1 00:00:08,090 --> 00:00:09,301 நீ பொய் சொல்லிவிட்டாய். 2 00:00:10,552 --> 00:00:15,641 என்னிடம் இதுவரை சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் பொய் தான். 3 00:00:18,894 --> 00:00:19,853 ஓவர்கம்மிங் மைக்கா கீத் 4 00:00:20,604 --> 00:00:23,899 எங்கிருந்து என்னை கண்டுபிடித்தாயோ அங்கேயே என்னை மீண்டும் அனுப்புகிறாய். 5 00:00:25,651 --> 00:00:26,735 அது உண்மை இல்லை. 6 00:00:26,818 --> 00:00:29,571 நான் ஒரு நாயாக இருந்தால், உனக்கு அபராதம் கிடைத்திருக்கும். 7 00:00:30,531 --> 00:00:31,740 ஆனால் என்னைப் பற்றி யார் கவலைப்படுவது? 8 00:00:35,494 --> 00:00:36,912 நாம் உட்கார்ந்து கொள்ளலாமா? 9 00:00:37,788 --> 00:00:40,207 அதைப் பற்றி பேசுவோம். நீ கோபமாக இருக்கிறாய் என்று தெரிகிறது. 10 00:00:40,290 --> 00:00:41,917 நீ என்னை ஏமாற்றிவிட்டாய். 11 00:00:43,210 --> 00:00:45,879 உனக்கு மட்டுமே தெரிந்த விஷயங்களை ஏம்ஸ் என்னிடம் சொன்னான். 12 00:00:45,963 --> 00:00:48,799 -ரமோன்... -ஒரு வார்த்தை பேசாதே. 13 00:00:49,383 --> 00:00:52,094 நீ எதுவும் சொல்லத் தேவையில்லை. 14 00:00:52,761 --> 00:00:54,346 நாம் பேசலாம். 15 00:00:55,931 --> 00:00:57,349 நீ என்னோடு பாதுகாப்பாக இருப்பாய். 16 00:00:57,432 --> 00:00:58,809 அது ஒரு மோசமான நகைச்சுவை! 17 00:00:59,768 --> 00:01:00,894 நீ என்னிடம்... 18 00:01:00,978 --> 00:01:05,566 உன்னை மிகவும் விரும்பிய குழந்தைகளிடம் அவர்கள் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக நீ சொன்னாய். 19 00:01:06,400 --> 00:01:07,776 நீ பொய் சொல்பவள். 20 00:01:08,527 --> 00:01:10,153 நீ என்னை விட்டு விட வேண்டும். 21 00:01:10,237 --> 00:01:12,865 நீ ஒரு மோசமான தாயாக இருந்திருப்பாய். 22 00:01:14,533 --> 00:01:15,617 அப்படி சொல்லாதே. 23 00:01:15,701 --> 00:01:17,870 ஜோஷுவா உன்னை வெறுத்தார். 24 00:01:18,662 --> 00:01:20,038 அது உண்மை கிடையாது. 25 00:01:20,122 --> 00:01:21,290 ஆமாம், உண்மை தான். 26 00:01:21,373 --> 00:01:24,376 அந்த உண்மை உனக்கும் தெரியும் என்பதை உன் முகமே காட்டி கொடுக்கிறது. 27 00:01:32,426 --> 00:01:33,635 ஐயோ, கடவுளே. 28 00:01:36,263 --> 00:01:38,390 வெளியே போ! என் வீட்டை விட்டு வெளியே போ! 29 00:01:38,473 --> 00:01:39,391 வெளியே போ! 30 00:01:43,312 --> 00:01:44,313 ஓ, கடவுளே. 31 00:03:01,181 --> 00:03:05,143 இன்கிராம், ரமோனை பற்றி பயமாக இருப்பதாக அவள் குறுஞ்செய்தி அனுப்பினாள், அதனால்தான் இங்கே வந்தேன். 32 00:03:05,227 --> 00:03:07,229 அது உன் வேலை இல்லை. 33 00:03:08,063 --> 00:03:09,690 இதை செய்ய ஜோஷுவா இங்கில்லை. 34 00:03:09,773 --> 00:03:11,358 -எனக்குத் தெரியும். -அப்படியா? 35 00:03:11,441 --> 00:03:15,737 ஏனென்றால், என் தோழி பாதுகாப்பாக இருக்கிறாளா என பார்க்க வந்ததற்காக என்னை கத்துகிறீர்கள். 36 00:03:15,821 --> 00:03:20,075 பார், என் மேல் அந்தப் பழியைப் போடாதே, பாபி. இதுதான் அந்த முட்டாள் தனமான... 37 00:03:20,158 --> 00:03:21,535 -முட்டாள்தனமா? -ஆமாம். 38 00:03:21,618 --> 00:03:24,413 இப்படிப்பட்ட பொறுமையில்லாத நடத்தையினால் தான் நீ பிரச்சினைகளை சந்திக்கிறாய். 39 00:03:24,496 --> 00:03:28,083 அடடா. சரி. 40 00:03:29,168 --> 00:03:31,295 என்ன தெரியுமா, என்னால் இப்போது இதைப்பற்றி பேச முடியாது. 41 00:03:31,378 --> 00:03:32,754 பார், நீ இதை கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும். 42 00:03:32,838 --> 00:03:35,048 நம்மிடம் உள்ள அனைத்தையும் எடுத்துக்கொள்ள அலானா கேவ் முயற்சிக்கிறார். 43 00:03:35,132 --> 00:03:37,426 உன்னிடம் இருப்பது மட்டுமல்ல. நம்மிடம் இருப்பதை எடுக்க நினைக்கிறாள். 44 00:03:37,509 --> 00:03:40,679 அது நம்முடைய சேமிப்பை, நம்முடைய வீட்டை, பிரச்சினைக்கு உள்ளாக்கப் போகிறது. 45 00:03:40,762 --> 00:03:42,639 நீ அதை அவளிடம் தூக்கி கொடுக்க போகிறாய். 46 00:03:46,476 --> 00:03:47,644 நான் போக வேண்டும். 47 00:03:47,728 --> 00:03:50,772 பாபி, என்ன நடக்கிறது? அழை... 48 00:04:39,154 --> 00:04:42,199 நான் சொன்னது போல, அவன் இன்று தான் வேலையில் இருந்து நீக்கப்பட்டான். அப்போதுதான் அவனைப் பார்த்தேன். 49 00:04:42,282 --> 00:04:44,785 -அவன் அவளுடைய முன்னாள்-உதவியாளர், எனவே... -நான் வழக்கு பதிய விரும்பவில்லை. 50 00:04:46,745 --> 00:04:49,414 ரமோன் வருத்தத்தில் இருக்கிறான். அவன் செய்வதரியாது செய்கிறான். 51 00:04:49,498 --> 00:04:51,250 எனவே நீங்கள் இப்போது போகலாம். 52 00:04:51,917 --> 00:04:53,168 சரி, நண்பர்களே, நான்... 53 00:04:53,252 --> 00:04:55,921 எனக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் உங்களுக்கு சொல்கிறேன், சரியா? 54 00:04:56,004 --> 00:04:58,131 -நீயே பார்த்துக்கொள். இரவு வணக்கம். -நன்றி. பத்திரமாக இருங்கள். 55 00:05:02,135 --> 00:05:06,223 பார், நீ உன்னுடைய ரகசிய குறிப்புகளை மாற்ற வேண்டும், சரியா? 56 00:05:06,682 --> 00:05:08,559 உன்னுடைய எல்லா விவரமும் அவனிடம் இருக்கிறது. 57 00:05:08,642 --> 00:05:11,019 அவனுக்கு என்னை நன்றாகத் தெரியும். அவன் கண்டுபிடித்துவிடுவான். 58 00:05:11,103 --> 00:05:13,188 அதனால்தான் உனக்கு பாதுகாப்பு குழுவின் உதவி தேவை. 59 00:05:13,272 --> 00:05:15,190 பாதுகாப்பு இதற்கு ஒரு தீர்வு ஆகாது. 60 00:05:16,358 --> 00:05:17,693 இது சொந்த விஷயம். 61 00:05:21,363 --> 00:05:22,865 நான் உன்னோடு கொஞ்சம் பேசலாமா? 62 00:05:23,949 --> 00:05:24,950 கண்டிப்பாக. 63 00:05:29,454 --> 00:05:30,539 என்ன நடக்கிறது? 64 00:05:31,999 --> 00:05:33,959 அவள் பிரச்சினையானவள், சரியா? 65 00:05:34,042 --> 00:05:35,961 அவளது நடவடிக்கை எனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. 66 00:05:36,628 --> 00:05:38,172 அவள் பயந்திருக்கிறாள், சரியா? 67 00:05:38,255 --> 00:05:42,718 ஜோஷுவாவும், ட்ரூவும் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக நினைத்து ரமோன் அவர்களை கொன்றிருந்தால்? 68 00:05:42,801 --> 00:05:46,430 சரி, அவன் அப்படி நிஜமாகவே செய்திருந்தால், நாம் இப்பொழுதே சில முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். 69 00:05:46,513 --> 00:05:47,514 இப்பொழுதே. 70 00:05:49,016 --> 00:05:50,017 ஒரு நொடி பொறு. 71 00:05:54,146 --> 00:05:55,147 என்ன? 72 00:05:57,024 --> 00:05:58,400 ரமோன் டோமஸ் முட்டாள் தனமான விஷயத்தை செய்துவிட்டேன். 73 00:05:58,483 --> 00:05:59,484 நாம் பேசலாமா? 74 00:06:00,611 --> 00:06:03,530 -இதை காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும். -நான் அதைச் செய்கிறேன். 75 00:06:03,614 --> 00:06:04,615 அதாவது, நான் வந்து... 76 00:06:06,283 --> 00:06:08,493 அவனுக்காக நான் சற்று பொறுப்பாக உணர்கிறேன். 77 00:06:08,577 --> 00:06:11,830 அவனை வேலையிலிருந்து நீக்கி, வெளியேற்றும் அறிவிப்புக் கொடுத்தேன். 78 00:06:12,664 --> 00:06:14,166 சற்று ஜாக்கிரதையாக இரு. 79 00:06:14,249 --> 00:06:15,876 -சரி. -மைக்கா? 80 00:06:17,669 --> 00:06:19,213 என்ன நடந்தது? 81 00:06:21,131 --> 00:06:22,132 ரமோன். 82 00:06:23,467 --> 00:06:24,968 அவன் என் மீது கோபமாக இருந்தான், 83 00:06:25,928 --> 00:06:30,140 அதன் பிறகு, எல்லாம் விசித்திரமாக மாறிவிட்டது. 84 00:06:30,224 --> 00:06:32,976 மைக்கா, அவன் உன் வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்தான், சரியா? அவன் உன்னை அச்சுறுத்தினான். 85 00:06:33,060 --> 00:06:34,895 அது விசித்திரமானது அல்ல. ஆபத்தானது. 86 00:06:34,978 --> 00:06:36,188 காவல்துறை என்ன சொன்னார்கள்? 87 00:06:36,271 --> 00:06:39,942 காவல்துறையினர் எதுவும் சொல்லவில்லை. அதாவது, அவள் புகாரளிக்க விரும்பவில்லை. 88 00:06:40,025 --> 00:06:41,652 -மார்கஸ். -இல்லை, நான்... 89 00:06:41,735 --> 00:06:43,904 பார், அவள் இந்த விஷயத்தின் தீவிரத்தை புரிந்து கொள்ளவில்லை என்றால் 90 00:06:43,987 --> 00:06:45,656 அவர்களாலோ அல்லது என்னாலோ எதுவும் செய்ய முடியாது. 91 00:06:45,739 --> 00:06:48,700 இப்போது, நம்மால் அவளுக்கு ஏதாவது சொல்லி புரிய வைக்க முடியுமா என்று தெரியவில்லை. 92 00:06:48,784 --> 00:06:53,205 எனக்குத் தெரியவில்லை, ஆனால், பார், நான்... நான் போக வேண்டும், சரியா? 93 00:06:53,747 --> 00:06:55,082 உன்னிடம் பிறகு பேசுகிறேன். 94 00:07:20,232 --> 00:07:21,942 முட்டாள். முட்டாள். 95 00:07:25,028 --> 00:07:26,029 சரி. 96 00:07:50,429 --> 00:07:52,264 -ஏம்ஸ். -நான் ஏம்ஸ் பேசுகிறேன். என்ன? 97 00:07:52,347 --> 00:07:54,391 -என்ன விஷயம், நண்பா? நான் மார்கஸ் பேசுகிறேன். -யாரு? 98 00:07:54,474 --> 00:07:56,059 -மார்கஸ்? -கில்பிரூ. 99 00:07:56,143 --> 00:07:59,146 கேள், நான் ரமோன் டோமஸின் வீட்டில் இருக்கிறேன். 100 00:07:59,229 --> 00:08:01,732 -நீ அங்கே என்ன செய்கிறாய்? -ஆமாம். சரி, ஏதோ நடந்திருக்கிறது. 101 00:08:01,815 --> 00:08:03,901 -என்ன நடக்கிறது? -இங்கே வந்து என்னை சந்திக்க முடியுமா? 102 00:08:03,984 --> 00:08:05,944 -என்ன நடக்கிறது? -சரி, உனக்கு விவரங்களைச் சொல்கிறேன். 103 00:08:08,238 --> 00:08:09,239 மார்கஸ்? 104 00:08:10,449 --> 00:08:12,075 -மார்கஸ், என்ன நடக்கிறது? -அடக் கடவுளே. 105 00:08:13,160 --> 00:08:14,161 மார்கஸ். 106 00:08:15,329 --> 00:08:17,623 ஹேய். ஹே, ஹே, ஹே ஹே, ஹே. 107 00:08:17,706 --> 00:08:20,375 ரமோன். ஹே, ஹே, தைரியமாக இரு, சரியா? 108 00:08:20,459 --> 00:08:22,419 நான் உனக்கு உதவி செய்கிறேன். கொஞ்சம் தைரியமாக இரு. 109 00:08:22,503 --> 00:08:25,839 நான் சாக விரும்பவில்லை. 110 00:08:25,923 --> 00:08:27,382 ஓ, கடவுளே. 111 00:08:27,466 --> 00:08:29,426 கொஞ்சம் அப்படியே இரு, சரியா? நான் பார்த்துக் கொள்கிறேன். 112 00:08:30,010 --> 00:08:32,304 நான் பார்த்துக் கொள்கிறேன். தைரியமாக இரு. 113 00:08:40,604 --> 00:08:43,941 மடையர்களே, பதிவு செய்வதை நிறுத்தி விட்டு, 911ஐ அழையுங்கள். 114 00:08:46,401 --> 00:08:48,862 ஹேய். ஹேய். 115 00:08:48,946 --> 00:08:50,030 911ஐ அழையுங்கள். 116 00:08:50,113 --> 00:08:53,200 ஹேய், தொப்பி போட்டவனே, நில்! இங்கே வா. 117 00:08:53,283 --> 00:08:54,284 ஹேய்! 118 00:09:02,417 --> 00:09:03,710 -ஹே, நீங்கள் நலமா? -நான் நலம் தான். 119 00:09:03,794 --> 00:09:04,962 நீங்கள் நலம் தானே? நிச்சயமாக? 120 00:09:05,045 --> 00:09:06,255 மன்னித்துவிடுங்கள். 121 00:09:09,508 --> 00:09:10,717 ஓ, கடவுளே! 122 00:09:14,972 --> 00:09:15,973 த நாக் 123 00:09:16,056 --> 00:09:17,891 நன்றி, ஹெர்பி. நான் பூட்டி விட்டு வருகிறேன். 124 00:09:17,975 --> 00:09:19,726 -இரவு வணக்கம். -வணக்கம். 125 00:09:56,013 --> 00:09:58,849 நியூ ஆர்லீயன்சில் அடிப்படை தாளம் ஜாஸ் என்றால், 126 00:09:59,766 --> 00:10:01,226 70-களில் ஓக்லாண்டில் ஃபங்க் தான் இசை. 127 00:10:06,106 --> 00:10:08,609 அழகான பெண்கள், சுவையான உணவு, 128 00:10:09,818 --> 00:10:12,070 ஆனால் அந்த அகலமான சாலைகளுக்கு ஈடு இல்லை. 129 00:10:12,738 --> 00:10:15,866 ஒருபுறம் கரும்பு வயல், மறுபுறம் நீரோடை. 130 00:10:15,949 --> 00:10:17,326 நோபல் 131 00:10:24,625 --> 00:10:26,084 மாஸ்? 132 00:10:26,168 --> 00:10:27,294 அங்கிள். 133 00:10:30,589 --> 00:10:31,798 மகனே. 134 00:10:34,551 --> 00:10:36,970 உன்னைப் பார்த்து எவ்வளவு காலம் ஆகிறது? 135 00:10:38,555 --> 00:10:41,266 -உன் அப்பாவின் இறுதி சடங்கிற்கு கூட வரவில்லை. -இல்லை, சார். 136 00:10:42,017 --> 00:10:43,685 அவரை அப்படி நினைவு வைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. 137 00:10:45,771 --> 00:10:47,481 நான் அவரை மருத்துவமனையில் பார்த்தேன். 138 00:10:48,315 --> 00:10:50,442 அவர் என்னை அடையாளம் கண்டு கொண்டார். அதுவே எனக்குப் போதுமானது. 139 00:10:51,193 --> 00:10:52,486 இங்கே வா. வந்து உட்காரு. 140 00:10:53,695 --> 00:10:56,406 அவர் இறந்த தினத்திலிருந்து நான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். 141 00:10:59,409 --> 00:11:01,787 தெரியுமா, அவர் என்னை நொவெனாவிற்கு அழைத்துச் செல்வார். 142 00:11:02,663 --> 00:11:05,666 இப்போது நான் கடந்து செல்லும் ஒவ்வொரு நகரத்திலும், ஒரு பிரார்த்தனைக் கூட்டத்திற்கு செல்கிறேன். 143 00:11:05,749 --> 00:11:07,292 அவருக்காக ஒரு மெழுகுவர்த்தி ஏற்றுகிறேன். 144 00:11:08,585 --> 00:11:10,087 அங்கிருந்து நேராக இங்கே வந்திருக்கிறேன். 145 00:11:10,170 --> 00:11:12,172 உனக்கு தெரிந்த வகையில் வந்திருக்கிறாய். 146 00:11:12,256 --> 00:11:13,757 நீங்கள் அப்படி சொன்னதற்கு நன்றி, அங்கிள். 147 00:11:14,883 --> 00:11:19,012 உங்களுடைய மரியாதை என்பது, அவருக்கு மிகவும் பெருமையாக இருந்தது. 148 00:11:21,890 --> 00:11:23,600 என் சகோதரனின் பிரிவால் நான் மிகவும் வருந்துகிறேன். 149 00:11:28,647 --> 00:11:29,940 நீ எங்கே தங்கி இருக்கிறாய்? 150 00:11:30,023 --> 00:11:33,277 -இங்கேயும் அங்கேயும் தங்கியிருக்கிறேன். -இல்லை, இல்லை. 151 00:11:33,360 --> 00:11:36,363 குடும்பம் இருக்கும் போது "இங்கேயும் அங்கேயும்" தங்க கூடாது. எங்கள் வீட்டில் நிறைய இடம் இருக்கு. 152 00:11:37,322 --> 00:11:39,324 -அப்படியா? -ஆமாம். 153 00:11:40,826 --> 00:11:42,494 உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி, மகனே. 154 00:11:50,169 --> 00:11:53,380 நீ துரத்திய அந்த நபரை பற்றி சொல். அவன் முகத்தைப் பார்த்தாயா? 155 00:11:53,463 --> 00:11:55,424 இல்லை. பக்கவாட்டில் பார்த்தேன். 156 00:11:56,175 --> 00:11:59,636 அவன் தொப்பி அணிந்திருந்தான். அவன் கண்களை என்னால் பார்க்க முடியவில்லை. 157 00:11:59,720 --> 00:12:01,972 ஆனால் மிக உயரமாக இருந்தான். அதை உறுதியாக சொல்ல முடியும். 158 00:12:02,806 --> 00:12:04,391 குற்றவாளிகளின் பட்டியலில் அவனை அடையாளம் காண முடியுமா? 159 00:12:05,559 --> 00:12:06,768 முடியும் என்று நினைக்கிறேன். 160 00:12:07,311 --> 00:12:11,899 அதாவது, அவனை எனக்கு அடையாளம் தெரிந்ததாக தோன்றியது, தெரியுமா? 161 00:12:11,982 --> 00:12:13,525 எங்கு பார்த்தேன் என நினைவுக்கு வரவில்லை. 162 00:12:14,067 --> 00:12:15,986 அது, காதலனாக அல்லது முன்னாள் காதலனாக இருக்கலாம். 163 00:12:16,612 --> 00:12:17,613 இருக்கலாம். 164 00:12:17,696 --> 00:12:19,948 யாரோ எதையோ தேடி இந்த இடத்தை முழுவதுமாக புரட்டி போட்டிருக்கிறார்கள். 165 00:12:29,249 --> 00:12:30,626 நீங்கள் வேலையைப் பாருங்கள். 166 00:12:31,668 --> 00:12:35,881 ஹே, நீ போவதற்கு முன்னால், உன்னிடம் நான் பாபி பார்னல் பற்றி ஒரு கேள்வி கேட்கலாமா? 167 00:12:36,548 --> 00:12:37,758 அவள் கொலைகாரி இல்லை. 168 00:12:39,551 --> 00:12:40,886 நீ அவளை நம்புகிறாயா? 169 00:12:42,638 --> 00:12:46,016 எல்லோரையும் விட அவளை நம்புகிறேன். ஆனால் நான் இப்படி சொன்னதாக அவளிடம் சொல்லாதே. 170 00:12:46,099 --> 00:12:47,100 சரி. 171 00:12:47,184 --> 00:12:50,979 நான் சாதாரண மக்களோடு வேலை செய்வதில்லை, ஆனால் அவளை தட்டிக்கழிப்பது... 172 00:12:51,980 --> 00:12:53,524 மிகவும் கடினமாக உள்ளது. 173 00:12:54,608 --> 00:12:57,903 சரி, நான் இதை எப்படி சொல்வது? அதாவது ஒரு பிட் புல்... 174 00:12:58,904 --> 00:13:02,908 ஏதோ ஒன்றை வாயால் கடித்த பிறகு எப்படி இருக்கும்? 175 00:13:03,492 --> 00:13:04,826 -அப்படிப்பட்டவள் தான் அவள். -சரி. 176 00:13:04,910 --> 00:13:06,119 அவளோடு உனக்கு முன் பழக்கம் இருக்கிறதா? 177 00:13:07,454 --> 00:13:10,541 அவளை வேறொரு ஜென்மத்தில் தெரிந்தது போல நான் ஆழமாக உணர்கிறேன். 178 00:13:10,624 --> 00:13:13,752 கேள், இது தான் என்னுடைய அறிவுரை. 179 00:13:13,836 --> 00:13:17,130 நீ பாபியுடன் வேலை செய்யவில்லை என்றால், அவள் உனக்கு எதிராக வேலை செய்வாள். 180 00:13:18,215 --> 00:13:20,467 என்னை நம்பு, நிச்சயமாக அது உனக்கு தேவையில்லை. 181 00:13:27,474 --> 00:13:28,851 நீ இன்னும் இணைப்பில் இருக்கிறாயா? 182 00:13:28,934 --> 00:13:32,896 ஆமாம். மன்னித்துவிடு, மார்கஸ். 183 00:13:33,689 --> 00:13:35,524 -நீ நலமாக இருக்கிறாயா? -இல்லை. 184 00:13:36,817 --> 00:13:38,068 நான் என்ன செய்ய வேண்டும்? 185 00:13:39,486 --> 00:13:40,612 ஒன்றும் செய்ய வேண்டாம். 186 00:13:41,321 --> 00:13:42,781 பார், நீ எப்போது வேண்டுமானாலும் என்னிடம் பேசலாம். 187 00:13:42,865 --> 00:13:45,993 கேள், அவன் ஜன்னலிலிருந்து கீழே விழவில்லை, பாபி. அவன் தள்ளப்பட்டு இருக்கிறான். 188 00:13:46,076 --> 00:13:48,287 நான் துரத்திய அதே நபரால் என்று நினைக்கிறேன். 189 00:13:48,370 --> 00:13:50,080 குற்றம் செய்யாதவர்கள், ஓட மாட்டார்கள். 190 00:13:50,163 --> 00:13:52,749 சரி, ஏம்ஸ் வேறு ஏதாவது சொன்னானா? 191 00:13:52,833 --> 00:13:56,211 ஆமாம், எதையோ தேடி யாரோ ரமோனின் வீட்டை புரட்டி போட்டு இருக்கிறார்கள் என்று சொன்னான். 192 00:13:56,837 --> 00:13:58,338 சரி, நான் போக வேண்டும். 193 00:13:58,797 --> 00:13:59,798 நீ நலமாக இருக்கிறாயா? 194 00:13:59,882 --> 00:14:04,011 மைக்கா என் ஆட்களை வேலையிலிருந்து நீக்கி விட்டாள், மேலும் எனக்கு இப்போது சக்தி இல்லை, 195 00:14:04,094 --> 00:14:05,345 எனவே அவளை பத்திரமாக இருக்கச் சொல். 196 00:14:06,221 --> 00:14:07,848 -சொல்கிறேன். -நல்லது. 197 00:14:14,104 --> 00:14:15,814 நான் அவனிடம் கொடூரமாக நடந்துக்கொண்டேன். 198 00:14:16,356 --> 00:14:20,527 அதாவது, நான் தான் இதற்கு காரணமா? நான் தான்... அவனை குதிக்கும்படி தூண்டினேனா? 199 00:14:20,611 --> 00:14:22,154 உன் மீது நீயே பழி போட்டுக்கொள்ளாதே. 200 00:14:22,738 --> 00:14:25,073 தவிர, யாரோ ஓடிப்போவதை மார்கஸ் பார்த்துள்ளான். 201 00:14:25,574 --> 00:14:27,117 நீ பயந்திருந்தாய். 202 00:14:27,201 --> 00:14:29,328 நீ உன்னை தற்காத்துக் கொண்டிருந்தாய். 203 00:14:29,870 --> 00:14:32,789 மேலும் ரமோன் குழம்பி இருந்தான். அவர் என்ன செய்யவிருந்தான் என நமக்குத் தெரியாது. 204 00:14:32,873 --> 00:14:34,666 ஒருவேளை அவன் ஆபத்தான ஒருவனை தன் வீட்டில் அனுமதித்திருக்கலாம். 205 00:14:34,750 --> 00:14:35,751 சரிதான். 206 00:14:35,834 --> 00:14:38,086 மிகவும் பயமாக உள்ளது. 207 00:14:40,172 --> 00:14:42,925 அவனுடைய நினைவுகள் அனைத்தையும் நான் அழிக்க வேண்டும். 208 00:15:53,453 --> 00:15:55,873 எங்களுக்குச் சொந்தமான ரமோன் டோமாஸை 209 00:15:55,956 --> 00:15:59,418 இழந்ததால் ஷெல்டர் குடும்பம் மனம் உடைந்துள்ளது. 210 00:16:00,586 --> 00:16:03,964 கைவிடப்பட்ட நிலையில் தன் வீட்டை விட்டு வெளியேறும் போது தான் ரமோன் ஷெல்டருக்கு வந்தான். 211 00:16:05,132 --> 00:16:09,595 ஷெல்டர் குடும்பத்தின் பராமரிப்பில் வளந்த ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட மாணவன் அவன். 212 00:16:11,889 --> 00:16:16,435 துக்கம் மற்றும் இழப்பை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில், ஷெல்டர் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். 213 00:16:16,935 --> 00:16:20,314 ஆறுதல் அளிக்கும் விஷயங்கள் நம் வலைத்தளத்தில் உள்ளன. 214 00:16:29,948 --> 00:16:31,658 மனித வள தரவுத்தளம் ஆண் அடையாளம் காணப்பட்டார் 215 00:16:35,537 --> 00:16:37,289 ரமோன் டோமஸ் நிர்வாக உதவியாளர் 216 00:16:38,248 --> 00:16:39,249 வாருங்கள். 217 00:16:42,669 --> 00:16:44,755 ஷெல்டர் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் பட்டியல் இது. 218 00:16:44,838 --> 00:16:46,840 -நன்றி. -ரமோனின் அக்கம்பக்கத்தினர். 219 00:16:47,883 --> 00:16:49,510 ஒருவேளை அவர்களுக்கு ஏதாவது தெரிந்திருக்கலாம். 220 00:16:49,593 --> 00:16:50,928 நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள்? 221 00:16:55,933 --> 00:16:58,810 சரி. அது ரமோனின் கைக்கடிகாரமா? 222 00:17:02,064 --> 00:17:04,148 ஆம். மற்றும் அவனது மேலாடை. 223 00:17:05,358 --> 00:17:07,027 நாங்கள் சில நேரங்களில் துணிகளை வர்த்தகம் செய்வோம். 224 00:17:07,861 --> 00:17:10,906 இதில் அவனது வாசம் இன்னும் இருக்கிறது, அதனால் இதை அணிய வேண்டும் என்று தோன்றியது. 225 00:17:12,782 --> 00:17:14,159 அது வித்தியாசமாக உள்ளதா? 226 00:17:14,660 --> 00:17:19,830 உங்கள் நண்பருடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது மனித குணம் தான். 227 00:17:19,915 --> 00:17:21,500 வந்து, நீங்கள் மனமுடைந்து இருக்கிறீர்கள். 228 00:17:21,583 --> 00:17:24,211 இன்று விடுமுறை எடுத்துக்கொள்ளலாமே? போய் ஓய்வெடுங்கள். 229 00:17:24,837 --> 00:17:27,381 அவனது ஆற்றலோடு உட்கார்ந்திருப்பது துக்க கோட்பாடுகளின் ஒரு பகுதி. 230 00:17:28,715 --> 00:17:30,843 அதோடு, எப்போதும் நான் இங்கிருக்க வேண்டும் என லாக்லான் விரும்புகிறார். 231 00:17:30,926 --> 00:17:32,344 லாக்லான் ஒரு முட்டாள். 232 00:17:35,055 --> 00:17:39,476 அவர் உங்களிடம் கண்ணியமாக இல்லாவிட்டால், நீங்கள் வேலையைவிட்டு போகலாமே? 233 00:17:44,773 --> 00:17:45,774 என்னால் போக முடியாது. 234 00:17:53,699 --> 00:17:55,367 அட. என்னுடன் வாருங்கள். 235 00:18:00,372 --> 00:18:02,749 -ஹேய். -ஹாய். 236 00:18:05,419 --> 00:18:07,921 என்னால் இனி இந்த விஷயங்களைப் பார்க்க முடியாது. 237 00:18:08,005 --> 00:18:09,840 இது எனக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது. 238 00:18:16,054 --> 00:18:20,601 என்னை மன்னித்துவிடு, நான் இவ்வளவு தூரம் உன்னை வரவழைத்தேன், 239 00:18:20,684 --> 00:18:22,895 ஆனால் இந்த நேர்காணலை இப்போது என்னால் செய்ய முடியாது. 240 00:18:22,978 --> 00:18:25,564 எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை. நாங்கள் காத்திருப்போம். 241 00:18:29,234 --> 00:18:31,069 நான் போய் பின்னால் உள்ள அறையின் எதிரொலியை சரிபார்க்கிறேன். 242 00:18:32,779 --> 00:18:35,699 இது என்ன? இது இந்த இடத்திற்கு உரியது இல்லை. 243 00:18:37,034 --> 00:18:38,493 என்னிடம் பேசு, மைக்கா. 244 00:18:39,786 --> 00:18:43,749 நான் நேசித்த ஒருவர் என் மீது வெறுப்போடு இறந்தார். 245 00:18:52,633 --> 00:18:54,635 அந்த பழைய நான். நான்... 246 00:18:57,054 --> 00:18:59,306 அவள் மீண்டும் ஊர்ந்து வருவதை நான் உணர்கிறேன். 247 00:19:00,766 --> 00:19:03,060 இந்த வாழ்க்கையை அவள் என்னிடமிருந்து பறிக்கப் போவது போல இருக்கு. 248 00:19:06,104 --> 00:19:07,523 எனக்குப் புரிகிறது. 249 00:19:11,485 --> 00:19:12,694 எனக்கு... 250 00:19:14,821 --> 00:19:18,116 இரண்டு நபர்களைப் போல உணர்வது எப்படி இருக்கும் என்று தெரியும். 251 00:19:18,784 --> 00:19:22,913 வந்து, நீ ஒருபோதும் வெற்றியின் பொறிகளில் சிக்கிக்கொண்டதில்லை. 252 00:19:29,127 --> 00:19:31,922 என்ன? இன்கிராமா? 253 00:19:34,633 --> 00:19:37,553 பாபி, நீ அவரை நேசிக்கிறாய் என்றால்... 254 00:19:41,515 --> 00:19:43,016 அதற்காகப் போராடு. 255 00:19:43,851 --> 00:19:46,395 அதைப் பாதுகாத்துக்கொள், ஏனென்றால் ஒருமுறை அது போய்விட்டால்... 256 00:19:47,396 --> 00:19:50,190 போராடுமளவுக்கு அது திடமாக இல்லை என்றால் என்ன செய்வது? 257 00:19:54,778 --> 00:19:56,947 நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு நம்மால் ஆபத்து என நினைக்கிறாயா? நம் இருவருமே? 258 00:19:58,323 --> 00:19:59,533 அது ஆபத்தான கேள்வி. 259 00:20:00,784 --> 00:20:02,077 நீ இல்லை என்று சொல்லவில்லையே. 260 00:20:05,163 --> 00:20:08,417 நான் அதை ஒப்புக்கொள்ளவில்லை, நீயும் ஒப்புக்கொள்ளக் கூடாது என நினைக்கிறேன். 261 00:20:10,544 --> 00:20:13,714 நாம் தான் இந்த உலகை காப்பாற்ற வேண்டும் என்று எது நம் இருவரையும் 262 00:20:14,214 --> 00:20:16,800 நினைக்க வைக்கிறது? 263 00:20:20,429 --> 00:20:22,806 நமக்கு அதைவிட வேறு என்ன வழி உள்ளது, அன்பே? 264 00:20:22,890 --> 00:20:24,516 அதெல்லாம் அழிந்துவிடும்படி விட்டுவிட வேண்டுமா? 265 00:20:31,815 --> 00:20:35,652 சரி, என்னுடன் மனம்விட்டு பேசுங்கள், சரியா? உங்கள் பயத்தை போக்க நான் உங்களுக்கு உதவுகிறேன். 266 00:20:37,613 --> 00:20:38,989 அது அப்படி இல்லை. அது... 267 00:20:40,782 --> 00:20:43,660 அவர் என்னைப் பின்தொடர்வது அல்லது துன்புறுத்துவது போன்ற விஷயம் இல்லை. 268 00:20:44,953 --> 00:20:45,954 ஆனாலும்? 269 00:20:49,208 --> 00:20:50,709 எனக்கு நிறைய கடன் இருக்கிறது. 270 00:20:53,045 --> 00:20:56,048 ஆக, லாச்லன் தான் உனக்கு கடன் தருபவனா? 271 00:20:58,425 --> 00:20:59,843 நான் ஷெல்டரிலிருந்து திருடினேன். 272 00:21:01,678 --> 00:21:05,182 ஃபேஸ் கிரீமின் விலை 600 டாலர்கள், அதன் சரக்குப் பதிவிற்கு நான் தான் பொறுப்பு, 273 00:21:05,265 --> 00:21:09,895 எனவே நான் அவற்றை இங்குமங்குமாய் மாற்றி, அவற்றை விற்று என் கடனை அடைத்தேன். 274 00:21:09,978 --> 00:21:11,104 அப்புறம் அவர் உங்களைப் பிடித்துவிட்டார். 275 00:21:12,856 --> 00:21:13,857 ஆனால் எப்படி? 276 00:21:15,234 --> 00:21:16,777 அலுவலகம் முழுவதும் கேமராக்கள் வைத்திருக்கிறார். 277 00:21:17,861 --> 00:21:22,783 பணியாளர்களை ஒழுங்காக வைத்துக்கொள்ளும்படி, தான் பார்ப்பதையும், கேட்பதையும் பயன்படுத்துவார் போல. 278 00:21:22,866 --> 00:21:24,952 அவர் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த விரும்புகிறார். 279 00:21:25,035 --> 00:21:28,080 சரி, கேமராக்கள் இருக்கும் இடம் பற்றி உங்களுக்கு ஏதாவது யூகம் இருக்கிறதா? 280 00:21:28,914 --> 00:21:30,415 அந்த காட்சி பதிவுகள் எங்கே என்று தெரியுமா? 281 00:21:31,208 --> 00:21:33,585 எனக்குத் தெரியும் என அவருக்குத் தெரியாது, ஆனால் எனக்குத் தெரியும். 282 00:21:33,669 --> 00:21:36,171 இது அவரது அலுவலகத்தில் ஹார்ட் டிரைவ்களில் உள்ளது. 283 00:21:40,717 --> 00:21:42,135 நான் சிறைக்கு செல்ல விரும்பவில்லை. 284 00:21:45,597 --> 00:21:47,140 நான் அவற்றை எடுத்து உங்களிடம் கொடுக்கவா? 285 00:21:51,228 --> 00:21:53,355 உள்ளே வா. ஆமாம், இந்த விஷயத்தை நாம் அலுவலகத்தில் செய்வதைவிட 286 00:21:53,438 --> 00:21:56,942 இங்கே ஒன்றாகச் செய்வது நல்லது என்று நினைத்தேன். 287 00:21:57,025 --> 00:22:00,028 ரகசிய கேமராக்களா? லாக்லான் ஏன் உளவு பார்க்கிறான்? 288 00:22:00,487 --> 00:22:01,530 எனக்குத் தெரியாது. 289 00:22:04,408 --> 00:22:05,409 என்ன இது? 290 00:22:11,874 --> 00:22:13,333 நீ வீட்டில் என்ன செய்கிறாய்? 291 00:22:13,417 --> 00:22:16,461 கொஞ்ச நேரம் வகுப்பு இல்லை, அதனால் சிற்றுண்டி சாப்பிட வீட்டிற்கு வந்தேன். 292 00:22:16,545 --> 00:22:17,546 இல்லை, இல்லை. 293 00:22:17,629 --> 00:22:20,090 பள்ளி பேருந்து மத்தியானத்தில் ஓடாது. 294 00:22:20,174 --> 00:22:22,634 -நான் பேருந்தில் வரவில்லை. -எனவே எப்படி... 295 00:22:27,055 --> 00:22:29,600 இவன் தான் ஆப்ரே, அப்பா. 296 00:22:30,767 --> 00:22:32,227 ஹேய், திரு. கில்ப்ரு, திருமதி. கில்ப்ரு. 297 00:22:32,311 --> 00:22:35,898 -கில்பிரூ. அது கில்பிரூ. -கில்பிரூ. 298 00:22:35,981 --> 00:22:38,275 -இல்லை, என் பெயர் பாபி பார்னல். -ஹேய். 299 00:22:38,358 --> 00:22:40,319 நான் வீட்டிற்கு வருவதை உங்களிடம் சொல்லியிருப்பேன், 300 00:22:40,402 --> 00:22:42,321 ஆனால் நீங்கள் இங்கே இருப்பீர்கள் என்று தெரியாது. 301 00:22:44,239 --> 00:22:47,784 சரி, எப்படியும் நாங்கள் கிளம்ப வேண்டும், ஓய்வு காலம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. 302 00:22:47,868 --> 00:22:48,827 இரு. 303 00:22:51,455 --> 00:22:53,332 உனக்குப் பைத்தியமா? உன் அடையாள அட்டையை காட்டு. 304 00:23:01,256 --> 00:23:02,716 கலிஃபோர்னியா 305 00:23:06,929 --> 00:23:08,680 ஆப்ரே சிட்டன்ஸ், இல்லையா? 306 00:23:11,225 --> 00:23:12,809 நான் உன்னை கொஞ்சம் திட்டப் போகிறேன். 307 00:23:14,228 --> 00:23:17,064 என் மகள் என்ன சொன்னாலும் பரவாயில்லை. 308 00:23:17,648 --> 00:23:21,693 யாரும் இல்லாத வீட்டில் ஆண்கள் வரக் கூடாது என்பது தான் முக்கிய விதிமுறை. 309 00:23:22,236 --> 00:23:24,947 எப்போதுமே. உனக்கு அது புரிகிறதா? 310 00:23:26,490 --> 00:23:30,410 அதாவது, நானோ அல்லது அவளது அம்மாவோ இங்கே இருக்க வேண்டும் என்பது தான் அதற்கு அர்த்தம். 311 00:23:31,286 --> 00:23:34,873 எனவே, அவள் மறந்துவிட்டால் கூட, 312 00:23:34,957 --> 00:23:38,085 உனக்கு தேவையான எல்லா தகவல்களையும் நான் சொல்லிவிட்டேன். 313 00:23:38,585 --> 00:23:40,254 உனக்கு அது புரிகிறது, இல்லையா? 314 00:23:41,338 --> 00:23:42,756 ஆமாம், சார். எனக்குப் புரிகிறது. 315 00:23:47,845 --> 00:23:49,054 நீ விதிகளை மீறிவிட்டாய். 316 00:23:51,223 --> 00:23:53,559 பள்ளி முடிந்ததும், நீ நேராக வீட்டிற்கு வர வேண்டும். 317 00:23:54,601 --> 00:23:55,894 சொல்வது புரிகிறதா? 318 00:23:57,813 --> 00:23:58,814 புரிகிறது, சார். 319 00:24:05,654 --> 00:24:09,575 சரி... எப்போதிலிருந்து டிரினி டேட்டிங் செய்யத் தொடங்கினாள்? 320 00:24:09,658 --> 00:24:12,494 கேள், அன்பே. நான் அதைப் பற்றி யோசிக்க கூட விரும்பவில்லை. 321 00:24:12,578 --> 00:24:14,413 நிச்சயமாக இதைப் பற்றி பேசவும் விரும்பவில்லை. 322 00:24:15,581 --> 00:24:17,833 சரி. நாம் இங்கு வந்த வேலையைப் பார்ப்போம். 323 00:24:17,916 --> 00:24:21,712 "ஜென்னா புக்காடெல்லோ. கேரி இங்யூயென். 324 00:24:23,088 --> 00:24:25,549 மாலீக்கா லாங்." இவர்கள் அனைவரும் ஷெல்டரின் பணியாளர்கள். 325 00:24:26,049 --> 00:24:29,678 பணியாளர்களின் தனிப்பட்ட விஷயங்களை கண்டுபிடிக்க தான் இதையெல்லாம் செய்தோம் என்று சொல்லிவிடாதே. 326 00:24:30,387 --> 00:24:32,723 லாக்லான் ஏன் பணியாளர்களின் தனிப்பட்ட விஷயங்களை மறைத்து வைத்திருக்கப் போகிறான்? 327 00:24:33,432 --> 00:24:35,058 ஐவி ஆபட் 328 00:24:37,519 --> 00:24:38,562 இதைப் பார். 329 00:24:42,024 --> 00:24:46,236 சரி. நீ என்ன செய்தாலும், அந்த ரீவைண்ட் பொத்தானை அழுத்த கூடாது. 330 00:24:46,320 --> 00:24:49,698 சரி, அவர்கள் என்ன செய்தாலும், என் வாழ்க்கையில் இதைவிட மோசமான விஷயத்தை நான் பார்த்திருக்கிறேன். 331 00:24:51,491 --> 00:24:53,452 இது மிகவும் மோசமாக உள்ளது. 332 00:24:55,204 --> 00:24:57,831 ஷெல்டரில் இருக்கும் அனைவரைப் பற்றியும் கோப்பை இருக்கிறது. 333 00:24:57,915 --> 00:24:59,750 அவன் கேடுகெட்டவன். 334 00:25:01,793 --> 00:25:04,630 ரமோன் இந்த ரகசிய கேமராவைப் பற்றி கண்டுபிடித்திருந்தால்? 335 00:25:05,464 --> 00:25:06,465 ஓ-ஹோ? 336 00:25:07,299 --> 00:25:10,385 ரமோன் ரகசிய கேமராவை பற்றி கண்டுபிடித்து, அவனது சுயரூபத்தை 337 00:25:10,469 --> 00:25:13,222 வெளிச்சம் போட்டு காட்டுவதாக மிரட்டியிருப்பான் அதனால் லாக்லான் அவனைக் கொன்றிருப்பான். 338 00:25:14,056 --> 00:25:17,726 நான் பார்த்தவன் உயரமாக இருந்தான், ஆனால் எனக்குத் தெரியாது. 339 00:25:17,809 --> 00:25:19,770 லாக்லான் கொலையாளி போல் தெரியவில்லை. 340 00:25:19,853 --> 00:25:22,272 அப்படியென்றால் தன் மீது பழி வராமல் இருக்க ஒருவரை வேலைக்கு அமர்த்தியிருப்பான். 341 00:25:22,356 --> 00:25:24,608 அப்படியும் இருக்கலாம். இதைப் பார். 342 00:25:24,691 --> 00:25:25,692 மார்கஸ் கில்பிரூ 343 00:25:25,776 --> 00:25:27,236 இந்த கேடுகெட்டவன் என்னைப் பற்றி என்ன கண்டுபிடித்தான்? 344 00:25:29,947 --> 00:25:32,908 ஆனால் வயதான பிறகு கர்ப்பமாவது பொதுவான விஷயம் தான் என்று சொல்கிறார்கள். 345 00:25:35,911 --> 00:25:38,747 ஹேய், என்னைக் குறை சொல்லாதே. நான் இந்த வார்த்தையை சொல்லவில்லை. 346 00:25:38,830 --> 00:25:41,041 பார், எல்லாம் சரியாகி விடும். கவலைப்படாதே. 347 00:25:44,503 --> 00:25:46,171 உனக்கு இன்னொரு குழந்தை பிறக்கப் போகிறதா? 348 00:25:47,297 --> 00:25:48,924 வந்து, அது தனிப்பட்ட விஷயமாக இருக்க வேண்டும். 349 00:25:49,633 --> 00:25:51,468 நாங்கள் இதுவரை யாரிடமும் சொல்லவில்லை. 350 00:25:51,552 --> 00:25:54,680 மற்றவர்களின் கர்ப்பம் பற்றி எல்லோரும் அதிக ஈடுபாடு கொள்வார்கள். 351 00:25:54,763 --> 00:25:58,892 பார், நான் இதை தனியாகவே பார்த்துவிட்டு, 352 00:25:58,976 --> 00:26:01,770 ஏதாவது விஷயத்தை கண்டுபிடித்தால், உன்னை அழைக்கவா? 353 00:26:04,147 --> 00:26:05,148 சரி. 354 00:26:18,662 --> 00:26:19,663 டக், டக்! 355 00:26:19,746 --> 00:26:21,623 ஏன் அழைப்பு மணியை ஓயாமல் அடிக்கிறாய்? 356 00:26:21,707 --> 00:26:23,000 ஏனென்றால் எனக்குப் பிடித்திருக்கிறது. 357 00:26:23,667 --> 00:26:26,044 நான் பட்டினியில் வாடுகிறேன். நீ சமைத்திருப்பாய் என நம்புகிறேன். 358 00:26:27,754 --> 00:26:29,715 ஆம், எனக்குப் பிடித்த உணவகத்திலிருந்து உணவை வரவழைத்திருக்கிறேன். 359 00:26:29,798 --> 00:26:30,924 அது... 360 00:26:31,008 --> 00:26:35,262 ஆனால் என் பீங்கான் பாத்திரம் உனக்கு நல்ல உணர்வை தருமெனில் அவற்றை நீ உபயோகிக்கலாம். 361 00:26:35,345 --> 00:26:37,973 -நீ பணத்தை வீணடிக்கிறாய். -நான் அதை ஒப்புக்கொள்கிறேன். 362 00:26:39,057 --> 00:26:41,351 வாருங்கள். சாப்பிடுவதற்கு முன்பு உங்களுக்கு ஒன்றை காண்பிக்கிறேன். 363 00:26:42,686 --> 00:26:45,397 -நீங்கள் இருவரும் இன்று அழகாக இருக்கிறீர்கள். -நன்றி, பாபி. 364 00:26:45,480 --> 00:26:46,690 நன்றி, சகோதரி. 365 00:26:46,773 --> 00:26:49,151 நான் குழந்தையாக இருந்தபோது என் அப்பா, 366 00:26:49,234 --> 00:26:52,237 கலிஃபோர்னியாவின் அலமீடாவில் உள்ள கடற்கரைக்கு எங்களை முதல்முறையாக அழைத்துச் சென்றார். 367 00:26:52,946 --> 00:26:55,949 ஒரு கார் எங்களை மோத வந்தபோது நாங்கள் எங்கள் வாகனத்தை குழாயிற்குள் செலுத்தினோம். 368 00:26:56,033 --> 00:26:58,702 என் அப்பா ஒரு சுவரின் மீது கிட்டத்தட்ட மோதிவிட்டார். 369 00:27:00,120 --> 00:27:01,830 அந்த காரை ஓட்டியது ஒரு வெள்ளை இனத்தவர். 370 00:27:02,664 --> 00:27:05,417 மேலும் அந்நிகழ்வு என் அம்மாவிற்கு பெரும் அச்சத்தை தந்தது. 371 00:27:06,084 --> 00:27:08,378 என் அப்பா அவரின் காரை அடைந்த போது, அவன், 372 00:27:08,462 --> 00:27:11,798 "டேய், நீ என்ன செய்கிறாய் என்று பார். உன் தராதரத்தை தெரிந்துகொள்" என கத்தினான். 373 00:27:13,342 --> 00:27:18,805 எனவே என் அப்பா அவனிடம் காரை ஒரு காலியான இடத்தில் நிறுத்தும் படி சொன்னார். 374 00:27:19,932 --> 00:27:25,103 என் அப்பா அந்த காரை நோக்கி சென்றார். கையில் தொப்பியோடு, தலை குனிந்து, பணிந்து சென்றார். 375 00:27:25,187 --> 00:27:27,189 ஆனால் காரை அடைந்ததும், 376 00:27:28,023 --> 00:27:31,568 ஓட்டுநர் இருந்த ஜன்னல் அருகே அவரின் கைகள் சென்றதை என்னால் பார்க்க முடிந்தது. 377 00:27:31,652 --> 00:27:34,947 என் அப்பாவின் கைகள், நன்கு வேலை செய்து பழகிய உறுதியான கைகள். 378 00:27:35,030 --> 00:27:36,323 கடினமாக உழைத்து பழகிய கரங்கள். 379 00:27:36,406 --> 00:27:40,077 ஆக அந்த வெள்ளைக்காரனை ஜன்னலின் வழியே வெளியே பிடித்து இழுத்தார். 380 00:27:40,160 --> 00:27:41,703 அவனது காலணிகள் கழன்று விழுந்தன. 381 00:27:41,787 --> 00:27:44,081 வெறும் காலுறையுடன் அவனை எங்கள் கார் அருகே இழுத்து வந்தார், 382 00:27:44,164 --> 00:27:46,875 பின் இருக்கையில் இருந்த என்னையும் நோபலையும் அவனை பார்க்க வைத்தார். 383 00:27:46,959 --> 00:27:51,004 அவனின் டையை கையில் பிடித்து, தலையைத் திருப்பி, எங்களை சுட்டிக்காட்டி... 384 00:27:51,088 --> 00:27:53,298 என் உயிர் உள்ள வரை என்னால் அதை மறக்கமுடியாது. 385 00:27:53,882 --> 00:27:56,218 "அவர்கள் என் மகன்கள். 386 00:27:57,469 --> 00:27:59,263 அவனுக்கு ஒன்பது வயது, இவனுக்கு ஏழு வயது. 387 00:27:59,346 --> 00:28:05,477 அவர்கள் சிறுபிள்ளைகள். ஆனால் நான் மோசமான ஒரு மனிதன்!" என்றார். 388 00:28:12,442 --> 00:28:14,862 அது தான் எனக்குத் தெரிந்த நியாயமான கோபம். 389 00:28:16,613 --> 00:28:18,073 நான் அப்படித்தான் வளர்ந்தேன். 390 00:28:20,325 --> 00:28:22,244 என் மகள்களுக்கு என் உதவி தேவைப்படும் நேரங்களிலும் கூட 391 00:28:22,327 --> 00:28:23,871 என்னை அவர்களிடமிருந்து விலக்கி வைத்தது இதுதான். 392 00:28:23,954 --> 00:28:27,457 உங்கள் மனைவி இறந்ததற்குப் பிறகு நீங்கள் சிறையில் இருந்த காலத்தைப் பற்றி சொல்கிறீர்களா? 393 00:28:28,417 --> 00:28:31,003 பிரச்சினையை எதிர்கொள்ள சிறையை போன்றதொரு இடம் வேறில்லை. 394 00:28:31,795 --> 00:28:36,425 எலினார் இறந்தபோது, நான் ஆழ்ந்த துக்கத்தில் இருந்தேன், 395 00:28:36,925 --> 00:28:42,347 என் மகள்களை அவர்களது அம்மாவின் பிரிவை தனியே சமாளிக்க விட்டுவிட்டேன். 396 00:28:43,682 --> 00:28:45,684 அதற்காக என்னை நானே மன்னிக்க மாட்டேன். 397 00:28:46,476 --> 00:28:47,978 நான் சிறையில் இருந்து வெளியே வந்த போது, 398 00:28:48,061 --> 00:28:53,358 முரடனாக இருப்பதை விட மனிதனாக இருப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பதை உணர்ந்தேன். 399 00:28:54,276 --> 00:28:55,986 ஆனால் என் மகள்களுக்கு... 400 00:28:57,696 --> 00:29:00,365 ஏற்கனவே காலம் கடந்துவிட்டது என்று சில நேரங்களில் நான் நினைப்பதுண்டு. 401 00:29:06,163 --> 00:29:10,042 எனக்கு திகைப்பாக உள்ளது. மீண்டும் இதை பார்க்க விரும்புகிறேன். 402 00:29:10,542 --> 00:29:11,919 நானும் அதைத்தான் செய்தேன். 403 00:29:12,002 --> 00:29:15,631 இதை அவர் எப்போது பதிவு செய்தார்? மேலும் எப்படி இதை செய்தார்? 404 00:29:15,714 --> 00:29:17,758 அது, அவர் ஜோஷுடன் சேர்ந்து இதைச் செய்தார். 405 00:29:17,841 --> 00:29:22,596 தன் குடும்ப பாரம்பரியத்தை, பின்வரும் சந்ததியினர் பின்பற்ற விட்டுச் செல்ல வேண்டும் என நினைத்தார். 406 00:29:23,222 --> 00:29:25,682 சரிதான், அவர் பலவற்றை சமாளிக்கிறார். 407 00:29:26,808 --> 00:29:30,854 அவரது சகோதரனின் இறப்பு அவரை காயப்படுத்தியது, இப்போது அவர் உடல் நலமின்றி, பயத்துடன் வாழ்கிறார். 408 00:29:32,731 --> 00:29:34,900 நோபலின் மகன் ஒருவன் அவர்களுடன் தங்கப் போவதை லிலியன் உங்களிடம் கூறினாரா? 409 00:29:34,983 --> 00:29:37,069 என்ன? யார்? கார்னெலியஸா? 410 00:29:37,152 --> 00:29:39,446 இல்லை. முறையற்ற வாரிசு. 411 00:29:39,530 --> 00:29:41,615 மாஸா? நீ பொய் சொல்கிறாய். 412 00:29:42,241 --> 00:29:44,868 இல்லை, அவன் மதுபான விடுத்திக்கு எதிர்பாராமல் வந்து, 413 00:29:44,952 --> 00:29:48,205 நீண்ட நாட்களாக தொலைந்துப் போன உறவினரைப் போன்று எல்லா விதமான கேள்விகளையும் கேட்டான். 414 00:29:50,832 --> 00:29:53,794 -அவனைப்பற்றி லிலியன் என்ன சொல்கிறார்? -அவன் அவரைத் தொல்லை செய்கிறான். 415 00:29:53,877 --> 00:29:55,504 அவனுக்கு ஆயிரக்கணக்கான கருத்துகள் உள்ளன என்றும் 416 00:29:55,587 --> 00:29:58,131 அப்பாவை பேரக் குழந்தைகளை பற்றி பேச தூண்டுவான் என்றும் சொல்கிறார். 417 00:29:58,215 --> 00:30:00,092 -நிறுத்து. -அது அவனுக்கு தேவையில்லாத விஷயம். 418 00:30:00,175 --> 00:30:01,176 நன்றி. 419 00:30:01,260 --> 00:30:04,763 சிறு வயதில் நான் அவனை கொடூரமாக அடித்திருக்கிறேன். 420 00:30:04,847 --> 00:30:06,390 எனக்கு ஞாபகம் இருக்கிறது. 421 00:30:06,473 --> 00:30:09,393 அவன் இப்படி பொறுப்பின்றி பேசுவதை நிறுத்தாவிட்டால் நான் அதை மீண்டும் செய்ய வேண்டும் போல. 422 00:30:13,522 --> 00:30:18,318 ஆக, அப்பா என்றாவது உங்களிடம் பேரக் குழந்தைகளைப் பற்றி கேட்டிருக்கிறாரா? 423 00:30:19,611 --> 00:30:21,780 எனக்கு வாழ்க்கைத் துணை இல்லாத வரையில், குழந்தையும் இருக்காது என 424 00:30:21,864 --> 00:30:23,115 அவரிடம் கூறினேன். 425 00:30:24,241 --> 00:30:27,244 நான் மிகவும் நாகரீகமானவள் என அவருக்கே தெரியும், எனவே என்னிடம் அதைப் பற்றி கேட்கக்கூட மாட்டார். 426 00:30:27,870 --> 00:30:29,288 நீ நவநாகரீகமானவள் என அனைவருக்கும் தெரியும். 427 00:30:31,874 --> 00:30:34,209 -இவற்றை அழகாக சுருள் செய்ய வேண்டும். -அவள் என்றுமே நவநாகரீகமானவள் தான். 428 00:30:34,293 --> 00:30:35,836 எல்லோரை விட இவளுக்குத் தான் அலை போன்ற கூந்தல் உள்ளது. 429 00:30:35,919 --> 00:30:36,920 ஓ, ஆமாம். 430 00:31:39,483 --> 00:31:40,692 ஹேய், மன்னியுங்கள். 431 00:31:40,776 --> 00:31:44,363 ஹேய், நாம் வாக்குமூலத்திற்கு தயார் செய்ய வேண்டும். நான் பிறகு வரவா? 432 00:31:44,446 --> 00:31:45,739 நிச்சயமாக. 433 00:31:46,698 --> 00:31:47,824 நீ நன்றாக இருக்கிறாயா? 434 00:31:49,701 --> 00:31:55,707 ஆமாம், சைடி நேற்று சொன்ன சில விஷயம், நாம் குழந்தைப் பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று 435 00:31:55,791 --> 00:31:59,169 முடிவு செய்ததைப் பற்றி என்னை யோசிக்க வைத்தது. 436 00:32:00,838 --> 00:32:01,839 அப்படியா? 437 00:32:02,840 --> 00:32:04,258 இல்லை, இல்லை. நான்... 438 00:32:04,883 --> 00:32:06,093 வந்து, நான்... 439 00:32:07,928 --> 00:32:08,929 வந்து... 440 00:32:10,055 --> 00:32:11,598 அதைப்பற்றி யோசிக்கிறேன். 441 00:32:11,682 --> 00:32:13,433 நாம் குழந்தைகள் வேண்டாம் என முடிவு செய்துவிட்டோம். 442 00:32:13,517 --> 00:32:15,894 தெரியும். நாம் அப்படி முடிவு செய்யவில்லை என நான் சொல்லவில்லை. 443 00:32:16,854 --> 00:32:19,106 -பிறகு சந்திக்கலாமா? -சரி. 444 00:32:20,774 --> 00:32:22,776 அந்த வால்வை இன்னும் சரி செய்யவில்லையா? 445 00:32:23,735 --> 00:32:25,779 -நீ விரும்பினால் அதை சரி செய்கிறேன். -சரிசெய்ய ஒருவரை தேடுகிறேன். 446 00:32:25,863 --> 00:32:27,364 அவனுக்கு வேண்டுமென்றால் அவனே சரி செய்யட்டும். 447 00:32:28,365 --> 00:32:29,449 உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி, மாஸ். 448 00:32:31,285 --> 00:32:33,453 -அனைத்தையும் பழகிவிட்டாயா? -முயற்சிக்கிறேன். 449 00:32:34,496 --> 00:32:37,416 -எப்படி இருக்கிறாய், ஹாலிவுட்? -என்னை அப்படி கூப்பிடாதே. 450 00:32:37,499 --> 00:32:39,084 இப்பவும் சிறு சிறு விஷயத்திற்கு கோபப்படுகிறாய். 451 00:32:39,168 --> 00:32:40,544 ரொம்ப நாட்களுக்கு இந்த ஊரில் இருப்பாயா? 452 00:32:41,044 --> 00:32:42,588 வந்து, எனக்குத் தெரியாது. 453 00:32:42,671 --> 00:32:44,256 அப்படித்தான் இருக்க விரும்புகிறேன். 454 00:32:44,756 --> 00:32:45,757 உன்னைப் பார்க்க ஒருவர் வந்துள்ளார். 455 00:32:50,554 --> 00:32:51,889 ஐயோ. 456 00:32:56,268 --> 00:32:59,396 இங்கு ஒலிக்கும் இசை எனக்குப் பிடித்திருக்கிறது. வெண்டைக்காய் சூப்பும் பிடித்திருக்கிறது. 457 00:33:04,026 --> 00:33:05,944 லுகாதெர் ஷ்ரீவ்போர்ட் ஸ்கோவில். 458 00:33:06,028 --> 00:33:08,447 அரசு ஆவணங்களில் இருக்கும் என் முழு பெயர். நீங்கள் காவல் அதிகாரியாக இருக்க வேண்டும். 459 00:33:10,032 --> 00:33:13,535 வயதானால் திறன் குறையும் என அனைவரும் கூறுவர், ஆனால் அதை நான் நம்பமாட்டேன். 460 00:33:13,619 --> 00:33:15,954 என்னை ஒரு நிமிடம் அவருடன் தனியாக விடுங்கள். 461 00:33:16,872 --> 00:33:18,290 எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, அப்பா. 462 00:33:25,172 --> 00:33:27,257 நீங்கள் கொலைகளை விசாரிக்கிறீர்களா அல்லது காப்ஸ்டோன்ஸ்களையா? 463 00:33:27,341 --> 00:33:29,801 சரி, உளவுத்துறையில் நான் வேலை செய்யவில்லை என்பதற்காக 464 00:33:29,885 --> 00:33:31,887 நான் எந்த தகவலையும் அறிய விரும்பவில்லை என்று அர்த்தமில்லை. 465 00:33:33,764 --> 00:33:37,851 உங்கள் பாட்காஸ்ட், சில குழப்பங்களை ஏற்படுத்துகிறது. 466 00:33:37,935 --> 00:33:39,561 இதை சொல்லத்தான் வந்தீர்களா? 467 00:33:41,021 --> 00:33:42,898 நீங்கள் விசாரிப்பதை என்னால் தடுக்க முடியாது. 468 00:33:42,981 --> 00:33:45,400 -இது ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் தான். -ஆனால் நான் பகைவன் அல்ல. 469 00:33:48,946 --> 00:33:51,740 உங்களுக்கு என் உதவி தேவை, ஆனால் அதை என்னிடம் நேராக கேட்க நீங்கள் விரும்பவில்லை. 470 00:33:52,324 --> 00:33:53,534 அது சரிதானே? 471 00:33:59,706 --> 00:34:01,667 சரிதான். இந்த கொலை விசாரணையில் உங்கள் கோட்பாடு என்ன? 472 00:34:02,334 --> 00:34:04,169 -எந்த கொலையில்? -இரண்டிலும். 473 00:34:05,295 --> 00:34:07,214 இரண்டுமே ஒரே கொலையாளி தான் என என் உள்ளுணர்வு சொல்கிறது. 474 00:34:07,881 --> 00:34:10,467 ரமோன் வீட்டிலிருந்து பேஸ்பால் தொப்பி போட்ட ஒருவன் வெளியேறுவதை மார்கஸ் பார்த்தான். 475 00:34:11,051 --> 00:34:13,929 -ஆக, இது ஒரு தொடர் கொலையாளியாக இருக்கலாமா? -என்னால் சொல்ல முடியாது. 476 00:34:14,513 --> 00:34:15,556 சரி. 477 00:34:17,224 --> 00:34:19,893 ரமோனின் வீட்டில் கிடைத்த டிஎன்ஏ மாதிரிகளையும், ஜோஷுவாவின் ஸ்டுடியோவில் 478 00:34:19,976 --> 00:34:22,312 கிடைத்த டிஎன்ஏ மாதிரிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தீர்களா? 479 00:34:22,396 --> 00:34:24,147 -என்னால் சொல்ல முடியாது. -சரி, இது வேலைக்கு ஆகாது. 480 00:34:24,231 --> 00:34:27,234 ஹேய், என் வேலையைச் செய்யும் போது கவனம் சிதறுவதை நான் விரும்பவில்லை, சரியா. 481 00:34:27,317 --> 00:34:28,318 நீங்கள் பாட்காஸ்ட் பதிவாளர்... 482 00:34:28,402 --> 00:34:29,695 பத்திரிகையாளர். 483 00:34:31,112 --> 00:34:34,449 இரண்டில் எதுமே கொலையைப் பற்றி விசாரிக்க தகுதியான துப்பறியும் வேலை கிடையாது. 484 00:34:34,533 --> 00:34:36,034 நீங்கள் கொலையாளியைக் கண்டுப்பிடித்தால் என்ன செய்வீர்கள்? 485 00:34:36,118 --> 00:34:37,494 -சரியானதைச் செய்வேன். -சரி. 486 00:34:37,578 --> 00:34:39,246 நீங்கள் கேவ் வழக்கில் செய்ததை போன்றா? 487 00:34:40,706 --> 00:34:44,626 வழக்குகள் விலைமதிப்புள்ளவை, அவை மக்களுக்கு பொதுவானதும் கூட. 488 00:34:45,710 --> 00:34:48,463 இரவு வணக்கம், இன்ஸ்பெக்டர். ஒரு கணிசமான டிப்ஸை கொடுங்கள். 489 00:34:50,299 --> 00:34:51,425 குடிப்பதற்கு எதாவது தயார் செய், ஹெர்பி. 490 00:34:54,803 --> 00:34:56,263 நாம் ஏன் இங்கே சந்திக்கிறோம்? 491 00:34:58,182 --> 00:35:02,144 ஷெல்டர் முழுவதும் லாக்லான் கண்காணிப்பு கேமராக்களை வைத்துள்ளான். 492 00:35:03,478 --> 00:35:05,981 இணை கட்டிடம், வரவேற்பு அறை. 493 00:35:07,608 --> 00:35:09,026 மற்றும் அலுவலகம் முழுவதும். 494 00:35:16,867 --> 00:35:17,951 நீங்கள்... 495 00:35:20,204 --> 00:35:21,914 என்னுடைய அலுவலகத்தில் என்னைப் பார்த்தீர்களா? 496 00:35:24,625 --> 00:35:25,626 ஆமாம். 497 00:35:32,299 --> 00:35:34,927 அது சட்டவிரோதமானது, இல்லையா? அவன் அப்படி செய்யக் கூடாது. 498 00:35:35,010 --> 00:35:38,680 வந்து, அது சிக்கலானது. 499 00:35:40,015 --> 00:35:41,892 "அது சிக்கலானது" என்றால் என்ன அர்த்தம்? 500 00:35:41,975 --> 00:35:44,770 பார், குளியலறையிலோ அல்லது லாக்கர் அறைகளிலோ கேமராவில் பதிவு செய்யவில்லை என்றால், 501 00:35:44,853 --> 00:35:46,688 ஒருவகையில் அது சட்டபூர்வமானது தான். 502 00:35:46,772 --> 00:35:52,361 இப்போது அவன் அதை வெளியிட்டாலோ அல்லது உன்னையோ அல்லது வேறு யாரையோ 503 00:35:52,903 --> 00:35:54,947 மிரட்டி பணம் பறிக்கவோ செய்தால், அது சட்டவிரோதமாகிவிடும். 504 00:35:58,325 --> 00:36:02,955 பார், நான் உன்னை இங்கே வரச் சொன்ன காரணம், எனக்கு கூட்டாளிகள் வேண்டும், சரியா? 505 00:36:03,539 --> 00:36:05,999 மைக்கா எனது யோசனைகளை நிராகரிக்கிறாள், 506 00:36:06,083 --> 00:36:09,878 நாம் தொடர்பு முறைகளைத் தொடங்க வேண்டும், அல்லது நிறைய பேர் பாதிக்கப்படக்கூடும். 507 00:36:13,173 --> 00:36:14,174 நான் உன்னை நம்பலாமா? 508 00:36:19,847 --> 00:36:26,645 நான் அதிக... ஆரோக்கியமற்ற பழக்கங்களை வளர்த்து கொண்டிருந்தேன். 509 00:36:27,604 --> 00:36:31,525 என் சோகக் கதையைச் சொல்லி உங்களை சலிப்படைய செய்ய மாட்டேன். வாழ்க்கை கடினமாக இருந்தது அவ்வளவுதான். 510 00:36:31,608 --> 00:36:33,527 உண்மை தான். 511 00:36:33,610 --> 00:36:36,697 லாக்லானை நான் தான் கைக்காவிற்கு அறிமுகப்படுத்தினேன். 512 00:36:37,781 --> 00:36:40,033 பிறகு அவன் முதலீடு செய்த போது, நாங்கள் அவனுக்கு ஒரு அலுவலகம் தந்தோம். 513 00:36:42,536 --> 00:36:44,746 அவன் என்னிடம் எப்போதும் வழிந்துகொண்டே இருப்பான். 514 00:36:46,415 --> 00:36:50,961 ஆனால்... ஜோஷ் இறந்த போது, நான்... பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டேன். 515 00:36:55,424 --> 00:36:57,926 -நான் ஒரு தவறு செய்துவிட்டேன்... -சரி. 516 00:36:58,010 --> 00:36:59,761 ...ஆனால் என் கணவரை ரொம்ப நேசிக்கிறேன். 517 00:37:03,015 --> 00:37:07,394 என்னைப்பற்றி எனக்கே அசிங்கமாக இருக்கு. இப்படிப்பட்ட ஆளாக இருப்பேன் என நான் நினைத்ததே இல்லை. 518 00:37:09,980 --> 00:37:12,274 நான் அவளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன், 519 00:37:12,357 --> 00:37:13,775 ஆனால் நான் அவளிடம் பொய் சொல்லிவிட்டேன். 520 00:37:14,902 --> 00:37:16,153 நீதான் அவளிடம் சொல்ல வேண்டும். 521 00:37:18,405 --> 00:37:19,406 எனக்குத் தெரியும். 522 00:37:20,657 --> 00:37:22,951 எனக்குத் தெரியும். நான் இரண்டாம் நிலை ஊழியர்களுக்குப் பொறுப்பு. 523 00:37:23,035 --> 00:37:26,038 தவறுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதுதான் திட்டத்தின் அடிப்படை. 524 00:37:27,331 --> 00:37:29,041 என்னுடைய அறிவுரையை நான் பின்பற்ற வேண்டும். 525 00:38:16,255 --> 00:38:18,048 கேடுகெட்டவனே. 526 00:38:22,678 --> 00:38:23,804 பூம். எனக்கு 20 டாலர் கொடு. 527 00:38:23,887 --> 00:38:25,764 -நான்தான் உங்களை வெற்றி பெற செய்கிறேன், சரியா? -பொய். 528 00:38:28,809 --> 00:38:30,018 என்ன நடக்கிறது, ஸ்கோவில்ஸ்? 529 00:38:30,102 --> 00:38:31,728 ஹேய், என்ன நடக்கிறது, மார்கஸ்? 530 00:38:31,812 --> 00:38:33,230 -என்ன விஷயம், மார்கஸ்? -பாபி? 531 00:38:33,313 --> 00:38:34,648 இதோ வந்துவிடுகிறேன். 532 00:38:37,234 --> 00:38:39,736 இங்கே உட்கார். நீ சொன்னது சரி என்று தோன்றுகிறது. 533 00:38:39,820 --> 00:38:46,410 ரமோனைக் கொல்ல லாக்லான் ஏற்பாடு செய்த ஆள் இவன் தான் என்று நினைக்கிறேன். 534 00:38:47,202 --> 00:38:48,537 -உண்மையாகவா சொல்கிறாய்? -ஆமாம். 535 00:38:48,620 --> 00:38:51,623 நான் பார்த்தபோது ரமோனின் வீட்டிலிருந்து வெளியே ஓடிய ஆள் இவன்தான். 536 00:38:51,707 --> 00:38:54,251 அவனது பெயர் ஹோல்ட் ராலின்ஸ். அவன் ஷெல்டரில் வேலை செய்கிறான். 537 00:38:54,334 --> 00:38:56,670 அதனால் தான் அவன் ரமோனின் குடியிருப்பு கட்டடத்திற்குள் போக முடிந்தது. 538 00:38:57,796 --> 00:38:59,798 -நான் அவனை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். -என்ன? 539 00:38:59,882 --> 00:39:02,217 சைடி? இங்கே வா, சைடி. 540 00:39:02,301 --> 00:39:04,469 பொறு, அவனை ஏற்கனவே பார்த்திருக்கிறாய் என்றால் என்ன அர்த்தம்? 541 00:39:04,553 --> 00:39:05,554 ஒரு நிமிடம் இரு. 542 00:39:06,889 --> 00:39:08,473 -சைடி. இங்கே வா. சீக்கிரம். -சரி. 543 00:39:09,308 --> 00:39:10,726 இவன் உனக்கு பரிச்சயமானவனா? 544 00:39:12,477 --> 00:39:13,854 நீ அவனைக் கண்டுபிடித்துவிட்டாயா? 545 00:39:14,771 --> 00:39:16,940 யாரைக் கண்டுபிடித்தாள்? என்ன நடக்கிறது? 546 00:39:17,774 --> 00:39:20,402 அன்றொரு நான் பேருந்தில் என்னைப் பயமுறுத்தியவன் அவன்தான். 547 00:39:20,485 --> 00:39:22,404 -நான் புகாரளிக்க வேண்டும். -பொறு. 548 00:39:22,487 --> 00:39:24,239 இவனை இதற்கு முன்பே நீ பார்த்திருக்கிறாய் என்கிறாயா? 549 00:39:24,323 --> 00:39:25,449 அவள் எதைப் பற்றி பேசுகிறாள்? 550 00:39:25,532 --> 00:39:27,868 ஆம், அவன்தான் என்னை பயமுறுத்தினான். எந்த வழியில் பயணிக்கிறேன் என எல்லாமும் தெரிந்தவன். 551 00:39:27,951 --> 00:39:29,369 இது தற்செயலானது கிடையாது. 552 00:39:29,453 --> 00:39:31,330 உங்கள் சகோதரி ஏற்கனவே ஒரு முறை காயமடைந்துள்ளாள். 553 00:39:31,413 --> 00:39:32,915 இல்லை, இது அது போன்ற விஷயம் இல்லை, அப்பா. 554 00:39:32,998 --> 00:39:35,083 கேள், இவனைக் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்க்கிறேன். 555 00:39:35,167 --> 00:39:38,003 -ஏம்ஸ்-ஐ அழை. அதோடு கவனமாக இரு. -சரி. 556 00:39:38,086 --> 00:39:39,171 நான் மைக்காவை அழைக்கிறேன். 557 00:39:39,254 --> 00:39:40,255 என்ன நடக்கிறது, செல்லமே? 558 00:39:40,339 --> 00:39:42,966 கேள். இதைப் பாருங்கள். இதோ இவன் தான். 559 00:39:43,050 --> 00:39:44,676 -இந்த ஆள்... -ஆம். 560 00:39:44,760 --> 00:39:48,055 நீங்கள் மைக்கா கீத்தை அழைத்துள்ளீர்கள். உங்கள் பார்வைக்காக உலகம் காத்திருக்கிறது. 561 00:39:48,138 --> 00:39:49,932 ஹேய், நான்தான் பேசுகிறேன். 562 00:39:50,015 --> 00:39:52,434 ரமோனைக் கொன்றது யார் என்பதை மார்கஸ் கண்டுபிடித்துவிட்டான். 563 00:39:52,518 --> 00:39:54,728 அவனது பெயர் ஹோல்ட் ராலின்ஸ். 564 00:39:54,811 --> 00:39:56,813 அவன் ஷெல்டரில் வேலை செய்கிறான். 565 00:39:56,897 --> 00:39:58,815 நீ அங்கு தனியாக இருக்கக்கூடாது. 566 00:39:58,899 --> 00:40:01,276 சரி, உனக்கு இந்த தகவல் கிடைத்ததும் என்னைக் கூப்பிடு. 567 00:40:05,405 --> 00:40:06,406 நான் உன்னைப் பிறகு அழைக்கிறேன். 568 00:40:10,577 --> 00:40:12,412 ஷெல்டர் 569 00:40:12,496 --> 00:40:13,497 குனிந்து வா. 570 00:40:16,792 --> 00:40:18,001 கவனமாக நட. 571 00:40:18,377 --> 00:40:19,419 சரி. 572 00:40:19,503 --> 00:40:20,754 இதோ. 573 00:40:40,357 --> 00:40:41,441 உனக்கு என்ன கிடைத்தது? 574 00:40:44,653 --> 00:40:46,780 -கருமம். -ஆம். 575 00:41:02,087 --> 00:41:03,964 மைக்கா, நீ எனக்கு பதிலளிக்க வேண்டும். 576 00:41:12,139 --> 00:41:14,057 மார்கஸ் 577 00:41:14,141 --> 00:41:15,392 இன்றிரவு நாம் வேலை செய்கிறோமா? 578 00:41:15,475 --> 00:41:16,727 ஹேய். 579 00:41:16,810 --> 00:41:19,646 ஹோல்டின் பட்டறையில் ஏம்ஸ் சிலவற்றை கண்டுபிடித்துள்ளான், ஆனால் அவன் இங்கே இல்லை. 580 00:41:19,730 --> 00:41:23,233 -நீ கைக்காவிடம் பேசினாயா? -கைபேசி அழைப்பை அவள் ஏற்கவில்லை. 581 00:41:23,317 --> 00:41:26,195 சரி. டிரினி வந்ததும், நான் அங்கு போகிறேன். 582 00:41:26,278 --> 00:41:27,654 -சரி, உன்னை அங்குச் சந்திக்கிறேன். -சரி. 583 00:41:29,281 --> 00:41:33,410 பாபி. காவலரை அழை. நீ அங்கு போகாதே. 584 00:41:33,493 --> 00:41:34,620 நான் போக வேண்டும், இன்கிராம். 585 00:41:37,039 --> 00:41:41,543 அந்தக் கதவு வழியாக நீ வெளியே சென்றால், நீ திரும்பி வரும்போது நான் இங்கே இருக்க மாட்டேன். 586 00:41:50,844 --> 00:41:52,721 உறவு முடிந்துவிட்டது, பாபி. 587 00:41:54,181 --> 00:41:56,808 நாம் இருவரும் அதைச் சொல்லும் அளவுக்கு தைரியமாக இருக்கவில்லை. 588 00:42:02,689 --> 00:42:03,732 அப்படி செல்லாதீர்கள். 589 00:42:06,026 --> 00:42:08,737 பொறுங்கள், என் தோழிக்கு நான் உதவுவதால் என்னை விட்டுவிட்டு போகிறீர்களா? 590 00:42:08,820 --> 00:42:10,197 அது காரணம் இல்லை என்று உனக்கே தெரியும். 591 00:42:12,533 --> 00:42:16,036 எனக்கு எப்படி என்று தெரியவில்லை. உண்மையில் ஏன் என்று கூட தெரியவில்லை. 592 00:42:18,580 --> 00:42:20,040 ஆனால் நாம் எதையோ இழந்துவிட்டோம். 593 00:42:24,044 --> 00:42:26,630 நான் உங்களுடன் மீண்டும் நியூயார்க்கிற்கு வருகிறேன். 594 00:42:26,713 --> 00:42:29,007 -விடு, செல்லமே. -நான் உங்களை நேசிக்கிறேன், இன்கிராம். 595 00:42:29,091 --> 00:42:30,843 நானும் உன்னை நேசிக்கிறேன். 596 00:42:32,261 --> 00:42:34,012 மனப்பூர்வமாக உன்னை நேசிக்கிறேன். 597 00:42:40,561 --> 00:42:42,104 ஆனால் நீ மகிழ்ச்சியாக இருந்தாயா? 598 00:42:44,273 --> 00:42:45,440 உண்மையைச் சொல். 599 00:42:47,985 --> 00:42:48,986 இல்லை. 600 00:42:52,656 --> 00:42:53,657 ஏன்? 601 00:42:55,534 --> 00:43:00,247 ஏனென்றால், உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்று எனக்குத் தெரியும். 602 00:43:01,874 --> 00:43:03,625 நான் இப்படித்தான். 603 00:43:05,085 --> 00:43:09,923 இதுதான் எனக்குப் பிடித்துள்ளது. இதுதான் நான். 604 00:43:13,510 --> 00:43:14,511 எனக்குத் தெரியும். 605 00:43:15,846 --> 00:43:17,055 அது எனக்குத் தெரியும். 606 00:43:17,973 --> 00:43:19,892 எனக்குத் தெரியும். என்னால் அதை உணர முடிகிறது. 607 00:43:21,518 --> 00:43:26,023 உங்களுக்கு ஏற்றாற் போல் நடந்துகொள்ள விரும்புகிறேன், ஆனால் அனைத்தும் எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. 608 00:43:27,441 --> 00:43:29,151 அதோடு பிரச்சினைகள் பெரிதாகிக்கொண்டே போனது. 609 00:43:33,113 --> 00:43:35,240 என்னால் மீண்டும் நீங்கள் விரும்பும் அந்த பெண்ணாக இருக்க முடியாது. 610 00:43:36,867 --> 00:43:38,035 உங்களுக்காகக்கூட முடியாது. 611 00:43:40,871 --> 00:43:41,872 எனக்குத் தெரியும். 612 00:43:46,376 --> 00:43:47,377 எனக்குத் தெரியும். 613 00:43:53,675 --> 00:43:57,262 நான் நியூயார்க்கிற்குப் போகிறேன். 614 00:43:57,346 --> 00:43:58,972 -எப்போது? -சீக்கிரமே. 615 00:44:09,274 --> 00:44:10,651 பாபி... 616 00:44:12,277 --> 00:44:13,320 பாபி. 617 00:45:15,591 --> 00:45:17,009 இது அவசர அழைப்பு என்றால், 618 00:45:17,092 --> 00:45:19,261 -தயவுசெய்து இணைப்பில் காத்திருக்கவும். -சீக்கிரம், எடு. 619 00:45:19,887 --> 00:45:21,430 911, என்ன அவசரம்? 620 00:45:21,513 --> 00:45:23,473 ஆம். ஒரு தாக்குதலைப் பற்றி புகாரளிக்க வேண்டும். 621 00:46:18,111 --> 00:46:20,113 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்