1 00:01:41,768 --> 00:01:45,147 என்னுடைய வாழ்க்கையில் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக துன்பப்பட்டேன். 2 00:01:49,109 --> 00:01:50,777 நான் புறக்கணிக்கப்பட்ட, வெளியேற்றப்பட்ட ஒரு குழந்தை. 3 00:01:50,861 --> 00:01:53,280 புறக்கணிக்கப்பட்ட குழந்தை. வெளியேற்றப்பட்ட குழந்தை. 4 00:01:53,363 --> 00:01:54,698 வெளியேற்றப்பட்ட குழந்தை. 5 00:01:56,283 --> 00:01:57,868 என்னை நானே பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. 6 00:01:59,119 --> 00:02:00,662 பிரச்சினைகளை சமாளிக்க வேண்டி இருந்தது. 7 00:02:01,538 --> 00:02:04,666 மற்றவர்களிடமிருந்தும், என்னிடமிருந்தும் என்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டி இருந்தது. 8 00:02:09,086 --> 00:02:10,422 என்னுள்ளே இருந்த சாத்தான்களிடமிருந்து. 9 00:03:38,260 --> 00:03:41,138 இன்று நம் விருந்தினரான, மறுபரிசீலனை என்ற 10 00:03:41,221 --> 00:03:43,682 புகழ் பெற்ற பாட்காஸ்டின் தொகுப்பாளர் பாபி பார்னலிற்கு நன்றி சொல்கிறேன். 11 00:03:43,765 --> 00:03:47,144 ஒரு கடைசி கேள்வி, பாபி. உங்களுடைய அடுத்த முயற்சி என்ன? 12 00:03:47,227 --> 00:03:49,229 வாரன் கேவ் தொடருக்கு பிறகு எப்படி தொடரப் போகிறீர்கள்? 13 00:03:49,813 --> 00:03:55,652 வாரன் கேவ் கதை என் சொந்த வாழ்க்கையில் ஒரு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியது. 14 00:03:55,736 --> 00:03:58,280 எனவே, சிறிது இடைவெளி எடுத்து 15 00:03:58,363 --> 00:04:01,450 நான் தேர்வு செய்யக்கூடிய அடுத்த கதையைப் பற்றி நன்றாக யோசனை செய்யப் போகிறேன். 16 00:04:01,533 --> 00:04:04,411 சரி, லாரன் ஹில் போன்று எங்களை காத்திருக்க செய்யாதீர்கள், பாபி. 17 00:04:04,494 --> 00:04:05,996 எங்களுக்கு ஒரு புதிய தொடர் வேண்டும். 18 00:04:06,079 --> 00:04:08,957 அனைவருக்கும் கேட்டிருக்கும். இன்னும் சில காலமாகும். எங்களோடு இணைந்ததற்கு நன்றி. 19 00:04:09,041 --> 00:04:10,334 வந்து, என்னை அழைத்ததற்கு நன்றி. 20 00:04:24,598 --> 00:04:26,058 ஹேய், பாபி. 21 00:04:26,141 --> 00:04:28,060 -ஹேய், ஹெர்பி. -எப்போதும் போலவா? 22 00:04:28,560 --> 00:04:30,521 -எப்போதும் போலவே. ஹேய். -சரி. 23 00:04:34,066 --> 00:04:35,067 ஆச்சரியம்! 24 00:04:40,364 --> 00:04:41,657 அவளை ஆச்சரியப்படுத்திவிட்டோம். 25 00:04:42,366 --> 00:04:43,617 ஹாய். 26 00:04:44,284 --> 00:04:46,119 -ஹேய். -உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி. 27 00:04:46,203 --> 00:04:47,955 உன்னை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 28 00:04:49,706 --> 00:04:51,834 -நீ அழகாக இருக்கிறாய். -நீ பிரமாதமாக இருக்கிறாய். 29 00:04:53,961 --> 00:04:54,962 புரியவில்லை. 30 00:04:55,045 --> 00:04:59,299 உன்னை கிட்டத்தட்ட தோற்கடித்தேன். உண்மையிலேயே தோற்கடித்துவிட்டேன். 31 00:04:59,383 --> 00:05:00,592 விடு. 32 00:05:00,676 --> 00:05:02,845 -சரி. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. -கடவுளே. 33 00:05:02,928 --> 00:05:04,555 -நன்றி. -அட. 34 00:05:04,638 --> 00:05:05,848 இப்பவும் ஏமாற்றுகிறாய். 35 00:05:06,431 --> 00:05:08,100 நீங்கள் அப்படி சொல்லக் கூடாது, அப்பா. 36 00:05:08,183 --> 00:05:09,393 -சொல்லலாம். -விடு. 37 00:05:09,476 --> 00:05:11,854 இந்த மது கடைக்கு வந்த முதல் நாளன்றே என்னிடமிருந்து திருடினாள். 38 00:05:11,937 --> 00:05:15,691 அழுக்கான கைகளோடு திருடி விட்டு நான் பிடிப்பதற்குள் நழுவி ஓடி விட்டாள். 39 00:05:15,774 --> 00:05:18,694 கொஞ்ச தூரம் ஓடிய பிறகு இவர்கள் இருவரும் என்னை வழி மறித்தார்கள். 40 00:05:18,777 --> 00:05:20,279 ஆக எல்லோரும் அவளை தாக்கினீர்களா? 41 00:05:20,362 --> 00:05:21,572 ஆமாம் தாக்கினோம். 42 00:05:21,655 --> 00:05:23,323 அவள் ஆக்ரோஷமாக இருந்ததால், நாங்கள் சிரமப்பட்டோம். 43 00:05:24,992 --> 00:05:27,411 நாங்கள் சண்டை போட்டு ஒருவர் மீது ஒருவர் குப்பையை வீசி 44 00:05:27,494 --> 00:05:29,329 ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியாதபடி செய்தோம். 45 00:05:30,163 --> 00:05:32,749 இவர்கள் மூவருமே கெட்ட வாடையோடு திரும்பி வந்தார்கள். 46 00:05:32,833 --> 00:05:34,501 உங்களுக்கு என்ன வயதிருக்கும்? 10, 11 இருக்குமா? 47 00:05:36,086 --> 00:05:37,129 ஆமாம். 48 00:05:38,130 --> 00:05:39,840 உலக புகழ் பெற்ற எழுத்தாளர். 49 00:05:40,883 --> 00:05:42,718 உன்னை சந்தித்து ரொம்ப காலமாகிவிட்டது. 50 00:05:42,801 --> 00:05:46,388 வந்து, என் வீட்டை விட விடுதிகளில் தான் அதிக நேரம் செலவிடுகிறேன். 51 00:05:48,015 --> 00:05:50,934 இவ்வளவு காலம் தெருக்களில் வாழ்ந்தும், நீ இங்கே வர யோசிக்கவில்லை என்பதை வெறுக்கிறேன் 52 00:05:53,812 --> 00:05:55,105 எங்களிடம் நீ திரும்பி வரவில்லை. 53 00:05:57,399 --> 00:05:58,650 நீ இங்கே திருட வந்தாயா? 54 00:05:58,734 --> 00:06:02,279 அடக் கடவுளே! என்னால் அதை மறக்க வைக்க முடியாது. 55 00:06:02,362 --> 00:06:05,073 -ஆமாம். -புது பணக்காரி போல இருக்கிறாய். 56 00:06:05,157 --> 00:06:06,325 ஹாய். 57 00:06:12,539 --> 00:06:13,916 சரி, வாருங்கள். 58 00:06:26,929 --> 00:06:29,890 நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்திருப்பதை உங்களால் நம்ப முடிகிறதா? 59 00:06:44,404 --> 00:06:47,533 பிரச்சினைகள் ஏற்பட்ட போது உனக்குத் துணையாக இங்கு இல்லாததற்கு என்னை மன்னித்துவிடு. 60 00:06:48,659 --> 00:06:51,078 நீ தொலைபேசியில் பேசினாய், கடிதங்கள் எழுதினாய், எனக்கு அதுவே போதும். 61 00:06:51,620 --> 00:06:53,163 நான் பிழைத்துக் கொண்டேன். 62 00:06:53,830 --> 00:06:56,500 அது தான் சரி, அன்பே. நாம் பிழைத்துக் கொள்ள வேண்டும். 63 00:06:56,583 --> 00:06:58,335 அது நம்மை திடமாக ஆகும். 64 00:06:59,920 --> 00:07:01,463 அதைத் தான் நமக்கு சொல்லித் தந்தார்கள். 65 00:07:04,216 --> 00:07:05,926 இன்கிராம் எங்கே? நாளை வருவாரா? 66 00:07:06,844 --> 00:07:07,845 அப்படித்தான் நம்புகிறேன். 67 00:07:08,345 --> 00:07:12,850 சிறிது பிரச்சனையானது என்றாலும் அந்த அன்பான உறவை ஞாபகப்படுத்திக்கொள்ளப் பார்க்கிறோம். 68 00:07:13,976 --> 00:07:15,811 கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. 69 00:07:17,271 --> 00:07:19,273 அப்புறம் ஜோஷ்? அவனும் வருவானா? 70 00:07:19,982 --> 00:07:22,192 கண்டிப்பாக. 71 00:07:23,110 --> 00:07:24,152 ஏன் வராமல் இருக்கப் போகிறார்? 72 00:07:31,869 --> 00:07:33,871 -நாளை சந்திக்கலாம். -நாளை சந்திக்கலாம். 73 00:07:42,296 --> 00:07:46,884 மைக்கா கீத்-இன் அனுபவம் டிஸ்கார்ட் 74 00:07:49,052 --> 00:07:52,264 இருவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. 75 00:07:53,182 --> 00:07:54,183 ஒன்றாக பார்த்ததில் மகிழ்ச்சி. 76 00:07:58,770 --> 00:08:00,981 -ஹைய்யா. -நான் நமக்கு மதுபானம் வாங்கி வருகிறேன். 77 00:08:01,064 --> 00:08:03,275 -சரி. -சரி. ஹேய், என்னோடு வா. 78 00:08:09,031 --> 00:08:10,157 இரு. 79 00:08:10,699 --> 00:08:11,700 அது என்ன... 80 00:08:12,409 --> 00:08:15,662 இது தான் டிஸ்கார்ட் கையெழுத்துப் பிரதியின் முதல் குறிப்பு. 81 00:08:15,746 --> 00:08:17,247 உன்னுடைய குறிப்புகளும் இதில் உண்டு. 82 00:08:18,916 --> 00:08:20,542 உன் உதவி இல்லாமல் இது நடந்திருக்காது. 83 00:08:21,877 --> 00:08:24,588 முதல் முறை இதை படிக்கும் போது எனக்கு மிகவும் பயமாக இருந்தது. 84 00:08:24,671 --> 00:08:27,674 பேருந்தில் என் அருகில் அமர்ந்த தருணத்தில் இருந்து நீ நிறையவே முன்னேறி இருக்கிறாய். 85 00:08:27,758 --> 00:08:31,845 அந்த இரண்டு சிறு பெண்களும் ரொம்பவும் தொலைவில் இல்லை, அப்படித்தானே? 86 00:08:31,929 --> 00:08:34,389 இல்லை, ஆனால் அது பற்றி இந்த உலகத்திற்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. 87 00:08:34,972 --> 00:08:36,433 மன்னிக்கவும். 88 00:08:36,517 --> 00:08:38,393 ஹேய், உதவி தொகை வாங்கும் சில குழந்தைகள் இங்கே இருக்கிறார்கள். 89 00:08:38,477 --> 00:08:41,063 -நீங்கள் அவர்களை சந்திக்கிறீர்களா? -சரி... வருகிறேன். ஆனால் முதலில்... 90 00:08:41,145 --> 00:08:43,440 இவள் தான் ஐவி ஆபட். ஷெல்டரில் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் நபர், 91 00:08:43,524 --> 00:08:46,068 இவளின்றி என்னால் எதுவும் செய்ய முடியாது. 92 00:08:46,777 --> 00:08:47,945 ஐவி, இவர் தான் பாபி. 93 00:08:48,028 --> 00:08:49,738 உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 94 00:08:49,821 --> 00:08:50,822 எனக்கும் தான். 95 00:08:50,906 --> 00:08:53,367 நான் ஒரு நொடி மைக்காவிடம் தனியாக பேச முடியுமா? 96 00:08:53,450 --> 00:08:55,285 -கண்டிப்பாக. -சிறப்பு. 97 00:08:55,369 --> 00:08:56,370 -நான் வந்து விடுகிறேன். -சரி. 98 00:08:57,871 --> 00:08:58,872 ஆஹா. 99 00:09:10,300 --> 00:09:11,552 நிறைய பேர்கள் வந்திருக்கிறார்கள், இல்லையா? 100 00:09:13,470 --> 00:09:15,556 ஜோஷ். அட, கடவுளே. 101 00:09:15,639 --> 00:09:17,015 இங்கே வா. 102 00:09:17,683 --> 00:09:18,684 நான் உன் பிரிவால் மிகவும் வாடினேன். 103 00:09:18,767 --> 00:09:21,019 நானும் தான். 104 00:09:23,230 --> 00:09:24,314 அட. 105 00:09:25,274 --> 00:09:28,318 நீங்கள் இருவரும் ஒரு சக்தி வாய்ந்த தம்பதி ஆகி விட்டீர்கள். 106 00:09:29,319 --> 00:09:30,696 மைக்கா உலகப் புகழ் பெற்றவள் 107 00:09:30,779 --> 00:09:34,074 மற்றும் 'சன்ஸ் ஆஃப் ஐவார்' பற்றிய உன்னுடைய ஆவணப்படம் எல்லா இடத்திலும் காணப்படுகிறது. 108 00:09:35,325 --> 00:09:37,286 இப்படி நடக்கும் என்று யாருக்குத்தான் தெரியும்? 109 00:09:38,996 --> 00:09:40,080 யாருக்குத் தெரியும்? 110 00:09:42,207 --> 00:09:43,375 என்ன நடக்கிறது? 111 00:09:45,002 --> 00:09:46,295 நீ நலம் தானே? 112 00:09:49,798 --> 00:09:50,966 அதற்கு என்ன அர்த்தம்? 113 00:09:52,384 --> 00:09:56,180 கண்டுகொள்ளாதே. என் உடம்பு முழுவதும் ரஷ்ய ரத்தம் தான் ஓடுகிறது. 114 00:09:56,263 --> 00:10:00,267 அதாவது, அபாயம் மற்றும்... வருத்தம். இவை என் ரத்தத்தில் ஊறி இருக்கின்றன. 115 00:10:01,143 --> 00:10:02,895 என்னிடம் நீ என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். 116 00:10:04,354 --> 00:10:06,773 அப்புறமாக என் ஸ்டுடியோவிற்கு வா. நாம் அப்போது பேசலாம். 117 00:10:07,649 --> 00:10:09,610 இது ஏதோ ஒரு கட்டத்தில் முடிந்துவிடும். இல்லையா? 118 00:10:11,653 --> 00:10:17,492 மைக்காவின் சுயசரிதை டிஸ்கார்ட்,எல்லா விவரங்களையும் துல்லியமாக பகிர்ந்துள்ளார். 119 00:10:18,410 --> 00:10:23,081 அவருடைய துன்பம் லட்சகணக்கானவர்களை பாதித்து அதே அளவான மக்களை ஊக்குவித்தும் இருக்கிறது. 120 00:10:24,708 --> 00:10:29,087 மேலும் தாமதிக்காமல், இந்த கணத்தின் தலைவியான, மைக்கா கீத் உங்களோடு பேசுவார். 121 00:10:33,634 --> 00:10:34,801 மாலை வணக்கம். 122 00:10:36,762 --> 00:10:38,847 அங்கே மிகவும் பயந்த ஒரு இளம் பெண் இருக்கிறாள். 123 00:10:40,557 --> 00:10:44,645 13 வயது பெண். தன்னைத் தானே தற்காத்துக் கொள்ளும்படி கைவிடப்பட்டவள். 124 00:10:46,522 --> 00:10:48,732 மறக்கப்பட்டவள். ஒதுக்கப்பட்டவள். 125 00:10:49,900 --> 00:10:52,945 இருந்தாலும் அவள் இதில் இருந்து மீண்டாள். 126 00:10:53,487 --> 00:10:57,741 இதை முதன்முதலில் பார்த்த போது. மூன்று நாள் படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை. 127 00:10:57,824 --> 00:11:02,538 அவளை பார்ப்பதற்கு ரொம்ப கடினமாக இருந்தது. என்னையே பார்ப்பதற்கு கடினமாக இருந்தது. 128 00:11:04,540 --> 00:11:05,666 இத்தனை வருடங்கள் கழித்து. 129 00:11:07,876 --> 00:11:10,295 நான் திருடியிருக்கிறேன். ஏமாற்றியிருக்கிறேன். சண்டை போட்டுள்ளேன். 130 00:11:11,088 --> 00:11:12,297 மது பானம் குடித்தேன். 131 00:11:13,090 --> 00:11:14,258 போதை மருந்து எடுத்துக் கொண்டேன். 132 00:11:14,925 --> 00:11:17,761 பல சமயங்களில் என் அனுமதி இல்லாமலேயே, என் உடல் சூறையாடப்பட்டது. 133 00:11:19,304 --> 00:11:21,598 அவளை அது முற்றிலும் முடக்கியது. 134 00:11:21,682 --> 00:11:23,141 அது என்னை முற்றிலும் முடக்கியது. 135 00:11:25,936 --> 00:11:28,772 எனவே, நான் எழுத்துக்களின் துணையை நாடினேன். 136 00:11:30,107 --> 00:11:31,733 மறைந்து விடாமல் இருப்பதற்காக எழுதினேன். 137 00:11:35,612 --> 00:11:38,532 இன்றைய இரவின் முக்கிய குறிக்கோள் 138 00:11:38,615 --> 00:11:44,580 தங்களுடைய கற்பனையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒரு பாதுகாப்பான இடம் 139 00:11:44,663 --> 00:11:49,960 ஒவ்வொரு ஒதுக்கப்பட்ட இளம் நபரும் பெற வேண்டும் என்பது தான். 140 00:11:53,380 --> 00:11:54,548 நன்றி. 141 00:11:58,510 --> 00:12:00,679 நன்றி. 142 00:12:01,763 --> 00:12:05,893 நான் முடிப்பதற்கு முன்னால், ரிவ்லின் கலைக்கூடம், 143 00:12:05,976 --> 00:12:08,937 என்னுடைய பதிப்பாசிரியர்கள், சைமன் & ஷுஸ்டர், 144 00:12:09,021 --> 00:12:12,983 ஷெல்டரில் உள்ள என் அருமையான பணியாளர்கள், மற்றும் என்னை இந்தப் பாதையில் போக தூண்டிய, 145 00:12:13,066 --> 00:12:18,655 என் தோழி, பாபி பார்னல் ஆகியோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். 146 00:12:19,573 --> 00:12:22,826 என் கிறுக்கல்களின் தொகுப்பை பார்த்து, அவள் அவை அர்த்தமுள்ளவை என புரிந்துகொண்டாள். 147 00:12:22,910 --> 00:12:27,664 இந்த உலகத்திற்கு என்னால் எதையும் கொடுக்க முடியும் என்பதைப் பற்றிய 148 00:12:28,248 --> 00:12:30,459 அவளது திடமான நம்பிக்கை தான் என் வெற்றிக்கு முக்கிய காரணம். 149 00:12:32,002 --> 00:12:35,506 கடைசியாக, என் கணவர் ஜோஷ்-க்கு கண்டிப்பாக நன்றி சொல்லியாக வேண்டும். 150 00:12:35,589 --> 00:12:37,216 ஜோஷ், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? 151 00:12:38,509 --> 00:12:39,885 அன்பே? 152 00:12:43,680 --> 00:12:48,101 அவர் எனக்கு எவ்வளவு முக்கியம் என அவருக்கு தெரியும், அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். 153 00:12:48,185 --> 00:12:51,313 நீங்கள் எல்லோரும், சந்தோஷமாக இருங்கள். 154 00:12:54,066 --> 00:12:57,277 நான் சென்ற ஒவ்வொரு மாநிலத்திலும், எல்லா இடத்திலும், உன் பாட்காஸ்ட் பற்றிதான் 155 00:12:57,361 --> 00:12:59,279 மக்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். 156 00:13:00,239 --> 00:13:01,949 மிக்க மகிழ்ச்சி. 157 00:13:02,032 --> 00:13:06,036 ஏனென்றால் பத்திரிக்கை துறையை நான் ஒரே ஆளாக அழித்து விட்டதாக என் மீது பழி உண்டு. 158 00:13:08,372 --> 00:13:10,958 நான் எப்போதுமே, பிறருக்கு உதவ தான் முயற்சி செய்திருக்கிறேன், 159 00:13:11,041 --> 00:13:13,001 ஆனாலும் எப்போதும் வெறுப்பு கடிதங்கள் வந்து கொண்டே இருக்கும். 160 00:13:13,836 --> 00:13:18,590 "மோசடி செய்பவர்." "சந்தர்ப்பவாதி." "ஏமாற்றுபவர்." 161 00:13:19,132 --> 00:13:20,926 எனக்கு மிகவும் பிடித்த, "ராட்சசி." 162 00:13:22,845 --> 00:13:24,388 நாம் ஒரு மாற்றம் ஏற்படுத்துகிறோம். 163 00:13:24,471 --> 00:13:26,557 அதற்கு எப்பொழுதுமே எதிர் விளைவுகள் உண்டு. 164 00:13:28,851 --> 00:13:31,144 ஜோஷுக்கு ஏதும் பிரச்சினையா? 165 00:13:31,728 --> 00:13:34,022 கேலரியில் பார்த்த போது சிறிது சோர்வாக இருந்தான். 166 00:13:35,732 --> 00:13:37,609 வளர்ச்சியால் ஏற்படும் பிரச்சினைகள் தான். 167 00:13:38,402 --> 00:13:43,699 போன வருடம்தான் ஷெல்டர் ஆரம்பிக்கப்பட்டது, இன்னும் கூட எங்களை தயார் செய்கின்றோம். 168 00:13:46,034 --> 00:13:48,120 என் பெயர் பாபி பார்னல் நீங்கள் மறுபரிசீலனை செய்ய விரும்புகிறேன் 169 00:13:50,831 --> 00:13:52,082 ஆஹா. 170 00:13:58,630 --> 00:13:59,756 சரி. 171 00:14:04,344 --> 00:14:05,345 ஜோஷ்? 172 00:14:09,141 --> 00:14:10,142 ஜோஷ்? 173 00:14:10,893 --> 00:14:11,894 ஹலோ? 174 00:14:14,021 --> 00:14:15,480 ஒருவேளை அவன் வீட்டிற்கு போயிருக்கலாம். 175 00:14:15,564 --> 00:14:18,734 அவர் கைபேசி அழைப்பை ஏற்கவில்லை. பின்புற அறையில் இருக்கிறாரா என்று பார்க்கிறேன். 176 00:14:19,318 --> 00:14:21,486 -குளியலறை எங்கே இருக்கிறது? -பாலத்திற்கு அப்பால். 177 00:14:22,362 --> 00:14:24,406 அங்கிருந்து இடது புறம் செல்ல வேண்டும். 178 00:14:24,489 --> 00:14:25,490 சரி. 179 00:14:26,074 --> 00:14:29,786 அங்கிருந்து ஒயின், பீர் என எது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். 180 00:14:29,870 --> 00:14:30,871 நன்றி. 181 00:14:30,954 --> 00:14:32,789 என்ன வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள், சரியா? 182 00:14:33,457 --> 00:14:34,499 ஹேய், ஜோஷ்? 183 00:15:04,029 --> 00:15:05,030 ஜோஷ்? 184 00:15:22,756 --> 00:15:25,467 இருட்டு அறை கதவை மூடி வைக்கவும்!!! 185 00:15:44,611 --> 00:15:46,655 -பாபி? -இன்கிராம்! 186 00:15:48,448 --> 00:15:49,950 இன்கிராம்! 187 00:15:50,742 --> 00:15:52,369 -பாபி! -ஓ, கடவுளே. 188 00:15:52,452 --> 00:15:53,745 -பாபி. -அடக் கடவுளே. 189 00:15:53,829 --> 00:15:56,623 -உனக்கு ஒன்றும் இல்லையே? -அவன் ஜோஷ். 190 00:15:56,707 --> 00:15:59,418 அவன் ஜோஷ். அவன் ஜோஷ் தான். 191 00:16:03,297 --> 00:16:04,381 பாபி? 192 00:16:05,799 --> 00:16:07,426 -மைக்கா. -என்ன பிரச்சினை? 193 00:16:07,509 --> 00:16:08,677 என்ன? 194 00:16:08,760 --> 00:16:10,179 -அன்பே. நில். -என்ன? 195 00:16:11,138 --> 00:16:12,514 -அங்கே என்ன? -நீ இதைப் பார்க்க வேண்டாம். 196 00:16:12,598 --> 00:16:14,224 -நான் எதைப் பார்க்க வேண்டாம்? -நீ இதைப் பார்க்க வேண்டாம். 197 00:16:14,308 --> 00:16:15,559 -பாபி. -வேண்டாம்... 198 00:16:18,812 --> 00:16:19,980 அடக், கடவுளே. 199 00:16:46,381 --> 00:16:48,091 அது தான் நடந்தது. 200 00:16:49,426 --> 00:16:50,427 நன்றி. 201 00:16:59,394 --> 00:17:00,437 நீ நலம் தானே, செல்லமே? 202 00:17:01,605 --> 00:17:03,815 -இல்லை. -நீங்கள் தான் உடலைப் பார்த்தவரோ. 203 00:17:05,692 --> 00:17:06,693 நீங்கள் யார்? 204 00:17:07,778 --> 00:17:10,113 உங்களுடைய, மேல் சட்டையில் ரத்தம் இருக்கிறது. 205 00:17:13,116 --> 00:17:14,367 நீங்கள் யார்? 206 00:17:15,743 --> 00:17:17,119 இன்ஸ்பெக்டர் ஏம்ஸ். 207 00:17:17,913 --> 00:17:20,499 எஸ்எஃப்பிடி ஏன் துப்பறிவாளரை பயன்படுத்துவதில்லை என்று கேட்காதீர். 208 00:17:22,459 --> 00:17:25,712 சரி, உங்க சக பணியாளரிடம் வாக்குமூலம் தந்து விட்டோம். அவர் உங்களுக்கு சொல்வார். 209 00:17:25,796 --> 00:17:28,173 நான் இரண்டாவது முறை சொல்லப்படும் கதையை கேட்க விரும்புவேன். 210 00:17:30,717 --> 00:17:32,094 நான் சென்று மைக்காவை பார்க்கிறேன். 211 00:17:32,177 --> 00:17:33,178 சரி. 212 00:17:33,929 --> 00:17:35,180 நீங்கள் பாபி தானே? 213 00:17:36,390 --> 00:17:37,891 நீங்கள் பதிவு செய்யவதில்லை தானே? 214 00:17:41,228 --> 00:17:42,646 ஜோஷுவாவை எவ்வளவு காலமாகத் தெரியும்? 215 00:17:44,189 --> 00:17:45,649 இருபது வருடங்கள். 216 00:17:47,943 --> 00:17:51,280 சரி, அவருடைய சமீபத்திய ஆவணப்படம், ட்ரென்கிர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 217 00:17:51,363 --> 00:17:53,991 இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? 218 00:17:54,074 --> 00:17:56,660 'சன்ஸ் ஆஃப் ஐவார்'-ஐ கோபப்படுத்த கூடிய ஒரு படத்தை உருவாக்கியிருந்தார். 219 00:17:56,743 --> 00:17:58,912 அந்த காரணமே ஒரு நேர் கோடாக இந்த கொலையை இணைக்கிறது. 220 00:17:58,996 --> 00:18:01,748 அது தான் உங்கள் கருத்தா? அதுவும் இவ்வளவு விரைவாகவா? 221 00:18:01,832 --> 00:18:03,208 உங்களுடைய கருத்து என்ன? 222 00:18:07,713 --> 00:18:09,173 நான் சென்று மைக்காவைப் பார்க்கிறேன். 223 00:18:13,552 --> 00:18:14,928 ஹேய், அன்பே. 224 00:18:17,931 --> 00:18:19,266 அவர் இங்கே தான் இருந்தார். 225 00:18:21,560 --> 00:18:23,020 இப்போது அவர் இல்லை. 226 00:18:24,229 --> 00:18:25,647 இவளை நாங்கள் அழைத்துச் செல்லலாமா? 227 00:18:27,733 --> 00:18:30,277 சரி, வேறு ஏதாவது தெரிந்தால் உங்களுக்கு தெரிவிக்கிறோம். 228 00:18:30,777 --> 00:18:32,362 அவருடைய முடிக்கற்றை எனக்கு கிடைக்குமா? 229 00:18:37,451 --> 00:18:38,744 என்னால் முடியுமா என பார்க்கிறேன். 230 00:18:41,496 --> 00:18:42,539 நன்றி. 231 00:18:44,583 --> 00:18:46,251 அவள் அவளை காருக்கு கூட்டிச் செல்கிறேன். 232 00:19:06,772 --> 00:19:07,940 இன்றிரவு நான் இங்கேயே இருக்கிறேன். 233 00:19:09,274 --> 00:19:10,275 நன்றி. 234 00:19:16,823 --> 00:19:18,700 ஜோஷ் உடன் இருந்த அந்த நபர் யார்? 235 00:19:20,744 --> 00:19:22,246 அவன் மைக்காவை ஏமாற்றிக் கொண்டிருந்தானா? 236 00:19:24,373 --> 00:19:25,541 அவன் அது போன்றவன் கிடையாதே. 237 00:19:25,624 --> 00:19:27,876 அவளை காதலிக்காவிட்டால், அவளை விட்டு போயிருப்பான். 238 00:19:27,960 --> 00:19:29,294 அது பற்றி உனக்கு தெரியாது, அன்பே. 239 00:19:29,378 --> 00:19:30,420 என் நண்பர்கள் பற்றி எனக்குத் தெரியும். 240 00:19:30,504 --> 00:19:34,383 தம் திருமண வாழ்க்கையை பற்றி நமக்கு என்ன தெரிய வேண்டுமோ அதைத் தான் சொல்வார்கள், 241 00:19:34,466 --> 00:19:35,551 மற்றும் அது தான் உண்மையும் கூட. 242 00:19:36,426 --> 00:19:37,427 இன்கிராம். 243 00:19:45,269 --> 00:19:46,436 நன்றி. 244 00:20:16,091 --> 00:20:17,885 இரவு முழுவதும் மக்கள் என் வீட்டிற்கு வந்தனர். 245 00:20:17,968 --> 00:20:20,262 கரப்பான் பூச்சிகளைப் போல நிறைய பேர் வருவதை நான் விரும்பவில்லை. 246 00:20:20,345 --> 00:20:22,848 இதற்கு உன்னால் ஏதாவது செய்ய முடியுமா? 247 00:20:22,931 --> 00:20:24,725 முற்காலத்தில் ஒருவன் மைக்காவிற்கு பிரச்சினை தந்துள்ளான். 248 00:20:24,808 --> 00:20:26,560 இரு, என்ன? எப்போதிலிருந்து? 249 00:20:26,643 --> 00:20:28,061 அது ஒன்றும் முக்கியமில்லை. 250 00:20:29,479 --> 00:20:33,400 என் புத்தகங்களால் பாதிக்கப்பட்ட மிகவும் மனமுடைந்து ஒரு பெண் தான் அது. 251 00:20:33,483 --> 00:20:35,152 அவள் மட்டுமே அப்படி உணரவில்லை. 252 00:20:35,736 --> 00:20:37,446 நீங்கள் யார்? 253 00:20:37,529 --> 00:20:39,656 ரமோன். மைக்காவின் உதவியாளர். 254 00:20:39,740 --> 00:20:41,200 -வேறு ஏதாவது தகவல்? -இல்லை. 255 00:20:42,951 --> 00:20:43,952 இல்லை. 256 00:20:44,536 --> 00:20:47,039 என்னுடைய ரசிகர்கள், அவர்கள்... மிகத் தீவிரமானவர்கள், 257 00:20:47,122 --> 00:20:49,166 ஆனால் என்னால்... கற்பனை செய்து கூட... 258 00:20:50,918 --> 00:20:54,129 சரி. கதவைத் தாண்டியுள்ள சாலையைப் பற்றி, எங்களால் எதுவும் செய்ய முடியாது. 259 00:20:54,213 --> 00:20:55,964 அது பொது இடம். 260 00:20:56,048 --> 00:20:58,634 ஆனால் அடுத்த 48 மணி நேரங்களுக்கு முன் வாசலில் காவல் வண்டியை நிறுத்தி வைக்கிறோம். 261 00:20:58,717 --> 00:21:01,136 -சரி. மிக்க நன்றி. -சரி. 262 00:21:09,019 --> 00:21:10,062 இங்கே பார். 263 00:21:12,105 --> 00:21:13,315 உனக்கு தனிப்பட்ட பாதுகாப்பு தேவை. 264 00:21:15,651 --> 00:21:17,986 பல அந்நியர்கள் என்னை சுற்றி இருப்பதை நான் விரும்பவில்லை. 265 00:21:19,905 --> 00:21:21,031 அவன் ஒன்றும் அந்நியன் இல்லை. 266 00:21:35,337 --> 00:21:38,131 ஓக்லாந்து காவலர் 267 00:21:41,718 --> 00:21:42,970 உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்? 268 00:21:43,637 --> 00:21:45,013 அடையாள அட்டையை காட்டுங்கள். 269 00:21:47,224 --> 00:21:48,851 கேளுங்கள், என் பெயர் மார்கஸ் கில்பிரூ. 270 00:21:48,934 --> 00:21:51,979 மூன்று ஆண்டுகளுக்கு முன் ஓக்லாந்து காவல் துறையில் வேலை செய்தேன். ஐந்தாம் பகுதியில். 271 00:21:54,648 --> 00:21:56,650 என்னை திரும்ப சொல்ல வைக்காதே, சிறுவனே. 272 00:21:57,776 --> 00:21:59,194 அடையாள அட்டையை காட்டு. 273 00:22:00,070 --> 00:22:01,071 சிறுவனா? 274 00:22:02,614 --> 00:22:03,782 ஹேய், என்ன நடக்கிறது? 275 00:22:04,575 --> 00:22:06,785 என்னைப் பார், அன்பே. செல்லமே. 276 00:22:06,869 --> 00:22:08,495 அன்போ, என்னை... பார். 277 00:22:08,579 --> 00:22:10,414 அவர்களுக்கான எந்த காரணமும் ஏற்படுத்தாதே. நான் சொல்வதைக் கேள். 278 00:22:10,497 --> 00:22:12,875 டிரினி ஏற்கனவே யேட்ஸுடன் தொலைபேசியில் பேசுகிறாள், சரியா? 279 00:22:12,958 --> 00:22:14,418 எனது பெயர் ஸரினா கில்பிரூ. 280 00:22:14,501 --> 00:22:18,964 நான் ஆல்டா பேட்ஸில் குழந்தை செவிலியராக உள்ளேன், இவர் என் கணவர் மார்கஸ் கில்பிரூ. 281 00:22:19,590 --> 00:22:21,049 12 ஆண்டுகளாக ஓக்லாந்து காவல்துறையில் இருந்தார். 282 00:22:21,133 --> 00:22:23,594 இப்போது, இவர் ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் முதலாளி. 283 00:22:23,677 --> 00:22:25,345 இது எங்களுடைய வீடு. 284 00:22:26,054 --> 00:22:29,600 எங்கள் மகள் வீட்டிற்குள் இருந்து இதை படம் பிடித்துக்கொண்டே, எங்கள் பக்கத்துவீட்டு 285 00:22:29,683 --> 00:22:33,478 துப்பறிவாளர் யேட்ஸுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறாள். 286 00:22:50,162 --> 00:22:54,499 நான் நல்லவன் என்பதை அவர்கள் அடையாளம் காண்பதற்கு, ரத்த மாதிரியைத் தவிர 287 00:22:54,583 --> 00:22:57,336 எல்லாவற்றையும் நாம் ஏன் இவர்களிடம் காட்ட வேண்டும், சொல்? 288 00:22:58,337 --> 00:23:02,007 பார், இதைத்தான் நான் சொல்கிறேன். என் மொத்த மனநிலையையும் கெடுத்துவிட்டார்கள். 289 00:23:02,090 --> 00:23:03,717 விட்டுத் தள்ளு. 290 00:23:10,349 --> 00:23:13,435 -நான் நன்றாக இருக்கிறேன். சரியா? ஆம். -அப்படியா? 291 00:23:14,394 --> 00:23:16,355 எனவே, நீ வேலைக்கு போக வேண்டாமா? 292 00:23:17,606 --> 00:23:18,690 என்ன? 293 00:23:18,774 --> 00:23:20,275 சரி, நீ கிளம்புவது நல்லது. 294 00:23:20,359 --> 00:23:22,611 ஏனெனில் நான் அமைதியாக இருக்கிறேன். உண்மையாக. 295 00:23:22,694 --> 00:23:23,695 கண்டிப்பாகவா? 296 00:23:23,779 --> 00:23:26,073 பார், இது எனக்கு பழக்கமானதல்ல என்பது கிடையாது. 297 00:23:26,156 --> 00:23:27,699 இதையெல்லாம் முன்பே பார்த்திருக்கிறாய். 298 00:23:29,117 --> 00:23:30,911 நான் உன்னை நேசிக்கிறேன் என உனக்கே தெரியும். 299 00:23:30,994 --> 00:23:33,330 நானும் உன்னை நேசிக்கிறேன். இங்கே வா. 300 00:23:40,003 --> 00:23:41,505 இப்போது போய் சிலரைக் காப்பாற்று. 301 00:23:43,715 --> 00:23:45,300 -போய் வருகிறேன், அன்பே. -போய் வா. 302 00:23:45,884 --> 00:23:47,052 பிறகு சந்திப்போம். 303 00:23:47,135 --> 00:23:48,220 கவனமாக ஓட்டு. 304 00:23:57,563 --> 00:24:00,357 பிரச்சினை 305 00:24:21,712 --> 00:24:24,214 -எனவே, நீ அவளுடன் இங்கேயே இருப்பாயா? -வேறு எங்கே இருப்பேன்? 306 00:24:24,298 --> 00:24:26,091 எனக்கு தனிப்பட்ட வேலை இல்லாவிட்டால் போக மாட்டேன். 307 00:24:26,175 --> 00:24:27,384 சொல்ல வேண்டியதில்லை. 308 00:24:29,219 --> 00:24:32,472 ஜோஷின் மரணத்தைப் பற்றி நீ கவலைப்படுவதாக தெரியவில்லை. 309 00:24:32,556 --> 00:24:33,807 எனக்கு அவனைப் பிடிக்காது. 310 00:24:35,309 --> 00:24:36,727 அப்படியென்றால், ஏன் இங்கு வந்தாய்? 311 00:24:37,936 --> 00:24:40,522 நான் உலகை சுற்றுகிறேன். நிறைய பணம் சம்பாதிக்கிறேன், 312 00:24:40,606 --> 00:24:42,691 ஷெல்டர் கொடுத்த வீடு இருக்கிறது. 313 00:24:42,774 --> 00:24:44,067 நோப் ஹில்லில். 314 00:24:44,693 --> 00:24:46,904 எனக்கு ஏன் நீரும் காற்றும் தேவை என கேட்பது போல இருக்கு. 315 00:24:52,576 --> 00:24:55,913 எங்கள் மகள் வீட்டிற்குள் இருந்து இதை படம்பிடித்து 316 00:24:55,996 --> 00:24:59,583 எங்க பக்கத்துவீட்டு துப்பறிவாளர் யேட்ஸுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறாள். 317 00:25:00,584 --> 00:25:02,419 எப்போதாவது காவலராக இல்லையே என வருந்தியதுண்டா? 318 00:25:02,503 --> 00:25:05,339 ஆம். குறிப்பாக அது போன்று ஏதாவது நடக்கும்போது. 319 00:25:06,048 --> 00:25:09,718 கறுப்பின மக்களை கைது செய்வது எப்போதாவது உங்களை வருந்தச் செய்ததா? 320 00:25:10,302 --> 00:25:11,845 ஆம், எப்போதுமே. 321 00:25:13,847 --> 00:25:15,432 இல்லை, பொறு, அது... 322 00:25:16,642 --> 00:25:17,976 அது முற்றிலும் உண்மையில்லை. 323 00:25:18,060 --> 00:25:20,270 சிறையில் இருக்க வேண்டியவர்களை கைது செய்வதில் 324 00:25:20,354 --> 00:25:21,939 எனக்கு பிரச்சினைகள் இருந்ததில்லை. 325 00:25:22,564 --> 00:25:25,567 என்னைப் பொறுத்தவரை, குற்றாவளி குற்றவாளிதான். அவ்வளவுதான். 326 00:25:30,572 --> 00:25:31,907 தெரிந்தவர்களை எப்போதாவது கைது செய்ததுண்டா? 327 00:25:32,658 --> 00:25:34,409 ஆம், பலமுறை. 328 00:25:34,493 --> 00:25:36,745 பல முட்டாள்களுடன் தான் நான் வளர்ந்தேன். 329 00:25:38,872 --> 00:25:41,375 அதனால் தான் காவல் துறையில் இருந்து நீங்கள் விலகினீர்களா? 330 00:25:43,710 --> 00:25:44,920 வந்து... 331 00:25:46,088 --> 00:25:50,008 நான் ஏன் காவல் துறையை விட்டு விலகினேன் என்பது சிக்கலான விஷயம். 332 00:25:51,760 --> 00:25:54,054 பெண்களை விபசாரத்திற்கு பயன்படுத்தும் அதிகாரிகளைப் பற்றி தெரியுமா? 333 00:25:55,055 --> 00:25:56,265 உனக்கு அதைப் பற்றி தெரியுமா? 334 00:26:02,145 --> 00:26:05,274 இல்லை, எனக்குத் தெரியாது, ஆனால் நான் உனக்கு ஒன்றைச் சொல்கிறேன். 335 00:26:05,357 --> 00:26:06,567 அந்த ஆண்கள், 336 00:26:07,317 --> 00:26:10,487 காவலர் என்று அழைக்கப்படுவதற்கு தகுதியானவர்களே கிடையாது. 337 00:26:10,571 --> 00:26:13,657 அல்லது அந்த விஷயத்தில், ஆண்கள் என்று அழைக்கப்படுவதற்கே. நான் சொல்வது புரிகிறதா? 338 00:26:14,324 --> 00:26:17,744 -ஆம். -அவர்கள் குற்றவாளிகள் மற்றும் குண்டர்கள். 339 00:26:17,828 --> 00:26:18,829 அவ்வளவுதான். 340 00:26:19,621 --> 00:26:20,622 யாரோ வருகிறார்கள். 341 00:26:34,595 --> 00:26:35,679 பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. 342 00:26:37,222 --> 00:26:40,225 நான் உன்னை விட்டுச் சென்றதிலிருந்து. 343 00:26:42,811 --> 00:26:44,104 நீ எப்படி இருக்கிறாய், மார்கஸ்? 344 00:26:44,188 --> 00:26:45,314 நான் நலம் தான், பாப்ஸ். 345 00:26:47,107 --> 00:26:49,818 இவள் என்னுடைய மகள், டிரினி. 346 00:26:50,360 --> 00:26:53,322 டிரினி, இவர் தான் பாபி பார்னல். 347 00:26:54,823 --> 00:26:56,116 உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி, டிரினி. 348 00:26:56,200 --> 00:26:57,743 ஆம், எனக்கும் தான், திருமதி பார்னல். 349 00:26:57,826 --> 00:27:00,746 ஹே, அந்த நபரை சிறையிலிருந்து வெளியே கொண்டு வர, என் அப்பாவுக்கு உதவியது நீங்கள் தானே? 350 00:27:03,832 --> 00:27:06,251 உன் அப்பாவுக்கு நான் உதவினேன். 351 00:27:08,086 --> 00:27:10,672 ஆமாம், நான் உதவினேன். 352 00:27:10,756 --> 00:27:12,007 நான் உதவி தான் செய்தேன். 353 00:27:14,426 --> 00:27:18,305 ஹேய், செல்லமே, நீ போய், நாங்கள் குடிக்க ஏதாவது எடுத்து வருகிறாயா? 354 00:27:18,388 --> 00:27:20,057 -ஆம், கண்டிப்பாக. வந்துவிடுகிறேன். -நன்றி. 355 00:27:24,895 --> 00:27:26,021 நான் என்ன செய்ய வேண்டும்? 356 00:27:28,524 --> 00:27:30,234 ஜோஷுவா கீத் கொலை பற்றி உனக்கே தெரியும். 357 00:27:31,151 --> 00:27:33,946 -கடவுளே, இது மோசம். -இல்லை, அப்படி கிடையாது. 358 00:27:34,821 --> 00:27:37,407 நம் சிறு வயதில் நம்மோடு பழகிய மைக்கியை உனக்கு நினைவிருக்கிறதா? 359 00:27:40,869 --> 00:27:42,663 ஆமாம், நீ சொல்வது, 360 00:27:43,372 --> 00:27:46,458 புஷ்ராட் பூங்காவைச் சுற்றித் திரிந்த அந்த வெள்ளைக்கார சிறுமியை தானே? 361 00:27:47,334 --> 00:27:49,294 அவளுடைய கணவர் தான் ஜோஷுவா. 362 00:27:51,630 --> 00:27:55,133 இப்போது நீ தனியார் பாதுகாவல் நிறுவனம் வைத்திருக்கிறாய் என்று எனக்கு தெரியும். 363 00:27:55,217 --> 00:27:57,427 -டெசிரீ... -டெசிரீ சொல்லியிருப்பார். சரி. 364 00:27:59,847 --> 00:28:03,058 நம்பிக்கைக்குரிய ஒருவர் அவளைச் சுற்றி இருக்க வேண்டும். 365 00:28:08,063 --> 00:28:09,690 என்னை அப்படி பார்க்காதே. 366 00:28:11,066 --> 00:28:14,653 ஷெல்டர் 367 00:28:28,834 --> 00:28:30,294 உங்களுடைய தனிப்பட்ட அலுவலக அறை. 368 00:28:31,044 --> 00:28:34,006 எல்லாவற்றையும் அணுகுவதற்கான அனுமதியை விரைவில் டெவன் உங்களுக்கு வழங்குவார். 369 00:28:34,840 --> 00:28:36,550 -அருமை. -ஏதாவது கேள்விகள் இருக்கா? 370 00:28:38,010 --> 00:28:41,013 ஆம். ஷெல்டர் என்றால் என்ன? 371 00:28:42,181 --> 00:28:44,141 பெண்கள் வாழ்க்கைமுறைக்கான சின்னம் மற்றும் நிறுவனம். 372 00:28:44,224 --> 00:28:46,268 நாங்கள் பெண்கள் தன்னிறவுக்கானவர்கள் என ரசிகர்கள் நினைக்கிறார்கள். 373 00:28:46,351 --> 00:28:49,771 கருத்தரங்குகள், பயிற்சிகள், சிகிச்சை, நல்வாழ்வு சம்பந்தப்பட்டவைகளை செய்வோம். 374 00:28:50,731 --> 00:28:51,732 இதை வெறுப்பவர்கள் உள்ளனரா? 375 00:28:51,815 --> 00:28:53,525 எங்களுக்கு உடன்படிக்கை இருப்பதாக வெறுப்பவர்கள் நினைக்கிறார்கள். 376 00:28:56,695 --> 00:28:58,155 இது உங்களுக்காக. 377 00:28:58,238 --> 00:29:00,616 -சரி. -ஜோஷிற்காக ஒரு இரங்கல் பட்டை. 378 00:29:00,699 --> 00:29:02,367 நாங்கள் அதை இணையத்தில் விற்கிறோம். 379 00:29:02,451 --> 00:29:04,620 இது ஒருபோதும் விட்டுப் போகாத ஒரு சடங்கு என மைக்கா நம்புகிறார். 380 00:29:05,120 --> 00:29:06,121 இது இறந்தவர்களையும் கௌரவிக்கிறது, 381 00:29:06,205 --> 00:29:08,290 நம்மையும் கருணையுடன் நடத்த உலகைக் வலியுறுத்துகிறது. 382 00:29:09,291 --> 00:29:10,834 நான் ஒரு கேள்வி கேட்கிறேன். 383 00:29:10,918 --> 00:29:14,087 ஜோஷ் இங்கிருப்பவர்களுக்கு நெருக்கமானவரா, 384 00:29:14,171 --> 00:29:16,465 அல்லது இங்கு "விருந்தாளி" போல வேலை செய்பவர் என சொல்வாயா? 385 00:29:16,548 --> 00:29:17,799 சில சமயங்களில் அப்படி சொல்லலாம். 386 00:29:18,342 --> 00:29:21,803 அவர் எங்களது அல்லது உதவியாளர்களின் வசதிகளைப் பயன்படுத்த விரும்பிய போது. 387 00:29:22,387 --> 00:29:24,973 என்னுடைய தொலைபேசி எண் 1637 ஏதாவது வேண்டுமென்றால் அழையுங்கள். 388 00:29:34,107 --> 00:29:35,359 -ஹேய். -ஹேய். 389 00:29:36,485 --> 00:29:39,488 நாம் இதை இன்று செய்ய வேண்டியதில்லை. நீ மைக்காவை பார்த்துக்கொள்கிறாய் என தெரியும். 390 00:29:41,156 --> 00:29:43,158 ஜோஷுவாவிற்காக வருந்துகிறேன். அவன் ரொம்ப நல்லவன். 391 00:29:43,742 --> 00:29:45,077 அவள் எப்படியிருக்கிறாள்? 392 00:29:45,827 --> 00:29:46,828 மோசமான மனநிலையில். 393 00:29:47,829 --> 00:29:50,624 நான் சந்திப்பைத் தவிர்த்திருப்பேன், ஆனால் இந்த மருத்துவ பரிசோதனையில் 394 00:29:50,707 --> 00:29:54,253 உங்களைச் சேர்க்க என்னால் முடிந்தவற்றை செய்தேன், முதல் நாளை நாம் தவறவிட முடியாது. 395 00:30:18,026 --> 00:30:19,069 எனக்கு பயமாக இருக்கிறது. 396 00:30:23,240 --> 00:30:24,491 எனக்குத் தெரியும், அப்பா. 397 00:30:28,662 --> 00:30:31,123 லிலியனுக்கும், சகோதரிகளுக்கும் நாம் சொல்ல வேண்டும். 398 00:30:31,874 --> 00:30:35,002 உங்களுக்கு ஆதரவு தேவை, நாங்கள் அனைவரும் உங்களுக்கு உதவ தயாராக இருக்க வேண்டும். 399 00:30:35,085 --> 00:30:36,211 -வேண்டாம். -அப்பா. 400 00:30:36,295 --> 00:30:37,504 நான் வேண்டாமென்று சொன்னேன். 401 00:30:37,588 --> 00:30:39,590 சரி, அவர்களிடமிருந்து மறைக்க முடியும் என நினைக்கிறீர்களா? 402 00:30:39,673 --> 00:30:40,966 குறிப்பாக லிலியனிடமிருந்து? 403 00:30:42,217 --> 00:30:44,970 அவளிடம் நான் சொல்லும் கணத்தில், அவளுக்கு நான் வயதானவனாகிவிடுவேன். 404 00:30:45,762 --> 00:30:49,016 அவள் என்னை மனநோயாளி போல பார்ப்பதை என்னால் ஏற்க முடியாது. 405 00:30:50,184 --> 00:30:51,185 அப்பா. 406 00:30:51,768 --> 00:30:54,104 எனக்கு அழகான இளம் மனைவி இருக்கிறாள். 407 00:30:54,980 --> 00:30:57,608 நான் அவளின் கேலிப் பொருளாக மாட்டேன். 408 00:30:57,691 --> 00:30:59,067 அப்படியென்றால் என்ன அர்த்தம்? 409 00:30:59,151 --> 00:31:01,653 அதற்கு ஒரே அர்த்தம் தான் உள்ளது. 410 00:31:02,654 --> 00:31:03,989 என்னுடைய விதிமுறைகள். 411 00:31:07,242 --> 00:31:08,994 நான் அதைக் கேட்கக்கூட விரும்பவில்லை. 412 00:31:09,077 --> 00:31:11,288 -நாம் கிறிஸ்துவர்கள். -ஆனால் நான் ஒரு குற்றவாளி. 413 00:31:13,415 --> 00:31:15,334 ஒருவனால் முரண்பாடாக இருக்க முடியும். 414 00:31:17,711 --> 00:31:19,755 லுகாதெர் ஷ்ரீவ்போர்ட் ஸ்கோவில்? 415 00:31:33,727 --> 00:31:34,853 இந்தப் பக்கம். 416 00:31:43,278 --> 00:31:45,948 எனவே, இவை அனைத்தையும் நாங்கள் அவரிடம் சொல்லவில்லை, 417 00:31:46,031 --> 00:31:48,575 ஆனால் அதில் உங்களுக்கு பயனுள்ள ஏதாவது ஒன்று கிடைக்கலாம். 418 00:31:49,785 --> 00:31:51,036 என்ன இது? 419 00:31:51,119 --> 00:31:52,496 வெறுப்பு கடிதம். 420 00:31:54,206 --> 00:31:55,624 மைக்காவிற்கு அனுப்பப்பட்டவை. 421 00:31:57,918 --> 00:31:59,086 அடக் கடவுளே. 422 00:32:03,924 --> 00:32:04,925 ஐயோ. 423 00:32:08,136 --> 00:32:09,221 என்னை கட்டிப்பிடிக்காதே. 424 00:32:12,015 --> 00:32:14,393 அப்புறம் மென்மையான குரலில் என்னிடம் பேசாதே. 425 00:32:15,477 --> 00:32:17,020 நீ அப்படி செய்தால் நான் மனதுடைந்துவிடுவேன். 426 00:32:19,314 --> 00:32:21,108 உனக்கு ஆதரவாகத்தான் நான் இங்கு இருக்கிறேன். 427 00:32:21,191 --> 00:32:23,360 எல்லோரையும் நான் எப்படி எதிர்கொள்வது? 428 00:32:24,111 --> 00:32:26,071 அதைப் பற்றி கவலைப்படாதே. 429 00:32:26,154 --> 00:32:28,574 நமக்குத் தெரியும் வரை, அதை படிப்படியாக செய்யலாம். 430 00:32:28,657 --> 00:32:32,244 என்ன தெரிய வேண்டும்? என்னுடைய கணவர் இன்னொருவருடைய கைகளில் இறந்து கிடந்ததையா? 431 00:32:33,662 --> 00:32:35,998 அதாவது, நான் வருத்தமாகவும், அவமானமாகவும் உணர்கிறேன். 432 00:32:36,623 --> 00:32:39,209 நான் வருத்தமாகவும், கோபமாகவும் உணர்கிறேன். 433 00:32:39,293 --> 00:32:41,211 நான் எப்படிப்பட்ட முட்டாளாக இருந்துள்ளேன்? 434 00:32:48,302 --> 00:32:50,095 இன்று காவல்துறை உன்னை தொடர்பு கொண்டார்களா? 435 00:32:50,179 --> 00:32:53,348 வழக்கறிஞர் இல்லாமல் அவர்களுடன் பேச வேண்டாம் என்று இன்கிராம் சொன்னார். 436 00:32:55,767 --> 00:32:58,103 இன்று மதியம் நான் இருவரை சந்திக்கிறேன். 437 00:33:00,522 --> 00:33:03,525 ஜோஷுவா உன்னிடம் எதைப் பற்றி பேச விரும்பினார், பாபி? 438 00:33:06,570 --> 00:33:08,363 வந்து, அவர் ஏதாவது சொன்னாரா? 439 00:33:13,160 --> 00:33:14,244 அது என்ன? 440 00:33:14,995 --> 00:33:17,497 -அதைப் பற்றி பிறகு பேசலாம். -என்னை இப்படி நடத்தாதே, பாபி. 441 00:33:18,248 --> 00:33:19,875 ஐயோ, கடவுளே. 442 00:33:19,958 --> 00:33:23,128 அவன் ஏன் இரவு விருந்திற்கு வரவில்லை? இருவரும் சண்டை போட்டீர்களா? 443 00:33:24,046 --> 00:33:25,506 அதாவது, வந்து... 444 00:33:26,507 --> 00:33:31,178 அது... வெறும் தம்பதியினரின் சண்டை தான். ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. 445 00:33:31,261 --> 00:33:33,305 தன் ஆவணப்படத்தின் எதிர்வினையைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தார். 446 00:33:33,847 --> 00:33:36,350 நான் இந்த நிகழ்ச்சியைப் பற்றி யோசித்தேன். 447 00:33:36,433 --> 00:33:37,643 நாங்கள் வேலையில் மும்மரமாக இருந்தோம். 448 00:33:37,726 --> 00:33:38,894 ரமோன்! 449 00:33:43,774 --> 00:33:45,317 அந்த கைபேசியை எடுத்துச் செல். 450 00:33:46,151 --> 00:33:47,361 கண்டிப்பாக. 451 00:33:48,070 --> 00:33:49,613 உங்களுடைய இந்த வார நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டேன். 452 00:33:49,696 --> 00:33:51,573 லாக்லான் கொஞ்சம் திட்டினார், ஆனால் அதை சமாளித்துவிட்டேன். 453 00:33:51,657 --> 00:33:52,658 சரி. 454 00:34:32,447 --> 00:34:34,283 நீ கண்டிப்பாக துக்கம் அனுசரிக்க வேண்டும். 455 00:34:39,913 --> 00:34:42,040 என் கருத்தரங்கில் அப்படித்தான் எல்லோரிடமும் சொல்வேன், ஆனால்... 456 00:34:45,168 --> 00:34:47,670 இப்போது, நிச்சயமாக அது எனக்கு எந்த அர்த்தமும் தரவில்லை. 457 00:34:54,303 --> 00:34:56,054 எனக்கு பைத்தியம் பிடிப்பது போல இருக்கிறது. 458 00:35:08,650 --> 00:35:11,403 ஜோஷுவாவிற்கு என்ன நடந்தது என கண்டுபிடிக்க எனக்கு நீ உதவ வேண்டும், பாபி. 459 00:35:12,362 --> 00:35:15,282 -நீ கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டும். -இல்லை, கேள். 460 00:35:15,365 --> 00:35:17,743 நான் அந்த அவசர ஊர்தியில் இருந்த போது, 461 00:35:17,826 --> 00:35:21,038 அந்த காவலர்கள் காஸ்ட்ரோவில் இருந்த பணியாளர்களைப் பற்றி கேலி செய்தனர்... 462 00:35:29,046 --> 00:35:30,047 அதாவது... 463 00:35:31,215 --> 00:35:33,008 ரஷ்ய சூதாட்டம் விளையாடிக் கொண்டிருந்தார்கள் என்று. 464 00:35:36,303 --> 00:35:39,097 அவர்கள் உண்மையைத்தான் சொல்வார்கள் என்று நாம் நம்ப கூடாது. 465 00:35:42,893 --> 00:35:45,771 நான் போன வருடம் நிறைய ஆபத்துக்களை சந்தித்தேன். 466 00:35:47,814 --> 00:35:51,485 இன்கிராம், என் அப்பா, அதுமட்டுமல்ல சைடிக்கு என்ன நடந்தது என உனக்கே தெரியும். 467 00:35:53,362 --> 00:35:54,988 ஜோஷுவாவாக இருந்திருந்தால், இதை கண்டிப்பாக செய்வார். 468 00:35:55,072 --> 00:35:56,573 அது அவ்வளவு சுலபமானது கிடையாது. 469 00:35:57,241 --> 00:35:58,992 பாபி, தயவு செய்து. 470 00:36:00,118 --> 00:36:01,119 தயவு செய்து. 471 00:36:01,203 --> 00:36:06,041 பதில்கள் தேடுவது ஒரு நேரிடையான விஷயம் கிடையாது. 472 00:36:07,709 --> 00:36:10,420 நீ தெரிந்துகொள்ள விரும்புவதை மட்டும் நான் தெரிந்து கொள்ள மாட்டேன். 473 00:36:10,921 --> 00:36:13,340 -எனக்கு அதைப் பற்றிய அக்கறை இல்லை. -ஆனால் எனக்கு இருக்கிறது. 474 00:36:14,967 --> 00:36:16,426 எனக்கு இருக்கிறது. நான்... 475 00:36:19,137 --> 00:36:24,726 நான் உனக்கு ஆதரவாக இருப்பேன். ஆனால் உன் துன்பத்தை... அதிகரிக்க மாட்டேன்... 476 00:36:28,438 --> 00:36:29,565 நான் போய் படுத்துக்கொள்கிறேன். 477 00:36:56,717 --> 00:36:58,218 ஹேய், என்ன நடக்கிறது? 478 00:36:58,302 --> 00:36:59,303 ஹேய். 479 00:37:00,304 --> 00:37:03,140 மைக்கா என்னிடம், ஜோஷின் கொலையைப் பற்றி விசாரிக்க சொல்லி இருக்கிறாள். 480 00:37:08,103 --> 00:37:09,521 நீ அதை செய்ய விரும்புகிறாயா? 481 00:37:09,605 --> 00:37:11,148 வந்து, அவளை வருத்தப்பட வைக்க விருப்பமில்லை. 482 00:37:12,316 --> 00:37:13,567 உண்மை சொல்லவா? 483 00:37:13,650 --> 00:37:16,987 இது மற்றும் அப்பா விஷயம், இரண்டிற்கு நடுவில் எதையும் செய்ய முடியாது. 484 00:37:19,531 --> 00:37:22,826 மன நிம்மதிக்காக, நான் இதைப் பற்றி விசாரிக்கிறேன், 485 00:37:22,910 --> 00:37:25,746 நீ ஒரு தோழியாக இருப்பதில் கவனம் செலுத்து. 486 00:37:27,289 --> 00:37:28,290 சரி, 487 00:37:29,333 --> 00:37:30,709 ஆனால் ரகசியமாக. 488 00:37:31,251 --> 00:37:32,336 சரி. 489 00:37:57,069 --> 00:37:58,111 ஹேய். 490 00:37:58,195 --> 00:37:59,446 மைக்காவிடம் பேசினாயா? 491 00:37:59,947 --> 00:38:02,783 இல்லை, என்ன நடக்கிறது, இன்கிராம்? 492 00:38:02,866 --> 00:38:05,577 எஸ்எஃப்பிடி-யில் இருக்கும் என் நண்பன் எனக்கு ஒரு துப்பு கொடுத்தான். 493 00:38:05,661 --> 00:38:09,289 காவலர்கள் இந்த வழக்கை கொலை மற்றும் தற்கொலையாக கருதி, முடிக்கப் போகிறார்கள். 494 00:38:09,373 --> 00:38:11,375 சரி, யார் கொலை செய்தார்கள் என்று நினைக்கிறார்கள்? 495 00:38:11,458 --> 00:38:12,876 ஜோஷுவா செய்ததாக நினைக்கிறார்கள். 496 00:38:18,048 --> 00:38:19,049 அடச்சே. 497 00:38:19,550 --> 00:38:21,385 பன்னிரெண்டு தொலைபேசி அழைப்புகளா? உண்மையாகவா? 498 00:38:22,219 --> 00:38:23,720 கொலை மற்றும் தற்கொலையா? 499 00:38:23,804 --> 00:38:26,181 இது மாதிரி சோம்பேறித்தனமான ஒரு விஷயத்தை நான் இதுவரை கேட்டதில்லை. 500 00:38:26,265 --> 00:38:27,975 ஜோஷுவாவின் நோக்கம் என்னவாக இருந்திருக்கும்? 501 00:38:28,058 --> 00:38:31,687 கேட்பது யார்? மைக்காவின் ஆர்வமுள்ள தோழியா, அனைத்திலும் மூக்கு நுழைக்கும் நிருபரா? 502 00:38:31,770 --> 00:38:33,522 அதனால் பதில் மாறுபட்டு இருக்குமா என்ன? 503 00:38:33,605 --> 00:38:34,773 கவனமாக பேசுங்கள். 504 00:38:34,857 --> 00:38:36,108 நானும் அதையே தான் சொல்கிறேன். 505 00:38:36,191 --> 00:38:37,776 -நான் இந்த கதையை உருவாக்கவில்லை. -இருக்கலாம். 506 00:38:38,694 --> 00:38:41,780 -இதற்கு என்ன அர்த்தம்? -வேலையை ஒழுங்காக செய்யணும் என்று அர்த்தம். 507 00:38:42,364 --> 00:38:43,407 நாம் பேசி முடித்தாயிற்று. 508 00:38:45,033 --> 00:38:46,410 உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு தருகிறேன். 509 00:38:46,493 --> 00:38:47,828 இல்லை என்றால் என்ன செய்வீர்கள்? 510 00:38:47,911 --> 00:38:49,621 நான் இதை விசாரிப்பேன். 511 00:38:49,705 --> 00:38:53,458 பிறகு நீங்களும் உங்க துறையினர் அனைவரும் முட்டாள்கள் போல தோற்றம் அளிப்பீர்கள். 512 00:38:54,626 --> 00:38:57,713 நீங்களும் நானும் ஒரே விஷயத்தைத்தான் பார்த்தோம். அதை ஒப்பு கொள்ள மறுக்கிறீர்கள் 513 00:38:58,463 --> 00:39:01,300 அவன் சட்டை இல்லாமல் தன்னை விட இள வயது ஆணின் கைகளில் செத்துக்கிடந்தான். 514 00:39:01,383 --> 00:39:03,385 அவர்கள் முதல்முறை சந்க்கவில்லை என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. 515 00:39:03,468 --> 00:39:06,180 எதுவும் உடையவில்லை, எதுவும் தொலையவில்லை. நான் சொல்லிக் கொண்டே போக வேண்டுமா? 516 00:39:06,263 --> 00:39:07,472 ஆமாம், மேலும் சொல்லுங்கள். 517 00:39:08,015 --> 00:39:09,516 அப்போ மைக்காவை பின் தொடர்ந்தவர்? 518 00:39:09,600 --> 00:39:11,643 அவளுடைய அலுவலகத்தில் இருந்த அந்த வெறுப்பு கடிதங்கள்? 519 00:39:11,727 --> 00:39:14,938 அந்த சன்ஸ் ஆஃப்... ஐவார் அல்லது வேறு ஏதோ பேர் கொண்ட அவர்களை பற்றி என்ன? 520 00:39:15,022 --> 00:39:16,648 எனக்குத் தெரிந்தவரை, அவர்கள் ஆபத்தானவர்கள். 521 00:39:16,732 --> 00:39:18,192 எனவே, இதிலிருந்து விலகி இருங்கள். 522 00:39:18,275 --> 00:39:20,819 அவர்களுடைய பார்வை உங்கள் மீது படுவது சரி இல்லை. 523 00:39:23,405 --> 00:39:25,616 இது தெரிந்திருந்தும், எப்படி அவர்கள் மீது சந்தேகப்படாமல் இருக்கிறீர்கள்? 524 00:39:26,575 --> 00:39:28,368 உங்களுடைய வேலையில் எப்படி நீடிக்கிறீர்கள்? 525 00:39:32,789 --> 00:39:35,459 நான் ஓவன் கேவ் வழக்கைக் கொண்டு தான் பயிற்சி எடுத்தேன் என்று தெரியுமா? 526 00:39:35,542 --> 00:39:36,710 அதனால் என்ன? 527 00:39:37,252 --> 00:39:40,130 -நீங்கள் அவனை பாழாக்கிவிட்டீர்கள். -அவனே அவனை பாழாக்கிக் கொண்டான். 528 00:39:40,714 --> 00:39:43,842 பாபி பார்னல். நீதிபதி, பஞ்சாயத்து தலைவர், தண்டனை தருபவர், சரியா? 529 00:39:44,593 --> 00:39:47,054 இந்த முறை நீங்கள் யாரை வீழ்த்த நினைத்தாலும், அது நானாக இருக்க மாட்டேன். 530 00:39:47,137 --> 00:39:50,307 சிறிது ஆழமாக விஷயங்களை விசாரிக்காவிட்டால் நீங்களே உங்களை அழித்துக் கொள்வீர்கள். 531 00:41:03,505 --> 00:41:04,548 ஹேய். 532 00:41:05,716 --> 00:41:06,884 வழக்கை முடித்து விட்டார்கள். 533 00:41:08,594 --> 00:41:09,678 எனக்குத் தெரியும். 534 00:41:16,018 --> 00:41:17,102 நீ எங்கே இருக்கிறாய்? 535 00:41:19,605 --> 00:41:21,565 போதை உட்கொள்ளும் என் பழைய இடத்தில் இருக்கிறேன். 536 00:41:23,609 --> 00:41:26,111 அது தீர்வு இல்லை. உனக்கே அது தெரியும். 537 00:41:27,112 --> 00:41:31,658 என் அப்பா உன்னிடம் என்ன சொன்னார்? "நீ எப்போதும் எங்களை நாடி வரலாம்." 538 00:41:31,742 --> 00:41:34,369 என்னிடம் வா, அன்பே. என்னிடம் வா. 539 00:42:24,419 --> 00:42:25,629 உனக்கு ஏதாவது வேண்டுமா? 540 00:42:27,047 --> 00:42:30,050 வேண்டாம், நான் வேலை செய்கிறேன். 541 00:42:30,676 --> 00:42:31,844 உறுதிமொழிகள். 542 00:42:34,346 --> 00:42:35,806 கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்கிறாயா? 543 00:42:37,891 --> 00:42:40,060 துக்கத்தை எப்போதும் மறக்க முடியாது. நாமும் மறக்கக்கூடாது. 544 00:42:46,400 --> 00:42:47,442 இங்கே, பார்... 545 00:42:49,152 --> 00:42:51,363 என்னிடம் நீ அப்படி பேசத் தேவையில்லை என உனக்கே தெரியும். 546 00:43:04,126 --> 00:43:06,044 ஹே, இது ஜோஷுவா, எனக்கான செய்தியை பதிவு செய்யவும். 547 00:43:06,128 --> 00:43:08,755 அன்பே, இது நீ என்றால், எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பு. 548 00:43:08,839 --> 00:43:10,591 நான் இவற்றை கேட்க மாட்டேன் என உனக்கே தெரியும். 549 00:43:16,763 --> 00:43:18,182 என்னோடு வா. 550 00:43:28,817 --> 00:43:30,068 நீ இங்கே பாதுகாப்பாக இருப்பாய். 551 00:43:33,071 --> 00:43:34,740 எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இருக்கலாம். 552 00:43:41,246 --> 00:43:42,664 நீ என்னோடு சேர்ந்து பிரார்த்தனை செய்வாயா? 553 00:45:15,174 --> 00:45:16,425 ஹேய். 554 00:45:23,849 --> 00:45:25,392 நான்... 555 00:45:26,852 --> 00:45:28,812 ஜோஷ் பற்றி ஒரு பாட்காஸ்ட் செய்ய போகிறேன். 556 00:45:29,730 --> 00:45:33,317 ஆனால் நாம் உண்மையை பேச வேண்டும். என்னிடம் நீ உண்மையை சொல்ல வேண்டும். 557 00:45:34,902 --> 00:45:38,155 -சரி. -நாம் அப்படி செய்யாவிட்டால் ஆபத்து அதிகம். 558 00:45:40,991 --> 00:45:42,159 ஆனால் நீ சரியாக சொன்னாய். 559 00:45:43,785 --> 00:45:45,787 எனக்காக ஜோஷ் எல்லா ஆபத்துக்களையும் சந்தித்திருப்பான். 560 00:45:48,916 --> 00:45:50,584 நீ மீண்டும் என்னை காப்பாற்றி இருக்கிறாய். 561 00:45:52,711 --> 00:45:55,255 இல்லை. நாம் ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொள்கிறோம். 562 00:45:56,798 --> 00:45:58,842 நாம் அதை வெளிப்படையாக செய்ய வேண்டும். 563 00:45:58,926 --> 00:46:00,260 பாட்காஸ்டில். 564 00:46:00,344 --> 00:46:02,679 இந்த வழக்கை பற்றி காவலர்களை ஆழமாக விசாரிக்க செய்ய வேண்டும். 565 00:46:06,099 --> 00:46:07,100 சரியா? 566 00:46:08,393 --> 00:46:09,520 சரி. 567 00:46:12,856 --> 00:46:14,066 நன்றி. 568 00:46:14,650 --> 00:46:15,817 கொஞ்சம் ஓய்வு எடு. 569 00:46:32,835 --> 00:46:35,754 "மற்றவர்களின் கண்ணீர் வெறும் தண்ணீர்தான்." 570 00:46:37,506 --> 00:46:42,094 தான் இறந்த அன்று இரவு, இதை என் நண்பர், ஜோஷுவா கீத் என்னிடம் சொன்னார். 571 00:46:42,970 --> 00:46:46,014 அதற்கு என்ன அர்த்தம் என்றும், அதை ஏன் சொன்னார் என்றும் எனக்குத் தெரியாது. 572 00:46:47,766 --> 00:46:52,563 ஆனால் இப்போது... அவர் தன்னுடைய கல்லறையில் இருந்து பேசுவது போல இருக்கிறது. 573 00:46:54,857 --> 00:46:57,526 இந்த வழக்கு முடிக்கப்பட்டது என்று இன்று நான் கேள்விப்பட்ட போது, 574 00:46:57,609 --> 00:47:01,613 அவருடைய விதவை மனைவிக்கு தேவையான பதில் கிடைக்காது என்பதை நினைக்கும் போது, 575 00:47:03,282 --> 00:47:05,075 அவருடைய வார்த்தைகள் தீர்க தரிசனமானதாக தோன்றுகின்றன. 576 00:47:06,910 --> 00:47:11,415 அவரைப் பற்றி தெரியாத மக்களுக்கு, ஜோஷுவாவின் மரணம் ஒரு கதை. 577 00:47:12,082 --> 00:47:13,792 ஒரு தலைப்புச் செய்தி. 578 00:47:14,918 --> 00:47:16,295 ஒரு வழக்கு எண் மட்டும் தான். 579 00:47:17,796 --> 00:47:20,007 அவரை மிகவும் நேசித்த எங்களைப் போன்றவர்களுக்கு, 580 00:47:20,883 --> 00:47:22,801 அது ஒரு மறக்க முடியாத இழப்பு. 581 00:47:24,136 --> 00:47:27,264 பதில் சொல்ல வேண்டிய ஒரு இழப்பு. 582 00:47:30,684 --> 00:47:33,312 ஜோஷுவா மத நம்பிக்கை இல்லாதவர். 583 00:47:33,395 --> 00:47:36,815 தேவாலயத்திற்கு போகக்கூடிய ஒரு மனிதர் என்ற அர்த்தத்தில் இல்லை, ஆனால் அவர்... 584 00:47:37,858 --> 00:47:39,193 அவர் ஆன்மீக நம்பிக்கை உள்ளவர். 585 00:47:40,194 --> 00:47:45,157 இந்த உலகத்தைப் பற்றிய ஆர்வம், அவருக்கு வழிகாட்டும் ஒரு விண்மீன் ஆக இருந்தது. 586 00:47:48,327 --> 00:47:50,829 'த நியூயார்க் டைம்ஸ்'-இல் வேலை செய்த இளம் நபர்களாக இருந்த போது, 587 00:47:51,371 --> 00:47:56,251 ஞாயிற்றுக்கிழமை தேவாலயம் செல்லும் என் பழக்கத்தைப் பற்றி மிகவும் ஆர்வம் கொண்டார். 588 00:47:57,544 --> 00:47:59,171 நான் உணர்ந்த வகையில்... 589 00:47:59,922 --> 00:48:02,299 அவருக்கு அதை புரிய வைக்கும் வரை அது அவருக்கு வேடிக்கையாக இருந்தது. 590 00:48:03,842 --> 00:48:07,930 என்னுடைய முதல் திருவிருந்தில், நான் பெற்ற ஒரு ஆசிர்வாதத்திலிருந்து அது வந்தது. 591 00:48:09,890 --> 00:48:12,684 "உங்களுடைய குழந்தைகளுக்கு மத நூல்களை இளமையிலேயே சொல்லிக் கொடுங்கள் 592 00:48:12,768 --> 00:48:16,855 அப்போது அவர்களிடம் இருப்பதே தெரியாத தற்காப்பை அவர்களால் பெற முடியும்." 593 00:48:18,857 --> 00:48:20,150 அது என்னுடைய ஒரு உடமை. 594 00:48:22,277 --> 00:48:23,570 இன்னொன்றை, நாங்கள் பகிர்ந்து கொண்டோம். 595 00:48:25,239 --> 00:48:29,243 அது எங்களுடைய 20 வருட நட்பு என்கிற இணைக்கும் பந்தம். 596 00:48:32,371 --> 00:48:36,667 உண்மையைத் தேடுவது தான் எங்களுடைய பிணைப்பாக இருந்தது. 597 00:48:38,710 --> 00:48:41,713 அவருடைய உண்மையைத் தேடும் பயணத்தில் நான் தொடர்ந்து செல்வேன், 598 00:48:41,797 --> 00:48:45,843 மற்றும் எல்லா பதில்களும் கிடைக்காதவரை நான் இதை நிறுத்தமாட்டேன். 599 00:48:48,720 --> 00:48:52,558 உண்மை என்னும் விளக்கு தான் எங்களுக்கு வழி காட்டப் போகிறது. 600 00:48:56,770 --> 00:48:59,523 எனவே... இதோ துவங்குகிறோம். 601 00:49:04,820 --> 00:49:08,657 மறுபடியும் சொல்கிறேன், என் பெயர் பாபி பார்னல். 602 00:49:11,410 --> 00:49:15,539 நீங்கள் மறுபரிசீலனை செய்ய விரும்புகிறேன். 603 00:51:17,744 --> 00:51:19,746 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்