1 00:00:14,765 --> 00:00:17,017 டடாஷி ஆகி & ஷூ ஓகிமோட்டோவின் "Drops of God" மாங்காவை அடிப்படையாகக் கொண்டது 2 00:00:22,272 --> 00:00:23,273 அடச்சே… 3 00:00:35,160 --> 00:00:36,453 இருங்கள்! 4 00:00:38,705 --> 00:00:39,790 இருங்கள்! 5 00:00:41,416 --> 00:00:42,417 ஹேய்! 6 00:00:43,293 --> 00:00:44,419 இருங்கள்! 7 00:00:45,671 --> 00:00:47,464 வேண்டாம்! நிறுத்துங்கள்! 8 00:00:49,633 --> 00:00:52,135 மன்னிக்கவும், ஆனால் அதை இறக்க முடியுமா? 9 00:00:52,219 --> 00:00:56,223 முக்கியமான பொருளை உள்ளே மறந்து வைத்துவிட்டேன். நன்றி. 10 00:00:56,306 --> 00:00:57,432 சரி. 11 00:00:58,517 --> 00:00:59,685 சரி. 12 00:01:03,480 --> 00:01:04,690 கிடைத்துவிடு. 13 00:01:04,772 --> 00:01:06,733 ஆஹா! நன்றி. 14 00:01:07,442 --> 00:01:10,654 அருமை! மன்னிக்கவும். உங்கள் நாள் இனிதாக இருக்கட்டும். 15 00:01:14,825 --> 00:01:15,909 அருமை! 16 00:01:20,831 --> 00:01:22,958 - நன்றி. - நன்றி. 17 00:01:23,041 --> 00:01:24,418 போகலாம். 18 00:01:28,589 --> 00:01:31,008 ஹிரோகாஸு, இப்போது போகாதீர்கள். 19 00:01:31,842 --> 00:01:35,679 இனிமேல் அவன் தீவிர சிகிச்சையில் இல்லை. அவன் நன்றாக இருப்பான். 20 00:01:35,762 --> 00:01:38,891 ஆனாலும் நீங்கள் அவனுக்குத் தேவை. 21 00:01:40,893 --> 00:01:43,145 நமக்கு நேரமாகிறது. விமானத்தைப் பிடிக்க வேண்டும். 22 00:01:46,315 --> 00:01:47,858 அவனைப் பார்த்துக்கொள். 23 00:01:48,483 --> 00:01:50,944 மதியம் 1.30 மணியிலிருந்து பார்ப்பதற்கு ஆட்கள் வரலாம். 24 00:01:51,028 --> 00:01:54,489 - அறை 409. நன்றி. - பார்த்துக்கொள்ளுங்கள். 25 00:01:54,573 --> 00:01:56,867 மரியான், கோழிகள் மீது ஏற்றிவிடாதீர்கள்! 26 00:02:02,706 --> 00:02:04,333 அந்த பாட்டில் காலியாக உள்ளது. அது தெரியும்தானே? 27 00:02:05,292 --> 00:02:08,377 ஆம், ஆனால் இந்த மெழுகு ஒட்டக்கூடியதாக இருப்பதை கவனித்தேன். ஏன் தெரியுமா? 28 00:02:12,382 --> 00:02:15,844 ஆம், பிசுபிசுப்பாக உள்ளது. இது பிசின் இல்லை, தேன் மெழுகு. 29 00:02:16,845 --> 00:02:19,181 - ஆனால் தேன் மெழுகானது… - மத்திய காலத்திலிருந்து பயன்படுத்தப்படுவதில்லை. 30 00:02:22,351 --> 00:02:25,354 நீ உன் சகோதரனுக்கு உதவ முயல்கிறாயா? 31 00:02:26,772 --> 00:02:28,232 நான் உதவத்தான் விரும்புகிறேன், ஆனால்… 32 00:02:33,654 --> 00:02:34,655 எனக்கு ஒரு யோசனை உள்ளது. 33 00:02:39,284 --> 00:02:40,410 இவரை உங்களுக்கு நீண்ட காலமாகத் தெரியுமா? 34 00:02:41,411 --> 00:02:42,663 சிறுவயதிலிருந்தே தெரியும். 35 00:02:43,830 --> 00:02:46,124 எங்கள் இருபதுகளின் தொடக்கத்தில் ஒன்றாகக் குடித்துள்ளோம். 36 00:02:47,501 --> 00:02:49,169 பிறகு எனக்கு திருமணம் ஆகிவிட்டது. 37 00:02:50,337 --> 00:02:51,463 எனவே… 38 00:02:55,175 --> 00:02:56,385 ரஃபேல்! 39 00:03:03,100 --> 00:03:05,352 இல்லை. அவன் தேனீ வளர்க்குமிடத்தில் இருப்பான். 40 00:03:08,021 --> 00:03:09,731 ஜாக்கிரதை, பெண்களே. 41 00:03:11,483 --> 00:03:13,443 எல்லாம் நலம்தானே? 42 00:03:15,988 --> 00:03:17,698 - அப்படித்தான் தெரிகிறது. - ரஃபேல்? 43 00:03:18,282 --> 00:03:19,533 என்ன? 44 00:03:22,995 --> 00:03:24,413 நீ இறந்துவிட்டாய் என நினைத்தேன். 45 00:03:25,330 --> 00:03:26,540 இல்லை. 46 00:03:27,583 --> 00:03:29,334 இது உன் மருமகளா? 47 00:03:29,418 --> 00:03:30,627 கிட்டத்தட்ட. 48 00:03:31,795 --> 00:03:34,047 எங்களுக்கு உனது ஆலோசனை வேண்டும். 49 00:03:34,882 --> 00:03:36,675 உனக்குத் தேவைப்படும்போது, நான் எங்கிருப்பேன் எனத் தெரியும்தானே? 50 00:03:38,051 --> 00:03:39,219 ஐந்தாண்டுகள் ஆகிவிட்டது. 51 00:03:41,221 --> 00:03:42,973 - இரு. - மன்னிக்கவும். 52 00:03:43,056 --> 00:03:47,227 தேனீக்கள் இனிமையானவைதான், ஆனால் நாம் வேறெங்காவது போகலாமா? 53 00:03:50,314 --> 00:03:51,315 மன்னிக்கவும். 54 00:03:53,567 --> 00:03:54,735 இது தேன் மெழுகு. 55 00:03:56,278 --> 00:03:57,613 பாரஃபின் இல்லை, பிசின் இல்லை. 56 00:03:57,696 --> 00:03:59,823 வண்ணமும் இல்லை. 57 00:03:59,907 --> 00:04:02,117 இதில் ப்ரோபோலிஸ் நிறைய இருப்பதால் மஞ்சளாக உள்ளது, 58 00:04:02,201 --> 00:04:04,161 அது குறிப்பிட்ட தேனீக்களின் பண்புதான். 59 00:04:04,786 --> 00:04:07,414 இந்த மெழுகை உருவாக்கியது எந்த வகையான தேனீ என்று கண்டுபிடிக்க முடியுமா? 60 00:04:07,497 --> 00:04:08,874 கண்டிப்பாக என்னால் முடியும். 61 00:04:08,957 --> 00:04:10,959 நாம் இதன் உருகும் நிலையை அளவிடப் போகிறோம். 62 00:04:12,085 --> 00:04:14,004 இந்த மெழுகு 58 டிகிரியில் உருகினால், 63 00:04:14,087 --> 00:04:17,341 அது அமெரிக்காவில் மட்டும் இருக்கும் சிறிய கருந்தேனீயைக் குறிக்கும். 64 00:04:17,423 --> 00:04:19,259 - சரி. - அதே நேரம், 65 00:04:19,343 --> 00:04:22,095 - இது 61 டிகிரி எனில், பிரச்சினைதான். - என்ன பிரச்சினை? 66 00:04:22,930 --> 00:04:26,558 அது வழக்கமான தேனீ என்று அர்த்தம். அவை பூமியில் எங்கு வேண்டுமானாலும் வசிக்கும். 67 00:04:27,267 --> 00:04:28,477 அருமை. 68 00:04:28,560 --> 00:04:29,603 தொடங்கலாமா? 69 00:04:32,189 --> 00:04:33,815 எச்சரிக்கை அதிக வெப்பநிலை 250° செல்ஷியஸ் 70 00:04:49,540 --> 00:04:50,916 அறுபத்தி ஒரு டிகிரி. 71 00:04:52,251 --> 00:04:55,045 மன்னிக்கவும், என்னால் தேனீயின் வகையைக் கூற முடியாது. 72 00:04:57,381 --> 00:05:00,926 அதைக் கண்டறிய பிற வழிகள் உள்ளன. 73 00:05:01,009 --> 00:05:02,010 நிஜமாகவா? 74 00:05:02,094 --> 00:05:05,180 நீங்கள் ஒரு ஆய்வகத்தைத் தொடர்புகொண்டு, நுண்ணுயிரியல் பகுப்பாய்வு செய்யலாம். 75 00:05:05,264 --> 00:05:09,768 உங்கள் மெழுகில் எந்த மகரந்தங்கள் உள்ளன என்று கூறுவார்கள். பிறகு பூக்கள் தெரிந்துவிடும். 76 00:05:09,852 --> 00:05:12,020 பிறகு அவை எங்குள்ளன என்று கண்டுபிடித்தால் போதும். 77 00:05:12,521 --> 00:05:15,315 இக்-ஆன்-ப்ரொவென்ஸில் உள்ள ஒரு ஆய்வகத்தில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். 78 00:05:15,399 --> 00:05:16,608 நண்பரா? 79 00:05:16,692 --> 00:05:18,777 அற்புதம்! உன் நண்பரைக் கேள். 80 00:05:19,653 --> 00:05:21,113 நீ என் நண்பன் என்பதால், 81 00:05:21,738 --> 00:05:25,701 அடுத்த முறை என்னைப் பார்க்க வரும்போது, ஒயின் இருக்கும் பாட்டிலை எடுத்து வா. 82 00:05:25,784 --> 00:05:27,494 நாம் ஒன்றாகக் குடிக்கலாம். 83 00:05:29,037 --> 00:05:30,956 எனக்கு ஒரு துப்பு கிடைத்துள்ளது. 84 00:05:31,039 --> 00:05:34,835 இந்தத் தரத்திலான ஒயின், அது தயாரிக்கப்பட்ட இடத்தில்தான் பாட்டிலில் அடைக்கப்பட்டிருக்கும். 85 00:05:34,918 --> 00:05:36,253 வேறெங்கோ இருக்காது, சரியா? 86 00:05:37,504 --> 00:05:40,757 பாட்டிலில் உள்ள மெழுகில் மகரந்தம் உள்ளது. 87 00:05:40,841 --> 00:05:42,843 எனவே அதைப் பகுப்பாய்வு செய்ய, ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளேன்… 88 00:05:42,926 --> 00:05:45,220 நாம் ஆய்வகத்திற்கு அனுப்புவதாக இருந்தால், 89 00:05:45,304 --> 00:05:48,265 திராட்சை வகையைக் கண்டறிய, ஒயினைத்தான் அனுப்ப வேண்டும். 90 00:05:48,348 --> 00:05:49,516 அதுதான் நமக்குத் தேவை. 91 00:05:50,392 --> 00:05:51,393 ஆம்… 92 00:05:55,022 --> 00:05:56,273 அது மிச்சம் எதுவுமில்லை. 93 00:05:57,691 --> 00:05:59,109 நீ குடித்துவிட்டாயா? 94 00:06:00,485 --> 00:06:01,653 அதைக் கீழே ஊற்றிவிட்டேன். 95 00:06:03,071 --> 00:06:06,366 நான் கோபத்தில் இருந்தேன், அதைப் பற்றிக் கவலைப்படுவதை நிறுத்த விரும்பினேன். 96 00:06:07,451 --> 00:06:08,911 ஆனால் அது பிரச்சினையில்லை. 97 00:06:09,828 --> 00:06:12,915 நாம் அந்த ஒயினைச் சுவைத்துள்ளோம். அது நம் மூளைகளில் உள்ளது. 98 00:06:14,416 --> 00:06:16,960 உன்னால் எப்படி அதுபோன்ற முட்டாள்தனத்தைச் செய்ய முடிந்தது? 99 00:06:21,632 --> 00:06:25,469 பிறர் உனக்காகக் கவலைப்படுகின்றனர், ஆனால் நீ அதைக் கடினமாக்குகிறாய். 100 00:06:25,552 --> 00:06:28,555 உன் அப்பா இன்று காலை டோக்கியோவிற்குப் புறப்பட்டது தெரியுமா? 101 00:06:29,890 --> 00:06:31,225 எனக்கு பரிதாபம் தேவையில்லை. 102 00:06:35,270 --> 00:06:37,606 ஆய்வகத்தின் முடிவுகள் வந்ததும் உன்னை அழைக்கிறேன். 103 00:06:38,232 --> 00:06:39,483 உனக்கு அது பிடிக்கும். 104 00:06:41,485 --> 00:06:42,903 எனக்காக அதைக் கண்டுபிடிப்பது. 105 00:06:45,155 --> 00:06:47,658 இது போட்டியில்லை, இஸ்ஸேய். சரியா? 106 00:07:06,927 --> 00:07:08,303 ஹலோ. 107 00:07:08,387 --> 00:07:10,806 அப்பா. ஏன் நீங்கள் புறப்படுகிறீர்கள்? 108 00:07:13,684 --> 00:07:16,019 என்னால் மீண்டும் இதை அனுபவிக்க முடியாது. 109 00:07:18,313 --> 00:07:19,565 என்ன சொல்கிறீர்கள்? 110 00:07:21,900 --> 00:07:23,694 உனக்கு இது நினைவில்லாமல் இருக்கலாம், 111 00:07:25,070 --> 00:07:28,866 ஆனால் உனக்கு மூன்று வயது இருக்கும்போது, நாம் ஓகினாவாவில் விடுமுறையில் இருந்தோம்… 112 00:07:31,368 --> 00:07:34,204 நீ அப்போது நீரில் கிட்டத்தட்ட மூழ்கிவிட்டாய். 113 00:07:36,623 --> 00:07:38,542 நீங்கள் அதை என்னிடம் கூறியதே இல்லை. 114 00:07:40,127 --> 00:07:42,129 ஆம், நீ கிட்டத்தட்ட இறந்திருப்பாய். 115 00:07:47,843 --> 00:07:49,511 இப்போது புரிகிறது. 116 00:07:50,721 --> 00:07:51,722 என்ன? 117 00:07:56,018 --> 00:07:59,313 நான் ஏன் டைவ் செய்யக் கூடாது என விரும்பினீர்கள் என இப்போது புரிகிறது. 118 00:08:00,772 --> 00:08:03,192 நான் உன்னை நேற்று பார்த்தபோது, 119 00:08:03,275 --> 00:08:06,987 அது மீண்டும் நடப்பது போல உணர்ந்தேன். 120 00:08:07,946 --> 00:08:09,781 என்னால் தாங்க முடியவில்லை. 121 00:08:10,824 --> 00:08:13,493 …டோக்கியோ செல்பவர்கள், போர்டிங் கேட்டுக்கு 122 00:08:13,577 --> 00:08:14,745 செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்… 123 00:08:14,828 --> 00:08:16,205 நான் போக வேண்டும். 124 00:08:16,288 --> 00:08:18,498 பயணிகள் கவனத்திற்கு. 125 00:08:18,582 --> 00:08:20,083 உடல்நலத்தைப் பார்த்துக்கொள். 126 00:08:43,982 --> 00:08:44,983 கமில். 127 00:08:46,693 --> 00:08:50,072 கமில், என்ன செய்கிறாய்? அந்த அமெரிக்கர் உனக்காக முற்றத்தில் காத்திருக்கிறார். 128 00:08:50,614 --> 00:08:52,241 நீ அதைப் பார்த்துக்கொள், ப்ளீஸ். 129 00:08:53,200 --> 00:08:55,035 அவர் உன்னைப் பார்க்க வந்துள்ளார். 130 00:08:55,118 --> 00:08:57,287 மன்னித்துவிடு, என்னால் முடியாது. 131 00:08:57,371 --> 00:09:00,040 நான் அந்த திராட்சை வகையைக் கண்டறிய, இஸ்ஸேய்க்கு உதவ வேண்டும். 132 00:09:03,627 --> 00:09:04,711 சரி… 133 00:09:10,342 --> 00:09:13,929 அது அப்படித்தான். இன்னொரு நாள் வீணானது. 134 00:09:15,097 --> 00:09:17,891 நான் அவளுடன் நேரம் செலவிட இங்கே வந்தேன், ஆனால் செய்ய முடியவில்லை. 135 00:09:19,685 --> 00:09:21,770 கமிலுக்கு வேறு வேலைகள் உள்ளன. 136 00:09:21,854 --> 00:09:25,524 அவள் நன்றி கெட்டவளாக இருக்கிறாள். எல்லாப் பிள்ளைகளையும் போலவே. 137 00:09:28,652 --> 00:09:31,405 உன்னைத் தவிர, தாமஸ். நீ உன் அப்பாவைப் பார்த்துக்கொள்கிறாய். 138 00:09:33,115 --> 00:09:34,950 நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி எனத் தெரியுமா? 139 00:09:35,033 --> 00:09:36,326 ஆம், தெரியும். 140 00:09:38,370 --> 00:09:40,873 நானும் ஹிரோகாஸு போலச் செய்யப் போகிறேன். நான் விட்டுவிடுகிறேன். 141 00:09:40,956 --> 00:09:43,208 நான் நாளை வீட்டுக்குப் போகிறேன். 142 00:09:43,709 --> 00:09:44,960 விடுமுறை முடிந்தது. 143 00:09:49,131 --> 00:09:51,175 நான் அவளுக்கு உணவு கொடுக்கப் போகிறேன். 144 00:09:54,469 --> 00:09:55,554 நீங்கள் தனியாக இருங்கள். 145 00:10:03,061 --> 00:10:05,314 அவள் இஸ்ஸேய் பற்றிக் கவலைப்படுகிறாள். அவ்வளவுதான். 146 00:10:09,151 --> 00:10:10,444 நீங்கள் வேண்டுமானால் அதை நம்புங்கள். 147 00:10:12,196 --> 00:10:14,448 ஆனால் மற்ற எவரையும் விட என் மகளைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும், 148 00:10:15,365 --> 00:10:17,910 எல்லாவற்றையும் விட, அலெக்ஸாண்ட்ரே யார் என்பதை நான் மறக்கவில்லை. 149 00:10:25,959 --> 00:10:27,169 நன்றி. 150 00:10:31,840 --> 00:10:34,426 அந்த மெழுகு பகுப்பாய்வு நமக்கு ஒரு இடத்தைக் கொடுக்கலாம், 151 00:10:34,510 --> 00:10:36,929 ஆனாலும் நாம் தேடும் திராட்சை வகையைத் தெரிந்துகொள்ள வேண்டும். 152 00:10:37,012 --> 00:10:40,140 எல்லா மணங்களையும் நான் பட்டியலிட்டுள்ளேன், ஆனால் இந்த கனிமத்தன்மையைதான் 153 00:10:40,224 --> 00:10:42,601 கண்டுபிடிக்க முடியவில்லை. நான் களைப்படைந்துவிட்டேன். 154 00:10:42,684 --> 00:10:43,852 எனில் இதை விட்டுவிடு. 155 00:10:44,686 --> 00:10:46,647 அவன் மிகவும் தொந்தரவானவன். 156 00:10:48,273 --> 00:10:50,817 ஆனால் நான் என்ன செய்ய முடியும்? அவனைப் பற்றிக் கவலைப்படுகிறேன். 157 00:10:51,652 --> 00:10:53,195 நீ ஏன் வாஸ்ஸலுக்குச் செல்லக் கூடாது? 158 00:10:54,112 --> 00:10:57,032 நீ தேடுவது ஒருவேளை மறக்கப்பட்ட வகையாக இருக்கலாம். 159 00:10:57,574 --> 00:10:59,993 வாஸ்ஸல்தான் உலகின் மிகப்பெரிய திராட்சை வகைகளின் சேமிப்பிடம். 160 00:11:00,077 --> 00:11:02,579 உன் புத்தகங்களில் கிடைக்காத வகைகள் அவர்களிடம் இருக்கும். 161 00:11:05,165 --> 00:11:07,000 - நீ என்னுடன் வருகிறாயா? - இல்லை. 162 00:11:07,084 --> 00:11:09,211 - வா. - எனக்கு நிறைய வேலை உள்ளது, கமில். 163 00:11:09,294 --> 00:11:12,422 - வா. வா. ப்ளீஸ். - இல்லை. 164 00:11:12,965 --> 00:11:16,593 - இல்லை. - ப்ளீஸ். ஆம். 165 00:11:17,427 --> 00:11:20,013 - நீ எனக்கு தொந்தரவு கொடுக்கிறாய், தெரியுமா? - ஆம். 166 00:11:22,224 --> 00:11:24,977 வாஸ்ஸல் ஆய்வு மையம் 167 00:11:31,108 --> 00:11:34,695 எங்களிடம் எல்லா கண்டங்களில் இருந்தும் கிட்டத்தட்ட 8,500 திராட்சை வகைகள் உள்ளன. 168 00:11:35,529 --> 00:11:39,449 இது ஃபிலாக்ஸெரா நெருக்கடியின் உச்சத்தில் 1876 இல் தொடங்கப்பட்டது, 169 00:11:40,158 --> 00:11:43,412 பூச்சிகள் அனைத்தையும் அழிக்கும் முன், முடிந்தளவு எல்லா வகைகளையும் 170 00:11:43,495 --> 00:11:45,330 சேகரிப்பதுதான் இதன் நோக்கமாக இருந்தது. 171 00:11:45,414 --> 00:11:46,957 சரி, அதனால்தான் மணல். 172 00:11:47,040 --> 00:11:48,542 இது பூச்சிகள் உள்ளே நுழைவதைத் தடுக்கும். 173 00:11:48,625 --> 00:11:50,669 அதனால்தான் இந்தத் தளத்தைத் தேர்வுசெய்தோம். 174 00:11:50,752 --> 00:11:52,337 ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இது சாபமாக முடியப் போகிறது. 175 00:11:52,421 --> 00:11:56,049 இங்கே 2050க்குள் கடல் அனைத்தையும் மூழ்கடித்துவிடும். 176 00:11:56,133 --> 00:11:57,176 என்ன செய்யப் போகிறீர்கள்? 177 00:11:57,259 --> 00:12:01,346 இடமாறுகிறோம், எங்கள் 27 ஹெக்டேரையும் கடற்கரையில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளி பயிரிடுகிறோம். 178 00:12:01,430 --> 00:12:03,056 அதை அடுத்த பத்து ஆண்டுகளில் செய்ய வேண்டும். 179 00:12:03,140 --> 00:12:06,435 அதன் பிறகு… உலகம் அழிந்துவிடும். 180 00:12:06,935 --> 00:12:07,936 என்னவொரு வேலை. 181 00:12:08,687 --> 00:12:09,688 எனவே, 182 00:12:10,772 --> 00:12:12,482 நீங்கள் மறக்கப்பட்ட திராட்சையைக் கண்டறிய வேண்டுமா? 183 00:12:13,775 --> 00:12:14,776 ஆம். 184 00:12:15,652 --> 00:12:18,655 சரியான இடத்திற்குத்தான் வந்துள்ளீர்கள். 185 00:12:20,699 --> 00:12:24,119 இது சிவப்பு கரன்ட், வைல்டு பிளாக் கரன்ட், ஃபிரஷ்ஷான அர்பூட்டஸ் பெர்ரி 186 00:12:24,203 --> 00:12:27,414 உடனான சிவப்பு ஒயினைக் கொடுக்கும் வகை. 187 00:12:27,915 --> 00:12:30,167 ரோஸ் ஹிப், ஜெரானியம், லிலாக் மற்றும் ஹலப்பீனோ மிளகாய். 188 00:12:30,667 --> 00:12:32,544 அது தெளிவான ஒயின், பினோ நுவா போல. 189 00:12:32,628 --> 00:12:34,630 ஆனால் வைல்டு பெர்ரிகளின் புத்துணர்ச்சி, 190 00:12:34,713 --> 00:12:36,673 கட்டுப்படுத்தப்பட்ட ஆக்ஸிஜனேற்றத்துடனான கிரனேஷை நினைவூட்டுகிறது. 191 00:12:36,757 --> 00:12:40,469 ஆனால் அந்தச் சுவை வலிமையானது, அமிலத்தன்மை உடையது, கொஞ்சம் குறையும் சஞ்சோவெஸே போல. 192 00:12:40,552 --> 00:12:43,722 பிறகு அதில் எங்களால் கண்டுபிடிக்க முடியாத கனிமத்தன்மை உள்ளது. 193 00:12:44,389 --> 00:12:47,893 அதனால்தான் அது மறக்கப்பட்ட வகை என்று நினைக்கிறோம். 194 00:12:48,560 --> 00:12:52,356 நாங்கள் செய்வது ஆம்பெலோகிராஃபி. இது அந்தத் தாவரம் பற்றியது, ஒயின் பற்றியது அல்ல. 195 00:12:52,439 --> 00:12:54,233 நான் சொம்மெலியர் இல்லை. 196 00:12:55,609 --> 00:12:59,154 அந்தப் பழத்தின் சுவை பற்றிச் சொல்லுங்கள், என்னால் உதவ முடியலாம். 197 00:12:59,238 --> 00:13:01,406 ஆனால் மதுவாக மாற்றிய பிறகுதான் ஒயினின் மணங்கள் வரும். 198 00:13:01,490 --> 00:13:03,742 அதற்கு அந்தத் தாவரமும் கொஞ்சம் உதவி செய்யும். 199 00:13:03,825 --> 00:13:07,204 உதாரணத்திற்கு, டஸ்ஸெலெங்கே, இத்தாலியில் ஃபிரியூலியைச் சேர்ந்தது. 200 00:13:07,287 --> 00:13:08,914 அதில் அடர்த்தியான மலர், கூம்பு வடிவத் தொகுப்பு, 201 00:13:08,997 --> 00:13:11,750 - ஊதா நிற பழம், நோய் தாக்காது… - மன்னிக்கவும். 202 00:13:11,834 --> 00:13:13,502 - என்ன? - இது எனக்கு உதவாது. 203 00:13:14,044 --> 00:13:15,712 நாங்கள் இந்த ஒயின்களைச் சுவைக்க வேண்டும். 204 00:13:17,506 --> 00:13:20,843 காலநிலை மாற்றத்திற்கேற்ப தகவமைத்துக்கொள்ளும் சில திராட்சை வகைகளை, 205 00:13:20,926 --> 00:13:25,013 ஒயினாக மாற்றியுள்ளோம், அவற்றில் சில மறக்கப்பட்டவையும் உள்ளன. 206 00:13:26,807 --> 00:13:29,685 அவற்றை… நாங்கள் சுவைத்துப் பார்க்கலாமா? 207 00:13:31,019 --> 00:13:32,479 ஆம். 208 00:13:36,483 --> 00:13:38,652 இந்தாருங்கள். 2018 இலிருந்து நாங்கள் ஒயினாக மாற்றிய, 209 00:13:38,735 --> 00:13:40,779 மறக்கப்பட்ட திராட்சை வகைகளின் பட்டியல். 210 00:13:41,780 --> 00:13:45,367 அதற்குப் பின் போக முடியாது, ஏனெனில் காலப்போக்கில் மணங்களின் புத்துணர்ச்சி 211 00:13:45,450 --> 00:13:47,452 இழந்துவிடும்… அதில் அர்த்தமே இல்லை. 212 00:13:48,203 --> 00:13:49,204 நன்றி. 213 00:13:59,131 --> 00:14:00,757 நன்றாக உள்ளதா? 214 00:14:03,010 --> 00:14:04,344 எனில் ஏன் சாப்பிட்டீர்கள்? 215 00:14:05,429 --> 00:14:07,097 நான் மிகவும் ஒழுக்கமானவன். 216 00:14:13,103 --> 00:14:14,104 நன்றி. 217 00:14:16,565 --> 00:14:19,234 நீங்கள் மூழ்கியிருந்தால், டாய் என் வாழ்க்கையை நரகமாக்கியிருப்பான். 218 00:14:19,318 --> 00:14:21,111 எனவே அது தற்காப்புதான். 219 00:14:24,406 --> 00:14:25,908 நான் அவனுக்கு கால் செய்தேன். 220 00:14:27,159 --> 00:14:29,203 அவன் உங்களிடம் ஒரு விஷயத்தைக் கூறும்படி சொன்னான்? 221 00:14:30,120 --> 00:14:34,041 ”கடல் சிங்கம் குளியல் தொட்டியில் ஹேர் டிரையரைப் பயன்படுத்தாது.” 222 00:14:35,334 --> 00:14:36,335 என்னவோ? 223 00:14:38,712 --> 00:14:41,423 நான் டாயை, கலிஃபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் சந்தித்தேன். 224 00:14:42,382 --> 00:14:45,636 கடற்கரையை ஒட்டி பயணிக்கும்போது கடல் சிங்கங்களை அங்கே பார்க்கலாம். 225 00:14:46,386 --> 00:14:48,138 நாங்கள் இந்த விளையாட்டைக் கண்டுபிடித்தோம். 226 00:14:48,680 --> 00:14:51,099 கடல் சிங்கம் எதையெல்லாம் செய்யாது. 227 00:14:52,434 --> 00:14:57,773 கடல் சிங்கம் இதைச் சாப்பிடாது. 228 00:15:12,579 --> 00:15:13,914 - ஹேய். - கேள். 229 00:15:13,997 --> 00:15:17,459 நான் வாஸ்ஸல் டொமைனில் இருக்கிறேன். மான்ட்பெலியே அருகிலுள்ள ஆய்வு மையம். 230 00:15:17,543 --> 00:15:18,836 ஆம், தெரியும். 231 00:15:18,919 --> 00:15:22,506 உலகம் முழுவதிலும் யாருக்கும் தெரியாத, 232 00:15:22,589 --> 00:15:25,676 குறைந்தது, எனக்குத் தெரியாத திராட்சை வகைகளால் செய்யப்பட்ட… 233 00:15:25,759 --> 00:15:27,219 123 ஒயின்களை… 234 00:15:27,302 --> 00:15:28,929 நான் சுவைக்கப் போகிறேன். 235 00:15:29,763 --> 00:15:30,764 சரி. 236 00:15:32,140 --> 00:15:33,642 அதை உன்னிடம் கூற விரும்பினேன். 237 00:15:34,560 --> 00:15:35,727 நன்றி. 238 00:15:44,236 --> 00:15:46,446 - எனில், தொடங்கலாம். - தொடங்கலாம். 239 00:16:03,672 --> 00:16:05,132 என்ன செய்கிறீர்கள்? 240 00:16:07,217 --> 00:16:08,260 இஸ்ஸேய்? 241 00:16:10,637 --> 00:16:12,431 நீங்கள் படுத்து ஓய்வெடுக்க வேண்டும். 242 00:16:13,182 --> 00:16:14,641 நான் இப்போது நன்றாக உணர்கிறேன். 243 00:16:17,102 --> 00:16:18,478 நாம் எங்கே போகிறோம்? 244 00:16:18,562 --> 00:16:19,563 வாஸ்ஸல். 245 00:16:19,646 --> 00:16:21,023 வாஸ்ஸலில் என்ன உள்ளது? 246 00:16:21,106 --> 00:16:22,107 ஒயின். 247 00:16:25,319 --> 00:16:26,904 என்ன விதமான ஒயின்? 248 00:16:28,155 --> 00:16:29,198 ஒரு ஸ்பெஷல் ஒயின். 249 00:16:30,449 --> 00:16:31,617 அந்தளவு ஸ்பெஷலா? 250 00:16:32,784 --> 00:16:33,785 ஆம். 251 00:16:35,495 --> 00:16:36,747 சரி, உள்ளே ஏறுங்கள். 252 00:16:45,005 --> 00:16:46,924 மார்செய்ல் - அவின்யான் நீம் 253 00:17:33,470 --> 00:17:36,181 உங்கள் சகோதரியால் அதைத் தனியாக கண்டறிய முடியாதா? 254 00:17:37,224 --> 00:17:38,475 அவள்தான் இதில் சிறந்தவள். 255 00:17:39,935 --> 00:17:41,436 எனில் என்ன பிரச்சினை? 256 00:17:43,939 --> 00:17:46,859 அவள் கணிக்க முடியாதவள். அவளை நான் நம்பவில்லை. 257 00:17:49,570 --> 00:17:51,071 நிச்சயமாக அதுதான் பிரச்சினையா? 258 00:17:52,739 --> 00:17:54,032 என்ன சொல்கிறீர்கள்? 259 00:17:55,033 --> 00:17:58,370 ஒன்றுமில்லை. மன்னிக்கவும். அது எனக்கு அவசியமானது இல்லை. 260 00:17:59,288 --> 00:18:00,747 இல்லை, நீங்கள் கூற வந்தது… 261 00:18:03,000 --> 00:18:04,001 நீங்கள் அவரைவிடச் சிறந்தவர் 262 00:18:04,084 --> 00:18:07,004 என உங்களுக்கே நிரூபித்துக்கொள்ள முயல்வது போலத் தெரிகிறது. 263 00:18:22,603 --> 00:18:24,354 எனக்கு இந்த விநோதமான அமைதிகள் பிடிக்கும். 264 00:18:35,908 --> 00:18:40,329 அடுத்து… அர்ஜெண்டினாவைச் சேர்ந்த கிரியோலா. 265 00:18:40,412 --> 00:18:41,413 இது எனக்குத் தெரியும். 266 00:18:41,496 --> 00:18:44,041 இது மால்பெக்கால் மாற்றியமைக்கப்பட்ட திராட்சை வகை. 267 00:18:44,124 --> 00:18:45,834 மிகவும் வலிமையானது. இது இல்லை. 268 00:18:45,918 --> 00:18:47,503 இரு! 269 00:18:48,712 --> 00:18:50,714 - இது இல்லை என்கிறேனே. - ஆம், அது… 270 00:18:58,305 --> 00:19:00,057 - ஆம்… - ஆம், மன்னித்துவிடு. 271 00:19:04,603 --> 00:19:07,356 இஸ்ஸேய்? நீ இங்கே என்ன செய்கிறாய்? 272 00:19:08,273 --> 00:19:09,525 எவ்வளவு தூரம் வந்துள்ளாய்? 273 00:19:12,027 --> 00:19:14,196 பாதிக்கு மேல் சுவைத்துள்ளோம். 274 00:19:14,279 --> 00:19:15,739 ஆம், 71. 275 00:19:17,574 --> 00:19:20,327 அதில் இரண்டு பொருந்தலாம் என்று தேர்ந்தெடுத்துள்ளோம். 276 00:19:27,835 --> 00:19:29,419 நிறத்தைப் பார். 277 00:19:29,503 --> 00:19:31,129 இந்த ஒயின்கள் மிகவும் அடர்த்தியானவை. 278 00:19:31,922 --> 00:19:35,801 இவற்றைச் சுவைப்பதில் பயனில்லை. நீங்கள் தவறாகச் செய்கிறீர்கள். 279 00:19:35,884 --> 00:19:37,135 நீ மருத்துவமனையில் இருக்க வேண்டும். 280 00:19:58,615 --> 00:20:00,117 நான்… போகிறேன். 281 00:20:25,517 --> 00:20:27,269 - ஹாய், டாய். - நடாஷா? 282 00:20:28,270 --> 00:20:29,479 எல்லாம் நலமா? 283 00:20:30,272 --> 00:20:31,648 இஸ்ஸேய் எப்படி இருக்கிறான்? 284 00:20:32,566 --> 00:20:34,568 முன்பைவிட நலம்தான். 285 00:20:35,736 --> 00:20:38,238 அவன் முற்றிலும் பைத்தியக்காரனா என யோசிக்கிறேன். 286 00:20:38,906 --> 00:20:40,490 அவன் மீண்டும் டைவ் செய்ய விரும்புகிறானா? 287 00:20:41,116 --> 00:20:42,701 இல்லை. ஆனால் நாம் பேசிக்கொண்டிருக்கும்போது, 288 00:20:42,784 --> 00:20:45,370 மருத்துவமனையில் இருக்க வேண்டிய உன் நண்பன், நூறு வெவ்வேறு ஒயின்களைச் 289 00:20:45,454 --> 00:20:47,206 சுவைக்கப் போகிறான். 290 00:20:48,832 --> 00:20:51,084 அப்படியெனில் அவன் பழைய நிலைக்கு வந்துவிட்டான் என்றுதான் அர்த்தம். 291 00:20:52,085 --> 00:20:53,462 கவலைப்படாதே. 292 00:20:54,505 --> 00:20:56,340 நான் போக வேண்டும். பை. 293 00:20:59,134 --> 00:21:00,135 சரி. 294 00:21:29,915 --> 00:21:31,083 இன்னும் பத்துதான் உள்ளன. 295 00:22:44,865 --> 00:22:48,160 ஹெர்பெமோன் 296 00:22:51,872 --> 00:22:52,998 ஹெர்பெமோன். 297 00:22:54,041 --> 00:22:56,543 இது மறக்கப்பட்ட திராட்சை வகை மட்டுமல்ல. 298 00:22:57,503 --> 00:22:58,795 தடைசெய்யப்பட்ட வகை. 299 00:22:59,838 --> 00:23:02,508 இதிலிருந்து செய்யப்படும் ஒயின்களை என்ன சொல்வார்கள் தெரியுமா? 300 00:23:03,217 --> 00:23:04,718 அது நம்மை பைத்தியமாக்கும். 301 00:23:08,805 --> 00:23:10,265 கவலைப்படாதீர்கள், இது ஒரு கட்டுக்கதை. 302 00:23:10,349 --> 00:23:13,519 இது நொதித்தலின்போது மெத்தனாலை வெளிவிடுவது உண்மைதான், 303 00:23:13,602 --> 00:23:16,063 ஆனால் மிகவும் குறைவாகத்தான். அது நிரூபிக்கப்பட்டுள்ளது. 304 00:23:16,563 --> 00:23:20,234 ஆனால் அது தடைசெய்யப்பட்டது நிதி ரீதியான காரணம்தான். 305 00:23:20,859 --> 00:23:24,488 அதோ. நாங்கள் மையத்தில் வைத்திருக்கும் ஹெர்பெமோன் கொடிகள். 306 00:23:25,072 --> 00:23:29,243 பாருங்கள், ஹெர்பெமோன், இது கடவுளும் சாத்தானும் ஒன்றாகக் கலந்து போலுள்ளது. 307 00:23:29,326 --> 00:23:32,246 இதை எந்த நோயும் தாக்காது, எனவே எந்த சிகிச்சையும் தேவைப்படாது, 308 00:23:32,329 --> 00:23:34,873 அது கெமிக்கல் நிறுவனங்களுக்கு நல்லதல்ல. 309 00:23:34,957 --> 00:23:39,336 அதனால்தான் ஃபிரெஞ்சு அரசாங்கம் இதை 1935 இல் தடைசெய்தது. 310 00:23:39,419 --> 00:23:42,089 இன்று, இதை வைத்து யாரும் ஒயின் தயாரிப்பதில்லை. 311 00:23:42,714 --> 00:23:44,341 யாரோ தயாரிக்கின்றனர். 312 00:23:47,219 --> 00:23:48,804 சரி. 313 00:23:49,429 --> 00:23:50,430 இன்னும். 314 00:23:58,063 --> 00:23:59,064 இன்னும் கொஞ்சம். 315 00:24:02,734 --> 00:24:06,321 - அது உங்களுக்காக போனஸ். சரி. - அருமை, நன்றி. 316 00:24:06,405 --> 00:24:08,156 - இங்கே. நன்றி. - இதோ. 317 00:24:11,785 --> 00:24:14,371 - குட் மார்னிங். - குட் மார்னிங், திருமதி கீனு. 318 00:24:15,414 --> 00:24:16,415 திருமதி கீனு! 319 00:24:16,498 --> 00:24:18,876 குட் மார்னிங், சார். 320 00:24:18,959 --> 00:24:20,502 உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. 321 00:24:20,586 --> 00:24:22,379 - பார்த்து ரொம்ப காலம் ஆகிவிட்டது. - ஆம். 322 00:24:22,462 --> 00:24:24,715 - நீங்கள் நலமா? - ஆம். 323 00:24:25,549 --> 00:24:27,050 திருமதி ஹொனோகா நலமாக உள்ளாரா? 324 00:24:27,843 --> 00:24:28,844 ஆம். 325 00:24:32,639 --> 00:24:34,433 ஆ, நன்றி. மீண்டும் வாருங்கள். 326 00:24:34,516 --> 00:24:36,518 - உங்கள் நாள் சிறப்பாக இருக்கட்டும். - நன்றி. 327 00:24:37,519 --> 00:24:38,854 வந்ததற்கு நன்றி. 328 00:24:39,897 --> 00:24:41,899 - திருமதி கீனு, வழக்கமானதுதானா? - என்ன? 329 00:24:42,482 --> 00:24:43,483 ஓ, ஆம். 330 00:25:17,434 --> 00:25:18,685 என்ன? 331 00:25:22,689 --> 00:25:27,653 நான் உனக்கு கிட்டத்தட்ட கால் செய்திருப்பேன், ஆனால் நீ பதிலளித்திருக்க மாட்டாய். 332 00:25:30,614 --> 00:25:34,910 உன் மகனுக்கு விபத்து ஏற்பட்டது. அவன் கிட்டத்தட்ட இறந்திருப்பான். 333 00:25:35,827 --> 00:25:39,331 டைவ் செய்யும்போது விபத்து ஏற்பட்டது. அவன் ஃப்ரீ டைவிங் செய்துள்ளான். 334 00:25:39,414 --> 00:25:40,874 அவன் கிட்டத்தட்ட மூழ்கிவிட்டான். 335 00:25:41,875 --> 00:25:43,710 அவன் ஃபிரான்ஸில் ஒரு மருத்துவமனையில் இருக்கிறான். 336 00:25:46,213 --> 00:25:47,381 எங்கே? 337 00:25:49,299 --> 00:25:53,637 மார்செய்ல், லா டிமோன் மருத்துவமனை. நுரையீரல் துறை. 338 00:25:57,307 --> 00:25:58,642 அவனுக்கு எதுவும் ஆகாதுதானே? 339 00:26:00,143 --> 00:26:01,603 அவனுக்கு கால் செய். 340 00:26:02,980 --> 00:26:07,359 அவன் பதிலளிக்க மாட்டான், ஆனால் உனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். 341 00:26:09,319 --> 00:26:10,779 அப்படி நான் நினைக்கிறேன். 342 00:26:31,592 --> 00:26:33,594 இஸ்ஸேய் 343 00:27:06,627 --> 00:27:08,003 இஸ்ஸேய்! 344 00:27:10,506 --> 00:27:11,757 மெழுகு பகுப்பாய்வு முடிவு வந்துவிட்டது. 345 00:27:11,840 --> 00:27:14,718 அது எந்த இடத்தைச் சேர்ந்தது என்று தெரிந்துவிடும், பிறகு நம் ஹெர்பெமோனைக் கண்டுபிடிக்கலாம். 346 00:27:14,801 --> 00:27:15,928 பார்! 347 00:27:18,722 --> 00:27:19,723 இது லத்தீனில் உள்ளது. 348 00:27:20,724 --> 00:27:21,767 டாக்டர்களுக்கு லத்தீன் தெரியும். 349 00:27:21,850 --> 00:27:24,811 ஆம், ஆனால் இந்த டாக்டர் பிசியாக உள்ளேன். செல்லுங்கள். 350 00:27:24,895 --> 00:27:25,896 மன்னிக்கவும். 351 00:27:25,979 --> 00:27:27,940 நீ முடித்ததும், நாம் அந்த தேனீ வளர்ப்பவரிடம் செல்கிறோம். 352 00:27:28,023 --> 00:27:30,943 நீங்கள் செல்லுங்கள். இவர் இருப்பார். 353 00:27:31,777 --> 00:27:32,778 சரி. 354 00:27:34,655 --> 00:27:36,990 நீங்கள் அதிர்ஷ்டசாலி, திரு. டொமினே. 355 00:27:37,491 --> 00:27:41,411 நுரையீரலில் தண்ணீர் புகுந்துள்ளது, ஆனால் காய்ச்சல் இல்லை, அதனால் தொற்று இல்லை. 356 00:27:41,495 --> 00:27:42,955 குறைந்தது, இப்போதைக்கு. 357 00:27:43,038 --> 00:27:45,958 எனினும், உங்களுக்கு தீவிர நுரையீரல் நோய் உள்ளது. 358 00:27:46,041 --> 00:27:47,876 நீங்கள் அதிக சிரமப்படக் கூடாது. 359 00:27:47,960 --> 00:27:52,548 அதிக உற்சாகம் வேண்டாம். ஓய்வெடுங்கள். பறவைகளைப் பாருங்கள். சரியா? 360 00:27:58,804 --> 00:28:01,849 பாலிகோனம் அவிகுலாரே. பேர்ட்வீட். 361 00:28:01,932 --> 00:28:04,434 அது மனிதர்கள் இருக்கும் இடமெங்கும் இருக்கும், நகரங்களிலும் கூட. 362 00:28:06,019 --> 00:28:07,729 ஆக்ஸலிஸ் பெஸ்-கபாயே, 363 00:28:09,273 --> 00:28:11,191 அது ஆட்டின் கால், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தது. 364 00:28:13,485 --> 00:28:15,237 பலியாருஸ் ஸ்பீனா-கிறிஸ்டி. 365 00:28:15,821 --> 00:28:18,323 ரோமானியர்கள் இயேசுவின் முள் கிரீடத்தைச் செய்ய அதன் கொடுக்குகளைப் பயன்படுத்தினர். 366 00:28:21,994 --> 00:28:25,247 ஆலிவ், தைம், சென்டாரே புமிலியோ, 367 00:28:25,330 --> 00:28:28,166 பொதுவான யாரோச் செடி… அது மத்திய தரைகடல் பகுதி, 368 00:28:28,250 --> 00:28:31,420 கிரீஸ் என்று கூட சொல்லலாம், ஏனெனில் கிரீக் அர்பூட்டஸ் உள்ளது. 369 00:28:32,087 --> 00:28:33,672 கிரீஸ், அது பெரிய இடம். 370 00:28:35,299 --> 00:28:36,717 அது எனக்குத் தெரியாது. 371 00:28:37,551 --> 00:28:41,722 மைக்ரோமேரியா அக்ரோபோலிடானா ஹலாக்ஸி. 372 00:28:43,056 --> 00:28:46,852 ஹலாக்ஸி, ஹலாக்ஸி… ஹலாக்ஸி. 373 00:28:48,687 --> 00:28:50,022 என்ன நடக்கிறது? 374 00:28:51,190 --> 00:28:53,859 ஹலாக்ஸி. 375 00:28:55,402 --> 00:28:56,737 ஹலாக்ஸி. கிடைத்துவிட்டது. 376 00:28:58,071 --> 00:29:00,282 1908 இல், யூஜீன் வான் ஹலாக்ஸி என்பவர் 377 00:29:00,365 --> 00:29:05,037 ஏதென்ஸ் தாவரவியல் தோட்டங்களை நிர்வகித்தார், மேலும் கிரீஸில் உள்ள எல்லா மலர்களையும் பட்டியலிட்டார். 378 00:29:05,537 --> 00:29:07,122 அவருக்கு பாராட்டுகள். 379 00:29:08,957 --> 00:29:12,044 கிடைத்துவிட்டது. மைக்ரோமேரியா அக்ரோபோலிடானா. 380 00:29:12,753 --> 00:29:16,465 அது முதன்முறையாக 1906 இல் சேகரிக்கப்பட்டது. 381 00:29:16,548 --> 00:29:17,799 அது உள்ளூர் வகை, 382 00:29:18,717 --> 00:29:22,429 அதாவது ஏதென்ஸில் உள்ள அக்ரோபோலிஸ் குன்றில் மட்டும்தான் அது வளரும். 383 00:29:22,513 --> 00:29:24,890 அக்ரோபோலிஸில் மட்டும் வளரும் பூவா? 384 00:29:24,973 --> 00:29:26,892 அப்படி நடக்கும். அதுதான் இயற்கை. 385 00:29:27,768 --> 00:29:28,810 அடடா. 386 00:29:29,394 --> 00:29:30,979 உங்கள் பூ அங்கே வளர்ந்துள்ளது, 387 00:29:31,063 --> 00:29:33,524 ஆனால் 1906 இலிருந்து யாரும் அதை மீண்டும் பார்க்கவில்லை. 388 00:29:34,024 --> 00:29:35,734 அது “மறைந்துவிட்டது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 389 00:29:36,235 --> 00:29:37,236 மோசம். 390 00:29:38,695 --> 00:29:39,780 கமில்… 391 00:29:39,863 --> 00:29:42,074 ஆனால் இந்த மெழுகு, இந்த ஒயின் 1906 ஐச் சேர்ந்தது கூட இல்லை. 392 00:29:42,157 --> 00:29:43,575 அப்படி நான் நினைக்கவில்லை. 393 00:29:44,284 --> 00:29:45,744 ஒயினைப் பற்றி எனக்குத் தெரியாது… 394 00:29:47,204 --> 00:29:48,997 ஆனால் அந்த மெழுகு விஷயத்தில், நீங்கள் கூறுவது சரிதான். 395 00:29:49,081 --> 00:29:50,499 அது 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இல்லை. 396 00:29:51,375 --> 00:29:54,211 அப்படியெனில் அந்தச் சிறிய பூ இன்னும் உள்ளது. 397 00:29:54,294 --> 00:29:55,546 அதை உறுதியாகச் சொல்வேன். 398 00:29:56,588 --> 00:30:01,051 அங்கே சென்று, அக்ரோபோலிஸில் உள்ள தேனீ வளர்க்குமிடங்களைப் பாருங்கள். 399 00:30:03,554 --> 00:30:04,805 - நன்றி. - சரி, 400 00:30:04,888 --> 00:30:06,849 என்ன நடக்கிறது என்று யாராவது சொல்கிறீர்களா? 401 00:30:11,687 --> 00:30:15,190 ஏதென்ஸ் கிரீஸ் 402 00:30:24,575 --> 00:30:26,326 இது மிகவும் மெதுவானது. 403 00:30:28,370 --> 00:30:30,289 நாம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்றேன். 404 00:30:33,667 --> 00:30:35,419 இதைச் செய்யும் வழி இது இல்லை. 405 00:30:36,461 --> 00:30:37,838 உன்னிடம் வேறு நல்ல யோசனை உள்ளதா? 406 00:30:43,677 --> 00:30:45,512 இது நல்ல யோசனையா எனத் தெரியவில்லை. 407 00:30:46,305 --> 00:30:50,058 ஏதென்ஸில் வேளாண் பல்கலைக்கழகம் 408 00:30:50,142 --> 00:30:52,227 யாரோ ஒரு ஒயின் பாட்டிலுக்கு ஒரு காட்டுப்பூவில் 409 00:30:52,311 --> 00:30:54,229 இருந்து மெழுகு செய்வதாக நினைப்பதால், 410 00:30:54,730 --> 00:30:58,775 யாருமே கேள்விப்படாத அந்தப் பூவைத் தேடுகிறீர்களா? 411 00:30:58,859 --> 00:30:59,860 ஆம். 412 00:30:59,943 --> 00:31:01,403 உங்கள் வேலையை நீங்கள் மிகவும் நேசிக்கிறீர்கள். 413 00:31:02,487 --> 00:31:03,989 நான் என் வேலையை நேசிக்கிறேன். 414 00:31:04,072 --> 00:31:06,909 சில நேரம் அது என்னை நான் நினைக்காத இடங்களுக்குக் கூட்டிச் செல்லும், 415 00:31:06,992 --> 00:31:09,411 அமேசான் நதிக்கரை போல. 416 00:31:09,494 --> 00:31:11,079 அது என் மகளுக்குப் பிடிக்காது. 417 00:31:11,163 --> 00:31:14,499 நான் எப்போதும் அவளது குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறாள். 418 00:31:14,583 --> 00:31:17,753 நீங்கள் என்னிடம் வந்தது உங்கள் அதிர்ஷ்டம். 419 00:31:18,378 --> 00:31:23,175 2006 இல், என் சக பணியாளர் ஒருவர், உங்கள் பூவை அக்ரோபோலிஸில் கண்டறிந்தார். 420 00:31:23,258 --> 00:31:27,846 மேலும் 2009 இல், கோப்பன்ஹேகனைச் சேர்ந்த பேராசிரியர் அது இருப்பதை உறுதிப்படுத்தினார். 421 00:31:27,930 --> 00:31:32,518 நினைத்துப் பாருங்கள், இது சொஃபோக்லெஸ், ஹோமர் அளவு பழமையானது. 422 00:31:33,852 --> 00:31:35,020 பாருங்கள். 423 00:31:38,690 --> 00:31:39,816 என்ன இது? 424 00:31:39,900 --> 00:31:44,696 இதுதான் மைக்ரோமேரியா அக்ரோபோலிடானா ஹலாக்ஸியின் டிஎன்ஏ. 425 00:31:45,989 --> 00:31:47,491 இது அற்புதமானது இல்லையா? 426 00:31:47,574 --> 00:31:50,744 ஆம். ஆனால் இது எங்களுக்கு உதவாது. 427 00:31:53,830 --> 00:31:57,251 அக்ரோபோலிஸைச் சுற்றி எதுவும் தேனீ வளர்க்குமிடம் உள்ளதா? 428 00:31:57,334 --> 00:31:58,752 அவை இருக்க வேண்டும், 429 00:31:58,836 --> 00:32:01,588 ஏனெனில் என் மகள் ஒருமுறை, சர்ச்சுக்கு அருகில் விசித்திரமான ஒருவரிடம் 430 00:32:01,672 --> 00:32:06,343 வாங்கிய ஒரு தேன் ஜாடியை எனக்குக் கொடுத்தாள். 431 00:32:06,426 --> 00:32:11,181 அவரிடம் அந்த அக்ரோபோலிஸ் பகுதியில் தேனீ வளர்க்குமிடம் இருப்பதாகக் கூறியுள்ளார். 432 00:32:11,265 --> 00:32:13,892 அவரது பெயரை உங்கள் மகளிடம் கேட்க முடியுமா? 433 00:32:14,601 --> 00:32:16,603 அவள் என்னை மீண்டும் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும்படி கேட்பாள். 434 00:32:18,397 --> 00:32:19,439 ப்ளீஸ், மேடம். 435 00:32:32,911 --> 00:32:34,371 நீ மிகவும் வேகமாகச் செல்கிறாய். 436 00:32:34,454 --> 00:32:35,747 மன்னித்துவிடு. 437 00:32:35,831 --> 00:32:38,125 மன்னிக்கவும். நீங்கள் இங்கே வசிக்கிறீர்களா? 438 00:32:38,208 --> 00:32:42,379 - ஆம். - நான் ஆகியோஸ் ஜார்ஜியோஸ் சர்ச்சைத் தேடுகிறேன். 439 00:32:43,088 --> 00:32:44,882 ஆம். அது அங்கே உள்ளது. 440 00:32:45,465 --> 00:32:46,800 - அங்கே. சரி. - ஆம். 441 00:32:46,884 --> 00:32:48,260 மிக்க நன்றி. 442 00:32:52,556 --> 00:32:56,143 இஸ்ஸேய், உனக்கு டாக்டர் வேண்டுமா? 443 00:32:56,226 --> 00:33:00,480 - நான் டாக்டரை அழைக்கிறேன். - இல்லை. பரவாயில்லை. கொஞ்சம் ஓய்வுதான் தேவை. 444 00:33:01,481 --> 00:33:02,482 சரி. 445 00:33:06,361 --> 00:33:08,530 நீ போ. நான் பின்னால் வருகிறேன். 446 00:33:09,615 --> 00:33:11,241 - நிச்சயமாகவா? - ஆம். 447 00:33:13,619 --> 00:33:16,038 போ. நான் நலம்தான். 448 00:33:17,497 --> 00:33:18,498 சரி. 449 00:34:50,924 --> 00:34:53,594 கவலைப்படாதீர்கள். இது களைப்பாக உள்ளது. 450 00:34:55,179 --> 00:34:56,513 இது கனிவானது. 451 00:34:58,974 --> 00:35:03,020 கோடையின் முடிவில், தேனீக்களுக்கு தாம் விரைவில் இறந்துவிடுவோம் எனத் தெரியும். 452 00:35:04,438 --> 00:35:05,856 நாம் அவற்றுக்காக பிரார்த்திக்க வேண்டும். 453 00:35:15,657 --> 00:35:18,577 நீங்கள் அலெக்ஸி பிப்பியாவா? 454 00:35:29,922 --> 00:35:31,006 சுவையாக உள்ளதல்லவா? 455 00:35:32,132 --> 00:35:33,133 சுவையானது. 456 00:35:33,717 --> 00:35:34,718 நன்றாக உணர்கிறாயா? 457 00:35:35,886 --> 00:35:37,888 தேன் அனைத்தையும் குணப்படுத்தும். 458 00:35:38,430 --> 00:35:39,681 கடவுளுக்கு நன்றி. 459 00:35:43,310 --> 00:35:45,103 உங்களிடம் எத்தனை தேனீ வளர்க்குமிடம் உள்ளன? 460 00:35:45,187 --> 00:35:47,689 ஆறு இருந்தது, இப்போது மூன்றுதான் உள்ளது. காலியாக. 461 00:35:49,024 --> 00:35:51,527 மனிதனால் தேனீக்கள் இறக்கின்றன. 462 00:35:52,110 --> 00:35:53,570 நீங்கள் நிறைய தேன் உருவாக்குவீர்களா? 463 00:35:54,238 --> 00:35:55,906 போகப் போகக் குறைவாகத்தான் உருவாக்குகிறேன். 464 00:35:57,407 --> 00:35:59,743 தேன் மெழுகு? அதைச் சேகரிப்பீர்களா? 465 00:36:00,452 --> 00:36:01,495 ஓ, ஆம். 466 00:36:02,371 --> 00:36:05,832 மெழுகு புனிதமானது. அது புனித ஆத்மாவின் அருள். 467 00:36:08,919 --> 00:36:12,923 அது மெழுகுவர்த்திகளுக்குப் பயன்படுகிறது, மெழுகுவர்த்திகள் பிரார்த்தனையின் அடையாளம். 468 00:36:15,175 --> 00:36:16,844 நீங்கள் மெழுகுவர்த்திகளும் செய்வீர்களா? 469 00:36:16,927 --> 00:36:21,849 இல்லை. மெழுகுவர்த்திகள் இல்லை. எனது மெழுகை என் கிராமத்தில் உள்ள மடாலயத்திற்குக் கொடுப்பேன். 470 00:36:22,474 --> 00:36:23,559 உங்கள் கிராமம் எங்குள்ளது? 471 00:36:24,810 --> 00:36:25,811 ஜார்ஜியாவில். 472 00:36:26,436 --> 00:36:27,521 நீங்கள் கிரேக்கர் இல்லையா? 473 00:36:28,146 --> 00:36:29,523 நான் ஜார்ஜியாவில் பிறந்தேன். 474 00:36:30,941 --> 00:36:32,359 ஜார்ஜியா. 475 00:36:32,442 --> 00:36:34,695 அற்புதமான உணவு, சிறப்பான… ஒயின். 476 00:36:35,696 --> 00:36:38,866 உன் ரொட்டியைச் சாப்பிடு, உன் ஒயினைக் குடி என்று கடவுள் கூறுகிறார். 477 00:36:39,449 --> 00:36:42,327 குறிப்பாக கஹெட்டியிலிருந்து, இல்லையா? 478 00:36:42,411 --> 00:36:45,330 நான் கஹெட்டியைச் சேர்ந்தவன் இல்லை, நான் கார்ட்லியைச் சேர்ந்தவன். 479 00:36:46,248 --> 00:36:47,332 கார்ட்லியா? 480 00:36:50,210 --> 00:36:51,461 உனக்கு கார்ட்லி தெரியுமா? 481 00:36:52,212 --> 00:36:55,132 தெரியும். நான் ஒரு இனாலஜிஸ்ட். 482 00:36:55,215 --> 00:36:59,136 ஒயின் நிபுணர். அதனால்தான் உங்களைத் தேடினேன். 483 00:37:02,222 --> 00:37:04,975 உண்மையில், நான் ஒரு ஒயினைத் தேடுகிறேன், 484 00:37:05,684 --> 00:37:09,188 அந்த ஒயினின் பாட்டில்களை அடைக்க உங்கள் மெழுகு பயன்படுத்தப்பட்டுள்ளது. 485 00:37:11,440 --> 00:37:14,359 அந்த மடாலயத்தில் அவர்கள் ஒயின் தயாரிக்கின்றனரா? 486 00:37:16,111 --> 00:37:17,112 ஆம். 487 00:37:20,574 --> 00:37:22,659 உங்கள் கிராமத்தின் பெயரைக் கூற முடியுமா? 488 00:37:42,346 --> 00:37:45,265 ஹலோ. மன்னிக்கவும், உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? 489 00:37:45,766 --> 00:37:46,767 ஆம். 490 00:37:47,976 --> 00:37:50,646 நான் ஒருவரைத் தேடுகிறேன். உங்களுக்கு அவரைத் தெரிந்திருக்கலாம். 491 00:37:51,271 --> 00:37:52,272 அலெக்ஸி பிப்பியா? 492 00:37:53,857 --> 00:37:55,901 ஆம், எனக்குத் தெரியும். 493 00:37:55,984 --> 00:37:58,570 டாய், நான்தான். 494 00:37:59,655 --> 00:38:02,366 ஜார்ஜியாவில் நம்பகமான ஒருவர் எனக்கு வேண்டும். 495 00:38:03,033 --> 00:38:04,785 நீ எங்கே இருக்கிறாய்? 496 00:38:05,577 --> 00:38:06,662 கிரீஸில். 497 00:38:07,371 --> 00:38:09,373 நீ நலமா? எப்படி உணர்கிறாய்? 498 00:38:09,456 --> 00:38:10,457 நான் நலம்தான். 499 00:38:28,934 --> 00:38:30,185 அடச்சே. 500 00:38:34,356 --> 00:38:38,360 அருமை. எனக்கு ஒருவரைத் தெரியும். உனக்கு மெசேஜ் செய்கிறேன். 501 00:38:38,443 --> 00:38:39,528 நன்றி. 502 00:38:39,611 --> 00:38:41,530 அடக் கடவுளே! இஸ்ஸேய்! 503 00:38:42,239 --> 00:38:43,490 எங்கே போயிருந்தாய்? 504 00:38:44,783 --> 00:38:45,951 எனக்கு அலெக்ஸின் முகவரி கிடைத்துவிட்டது. 505 00:38:47,286 --> 00:38:48,287 நான் அவரைச் சந்தித்தேன். 506 00:38:49,204 --> 00:38:50,205 என்ன? 507 00:38:51,623 --> 00:38:54,209 அவர் ஜார்ஜியாவில் ஒரு மடாலயத்தின் பெயரைக் கூறினார், 508 00:38:54,835 --> 00:38:57,546 அங்குதான் அவர்களது ஒயினுக்காக தனது தேன் மெழுகை அனுப்புகிறார். 509 00:38:58,463 --> 00:38:59,548 அற்புதம். 510 00:39:00,424 --> 00:39:02,676 திரு. டொமினே? ஏர்போர்ட்டுக்கா? 511 00:39:04,386 --> 00:39:06,388 ஆம், ஒரு நிமிடம். 512 00:39:13,187 --> 00:39:14,688 நீ நான் இல்லாமல் செல்லவிருந்தாயா? 513 00:39:18,859 --> 00:39:19,860 இல்லை. 514 00:39:28,577 --> 00:39:31,371 - முதலில் எங்கள் ஹோட்டலுக்குச் செல்ல வேண்டும். - சரி. 515 00:39:32,372 --> 00:39:33,790 நீ வருகிறாயா? 516 00:39:34,833 --> 00:39:36,460 குவைன்டா ஹோட்டல். 517 00:40:02,861 --> 00:40:05,113 டடாஷி ஆகி & ஷூ ஓகிமோட்டோவின் “Drops of God” மாங்காவை அடிப்படையாகக் கொண்டது 518 00:40:36,311 --> 00:40:38,313 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்