1 00:00:07,382 --> 00:00:11,469 {\an8}அப்போல்லோ 11 உடன் நிலவில் வைக்க 2 00:00:11,470 --> 00:00:13,763 {\an8}நாசா உத்தேசித்த ஒரு தகடு இருந்தது. 3 00:00:13,764 --> 00:00:16,182 {\an8}சாட்டர்னின் நிலவில் உயிரினத்திற்கான தேடல் தொடங்குகிறது 4 00:00:16,183 --> 00:00:19,186 {\an8}என் அப்பா இறக்கும் வரை அதை தன்னுடன் வைத்திருந்தார். 5 00:00:20,854 --> 00:00:26,026 {\an8}அதில், "முழு மனிதகுலத்தின் அமைதிக்காக நாங்கள் வந்தோம்" என்று எழுதப்பட்டிருந்தது. 6 00:00:27,945 --> 00:00:33,200 {\an8}இன்று மற்றொரு நிலவின் மேற்பரப்பைத் தொடும்போது, இந்த வார்த்தைகளை என்னுடன் எடுத்துச் செல்கிறேன். 7 00:00:34,493 --> 00:00:37,538 என் அப்பாவைப் போன்றவர்களால் நாம் அடைந்த ஒரு விஷயம். 8 00:00:38,622 --> 00:00:42,375 எங்கள் விண்கப்பலை மீண்டும் கட்டிப் புனரமைத்த, 9 00:00:42,376 --> 00:00:45,420 மார்ஸில் உள்ள திறமையான பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளைப் போன்றவர்களாலும். 10 00:00:46,588 --> 00:00:50,008 காஸ்மோஸ்-1 இல் தங்கள் உயிரைத் தியாகம் செய்த விஞ்ஞானிகளைப் போன்றவர்களாலும். 11 00:00:50,509 --> 00:00:52,553 இந்தப் பிரபஞ்சத்தில் உயிரினங்களைத் தேடும் 12 00:00:53,762 --> 00:00:57,891 எங்களின் முயற்சியில், அவர்களின் நினைவுகளை எங்களுடன் சுமந்து செல்கிறோம். 13 00:00:58,767 --> 00:01:02,521 அவர்தான், டைட்டன் மேற்பரப்பிலிருந்து விண்வெளி வீராங்கனை கெல்லி பால்ட்வின். 14 00:01:08,193 --> 00:01:09,485 சூப்பர், தம்பி. 15 00:01:09,486 --> 00:01:10,862 நன்றி. 16 00:01:10,863 --> 00:01:12,029 அது கெத்தா இருந்துச்சு, நண்பா. 17 00:01:12,030 --> 00:01:13,406 உன்னால அதை நம்ப முடியுதா? 18 00:01:13,407 --> 00:01:16,117 இது எல்லாரையும் ரொம்ப உற்சாகப்படுத்திருச்சு போல. 19 00:01:16,118 --> 00:01:18,786 அதோடு, திரும்பிப் போறதுக்கான கோரிக்கைகள் பாதிக்கும் மேல குறைஞ்சு போச்சு. 20 00:01:18,787 --> 00:01:20,121 இது நமக்குப் புது வாழ்க்கையை கொடுத்திருக்கு. 21 00:01:20,122 --> 00:01:21,330 உன்னாலதான் நடந்துச்சு, சகோ. 22 00:01:21,331 --> 00:01:24,750 - இல்ல, என்னால இல்ல. எல்லாரும்தான் காரணம். - இல்ல, இல்ல, இல்ல, இல்ல. நீதான் காரணம், மைல்ஸ். 23 00:01:24,751 --> 00:01:27,713 2003-ல இருந்த மாதிரியே, நீ எப்பவும் எங்களுக்குத் துணையா இருக்க. 24 00:01:31,508 --> 00:01:33,050 உன்னைக் கண் மூடித்தனமாப் பின்தொடருவோம். 25 00:01:33,051 --> 00:01:34,135 நாங்க எல்லாருமே செய்வோம். 26 00:01:34,136 --> 00:01:35,553 நன்றி, சகோ. 27 00:01:35,554 --> 00:01:37,014 அப்புறம் பாக்கலாம். 28 00:01:37,639 --> 00:01:38,849 மிலோஷ். 29 00:01:40,225 --> 00:01:41,643 என்ன விஷயம், இலியா? 30 00:01:42,269 --> 00:01:43,937 ஒருத்தவங்க உன்கிட்ட பேசணுமாம். 31 00:01:44,438 --> 00:01:47,732 நீ கேட்க விரும்ப மாட்ட, ஆனா நீ கேட்டாகணும். 32 00:01:47,733 --> 00:01:49,984 நம்ம எல்லாருக்காகவும், மிலோஷ். 33 00:01:49,985 --> 00:01:52,362 அவங்க என்ன சொல்ல வராங்கன்னு நீ கண்டிப்பா கேட்கணும். 34 00:01:53,363 --> 00:01:55,824 கேட்பாயா, ப்ளீஸ்? 35 00:01:57,075 --> 00:01:58,994 சரி. யார் பேசணும்னு சொல்றாங்க? 36 00:02:01,121 --> 00:02:05,125 ஜனாதிபதி கோர்ஸென்கோ போன பிறகு, எம்-6 கலைக்கப்படும். 37 00:02:06,210 --> 00:02:10,755 மேலும், புது சோவியத் அரசாங்கம், சுதந்திரமான மார்ஸுடன் ஒப்பந்தம் செய்ய 38 00:02:10,756 --> 00:02:15,636 இணக்கமாக இருக்கும், அதுவும் உங்களால் இன்னும் சில வாரங்கள் தாக்குப்பிடிக்க முடிந்தால். 39 00:02:17,095 --> 00:02:18,930 இந்தத் தகவலெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரிஞ்சது? 40 00:02:18,931 --> 00:02:21,225 சிறையில் ஒரே ஒரு கரன்சிதான், அது தகவல். 41 00:02:21,934 --> 00:02:25,354 அந்த வகையில், நான் ரொம்பவே பணக்காரி. 42 00:02:26,897 --> 00:02:29,357 கோர்ஸென்கோ மாற்றப்படுவதற்கு முன், நீங்க சரணடைந்தால், 43 00:02:29,358 --> 00:02:34,321 அவரது நிலை இன்னும் வலுப்பெறும், இது எல்லாமே வீணாகிடும். 44 00:02:35,989 --> 00:02:36,990 நாங்கள் சரணடைய மாட்டோம். 45 00:02:38,325 --> 00:02:39,993 பாசாங்கு பண்ணாதே. 46 00:02:40,619 --> 00:02:44,080 இந்த டைட்டன் தரையிறக்கம் ஒரு அழகான தருணம்தான், நான் ஒத்துக்கிறேன், 47 00:02:44,081 --> 00:02:46,500 ஆனால் களத்திலுள்ள உண்மைகள் எதுவும் மாறவில்லை, அப்படியேதான் இருக்கு. 48 00:02:49,378 --> 00:02:54,006 உணவு இல்லாததால், நீ பூமியிடம் ஒரு மீட்பு கப்பல் கேட்கணும், 49 00:02:54,007 --> 00:02:59,136 அவங்க உனக்கு ஒன்றை அனுப்ப ஒரே வழி, நீங்க சரணடைவதுதான். எல்லோரும். 50 00:02:59,137 --> 00:03:01,138 நிபந்தனை இல்லாமல். 51 00:03:01,139 --> 00:03:03,558 அதாவது நீங்க ஜெயிலுக்குப் போவீங்க. நீங்க எல்லோரும். 52 00:03:03,559 --> 00:03:04,935 நாங்களும்தான். 53 00:03:06,353 --> 00:03:08,396 அது எப்படி? நீங்க அவங்க பக்கம்தானே இருக்கீங்க? 54 00:03:08,397 --> 00:03:11,440 பாரு, நீ ஏன் எங்களை சந்தேகப்படுறன்னு எனக்குப் புரியுது. 55 00:03:11,441 --> 00:03:12,442 அதுவும் என் மேல். 56 00:03:13,068 --> 00:03:14,652 இந்த விஷயம் எல்லாமே உங்களாலதான் நடந்துச்சு. 57 00:03:14,653 --> 00:03:17,822 பல வருஷமா நீங்க எங்க எல்லாரையும் ஏமாத்தினது போல, இப்ப என்னை ஏமாத்தலன்னு எனக்கு எப்படி தெரியும்? 58 00:03:17,823 --> 00:03:19,199 அப்படி இருந்தா நல்லாத்தான் இருக்கும். 59 00:03:27,124 --> 00:03:29,543 என் குடும்பம், திரு. டேல்… 60 00:03:30,377 --> 00:03:33,172 என் மனைவி, என் மகன்… 61 00:03:34,715 --> 00:03:37,467 அவங்க சோவியத் யூனியனின் அச்சுறுத்தலில் இருக்காங்க. 62 00:03:39,595 --> 00:03:44,183 என் மனைவியை எல்லார் முன்னாடியும் என்னை பகிரங்கமாக கண்டிக்க வச்சுட்டாங்க. 63 00:03:45,601 --> 00:03:48,979 என் மகன், அவன்கிட்ட இருந்து ஒரு மாசமா எந்தத் தகவலும் இல்ல. 64 00:03:51,732 --> 00:03:56,236 அதனால ஆமா, இது வெறும் இலட்சியமா இருக்காது, 65 00:03:57,112 --> 00:03:59,989 ஆனா என் குடும்பத்தைப் பாதுகாக்க நான் செய்ய வேண்டியதைச் செய்யணும். 66 00:03:59,990 --> 00:04:02,451 அது என் அரசுக்கு எதிரா போறதுனா கூட. 67 00:04:11,001 --> 00:04:12,544 நீங்க என்கிட்ட எதை மறைக்குறீங்க? 68 00:04:16,464 --> 00:04:21,302 உங்களுடைய தடை, அமெரிக்கா மற்றும் சோவியத் பொருளாதாரங்களை பெரும் வீழ்ச்சிக்கு உள்ளாக்கியது. 69 00:04:21,303 --> 00:04:25,264 பிராக், கோர்ஸென்கோ, அவங்க அதிகாரத்துல இருக்க, தங்கள் குடிமக்களுக்கு 70 00:04:25,265 --> 00:04:28,434 தாங்கள் அதிகாரம் அற்றவர்கள் இல்லன்னு காட்ட ஏதாவது நடவடிக்கை எடுத்தாகணும். 71 00:04:28,435 --> 00:04:31,812 எம்-6-ஐ சேர்ந்த ஒரு பன்னாட்டு இராணுவப் படை, 72 00:04:31,813 --> 00:04:34,816 இப்போ மார்ஸை நோக்கி வருவதா எங்களுக்கு தகவல் வந்திருக்கு. 73 00:04:36,193 --> 00:04:39,779 குஸ்னெட்சோவ் நிலையத்தையும், ஆஸ்டிராய்ட் கோல்டிலாக்ஸையும் 74 00:04:39,780 --> 00:04:42,199 பலவந்தமாக மீண்டும் கைப்பற்றணும் என்பதுதான் அவங்களுக்கான உத்தரவு. 75 00:04:43,575 --> 00:04:45,619 பொய். நாங்க இந்நேரம் அவங்களைப் பார்த்திருப்போம். 76 00:04:47,162 --> 00:04:48,663 நான் பல வருஷங்களுக்கு முன்னாடி கத்துக்கிட்டது போல, 77 00:04:48,664 --> 00:04:51,542 சில விஷயங்களை ரொம்ப தாமதமாகற வரை பார்க்க முடியாது. 78 00:04:57,214 --> 00:04:59,758 செயல்திட்டத்தில் உள்ள பின்வரும் மாற்றங்களைக் கவனிக்கவும். 79 00:05:00,384 --> 00:05:05,347 2003 எல்சி சிறுகோளை மீண்டும் கைப்பற்றுவதற்கும், ஆக்கிரமிப்பதற்கும் முக்கியமானது, 80 00:05:06,181 --> 00:05:08,433 இந்த முக்கிய துணை நிலையத்தை கைப்பற்றுவதுதான். 81 00:05:09,601 --> 00:05:13,730 இப்ப நம்மிடமுள்ள சிறந்த தகவல்படி, இந்த அணுகுமுறை மூலம் வெற்றிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. 82 00:05:14,606 --> 00:05:18,402 மூன்றாவது மற்றும் நான்காவது குழுக்கள் இந்தப் பக்கம் நுழைந்து, துணை நிலையம் வழியாக தாக்குதல் 83 00:05:19,027 --> 00:05:22,363 மேற்கொண்டு, எந்த எதிர்ப்பையும் ஆபத்து இல்லாத வழியில் அகற்றுவார்கள். 84 00:05:22,364 --> 00:05:25,867 மறுபடியும் சொல்றேன், கண்ணைக் கூசச் செய்யும் குண்டுகளும், ரப்பர்கள் தோட்டாக்கள் மட்டும்தான். 85 00:05:25,868 --> 00:05:27,869 உள்ளே எந்த சேதமும் ஏற்படக் கூடாது. 86 00:05:27,870 --> 00:05:30,288 - புரிந்ததா? - புரிந்தது, சார். 87 00:05:30,289 --> 00:05:31,456 கலைந்து செல்லுங்கள். 88 00:06:21,924 --> 00:06:24,676 துணிச்சலான புது உலகம் 89 00:07:33,328 --> 00:07:36,748 நீங்கள் அனைவரும் இங்கு இருப்பது ஒரு உறுதிமொழி. 90 00:07:37,499 --> 00:07:41,295 இந்த தளத்தில் உள்ள மக்களைப் பாதுகாத்து, தற்காக்கும் ஒரு உறுதிமொழி. 91 00:07:42,045 --> 00:07:47,884 மற்றும், ஹேப்பி வேலி கார்ப்ஸின் அதிகாரிகளாக உங்களுக்கு அதிகாரம் இருந்தாலும், 92 00:07:47,885 --> 00:07:52,221 அந்த அதிகாரத்தை நீங்கள் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் முக்கியம். 93 00:07:52,222 --> 00:07:56,142 அந்த உறுதிமொழிக்கு மாறாக நீங்கள் எதையாவது செய்தால், 94 00:07:56,143 --> 00:07:59,813 உடனடியாக பணி நீக்கம் நீக்கப்படுவீர்கள். 95 00:08:00,355 --> 00:08:01,439 இது தெளிவாகப் புரிகிறதா? 96 00:08:01,440 --> 00:08:02,941 புரிகிறது, மேடம். 97 00:08:05,402 --> 00:08:09,281 இங்கு நாம் புதிதாக எதையாவது தொடங்குவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கு. 98 00:08:09,990 --> 00:08:11,074 ஏதாவது வித்தியாசமாக. 99 00:08:12,367 --> 00:08:14,995 அதனால நாம விஷயங்களை வேற மாதிரி செய்வோம். 100 00:08:15,662 --> 00:08:17,706 நாம் கனிவோடு நடந்துகொள்வோம். 101 00:08:18,290 --> 00:08:20,584 உதவி தேவைப்படுறவங்களுக்கு, நாம உதவுவோம். 102 00:08:21,251 --> 00:08:25,213 அவங்க எந்த நாட்டைச் சேர்ந்தவங்கன்னோ, எந்தப் பிரிவைச் சேர்ந்தவங்கன்னோ பார்க்காம உதவுவோம்… 103 00:08:25,214 --> 00:08:27,216 அவர்களோட சட்டப்பூர்வ நிலை எதுவாக இருந்தாலும் சரி. 104 00:08:27,716 --> 00:08:30,928 நம்ம கொள்கையில சேரும் எவரையும் வரவேற்போம். 105 00:08:33,138 --> 00:08:37,768 ஒரு வருஷத்துக்கு முன், "மார்ஸி"-ன்னா என்னனு கூட எனக்குத் தெரியாது. 106 00:08:39,520 --> 00:08:44,525 ஆனா இப்போ, உங்க எல்லாரையும் பார்க்கும்போது, நானும் ஒரு "மார்ஸி"னு சொல்லிக்க பெருமைப்படுறேன். 107 00:08:47,444 --> 00:08:49,737 சரி. ரொம்ப உற்சாகமடையறதுக்கு முன்னாடி, 108 00:08:49,738 --> 00:08:52,198 முதல்ல ஒரு உடல் பரிசோதனை செய்யப் போறோம், 109 00:08:52,199 --> 00:08:54,493 அதுக்கப்புறம் ஆயுதப் பயிற்சிக்கு நேரா போவோம். 110 00:08:56,119 --> 00:08:57,246 சொல்லு, பால்ட்வின். 111 00:08:59,581 --> 00:09:01,582 நான் மருத்துவப் பிரிவில் சேர கையெழுத்து போட்டேன். 112 00:09:01,583 --> 00:09:04,377 ஆனாலும் நான் ஆயுத பயிற்சி விஷயங்கள்ல ஈடுபடணுமா? 113 00:09:04,378 --> 00:09:06,879 ஆமா, HVC-ல உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 114 00:09:06,880 --> 00:09:11,009 ஆயுத "விஷயங்கள்"ல குறைந்தபட்சம் அடிப்படைத் திறன் தேவை. 115 00:09:13,470 --> 00:09:14,513 கலைந்து செல்லுங்கள். 116 00:09:15,347 --> 00:09:17,975 நான் அதைச் சுரங்கத் தொழிலாளர்களின் கண்களில் பார்த்திருக்கிறேன். 117 00:09:19,226 --> 00:09:23,105 அவர்களின் தலைக்கு மேல் இடைவிடாது சுழலும் ஆஸ்டிராய்டிலிருந்து திரும்பும்போது. 118 00:09:23,605 --> 00:09:28,485 காசநோய் வானத்தின் கீழ் இங்கு சிக்கியிருக்கும் எனது சக இளைஞர்களின் கண்களில். 119 00:09:28,986 --> 00:09:33,115 பூமியே, உன் குழந்தைகளின் அழுகுரலை உன்னால் கேட்க முடியவில்லையா? 120 00:09:34,950 --> 00:09:40,204 ஆஸ்டிராய்ட், என் காதல் 121 00:09:40,205 --> 00:09:44,168 {\an8}குல்ஸோரா அகில்மாடோவாவின் ஆய்வுக் கட்டுரை திரைப்படம் 122 00:09:58,932 --> 00:10:00,017 ஹே. 123 00:10:01,101 --> 00:10:02,561 உனக்கு… உனக்கு ஒண்ணுமில்லயே? 124 00:10:05,647 --> 00:10:09,067 அவளால… அவளோட படத்தை முடிக்கவே முடியல. 125 00:10:09,651 --> 00:10:11,320 அவ ஆரம்பிக்க கூட இல்ல. 126 00:10:15,157 --> 00:10:17,284 அவள் இன்னும் உயிரோடு இருந்திருப்பா, நான் மட்டும்… 127 00:10:19,036 --> 00:10:22,039 உன் பிறந்தநாளுக்கு அந்த முட்டாள்தனமான விஷயத்தை செய்ய சொல்லாமல் இருந்திருந்தால். 128 00:10:22,748 --> 00:10:24,708 ஹே, லில். அது இல்ல… 129 00:10:25,667 --> 00:10:28,086 ஹே, அது உன் தப்பு இல்ல, சரியா? 130 00:10:29,213 --> 00:10:32,798 அதுதான் உண்மைன்னு உனக்கே தெரியும். நான் கூப்பிடலைன்னா அவ இன்னும் உயிரோட இருந்திருப்பா. 131 00:10:32,799 --> 00:10:35,594 கடவுளே. இங்க வா, இங்க வா. 132 00:10:41,642 --> 00:10:42,725 எனக்கும் வருத்தமா இருக்கு. 133 00:10:42,726 --> 00:10:44,144 இது கஷ்டமா இருக்கும்னு எனக்குத் தெரியும். 134 00:10:51,610 --> 00:10:55,239 இப்போ உனக்கு சிறந்த விஷயம் என்னன்னா… 135 00:10:57,699 --> 00:10:59,826 வந்து, கொஞ்ச நாள்… இங்கிருந்து போறது. 136 00:11:01,453 --> 00:11:03,412 உனக்கு புரியுதா? வந்து, விஷயங்கள் இப்போ ரொம்ப மோசமா இருக்கு. 137 00:11:03,413 --> 00:11:04,414 நீ என்ன சொல்ற? 138 00:11:05,374 --> 00:11:06,958 வந்து, நான் சொல்றது, அது… 139 00:11:06,959 --> 00:11:09,585 சில நாள்ல ஒரு விண்கலம் பூமிக்குத் திரும்பிப் போகுது. 140 00:11:09,586 --> 00:11:11,003 - நான் சொல்றது - என்ன இது, அலெக்ஸ்? 141 00:11:11,004 --> 00:11:12,755 இல்ல, கோபப்படாதே, லில்லி. 142 00:11:12,756 --> 00:11:13,923 நீ ஏன் அப்படி சொல்ற? 143 00:11:13,924 --> 00:11:15,132 ஏன்? 144 00:11:15,133 --> 00:11:16,509 நான் போகணும்னு நீ விரும்புறியா? நீ… 145 00:11:16,510 --> 00:11:18,386 நான் போயிடணும்னு நினைக்குறியா? 146 00:11:18,387 --> 00:11:19,887 இல்ல, அப்படி இல்ல. 147 00:11:19,888 --> 00:11:21,305 லில்லி, நீ போகணும்னு நான் விரும்பல. 148 00:11:21,306 --> 00:11:24,016 அதாவது, இதே விஷயத்தை என் பெற்றோரும், என் அக்காவும் சொன்னதை 149 00:11:24,017 --> 00:11:26,227 என்னால புரிஞ்சுக்க முடியுது, ஆனா நான்… 150 00:11:26,228 --> 00:11:27,437 நீ சொல்லக் கூடாது. 151 00:11:28,230 --> 00:11:29,982 நீ ஏன் அப்படி ஒரு யோசனையைச் சொன்ன? 152 00:11:30,482 --> 00:11:32,693 உன்னைப் பத்தி நான் கவலைப்படுறேன். 153 00:11:34,987 --> 00:11:38,990 சரி, ஆனா… என்னால என்னைக் கவனிச்சுக்க முடியும், சரியா? 154 00:11:38,991 --> 00:11:41,576 - எனக்குத் தெரியும். - சரி, நீ அந்த… 155 00:11:41,577 --> 00:11:44,036 அந்த முட்டாள்தனமான சீருடை அணிஞ்சதால… 156 00:11:44,037 --> 00:11:46,373 - அது ஹேப்பி வேலி கார்ப்ஸ். - சரி, என்னவோ. நான்… 157 00:11:47,499 --> 00:11:49,375 அதனால, எனக்கு எது நல்லதுன்னு உனக்குத் தெரியும்னு அர்த்தம் இல்ல. 158 00:11:49,376 --> 00:11:51,670 நான் அப்படி சொல்லவே இல்ல. நான் அப்படி சொல்லல. 159 00:11:52,379 --> 00:11:54,172 உன்னால உன்னை கவனிச்சுக்க முடியும்னு எனக்குத் தெரியும். 160 00:11:54,173 --> 00:11:59,052 எனக்கு அது தெரியும். என்னை நம்பு, உன்னைப் பத்தி நினைச்சாலே ரொம்ப பயமா இருக்கு, சரியா? 161 00:12:05,934 --> 00:12:11,063 சரி, நான் பூமிக்குத் திரும்பி போறதப் பத்தி மறுபடியும் பேசாதே. 162 00:12:11,064 --> 00:12:12,482 சரி. 163 00:12:14,234 --> 00:12:17,111 அந்த இடத்தை விடு. அவளைப் பத்தி அவங்க என்ன சொல்றாங்கனு பார்த்தியா? 164 00:12:17,112 --> 00:12:18,322 இல்ல. 165 00:12:19,990 --> 00:12:21,992 அடக் கடவுளே. "கிளர்ச்சியாளர்-ஆ"? 166 00:12:22,826 --> 00:12:24,911 மார்ஸில் நடந்த சம்பவத்தில் கிளர்ச்சியாளர் உயிரிழப்பு 167 00:12:24,912 --> 00:12:26,913 இது பைத்தியக்காரத்தனம். அவள் டான்ஸ் ஆடிட்டு இருந்தாள். 168 00:12:26,914 --> 00:12:28,582 சுத்தப் பொய். 169 00:12:33,420 --> 00:12:36,256 இப்படித்தான் அவங்க நம்மைப் பாக்குறாங்க. அவங்க நம்மை… 170 00:12:37,382 --> 00:12:39,134 தீவிரவாதி இல்லன்னா பயங்கரவாதிகளா சித்தரிக்க விரும்புறாங்க 171 00:12:40,302 --> 00:12:43,388 ஆனா, நாம அப்படி இல்ல. நாம யாருன்னு அவங்களுக்குக் காட்டணும். 172 00:12:44,097 --> 00:12:46,099 இங்கு வாழ்வது எப்படி இருக்கும்னு அவங்களுக்குக் காட்டணும். 173 00:12:47,643 --> 00:12:50,103 சரி, நீ ஏதாவது ஒரு வழியில உதவ முயற்சிக்குறதானே? 174 00:12:52,481 --> 00:12:53,649 ஒருவேளை நானும் செய்யலாம். 175 00:13:02,991 --> 00:13:04,326 நீ என்ன… என்ன பண்ணுற? 176 00:13:05,077 --> 00:13:06,119 என் கூட வா. 177 00:13:07,120 --> 00:13:08,247 நீ என்ன… 178 00:13:12,709 --> 00:13:13,961 சரி. 179 00:13:22,344 --> 00:13:25,514 அந்தப் புழுதிப்புயல், டாப்ளர் ஷிஃப்ட் ரீடிங்கஸை ஏற்கனவே தடுக்க ஆரம்பித்திருக்கலாம். 180 00:13:26,139 --> 00:13:27,890 அங்க ஏதாவது தென்படுதா? 181 00:13:27,891 --> 00:13:31,061 இல்லை. நம்ம ரேடார் ரேஞ்சுக்குள்ள எதுவும் வரல. 182 00:13:32,980 --> 00:13:34,480 தகவல்-ஆ? 183 00:13:34,481 --> 00:13:35,482 யாரிடமிருந்து? 184 00:13:36,316 --> 00:13:37,526 இரினா மொரோசோவா. 185 00:13:38,861 --> 00:13:40,653 இப்ப இரினா கூட நெருக்கமாகிட்டியா? 186 00:13:40,654 --> 00:13:42,071 அடுத்து யாரு, வட கொரியாவா? 187 00:13:42,072 --> 00:13:43,990 நீ யாருக்கும் ஆதரவு தர மாட்டன்னு நினைச்சேன். 188 00:13:43,991 --> 00:13:48,619 நீ அப்பாவியா இருக்கன்னு சொல்றது பொது அறிவுதான், அது அரசியல் இல்லை. 189 00:13:48,620 --> 00:13:50,330 இங்கயும் எதுவும் இல்ல, சீஃப். 190 00:13:51,748 --> 00:13:53,834 இரினா தப்பான தகவல் கொடுத்திருக்காங்கன்னு நினைக்கிறேன். 191 00:13:54,376 --> 00:13:56,836 உறுதியாவா? கண்டுபிடிக்கிறது கஷ்டம்னு சொன்னாங்க. 192 00:13:56,837 --> 00:14:00,591 பெரும்பாலான ராணுவத்திடம் கண்ணுக்குத் தெரியாம இருக்க தொழில்நுட்பங்கள் இருக்கும், ஆனா… 193 00:14:04,845 --> 00:14:07,805 ஷிரீன், லாங்-ரேஞ்ச் ரேடாரை மறுபடியும் திருப்பிவிட முடியுதான்னு பாரு, 194 00:14:07,806 --> 00:14:10,725 அதுவும் பிரூட் ஃபோர்ஸ் டிரெஜெக்டரி வழியா இதோ இங்கே. 195 00:14:10,726 --> 00:14:12,602 அது நம்மோட அரேஸை விட அதிகமாகப் பிடிக்கும். 196 00:14:12,603 --> 00:14:15,272 அப்புறம், டாப்ளர் டிராக்கிங்க்கு ஆர்பிட்டரை மறுசீரமை. 197 00:14:20,444 --> 00:14:23,404 வந்து, பூமிக்குத் திரும்பி போற விண்கப்பல் பட்டியல்ல 198 00:14:23,405 --> 00:14:25,657 உன் பேர் இல்லன்னு கவனிச்சேன். 199 00:14:27,367 --> 00:14:28,994 டைட்டன் மட்டும்தான் காரணம். 200 00:14:29,536 --> 00:14:31,705 அவங்க பாதுகாப்பா திரும்புற வரைக்கும், நான் எங்கும் போக மாட்டேன். 201 00:14:32,414 --> 00:14:34,081 எனக்கு ரொம்ப சந்தோஷம். 202 00:14:34,082 --> 00:14:35,083 எங்க எல்லாருக்குமே. 203 00:14:35,876 --> 00:14:37,960 அந்த மிஷன், இங்க இருக்கறவங்களுக்கு ரொம்ப முக்கியம். 204 00:14:37,961 --> 00:14:39,086 என்னை திரும்பவும் உன் கவுன்சில்ல 205 00:14:39,087 --> 00:14:40,380 சேரச் சொல்லி கேட்கப் போறியா? 206 00:14:41,048 --> 00:14:42,548 இருங்க. 207 00:14:42,549 --> 00:14:44,593 ரேடார்ல ஏதோ இருக்கு போல. 208 00:14:48,472 --> 00:14:52,350 ம், அது குறைந்த ஆர்சிஎஸ் விண்கப்பலுக்கு பொருத்தமானதாக இருக்கு. 209 00:14:52,351 --> 00:14:55,645 டாப்ளர் ஷிஃப்ட் அது மார்ஸை நோக்கி வருவதாகக் காட்டுகிறது. 210 00:14:55,646 --> 00:14:58,064 கணிப்பின்படி, இன்னும் மூணு நாள்ல. 211 00:14:58,065 --> 00:14:59,774 ஐயோ, அவங்க சொன்ன மாதிரியே நடக்குது. 212 00:14:59,775 --> 00:15:02,193 {\an8}அடையாளம் தெரியாத இலக்கு ட்ரான்ஸ்பான்டர் கண்டறியப்படவில்லை 213 00:15:02,194 --> 00:15:03,862 {\an8}அவங்க நம்மைத் தேடி வர்றாங்க. 214 00:15:07,157 --> 00:15:10,159 படையெடுக்கும் படையை எதிர்த்துப் போராட நம்மகிட்ட வசதிகள் இல்லை. 215 00:15:10,160 --> 00:15:12,870 அந்த ஆஸ்டிராய்டை அவங்க திரும்ப எடுத்துக்கிட்டா, நம்ம கதை கந்தல்தான். 216 00:15:12,871 --> 00:15:15,039 எப்படியும் நம்ம கதை கந்தல்தான். 217 00:15:15,040 --> 00:15:16,667 நம்மகிட்ட இன்னும் ரெண்டு வாரத்துக்குத்தான் உணவு இருக்கு. 218 00:15:17,584 --> 00:15:19,126 அதெல்லாம் உண்மைதான். 219 00:15:19,127 --> 00:15:23,464 அடுத்த சில வாரங்க நாம தப்பிச்சிட்டோம்னா, நாம சோவியத்துகளுடன் ஒரு ஒப்பந்தம் போடலாம். 220 00:15:23,465 --> 00:15:25,842 அப்ப நமக்கு சுதந்திரம் கிடைக்க ஒரு உண்மையான வாய்ப்பு கிடைக்கும். 221 00:15:25,843 --> 00:15:27,719 நீ உண்மையாவே அவங்களை நம்புறியா, மைல்ஸ்? 222 00:15:28,303 --> 00:15:29,804 நான் லென்யாவை நம்ப மாட்டேன். 223 00:15:29,805 --> 00:15:31,722 அவன் எப்பவுமே தன்னோட லாபத்துக்காகத்தான் செயல்படுவான். 224 00:15:31,723 --> 00:15:33,432 அவங்க சொன்னது சரியா இருக்கு. 225 00:15:33,433 --> 00:15:36,227 பூமியில் அவனது குடும்பம் ஆபத்துல இருக்கும்போது, அவன் எதுக்காக பொய் சொல்லப் போறான்? 226 00:15:36,228 --> 00:15:38,313 பாருங்க, நாம ஏதாவது பண்ணனுணும், 227 00:15:38,897 --> 00:15:42,024 இல்லன்னா நாம எல்லாரும் கைவிட்டுட வேண்டியதுதான், அப்புறம் இந்த தளத்துல இருக்கறவங்க எல்லோரும் 228 00:15:42,025 --> 00:15:44,903 கைவிலங்கோட பூமிக்குத் திரும்பிப் போவோம், ஒருவேளை வாழ்நாள் முழுக்க ஜெயில்லயே இருப்போம். 229 00:15:45,779 --> 00:15:47,280 அப்புறம் நம்ம போராடின எல்லாமே, 230 00:15:47,281 --> 00:15:49,532 ஹாப்பி வேலியின் மக்கள் செய்த அர்ப்பணிப்பு எல்லாமே, 231 00:15:49,533 --> 00:15:50,993 அது எல்லாம் வீணாகிடும். 232 00:15:54,997 --> 00:15:58,417 அப்ப, நாம என்ன செய்யலாம்? 233 00:16:06,300 --> 00:16:07,718 ஒரு சண்டையில… 234 00:16:08,677 --> 00:16:12,222 எதிரி நம்ம இடத்துல இறங்காம தடுக்க சிறந்த வழி… 235 00:16:13,223 --> 00:16:14,892 ரன்வேயை அழிப்பதுதான். 236 00:16:16,768 --> 00:16:18,436 ரன்வேயா? அது என்னது… 237 00:16:18,437 --> 00:16:21,064 குஸ்னெட்சோவ்ல இருக்கற டாக்கிங் இடத்தை சொல்றீங்களா? 238 00:16:22,232 --> 00:16:25,319 நாம அதை… வெடிக்க வைக்கலான்னு சொல்றீங்களா, என்ன? 239 00:16:26,069 --> 00:16:27,361 நாம அதை அழிச்சிட்டா, 240 00:16:27,362 --> 00:16:30,740 அவங்க விரும்பினாலும் கோல்டிலாக்ஸ்ல இருந்து இரிடியம் எடுக்க முடியாது. 241 00:16:30,741 --> 00:16:33,076 அதாவது, அதுதான் இந்த மொத்த ஆபரேஷனோட முக்கிய விஷயம். 242 00:16:33,660 --> 00:16:35,913 அதனால, அந்த ஆஸ்டிராய்ட் அவங்களுக்கு பயனற்றதா ஆகிடும். 243 00:16:41,710 --> 00:16:45,880 அந்த அளவுக்குப் பெருசா இருக்கற ஒண்ணை அழிக்க, அதிக வெடிபொருள் தேவைப்படும். 244 00:16:45,881 --> 00:16:48,008 நம்ம ஆயுதக்கிடங்குல அவ்வளவு சக்தி வாய்ந்தது எதுவும் இல்லை, 245 00:16:48,634 --> 00:16:50,676 இல்ல இந்த பக்கத்துல எங்கயும் இல்ல. 246 00:16:50,677 --> 00:16:53,638 பாமர் நம்ம கிட்ட மிஞ்சி இருந்த வெடிபொருளைத் திருடிட்டான். 247 00:16:53,639 --> 00:16:55,849 அப்புறம் நம்மோட மொத்த உணவுப் பொருட்களையும் வெடிக்க வெச்சிட்டான். 248 00:16:59,144 --> 00:17:02,688 நாம திரவ மீத்தேன் தயாரிக்கலாம், ஆனா ரெண்டு நாள்ல முடியாது. 249 00:17:02,689 --> 00:17:04,273 வந்து, நாம ஏதாவது செஞ்சு பார்க்கலாம் 250 00:17:06,527 --> 00:17:10,739 நாம உரத்தை பயன்படுத்தி அம்மோனியம் நைட்ரேட் செய்து, ஹைட்ரஸீனுடன் சேர்க்கலாம். 251 00:17:11,615 --> 00:17:13,575 அது அவ்வளவு பெரிய வெடிப்பை உருவாக்குமா? 252 00:17:15,410 --> 00:17:18,996 நாம அதை எப்படி பேக் பண்றோம் என்பதை பொறுத்து. வந்து, அது TNT அளவுக்கு சக்தி வாய்ந்தது. நான்… 253 00:17:18,997 --> 00:17:21,833 அது எப்படி வேலை செய்யும்னா, அந்த கலவையில, 254 00:17:21,834 --> 00:17:23,919 நாம ஒரு பிளாஸ்ட் கேப் போடணும், சின்ன பட்டாசு மாதிரி. 255 00:17:24,545 --> 00:17:27,714 அப்புறம் அதை ஆன் பண்ணணும், அந்த கலவையில கரண்ட்ட சேர்த்து அப்புறம்… 256 00:17:29,007 --> 00:17:30,217 ஹைட்ரஸீனை சூடாக்கணும். 257 00:17:37,432 --> 00:17:38,516 எனக்குத் தெரியல. 258 00:17:38,517 --> 00:17:43,522 இது ரொம்ப ஆபத்தானது, ஆனா நமக்கு வேற வழி இல்ல. 259 00:18:41,997 --> 00:18:44,041 நேத்து ராத்திரி ஸ்டூவர்ட் உன்னைத் திரும்ப திவால் ஆக்கிட்டதா சொன்னான். 260 00:18:45,209 --> 00:18:48,337 ஒருவேளை நீ போக்கர் ஆடவே லாயக்கு இல்லன்னு எப்பவாவது யோசிச்சிருக்கியா? 261 00:18:49,338 --> 00:18:52,007 இல்லன்னா நான் ஏமாத்துறேன்னு வச்சுலாம், சரியா? 262 00:18:53,175 --> 00:18:56,553 எனக்கு விளையாடவே தெரியாதுன்னு அவனை நினைக்க வச்சிட்டு, அப்புறம் அவனை காலி பண்றது. 263 00:19:01,517 --> 00:19:03,060 சரி, ஒருவேளை நான் போக்கர் விளையாட லாயக்கில்ல. 264 00:19:04,311 --> 00:19:07,064 அதாவது, இங்க நேரத்தைக் கடத்த நான் வேற என்னதான் பண்றது? 265 00:19:07,564 --> 00:19:08,732 ரொம்ப போர் அடிக்குது. 266 00:19:09,233 --> 00:19:10,650 சீரியஸா. 267 00:19:10,651 --> 00:19:12,236 சீக்கிரம் ரெடியாகி காத்திருக்கணும், சரியா? 268 00:19:14,446 --> 00:19:15,447 ஆமா. 269 00:19:17,908 --> 00:19:18,909 நீ நல்லா இருக்கியா? 270 00:19:24,206 --> 00:19:28,710 நான் முன்பு எதுவும் சொல்லல, ஆனா இறந்த அந்தப் பொண்ணு பத்தி கேள்விப்பட்டப்ப வருத்தமா இருந்துச்சு. 271 00:19:29,545 --> 00:19:31,171 அவள் உன் தோழி, சரியா? 272 00:19:34,842 --> 00:19:35,884 ஆமா, கல்லி. 273 00:19:38,846 --> 00:19:41,098 குல்ஸோரா அகில்மாடோவா. 274 00:19:42,558 --> 00:19:47,145 நாங்க நாலு பேர். அவள், நான், லில்லி, அலெக்ஸ்… 275 00:19:48,188 --> 00:19:49,898 நாங்க எப்பவுமே ஒண்ணாவே இருப்போம். 276 00:19:53,235 --> 00:19:54,403 எனக்கும் வருத்தமா இருக்கு. 277 00:19:58,031 --> 00:19:59,032 ஹேய், ரெண்டு பேரும் கவனியுங்க. 278 00:20:01,827 --> 00:20:03,744 எல்.டி. கிட்ட இருந்து தகவல் வந்திருக்கு, நம்ம டீமை 279 00:20:03,745 --> 00:20:06,290 அந்த ஆஸ்டிராய்டை படையெடுக்குறதுக்கு முன் போய் வேவு பார்க்கச் சொல்லிருக்காங்க. 280 00:20:07,749 --> 00:20:09,125 ஹெஸ்கல், நீ என் கூட வரணும். 281 00:20:09,126 --> 00:20:11,753 அந்த ஆஸ்டிராய்டைப் பத்தி உனக்கு என்ன தெரியும்னு அதிகாரிகள் தெரிஞ்சுக்க விரும்புறாங்க. 282 00:20:12,462 --> 00:20:13,463 வா, போகலாம். 283 00:20:14,214 --> 00:20:15,340 சரி, சார்ஜென்ட். 284 00:20:20,846 --> 00:20:21,847 மார்ஸி. 285 00:20:24,808 --> 00:20:26,894 நீ எந்தப் பக்கம்னு மட்டும் ஞாபகம் வச்சுக்கோ. 286 00:20:27,519 --> 00:20:28,896 போடா, ஓர்கி. 287 00:20:45,412 --> 00:20:47,038 ஆஸ்டிராய்டில் ஏதாவது ஆயுதங்கள் இருக்கா? 288 00:20:47,039 --> 00:20:49,790 இல்ல, சார். எனக்குத் தெரிஞ்சு இல்ல. நான் என் அப்பாவோட அங்க போயிருக்கேன். 289 00:20:49,791 --> 00:20:52,376 பாதுகாப்பு போன்ற எதுவுமே இல்ல. 290 00:20:52,377 --> 00:20:53,545 சுரங்க வேலை செய்யுறவங்க எத்தனை பேர்? 291 00:20:54,505 --> 00:20:56,506 சுமார் 80 பேர். 292 00:20:56,507 --> 00:20:57,590 எண்பதா? 293 00:20:57,591 --> 00:20:59,759 அது… அதுக்கு அப்புறம் மாறியிருக்கலாம். 294 00:20:59,760 --> 00:21:01,344 அவன் சொல்ற ரெண்டும் சரிதான். 295 00:21:01,345 --> 00:21:03,471 2003-ல இருந்து எம்பிகேக்கள் மட்டும்தான் 296 00:21:03,472 --> 00:21:05,891 குஸ்னெட்சோவ்ல ஆயுதங்கள் எடுத்துட்டு போக அதிகாரம் பெற்றவங்க. 297 00:21:06,475 --> 00:21:09,894 ஆனா, தடைக்கு அப்புறம் ஒரு சின்ன பராமரிப்புக் குழுதான் இருக்கு. 298 00:21:09,895 --> 00:21:11,146 குறியாக்கம் செய்யப்பட்ட தகவல் பரிமாற்றம் 299 00:21:12,731 --> 00:21:14,398 நன்றி, லான்ஸ் கார்போரல். 300 00:21:14,399 --> 00:21:16,818 - நீ போகலாம். - சரி, சார். 301 00:21:18,612 --> 00:21:22,448 சார்ஜென்ட் ரூயிஸ், உங்க டீம் குஸ்னெட்சோவ் ஸ்டேஷன்ல ரகசியமா நுழைஞ்சு, 302 00:21:22,449 --> 00:21:25,826 நம்ம ஆக்கிரமிப்பு படைக்குத் தயார்படுத்த இந்தத் தகவலை உறுதிப்படுத்தவுணும், 303 00:21:25,827 --> 00:21:28,914 மற்றும் அங்க இருக்குற மீதி சுரங்கத் தொழிலாளர்களை கைது பண்ணணும். 304 00:21:29,498 --> 00:21:30,666 சரி, சார். 305 00:21:32,042 --> 00:21:34,085 ஜாக்கிரதையா கவனிச்சுட்டே இரு, ஜேம்ஸ். 306 00:21:34,086 --> 00:21:35,087 சரி, சார். 307 00:21:35,754 --> 00:21:36,922 சரி, நாம இங்கே கண்காணிக்கணும். 308 00:21:40,509 --> 00:21:43,427 ஆக, உயிரினம் இருப்பதற்கான அறிகுறிகளோட, 309 00:21:43,428 --> 00:21:48,057 முழுமையற்ற டேட்டா ஸ்ட்ரீமை நமக்கு அனுப்பின சீக்கர், இங்கே ஃபோர்செட்டி க்ரேட்டர் பக்கத்துல இருக்கு, 310 00:21:48,058 --> 00:21:51,811 நாம பக்கத்துல இருக்கிற இந்தப் பள்ளதாக்குலதான் இறங்க வேண்டியிருந்துச்சு, இல்லையா? 311 00:21:51,812 --> 00:21:57,733 சரி, ஆனா இப்ப நாம 20 கிலோமீட்டர் தள்ளி, இங்க இருக்கோம், 312 00:21:57,734 --> 00:22:01,405 இது நம்ம பாதுகாப்பான ஈவிஏ ரேஞ்சுக்கு வெளியில இருக்கு, பக்கி வாகனத்திலேயும்தான். 313 00:22:03,866 --> 00:22:06,284 நாம இங்கே வந்ததற்கு காரணமே அந்த சீக்கர்தான். 314 00:22:06,285 --> 00:22:07,786 உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரத்தைக் கண்டுபிடிக்க. 315 00:22:08,287 --> 00:22:11,373 ஆனா இப்போ அங்க போக நமக்கு போதுமான ஆக்ஸிஜன் இருப்பு இல்லையா? 316 00:22:16,378 --> 00:22:17,379 ஒருவேளை… 317 00:22:19,506 --> 00:22:23,844 பக்கியில நம்ம நாலு பேரையும் திணிக்காம, மூணு பேரா குறைச்சா என்ன? 318 00:22:24,553 --> 00:22:28,598 அதுனால, நமக்கு உடனடியாக 33% கூடுதல் நுகர்பொருட்களை கொடுக்கும். 319 00:22:28,599 --> 00:22:31,767 நான் கணக்குப் போட்டுச் சொல்றேன், ஆனா அது ஆபத்தானது. 320 00:22:31,768 --> 00:22:35,480 பாரு, உயிரினத்தை கண்டுபிடிக்க நாம 900 மில்லியன் கிலோமீட்டர் பயணம் செஞ்சு வந்திருக்கோம், 321 00:22:35,981 --> 00:22:37,607 கடைசி 20 கிலோமீட்டர் நம்மை தடுக்க விடப்போறோமா? 322 00:22:37,608 --> 00:22:42,404 பாரு, நாம எவ்வளவு வேணுமானாலும் வாதாடலாம், ஆனா இது கமாண்டர் எடுக்க வேண்டிய முடிவு. 323 00:22:46,658 --> 00:22:48,743 அவன் மணிக்கணக்கா அங்கேதான் இருக்கான். 324 00:22:48,744 --> 00:22:50,287 நான் அவன்கிட்ட பேசுறேன். 325 00:22:50,954 --> 00:22:52,122 வாழ்த்துகள். 326 00:23:03,217 --> 00:23:04,509 வால்ட். 327 00:23:04,510 --> 00:23:05,802 ஹேய், கெல்லி. 328 00:23:08,972 --> 00:23:10,682 வால்ட், நமக்கு ஒரு பிரச்சனை இருக்கு. 329 00:23:11,183 --> 00:23:15,354 நம்ம சீக்கர், மிஷன் பாதுகாப்பு எல்லைக்கு வெளியில இருக்கு, ஆனா… 330 00:23:17,439 --> 00:23:20,983 நாம ஏதாவது செஞ்சு சமாளிச்சுடலாம்னு நினைக்கிறோம். 331 00:23:20,984 --> 00:23:24,237 இந்த லாக்ஸ், சரியான டெல்டா-வி பர்ன் ஏற்றப்பட்டதை உறுதிப்படுத்துது, 332 00:23:24,238 --> 00:23:27,157 டி மைனஸ் 4 நிமிடங்கள் 35 வினாடிகள்ல லோட் ஆயிடுச்சு.. என்னால… 333 00:23:28,116 --> 00:23:30,202 இந்த கோடுல எந்த தவறும் இருப்பது போல தெரியல. 334 00:23:32,287 --> 00:23:33,288 வால்ட்? 335 00:23:34,706 --> 00:23:36,416 வால்ட், நாம இங்கே வந்துட்டோம். 336 00:23:37,501 --> 00:23:38,877 நாம வெற்றிகரமா தரையிறங்கிட்டோம். 337 00:23:39,503 --> 00:23:41,922 நாம இப்படியே விண்கப்பல்ல சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. 338 00:23:42,589 --> 00:23:44,966 நாம உயிரினத்தைக் கண்டுபிடிக்க வந்தோம். உனக்கு அதுல விருப்பமில்லையா? 339 00:23:44,967 --> 00:23:47,134 ஆமா, கண்டிப்பா எனக்கு விருப்பம் இருக்கு. 340 00:23:47,135 --> 00:23:49,262 ஆனா முதல்ல, எனக்கு… எனக்குத் தேவை… 341 00:23:49,263 --> 00:23:53,267 இதை எப்படி கோட்டை விட்டேன்னு தெரிஞ்சுக்கணும், அப்பதான் அது மறுபடியும் நடக்காது. 342 00:23:55,811 --> 00:23:56,812 பாரு. 343 00:23:57,312 --> 00:23:58,313 ஹேய். 344 00:23:59,356 --> 00:24:01,650 அவங்க நீ தலைமை தாங்க விரும்புறாங்க. 345 00:24:03,402 --> 00:24:05,946 நானும் நீ தலைமை தாங்க விரும்புறேன். 346 00:24:15,914 --> 00:24:16,957 நீ சொல்றது சரிதான். 347 00:24:18,917 --> 00:24:20,043 நீ சொல்றது சரின்னு எனக்குத் தெரியும். 348 00:24:21,128 --> 00:24:22,129 நான்… 349 00:24:23,422 --> 00:24:24,548 என்னை மன்னிச்சிடு. 350 00:24:25,966 --> 00:24:28,218 இல்ல, இல்ல, பரவாயில்ல. 351 00:24:29,928 --> 00:24:31,012 பரவாயில்ல. 352 00:24:31,013 --> 00:24:32,097 அப்படி இல்ல. 353 00:24:34,141 --> 00:24:35,184 இது சாதாரண விஷயமில்ல. 354 00:24:36,059 --> 00:24:38,312 நான் எல்லாரையும் கொன்னிருப்பேன், கெல்லி. 355 00:24:40,230 --> 00:24:41,814 - உனக்குப் புரியலையா? - இல்ல. 356 00:24:41,815 --> 00:24:44,108 - நீ மட்டும் இல்லன்னா… - இல்ல, அது… அது உன் தப்பு இல்லை. 357 00:24:44,109 --> 00:24:46,944 என் தப்புதான். நான்… 358 00:24:46,945 --> 00:24:48,112 நான் சொதப்பிட்டேன். 359 00:24:48,113 --> 00:24:49,989 இல்லை. அடச்சே. 360 00:24:49,990 --> 00:24:51,532 நான்… நான் எல்லாத்தையும் சொதப்பிட்டேன். 361 00:24:51,533 --> 00:24:53,367 - வால்ட். - நான்… 362 00:24:53,368 --> 00:24:56,538 - நான்… - வால்ட், நிறுத்து, நான் சொல்றத கேளு. 363 00:24:57,623 --> 00:24:58,707 சரி, அங்க… 364 00:24:59,583 --> 00:25:01,210 நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். 365 00:25:04,880 --> 00:25:06,422 அதுக்கு நீ காரணம் இல்ல. நான்… 366 00:25:06,423 --> 00:25:08,716 என்னோட தவறான முடிவுகளிலிருந்து இந்த மொத்த குழுவையும் காப்பாற்றினாய். 367 00:25:08,717 --> 00:25:10,218 இல்ல, அது உண்மை இல்லை. 368 00:25:10,219 --> 00:25:11,552 என்னால… இப்போ என்னையே நம்ப முடியல. 369 00:25:11,553 --> 00:25:12,762 - வால்ட். - நான்… 370 00:25:12,763 --> 00:25:15,849 நான் தெளிவா யோசிக்கல, நீயே தலைமைப் பொறுப்பை எடுத்துக்கோ. 371 00:25:20,145 --> 00:25:25,776 குறைந்தபட்சம்… கொஞ்ச காலத்துக்கு, இங்க என்ன தப்பு நடந்துச்சுன்னு நான் கண்டுபிடிக்கற வரை, சரியா? 372 00:25:26,944 --> 00:25:30,197 இரு, நான் கமாண்டராகணுமா? 373 00:25:30,906 --> 00:25:32,199 தற்காலிகமாக, ஆமா. 374 00:25:32,824 --> 00:25:34,326 நீ அப்படி சொல்ல மாட்ட. 375 00:25:35,327 --> 00:25:36,328 ப்ளீஸ். 376 00:25:44,044 --> 00:25:45,963 பொறு, ஒரு நிமிஷம். 377 00:25:46,547 --> 00:25:48,757 நீங்க அதை அழிக்கப் போறீங்களா? 378 00:25:49,842 --> 00:25:51,176 அந்த ஆஸ்டிராய்டை. 379 00:25:52,010 --> 00:25:54,887 இல்ல, அவங்க வந்து இறங்கும் டாக்கிங் இடத்தை மட்டும். 380 00:25:54,888 --> 00:25:56,055 எப்படி? 381 00:25:56,056 --> 00:25:58,224 வந்து, நமக்கு தளத்துக்கு வயர் செய்ய போதுமான நேரம் இல்லை, 382 00:25:58,225 --> 00:26:01,519 அதனால நம்மகிட்ட இருக்க எல்லா வெடிபொருட்களையும் ஒரு ஹாப்பர்ல ஏத்திடுவோம். 383 00:26:01,520 --> 00:26:02,937 எனக்குப் புரியலை. 384 00:26:02,938 --> 00:26:05,565 அது திட்டமா இருக்க வாய்ப்பே இல்லை. 385 00:26:05,566 --> 00:26:06,899 அது பைத்தியக்காரத்தனம். 386 00:26:06,900 --> 00:26:09,236 வந்து, நீங்க ரெண்டு பேரும் ஒரே விஷயத்துல ஒத்துப்போறது நல்ல விஷயம்தான். 387 00:26:09,778 --> 00:26:13,239 பாருங்க, தளத்துடன் இதை வெற்றிகரமா செய்றது ஒரு விஷயமா இருந்தாலும், 388 00:26:13,240 --> 00:26:15,491 அங்க பத்திரமா போய்ச் சேர்றது ரொம்ப கஷ்டம். 389 00:26:15,492 --> 00:26:17,327 நீ வெளியே பாத்தியா, என்ன? 390 00:26:18,120 --> 00:26:20,079 ஒரு பெரிய புழுதிப் புயல் அடிக்குது. 391 00:26:20,080 --> 00:26:23,040 அது ஒவ்வொரு நொடியும் பெருசாயிட்டே இருக்கு, நீங்க ஒரு ஹாப்பரை எடுத்துட்டு, 392 00:26:23,041 --> 00:26:26,210 அதுல நிலை இல்லாத வெடிமருந்துகளை நிரப்பி, அதுக்குள்ள பறந்து போகப் போறீங்களா? 393 00:26:26,211 --> 00:26:27,379 ஆமா, இல்ல, இல்ல. 394 00:26:28,046 --> 00:26:29,298 அது சூப்பரான யோசனை. 395 00:26:30,174 --> 00:26:34,927 எம்-6 அதை எடுக்க வர்றதுக்கு முன், நம்ம தளத்தை வெடிக்க வைக்கணும்னா, நாம இப்பவே போகணும். 396 00:26:34,928 --> 00:26:37,514 அங்க இருந்த குழுவினரை ஃபீனிக்ஸ்க்கு ஏற்கனவே வெளியேத்திட்டோம். 397 00:26:38,307 --> 00:26:40,601 இதை ஓட்டுற அளவுக்கு பைத்தியக்காரன் யாரு? 398 00:26:41,226 --> 00:26:44,937 ஃபிராங்க் ஹாலோரான் தானா முன்வந்தார், மாக்ஸ் ஹோவர்ட் அவருக்கு கோபைலட்டா இருப்பார். 399 00:26:44,938 --> 00:26:46,230 உண்மையில, நான்தான் ஓட்டப் போறேன். 400 00:26:46,231 --> 00:26:47,607 என்னது? 401 00:26:47,608 --> 00:26:51,527 ஆமா, மத்தவங்க வாழ்க்கையை பணயம் வைக்க நான் யாரையும் கேட்கப் போவதில்லை. 402 00:26:51,528 --> 00:26:53,112 தவறுகள் நடக்க நிறைய வாய்ப்பிருக்கு. 403 00:26:53,113 --> 00:26:56,073 அதனாலத்தான் நீ அதை செய்யக் கூடாது. நீ இங்கே எங்களுக்குத் தேவை. 404 00:26:56,074 --> 00:26:57,366 பாரு, ஃபிராங்க்குக்கு குடும்பம் இருக்கு. 405 00:26:57,367 --> 00:26:59,577 எல்லோருக்கும் குடும்பங்கள் இருக்கு, அவங்க வீடு திரும்பணும்னு காத்துக்கிட்டு இருக்காங்க. 406 00:26:59,578 --> 00:27:02,998 எனக்கு யாரும் இல்ல. நானே இத செய்யறேன். விவாதம் முடிந்தது. 407 00:27:14,635 --> 00:27:16,720 மிஸ் பாய்ட்டோடு நான் போறேன். 408 00:27:20,933 --> 00:27:23,059 இது ஒரு ஆபத்தான மிஷன், ஒரு கோபைலட் தேவை. 409 00:27:23,060 --> 00:27:25,061 நீ என்ன பைத்தியமா? இது தற்கொலை. 410 00:27:25,062 --> 00:27:26,939 எல்லாத்தையும் சரிசெய்ய இது மட்டும்தான் ஒரே வழி. 411 00:27:28,941 --> 00:27:31,067 உங்க உதவிக்கு நன்றி, 412 00:27:31,068 --> 00:27:33,069 ஆனா நீங்க விண்வெளி வீரரா இருந்து ரொம்ப நாள் ஆச்சு. 413 00:27:33,070 --> 00:27:35,656 உங்களுக்கு என் நிலைமை தெரியும், மிஸ்டர் டேல். 414 00:27:37,658 --> 00:27:41,245 என் மனைவி, என் மகன்… 415 00:27:43,413 --> 00:27:45,749 உங்களை மாதிரிதான் நானும் இதுல ஈடுபட்டிருக்கேன். 416 00:27:46,583 --> 00:27:48,085 ஒருவேளை உங்களைவிட அதிகமாக. 417 00:27:50,295 --> 00:27:51,797 இது கண்டிப்பா வேலை செய்யும். 418 00:27:56,969 --> 00:27:57,970 சரி. 419 00:27:59,304 --> 00:28:03,517 அந்த மேசைக்குப் பின்னால உட்கார்ந்திருந்ததால, உங்க விமானத் திறன் மங்கிப் போயிருக்காதுன்னு நம்புறேன். 420 00:28:06,478 --> 00:28:08,313 வாங்க, உங்களைத் தயார்படுத்தலாம். 421 00:29:03,160 --> 00:29:04,452 சார்ஜென்ட். 422 00:29:04,453 --> 00:29:05,454 என்ன விஷயம், சொல்லு? 423 00:29:07,497 --> 00:29:08,498 நான்… 424 00:29:09,333 --> 00:29:11,584 நாளைக்கு நீங்க டோலெஃப்ஸனை கூட்டிட்டு போறதுதான் சிறந்ததுனு நினைக்கிறேன். 425 00:29:11,585 --> 00:29:13,754 அவள் ஜீரோ ஈர்ப்புவிசையில் சிறந்தவள். 426 00:29:14,254 --> 00:29:15,672 நீ என்ன சொல்லுற? 427 00:29:16,173 --> 00:29:17,508 வேவு பார்க்கும் வேலை, சார். 428 00:29:18,091 --> 00:29:19,676 அடுத்த பணிக்கு நான் தயாரா இருப்பேன். 429 00:29:21,261 --> 00:29:22,553 என்ன, விளையாடுறியா, ஜேரெட்? 430 00:29:22,554 --> 00:29:23,764 இல்ல, சார். 431 00:29:29,895 --> 00:29:32,189 இது அழைப்பு இல்லை. இது ஒரு கட்டளை. 432 00:29:33,065 --> 00:29:35,817 உனக்கு விவரங்கள் சொல்லப்பட்டது, திட்டங்கள் உனக்குத் தெரியும். போய் உன் உபகரணங்களை எடு. 433 00:29:37,277 --> 00:29:38,278 நான்… 434 00:29:39,446 --> 00:29:40,696 நான் அதற்கு தயாரா இருக்கிறேனான்னு தெரியல. 435 00:29:40,697 --> 00:29:41,907 அதுக்கு என்ன? 436 00:29:50,332 --> 00:29:51,625 இது உன் அப்பாவைப் பத்திய விஷயமா? 437 00:29:55,295 --> 00:29:56,296 நான் உன் ஃபைலை படிச்சேன். 438 00:29:57,548 --> 00:30:00,092 ஹே, நம்மில் பெரும்பாலானவங்களுக்கு குடும்பம் கோளாறானதுதான். 439 00:30:00,592 --> 00:30:02,177 இல்லன்னா, நாம இங்க இருக்க மாட்டோம். 440 00:30:05,556 --> 00:30:06,890 சரிதான். 441 00:30:07,641 --> 00:30:09,184 அப்புறம் என் அப்பா, அவர்… 442 00:30:09,893 --> 00:30:11,019 அவருக்கு நிஜமான பிரச்சனைகள் இருந்துச்சு. 443 00:30:12,312 --> 00:30:15,357 என் தாத்தாவும் அப்படித்தான், அந்த கோளாறெல்லாம் எனக்குள்ளயும் இருந்தா, அப்ப நான் விரும்பல… 444 00:30:17,860 --> 00:30:19,361 நான் டீமை ஏமாத்த விரும்பல. 445 00:30:24,700 --> 00:30:25,993 இதை ஏன் இப்ப சொல்ற? 446 00:30:30,789 --> 00:30:32,124 அதை மறச்சுடலாம்னு நினைச்சேன்… 447 00:30:34,209 --> 00:30:35,294 ஆனா நாம நெருங்க நெருங்க… 448 00:30:38,922 --> 00:30:40,299 என்னால முடியுமான்னு உறுதியா தெரியல. 449 00:30:51,310 --> 00:30:52,936 என் அப்பா ஒரு குடிகாரர். 450 00:30:55,063 --> 00:30:57,566 அவர் குடிச்சிருந்தா, ரொம்ப கோபப்படுவார். 451 00:30:59,443 --> 00:31:03,155 பேட்ரஸ் தோக்கும் போதெல்லாம் அவர் என்னை பயங்கரமா அடிப்பார், 452 00:31:04,364 --> 00:31:06,325 என்னை நம்பு, பேட்ரஸ் நிறைய முறை தோத்துருக்கு. 453 00:31:10,954 --> 00:31:12,246 வருத்தமா இருக்கு. 454 00:31:12,247 --> 00:31:13,332 வருந்தாதே. 455 00:31:15,083 --> 00:31:16,210 இது அவங்களப் பத்தி இல்ல. 456 00:31:21,507 --> 00:31:22,966 நாம அவங்கள விட சிறந்தவங்க, 457 00:31:23,592 --> 00:31:24,885 இப்படித்தான் நாம அதை வெளிக்காட்டணும். 458 00:31:26,136 --> 00:31:28,764 இப்போ என் கண்ணு முன்னாடி இருந்து போய் ஓய்வெடு. 459 00:31:30,390 --> 00:31:31,892 நாம காலை 6:00 மணிக்கு கிளம்புறோம். 460 00:31:40,484 --> 00:31:42,486 - நீ நலம்தானே? - ஆமா, சார்ஜென்ட். 461 00:31:52,704 --> 00:31:55,207 ஈவிஏ சப்ளை செக்லிஸ்ட்டை பார்க்கலாம். 462 00:31:56,041 --> 00:31:57,793 இருபது ஆக்சிஜன் பாட்டில்கள். 463 00:31:59,837 --> 00:32:04,715 லாம்டா ஃபேஜ் ஜீனோம் டி.என்.ஏ. 3.6 கேபி எனோலேஸ் 2 ஆர்.என்.ஏ 25. 464 00:32:04,716 --> 00:32:06,385 கடவுளே. 465 00:32:09,137 --> 00:32:10,513 இது… 466 00:32:10,514 --> 00:32:12,057 இது ஏன்… 467 00:32:12,683 --> 00:32:14,350 என்ன நடக்குதுன்னு எனக்குப் புரியல. 468 00:32:14,351 --> 00:32:16,019 நான் இதோ வர்றேன். நீங்க தொடருங்க. 469 00:32:25,654 --> 00:32:26,988 வால்ட். 470 00:32:26,989 --> 00:32:28,197 ஹேய், கெல்லி. 471 00:32:28,198 --> 00:32:30,908 நான் இங்க எதையோ நெருங்கிட்டேன்னு நினைக்கிறேன். 472 00:32:30,909 --> 00:32:33,495 வந்து, சிக்னல் பாதைகள் சரியாக இருக்கு, 473 00:32:33,996 --> 00:32:38,416 ஆனா CPU-க்கும் வழிகாட்டும் சிஸ்டம்களுக்கும் இடையே டிரான்ஸ்மிஷன் பிழைகள் இருக்கலாம். 474 00:32:38,417 --> 00:32:40,377 - அது நல்ல விஷயம். - ஆமா. 475 00:32:41,128 --> 00:32:42,379 அப்ப, நீங்க… 476 00:32:44,047 --> 00:32:45,883 நீங்க புறப்பட தயாரா இருக்கீங்களா? 477 00:32:47,384 --> 00:32:48,510 முழுசா இல்லை. 478 00:32:49,595 --> 00:32:51,305 ரோவர்ல ஏதாவது பிரச்சனையா? 479 00:32:51,930 --> 00:32:53,599 இல்லை, குழுவுலதான் பிரச்சனை. 480 00:32:54,725 --> 00:32:56,142 என்ன பிரச்சனை? 481 00:32:56,143 --> 00:32:58,561 அவங்க எல்லோரும் ரொம்பவே தகுதி வாய்ந்தவங்க. 482 00:32:58,562 --> 00:33:01,439 இந்த மிஷனுக்காக, இருக்கிறவங்கள்லயே தலைசிறந்தவங்கள நீ தேர்ந்தெடுத்திருக்க. 483 00:33:01,440 --> 00:33:03,733 - நன்றி. - ஆனா எதிர்பாராதவிதமா, 484 00:33:03,734 --> 00:33:07,320 டைட்டன் பத்தி நல்லா தெரிஞ்ச ஒரு சிறந்த நிபுணரும் இங்கே நம்மோட இருக்கார், 485 00:33:07,321 --> 00:33:12,241 அதுமட்டுமில்லாம நான் சந்திச்ச சிறந்த எக்ஸோபயாலஜிஸ்ட் அவர். 486 00:33:12,242 --> 00:33:14,578 அதனால இந்த மிஷனோட தற்காலிக கமாண்டரா, 487 00:33:15,078 --> 00:33:17,998 நான் அவரை சும்மா இருக்க அனுமதிச்சா நான் கடமையில் தவறியவளாகிடுவேன். 488 00:33:18,665 --> 00:33:21,375 - கெல்லி, நான் உன்கிட்ட சொன்னேன், நான்… - நீதான் என்னை கமாண்டரா போட்ட, 489 00:33:21,376 --> 00:33:23,837 அதனால ஈவிஏ க்ரூ என் முடிவுதான். 490 00:33:25,005 --> 00:33:26,173 எங்க கூட நீயும் வர்ற. 491 00:33:26,924 --> 00:33:29,050 இன்னும் 30 நிமிஷத்துல நாம கிளம்பறோம். தயாராகு. 492 00:33:29,051 --> 00:33:33,222 - கெல்லி, நான்… நான்… - இது ஒரு கட்டளை, கிரிபெல். 493 00:33:40,854 --> 00:33:45,107 {\an8}பதிவு 494 00:33:45,108 --> 00:33:47,611 {\an8}ஒரு புதிய வாழ்க்கைக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது 495 00:33:49,238 --> 00:33:51,323 {\an8}பல ஒளி ஆண்டுகள் தூரத்தில் 496 00:33:53,325 --> 00:33:59,206 {\an8}ஏனென்றால் நாம் பழைய உலகத்தை நாசமாக்கிட்டோம் அழிக்க ஒரு புதிய உலகத்தைக் கண்டுபிடித்தோம் 497 00:34:01,208 --> 00:34:07,381 {\an8}நீ சொன்னாய், "ஹேய், மக்கள் விண்வெளிக்கு வாருங்கள் 498 00:34:09,174 --> 00:34:15,013 {\an8}ஒன்றாகச் சேர்ந்து நாம் உருவாக்குவோம் ஒரு அற்புதமான இடத்தை" 499 00:34:16,806 --> 00:34:20,852 {\an8}ஆனால் உன் பொய்கள் அனைத்தும் இந்த தருணத்தில் அனைத்தும் 500 00:34:20,853 --> 00:34:24,312 {\an8}இந்த மிஷன் ஒரு முட்டாள்தனமான தங்க வேட்டை மாதிரி இருக்கு 501 00:34:24,313 --> 00:34:28,402 {\an8}இப்போது நீ இணங்கச் சொல்கிறாய் எங்களுக்கு சொன்னபடி செய்யச் சொல்கிறாய் 502 00:34:31,154 --> 00:34:34,324 {\an8}ஆமாம், மிஷன் கட்டுப்பாடு போல 503 00:34:39,161 --> 00:34:41,998 {\an8}ரியாக்டர்ல இங்க சில சமயம் கொஞ்சம் தனிமையா இருக்கும். 504 00:34:43,125 --> 00:34:44,458 {\an8}இதிலிருந்து மீண்டு வர இசை எனக்கு உதவும். 505 00:34:45,418 --> 00:34:48,672 {\an8}ஆனா, சமீபத்தில் நடந்த எல்லா விஷயங்களாலும், 506 00:34:49,547 --> 00:34:52,092 {\an8}எனக்கு சில விஷயங்களை பத்தி எழுத இன்னும் அதிக ஆர்வம் வந்திருக்கு, சரியா? 507 00:34:53,302 --> 00:34:56,597 {\an8}அதாவது, பல விஷயங்கள்ல நம்ம பேச்சும் கேட்கப்படணும்னு விரும்புறோம். 508 00:34:57,973 --> 00:35:00,934 {\an8}நம்மை ஒரு பொருட்டாவே மதிக்காம, அவங்க நம்மை அடக்க நினைப்பதை பாத்து நமக்கு அலுத்துப்போச்சு. 509 00:35:02,227 --> 00:35:03,311 பேட்டரி குறைவு 510 00:35:03,312 --> 00:35:05,272 - சில சமயம் நான்… - அடச்சே. 511 00:35:06,815 --> 00:35:08,817 பேட்டரி கிட்டத்தட்ட காலியாகிடுச்சு. அதை மாத்தணும்னு நினைக்கிறேன். 512 00:35:09,401 --> 00:35:10,610 அது நல்லா இருந்துச்சா? 513 00:35:10,611 --> 00:35:12,154 அடடா, அது அற்புதமா இருந்துச்சு. 514 00:35:13,197 --> 00:35:14,573 நீங்க அந்த பாட்டை எப்ப எழுதினீங்க, ஆலி? 515 00:35:15,574 --> 00:35:16,909 சில வாரங்களா எழுதிட்டு இருக்கேன். 516 00:35:17,868 --> 00:35:19,077 அதை எங்களோடு பகிர்ந்ததுக்கு நன்றி. 517 00:35:23,332 --> 00:35:26,167 உண்மையில, லில்ஸ், நாம திரும்பி போகணும்னு நினைக்கிறேன். 518 00:35:26,168 --> 00:35:27,585 புழுதிப் புயல் அதிகமாகுது. 519 00:35:27,586 --> 00:35:29,837 உண்மையாவா? நான் ஹால்டீரை பேட்டி எடுக்க விரும்பினேன். 520 00:35:29,838 --> 00:35:33,925 கண்டிப்பா. முதல்ல வெளியில எப்படி இருக்குன்னு பார்க்கலாம் அப்புறம் முடிவு செய்யலாம். 521 00:35:33,926 --> 00:35:36,303 - சரி. - சரி. சூப்பர். 522 00:35:48,482 --> 00:35:49,565 ஹைட்ரஸீன் வெடிபொருள் 523 00:35:49,566 --> 00:35:52,194 அவசரமில்லாம மெதுவா. நிதானமா தூக்கணும். 524 00:35:57,574 --> 00:35:58,575 ஜாக்கிரதை. 525 00:36:01,078 --> 00:36:03,955 அந்த புயலின் மேற்பகுதியை மெசோஸ்பியரில் அடையும் வரை, 526 00:36:03,956 --> 00:36:07,292 ஊசி பச்சையிலயோ மஞ்சளிலயோ இருப்பதை நாம உறுதி செய்யணும். 527 00:36:08,168 --> 00:36:10,128 அது, 40 கிலோமீட்டர் மேல இருக்கு. 528 00:36:11,755 --> 00:36:13,673 சுலபமான வேலைதானே? 529 00:36:13,674 --> 00:36:15,259 ஆமா, ரொம்ப சுலபம். 530 00:36:19,555 --> 00:36:21,097 மாக்ஸி, ஹாப்பர் 1. 531 00:36:21,098 --> 00:36:22,682 புயல் எப்படி இருக்கு? 532 00:36:22,683 --> 00:36:23,766 ஹாப்பர் 1. 533 00:36:23,767 --> 00:36:25,768 அது நல்லா ஆவதற்கு முன், இன்னும் மோசமடையும். 534 00:36:25,769 --> 00:36:28,188 மேல் வளிமண்டலத்தில மின்னல் அடிக்கிறதை பார்க்கிறோம். 535 00:36:28,772 --> 00:36:31,567 இப்போது, காற்றின் வேகம் 2-7-0-க்கு 5-0-ஆக உள்ளது. 536 00:36:32,150 --> 00:36:33,151 சரி. வந்து, 537 00:36:34,152 --> 00:36:36,989 நீ அதை ஆன் பண்றதுக்கு முன், தளத்தின் பாதுகாப்பான இடத்துல இருக்கன்றதை உறுதி செய். 538 00:36:38,323 --> 00:36:39,491 வாழ்த்துகள். 539 00:37:01,722 --> 00:37:04,600 மாக்ஸி, ஹாப்பர் 1. ஏவுதலுக்கு தயார். 540 00:37:07,227 --> 00:37:09,521 ஹாப்பர் 1, ஏவுதலுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 541 00:37:14,067 --> 00:37:16,569 ஹீலியம் அழுத்தம் இயல்பாக உள்ளது. 542 00:37:16,570 --> 00:37:18,237 முதன்மை எரிபொருள் வால்வுகள் திறக்கப்பட்டுள்ளன. 543 00:37:18,238 --> 00:37:19,364 பச்சை இண்டிகேட்டர்கள். 544 00:37:20,449 --> 00:37:21,617 தொடங்க தயாராக உள்ளோம். 545 00:37:24,244 --> 00:37:25,913 இக்னீஷன் ஆயத்தப்படுத்தப்பட்டது. 546 00:37:27,080 --> 00:37:28,457 இண்டிகேட்டர்கள் நல்லபடியாக இருக்கு. 547 00:37:29,875 --> 00:37:31,001 இதுக்கு தயாரா இருக்கீங்களா? 548 00:37:39,218 --> 00:37:40,552 இக்னீஷன். 549 00:37:51,688 --> 00:37:54,650 நில அதிர்வுமானி 550 00:37:56,235 --> 00:37:58,569 ஹாப்பர் 1, உங்கள் அதிர்வு அளவு எச்சரிக்கை பகுதியில் 551 00:37:58,570 --> 00:38:00,697 இருப்பது போலத் தெரிகிறது, ஆனால் சீராக உள்ளது. 552 00:38:14,002 --> 00:38:15,045 அங்களோட நிலை என்ன? 553 00:38:16,088 --> 00:38:19,674 இன்னும் மூணு நிமிஷத்துல அவங்க புயலோட உச்சிக்கு போயிடுவாப்க, ஆனா அது இன்னும் சிக்கலாகப் போகுது. 554 00:38:19,675 --> 00:38:22,553 காற்றின் வேகம் அதிகரிக்கிறது. இப்போது 2-3-0-க்கு 6-5-ஆக உள்ளது. 555 00:38:23,178 --> 00:38:25,555 அவங்க புயலோட ரொம்ப அடர்த்தியான பகுதிக்குள்ள போய்க்கிட்டு இருக்காங்க 556 00:38:25,556 --> 00:38:28,058 இந்த கொந்தளிப்பு இன்னும் மோசமாகப் போகுது. 557 00:38:46,577 --> 00:38:49,329 - அடச்சே. - என்ன ஆச்சு? 558 00:38:54,626 --> 00:38:55,960 நாங்க ஊசலாடுறோம். 559 00:38:55,961 --> 00:38:57,921 மாக்ஸி, எங்களை மின்னல் தாக்கிடுச்சுன்னு நினைக்கிறேன். 560 00:38:58,505 --> 00:39:01,466 த்ரஸ்டர்கள் மெதுவாக செயல்படுகிறது, நாங்கள் தள்ளாட ஆரம்பிச்சிட்டோம். 561 00:39:06,430 --> 00:39:09,808 அதிர்வுகள் மோசமடைகின்றன. நிலையாக இருங்கள். 562 00:39:15,397 --> 00:39:16,648 செயல்பாட்டு குறிப்பு வழிகாட்டி ஹாப்பர் 563 00:39:20,986 --> 00:39:25,031 மின்னல் அவங்களோட மின்சார அடிப்படைக் கட்டுப்பாட்டை சேதப்படுத்தியிருக்கலாம். 564 00:39:25,032 --> 00:39:26,950 அவங்க ஃபீட்பேக் லூப்புக்குள்ள போகலாம். 565 00:39:27,868 --> 00:39:31,662 ஹாப்பர் 1, த்ரஸ்டர் பஸ்ஸை ஆக்சுக்கு மாத்திப் பாருங்க. 566 00:39:31,663 --> 00:39:34,040 அது ஸ்டேட்டிக்கை வெளியேற்றலாம். 567 00:39:34,041 --> 00:39:38,377 புழுதிப் புயலுக்கு நடுவுல எங்க இன்ஜின்களை மறுபடியும் ஸ்டார்ட் பண்ண சொல்றீங்களா? 568 00:39:38,378 --> 00:39:39,463 ஆமா. 569 00:39:42,591 --> 00:39:45,260 சரி. த்ரஸ்டர்களை ஆன்-ஆஃப் செய்யறோம். 570 00:39:51,892 --> 00:39:54,937 முயற்சி பண்ணு, உன்னால முடியும், முயற்சி பண்ணு, லென்யா. 571 00:39:55,521 --> 00:39:56,939 - வேகம் குறைகிறது. - உன்னால முடியும். 572 00:39:58,190 --> 00:40:01,610 முக்கிய என்ஜின்களை மறுபடியும் ஸ்டார்ட் பண்ண முயற்சிக்கிறோம். 573 00:40:05,697 --> 00:40:07,157 இது வேலை செய்தாகணும். 574 00:40:08,325 --> 00:40:09,493 வேலை செஞ்சிடு. 575 00:40:12,454 --> 00:40:16,625 மாக்ஸி, நாங்க கீழே இறங்கிக்கொண்டிருக்கிறோம். நடுக்கம் அதிகமாகிறது. 576 00:40:24,716 --> 00:40:27,594 வேலை செஞ்சிடு, வேலை செஞ்சிடு. 577 00:40:36,937 --> 00:40:38,814 த்ரஸ்டர்கள் வேலை செய்கின்றன. 578 00:40:40,732 --> 00:40:42,525 நடுக்கம் குறைகிறது. 579 00:40:42,526 --> 00:40:43,943 நாங்கள் கிட்டத்தட்ட வந்துவிட்டோம். 580 00:40:43,944 --> 00:40:45,863 {\an8}ஹாப்பர் 581 00:40:58,876 --> 00:41:01,587 என்ன ஒரு மோசமான பயணம், இல்லையா? 582 00:41:02,838 --> 00:41:04,881 நீ விண்வெளி வீரராக தயாராகிட்ட. 583 00:41:04,882 --> 00:41:08,926 மாக்ஸி, ஹாப்பர் 1 மீண்டும் ஆன்லைனில் உள்ளது. 584 00:41:08,927 --> 00:41:11,346 சுற்றுப்பாதையில் நுழைய சரியான திசையில் போகிறது. 585 00:41:14,057 --> 00:41:18,228 குஸ்னெட்சோவ் நிலையத்திற்கு சந்திக்கும் செயல்பாடு நடந்துகொண்டிருக்கு. 586 00:41:19,563 --> 00:41:22,773 இறங்கும் இடத்தை அடையும் வரை நான் ரேடியோவை ஆஃப் பண்ணிடுறேன். 587 00:41:22,774 --> 00:41:24,150 சரி. 588 00:41:24,151 --> 00:41:25,611 ஹாப்பர் 1 அவுட். 589 00:42:20,123 --> 00:42:22,209 கான்டோர், மரைன் 1, நிலை என்ன? 590 00:42:23,126 --> 00:42:25,711 மரைன் 1, கான்டோர் கட்டிடத்தை விட்டு வெளியேறியது. 591 00:42:25,712 --> 00:42:27,630 எக்ஸ்ஃபில் பாயிண்ட் ஆல்பாவில் மறைந்து போகிறது. 592 00:42:27,631 --> 00:42:29,799 சரி. ஹால்வே டூ-பிராவோ தெளிவாக உள்ளது, 593 00:42:29,800 --> 00:42:31,969 மற்றும் நாங்கள் நிலையத்தை தேடத் தொடங்குகிறோம். 594 00:43:09,381 --> 00:43:12,133 ஹெஸ்கல், நீயும் ஃப்ளெமிங்கும் அடுத்த காரிடாரில் தேடுங்கள். 595 00:43:12,134 --> 00:43:13,886 நானும் டபாஸ்கோவும் இந்த வழியில் போய் தேடுகிறோம். 596 00:43:14,428 --> 00:43:15,928 நாம் சந்திப்பு இடத்தில் சந்திப்போம். 597 00:43:15,929 --> 00:43:18,098 சரி. மறுபக்கம் சந்திப்போம். 598 00:43:19,474 --> 00:43:22,768 ஏஜே, முன்னாடி போ. கட்டுப்பாட்டுப் பகுதி வலதுபக்கம் இருக்கு. 599 00:43:22,769 --> 00:43:23,854 சரி, சார்ஜென்ட். 600 00:43:40,996 --> 00:43:44,666 மாக்ஸி, ஹாப்பர் 1 அதன் கடைசி அணுகுமுறையில் இருக்கு. 601 00:43:46,835 --> 00:43:50,047 சரி. எவாக் ஹாப்பரை அடையும்போது எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். 602 00:43:50,797 --> 00:43:51,882 இரண்டு மீட்டர். 603 00:43:54,092 --> 00:43:55,302 எங்களுக்கு தொடர்பு கிடைத்திருக்கு. 604 00:43:56,428 --> 00:43:58,013 இணைப்புச் சுரங்கம் நீள்கிறது. 605 00:43:58,889 --> 00:44:00,264 எங்களுக்கு உறுதியான இணைப்பு கிடைத்துவிட்டது. 606 00:44:00,265 --> 00:44:04,353 நம் கண்கள் பழகிக்கொள்வதற்காக நான் விளக்குகளை மங்கலாக்கப் போறேன். 607 00:44:04,978 --> 00:44:07,355 சரி. இப்ப நீ ரிலாக்ஸ் ஆகலாம். 608 00:44:07,356 --> 00:44:09,815 இந்த பொருட்களோடு ஒரே ரூம்ல இருக்குற வரை ரிலாக்ஸ் ஆக முடியாது. 609 00:44:09,816 --> 00:44:13,278 சரிதான், இங்கிருந்து வெளியேறி எவாக் ஹாப்பருக்கு சீக்கிரம் போவோம். 610 00:44:15,739 --> 00:44:17,157 டைமர் அமைக்கப்பட்டது. 611 00:44:38,136 --> 00:44:39,137 யாரும் இல்லை. 612 00:44:42,891 --> 00:44:44,184 என்ன இது? 613 00:44:45,352 --> 00:44:47,479 சார்ஜ், இன்னொரு விண்கலம் அங்க நிக்கிறது. 614 00:44:49,648 --> 00:44:50,941 நாம வரும்போது அது அங்கே இல்ல. 615 00:44:51,650 --> 00:44:53,110 அடச்சே, நமக்கு தொல்லை தர யாரோ வந்திருக்காங்க. 616 00:44:54,570 --> 00:44:56,362 ஹெஸ்கல், ரூயிஸ். 617 00:44:56,363 --> 00:44:58,823 தளத்துல, ஒரு மார்ஸ் ஹாப்பர் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை பார்த்தோம். 618 00:44:58,824 --> 00:45:00,283 நீ எங்கே இருக்க? 619 00:45:00,284 --> 00:45:02,577 ரூயிஸ், ஹெஸ்கல். கிழக்கு வழித்தடம், இங்கே யாரும் இல்ல. 620 00:45:02,578 --> 00:45:05,122 சரி. நானும் ஜேரெட்டும் இன்னும் கிட்ட போய், பார்க்கப் போறோம். 621 00:45:07,291 --> 00:45:08,876 - நீ தயாரா? - ஆமா, சார்ஜென்ட். 622 00:46:10,646 --> 00:46:11,897 யாருமில்ல. 623 00:46:19,238 --> 00:46:21,073 ஐயோ. ரூயிஸ். 624 00:46:26,703 --> 00:46:28,412 நம்ம இங்கிருந்து உடனே கிளம்பணும். 625 00:46:28,413 --> 00:46:29,581 சீக்கிரம் கிளம்பு. 626 00:46:30,749 --> 00:46:32,250 மரைன்ஸ், நான் ரூயிஸ் பேசுறேன். 627 00:46:32,251 --> 00:46:34,503 எல்லாரும் வெளியேறும் இடம் ஆல்பாவிற்கு வந்து சேருங்கள் 628 00:46:35,087 --> 00:46:37,755 கான்டோர், அடுத்த மூணு நிமிஷத்துல நாம இந்த தளத்தை விட்டு கிளம்பணும், 629 00:46:37,756 --> 00:46:39,423 இல்லன்னா நாம காலி. இங்கே ஒரு வெடிகுண்டு இருக்கு. 630 00:46:39,424 --> 00:46:40,801 திரும்பச் சொல்றேன், இங்கே ஒரு வெடிகுண்டு இருக்கு. 631 00:46:48,851 --> 00:46:50,977 நிறுத்தும் பிடிமானங்கள் ஆஃப். 632 00:46:50,978 --> 00:46:53,564 - அது என்னது? - எது? 633 00:46:55,649 --> 00:46:56,650 ஐயோ. 634 00:46:57,442 --> 00:46:59,402 மாக்ஸி, தளத்துல வீரர்கள் இருக்காங்க. 635 00:46:59,403 --> 00:47:00,404 வெடிப்பதற்கு எஞ்சியுள்ள நேரம் 636 00:47:04,867 --> 00:47:06,409 பாய்ட், திரும்பச் சொல்லு. 637 00:47:06,410 --> 00:47:08,411 தளத்துல வீரர்கள் இருக்க மாதிரி தெரியுது. 638 00:47:08,412 --> 00:47:09,955 அவங்க இன்னும் ரெண்டு மணிநேரம் கழிச்சு வருவாங்கனு சொன்னீங்க. 639 00:47:10,789 --> 00:47:11,873 அவள் சொல்வது சரி. 640 00:47:11,874 --> 00:47:16,003 குஸ்னெட்சோவ்ல இருந்து, எம்-6 அலைவரிசையில குழப்பமான ரேடியோ சிக்னல் வருது. 641 00:47:16,712 --> 00:47:19,256 நிறுத்து… வெடிப்பை நிறுத்து. 642 00:47:19,798 --> 00:47:21,299 அது முடியாது. 643 00:47:21,300 --> 00:47:23,969 டேம், ஹாப்பருக்கு மேல இருக்கு. எங்களால நேரத்துக்குள்ள அங்க போய் சேர முடியாது. 644 00:47:32,352 --> 00:47:34,938 வெடிபொருளை ரிமோட் மூலம் நிறுத்த ஏதாவது வழி இருக்கா? 645 00:47:41,862 --> 00:47:45,991 வெடிப்பதற்கு எஞ்சியுள்ள நேரம் ஹாப்பர் - 2003எல்சி 646 00:47:49,745 --> 00:47:50,870 அவசரகால ரேடியோ ஆன் - ஆஃப் 647 00:47:50,871 --> 00:47:54,081 குஸ்னெட்சோவ் பக்கத்துல இருக்க எந்தவொரு எம்-6 டீம்களும் கவனியுங்கள், 648 00:47:54,082 --> 00:47:57,001 அந்தத் தளம் வெடிக்கப் போகுது. இப்பவே இடத்தைவிட்டு வெளியேறுங்கள். 649 00:47:57,002 --> 00:47:58,795 திரும்பச் சொல்றேன், இப்பவே இடத்தைவிட்டு வெளியேறுங்கள். 650 00:48:00,506 --> 00:48:02,591 - நீ என்ன பண்ணுற? - நாம அவங்களை எச்சரிக்கணும். 651 00:48:03,258 --> 00:48:06,553 சீலியா, நீ நம்மை இங்கிருந்து வெளியே கொண்டு செல்ல உனக்கு 30 நொடி இருக்கு, இல்லன்னா நாம காலி. 652 00:48:26,281 --> 00:48:27,282 போ. 653 00:48:29,326 --> 00:48:30,410 வேகமா போ. 654 00:48:54,142 --> 00:48:55,727 மாக்ஸி, ஹாப்பர் 1-ஐ வெளியேற்றுங்கள். 655 00:48:56,603 --> 00:48:57,812 அந்தத் தளம் வெடிச்சிடுச்சு. 656 00:48:57,813 --> 00:48:58,896 ஹாப்பர் வெடித்துவிட்டது 657 00:48:58,897 --> 00:49:00,524 யாரும் உயிர் பிழைத்ததாகத் தெரியல. 658 00:51:54,948 --> 00:51:56,950 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்