறாயா? -ஆம், தயவு செய்து. 204 00:14:57,189 --> 00:14:58,190 விஸ்கி வேண்டுமா? 205 00:14:58,273 --> 00:15:01,443 அனைவருக்கும் பிடித்த மதுபானம். ருசியானது. 206 00:15:03,237 --> 00:15:04,238 என்ன விஷயம்? 207 00:15:05,489 --> 00:15:09,034 சரி, என்னிடம் ஒன்று சொல். நீ என்னை வெறுக்கிறாயா? 208 00:15:12,454 --> 00:15:13,997 இதற்கு பதிலே தேவையில்லை. 209 00:15:17,876 --> 00:15:21,839 ஓவன் கேவ் கொலை வழக்கில், உன் நடத்தை குறித்து 210 00:15:21,922 --> 00:15:24,508 நீ விசாரணைக்கு செல்லவிருப்பதால் தான் நான் இதைக் கேட்கிறேன். 211 00:15:25,092 --> 00:15:26,802 அந்த அறையில் நடந்த மரணத்திற்கான வழக்கு. 212 00:15:29,137 --> 00:15:31,473 இப்போது வேறு ஒருவரை நீ சாக விட்டதாக உலகிற்கு சொல்லியிருக்கிறாய். 213 00:15:31,557 --> 00:15:33,976 என்னை என்ன செய்ய சொல்கிறாய்? அது இப்போது வெளியாகிவிட்டது. 214 00:15:35,018 --> 00:15:39,106 இன்னொரு புறம் மிஸ். ஷெர்லி உனக்கு செய்த துஷ்பிரயோகத்தை வைத்து 215 00:15:39,690 --> 00:15:40,691 அனுதாபத்தை உருவாக்கலாம். 216 00:15:41,316 --> 00:15:44,278 ஆனால் நாம் அதில் ஆழமாக செல்ல வேண்டும், உன்னால் அதை செய்ய முடியுமா என்று சொல். 217 00:15:46,697 --> 00:15:47,990 எனக்கு வேறு ஏதாவது வழி இருக்கிறதா? 218 00:15:50,117 --> 00:15:54,788 நம் அனைவருக்கும் வழிகள் இருக்கிறது, ஆனால் இந்த வீட்டை தக்க வைத்துக்கொள்ள வேறு எந்த வழியும் இல்லை. 219 00:15:57,791 --> 00:15:59,877 என் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் இதை வாங்க விரும்புகிறார். 220 00:16:01,003 --> 00:16:02,880 இன்கிராமின் பொருள்களை வேறு இடத்திற்கு மாற்றி வருகிறேன். 221 00:16:04,423 --> 00:16:05,966 இது இனி வீடு இல்லை. 222 00:16:07,467 --> 00:16:10,137 ஓவன் கேவ் தன்னை தானே இங்கு கொன்ற பின்பு... 223 00:16:12,055 --> 00:16:13,182 இது வீடாக இருந்ததே இல்லை. 224 00:16:16,310 --> 00:16:17,519 நீ நிறைய கஷ்டப்பட்டுவிட்டாய். 225 00:16:17,603 --> 00:16:19,563 ஆனால் நீ ஒரு வலிமையான பெண். 226 00:16:20,814 --> 00:16:23,901 உன் வலிகளையும் மீறி, இவ்வுலகில் நிறைய நல்ல விஷயங்களை செய்து வருகிறாய். 227 00:16:25,402 --> 00:16:26,403 அதற்கு ஒரு மதிப்பு உண்டு. 228 00:16:29,323 --> 00:16:32,284 நீ யார்? 229 00:16:32,951 --> 00:16:34,828 சரி, நீ கேட்பது வேடிக்கையாக உள்ளது. 230 00:16:34,912 --> 00:16:36,163 நான்... இரண்டு வருடங்களுக்கு முன்பு, 231 00:16:36,246 --> 00:16:38,999 சில வம்சாவளி ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன். 232 00:16:39,082 --> 00:16:44,004 எனது வரலாறு பற்றி அறிய விரும்பினேன். இந்த மகிமைக்கெல்லாம் யார் பொறுப்பு? 233 00:16:50,385 --> 00:16:54,765 மார்ட்டின் ஹேவுட், "சன்ஸ் ஆஃப் ஐவரில்" மிகுந்த நம்பிக்கை உடையவர். 234 00:16:54,848 --> 00:16:58,143 சில வருடங்களுக்கு முன்பு அவரை இரகசியமாக கண்காணித்த போது, அவரின் சுயரூபம் தெரிய வந்தது. 235 00:16:58,227 --> 00:16:59,228 சன்ஸ் ஆஃப் ஐவார் 236 00:16:59,311 --> 00:17:02,231 இதனால் தான் அவர் காவல் துறையில் நீடிக்கவில்லை என்று நினைக்கிறேன். 237 00:17:02,314 --> 00:17:04,983 -அப்புறம், நான்தான் அவரை பணி நீக்கம் செய்தேன். -ஐயோ. 238 00:17:05,067 --> 00:17:07,486 ஆம். சில காலங்களாக இரட்டை வேஷம் போட்டுக் கொண்டிருந்தார், 239 00:17:07,569 --> 00:17:08,779 ஆனால் நான் அதை கண்டுபிடித்துவிட்டேன். 240 00:17:08,862 --> 00:17:12,782 ஐவருக்கு துணைப்புரிய பார்லெர் போன்ற சமூக வலைதளங்களை மாற்றுப் பெயரில் பயன்படுத்தினார். 241 00:17:12,866 --> 00:17:15,953 சன்ஸ் ஆஃப் ஐவர் அமைப்பிற்கு சில நிதி உதவிகளையும் செய்துள்ளார். 242 00:17:16,036 --> 00:17:17,996 அதனால் தான் உள்துறையிடம் அவர் மாட்டிக்கொண்டார். 243 00:17:18,789 --> 00:17:19,830 அது எப்படி நடந்தது? 244 00:17:19,915 --> 00:17:21,333 வழக்கமான விஷயம் தான். 245 00:17:21,415 --> 00:17:25,087 கசப்பான விவாகரத்து. குழந்தைகளை மனைவி கூட்டிச் சென்றுவிட்டார். பல ஆண்களுக்கு இப்படி நடக்கிறது. 246 00:17:25,170 --> 00:17:27,506 சரி. "சன்ஸ் ஆஃப் ஐவாரை" ஜோஷ் தட்டிக்கழித்ததால் ஜோஷை வெறுத்திருப்பார். 247 00:17:27,589 --> 00:17:29,091 ஹேவுட்டிற்கு கொலை செய்யும் நோக்கம் இருந்தது. 248 00:17:29,174 --> 00:17:31,552 ஆனால் மாவட்ட வழக்கறிஞருக்கு இது போதாது. இது ஒரு தொடக்கம் தான். 249 00:17:31,635 --> 00:17:34,096 நமக்கு ஆதாரமோ அல்லது ஒரு சாட்சியோ தேவை. 250 00:17:34,179 --> 00:17:37,474 சரி, இதை மட்டும் சொல்லுங்கள். நாம் தேடும் கொலையாளி இவராக இருக்கலாம் என நினைக்கிறீர்களா? 251 00:17:37,975 --> 00:17:40,477 அதை சொல்வது கடினம். அவர் வேறொரு இடத்தில் இருந்ததாக சாட்சி இருக்கிறது. 252 00:17:40,561 --> 00:17:43,564 ஜோஷுவாவும் ட்ரூவும் கொலை செய்யப்பட்ட அந்த இரவு 253 00:17:43,647 --> 00:17:45,691 இவர் எஸ்ஓஐ-யோடு தொடக்க விழாவில் இருந்திருக்கிறார். 254 00:17:45,774 --> 00:17:47,109 அவருக்கு உறுதியான சான்றுகள் இருக்கின்றன. 255 00:17:48,193 --> 00:17:49,486 பொய் சொல்லியிருக்கலாமே. 256 00:17:50,070 --> 00:17:52,114 அன்றிரவு யார் இதை தொடங்கியது அல்லது தொடங்கியிருக்கக் கூடும் என 257 00:17:52,197 --> 00:17:53,949 உங்களால் கண்டுப்பிடிக்க முடியுமா? 258 00:17:54,032 --> 00:17:55,409 அது உண்மையை கண்டுபிடிக்க வழிவகுக்கலாம். 259 00:17:55,492 --> 00:17:57,995 அதிகாரப்பூர்வமற்ற விசாரணை நடப்பது கடினம், 260 00:17:59,079 --> 00:18:00,914 என்னால் என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறேன். 261 00:18:02,541 --> 00:18:04,334 நீங்கள் இருவரும் கவனமாக இருங்கள். 262 00:18:04,835 --> 00:18:07,713 ஹேவுட் நிதானத்தை இழந்திருக்கக் கூடும். நான் அவரை நம்புவதாக இல்லை. 263 00:18:07,796 --> 00:18:12,009 பிடிபடாமல் இருப்பதற்காக காவல் துறையின் உதவியை பெற்றிருந்தால், ஏதாவது தடயத்தை விட்டிருப்பார். 264 00:18:14,094 --> 00:18:16,847 ஆக, இது சிங்கத்தின் குகையில் தலையை விடுவது போல் ஆபத்தானது அல்லவா? 265 00:18:16,930 --> 00:18:18,432 என் உலகத்திற்கு உங்களை வரவேற்கிறேன். 266 00:18:21,143 --> 00:18:23,228 -சரி. -நன்றி, சகோதரா. 267 00:18:34,156 --> 00:18:35,365 ஒரு காவலரை எப்படி காதலிக்கிறேன்? 268 00:18:36,325 --> 00:18:39,745 அதாவது, ஒரு நல்ல காவல் அதிகாரியை, ஆனால் பொதுவாக நான் இப்படி கிடையாது. 269 00:18:40,954 --> 00:18:42,247 இன்னும் கொஞ்சம் ஊற்றுகிறாயா? 270 00:18:42,331 --> 00:18:43,665 -நிச்சயமாக. -சரி. 271 00:18:50,464 --> 00:18:52,925 -மார்கஸ் கில்பிரூ. -டெசிரீ. என்ன நடக்கிறது? 272 00:18:55,552 --> 00:18:56,845 மார்கஸ். 273 00:18:56,929 --> 00:18:57,930 ஹேய். 274 00:18:58,514 --> 00:19:00,432 -நீ இங்கிருப்பதில் மகிழ்ச்சி. -உங்களுடைய செய்தி கிடைத்தது. 275 00:19:00,516 --> 00:19:01,892 காப்ஸ்டோன்ஸ் எங்கே? 276 00:19:06,396 --> 00:19:09,274 எல்க். நண்பர்களே, என்ன நடக்கிறது? நீங்கள்... 277 00:19:16,198 --> 00:19:17,199 ட்ரேயா? 278 00:19:25,832 --> 00:19:27,209 அன்பே, நீ நலம்தானே? 279 00:19:27,292 --> 00:19:29,545 நான்டோ, காவல் துறையினர் மற்றும் துணை மருத்துவர்களை அழை. 280 00:19:31,046 --> 00:19:33,215 யாரும் பார்க்கும் முன், இவளை இங்கிருந்து அழைத்து செல்கிறாயா, டெசிரீ? 281 00:19:33,298 --> 00:19:36,927 54வது தெரு, ஷாட்டக் அவென்யூவில் இருக்கும் "த நாக்" இடத்திற்கு காவலரை அனுப்புங்கள். 282 00:19:37,010 --> 00:19:41,223 -ட்ரேயா. ஹாய், என் பெயர் டெசிரீ. இவர் மார்கஸ். -ஹே, அன்பே. 283 00:19:41,306 --> 00:19:42,724 நாங்கள் உன் அம்மாவின் நண்பர்கள். 284 00:19:43,350 --> 00:19:45,435 எனவே, மார்கஸ் அவரை தொடர்பு கொள்ளும் நேரத்தில் 285 00:19:45,519 --> 00:19:47,479 நாம் மாடிக்கு போய் அவருக்காக காத்திருக்கலாம், சரியா? 286 00:19:48,355 --> 00:19:51,483 -ஒன்றும் பிரச்சினை இல்லை. -வா, கண்ணே. இந்த பக்கம் போகலாம். 287 00:20:00,450 --> 00:20:02,911 காணவில்லை ட்ரேயா ஸ்பைவி 288 00:20:08,959 --> 00:20:10,669 வெளியில் வந்து என்னுடன் பேசு. 289 00:20:27,144 --> 00:20:29,479 ஆக, அன்றிரவு இவர் தான், ஜோஷின் கொலைக்கு 290 00:20:29,563 --> 00:20:30,939 ஒரு துவக்கமாக இருந்திருக்கிறார். 291 00:20:31,023 --> 00:20:33,358 ஹேவுட்டின் சாட்சியங்களுக்கு ஏற்ப இவரும் சொல்கிறாரா என்று பார்ப்போம். 292 00:20:42,367 --> 00:20:43,577 கைல் ரிக்டர்? 293 00:20:45,120 --> 00:20:48,415 என் பெயர் பாபி. நான் ஒரு நிருபர், இப்போது ஒரு வழக்கைப் பற்றி விசாரிக்கிறேன். 294 00:20:48,999 --> 00:20:50,792 உங்களுடன் கொஞ்சம் பேச விரும்புகிறேன். 295 00:20:52,002 --> 00:20:53,003 எதைப்பற்றி? 296 00:20:53,712 --> 00:20:55,130 சன்ஸ் ஆஃப் ஐவார் பற்றி. 297 00:20:57,549 --> 00:21:01,345 அதைப்பற்றி பேச ஒன்றும் இல்லை. இனி எனக்கும், அந்த குழுவிற்கும், எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. 298 00:21:03,347 --> 00:21:06,266 மன்னியுங்கள், அது M40A5 துப்பாக்கியா? 299 00:21:06,850 --> 00:21:09,728 ஒரு காலத்தில் டெக்சாசில், எனக்கு எலி தொல்லை இருந்தது. 300 00:21:09,811 --> 00:21:12,898 இதை வைத்து தான் அதை சமாளித்தேன். மிகவும் வேடிக்கையாக இருந்தது. 301 00:21:12,981 --> 00:21:15,442 அங்கே இன்னும் வேறு என்ன இருக்கிறது? நான் பார்க்கலாமா? 302 00:21:18,320 --> 00:21:20,364 இது மர்லின் 336A 303 00:21:20,447 --> 00:21:22,950 மற்றும் ஒரு ரெமிங்டன் 540XR. 304 00:21:23,033 --> 00:21:24,034 பரவாயில்லையே. 305 00:21:25,494 --> 00:21:26,745 அவர் தான் உங்கள் அப்பாவா? 306 00:21:27,329 --> 00:21:28,372 இராணுவத்தைச் சேர்ந்தவரா? 307 00:21:30,249 --> 00:21:31,959 அவரது பெயரை தபால் பெட்டியில் பார்த்தேன். 308 00:21:32,876 --> 00:21:33,877 அவர் இறந்துவிட்டார். 309 00:21:34,545 --> 00:21:35,838 எனக்கு வருத்தமாக இருக்கு. 310 00:21:35,921 --> 00:21:37,589 ஆம், அது கஷ்டமாக இருந்திருக்கும். 311 00:21:38,173 --> 00:21:39,341 நீங்கள் கிளம்ப வேண்டும். 312 00:21:40,592 --> 00:21:43,804 என் அப்பா டெக்சாஸ் ரேஞ்சர் மற்றும் இராணுவ வீரராக இருந்தார். வியட்நாமில். 313 00:21:44,930 --> 00:21:47,766 ஒரு மகனாக இருப்பது எப்படி இருக்கும் என என்னால் கற்பனை செய்ய முடிகிறது. 314 00:21:49,768 --> 00:21:53,063 தொடக்க விழா நடைப்பெற்ற அன்றிரவு மார்ட்டின் ஹேவுடன் என்ன நடந்தது? 315 00:21:56,066 --> 00:21:57,776 -நீங்கள் இங்கு வந்திருப்பது அவருக்கு தெரியுமா? -தெரியாது. 316 00:21:58,485 --> 00:22:00,237 அவருக்கு தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. 317 00:22:01,071 --> 00:22:02,614 அன்றிரவு என்ன நடந்தது? 318 00:22:03,448 --> 00:22:06,535 மார்ட்டின் அங்கு வரவே இல்லை. அவர் எல்லாவற்றையும் தவறவிட்டார். 319 00:22:11,039 --> 00:22:12,457 மார்ட்டின் ஹேவுட் 320 00:22:15,294 --> 00:22:17,838 ஆக மார்ட்டின் ஹேவுட் சம்பவம் நடந்த இடத்தில் இல்லை என்பதற்கு சாட்சி இல்லை. 321 00:22:17,921 --> 00:22:19,256 இல்லை. அது பொய். 322 00:22:19,339 --> 00:22:21,925 தொடக்க விழாவிற்கு வந்தவர்களிடம், இவ்வாறு சொல்ல சொல்லியிருக்கிறார். 323 00:22:23,093 --> 00:22:25,220 ஷெல்டரிலிருந்து பல மின்னஞ்சல்கள் வந்து குவிந்துள்ளன. 324 00:22:25,304 --> 00:22:29,683 உன் தோழி தனது நற்பெயரை மீட்டெடுக்க முயற்சிப்பதுப் போல் தெரிகிறது. 325 00:22:29,766 --> 00:22:32,477 உங்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள்... 326 00:22:32,561 --> 00:22:36,815 நான் சாதிக்க வேண்டும் என ஷெல்டரில் உருவாக்கிய அனைத்தையும் 327 00:22:36,899 --> 00:22:38,233 அது தாக்கிவிட்டது. 328 00:22:38,317 --> 00:22:39,401 எதிரிகளை எதிர்கொள்கிறார் 329 00:22:39,484 --> 00:22:44,781 ஆரம்பத்திலிருந்தே நாங்கள் பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல் குறித்து செயல்பட்டுள்ளோம். 330 00:22:45,282 --> 00:22:49,870 ஆனால் இந்த பாதிப்பிற்கு ஒரு பெண்ணே மூலகாரணமாக இருக்கிறாள். 331 00:22:49,953 --> 00:22:54,082 இதனால் நான் செய்ய வேண்டிய வேலையை செய்ய முடியாமல் போனது. 332 00:22:54,166 --> 00:22:57,794 இந்த பதவியை நான் கேட்டு வாங்கவில்லை. நான் ஒரு புத்தகம் எழுதினேன். 333 00:22:58,462 --> 00:23:00,547 அது பலருக்கு ஆழமான கருத்தை வழங்கியது. 334 00:23:00,631 --> 00:23:01,715 அது எனக்கு ஒரு மேடையை அமைத்து கொடுத்தது, 335 00:23:01,798 --> 00:23:06,428 துன்பத்தை வலிமையாக மாற்றுவது எப்படி என மற்றவர்களுக்கு என்னால் காட்ட முடிந்தது. 336 00:23:06,512 --> 00:23:08,514 அதை நம்புவதால் நான் அதைப்பற்றி சொல்கிறேன். 337 00:23:10,265 --> 00:23:13,393 -அடுத்து என்ன? -மீண்டும் வேலைக்கு திரும்ப வேண்டும். 338 00:23:13,477 --> 00:23:18,524 அதனால்தான் வார இறுதியில் டில்டன் ரீஜினல் பார்க்கில் நடைபெறும் 339 00:23:18,607 --> 00:23:20,150 நல்வாழ்வு கருத்தரங்கை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். 340 00:23:20,234 --> 00:23:23,779 இந்நிகழ்ச்சியைப் பார்க்கும் அனைவரும் வருவார்கள் என நான் நம்புகிறேன். 341 00:23:40,671 --> 00:23:42,798 அன்பே? நீங்கள் தயாரா? 342 00:23:42,881 --> 00:23:45,801 உங்களுக்கே தெரியும், இன்று போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக இருக்கும், 343 00:23:45,884 --> 00:23:47,219 எனவே நாம் புறப்பட வேண்டும். 344 00:23:48,512 --> 00:23:49,805 நான் வர மாட்டேன். 345 00:23:51,640 --> 00:23:54,977 இதை நான் கேட்க விரும்பவில்லை, ஷ்ரெவ். நாம் புறப்படலாம். 346 00:24:02,860 --> 00:24:04,152 நான் உண்மையாகத்தான் சொன்னேன். 347 00:24:05,863 --> 00:24:07,406 ட்ரேயாவை எங்கே கண்டுபிடித்தான் என்றும், 348 00:24:07,489 --> 00:24:09,992 அங்கே என்ன பார்த்தான் என்றும் எல்க் என்னிடம் சொன்னான். 349 00:24:11,326 --> 00:24:13,495 இதுபோன்ற சம்பவம் என் வீட்டின் சுற்றுப்புறத்தில் நடந்திருக்கிறது, 350 00:24:13,579 --> 00:24:15,289 அது பற்றி எனக்கு ஏன் எதுவுமே தெரியவில்லை? 351 00:24:16,039 --> 00:24:19,126 காப்ஸ்டோன்ஸ் தலையிடும் வரை, வேறு யாராரும் இதை செய்யவில்லையே. 352 00:24:19,209 --> 00:24:21,628 இது ஒன்றும் உங்களுடைய தவறல்ல, ஷ்ரீவ். 353 00:24:21,712 --> 00:24:24,047 இந்த அப்பாயின்மெண்டுகள் எல்லாம் வெறும் கவன சிதறல்கள் தான். 354 00:24:24,131 --> 00:24:27,718 அப்படி சொல்லாதீர்கள். அது மரியாதை கிடையாது என உங்களுக்கே தெரியும். 355 00:24:29,553 --> 00:24:31,388 இனி எப்பொழுதும் நான் போக மாட்டேன். 356 00:24:33,849 --> 00:24:37,728 அன்பே, உங்களுக்கு உடம்பு சரியில்லை என்பதை நினைத்து நீங்கள் வருந்துகிறீர்கள். 357 00:24:37,811 --> 00:24:41,190 ஆனால் உங்களுடைய நிஜ வருத்தமே, பாபியைக் குறித்தும், 358 00:24:42,816 --> 00:24:44,484 அவள் குடும்பத்தினரிடம் சொன்னதைக் குறித்தும் தான். 359 00:24:47,070 --> 00:24:49,114 நீங்கள் இருவரும் ஒரே மாதிரி தான். 360 00:24:50,490 --> 00:24:53,577 மற்ற இருவரையும் சேர்த்தாலும் கூட, இவள் தான் உங்களைப் போலவ் இருப்பாள். 361 00:24:54,453 --> 00:24:59,958 உங்களுடைய வலியை அவளுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், அப்போது தான் அவள் தன்னுடையதை பகிர்ந்துகொள்வாள். 362 00:25:06,173 --> 00:25:09,384 மார்ட்டின் ஹேவுட். நமது திகிலான சுற்றுலாவின் இரண்டாவது நிறுத்தம். 363 00:25:09,885 --> 00:25:13,805 சரி, நாம் இதைவிட திகிலான இடங்களுக்குச் சென்று, அச்சுறுத்தும் மனிதர்களிடம் பேட்டி எடுத்துள்ளோம். 364 00:25:14,348 --> 00:25:17,476 ஆமாம், ஆனால் டைம்ஸ் பத்திரிக்கை நமக்கு உறுதுணையாக இருந்தது. இப்போது... 365 00:25:18,435 --> 00:25:21,939 நான் அவரை பேட்டி எடுத்து, அவரிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும். 366 00:25:22,022 --> 00:25:25,442 அடச்சே. சரி, போகலாம். 367 00:25:39,248 --> 00:25:42,334 ஹேவுட் இங்கே மெத் தயாரிக்கிறாரா என்ன? 368 00:25:55,472 --> 00:25:57,266 இந்த இடம் என்னை பயமுறுத்துகிறது. 369 00:25:57,349 --> 00:25:58,600 நாம்... போய்விடலாம். 370 00:26:00,602 --> 00:26:01,812 -சரி. -வா. 371 00:26:07,317 --> 00:26:09,319 ஷெல்டர் 372 00:26:12,281 --> 00:26:14,700 ஷெல்டர் பொருட்களை வைத்து இவர் என்ன செய்கிறார்? 373 00:26:16,410 --> 00:26:17,619 என்ன? 374 00:26:42,936 --> 00:26:44,104 -ஹாய். -ஹேய். 375 00:26:45,063 --> 00:26:47,149 இது ஒரு நல்ல யோசனை கிடையாது. 376 00:26:48,817 --> 00:26:49,943 ஏன்? 377 00:26:50,861 --> 00:26:52,821 ஏனென்றால் இது ஆபத்தானது. 378 00:26:52,905 --> 00:26:54,907 இதில் பங்கேற்பவர்களை நாம் சோதிக்கக்கூட இல்லை. 379 00:26:55,490 --> 00:26:57,034 இவர்கள் என்னை நேசிப்பவர்கள். 380 00:26:57,784 --> 00:26:59,369 நான் அழைத்தேன், அவர்கள் வந்துவிட்டார்கள். 381 00:27:03,165 --> 00:27:05,501 இப்படியே செய்துக் கொண்டிருந்தால், நீ ஷெல்டரை அழித்துவிடுவாய். 382 00:27:15,886 --> 00:27:18,055 அனைவரும் கொஞ்சம் கவனிக்கிறீர்களா? 383 00:27:18,639 --> 00:27:20,390 -ஹாய். வணக்கம். -ஹாய், மைக்கா. 384 00:27:21,183 --> 00:27:24,019 சரி, இன்று நம்முடன் ஒரு புதிய பேச்சாளர் இருக்கிறார், 385 00:27:25,020 --> 00:27:26,021 ஐவி ஆபட். 386 00:27:29,316 --> 00:27:31,360 அவர் தான் நம் நிகழ்வைத் தொடங்கி வைக்கப் போகிறார். 387 00:27:33,237 --> 00:27:35,948 நீ தொடங்கலாம். மேடை உன்னுடையது. 388 00:27:38,492 --> 00:27:40,953 இந்த எரிக்கும் சடங்கில் நீயே எங்களை வழிநடத்தலாமே? 389 00:27:45,707 --> 00:27:48,877 இது நல்ல யோசனை தான். 390 00:27:49,878 --> 00:27:50,879 நன்றி. 391 00:28:00,430 --> 00:28:04,268 நீங்கள் கொண்டுவந்த பொருட்களை வெளியே எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். 392 00:28:12,317 --> 00:28:15,988 எரிக்கும் சடங்கு எதைக் குறிக்கிறதென்றால்... 393 00:28:18,073 --> 00:28:19,074 சுத்தமாகுதலை. 394 00:28:23,537 --> 00:28:26,999 புதுப்பித்தலுக்கான தீ அங்கு உள்ளது. 395 00:28:32,504 --> 00:28:37,926 அந்த பொருட்கள் உங்களுக்கு எதைக் குறிக்கிறது என்று ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். 396 00:28:39,261 --> 00:28:40,721 அது உங்களை எப்படி பாதிக்கிறது? 397 00:28:41,889 --> 00:28:44,349 அது எந்தளவுக்கு உங்களுக்கு வலியைக் கொடுக்கிறது? 398 00:28:46,351 --> 00:28:47,644 எந்தளவுக்கு உங்களைத் தடுக்கிறது? 399 00:28:48,896 --> 00:28:51,940 உங்களுடைய தோல்விகளையும் ஏமாற்றங்களையும் எந்தளவுக்கு பிரதிபலிக்கிறது? 400 00:28:53,400 --> 00:28:54,401 உங்களுடைய கண்களை மூடுங்கள். 401 00:28:56,195 --> 00:28:57,946 சரி, உங்களுடைய கண்களை மூடுங்கள். 402 00:28:58,030 --> 00:28:59,823 உங்கள் கையில் இருக்கும் பொருளின் மீது 403 00:28:59,907 --> 00:29:02,492 நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். 404 00:29:03,869 --> 00:29:10,125 நாம் அனைவரும் மோசமான தொழில்களிலும், உறவுகளிலும், வாழ்க்கையிலும் சிக்கியுள்ளோம், 405 00:29:10,626 --> 00:29:13,837 ஆனால் எப்பொழுதுமே நமக்கென்று ஒரு வாய்ப்பு இருக்கும். 406 00:29:15,797 --> 00:29:16,882 நமக்கு மனவலிமை இருக்கிறது. 407 00:29:16,965 --> 00:29:20,969 அந்த மனவலிமை தான், இந்த தீயைப் போல நம்முள் இருக்கும் துக்கத்தை எரிக்கப் போகிறது. 408 00:29:21,553 --> 00:29:25,933 அதற்கு தேவையானது எல்லாம்... அதைப் பற்ற வைத்தாலே போதும். 409 00:29:27,434 --> 00:29:29,645 யார் முதலில் வர விரும்புகிறீர்களா? 410 00:29:31,605 --> 00:29:33,190 எங்களுக்கு மைக்கா வேண்டும். 411 00:29:33,273 --> 00:29:35,275 ஆமாம், மைக்கா தான் வேண்டும். 412 00:29:37,611 --> 00:29:38,612 சரி. 413 00:29:39,905 --> 00:29:41,323 நன்றி, ஐவி. 414 00:29:43,283 --> 00:29:44,326 நன்றி. 415 00:29:47,454 --> 00:29:48,455 இவையெல்லாம் மிரட்டல் கடிதங்கள். 416 00:29:48,539 --> 00:29:49,957 யுனைடெட் ஸ்டேட்ஸ் தபால் சேவை இஎம்எம் ட்ரே 417 00:29:51,792 --> 00:29:52,793 அனைத்துமே. 418 00:29:54,294 --> 00:29:55,629 கொலை மிரட்டல்கள், 419 00:29:56,755 --> 00:29:59,925 என் கருத்துகளை சொல்ல எனக்கு தைரியம் இருந்த காரணத்தால் வந்த மிரட்டல்கள். 420 00:30:02,594 --> 00:30:04,346 எல்லாவற்றையும் தூக்கி எறியும் நேரம் வந்துவிட்டது. 421 00:30:04,930 --> 00:30:05,931 எதையாவது... 422 00:30:08,183 --> 00:30:09,476 அல்லது அனைத்தையும்... 423 00:30:11,603 --> 00:30:13,313 நம்மை முன்னேற விடாமல் தடுக்கும் அனைத்தையும். 424 00:30:37,504 --> 00:30:38,714 எப்போதும் நான் என்ன குடிப்பேன் என ஞாபகமிருக்கா? 425 00:30:40,465 --> 00:30:42,342 உன்னை வந்து பார்க்க அனுமதித்ததற்கு நன்றி. 426 00:30:43,510 --> 00:30:45,596 தினமும் உனக்கு நடந்ததை நினைத்து வருந்துவேன். 427 00:30:47,472 --> 00:30:50,517 என் மனதிற்குள் அது திரும்பத் திரும்ப ஓடுகிறது. 428 00:30:51,310 --> 00:30:53,520 எனக்கும் தான். ஆனால் அது உன்னுடைய தவறல்ல. 429 00:31:00,402 --> 00:31:03,155 காணாமற் போன அந்த இளம்பெண், ட்ரேயா ஸ்பைவியை உனக்கு நினைவிருக்கிறதா? 430 00:31:03,238 --> 00:31:04,489 ஆமாம். 431 00:31:05,073 --> 00:31:06,825 சரி, காப்ஸ்டோன்ஸ், அவளை கண்டுப்பிடித்துவிட்டார்கள் 432 00:31:08,827 --> 00:31:10,037 மற்றும்... 433 00:31:13,165 --> 00:31:14,791 அது என் மண்டையை குடைகிறது. 434 00:31:17,085 --> 00:31:18,587 என்னால் என்ன நன்மை நடக்கிறது, பாப்? 435 00:31:18,670 --> 00:31:22,466 அதாவது, நான் வேலையில் இருந்த போது, எனக்கு ஒரு குறிக்கோள் இருந்தது. 436 00:31:23,759 --> 00:31:27,679 ஒவ்வொரு நாளும் உலகத்திற்காக நல்லது செய்வது போல உணர்ந்தேன். 437 00:31:29,139 --> 00:31:30,349 ஆனால் இப்போதோ நான்... 438 00:31:31,683 --> 00:31:35,437 மோசமான விஷயங்கள் நடக்கும் பொழுது யாரோ ஒரு பிரபலத்தை பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன். 439 00:31:36,730 --> 00:31:39,691 ட்ரியா போன்ற இளம் பெண்கள் பாதிப்பிற்குள்ளாகிறார்கள். 440 00:31:40,359 --> 00:31:44,363 -அப்படியென்றால் நீ மறுபடியும் ஹீரோவாக வேண்டும். -ஆமாம், அது போலத்தான் உணர்கிறேன். 441 00:31:46,573 --> 00:31:50,827 சரி, நாம் ஒருவருக்கு ஒருவர் ரகசியங்களை பரிமாறிக் கொள்வதால், இதைச் சொல்கிறேன்... 442 00:31:54,164 --> 00:31:55,958 நானும் இன்கிராமும் விவாகரத்து செய்யப் போகிறோம். 443 00:32:00,420 --> 00:32:01,630 உனக்கு இது தெரியுமா? 444 00:32:05,425 --> 00:32:06,677 ஸரினா என்னிடம் சொன்னாள். 445 00:32:06,760 --> 00:32:08,303 -ஸரினாவிற்கு எப்படி தெரியும்? -மைக்கா. 446 00:32:10,514 --> 00:32:11,598 அது சரி தான். 447 00:32:13,517 --> 00:32:15,561 இதில் ஆச்சரியமே இல்லை, ஆனால்... 448 00:32:17,271 --> 00:32:18,897 இதில் உன்னை இழுத்துவிட்டதற்கு மன்னித்துவிடு. 449 00:32:20,566 --> 00:32:22,651 பரவாயில்லை. எனக்கென்று அறிவு இருக்கிறது. 450 00:32:23,443 --> 00:32:24,862 நான் முடியாது என்று சொல்லி இருக்கலாம். 451 00:32:25,737 --> 00:32:27,030 அவள் உன்னை எப்போதாவது ஏமாற்றினாளா? 452 00:32:27,114 --> 00:32:29,116 இல்லை. இல்லை. 453 00:32:30,242 --> 00:32:32,160 ஆனால், நான் பார்த்தவற்றோடு எப்போதுமே 454 00:32:32,244 --> 00:32:37,124 அவளுடைய பதில்கள் ஒத்துப் போகாததால் நான் மைக்காவை நம்பியதில்லை. 455 00:32:37,708 --> 00:32:39,710 ஆனால் அவள் மீது சந்தேகமும் படவில்லை. 456 00:32:39,793 --> 00:32:42,129 அவளது ஏமாற்று வேலையை நான் நம்பவில்லை. 457 00:32:48,135 --> 00:32:50,762 எப்பொழுதுமே உன்னோடு நான் இணக்கமாக இருந்தது ஏன் என்று தெரியுமா? 458 00:32:51,847 --> 00:32:58,353 ஓடுவதை நிறுத்துவது எவ்வளவு பெரிய ஆபத்து என்று உனக்கு தெரியும் என்பதால்தான். 459 00:33:00,063 --> 00:33:03,942 ஏனென்றால் நாம் நின்றுவிட்டால், அந்த அசுரன் நம்மை பிடித்துவிடுவான். 460 00:33:05,652 --> 00:33:07,946 மறுபடியும் ஒரு குப்பியில் அடைத்து விடுவான். 461 00:33:10,699 --> 00:33:12,409 இந்த மோசமான வழக்கு... 462 00:33:14,703 --> 00:33:16,705 இது என்னுடைய வியாபாரம் முழுவதையும் நஷ்டமாக்குகிறது. 463 00:33:17,706 --> 00:33:19,708 நான் ஷெல்டரில் வேலை செய்யவில்லை. 464 00:33:20,667 --> 00:33:25,506 கிடைக்கும் சில பாதுகாப்பு வேலைகளின் மூலம் என் பணியாளர்களுக்கு சம்பளம் தான் தர முடிகிறது. 465 00:33:27,466 --> 00:33:32,137 டிரினி, கல்லூரிக்கு போகப் போகிறாள். 466 00:33:32,221 --> 00:33:35,182 எனக்கு இன்னொரு குழந்தை பிறக்கப் போகிறது. 467 00:33:36,934 --> 00:33:38,727 நான் உதவக்கூடாதா என்ன, மார்கஸ்? 468 00:33:39,394 --> 00:33:41,396 நான் தான் உன்னை இந்தப் பிரச்சினைக்குள் இழுத்துவிட்டேன். 469 00:33:42,397 --> 00:33:46,485 உதவி தேவைப்பட்டால் உன்னிடம் கேட்கிறேன், சரியா? 470 00:33:47,110 --> 00:33:49,112 எனக்கு இன்னொரு வேலை தேட உதவி கேட்கிறேன். 471 00:33:50,405 --> 00:33:54,284 சரி, சமீபத்தில் மைக்காவிடம் பேசினாயா? 472 00:33:54,368 --> 00:33:58,539 இல்லை, ஆனால் பேச வேண்டும். 473 00:33:59,540 --> 00:34:00,916 அதனால் என்ன? உனக்கு துணை வேண்டுமா? 474 00:34:01,917 --> 00:34:05,587 தன்னுடைய டென்னிஸ் மட்டையினால் உன் மனைவி என்னை அடுத்து கொல்வதற்கா? 475 00:34:05,671 --> 00:34:06,672 வேண்டாம். 476 00:34:08,340 --> 00:34:10,007 ஹார்மோன்ஸின் விளைவு தான். 477 00:34:11,844 --> 00:34:12,969 இது ஹார்மோன்ஸால் கிடையாது. 478 00:34:13,053 --> 00:34:16,306 அது "உன் முன்னாள் காதலி என்னை ரொம்ப வெறுப்பேற்றுகிறாள்" போன்ற விஷயம். 479 00:34:27,234 --> 00:34:31,112 நான் மோசமான ஆளாக இருந்திருந்தால் இது சுலபமாக இருந்திருக்கும். 480 00:34:32,281 --> 00:34:33,322 ஒரு வில்லனாக இருந்திருந்தால். 481 00:34:34,408 --> 00:34:36,493 என்னுடைய கதையை நான் அழகுபடுத்திச் சொன்னேனா? 482 00:34:38,911 --> 00:34:41,873 ஆமாம், சொன்னேன். 483 00:34:43,917 --> 00:34:49,672 300க்கும் மேற்பட்ட வீடற்ற குழந்தைகளை தெருவில் இருந்து காப்பாற்றி, வீடுகளுக்குள் சேர்க்கவில்லையா? 484 00:34:51,382 --> 00:34:55,596 நாட்டின் மிக விலை உயர்ந்த நகரங்களுள் ஒன்றான, 485 00:34:55,679 --> 00:34:59,183 சான்ஃபிரான்சிஸ்கோவில் ஒரு கட்டிடம் கட்டி, 486 00:35:00,184 --> 00:35:05,189 80 வீடற்ற குடும்பங்களை நான் அங்கு தங்க வைக்கவில்லையா? 487 00:35:06,273 --> 00:35:07,691 என் தோழிக்கு நம்பிக்கை துரோகம் செய்தேன். 488 00:35:09,735 --> 00:35:12,946 எல்லா விஷயங்களைப் பற்றியும் நான் உண்மையை சொல்லவில்லை. 489 00:35:13,030 --> 00:35:15,240 எந்தப் பெண் தான் அப்படி சொல்வாள்? 490 00:35:17,284 --> 00:35:18,577 ஆனால் எனக்கு என் கணவரை ரொம்ப பிடிக்கும். 491 00:35:20,746 --> 00:35:23,332 அவரை ஆழமாக நேசித்தேன், ஒவ்வொரு நாளும் அவரை நினைத்து வருந்துகிறேன். 492 00:35:23,415 --> 00:35:27,920 எப்படியோ உண்மையான இழப்பு மறக்கப்பட்டு விடுகிறது. 493 00:35:28,003 --> 00:35:29,046 பாபி வந்திருக்கிறாள். 494 00:35:29,630 --> 00:35:31,215 பாபி பார்னல். 495 00:35:31,298 --> 00:35:33,675 நாம் எல்லோருமே குறைகள் உடைய மனிதர்கள் தான். 496 00:35:33,759 --> 00:35:35,594 அவள் இங்கே என்ன செய்கிறாள்? 497 00:35:35,677 --> 00:35:37,513 மைக்காவைப் பற்றிய பாட்காஸ்ட்டிற்காக. 498 00:35:37,596 --> 00:35:39,431 நீ இங்கே வரக்கூடாது. 499 00:35:40,182 --> 00:35:41,975 -பரவாயில்லை. -நீ வெளியேற வேண்டும். 500 00:35:42,059 --> 00:35:43,268 பரவாயில்லை. 501 00:35:51,944 --> 00:35:53,403 எங்களோடு இணைந்துகொள்ள வந்திருக்கிறாயா? 502 00:35:53,487 --> 00:35:56,907 இல்லை. யாருக்கும் எந்த பிரச்சினையும் வராமல் பார்த்துக்கொள்ள வந்திருக்கிறேன். 503 00:35:59,409 --> 00:36:01,828 தாங்களாகவே விருப்பப்பட்டு வந்திருக்கிறார்கள். நான் அவர்களை கட்டாயப்படுத்தவில்லை. 504 00:36:01,912 --> 00:36:06,792 ஆனால் என் வாழ்க்கையின் வேதனையான விஷயத்தை வெளிப்படுத்துமாறு என்னை கட்டாயப்படுத்தினாயே. 505 00:36:06,875 --> 00:36:09,461 என்னுடைய வலிக்கு என்ன அர்த்தம்? 506 00:36:09,545 --> 00:36:10,921 அது பற்றி எனக்குத் தெரியாது. 507 00:36:11,547 --> 00:36:14,341 ஏனென்றால் உனக்கு ஏதாவது உணர்ச்சிகள் உண்டா என்று கூட எனக்கு தெரியவில்லை. 508 00:36:17,386 --> 00:36:19,596 இதை நீ எப்படி முடிவு செய்ய முடியும்? 509 00:36:20,597 --> 00:36:23,433 ஜோஷைக் கொலை செய்ய, நீ மார்ட்டின் ஹேவுட்டோடு கூட்டு சேர்ந்தாயா? 510 00:36:23,517 --> 00:36:24,643 கண்டிப்பாக இல்லை. 511 00:36:25,978 --> 00:36:28,063 உனக்கு உதவி செய்ய ஒருவர் கூட இல்லை. 512 00:36:28,772 --> 00:36:33,485 இதெல்லாம் நடப்பதற்கு முன்பு உனக்கு பரிச்சயமான எவரும் இப்போது பாக்கி இல்லை. 513 00:36:35,445 --> 00:36:37,114 அதில் என்ன பாதுகாப்பு இருக்கிறது? 514 00:36:49,168 --> 00:36:50,252 நீ என்னை நம்புகிறாயா? 515 00:36:51,461 --> 00:36:52,754 நம்புகிறேன். 516 00:36:53,589 --> 00:36:56,133 -நீ என்னை நம்புகிறாயா? -ஆமாம். 517 00:36:56,216 --> 00:36:57,509 நன்றி. 518 00:37:04,933 --> 00:37:07,436 -நீ என்னை நம்புகிறாயா? -ஆமாம். 519 00:37:11,481 --> 00:37:12,900 நான் உன்னை நம்புகிறேன், மைக்கா. 520 00:37:14,860 --> 00:37:16,778 நான் உன்னை நம்புகிறேன். 521 00:37:16,862 --> 00:37:18,488 -நான் உன்னை நம்புகிறேன். -நான் உன்னை நம்புகிறேன். 522 00:37:18,572 --> 00:37:20,324 -நான் உன்னை நம்புகிறேன். -நான் உன்னை நம்புகிறேன். 523 00:37:24,995 --> 00:37:26,246 நான் உன்னை நம்புகிறேன், மைக்கா. 524 00:37:41,428 --> 00:37:46,225 என்னுடைய அப்பாவை பற்றிய உண்மை மிஸ் ஷெர்லிக்கு தெரியும் 525 00:37:56,235 --> 00:37:57,236 ஹே, அப்பா. 526 00:37:58,529 --> 00:38:01,490 ஹே, குட்டி. நீ வந்தது எனக்கு சந்தோஷம். 527 00:38:03,367 --> 00:38:04,576 என்னோடு பேச நீங்கள் தயாரா? 528 00:38:05,744 --> 00:38:08,080 என்னுடனேயே பேசிக்கொள்ள நான் விரும்பவில்லை. 529 00:38:11,291 --> 00:38:13,502 நீ சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் நான் வெறுத்தேன். 530 00:38:14,920 --> 00:38:18,048 நான் உன்னை கைவிட்டுவிட்டேன். என்னுடைய எல்லா மகள்களையும் தான். 531 00:38:19,675 --> 00:38:20,968 பல வழிகளில். 532 00:38:21,051 --> 00:38:23,136 நீங்கள் வருந்துவதற்காக நான் உங்களிடம் அவற்றை சொல்லவில்லை. 533 00:38:27,558 --> 00:38:32,020 இறப்பதற்கு முன்னால், மிஸ் ஷெர்லி நீங்கள் என் அப்பா இல்லை என்று சொன்னாள். 534 00:38:35,816 --> 00:38:38,485 ஒரு நாள் இரவில் அவள் குடித்துவிட்டு, 535 00:38:38,569 --> 00:38:41,864 தன் அழைப்பாளர்கள் ஒருவரிடம் பேசியதை நான் ஒட்டு கேட்டேன். 536 00:38:44,825 --> 00:38:46,743 நான் ஒட்டு கேட்பதை அவள் பார்த்துவிட்டாள். 537 00:38:47,494 --> 00:38:52,833 உங்களை சந்திப்பதற்கு முன்னரே அம்மா கருவுற்றிருந்தார் என்று என்னிடம் சொன்னாள். 538 00:39:04,970 --> 00:39:07,181 நான்தான் உன்னுடைய அப்பா என்று நீ நம்புகிறாயா? 539 00:39:10,726 --> 00:39:12,227 நான் உன் அப்பாவாக நடந்துக்கொண்டேனா? 540 00:39:16,315 --> 00:39:18,150 அதனால் தான் நீ பேசுவதை நிறுத்திவிட்டாயா, குட்டி? 541 00:39:21,612 --> 00:39:22,613 உண்மையாகவா? 542 00:39:27,284 --> 00:39:29,995 உங்களுக்கும், மிஸ் ஷெர்லிக்கும் என்ன சம்பந்தம்? 543 00:39:30,829 --> 00:39:33,332 எலினாருக்கு முன், நான் சந்தித்த பெண், அவ்வாளவுதான். 544 00:39:34,082 --> 00:39:35,751 நான் உன் அம்மாவை நேசித்தது போலவே 545 00:39:35,834 --> 00:39:38,545 இவள் என்னை நேசித்தாள் என்று புரிந்து கொள்வதற்கே ரொம்ப காலமானது. 546 00:39:39,963 --> 00:39:42,132 அவளை விட்டு விலகியதற்காக அவள் என்னை மன்னிக்கவே இல்லை. 547 00:39:44,259 --> 00:39:48,096 -அதனால் தான் என் மீது தன் கோபத்தை காட்டினாளா? -அவள் என்னிடம் அப்படி நடந்து கொள்ளவில்லை. 548 00:39:48,180 --> 00:39:49,473 ஒரு முறை கூட. 549 00:39:50,015 --> 00:39:52,643 அவள் பக்கத்து வீட்டில் வாழ்ந்தாள். பாருக்கும், நானும் உன் அம்மாவும் 550 00:39:52,726 --> 00:39:55,562 கொடுக்கும் விருந்திற்கும், அவள் வந்து கொண்டு தான் இருந்தாள். 551 00:39:55,646 --> 00:39:57,606 என்னிடம் ஒரு முகத்தைத்தான் காட்டினாள். 552 00:39:57,689 --> 00:40:00,692 எனக்கு வேறு ஏதாவது தெரிந்திருந்தால் அவளோடு உன்னை விட்டுச் சென்றிருக்கவே மாட்டேன். 553 00:40:02,277 --> 00:40:03,737 நீ என்னை நம்புகிறாயா? 554 00:40:07,491 --> 00:40:08,492 இங்கே பார். 555 00:40:16,875 --> 00:40:19,211 அம்மாவும் நீங்களும் இருக்கும் இந்த புகைப்படத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லை. 556 00:40:20,462 --> 00:40:22,172 நீ பார்ப்பதற்கு அவளைப் போலவே இருக்கிறாய். 557 00:40:22,256 --> 00:40:24,216 எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும், செல்லமே. 558 00:40:24,299 --> 00:40:28,262 நீ எவ்வளவு வலிமையாக இருக்கிறாய், எப்படி சொந்தமாக முன்னேறி இருக்கிறாய் என்பதை நினைத்து 559 00:40:28,345 --> 00:40:30,264 நான் பெருமைப்படுகிறேன். 560 00:40:32,850 --> 00:40:35,060 உன்னுடைய அம்மாவும் பெருமைப்படுவாள், ஆனால் ஆச்சரியப்பட மாட்டாள். 561 00:40:36,478 --> 00:40:39,147 நீ குழந்தையாக இருந்த போது அவள் உன்னை "பால்வெளி" என்று கூப்பிடுவாள். 562 00:40:39,815 --> 00:40:40,816 அப்படி கூப்பிட்டிருக்க மாட்டார். 563 00:40:40,899 --> 00:40:42,276 கூப்பிட்டாள். 564 00:40:42,359 --> 00:40:46,655 எல்லோரும் மிட்டாய் அல்லது உன் அழகான கருத்த மேனியை என்று நினைத்தார்கள். 565 00:40:47,990 --> 00:40:51,034 நீ தான் அவளுடைய விண்மீன் கூட்டம் என்பதால், அப்படி சொன்னாள். 566 00:40:51,118 --> 00:40:53,954 அவளது பிரபஞ்சம். அவளது சிறிய பால்வெளியாக இருந்தாய். 567 00:40:54,037 --> 00:40:55,163 எனக்கு அது தெரியாது. 568 00:40:56,164 --> 00:40:59,543 அது பற்றி நான் அவளை கேலி செய்திருக்கிறேன், ஆனால் அதை கேட்பது எனக்கும் பிடித்தது. 569 00:41:04,631 --> 00:41:06,842 நீ எங்களுடைய மகள். 570 00:41:07,968 --> 00:41:11,430 நீ எலினாரின் மகள். நீ என்னுடைய மகள். 571 00:41:17,477 --> 00:41:18,729 ஆமாம். 572 00:42:34,471 --> 00:42:36,515 மிட்ரி, நான் தான் பேசுகிறேன். 573 00:42:36,598 --> 00:42:39,643 கால தாமதமான அழைப்பு. நான் ஆர்வமாக இருக்கிறேன். என்ன நடந்தது? 574 00:42:40,727 --> 00:42:42,229 வழக்கு விசாரணைக்கு வருவதை நான் விரும்பவில்லை. 575 00:42:42,896 --> 00:42:46,483 நான் ஃபிஜியில் ஓய்வு பெற வேண்டும். என்ன ஆச்சு? உனக்கு பயமாக இருக்கிறதா? 576 00:42:46,567 --> 00:42:47,609 இல்லை. 577 00:42:48,986 --> 00:42:50,237 தெளிவு வந்திருக்கிறது. 578 00:42:52,072 --> 00:42:53,824 வழக்கை முடித்து விடு. 579 00:42:53,907 --> 00:42:57,202 அலானாவின் கோரிக்கைகளை முழுவதுமாக நிறைவேற்றிவிடு. 580 00:42:57,286 --> 00:42:59,288 மறுபடியும் உன்னுடைய தலையில் அடிபட்டுவிட்டதா? 581 00:42:59,371 --> 00:43:00,664 நான் உறுதியாக சொல்கிறேன். 582 00:43:01,748 --> 00:43:06,044 எல்லோருக்குமே அமைதியும், சாந்தியும் கிடைக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால்... 583 00:43:08,088 --> 00:43:09,214 அவளுக்கு அது தேவை. 584 00:43:18,056 --> 00:43:20,893 -பாபி! நீ வீட்டில் இருக்கிறாயா? -இங்கே இருக்கிறேன். 585 00:43:32,529 --> 00:43:34,865 அந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வரும் படி மிட்ரியிடம் சொல்லிவிட்டேன். 586 00:43:36,533 --> 00:43:37,826 நான் வீட்டை விற்கப் போகிறேன். 587 00:43:45,000 --> 00:43:46,710 சரி, நாம் அடுத்து எங்கே போகப் போகிறோம்? 588 00:43:47,503 --> 00:43:50,172 -நீ என்னோடு தான் தங்கப் போகிறாயா? -நீயாக துரத்தும் வரை தங்குவேன். 589 00:43:53,675 --> 00:43:55,427 அப்பாவுடனான உன் பேச்சு வார்த்தை எப்படி இருந்தது? 590 00:43:56,428 --> 00:43:57,846 நன்றாக இருந்தது. 591 00:43:59,431 --> 00:44:00,891 சரி, எனக்கும் மகிழ்ச்சி. 592 00:44:02,559 --> 00:44:04,811 அவர் என்னுடைய அப்பா இல்லை என்று மிஸ் ஷெர்லி சொன்னாள். 593 00:44:05,395 --> 00:44:07,981 அவர்கள் சந்தித்த போதே அம்மா கருவுற்றிருந்தார் என்று சொன்னாள். 594 00:44:08,065 --> 00:44:09,274 இது என்ன கொடுமை? 595 00:44:10,484 --> 00:44:11,818 அதற்கு, அவர் என்ன சொன்னார்? 596 00:44:12,402 --> 00:44:13,654 நான் அவருடைய மகள் என்று சொன்னார். 597 00:44:13,737 --> 00:44:14,738 நல்லது. 598 00:44:14,821 --> 00:44:17,658 "ஏற்கனவே கருவுற்றிருந்தாள்" என்று அம்மாவின் பெயரை அவள் நாசமாக்கினாள். 599 00:44:21,119 --> 00:44:23,247 அப்பா அந்த பொய்யை உடனே மறுத்திருப்பார் என நினைக்கிறேன். 600 00:44:26,834 --> 00:44:28,919 நான்தான் உன்னுடைய அப்பா என்று நீ நம்புகிறாயா? 601 00:44:35,551 --> 00:44:37,010 எங்கே போகிறாய்? 602 00:44:37,094 --> 00:44:39,096 த நாக் 603 00:44:40,806 --> 00:44:42,015 அப்பா? 604 00:44:49,773 --> 00:44:51,441 அப்பா, நீங்கள் இங்கே இருக்கிறீர்களா? 605 00:45:26,768 --> 00:45:28,395 நகராதே, இங்கேயே இரு. 606 00:45:33,775 --> 00:45:37,279 உன் பாட்காஸ்ட்டில், மற்றவர்களை குறைத்து மதிப்பிட்டு பேசுவதை 607 00:45:37,362 --> 00:45:39,364 நீ நிறுத்த வேண்டும். 608 00:45:39,448 --> 00:45:40,449 அப்படி செய்யவில்லை என்றால்... 609 00:45:41,408 --> 00:45:44,369 தன் எஞ்சிய வாழ்நாளெல்லாம் உன் அப்பா சிறையில் கழிக்குமாறு செய்துவிடுவேன். 610 00:45:44,453 --> 00:45:46,246 உன்னால் எதுவும் செய்ய முடியாது, ஏனென்றால் நீ இப்போது போலீஸ் கிடையாது. 611 00:45:46,330 --> 00:45:47,706 அங்கேயே இரு என்று நான் எச்சரிக்கிறேன்! 612 00:45:50,167 --> 00:45:51,251 ஹே. 613 00:45:52,461 --> 00:45:54,254 -என்ன, ஹே. -யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்! 614 00:45:54,338 --> 00:45:57,216 -வாயை மூடு. -யாராவது காப்பாற்றுங்கள்! 615 00:46:02,930 --> 00:46:05,015 என் மகள் மேலிருந்து உன் கைகளை எடு. 616 00:46:22,199 --> 00:46:24,243 அட, கடவுளே. 617 00:46:24,326 --> 00:46:25,327 ஒன்றுமில்லை. நான் தான் வந்துவிட்டேனே. 618 00:46:25,410 --> 00:46:27,621 உங்களை மறுபடியும் சிறைக்கு அனுப்பப் போகிறார்கள், அது என்னால் தான். 619 00:46:27,704 --> 00:46:29,331 பரவாயில்லை. ஒன்றும் பிரச்சினை இல்லை. 620 00:46:29,414 --> 00:46:32,501 -அவன் இறந்துவிட்டான், அப்பா. -கவலைப்படாதே. 621 00:46:33,001 --> 00:46:36,004 -நீங்கள் மறுபடியும் சிறைக்கு போகக் கூடாது. -நான் எங்கும் போக மாட்டேன். 622 00:46:36,713 --> 00:46:37,714 சத்தியமாக. 623 00:46:39,049 --> 00:46:40,717 -ஒன்றும் பிரச்சினை இல்லை. இங்கே வா. -சரி. 624 00:46:41,677 --> 00:46:43,178 சரி, ஒன்றும் பிரச்சினை இல்லை. 625 00:46:45,889 --> 00:46:46,890 பரவாயில்லை. 626 00:47:44,865 --> 00:47:46,867 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்