1 00:00:17,142 --> 00:00:20,771 குடும்பம்.இந்த வார்த்தையே ஒரு கணிப்பு தான். 2 00:00:20,854 --> 00:00:25,359 உங்களது குடும்பம் தான் உங்களது நிலையையும்பாதையையும் தீர்மானிக்கும், 3 00:00:25,901 --> 00:00:28,987 ஆனால் குடும்ப உறவில் சிலகடமைகளும் சேர்ந்து வரும். 4 00:00:29,071 --> 00:00:32,866 உங்களது வெற்றி,உங்கள் குடும்பத்தின் வெற்றியாகும், 5 00:00:33,367 --> 00:00:34,952 தோல்வியும் அப்படித்தான். 6 00:00:35,369 --> 00:00:38,664 ஆனால் நம் இரத்த சொந்தங்களுக்குநாம் என்ன கடமைப்பட்டிருக்கிறோம்? 7 00:00:39,498 --> 00:00:42,042 நாம் சந்திக்கும் அந்நியர்களை விடஇவர்களுக்கு அதிகம் கடமைப்பட்டிருக்கிறோமா? 8 00:00:42,125 --> 00:00:43,377 சிறந்த நடனக் குழுவின் 101 கதைகள். 9 00:00:43,460 --> 00:00:46,463 எந்த அளவிற்கு என்பதற்குஉதாரணமாக ஏதேனும் தருணம் உள்ளதா? 10 00:00:46,547 --> 00:00:52,427 நம் குடும்பத்தை இழந்து நம்மைப்பாதுகாத்துக் கொள்ளும் அந்தத் தருணமா? 11 00:00:53,303 --> 00:00:59,518 அந்த தருணத்தில் தான்ஓவன் கேவ் இருந்தாரா? 12 00:01:03,397 --> 00:01:07,109 ஏய். எப்படி இருக்கிறீர்கள், பக் மாமா? 13 00:01:08,777 --> 00:01:09,945 இங்கே உட்காரு. 14 00:01:13,448 --> 00:01:15,784 அவர்கள் பல கதைகள்சொல்லப்போவதாகத் தெரிகிறது. 15 00:01:18,412 --> 00:01:20,706 -என் பட்டியலில் உள்ள அனைத்தும் இருக்கிறதா?-ஆம் 16 00:01:20,789 --> 00:01:21,790 நன்றி. 17 00:01:28,297 --> 00:01:29,798 இதன் வாசனை வித்தியாசமாக உள்ளது. 18 00:01:32,384 --> 00:01:34,386 வால்டன் பாண்ட் டுக்குப் போனேன். 19 00:01:34,469 --> 00:01:37,264 நூலகத்தில் புத்தகம் கிடைக்கவில்ல.பழைய புத்தகக் கடையில் வாங்கினேன். 20 00:01:37,347 --> 00:01:39,683 நீ எப்போதும் புத்திசாலி தான், பாப் டார்ட். 21 00:01:40,684 --> 00:01:42,728 இது வர்த்தகத்திற்குத் தொடர்புடையது.திருப்பிக் கொடுத்துவிடு. 22 00:01:44,021 --> 00:01:45,439 என்ன கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? 23 00:01:47,024 --> 00:01:48,025 உன் குரலைத் தான். 24 00:01:49,234 --> 00:01:51,486 மக்களின் கவனத்தை ஈர்க்கும் அளவுஉன் குரல் வசீகரமானது. 25 00:01:51,570 --> 00:01:52,779 உன் அம்மாவைப் போல. 26 00:01:56,909 --> 00:01:59,786 கல்லறைக்குச் சென்று அம்மாவைப்பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். 27 00:01:59,870 --> 00:02:01,830 -என்னுடன் வருகிறீர்களா?-இல்லை. 28 00:02:01,914 --> 00:02:05,584 வாயில்களை மூடும் முன், நாம் அங்குச் சென்றுகொஞ்சம் மலர்களை வைக்கலாம். 29 00:02:06,418 --> 00:02:08,461 உன் சிறுவயதில் கூட நீ இதையே தான் செய்வாய். 30 00:02:08,878 --> 00:02:09,922 என்ன? 31 00:02:10,714 --> 00:02:14,092 ஷ்ரீவுடன் சண்டையிடும் போதெல்லாம்உன் அம்மாவிடம் ஓடுவாய். 32 00:02:15,636 --> 00:02:17,179 ஏற்கனவே அதைப் பற்றி கேள்விபட்டுள்ளீர்களா? 33 00:02:17,596 --> 00:02:20,516 பட்சி சொல்லும் தகவல்.அரசாங்கத்தை விட மிகவும் நம்பகமானது. 34 00:02:21,725 --> 00:02:23,602 -அதைப் பற்றி நீ என்ன செய்யப் போகிறாய்?-நானா? 35 00:02:24,186 --> 00:02:25,187 அவர் என்ன செய்யப் போகிறார்? 36 00:02:25,646 --> 00:02:26,772 ஒன்றுமில்லை. 37 00:02:27,773 --> 00:02:33,904 ஷ்ரீவ் உன் அழகான புன்னகையையும்,உன் பெரிய அழகிய கண்களையும் பார்ப்பதில்லை. 38 00:02:34,404 --> 00:02:39,076 உன்னை அவனது மகளாகப் பார்க்காமல்,அவன் செய்த தவறாகப் பார்க்கிறான். 39 00:02:39,701 --> 00:02:42,579 அவர் 30 வருடங்களாக அதைப் பற்றிஎதையும் யோசிப்பதில்லை. 40 00:02:44,373 --> 00:02:47,292 உன் அம்மா இறந்த ஒரு வாரம் கழித்து,அவன் சிறைக்குச் சென்றான். 41 00:02:48,085 --> 00:02:50,754 உன்னை வெகு காலத்திற்குநிராதரவாக விட்டுவிட்டான். 42 00:02:51,171 --> 00:02:54,007 அவன் மறந்திருக்க மாட்டான். என்னை நம்பு.அது அவனுக்குக் குற்ற உணர்ச்சியாக இருக்கும் 43 00:03:56,653 --> 00:04:00,908 [உண்மையைத் தேடி] 44 00:04:07,080 --> 00:04:10,209 [குடும்பம்] 45 00:04:41,782 --> 00:04:43,492 உன்னை இங்கே பார்க்க முடியும்என யூகித்தேன். 46 00:04:46,328 --> 00:04:47,913 நீ நிறுத்த வேண்டும், லானி. 47 00:04:48,664 --> 00:04:50,874 நீ என்னை இப்படி மறைந்து இருந்துதாக்க முடியாது. 48 00:04:50,958 --> 00:04:54,086 எதுவும் சொல்லாமலேயேவந்து போவாயா? 49 00:04:54,169 --> 00:04:56,421 நான் உனக்காக இங்கு வரவில்லை. 50 00:04:57,422 --> 00:05:00,467 உனக்கு அது புரியவில்லையா?நான் அதைச் சொல்லியே ஆக வேண்டுமா? 51 00:05:01,176 --> 00:05:05,222 பொறு. அவள் ஏன் உன்னைச் செயல்படுபவளாகவைத்திருப்பதாக நீ நினைக்கிறாய்? 52 00:05:05,305 --> 00:05:07,641 அந்தக் கேள்விக்கான பதில் நம் இருவருக்கும்தெரியும் என நினைக்கிறேன். 53 00:05:07,724 --> 00:05:11,395 ஏனென்றால் நீ வீட்டிற்கு வருவதைஉறுதி செய்யவே அவள் அதைச் செய்திருப்பாள். 54 00:05:11,478 --> 00:05:12,479 ஒரு முறையாவது. 55 00:05:12,563 --> 00:05:17,651 நான் வாதாட விரும்பவில்லை, லானி.கடவுளே, எனக்கு இது தேவையில்லை. 56 00:05:17,734 --> 00:05:18,735 சரி, மிகவும் மோசம். 57 00:05:18,819 --> 00:05:22,239 நீ அவளை எவ்வளவு நேசித்த அளவு நானும்அவளை நேசித்தேன், அவளும் என்னை நேசித்தாள். 58 00:05:22,656 --> 00:05:23,907 -எனக்குத் தெரியும்.-உனக்குத் தெரியுமா? 59 00:05:23,991 --> 00:05:26,660 அவள் இறக்கும்போது அவளுடன் வாகனத்தில்நான் இருந்தேன் என்பது உனக்குத் தெரியுமா? 60 00:05:26,743 --> 00:05:27,995 நான் இதைக் கேட்க விரும்பவில்லை. 61 00:05:28,078 --> 00:05:30,998 நாங்கள் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தோம்அவர்கள் எங்களை மீட்க முயற்சித்தார்கள். 62 00:05:31,081 --> 00:05:34,626 பல மணி நேரம் ஆனது போல் இருந்தது, ஆனால்18 நிமிடங்கள் மட்டுமே ஆனது என கூறினார்கள். 63 00:05:34,710 --> 00:05:37,504 -நிறுத்து.-நான் அவள் நினைவிழப்பதைப் பார்த்தேன், 64 00:05:37,588 --> 00:05:39,256 பின் அவள்... 65 00:05:40,924 --> 00:05:41,925 இறந்துவிட்டாள். 66 00:05:43,260 --> 00:05:45,387 என் கண் முன்பாகவே அவள் உயிர் பிரிந்தது. 67 00:05:47,097 --> 00:05:48,390 நான் இதை என் பிழைப்புக்காகச் செய்கிறேன். 68 00:05:48,682 --> 00:05:52,603 நான் மக்களின் வாழ்வை மாற்ற உதவுகிறேன்,என் மென்மையைப் பற்றி சொல்வார்கள், 69 00:05:52,686 --> 00:05:56,773 அவள் அங்குத் தொங்கி,இறந்து கொண்டிருக்கும் போது, 70 00:05:56,857 --> 00:05:59,943 நான் இருக்கை பெல்டால் சிக்கிக் கொண்டது,எவ்வளவு கொடுமை எனத் தெரியுமா? 71 00:06:00,027 --> 00:06:03,739 அவள் உடலில் இருந்து வந்த வெப்பத்தைஉணர முடிந்த அளவிற்கு நெருக்கமாக இருந்தேன், 72 00:06:03,822 --> 00:06:07,034 ஆனால் நான் எவ்வளவு முயற்சித்தும்,என்னால் அவளைத் தொட முடியவில்லை... 73 00:06:07,117 --> 00:06:09,077 -இயேசுவே, லானி.-அவள் ஏதோ சொல்ல முயற்சித்தாள், 74 00:06:09,161 --> 00:06:10,662 ஆனால் அவள் வாய் முழுவதும்இரத்தமாக இருந்தது, 75 00:06:10,746 --> 00:06:12,748 எனவே அவள் என்ன சொல்ல முயற்சித்தாள்என எனக்குத் தெரியாது. 76 00:06:13,749 --> 00:06:16,376 அவளிடம் போய் வா என்று சொல்லக் கூடஎனக்குத் தகுதியில்லயா? 77 00:06:16,835 --> 00:06:20,339 அவளுடைய உடைமைகளில் உரிமை கொண்டாடநான் தகுதியற்றவளா? 78 00:06:20,422 --> 00:06:23,217 இங்கே தங்கியிருந்தது நீ இல்லை, நான்தான். 79 00:06:50,827 --> 00:06:52,454 அவளை விடு, லானி! 80 00:07:05,509 --> 00:07:06,885 என்னை மன்னிக்கவும். 81 00:07:08,637 --> 00:07:10,639 நாம் ஒன்றாக இருந்தால்இப்படித்தான் இருக்கும். 82 00:07:13,308 --> 00:07:15,394 நாம் இப்படித்தான் ஒன்றாகஇருந்திருக்கிறோம். 83 00:07:18,146 --> 00:07:23,777 சூசனின் இறுதிச் சடங்குகள் முடிந்தவுடன்,நான் போய் விடுகிறேன், லானி. 84 00:07:31,159 --> 00:07:35,038 கணவனை ஏமாற்றி கள்ளத்தொடர்பு வைத்திருந்து,அந்தக் காதலன் கொலை செய்யப்பட்டால், 85 00:07:35,497 --> 00:07:39,042 நீ சந்தேகிக்கும் முதல் நபர் அந்தப்பெண்ணின் கணவராகத் தான் இருக்க முடியும். 86 00:07:39,918 --> 00:07:46,008 இந்தக் கதையில், அந்தப் பெண் மேலானி கேவ்,கணவர் ஓவன் கேவ். 87 00:07:47,176 --> 00:07:50,721 அவருடைய நோக்கம் மிகவும் அடிப்படையானது. 88 00:07:52,014 --> 00:07:54,725 ஆனால் நோக்கம் மட்டும் ஒருவனைக்கொலைகாரனாக மாற்றாது. 89 00:07:55,309 --> 00:08:00,189 அவரது நோக்கத்தின் அளவுஅவரது சாட்சிகளும் வலுவாக இருந்தது. 90 00:08:00,772 --> 00:08:02,649 அல்லது நாமும் அப்படித்தான் நினைத்தோம். 91 00:08:04,026 --> 00:08:09,114 ஓவன் கேவ், ஒரு காவல் அதிகாரி,துப்பறிவாளர்,அன்று இரவு பணியில் இருந்தார். 92 00:08:09,656 --> 00:08:13,660 அவர் அதைச் செய்தாரா என்ற கேள்விக்கு விடைஅவர் பணியில் இருந்தாரா இல்லையா என்பது தான் 93 00:08:14,411 --> 00:08:16,079 காவல்துறையின் பதிவுகள் படி... 94 00:08:16,163 --> 00:08:17,164 இடையூறு / இரைச்சல் புகார் 95 00:08:17,247 --> 00:08:18,457 முதல் 911 அழைப்புகாலை 3:30 க்கு வந்தது. 96 00:08:18,540 --> 00:08:20,792 ...ஓவன் கேவ் அதிகாலை 3:30 மணிக்குஇரைச்சல் பற்றிய புகாருக்கு பதிலளித்தார். 97 00:08:21,293 --> 00:08:23,337 இரைச்சல் புகாருக்குபதில் அளித்ததில் இருந்து, 98 00:08:23,420 --> 00:08:27,299 அதிகாலை 4:44 மணிக்கு வந்த வீட்டுவன்முறை புகாருக்கு பதில் அளித்தது வரை 99 00:08:27,382 --> 00:08:30,719 ஓவன் என்ன செய்தார் என்றுத்தெரியவில்லை. 100 00:08:31,803 --> 00:08:33,514 அந்த 74 நிமிடங்களில், 101 00:08:33,597 --> 00:08:38,769 ஓவன் கேவ் தனது ரோந்துப் பகுதியை விட்டு,புர்மென் வீட்டிற்குச் சென்றிருக்கலாம். 102 00:08:38,852 --> 00:08:44,733 அவரது முன்னாள் "நண்பர்" சக் புர்மென்னைஎதிர்கொள்ள அவர் விரும்பியிருக்கலாம். 103 00:08:45,150 --> 00:08:48,654 அவருடன் பழகியவன்,அவரது மனைவியுடன் கலவி கொண்டான். 104 00:08:50,405 --> 00:08:53,116 சக் புர்மென்னை ஓவன் கேவ் கொன்றாரா? 105 00:08:54,493 --> 00:08:56,745 இருவருக்கு மட்டுமே பதில் தெரியும். 106 00:08:57,579 --> 00:09:00,499 அவர்களில் ஒருவர்,ஓவனின் கூட்டாளி ஜார்ஜ் ஹட்னர், 107 00:09:00,582 --> 00:09:04,044 அந்த உண்மையைஅவர் இறக்கும் வரை சொல்லவில்லை. 108 00:09:05,671 --> 00:09:09,049 இப்போது ஓவன் மட்டும் தான்அந்த உண்மையை ரகசியமாக வைத்துள்ளார். 109 00:09:09,132 --> 00:09:13,095 அவரது மகன் வாரன் அதைக் கேட்க தகுதியானவன்என நான் நினைக்கிறேன். 110 00:09:15,180 --> 00:09:18,058 சீக்கிரம். எழுந்திரு. ஜாக்ஸ், எழுந்திரு. 111 00:09:19,101 --> 00:09:20,561 சீக்கிரம் எழுந்திரு, சோம்பேறியே. 112 00:09:21,436 --> 00:09:24,356 ஏய், ஏய், ஏய். அவனிடம் கவனமாகப் பேசு. 113 00:09:24,439 --> 00:09:26,900 ஏய். என் பிரிவால் வருந்தினாயா? 114 00:09:27,317 --> 00:09:29,111 வா, உட்காரு, ஜாக்ஸ். 115 00:09:29,528 --> 00:09:32,656 மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி, ஹோம்ஸ்.நீ உயிருடன் இருப்பதில் மகிழ்ச்சி. 116 00:09:33,907 --> 00:09:35,826 ஆம். உயிரோடு இருப்பதில் மகிழ்ச்சி. 117 00:09:36,326 --> 00:09:40,372 நீ சென்ற பின், நான் பொறுப்பேற்றேன். உயர்அதிகாரியாக இருப்பது அவ்வளவு மோசமாக இல்லை. 118 00:09:41,999 --> 00:09:43,125 நாய்களுடன்... 119 00:09:45,210 --> 00:09:46,420 ரொம்ப நெருங்கிப் பழகாதே. 120 00:09:47,713 --> 00:09:49,798 அவைகள் வரும் போகும்.அவைகள் நம்முடையது அல்ல. 121 00:09:50,257 --> 00:09:52,009 வா,உட்காரு, ஜாக்ஸ். 122 00:09:53,635 --> 00:09:54,720 நாம் முரண்பாடு இன்றி இருக்கிறோம், சரியா? 123 00:10:00,809 --> 00:10:02,227 யார் என்னைக் கொல்ல முயன்றது? 124 00:10:02,853 --> 00:10:04,062 நீ எதையாவது கேட்டாயா? 125 00:10:04,146 --> 00:10:05,147 இல்லை. 126 00:10:07,149 --> 00:10:08,567 ஆனால் நான் அனைத்தையும்கூர்மையாக கவனிக்கிறேன். 127 00:10:09,776 --> 00:10:10,903 சரி. 128 00:10:12,029 --> 00:10:13,238 எனினும் இலவசமாக இல்லை. 129 00:10:15,115 --> 00:10:17,451 மறைந்திருந்து கேட்பது எளிதல்ல. 130 00:10:19,077 --> 00:10:20,412 நான் உன்னை கவனித்துக் கொள்கிறேன். 131 00:10:20,495 --> 00:10:22,664 கானைன்ஸ் & கான்ஸ் 132 00:10:22,748 --> 00:10:24,249 74 நிமிட இடைவெளியில் புர்மேன் வீட்டுக்கா?துப்பறிவாளர் கேவா அல்லது ஹட்னரா? 133 00:10:24,333 --> 00:10:27,211 911 க்கு புகார் செய்த அந்தஇரண்டு சாட்சிகளுடன் நான் பேச வேண்டும். 134 00:10:27,294 --> 00:10:30,422 அவர்கள் ஓவன் பற்றி ஏதாவதுகவனித்தார்களா என்று பார்ப்போம். 135 00:10:30,714 --> 00:10:34,134 அழைப்புகளுக்கு இடையில் புர்மென் வீட்டுக்குசெல்ல அவருக்குப் போதுமான நேரம் இருந்தது. 136 00:10:34,218 --> 00:10:35,886 நீ வேகத்தைக் குறைக்க வேண்டும், பாபி. 137 00:10:35,969 --> 00:10:37,095 அவர் எதையோ மறைக்கிறார்என தோன்றவில்லையா? 138 00:10:37,179 --> 00:10:40,474 ஒருவேளை அவர் மறைக்கலாம். அதற்காக அவர் தான்கொலை செய்தார் என்று அர்த்தமில்லை. 139 00:10:40,557 --> 00:10:42,476 காவலர்கள் ரோந்து பணியின் போது எல்லாகன்றாவியான செயல்களையும் செய்கிறார்கள். 140 00:10:42,559 --> 00:10:43,602 இது ஒப்புதல் வாக்குமூலமா? 141 00:10:43,685 --> 00:10:47,898 சக்கிற்கு நிறைய ரசிகர்கள் இருந்தார்கள்.சிலர் அவர் மேல் பைத்தியமாக இருந்தார்கள். 142 00:10:48,398 --> 00:10:49,399 போலியானதாக இருக்கிறது. 143 00:10:49,733 --> 00:10:51,443 பிறகு அதில் உனக்குப் பிடித்த,வாரன் இருக்கிறார். 144 00:10:51,527 --> 00:10:54,905 இது உன் கதைக்குப் பொருந்தாது என் தெரியும்,ஆனால் இன்னும் அவன் நல்லவனாகவே தெரிகிறான். 145 00:10:54,988 --> 00:10:56,240 சரி. 146 00:10:56,323 --> 00:10:59,117 ஒருவேளை நான் உனது யூகங்களைசரியென்று ஒப்புக்கொண்டால்... 147 00:10:59,952 --> 00:11:02,871 அந்த 74 நிமிடங்கள் உனக்குச் சந்தேகமாகஉள்ளது என ஒப்புக்கொள்கிறாயா? 148 00:11:02,955 --> 00:11:04,873 -சரி.-அவ்வளவு எளிதா? 149 00:11:04,957 --> 00:11:07,000 ஏய், நான் ஒன்றும் சிக்கலான ஆள் இல்லை. 150 00:11:07,084 --> 00:11:10,712 எனவே இந்த சாட்சிகளுடன் பேசுவதற்காகசெல்வதில் உனக்கு ஆட்சேபனை இருக்காது. 151 00:11:10,796 --> 00:11:13,549 முன்னால் காவல் அதிகாரி ஒருவர்அங்கு இருப்பது உதவியாக இருக்கும். 152 00:11:13,632 --> 00:11:16,301 சரி. நான் இன்றிரவுஉன்னை அழைத்துச் செல்கிறேன். 153 00:11:25,394 --> 00:11:28,397 டெசிரீ 154 00:11:34,027 --> 00:11:35,237 எதைப் பற்றி நீங்கள் விவாதிக்கிறீர்கள்? 155 00:11:35,320 --> 00:11:36,822 சாலையைப் பார்த்து ஓட்டு. 156 00:11:38,657 --> 00:11:42,202 பாபியின் விசேஷ குணம். எதையாவதுதவிர்க்க அது இல்லாத மாதிரி எண்ணிக்கொள்வது. 157 00:11:43,579 --> 00:11:45,622 ஆனால் டெசிரீ உன்னைப் போலவே மோசமானவள். 158 00:11:46,248 --> 00:11:47,708 நீ என்ன பேசுகிறாய்என தெரியாமல் பேசுகிறாய். 159 00:11:47,791 --> 00:11:50,294 தயவுசெய்து. உனக்குத் தெரிந்ததை விட உன்குடும்பத்தைப்பற்றி எனக்கு அதிகம் தெரியும். 160 00:11:51,420 --> 00:11:53,422 நமக்குள் பிரிவு வந்தபோதுஅவள் எப்படி நடந்துக்கொண்டாள் என தெரியுமா? 161 00:11:54,006 --> 00:11:57,134 நீ யாரிடமும் சொல்லாமல் சென்றுவிட்டாய்.நான்இந்த கோபங்களை சமாளிக்க வேண்டி இருந்தது. 162 00:11:57,759 --> 00:12:01,346 அதனால் தான் நீ ஒரு வருடம் கழித்துதிருமணம் செய்துக் கொண்டாயா? 163 00:12:02,806 --> 00:12:05,893 ஏய், நான் எதையாவது செய்ய முடிவெடுத்தால்,நான் அதைச் செய்வேன். 164 00:12:06,727 --> 00:12:08,770 ஆனால் அது எப்படி முடிந்ததுஎன இருவரும் பார்த்தோம் அல்லவா? 165 00:12:11,148 --> 00:12:12,649 உன் மகளுக்கு என்ன வயதாகிறது? 166 00:12:13,400 --> 00:12:16,945 ட்ரினிக்கு 15 வயதாகிறது.சாமர்த்தியமுள்ள பெண். 167 00:12:17,613 --> 00:12:18,822 உன்னைத் தவிர. 168 00:12:19,990 --> 00:12:23,619 அவள் கல்லூரிகளைப் பற்றி ஆய்வு செய்யஇந்த சாலை சவாரியை மேற்கொண்டாள். 169 00:12:23,702 --> 00:12:28,498 அவள் துல்லியமாகஇதைத் திட்டமிட்டிருக்கிறாள், பாப். 170 00:12:28,957 --> 00:12:33,504 வாகனம் மற்றும் விமானத்தின் பயண நேரத்தையும்நாம் தங்கும் இடத்தையும் கணித்தாள். 171 00:12:35,172 --> 00:12:36,173 ஆனால்... 172 00:12:38,175 --> 00:12:39,968 -என்ன?-அவளுடைய அம்மா. 173 00:12:41,303 --> 00:12:42,638 அவள் இந்த பயணத்திற்கு அனுமதிக்கவில்லை. 174 00:12:44,890 --> 00:12:46,517 இது எனக்கு வருத்தம் தருகிறது, தெரியுமா? 175 00:12:49,853 --> 00:12:52,105 யாரோடும் விவாதிக்கவோசண்டையிடவோ எனக்குத் தோன்றவில்லை. 176 00:12:54,107 --> 00:12:57,486 நீ எப்போதும் உன் பெண்ணிற்காகசண்டையிடத்தான் வேண்டும். 177 00:13:12,709 --> 00:13:13,961 காரா ரியோஸ்? 178 00:13:15,712 --> 00:13:16,839 ஆமாம், என்ன? 179 00:13:17,339 --> 00:13:20,801 என் பெயர் பாபி பார்னல். நான் ஒரு நிருபர்.இவர் என்னுடன் பணி புரிபவர். 180 00:13:20,884 --> 00:13:22,511 மார்கஸ் கில்ப்ரெவ். 181 00:13:22,594 --> 00:13:23,637 இது ரொம்ப நேரம் எடுக்குமா? 182 00:13:23,720 --> 00:13:24,930 இல்லை, சீக்கிரமே முடித்து விடுவோம். 183 00:13:25,430 --> 00:13:30,060 நாங்கள் இவரைப் பற்றிய எல்லா விஷயங்களையும்தெரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். 184 00:13:30,143 --> 00:13:33,564 உங்கள் குடியிருப்பில் இருந்து 911க்குவந்த அழைப்புக்கு இவர் பதில்அளித்துள்ளார். 185 00:13:33,647 --> 00:13:35,649 ஹாலோவீன் இரவு. 1999. 186 00:13:37,818 --> 00:13:39,319 அவர் அப்பொழுது சீருடையில் இல்லை. 187 00:13:39,820 --> 00:13:42,364 -ஓவன் கேவ்?-அவருடைய பெயர் எனக்கு நினைவில்லை. 188 00:13:42,948 --> 00:13:45,742 -அவர் என்னை ஏமாற்றியது ஞாபகம் உள்ளது.-அவர் ஏமாற்றினாரா? 189 00:13:45,826 --> 00:13:48,704 அவர் இரண்டு நிமிடத்திற்கு மேல் இங்கில்லை,அதற்குள் அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. 190 00:13:48,787 --> 00:13:50,539 -தொலைபேசியின் முதல் அழைப்பிலேயே எடுத்தாரா?-ஆம். 191 00:13:50,956 --> 00:13:52,791 கோபம் ஏற்பட்டுவிட்டது போல் தெரிந்தது. 192 00:13:53,208 --> 00:13:55,210 அவருடைய கூட்டாளியை இழுத்துக்கொண்டுஇந்த இடத்தை விட்டுச் சென்றார். 193 00:13:56,003 --> 00:13:57,212 என்னைப் பற்றிஎல்லாவற்றையும் மறந்துவிட்டார். 194 00:14:00,716 --> 00:14:01,717 மிக்க நன்றி. 195 00:14:01,800 --> 00:14:03,093 பாராட்டுகிறேன். நன்றி. 196 00:14:06,638 --> 00:14:10,309 சூசன் கார்வர் இல்லாதது பெரிய இழப்பாகும்.அவள் எங்கள் சிறிய பள்ளியின் பொக்கிஷம். 197 00:14:11,351 --> 00:14:13,353 எல்லா. என் பார்வைப்படும் தூரத்தில் இரு. 198 00:14:13,437 --> 00:14:15,063 ஒரு நல்ல ஆத்மா. 199 00:14:15,731 --> 00:14:18,859 தங்கள் குறையைக் கேட்க ஒருவர் உண்டு எனஅனைவரும் உணரும் தனித்தகுதி 200 00:14:19,359 --> 00:14:20,777 உடைய நல்ல ஆத்மா 201 00:14:21,695 --> 00:14:24,031 நான் கிரவுண் கலைக்கழகத்திற்கு வந்த போது, 202 00:14:24,156 --> 00:14:26,366 சூசன் இங்கு வந்து ஏழு வருடங்களுக்குமேல் ஆகி இருந்தது, 203 00:14:26,450 --> 00:14:28,660 ஆனால் அவள் உடனே என்னைஅவர்கள் குழுவுக்குள் சேர்த்துக் கொண்டாள். 204 00:14:28,744 --> 00:14:31,663 அவளைப் பற்றி தெரிவதற்கான சந்தர்ப்பம்கிடைத்ததற்கு நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன். 205 00:14:33,123 --> 00:14:37,419 அனைவருக்கும் அவளுடன் நேரம் கழிக்க வாய்ப்புகிடைத்ததற்கு நான் கடமைப்பட்டுள்ளேன். 206 00:14:38,378 --> 00:14:41,840 அவள் இல்லாமல் ஒவ்வொரு நாளையும்கழிப்பது கடினம் தான். 207 00:14:41,924 --> 00:14:43,383 உங்கள் மகளை அழைத்து வந்திருக்கிறீர்களா? 208 00:14:43,884 --> 00:14:46,678 -இந்த சிறிய இடம் தான்...-எப்படி என்றாலும். 209 00:14:46,762 --> 00:14:49,932 ...அவள் இல்லாததை நாங்கள் உணரும்போதுஅவளுடனான தருணங்களுக்குள் மூழ்கிவிடுவோம். 210 00:14:50,724 --> 00:14:52,100 நீங்கள் இருவரும் ஒரே மாதிரி உள்ளீர்கள். 211 00:14:53,435 --> 00:14:54,770 யார் நீங்கள்? 212 00:14:55,312 --> 00:14:59,858 நான் உன் அம்மாவின் சகோதரி, ஜோசி. 213 00:15:02,027 --> 00:15:03,320 நீ யார்? 214 00:15:03,403 --> 00:15:04,905 நான் எல்லா ஜோசபின். 215 00:15:13,747 --> 00:15:17,167 ஏய். உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி,எல்லா ஜோசபின். 216 00:15:17,251 --> 00:15:19,336 "உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி,ஜோசி அத்தை" என்று சொல்வாயா? 217 00:15:19,419 --> 00:15:21,255 உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி,ஜோசி அத்தை. 218 00:15:25,759 --> 00:15:26,760 உனக்கு திருமணமாகிவிட்டதா? 219 00:15:29,137 --> 00:15:30,514 -இல்லை.-அது ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கை. 220 00:15:31,265 --> 00:15:33,475 -நாங்கள் எல்லோரும் உங்களைப் பின்பற்றுவோம்.-குழந்தைகள்? 221 00:15:33,851 --> 00:15:35,561 உங்களை மறக்கவே முடியாது. 222 00:15:35,644 --> 00:15:36,645 இல்லை. 223 00:15:38,605 --> 00:15:41,441 மரம் நடுவதற்கு முன்,கார்வர் அவர்களின் வகுப்பைச் சார்ந்தவர்கள் 224 00:15:41,525 --> 00:15:43,193 சூசனை கௌரவிக்கும் வகையில்பாட விரும்புகிறோம். 225 00:15:43,861 --> 00:15:47,447 ஆரம்பிக்கும் முன் சூசனின் குடும்பத்தாரைமுன்னால் வருமாறு கேட்டுக்கொள்கிறேன். 226 00:15:49,241 --> 00:15:50,325 நீங்கள் வருகிறீர்களா? 227 00:15:52,536 --> 00:15:53,537 அம்மா அழைக்கிறார்கள். 228 00:15:53,620 --> 00:15:57,332 அவள் கைகளில் இந்த உலகமே இருக்கிறது 229 00:15:57,416 --> 00:16:00,002 -அவள் கைகளில் இந்த உலகமே...-சிறுமிகளே! உள்ளே செல்ல நேரம் ஆகிவிட்டது. 230 00:16:02,421 --> 00:16:03,881 வேண்டாம், நீ என்னை விட்டுபோகக் கூடாது, லானி! 231 00:16:04,631 --> 00:16:06,550 வாரன்! என்னைப் போக விடு. 232 00:16:12,931 --> 00:16:15,434 ஜோசி? ஜோசி அத்தை? 233 00:16:16,101 --> 00:16:18,520 -சகலமும் அவள் கைகளில்-ஜோசி அத்தை? 234 00:16:18,604 --> 00:16:19,605 இந்த உலகமே அவள் கைகளில். 235 00:16:19,980 --> 00:16:22,232 எங்கள் வீட்டுக்கு இரவு உணவுக்குவருகிறீர்களா? 236 00:16:23,942 --> 00:16:27,738 இந்த உலகில் சகலமும் அவள் கைகளில் இருந்தது. 237 00:16:27,821 --> 00:16:28,822 நீ வருவதை நாங்களும் விரும்புகிறோம். 238 00:16:28,906 --> 00:16:31,825 இந்த உலகமே அவள் கைகளில். 239 00:16:34,036 --> 00:16:36,830 சக் இறந்த அன்று உனக்கும் ஓவனுக்கும்எதாவது சண்டையா? 240 00:16:37,748 --> 00:16:38,999 இல்லை. 241 00:16:39,082 --> 00:16:40,375 நிச்சயமாக? 242 00:16:40,834 --> 00:16:45,422 ஓவனை வருத்தப்படுத்திய தொலைபேசி அழைப்புயாருடையது என கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். 243 00:16:46,215 --> 00:16:48,717 ஓவன் சக்கைக் கொலை செய்யவில்லை, பாபி. 244 00:16:50,177 --> 00:16:53,972 அவர் யூகம் தவறு, ஆனால் அவர் வாரன் தான்செய்திருக்க வேண்டும் என நம்புகிறான். 245 00:16:55,599 --> 00:16:57,601 அவர் எங்கள் குடும்பத்தைநசாம் பண்ணியிருக்க மாட்டார். 246 00:16:57,684 --> 00:16:59,019 இல்லைஎன்றால், அவர்... 247 00:17:06,151 --> 00:17:07,819 நான் உங்களை மருத்துவமனைக்குஅழைத்துச் செல்கிறேன். 248 00:17:21,208 --> 00:17:22,209 நில். 249 00:17:25,963 --> 00:17:26,964 இங்கே உள்ளே போ. 250 00:17:33,971 --> 00:17:34,972 அசையாதே. 251 00:17:48,360 --> 00:17:49,361 சகோதரா. 252 00:17:52,906 --> 00:17:54,116 எல்லாம் சரியாக உள்ளதா? 253 00:17:54,700 --> 00:17:55,868 நீயே சொல். 254 00:17:58,036 --> 00:18:00,372 நான் ஏதாவாது தகவல் கிடைக்குமாஎன்று பார்க்கிறேன். 255 00:18:02,332 --> 00:18:04,084 யார் உனக்கு அனுமதி கொடுத்தார்கள்? 256 00:18:04,835 --> 00:18:07,045 கேள்வி கேட்பது இயற்கை தான். 257 00:18:07,754 --> 00:18:09,339 பதில் எதிர்பார்ப்பதும் இயற்கை தான். 258 00:18:10,382 --> 00:18:13,218 ஆனால் கட்டளைக்குக் கீழ்படியாமல்இருப்பது சரியல்ல. 259 00:18:13,635 --> 00:18:15,470 எனவே நான் என்ன செய்ய வேண்டும்? 260 00:18:15,554 --> 00:18:21,185 யார் என்னைக் கொல்ல முயற்சித்தார்கள் என்றுதெரியாதது போல் வெளியில் சுற்றித் திரி. 261 00:18:22,394 --> 00:18:24,646 உன்னைத் தாக்கினவனை பரோலில்அனுமதிக்க மாட்டார்கள். 262 00:18:26,231 --> 00:18:29,610 அவன் திரும்பவும் வரம்பு மீறிநுழைய மாட்டான். எப்பொழுதும். 263 00:18:32,070 --> 00:18:33,071 நீயும் வரம்பை மீறக் கூடாது. 264 00:18:35,782 --> 00:18:37,826 நான் ஏன் உன்னைக் கட்டுப்படுத்துகிறேன்என புரிகிறதா? 265 00:18:41,163 --> 00:18:42,748 என் ஆன்மாவை பாவம் செய்யாமல் காப்பாற்றவா? 266 00:18:43,207 --> 00:18:46,543 உன் ஆன்மா அழியட்டும்.எனக்கு அதில் எந்த அக்கறையும் இல்லை. 267 00:18:47,878 --> 00:18:50,881 ஆனால் சண்டை செய்தால்,தனிச்ச்சிறையில் வைக்கப்படுவாய். 268 00:18:51,381 --> 00:18:54,176 குத்தப்படுவாய், மாட்டிக்கொள்வாய். 269 00:18:54,760 --> 00:18:57,221 நீ சிறைபட்டால் என் வியாபாரம் கெடும். 270 00:18:58,472 --> 00:18:59,973 அது நடக்கக்கூடாது. 271 00:19:00,974 --> 00:19:01,975 புரிந்ததா? 272 00:20:08,750 --> 00:20:09,960 நீங்கள் நலமாக உள்ளீர்களா? 273 00:20:11,712 --> 00:20:13,255 -இங்கே.-நான் நலமாக இருக்கிறேன். 274 00:20:15,257 --> 00:20:17,134 அவள் கொஞ்சம் மயக்கத்தில் இருக்கிறாள். 275 00:20:18,218 --> 00:20:20,179 அப்படியா.நான் அவளுடன் இருக்கிறேன். 276 00:20:28,729 --> 00:20:29,855 மேலானி? 277 00:20:31,231 --> 00:20:35,110 அன்று இரவு நீங்கள் சண்டையிட்டதில்ஒரு பிரச்சனையும் இல்லை. 278 00:20:35,444 --> 00:20:36,820 யாரும் உங்களைக் குற்றம் சொல்ல மாட்டார்கள். 279 00:20:38,947 --> 00:20:44,369 ஓவனுக்குக் கோபம் வந்துஅவர் ஏதாவது செய்திருந்தாலும்... 280 00:20:45,913 --> 00:20:48,457 அவர் செய்தது தவறு. 281 00:20:48,916 --> 00:20:50,876 அவரை அழைத்தது உங்களது தவறு அல்ல. 282 00:20:51,585 --> 00:20:52,794 எனக்குத் தெரியும். 283 00:20:55,756 --> 00:20:57,466 சண்டை எதைப் பற்றி? 284 00:20:58,675 --> 00:21:00,093 நான் அழைத்தேன்... 285 00:21:01,887 --> 00:21:04,389 அவரை விட்டுவிலகப் போகிறேன் என்று சொன்னேன். 286 00:21:05,140 --> 00:21:08,268 அவரை விட்டு விலகுவதாகநீங்கள் ஒவனிடம் சொன்னீர்களா? 287 00:21:10,145 --> 00:21:13,565 ஓவனுக்கு மிகுந்த ஆத்திரம் வந்தது.அதனால் அவர்... 288 00:21:17,903 --> 00:21:18,779 அவர்... 289 00:21:18,862 --> 00:21:20,280 எனக்கு மிகவும் களைப்பாக உள்ளது. 290 00:21:21,281 --> 00:21:22,282 சரி. 291 00:21:25,410 --> 00:21:27,788 நாம் தவறான கார் பார்க்கில்நிறுத்தி உள்ளோம். 292 00:21:27,871 --> 00:21:31,041 சூரியன் மறையும் நேரம் ஆகி விட்டது,பூங்காவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டாம். 293 00:21:31,124 --> 00:21:33,794 சரி. நான் கரடிகளைப் பற்றியஅறிவிப்பு பலகையைப் பார்த்தேன். 294 00:21:34,211 --> 00:21:35,337 எனக்கு பயமாகிவிட்டது. 295 00:21:35,420 --> 00:21:36,839 கரடிகள் மிகவும் வேகமாக ஓடுபவை. 296 00:21:36,922 --> 00:21:38,131 -அவைகள் வேகமானவை.-ஆம். 297 00:21:38,215 --> 00:21:40,300 -மின்னல் வேகம்.-காரில் லிஃப்ட் கேட்க முடிவு செய்தோம். 298 00:21:40,384 --> 00:21:42,803 யாரோ நம்மை அழைத்துச் செல்லஒரு மணி நேரம் ஆகிவிட்டது என நினைக்கிறேன். 299 00:21:42,886 --> 00:21:44,596 -தைரியமான ஜோடி.-ஆம். 300 00:21:44,680 --> 00:21:46,932 அந்த மனைவி எப்பொழுதும்இவரை ஈர்க்கவே முயற்சித்தாள். 301 00:21:47,015 --> 00:21:48,934 -எப்போதும் இதையே சொல்கிறாய். அப்படி இல்லை.-அவள் அப்படித்தான் 302 00:21:49,017 --> 00:21:50,561 அம்மா, நான் கழிவறைக்குப் போக வேண்டும் 303 00:21:50,853 --> 00:21:52,396 உனக்கு என் உதவி தேவையா? 304 00:21:52,479 --> 00:21:53,647 நீங்கள் என்னுடன் வரவேண்டும்என்று விரும்புகிறேன். 305 00:21:53,730 --> 00:21:56,817 ஒ, சரி, அப்படி என்றால்,நாங்கள் விரைவில் வருகிறோம். 306 00:21:56,900 --> 00:21:57,901 சரி. 307 00:22:04,324 --> 00:22:06,785 இரவு முழுவதும் உன்னை பேசவிடாமல் நாங்களேபேசிக்கொண்டிருந்தோம்.மன்னித்துவிடு. 308 00:22:08,287 --> 00:22:11,331 இல்லை, பரவாயில்லை.உண்மையில் அது நன்றாகவே இருந்தது. 309 00:22:12,040 --> 00:22:13,959 கொஞ்சம் பாரம் குறைந்தது போல்இருக்கிறது,தெரியுமா. 310 00:22:15,002 --> 00:22:18,213 ஆமாம். உனக்கு இது ஒரு விசித்திரமானஅனுபவமாக இருக்கும். 311 00:22:19,840 --> 00:22:21,175 ஒரு விதத்தில். 312 00:22:21,258 --> 00:22:24,803 எது எப்படியோ,லானி உன் பிரிவால் வாடுகிறாள். 313 00:22:29,433 --> 00:22:30,934 அவளை விடு, லானி! 314 00:22:33,187 --> 00:22:36,857 மீண்டும் என்னுடன் சுற்ற வருவீர்களா,ஜோசி அத்தை? உங்களைப் பார்க்கப் பிடிக்கும். 315 00:22:38,734 --> 00:22:40,360 எனக்கும் உன்னைப் பார்க்கப் பிடிக்கும். 316 00:22:40,444 --> 00:22:42,863 நான் பிறந்த போது நீங்கள் இங்குஇருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 317 00:22:47,451 --> 00:22:50,078 நான் புறப்பட வேண்டும் என நினைக்கிறேன். 318 00:22:51,205 --> 00:22:52,372 நாளை ஒரு நீண்ட நாள். 319 00:22:52,873 --> 00:22:57,544 ஆக... உன்னைப் பிரார்த்தனையின் போதுபார்க்கிறேன். நன்றி. 320 00:23:00,005 --> 00:23:02,883 ஜோசி,ஜோசி, சற்று பொறு. 321 00:23:08,305 --> 00:23:12,476 இங்கு வந்ததிலிருந்து தொடர்ச்சியாய் என்னயோசித்துக் கொண்டிருந்தேன் என தெரியுமா? 322 00:23:14,228 --> 00:23:15,354 உன் முகம்... 323 00:23:18,106 --> 00:23:19,858 நான் விழித்தெழுந்த போதுஎப்படி இருந்தது என்றால், 324 00:23:19,942 --> 00:23:24,363 நான் மூச்சு விடமுடியாமல் தலையணையை வைத்துநீ அழுத்துவது போல் எனக்குத் தோன்றியது. 325 00:23:24,780 --> 00:23:26,782 -என்னைக் கொல்ல முயற்சித்தாயா?-இல்லை. 326 00:23:26,865 --> 00:23:28,784 சூசன் அத்தை தான் உன்னைஎன்னிடமிருந்து இழுத்து விலக்கினார்கள். 327 00:23:29,201 --> 00:23:30,661 இல்லை,எனக்குத் தெரியும்,ஆனால்... 328 00:23:31,453 --> 00:23:35,082 நாம் இளைஞர்களாக இருந்த போதுநான் மிகவும் காயப்பட்டிருந்தேன். 329 00:23:35,165 --> 00:23:38,752 எல்லா வகையிலும் காயப்பட்டிருந்தேன்.எல்லாவற்றின் மேலும் எனக்கு கோபம். 330 00:23:38,836 --> 00:23:40,754 இதற்கெல்லாம் ஒரு அர்த்தமும் இல்லைஎன்று எனக்குப் புரிகிறது, 331 00:23:40,838 --> 00:23:44,716 ஆனால் நான் எப்படிஉணர்கிறேன் என்று உனக்குப்புரிய வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. 332 00:23:44,800 --> 00:23:48,470 சரியா? இந்த வலியும் வேதனையும்நீ உணர வேண்டும் என்று தோன்றியது. 333 00:23:48,554 --> 00:23:50,597 அதுவே என்னை முழுவதும்ஆக்கிரமித்திருந்தது... 334 00:23:56,353 --> 00:23:59,106 நான் உன்னைக் கொல்ல முயற்சிக்கவில்லை, ஜோசி. 335 00:24:01,316 --> 00:24:02,985 நான் தற்கொலை செய்ய முயற்சித்தேன். 336 00:24:09,533 --> 00:24:12,244 நான் இப்போது சுய கட்டுபாட்டுடன்இருக்கிறேன். 337 00:24:12,744 --> 00:24:13,745 வணக்கம் யார்? 338 00:24:14,246 --> 00:24:15,789 இல்லை, எனக்குப் புரிகிறது. 339 00:24:16,373 --> 00:24:21,128 அதனால் தான், இறுதிச் சடங்கு முடிந்த உடனேசென்று விடுவது நல்லது என்று நினைக்கிறேன். 340 00:24:21,211 --> 00:24:23,630 நாம் இந்த முறை சேர்ந்துஅனுபவிக்கலாம் பிறகு... 341 00:24:24,339 --> 00:24:25,174 என்ன? 342 00:24:25,257 --> 00:24:28,886 உனக்கு புரியாது. லானி, தயவு செய்து,உன்னால் முடியும் என எனக்குத் தெரியும். 343 00:24:29,386 --> 00:24:34,725 இந்த குடும்பத்தில் என்ன சேர்த்துக் கொள்ளஉன்னால் உணர முடிகிறது என்பதை நான் அறிவேன். 344 00:24:34,808 --> 00:24:36,018 அது வெறும்... 345 00:24:37,269 --> 00:24:38,979 -ஹேய்.-ஒரு நொடி பொறு. 346 00:24:39,855 --> 00:24:41,565 உன் அம்மா இப்போதுகைது செய்யப்பட்டிருக்கிறாள். 347 00:24:43,066 --> 00:24:45,152 -என்ன?-கதவை உடைத்து நுழைந்ததற்காக. 348 00:24:45,611 --> 00:24:46,653 அது தான். 349 00:24:50,199 --> 00:24:51,408 உன்னுடைய புது இடமா? 350 00:24:53,035 --> 00:24:57,164 இந்த அழகான வீட்டின் ஒரு அங்குலத்தைக் கூடவீணாக்க நான் விரும்பவில்லை. 351 00:24:59,541 --> 00:25:00,584 ஆம். 352 00:25:02,419 --> 00:25:03,295 நீ நலமா? 353 00:25:04,338 --> 00:25:05,339 நிச்சயமாக. 354 00:25:07,049 --> 00:25:09,718 சிறையில் கழித்த நேற்றய இரவைப் பற்றிநீ பேச விரும்புகிறாயா? 355 00:25:09,801 --> 00:25:11,053 இதுவரை இல்லை. 356 00:25:11,637 --> 00:25:15,307 உன் தந்தையைத் தவிர மற்ற எதையும் நீஅதிகமாகத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. 357 00:25:15,724 --> 00:25:16,934 எனக்கு அவகாசம் தேவைப்படுகிறது. 358 00:25:18,977 --> 00:25:22,981 ஷ்ரீவ் மிகவும் தெளிவாக இருந்தார், அன்பே. 359 00:25:23,315 --> 00:25:25,817 அதாவது, என் குடும்பத்தில்மற்றொரு குடும்ப உறுப்பினரை 360 00:25:25,901 --> 00:25:28,445 தாக்கும் அளவிற்கு யாரும் இல்லை. 361 00:25:28,529 --> 00:25:31,240 -தாக்குதல் என்பதுபெரிய வார்த்தை.-ஆமாம். 362 00:25:31,323 --> 00:25:33,992 அதுதான் நீங்கள் வளர்ந்த விதத்திற்கும் நான்வளர்ந்த விதத்திற்கும் உள்ள வித்தியாசம். 363 00:25:34,076 --> 00:25:37,621 நடக்கவே இல்லை என்பது போல நாம்நடிக்க முடியாது. அதனால் யாருக்கு பலன்? 364 00:25:38,872 --> 00:25:42,167 சரி, சரி, உன் திட்டத்தைக் கூறு. 365 00:25:42,251 --> 00:25:44,127 அது சிக்கலாக இருக்க வேண்டும்என்ற அவசியமில்லை. 366 00:25:47,256 --> 00:25:51,260 இப்போது எதுவும் எளிமையாக இருக்காது. 367 00:25:54,054 --> 00:25:56,181 என் தந்தைக்கு உடல் நலம் சரியில்லை. 368 00:25:56,932 --> 00:26:00,853 அவர் சரியான மன நிலையில் இல்லை. அவர் என்னசெய்கிறார் என்றே அவருக்குத் தெரியவில்லை. 369 00:26:01,478 --> 00:26:06,108 அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்று, என்னபிரச்சனை என்று தெளிவாகத் தெரிந்துக் கொள். 370 00:26:07,025 --> 00:26:08,986 இதுதான் சரியான நேரம்.ஏதாவது செய்தாக வேண்டும். 371 00:26:09,069 --> 00:26:11,446 அந்த விஷயத்தில் அனைவரையும் ஒரேசிந்தையோடு இருக்கச் செய்ய வேண்டும். 372 00:26:11,530 --> 00:26:12,906 இல்லை. காத்திருக்கத் தேவையில்லை. 373 00:26:13,407 --> 00:26:16,910 அவர் எந்த அளவிற்குப் புத்தி சுவாதீனமற்றுஇருந்தால் தன்னுடைய மகளிடமே, 374 00:26:16,994 --> 00:26:18,203 அவளுடைய கணவரின் முன்பேவன்முறையாக நடந்துக்கொள்வார்... 375 00:26:18,579 --> 00:26:19,663 இல்லை. 376 00:26:19,746 --> 00:26:23,542 வார இறுதிக்குள் அவர் பரிசோதனைசெய்யப்பட்டதை நான் பார்க்க வேண்டும். 377 00:26:23,625 --> 00:26:26,420 இல்லையென்றால், தடை உத்தரவைதாக்கல் செய்ய நான் தயாராக இருக்கிறேன். 378 00:26:26,503 --> 00:26:30,132 தகுந்த படிவங்களை பூர்த்திச் செய்துவிட்டேன்நீதிபதியிடம் கொடுக்க வேண்டியதுதான் பாக்கி 379 00:26:30,215 --> 00:26:31,758 -உண்மையாகவா சொல்கிறீர்கள்?-நிச்சயமாக. 380 00:26:31,842 --> 00:26:37,764 கவனி, அன்பே, உன் குடும்பத்தை இந்தநூற்றாண்டுக்கு ஏற்றவாறு மாற்றப் போகிறேன் 381 00:26:37,848 --> 00:26:41,018 இறுதியாக நான் இதையும்செய்யத் தயாராக உள்ளேன். 382 00:26:47,983 --> 00:26:49,193 மென்லோ பூங்கா காவல் துறையின்தினசரி பதிவு. 383 00:26:49,276 --> 00:26:52,779 ஓவன் கேவின் இரண்டாவது 911 அழைப்பு, காலை4:44 மணிக்கு அழைத்த அந்த மர்ம பெண் யார்? 384 00:26:52,863 --> 00:26:53,864 கார்மேலா ஐசாக்ஸ்.எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. 385 00:26:53,947 --> 00:26:54,990 2 வது 911 அழைப்புஅதிகாலை 4:44 மணிக்கு வந்தது 386 00:26:55,073 --> 00:26:56,158 அவள் உயிரோடு இல்லையா? 387 00:26:56,241 --> 00:27:00,871 டிஎம்வி,காவல் துறை,இறப்புச் சான்றிதழ்,மனநலகாப்பகம் அனைத்திலும் சோதித்து விட்டேன். 388 00:27:00,954 --> 00:27:03,749 கலிபோர்னியாவில் மட்டுமல்ல,தேசிய தரவுத்தளம்அனைத்திலும் சோதனை செய்து விட்டேன். 389 00:27:03,832 --> 00:27:07,878 1999 டிசம்பரிலிருந்து அவளைப் பற்றியஎந்தப் பதிவும் இல்லை. 390 00:27:08,295 --> 00:27:10,923 வீட்டு வன்முறை பிரச்சனைக்காகஅவள் அழைத்தாள். 391 00:27:12,382 --> 00:27:16,970 பரவலாக இருக்கும் வீட்டு வன்முறை பற்றிடைம்ஸ் பத்திரிகைக்காக ஒரு தொடர் எழுதினேன். 392 00:27:17,930 --> 00:27:21,391 பாதிக்கப்பட்டவர்கள் சர்ச்சையிலிருந்துதப்பிக்க தங்கள் பெயரை மாற்றி சொல்வார்கள். 393 00:27:21,475 --> 00:27:23,644 அதில் அவர்கள் உன்னை முந்தி விடுகிறார்கள்.பெயர் மாற்றம் எல்லாம் பொது உரிமை. 394 00:27:23,727 --> 00:27:26,355 பாதிக்கப்பட்டவரின் வேண்டுகோளுக்கு இணங்கஅவை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். 395 00:27:27,439 --> 00:27:29,983 மார்கஸால் ஏதாவது செய்ய முடியுமாஎன்று பார்க்கிறேன். 396 00:27:30,067 --> 00:27:31,944 நல்ல யோசனை.நான் உன்னுடன் பிறகு பேசுகிறேன். 397 00:27:34,446 --> 00:27:36,907 ஆக, நீ அதை எப்படிச் செய்தாய்? 398 00:27:38,700 --> 00:27:40,410 அதைத்தான் அவர்களும்தெரிந்துக் கொள்ள விரும்பினார்கள். 399 00:27:40,494 --> 00:27:43,413 இல்லை, நிஜமாக, காணாமல் போனநமது சாட்சியை நீ எப்படி கண்டுபிடித்தாய்? 400 00:27:44,081 --> 00:27:47,626 என்னுடம் முன்பு பணி புரிந்தகோப்பு எழுத்தர் சில தகவல்களைக் கொடுத்தார். 401 00:27:47,709 --> 00:27:49,086 அவர் இன்னும்நகரத்திற்காகப் பணி புரிகிறாரா? 402 00:27:49,920 --> 00:27:51,004 அவள். 403 00:27:53,632 --> 00:27:55,133 ஓ அப்படியா. புரிந்தது. 404 00:28:00,264 --> 00:28:01,932 இரவு முழுவதும் நீ என்னைகாக்க வைத்திருக்க வேண்டாம். 405 00:28:02,015 --> 00:28:03,517 என்னால் முடிந்தபோது வந்தேன். ஏய். 406 00:28:04,685 --> 00:28:07,396 நீ ஏன் பழைய வீட்டிற்குச் சென்றாய்?அங்கு என்ன செய்தாய்? 407 00:28:08,188 --> 00:28:09,815 கடந்த கால ஞாபகம் வருகிறது. 408 00:28:09,898 --> 00:28:13,902 நீ என்ன செய்கிறாய் என்று எனக்குதெரியாது, ஆனால் அதை நிறுத்து. சரியா? 409 00:28:13,986 --> 00:28:16,989 -அது எதுவாக இருந்தாலும். நிறுத்து.-நீ நன்றியுடன் இருக்க வேண்டும். 410 00:28:17,072 --> 00:28:20,742 எனக்காக அல்ல, உனக்காகவும்உன் சகோதரிக்காகவும் தான் அங்குச் சென்றேன். 411 00:28:21,326 --> 00:28:22,786 இயேசு கிறிஸ்துவே. 412 00:28:26,957 --> 00:28:28,333 நீ இதுவரை ஜோசியைக் பார்த்தாயா? 413 00:28:29,084 --> 00:28:30,085 இல்லை. 414 00:28:33,463 --> 00:28:36,592 சூசனின் இறுதி சடங்கிற்கு முன் சிறைக்குசெல்லாமல் இருக்க முயற்சி செய், தயவுசெய்து. 415 00:28:37,801 --> 00:28:39,052 சூசன் இழிவானவள். 416 00:28:45,601 --> 00:28:50,689 பார், இது என் மேல் ஜோடிக்கப்பட்ட குற்றம்என்று நிரூபிக்க நான் முயற்சிக்கிறேன். 417 00:28:51,857 --> 00:28:55,319 சரி, ஏன் சில கறுப்பர்கள் உன்னைப் பற்றிகுறை கூறுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை. 418 00:28:55,736 --> 00:28:57,154 நீ எங்களிடம் ஏதாவது மறைக்கிறாயா? 419 00:28:57,237 --> 00:28:59,823 நீ பாதிக்கப்பட்டதைப் பற்றி அவள்நிகழ்ச்சியில் ஏதாவது சொல்லப் போகிறாளா? 420 00:29:00,324 --> 00:29:03,202 ஒருவேளை மக்கள் உனக்கு அனுதாபத்திற்காகதின்பண்டத்தை அனுப்பலாம். 421 00:29:03,285 --> 00:29:04,411 உனக்குத் தெரியுமா? 422 00:29:04,828 --> 00:29:06,246 டைசன், நீ என்னிடம் ஒழுகாக இருந்தால், 423 00:29:06,330 --> 00:29:10,250 அடுத்தத் தொடரில் அவளது நிகழ்ச்சியில் உன்னைசேர்க்கச் சொல்லி அவளிடம் கூற முடியும், 424 00:29:10,334 --> 00:29:14,379 பின்னர் அந்த வயதான பெண்ணைத்தலையில் சுட்டுக் கொன்றது நீ இல்லை என்று... 425 00:29:14,463 --> 00:29:20,511 அவளால் உலகில் உள்ள அனைவரையும்சமாதானப்படுத்த முடியும். 426 00:29:21,345 --> 00:29:22,262 என்ன சொல்கிறாய்? 427 00:29:29,019 --> 00:29:30,020 தோழர்களே. 428 00:29:35,651 --> 00:29:38,820 உள்ளே செல்லும் வழியில் என் எதிரில் இரண்டுமெக்சிகன்கள் உன்னைப் பற்றிப் பேசினார்கள். 429 00:29:39,530 --> 00:29:43,325 உயர்நிலை பள்ளியில் ஸ்பானிஷ் படித்துள்ளேன்.ஒவ்வொரு வார்த்தையும் எனக்குப் புரிந்தது. 430 00:29:46,787 --> 00:29:50,207 அதனால் என்ன? அது யார்? 431 00:29:54,127 --> 00:29:57,548 அவர் துப்பாக்கியை எடுத்துக் கொண்டுமீண்டும் வந்து என்னைக் கொல்லப் போகிறார். 432 00:29:57,840 --> 00:29:59,424 -யார்?-என் தந்தை. 433 00:29:59,842 --> 00:30:03,345 எனவே நான் காவலரை அழைத்தேன்.அவர்கள் மிக வேகமாக வந்தார்கள். 434 00:30:03,679 --> 00:30:05,973 ஒரே ஒரு நபர் தான் வந்தார்.அவர் துப்பறிவாளர். 435 00:30:07,558 --> 00:30:08,767 அது இவரா? 436 00:30:09,226 --> 00:30:10,519 அவரைப் போலத் தான் தெரிகிறது. 437 00:30:11,019 --> 00:30:14,022 அவரைப் பற்றி ஏதாவது தகவல் சொல்ல முடியுமா? 438 00:30:15,315 --> 00:30:19,111 அவர் மிகவும் கனிவானவர். பண்பட்டவர்.உதவியாக இருந்தார். 439 00:30:19,528 --> 00:30:21,905 ஆனால் அவர்... குழப்பத்தோடு இருந்தார். 440 00:30:22,322 --> 00:30:25,158 அக்டோபர் மாதம் என்பதால் அதிக வெப்பம் இல்லைஎனினும் அவருக்கு அதிகமாக வியர்த்தது. 441 00:30:25,701 --> 00:30:28,120 இது ஒரு நீண்ட, பரபரப்பான இரவுஎன்று அவர் கூறினார். 442 00:30:28,954 --> 00:30:31,957 அதன் அர்த்தம் என்னவென்று அடுத்த நாள் வரைஎனக்குப் புரியவில்லை. 443 00:30:32,040 --> 00:30:33,166 இதன் அர்த்தம் என்ன? 444 00:30:33,709 --> 00:30:36,920 அடுத்த நாள் காலையில் கம்பளம் முழுவதும்சிவப்பு கரையைப் பார்த்தேன். 445 00:30:37,504 --> 00:30:40,174 அவற்றைச் சுத்தம் செய்ய முயன்றபோது தான், அது இரத்தம் என்று தெரிந்தது. 446 00:30:41,008 --> 00:30:46,847 துப்பறிவாளர் கேவ் காலை 4:44 உன் வீட்டிற்குவந்தபோது அவர் காலணியில் ரத்தம் இருந்ததா? 447 00:30:46,930 --> 00:30:48,599 -ஆம்.-உறுதியாகவா? 448 00:30:48,682 --> 00:30:52,102 ஆம். நாங்கள் தரை கம்பளத்தைமாற்ற வேண்டியிருந்தது. 449 00:30:56,690 --> 00:30:57,524 சீக்கிரம்! 450 00:31:01,653 --> 00:31:04,031 கேவ். எப்பொழுது? 451 00:31:05,449 --> 00:31:06,658 சரி, எப்படி? 452 00:31:10,162 --> 00:31:11,538 நீ இப்போது என்ன செய்யப் போகிறாய்? 453 00:31:12,539 --> 00:31:15,042 நீ சரியான நேரத்தில் திரும்பிச் சென்றுஅதைச் சரி செய்ய வேண்டும். 454 00:31:15,792 --> 00:31:18,128 ஓவன். அது யார்? 455 00:31:18,629 --> 00:31:19,880 ஒன்றும் இல்லை. 456 00:31:31,433 --> 00:31:33,477 மறைந்து கொள்ள உனக்கு இந்த இடம்மட்டும்தான் கிடைத்ததா? 457 00:31:34,186 --> 00:31:35,270 குளிர் சாதனம் இருக்கிறது. 458 00:31:36,355 --> 00:31:37,356 அதனால் என்ன? 459 00:31:38,190 --> 00:31:39,274 அதனால். 460 00:31:39,358 --> 00:31:44,988 ஓ, "பாபி, நீ சொன்னது சரிதான்" என்றுசத்தமாகவும் தெளிவாகவும் நீ சொல்ல வேண்டும். 461 00:31:45,447 --> 00:31:48,784 அது உண்மையானதாக இருந்தால் நான் சொல்வேன்.ஆனால் நான் இதை உனக்குச் சொல்கிறேன். 462 00:31:48,867 --> 00:31:51,411 குற்றவாளிக்கு நேரம் கடந்தால்குற்ற உணர்வு வரும். 463 00:31:51,495 --> 00:31:54,414 அதாவது, என் காலணிகளில் இரத்தத்துடன் நான்வீட்டிற்கு வந்ததாக எனக்குத் தோன்றவில்லை. 464 00:31:54,498 --> 00:31:56,124 நான் ஓக்லாந்து காவல் துறையில்பணிபுரிந்தேன். 465 00:31:56,208 --> 00:31:59,002 அவர் பயப்படுகிறார்.அவர் தனது கட்டுப்பட்டாய் இழக்கிறார். 466 00:31:59,628 --> 00:32:03,215 இது தான், உன் இந்த முகத் தோற்றம் தான்உன்னை வெற்றி பெற வைக்கும். 467 00:32:05,425 --> 00:32:07,219 என்ன நடக்கிறது?நாம் கொண்டாடப் போகிறோமா இல்லையா? 468 00:32:07,302 --> 00:32:10,681 நிச்சயமாக. எங்கே?கற்பனையான மது அருந்தகத்திற்கு வேண்டாம். 469 00:32:11,723 --> 00:32:13,308 உன் சகோதரியிடம் இருந்துஎவ்வளவு காலம் விலகி இருப்பாய்? 470 00:32:13,392 --> 00:32:16,687 -அவர்கள் அனைவரைப் பற்றி கவலை இல்லை.-அட. என்ன நடந்தது? 471 00:32:16,770 --> 00:32:19,314 -அதை விடு.-இல்லை, நிச்சயம் முடியாது. எனவே சொல். 472 00:32:19,398 --> 00:32:20,399 -இந்த பேச்சை விடு.-ஏன்? 473 00:32:20,482 --> 00:32:21,775 நான் நிறுத்தச் சொன்னதால். 474 00:32:22,359 --> 00:32:25,195 அந்தத் தொனி எனக்கு நினைவிருக்கிறது.நீ அதற்காகப் பிரபலமாக இருந்தாய். 475 00:32:25,279 --> 00:32:26,363 நீங்களாகவே அதை ஏற்படுத்திக் கொண்டீர்கள். 476 00:32:26,446 --> 00:32:29,616 ஆனால், நீயும் நானும் காதலித்த போது, 477 00:32:29,700 --> 00:32:32,578 அந்தத் தொனியைப் பற்றி எந்த தகவலையும்கொடுக்காததால் நான் பிரபலமானேன். 478 00:32:32,953 --> 00:32:34,162 எனவே அதைக் கூறு. 479 00:32:38,208 --> 00:32:41,753 நான் அனைத்து பக்கங்களிலிருந்தும்தாக்கப்படுவதாக உணர்கிறேன். 480 00:32:42,337 --> 00:32:44,381 மதுபான கடை சோதனை செய்யப்படுகிறது,என்று கேள்விப்பட்டாய் இல்லையா? 481 00:32:44,464 --> 00:32:45,674 ஆம், நான் அதைப் பற்றிக் கேள்விப்பட்டேன். 482 00:32:45,757 --> 00:32:47,092 அதனால் அனைத்தும்ஆரம்ப கட்டத்திற்குச் சென்றது. 483 00:32:47,176 --> 00:32:50,971 ஓவன் எங்கள் மீது குண்டர்களை ஏவினார்,விஷயம் கட்டுப்பாடின்றிச் சென்றது. 484 00:32:51,388 --> 00:32:55,809 வாரண்டை வைத்து சைடியை கைதுசெய்தார்கள். அவளை அவமானப்படுத்தினார்கள். 485 00:32:56,810 --> 00:32:58,520 அப்பா மிகவும் கோபமடைந்தார். 486 00:33:00,022 --> 00:33:01,940 அவர் என் கழுத்தை பிடித்துஇழுத்துச் சென்றார். 487 00:33:02,357 --> 00:33:03,358 என்ன? 488 00:33:05,903 --> 00:33:10,741 நான் எப்போதும் நிறையப் பேசுவேன். ஆனால்அப்போது எனக்கு ஒரு வார்த்தை கூட வரவில்லை. 489 00:33:14,912 --> 00:33:16,330 அவர் என்னைப் பார்த்த விதம்... 490 00:33:20,334 --> 00:33:21,335 நான் சொல்வதைக் கேள். 491 00:33:21,960 --> 00:33:24,713 உன் தந்தையின் கண்களைப் பார்த்துநீ பயப்படக் கூடாது, 492 00:33:25,255 --> 00:33:28,008 அதாவது, உன் குடும்பத்துடன் சேர்வதற்காக... 493 00:33:28,091 --> 00:33:30,344 சில நேர்மையற்ற காவலர்களைநீ விட்டுவிடக் கூடாது. 494 00:33:31,220 --> 00:33:36,808 உன்னால் அனைத்தையும் சரிசெய்ய முடியாமல்போகலாம், ஆனால் நீ முயற்சிக்க வேண்டும். 495 00:33:38,852 --> 00:33:40,187 அது எதுவாக இருந்தாலும். 496 00:33:49,238 --> 00:33:53,242 ஜாக்ஸுக்கு ஏதோ பிரச்சனை, கிரோகா. 497 00:33:54,368 --> 00:33:56,119 நான் போன பிறகு அவனையார் கவனித்துக் கொண்டார்கள்? 498 00:33:57,162 --> 00:33:58,455 நாங்கள் அனைவரும் சுழற்சி முறையில்கவனித்துக் கொண்டோம். 499 00:33:59,414 --> 00:34:02,334 யாரோ அவனுக்குக் கொடுக்கக் கூடாதஒன்றை கொடுத்திருக்கிறார்கள். 500 00:34:03,377 --> 00:34:04,795 இங்கே வந்துப் பார். 501 00:34:13,303 --> 00:34:15,514 எனக்குத் தெரியும், நீ தான்என்னை தாக்கினாய், குட்டிச் சாத்தானே. 502 00:34:15,597 --> 00:34:16,806 இல்லை, சத்தியமாக நான் இல்லை. 503 00:34:17,391 --> 00:34:18,725 ஏனென்று எனக்குத் தெரிய வேண்டும். 504 00:34:18,809 --> 00:34:20,435 நீ தவறாகப் புரிந்துக் கொண்டாய். 505 00:34:23,522 --> 00:34:25,690 நான் அவ்வாறு தூண்டப்பட்டேன்,சரியா?தயவு செய்து என்னை விடு. 506 00:34:25,774 --> 00:34:27,775 -பொய் சொல்லாதே.-நான் உண்மையைத் தான் சொல்கிறேன். 507 00:34:27,860 --> 00:34:30,821 என் காதலியை போதை மருந்திற்காக கைது செய்து,என் மகனையும் எங்கோ கடத்திச் சென்றார்கள். 508 00:34:30,904 --> 00:34:32,531 அவனை மறைத்து வைத்திருந்தார்கள். 509 00:34:33,824 --> 00:34:34,992 பெயரைச் சொல். 510 00:34:35,074 --> 00:34:37,202 உன்னை சந்திக்க வந்த காவல் அதிகாரி தான். 511 00:34:58,515 --> 00:35:01,768 ஏய், ஏய்! என்னிடம் இருந்துஅவனை விலக்குங்கள்! 512 00:35:09,443 --> 00:35:10,861 உருமாற்றம் மற்றும் பயிற்சி அளிக்கப்படும் 513 00:35:24,249 --> 00:35:25,542 போக விடு, ஜாக்ஸ்! 514 00:35:30,255 --> 00:35:31,298 அவனை விலக்குங்கள்! 515 00:35:37,971 --> 00:35:42,100 பிடித்து வைக்க முயற்சி செய்துசோர்ந்து விட்டேன் 516 00:35:42,184 --> 00:35:44,645 இப்பொழுது மிகத் தெளிவாகத் தெரிகிறது 517 00:35:44,728 --> 00:35:47,689 எல்லை இப்பொழுது அருகில் உள்ளது 518 00:35:47,773 --> 00:35:53,779 ஆம், என்னால் சுவாசிக்க மட்டுமே முடிகிறது 519 00:35:53,862 --> 00:35:57,366 எனக்குப் பிடித்தப் பாடல்.அது மிகவும் கவர்ச்சியாக இருந்தது. 520 00:35:58,492 --> 00:36:01,370 அவள் உன்னுடன் எப்பொழுதும் கலவியில்ஈடுபட மட்டாள், ஹெர்பி, எனவே நிறுத்து. 521 00:36:08,877 --> 00:36:10,462 -ஏய்.-ஏய். 522 00:36:10,546 --> 00:36:14,341 இப்பொழுது இல்லை. சரி, நான்சமைக்கப் போகிறேன், நீயும் வா, மூவரும்... 523 00:36:14,424 --> 00:36:15,425 நாம் பேசலாமா? 524 00:36:15,884 --> 00:36:17,094 பேசலாம். 525 00:36:17,761 --> 00:36:18,762 சரி. 526 00:36:21,390 --> 00:36:23,809 நீ அவ்வாறு கைது செய்யபட்டதற்காகநான் மன்னிப்புக் கேட்கிறேன். 527 00:36:24,685 --> 00:36:26,979 அந்த அதிகாரிகள் உன்னை அப்படி நடத்தியதற்காகநான் மன்னிப்புக் கேட்கிறேன். 528 00:36:27,062 --> 00:36:30,190 அவர்கள் உன்னை சங்கடப்படுத்தியதற்காகவும்நான் மன்னிப்புக் கேட்கிறேன். 529 00:36:31,775 --> 00:36:35,112 நீ அந்த நினைவோடு வாழ வேண்டியதற்காக நான்வருந்துகிறேன்.நீ அப்படி இருக்க தேவையில்லை. 530 00:36:35,195 --> 00:36:37,656 அந்த அதிகாரிகள் செய்ய வேண்டியதைசெய்ததற்காக நீ நான் மன்னிப்புக் கேட்கிறாய் 531 00:36:38,448 --> 00:36:40,701 -நீ அதில் சம்மந்தப்பட்டுள்ளாயா?-மிகவும் சீக்கிரமாய் கேட்டுவிட்டாள். 532 00:36:40,784 --> 00:36:43,370 இந்த குடும்பத்தில் அவர்களைஅதிகாரிகள் என்று அழைப்பதில்லை. 533 00:36:43,453 --> 00:36:46,456 குறிப்பாக அவர்கள் என் மதுக் கடையைநீ சொன்னதால் மூட முயற்சி செய்யும் பொழுது. 534 00:36:46,540 --> 00:36:48,417 நான் பார்த்துக் கொள்கிறேன், அப்பா.பரவாயில்லை. 535 00:36:50,627 --> 00:36:54,339 "எல்லாம் நன்றாக இருக்கிறது, நாங்கள் நன்றாகஇருக்கிறோம்" என்று நான் சொல்ல வேண்டுமா? 536 00:36:55,424 --> 00:36:57,009 -நான் பொய் சொல்ல வேண்டுமா?-நான் அதை சரி செய்ய வேண்டும். 537 00:36:57,092 --> 00:37:00,846 அனுமதி சீட்டிற்காக என்னை ஆடை அவிழ்த்துதேடினார்கள். அதை எப்படி சரி செய்வாய்? 538 00:37:01,221 --> 00:37:03,140 காவல்துறை பதிவில் உள்ள என் முகத்தைமறைக்கச் செய்யப் போகிறாயா? 539 00:37:03,223 --> 00:37:06,351 அல்லது நான் எதற்காக பணிக்கு வரவில்லை என்றுஎன் அதிகாரிகளிடம் விளக்கப் போகிறாயா? 540 00:37:06,894 --> 00:37:08,604 அவர்கள் என்னை கண்காணிப்பில்போட்டு விட்டார்கள் தெரியுமா? 541 00:37:08,687 --> 00:37:09,730 -சைடி...-பேசாதே. 542 00:37:10,314 --> 00:37:12,441 நான் இங்கு சண்டை போட வரவில்லை. 543 00:37:13,150 --> 00:37:14,359 சத்தியமாக, என் அருமை சகோதரியே. 544 00:37:17,946 --> 00:37:18,864 சரி. 545 00:37:20,657 --> 00:37:24,244 அப்பா, நீங்கள் என் மேல் கோவமாக இருப்பதுஎனக்குத் தெரியும், மேலும் அது தவறில்லை. 546 00:37:24,870 --> 00:37:26,955 -ஆனால் நானும் உங்கள் மேல் கோவமாக உள்ளேன்.-உனக்குக் கோவமா? 547 00:37:27,039 --> 00:37:31,335 உங்களுக்கு உதவி வேண்டுமென எனக்கு தெரியும்எனவே கொஞ்சம் கருணை காட்டுகிறேன்,அப்பா. 548 00:37:31,793 --> 00:37:35,130 அன்று நீங்கள் எனக்கு செய்த காரியத்தை என்தந்தை என்றும் எனக்கு செய்திருக்கமாட்டார். 549 00:37:39,510 --> 00:37:43,305 ஊறுகாய், வெட்டபட்ட வெங்காயம், பொறியல்கள்.சிறப்பு. நன்றி. 550 00:37:47,726 --> 00:37:49,853 என்னை சுற்றி இருக்கும் போதுஎல்லாம் சாதாரணமாக உள்ளது போல் 551 00:37:49,937 --> 00:37:51,188 அவர்கள் நடிக்கிறார்கள்என்று எனக்குத் தெரியும். 552 00:37:53,273 --> 00:37:55,609 ஆனால் அவர்கள் அந்த இணைய ஒளிபரப்பைகவனிக்கிறார்கள், சரியா? 553 00:37:56,568 --> 00:37:59,738 இது எவருடைய திறமையையும்பாதிக்கவில்லை, ஐயா. 554 00:38:03,075 --> 00:38:08,789 யூகங்கள் என்ன என்று பார்னல் கூறுவதைநீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். 555 00:38:09,456 --> 00:38:10,666 அது தேவையற்றது. 556 00:38:13,710 --> 00:38:14,837 எனக்குப் புரிகிறது. 557 00:38:15,254 --> 00:38:16,797 நீங்கள் கேட்ட உணவு தயார், செட்ரோஸ். 558 00:38:22,803 --> 00:38:25,222 நேர்மை இல்லாத புகழுரையை நான் வெறுக்கிறேன். 559 00:38:26,223 --> 00:38:30,978 அனைத்து பணத்தையும் தானம் தந்து,கெட்ட வார்த்தையே பேசாமல் இருக்கும்... 560 00:38:31,061 --> 00:38:36,608 புனித மக்களின் உருவப்படங்கள் வரைபவர்களைஉங்களுக்குத் தெரியும். 561 00:38:38,527 --> 00:38:39,945 எனவே... 562 00:38:40,696 --> 00:38:44,199 முக்கியமான விஷயம் என்னவென்றால் என் அத்தைசூசன் கெட்ட வார்த்தையை விரும்புபவர்... 563 00:38:44,616 --> 00:38:50,497 என்று சொல்லாமல் இந்த மேடையைவிட்டுச் செல்லமாட்டேன். 564 00:38:52,249 --> 00:38:54,459 அது அவருக்கு விருப்பமான ஒன்று:ஒரு நல்ல கெட்ட வார்த்தை. 565 00:38:58,088 --> 00:38:59,339 என் சிறு வயதில்... 566 00:39:02,593 --> 00:39:05,429 சிலமுறை என் தலையில் ஏதோசிக்கிக் கொண்டது போல இருக்கும். 567 00:39:06,221 --> 00:39:09,808 என் மூளை ஒரு பிரமை மற்றும் அதற்குவெளியே செல்ல வழி இல்லாதது போல இருக்கும், 568 00:39:09,892 --> 00:39:14,104 மற்றும் அந்த வேதனையில் இருந்துஎன்னைவெளி வரச் செய்தது சூசன் தான். 569 00:39:14,188 --> 00:39:18,317 எனக்கு நன்றாக தெரியும் அவர் இல்லை என்றால்நான் உயிருடன் இருந்திருக்க மட்டேன் எனவே... 570 00:39:19,985 --> 00:39:22,112 நான் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். 571 00:39:29,953 --> 00:39:31,914 இப்பொழுது யாருக்கேனும் பகிர்ந்துக் கொள்ளநினைவுகள் அல்லது... 572 00:39:31,997 --> 00:39:34,791 -அது சரியாக இருந்தது.-...கடைசி ஆசை இருந்தால் சொல்லலாம். 573 00:39:34,875 --> 00:39:36,543 நீ ஏதாவது சொல்ல வேண்டும். 574 00:39:36,627 --> 00:39:38,378 நீ வந்து அதைச் செய்யலாம். 575 00:39:39,630 --> 00:39:42,591 நீ இங்கு தங்கவில்லை என்றாலும், நீஇங்கு இருப்பதில் நான் மகிழ்சி அடைகிறேன். 576 00:39:56,396 --> 00:39:57,731 உன் தாய் இங்கு இருக்கிறாள். 577 00:40:03,195 --> 00:40:04,655 இயேசுவே, அவள் குடித்திருக்கிறாள். 578 00:40:04,738 --> 00:40:06,823 அவர் வரமாட்டார் என்றுநீ சொன்னதாக நினைத்தேன். 579 00:40:07,324 --> 00:40:09,576 அலெக்ஸ். தயவு செய்து. 580 00:40:10,244 --> 00:40:12,955 -எரின்...-இல்லை. நானும் வருந்த வேண்டும்! 581 00:40:21,004 --> 00:40:24,800 இருவரும் ஒரே மாதிரி தான். உன்னைப் பார். 582 00:40:25,551 --> 00:40:28,887 உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக்கொள்கிறீர்கள். நீங்கள் புறப்பட வேண்டும். 583 00:40:28,971 --> 00:40:30,013 உண்மையாகவா? 584 00:40:30,514 --> 00:40:34,351 என்னை நானே அசிங்கப்படுத்திக் கொள்கிறேனா,ஜோஜோ? 585 00:40:40,023 --> 00:40:41,024 மன்னிக்கவும். 586 00:40:46,238 --> 00:40:51,201 சூசன் என்னுடைய தங்கை, மற்றும்நாங்கள் எப்போதும் ஒற்றுமையாக இருந்ததில்லை. 587 00:40:52,286 --> 00:40:54,246 அவளுக்கு கேவலமானவற்றில் தான்ஈடுபாடு இருக்கும். 588 00:40:55,455 --> 00:40:57,082 நான் அவளிடம் சொன்னேன். 589 00:40:57,165 --> 00:41:01,420 அவளுடைய மலிவான துணிகள்,செருப்புகள், 590 00:41:01,503 --> 00:41:03,005 பின்னபட்ட கம்பளிச் சட்டை... 591 00:41:04,298 --> 00:41:07,050 நாங்கள் ஒத்துப் போன ஒரே விஷயம்:என் மகள்கள். 592 00:41:07,134 --> 00:41:08,427 நான் அதற்காக அவளைப் பாராட்டுகிறேன். 593 00:41:08,510 --> 00:41:12,097 அவர்கள் குழந்தையாக இருந்த போது அவள்இரவில் வந்து எனக்கு உதவி செய்வாள். 594 00:41:12,723 --> 00:41:14,683 அவள் ஒரு குழந்தையைச் சுமந்துக் கொள்வாள்மற்றும் நான் ஒன்றைச் சுமந்துக் கொள்வேன். 595 00:41:14,766 --> 00:41:17,811 பிறகு நாங்கள் அவர்களை தூளியில் போட்டுஆட்டி, பாட்டு பாடுவோம். 596 00:41:37,289 --> 00:41:40,667 நீ எங்குச் சென்றாலும், எனக்கு கவலை இல்லை 597 00:41:43,212 --> 00:41:48,967 என் வாழ்வில் முக்கியமானவற்றையும்,என் நேரத்தையும் இழந்துவிட்டேன் 598 00:41:50,761 --> 00:41:56,225 அதனால் நான் எங்குச் செல்வது?எதைப் பார்ப்பது? 599 00:41:58,602 --> 00:42:03,315 என்னை அநேகர் விரட்டுவதை நான் பார்க்கிறேன் 600 00:42:05,192 --> 00:42:07,903 அதனால் நீ எங்கு செல்லப் போகிறாய்... 601 00:42:09,613 --> 00:42:10,614 நாம் பேச வேண்டும் 602 00:42:10,697 --> 00:42:12,658 நீங்கள் 518 ஃபொன்டானா டிரைவிற்குஉங்கள் காலணியில் ரத்தத்துடன் வந்தீர்கள். 603 00:42:12,741 --> 00:42:14,326 சக் கொலை செய்யப்பட்ட அதே இரவு. 604 00:42:14,409 --> 00:42:20,290 நான் நீண்ட காலம் வாழ்ந்தால் நான்இறந்து விடுவேன் என்று பயமாக இருக்கிறது 605 00:42:23,502 --> 00:42:27,714 அதனால் நீ எங்குச் சென்றாலும்நான் உன்னை பின் தொடர்வேன் 606 00:42:30,509 --> 00:42:36,932 எனக்கு இனியும் நீ உதவினால் 607 00:42:40,769 --> 00:42:44,940 இந்தச் சாலையில் நாம் அந்நியர்கள் 608 00:42:48,193 --> 00:42:50,904 நாம் இருவர் அல்ல, ஒருவர் தான்