1
00:00:06,173 --> 00:00:08,967
{\an8}"மத்தியரேகைக்கு அப்பால்,
மேற்கிலிருந்து வருவான்"
2
00:00:08,968 --> 00:00:11,846
{\an8}"நாம் உடைக்க முடியாத
பிணைப்புகளால் இணைப்பான்."
3
00:00:12,430 --> 00:00:13,888
"நம்மை அழிப்பான்."
4
00:00:13,889 --> 00:00:16,391
காரகார்ன் இருமுறை குறிக்கப்படுவான்.
5
00:00:16,392 --> 00:00:18,894
இந்த மனிதன் அயீல் இல்லை!
6
00:00:20,771 --> 00:00:22,772
வழிநடத்துவது நீ வந்த வழி தெரிந்துகொள்ள,
7
00:00:22,773 --> 00:00:24,566
உன் ரத்தத்தை புரிந்துகொள்ள.
8
00:00:24,567 --> 00:00:27,403
உன் ஜியை அவமானப்படுத்தியதற்கு,
என் டோ உண்டு.
9
00:00:28,529 --> 00:00:30,071
நான் அழிவை கொண்டு வருவேன்.
10
00:00:30,072 --> 00:00:31,698
நீ என்னிடமிருந்து ஒளிகிறாய்.
11
00:00:31,699 --> 00:00:34,909
இத்தனை நேரமும், விட்டொழியருடன்
உறவு வைத்திருக்கே.
12
00:00:34,910 --> 00:00:36,661
தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றவருக்கு
13
00:00:36,662 --> 00:00:38,913
ராண்ட் என்ன செய்தாலும் கவலை இல்லை.
14
00:00:38,914 --> 00:00:40,248
அவன் சாகணும்.
15
00:00:40,249 --> 00:00:42,083
நமக்கு முன்பு பட்டிகை கிடைச்சா,
16
00:00:42,084 --> 00:00:44,127
- ராண்ட்--
- இல்லை. நாம கண்டுபிடிப்போம்.
17
00:00:44,128 --> 00:00:45,962
மூன்றில் ஒரு பங்கு நம்மிடம்.
18
00:00:45,963 --> 00:00:48,006
இன்னும் முயற்சிங்க,
இன்னும் தேடுங்க.
19
00:00:48,007 --> 00:00:50,342
பட்டிகை பெருந்தலைவி அரண்மனையில் இருக்கு.
20
00:00:51,594 --> 00:00:53,136
இந்த தோற்றம் தெரியும்.
21
00:00:53,137 --> 00:00:55,305
என்ன கருமம் வருதுன்னு
தெரிஞ்சுக்க வேணாம்.
22
00:00:55,306 --> 00:00:56,723
என்ன இது?
23
00:00:56,724 --> 00:01:00,143
வாக்கு கோருகிறேன்.
டிராகனின் மறுபிறவியை கூண்டிலிட,
24
00:01:00,144 --> 00:01:01,895
சியுவான் சாஞ்ச்சே தோற்பார்.
25
00:01:01,896 --> 00:01:05,148
பணி இருந்தது. அவனை தொடர
கோட்டையை தயார் செய்வது உனக்கு.
26
00:01:05,149 --> 00:01:07,818
ராண்ட் உயிர்வாழ ஒரே வழி நான் உயிர்வாழாதது.
27
00:01:08,360 --> 00:01:11,113
உங்க வலை பிரிந்து வருது, தாயே.
28
00:01:14,784 --> 00:01:18,746
{\an8}டார் வலோன்
10 வருடங்கள் முன்பு
29
00:01:40,601 --> 00:01:42,728
அது பொறுப்பற்று இருந்தது, எலைடா செடாய்.
30
00:01:43,979 --> 00:01:46,981
நம் சகோதரிகள் பலர் அந்த வாயில்வழி
நுழைந்து திரும்பலை.
31
00:01:46,982 --> 00:01:49,318
இருந்தும் நான் வந்துட்டேன்.
32
00:01:50,110 --> 00:01:54,532
நீங்க அவ்வளவு முட்டாள்தனமா இருக்க
மாட்டீங்கன்னு நம்பினேன், இன்று, அதுவும்.
33
00:01:55,783 --> 00:01:57,617
ஆனா உங்க அஜாஹ் காரணத்தால் இயங்குது,
34
00:01:57,618 --> 00:02:00,955
காரணம் நம்பிக்கைக்கு இடமே தராது.
35
00:02:01,831 --> 00:02:03,541
ஏல்ஃபின் என்ன உறுதி அளிச்சாங்க.
36
00:02:04,542 --> 00:02:06,960
அம்புலித் தேரையே.
37
00:02:06,961 --> 00:02:08,504
அவங்களை நம்ப முடியாது.
38
00:02:09,088 --> 00:02:11,632
ஃபின் அளிக்கும் எந்த பரிசுக்கும்
விலை உண்டு.
39
00:02:12,383 --> 00:02:16,219
வாங்க, அல்வியாரின், சகோதரி,
சபை வாக்களிக்குது.
40
00:02:16,220 --> 00:02:18,180
உங்க ஆதரவு இன்னும் இருக்குதானே?
41
00:02:18,973 --> 00:02:22,184
எல்லாத்தையும் தாண்டி,
நான் தான் விவேகமான தேர்வு.
42
00:03:00,806 --> 00:03:01,932
சகோதரிகளே,
43
00:03:02,433 --> 00:03:04,893
இந்த வாரம் நாம் மேரித் ஜேயனை இழந்தோம்,
44
00:03:04,894 --> 00:03:07,812
அம்புலித் தேராக
நான்கு வருடங்களே இருந்தவர்.
45
00:03:07,813 --> 00:03:11,065
ஆக, மீண்டும், நமக்கு சோதியின்
தேவை இருக்கிறது
46
00:03:11,066 --> 00:03:13,193
இந்த இருண்ட காலங்களில் நம்மை வழிநடத்த.
47
00:03:13,986 --> 00:03:15,404
வாக்கு இருவரிடம் வந்துள்ளது.
48
00:03:15,905 --> 00:03:19,909
சியுவான் சாஞ்ச்சே மற்றும்
எலைடா டோ அவ்ரினி அ ரொய்ஹான்.
49
00:03:20,784 --> 00:03:23,203
சியுவான் சாஞ்ச்சேக்கு யார் ஆதரவு?
50
00:03:26,540 --> 00:03:28,125
சியுவான் சாஞ்ச்சே!
51
00:03:31,837 --> 00:03:33,339
சியுவான் சாஞ்ச்சே!
52
00:03:47,436 --> 00:03:50,980
நாளின் வெற்றிக்கு பதினோரு வாக்குகள் தேவை.
53
00:03:50,981 --> 00:03:53,942
நான்கே உள்ள பட்சத்தில்,
நான் அடுத்து கேட்கிறேன்,
54
00:03:53,943 --> 00:03:57,071
எலைடா டோ அவ்ரினி அ
ரொய்ஹானுக்கு யார் ஆதரவு?
55
00:04:01,325 --> 00:04:02,368
சியுவான் சாஞ்ச்சே.
56
00:04:13,379 --> 00:04:14,421
சியுவான் சாஞ்ச்சே.
57
00:04:18,717 --> 00:04:19,635
சியுவான் சாஞ்ச்சே.
58
00:04:21,637 --> 00:04:22,930
சியுவான் சாஞ்ச்சே.
59
00:04:26,392 --> 00:04:27,935
சியுவான் சாஞ்ச்சே.
60
00:04:28,435 --> 00:04:29,269
சியுவான் சாஞ்ச்சே.
61
00:04:31,939 --> 00:04:32,940
சியுவான் சாஞ்ச்சே.
62
00:04:37,695 --> 00:04:38,862
வாக்களிப்பு முடிந்தது.
63
00:04:39,488 --> 00:04:41,114
சகோதரிகள் தீர்மானித்தனர்.
64
00:04:41,115 --> 00:04:43,158
தேருக்கு உயர்த்தப்பட்டவர்,
65
00:04:43,701 --> 00:04:46,745
இனியும் ஒரு அஜாஹ்வை சேராதவர்,
ஆனால் அனைத்தையும்...
66
00:04:47,413 --> 00:04:48,664
சியுவான் சாஞ்ச்சே.
67
00:05:03,554 --> 00:05:06,639
நீங்கள் அம்புலித் தேராக உயர்கிறீர்கள்,
68
00:05:06,640 --> 00:05:11,270
சோதியின் மகிமையில், வெண்கோட்டை
நிரந்தரமாக அனுபவித்திட.
69
00:05:13,022 --> 00:05:16,734
டார் வலோனின் அணையா விளக்கு,
சப்த முத்திரைகளின் தலைவி.
70
00:05:17,860 --> 00:05:19,153
அம்புலித் தேர்.
71
00:05:23,699 --> 00:05:29,038
த
வீல் ஆஃப் டைம்
72
00:05:53,228 --> 00:05:54,938
- தாயே.
- உன் குறைகளை கேட்டேன்.
73
00:05:56,690 --> 00:05:57,775
நீங்க கவனிக்கலை.
74
00:05:58,317 --> 00:06:00,943
கோட்டை ராண்ட்க்கு ஆதரவா இருக்கணும்,
இல்லைன்னா...
75
00:06:00,944 --> 00:06:03,196
கடைசி யுத்தத்தில் தோற்போங்கறீங்க.
76
00:06:03,197 --> 00:06:06,282
ஆனால் நீங்க சொல்லலை, ஒருமுறை கூட,
இது எப்படி தெரியுமென.
77
00:06:06,283 --> 00:06:10,995
உங்களுக்கும் நம் சகோதரிகளுக்குமிடையே
விரிசல் ஏற்படுத்த எலைடாவை அனுமதிக்கிறீங்க.
78
00:06:10,996 --> 00:06:14,458
என் காப்பாளரா நியமித்தப்ப,
ஏன் உன்னை தேர்வு செய்தேன் தெரியுமா?
79
00:06:15,876 --> 00:06:17,794
ஏன்னா நீ எனக்கு பயப்படலை.
80
00:06:17,795 --> 00:06:21,465
நான் ஏதாவது தப்பு செய்தா
நீ எழுந்து என்னிடம் சொல்லுவே.
81
00:06:22,841 --> 00:06:23,925
நான் செய்யறேனா?
82
00:06:23,926 --> 00:06:25,843
டிராகனின் மறுபிறவிக்கு கோட்டை ஆதரவு
83
00:06:25,844 --> 00:06:28,514
தருவது நம் வரலாற்றில்
மிக முக்கியமான செயலாகும்.
84
00:06:29,431 --> 00:06:31,767
நீங்க அதை தனியா செய்ய முடியாது.
85
00:06:33,060 --> 00:06:34,268
அதற்கு வாக்கு கோருங்க.
86
00:06:34,269 --> 00:06:37,230
நம் சகோதரிகளை இதை நம்ப வைங்க,
உங்களைப் போல.
87
00:06:37,231 --> 00:06:38,941
என்னை இதை நம்ப வைங்க.
88
00:06:40,150 --> 00:06:41,235
தயவு செய்து.
89
00:06:44,279 --> 00:06:45,697
நீ சொன்னதை யோசிக்கிறேன்.
90
00:06:53,372 --> 00:06:54,914
ஏற்கனவே கடிதங்களை அனுப்பினாளா?
91
00:06:54,915 --> 00:06:56,499
சபையிடம் ஆலோசிக்காமலா?
92
00:06:56,500 --> 00:06:58,459
கோட்டை சட்டங்களின் கீழே தவறு அல்ல.
93
00:06:58,460 --> 00:07:01,754
அம்புலித்தேர் உலக தலைவர்களுடன் தொடர்பு
கொள்வது தவறு அல்ல.
94
00:07:01,755 --> 00:07:04,632
டிராகனின் மறுபிறவிக்கு
ஆதரவு அறிவிச்சிருக்காங்க,
95
00:07:04,633 --> 00:07:06,927
ஆனா அவன் ஐஸ் செடாய்
கட்டுப்பாட்டில் இல்லை.
96
00:07:07,511 --> 00:07:09,137
அப்ப என்ன முன்மொழியறீங்க?
97
00:07:09,138 --> 00:07:11,515
நீங்க என்னிடம் ஆதரவுக்கு வந்ததா தோணுது.
98
00:07:12,224 --> 00:07:13,392
மிகத்தேவையான ஆதரவு.
99
00:07:13,976 --> 00:07:16,060
எனக்கு இன்றே தேவை.
100
00:07:16,061 --> 00:07:19,106
இம்முறை விவேகமான தேர்வு
நம்மிருவருக்கும் பயனளிக்கும்.
101
00:07:44,464 --> 00:07:45,299
ராண்ட்.
102
00:07:59,313 --> 00:08:00,689
இன்னும் டோ கடனிருக்கு.
103
00:08:03,692 --> 00:08:05,527
அவ தோட்டத்தை நான் அறுவடை செய்யணும்.
104
00:08:10,240 --> 00:08:11,825
புத்திமான்கள் காத்திருக்காங்க.
105
00:08:19,333 --> 00:08:22,085
வளையத்தை கட்டுவது,
புத்திசாலித்தனமான தந்திரம்.
106
00:08:22,920 --> 00:08:24,379
முட்டாள் சிறுக்கி.
107
00:08:25,672 --> 00:08:28,050
தேர்ந்தெடுக்கபட்ட ஒருவனை
நீ நிறுத்த முடியுமா?
108
00:08:29,009 --> 00:08:29,885
முடியும்.
109
00:08:32,137 --> 00:08:33,222
செய்தேன்.
110
00:08:37,809 --> 00:08:39,977
நீ சிறந்த ஜெனரல்களில் ஒருவனென படித்தேன்,
111
00:08:39,978 --> 00:08:41,562
புராதன யுகத்தில்.
112
00:08:41,563 --> 00:08:43,398
நான் தொலைநோக்கு பார்வையாளன்.
113
00:08:44,483 --> 00:08:45,524
ஒரு முன்னோடி.
114
00:08:45,525 --> 00:08:48,861
என் காலத்தில், படைகளே கிடையாது.
115
00:08:48,862 --> 00:08:50,864
நூற்றாண்டுகளாக கிடையாது.
116
00:08:52,532 --> 00:08:56,036
மீண்டும் போர்க்கலையை கண்டுபிடித்தேன்.
117
00:08:57,788 --> 00:08:59,331
அந்த தழும்பு எப்படி வந்தது?
118
00:09:02,125 --> 00:09:04,210
ல்யூஸ் தெர்ரின் டெலமான்.
119
00:09:04,211 --> 00:09:06,129
யாரும் அதை உனக்கு குணமாக்கலையா?
120
00:09:06,964 --> 00:09:08,507
அது குணமாவதை நான் விரும்பலை.
121
00:09:09,841 --> 00:09:12,469
அவனை கொல்லும்போது அவன் அதை பார்க்கணும்.
122
00:09:13,845 --> 00:09:15,180
நீ அவனை கொல்ல மாட்டே.
123
00:09:16,181 --> 00:09:17,474
அவனுக்கு கற்பிப்பாய்.
124
00:09:18,225 --> 00:09:19,351
ஏன்னா செய்யலைன்னா,
125
00:09:20,310 --> 00:09:21,645
உன்னை இங்கே புதைப்பேன்,
126
00:09:22,688 --> 00:09:24,814
இன்னும் ஆயிரம் வருடங்கள் அழுகிட.
127
00:09:24,815 --> 00:09:28,485
கடைசி யுத்தம் பற்றி பாடல்கள்
எழுதப்படும் நேரத்தில்,
128
00:09:29,069 --> 00:09:31,738
நீ யாரென யாருக்கும் நினைவிருக்காது.
129
00:09:49,881 --> 00:09:51,508
அந்த தேரங்கியை கீழே வை.
130
00:09:52,509 --> 00:09:55,012
அது உண்மையில்
அக்னிப்பிழம்பு உருவாக்கினா...
131
00:09:56,346 --> 00:09:57,973
யாரும் இஸ்பானை கண்டுபிடிக்கலையா?
132
00:09:58,724 --> 00:10:00,350
நீ கொன்னுட்டேன்னு நினைச்சோம்.
133
00:10:03,270 --> 00:10:04,604
நையோமியை கொன்றது போல.
134
00:10:05,897 --> 00:10:09,484
நையோமி என்னை எதிர்த்ததால் இறந்தா.
135
00:10:10,861 --> 00:10:13,071
இப்ப அந்த தேரங்கியை கீழே வை!
136
00:10:18,493 --> 00:10:19,494
எஜமானி.
137
00:10:23,373 --> 00:10:24,791
அது எங்கே கிடைத்தது?
138
00:10:25,792 --> 00:10:27,836
ஒருவன் இன்று காலை விற்க வந்தான்.
139
00:10:29,296 --> 00:10:32,631
நம்மைவிட கீழானவர்கள் நமக்கு செய்யும்
வேலையில் ஈடுபட கூடாதென
140
00:10:32,632 --> 00:10:34,968
எஜமானி சொன்னீங்க, அதனால...
141
00:10:36,261 --> 00:10:37,888
அவனுக்கு பணம் தந்தேன்.
142
00:10:38,889 --> 00:10:40,222
எங்கே கிடைத்ததென சொன்னானா?
143
00:10:40,223 --> 00:10:42,476
அதை கேட்க எனக்கு உரிமையில்லை, எஜமானி.
144
00:10:46,646 --> 00:10:48,857
உன் பெயரைகூட நான் கேட்டதா நினைவில்லை.
145
00:10:49,441 --> 00:10:51,401
எஜமானி வேலையா இருந்தீங்க.
146
00:10:56,531 --> 00:10:57,491
இஸ்பானை மறங்க.
147
00:10:58,992 --> 00:11:00,744
பனார்ச் மாளிகைக்கு இப்ப போறோம்.
148
00:11:08,377 --> 00:11:09,920
இது அபத்தம்.
149
00:11:11,338 --> 00:11:13,256
எதுவும் ஏன் முட்கரண்டியா இல்லை?
150
00:11:18,720 --> 00:11:21,390
ஆஹா! என்னை கோபப்படுத்த இதை செய்யறே.
151
00:11:22,766 --> 00:11:23,642
சீக்கிரம்.
152
00:11:27,938 --> 00:11:28,980
அது...
153
00:11:29,815 --> 00:11:30,899
அது லியாண்ட்ரின்.
154
00:11:31,900 --> 00:11:33,567
அவ வளையத்தை அணிந்திருக்கா.
155
00:11:33,568 --> 00:11:35,361
சரி. வா.
156
00:11:35,362 --> 00:11:36,987
போகலாம், டான்சிகோ.
157
00:11:36,988 --> 00:11:39,324
நீ அவளை தொடரு. நான்
மற்றவர்களை கூட்டி வரேன்.
158
00:11:51,837 --> 00:11:52,671
நிறுத்து!
159
00:11:53,380 --> 00:11:56,758
பெருந்தேவி அமாதேரா உங்களை
நுழைய அழைக்கவில்லை.
160
00:12:01,513 --> 00:12:05,350
அவன் அணிந்திருக்கும் பட்டிகையை பார்த்தியா?
அதுதான் நமக்கு தேவை.
161
00:12:17,988 --> 00:12:19,948
என் சின்ன ஆச்சரியம் கிடைத்ததா?
162
00:12:22,534 --> 00:12:24,286
சாம்மேல் மோசமான ஆசிரியர்,
163
00:12:25,579 --> 00:12:27,122
ஆனால் இருப்பதில் சிறந்தவன்.
164
00:12:32,586 --> 00:12:34,253
இது சுவாரஸ்யமான தேர்வு.
165
00:12:34,254 --> 00:12:38,675
நீ அந்தகாரனை விடுவித்த பிறகு,
இங்கேதான் ஷாரோம் இடிந்தது.
166
00:12:39,259 --> 00:12:41,386
ஒரு விபத்து, தெரியும்.
167
00:12:42,387 --> 00:12:44,848
நீ உண்மையா மனுஷியா இருந்த
கடைசி தருணமும் அது.
168
00:12:46,600 --> 00:12:47,767
அப்ப அவ சொல்லிட்டா.
169
00:12:49,019 --> 00:12:50,145
சொல்லுவான்னு தெரியும்.
170
00:12:51,897 --> 00:12:55,233
ராண்ட், அவளுக்கு உதவினேன்,
அவளை வலிமையாக்கி.
171
00:12:56,109 --> 00:12:58,110
பெண்ணா இருந்தியே, அவளுக்கு என்னாச்சு?
172
00:12:58,111 --> 00:13:01,155
எல்லாரும் பகிரும் சக்தியை
கண்டுபிடிக்க விரும்பிய பெண்?
173
00:13:01,156 --> 00:13:03,325
உலகை சிறந்த இடமாக மாற்ற விரும்பியவள்?
174
00:13:04,576 --> 00:13:09,205
அன்று நான் சத்தியம் செய்த காரணமே,
மற்ற வழி மரணம் என்பதால்தான்.
175
00:13:09,206 --> 00:13:12,501
அந்தகாரனை கொன்று இன்னும்
அவர்களை விடுவிக்க விரும்பறியா?
176
00:13:13,084 --> 00:13:14,294
நிச்சயமா செய்யறேன்.
177
00:13:15,754 --> 00:13:18,507
அல்லது அந்த சக்தி அனைத்தையும்
உனக்கென விரும்பறியா?
178
00:13:21,134 --> 00:13:22,344
இரண்டுமா இருக்க கூடாதா?
179
00:13:25,138 --> 00:13:27,681
வாழ்க்கை மிக எளிது என்பதுபோல
காட்டுவதை நிறுத்து,
180
00:13:27,682 --> 00:13:29,559
நாம் ஒன்றோ வேறொன்றோ என்பதுபோல.
181
00:13:35,774 --> 00:13:37,901
போன ஜென்மத்தில் நீ என்ன
செய்தாய் தெரியுமா?
182
00:13:38,985 --> 00:13:41,238
உலகத்தையே மண்டியிட வைத்தாய்,
183
00:13:41,821 --> 00:13:43,823
செய்யாத ஒரே ஆள் நான்தான்.
184
00:13:44,866 --> 00:13:48,036
அதனால்தான் என்னை விட்டு போனாய்,
நான் மண்டியிடாததால்.
185
00:13:48,787 --> 00:13:49,788
ல்யூஸ் தெர்ரின்,
186
00:13:52,040 --> 00:13:55,043
உன்னை விட்டு போன காரணங்கள் எனது போலவேதான்.
187
00:13:56,044 --> 00:13:57,337
ஏன்னா உனக்கு பொறாமை,
188
00:13:58,797 --> 00:14:00,006
குறுகிய எண்ணமுடையவள்,
189
00:14:00,924 --> 00:14:02,008
கொடூரமானவள்.
190
00:14:04,970 --> 00:14:06,263
அதை உண்மையா நினைக்கலையே.
191
00:14:09,099 --> 00:14:12,519
இறுதியாக, இறுதியாக நிஜமான
உன்னை காண்கிறேன்.
192
00:14:13,812 --> 00:14:15,605
நீ அரக்கி, லான்ஃபியர்.
193
00:14:24,990 --> 00:14:27,659
முட்டாள்,
194
00:14:28,285 --> 00:14:31,413
ஆணவமான குழந்தையே!
195
00:14:42,048 --> 00:14:43,216
நல்ல வேலை, எக்வீன்.
196
00:14:44,134 --> 00:14:45,343
இப்ப என்னை தேடி வருவா.
197
00:15:00,066 --> 00:15:01,985
- அவ எங்கே?
- அவ காத்திருக்கா.
198
00:15:02,569 --> 00:15:03,820
அவ பொறுமையானவ இல்லை.
199
00:15:11,119 --> 00:15:13,747
அவளுக்கு தேவையானது நீ மட்டுமென கருதாதே.
200
00:15:14,497 --> 00:15:16,415
அவளை குறைத்து எடை போட்டா,
சாவோம்.
201
00:15:16,416 --> 00:15:17,458
ருவார்கை கூட்டி வா.
202
00:15:17,459 --> 00:15:19,085
இப்பவே அல்கைர் டால் போறோம்!
203
00:15:35,769 --> 00:15:36,645
நீ!
204
00:15:39,939 --> 00:15:42,275
நீ பட்டிருக்கும் கடனை
கேட்கிறேன், மெலிந்த்ரா.
205
00:15:51,576 --> 00:15:55,037
இதில் மாட்டிக்க விரும்பலைன்னு
நினைச்சேன், கிழவா?
206
00:15:55,038 --> 00:15:57,957
பிள்ளைங்க சாவதை பார்த்தா எனக்கு ஏதோ ஆகும்.
207
00:15:58,792 --> 00:16:00,001
முடிஞ்சா நிறுத்துவேன்.
208
00:16:00,835 --> 00:16:04,464
எலேய்னுக்கு எனக்கும் நடந்த எதற்கும்,
அதை செய்த பெண் விட்டொழியர்.
209
00:16:04,964 --> 00:16:05,964
இருக்கணும்.
210
00:16:05,965 --> 00:16:09,134
விட்டொழியர் அந்த பட்டிகையால்
ராண்டை கட்டுப்படுத்தினால்...
211
00:16:09,135 --> 00:16:11,012
அது நடக்காது.
212
00:16:11,596 --> 00:16:13,765
யார் அதை கண்டுபிடித்தாலும், வெளியேறுங்க.
213
00:16:14,349 --> 00:16:15,850
மற்றவருக்காக காக்க வேண்டாம்.
214
00:16:43,002 --> 00:16:45,422
பார்த்து ரொம்ப காலமாச்சு, சாம்மேல்.
215
00:16:47,006 --> 00:16:49,008
உன்மீது வளையம் கட்டிட்டா.
216
00:16:50,427 --> 00:16:52,011
அதை நான் அகற்றலாம்.
217
00:16:52,804 --> 00:16:54,012
உனக்கு என்ன வேணும்?
218
00:16:54,013 --> 00:16:57,015
என்னை இங்கிருந்து வெளியேற்று,
சேர்ந்து வேலை செய்யலாம்.
219
00:16:57,016 --> 00:16:59,978
மற்றவர்களை அழிப்போம். ஒவ்வொருவராக.
220
00:17:01,479 --> 00:17:07,444
தேர்ந்தெடுக்கபட்டவர்கள் இன்னொருவரை
எப்படி கொல்வதென தெரியணும்.
221
00:17:08,820 --> 00:17:10,071
அப்ப, ஆமாம்...
222
00:17:11,448 --> 00:17:12,490
நீ உதவ முடியும்.
223
00:17:19,664 --> 00:17:20,665
நாம விளையாடுவோமா?
224
00:17:39,267 --> 00:17:42,771
அனைத்து தலைவர்களும் இல்லாமல்
அல்கைர் டால் பயணிப்பது
225
00:17:43,438 --> 00:17:45,231
அயீல் வழி அல்ல.
226
00:17:45,982 --> 00:17:48,026
சக்கரம் தலைவர்களுக்கு காத்திருக்காது.
227
00:17:49,319 --> 00:17:52,614
தார்டடின் தலைவனாக, உன்னை அறிமுகம் செய்து,
ஆதரவாக இருப்பேன்.
228
00:17:53,448 --> 00:17:54,698
அவர்கள் பின்தொடர்வார்களா?
229
00:17:54,699 --> 00:17:55,783
எனக்கு தெரியாது.
230
00:17:55,784 --> 00:18:00,747
தலைவர்களுக்கு தலைவன் இருந்ததில்லை,
மேற்கத்தியன் ருயிடியானுக்குள் போனதில்லை.
231
00:18:01,539 --> 00:18:04,458
இவை என்னை நிரூபிக்கும்.
போதாதெனில், நான் சொல்வேன்.
232
00:18:04,459 --> 00:18:07,252
தலைவர்கள், புத்திமான்கள் நான் கண்டதை
அறிவர்.
233
00:18:07,253 --> 00:18:10,589
இலைவழியை தொடர்ந்தோமென மக்களால்
ஏற்றுக்கொள்ள முடியாது.
234
00:18:10,590 --> 00:18:11,591
அது...
235
00:18:12,759 --> 00:18:15,177
ஒரு அயீலுக்கு அவமானகரமாக ஏதுமில்லை,
236
00:18:15,178 --> 00:18:17,138
சத்தியத்தை மீறினவங்களா இருப்பதைவிட.
237
00:18:17,722 --> 00:18:19,140
அவர்களிடம் சொல்ல கூடாது.
238
00:18:20,266 --> 00:18:23,102
குலங்கள் உங்க காரகார்னா
அவனை ஏற்கலைன்னா என்னாகும்?
239
00:18:23,978 --> 00:18:24,937
அவங்க ஏற்கணும்.
240
00:18:24,938 --> 00:18:27,440
ஏற்கனவே பார்க்கப்பட்டதில்
வேறு வழியில்லை.
241
00:18:28,399 --> 00:18:33,195
அவனை தொடர்வது அயீலின் கடமை,
ஆனால் நீ அயீல் இல்லை, எக்வீன்.
242
00:18:33,196 --> 00:18:35,364
அவன் நிழல் ஆன்மாவுடன் உறவு வைத்தான்,
243
00:18:35,365 --> 00:18:38,701
அழிவு மற்றும் கிறுக்குத்தனமான
எதிர்காலத்தை உறுதியளிக்கிறான்.
244
00:18:39,702 --> 00:18:41,955
உன் எதிர்காலத்தை நீ தேர்வு செய்யலாம்.
245
00:18:43,957 --> 00:18:45,667
உன் பலத்திற்கு தகுதியானவனா?
246
00:18:52,298 --> 00:18:54,843
அயீல் நிலத்தில் அதை நடக்கக் கண்டியா?
247
00:18:55,593 --> 00:18:57,345
- லான்ஃபியர்--
- இங்கே கொல்கிறாளா?
248
00:18:58,304 --> 00:18:59,180
சில சமயம்.
249
00:19:00,223 --> 00:19:01,683
ஆனால் வேறு இடங்களிலும்.
250
00:19:02,976 --> 00:19:05,352
நீ சொன்னது போல,
இன்றாக இருக்கலாம், நாளை,
251
00:19:05,353 --> 00:19:07,730
இப்போதிலிருந்து ஒரு வருடம் கழித்து.
252
00:19:09,691 --> 00:19:10,984
இன்று தானென நினைக்கறேன்.
253
00:19:23,329 --> 00:19:24,247
அல்கைர் டால்.
254
00:19:24,831 --> 00:19:27,166
10,000 தார்டட் ஈட்டிகள் நம்மை தொடருது.
255
00:19:28,042 --> 00:19:30,670
வேறு நான்கு குலங்களும்,
தலைவர்களும் வந்தாச்சு.
256
00:19:32,380 --> 00:19:33,965
ஷைடோ காத்திருக்காங்க.
257
00:19:34,757 --> 00:19:35,842
எல்லாருமே.
258
00:19:44,893 --> 00:19:47,728
எதிர்பார்த்ததை விட தார்டட்
அதிக ஈட்டிகளோடு வந்திருக்காங்க.
259
00:19:47,729 --> 00:19:50,063
அவர்களை கொன்றால் இன்னும்
மரியாதை இருக்கும்.
260
00:19:50,064 --> 00:19:53,610
அல்கைர் டாலில் ரத்தம் சிந்துவதில்
மரியாதை இல்லை.
261
00:19:54,193 --> 00:19:55,153
அவ சொல்வது சரி.
262
00:19:58,698 --> 00:20:00,241
நீ யார், கன்னி?
263
00:20:01,034 --> 00:20:03,786
கன்னியென யாரும் குற்றம் சாட்டி
நீண்ட காலமாச்சு.
264
00:20:06,789 --> 00:20:07,790
போ.
265
00:20:21,679 --> 00:20:22,597
நீ யார்?
266
00:20:23,222 --> 00:20:25,224
நீீ விரும்பும் அதையே விரும்புபவள்.
267
00:20:27,060 --> 00:20:28,144
நீங்க இருவருமே.
268
00:20:29,479 --> 00:20:34,984
ராண்ட் அல் தோர் காரகார்னாக
அறிவிக்கப் படாமல் உறுதி செய்வது.
269
00:21:08,893 --> 00:21:09,978
தாயே.
270
00:21:12,105 --> 00:21:16,024
எட்டு செவ்வர் சகோதரிகள் கோட்டையை விட்டு
போயிருக்காங்க, காரணமே சொல்லாம.
271
00:21:16,025 --> 00:21:17,109
எட்டு.
272
00:21:17,110 --> 00:21:19,112
ஒரு ஆணை செயலிழக்கவைக்க போதும்.
273
00:21:19,988 --> 00:21:23,241
நம்பகமான சகோதரிகள் குழுவை கூட்டிப்
போய் நிறுத்து. இப்பவே.
274
00:21:25,660 --> 00:21:26,828
எலைடாவை கண்டுபிடி.
275
00:21:27,537 --> 00:21:28,579
என்னிடம் கூட்டி வா.
276
00:22:18,880 --> 00:22:20,423
வேகமான வழி இருக்கணும்.
277
00:22:21,049 --> 00:22:23,925
பட்டிகையை ஒற்றைச் சக்தியால்
தேடும் ஒரு வழி.
278
00:22:23,926 --> 00:22:25,720
அது ஒரு வகை உலோகம், அதனால்...
279
00:22:26,512 --> 00:22:28,139
ஒருவேளை, டெல்விங்.
280
00:22:28,890 --> 00:22:32,727
சில ஊடகர்கள் பூமிக்குள் நுழைந்து
உலோகத்தாதுவை தேடுவார்களென படித்தேன்.
281
00:22:35,980 --> 00:22:38,232
- என்னை பார்த்து சிரிக்கிறியா?
- தைரியமில்லை.
282
00:22:38,858 --> 00:22:39,776
நான்...
283
00:22:42,153 --> 00:22:43,780
நீ சிறுபிள்ளையா நினைவிருக்கு.
284
00:22:44,530 --> 00:22:47,908
அரண்மனை கடிகாரங்களை பிரித்தாய்,
எப்படி வேலை செய்கிறதென பார்க்க.
285
00:22:47,909 --> 00:22:49,284
அப்படியா?
286
00:22:49,285 --> 00:22:51,621
- என்ன வயது?
- என் முழங்கால் அளவுதான்.
287
00:22:52,538 --> 00:22:53,664
கிட்டத்தட்ட மூன்று வயது.
288
00:22:55,083 --> 00:22:57,126
மகாராணிக்கு பெருமை, தண்டிக்கலை.
289
00:22:57,585 --> 00:22:58,878
எப்பவும் பெருமை.
290
00:23:08,971 --> 00:23:10,389
அடச்சே.
291
00:23:14,435 --> 00:23:16,269
அப்ப, இந்த பட்டிகை எப்படி இருக்கும்?
292
00:23:16,270 --> 00:23:17,980
அது, பட்டிகை, இல்லையா?
293
00:23:18,564 --> 00:23:19,690
ரொம்ப உதவி.
294
00:23:20,316 --> 00:23:23,110
கட்டுப்பட்ட மனிதன் போலில்லைன்னு
நைநீவ் சொன்னா.
295
00:23:23,111 --> 00:23:25,947
அணியாத போது, பெரிய வெள்ளி வளையம் தான்.
296
00:24:02,817 --> 00:24:05,443
அதை கண்டா, பட்டிகையை என்ன செய்யணும்?
297
00:24:05,444 --> 00:24:09,364
உடைக்கணுமோ என்னமோ. தெரியாது.
எனக்கு தெரியாதே, இல்ல?
298
00:24:09,365 --> 00:24:12,535
சரி, ஆனால் அது ஒற்றைச் சக்தியால் ஆனதுதானே?
299
00:24:14,871 --> 00:24:15,830
பிரமாதம்.
300
00:24:26,841 --> 00:24:28,550
உலகம் எப்படி இருக்குமென யோசிச்சியா
301
00:24:28,551 --> 00:24:30,386
ஒற்றைச் சக்தி இல்லைன்னா?
302
00:24:31,220 --> 00:24:33,889
பின்னல் இல்லை, ஐஸ் செடாய் இல்லை,
303
00:24:33,890 --> 00:24:36,641
தரிசனங்கள் இல்லை, நினைவுகள் இல்லை.
304
00:24:36,642 --> 00:24:37,894
இப்ப பேசறோம்.
305
00:24:39,395 --> 00:24:42,397
மன்னிக்கணும். உங்களை நல்லா
ஞாபகம் இருந்தா பரவாயில்லை.
306
00:24:42,398 --> 00:24:44,150
கேம்லினை விட்டு எப்ப போனீங்க?
307
00:24:45,610 --> 00:24:47,528
உனக்கு ஐந்து வயது இருக்கும்.
308
00:24:49,030 --> 00:24:51,365
பிரபு கேப்ரில் வரும் முன் கிளம்பிட்டீங்க?
309
00:24:51,949 --> 00:24:52,909
யாரு?
310
00:24:54,076 --> 00:24:55,661
என் தாயோட துணை.
311
00:24:56,621 --> 00:24:59,122
எனக்கு நினைவிருந்ததிலிருந்தே
அவர் கூட இருக்கார்.
312
00:24:59,123 --> 00:25:01,082
பல ஆண்டுகளாக அரசை கவனித்தேன்.
313
00:25:01,083 --> 00:25:02,210
என்னை நம்பு.
314
00:25:03,211 --> 00:25:05,504
கேப்ரில் துணையா இருந்தா
தெரிந்திருக்கும்.
315
00:25:07,882 --> 00:25:09,550
கவனிப்பது கடினம், உண்மையா.
316
00:25:11,344 --> 00:25:13,012
மொர்கேஸ் எப்பவுமே வேசிதான்.
317
00:25:13,846 --> 00:25:14,722
ஓடு!
318
00:25:19,602 --> 00:25:20,519
போ!
319
00:25:23,898 --> 00:25:25,650
சரி, இது நம்பகமா இருக்கு.
320
00:25:27,818 --> 00:25:30,446
இரு. அந்த வளைவை நான் முன்ன
பார்த்திருக்கேன்.
321
00:25:31,572 --> 00:25:32,573
மேட், இரு!
322
00:25:33,616 --> 00:25:34,909
மேட், இரு!
323
00:25:44,961 --> 00:25:46,337
மேட், இரு!
324
00:26:01,435 --> 00:26:04,021
நீண்ட காலமாச்சு.
325
00:26:13,406 --> 00:26:14,407
நான் எங்கிருக்கேன்?
326
00:26:16,325 --> 00:26:20,329
பண்டைய ஒப்பந்தப்படி,
இங்கே ஒப்பந்தம் செய்யப்பட்டது.
327
00:26:22,164 --> 00:26:26,585
உன் தேவை என்ன?
328
00:26:31,340 --> 00:26:32,258
மேட்!
329
00:26:39,598 --> 00:26:44,061
- மேட்!
- உன் சின்ன காலடி சத்தம் கேட்குது.
330
00:26:46,564 --> 00:26:49,608
சிறு எலும்புகள் நன்றாக உடையும்.
331
00:26:55,489 --> 00:26:56,907
தேரங்கிகள்.
332
00:27:06,208 --> 00:27:07,168
யாருமில்ல.
333
00:27:17,303 --> 00:27:19,096
அதை உணர்ந்ததா நினைச்சேன். வா.
334
00:27:30,566 --> 00:27:32,360
வா. வா.
335
00:27:39,033 --> 00:27:40,117
அட வா!
336
00:28:26,372 --> 00:28:28,289
- அசையாதீங்க, குணமாக்கறேன்--
- இல்லை.
337
00:28:28,290 --> 00:28:29,875
சக்தியை கடத்தினா, அவ பார்ப்பா.
338
00:28:30,376 --> 00:28:32,877
திசை திருப்பறேன், நீ ஓடு.
அரண்மனையிலிருந்து போ.
339
00:28:32,878 --> 00:28:34,671
எனக்காக நீங்க சாக விட மாட்டேன்.
340
00:28:34,672 --> 00:28:38,592
உன்னை பாதுகாப்பா வைப்பேன்னு
உங்கம்மாவுக்கு எப்பவோ சத்தியம் செய்தேன்.
341
00:28:40,594 --> 00:28:42,345
நீங்க யார், தோம் மெரிலின்?
342
00:28:42,346 --> 00:28:45,599
இதற்கு பிறகு, நீ அண்டோர் திரும்பு.
343
00:28:47,017 --> 00:28:51,188
பிரபு கேப்ரில், என்னை நம்பு,
அவன் இல்லை.
344
00:28:51,772 --> 00:28:54,524
என்ன? அவரோட வளர்ந்தேன்.
எனக்கு நினைவிருக்கு...
345
00:28:54,525 --> 00:28:58,404
உனக்கு எது நினைவிருக்கோ,
அவன் உன் மனதில் விதைத்தது.
346
00:28:59,780 --> 00:29:01,449
விட்டொழியர்தான் செய்ய முடியும்.
347
00:29:03,284 --> 00:29:06,704
உங்கம்மா ஆபத்தில் இருக்கா,
உன் சிம்மாசனமும்தான்.
348
00:29:16,839 --> 00:29:17,965
நீ ஓடு.
349
00:29:20,551 --> 00:29:21,843
இப்பவே ஓடு.
350
00:29:21,844 --> 00:29:22,928
போ.
351
00:29:42,406 --> 00:29:43,324
ஹேய்!
352
00:29:47,203 --> 00:29:48,829
இது அக்னிப்பிழம்பை உருவாக்குது.
353
00:29:49,205 --> 00:29:52,165
இதுபோன்ற ஆயுதத்தோடு நான்
தேர்ந்தெடுக்கபட்டவளா இருப்பேன்.
354
00:29:52,166 --> 00:29:53,958
உன்னை முதலில் கொன்றால் அல்ல.
355
00:29:53,959 --> 00:29:56,545
அக்னிப்பிழம்பு மக்களை என்ன
செய்யும்னு பார்ப்போமா?
356
00:30:02,760 --> 00:30:03,886
இல்லை, எலேய்ன்!
357
00:30:07,097 --> 00:30:07,932
பார்ப்போம்.
358
00:30:28,994 --> 00:30:30,411
உன்னிடம் இரும்பு,
359
00:30:30,412 --> 00:30:33,164
இசை கருவி அல்லது ஒளி
உருவாக்கும் சாதனங்கள் உண்டா?
360
00:30:33,165 --> 00:30:35,291
- அது என்ன வாசனை?
- உன்னிடம் இருக்கா?
361
00:30:35,292 --> 00:30:38,170
இல்லை! இல்லை, அதெல்லாம் என்னிடம் இல்லை!
362
00:30:41,590 --> 00:30:43,132
நான் எங்கிருக்கேன்?
363
00:30:43,133 --> 00:30:47,596
உன் தேவை என்ன, மாட்ரிம் காதன்?
364
00:30:48,180 --> 00:30:49,847
என் பெயர் எப்படி தெரியும்?
365
00:30:49,848 --> 00:30:50,849
பேசு.
366
00:30:51,559 --> 00:30:52,935
உன்னிடம் மூன்றே உள்ளன.
367
00:30:53,686 --> 00:30:54,520
நீ என்னது?
368
00:30:59,400 --> 00:31:01,151
நான் ஈல்ஃபின்.
369
00:31:01,819 --> 00:31:03,779
உன் தேவையைப்பற்றி பேசு.
370
00:31:05,573 --> 00:31:09,534
ஈல்ஃபின், இந்த கிரகத்திலுள்ள
ஒவ்வொரு மந்திர சக்தியாலும்
371
00:31:09,535 --> 00:31:12,788
தாக்கப்படுவதை நிறுத்துவது தான்
எனக்கு தேவை!
372
00:31:14,164 --> 00:31:15,958
- ஒற்றைச் சக்தி சலிக்குது...
- ஆகட்டும்.
373
00:31:16,625 --> 00:31:18,918
உன் மனதில் நினைவுகள் ஓடுது.
374
00:31:18,919 --> 00:31:20,211
அவை உன்னுடையதல்ல.
375
00:31:20,212 --> 00:31:22,256
அவற்றை எடுக்க முடியும்.
376
00:31:24,967 --> 00:31:26,010
சரி செய்ய முடியுமா?
377
00:31:27,052 --> 00:31:27,970
ஆகட்டும்.
378
00:31:30,097 --> 00:31:34,183
உன் கடைசி தேவையை சொல்.
379
00:31:34,184 --> 00:31:36,645
இல்லை. என்ன செய்தே?
இப்ப என்ன செய்தே?
380
00:31:42,443 --> 00:31:43,777
அந்த வாசனை தெரியும்.
381
00:31:45,112 --> 00:31:47,364
பழைய வித்தகி வீட்டருகே இருந்த நரி குகை.
382
00:31:48,407 --> 00:31:51,994
எப்பவும் இறந்ததெல்லாம் அங்கிருக்கும்.
383
00:31:55,873 --> 00:32:00,169
இங்கிருந்து நான் வெளியேறுவதுதான்
என் கடைசி தேவை! இப்பவே!
384
00:32:02,630 --> 00:32:03,505
ஆகட்டும்.
385
00:32:05,716 --> 00:32:07,676
விடைபெறுவது விவேகமானது.
386
00:32:08,344 --> 00:32:12,764
விலை, விதிமுறை நிர்ணயிக்காதது,
விவேகமற்றது.
387
00:32:12,765 --> 00:32:15,475
- விலையை நிர்ணயிப்போம்.
- விலையா?
388
00:32:15,476 --> 00:32:19,687
கேட்டது கொடுக்கப்படும்.
விலை செலுத்தப்படும்.
389
00:32:19,688 --> 00:32:21,148
என்ன விலை?
390
00:32:28,489 --> 00:32:29,573
மின்!
391
00:32:32,159 --> 00:32:33,077
மின்!
392
00:32:36,372 --> 00:32:37,414
மின்!
393
00:32:49,218 --> 00:32:50,594
மேட். மேட்.
394
00:32:56,684 --> 00:32:57,685
மேட்.
395
00:32:59,520 --> 00:33:00,771
வா, மேட்!
396
00:33:02,022 --> 00:33:04,066
இல்லை, இல்லை, இல்லை.
மேட், சுவாசி.
397
00:33:05,150 --> 00:33:06,067
அட வா!
398
00:33:06,068 --> 00:33:08,153
வா, மேட், தயவுசெய்து!
399
00:33:08,737 --> 00:33:09,822
தயவுசெய்து!
400
00:33:11,448 --> 00:33:14,200
வா, மேட்! வா. வா.
401
00:33:14,201 --> 00:33:16,120
இல்லை. வா!
402
00:33:17,287 --> 00:33:19,248
வா, தயவுசெய்து! ஆகட்டும்!
403
00:33:24,545 --> 00:33:25,713
ஆகட்டும்!
404
00:33:27,715 --> 00:33:31,844
அவ்வளவுதான். அவ்வளவுதான்.
405
00:33:35,514 --> 00:33:37,266
என்னை முத்தமிட விரும்பியிருந்தா,
406
00:33:38,392 --> 00:33:39,935
எளிதான வழிகளுண்டு.
407
00:33:40,519 --> 00:33:41,437
வாயை மூடு.
408
00:33:45,357 --> 00:33:46,442
நான் எங்கிருக்கேன்?
409
00:33:50,237 --> 00:33:51,864
- நீ என்ன பேசறே?
- இல்லை.
410
00:33:56,285 --> 00:33:57,828
அலறல்கள் போயிடுச்சு.
411
00:33:59,538 --> 00:34:03,333
ஆனால் நாம எப்படி இங்கே வந்தோம்னு
412
00:34:04,251 --> 00:34:05,878
நினைவில்லை.
413
00:34:06,962 --> 00:34:09,173
எனக்கு பல விஷயங்கள் நினைவில்லை.
414
00:34:10,966 --> 00:34:13,342
- மேட்? மேட், என்ன நடக்குது?
- தெரியலை.
415
00:34:13,343 --> 00:34:15,219
- என்ன நடக்குது?
- தெரியலை.
416
00:34:15,220 --> 00:34:16,221
வா.
417
00:34:22,060 --> 00:34:23,437
வா. வா.
418
00:34:33,405 --> 00:34:34,615
நீ போயிருக்கணும்.
419
00:34:38,702 --> 00:34:39,578
அதை என்னிடம் கொடு.
420
00:34:45,375 --> 00:34:47,377
நீ சிறுமியா இருந்தப்ப
என்ன நடந்ததென...
421
00:34:48,796 --> 00:34:49,879
கண்டுபிடித்தேன்.
422
00:34:49,880 --> 00:34:52,841
இல்லை, எனக்காக வருந்தாதே, நைநீவ்.
423
00:34:53,509 --> 00:34:55,052
அந்த பழமொழி போல,
424
00:34:55,636 --> 00:34:57,387
"துன்பம் வலிமையை வளர்க்கும்."
425
00:34:58,472 --> 00:35:00,307
அதுதானே உனக்கு நடந்தது?
426
00:35:01,391 --> 00:35:03,310
உன் பெற்றோர் இறந்ததை பார்த்தது?
427
00:35:09,441 --> 00:35:12,443
கருப்பர்களின் ஜோய்யா பயிர் சொன்னாங்க
428
00:35:12,444 --> 00:35:16,532
சோதியை காண முடியாதளவு எந்த பெண்ணும்
இருளில் நீண்ட காலம் நடக்க முடியாதென.
429
00:35:17,574 --> 00:35:19,660
நிச்சயமா, நீ என்னை மாற்ற பார்த்தே.
430
00:35:20,661 --> 00:35:22,870
நான் எதுவோ அதுவா இருக்க ஆசை
இல்லைன்னு தோணுதா?
431
00:35:22,871 --> 00:35:23,871
இல்லை, தோணலை.
432
00:35:23,872 --> 00:35:26,708
இங்கு என் வாழ்வில் நான்
வருத்தப்படும் ஒரே விஷயம்
433
00:35:27,751 --> 00:35:31,421
அந்த கிழட்டு அரக்கனை என் மகனை
முதல் இரவன்றே மூழ்க்கடிக்க விடாதது.
434
00:35:33,090 --> 00:35:35,299
அவன் என்னை பலவீனமாக்கினான்.
435
00:35:35,300 --> 00:35:36,510
அது உண்மையில்லை.
436
00:35:41,014 --> 00:35:42,391
ஆனால் இப்போது என்னை பார்.
437
00:35:51,900 --> 00:35:54,069
என்னை இப்ப பார், நைநீவ்.
438
00:35:58,490 --> 00:36:00,409
டிராகனின் மறுபிறவிக்கு
பட்டிகை போடுவேன்.
439
00:36:01,743 --> 00:36:05,372
புதிய யுகத்தின் முதல் விட்டொழியரா
நான் இருப்பேன்.
440
00:36:08,584 --> 00:36:11,837
ஆயிரம் வருடங்களில் மிக சக்திவாய்ந்த ஊடகியை
கொல்லப் போறேன்.
441
00:36:56,882 --> 00:36:58,133
அம்மா?
442
00:37:06,767 --> 00:37:07,893
அம்மா.
443
00:37:10,520 --> 00:37:12,397
பயமா இருக்கு எனக்கு.
444
00:37:30,082 --> 00:37:31,249
என்ன கேட்டது?
445
00:37:32,501 --> 00:37:34,043
எனக்கு பயமா இருக்கு.
446
00:37:34,044 --> 00:37:36,379
தெரியும், ஆனால் நீ என்னை நம்பணும்.
447
00:37:36,380 --> 00:37:37,714
அம்மாவை நீ நம்பறியா?
448
00:37:38,173 --> 00:37:39,341
உன் கண்களை மூடு.
449
00:37:41,843 --> 00:37:43,302
நான் இருக்கேன்.
450
00:37:43,303 --> 00:37:45,097
எல்லாம் சரி ஆயிடும்.
451
00:39:42,339 --> 00:39:43,465
மெலிந்த்ரா.
452
00:39:44,466 --> 00:39:46,384
நீ வருவதை நான் கேட்பேனென தெரியுமே.
453
00:39:58,897 --> 00:40:00,065
ஏன்?
454
00:40:01,566 --> 00:40:06,404
அந்த சத்தியங்களை மால்க்கியருக்காக செய்தேன்
தங்கக்கொக்கு மீண்டும் பறந்திட.
455
00:40:06,988 --> 00:40:08,365
ஆனால் இங்கே அழைத்து வந்தன,
456
00:40:08,990 --> 00:40:11,993
அவற்றை நிறைவேற்றுவது மால்க்கியரை
நிரந்தரமாக அழிக்கும்.
457
00:40:14,913 --> 00:40:16,164
நீதான் மால்க்கியர்.
458
00:40:18,416 --> 00:40:21,419
அல்லன் மண்ட்ராகோரன், நீதான் தங்கக்கொக்கு.
459
00:40:25,465 --> 00:40:26,424
லான்ஃபியர் இருக்கா,
460
00:40:27,050 --> 00:40:28,759
ராண்டை கொல்ல விரும்பறா.
461
00:40:28,760 --> 00:40:30,303
அந்த சத்தியங்களை மீறினால்,
462
00:40:31,346 --> 00:40:34,098
உன் ஆன்மா உன்னோடே அழியும்,
மீண்டும் பிறக்காமல்.
463
00:40:34,099 --> 00:40:37,017
இறந்ததாக நினைப்பாள். அதை
அவளுக்கு எதிராக பயன்படுத்து.
464
00:40:37,018 --> 00:40:38,520
நீ இதை செய்யக் கூடாது.
465
00:40:40,605 --> 00:40:41,565
மெலிந்த்ரா.
466
00:40:48,780 --> 00:40:52,534
மரணம் இறகை விட இலகுவானது.
467
00:40:53,535 --> 00:40:56,371
கடமை மலையை விட கனமானது.
468
00:41:32,199 --> 00:41:33,325
நீ செய்தது சரி...
469
00:41:35,243 --> 00:41:36,243
இங்கு வந்தது.
470
00:41:36,244 --> 00:41:37,870
இது போர்வீரர்கள் தேசம்.
471
00:41:37,871 --> 00:41:40,498
துளிநாட்டுக்கோட்டையை
இந்த படை எதிர்த்திடும்.
472
00:41:41,166 --> 00:41:44,169
விட்டொழியர்கூட 100,000 ஈட்டிகள்
முன்பு வீழ்வர்.
473
00:41:45,170 --> 00:41:46,421
இன்னும் என்னுடையவர்களல்ல.
474
00:41:47,422 --> 00:41:48,590
ஆயிடுவாங்க.
475
00:41:49,674 --> 00:41:53,011
இதுதான் செய்ய வேண்டிய விஷயமென
சீக்கிரம் தெரியாததற்கு வருந்தறேன்.
476
00:41:57,724 --> 00:41:59,184
நீங்கதானே, இல்லையா?
477
00:42:00,268 --> 00:42:01,269
லான்ஃபியருடன்?
478
00:42:02,187 --> 00:42:03,938
டார் வலோனில்
விட்டொழியர் தாக்குதல்,
479
00:42:03,939 --> 00:42:06,316
கண்ணாடிகள், கோடாரி, அட்டைகள், எல்லாமே.
480
00:42:07,275 --> 00:42:08,317
ஆமாம்.
481
00:42:08,318 --> 00:42:11,238
மற்றவர்களிடமிருந்து பிரித்து
என்னை கட்டுப்படுத்தவா?
482
00:42:12,697 --> 00:42:13,572
ஆமாம்.
483
00:42:13,573 --> 00:42:14,990
உங்களுக்கு தெரியும், இல்ல?
484
00:42:14,991 --> 00:42:17,284
லான்ஃபியர் எக்வீனை கனவுகளில் செய்தது?
485
00:42:17,285 --> 00:42:18,370
சந்தேகப்பட்டேன்.
486
00:42:20,038 --> 00:42:22,498
- பிரிக்குமென நம்பினேன்.
- என்னையும் எக்வீனையுமா?
487
00:42:22,499 --> 00:42:23,958
என்னையும் லான்ஃபியரையுமா?
488
00:42:23,959 --> 00:42:24,917
இரண்டுமே.
489
00:42:24,918 --> 00:42:25,918
வேலை செய்தது.
490
00:42:25,919 --> 00:42:26,962
தெரியும்.
491
00:42:31,466 --> 00:42:32,592
வேடிக்கையான விஷயம்,
492
00:42:34,177 --> 00:42:36,513
நாம ரெட்டையாறை விட்டு கொஞ்ச காலமாச்சு.
493
00:42:37,222 --> 00:42:38,889
இந்த நேரத்தில், எப்பவும் இருந்த,
494
00:42:38,890 --> 00:42:40,934
என்னை விட்டுப் போகாத ஒரே நபர்,
495
00:42:41,977 --> 00:42:43,228
நீங்கதான்.
496
00:42:44,479 --> 00:42:48,316
நீங்க என்னை பயன்படுத்திக்க இல்லை,
நான் வெற்றி பெற நீங்க விரும்புவதால்.
497
00:42:49,359 --> 00:42:52,319
நான் இறுதி யுத்தத்தை வெல்வது
உங்களுக்கு முக்கியம்.
498
00:42:52,320 --> 00:42:56,407
குழப்பிக்காதே. நான் உன் கழுத்தில் கத்தியா
இருந்தேன் தொடங்கியதிலிருந்து.
499
00:42:56,408 --> 00:42:57,950
உன்னை கொல்ல தயாரா இருந்தேன்
500
00:42:57,951 --> 00:43:00,453
நீ அந்தகாரனை தேர்வு செய்தாலோ
அல்ல பைத்தியமானாலோ.
501
00:43:01,121 --> 00:43:03,247
நீ இறுதி யுத்தத்திற்கு போகக் கூடாது,
502
00:43:03,248 --> 00:43:05,458
சோதிக்காக நீ அதை வெல்வாய் என தெரியாதவரை.
503
00:43:09,087 --> 00:43:09,963
மிகச்சரி.
504
00:43:11,631 --> 00:43:12,757
நம்ம விருப்பம் ஒன்றே.
505
00:43:14,509 --> 00:43:15,969
விரும்பும் ஒரே ஆள் நீங்க.
506
00:43:21,349 --> 00:43:22,267
நன்றி.
507
00:43:24,686 --> 00:43:26,438
உங்களால்தான் இங்கே வந்தேன்.
508
00:43:27,814 --> 00:43:28,857
இப்ப புரியுது.
509
00:43:35,113 --> 00:43:36,364
நிரந்தரமா இருக்க மாட்டேன்.
510
00:43:37,073 --> 00:43:38,824
தெரியும், நானும் மாட்டேன்.
511
00:43:38,825 --> 00:43:41,369
ஆனால் அதுவரை நீங்க என்னருகே இருக்கணும்.
512
00:43:43,246 --> 00:43:44,330
இல்லை.
513
00:43:44,331 --> 00:43:47,791
இன்று, நீ அயீலை உன் கட்டுப்பாட்டில்
கொண்டு வரணும். தனியாக.
514
00:43:47,792 --> 00:43:50,337
எந்த ஐஸ் செடாயும் பின்னால
பின்னல் போட கூடாது.
515
00:43:52,422 --> 00:43:53,547
நீங்க என்ன செய்வீங்க?
516
00:43:53,548 --> 00:43:55,967
லான்ஃபியரிடமிருந்து உன்னை பாதுகாப்பேன்.
517
00:43:58,428 --> 00:43:59,888
அல்லது முயற்சித்து இறப்பேன்.
518
00:44:01,389 --> 00:44:02,265
அவ்வளவு தானா?
519
00:44:08,271 --> 00:44:11,524
வாழ்த்துக்கள், ராண்ட் அல் தோர்.
520
00:44:14,778 --> 00:44:15,737
உங்களுக்கும்.
521
00:44:29,709 --> 00:44:31,044
கலினா செடாய்.
522
00:44:38,468 --> 00:44:40,387
நீங்க கோட்டைக்கு திரும்ப கட்டளை.
523
00:44:40,804 --> 00:44:41,678
யாரிட்டது?
524
00:44:41,679 --> 00:44:43,515
அம்புலித் தேரேதான்.
525
00:44:44,099 --> 00:44:46,434
எங்க கடமையை செய்வதை
சியுவான் நிறுத்த முடியாது.
526
00:44:47,519 --> 00:44:49,312
அது என்ன கடமை, சகோதரி?
527
00:44:50,063 --> 00:44:52,232
உங்களை கோட்டையிலிருந்து வெளியேற்ற.
528
00:44:55,193 --> 00:44:58,321
எலைடா உள்ளே இருக்காங்க, ஆனால் சபையில்
எனக்கு நுழைய தடை.
529
00:45:02,867 --> 00:45:04,284
இது என் சபை.
530
00:45:04,285 --> 00:45:05,495
கதவுகளை திறங்க.
531
00:45:06,204 --> 00:45:07,038
இப்பவே!
532
00:45:12,710 --> 00:45:14,294
சோதியின் பெயரால் என்ன நடக்குது?
533
00:45:14,295 --> 00:45:16,088
சியுவான் சாஞ்ச்சே.
534
00:45:16,089 --> 00:45:19,216
இந்த சபை ஒரு மணி நேரம் முன்பு கூடியது,
535
00:45:19,217 --> 00:45:22,344
11 காவலர்கள் உடன்,
கோட்டை சட்டத்துக்கு இணங்க.
536
00:45:22,345 --> 00:45:24,471
ஒருமனதான வாக்களிப்புடன்,
537
00:45:24,472 --> 00:45:25,849
தேவைக்கேற்ப,
538
00:45:26,558 --> 00:45:27,559
உன்னை அகற்றியது.
539
00:45:30,061 --> 00:45:32,312
- உன்னால் முடியாது.
- முடியும், செய்துட்டேன்.
540
00:45:32,313 --> 00:45:36,859
மேலும், நீ அந்தசேவகியா இருப்பதாக
குற்றம் சாட்டப்பட்டுள்ளாய்,
541
00:45:36,860 --> 00:45:39,111
இருளுடன் சேர்ந்து வேலை செய்து
542
00:45:39,112 --> 00:45:42,239
டிராகனின் இருப்பை இந்த
கோட்டையிடமிருந்து மறைத்து,
543
00:45:42,240 --> 00:45:45,410
அவனை கட்டுப்படுத்தும் நம்
திறனை வீழ்த்தியதற்காக.
544
00:45:46,911 --> 00:45:48,912
இந்த குற்றங்களுக்காக,
545
00:45:48,913 --> 00:45:51,249
நீ கட்டுப்படுத்தப்படுவாய்.
546
00:45:54,627 --> 00:45:56,045
என் மரித்த உடலின் மீது.
547
00:47:25,426 --> 00:47:27,011
இல்லை!
548
00:47:28,763 --> 00:47:31,057
கூட்டிப் போங்க. எனக்கு
கேள்விகள் இருக்கு.
549
00:47:51,911 --> 00:47:53,120
மொகெதியன்!
550
00:47:53,121 --> 00:47:54,914
எப்படி தெரிந்தது...
551
00:47:57,000 --> 00:47:58,209
எஜமானி?
552
00:47:59,877 --> 00:48:03,089
தேர்ந்தெடுக்கபட்டவளா இருக்கணும்னா,
என் போட்டியை தெரியணும்.
553
00:48:09,304 --> 00:48:11,514
எங்களில் ஒருத்தியா இருக்க
எப்படி நினைக்கிறே?
554
00:48:12,765 --> 00:48:14,350
நீதான் அவர்களில் பலவீனம்.
555
00:48:15,643 --> 00:48:19,022
ஆக, நீ நேப்லிஸா மட்டும் இருக்கலாம்,
அல்லது
556
00:48:21,941 --> 00:48:23,526
தேர்ந்தெடுக்கபட்டவர்களாக...
557
00:48:25,278 --> 00:48:26,362
உன்னை விட பலவீனமாக.
558
00:48:28,573 --> 00:48:29,574
என்னைப் போல.
559
00:48:32,368 --> 00:48:38,333
நீண்ட காலமாக உன்னை கொன்றால்
எப்படி இருக்கும்னு யோசிப்பேன்.
560
00:48:50,595 --> 00:48:53,389
அடாமை வைத்து ஒரு ஆணை கட்டுப்படுத்த
இரு பெண்கள் தேவை.
561
00:48:54,432 --> 00:48:56,892
டிராகனின் மறுபிறவிக்கு பட்டிகையிட
நான் கூட வர்றேன்.
562
00:48:56,893 --> 00:48:58,895
என்னை உன்னிடம் நிரூபிக்க விடு.
563
00:49:04,108 --> 00:49:05,735
மற்றவர்களோடு சரியா வராது.
564
00:49:07,612 --> 00:49:08,613
எனக்கும் வராது.
565
00:49:35,181 --> 00:49:38,267
முதலில் பலவீனமானவர்களிடம்
வருவான்னு சொன்னேனே.
566
00:49:39,143 --> 00:49:43,564
சரி, அடையாளம் காணுமளவாவது
விட்டு வெச்சாளே.
567
00:49:44,691 --> 00:49:45,858
நீ அடுத்ததா இருப்பே.
568
00:49:47,068 --> 00:49:51,072
மொகெதியனோடு உன் சிறப்பு கூட்டணி
உன்னை பாதுகாக்கும்னு நினைக்கலையே.
569
00:49:51,739 --> 00:49:54,283
நீ எல்லா பக்கமும் விளையாடுவே, ராஹ்வின்.
570
00:49:57,912 --> 00:50:00,623
வெற்றி பெறும் பக்கத்தை
தேர்வு செய்யும் நேரமாச்சு.
571
00:50:07,130 --> 00:50:09,507
கெலாண்டரால்
தேர்ந்தெடுக்கபட்டவரை நிறுத்தலாம்.
572
00:50:15,179 --> 00:50:17,640
உன் குட்டி டிராகன் மீண்டும் நிராகரித்தானா?
573
00:50:19,100 --> 00:50:21,853
ஒருமுறை என் உதவியை
நிராகரித்தாய், எங்கே வந்தே பார்.
574
00:50:23,354 --> 00:50:26,357
இதுதான் கடைசி முறையாக நான் முனைவு தருவது.
575
00:50:27,483 --> 00:50:31,279
நாம பரஸ்பரம் எதிர்ப்பது
சலித்துவிட்டது, லான்ஃபியர்.
576
00:50:32,447 --> 00:50:34,364
நாம ஒன்றாக இருக்கணும்.
577
00:50:34,365 --> 00:50:35,533
அதனால, உண்மையா,
578
00:50:36,534 --> 00:50:40,955
டிராகனின் மறுபிறவியை கொல்ல
நீ நிஜமா தயாரா இருக்கியா?
579
00:50:42,582 --> 00:50:43,583
தயாரா இருக்கேன்.
580
00:50:54,218 --> 00:50:56,179
அயீல் தலைவர்களே,
581
00:50:56,596 --> 00:50:58,597
கனவூடகிகள் சொல்லலையா
582
00:50:58,598 --> 00:51:01,266
காரகார்ன் ருயிடியானிலிருந்து
வெளிவந்ததை?
583
00:51:01,267 --> 00:51:06,564
அல்கைர் டாலில் உங்கள் முன்னே நின்று,
தன்னை அறிவிப்பான் என்று?
584
00:51:08,566 --> 00:51:11,152
விடியலுடன் வருபவன் நான்!
585
00:51:11,819 --> 00:51:13,863
நான்தான் காரகார்ன்!
586
00:51:42,517 --> 00:51:46,020
தீர்க்கதரிசனத்தின்படி, புதிய
நாட்களை கொண்டு வருவேன்!
587
00:51:46,979 --> 00:51:49,231
மத்திய பூமியை மீண்டும் கடந்து
588
00:51:49,232 --> 00:51:51,692
நமக்கு சொந்தமான திரும்பப் பெறுவோம்!
589
00:52:01,828 --> 00:52:02,870
மேற்கத்தியனே.
590
00:52:05,039 --> 00:52:07,083
புனித நிலத்தில் நிற்க
உன்னை கொல்வேன்.
591
00:52:07,667 --> 00:52:08,960
ஒரு மேற்கத்தியன்...
592
00:52:10,545 --> 00:52:11,462
ஆமாம்.
593
00:52:13,506 --> 00:52:15,633
ருயிடியானின் தீர்க்கதரிசனம் என்ன சொல்லுது?
594
00:52:16,926 --> 00:52:18,094
அந்த ரத்தத்துல பிறந்தவன்.
595
00:52:19,470 --> 00:52:20,888
என் தந்தை...
596
00:52:22,014 --> 00:52:23,599
ஜான்டுவின் ஆவார்,
597
00:52:24,225 --> 00:52:25,935
இரும்பு மலை செப்டிலிருந்து,
598
00:52:26,561 --> 00:52:28,312
தார்டடின் குலத்தலைவர்!
599
00:52:30,356 --> 00:52:32,692
"ஆனால் ரத்தம் அல்லாதோரால் வளர்க்கப்பட்டு."
600
00:52:33,818 --> 00:52:37,446
காரகார்னை தேடி உங்க புத்திமான்கள் உங்களை
எங்கே அனுப்பினாங்க?
601
00:52:38,364 --> 00:52:41,284
மேற்கத்திய நிலங்களுக்கு,
நான் வளர்க்கப்பட்ட இடம்.
602
00:52:42,451 --> 00:52:44,996
என்னை கண்டுபிடிக்க உங்களை அனுப்பினர்!
603
00:52:58,134 --> 00:52:59,719
நான்தான் உங்கள் காரகார்ன்!
604
00:53:03,055 --> 00:53:04,891
நான்தான் உங்கள் காரகார்ன்!
605
00:53:05,433 --> 00:53:06,726
புளுகன்!
606
00:53:31,459 --> 00:53:34,420
அவங்க வர்றாங்க. அவங்க வர்றாங்க.
607
00:53:35,212 --> 00:53:39,425
டார் வலோனின் அணையா விளக்கு.
சப்த முத்திரைகளின் தலைவி.
608
00:53:40,217 --> 00:53:41,552
அம்புலித் தேர்.
609
00:54:08,871 --> 00:54:10,039
சியுவான் சாஞ்ச்சே,
610
00:54:10,998 --> 00:54:13,291
இந்த சபைக்கு முன்னே கொண்டு வரப்பட்டாய்
611
00:54:13,292 --> 00:54:16,921
எங்கள் கோட்டைக்கு எதிராக
உன் குற்றங்களுக்கு பதிலளிக்க.
612
00:54:18,005 --> 00:54:19,465
20 வருடங்களாக,
613
00:54:20,257 --> 00:54:24,220
மொரெய்ன் செடாயுடன் ரகசியமாக
வேலை செய்திருக்கிறாய்.
614
00:54:24,804 --> 00:54:28,515
டிராகனின் மறுபிறவியுடன் இப்போது
அவள் இருப்பதாக நம்புகிறேன்.
615
00:54:28,516 --> 00:54:30,685
அவர்கள் எங்கே என உனக்கு தெரியும்.
616
00:54:31,268 --> 00:54:33,561
பல வருட பொய்களுக்கு பிறகு,
617
00:54:33,562 --> 00:54:38,484
இறுதியாக எங்களிடம் உண்மையை சொல்வாயா?
618
00:54:41,362 --> 00:54:42,488
உண்மையா?
619
00:54:43,072 --> 00:54:44,949
அவ்வளவுதான் கேட்கிறோம்.
620
00:54:46,784 --> 00:54:48,786
உண்மை என்னன்னா...
621
00:54:51,580 --> 00:54:53,666
நான் மொய்ரெய்னை நேசிக்கிறேன்.
622
00:54:55,918 --> 00:55:00,214
எப்போதும் நேசித்தேன், நேசிப்பேன்.
623
00:55:07,430 --> 00:55:10,349
அவளை காக்க நான் இறப்பேன்.
624
00:55:14,353 --> 00:55:17,481
ஒரு ஐஸ் செடாய் வழிநடத்த
அவன் இங்கு வந்தான்.
625
00:55:18,399 --> 00:55:19,941
அவள் அடையாளங்களை தந்தாள்,
626
00:55:19,942 --> 00:55:21,736
அவன் கைகளில் இந்த பொய்களை.
627
00:55:22,653 --> 00:55:24,155
நானும் ருயிடியான் போனேன்.
628
00:55:24,822 --> 00:55:26,532
அங்கு என்ன பார்த்தாய், கூலாடின்?
629
00:55:27,324 --> 00:55:30,244
- இல்ல.
- ருயிடியானை பற்றி பேசக்கூடாது தெரியுமே.
630
00:55:31,954 --> 00:55:33,414
நான் பார்த்தது புனிதமானது.
631
00:55:35,166 --> 00:55:37,209
நான் புனிதமானவன்!
632
00:55:38,210 --> 00:55:42,298
இருபது வருடங்கள் முன்பு,
கிடாரா செடாய் முன்னறிவித்தார்.
633
00:55:43,674 --> 00:55:45,259
மொய்ரெய்னும் நானும் இருந்தோம்.
634
00:55:46,802 --> 00:55:50,014
டிராகன் மீண்டும் பிறந்ததை பார்த்தார்.
635
00:55:52,683 --> 00:55:54,393
எனக்கு பேச பயமில்லை, கூலாடின்.
636
00:55:56,062 --> 00:55:56,937
உனக்கு இருக்கா?
637
00:55:59,732 --> 00:56:02,276
அயீல் பற்றிய உண்மையை நீ
கேட்கும் நேரமாச்சு!
638
00:56:03,736 --> 00:56:07,698
அயீலின் வரலாற்றை என் மூதாதையர்கள்
கண்களால் பார்த்தேன்!
639
00:56:15,498 --> 00:56:17,291
புராதன யுகத்தை பார்த்தேன்.
640
00:56:17,958 --> 00:56:21,253
அயீலை டாஷைன் என்று அழைத்த
நேரத்தை பார்த்தேன்.
641
00:56:23,547 --> 00:56:26,008
இலைவழியை நீங்க பின்பற்றியதை.
642
00:56:26,967 --> 00:56:28,219
அது பொய்!
643
00:56:29,512 --> 00:56:30,386
தெரியுமா?
644
00:56:30,387 --> 00:56:32,180
ராண்ட், தயவுசெய்து.
645
00:56:32,181 --> 00:56:34,433
எங்க மக்கள் இந்த உண்மையை
எதிர்கொள்ள முடியாது.
646
00:56:35,142 --> 00:56:36,310
நீ அவர்களை அழிப்பாய்.
647
00:56:37,061 --> 00:56:38,771
இதை செய்யத்தான் நான் பிறந்தேன்.
648
00:56:41,315 --> 00:56:43,067
யாரென அனைவரும் எதிர்கொள்ளணும்!
649
00:56:47,988 --> 00:56:49,990
சத்தியத்த மீறினவங்க!
650
00:57:04,130 --> 00:57:06,923
இந்த மேற்கத்தியன் சொல்வதை கேட்காதீங்க.
651
00:57:06,924 --> 00:57:08,925
நாம எப்போதும் போர்வீரர்களே.
652
00:57:08,926 --> 00:57:10,927
நான்தான் உங்க தலைவர்களின் தலைவன்!
653
00:57:10,928 --> 00:57:14,265
மத்திய பூமியை தாண்டி என்னை
பின்தொடருங்கள்!
654
00:57:22,148 --> 00:57:25,234
என்னை நிராகரிங்க, செத்து மடிவீங்க!
655
00:57:53,053 --> 00:57:54,680
உலகம் மாறுது.
656
00:57:56,557 --> 00:58:00,603
சுவர்களுக்கு பின் நின்று இன்னும்
கட்டுப்பாடு இருப்பதா நடிக்க முடியாது.
657
00:58:01,687 --> 00:58:05,733
நமக்கு கட்டுப்பாடு இருப்பதே
நாம் செய்வதில்தான்.
658
00:58:10,571 --> 00:58:12,573
அப்ப, என்ன செய்யப் போறீங்க?
659
00:58:25,628 --> 00:58:29,964
எதற்கும் நிற்காத இந்த பெண்ணுக்கு
பின்னால் நிற்பீங்களா,
660
00:58:29,965 --> 00:58:33,219
அதிகாரத்தை தவிர வேறேதும் விரும்பாதவள்?
661
00:58:56,408 --> 00:59:01,162
அயீல் என தன்னை அழைப்போர் ரத்தத்தை
மணலில் நீர்போல சிந்துவேன்,
662
00:59:01,163 --> 00:59:03,624
உங்களை உலர்ந்த கிளைகளாக உடைப்பேன்.
663
00:59:04,250 --> 00:59:08,294
இருந்தும் காரகார்ன் காப்பாற்றுவான்
எஞ்சிய பகுதியின் பகுதியை,
664
00:59:08,295 --> 00:59:10,005
அவர்கள் உயிர்வாழ்வர்.
665
00:59:13,717 --> 00:59:15,094
நான் உங்கள் காரகார்ன்.
666
01:00:22,995 --> 01:00:26,998
கோட்டையோ தேரோ நம்மை யாரென நிரூபிக்காது.
667
01:00:26,999 --> 01:00:29,376
அது நாம்தான். நாம்தான்.
668
01:00:37,426 --> 01:00:39,303
நாம்தான் சக்தி.
669
01:00:40,387 --> 01:00:44,641
சோதி நம் வழியாக பிரகாசிக்கிறது.
அதுதான் உண்மை!
670
01:01:01,367 --> 01:01:04,203
நான் ஐஸ் செடாய்!
671
01:01:05,954 --> 01:01:08,956
நான் சத்தியங்களை செய்தேன்
672
01:01:08,957 --> 01:01:11,794
என் சகோதரிகள் 3,000 வருடங்களாக செய்தவையை.
673
01:01:12,669 --> 01:01:18,133
அதனால என் சொற்களை கேட்டு
அவை உண்மை என அறிக.
674
01:01:20,010 --> 01:01:21,844
நீங்கள் இங்கிருந்தால்,
675
01:01:21,845 --> 01:01:25,682
நீங்கள் நேசிப்பதாக சொல்லும்
இந்த கோட்டையுடன் எரிவீர்கள்.
676
01:01:28,644 --> 01:01:30,187
ஆனால் நான் எரியவே மாட்டேன்,
677
01:01:31,647 --> 01:01:35,192
ஏன்னா நான் சியுவான் சாஞ்ச்சே,
678
01:01:36,777 --> 01:01:38,612
ஆற்றின் மகள்,
679
01:01:39,279 --> 01:01:41,532
தண்ணீரே,
680
01:01:42,616 --> 01:01:45,702
நான் உன்னை எதிர்க்கிறேன்!
681
01:01:47,871 --> 01:01:50,499
உன்னை எதிர்க்கிறேன், எலைடா!
682
01:01:54,503 --> 01:01:56,130
வாக்கு ஏற்கனவே முடிந்தது.
683
01:01:57,214 --> 01:02:00,342
உனக்கு தண்டை அளிக்கப்பட்டது,
சியுவான் சாஞ்ச்சே,
684
01:02:01,802 --> 01:02:02,803
மரண தண்டனை.
685
01:02:18,152 --> 01:02:19,194
சியுவான்.
686
01:02:27,411 --> 01:02:28,453
இதோ இருக்கே,
687
01:02:28,454 --> 01:02:31,874
சாகப் போறே, உனக்கு துரோகம்
செய்தவளை பற்றி நினைக்கிறியா?
688
01:02:33,208 --> 01:02:34,960
என்னை பைத்தியம் என்கிறார்கள்.
689
01:03:57,709 --> 01:04:00,546
அவ இறந்துட்டா! அவ இறந்துட்டா!
690
01:04:11,223 --> 01:04:16,770
ராண்ட் அல் தோர் தான் காரகார்ன்!
691
01:04:37,666 --> 01:04:40,919
ஏன்னா நிலமே டிராகனின்
மறுபிறவியுடன் ஒன்றானது,
692
01:04:42,170 --> 01:04:44,715
அவன் நிலத்தோடு ஒன்றானான்.
693
01:04:47,426 --> 01:04:51,388
நெருப்புபோன்ற ஆன்மா, கல் போன்ற இதயம்,
694
01:04:52,598 --> 01:04:54,308
பெருமையில் வெற்றி காண்கிறார்,
695
01:04:55,142 --> 01:04:57,644
பெருமையுள்ளவர்களை
விட்டுக்கொடுக்க கட்டாயப்படுத்தி.
696
01:04:59,771 --> 01:05:02,816
மலைகளை முழங்காலிட அழைக்கிறான்,
697
01:05:03,942 --> 01:05:09,364
கடல்களை வழிவிட, வானத்தையே
தலைவணங்க.
698
01:05:10,282 --> 01:05:13,534
கல்போன்ற இதயத்திற்கு
கண்ணீர் நினைவிருக்க,
699
01:05:13,535 --> 01:05:17,539
நெருப்பு போன்ற ஆன்மாவுக்கு,
அன்புக்கு பிரார்த்தியுங்கள்.
700
01:05:19,333 --> 01:05:22,044
ராண்ட்! விடு, தயவுசெய்து!
701
01:07:45,687 --> 01:07:47,688
வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா சுப்ரமணியன்
702
01:07:47,689 --> 01:07:49,775
படைப்பு மேற்பார்வையாளர்
தீபிகா ராவ்