1 00:00:33,617 --> 00:00:37,538 ஹானா 2 00:01:01,145 --> 00:01:04,356 உங்களை வரவழைச்சு கடந்த சில வாரங்களில் நாங்க நடத்திய 3 00:01:04,440 --> 00:01:06,817 ரகசிய நடவடிக்கை பற்றி சொல்ல நினைச்சோம். 4 00:01:06,901 --> 00:01:08,194 இது சாத்தியமில்லை. 5 00:01:11,822 --> 00:01:14,658 நம் நடவடிக்கையை வீணாக்கி, உங்க எல்லாரையும் பெரிய 6 00:01:14,742 --> 00:01:18,078 ஆபத்துக்கு உள்ளாக்க, அமெரிக்க விசில்ப்ளோவர் முயற்சித்தார். 7 00:01:18,162 --> 00:01:20,456 லண்டன் மற்றும் பார்சிலோனாவில், நம்முடைய 8 00:01:20,581 --> 00:01:22,917 மூன்று ஆபரேடிவ்ஸ் சேர்ந்து பணியாற்றி, 9 00:01:23,000 --> 00:01:25,961 அபாயம் அகற்றி, உளவை கைப்பற்றினதை மகிழ்ச்சியா சொல்றேன். 10 00:01:26,045 --> 00:01:29,924 மியா, ஜூல்ஸ், சேண்டி, தயவு செய்து முன்னால வாங்க. 11 00:01:34,345 --> 00:01:37,765 சேண்டி விசில்ப்ளோவரை நுண்ணிய திறமையோடு அகற்றினார், 12 00:01:37,848 --> 00:01:41,060 உளவை பெற இருந்தவரை ஜூல்ஸ் நீக்கினார், 13 00:01:41,143 --> 00:01:45,231 நம்மை தகர்க்க இருந்த நடவடிக்கையின் ஆழத்திற்கு ரகசியமாக மியா சென்றார், 14 00:01:45,314 --> 00:01:46,982 தன்னை பெரும் ஆபத்திலிட்டு... 15 00:01:47,691 --> 00:01:49,026 அவர்களை அழித்தார். 16 00:01:54,657 --> 00:01:57,993 எனினும், இந்த நடவடிக்கையில் நமக்கு இழப்பு இல்லாமல் இல்லை. 17 00:01:59,870 --> 00:02:02,456 லியோ கார்னர் பார்சிலோனாவில் கொல்லப்பட்டார். 18 00:02:02,540 --> 00:02:05,668 க்ளெமென்சி ஜோன்ஸும் தன் உயிரை தியாகம் செய்தார். 19 00:02:06,919 --> 00:02:09,505 இருவருக்காக வருந்தவும், கொண்டாடவும் செய்கிறோம். 20 00:02:09,588 --> 00:02:10,464 அது அவளா? 21 00:02:11,340 --> 00:02:14,677 அவர்கள் வீழ்ந்தாலும், நம்முடனேயே இருக்கின்றனர். 22 00:02:18,138 --> 00:02:21,100 அவர்கள் வீழ்ந்தனர், ஆனாலும் இருக்கின்றனர். 23 00:03:12,151 --> 00:03:16,697 வியென்னா, ஆஸ்ட்ரியா 24 00:03:21,285 --> 00:03:23,120 இது வில்லியம்ஸ், 13:00 மணியில். 25 00:03:23,203 --> 00:03:26,206 மதிய உணவுக்கு போகிறேன். சரியாக 13:55க்கு திரும்புவேன். 26 00:03:26,290 --> 00:03:28,751 வெளியேற்றம்... மத்திய உளவு நிறுவனம் 27 00:03:34,465 --> 00:03:35,299 நீங்க நலமா? 28 00:03:35,382 --> 00:03:38,260 நல்லாருக்கேன். நன்றி. வழக்கமான மேஜை, தயவு செய்து. 29 00:03:38,344 --> 00:03:39,261 நன்றி. 30 00:03:49,563 --> 00:03:50,564 எப்படி இருந்தது? 31 00:03:50,648 --> 00:03:53,609 நல்லாருந்துச்சு. நன்றி. பில் தர்றீங்களா, தயவுசெய்து? 32 00:03:53,692 --> 00:03:56,695 -பில் ஏற்கனவே கட்டிட்டாங்க. -மன்னிக்கணும்? 33 00:03:56,779 --> 00:03:58,113 யாரோ இப்ப கட்டினாங்க. 34 00:03:58,197 --> 00:03:59,198 அதிர்ஷ்டசாலி. 35 00:04:03,410 --> 00:04:05,204 நகராதே. 36 00:04:05,287 --> 00:04:06,705 டிசர்ட் நல்லா இருக்கும். 37 00:04:06,789 --> 00:04:07,790 என்ன? 38 00:04:12,044 --> 00:04:14,088 என் பெயர் மரிசா வீக்ளர். 39 00:04:14,171 --> 00:04:19,426 நீ பார்க்கிறது கொலை இலக்குகள் பட்டியல், ஒரு வஞ்சக சிஐஏ பிரிவால செய்யப்பட்டது. 40 00:04:20,469 --> 00:04:26,433 பட்டியலில் இருக்கும் அனைவரும், அரசியல் ஆர்வம், சமூக உணர்வு நிறைந்த இளைஞர்கள். 41 00:04:26,517 --> 00:04:27,935 ஆனால் பொதுமக்கள். 42 00:04:28,602 --> 00:04:32,439 மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் பணியாற்றும் சிஐஏ ஆய்வாளர் நீ. 43 00:04:32,731 --> 00:04:34,775 உன் பெயர் ஏன் பட்டியலில் இருக்கு? 44 00:04:36,193 --> 00:04:37,695 நான் சிஐஏ இல்லை. 45 00:04:37,778 --> 00:04:41,448 -தூதரகத்தில் அலுவலக வேலை செய்யறேன். -ஈதன், நீ யாரென தெரியும். 46 00:04:41,865 --> 00:04:45,285 பாரிஸ் நிலையம் பார்க்கிறேன். கோட் வெசுவியஸ். தேடிப் பாரு. 47 00:04:45,369 --> 00:04:46,328 பாருங்க. 48 00:04:46,787 --> 00:04:50,082 நான் வழக்கமாக வலையிட்டு தரவு தேடுவேன், ஆழமாக தோண்டி... 49 00:04:50,165 --> 00:04:53,919 கடந்த இரண்டு வருடங்களில், வெளியே எதிலாவது ஈடுபட்டியா? 50 00:04:57,548 --> 00:04:59,049 நான் ஏன் உங்களை நம்பணும்? 51 00:05:01,135 --> 00:05:03,595 நகரத்தில் உனக்கு ஒரு காதலி இருக்கா. 52 00:05:04,221 --> 00:05:06,598 அவளுக்கு குழந்தை பிறக்க போகுது. 53 00:05:07,099 --> 00:05:09,560 உன் தேர்வுகளை யோசிச்சுக்கோ. 54 00:05:12,396 --> 00:05:14,064 இந்த கைபேசியில் அழைப்பேன். 55 00:05:15,274 --> 00:05:17,109 உனக்கு தெரிந்ததை என்னிடம் சொல். 56 00:05:23,157 --> 00:05:26,201 மியா, உனக்கு பெருமையா இருக்குமே. வாழ்த்துக்கள்! 57 00:05:26,326 --> 00:05:28,245 -நிஜமா அருமை. -நன்றி, கைஸ். 58 00:05:39,173 --> 00:05:40,215 ஹாய். 59 00:05:40,382 --> 00:05:42,092 நீ ஏன் எதுவும் சொல்லலை? 60 00:05:42,176 --> 00:05:44,511 எப்படின்னு தெரியுமே. உத்தரவை பின்பற்றினேன். 61 00:05:44,595 --> 00:05:47,014 -நீங்க அற்புதமானவங்க! -நன்றி! 62 00:05:47,097 --> 00:05:48,974 நீ சிறந்த வேலை செஞ்சே. 63 00:05:54,313 --> 00:05:55,522 ஓ, கடவுளே. 64 00:06:23,258 --> 00:06:25,219 கொஞ்ச காலம் இங்கே இருப்போம். 65 00:06:25,302 --> 00:06:29,098 திட்டத்தை இயக்க அனுமதி கிடைக்க எல்லாம் சரியா நடக்க உறுதி செய்யணும். 66 00:06:29,181 --> 00:06:30,265 எனக்கு பரவாயில்லை. 67 00:06:30,349 --> 00:06:32,726 பம்ப்ஹௌஸில் எல்லாம் தயாரென நினைக்கிறேன். 68 00:06:32,810 --> 00:06:35,270 எல்லா சிசிடிவிக்கும் முழு அணுகல் தேவை. 69 00:06:35,354 --> 00:06:36,480 பிரச்சினை இல்லை. 70 00:06:37,689 --> 00:06:41,235 மியா வுல்ஃபை ரகசியமாக அனுப்பறதா எங்களுக்கு நீங்க தெரிவிக்கலை. 71 00:06:41,568 --> 00:06:43,195 யாரை நம்பறதுன்னு தெரியலை. 72 00:06:43,278 --> 00:06:46,156 இலக்கு பட்டியலை வாஷிங்டனில் யாரோ கெல்டரிடம் தந்தாங்க. 73 00:06:46,240 --> 00:06:47,616 யாராகவும் இருக்கலாம். 74 00:06:47,699 --> 00:06:48,909 நீங்களா இருக்கலாம். 75 00:06:50,244 --> 00:06:52,079 வீக்ளர் நிச்சயமா இறந்துட்டாளா? 76 00:06:52,162 --> 00:06:55,124 பார்சிலோனாவில் மியா சுட்டா. நான் அப்புறப்படுத்தினேன். 77 00:06:57,417 --> 00:07:00,629 சரி, இனி ஆணைச் சங்கிலியை மீறாதீங்க, சரியா? 78 00:07:26,989 --> 00:07:28,657 செய்திகள் இன்று நள்ளிரவு - எம் 79 00:09:20,435 --> 00:09:22,020 நம்மை சந்தேகிக்கிறாங்களா? 80 00:09:23,021 --> 00:09:24,064 அப்படி தோணலை. 81 00:09:28,026 --> 00:09:29,194 நல்லா பொய் சொல்றீங்க. 82 00:09:33,907 --> 00:09:34,950 நன்றி. 83 00:09:53,093 --> 00:09:54,428 எல்லாம் சரியா இருக்கா? 84 00:09:54,511 --> 00:09:56,972 ஆமாம். விருந்தாளிங்க வந்திருக்காங்க. 85 00:09:57,055 --> 00:09:58,682 ஆம். வருவாங்கன்னு தோணிச்சு. 86 00:10:08,191 --> 00:10:09,192 எங்கே இருக்கீங்க? 87 00:10:09,276 --> 00:10:12,529 பவேரியன் கிராமப்புறத்தில. இந்த நெட்வர்க் பாதுகாப்பானது. 88 00:10:12,612 --> 00:10:13,655 தனியா இருக்கீங்களா? 89 00:10:13,947 --> 00:10:14,823 ஆமாம். 90 00:10:15,741 --> 00:10:18,702 நான் தேடினேன். சிஐஏ கோப்புபடி நீங்க இறந்துட்டீங்க. 91 00:10:18,785 --> 00:10:20,787 அது அப்படித்தான் இருக்கணும். 92 00:10:21,997 --> 00:10:25,208 எனக்கு என்ன வெச்சிருக்கே? எனக்கு நிறைய நேரமில்லை. 93 00:10:25,334 --> 00:10:27,377 நான் கொஞ்சம் தகவல் அனுப்பறேன். 94 00:10:28,420 --> 00:10:31,214 இரண்டு வருஷம் முன், இந்த பெண் வியென்னா வந்தாங்க. 95 00:10:31,298 --> 00:10:34,885 ப்ரியானா ஸ்டேபில்டன். லேங்க்லியில் ரகசிய செயல்பாடுன்னாங்க. 96 00:10:34,968 --> 00:10:37,304 என்னையும், சக கணினி ப்ரோகிராமரையும் 97 00:10:37,387 --> 00:10:39,222 புது ப்ராஜெக்டில் நியமிச்சாங்க. 98 00:10:39,306 --> 00:10:40,640 ப்ரோகிராமர் பெயர்? 99 00:10:40,724 --> 00:10:41,975 மேக்ஸ் காப்லன். 100 00:10:42,267 --> 00:10:46,355 கவிழ்க்கும் சாத்தியமுள்ள பொதுமக்களின் தரவுதளத்தை உருவாக்குவதே வேலை. 101 00:10:46,438 --> 00:10:49,649 30 வயதுக்கு உட்பட்டவர்கள், தற்போதைய பகுப்பாய்வின்படி, 102 00:10:49,733 --> 00:10:52,903 எதிர்காலத்தில் அமெரிக்க நலனை எதிர்க்கக் கூடியவர்கள். 103 00:10:52,986 --> 00:10:56,239 நிறைய சமூக ஊடக தகவல்கள், மின்னஞ்சல்கள், பள்ளி ப்ராஜெக்ட்ஸ் 104 00:10:56,323 --> 00:10:58,075 மேக்ஸுக்கும் எனக்கும் கிடைத்தன. 105 00:10:58,575 --> 00:11:00,494 நாங்க பட்டியலை உருவாக்கினோம். 106 00:11:00,577 --> 00:11:01,787 அப்புறம் என்ன ஆச்சு? 107 00:11:02,245 --> 00:11:06,333 எனக்கு சௌகரியமா இல்லை. வரைமுறைகளை தாண்டி போயிட்டு இருந்தோம். 108 00:11:06,416 --> 00:11:08,168 20 வருஷத்தில் ஆபத்தானவங்களா 109 00:11:08,251 --> 00:11:12,047 மாறலாம்னு சிஐஏ நினைக்கிறதால 13 வயது பிள்ளைகளை வேவு பார்ப்பது. 110 00:11:12,130 --> 00:11:14,132 நான் அதுக்காக வரவேயில்லை. 111 00:11:14,216 --> 00:11:15,133 வேலையை விட்டேன். 112 00:11:16,426 --> 00:11:17,427 வேறு ஏதாவது? 113 00:11:19,179 --> 00:11:20,347 இன்னும் தோண்டினேன். 114 00:11:21,014 --> 00:11:23,809 ஸ்டேபில்டன் ரகசிய செயல்பாட்டில் இல்லை. 115 00:11:23,892 --> 00:11:26,269 பயனியர் என்ற குழுவை சேர்ந்தவங்க. 116 00:11:26,353 --> 00:11:29,189 ஒரு ஆளாள இயக்கப்பட்டது. தனிப்பட்ட மின்னஞ்சல்களில் 117 00:11:29,272 --> 00:11:31,108 அவரை தலைவர் என குறிப்பிட்டாங்க. 118 00:11:31,191 --> 00:11:32,859 -"தலைவரா"? -ஆமாம். 119 00:11:32,943 --> 00:11:33,902 காப்லன் தலைவர் 120 00:11:33,985 --> 00:11:35,987 பயந்து, தோண்டறதை நிறுத்திட்டேன். 121 00:11:36,071 --> 00:11:40,033 மேக்ஸ் நகரப்புறம் போயிட்டான், எல்லாம் அடங்கிடுச்சு. ஒரு வருஷம் முன். 122 00:11:40,117 --> 00:11:41,201 சரி, நல்லது. 123 00:11:41,410 --> 00:11:43,703 அதே உணவகத்திலதான் உணவு சாப்பிடுவியா? 124 00:11:43,787 --> 00:11:44,621 ஆமாம். 125 00:11:44,704 --> 00:11:48,125 நான் மீண்டும் பில் கட்டினா, உனக்கு ஆபத்துன்னு அர்த்தம். 126 00:11:48,208 --> 00:11:50,627 உன் காதலியை சந்திச்சுட்டு, உடனே என்னை அழை. 127 00:11:58,301 --> 00:11:59,386 அது அவதான். 128 00:11:59,511 --> 00:12:00,470 விருந்தாளி. 129 00:12:01,388 --> 00:12:04,307 -உனக்கு ஏதாவது தெரியுமா? -கொலை பட்டியல் தந்தாங்க. 130 00:12:04,391 --> 00:12:07,477 -அதை எப்படி செஞ்சாங்கன்னு தெரியாது. -இப்ப தெரியுமே. 131 00:12:07,978 --> 00:12:09,229 தலைவர் யார்? 132 00:12:10,272 --> 00:12:11,106 தெரியாது. 133 00:12:12,190 --> 00:12:14,443 அரசாங்க அதிகாரியா? பிரபலமா? 134 00:12:14,526 --> 00:12:16,611 பயிற்சியாளர்களை நிர்வகிக்கிறேன், மரிசா. 135 00:12:17,154 --> 00:12:19,948 அந்த மாதிரி தகவல் என்னிடம் வராது. 136 00:12:20,824 --> 00:12:24,369 சரி, ஐரோப்பாவில் நடக்கும் முதல் ஐந்து படுகொலைகளின் தகவல் வேணும். 137 00:12:24,453 --> 00:12:25,787 ஹானா பாரிஸில் வேணும், 138 00:12:25,871 --> 00:12:28,498 அவளுக்கு முதல் இலக்கை தரணும். அப்பாஸ் நஸிரி. 139 00:12:28,582 --> 00:12:30,083 முடியும்னு நிச்சயமில்லை. 140 00:12:30,167 --> 00:12:34,296 நீ அவங்க நடவடிக்கையை வெளியாக்க பார்த்தது அவங்களுக்கு தெரியணுமா? 141 00:12:35,839 --> 00:12:37,257 அதை நடக்க வை. 142 00:12:46,057 --> 00:12:48,602 ஸ்டேபில்டன் யாருக்கு வேலை செய்யறான்னு தெரியணும். 143 00:12:48,685 --> 00:12:50,395 தலைவர் யாருன்னு. 144 00:12:51,354 --> 00:12:54,441 நீ கண்டுபிடிக்கிறது நமக்குள்ளேயே இருக்கட்டும். 145 00:12:56,568 --> 00:12:57,569 சரி. 146 00:13:04,242 --> 00:13:05,243 ஹேய்? 147 00:13:06,578 --> 00:13:07,579 நல்லா இருக்கியா? 148 00:13:08,622 --> 00:13:10,290 நல்லா இருக்கேன். ஏன்? 149 00:13:11,291 --> 00:13:13,335 அது, அங்கே நீ தனியா இருக்கே. 150 00:13:13,793 --> 00:13:15,462 ஆமாம், பழகிடுச்சு. 151 00:13:16,254 --> 00:13:18,048 எனக்கு எதிர்பார்ப்புகளே இல்லை. 152 00:13:19,299 --> 00:13:21,176 இருக்கணும். நீ இன்னும் சின்னவ. 153 00:13:23,261 --> 00:13:26,932 தெரியுமா, நாம வெற்றி அடைஞ்சா, 154 00:13:27,641 --> 00:13:29,893 உனக்கு வேண்டிய வாழ்க்கை கிடைக்கும். 155 00:13:31,561 --> 00:13:34,689 மரிசா, எனக்கு வேண்டிய வாழ்க்கையை நீங்க தந்தாலுமே, 156 00:13:35,440 --> 00:13:37,526 அதை என்ன செய்யணும்னு எனக்கு தெரியாது. 157 00:13:38,026 --> 00:13:39,986 சண்டை போட மட்டுமே தெரியும். 158 00:13:53,542 --> 00:13:54,459 சரி, மக்களே, 159 00:13:54,543 --> 00:13:58,547 இன்னும் சில வாரங்களில் என்ன நடக்குங்கறதை பற்றி பேசப் போறேன். 160 00:13:58,630 --> 00:14:02,676 நீங்க வெளி உலகத்துக்கு போவீங்க, திரும்ப வர மாட்டீங்க. 161 00:14:03,552 --> 00:14:04,594 நீங்க தயார். 162 00:14:05,095 --> 00:14:06,346 ஆனால் இதை சொல்லணும். 163 00:14:06,429 --> 00:14:09,474 இதை சொல்லணும், உங்க இலக்குகளும் தயாரா இருப்பாங்க. 164 00:14:10,225 --> 00:14:13,103 வாய்ப்பு கிடைச்சா, உங்களை கொல்ல தயங்க மாட்டாங்க. 165 00:14:13,186 --> 00:14:16,356 அவங்களை ஆச்சரியப்படுத்தணும், இரக்கமின்றி இருக்கணும். 166 00:14:16,690 --> 00:14:17,983 நீங்க போர் வீரர்கள். 167 00:14:18,733 --> 00:14:22,654 ஆனால், சாதாரண போர் வீரர்கள் போல, நீங்க விதிகளுக்கு உட்பட வேண்டாம். 168 00:14:23,530 --> 00:14:24,656 இந்த போரில், 169 00:14:25,907 --> 00:14:27,158 எதுவும் பரவாயில்லை. 170 00:15:35,268 --> 00:15:37,354 ஹேய்! ஹேய்! ஹேய்! விலகு! விலகு! 171 00:16:05,215 --> 00:16:07,342 அதை தலைவரோட விவாதிக்கிறேன். 172 00:16:26,611 --> 00:16:29,614 ...உன்னிடம் திரும்ப பேசறேன். நாளை சந்திக்கிறேன். 173 00:16:30,031 --> 00:16:31,032 அவ்வளவுதான். 174 00:16:36,955 --> 00:16:37,956 ஹேய்! 175 00:16:39,416 --> 00:16:40,417 ஹாய். 176 00:16:43,628 --> 00:16:46,631 என்ன நடக்குதுன்னு சொல்லாம ஆபத்தை ஏற்படுத்தினே. 177 00:16:47,340 --> 00:16:49,551 லண்டன்ல உன்னை கொன்னிருப்பேன். 178 00:16:50,427 --> 00:16:51,678 உன் கனவில. 179 00:16:56,391 --> 00:16:57,434 என்ன விஷயம்? 180 00:16:57,934 --> 00:16:59,686 தூக்கம் வரலை. 181 00:17:02,480 --> 00:17:05,817 நான் கொன்ன பத்திரிக்கையாளர்தான் கண் முன்னால வர்றாங்க. 182 00:17:06,651 --> 00:17:08,486 வேடிக்கையா இருக்கு, அவங்க... 183 00:17:09,654 --> 00:17:13,658 செய்றதுக்கு முன்னால, என்ன செய்யணும்னு 184 00:17:13,742 --> 00:17:15,118 அவங்க நிறைய சொல்றாங்க. 185 00:17:16,035 --> 00:17:17,954 தடயவியல் தயாரிப்பு. 186 00:17:18,955 --> 00:17:22,542 நடந்த முடிஞ்ச பிறகு என்னாகும்னு ஒரு வார்த்தை இல்லை. 187 00:17:28,047 --> 00:17:29,048 அப்படியே, 188 00:17:29,466 --> 00:17:31,426 சேண்டி இன்னும் உன்னை சந்தேகப்படறா. 189 00:17:31,509 --> 00:17:33,303 நீ ஏமாற்றுவதா நினைக்கிறா. 190 00:17:33,386 --> 00:17:35,054 சீக்கிரமே நாம கிளம்புவோம், 191 00:17:35,138 --> 00:17:38,141 சேண்டியும் நானும் பரஸ்பரம் சந்திக்க வேணடாம். அதனால... 192 00:17:39,058 --> 00:17:41,019 நீ ஏன் அவகிட்ட பேசக் கூடாது? 193 00:17:41,102 --> 00:17:43,730 நீ நிஜமா எங்களோட இருந்தா, உனக்கு என்ன இழப்பு? 194 00:17:43,813 --> 00:17:46,649 யாரிடமும் என்னை நிரூபிக்க வேண்டாமே. 195 00:17:48,693 --> 00:17:50,403 இல்லை. நீ செய்யவே இல்லை. 196 00:17:52,447 --> 00:17:53,948 அதனாலதான் தனியா இருக்கே. 197 00:19:35,091 --> 00:19:37,927 கூட்டம் இன்னும் நடக்குது. இப்பவே காபி வேணுமாம். 198 00:19:38,011 --> 00:19:39,178 எடுத்துட்டு போறேன். 199 00:19:39,262 --> 00:19:42,891 கதவுக்கு வெளியே வெச்சிடு. அவங்களுக்கு தொந்தரவு வேண்டாம். 200 00:20:43,743 --> 00:20:45,578 இந்த பெண்களெல்லாம் செம்மப்பா. 201 00:20:46,204 --> 00:20:47,330 நிழற்படை. 202 00:20:48,206 --> 00:20:49,707 அவளை தோற்கடிக்க முடியுமா? 203 00:20:50,583 --> 00:20:52,251 முயல தேவையில்லாதது மகிழ்ச்சி. 204 00:20:56,923 --> 00:21:00,885 20 மிஷனோட முதல் அலை ஒரு வருஷத்தில் முடிஞ்சாகணும். 205 00:21:02,178 --> 00:21:03,262 அது படு வேகம். 206 00:21:03,846 --> 00:21:05,139 அதை செய்ய முடியுமா? 207 00:21:05,848 --> 00:21:08,643 செய்யலாம். எதுவும் தப்பா ஆகலைன்னா. 208 00:21:11,479 --> 00:21:12,855 ஜான் கார்மைக்கேல்? 209 00:21:12,939 --> 00:21:14,357 ஏற்றபடி மாற்றிக்கிறார். 210 00:21:14,440 --> 00:21:18,277 பார்சிலோனாவில நடந்ததா அவர் சொல்றதை நீ நம்பறியா? 211 00:21:18,611 --> 00:21:19,988 நீங்க அவரை நம்பலியா? 212 00:21:20,071 --> 00:21:23,574 யாரையும் நம்ப மாட்டேன், ப்ரியானா. உனக்கு தெரிஞ்சிருக்கணும். 213 00:21:24,826 --> 00:21:26,911 இதற்கு நீண்ட காலமா காத்திருக்கோம். 214 00:21:27,203 --> 00:21:29,872 எந்த தப்பும் செய்யலைன்னு உறுதி படுத்திப்போம். 215 00:21:31,749 --> 00:21:32,750 அது என்ன? 216 00:21:36,129 --> 00:21:37,380 அந்த பூனைதான். 217 00:21:37,839 --> 00:21:39,841 அதை ஒழிக்கப் போறதா நினைச்சேன். 218 00:21:41,092 --> 00:21:42,218 ஒரு நிமிஷம் கொடுங்க. 219 00:21:51,394 --> 00:21:53,563 சிறப்பை எதிர்பார்க்கிறேன், ப்ரியானா. 220 00:21:53,855 --> 00:21:56,858 ஏமாற்றங்கள் பிடிக்காதென உனக்கு தெரியும்னு நம்பறேன். 221 00:21:58,192 --> 00:22:02,113 பாரிஸின் புறநகர்ப்பகுதி 222 00:22:35,396 --> 00:22:37,648 செய்தி எச்: - தலைவர் - படம் 223 00:22:41,694 --> 00:22:44,697 ஹஃபீஸ்? இது ஹஷெல் சஹோ. 224 00:22:44,781 --> 00:22:46,949 சில பாஸ்போர்ட்கள் செய்து தந்தீங்க. 225 00:22:47,658 --> 00:22:51,162 சரி, நல்லது. இன்னொரு உதவி தேவை. 226 00:22:51,245 --> 00:22:55,500 சொல்லணும், மியா சிறப்புதான். எல்லா புள்ளிவிவரத்திலும் அவ மேல இருக்கா. 227 00:22:57,752 --> 00:22:59,378 கொலையும் செஞ்சிருக்கா. 228 00:22:59,462 --> 00:23:01,089 அவளை முதலில் போடணுமா? 229 00:23:02,799 --> 00:23:03,925 அது உங்க விருப்பம். 230 00:23:05,760 --> 00:23:07,804 அவளை எங்கே அனுப்பலாம்னு சொல்றீங்க? 231 00:23:10,389 --> 00:23:11,599 ஒருவேளை, பெர்லின்? 232 00:23:11,682 --> 00:23:15,853 இல்லை. முன்பு அங்கே போயிருக்கா. நிறைய நினைவுகள் இருக்கும். ஆபத்தானது. 233 00:23:16,187 --> 00:23:17,355 ஆமாம், நிச்சயமா. 234 00:23:19,357 --> 00:23:20,358 அப்ப, பாரிஸ்? 235 00:23:23,736 --> 00:23:25,238 கவனம் வெச்சுக்குங்க. 236 00:23:29,158 --> 00:23:32,286 ஒன்று யோசிக்கிறேன், ஜான். 237 00:23:32,370 --> 00:23:34,789 ஆரம்பத்திலிருந்தே யூட்ராக்ஸ்ல இருக்கீங்க. 238 00:23:34,872 --> 00:23:36,415 இத்தனை வருஷம் ஆன பிறகும் 239 00:23:36,499 --> 00:23:39,794 நடுத்தர டெலிவரி ஆளாவே இருக்கீங்க. ஏன்? 240 00:23:40,878 --> 00:23:43,381 மேலே போய், கீழே விழுந்தா ரொம்ப அடிபடும். 241 00:23:43,464 --> 00:23:45,383 கொஞ்ச காலம் குடிச்சீங்கல்ல? 242 00:23:47,593 --> 00:23:51,055 அது ரொம்ப காலம் முன்பு. உங்க வயசிருக்கலாம், குறைவா கூட. 243 00:23:52,431 --> 00:23:54,475 அழுத்தத்துனால கஷ்டப்பட்டேன். 244 00:23:56,811 --> 00:23:58,855 இப்ப என் வேலையை மட்டும் செய்யறேன். 245 00:24:07,989 --> 00:24:09,907 நீ முதல் மிஷனில். பாரிஸ். 246 00:24:09,991 --> 00:24:11,367 அப்பாஸ் நஸிரி. 247 00:24:12,535 --> 00:24:13,536 ஹானா. 248 00:24:16,038 --> 00:24:18,749 நாம சந்திச்சப்ப, மரிசா உன்னிடம் என்ன சொன்னா? 249 00:24:19,876 --> 00:24:21,878 என் நலனை பற்றி விசாரிச்சாங்க. 250 00:24:21,961 --> 00:24:24,130 நான் கஷ்டப்படறதா நினைச்சாங்க, 251 00:24:24,797 --> 00:24:26,174 உணர்வுப்பூர்வமா. 252 00:24:27,925 --> 00:24:28,926 கஷ்டப்படறியா? 253 00:24:30,928 --> 00:24:31,929 அப்படி தோணலை. 254 00:24:32,889 --> 00:24:33,890 உங்களுக்கு? 255 00:24:46,652 --> 00:24:47,486 சரி... 256 00:24:48,112 --> 00:24:50,781 இந்த கணத்திற்குத்தான் நாமெல்லாம் காத்திருந்தோம். 257 00:24:51,032 --> 00:24:53,618 சொல்லியே ஆகணும், நான் பெருமைப்படறேன். 258 00:24:53,743 --> 00:24:56,787 நாளை உங்க சேவைக் காலத்தை தொடங்குவீங்க. 259 00:24:57,622 --> 00:24:59,332 த மெடோஸ்ல நீங்க ஏற்படுத்தின 260 00:24:59,415 --> 00:25:01,959 வாழ்க்கையை வாழ இதுதான் வாய்ப்பு. 261 00:25:02,501 --> 00:25:06,797 நீங்க ரகசியமா இருப்பீங்க, வீட்டோட குறைந்த தொடர்பே இருக்கும். 262 00:25:06,881 --> 00:25:09,592 உங்க பாத்திரத்தை முழுசா ஏற்பீங்க, வெளிப்படையாக. 263 00:25:10,593 --> 00:25:12,345 உங்க இலக்கை பற்றி கற்பீங்க, 264 00:25:12,428 --> 00:25:14,931 அவங்க முறைகள், வாழ்க்கை, செயல்பாடுகள். 265 00:25:15,014 --> 00:25:16,182 நம்பாதீங்க. 266 00:25:17,183 --> 00:25:18,893 உங்களை நம்பி இருக்கோம். 267 00:25:18,976 --> 00:25:21,103 பணி குறிப்பு இலக்கு: ஸோஃபியா வோச்சிக் 268 00:25:38,412 --> 00:25:40,248 வியென்னா 269 00:26:05,898 --> 00:26:08,401 சமூகம் செயல்படும் விதத்தோட ஒத்து போறீங்களா? 270 00:26:08,484 --> 00:26:10,111 அதைப்பற்றி யோசிச்சதுண்டா? 271 00:26:10,194 --> 00:26:11,988 அதைப்பற்றி யோசிச்சதில்லைன்னா, 272 00:26:12,071 --> 00:26:14,949 தூக்கம், கோமால இருக்கீங்க இல்ல மூளைச்சலவையானீங்க. 273 00:26:15,032 --> 00:26:17,910 எண்ணங்களை, ஒவ்வொன்றையும், மறுபரிசீலனை செய்யணும். 274 00:26:17,994 --> 00:26:20,913 நீங்களே கேட்டுக்கோங்க: எது உண்மை, எனக்கெது நல்லது? 275 00:26:20,997 --> 00:26:23,207 உங்களுக்காக யோசிக்க கத்துக்கணும். 276 00:26:23,291 --> 00:26:28,337 ஏன்னா நீங்க யோசிக்காம இருந்தா, நீங்க உடந்தை. 277 00:27:30,900 --> 00:27:33,027 ...அல்லது முன்நிறுவிய நம்பிக்கைகள். 278 00:27:33,110 --> 00:27:34,820 உங்க எண்ணங்கள் சொந்தமானவையா? 279 00:27:34,904 --> 00:27:39,075 பெற்றோர் சொன்னதை நம்பினீங்களா, அல்லது சொந்த நம்பிக்கைகள் இருந்ததா? 280 00:27:39,158 --> 00:27:40,159 சுதந்திரமானவரா... 281 00:27:40,242 --> 00:27:41,285 புதிய செய்தி அப்பா 282 00:27:41,369 --> 00:27:43,829 ...அல்லது உங்க சமூகம் யோசித்ததுபோல யோசிச்சீங்களா? 283 00:27:45,373 --> 00:27:47,583 ஹாய் கண்ணே. இது அப்பா. 284 00:27:49,919 --> 00:27:52,004 என்ன வேணும்? 285 00:27:58,886 --> 00:28:01,430 உன் பள்ளியிலிருக்கும் பெண் பழைய வழிக்கே போறா. 286 00:28:01,514 --> 00:28:02,765 தெரியட்டும்னு தோணிச்சு. 287 00:28:04,850 --> 00:28:06,894 நிர்வாக நுழைவு பயனர்: - கடவுச்சொல்: 288 00:28:12,358 --> 00:28:13,776 செய்திகள் இல்லை 289 00:28:15,569 --> 00:28:17,530 மாலை வணக்கம், எல்லாருக்கும். 290 00:28:18,322 --> 00:28:21,867 நான் அமெரிக்க அரசின் பிரதிநிதி. 291 00:28:22,451 --> 00:28:24,787 சில வார்த்தைகள் சொல்ல விரும்பினேன். 292 00:28:25,287 --> 00:28:28,749 த மெடோஸில் உங்கள் இந்த, கடைசி இரவன்று. 293 00:28:28,833 --> 00:28:31,168 முதன் முதலில், உங்க தேசத்துக்கு 294 00:28:31,252 --> 00:28:35,172 நீங்க சேவை செய்வதற்கு நன்றி தெரிவிக்கணும். 295 00:28:37,133 --> 00:28:40,594 இன்றிரவுக்கு பிறகு நீங்கள் இனி சந்திக்க மாட்டீர்கள். 296 00:28:40,803 --> 00:28:43,431 உங்கள் பல வருட சேவையை தனியாக முடிப்பீர்கள் 297 00:28:43,514 --> 00:28:45,975 உலகின் வெவ்வேறு இடங்களில். 298 00:28:47,059 --> 00:28:50,062 சேவை எவ்வளவு காலம் நீடிக்குமென இப்போது தெரியாது. 299 00:28:50,146 --> 00:28:51,897 அதை நீங்கள் முடித்ததும், 300 00:28:51,981 --> 00:28:56,819 நீங்கள் உங்களுக்காக உருவாக்கிய வாழ்க்கையை வாழும் சுதந்திரம் உங்களுக்கு இருக்கும். 301 00:28:57,319 --> 00:29:01,240 நீங்கள் எங்களுக்காக வருடங்களாக சேவை செய்வதற்கான வெகுமதி அது. 302 00:29:02,283 --> 00:29:06,620 யாருக்கு தெரியும், எதிர்காலத்தில், 303 00:29:06,704 --> 00:29:09,165 வகுப்பு ரீயூனியன் சாத்தியமாக இருக்கலாம். 304 00:29:09,248 --> 00:29:12,626 இப்போதைக்கு, விடை கொடுக்கும் நேரமாச்சு. 305 00:29:13,169 --> 00:29:16,130 அதனால் இன்றிரவை அனுபவியுங்கள். 306 00:29:16,213 --> 00:29:18,174 சில பியர்கள் அருந்தலாம். 307 00:29:19,175 --> 00:29:21,635 உங்கள் எதிர்காலம் நாளை தொடங்குகிறது. 308 00:29:23,804 --> 00:29:27,558 எல்லாரும் பெயரின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு ஷாட் அருந்தணும்! 309 00:29:27,641 --> 00:29:29,435 உனக்கு துரதிர்ஷ்டம், சவானா! 310 00:29:29,518 --> 00:29:31,020 ஒண்ணு, ரெண்டு, மூணு, "எச்"! 311 00:29:31,103 --> 00:29:33,230 முடியும். உன்னால முடியும், முடியும். 312 00:30:36,961 --> 00:30:38,045 உங்களுக்கு பெருமையா? 313 00:30:39,713 --> 00:30:41,382 இவர்கள் உங்க படைப்புகள். 314 00:30:42,758 --> 00:30:45,010 எல்லாம் முடிந்ததும் என்ன ஆகும்? 315 00:30:45,094 --> 00:30:46,804 நிஜமா ரீயூனியன் கிடைக்குமா? 316 00:31:26,802 --> 00:31:30,389 அடுத்த வாரம் இந்நேரம், கிரகத்தின் பல்வேறு பக்கமிருப்போம். 317 00:31:30,472 --> 00:31:32,850 மீண்டும் சந்திப்போம்னு நினைக்கிறியா? 318 00:31:32,933 --> 00:31:33,934 நிச்சயமா. 319 00:31:34,018 --> 00:31:36,895 சேவைக்காலத்திற்கு பிறகு, சாதாரணமாக வாழ்கையில், 320 00:31:36,979 --> 00:31:39,607 நமக்கு வேண்டிய போது சந்திக்க பயணிக்கலாம். 321 00:31:39,690 --> 00:31:41,233 எப்படி கண்டுபிடிப்போம்? 322 00:31:41,942 --> 00:31:44,320 சமூக ஊடகம் தெரியுமா, ஜெஸ்ஸி? 323 00:31:44,403 --> 00:31:47,740 நம் வாழ்க்கை முழுதும் அதில் இருக்கு. அப்படியே. 324 00:31:49,241 --> 00:31:51,285 நான் இந்த இடத்தை மறக்கவே மாட்டேன். 325 00:31:52,411 --> 00:31:54,288 ஹெலன், நீ உணர்ச்சி வசப்படறே. 326 00:31:54,371 --> 00:31:57,499 நாமெல்லாம் இங்கே வித்தியாசமா ஆயிட்டோம், இல்லையா? 327 00:31:59,376 --> 00:32:00,878 நீ அதை உணரலியா, மியா? 328 00:32:02,630 --> 00:32:03,631 இருக்கலாம். 329 00:32:05,174 --> 00:32:07,217 எனக்கு இது வித்தியாசமானதா தோணுது. 330 00:32:08,218 --> 00:32:09,219 ஏன்? 331 00:32:10,012 --> 00:32:11,013 எனக்கு தெரியாது. 332 00:32:11,096 --> 00:32:11,930 எனக்கு தெரியும். 333 00:32:12,014 --> 00:32:15,517 ஹேய், சேண்டி. நீ ஐந்து ஷாட் டெகிலா குடிக்கணும். 334 00:32:15,601 --> 00:32:17,394 குடிக்கிற மனநிலையில் இல்லை. 335 00:32:17,478 --> 00:32:19,605 ஏன் இல்லை? இது நம் கடைசி இரவு. 336 00:32:19,688 --> 00:32:23,567 -தெரியாது. ஏதோ தொந்தரவா இருக்கு. -சேண்டி, என்ன இது? 337 00:32:23,651 --> 00:32:27,154 மியா ரகசியமா பணியாற்றி இருந்தா, ஸ்பானிஷ் ஹோட்டல் அறையில் 338 00:32:27,237 --> 00:32:30,866 ஏன் என் தலையில மூன்று குண்டுகளை சுட்டான்னு கண்டுபிடிக்கிறேனோ? 339 00:32:31,659 --> 00:32:34,495 அல்லது நேற்றிரவு நீ யாரை சந்திச்சேன்னு தெரியணுமோ? 340 00:32:34,578 --> 00:32:36,163 அலுவலகத்துக்கு அருகே. 341 00:32:40,167 --> 00:32:42,878 என்ன ஆச்சு? வாயைடைச்சு போச்சா? 342 00:32:42,961 --> 00:32:44,046 என்ன நடக்குது? 343 00:32:44,505 --> 00:32:46,465 நேற்றிரவு யாரை சந்திச்சே, மியா? 344 00:32:54,139 --> 00:32:56,809 நான் யாரையும் சந்திக்கலை. நடக்க வந்தேன். 345 00:32:56,892 --> 00:32:59,561 -நடுராத்திரியிலா? -எனக்கு தூக்கம் வரலை. 346 00:32:59,645 --> 00:33:01,689 ஏன்? ஏன் தூக்கம் வரலை? 347 00:33:01,772 --> 00:33:02,815 -பேசு. -சேண்டி! 348 00:33:02,898 --> 00:33:04,191 இதுக்குள்ள வராதே. 349 00:33:06,485 --> 00:33:08,529 நீ யாரை சந்திச்சே? உண்மை தெரியணும். 350 00:33:08,612 --> 00:33:10,322 சேண்டி, அவளை விடு. 351 00:33:10,406 --> 00:33:13,325 -ஜெஸ்ஸி, இதுக்குள்ள வராதே. -துரோகம் பண்ண திட்டமிடறே. 352 00:33:13,409 --> 00:33:14,576 நீ யாரை சந்திச்சே? 353 00:33:14,660 --> 00:33:18,038 யாரையும் சந்திக்கலை. எனக்கு தூக்கம் வரலைன்னு சொன்னேனே. 354 00:33:21,792 --> 00:33:24,211 க்ளெமென்சியை சந்தித்த இடத்துக்கு போவேன். 355 00:33:24,294 --> 00:33:25,921 ஏன்? ஏன் அப்படி செய்யணும்? 356 00:33:29,299 --> 00:33:30,592 ஏன்னா அவளை கொன்னேன். 357 00:33:34,471 --> 00:33:35,556 பார்சிலோனாவில். 358 00:33:37,766 --> 00:33:41,103 அவ வில்லாவைவிட்டு ஓடின போது, அவ தலைக்கு பின்னால சுட்டேன். 359 00:33:41,186 --> 00:33:42,855 அவதான் துரோகி, சேண்டி. 360 00:33:43,188 --> 00:33:46,191 அவ முழு நேரமும் வீக்ளரோட வேலை செய்தா. நான் இல்லை. 361 00:33:47,776 --> 00:33:49,862 அதைப்பற்றி நான் பேச விரும்பலை. 362 00:33:50,487 --> 00:33:51,572 அவ பேர் கெடும்படி. 363 00:33:51,655 --> 00:33:53,157 கார்மைக்கேலிடம் கூடவா? 364 00:33:53,699 --> 00:33:55,784 -எங்ககிட்ட சொல்லியிருக்கலாமே. -இல்லை. 365 00:33:55,868 --> 00:33:59,371 ஏன்னா அவ என் தோழி. செய்ய விரும்பலை, ஆனா செய்ய வைச்சாங்க. 366 00:33:59,455 --> 00:34:01,749 -உனக்கு சம்பந்தமில்லை. -அது அபத்தம்! 367 00:34:01,832 --> 00:34:04,126 சேண்டி, ஏன் என்னிடம் இவ்வளவு கோபம்? 368 00:34:04,793 --> 00:34:07,087 உனக்கு உதவி செய்யத்தான் முயற்சித்தேன். 369 00:34:08,672 --> 00:34:10,632 இங்கே சேர்ந்திருக்க உதவினேன். 370 00:34:10,966 --> 00:34:13,260 உன் சகோதரிக்காக துக்கப்பட உதவினேன். 371 00:34:14,386 --> 00:34:16,764 என் சகோதரியை இதுக்குள்ளே இழுக்காதே. 372 00:34:20,517 --> 00:34:22,060 எனக்கு கடந்தகாலம் இருக்கு. 373 00:34:22,352 --> 00:34:23,979 நிஜமான கடந்தகாலம். 374 00:34:24,646 --> 00:34:25,898 அதை மாற்ற முடியாது. 375 00:34:26,565 --> 00:34:29,109 உனக்கு இல்லைங்கிறது என் தப்பு இல்லை. 376 00:34:29,443 --> 00:34:30,444 ஆனா என்னை நம்பு. 377 00:34:31,028 --> 00:34:33,405 பார்சிலோனாவில் உன் தலையில சுட்டிருந்தா, 378 00:34:33,697 --> 00:34:35,240 கண்டிப்பா சுட்டிருப்பேன். 379 00:34:41,121 --> 00:34:42,956 ரீயூனியனில் சந்திக்கிறேன். 380 00:34:48,212 --> 00:34:51,089 சரி. சரின்னுதான் நினைக்கிறேன். 381 00:35:32,589 --> 00:35:37,928 2வது அரான்திஸ்மோன், பாரிஸ் 382 00:35:54,152 --> 00:35:56,363 சரி. நாளைக்கு பேசுவோம். 383 00:35:57,865 --> 00:35:59,199 சரி. 384 00:36:02,119 --> 00:36:03,579 ஐ லவ் யூ, கண்ணே. 385 00:36:03,662 --> 00:36:04,496 மன்னிக்கணும். 386 00:36:04,580 --> 00:36:07,249 ஐ லவ் யூ வெரி மச். இரு, திரும்ப அழைக்கிறேன். 387 00:36:07,332 --> 00:36:09,418 மன்னிக்கணும், மாணவர்கள் விடுதி தேடறேன். 388 00:36:09,501 --> 00:36:12,004 பூலவார்ட் ட்ரேஃபஸ்ல இருக்கு. தெரியுமா? 389 00:36:12,087 --> 00:36:14,298 -ஆமாம். அங்கே இருக்கு. -சரி, நன்றி. 390 00:36:14,381 --> 00:36:16,925 -வேணும்னா காட்டறேன். -நிஜமாவா? 391 00:36:17,009 --> 00:36:18,844 -ஆமா. அங்கேதான் போறேன். -நன்றி. 392 00:36:19,469 --> 00:36:21,013 இங்கே என்ன பண்றே? 393 00:36:21,805 --> 00:36:24,016 நான் மாணவி. அரசியல் படிக்கிறேன். 394 00:36:25,267 --> 00:36:26,768 என் பெயர் மியா. 395 00:36:26,852 --> 00:36:29,271 -அப்பாஸ், சந்திக்க மகிழ்ச்சி. -மகிழ்ச்சி. 396 00:36:29,354 --> 00:36:31,064 அழைப்பை குறுக்கிட மன்னிக்கணும். 397 00:36:31,148 --> 00:36:32,274 பிரச்சினை இல்லை. 398 00:36:33,525 --> 00:36:36,069 -என்ன படிக்கிறீங்க? -ஃபேனான் படிக்கிறோம். 399 00:36:36,153 --> 00:36:40,073 "தன் பணியை, காரணத்தை ஒவ்வொரு தலைமுறையும் தெரிஞ்சுக்கணும்"ங்கறார். 400 00:36:40,157 --> 00:36:42,034 ஃபேனான். வலிமையான வார்த்தைகளா? 401 00:36:42,117 --> 00:36:43,118 ஆமாம். 402 00:36:45,078 --> 00:36:47,581 வளரும் போது, அப்பா எல்லாம் காட்டி தந்தார். 403 00:36:47,664 --> 00:36:49,541 ஃபேனான். அஹென்ட். 404 00:36:49,625 --> 00:36:52,920 அவங்க சொற்கள், அவை எனக்கு புரியும். அதனால்தான்... 405 00:36:53,003 --> 00:36:54,838 ஏன் அவை உனக்கு புரியும்? 406 00:36:55,464 --> 00:36:58,425 தெரியாது. அவை எனக்கு காரணத்தை தருகின்றன, தெரியுமா? 407 00:36:59,760 --> 00:37:00,928 வாழ. 408 00:37:04,848 --> 00:37:06,141 சரி. அங்கே தான். 409 00:37:06,600 --> 00:37:07,851 சரி, நன்றி. 410 00:37:12,314 --> 00:37:14,358 ஹேய், மியா. நான்... 411 00:37:15,442 --> 00:37:17,778 என்றாவது பானம் அருந்த போகலாமா? 412 00:37:18,612 --> 00:37:19,613 சரி. 413 00:37:19,738 --> 00:37:22,407 சரியா? உன்... உன் எண்ணை தர முடியுமா? 414 00:37:23,075 --> 00:37:24,159 சரி. 415 00:37:30,123 --> 00:37:32,668 -பார்க்கலாம். -நன்றி. பார்ப்போம், பை. 416 00:38:00,362 --> 00:38:02,280 சரி, எல்லாரும், வந்ததுக்கு நன்றி! 417 00:38:02,364 --> 00:38:04,199 சரியா வர முடிஞ்சதுன்னு நம்பறேன். 418 00:38:04,533 --> 00:38:08,870 நம்மை பார்த்து கொள்வதற்காக பல்கலைக்கழக பாதுகாப்புக்கு நன்றி! 419 00:38:09,162 --> 00:38:12,582 இன்றைய நம் பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் ஆர்வலர் 420 00:38:12,666 --> 00:38:14,835 அப்பாஸ் நஸிரி, அவர் கேட்பார் 421 00:38:14,918 --> 00:38:18,296 "உலகமயமாக்கப்பட்ட பூமியில் எதிர்ப்பு என்பது என்ன?" 422 00:38:28,890 --> 00:38:29,975 மாலை வணக்கம். 423 00:38:33,270 --> 00:38:36,064 எதிர்ப்பு. 424 00:38:36,148 --> 00:38:38,358 அந்த சொல் பொருள் நிறைந்தது, வரலாறு மிக்கது 425 00:38:38,442 --> 00:38:40,902 நான் பிறந்த இந்த பிரான்ஸ் தேசத்தில். 426 00:38:41,778 --> 00:38:44,906 நாஜிக்களுக்கு எதிரான எதிர்ப்பு. விஷிக்கு எதிராக. 427 00:38:45,032 --> 00:38:47,325 -பென்சன்? -வெளியே தயாரா காத்திருக்கேன். 428 00:38:47,409 --> 00:38:49,286 என் தந்தை பிறந்த அல்ஜீரியாவில் 429 00:38:49,411 --> 00:38:51,621 அந்த சொல் இன்னும் பொருள் நிறைந்தது. 430 00:38:51,705 --> 00:38:54,875 காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பு. 431 00:39:00,547 --> 00:39:03,884 ஆனால் நாம் இப்போது எப்படி எதிர்க்கிறோம்? 432 00:39:04,801 --> 00:39:08,555 எதிர்ப்புக்கான இடத்தை கண்டுபிடிக்க, சரியான இடத்தை, 433 00:39:08,638 --> 00:39:13,060 நம்மீது ஆதிக்கம் செலுத்தும் சக்தி அமைப்புகளை முதலில் அடையாளம் காண வேண்டும். 434 00:39:13,143 --> 00:39:15,103 இவ்வமைப்புகள் எங்கும் ஒளிந்துள்ளன. 435 00:39:15,187 --> 00:39:19,775 அரசாங்கத்தில், பல்கலைக்கழகங்களில் ஒளிந்துள்ளன, 436 00:39:19,858 --> 00:39:22,319 வங்கிகளில், வெகுஜன ஊடகத்தில், 437 00:39:22,402 --> 00:39:25,739 நீங்கள் உண்பதில், நீங்கள் அருந்துவதில், சுவாசிப்பதில், 438 00:39:27,574 --> 00:39:32,204 உங்க தொலைபேசியில், கணினிகளில், 439 00:39:32,287 --> 00:39:34,039 உங்க சமூக ஊடக கணக்கில். 440 00:39:35,499 --> 00:39:38,460 பலர் என்னிடம் சொல்வாங்க: நான் அரசியல் செய்வதில்லை. 441 00:39:39,753 --> 00:39:42,172 எனக்கு அரசியல் சார்பில்லை. 442 00:39:42,255 --> 00:39:45,759 ஆனால் எல்லாம் அரசியல், உங்க தட்டிலிருக்கும் இறைச்சி உட்பட. 443 00:39:45,842 --> 00:39:50,764 நான் அரசியல் செய்வதில்லை என்று சொல்வது இந்த அமைப்புகளுக்கு இசைந்து 444 00:39:50,847 --> 00:39:54,434 உங்க வாழ்க்கை, விதியை அவங்களை முடிவெடுக்க ஒப்புக்கொள்வது. 445 00:39:55,602 --> 00:39:59,606 நாம வளர்ந்தால், என்ன படிக்கணும், எப்படி படிக்கணும், என்ன சொல்லணும், 446 00:39:59,689 --> 00:40:03,527 எப்படி சொல்லணும் என கற்பிக்கப் படுகிறோம். 447 00:40:04,778 --> 00:40:07,239 அதிகாரத்தின் ஞானத்தை நம்ப கற்பிக்கப்படுகிறோம் 448 00:40:07,322 --> 00:40:11,451 ஆனால், உண்மையில், ஞானம் அதிகாரத்தில் இல்லை. 449 00:40:12,494 --> 00:40:17,958 அதனால் மிகவும் ஆபத்தான இடம்... இது. 450 00:40:18,041 --> 00:40:21,962 முதல் எதிர்ப்பு இன்று நமக்கெதிராக இருக்க வேண்டும். 451 00:40:22,963 --> 00:40:25,590 நம் மனதுக்கு எதிராக. 452 00:40:26,550 --> 00:40:31,012 ஆனால் நாம் கேட்க வேண்டிய கேள்வி: நம்மால் முடியுமா? 453 00:40:32,472 --> 00:40:35,517 நமக்கு போதுமான தைரியம் இருக்கிறதா? 454 00:40:46,570 --> 00:40:47,445 அது சிறப்பு! 455 00:40:47,529 --> 00:40:49,573 உங்களுக்கு பிடிச்சுதா? நன்றி. 456 00:40:49,656 --> 00:40:51,158 உங்களுக்கு மியா தெரியும்ல? 457 00:40:51,867 --> 00:40:52,784 வந்தது மகிழ்ச்சி. 458 00:40:56,246 --> 00:40:57,956 நீங்க சொன்னது பிடிச்சுது. 459 00:40:58,665 --> 00:40:59,666 நன்றி. 460 00:41:00,625 --> 00:41:01,918 அவங்க கிளம்பிட்டாங்க. 461 00:41:02,002 --> 00:41:02,836 புரிஞ்சுது. 462 00:41:02,919 --> 00:41:03,753 டாக்ஸி! 463 00:41:04,921 --> 00:41:05,839 அப்பாஸ், மியா... 464 00:41:05,922 --> 00:41:07,215 இல்லை, என்கூட வர்றா. 465 00:41:07,632 --> 00:41:09,009 மோட்டார்சைக்கிள் இருக்கு. 466 00:41:10,260 --> 00:41:11,261 மியா, நிச்சயமாவா? 467 00:41:11,344 --> 00:41:13,054 இல்லை, பரவாயில்லை. இவரோட போறேன். 468 00:41:13,138 --> 00:41:14,764 சரி. மாலை வணக்கம். 469 00:41:14,848 --> 00:41:16,349 ஆணையை மட்டுமே கவனிப்போம். 470 00:41:18,435 --> 00:41:19,686 முன்னால போயிருக்கியா? 471 00:41:19,769 --> 00:41:20,770 ஒரு முறை மட்டும். 472 00:41:25,525 --> 00:41:27,402 -சரியா இருக்கா? -ஆமாம். 473 00:41:27,485 --> 00:41:28,320 சரி. 474 00:42:27,170 --> 00:42:28,421 அவங்களை பார்க்க முடியுது. 475 00:42:31,549 --> 00:42:33,885 பின்னால இரு. ரொம்ப அருகே கூடாது. 476 00:42:39,432 --> 00:42:41,977 அவ முடிக்கிற வரை நீ நுழையாதே. 477 00:42:42,060 --> 00:42:43,144 புரிஞ்சுது. 478 00:42:43,228 --> 00:42:44,562 உனக்கு வேகமா இல்லையே? 479 00:42:44,729 --> 00:42:47,399 அவ்வளவு வேகமில்லை. சுலபமா பயப்பட மாட்டேன். 480 00:42:47,482 --> 00:42:49,067 சரி, அதை நம்ப முடியுது. 481 00:42:53,530 --> 00:42:54,531 என்ன விஷயம்? 482 00:42:55,699 --> 00:42:56,825 ஒன்றுமில்லை. போவோம். 483 00:42:59,536 --> 00:43:00,578 என்ன நடக்குது? 484 00:43:01,413 --> 00:43:02,414 அவ உள்ளே போறா. 485 00:43:53,506 --> 00:43:54,549 ஹாய். 486 00:43:56,343 --> 00:43:58,470 எனக்கு சிகரெட் தருவியா? 487 00:44:00,263 --> 00:44:02,015 ஆமாம், நிச்சயமா. 488 00:44:05,643 --> 00:44:08,313 நாம மொட்டைமாடிக்கு போவோமா? 489 00:44:16,404 --> 00:44:18,698 சரி, மியா, இதை செய்வோம். 490 00:44:48,311 --> 00:44:49,396 நீ நிச்சயமா நலமா? 491 00:44:51,689 --> 00:44:52,732 ஆமாம். ஏன்? 492 00:44:54,484 --> 00:44:56,319 தெரியலை. நீ பதட்டமா இருக்கே. 493 00:44:58,822 --> 00:44:59,823 இல்லை. 494 00:45:06,538 --> 00:45:07,872 முதலில் புகைப்போம். 495 00:45:09,332 --> 00:45:12,544 எல்லா பெண்ணையும் முத்தமிட மாட்டேன், அது தான் தயக்கம்னா. 496 00:45:12,627 --> 00:45:13,753 நான் அப்படி நினைக்கலை. 497 00:45:15,171 --> 00:45:17,090 அப்ப என்ன, நீ போதை ஏத்தறவளா? 498 00:45:17,257 --> 00:45:18,258 இல்லை. 499 00:45:20,552 --> 00:45:22,512 -என்னது? -ஏதாவது கேட்டுதா? 500 00:45:22,595 --> 00:45:23,847 -இல்லை. -யாரோ இருக்காங்க. 501 00:45:23,930 --> 00:45:24,764 இல்லை. 502 00:45:24,848 --> 00:45:27,142 என்ன செய்யறே? என்னிடம் பொய் சொல்றே. 503 00:45:27,225 --> 00:45:28,226 இல்லை. 504 00:45:48,580 --> 00:45:49,581 என்ன ஆச்சு? 505 00:45:50,248 --> 00:45:51,791 நாம... ஆடியோவை இழந்தோம். 506 00:45:54,127 --> 00:45:55,420 பென்சன், உள்ளே போ. 507 00:46:04,721 --> 00:46:06,598 பென்சன், நிலைமை அறிக்கை. 508 00:46:07,265 --> 00:46:08,558 அவங்களை பார்க்க முடியலை. 509 00:46:15,690 --> 00:46:17,025 கவனமா கேளு. 510 00:46:20,361 --> 00:46:21,404 என்ன நடக்குது? 511 00:46:21,779 --> 00:46:23,781 காட்சியை இழந்தேன். உள்ளே போறேன். 512 00:46:27,785 --> 00:46:28,870 அது கேட்டுதா? 513 00:46:43,718 --> 00:46:44,594 அவ செஞ்சுட்டா. 514 00:46:44,677 --> 00:46:46,304 என்ன இது? இது நஸிரி! 515 00:46:46,387 --> 00:46:47,931 அவனை எரிங்க! செய்ங்க. 516 00:46:48,014 --> 00:46:51,601 இருங்க. ஏதோ நடக்குது. உள்ளூர்காரங்க இருக்காங்க. 517 00:46:53,311 --> 00:46:54,145 இயேசுவே... 518 00:47:03,112 --> 00:47:04,322 அவனை எரிக்கிறாங்க. 519 00:47:04,948 --> 00:47:06,741 வெளியேறுங்க, இரண்டு பேரும். 520 00:47:13,665 --> 00:47:14,499 புரிஞ்சுது. 521 00:48:39,709 --> 00:48:41,711 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 522 00:48:41,794 --> 00:48:43,796 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்