1 00:00:14,806 --> 00:00:16,892 டடாஷி ஆகி & ஷூ ஓகிமோட்டோ எழுதிய "Drops of God" மாங்காவை அடிப்படையாகக் கொண்டது. 2 00:00:32,281 --> 00:00:33,909 - மன்னிக்கவும்! - ஹேய்! 3 00:00:35,661 --> 00:00:36,828 ஃபிரான்ஸுக்கு மீண்டும் வரவேற்கிறேன்! 4 00:00:37,621 --> 00:00:38,622 முட்டாள்! 5 00:00:40,290 --> 00:00:43,293 உடையக்கூடியது 6 00:00:45,212 --> 00:00:46,213 நல்லவேளை. 7 00:01:04,438 --> 00:01:05,941 நீ வந்திருக்க வேண்டியதில்லை. மிகவும் தாமதமாகிவிட்டது. 8 00:01:08,151 --> 00:01:09,152 உன் பயணம் எப்படி இருந்தது? 9 00:01:09,736 --> 00:01:10,737 அற்புதம்! 10 00:01:13,490 --> 00:01:16,743 மன்னித்துவிடு, உனக்கு கால் செய்வதற்கு அமைதியான தருணமே கிடைக்கவில்லை. 11 00:01:18,453 --> 00:01:21,206 என்னிடம் ஒரு நல்ல செய்தி உள்ளது. 12 00:01:21,290 --> 00:01:22,374 என்ன அது? 13 00:01:23,333 --> 00:01:24,543 நம் ஒயின் இறுதிப்போட்டிக்குத் தேர்வாகிவிட்டது. 14 00:01:27,421 --> 00:01:29,756 - அது அற்புதமான விஷயம்! - என்னால் நம்ப முடியவில்லை. 15 00:01:30,924 --> 00:01:32,509 நீ அதற்குத் தகுதியானவன். பாராட்டுகள். 16 00:01:32,593 --> 00:01:33,594 நமக்குப் பாராட்டுகள்! 17 00:01:34,094 --> 00:01:35,137 நீ அதற்காக நிறைய உழைத்துள்ளாய். 18 00:01:35,637 --> 00:01:36,638 உன் அப்பா மகிழ்ச்சியாக இருக்கிறாரா? 19 00:01:37,764 --> 00:01:39,183 அவர் புன்னகை செய்ததைப் பார்த்தேன் என நினைக்கிறேன். 20 00:01:42,644 --> 00:01:43,645 உன்னை மிஸ் செய்தேன். 21 00:01:51,737 --> 00:01:53,363 போகலாம். உன் அம்மா நமக்காகக் காத்திருக்கிறார். 22 00:01:55,073 --> 00:01:56,283 இஸ்ஸேய் எப்படி இருக்கிறான்? 23 00:01:56,366 --> 00:01:57,367 நலம்தான். 24 00:01:57,993 --> 00:01:59,786 - இதை நான் எடுத்துக்கொள்ளவா? - இல்லை, பரவாயில்லை. 25 00:02:02,623 --> 00:02:04,082 - குட் ஈவ்னிங். - குட் ஈவ்னிங். 26 00:02:04,583 --> 00:02:05,626 உங்கள் பையை எடுத்துக்கொள்ளவா? 27 00:02:05,709 --> 00:02:07,419 இல்லை, பரவாயில்லை. என்னுடனேயே வைத்துக்கொள்கிறேன். 28 00:02:07,503 --> 00:02:09,295 சரி. அமருங்கள். 29 00:02:11,131 --> 00:02:12,132 நன்றி. 30 00:02:23,310 --> 00:02:25,062 நன்றி. குட்பை. 31 00:02:34,363 --> 00:02:36,490 - சர்ப்ரைஸ்! - ஹேய்! 32 00:02:37,950 --> 00:02:39,618 - உன்னை மிஸ் செய்தேன். - ஆ, நானும்தான். 33 00:02:39,701 --> 00:02:41,620 உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி. நீ நலமா? 34 00:02:41,703 --> 00:02:43,914 - பயணம் எப்படி இருந்தது? - எப்போதும் போல பிசிதான். 35 00:02:43,997 --> 00:02:46,750 நீ திரும்ப வந்ததையும், போட்டி தொடங்குவதையும் கொண்டாட விரும்பினோம். 36 00:02:46,834 --> 00:02:49,795 - நன்றி, அம்மா! - நீ அழகாக இருக்கிறாய், நன்றி. 37 00:02:49,878 --> 00:02:51,755 இதற்கு வழிகாட்டி நல்ல விமர்சனம் எழுத வேண்டும். 38 00:02:51,839 --> 00:02:54,299 எதற்கும் உறுதியளிக்க முடியாது. பார்ப்போம். 39 00:02:54,383 --> 00:02:56,134 நீ நலமா? களைப்பாக இல்லையே? 40 00:02:56,218 --> 00:03:00,222 - நலம்தான். வீட்டுக்கு வந்ததில் மகிழ்ச்சி. - வா, தாமஸ், 41 00:03:00,305 --> 00:03:03,100 உன் குன்வாய்ஸைத் திறப்போம். அதைச் சுவைக்க ஆவலாக உள்ளேன். 42 00:03:03,183 --> 00:03:05,060 இந்த பாட்டில் எங்கிருந்து கிடைத்தது? 43 00:03:05,853 --> 00:03:09,022 போட்டி நடக்கும் ஷாட்டோவில் வழிகாட்டிக்காகவும், மீட்டிங்குகளுக்காகவும் 44 00:03:09,106 --> 00:03:12,776 ஒரு ஸ்வீட் புக் செய்துள்ளோம். 45 00:03:12,860 --> 00:03:15,863 அதன் 5-நட்சத்திர கிங் அளவு படுக்கை வழிகாட்டிக்குப் பிடித்துள்ளதா? 46 00:03:16,905 --> 00:03:18,073 வழிகாட்டிக்கு படுக்கை தேவையில்லை. 47 00:03:18,991 --> 00:03:21,910 - அதற்கு ஸ்வீட்டின் மற்ற பகுதிகள் தேவை. - ஓ, உண்மைதான். 48 00:03:21,994 --> 00:03:23,412 ஆம், உண்மைதான். 49 00:03:24,246 --> 00:03:26,206 அம்மா? நீங்கள் சமைத்தீர்களா? 50 00:03:26,290 --> 00:03:28,584 இல்லை. கவலைப்படாதே. லோரென்ஸோதான் சமைத்தான். 51 00:03:28,667 --> 00:03:30,085 - நல்லவேளை. - ஆம், நான்தான். 52 00:03:30,169 --> 00:03:34,506 - ஹேய்! போதும். - நீங்களே, "கவலைப்படாதே" என்றீர்கள். 53 00:03:34,590 --> 00:03:36,091 - எனக்கும் கொஞ்சம் வையுங்கள், சரியா? - அத்தை. 54 00:03:36,175 --> 00:03:37,843 - எப்போதும். - நன்றி. 55 00:03:38,468 --> 00:03:41,430 சரி, சுவைத்துப் பார்த்து, பிடித்துள்ளதா என்று கூறுங்கள். 56 00:03:41,513 --> 00:03:42,973 உனக்கு ஓகேவா? சரி. 57 00:03:43,056 --> 00:03:44,057 பார்ப்போம். 58 00:03:45,934 --> 00:03:47,102 நான் கொஞ்சமும் பதட்டப்படவில்லை. 59 00:03:59,615 --> 00:04:00,699 மிகவும் நன்றாக உள்ளது. 60 00:04:01,450 --> 00:04:05,829 நான் நிலத்துக்கடியில், வேர்களுடன் குதிப்பது போல உள்ளது. 61 00:04:05,913 --> 00:04:07,706 நிஜமாகவே, எனக்குப் பிடித்துள்ளது. 62 00:04:07,789 --> 00:04:10,501 இது நிஜமாகவே அற்புதமாக உள்ளது. 63 00:04:10,584 --> 00:04:12,544 அற்புதமாக உள்ளது, தாமஸ். நிஜமாகவே. 64 00:04:13,712 --> 00:04:14,755 பாராட்டுகள். 65 00:04:14,838 --> 00:04:16,882 - மிக்க நன்றி. - தாமஸ். 66 00:04:19,384 --> 00:04:20,385 சொல். 67 00:04:20,469 --> 00:04:21,887 - என்ன? - அவர்களிடம் சொல். 68 00:04:25,140 --> 00:04:26,475 சரி, அது ஒரு ரகசியம். 69 00:04:26,558 --> 00:04:30,145 நான் இதைக் கூறக் கூடாது… ஆனாலும் கூறுகிறேன், 70 00:04:31,021 --> 00:04:33,857 12 இறுதிப் போட்டியாளர்களில் நாமும் ஒருவர் என்று இன்றுதான் தெரிந்தது. 71 00:04:33,941 --> 00:04:35,400 அற்புதம்! 72 00:04:35,484 --> 00:04:37,319 - வாவ்! - கண்டிப்பாக நீ தேர்வாகியிருப்பாய். 73 00:04:37,402 --> 00:04:39,446 நூறாண்டு பழமையான குன்வாய்ஸுக்கும் ஃபிலிப்பேவுக்கும்! 74 00:04:39,530 --> 00:04:40,989 மேலும் அந்தத் தங்கப் பதக்கத்திற்கும்! 75 00:04:41,073 --> 00:04:42,824 ஆம். நாங்கள் நம்புகிறோம். 76 00:04:44,785 --> 00:04:46,954 உனக்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நிஜமாகவே. 77 00:04:48,163 --> 00:04:51,583 - நீ இறுதிப் போட்டிக்கு வருவாயா? - கண்டிப்பாக வருவேன். 78 00:04:51,667 --> 00:04:53,752 அங்கே எங்களை அவமானப்படுத்த ஒருவர் தேவை. 79 00:04:53,836 --> 00:04:55,045 அவன் சொல்வதைக் கேட்காதே. 80 00:04:55,128 --> 00:04:59,132 ஜார்ஜியா எப்படி இருந்தது? 81 00:05:01,718 --> 00:05:02,719 சொல்! 82 00:05:10,602 --> 00:05:11,603 என்ன? 83 00:05:13,939 --> 00:05:14,940 நான் என்ன கூறினேன்? 84 00:05:33,917 --> 00:05:34,960 நீ அதை எடுத்து வந்துள்ளாயா? 85 00:05:35,043 --> 00:05:36,712 ஆம். ஆறு பாட்டில்கள் எடுத்து வந்துள்ளேன். 86 00:05:37,462 --> 00:05:39,131 - இதுதான் அந்த மர்மமான ஒயினா? - ஆம். 87 00:05:41,008 --> 00:05:43,468 நாம் அனைவரும் ஒன்றாக இதைக் குடிக்க வேண்டும் என நினைத்தேன். 88 00:05:43,969 --> 00:05:46,305 - சர்ப்ரைஸ். - ஆவலாக உள்ளது. 89 00:05:46,388 --> 00:05:50,225 ஆம், நிலவின் மீது காலடி வைப்பதற்கு முன்பிருந்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங் போல உணர்கிறேன். 90 00:05:51,518 --> 00:05:53,812 அவர் ஜார்ஜியாவில் காலடி வைத்ததில்லை, ஆனால்… 91 00:05:59,484 --> 00:06:00,569 நன்றி. 92 00:06:16,293 --> 00:06:17,669 ஓ. 93 00:06:36,855 --> 00:06:37,856 வாவ். 94 00:06:52,538 --> 00:06:55,332 இதன் விமர்சனம் பற்றி நீ கவலைப்பட வேண்டாம். 95 00:06:58,001 --> 00:07:00,003 இது ஒரு மடாலயத்திற்கு அருகில் உள்ள, 96 00:07:00,087 --> 00:07:03,006 மிகவும் சிறிய நிலத்தின் மீதான, மிகவும் சிறிய குடும்பத் தயாரிப்பு. 97 00:07:03,090 --> 00:07:05,843 - இந்த ஒயின் முக்கியமாக துறவிகளுக்கானது… - நான் துறவியாகப் போகிறேன். 98 00:07:07,761 --> 00:07:11,473 குடும்பப் பார்ட்டிகளுக்கும்தான். 99 00:07:14,685 --> 00:07:17,604 நாம் ஜார்ஜியாவுக்காக ஒரு சிறப்புப் பதிப்பை உருவாக்கி, 100 00:07:17,688 --> 00:07:19,439 அதன் அட்டைப் படத்தில் இந்த ஒயினை வைக்க வேண்டும். 101 00:07:22,651 --> 00:07:24,111 அடச்சே. 102 00:07:24,194 --> 00:07:26,947 அட்டையில் இந்த ஒயின், பிறகு 1,200 வெற்றுப் பக்கங்கள். 103 00:07:28,907 --> 00:07:30,284 அதன் பிறகு வரும் ஆண்டுகளில், 104 00:07:31,618 --> 00:07:32,870 வழிகாட்டி கிடையாது, 105 00:07:32,953 --> 00:07:35,372 ஓவியங்கள் கிடையாது, 106 00:07:36,290 --> 00:07:37,291 இசை கிடையாது, 107 00:07:38,917 --> 00:07:39,918 புத்தகங்கள் கிடையாது… 108 00:07:42,421 --> 00:07:44,006 இந்த ஒயின் மட்டும் போதும். 109 00:07:49,761 --> 00:07:50,971 மன்னித்துவிடு, தாமஸ். 110 00:07:52,931 --> 00:07:54,183 உன் குன்வாஸ் அற்புதமானதுதான்… 111 00:07:56,226 --> 00:07:57,227 ஆனால் இது… 112 00:07:57,811 --> 00:07:58,896 எனக்குத் தெரியும். 113 00:08:04,151 --> 00:08:05,903 இது அடுத்த ஆண்டிலிருந்து இருக்காது. 114 00:08:08,488 --> 00:08:09,489 ஏன்? 115 00:08:10,240 --> 00:08:11,491 அவர்கள் திராட்சைக் கொடிகளை வெட்டப் போகின்றனர். 116 00:08:15,495 --> 00:08:17,456 சிக்கலான குடும்பப் பிரச்சினை. 117 00:08:18,874 --> 00:08:21,126 உரிமையாளரைச் சமாதானப்படுத்த முயன்றோம், 118 00:08:22,169 --> 00:08:23,170 ஆனால் வேலை செய்யவில்லை. 119 00:08:23,670 --> 00:08:25,506 இந்த ஒயின் அழிந்துபோக விடக் கூடாது. 120 00:08:26,924 --> 00:08:28,509 அது நடக்கக் கூடாது. 121 00:08:29,801 --> 00:08:30,802 எனக்குத் தெரியும். 122 00:08:39,186 --> 00:08:42,105 டோக்கியோ 123 00:08:59,248 --> 00:09:02,292 பாஸ், நீங்கள் திரும்பி வந்தது எனக்குத் தெரியாது! 124 00:09:03,126 --> 00:09:04,419 இவையெல்லாம் என்ன? 125 00:09:04,503 --> 00:09:06,338 நீங்கள் இல்லாதபோது இவையெல்லாம் வந்தன. 126 00:09:07,506 --> 00:09:09,508 உங்கள் ஐரோப்பா பயணம் நன்றாக முடிந்ததா? 127 00:09:10,884 --> 00:09:12,678 ஆம். ஓரளவு. 128 00:09:13,846 --> 00:09:16,098 மிகவும் அவசரமான விஷயங்கள் பற்றி விரைவாகக் கூறவா? 129 00:09:20,310 --> 00:09:23,021 அர்டெமிஸ் டொமைனிலிருந்து தேர்வைப் பெற்றுள்ளோம்… 130 00:09:24,898 --> 00:09:27,651 ஷாட்டோ-க்ரியே 2022 பற்றிய உங்கள் கருத்துக்காக அவர்கள் காத்திருக்கின்றனர். 131 00:09:28,151 --> 00:09:30,153 மேலும், சிங்கப்பூரைச் சேர்ந்த திரு. லிம் அவர்களுக்கு 132 00:09:30,237 --> 00:09:34,533 சர்வதேச நிதி கவுன்சிலுக்கான அவரது ஒயின் தேர்வு பற்றி ஆலோசனை கூறுவதாக உறுதியளித்துள்ளீர்கள். 133 00:09:34,616 --> 00:09:36,201 அவர் உங்கள் அழைப்பை எதிர்பார்த்திருக்கிறார். 134 00:09:36,285 --> 00:09:39,830 மேலும் உங்கள் புத்தகத்திலிருந்து சில உரைகளைச் சரிபார்க்க எடிட்டரை நீங்கள் பார்க்க வேண்டும். 135 00:09:39,913 --> 00:09:41,874 கார்க் சோதனைகளின் முடிவுகள் பற்றிய உங்கள் கருத்துக்காக 136 00:09:41,957 --> 00:09:43,500 ஷாட்டோ டு லா லிக்யேர் காத்திருக்கிறது. 137 00:09:43,584 --> 00:09:45,335 மைக்கேல் கெனெட் ஷாம்பெய்னின் இறுதிக் கலவைக்காக 138 00:09:45,419 --> 00:09:47,796 சில ஒயின் சாம்பிள்கள் வந்துள்ளன. 139 00:09:48,297 --> 00:09:50,507 லண்டனில் உள்ள ரெட் உணவகத்திற்கும் நீங்கள் பதிலளிக்க… 140 00:09:50,591 --> 00:09:51,675 மன்னிக்கவும். 141 00:09:52,676 --> 00:09:55,220 என் அம்மாவின் முகவரியை உன்னால் கண்டுபிடிக்க முடியுமா? அவரது தனிப்பட்ட முகவரி. 142 00:09:56,096 --> 00:09:59,766 எனக்காக என்று சொல்லாதே. இது ஒரு சர்ப்ரைஸ். 143 00:10:02,186 --> 00:10:03,187 நிச்சயமாக. 144 00:10:36,637 --> 00:10:37,763 அதற்குள் விழித்துவிட்டாயா? 145 00:10:37,846 --> 00:10:38,889 ஆம். 146 00:10:38,972 --> 00:10:40,140 சில அப்பாயின்ட்மென்ட்கள் உள்ளன. 147 00:10:40,849 --> 00:10:41,850 நான் போக வேண்டும். 148 00:10:42,434 --> 00:10:43,685 டீ குடிக்கக் கூட நேரமில்லையா? 149 00:10:43,769 --> 00:10:44,978 இல்லை, மன்னித்துவிடுங்கள், அம்மா. 150 00:10:46,104 --> 00:10:47,439 - இன்றிரவு சந்திக்கலாமா? - சரி. 151 00:11:07,000 --> 00:11:08,001 நன்றி. 152 00:11:10,170 --> 00:11:12,297 - குட் மார்னிங், மேடம் லெஜர். - குட் மார்னிங். 153 00:11:20,722 --> 00:11:22,766 - குட் மார்னிங், மேடம் லெஜர். உங்கள் பேட்ஜ். - குட் மார்னிங். 154 00:11:22,850 --> 00:11:24,101 - நன்றி. - என் பின்னே வாருங்கள். 155 00:11:24,184 --> 00:11:25,727 திருமதி ஹெர்ட்ஸ்போர்க் உங்களுக்காகக் காத்திருக்கிறார். 156 00:11:25,811 --> 00:11:27,396 முதல் விண்டேஜ் போட்டி 2024 157 00:11:43,662 --> 00:11:44,705 உள்ளே வாருங்கள். 158 00:11:48,417 --> 00:11:49,459 நன்றி. 159 00:11:49,543 --> 00:11:50,878 நன்றி, சோஃபி. 160 00:11:51,795 --> 00:11:52,796 ஹாய், கமில். 161 00:11:52,880 --> 00:11:55,090 - காஃபி? - ஹாய், அனிடா. இல்லை, பரவாயில்லை. 162 00:11:58,969 --> 00:12:00,679 என்னைச் சந்திப்பதற்கு நன்றி. 163 00:12:00,762 --> 00:12:04,725 வற்புறுத்தியதற்கு வருந்துகிறேன், ஆனால் இது மிகவும் முக்கியமானது. 164 00:12:05,559 --> 00:12:06,560 அப்படித்தான் நம்புகிறேன்! 165 00:12:11,940 --> 00:12:12,941 என்ன விஷயம் என்று கூறுங்கள். 166 00:12:14,151 --> 00:12:15,986 ஒயின் மீதான நம்பிக்கை மற்றும் அதை உற்பத்தி செய்பவர்களைவிட 167 00:12:16,486 --> 00:12:18,071 அதிக மார்க்கெட்டிங் இருக்கும் இந்த உலகில், 168 00:12:18,155 --> 00:12:20,616 உங்கள் நிலைப்பாட்டையும் இந்தப் போட்டி மூலம் உங்களால் சாதிக்க முடிந்தவற்றையும் 169 00:12:20,699 --> 00:12:22,201 நான் பாராட்டுகிறேன். 170 00:12:22,701 --> 00:12:23,702 நீங்கள் என்னைக் கவலையுறச் செய்கிறீர்கள்… 171 00:12:24,203 --> 00:12:25,412 மேலும் விதிகளையும் நடைமுறைகளையும் 172 00:12:25,495 --> 00:12:27,497 மாற்றும் உங்கள் திறமையும் எனக்குப் பிடிக்கும். 173 00:12:30,459 --> 00:12:32,169 தேர்வு முடிந்துவிட்டது எனத் தெரியும், 174 00:12:32,252 --> 00:12:35,631 ஆனால் இந்த ஒயினை இறுதிப் போட்டியில் இடம்பெறச் செய்ய விரும்புகிறேன். 175 00:12:40,052 --> 00:12:41,053 ஓ, நேரடியாக. 176 00:12:42,930 --> 00:12:45,390 அனிடா, நான் கூறுவதை நம்புங்கள், 177 00:12:45,474 --> 00:12:48,185 என் வாழ்க்கையில் நான் சுவைத்ததிலேயே மிகவும் அற்புதமான ஒயின் இதுதான். 178 00:12:48,810 --> 00:12:52,648 என் அப்பாவும் அப்படித்தான் நினைத்தார், ஆனால் அவரால் இதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 179 00:12:52,731 --> 00:12:54,816 ஆனால் இஸ்ஸேய் டொமினேவுடன், இதை ஜார்ஜியாவில் கண்டுபிடித்தோம். 180 00:12:56,527 --> 00:12:58,195 ஆனால், சீக்கிரமே இது இல்லாமல் போய்விடும். 181 00:12:59,154 --> 00:13:00,864 அது கண்டிப்பாக அற்புதமான கதைதான், 182 00:13:01,740 --> 00:13:02,908 ஆனால் அதில் எந்தப் பலனும் இல்லை. 183 00:13:04,117 --> 00:13:06,662 இந்த மாத இறுதியில் திராட்சைக் கொடிகள் அனைத்தும் அழிக்கப்படும். 184 00:13:06,745 --> 00:13:09,665 இந்த ஒயின் போட்டியில் இடம்பெற்றால், இது வெற்றிபெறும், 185 00:13:09,748 --> 00:13:11,917 - இதன் உரிமையாளர் தன் திட்டங்களைக் கைவிடுவார். - எனில் சஸாங்ரே ஒயின்? 186 00:13:12,000 --> 00:13:13,961 பதக்கம் வெல்ல அது போதுமான வாய்ப்பாக இல்லையா? 187 00:13:14,044 --> 00:13:17,172 சஸாங்ரே ஒயின் வென்றாலும் தோற்றாலும் வெற்றிகரமானதாக இருக்கும். 188 00:13:17,673 --> 00:13:20,592 ஆனால் இந்த ஒயின் அழிந்துவிடும். 189 00:13:27,516 --> 00:13:29,142 நீங்கள் உங்கள் அப்பாவைப் போலத்தான் இருக்கிறீர்கள். 190 00:13:34,231 --> 00:13:36,316 ஆனால் இங்கே விதிகளை இயற்றுவது லெஜர் குடும்பத்தினர் இல்லை. 191 00:13:37,693 --> 00:13:38,777 இல்லை, அது நீங்கள்தான். 192 00:13:39,486 --> 00:13:42,447 இத்தனை ஒயின்தான் இறுதிப் போட்டியில் இருக்க வேண்டும் என நீங்கள் தீர்மானிக்கவில்லை. 193 00:13:43,115 --> 00:13:44,533 உங்களால் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க முடியவில்லை எனில் அதற்கு என்ன அர்த்தம்? 194 00:13:44,616 --> 00:13:46,618 இன்னொரு ஒயினை ஏன் சேர்க்க மறுக்கிறீர்கள்? 195 00:13:46,702 --> 00:13:48,829 அறம். அது உங்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. 196 00:13:48,912 --> 00:13:49,913 அறம். 197 00:13:51,164 --> 00:13:53,041 விதியைப் பின்பற்றுவதைவிட அழியவிருக்கும் பொக்கிஷத்தைக் 198 00:13:53,125 --> 00:13:54,209 காப்பாற்றுவதுதானே அறம்? 199 00:13:55,377 --> 00:13:56,503 உங்கள் பாட்டிலை எடுத்துச் செல்லலாம். 200 00:14:00,090 --> 00:14:03,010 இதைச் சுவைத்துப் பார்த்து, முடிவெடுங்கள். 201 00:14:04,011 --> 00:14:05,762 எனக்காக அதை மட்டும் செய்யுங்கள். 202 00:14:05,846 --> 00:14:09,933 பிறகு இதற்கு பதக்கத்தைக் கொடுக்க, நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுக்கப் போகிறீர்களா? 203 00:14:10,934 --> 00:14:13,478 நீதிபதிகள் இதைச் சுவைத்தால், இதுதான் வெல்லும். 204 00:14:13,562 --> 00:14:15,522 கண்டிப்பாக. அதில் சந்தேகமில்லை. 205 00:14:16,190 --> 00:14:17,816 நான் கூறியது தவறு, நீங்கள் உங்கள் அப்பாவைப் போல இல்லை. 206 00:14:17,900 --> 00:14:19,776 குறைந்தபட்சம் அவரது ஆணவம் அவரது புத்திசாலித்தனத்தை மறைக்கவில்லை. 207 00:14:21,904 --> 00:14:23,113 என் அப்பாயிண்ட்மெண்ட் வந்துவிட்டார். 208 00:14:24,489 --> 00:14:27,492 உங்களுக்கு இந்த ஒயினை மிகவும் பிடித்திருந்தால், உங்கள் வழிகாட்டியில் விளம்பரப்படுத்துங்கள். 209 00:14:27,576 --> 00:14:31,205 இதைக் காப்பாற்ற அது போதவில்லை எனில், உலகம் ஒன்றும் அழிந்துவிடாது. 210 00:14:32,706 --> 00:14:33,707 உள்ளே வாருங்கள். 211 00:14:36,210 --> 00:14:37,669 ஹலோ, அனிடா. 212 00:14:39,963 --> 00:14:41,715 யார் வந்துள்ளது. 213 00:14:43,133 --> 00:14:44,343 கமில். 214 00:14:45,719 --> 00:14:48,013 - நீங்கள் நலமா? - அவர் புறப்படுகிறார். 215 00:14:56,939 --> 00:14:59,024 நீங்கள் அறம் கொண்ட நபருடன் இருங்கள். 216 00:15:05,280 --> 00:15:06,323 இந்தப் பக்கம், லூகா. 217 00:15:09,701 --> 00:15:11,995 - அவர் இங்கே இருப்பது உனக்குத் தெரியுமா? - ஆம். 218 00:15:13,705 --> 00:15:17,334 ஸ்பான்சராக இருக்கும் கிளாரென்ஸியா குழுமத்தை அவர் வாங்கியுள்ளார். 219 00:15:18,627 --> 00:15:19,878 உனக்குத் தெரியும் என நினைத்தேன். 220 00:15:19,962 --> 00:15:20,963 தெரியாது. 221 00:15:22,172 --> 00:15:25,425 அவர் என் சொத்தை அபகரிக்க முயன்றதிலிருந்து, அவரைப் பற்றி எதுவும் கேட்பதில்லை. 222 00:15:27,553 --> 00:15:28,846 அது எனக்குப் பிடிக்கவில்லை. 223 00:15:29,346 --> 00:15:31,557 இவர்கள் அனைவரையும் எனக்குப் பிடிக்கவில்லை. இந்தப் போட்டியே முட்டாள்தனமானது. 224 00:15:32,724 --> 00:15:35,519 என் அப்பா ஏன் இவர்கள் அனைவரையும் வெறுத்தார் என்று இப்போது புரிகிறது. 225 00:15:36,311 --> 00:15:40,023 நீ அதை விட வேண்டும். 226 00:15:41,108 --> 00:15:46,572 நீ செய்ய முயன்றது அழகான விஷயம், ஆனால் நீ மிகவும் ஈடுபாட்டுடன் இருக்கிறாய். 227 00:15:47,239 --> 00:15:48,949 இந்த ஒயினுக்காக நாம் போராட வேண்டும் என்று கூறினாய். 228 00:15:49,032 --> 00:15:50,450 உண்மையாகத்தான் கூறினேன். 229 00:15:51,118 --> 00:15:52,369 ஆனால் நம்மிடம் அதற்கான வளங்கள் இல்லை. 230 00:15:55,747 --> 00:15:58,584 என் அப்பா எப்படிப்பட்டவராக இருந்திருந்தாலும், அவர் இதை நடக்கவிட்டிருக்க மாட்டார். 231 00:15:59,877 --> 00:16:01,086 அவர் என்ன செய்திருப்பார்? 232 00:16:06,717 --> 00:16:07,843 என்ன? 233 00:16:12,431 --> 00:16:13,640 அந்தக் கத்தியை என்னிடமிருந்து மறைத்து வை. 234 00:16:14,892 --> 00:16:18,979 கமில் மற்றும் எனக்குப் பிடித்த என் மருமகன், இரட்டிப்பு மகிழ்ச்சி, 235 00:16:20,647 --> 00:16:22,566 நீ அந்த ஒயினைக் கண்டுபிடித்துவிட்டாய். 236 00:16:23,817 --> 00:16:25,444 அருமை, நான் பாராட்டுகிறேன். 237 00:16:26,153 --> 00:16:28,447 - மிக்க மகிழ்ச்சி. - நிஜமாகத்தான். 238 00:16:28,947 --> 00:16:31,408 உன் அப்பாவும் நானும் அதை பல ஆண்டுகள் தேடினோம். 239 00:16:31,992 --> 00:16:35,204 உலகம் முழுவதும் பயணித்தோம். அதைக் கண்டுபிடித்துவிட்டதாக பல முறை நினைத்தோம். 240 00:16:35,704 --> 00:16:37,831 ஜார்ஜியாவில் கண்டுபிடித்தாய் என்று அனிடா கூறினார். 241 00:16:39,208 --> 00:16:40,834 நாங்கள் அங்கேயும் தேடினோம். 242 00:16:42,753 --> 00:16:44,922 அது எந்தப் பகுதியைச் சேர்ந்தது? 243 00:16:45,881 --> 00:16:46,882 குரா பள்ளத்தாக்கா? 244 00:16:48,550 --> 00:16:50,385 நீ இப்போது என்னிடம் கூறலாம். 245 00:16:50,469 --> 00:16:52,054 நீயே விரைவில் தெரிந்துகொள்வாய். 246 00:16:52,137 --> 00:16:53,138 இனிய நாளாக இருக்கட்டும். 247 00:16:53,639 --> 00:16:55,766 கமில், நான் சொல்வதைக் கேள். 248 00:16:58,018 --> 00:17:01,271 நீ என் மீது கோபமாக இருப்பது தெரியும், ஆனால் உன்னால் மட்டும் இந்த ஒயினைக் காப்பாற்ற முடியாது. 249 00:17:02,356 --> 00:17:04,983 நமக்குள் இருக்கும் முரண்பாடுகளை மறந்துவிட்டு, ஒன்றாக வேலை செய்ய வேண்டும். 250 00:17:11,949 --> 00:17:13,367 அவளைத் தொந்தரவு செய்யாதீர்கள். 251 00:17:14,284 --> 00:17:15,911 நீ அவளது பாதுகாவலனா? 252 00:17:29,800 --> 00:17:31,593 - அப்படியானால்? - என்ன? 253 00:17:32,219 --> 00:17:34,179 உன் அப்பா என்ன செய்திருப்பார்? 254 00:17:34,263 --> 00:17:35,264 அதை விடு. 255 00:17:35,347 --> 00:17:36,431 கமான், சொல். 256 00:17:41,770 --> 00:17:43,605 அவர் டமாரின் ஒயினை நமது ஒயினுக்கு பதிலாக மாற்றியிருப்பார். 257 00:17:45,899 --> 00:17:48,569 அவர் வென்றதும், என்ன கூறியிருப்பார் எனில், 258 00:17:48,652 --> 00:17:51,363 "ஒரு விலைமதிப்பற்ற பொக்கிஷத்தைக் காப்பாற்ற எனது ஒயினை தியாகம் செய்தேன். 259 00:17:51,446 --> 00:17:53,782 அதுதான் தொடக்கத்திலிருந்தே வழிகாட்டியின் நோக்கம், பிளா, பிளா, பிளா." 260 00:17:55,826 --> 00:17:57,286 நீ அதை தாமஸுக்குச் செய்யக் கூடாது. 261 00:17:57,953 --> 00:17:59,538 கண்டிப்பாக மாட்டேன்! உனக்கு என்ன பிரச்சினை? 262 00:18:00,038 --> 00:18:01,623 என் அப்பா என்ன செய்திருப்பாரோ அதைத்தான் கூறினேன். 263 00:18:02,207 --> 00:18:03,208 சரி. 264 00:18:06,962 --> 00:18:08,213 இல்லையெனில்… 265 00:18:10,465 --> 00:18:11,466 இல்லையெனில், என்ன? 266 00:18:13,510 --> 00:18:17,264 அவர் இன்னொரு இறுதிப் போட்டியாளரைக் கண்டுபிடித்து, இதைச் செய்யும்படி வற்புறுத்தியிருப்பார். 267 00:18:20,225 --> 00:18:21,476 யாரும் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். 268 00:18:22,811 --> 00:18:23,812 ஆம். 269 00:18:24,938 --> 00:18:28,025 மேலும், நமக்கு மற்ற இறுதிப் போட்டியாளர்களைத் தெரியாது. 270 00:18:28,609 --> 00:18:29,610 ஆம். 271 00:18:32,237 --> 00:18:34,364 - ஹேய். - ஹாய். நீ நன்றாக உறங்கினாயா? 272 00:18:34,448 --> 00:18:36,158 - நீ நலமா? - ஆம். எப்படி இருக்கிறாய்? 273 00:18:36,241 --> 00:18:37,242 நலம். 274 00:18:37,326 --> 00:18:38,452 உன்னை எல்லா இடங்களிலும் தேடினேன். 275 00:18:38,535 --> 00:18:40,078 - ஒரு அப்பாயிண்ட்மெண்ட் உள்ளது. நாம் போக வேண்டும். - ஆம், மன்னிக்கவும். 276 00:18:40,162 --> 00:18:42,122 - பிறகு சந்திப்போம். சரி. பை. - ஆம், பிறகு சந்திக்கலாம். 277 00:18:42,206 --> 00:18:43,207 பிறகு சந்திக்கலாம். 278 00:18:44,124 --> 00:18:46,752 - நீ நலமா? - ஆம், ஆனால் ஏன் எனக்காகக் காத்திருக்கவில்லை? 279 00:18:47,252 --> 00:18:48,295 மன்னித்துவிடு. 280 00:18:48,378 --> 00:18:51,590 பயணக் களைப்பால் சீக்கிரம் எழுந்துவிட்டேன், நீ நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாய். 281 00:18:53,926 --> 00:18:56,053 - நீ நலமா? - ஆம். 282 00:18:58,388 --> 00:18:59,556 ஏன்? 283 00:19:01,600 --> 00:19:02,601 கமில், 284 00:19:03,310 --> 00:19:04,937 ஜார்ஜியாவில் என்ன நடந்தது? 285 00:19:06,355 --> 00:19:07,606 நான்தான் கூறினேனே. 286 00:19:08,982 --> 00:19:10,984 - அனைத்தையுமா? - அனைத்தையும்தான். 287 00:19:15,864 --> 00:19:18,116 மியூரியல் டெலடூஷ் நம்மை இன்னும் ஒரு மணிநேரத்தில் பேட்டி எடுக்க விரும்புகிறார். 288 00:19:19,117 --> 00:19:21,411 ஆம். ஆனால் உனக்குப் பிடிக்கவில்லை எனில்… 289 00:19:21,495 --> 00:19:22,621 இல்லை, நான் வருகிறேன். 290 00:19:22,704 --> 00:19:23,997 - நிச்சயமாகவா? - ஆம். 291 00:19:24,081 --> 00:19:25,165 நான் இனிமையாக நடந்துகொள்கிறேன். 292 00:19:29,253 --> 00:19:30,546 சரி. 293 00:19:30,629 --> 00:19:32,422 நாம் ஸ்டாண்டில் ஒன்றைப் பார்க்க வேண்டும். 294 00:19:50,065 --> 00:19:54,736 - யார்? - குட் ஈவ்னிங், திருமதி கீனு. நான் இஸ்ஸேய். 295 00:19:56,405 --> 00:19:57,865 குட் ஈவ்னிங், இஸ்ஸேய். 296 00:19:57,948 --> 00:19:59,700 உங்கள் அம்மா இங்கே இல்லை. 297 00:20:00,742 --> 00:20:02,411 அவர் எப்போது திரும்பி வருவார் எனத் தெரியுமா? 298 00:20:02,494 --> 00:20:03,871 இல்லை… அவர் கூறவில்லை. 299 00:20:05,414 --> 00:20:07,332 அவரிடம் எதுவும் கூற வேண்டுமா? 300 00:20:08,792 --> 00:20:12,004 இல்லை. நான் பிறகு வருகிறேன். நன்றி. 301 00:20:46,330 --> 00:20:49,374 மன்னிக்கவும், நான் தாமதமாக வந்துவிட்டேன். உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 302 00:20:49,458 --> 00:20:50,459 எனக்கும்தான். 303 00:20:51,293 --> 00:20:54,046 இந்தப் போட்டி பற்றி ஒரு சிறிய அறிக்கை எழுதுகிறேன், 304 00:20:54,129 --> 00:20:56,965 மேலும் அதில் சில ஒயின் தயாரிப்பாளர்களிடம் பேட்டி எடுக்கப் போகிறேன். 305 00:20:58,258 --> 00:20:59,885 ஃபிலிப் சஸாங்ரே இங்கு வந்துள்ளாரா? 306 00:21:00,594 --> 00:21:03,222 இல்லை, என் அப்பாவுக்கும் போட்டிகளுக்கும்… 307 00:21:03,305 --> 00:21:04,348 அவ்வளவாக ஒத்துப் போவதில்லை. 308 00:21:04,431 --> 00:21:06,600 இந்த ஆண்டுப் பதிப்புக்குத்தான் இழப்பு. 309 00:21:07,184 --> 00:21:09,853 அதாவது, உங்கள் குன்வாய்ஸுக்கு… இல்லையா? 310 00:21:11,939 --> 00:21:13,482 உங்களுக்குத் தெரியும். 311 00:21:16,485 --> 00:21:18,403 இதுதான் கனவு. 312 00:21:18,487 --> 00:21:22,491 சில ஆண்டுகளுக்கு முன்பு, என் அப்பாவும் நானும் இதைப் பற்றிப் பேசினோம்… 313 00:21:24,159 --> 00:21:27,496 - என் தாத்தா குன்வாய்ஸை விதைத்தார்… - மன்னிக்கவும், என் அம்மா மீண்டும் தொலைந்துவிட்டார். 314 00:21:27,579 --> 00:21:28,622 அவருக்கு கால் செய்ய வேண்டும். 315 00:21:28,705 --> 00:21:30,541 - மன்னிக்கவும். நான் வந்துவிடுகிறேன். - சரி. 316 00:21:33,752 --> 00:21:34,753 இது எப்படி உள்ளது? 317 00:21:38,298 --> 00:21:39,675 - என்ன நினைக்கிறாய்? - என்ன? 318 00:21:39,758 --> 00:21:41,301 மியாபியிடமிருந்து விலகி வா. 319 00:21:43,303 --> 00:21:45,889 - சரி. - உன் இடதுபுறம் பார். 320 00:21:47,766 --> 00:21:49,893 - நான் தெரிகிறேனா? கதவருகில்? - ஆம். 321 00:21:50,394 --> 00:21:54,982 சஸாங்ரே ஸ்டாண்டில் டெலடூஷ் இருக்கிறார். நாம் இறுதிப் போட்டியாளர் என்று அவருக்கு தெரிந்துள்ளது. 322 00:21:55,858 --> 00:21:58,235 - சரி. - அவருக்கு பிறரையும் தெரிந்திருக்கும். 323 00:21:58,318 --> 00:21:59,987 அவர் அவர்கள் மீது கவனம் செலுத்துவார். 324 00:22:01,071 --> 00:22:02,781 அவரை நாம் பின்தொடர்ந்தால், இறுதிப் போட்டியாளர் பட்டியல் கிடைத்துவிடும். 325 00:22:04,241 --> 00:22:06,660 என்னால் முடியாது, ஏனெனில் நான் தாமஸுடன் இருக்க வேண்டும். 326 00:22:07,661 --> 00:22:09,454 நிஜமாகக் கூறுகிறாயா? 327 00:22:11,123 --> 00:22:12,124 ஆம். 328 00:22:15,627 --> 00:22:16,628 சரி. 329 00:22:17,421 --> 00:22:19,965 நமக்கு ஒரு இறுதிப் போட்டியாளர் கிடைத்ததும், அவரை எப்படி சம்மதிக்க வைப்பது? 330 00:22:20,465 --> 00:22:21,466 பார்ப்போம். 331 00:22:22,134 --> 00:22:25,596 சரி, நான் மியாபியை விட்டுத் தனியாகச் செல்ல வேண்டும். 332 00:22:25,679 --> 00:22:27,931 சரி, அம்மா, நான் போக வேண்டும். பிறகு பார்க்கலாம். 333 00:22:31,977 --> 00:22:37,441 அது எனக்குக் கடினமாக இருக்கும். இப்போது பிசியாக இருக்கிறேன். 334 00:22:51,872 --> 00:22:54,208 திரு. லோபெஸ், நான் மியூரியல் டெலடூஷ். 335 00:22:54,291 --> 00:22:55,709 உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. 336 00:22:56,210 --> 00:22:57,503 உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி, சார். 337 00:22:58,587 --> 00:23:02,883 எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தாராளமாக. அதற்குத்தான் நான் வந்துள்ளேன். 338 00:23:02,966 --> 00:23:05,552 டொமைன் சஸாங்ரே பொடேகோ ஹுவான் லோபெஸ் 339 00:23:09,348 --> 00:23:10,474 சரி, நான் புறப்படுகிறேன்… 340 00:23:10,557 --> 00:23:12,184 இது ஸ்டேக்குடன் நன்றாக இருக்கும். 341 00:23:20,317 --> 00:23:21,568 பை. 342 00:23:21,652 --> 00:23:23,862 விரைவில் சந்திப்போம். நான் போக வேண்டும். 343 00:23:30,661 --> 00:23:33,830 டொமெயின் மான்ட்ரோஸியெர் 344 00:23:33,914 --> 00:23:34,957 டொமெயின் டி-ஓயினோஸ் 345 00:23:35,040 --> 00:23:37,084 பர் சே வைன்ஸ் ஜூசெப்பே குவிந்தரெல்லி 346 00:23:37,167 --> 00:23:39,169 டொமெயின் ஜாக் செலோஸ் ப்ரோம் ஒயினரி 347 00:23:39,253 --> 00:23:41,088 டொமெயின் ஒய். கிளெர்கெட் டொமெயின் எஃப். மெர்லின் 348 00:23:41,171 --> 00:23:43,006 என்ன செய்கிறாய்? 349 00:23:43,966 --> 00:23:45,133 ஒயின்களைச் சுவைக்கிறேன். 350 00:23:45,217 --> 00:23:46,260 மிகவும் அருமை. 351 00:23:47,261 --> 00:23:50,097 இல்லை, நீ அந்தப் பத்திரிக்கையாளரைப் பின்தொடர்ந்துகொண்டிருக்கிறாய். ஏன்? 352 00:23:50,889 --> 00:23:52,182 நான் யாரையும் பின்தொடரவில்லை. 353 00:23:54,434 --> 00:23:55,894 நீ என்ன செய்கிறாய் எனத் தெரியவில்லை. 354 00:23:56,395 --> 00:23:57,396 ஆனால் எனக்கு அது பிடிக்கவில்லை. 355 00:23:58,397 --> 00:23:59,857 வா. நாம் ஃபோட்டோஷூட்டுக்குப் போக வேண்டும். 356 00:23:59,940 --> 00:24:01,650 - என்ன, இப்போதா? - ஆம். 357 00:24:42,316 --> 00:24:45,694 - நீயும் சாப்பிட விரும்பவில்லையா? - எனக்குப் பசிக்கவில்லை. 358 00:24:49,406 --> 00:24:50,407 நீ இளைத்திருக்கிறாய். 359 00:24:55,829 --> 00:24:57,873 இங்கே மருத்துவரைப் பார்த்தாயா? 360 00:24:59,583 --> 00:25:02,586 இல்லை. ஆனால் இப்போது நலமாக இருக்கிறேன். 361 00:25:18,602 --> 00:25:22,356 நான் அப்படி உணர்ந்ததற்கு வருந்துகிறேன். 362 00:25:26,527 --> 00:25:28,070 கமில் எப்படி இருக்கிறாள்? 363 00:25:30,364 --> 00:25:33,200 வழக்கம் போலத்தான். பிடிவாதத்துடன் இருக்கிறாள். 364 00:25:40,832 --> 00:25:41,834 அது… 365 00:25:43,919 --> 00:25:45,796 அங்கே எனக்கு ஒரு விநோதமான கனவு வந்தது. 366 00:25:47,089 --> 00:25:48,340 அது ஒருவேளை எனக்கு வரும் காட்சியாக இருக்கலாம். 367 00:25:50,092 --> 00:25:52,302 அந்த டைவிங் விபத்தால் வந்திருக்கலாம். 368 00:26:03,230 --> 00:26:09,111 அது நான் கிட்டத்தட்ட மூழ்கிய நாள். 369 00:26:11,864 --> 00:26:12,865 ஓகினாவாவில். 370 00:26:15,367 --> 00:26:16,994 ஆனால் எனக்கு வந்த காட்சியில், 371 00:26:18,328 --> 00:26:20,205 நினைவில்… 372 00:26:23,750 --> 00:26:25,878 என் அம்மாவின் கை என்னை தண்ணீருக்குள் அழுத்தியதை உணர்ந்தேன். 373 00:26:27,337 --> 00:26:30,799 அவள் உனக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க முயன்றாள், நீ கைதவறி மூழ்கிவிட்டாய். 374 00:26:32,259 --> 00:26:37,389 அவள்தான் உன்னை தண்ணீரிலிருந்து தூக்கிக் காப்பாற்றினாள். 375 00:26:41,143 --> 00:26:42,144 இல்லை. 376 00:26:44,521 --> 00:26:46,607 அவர்தான் என்னை தண்ணீருக்குள் அழுத்தினார். 377 00:26:48,025 --> 00:26:49,443 மேலே வர முடியாமல் தடுத்தார். 378 00:26:50,611 --> 00:26:52,237 அது ஒரு கெட்ட கனவு. 379 00:26:53,405 --> 00:26:54,615 நடந்தது அது இல்லை. 380 00:26:58,952 --> 00:27:00,329 அது நிச்சயமாக விபத்துதானா? 381 00:27:00,412 --> 00:27:01,705 போதும் நிறுத்து. 382 00:27:08,253 --> 00:27:09,254 சொல்லுங்கள், அப்பா. 383 00:27:13,842 --> 00:27:16,303 நடக்காத விஷயத்தை கற்பனை செய்வதை நிறுத்து. 384 00:27:18,972 --> 00:27:20,474 உனக்கு உன் அம்மாவைப் பற்றித் தெரியாது. 385 00:27:23,435 --> 00:27:24,436 சரியா? 386 00:27:46,416 --> 00:27:47,417 மன்னிக்கவும்… 387 00:27:48,293 --> 00:27:51,088 மியாபி என்னை ஃபோட்டோஷூட்டுக்குக் கூட்டிச் சென்றுவிட்டாள். 388 00:27:52,172 --> 00:27:53,173 சரி… 389 00:27:53,715 --> 00:27:56,885 என்னிடம் பத்து பேரின் பெயர்கள் உள்ளன. 390 00:27:57,636 --> 00:27:58,846 - சரி. - உள்ளே வா. 391 00:28:01,598 --> 00:28:02,683 ஓ, வாவ். 392 00:28:02,766 --> 00:28:03,767 என்ன? 393 00:28:04,768 --> 00:28:05,811 ஒன்றுமில்லை. 394 00:28:06,728 --> 00:28:07,771 எனவே… 395 00:28:09,398 --> 00:28:12,025 நம்மிடம் குன்வாஸ் டெ சஸாங்ரே உள்ளது, கண்டிப்பாக. 396 00:28:12,109 --> 00:28:15,404 பொடேகா ஹுவான் லோபெஸ், டொமெயின் ஜான்-மிஷெல் ஜெரான், 397 00:28:15,487 --> 00:28:17,573 டொமெயின் மான்ட்ரோஸியெர், கேலிபெர் 12, 398 00:28:17,656 --> 00:28:19,867 - டொமெயின் டி-ஒயினோஸ் கிளோஸ் ஸ்டெகாஸ்டா… - இரு, மன்னிக்கவும். 399 00:28:25,247 --> 00:28:28,292 ஹெரெ டெ லா ஃப்ரோன்டெராவைச் சேர்ந்த ஹுவான் லோபெஸா? 400 00:28:28,375 --> 00:28:29,877 இஸ்ஸேய் இந்த ஒயின் பற்றிக் கூறினான். 401 00:28:29,960 --> 00:28:31,086 ஆம், அது சின்ஸால்ட். 402 00:28:32,337 --> 00:28:34,339 வழிகாட்டியில் ஒயின் இல்லாத ஒரே இறுதிப் போட்டியாளர் இவர்தான். 403 00:28:37,593 --> 00:28:38,594 அவர் ஒப்புக்கொள்ள மாட்டார். 404 00:28:39,178 --> 00:28:40,220 ஏன்? 405 00:28:40,304 --> 00:28:41,847 ஏனெனில் அவர் வணிக ரீதியான ஒயினைத் தவிர்த்து 406 00:28:41,930 --> 00:28:44,766 வேறொன்றைத் தயாரிக்கும் திறன் கொண்டவர் என்று நிரூபிக்க விரும்புகிறார். 407 00:28:46,393 --> 00:28:49,938 முதன்முறையாக ஒரு பெரிய போட்டியில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 408 00:28:53,942 --> 00:28:55,152 நாம் அவரைச் சம்மதிக்க வைக்க வேண்டும். 409 00:28:56,236 --> 00:28:57,404 சரி. 410 00:28:58,864 --> 00:28:59,990 எப்படி? 411 00:29:00,073 --> 00:29:02,409 அவர் விரும்பும் உண்மையான அங்கீகாரத்தை அவருக்குக் கொடுப்பதன் மூலம். 412 00:29:10,000 --> 00:29:12,211 - மேடம் லெஜர். - ஹலோ, திரு. லோபெஸ். 413 00:29:12,294 --> 00:29:14,963 - ஹலோ, திரு. இங்லேஸே. - ஹலோ. 414 00:29:15,797 --> 00:29:18,425 - உங்கள் சின்ஸால்ட் பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளோம். - சரி. 415 00:29:19,176 --> 00:29:22,137 அது மிகவும் அற்புதமானது. நாங்கள் அதைச் சுவைக்கலாமா? 416 00:29:22,221 --> 00:29:23,847 ஆம், கண்டிப்பாக. மகிழ்ச்சியுடன் கொடுக்கிறேன். 417 00:29:27,684 --> 00:29:29,228 - மேடம். - நன்றி. 418 00:29:34,441 --> 00:29:35,442 நன்றி. 419 00:29:46,870 --> 00:29:48,330 இஸ்ஸேய் டொமினே கூறியது சரிதான். 420 00:29:51,083 --> 00:29:54,753 இது மிகவும் இணக்கமாகவும், சிறந்த ஃபீனாலிக் பழுத்ததன்மையுடன் உள்ளது. 421 00:29:55,587 --> 00:29:57,589 இது மிகவும் சுவாரஸ்யமான ஒயின், திரு. லோபெஸ். 422 00:29:58,340 --> 00:30:00,592 இளமையானது, ஆனால் நம்பிக்கையளிக்கக்கூடியது. 423 00:30:01,176 --> 00:30:02,261 ஆம், ஒப்புக்கொள்கிறேன். 424 00:30:07,516 --> 00:30:09,601 நாங்கள் இறுதிப் போட்டியில் இருக்கிறோம். 425 00:30:10,185 --> 00:30:12,604 மன்னிக்கவும். நான்… மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 426 00:30:15,524 --> 00:30:16,942 இவரது ஒயின் இறுதிப் போட்டியில் உள்ளது. 427 00:30:20,153 --> 00:30:22,698 இரண்டாவது தளத்தில் எங்கள் அலுவலகம் உள்ளது. நீங்கள் அங்கே வர முடியுமா? 428 00:30:24,700 --> 00:30:25,701 சரி, கண்டிப்பாக. 429 00:30:26,493 --> 00:30:28,245 ஸ்வீட் எண் ஆறு. அரை மணிநேரத்தில் வர முடியுமா? 430 00:30:28,871 --> 00:30:31,415 - அருமை. விரைவில் சந்திப்போம். - விரைவில் சந்திப்போம். 431 00:30:31,915 --> 00:30:33,000 பிறகு சந்திப்போம். 432 00:30:35,377 --> 00:30:37,129 உன் குப்பைகளை நாம் சுத்தம் செய்ய வேண்டும். 433 00:30:38,881 --> 00:30:40,465 - சரி. - இருங்கள். 434 00:30:41,675 --> 00:30:42,718 எல்லாம் சரியாக உள்ளது! 435 00:30:46,430 --> 00:30:47,431 உங்களுக்காக ஒரு பரிசு. 436 00:30:47,514 --> 00:30:48,807 நன்றி, ஹுவான். 437 00:30:48,891 --> 00:30:50,851 - உங்களை ஹுவான் என்று அழைக்கலாமா? - கண்டிப்பாக. 438 00:30:50,934 --> 00:30:51,935 உள்ளே வாருங்கள். 439 00:30:52,936 --> 00:30:53,979 வாருங்கள். 440 00:30:55,939 --> 00:30:56,940 அமருங்கள். 441 00:31:06,491 --> 00:31:10,454 வழிகாட்டியின் அடுத்த பதிப்பில் உங்கள் ஒயின் இடம்பெற விரும்புகிறோம். 442 00:31:11,914 --> 00:31:14,625 எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் கௌரவமாகவும் உள்ளது. 443 00:31:15,334 --> 00:31:17,669 உங்களுக்கு அதிகப்படியான கோரிக்கைகள் வரப் போகின்றன. 444 00:31:17,753 --> 00:31:19,880 நீங்கள் ஒதுக்கீட்டின்படி விற்க வேண்டி வரும். 445 00:31:20,631 --> 00:31:23,175 உங்களுக்கு எதுவும் ஆலோசனை வேண்டும் எனில் எங்களிடம் கேளுங்கள். 446 00:31:23,258 --> 00:31:24,801 மிக்க நன்றி. 447 00:31:27,763 --> 00:31:29,765 இதைத் தெரிவித்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி… 448 00:31:30,724 --> 00:31:33,143 ஆனால் உங்களுடன் வேறொரு விஷயத்தை ஆலோசிக்கத்தான் உங்களை இங்கே அழைத்தோம். 449 00:31:44,154 --> 00:31:46,823 இந்த ஒயினை நீங்கள் சுவைத்து, என்ன நினைக்கிறீர்கள் என்று கூற வேண்டும். 450 00:31:49,034 --> 00:31:52,204 இந்த ஒயினைத்தானே இஸ்ஸேய் டொமினே தேடிக்கொண்டிருந்தார்? 451 00:31:52,287 --> 00:31:53,330 ஆம். 452 00:31:54,081 --> 00:31:55,082 எனில் அவர் கண்டுபிடித்துவிட்டார். 453 00:31:56,083 --> 00:31:58,293 நாங்கள் கண்டுபிடித்தோம், ஜார்ஜியாவில். 454 00:31:59,378 --> 00:32:00,796 எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? 455 00:32:01,547 --> 00:32:03,549 அது ஒரு பெரிய கதை. 456 00:32:07,761 --> 00:32:11,765 - திரு. டொமினே இங்கு இல்லையா? - அவர் ஜப்பான் போக வேண்டியிருந்தது. 457 00:32:11,849 --> 00:32:15,519 இந்தக் கேள்விகள் கேட்பதற்கு மன்னிக்கவும், ஆனால் இது அவருக்கு மிகவும் முக்கியமானதாகத் தெரிந்தது. 458 00:32:15,602 --> 00:32:17,855 ஆம். எங்கள் இருவருக்கும்தான். 459 00:32:19,982 --> 00:32:21,567 சுவைத்துப் பாருங்கள். 460 00:33:03,817 --> 00:33:06,862 திரு. டொமினே கூறியது சரிதான். இந்த ஒயின் அற்புதமாக உள்ளது. 461 00:33:08,447 --> 00:33:10,449 இதற்கு பழைய ஒயினின் டெக்ஸ்ச்சர் உள்ளது, 462 00:33:10,532 --> 00:33:13,619 ஆனால் இளம் ஒயினின் புத்துணர்ச்சியும், நறுமணங்களும் உள்ளன. 463 00:33:21,585 --> 00:33:23,587 என்னால் இதுபோன்ற ஒயினை ஒருபோதும் உருவாக்க முடியாது. 464 00:33:29,718 --> 00:33:30,802 இது அழியப் போகிறது. 465 00:33:31,553 --> 00:33:32,596 என்ன? 466 00:33:33,931 --> 00:33:38,810 இதன் உரிமையாளர் இந்தத் திராட்சைக் கொடிகளை வெட்டி, கோல்ஃப் மைதானம் கட்ட விரும்புகிறார். 467 00:33:39,686 --> 00:33:41,313 அவர் அப்படிச் செய்ய முடியாது. 468 00:33:43,440 --> 00:33:46,610 எங்களால் இந்த ஒயினைக் காப்பாற்ற முடியும், ஹுவான், ஆனால் உங்கள் உதவி தேவை. 469 00:33:48,111 --> 00:33:49,112 நானா? 470 00:33:53,450 --> 00:33:57,371 இந்த ஒயின் போட்டியில் வென்றால், இதன் உரிமையாளர் ப்ராஜெக்ட்டை நிறுத்துவார். 471 00:33:59,915 --> 00:34:01,583 அவரும் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவரா? 472 00:34:02,209 --> 00:34:03,335 இல்லை. 473 00:34:03,836 --> 00:34:05,128 அந்தப் பட்டியல் மூடப்பட்டுவிட்டது. 474 00:34:07,965 --> 00:34:09,882 அதனால்தான், நீங்கள் ஒப்புக்கொண்டால், 475 00:34:11,301 --> 00:34:14,054 போட்டியில் உங்கள் ஒயினுக்கு பதிலாக இந்த ஒயினை வைக்க விரும்புகிறோம். 476 00:34:18,851 --> 00:34:23,522 போட்டியில் என் ஒயினுக்கு பதிலாக, இந்த ஒயினின் பாட்டில்களைக் கொடுக்கச் சொல்கிறீர்களா? 477 00:34:24,731 --> 00:34:26,065 எனது பெயரிலா? 478 00:34:29,820 --> 00:34:30,821 ஆம். 479 00:34:31,905 --> 00:34:34,533 நான் ஒப்புக்கொள்வேன் என எப்படி நினைக்கிறீர்கள்? 480 00:34:36,869 --> 00:34:38,411 நீங்கள் கூறிய அனைத்தையும் வைத்துதான். 481 00:34:39,913 --> 00:34:42,416 உங்களுக்கு ஒயினின் மதிப்பு தெரியும், 482 00:34:43,000 --> 00:34:44,333 அதன் வரலாறும் 483 00:34:45,377 --> 00:34:48,130 அதற்கான உழைப்பும் தெரியும். 484 00:34:53,802 --> 00:34:55,888 நீங்கள் 12 இறுதிப் போட்டியாளர்களில் ஒருவர். 485 00:34:55,971 --> 00:34:58,140 அது ஏற்கனவே அங்கீகரிப்புக்கான அடையாளம்தான். 486 00:35:00,809 --> 00:35:03,020 ஆனால் நீங்கள் போட்டியில் வெல்வீர்களா என்று உங்களுக்குத் தெரியாது. 487 00:35:07,482 --> 00:35:11,737 நான் முடியாது என்றால், இது வழிகாட்டியில் இடம்பெறாதா? 488 00:35:12,696 --> 00:35:15,240 இல்லை. அது இடம்பெறும், ஏனெனில் அதற்குத் தகுதியுள்ளது. 489 00:35:17,034 --> 00:35:19,786 ஆனால் நீங்கள் ஒப்புக்கொண்டால், நீங்கள் "முக்கியத் தேர்வுகளிலும்" இடம்பெறுவீர்கள். 490 00:35:27,044 --> 00:35:28,670 அவை ஆண்டுக்கு மூன்றுதான் இருக்கும். 491 00:35:37,679 --> 00:35:38,847 அதைப் பற்றி யோசியுங்கள், ஹுவான். 492 00:35:40,390 --> 00:35:42,392 உங்கள் ஒயின் சிறந்த சம்மேலியெர்களின் மெனுக்களில் இருக்கும், 493 00:35:43,477 --> 00:35:44,937 ரோமனி-கோன்டி உடன். 494 00:35:50,067 --> 00:35:52,236 இது உங்களுக்கு எந்தவிதமான தியாகம் என்று தெரியும். 495 00:35:55,989 --> 00:35:57,741 இல்லை, தெரியாது. உங்களுக்குத் தெரியாது. 496 00:36:21,807 --> 00:36:23,058 அவர் ஒப்புக்கொள்வார். 497 00:36:47,583 --> 00:36:51,044 இஸ்ஸேய், உங்கள் அம்மா இங்கே இல்லை. 498 00:36:52,296 --> 00:36:55,132 அவர் என்னைப் பார்க்க ஒப்புக்கொள்ளும் வரை நான் தினமும் வருவேன் என்று அவரிடம் சொல்லுங்கள். 499 00:36:55,215 --> 00:37:00,053 அவர் ஊரில் இல்லை, எனவே நீங்கள் அடுத்த சில நாட்களுக்கு வர வேண்டியதில்லை. 500 00:37:00,846 --> 00:37:03,974 - அவர் எங்கே சென்றார்? - எனக்குத் தெரியாது. 501 00:37:04,766 --> 00:37:06,101 என்னை மன்னித்துவிடுங்கள். 502 00:37:09,104 --> 00:37:10,105 புரிந்தது. நன்றி. 503 00:37:25,871 --> 00:37:28,790 உங்கள் தரப்பு வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன். 504 00:37:28,874 --> 00:37:31,001 அறை 303. ஹுவான் லோபெஸ். 505 00:37:37,257 --> 00:37:39,551 பேசுபவர்களை சீக்கிரம் வரும்படி அழைத்துள்ளனர். நான் போக வேண்டும். 506 00:37:42,971 --> 00:37:45,682 இந்தப் பேனலில் பேச நான் ஒப்புக்கொண்டதை என்னால் நம்ப முடியவில்லை. 507 00:37:59,571 --> 00:38:01,448 இதை உங்கள் பாட்டிலில் ஊற்ற மறந்துவிடாதீர்கள். 508 00:38:02,282 --> 00:38:04,034 நன்றி, ஹுவான். நீங்கள் செய்யும் விஷயம் அற்புதமானது… 509 00:38:10,499 --> 00:38:13,252 நம்மால் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க முடியாது. அது ஏற்கனவே வந்துவிட்டது. 510 00:38:13,961 --> 00:38:17,047 ஆனால் நம்மால் தகவமைத்துக்கொள்ள முடியும். நாம் தகவமைத்தாக வேண்டும். 511 00:38:17,130 --> 00:38:20,551 மன்னிக்கவும், ஆனால் ஒவ்வோர் ஆண்டும் நதிகளிலிருந்து லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை 512 00:38:20,634 --> 00:38:22,427 உறிஞ்சுவது தகவமைப்பது இல்லை. அது தப்பித்துக்கொள்வது. 513 00:38:22,511 --> 00:38:23,762 நாம் எதார்த்தத்தைப் பற்றிப் பேசுகிறோம்! 514 00:38:23,846 --> 00:38:25,556 அவை வெறும் வார்த்தைகள்தான். 515 00:38:25,639 --> 00:38:27,349 சஸாங்ரேவில் நீங்கள் செய்வது அற்புதமானது, 516 00:38:28,183 --> 00:38:29,601 ஆனால் எல்லோராலும் அதைச் செய்ய முடியாது. 517 00:38:30,435 --> 00:38:33,272 எங்களால் நீர்ப்பாசனம் செய்ய முடியவில்லை எனில், சில எஸ்டேட்கள் 20 ஆண்டுகளில் அழிந்துவிடும். 518 00:38:34,481 --> 00:38:36,984 சஸாங்ரேயில், நாங்கள் எதிர்பார்ப்பதற்கு ஏற்ற வழிவகைகள் இருந்தன என்பது உண்மைதான், 519 00:38:37,067 --> 00:38:38,819 நம்மில் இருக்கும் சிறிய எஸ்டேட்களுக்கு 520 00:38:38,902 --> 00:38:40,571 அது சாத்தியமில்லை என்பதும் புரிகிறது. 521 00:38:41,071 --> 00:38:42,614 இது பணப் பிரச்சினை என்பது உண்மைதான். 522 00:38:42,698 --> 00:38:44,116 ஆனால் அனைத்திற்கும் மேல், இது மனோதிடப் பிரச்சினை. 523 00:38:44,199 --> 00:38:47,119 போராடுவதற்கான மனோதிடம், 524 00:38:47,202 --> 00:38:51,206 முதலீடு செய்வதற்கான, ரிஸ்க் எடுப்பதற்கான மனோதிடம், 525 00:38:51,290 --> 00:38:53,917 நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மாறாமல் இருப்பதை மாற்றுவதற்கான மனோதிடம், 526 00:38:54,001 --> 00:38:56,670 பிறரைக் கோபப்படுத்தினாலும் பழைய முறைகளை மாற்றுவதற்கான மனோதிடம். 527 00:38:56,753 --> 00:38:58,172 மேசையில் நம் கையைக் குத்திக்கொள்ள வேண்டியிருந்தாலும். 528 00:38:58,255 --> 00:39:00,591 ஏனெனில் நாம் எப்போதும் செய்து வரும் முறையில் நம்மால் வேலை செய்ய முடியும்: 529 00:39:00,674 --> 00:39:02,259 அதே திராட்சை வகைகள், அதே முறைகள், 530 00:39:02,342 --> 00:39:04,595 பாரம்பரியம், எதையும் மாற்றாமல் இருப்பது. 531 00:39:04,678 --> 00:39:06,597 பிறகு, கண்டிப்பாக நமக்கு தடைகள் ஏற்படும். 532 00:39:06,680 --> 00:39:10,100 அல்லது நாம் துணிச்சலாக, அனைத்தையும் மாற்றலாம். 533 00:39:10,893 --> 00:39:13,979 ஆம், அது கடினமானது, பயமுறுத்துவதுதான், ஆனால் இதைச் செய்வது அல்லது மறைந்து போவது. 534 00:39:15,105 --> 00:39:17,357 ஏனெனில் நமது அனைத்து ஒயின்களும், 535 00:39:17,441 --> 00:39:19,318 அழிந்துபோகும் ஆபத்தில் இருக்கின்றன. அதுதான் உண்மை. 536 00:39:20,152 --> 00:39:23,238 அவற்றைக் காப்பாற்ற வாய்ப்புள்ளதா? இருக்கலாம். 537 00:39:24,239 --> 00:39:27,159 அதற்கு நாம் விலை கொடுக்க வேண்டுமா? சந்தேகமே வேண்டாம், அது பெரிதாகத்தான் இருக்கும். 538 00:39:27,993 --> 00:39:29,745 கண்டிப்பாக இது ஒரு சூதாட்டம்தான். 539 00:39:29,828 --> 00:39:31,788 ஆனால் ரிஸ்க் எடுக்க நாம் தயாராக இல்லையெனில், 540 00:39:31,872 --> 00:39:33,790 நாம் வேலைகளை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கலாம். அதைத்தான் நான் நினைக்கிறேன். 541 00:39:41,089 --> 00:39:42,883 நன்றி, கமில். 542 00:39:43,842 --> 00:39:47,554 ஒரு விஷயம் நிச்சயம், எதிர்காலத்திற்கான உங்கள் கண்ணோட்டம் யாரையும் அலட்சியப்படுத்துவதில்லை. 543 00:39:49,264 --> 00:39:51,099 - யாரெனும் எதிர்வினையாற்ற விரும்புகிறீர்களா? - ஆம், நான். 544 00:39:51,183 --> 00:39:52,643 முதல் விண்டேஜ் போட்டி 2024 545 00:39:52,726 --> 00:39:55,729 கமில் லெஜர் கூறுவது எல்லாம் நல்ல விஷயம்தான், 546 00:39:55,812 --> 00:39:57,856 ஆனால் இனி என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியவில்லை, 547 00:39:57,940 --> 00:39:59,358 ஏனெனில் இது வெறும் வறட்சி மட்டுமில்லை. 548 00:39:59,858 --> 00:40:03,445 மிகவும் லேசான குளிர்காலம், தவறான நேரத்தில் அதிக மழை, 549 00:40:04,154 --> 00:40:07,449 நுண்துகள் பூஞ்சை காளான் மற்றும் இதற்கு முன்பு இல்லாத பிற ஒட்டுண்ணிகள் அனைத்தும்தான்! 550 00:40:08,200 --> 00:40:12,079 இலைப்பேன்கள், புள்ளி-இறக்கைகள் கொண்ட டிரோசோபிலா, 551 00:40:12,162 --> 00:40:15,165 அந்த பாழாய்ப் போன அந்துப்பூச்சிகள், ஸிஃபினெமா என்ற நூற்புழுக்கள்… 552 00:40:15,249 --> 00:40:18,085 உங்கள் ஒயின் முதல் விண்டேஜ் போட்டியில் போட்டியிடுகிறது. 553 00:40:18,168 --> 00:40:21,004 மேலும் அது வெல்லப் போகிறது. நீங்கள் வர வேண்டும். 554 00:40:41,441 --> 00:40:43,652 டடாஷி ஆகி & ஷூ ஓகிமோட்டோ எழுதிய "Drops of God" மாங்காவை அடிப்படையாகக் கொண்டது. 555 00:41:19,104 --> 00:41:21,106 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்